Wednesday, January 11, 2012

எனது 1000வது பதிவு - பதிவுலகம் -நண்பர்கள் -ஒரு பார்வை

எங்கப்பா பேரு பழனிச்சாமி.. சொந்த ஊரு ஈரோடு மாவட்டம்  பெருந்துறை வட்டம் புங்கம்பாடி, புத்தூர்க்கு இடைப்பட்ட சாலப்பாளையம் என்னும் கிராமம்.. குலத்தொழில் நெசவு..சொந்தமா 8 கைத்தறி போட்டு தொழில் நடத்துனார்.. அவர் கூடப்பிறந்த அண்ணன்  1,தம்பி 1 ,நெசவு நெய்தது துண்டு மற்றும் பெட்ஷீட்..  4 மிதி தறிகள்.. 

அப்பா தீவிர எம் ஜி ஆர் ரசிகர்.. அந்த காலத்துலயே  கட் அடிச்சுட்டு சினிமா பார்ப்பாராம்.. சைக்கிள்லயே 14 கிமீ மேட்டுக்கடை வந்து படம் பார்ப்பாராம்.. அந்தக்காலத்துல சினிமா பாட்டு புக், வசன புக் எல்லாம் விக்கும்.. அதை வாங்கி பைண்டிங்க் பண்ணி வெச்சுடுவார்.. அந்த கலெக்‌ஷன்ஸ் எல்லாம் இன்னும் இருக்கு.. 

எங்கப்பா கிட்டே கெட்ட பழக்கம் எதுவும் இல்ல.. அப்பாவோட தம்பி செம சரக்கு பார்ட்டி.. பெரியப்பா 24 மணி நேரமும் சுருட்டு குடிச்சுட்டே இருப்பாரு.. எங்க தாத்தாவும் சுருட்டு பார்ட்டி தான்.. ஆனா எங்கப்பா எந்த கெட்ட பழக்கமும் இல்லாம வளர்ந்தது ஆச்சரியம்.. ஏன்னா ஒரு மனிதனின் நல்ல கெட்ட பழக்கங்கள் அவன் சூழ்நிலையை சார்ந்தே அமையுது.. எங்கப்பா ஊர்லயே எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஆண் எங்கப்பாதான்னு ஊர் மக்கள் எல்லாம் ரொம்ப புகழ்வாங்க.. எனக்கு செம குஷியா இருக்கும்.. 

எம் ஜி ஆரின் ரசிகர் என்பதால் எங்கப்பா அந்த மாதிரி கெட்ட பழக்கம் எதுவும் இல்லாம வளரனும்னு நினைச்சிருப்பார்னு யூகிக்கறேன்.. புங்கம்பாடில ஒரு வாய்க்கால் இருக்கும்.. அதனோட அகலம் பள்ளிபாளையம் ஆறு மாதிரி அகண்டு இருக்கும்.. எங்கப்பா நீச்சல்ல கில்லாடி.. ஓடி வந்து குதிச்சா அக்கறைல போய் தான் எந்திரிப்பார்.. உள் நீச்சல், கடப்பாறை நீச்சல் எல்லாம் கலக்குவார்.. 

எனக்கு நீச்சல் சென்னிமலைல பழக்கி விட்டார்.. சென்னிமலை வாய்க்கால் ரொம்ப அகலம் கம்மி.. முதல்ல சுரப்பரடை ( சுரைக்காயை காய வைத்து செய்தது) மூலம் , பிறகு வயிற்றில் கயிறு கட்டி, பின்  சும்மா ... ஒரே மாதத்தில் கற்றுக்கொண்டேன்.. 

எங்கே போனாலும் சைக்கிளில் தான் போவார்.. எங்கப்பா கிட்டே இருந்து கற்றுக்கொண்ட இன்னொரு நல்ல பழக்கம்  சிக்கனம்.. தேவை இல்லாம செலவு பண்ணமாட்டார்.. தேவை இருந்தா கொஞ்சமா செலவு செய்வார்.. 

எங்கப்பா வை நான் பெருமையா நினைவு கூறும் இன்னொரு சம்பவம்..  தாத்தா உடல் நிலை சரி இல்லாம இருந்தப்ப சொத்து பிரிச்சாங்க.. அப்போ அப்பாவோட அண்ணனுக்கும், தம்பிக்கும் ஒரு சண்டை.. தம்பிகாரர் அதாவது என் சித்தப்பா தனக்குத்தான் அதிக இடம் ஒதுக்கனும், நான் தான் கடைக்குட்டி என அடம் பிடிக்க, பெரியப்பாவோ நான் தான் மூத்தவன் எனக்கு தான் அதிக இடம் வேணும் என வாதிட கை கலப்பு ரேஞ்சுக்கு போச்சு.. 

எங்கப்பா கூலா சொல்லிட்டாரு.. ஏம்ப்பா அடிச்சுக்கறீங்க? என் பங்கை ரெண்டா பிரிச்சு ஆளுக்குப்பாதியா வெச்சுக்கங்க.. அவங்க ஸ்டன் ஆகிட்டாங்க.  ஆனாலும் ஏத்துக்கிட்டாங்க  ( மனிதர்கள் என்றும் சுயநலம் தான்) எங்கப்பா என் கிட்டே சொன்னாரு.. நாம சம்பாதிக்கற சொத்தே நமக்கு போதும்.. நம்ம அம்மா அப்பா சம்பாதிக்கற சொத்து நமக்கெதுக்குன்னு..அடுத்தவங்க சொத்துக்கோ .பொருளுக்கோ ஆசைப்படக்கூடாதுன்னு நான் அவர் கிட்டே இருந்து கத்துக்கிட்டேன். 

எங்கப்பா அதிர்ந்து பேசி நான் பார்த்ததில்லை.. ரொம்ப சாஃப்ட் கேரக்டர்.. சென்னிமலை சென் கோப் டெக்ஸ் சொசயிட்டில  மெம்பர் நெம்பர் 397.. ஜக்காடு பெட்சீட் நெசவு.. நின்னுக்கிட்டே தான் 10 மணி நேரமும் நெய்யனும்.. ஒரே ஒரு மிதி.. மாத்தி மாத்தி மிதிச்சுட்டே இருப்பாரு. சாலப்பாளத்தார்னா சென்னிமலைல எல்லாருக்கும் தெரியும்.. எங்கபாவோட பெஸ்ட் ஃபிரண்ட்ஸ் 2 பேரு . செந்தாம்பாளத்தார், குலத்தான் .நான் காலேஜ் முடிச்சு சொந்தமா கார்மெண்ட்ஸ் வைக்க முயற்சி செஞ்சப்ப எங்கம்மாவோட எதிர்ப்பையும் மீறி வீட்டு பத்திரத்தை வெச்சு லோன் வாங்கி கொடுத்தார்.. எங்கப்பாவுக்கு சுகர் இருந்தது.. ஹார்ட் அட்டாக்ல 5 வருடம் முன்பு ஜூலை 7 இறந்தார். எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.. 

