Thursday, February 16, 2012

பொன்னியின் செல்வன் எடுக்க திராணி இருக்கா? ஷங்கர் தில் பேட்டி -காமெடி கும்மி பாகம் 2

http://roborajini.com/wp-content/uploads/2010/09/Shankar-director-tamil.jpg 

1. 'மாட்டிக்கிட்டீங்களா... உங்கள் ஹீரோக்களில் 'தி பெஸ்ட்யார்? ஹீரோயின்களில் 'தி பெஸ்ட்யார்? நழுவாதீர்கள்... நச்சுனு பதில் சொல்லுங்கள்..?''

சி.பி - அண்ணன் கமல் கூட இந்தியன் பண்ணுனப்ப யாமறிந்த நடிகர்களில்  கமல் போல் இனிதானது எங்கும் காணோம்னாரு, ரஜினி கூட எந்திரன் பண்றப்ப ரஜினி தான் மாஸ், வேற யாரு பாஸ்? அப்டினு பிளேட்டை திருப்பி போட்டாரு.. சினிமா லைஃப்ல இதெல்லாம் சாதாரணமப்பா..

 
 ''ரஜினிஹாசன்,  ஐஸ்வர்யா ராய்!''



2. ''மாஸ் ஹீரோ, புதிதாக வந்த கிளாமர் ஹீரோயின், மிகப் பெரிய பட்ஜெட், சமூக அக்கறை என்ற கோட்டிங் தடவிய மசாலா கதை, பரவலாகப் பாமரனுக்குத் தெரியாத சில விநோத விஷயங்கள்  ('இந்தியன்களரி, 'அந்நியன்கருட புராணம், 'சிவாஜிஹவாலா), சில மாடர்ன் டிஜிட்டல் பாடல்கள் (கண்ணும் கண்ணும் நோக்கியா, ஷக்கலக்க பேபி, முக்காலா முக்காபுலா), கர்னாடக சங்கீதத்தில் சில மெலடிப் பாடல்கள் (என் வீட்டுத் தோட்டத்தில், குமாரி, பச்சைக் கிளிகள், அழகான ராட்சசியே), ஒரு டண்டணக்க தெலுங்கு பீட் பாடல் (உப்புக் கருவாடு, பேட்ட ராப், ரண்டக்க ரண்டக்க, உசிலம்பட்டி), கலர் கலராக விரியும் திரை அமைப்பு (நெதர்லாந்து ட்யூலிப் தோட்டம், 100 டி.வி-க்களை ஒன்றாகக் காட்டுவது, சி.ஜி. மூலம் பூக்கள் பூப்பது), ஃபேன்டஸி கிராஃபிக்ஸ் நிறைந்த சண்டைக் காட்சிகள் (மேட்ரிக்ஸ் பாணி 'அந்நியன்சண்டை, ரோபாட் பாணி 'எந்திரன்சண்டை), யாரும் பார்த்து இருக்காத அசத்தல் லொகேஷன், பத்திரிகை, டி.வி. விமர் சனங்கள் வெளிவரும் முன்னரே 'கார்ப்பெட் பாம்பிங்முறையில் ஏகப்பட்ட பிரின்ட்கள் போட்டு, முதல் சில நாட்களிலேயே பணத்தை அள்ளும் உத்தி... இதுதானே 'ஷங்கர் ஃபார்முலா!’ 'காதலன்முதல் 'எந்திரன்வரை இந்த ஃபார்முலாவிலேயே கமர்ஷியல் கலக்கிக்கொண்டு இருக்கிறீர்களே... எப்போதுதான் இதில் இருந்து வெளியே வருவீர்கள்? விடையாக... 'நண்பன் ரீ-மேக்என்று சொல்லக் கூடாது... சென்சிபிள் பதில் தேவை ஷங்கர்ஜி!''

சி.பி - கேள்வி கேளுய்யான்னா ஒரு கட்டுரையே வரைஞ்சு வெச்சிருக்கு..?

 ''ஏ... அப்பா... திரும்பத் திரும்பப் பார்த்து, இவ்வளவு விஷயங்களை ரசிச்சு,  ஒண்ணுவிடாம எல்லாம் ஞாபகம் வெச்சுக்கிட்டு, இதுலேருந்து எப்போ வெளியே வருவேன்னு கேக்கறீங்களே... இது உங்களுக்கே நியாயமா இருக்கா?
பிடிக்கலேன்னா... நடுவிலயே என் படங்களை விட்டுட்டு வேற படங்களைப் பாத்திருக்கலாமே?! ஏன் 'நண்பன்வரைக்கும் ஒண்ணுவிடாம நல்லாப் பாத்துட்டு, இப்படி மூச்சு இரைக்க இரைக்க பிரமாண்டமாக் கேள்வி கேட்கிறீங்க?''



http://reviews.in.88db.com/images/kala-sankar-rajini.jpg

3. ''உங்களுடைய முதல் சில சினிமாக்களில் விழுந்த 'பிரமாண்ட இயக்குநர்முத்திரையைத் தக்கவைக்கவே இப்போதும் அதிக பட்ஜெட்டில் படங்கள் இயக்குகிறீர் களா?''



சி.பி - அண்ணனைப்பற்றி சரியாத்தெரியல போல.. அடுத்தவன் காசுன்னா அண்ணன் அள்ளி விடுவாரு, சொந்தக்காசுன்னா எண்ணி எண்ணி செலவு செய்வாரு. இவர் தயாரிப்பில் வந்த காதல்,வெய்யில் எல்லாம் ரொம்ப லோ பட்ஜெட் படங்களே, இம்சை அரசன் மீடியம் பட்ஜெட், ஆனா வசூலை அள்ளீட்டாரு 


 ''என் ஒவ்வொரு படத்திலும் ரசிகர் களுக்கு நல்ல விருந்து படைக்கவே முயற்சிக்கிறேன். அந்த ரசிகர்கள் அடுத்தப் படத்துக்கு வரும்போது, அதுக்குச் சமமான விருந்தையோ, அதைவிடச் சிறந்த விருந்தை யோதான் எதிர்பார்த்து வருவாங்க. அவங்க எதிர்பார்ப்பை ஏமாத்திடாம நான் நிறை வேத்தியாகணும். அப்படி ஒரு விருந்துக்கு என்ன பட்ஜெட் ஆகுதோ, அதான் பட்ஜெட்!''





4. ''மணிரத்னமே கைவிட்ட 'பொன்னியின் செல்வன்புராஜெக்ட்டை பிரமாண்ட மாகவும் நேர்த்தியாகவும் எடுக்கக் கூடியவர் நீங்கள் மட்டுமே என்பது என் எண்ணம்... அப்படி ஒரு 'மேக்னம் ஓப்பஸ்எடுக்கத் துணிச்சல் இருக்கிறதா?''

சி.பி - அண்ணன் எடுக்க ரெடி. கையை  சுட்டுக்க எந்த தயாரிப்பாளர் ரெடி? ஏன்னா அந்தப்படம் எடுத்தா சூப்பர் ஹிட் ஆனாக்கூட போட்ட காசை எடுக்க முடியாது. பட்ஜெட் அள்ளிக்கும்.. 

 ''நீங்க எம் மேலவெச்சிருக்கிற நம்பிக்கைக்கு மிக்க நன்றி!
'எந்திரன்படத்தப்போ எழுத்தாளர் சுஜாதாவோட பேசும்போது, 'இதுக்கு நேர் எதிரா ஒரு பீரியட் படம் - 'பொன்னியின் செல்வன்’ - பண்ணா எப்படி இருக்கும்?’னு கேட்டேன். 'ரொம்ப நல்லாருக்கும். பண்ணுங்க ஷங்கர்னு சொன்னார். அதுக்கு முன்னா டியே எப்பவோ ஏதோ தோணி, 'பொன்னியின் செல்வன்அஞ்சு பாகமும் வாங்கிவெச்சிருக்கேன்.

ஜனவரி 23, என் திருமண நாளன்று மனைவியின் விருப்பத்துக்காக நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போயிருந்தேன். அங்கே வந்திருந்த மதிக்கத்தக்க பெரியவர் ஒருத்தர் என் கைகளைப் பிடிச்சிக்கிட்டு, 'எனக்கு ரொம்ப நாள் ஆசை... நீங்க 'பொன்னியின் செல்வன்கதையைப் படமா எடுக்கணும்னு உங்களை மாதிரியே தன் விருப்பத்தைத் தெரிவிச்சார். மனசிலும் மண்டையிலும் விதை விழுந்திருக்கு. அது முளைச்சு பெரிசாகி முட்டுமேயானால், எந்த சமரசமும் இல்லாம சர்வதேசத் தரத்தில் இதைத் தயாரிக்க யாராவது ஆர்வம் காட்டினா, சந்தோஷமா எடுப்பேன்!''


 சி.பி - அண்ணே, நீங்க தயாரிங்கண்ணே... பார்க்கலாம்.. வாய்ல இருந்து ஒரு பேச்சுக்காவது டைம் கிடைக்கறப்ப இதை நானே பண்றேன்னு சொல்லுங்க பார்க்கலாம்.. 




5. ''பாடல் காட்சிகளில் கிராமம், பாலம், ரயில் என எதைப் பார்த்தாலும் பெயின்ட் அடித்துவிடுகிறீர்களே... அது ஏன் சார்?''

 சி.பி - ஹா ஹா இது பாயிண்ட் .. அண்ணன் இப்போ சமாளிப்பார் பாருங்க.. 




''எல்லாம் ஒரு 'கலைவெறிதான். அந்த மெகா மெகா கிரியேட்டரைப்  பாருங்க. வானத்துக்கு நீலம்; மேகத்துக்கு வெள்ளை; பூமிக்குப் பச்சை; பூக்கள், வண்ணத்துப்பூச்சி, மீன்கள்னு எல்லாத்துக்கும் எப்படி எல்லாம் விதவிதமா அற்புதமா பெயின்ட் அடிச்சி ருக்காரு... நான் ஒரு துக்ளியூண்டு சினிமா கிரியேட்டர். ஏதோ என்னால முடிஞ்சதுக்கு எல்லாம் பெயின்ட் அடிச்சுட்டு இருக்கேன். இன்னும் கப்பலும் ஏரோப்ளேனும் பாக்கி இருக்கு!''