கண்டிப்பை அவர் என் கிட்டே காட்னதே இல்லை.. அன்பு, பாசம், அரவணைப்பு மட்டுமே காட்டி இருந்தார்.. அவர் நல்ல குணங்களை பின்பற்றி அவர் பேரை காப்பாத்தனும் என்பதாவே என் கொள்கையா இருந்தது.. 

அடுத்து எங்கம்மா.. அவங்க ஈரோடு.. எங்கம்மா ஆன்மீகத்தில் அலாதி ஈடு பாடு.. நான் 5ங்கிளாஸ் படிச்சப்பவே என்னை தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை எல்லாம் கோயில்ல படிக்க வெச்சு மார்கழி மாச பஜனைல கலந்துக்க வெச்சாரு.. ஈஸ்வரன் கோயில்  சுத்தி 4  ரோடுலயும் மார்கழியின் அதிகாலையில் நடந்த அனுபவம் இன்னும் நினைவு இருக்கு..

எங்கம்மா டெயிலர். லேடீஸ் டிரஸ் எல்லாம் பிரமதமா தைப்பார்.. ஜாக்கெட்க்கு ஹெம்மிங்க் பண்றது கொக்கி வைக்கறது எல்லாம் நான் செய்வேன்.. சின்ன வயசுல சிங்கள்க்கு முடி போடுவேன்..

எங்கம்மா பக்கா சைவம்.. அதே மாதிரி என்னையும், எங்கக்காவையும் வளர்த்தாங்க.. நோ டீ நோ காபி... நோ முட்டை,நோ மட்டன் சிக்கன்..  எங்கப்பா இறந்த பிறகு  எனக்கு ஆன்மீகத்துல நம்பிக்கை குறைஞ்சிருச்சு.. காரணம் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவரே 70 வயதில் திடீர்னு இறந்துட்டாரு.. ஆனால் ஊரை அடிச்சு உலையில் போடும் பல தீயவர்கள் 100 வயசு வரை உயிர் வாழறாங்க.. அதான்.. 

இப்போ அம்மா சென்னிமலைல நல்ல உடல் ஆரோக்யத்துடன் இருக்காங்க.. இந்தியா பூரா அனைத்து ஆன்மீக தலங்களும் சுத்தி பார்த்துட்டாங்க.. இலங்கை, சீனா எல்லாம் போய் இருக்காங்க..

இந்த நாளில் எங்கம்மா, அப்பாவுக்கு என்  வெற்றியை காணிக்கை ஆக்குகிறேன்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfh1PEkDqHAsu386lDGyL5NPmCbC5i1tJ1NZZclEQs0okdh2WwwfhsiWtXmpdWDAynIlYWINuqN4V7KF_aRrgyCgkWBUrjSEe4z1Py4Nw7zfBKXWlYT7F6JtAqiq6R_BsNtem12A5vfz1P/

ஓக்கே ஃபிளாஸ்பேக் போதும்..  இப்போ  பிளாக் பற்றி பேசலாம்.. 2010 ஜூலை 17 தான் நான் பிளாக் உலகத்துக்கு வந்தேன். என்னை அறிமுகப்படுத்தியவர் நல்ல நேரம் சதீஷ்.. எனக்கு 12 வருஷ பழக்கம்..  அவர் சித்தோடு, நான் ஈரோடு.. 2 பேரும்பாக்யாவுல ஜோக்ஸ் எழுதுவோம். அப்போ பழக்கம்.. அவர் தான் எனக்கு எல்லா உதவியும் செஞ்சு கொடுத்தாரு... 

எங்க வீட்ல நெட் கனெக்‌ஷன் கிடையாது.. நேரம் இருக்கும்போது டைப் பண்ணி டிராஃப்ட்ல போட்டு வெச்சுடுவேன்,..என் நண்பர்கள் 12 பேர்கிட்டே பிளாக் பாஸ்வோர்டு இருக்கு.. அவங்க யாராவது போஸ்ட் போடுவாங்க..

அலெக்ஸா ரேங்கிங்க் தான் தமிழ் வலைப்பூக்களின்  டிராஃபிக் ரேங்க்கை நிர்ணயிக்குது.. அதுல நெம்பர் குறைய குறைய நாம் முன்னேறிட்டு இருக்கோம்னு அர்த்தம்.. நான் வந்த புதுசுல என்னோட அலெக்க்ஸா ரேங்க் 13 லட்சம்.. இப்போ என்னுது- 66,000. கேபிள் சங்கர் - 65,860, ஜாக்கி சேகர்-86,180, சவுக்கு-48,711

நான் பதிவுலகத்துல வந்த புதுசுல முதல் 5 மாசம் எந்த சர்ச்சைகளும் இல்லாம போச்சு.. அதுக்குப்பிறகு விகடன் பத்திரிக்கைல வந்த சில பதிவுகள் என் பிளாக்ல போட்டதால காப்பி பேஸ்ட் பதிவர்னு எல்லாரும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க.. சரக்கு இல்லாம போடறான்னு சொன்னாங்க.. ஆனா உண்ஐ அதுவல்ல.. நான் கடந்த 18 வருடங்களில் எழுதிய 1லட்சத்து 2890 ஜோக்ஸ், கவிதைகள் 80, கட்டுரைகள் 70 , சிறுகதைகள் 34, ஒரு பக்க சிறுகதைகள் 45 , போன்றவை எல்லாம்  டைப் பண்ணி டிராஃப்ட்ல போட்டு வெச்சிருக்கேன்..



அதனால கை வசம் சரக்கு இல்லாம இல்லை.. அவள் விகடன், நானயம் விகடன், பசுமை விகடன் போன்ற புக்ஸ் எல்லாரும் வாங்கறது இல்லை.. அவங்களுக்கு யூஸ் ஆகட்டும்னு அப்டி போட்டேன்.. இப்போ வந்த எதிர்ப்பால் அதையும் தவிர்த்துட்டேன்,..கீழே உள்ள படத்தை அனுப்பியவர் கார்த்தி கவி, நன்றி அவருக்கு



சினிமா விமர்சனத்துல வசனங்கள் போடறதை பற்றி ஒரு பேச்சு.. செல் ஃபோன் எடுத்துட்டு போய் அதுல ரெக்கார்டு பண்ணிக்கறார்னு.... என்னோட செல் ஃபோன் நோக்கியா பேசிக் மாடல் 1100.. அதுல அந்த வசதி எல்லாம் கிடையாது.. எதுக்காக வசனம் எழுதறேன்னா ஒரு அடையாளத்தை காட்டவும் , தனித்து நிற்கவும்.. பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள் ஜாக்கிசேகர், கேபிள் சங்கர், உண்மைத்தமிழன் மூவரும் சினிமா விமர்சனத்தில் விற்பன்னர்கள்... அவர்கள் ரேஞ்சுக்கு எழுத முடியலைன்னாலும்.. 4 வது இடத்தையாவது பிடிக்கனும் என்பதற்காக வசனம் எழுதும் பாணியை மேற்கொண்டேன்..


எனது தளங்களில் போடப்படும் சினிமா நடிகைகளின் ஸ்டில்கள் , கூகுளில் போடப்பட்ட கல்லூரி மாணவிகள் ஃபோட்டோக்கள் போடுவதை நண்பர்கள் சிலர் சுட்டிக்காட்டினார்கள்.. அவற்றையும் தவிர்த்து வருகிறேன்..

பதிவுலகில் எனக்கு எதிரிகள் யாரும் இல்லை.. நண்பர்களை சம்பாதிக்கத்தானே வந்தோம் இந்த உலகுக்கு?

ஆனா ஒண்ணு.. நண்பர்கள்க்கு நன்றி சொல்ல ஆரம்பிச்சா அதுக்கு தனி பதிவே போடனும்.. முடிஞ்ச வரை நினைவில் நிற்பவர்களுக்கு பெயர் சொல்லி நன்றி சொல்லிக்கறேன்

http://greetings.webdunia.com/cards/tm/thank_you/thaks02.jpg
லே அவுட், டெம்ப்ளேட் விஷயங்களில் அடிக்கடி உதவி புரிந்து வரும் சித்தர்கள் ராஜ்ஜியம் தோழி, நிரூபன், கடம்பவனக்குயில்,ராஜி நால்வருக்கும் முதல் நன்றிகள்

பிளாக் ஆரம்பித்த புதிதில் கமெண்ட்ஸ் போட்டு ஊக்குவித்த சிரிப்பு போலீஸ் ரமேஷ்,ராம்ஜி யாஹூ,திருப்பூர் புரட்சித்தலைவன்க்கு என் நன்றிகள்

ஆரம்ப கட்டத்தில் தன் கமெண்ட்ஸ் மூலம் என்னை ஊக்குவித்த பன்னிக்குட்டி ராம்சாமி & டெர்ர் குரூப் நண்பர்கள்க்கு நன்றி

பதிவுலகின் உயிர் நண்பர்களும், அவ்வப்போது உயிரை எடுக்கும் நண்பர்களுமான விக்கி உலகம் தக்காளி, நாஞ்சில் மனோ எனும் லேப்டாப் மனோ இருவருக்கும் ஸ்பெஷல் நன்றிகள்

                
இராஜராஜேஸ்வரி- மணிராஜ்
ராம்வி-மதுரகவி
சித்ரா-கொஞ்சம் வெட்டிப்பேச்சு,
கடம்பவனக் குயில்- கடம்பவன பூங்கா
அம்பாளடியாள்- அம்பாளடியாள்
சாதாரணமானவள்- சாதாரணமானவள்
கீதா- கீதமஞ்சரி
மாலதி-மாலதியின் சிந்தனைகள்
ஹேமா- வானம் வெளித்த பின்னும்
ரூஃபினா செல்ல நாய்குட்டி
ஜோஸ்பின் -ஜோஸ்பின் கதைக்கிறேன்,
கல்பனா-
ஏஞ்சலின்-காகித பூக்கள்
லக்‌ஷ்மி-குறை ஒன்றும் இல்லை
சசிகா -மேனகா-
இந்திரா - மொக்கை இந்திரா 
thenammaiதேனம்மை லெக்ஷ்மணன் 

ஆஃபீசர்- உணவு உலகம்
சதீஷ்குமார்- நல்லநேரம்
பன்னிக்குட்டி ராம்சாமி- ஸ்டார்ட் ம்யூசிக்
ரமேஷ் சுப்புராஜ்- சிரிப்பு போலீஸ்
 மாத்தி யோசி -ஜீவன்
ராஜேந்திரன் - நண்டு நொரண்டு
மனோ- நாஞ்சில் மனோ
.விக்கி- விக்கியின் அகடவிகடங்கள்
பிரகாஷ்-தமிழ்வாசி பிரகாஷ்
ராஜா-ராஜபாட்டை
கருண்- வேடந்தாங்கல்
சௌந்தரபாண்டியன் கவிதைவீதிசௌந்தர்
.K.S.S.ராஜ்- நண்பர்கள்/நண்பர்கள்
துஷ்யந்தன்-
மனசாட்சி மனசாட்சி பஜ்ஜி கடை
மதுமதி- தூரிகையின் தூறல்
ரமணி- தீதும் நன்றும் பிறர் தர வாரா

ஆரூர் மூனா செந்தில்

சேட்டைக்காரன்


சேலம் தேவா, கோகுலத்தில் சூரியன் வெங்கட், நாகராஜ சோழன் எம் ஏ, நாய் நக்ஸ் நக்கீரன்

கணேஷ்- மின்னல்வரிகள்
சுரேஷ்குமார்-வீடு
சீனா அய்யா- வலைச்சரம்
ரத்தனவேல்- ரத்தனவேல் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து,
கோவை நேரம்- கோவை நேரம்
நிரூபன் நாற்று
ரெவரி- மெல்ல தமிழ் இனி வாழும்
செல்வா- செல்வா கதைகள்
சென்னை பித்தன்
ரஹீம் கலாஸி
சங்கவி- சங்கவி
செங்கோவி- செங்கோவி
சூர்யஜீவா- ஆணிவேர்
ஐ.ரா.ரமேஷ்பாபு- உரைகல்
கும்மாச்சி- கும்மாச்சி
சசிகுமார்- வந்தேமாதரம்
சரியில்ல-
பெ.சொ.வி-
M.R.
கோவிந்தராகன். மதுரை
மதுரன்
ஹாலிவுட் ரசிகன்
கோகுல்- கோகுல் மனதில்
தனிமரம்
பிலாசபி பிராபகரன் - பிரபா ஒயின் ஷாப்
ரமேஷ் வெங்கடபதி
கேரளக்காரன் ஆனாலு அதிரி புதிரி
வைகை
சேலம் ரியாஸ், மொஹம்மத்

யானைக்குட்டி
அனைவருக்கும் என் நன்றிகள்.. 