சி.பி - அண்ணே, ஷங்கர் அண்ணே, வெய்யில் படத்துல உங்க கலை வெறி காணாம போச்சே ஏண்ணே?


http://www.indiazooms.com/wp-content/uploads/2010/07/Endhiran-Wrap-up.jpg

6. ''உங்கள் படங்களில் கதையின் பிரச்னைகளில் ஆழம் போகாதது, வெற்று பிரமாண்டம், மாஸ் ஹீரோக்கள்... இந்தக் காரணங்களைவைத்தே நீங்கள் பெயர் வாங்கிவிடுகிறீர்கள் என்கிறேன். சரியா சார்?''


''ஆழமோ, அகலமோ, நீளமோ... கதைங்கிற அஸ்திவாரம் சரியில்லைன்னா... வெற்று பிரமாண்டம், மாஸ் ஹீரோக்கள்னு எதுவுமே வொர்க்-அவுட் ஆகாதுங்கிறது உங்களுக்கே தெரியும். அப்படி எல்லாம் கோடிக்கணக்கான ஆடியன்ஸை ஏமாத்திட முடியாது. சரியா சார்?''

சி.பி - அண்ணன் யாரையும் ஏமாத்த மாட்டார்.. அவர் படத்துல பேசிக் கதை ஊழல் எதிர்ப்பு, ராபின்ஹூட் பிழைப்பு என்று ஒரே ஃபார்முலாவா இருக்கலாம், ஆனா ஹீரோ வேற , மைண்ட் இட். ஹி ஹி 


7. ''உங்களுடைய 'ஜென்டில்மேன்’, 'முதல்வன்’, 'இந்தியன்படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவை போன்ற அழுத்தமான பதிவுகளாக 'அந்நியன்’, 'சிவாஜிஇல்லை என்பது என் கருத்து, இதற்குத் தங்களின் பதில்?''


  ''ஒரு படத்தோட இன்னொரு படத்தை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. இதில் இருக்கிற சில விஷயங்கள் அதில் இருக் காது, அதில் இருக்கிற சில விஷயங்கள் இதில் இருக்காது.

சமீபத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தை அவர் மகன் அனிருத் திருமணத்தில் சந்தித்தபோது, 'உங்க படங்கள்ல ரொம்பப் பிடிச்ச படம் அந்நியன்னு சொன்னார். பல பேர், என்னோட பெஸ்ட் 'எந்திரன்னு சொல்றாங்க. ரஜினி ரசிகர்கள் சில பேர், எந்திரனைவிட 'சிவாஜிதான் பெஸ்ட்னு சொல்றாங்க.

ரசூல் பூக்குட்டி, 'பாய்ஸ்தான் பெஸ்ட்ங்கிறாரு.

'இந்தியன்தான் டாப்...’
''முதல்வன்தான் சூப்பர்...’
'உங்க முதல் படத்தை அடிச்சுக்கவே முடியாது...’
'இதுவரைக்கும் நீங்க பண்ணதுலயே 'நண்பன்தான் பெஸ்ட்னு இப்ப சொல் றாங்க.
ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்!''


சி.பி - அண்ணே, நீங்க சொன்னது எல்லாம் சரிதான், ஆனா பாய்ஸ் படம் பெஸ்ட்னு ரசூல் பூக்குட்டி சொன்னாரே அதுதான் செம காமெடி.. 


8. ''பார்க்க சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. ஆனால், உங்கள் படங்களில் ஒவ்வொரு பாடலுக்குமே மினிமம் பட்ஜெட் படத்துக்கான செலவு செய்வது என்பது தேவைதானா? படத் தயாரிப்புச் செலவு குறைந்தால், அது விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் லாபம் அதிகரிப்பதில் தொடங்கி குறைந்த விலைக்கு டிக்கெட் என முதல் சீட் ரசிகர் வரை பயன் அடை வார்கள் என்ற தொலைநோக்குப் பார்வை ஏன் இல்லை உங்களிடம்?''


 ''பார்க்க சுவாரஸ்யமாத்தான் இருக்குனு தலையைத் தடவிக் கொடுத்துட்டு அப்புறம் ஏன் குட்டுறீங்க?
ஏழு உலக அதிசயங்கள்... பெருநாட்டு மச்சு பிச்சு... பிரேசில் பாலைவனம்... ஆஸ்திரேலியா ஹார்பர் பிரிட்ஜ்... ஆம்ஸ்டர்டாம் டூலிப் தோட்டம்... ஸ்பெயின் கிரிஸ் டல் பேலஸ்... சம்பா டான்ஸ்... பெல்லி டான்ஸுன்னு எல்லாத்தையும் நீங்க 50 ரூபா, 100 ரூபானு மினிமம் பட்ஜெட்ல இங்கு இருந்தே பார்க்கணும்கிற தொலைநோக்குப்பார்வை என்கிட்ட இருக்கு. இதனால் அதிக லாபம், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு மட்டுமல்ல; உங்களுக்கும்தான்கிற தொலைநோக்குப் பார்வை ஏன் இல்லை உங்ககிட்ட...?
(சென்னையைச் சேர்ந்த பஞ்சநாதனுக்கு நான் சொன்ன பதிலையும் படிங்க).''



சி.பி - அப்புறம் எப்படி அண்ணன் அடுத்தவங்க காசுல உலகத்தை சுத்தி பார்க்கறது? தன் தயாரிப்புன்னா ஷூட்டிங்க்கை ஒரு கிராமத்துல வை, அடுத்தவன் காசுன்னா ஷூட்டீங்கை மலேசியா ஹாங்க்காங்க், சிங்கப்பூர்னு வை - இதுதான் இப்போ எல்லார் பாலிசியும்..  


http://600024.com/files/2010/04/Endhiran.jpg


9. ''உங்களுடைய படங்களில் டாப் 3 என்பது 'இந்தியன்’, 'முதல்வன்’, 'ஜென்டில்மேன்என்பது என் கருத்து, சரிதானே ஷங்கர்?''


 ''உத்தமபாளையம் ரோகிணிக்கு சொன்ன பதிலைப் படிங்க உதயகுமார்!''

தொடரும்.. 


- அடுத்த வாரம்...

''உங்களுடைய பெரும்பாலான ஹீரோயின்கள் அதற்கு முன் மணிரத்னம் படங்களில் நடித்திருக்கிறார்கள். 'ரோஜா’ - 'ஜென்டில்மேன்’, 'இருவர்’ - 'ஜீன்ஸ்’, 'உயிரே’ - 'இந்தியன்’, 'முதல்வன்’... இது என்ன சென்டிமென்ட்?''
''உலக அதிசயங்களில் நீங்கள் வியந்து ஆச்சர்யப்பட்ட உலக அதிசயம் எது? ஏன்?''


'''நண்பன்நீங்கள் இயக்கிய படம் என்பதை மறந்துவிட்டு, விகடன் விமர்சனக் குழு அந்தப் படத்துக்கு அளித்த மதிப்பெண் கள் சரிதானா என்று சொல்லுங்கள்... எனக்கென்னவோ அவர்கள் 'வைரஸ் பிரின்சிபல்போல மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக நடந்துகொண்டார்கள் என்று தோன்று கிறது?''


-  இன்னும் பேசலாம்...

இண்ட்டர் நெட்டில் பொழுதை கழிப்போர் சங்கம் (IPS) ( ஜோக்ஸ்)

http://1.bp.blogspot.com/-nGGz8QxiyYI/Te4jPHgYMfI/AAAAAAAAApc/3nOx1_5oraw/s1600/katrina-kaif-wallpapers-2.jpg 

1. மெடிக்கல்ஷாப் மேனகா -என் புருஷனை யார் திட்டினாலும் எனக்குப்பிடிக்காது..

நிஜமாவா?  

ஆமா, நான் மட்டும் தான் திட்டுவேன் # பொஸஸிவ்னெஸ்

----------------------------------

2. பிரபல பெண் ட்வீட்டர் -நெருக்கமானவங்களை பா போட்டு தான் பேசுவோம்.. 

மொக்கை ட்வீட்டர் - அப்போ ஐயப்பாவை?

----------------------------------

3. மிஸ்! உங்க ஜடை இன்னைக்கு ரொம்ப வித்தியாசமா இருக்கே?

ஹி ஹி இது கோச் “சடை”யான் கேத்ரீனா கைஃப் ஸ்டைல்

-----------------------------

4. கொரியர் ஆஃபீஸ் வேலை இண்ட்டர்வியூவுக்கு வந்திருக்கீங்களே?என்ன அனுபவம் இருக்கு? 

கோம்ஸ் -டெயிலி ஒரு கொரியன் மூவி டி வி டி ல பார்ப்பேன் சார்

--------------------------------

5. ரியாஸ் -டியர்! நம்ம காதல் பவித்ரமானது..

. ஓக்கே டாக்டர்.. என்னோட பிரச்சனை பவுத்ரமானது

-------------------------------

6. மாமா, என்ன? இது? பொண்ணு 40  வயசு கிழ போல்ட்டா இருக்கு?

மாப்ளை, அவசரப்படாதீங்க, அது பொண்ணோட 5 வது தங்கச்சி, பொண்ணு இனி தான் வரும் #அவ்

--------------------------------

7. DR,என் டி பி இப்போ எப்படி இருக்கு? செக் பண்ணி சொல்லுங்க , இருமல் ஜாஸ்தி ஆகிடுச்சு 

.. ட்விட்டர் பைத்திய DR - வழக்கம்போல் கேவலமா இருக்கு

----------------------------------

8. மச்சி = ஆண்பால், மச்சினி = பெண்பால் , அப்போ மச்சினிச்சி = ? தமிழ் இலக்கணத்துல ஒரு டவுட் அவ்ளவ் தான் ஹி ஹி 

----------------------------------

9. பிரதமராவது ராகுலின் நோக்கமல்ல:- பிரியங்கா பேச்சு # அரசியலுக்கு வருவது பிரியங்காவின் ஏக்கம் அல்ல - ராகுல் பேச்சு

----------------------------------

10. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் உடன் நயன் தாரா ஜோடி # ஷாலினி உஷார் இனி ஹி ஹி

---------------------------------

http://reviews.in.88db.com/images/Nayantara-unseen-stills.jpg

11. சரியா பழக்கமாகாம இருந்தா அது மச்சினி, நல்லா பழகி க்ளோஸ் ஆகிட்டா செல்லமா மச்சினிச்சி # ஹி ஹி

--------------------------------

12. அம்மா, அப்பா நம் மீது காட்டும் அன்பு, பாசம் இவற்றை 100% நம்மால் திருப்பி செலுத்த முடிவதில்லை :(
-------------------------------

13.சின்ன வயசுல அம்மா பூரி சுட்டாங்கன்னா உப்புன பகுதில இருக்கற மொறு மொறு பார்ட்டை மட்டும் எல்லாருடையதும்  பிடுங்கி சாப்பிட்றது என் பழக்கம்:)

----------------------------------


14. -மேடம், சவுமி ஐ பி எஸ் (SOWMI-IPS)-னு நேம் போர்டு வெச்சிருக்கீங்களே?ஏன்?

I = இண்ட்டெர்நெட்டில் P =பொழுதை  போக்குவோர்  S = சங்கம் 
---------------------------------

15. கணவன் -கடை வீதி போலாம்னு சொன்னியே, என்ன வேணும்? பட்டுன்னு சொல்லு .  

மனைவி - பட்டு
--------------------------



16. எங்கள யாரும் பயமுறுத்த முடியாது-அன்புமனி'# உங்க சம்சாரம் கூடவா?

-------------------------------



17. மிஸ், வீட்டை விட்டு வெளீல போகாம இருக்கீங்களே, ஏன்?

இன்னைக்கு உலக முத்த தினமாம்,ஊர்ல இருக்கற பசங்க எல்லாம் மொத்தமா ரோட்ல, எதுக்கு வம்பு?

------------------------------



18. தலைவருக்கு முன்னால நாக்கை மடிச்சு பேசுனாராமே?

ஆமா, நல்ல வேளை, அவரை கூட்டிட்டு போய் அயர்ன் பண்னாம விட்டாங்களே?

---------------------------------

19. நீங்க டெயிலி ஒரே கலர்ல தான் சட்டை போடறீங்க, ஏன்?

எந்த பொண்ணும் என்னை சட்டை பண்றதில்லை,டெயிலி சட்டை மாற்றி மட்டும் என்ன யூஸ்?

-----------------------------------

20. ஆசீர்வாதம் பண்ணுங்க குருவே! மகராசியா இருக்கனும்..

என் ஜாதகம் பார்க்காமயே பலன் சொல்லுங்க பார்க்கலாம்.. மகர ராசியா இருக்கனும்?

---------------------------------------

http://cinebuzz.in/wp-content/uploads/2011/07/prabhudeva-nayanthara.gif

Wednesday, February 15, 2012

உனக்கென நான், எனக்கென நீ - சிறுகதை - பிப்ரவரி 14 ஸ்பெஷல்

நான் எங்க ஊருல இருக்கும் மருத்துவமனைக்கு எனக்கு தெரிஞ்ச டாக்டரை பார்க்க போய் இருந்தேன். அங்க 35 வயசு மதிக்கத்தக்க பெண் ஒருத்தங்க தன் பிள்ளைகளோட டாக்டரை பார்க்க வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. ரொம்ப கலகலப்பா சிரிச்சு பேசிக்கிட்டு எதோ பிக்னிக் வந்த மாதிரி சந்தோஷமா இருந்தாங்க. அவங்களை பார்க்கும்போது யாருக்கும் எந்த வியாதியும் இருக்குற மாதிரி தெரியலை. எனக்கு என்னன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருந்துச்சு. 


அவங்க போனபின் டாக்டர்கிட்ட அவங்க யாரு? என்ன ஏதுன்னு கேட்டு தெரிஞ்சுகிட்டேன். அவங்களை பத்தி தெரிஞ்சுக்கிட்டதால் இப்படியும் ஒரு  உறவா? அந்த உறவால யாருக்கு என்ன லாபம்ன்னு புரியலை. அதேப்போல அந்த உறவு சரியா? தவறா? இதன் முடிவு என்னன்னு புரியாம குழம்பியிருக்கேன் .





இப்போ டாக்டர் சொன்னது....
 
மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு வளாகத்துக்கு  காயத்திரி  என்ற 30 வயதான பெண் தற்கொலைக்கு முயன்று, உறவினர்களினால் அழைத்து வரப்பட்டு உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கும்போது இங்க அழைச்சுக்கிட்டு வந்தாங்க. எப்படியோ போராடி அவங்களை காப்பாத்திட்டோம்.

 அவங்க கணவர்கிட்ட பேசும்போது என்ன காரணம்ன்னு விசாரிச்சேன். 

 தெரியலை சார். ஏன் இப்படி செஞ்சுகிட்டா-னு புரியலை. 


சரி உங்களுக்குள் உறவு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. ?

உண்மையை சொல்லனும்ன்னா எங்களுக்குள் உறவு அந்தளவுக்கு சரியில்லை சார். என்னை கிட்டவே நெருங்க விட மாட்டேங்குறா. அப்படியே இருந்தாலும் ஏதொ மரக்கட்டை போல இருக்கா. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை சார். நீங்க வேணும்ன்னா என்னன்னு கேட்டு சொல்லுங்க சார்ன்னு  சொன்னார்.


இதே பதிலைத்தான் அந்த பொண்ணோட மாமனார், மாமியார், அப்பா அம்மா எல்லாரும் சொன்னாங்க. காயத்திரிக்கு 10வயசுல ஒரு பொண்ணும், 8 வயசுல ஒரு பையனும் இருந்தாங்க. குழந்தைகள் காயத்திரி ஹாஸ்பிட்டலில் இருக்கும் வரை அவங்களை விட்டு நகரல. அந்த பாசமான குழந்தைகளை விட்டுட்டு சாகனும்ன்னு அந்த பொண்ணு எப்படி துணிஞ்சுதுன்னு எனக்கு குழப்பமா இருந்துச்சு. அதனால் அந்த பொண்ணுக்கு கவுன்சிலிங்க் குடுக்க தீர்மானிச்சேன்.



கவுன்சிலிங்க் குடுக்க ஆரம்பிச்சேன். எது கேட்டாலும் அழுகை மட்டுமே பதில். 

”கணவர் கார்ப்பரேட் கம்பெனில கைநிறைய சம்பளம் வாங்குறார். நீங்க பிறந்த வீடும் வசதிக்கும் அன்புக்கும் குறைச்சலில்லாத வீடு. அப்புறம் ஏன் தற்கொலை பண்ணிக்க பார்த்தீங்க”


அப்பவும் பதிலில்ல. அப்பதான் அவங்க பொண்ணு மாடிப்படிக்கட்டுகளில் இறங்கும்போது கால் தவறி விழுந்து எங்க ஆஸ்பிட்டலயே சேர்த்தாங்க. அப்போ காயத்திரிதான் தன் குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கிட்டங்க. அப்படி பார்த்துக்கிட்டாலும் சில சமயம் தனிமைல அவங்க அழறதை நான் கவனிச்சேன். அப்போதான் எனக்கு ஒண்ணு தோணுச்சு.

காயத்திரியை தனியா அழைச்சு

 “நீங்க தற்கொலை பண்ணிக்க பார்த்தீங்க. நீங்க ஒருவேளை செத்து போய் இருந்தால் இப்போ உங்க பொண்ணை, மகனை  யார் பார்த்துக்குவாங்க. அப்படியே யாராவது பார்த்துக்கிட்டாலும் தாய் போல வருமா?”ன்னு

 அவங்க தாய்மை உணர்ச்சியை தூண்டிவிட்டேன். அழுதுக்கிட்டே தன் கதையை சொன்னாங்க.

 காயத்ரியின் ஸ்டேட்மெண்ட் 

என் கணவர் சுந்தரத்தை கல்யாணம் பண்ணிக்கும்பொது எந்தவித எதிர்பார்ப்புமில்லாமதான் கட்டிக்கிட்டேன். அவர் முன்னமே வீட்டுக்கு தெரியாம ஒரு பொண்ணு கூட குடித்தனம் பண்ற விஷயம் எனக்கு தெரிய வந்துச்சு. மத்த பெண்களுடன் தொடர்பு இருப்பதும் எனக்கு தெரிய வந்துச்சு. அதனால் அப்பா அம்மா கவுரத்துக்காக ஒட்டாமதான் வாழ்ந்துக்கிட்டு இருந்தேன். எனக்கு கருத்தரிக்கலை. அதனால, அவரோட மூத்த சம்சாரம் ஒரு பெண்குழந்தையை பெத்து போட்டுட்டு செத்துட்டாங்க. 


 அந்த குழந்தையை எடுத்து வளர்க்க ஆரம்பிச்சேன். அதுமில்லாம அவருக்கு  சந்தேகம், நான் சந்தோஷமா இருக்குறது பொறுக்காத சாடிஸ்ட் குணம், வெளில எங்கயும் கூட்டி போகாம அடைஞ்சு கிடந்தேன். நான் தத்தெடுத்துக்கிட்ட என் பொண்ணுதான் எனக்கு மிகப்பெரிய ஆறுதல் அவ அன்புலதான் எல்லத்தையும் சகிச்சுக்கிட்டு வாழ பழகிட்டேன்.



எனக்கும் ஒரு பையன் பிறந்தான். அப்போதான் எனக்கு வேலை கிடைச்சது. முதல் நாள் ஜாயின் பண்ணும்போது எல்லார்க்கிட்டயும் பேசுவதுப் போல்தான் தமிழரசன்கிட்டயும் பேச ஆரம்பிச்சேன். மெல்ல மெல்ல எங்களுக்குள் பழக்கம் அதிகமாகி அவங்கவீட்டுக்கும் நானும் எங்க விட்டுக்கும் போய் வரும் அளவுக்கு ஃப்ரெண்ட்சானோம். அவங்கம்மவுக்கு நான் இல்லாம எந்த வேலையும் ஓடாது.



என் கதையை கேட்டவர் எனக்காக பரிதாபப்படுவார். என் புருசனோட குணத்தை கண்டு என்கிட்ட யாருமே ஃப்ரெண்டா இல்லாதப்போ தமிழோட அன்பும் ஆதரவும் எனக்கு இதமா இருந்துச்சு.எங்களுக்குள்ள உடல் ரீதியா எந்த தப்பும் நடக்கலை, ஆனாலும் மனசளவில் நாங்க காதலர்கள் மாதிரி ஆகிட்டோம்.


அப்புறம் கணவன் மனைவிக்குள் கூட அவ்வளவு அன்னியோன்யம் இருக்குமான்னு தெரியலை. அவ்வளவு பாசமா இருந்தோம். நான் தமிழை முழுசா நம்பினேன். அவன் எனக்கே எனக்குன்னு ரொம்ப நம்பிக்கையா இருந்தேன். அவங்க வீட்டுல அவனுக்கு பெண் பர்க்க ஆரம்பிச்சாங்க. ரெண்டு வருசமா பெண் பார்த்தாங்க. பார்க்கும் பெண்ணையெல்லாம் எதேதோ காரணம் சொல்லி வேண்டாம்னுட்டான். அவன் என்னை மனசுல நினைச்சுக்கிட்டுதான் இப்படியெல்லாம் மறுக்குறான்னு நினைச்சுக்கிட்டேன்..  