வாழ்த்து சொல்பவர்கள் தங்கள் ஆலோசனையையும் சொல்லவும்.. பிளஸ் என்ன? மைனஸ் என்ன? என்பதையும் கூறவும்.. அப்போதுதான் என்னை செதுக்கிக்கொள்ள, திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.. 


ட்விட்டர் ஃபிரண்ட்ஸ் , கரூர் ஜெகன் @ ஆல்தோட்டபூபதி, ஈரோடு தங்கதுரை : )), , Senthil Nathan , jeevan , Parisalkaaran ,ராஜன் , , C.Kesavan,@ Sudha,, நையாண்டி,@ SeSenthilkumar,, மதுரை ரியாஸ், கரையான்,DKCBE, பாரத்...பாரதி...,, புலவர் தருமி, GiRa, vivaji,

சிங்கப்பூர் சாந்தி, பல்ஸ்மாலா, கோவை அரட்டைகேர்ள், கோவை சவுமி, மதுரை உமாகிரிஷ்,சென்னை மோஹனா,சோனியா, மங்கை,கோவை கிரேட் விஜி, @ sbnu , பூங்குழலி :) , :) , JanuShath அனைவருக்கும் என் நன்றிகள்





விடுபட்டவர்கள் பெயர்கள் அவ்வப்போது சேர்த்துடறேன்..டைம்லைனுக்கு வர வர அவங்க பேரை காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணிடறேன் ( காபி பேஸ்ட் பதிவர்)

ஃபாலோயர்ஸ் 1000 கொண்டு வர முடியலை.. 8 குறையுது..  ஹிட்ஸ் 20 லட்சம் கொண்டு வர நினைச்சேன் .. அதும் 100000 குறைஞ்சுடுச்சு, இண்ட்லில் 210 ஃபாலோயர்ஸ்..

Tuesday, January 10, 2012

மிஸ்டர் டேமேஜர், நீங்க வேட்டை மன்னனா? சொட்டை அண்ணனா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYhJJnhRAAhOJNJ74C9dEwQp1Jg-p12wBQkj3wQ9tm_8btjyvCWLqYpvMbNMd7WtgprXhaQRAzmuR3eiT7GL6zvh213HtWBUPAqiDDCmPs3tDTz0m7xwh7TN7HTM3g1XJhBO3SQBVFTw/s400/Nayanthara-Hot-Sizzling-Photo6.jpg

1.மனைவிமார்களின் அடக்கு முறையை எதிர்த்து கணவன்மார்கள் நடத்தும் மனித சங்கிலி போராட்டம் இது..

ஓஹோ, அடிமை சங்கிலி போராட்டமா?

-------------------------------------

2. DR, பேஷண்ட் கிட்னில இருந்த கல்லை ஏன் ராசிக்கல்னு சொல்றீங்க?

இதன் மூலமாத்தானே எனக்கு ஃபீஸ் ரூ 2 லட்சம் வந்தது?

--------------------------------------

3. அமைச்சரே, நம் குதிரைபப்டை பயிற்சியாளர் ஏன் ஃபங்க் கெட்டப்பில் இருக்கர்?

”கோச்” சடை யான் கெட்டப்பாம்


-------------------------------

4. ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகலை, டைரக்டர் சார்..

ஓக்கே கலா மாஸ்டர்க்கு ஃபோனை போடுங்க

------------------------------------

5. 3 டி படத்தை விட பல மடங்கு அட்வான்ஸ் டெக்னாலஜில  எடுத்த படம்ங்க

இது..

அதுக்காக 35 டி படம்னு சொல்றது ஓவர்

-------------------------------------------------


6.தலைவர் தன்னோட சொத்துக்கள் எல்லாத்தையும் தான தர்மத்துக்கே எழுதி வெச்சுட்டாராமே?

ஆமா,முத சம்சாரம் பேரு தானலட்சுமி,  2வது பேரு தர்மலட்சுமி

---------------------------------------

7.சிம்புவின் வேட்டை மன்னன் -ல் ஹன்சிகா  பல அசைவக்காட்சிகளில் நடித்துள்ளார் # மட்டன் , சிக்கன் சாப்பிடறதையே எத்தனை டைம் காட்டுவாங்க?\


----------------------------------------

8. வேலாயுதம் ஹிட் ஆனதால் எனக்கு முருகன் செண்டிமெண்ட் பிடித்துள்ளது -விஜய் # வள்ளி யாருன்னு தெரியும், தெய்வானை யாரு? சங்கவியா?

----------------------------------

9. கிஸ்கால் TMT கம்பி விளம்பரத்தில் நமிதா வரும் காரணம் என்ன?

இதுக்கெல்லாம் நோ ரீசன் , ஒன்லி நமீதா சீசன்

-----------------------------------

10. அஞ்சலி ஃபோன் நெம்பர் கூட என் கிட்டே இல்லை - ஜெய் # அண்ணே, ஒரே பங்களாவுல இருந்தா எதுக்கு அதெல்லாம்

------------------------------

 http://www.mirchigossips.in/wp-content/uploads/2009/12/nayanthara-photos-16.jpg


11. மேடம், கம்பி விளம்பரத்துல எதுக்காக நடிச்சீங்க? ஹி ஹி

நமீதா- TIGHTLY MAINTAIN THE TENSION ( TMT)  அதான்

-----------------------------------

12. எல்லோரிடமும் ஜாலியாகப் பேசும் நீங்க ,என் கிட்டே  மட்டும் சண்டை போடறீங்களே,ஏன் ?

கட்டிப்புரண்டு சண்டை போடும் சாக்கில் டச் பண்ணலாம்னு தான்

--------------------------------------

13. என்னையே டீஸ் பண்றியா? இரு இரு உனக்கு நல்ல பாடம் கற்பிக்கறேன்..