 அப்போதான் நான்  கல்யாணம் பண்ணிக்க போறேன்னு குண்டை தூக்கி போட்டான். ஏண்டா நான் இல்லாம நீயிருப்பியான்னுலாம் கேட்டேன். ஏதேதோ காரணம் சொல்லி என்னை சமாதானம் படுத்தி  பெண் பார்க்கவும் என்னை கூட்டி போனான். நான் செலக்ட் பன்ற பெண்ணைதான் கட்டுவேன்னு சொல்லி பரிதாபமா நின்னான். அப்புறம் அவன் கல்யாணத்துக்கு சேலை எடுத்து குடுத்தது முதற்கொண்டு ஆரத்தி தட்டு வரை ரெடி பண்ணி கொடுத்த்து வரை நான் தான்.



எல்லாம் செஞ்சும் எனக்கு அவனை விட்டு தர மனசில்லை. அதனால, நான் திருமணத்துக்கு முதல் நாள் தற்கொலைக்கு முயற்சி பண்ணேன். எப்படியாவது என் பிள்ளைகளுக்காக என் மனசை மாத்துங்க சார்..

 டாக்டர் சொல்றார்..

என்ன சொல்வதுன்னே தெரியலை.. அவன் முகத்திரையை கிழிச்சாதான் இந்த பொண்ணுக்கு அவன்மேல் இருக்கும் மயக்கம் தெளியும்னு 


”உங்க நல்வாழ்வுக்காய் அவன் கவுன்சிலிங்க் வருவானா?”ன்னு கேட்டேன்

. ஏன்ன, இதுப்போல இல்லீகல் காண்டாக்ட்ல இருக்குறவங்க தன் முகத்தை காட்ட மறுப்பாங்க. அதுலயும் அவன் புதுசா கல்யாணம் ஆனவன் தன் எதிர்காலம் பாழாயிடப்போகுதுன்னு அவன் வரமாட்டான். அப்பவே அவன் சுயரூபம் பாதி தெரிஞ்சு போகும்ன்னு பிளான் பண்ணி வரும் செவ்வாய் கிழமை அவனை வரச் சொல்லும்மான்னு சொன்னேன். அவன் வரமாட்டான்ற நம்பிக்கையில்.....,


செவ்வாய் கிழமை..., 

தமிழரசன் ஸ்டெட்மெண்ட்

ஹலோ சார் நான் தான் காயத்திரி சொன்ன தமிழ், அவளோட கவுன்சிலிங்க்காக  என்னை பார்க்கனும்ன்னு சொன்னதாய் சொன்னாள். அதான் வந்தேன். சொல்லுங்க சார், என்னால் என்ன ஹெல்ப் பண்ணனும்ன்னு சொல்லுங்க. காயத்திரிக்காக எது வேண்டுமானாலும் செய்வேன்


சார், அவங்களை முதன்முதலில் எங்க ஆபீசுலதான் பார்த்தேன் சார். அவங்களாவே என்கிட்ட வந்து அறிமுகப்படுத்திக்கிட்டு லொடலொடன்னு பேச ஆரம்பிச்சாங்க. அது மாதிரி பேசுறவங்களை எனக்கு பிடிக்காது. அதனால  எனக்கு அவங்களை பிடிக்காம போச்சு. அப்புறம், அவங்க மத்தவங்க கிட்ட பழகும் விதம் உதவும் குணம் கண்டு எனக்கு அவங்களை பிடிச்சு போச்சு. அவங்க குழந்தைகள் அவங்களோடது  இல்லைன்னும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்ன்னும், அவங்க புருசன்கிட்ட அவங்க படும் பாடு அம்மாக்கிட சொன்னதை கேட்டு அவங்க மேல் பரிதாபம் வந்துச்சு. அந்த பரிதாபம் மெல்ல மெல்ல அன்பா மாறிடுச்சு.


ரெண்டு பேர் வீடும் ஒரே ஏரியா என்பதால் வீட்டுக்கு  ஒண்ணாவே போவோம். வருவோம். ஆபிசுலயும் ஒண்ணாவே சாப்பிடுவோம். அவங்க எல்லார்க்கிட்டயும் சகஜமா பேசுறதால இதை யாரும் தப்பா எடுத்துக்கல. ஆபீஸ் லீவு நாள்ல எங்க வீட்டுலயோ இல்ல அவங்க வீட்டுலயோ ரெண்டு பேரும் சேர்ந்து இருப்போம். என் அம்மாவுக்கு அவங்க நல்ல ஃப்ரெண்டானாங்க. அவங்க பிள்ளைகள் என்கிட்ட பாசமா ஒட்டிக்கிச்சு.


 என் அம்மாவை எவ்வளவு நேசிக்குறேனோ அதே அளவு அவளையும் நேசிச்சேன். அவங்க பிள்ளைங்க மேல ரொம்ப பாசமா இருப்பாங்க.  அதே நேரத்தில் என்னையும் ரொம்ப நேசிக்க ஆரம்பிச்சங்க. என் மேல வெச்ச பாசம் ரொம்ப தீவிரமா மாற ஆகி அவங்க புருசனை தள்ளி வைக்கும் நிலைக்கு வந்துட்டாங்க.

ரெண்டு பேரும் ரொம்ப தீவிரமா நேசிக்க ஆரம்பிச்சோம். ஒருவர் இல்லாம ஒருத்தர் இருக்க முடியாதுன்ற லெவலுக்கு வந்துட்டோம். காயத்திரிக்கு என் மேல் பொசசிவ்னெஸ் வளர ஆரம்பிசது. யார்கிட்டயாவது ஃப்ரெண்டிலியா பேசினாலும் அவ முகம் மாறுவதை கவனித்தேன். 


அப்போதான் என் வீட்டுல எனக்கு பெண் பார்க்க ஆரம்பிச்சாங்க. நிஜமாவே காயத்திரி மனசுல இருந்ததால் எனக்கு எந்த பெண்ணையும் பிடிக்கலை. எல்லாரையும் எதாவது காரணம் சொல்லி  அவாய்ட் பண்ணிட்டேன். அப்புறம்தான் எங்க நிலை புரிய வந்தது. இதே நிலை நீடித்தால் பிள்ளைங்க எதிர்காலம், எங்க ரெண்டு பேர் குடும்ப கவுரவம்லாம் லேட்டாதான் உறைக்க ஆரம்பிச்சது. அவளை என்னோடு கூட்டிக்கிட்டு போறது ஈசி. ஆனால், அவளால் அங்க வந்து பிள்ளைங்க, அவ பெற்றொர்களை பிரிந்தும், என் குடும்பத்தை பிரிந்து நானும் நிம்மதியா வாழ்ந்துட முடியுமா?


 இல்லை இதே நிலை நீடித்தால் காய்த்திரியோட எதிர்கால வாழ்க்கை என்னாகும்ன்னு நீண்ட யோசனைக்குப்பின்.., அதிரடியா சில நடவடிக்கைகள் எடுக்கனும்ன்னு முடிவு பண்ணி கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். 



காயத்திரி மனசு என்ன படு படும்னு எனக்கு நல்லாவே தெரியும் ஆனால் இதை தவிர எனக்கு வேறு வழி தெரியலை. சார். இப்போ எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. இப்பவும் காயத்திரியை நேசிக்கிறேன். எப்பவும் என் தாயை விட என் மனைவியை விட அவளத்தான் நேசிக்குறேன். ஆனால் யதார்த்தம்ன்னு ஒண்ணு இருக்கே. அதனால் என் அன்பை மறைச்சு வெச்சுக்க ஆரம்பிச்சுட்டேன். ஆனால், எந்த சூழ்நிலையிலும் காயத்திரியை விட்டு குடுக்க மாட்டேன் நல்ல நண்பனாக. 

என்று சொல்லி முடித்தான்.


காயத்திரிக்கு தீவிர கவுன்சிலிங்க் குடுத்தபின் இப்போ அவங்க தமிழ் மேல் கொண்ட காதல் மறைஞ்சு தூய்மையான நட்பு மட்டுமே இருக்கு. ஆனால், ஒருவருக்காக ஒருவர் வாழும் அன்பும், ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்தும், ஒருவர் இன்ப துன்பங்களில் அடுத்தவர் பங்கேற்கும் பக்குவமும் வந்து சேர்ந்துடுச்சு.

 காயத்திரி வீட்டு நல்லது கெட்டதுகளில் தமிழ் கலந்துக்குறதும் தமிழோட மனைவி சீமந்தத்துக்கு எந்த வித பொறாமையும் இல்லாம ஒரு தோழியா போய் எல்லா வேலையும் முன் நின்று நடத்தி குடுக்க காயத்திரியால் முடியுதுன்னு  இருக்குன்னு சொல்லி முடிச்சார் டாக்டர்.. 


உறவுகள் விசித்திரமானவை.. ஏன் டாக்டர்? தாம்பத்ய வாழ்க்கைல எதனால சலிப்பு வருது.. ? எதனால நிறைய கள்லக்காதல்கள் ஏற்படுது?


மனவியல் நிபுணர்கள் கூற்றுப்படி  80% திருமணங்கள்ல மேரேஜ் ஆகி 4 வருடங்களில் துணை சலித்து விடுமாம்.. சந்தர்ப்பம் கிடைத்தால் வேறு துணை தேட இரு பாலினரும் முயல்வாங்களாம்.. 


இதை தடுக்க என்ன வழி டாக்டர்? 


வருடம் இரு முறை மெக்கானிக்கல் லைஃப்ல இருந்து விடு பட்டு தம்பதிகள் டூர் போகனும் ,மன்ம் விட்டு பேசனும்,, ரொமான்ஸ் என்பது லவ் பண்றப்ப மட்டும் இல்ல மேரேஜ்க்கு பிறகும் அது இருக்கு  என்பதை உணரனும்.. 


அவருக்கு நன்றி சொல்லி விடை பெற்றேன்.. 


சில வாரங்கள் கழித்து அவர் வீட்டுக்கு வேறொரு வேலையாக போனேன்.. வீட்டில் அவர் இல்லை.. அவர் மனைவி மட்டும் தான் இருந்தார்.. 


டாக்டர் இல்லையா மேடம்?


ஹூம்.. எங்கே ? எப்போ பாரு.. டியூட்டி ஹாஸ்பிடல்னு அலைஞ்சுட்டே இருக்காரு.. குடும்பத்தை கவனிக்கறதே இல்லை


மேடம், உங்களுக்கு மேரேஜ் ஆகி எத்தனை வருஷம் ஆகுது?


4 வருஷம், ஏன் கேட்கறீங்க?


 சும்மாதான்.

JOURNEY-2 THE MYSTERIOUS ISLAND - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiu6phEAwFIQqfsC2l__Rmt1D44nD7QK5mqVwxMaTXEAmvyHwY2IkziL85fUG2BxAowp-41ayI2FjOv-e_5Njvwkdo3mvgHsDs1p3RG5zI4UxJV5M2Ba6qS2xvvkstx22pcQ8o4tzd8ovkq/s1600/Journey+2+The+Mysterious+Island+3D.jpgஜூராசிக் படம் பார்த்தப்போ குழந்தைகள் முதல் பெரியவங்க வரை எப்படி ஒரு புதிய அனுபவம் அனுபவிச்சாங்களோ, அந்த அளவு இல்லைன்னாலும் ஒரு ஜாலியான ஃபேண்டசி அனுபவத்தை இந்தப்படத்துல உணர முடியும்.. செம ஜாலியான குழந்தைகளுடன் பார்க்க தகுந்த ஒரு  அட்வென்ச்சர் ஃபிலிம் இது..

ஹீரோ 19 வயசுப்பையன் , அவனோட அம்மா கூட வசிக்கறான்.. அப்பா பிரபு தேவா மாதிரி சம்சாரத்தை அம்போன்னு விட்டுட்டு ஓடிப்போனவர்.. அதனால ஹீரோவோட அம்மா கவுதமி எப்படி கமல் கூட கெட் டுகெதரா வசிக்கறாங்களோ அப்படி இருக்காங்க.. ஆனா பையனுக்கு “சித்தப்பாவை” பிடிக்கலை.. 

ஹீரோவோட தாத்தா ஒரு ஆராய்ச்சியாளர்.. அவர் ஒரு தீவுல மாட்டிக்கறார்.. ராம் தாஸ் எப்படி  தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன் அப்டினு புலம்பிட்டு இருக்காரோ அது மாதிரி தனித்தீவுல மாட்டி இருக்கார்... இப்போ ஹீரோ தாத்தாவை தேடி கிளம்பறார்.. 

கூட சித்தப்பாவும் போறார்.. அந்த தீவுக்கு போக ஒரு ஹெலி காப்டர் அரேஞ்ச் பண்ணனும்.. ஏன்னா படம் முக்கா வாசி தீவுலயே நடக்குதுன்னா நமக்கு போர் அடிக்காம இருக்கறதுக்கும், ஹீரோவுக்கு ஒரு ஜாலிக்காவும் ஒரு ஹீரோயின் வேணும்.. அதனால கரெக்ட்டா 18 வயசு மகள் உள்ள ஒரு  ஹெலிகாப்டர் டிரைவர் கம் ஓனர் கூட கிளம்பறாங்க .. 

அந்த தீவுல போய் இறங்குனதும் ஒரு ஆச்சரியம் காத்திருக்கு.. அதாவது HONEY I SHRUNK THE KIDS படத்துல வர்ற மாதிரி ஒரு டெக்னிக்.. அந்த தீவுல இருக்கற எல்லா ஜீவராசிகளும் நாம ரெகுலரா  பார்க்கற சைஸ்க்கு ஜஸ்ட் ஆப்போசிட்.. 

அதாவது யானை பூனை மாதிரி குட்டியூண்டு.. பல்லி டினோசர் மாதிரி பெரிசு..குழந்தைகளை கவர்றதுக்காக இந்த ஐடியா.. அங்கே ஜாலியா ரவுண்ட் அடிச்சுட்டு எப்படியோ தாத்தாவை கண்டு பிடிக்கறாங்க.. அந்த தீவுல இருந்து எப்படி அவங்க மீண்டு வர்றாங்க அப்டிங்கறது தான் கதை.. 

Dwayne Johnson தான் அந்த சித்தப்பா கேரக்டர்.. நம்ம ஊர் நடிகர்கள் எல்லாம் இவரோட ஜிம் பாடியை பார்த்துக்கறது நல்லது. சும்மா 42 இஞ்ச் செஸ்ட்டை வெச்சுக்கிட்டே அர்னால்டு மாதிரி ஃபிலிம் காட்ற ஹீரோக்கள் எப்படி அலட்றாங்க. இதுல ஜான் அவ்ளவ் கட்டுக்கோப்பான பாடி இருந்தும் சிம்ப்பிளா வர்றார்.. இவருக்கு நடிக்க வாய்ப்பு கம்மி. ஆனா ஜாலியான டயலாக்ஸ் அவரை காப்பாத்துது.. 

Josh Hutcherson தான் அந்த 19 வயசுப்பையன் கேரக்டர்.. செம துறு துறு.. நம்ம பாய்ஸ் பட சித்தார்த் மாதிரி ( ஸ்ருதி கமலோட முத பாய் ஃபிரண்ட் )அவர் ஹீரோயிண்ட்ட ஜொள் விடறது, கடலை போட பம்மறது எல்லாம் ஓக்கே.. சித்தப்பா கிட்டே வாதிடும் இடங்களெல்லாம் செம.. 

vanessa hudgens தான் ஹீரோயின்.. இந்தியத்தயாரிப்பு மாதிரியே இருக்கார்.. தமிழர்களுக்கு பிடித்த முக வெட்டு.. நிறம் கூட மாநிறம்.. படம் பூரா ஒரே காஸ்ட்யூம் என்பதால் இயக்குநர் புத்திசாலித்தனமாக  அவருக்கு ஒரே ஒரு ஷார்ட்ஸ், லோ கட் பனியன்  குடுத்துட்டார் போல .. படம் பூரா ரசிக்க ஏராளமான காட்சிகள்.. 

ஒளிப்பதிவும், லொக்கேஷன்ஸூம் செம .. பறக்கும் தேனிப்பூச்சில எல்லாரும் சவாரி செய்யும் காதில் பூச்சுற்றும் காட்சிகள் இருந்தாலும் குழந்தைங்க ரசிக்கற மாதிரி இருக்கு..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiF2Vmbtnr7FvnuAFuqUOjkE9iRP5ykDFs3n9ECePo52etA3KnMeXcI-ycoho5E67yy68SLDGmxMYB5QeasVicBf16s0Hfpi_Px3_noeFPIhQI0-2sWs45OGeG7LNrV-ux11omU1pAmYox5/s320/vanessa-hudgens-diesel-delicious.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்

1.  உங்கப்பாவும் உன் கூட தீவுக்கு வருவார்..

மம்மி அவர், எனக்கு  எனக்கு டாடி இல்ல, ஜஸ்ட் கார்டியன் தான்.. 

நான் இல்லைன்னா நீ இந்நேரம் களி சாப்பிட்டுட்டு இருந்திருப்பே.. ஜெயில்ல.. மைண்ட் இட்.. 

ம்க்கும், உங்க கூட குப்பை கொட்றதுக்கு அதுவே பெட்டர்.. 

2.  டொக் டொக் டொக் 

நான் உள்ளே இல்லை..

 ஆர் யூ பிஸி..?

3.  என்னை நீ ஃபிரண்ட்டா ஏத்துக்கிட்டா சில மேட்டர்ஸ் மனம் விட்டு பேச முடியும்..

 ஒரு ஆணியும் புடுங்க வேணாம்.. கிளம்புங்க.. 

4.  பணம் குடுக்கறீங்க அப்டிங்கறதுக்காக பங்காளி ஆகிட முடியுமா?

5.  இந்த ஊர்லயே ஷோக்கான ஹெலிகாப்டர் நம்மளுதுதான்.. 

ஒரு சின்ன கரெக்‌ஷன்.. சீக்கான ஹெலிகாப்டர்னு சொல்லுங்க.. 

6.  இந்த மாதிரி ஒரு கேப்டனை நான் பார்த்ததே இல்லை ( நீங்க இன்னும் தமிழ் நாட்டு கேப்டனோட சட்டசபை சீன் ஆக்‌ஷன் பார்க்கலையே..?)

7.  மிஸ்...  என்னை பற்றி நீ என்ன நினைக்கறே..?

ரொம்ப ஓவரா வழியறே.. துடைச்சுக்கோ.. 

8.  யாரும் அசையாதீங்க.. நாம எல்லாரும் நின்னுட்டு இருக்கறது பாறைகளல்ல.. முட்டைகள்.. ராட்சச முட்டைகள்.. 

அப்போ ஆம்லேட் போடலாமா?

9.  வெல்கம் டூ  மை ஹோம்..  இங்கே கிடைக்கற பழங்களை வெச்சு ஜூஸ் தயாரிச்சு இருக்கேன்

சரக்கா இருந்தா இன்னும் நல்லாருந்திருக்கும் ஹி ஹி

10.  நான் என் அனுபவத்துல இருந்து சிலது சொல்றேன் கேட்டுக்கோ..

1. உன் மனசு என்ன சொல்லுதோ அதை கேட்காதே..

2. ஓப்பனா பழகு, ஆனா உணர்ச்சி வசப்படாதே

3.  உன் மனசுல என்ன இருக்கோ அதை வெளிப்படையா எல்லார் கிட்டேயும் சொல்லிடாதே.


http://cdn.teenstarsworld.com/wp-content/uploads/2010/11/Vanessa-Hudgens-Journey-2-The-Mysterious-Island.jpg

11.. என்ன பம்பறே? அவ உனக்கு ஒர்க் அவுட் ஆகலையா?

ஹூம், மடிய மாட்டேங்கறா..

12.  பொண்ணுங்களை கரெக்ட் பண்றது ஒரு தனிக் கலை..  நான் எல்லாம் உன் வயசுல மன்மத ராசாவா இருந்திருக்கேன்.. சொன்னா நம்ப மாட்டே.

அப்போ சொல்லாதே..

13.  பாதுகாப்பா போகனும்னா கடற்கரை ஓரமா போனா அந்த இடத்துக்கு போயிடலாம், ஆனா ரொம்ப லேட் ஆகும், சீக்கிரமா போகனும்னா காட்டுக்குள்ள புகுந்து போகனும். எப்படி வசதி?

செலக்ட் ஆப்ஷன் 2.  காட்டு வழி..

14.  ரொம்ப நேரம் நடக்கறமே.. அந்த இடம் வந்திடுச்சா?

யாருக்கு தெரியும்?நான் மட்டும் என்ன டெயிலி இங்கே காலைல ஒருக்கா, மாலைல ஒருக்கா வந்துட்டு போய்ட்டா இருக்கேன்.. ?