தாங்க்ஸ் மிஸ்.. நீங்க டீச்சரா?


--------------------------------------

14. கற்க கசடற கற்ற பின் நிற்க கால் கடுக்க நேர்முகத்தேர்வு நடக்கும் அலுவலக வாசலில்

-----------------------------------

15. சாரு நிவேதிதா பேரை பார்த்து இத்தனை நாளா அது ஃபிகர்னு நினைச்சேன்.. ஆம்பளை  போல அவ்வ்

------------------------------------

16. கோர்ட்டுக்கு வெளியே பேசி தீர்க்கலாம்- தமிழகத்திற்குகேரளா அழைப்பு #பேசலாம்,.ஓக்கே, யாரை தீர்க்கலாம்?

-----------------------------------

17. அஞ்சாங்கிளாஸ் படிக்கறப்பவே மோச மாணவர்னு பேரு எடுத்தவராம்  நம்ம தலைவரு.. இப்போ மட்டும் என்ன மோசமானவர்தானே?

---------------------------------

18. மங்காத்தா மாதிரி கோபமா இருக்கற வில்லி ஃபிகரை மாங்கா தா என  சொல்ல வைக்கற டேலண்ட் உள்ளவனே தமிழன்

-----------------------------------

19. பியூட்டி கான்டெஸ்ட்க்கு  நடுவரா போற தலைவர் எதுக்கு க்ளினிக் போறார்?

கண் டெஸ்ட் பண்ணிக்கத்தான், அங்கே போய் எல்லாம் மங்கலா தெரிஞ்சுட்டா?

--------------------------------

20.பத்து வருஷமா எனக்கும், என் மனைவிக்கும் சண்டை பேச்சு வார்த்தையே இல்லை..

அப்புறம் எப்படி 8 குழந்தைங்க?

மன்னிப்பு கேட்க வருஷா வருஷம் போவேன்

-------------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgobnnna_WZhQGNCnxia3brDR2FsRndBmHfeC_hnIEyVvJfzec5jzGISzAMwegg4U-bbnyhD7jbg-UCHd-kwcxo14MMe48Rx__uXLOwXFHG3cdx4C5lkUqKzVdS_I76fOlk5WI6KCzo_ikz/s320/Nayanthara_stills_1.jpg

சிறந்த திரைக்கதை -2011 டாப் டென் படங்கள் - ஒரு பார்வை

ஆரோக்யமான சினிமாக்கள் தமிழில் அபூர்வமாகத்தான் வருகின்றன. திரைப்படக்கல்லூரி மாணவர்கள் கற்றுக்கொள்ளும் அளவு புதிய  கண்ணோட்டத்தில், வித்தியாசமான கதை அம்சத்தில் வந்த படங்கள் எவை என ஒரு லிஸ்ட் எடுத்தால் 14 படங்கள் 2011-ல் தேறியன.. 

அவற்றைப்பற்றி பார்க்கும் முன் அஜித், விஜய் போன்ற மசாலா ஹீரோ ரசிகர்களுக்கு ஒரு வார்த்தை. கமர்ஷியல் சக்சஸ் படங்கள் நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.. அதற்காக எதிர்பாராத வெற்றி பெற்ற படங்களை விட்டு விடவும் இல்லை.. மசாலா சேர்ப்புகள் அதிகம் இல்லாத , நவீனமான கோணத்தில் கதை சொன்ன படங்கள் மட்டுமே  பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.. 

முதல் சுற்றில் வெற்றி வாய்ப்பை இழந்த 4 படங்கள் முதலில் வெங்காயம். சங்ககிரி ராஜ்குமார் இயக்கிய வெங்காயம்- சிறந்த சமூக சீர்திருத்தப்படம்.. விழிப்புணர்வுப்படமான இதில் நரபலி எதிர்ப்பு,மூட நம்பிக்கை,ஜாதகப்பைத்தியங்களால் நேரும் இழப்புகள், வலிகள் பற்றி எந்த விதமான கமர்ஷியல் நோக்கு இல்லாமல் எடுக்கப்பட்ட படம்.. ஆனால் கதையின் மைய இழையில் 8 வயசு சிறுவர்கள்  ரமணா ரேஞ்சுக்கு ஆள் கடத்தல், கொலை மிரட்டல் விடுதல் போலீஸ்க்கு தண்ணி காட்டல் என்று திரைக்கதையில் கொஞ்சம் தடுமாற்றம்..


அடுத்து தேசிய விருது பெற்ற ஆடுகளம்.. கமர்ஷியலாகவும் இந்தப்படம் நல்லா போச்சு. சேவல் சண்டை பற்றி முழுதான முதல் பதிவாக இந்தப்படம் அமைந்தது. ஆனால் படத்தில் வன்முறை அதிகம்.. பார்க்கும் ஜனங்களுக்கு மென்மையான உணர்வுகளை தூண்டுவதே நல்ல படம் என்று நான் நினைப்பதால் இந்தப்படம் தகுதி இழந்தது..ஆனாலும் வெள்ளாவி வெச்சுத்தான்
  வெளுத்தாங்களா? பாடல் காட்சி உட்பட பல இடங்களில் தனுஷ் நடிப்பு கன கச்சிதம்.. அவர் லுங்கியை முகத்துக்கு நேர் மறைத்து ஆடிய துள்ளாட்டம் திருடா திருடி மன்மதா ராசா பாட்டுக்கு கிட்டே வந்தது.. 


விக்ரம்-ன் தெய்வத்திருமகள் - சாராவின் நடிப்பு டாப்.. விக்ரம் நடிப்பு க்ளைமாக்ஸில் கண் கலங்க வைத்தது. இருந்தாலும் இது 2 காரணங்களுக்காக தகுதி இழக்கிறது 1. விக்ரமின் நடிப்பில் ஆங்காங்கே செயற்கை இழை தட்டியது..2 படத்தின் பின் பாதியில் பல லாஜிக் ஓட்டைகள் , இருந்தாலும் இது பார்க்க வேண்டிய படமே..