15. உதவி பண்றேன்னு சொல்லிட்டு நம்ம பேரண்ட்ஸ் நம்மை டாமினேட் பண்றது செம கடுப்பு..

ஆனா எனக்கு அப்படி அவங்க பண்னலைன்னா த்தான் கடுப்பாகும்..

16. ஆஹா. பட்டாளத்தான் பட்டையை கிளப்பறானே?

17.  உண்மையை சொல்லுங்க, இவ்ளவ் உயரத்துல இருந்து குதிக்க உங்களுக்கு பயம் தானே?

உண்மையை வெளீல சொல்லக்கூடாது//

18. காந்த திசை காட்டி செயல் இழந்தாச்சு. இப்போ எப்படி வழி கண்டு பிடிக்க?

ஸ்பைடர் எப்பவும் தெற்கே நோக்கிதான் தன் வலையை பின்னும்.. அதை வெச்சு கண்டு பிடிக்கலாம்..

19.  வேணாம். இப்படி செய்ய்றது பைத்தியகாரத்தனம்.

அதுதான் கிக்..

20.  நீ இதை ஓட்டு..  சுனாமிலயே ஸ்விம்மிங்க் போனவன் ஆச்சே..

http://movies.maxupdates.tv/wp-contents/uploads/2011/11/Hollywod-Movie-Journey-2-The-Mysterious-Island-2012-First-LookBannerCastWallpaperStillTrailerCrewMovie-PlotBudgetPostersPicture9.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. லொக்கேஷன் செலக்‌ஷன்ஸ், ஒளிப்பதிவு, கிராஃபிக்ஸ் அனைத்தும் ரசிக்கும்படி செய்தது..

2. ஹீரோயின் செலக்‌ஷன் நச்.. பில்லா நயன் தாரா மாதிரி அவரை பனியனிலேயே உலா வர வைத்தது..

3. அவதார், ஜூராசிக் பார்க் பட வரிசையில் குழந்தைகள் பார்த்து ரசிக்கும் விதமாக  காட்சிகளை வடிவமைத்தது.

4. வன்முறை, ரத்தம், வல்கர் காட்சிகள் எதுவும் இல்லாமல் ஃபேண்டசியாக கதையை நகர்த்திய விதம்..


http://collider.com/wp-content/uploads/journey-2-the-mysterious-island-image.jpg

லாஜிக் மிஸ்டேக்ஸ்

1.  நல்ல வசதி படைத்த ஹீரோவும், சித்தப்பாவும் டஞ்சனான ஹெலிகாப்டரில் ஆபத்தான தீவுக்கு போக முடிவு எடுத்தது. ஏன்? வேற நல்ல ஹெலிகாப்டரே கிடைக்காதா?

2. முன் பின் பழக்கம் இல்லாத ராட்சச தேனியின் முதுகில் 4 பேரும் தனித்தனியாக அமர்ந்து கொண்டு பறந்து உலா போவது.. எந்த வித லகானும் இல்லாமல் எப்படி பேலன்ஸ் பண்ண முடியும்?

3. க்ளைமாக்ஸில் பேட்டரிக்கு மின்சாரம் எடுக்க ஹீரோவின் சித்தப்பா எடுக்கும் முயற்சி சரியான  கேலிக்கூத்து.. நம்பவே முடியாத விசித்திரம்..

4. இந்த தீவு கடலில் மூழ்கப்போகிறது என சித்தப்பா சும்மா தரையில் பரவி இருக்கும் தண்ணீரை வைத்தே ஜோசியம் சொல்வது  ( நான் நேவில இருந்தவன், அதனால தெரியும் என்று சமாளிஃபிகேஷன் வேற )

http://media.screened.com/uploads/0/45/601288-2011_journey_2_the_mysterious_island_008.jpg

சி.பி கமெண்ட் -லாஜிக் எல்லாம் பார்க்காம ஜாலியா போய் ரசிக்க நல்லதொரு அட்வெஞ்ச்சர் படம்..

 ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல் படம் பார்த்தேன்


சம்சாரத்திடம் பல்பு வாங்கும் கஸ்டம்ஸ் ஆஃபீசர் கம் கஷ்டப்பட்ட ஆஃபீசர்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIEFLOfqBmrqjH4Yi1Qq_dE-3iUoghE2clyoDLEefjnI46cLhj40FlfSEJEcmK7QgXmwq7akyKYk7bPKZBpeMNALvjkPnsSXf0Gjq_fGgwwAqJWDAfeIWWNsIbrUz7DXkJLh_VMZ-n9wea/s320/jewellery_in_kerala.JPG 

1.ர‌ஜி‌னி அரசியலுக்கு வர மாட்டார்- லதா ரஜினி.# ஹா ஹா , நாங்க எல்லாம் எந்த காலத்துல பொண்டாட்டி பேச்சை கேட்டிருக்கொம்,இது எப்படி இருக்கு?-ரஜினி


--------------------------------------

2. "கேப்மாரி" என்பது கூட ஒரு ஜாதியின் பெயராம்.

 ஒரு வேளை சில பொஞ்சாதிங்க அப்படி இருக்கறதாலயோ என்னவோ?

-------------------------------------

3. அதிமுகவுடன் நாளுக்கு நாள் உறவு வலுத்து வருகிறது-அத்வானி. # யூ டூ பி ஜே பி? நீங்களுமா?இப்படி எல்லாரும் ஜால்ரா அடிப்பது அலுத்து வருகிறது - மக்கள்

---------------------------------------

4. நாட்டை எப்படி ஏமாற்ற முடிந்தது? - பிரதமருக்கு அன்னா கேள்வி #


 எல்லாம் காங்கிரஸ் கிட்டே இருந்து கத்துக்கிட்டதுதான் -அன்னா பதில்!

------------------------------------

5. பிரதமராக தகுதி உள்ளவர் நரேந்திர மோடி தான்- கத்காரி #  ம்ஹூம், எனக்கு நம்பிக்கை இல்லை, வாயைத்திறக்காம அவர்னால இருக்க முடியாதே?

---------------------------------------

6. காஞ்சு போன ஜனா - மேடம், அடிக்கடி நீங்க குப்பை கொட்றதை பத்தியே பேசிட்டு இருக்கீங்களே, அது ஏன்?

கன் ஃபைட் காஞ்சனா -ஏன்னா நான் சீனியர், உனக்கு முன்னால இருந்தே குப்பை கொட்றேன்

-----------------------------------

7.இலக்கிய எலி -  சார், உங்களுக்கு அறிவழகன்னு எதுக்காக பேர் வெச்சாங்க? அதான் 2மே உங்க கிட்டே இல்லையே?

இலக்கிய புலி சாரு-யோவ், கோடீஸ்வரன்னு பேர் வெச்சா அவன் பணக்காரனா?

-----------------------------------

8. வாழ்க்கை ஒரு நரகம்ங்கற நெகடிவ் தாட் உள்ள இளைஞனோட கதை தான் இது..

ஓஹோ, என்ன்  டைட்டில்?


 ஆல் ஈஸ் ஹெல் ( ALL IS HELL)

------------------------------------

9. எப்பேர்ப்பட்ட புத்திசாலியா இருந்தாலும் என் மனைவி கிட்டே  சொம்பு வாங்கித்தான் ஆகனும்.

ஓஹோ,இது உங்க ஃபேமிலி சொம்பிரதாயமா?

----------------------------------------

10. மேடம், நீங்க ஒரு தொழில் அதிபரை லவ் பண்றீங்களாமே?


நடிகை - ஆமா, ஒரே டைம்ல 4 , 5 பேரை என்னால லவ் பண்ண முடியாது. ஒன் பை ஒன் தான்


------------------------------------------

http://www.kochivibe.com/wp-content/uploads/2011/08/miss_kerala_2-300x295.jpg

11. உங்க மனைவி உங்களை வீட்டை விட்டு வெளில போன்னு துரத்தி விட்டுட்டாங்களாமே?

ச்செ! ச்சே ! உள்ளே வராதேன்னு மட்டும் தான் சொன்னாங்க


------------------------------------

12. டாக்டர், என் பையன் ஸ்ரீஜித் செம குண்டு, வாக்கிங்கே போக மாட்டேங்கிறான்..

அவன் பேரை அஜித்னு மாத்திடுங்க, காலம் பூரா நடந்துட்டே இருப்பான்


-----------------------------------------

13. டேய், நீ லூஸா?

ச்சே , ச்சே ஒரு ஃபுல் அடிச்சிருக்கேன், செம டைட் மச்சி

------------------------------

14. நீங்க ஒரு கேனைன்னு பேசிக்கறாங்களே? உண்மையா?

நீங்க வேற பேசும்போது CAN I, CAN I -ங்கற வார்த்தை அடிக்கடி யூஸ் பண்ணுவேன், அவ்ளவ் தான்

-------------------------------

15. நிருபர் - சார் உங்க கடந்த கால நினைவுகள் ஏதாவது சொல்லுங்க .

தல -”நடந்ததை”” நடந்தபடி சொல்றேன், நோட் பண்ணிக்குங்க

--------------------------------------

16.ராமதாஸ் பேசுவதை தண்ணியில் எழுதுங்கள்.. - வேல்முருகன்.. # எனக்குப்பிரச்சனை இல்ல, நான் இருக்கறதே தண்ணிலதான் - கேப்டன்

-------------------------------

17. நடிகர் விஷால் மீது நடிகை ராதிகா புகார் #  சார், இவரு என் ஷால் பிடிச்சு இழுத்துட்டார் சார்

----------------------------------

18.  டேய் வாடா, நீயா? நானா? பார்த்துடலாம்

அய்யோ, நான் வர்லைண்ணே, அது செம மொக்கை புரோகிராம், நண்பன் போலாமா?