ஆண்டின் கடைசியில் வந்து எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை அளித்தது.மகான் கணக்கு தனியார் வங்கிகள்-ன் அபத்தங்களை, முறைகேடுகளை சவுக்கடி அடித்து கேள்வி கேட்டது.. வசனங்கள்  செம.. ஆனால் தேவை இல்லாமல் காதல், ஊடல் எல்லாம் கொஞ்சம் புகுத்தி கொஞ்சம் சொதப்பிட்டாங்க.. இந்தப்படத்தில் சீமான் ஹீரோவாக நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. 


http://www.koodal.com/cinema/koodal_reel/Payanam-reel-5.jpg

10.  பயணம் - ராதாமோகன் அழகிய தீயே , அபியும் நானும் என்று வரிசையாக மென்மையான படங்களில்  கவனம் செலுத்தி வெற்றி கண்டவர்.. இவர் பார்வையில் எல்லோரும் நல்லோரே எனும் கான்செப்ட் ரொம்ப பிடிக்கும்.. பிரகாஷ் ராஜ் நல்ல சினிமா ரசிகர். அவர் தயாரிப்பில் நடிப்பில் வந்த  படம், விமானக்கடத்தல் தான் படம் என்றாலும் அதிலும் முடிந்த வரை காமெடி கலந்து கொடுத்தது சாமார்த்தியம்.. ஒரே குறை 1998-ல் வந்த பட்டுக்கோட்டை பிரபகர் எழுதிய ஒரு நாவலின் காப்பி என்று குற்றம் சாட்டப்பட்டதே.. ( எ நாவல் டைம்)



 http://www.mysixer.com/wp-content/gallery/vaagai-soodava-audio-launch-invitation/vaagai-soodava-audio-launch-invitation.jpg
9.  வாகை சூடவா -   பீரியடு ஃபிலிம் எடுப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.. கிராமத்துக்கல்வியின் தேவையை உணர்த்தும் படம்.. முடிஞ்ச வரை பிரச்சார நெடி இல்லாமல் இருந்தது.. விமல், இனியாவின் நடிப்பு மிக யதார்த்தம்.. சாரக்காத்து வீசும்போது பாட்டு யூ டியூப்பில் சக்கை போடு போட்டது.. கே பாக்யராஜ்-ன் முந்தானை முடிச்சு, சத்ய ராஜ் நடித்த திருமதி பழனிச்சாமி இவற்றின் கலவையாக திரைக்கதை இருந்தது ஒரு குறை. ஆனாலும் ஒளிப்பதிவு, மண் வாசனைக்காக பார்க்க வேண்டிய படம்.. 




 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheIF4GYjLU-k2epbfO4E90mKlPC_yvQmg7H35uB2C6XkwPPvTMqo1h1LbC_m6LrSMqGE3XbF6FW-LdXd7t6Jf2XQqnEsF7O7NNCaEkteQa-6w6T2uFqC8LprvEPo3W3yS4MAas15Pv_4mO/s400/kullanari_koottam_movie_posters1.jpg

8. குள்ளநரிக்கூட்டம் -   போலீஸ் செலக்‌ஷனில் நடக்கும் முறைகேடுகள் பற்றிய படம்.. இதுவரை எந்த ஒரு தமிழ்ப்படத்திலும் இவ்வளவு டீட்டெயிலாக போலீஸ் செலக்‌ஷன் காட்டப்படவே இல்லை.. கமலின் காக்கி சட்டையில் கோடி காட்டினார்கள்.. தில் படத்தில் கொஞ்சம்.. சத்தம் இல்லாமல் வந்த படம்.. ஆனால் டைட்டில் இந்தப்படத்துக்கு மகா மைனஸ்.. ஒரு படத்துக்கு டைட்டிலும், போஸ்டர் டிசைனும் எவ்வளவு முக்கியம் என்பது இந்தப்படம் எடுபடாமல் ( எதிர்பார்த்த  அளவு)போனதில் இருந்து தெரிந்தது.. படத்தின் முன் பாதியில் சும்மா ராங்க் கால் வெச்சே ஹீரோ ஹீரோயின் லவ் டெவலப் ஆவது செம ஸ்பீடு திரைக்கதை வித்தை.. ஆனால் சில பத்திரிக்கைகள் அது சுமார் ஐடியா தான் என சொன்னது எனக்கு ஆச்சரியம்.. காதல் காட்சிகள் மிக கண்ணியமாக இருந்தன..


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgO2KEQp8rURKoTLMXIve7EOUcXmnP2wyN_EzXv1e0fzkazqlbKCZH7zfLEMGSbFm2cf86N2aTExGmjhmspL0ISJVHF1GX1NZKwaVabusBB9Dgjoq7Ccx29RaRgdocn51XaXO6tKl3vD8/s320/mmm.jpg

7. முரண்  - தமிழ் சினிமாவில் அழகிய வில்லன்களே வருவது இல்லை.. முகத்தில் அம்மைத்தழும்புகளுடன் கர்ண கடூரமாக வந்தாத்தான் அவன் வில்லனா? என்று பலர் குறைப்பட்டுக்கொள்கிறார்கள்.. பிரசன்னா அவர்கள் வருத்தம் களைய வந்த அழகிய வில்லன்.. இரு மாறுபட்ட குணங்கள் உடைய  அறிமுகம் இல்லாத நபர்கள் ஒரு நெடுஞ்சாலைப்பயணத்தில் சந்திப்பதும், அதில் ஒருவன் மட்டும் தன் சுயநலத்துக்காக மற்றவனை தன் தந்தையை கொலை செய்ய சொல்வதும் ஆக வித்தியாசமான ட்ரீட்மெண்ட்.. STRANGERS IN THE TRAIN என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் என்றாலும் தமிழில் இது வர்வேற்கத்தக்க முயற்சியே.. 