---------------------------------------

19. ஆயிரம் ஆபாச பட சிடிக்கள், கையில் வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது # 1000 சிடியை எப்படி கைல வெச்சிருக முடியும்?பைல வெச்சிருக்கார்னா ஓக்கே


----------------------------------------

20. மெடிக்கல் ஷாப்  மேனகா - அத்தான், வீடு ஃபுல்லா குப்பையா இருக்கு

கஷ்டப்பட்ட கஸ்டம்ஸ் ஆஃபீசர் - ஹூம், குப்பை எல்லாம் அகற்றிடலாம்னு தான் பார்க்கறேன்.. ஆனா மனசு வர்லை ஹி ஹி

----------------------------------


http://spicy.southdreamz.com/spicydb/hot-kerala-girls-saree-modeling-stills/lovely-south-indian-girls-saree-photos-12.jpg

Tuesday, February 14, 2012

ஒரு நடிகையின் வாக்கு மூலம் - சோனியா அகர்வாலின் ஷாக் நீலம் -சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9kij9b_LweF5mtBc-FFau0_VPs1SbXh9c8JIxFPYB4gRNLMppjRKXw6BnTaKNkW1WyMPkJz9AvMwoRx-R150A417YwoNDK1p82st9GofmxtahoXOjUTyRIxxwQV3xCF08uX6-UpkQuEs/ 

இந்தப்படம் புக் ஆகும்போதே செல்வராகவன் வயிற்றில் புளியை கரைச்சிருக்கும்.. என்னென்ன சொல்லப்போறாரோ?ன்னு.. ஆனா செகண்ட் இன்னிங்க்ஸ்க்கு இன்னும் சான்ஸ் இருக்கறதா சோனியா நினைச்சாரோ என்னவோ அவர் சொந்தக்கதை எதுவும் சொல்லலை.. படத்தோட டைரக்டர் பூடகமா பாரதிராஜா, குஷ்பூ, சிம்பு, நயன் தாரா, பிரபு தேவா  எல்லார் கதையையும் மிக்ஸ் பண்ணி ஒரு காக்டெயில் கதை ரெடி பண்ணிட்டார். ஆனா திரைக்கதைல வேகம் இல்லை.

சோனியா அகர்வாலோட அப்பா கிராமத்துல  நாடக கலைஞர்.. நலிவடைஞ்ச நாடகக்கலையால அவர் பழசெல்லாம் மறந்துட்டு இருக்கறப்ப ஊர் ஜனங்க அவர் பெண்ணை ஹீரோயினா போட்டு நாடகம் எடுக்க சொல்றாங்க.. அவரும் ரெடி பண்றார்.. திடீர்னு வேற ஒரு ட்ரூப்பை வெச்சு நாடகம் நடத்திடறாரு ஊர்த்தலைவரு.. ஆக்சுவலா இந்த சீன்ல அப்பா கேரக்டர் தானே கோபப்படனும்? ஆனா அம்மா கேரக்டர் கோபம் அடைஞ்சு ஜெ கேப்டன் கிட்டே சட்டசபைல சவால் விட்ட மாதிரி கிராமத்துக்கே சவால் விடறாரு.. என் மகளை நாடறஞ்ச அழகிய நடிகை ஆக்கி காட்றேன்னு.


கட் பண்ணா  சிட்டி..  THE DIRTY PICTURE  படத்துல வர்ற மாதிரி சான்ஸ் கேட்டு ஸ்டூடியோ ஸ்டூடியோவா அலையறாங்க.. அப்போ ஒரு லேடி ஆடம்பரமா வாழ, சான்ஸ் கிடைக்க உன்னை நீ இழக்கனும்கறாங்க.. கேட்கற நமக்கே ஷாக்கா இருக்கற அந்த சீன்ல என்னமோ கைல வெச்சிருக்கற கடலை பர்பியை கேட்டதும் இந்தா என தர்றது மாதிரி அவங்க கில்மாவுக்கு ஓக்கே சொல்றாங்க. ( இந்த சீன்ல டைரக்டர் ஹீரோயின் சோனியாவோட அம்மா கேரக்டர் மெழுகுவர்த்தி மாதிரினு காட்ட நினைச்சிருக்கார் எடுபடலை.. )

தன் கற்பை ஏலம் விட்டும் கூட  சோனியாவோட அம்மாவால மகளுக்கு ஹீரோயின் சான்ஸ் வாங்கித்தர முடியலை.. கடைசில ஒரு டைரக்டர்ட்ட சான்ஸ் கேட்கறாங்க ( படத்துல ராஜ்கபூர் நடிச்ச இந்த கேரக்டர் பாரதிராஜா மாதிரி காட்றாங்க) அவர் சோனியா அகர்வாலை கேட்கறாரு. நடிகை ஆக்குவதே லட்சியம் (!!!!??) என்பதால் அதுக்கும் ஒத்துக்கறாங்க... அட தேவுடா. 

இனிமே சொல்லப்போற கதை சிம்பு, நயன் நினைவில் கொள்ளவும்.. சோனியா அகர்வால் ஹீரோயினா நடிச்ச படம் ஹிட் ஆகுது.. காட்சி மாறுது.. அவரை அறிமுகம் செஞ்ச டைரக்டருக்கே அவரோட அடுத்த பட கால்ஷீட் கொடுக்க முடியாத அலவு பிசி.. இவருக்கு போட்டியா ஒரு நடிகையை களம் இறக்கறார் ( ஹன்சிகா மோத்வானி மாதிரி சாயல் )

சோனியா அகர்வால் ஒரு டைரக்டரை லவ் பண்றாரு..  ( நயன் தாரா சிம்புவை லவ்வின மாதிரி)  அந்த டைரக்டர்  சோனியாவை நல்லா யூஸ் பண்ணிக்கிட்டு  திடீர்னு மார்க்கெட்ல வந்த புது நடிகையை  கரெக்ட் பண்றாரு.. புதுசு பிக்கப் ஆனதும் பழசை மறக்கறாரு ( பிரபுதேவா நயனை கழட்டி விட்டுட்டு ஹன்சிகா மோத்வானியை கரெக்ட் பண்ணுன மாதிரி )

இதை எல்லாம் பார்த்து வெறுத்துப்போன ஹீரோயின் ஆசிரமத்துக்கு போய் செட்டில் ஆகிறாரு ( ரஞ்சிதா மாதிரி )

அவ்ளவ் தான் கதை. இப்போ படத்தோட புரொடியூசர் புன்னகைப்பூ கீதா .. அவர்க்கு மனசுக்குள்ள ஆசை, இந்தப்படத்துல நடிக்கனும்னு.. உடனே டி வி  மேனேஜிங்க் டைரக்டர் ரோல்ல வந்து நடிகை சோனியாவை பேட்டி எடுக்கற மாதிரி 2  ரீல் ரெடி பண்ணி அட்டாச் பண்ணிட்டார்.

படத்துல முதல் பாராட்டு சோனியா அகர்வால்க்கு அம்மாவா நடிச்ச நடிகை. ஊர்மிளா உன்னி . செம அக்டிங்க்.. வறுமைல இருக்கறப்ப பம்முவதும், பணம் வந்ததும் காட்ற கித்தாப்பும், ஆடம்பர பாடி லேங்குவேஜும் அசத்தல். 

2 வது பாராட்டு டைரக்டராவே வர்ற ராஜ்கபூர்..  நடிகைகளை வலை வீசி பிடிப்பதையே தொழிலாக கொண்டவர் கேரக்டர் செம பொருத்தம். 

சோனியா அகர்வால் மென் சோக உணர்வுகளை மட்டும் பிரமாதமாக காட்டி நடிக்க தெரிந்த நடிகை, அவ்ளவ் தான்,, மற்றபடி அவரிடம் நவ ரச நடிப்பை எல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. முகத்தில் முற்றல் தெரியுது. ஓவர் மேக்கப்.. குறைச்சுக்கனும்.. 

http://tamil.oneindia.in/img/2011/11/30-sonia-agarwal5-300.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  பிரச்சனை வரும் என்று தெரிந்தும் தைரியமாக பாரதிராஜா, குஷ்பூ, பிரபு தேவா, நயன் தாரா , சிம்பு, ஹன்சிகா மோத்வானி என சினிமா பிரபலங்களின் பர்சனல் கதைகளை ஆங்காங்கே கோர்த்து விட்டிருப்பது.. ( புரிந்து விடாமல் மக்கள் தடுமாறக்கூடாது என வாரமலர் கிசு கிசு பாணியில் சில க்ளூஸும் தர்றார்.. )

2.  சுமாரான இந்தக்கதைக்கு சோனியா அகர்வாலை புக் பண்ணுனது

3. புன்னகைப்பூ கீதா வரும் காட்சிகளில் எல்லாம் இவர் தான் படத்தோட தயாரிப்பாளர் என டமாரம் அடிக்காத குறையாக அவருக்கு லைம் லைட் அடித்து விட்டது..  ( அவர் போட்டு வரும் நெக்லஸ்  டிசைன் சூப்பர் )

4. பாடல்களில் போவது யாரு? தேவதை பாரு பாட்டும், டோண்ட் டச் மீ பாடும் தேறுகிறது. 


5. இது ஒரு நேரடி தமிழ்ப்படம் போல் காட்டியது..உண்மையில் இது தெலுங்கு டப்பிங்க் படம்


http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-3666.jpg

இயக்குநர் கவனிக்கத்தவறிய லாஜிக் மிஸ்டேக்ஸ், அவரிடம் சில கேள்விகள்

1. படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல டி வி மீடியா ஒர்க்கர்ஸ் எல்லாரும் ஐ டி கார்டோட மீட்டிங்க்  வர்றாங்க, ஆனா புன்னகை பூ கீதா மட்டும் ஐ டி கார்டு போடலை.. ஏன், அவர் தயாரிப்பாளர் என்பதாலா?

2.  சோனியா அகர்வாலின் ஹேர் டிரஸர் ( சிகை அலங்கார நிபுணர்)க்கு வயசு 45 இருக்கும், கீதாவுக்கு 25 இருக்கும், ஆனா அவரை இவர் வா போ என மரியாதை இல்லாமல் பேசறாரே?

3.  ஜோதிலட்சுமி சோனியா அகர்வால் அம்மா கிட்டே நீங்க கற்பை இழக்கத்தயாரா? என கேட்கும்போது யோசிச்சு சொல்றேன் அப்டினு கூட சொல்லாம உடனே ஓக்கே சொல்றது எப்படி?

4.  ஆல்ரெடி பலரிடம் கற்பு பறி போன ஒரு நடிகையை கரெக்ட் பண்ண ஒரு ஹீரோ எதுக்காக டிரிங்க்ஸ்ல மயக்க மருந்தோ, போதை மருந்தோ கலந்து தர்றார்? அவர் என்ன கன்னிப்பெண்ணா?

5.  கதைப்போக்கு டைரியை படிக்கற மாதிரி வருது.. அதாவது ஒவ்வொரு காட்சிலயும் சோனியா அகர்வால் வரனும், ஆனா அவர் இல்லாம பல காட்சிகள் வருது.. அது எப்படி அவர் டைரில எழுதி இருக்க முடியும்?