 http://myms.in/wp-content/uploads/2011/07/Kanchana-Tamil-Movie-Online.jpg


6.  காஞ்சனா (முனி -2 ) -  ஒரு திகில் படத்தில் பெரும்பாலும் பயப்படத்தான் வைப்பார்கள்.. ஆனால் இதில் காமெடி மிகச்சிறப்பான அளவில் சேர்க்கப்பட்டிருந்தது .. பொதுவாக எந்தப்படமும் முதல் பாகத்தை விட 2ம் பாகம் ஒரு மாற்று கம்மியாத்தான் இருக்கும். இது விதி விலக்கு.. முதல் பாகம் மாமூல், இது செம ஹிட் ஃபார்முலா..  தமிழ் சினிமாவில் வந்த பேய்ப்படங்கள் லிஸ்ட்டில் இதற்கு முக்கியமான இடம் உண்டு.. பலரது கணிப்பையும் மீறி இந்தப்படம் மாபெரும் ஹிட் ஆனது.. திரைக்கதையில் செம விறுவிறுப்பு
 
 
 http://www.envazhi.com/wp-content/uploads/2010/04/yutham-21.jpg
 
 
5. யுத்தம் செய்  - மிஷ்கின் எடுத்த இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் விறுவிறுப்பான திரைக்கதையுடன், சேரனின் யதார்த்தமான நடிப்புடன்  வெற்றி பெற்ற படம்.. இந்தப்படத்தில் ஒய் ஜி மகேந்திரனின் வில்லன் நடிப்பும், அவரது மனைவியாக வந்தவரின் க்ளைமாக்ஸ் கோபமும் செம.. பெண்களுக்கான விழிப்புணர்வுப்படம்

 
 http://www.kollytalk.com/wp-content/uploads/2011/11/Mounaguru-Arulnidhi.jpg
 
4.  மவுன குரு  - எந்த வித ஆரவாரமும் இன்றி டைட்டில்க்கு தகுந்தாற்போல அமைதியாக வந்து செம கலக்கு கலக்கிய படம் இது.. ஒருசாதாரண 2 வரிக்கதை.. அதை வாய்ப்பு இருந்தும் எந்த விதமான ஹீரோயிஸமும் சேர்க்காமல் விறு விறுப்பாக திரைக்கதை அமைத்து படம் எடுத்த விதம் மெச்சக்கூடியது.. 
 
 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdnN9iijk6UFXDyTrlktTMaZ_aFX5cec6V7b63fsUxmFxhvV8dZNCoBLDu0Lq0-tbXTgmBAOTtem_fKCGE3EP2xGBGEwtc93UvVZQ2MhYKwRBwzH_7k4dnGxQ8Yc0CjpjLg1GfgD3Cm18/s1600/AaranyaKandamTamilMovie.jpg
3.  ஆரண்ய காண்டம் - டைட்டிலிலேயே இயக்குநர் இது ஆண்களுக்கான படம் என உணர்த்தி விடுகிறார்.. இந்தப்படம் எடிட்டிங்க், காமரா ஆங்கிள், நறுக் சுறுக் வசனம் என உலகப்பட ரேஞ்சுக்கு இருந்தது.. நல்ல கம்பெனி சன் டி வி மாதிரி யாராவது மார்க்கெட் பண்ணி இருந்தால் இதன் லெவெலே வேற..  ஜாக்கிஷெராப் வரும் சில காட்சிகளை தவிர்த்து விட்டுப்பார்த்தால் இது அனைவரும் பார்க்க வேண்டிய படமே.. 

 
http://yarlosai.com/wp-content/uploads/2011/06/ko-tamil-movie.jpg
 
 
2.  கோ - கே வி ஆனந்த் இயக்கிய இந்தப்படம் பாலைவன ரோஜாக்கள்க்கு பிறகு பத்திரிக்கைத்துறை அடிப்படையில் எடுக்கப்பட்டு ஹிட் ஆன ஒரு படம்.. ஒளிப்பதிவு, இசை செம.. என்னமோ ஏதோ மின்னி மறையுது.. பாட்டு இந்த ஆண்டின் கலக்கல் பாட்டு.. படத்தில் காட்டப்பட்ட க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராதது.. ஜீவாவின் ஸ்டைலிஸ் ஆக்டிங்க்..படத்துக்கு பலம்.. திரைக்கதையில் தொய்வில்லாத படம். 

 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJYZxhgspSzgl-D2a5cNxQW8tKDlf8v596PTK8OMVE6svizOcTUmXUzKkDW112DnrDKRQCca15X0CeNxy-RdPLKG8ORrz6xNzQBgC9DwdjKbpqVoolfRGTfNQCtkBORVTI2V9nt6BdjSw/s1600/Engeyum+Eppothum+Release+on.jpg
 
1. எங்கேயும் எப்போதும் -   இரண்டு மாறுபட்ட லவ் ஜோடிஸ்.. துடுக்குத்தனமான அஞ்சலி, காதலியிடம் பம்பும் ஜெய் இது ஒரு ஜோடி.. அநியாயத்துக்கு உஷார் பார்ட்டியாக வரும் கிராமத்து அநன்யா -சர்வா ஜோடி இரு காதல் கதைகளை பேலன்ஸ் செய்து காட்சிகளை நகர்த்திய விதம் அபாரம்.. வேகமாக போகும் வாகங்களால் ஏற்படும் விபத்து பற்றிய விழிப்புணர்வை  ஏற்படுத்த எந்த விதமான டாக்குமெண்ட்ரி ஃபீலிங்க்கும் இல்லாமல் திரைக்கதை அமைத்த விதம் செம.. படம் பார்த்த அனைவருமே அந்த பாதிப்பில் இருந்து வர கொஞ்ச நாள் ஆனது.. 
 
 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjS5pkwG7Gg5dJdXNTxhu7byJQGzg8l8OYBypArex6sqSrSg_oZcUM7QQIGhEcudaa6fBxKmrtIJSrSoh0wB-mOa40QWgPldI7YOlPDpR-AQYDRHA7B3ygmvYMityHAjT3GHuEyYlEknmE/s1600/engeyum_eppothum_movie_stills_1008110415_036.jpg
படம் பார்த்து வெளி வந்த மக்கள் கொஞ்ச நாள் கண்டிப்பாக வாகனங்களில் மித வேகம் கடை பிடித்திருப்பார்கள்.. அதுவே படத்தின் வெற்றி.. கதையின் டெம்ப்போவை எங்கு எப்படி ஏற்ற வேண்டும் என்ற டெக்னிக்கை மிக பிரமாதமாக கையாண்டதால் இந்த ஆண்டின் சிறந்த படமாக இது அமைகிறது.. 
 

சிங்கம்புலியின் காமெடி கலக்கல்கள் இன் 18-ன் குடி ( வசனங்கள்)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhB0Og39zUFOFeMc-NLwndYdlqEulsj7uNcnZ1hBPOmj1I0tPp4R6NHXdhTSin7qBRlDww3Rlm4qpuepaRfFtxHuE1a9MC9rNFfk2MGnb1CWt9xanyBv9n_DjhhAfNyLtfC3YtD12n6KKIL/s1600/b2229b01-844d-4e61-abce-be5671c8acea1.jpg 

1. பந்தல்ல ஏன் இவ்வளவு ஓட்டைகள்?