6. கோவை சரளா சான்ஸ் கேட்டு வரும் ஒரு புது முகத்தோட அம்மா, ஆனா பல படங்கள் ஹிட் கொடுத்த தயாரிப்பாளரை அவரது வேலையாள் போல் பப்ளிக்காக நடத்துவது எப்படி? ( ஏன்னா சினிமா புரடியூசருங்க எல்லாம் தனியா எப்படி இருந்தாலும் பப்ளிக்ல இமேஜ் மெயிண்ட்டெயின் பண்ணுவாங்களே?)


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEintZ8JdSJmj1fCehYJU8u2RhoRaUVtXx9BiwRaA8bj0fTVSZ8oc9gekmmPJtvjmXORC8k-YAzlaDvoxIfkONytbQau18RbA-HwRttD4OhA-XAk6v8-8hZdTtE9nVZCVSbQ_50TVOqMzg-E/s1600/65684786Sonia-Agarwal-and-Selvaraghavan.jpg

7. க்ளைமாஸ்ல சோனியா அகர்வால் என்னமோ தவணை முறை தற்கொலை திட்ட அமைச்சர் மாதிரி 20 நிமிஷத்துக்கு ஒரு முறை தூக்க மாத்திரை 10 போடறார்.. கொஞ்ச நேரம் ஷூட்டிங்க்ல கலந்துக்கறார்.. மறுபடி 10 மாத்திரை சாப்பிடறார்/.. வாழ்வை வெறுத்தவங்க தனி அறைல ஒரே மூச்சாகத்தானே தற்கொலை செய்வாங்க?

8.  ஹீரோயின் சோனியா அகர்வாலோட பள்ளித்தோழி தன் மேரேஜ் இன்விடேஷனை கொடுக்க வர்றப்ப சோனியா வீட்ல இல்லை, அவங்கம்மா கிட்டே கொடுக்கறாங்க.. போயிடறாங்க.. அவங்கம்மாவுக்கு சோனியா அந்த மேரேஜ்ல கலந்துக்க இஷ்டம் இல்லை.. அதனால சொல்லலை.. அப்போ அவங்க அந்த பத்திரிக்கையை ஒளிச்சோ எரிச்சோ வெச்சிருக்கலாம், ஆனா 20 நாளா டேபிள்லயே இருக்கு.. 

9. அந்த கல்யாண பத்திரிக்கையை பார்த்த  20 நாள் கழிச்சு லேட்டா  பார்த்த சோனியா  தன் அம்மா கிட்டே “ ஏன் மறைச்சே? அவளுக்கு நான் என்னெ என்னெ எல்லாம் செய்ய நினைச்சேன்னு  1 பக்கம் கோப வசனம் பேசறாரே?ஏன்? அவர் செய்ய நினைச்சதை மேரேஜ் முடிஞ்ச பின் செய்யக்கூடாதா?கண்டுக்காம விட்றாரே?

10. சான்ஸ் கேட்கப்போகும் நடிகைகள் எல்லாரும் தயாரிப்பாளர், அல்லது டைரக்டர் கூட படுத்துக்கறாங்க என்று சொல்ல வர்றதைக்கூட ஒரு வகைல ஏத்துக்க்கலாம்.. ஆனா எல்லாருமே எந்த பாதுகாப்பும் இல்லாம மாசம் ஆகறது காமெடி..

11. சோனியா அகர்வாலோட பெயர் கதைப்படி அஞ்சலி. அதைக்கேட்ட ராஜ்கபூர் சினி ஃபீல்ட்ல ஆல்ரெடி ஒரு அஞ்சலி இருக்காங்க, அதனால உன் பேரை மாற்றனும்கறார்.. ஆனா அதே பேர்ல தான் கடைசி வரை இருக்கார்.. ஏன்?

12.. செம பரபரப்பா, விறு விறுப்பா எடுத்து இருக்க வேண்டிய இந்தக்கதையை ஏன் அவ்ளவ் ஸ்லோவா டிராமா மாதிரி கொண்டு போகனும்?

http://4.bp.blogspot.com/-wOc_qUlI9do/TtZncnsm8dI/AAAAAAAAWeg/4PwTTp3jfjs/s1600/Oru+Nadigayin+Vakku+Moolam+Shooting+Spot+Stills+%252838%2529.jpg

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 39 ( ஆனா விகடன்ல விமர்சனம் போட மாட்டாங்க, சும்மா படத்தோட மதிப்பீட்டுக்காக மார்க்)

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்
சி.பி கமெண்ட் - யார் யார் எல்லாம் இந்தப்படம் பார்க்கலாம்?பாரதிராஜா, குஷ்பூ, பிரபு தேவா, நயன் தாரா , சிம்பு, ஹன்சிகா மோத்வானி மற்றும் கிசு கிசு செய்திகளை ஆர்வமாக படிக்கும் வம்படி வனஜாக்கள்,வரதராஜன்கள் மட்டும் பார்க்கலாம்.

ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் படம் பார்த்தேன்

15 நாட்கள் ஓடும்..

http://www.filmics.com/tamil/images/stories/news/Sep_2011/24.09.11/sonia_agarval.png

பாரதிராஜா, அன்னக்கொடி வீரன், அன்னக்காவடி - ஜோக்ஸ்

http://mangalorean.com/images/newstemp22/20090907onam1.jpg1. அன்புள்ள மனைவிகளே! புருஷனை திட்டுங்க, வேணாம்னு சொல்லலை.. ஆனா மெதுவா புருஷனுக்கு மட்டும் கேட்கற மாதிரி திட்டுங்க இப்படிக்கு வீரப்பிரதாபன்

--------------------------------

2. எனக்கும், என் சம்சாரத்துக்கும் செம சண்டை.. நான் கோவிச்சுக்கிட்டு எங்கம்மா வீட்டுக்கு போய்ட்டேன் # சிங்கம்ல

---------------------------------

3.தனக்கு லகுவானதை மனைவி சமைக்கிறாள், எனக்கு பிடித்ததை அம்மா சமைக்கிறார்

------------------------------

4. "அடிக்கிற கை தான் அணைக்கும்"ங்கறது அம்மா, அப்பா ,ம‌னைவிய‌ த‌விர‌ யாருக்குமே பொருந்தாது

--------------------------------

5. ஈரோடு என்.கே.கே.பி. ராஜா வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை # ராஜாவுக்கு செக் வெச்ச ராணி

-------------------------------

6. டிசம்பர் 31 கள்ளக்காதலர் தினமா வெச்சுக்கலாம்.. ஏன்னா அன்னைக்கு நைட் தான் பெரு நகரங்கள்ல பல ஜோடி கை மாறுது :(

---------------------------------

7. 'தானே' நிவாரண நிதியாக, கமல்ஹாசன் ரூ.15 லட்சம் அளித்தார் # ரஜினி ரூ 10 லட்சம், அப்போ கமல் தான் பெரிய மனசுள்ள நடிகர்?

-----------------------------------

8. பாரதிராஜாவின் அன்னக்கொடியும்  கொடிவீரனும் படத்தில் அமீர் நீக்கம் # பேசாம டைட்டிலை ”அன்னக்காவடி”ன்னு மாத்திடுங்க

-------------------------------

9/ கோபம் வந்தாலும் உடனே அதை அப்புறப்படுத்துபவள் அம்மா.. வீட்டில் மூலையில் போய் குப்புறப்படுப்பவள் மனைவி # ஹி ஹி எதிர் கீச்சு

-----------------------------

10.ஆயில் சேர்க்காத இட்லி ஆயுளை சேர்க்கும், வேக வைக்கும் இட்லி நம்மை நீண்ட நாள் வாழ வைக்கும்

--------------------------------

http://www.jeevan4u.com/festivals/onam/OnamPhotoGallery2007/kerala%20girls%20onam%20celebrations.jpg

11.என்னிடம் மிச்சம் இருப்பது எளிமை மட்டுமே,உன்னிடம் உச்சமாக இருப்பது உண்மை மட்டுமே,நம்மிடம் மொத்தமாக இருப்பது நம் காதல் மட்டுமே

------------------------------

12. தலைவரே, என் மச்சினி ஒரு சிங்கள ஃபிகர்னு ஏன் அறிக்கை விட்டிருக்கீங்க?

ராஜ பக்சே மட்டும் என் மச்சான் ஒரு இந்துன்னு அறிக்கை விடாரே?

--------------------------------

13. ஏரியில் போகனும், இந்த லைஃப் ஜாக்கெட் போட்டுக்குங்க..

ஸாரி சார்... கூச்சமா இருக்கு , லைஃப் சர்ட் இல்லையா?

-------------------------------

14. நதியின் அழகு கரையைத்தாண்டாத வரை,காதலின் அழகு உடல் தீண்டாதவரை

---------------------------------

15.பிரச்சனை ஆவதெல்லாம் பெண்ணாலே ,ஆண்கள் அழிவதும் பெண்ணாலே # புது மொழி

-------------------------------


16. தொடர்பில் இருந்த பல நண்பர்கள் என்னை கை விட்டுட்டாங்க- என் எழுத்தால் ஆன பயன் # ரொம்ப மொக்கை போட்டுட்டோமோ? ஹி ஹி

---------------------------------

17. சுடிதார்தான் பெண்களுக்கு பாதுகாப்பான ஆடை - வைரமுத்து #அப்போ ஆண்களுக்கு பாதுகாப்பான ஆடை ஜிப்பாவா? அடங்கப்பா!

-----------------------------------

18. கின்னஸ்-ல் இடம் பெறவே ஜெ சரித்திரப்புகழ் (!!) பெற்ற மின் வெட்டை அறிவித்தார்..இது தவிர்க்க முடியாதது - துக்ளக் சோ அடுத்த வார தலையங்கம்

--------------------------------

19. மணிரத்னம் - என் படம் இருட்லயே பாதி நேரம் ஓடுதுன்னு கிண்டல் பண்ணீங்களே, இப்போ உங்க வாழ்க்கை முழுசுமே இருட்ல தான்!

-----------------------------

20. தானே புயல் பாதிப்பு : நயன்தாரா ரூ.5லட்சம் நிதியுதவி! # நடன புயலால் பாதிப்பு -ஹன்சிகா மோத்வானி சதி உதவி

-----------------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEju6h4FBXlNbX2HBg8G-xvuqBiIV3Mk1yErypJxoSkPfLQYcENAntmDSosN18r45PQBg2Ep6khm-c-9PB5EI6UXl7mAGjTXVfhp1VLUtB3aicjFMJzjftRgejtugCapf2EFwbmUFdB2sUc/s320/minissha_lamba_3.jpg