அட, விடுங்க, ஓசோன்லயே ஓட்டை விழுந்துடுச்சு...

2.  மாமா, கையை எடுங்க , எல்லாரும் பார்க்கறாங்க..

முறை மாமன் தொடாம வேற யார் தொடுவாங்க? எவன் கை வெப்பான்? நீ என்ன குறைஞ்சா போயிடுவே?

3.  அண்ணே! சாரி.. அங்கே கடனுக்கு சரக்கு தர மாட்டாங்களாம்..

எவண்டா கடை ஓனர்?

தமிழ்நாடு கவர்மெண்ட்


அடடா.. தப்பிச்சுட்டாங்கடா..


4. அம்மாவுக்கு மருந்து வாங்கக்கூட கைல காசில்லை..

எங்க அம்மாவுக்கு மருந்து வாங்கக்கூடத்தான்  கைல காசில்லை..நான் சும்மா இல்ல?

5. இப்படியே போனா கடையை இழுத்து மூட வேண்டியதுதான்

இப்பவே மூடித்தான் இருக்கு..

6.  செய்யறது ஃபிராடுத்தனம், இதுல செண்டிமெண்ட்ஸ் வேற

7.  எப்படியாவது அவளை கரெக்ட் பண்ணி காட்றேன்

உன்னால ஒரு பொம்மையை கூட கரெக்ட் பண்ண முடியாது

8.  சார்.. வண்டி வாங்க லோன் வேணுமா?

பெட்ரோல் வாங்கத்தான் ரூ 300 லோன் வெணும்..

9.  நான் ஜி கே ல கிங்கு தெரியுமா?

அப்டியா? நமீதாவோட சொந்த ஊர் எது? சொல்லுங்க பார்க்கலாம்..

அடப்பாவி, இது ஜி கே வா?

10.  ஹலோ.. திரட்டி நடக்கற ஹவுஸ் ஓனருங்களா? நான் தான் பந்தல் காண்ட்ராக்டர் பேசரேன்..  நம்ம பசங்களை அனுப்பி விடுங்க..

யோவ், கடுப்பை கிளப்பாதே,என் சொந்தக்காரங்க எல்லாம் விஷேசம் முடிஞ்சு ஊருக்கு கிள்ம்பிட்டாங்க, உன் ஆளுங்க இன்னும் கிளம்பாம இங்கேயே டேரா அடிச்சிருக்காங்க.. 

http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/Singampuli.jpg

11.  உன் உடம்பு எத்தனை பேர் அடிச்சாலும் தாங்கும், என் உடம்பு யாராவது உத்துப்பார்த்தாலே வீங்கும்

12 ரேஷன் கடைக்கு எங்க வீட்டு வேலைக்காரி  போவா..

வயசு?

19

 ஆஹா .. செம ..அப்புறம்?

ஸ்கூல் மிஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுவாங்க, ரேஷன் கார்டை வேலைக்காரி கிட்டே குடுத்து விடுவாங்க

ஐ ஜாலி ஸ்கூல் மிஸ்க்கு வயசு எவ்ளவ்?

டேய் நாயே ஏண்டா இப்படி அலையறே?

13.  நான் உன்னைத்தான் விரும்பறேன்.. உன் நகைகளையோ, பணத்தையோ அல்ல.

நிஜமாவா?

ஆமா, சரி சட் புட்னு அந்த நகையை கழட்டி குடு.. ஹி ஹி

14. என் லைஃப்ல இவ்வளவு கோயிலை ஒரே டைம்ல பார்த்ததே இல்லை.. ஆனா பாருங்க என்னை குளிக்க வெச்சு கூட்டிட்டு போனா தேவலை.. 5 நாளா இப்படியே கூட்டிட்டு போறீங்களேடா வில்லன்களா?

15.  அவன் வர்ற 28ந்தேதிக்குள்ள தாலி கட்ட நான் விடவே மாட்டேன்.. 

அது ரைட்டு, ஆனா அவன் அதுக்குள்ள  மேட்டரை முடிச்சுட்டா?

16.  ஒவ்வொரு டைம் சட்டை கேட்டதும் உடனே தர்றீங்களே, கார்க்குள்ளே ஜவுளிக்கடை ஏதாவது வெச்சிருக்கீங்களா? 

17.  டேய்.. வில்லன்களா? என்னை இப்படி துவைக்கறீங்களே, 5 நாளா என் சட்டையை துவைக்காம இருக்கேன்,. துவைக்க விடுங்கடா ஸ்மெல் ஆளை தூக்குது.. அவ்வ்வ்

18.  இதுதான் உங்கப்பனா?

மலைக்குரங்குன்னு சொன்னா ஒத்துக்கவா போறீங்க? 

19.  மாமன் பொண்ணை வீடியோ எடுத்ததுக்கே அந்த வில்லன் அவனை  கையை வெட்டுனவன், நீ மேரேஜே பண்ணீக்கப்போறே, எதை வெட்டப்போறானோ?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

20.  இனி எங்காவது போகனும்னா ஏ சி யை போடுங்க.. என்னால உப்புசத்துல எல்லாம் வர முடியாது.. 

http://www.voicetamil.com/wp-content/uploads/2010/05/cada.jpg

21.  அத்தான், 4 நாளா நீங்க இல்லாததால பசங்க எதையும் சாப்பிடவே இல்ல.. 

ஏண்டி கண்ணுக்கு முன்னாலயே அவனுங்க மலை முழுங்கி மகாதேவன்களா திங்கறாங்க, வாய் கூசாம பொய் பேசறியே?

22.  அவங்க வாயை மூட நினைச்சா ஹை வேஸ்ல பிச்சை தான் எடுக்கனும்.. 


23.  நான் அவங்க மேல இவ்வளவு கோபமா இருக்கேன்கற மேட்டரை அவங்க காதுல போட்றாதீங்க..

ஏன்?

மறுபடி கோபம் ஆகி என்னை அடிக்க வந்துட்டா?

24.. டேய் டேய்.. நடக்காத மேரேஜ்க்கு எதுக்கு இவ்ளவ் பில்டப்?

25. அவன் போற வண்டி ரயில்ல.. 

ஐ ஜாலி, நானும் அதே வண்டி தான்.. 

இதுக்கு முன்னால நீ ரயிலை பார்த்திருக்கியா?

மயிலையே பார்த்திரிக்கேன்.. ரயில் பார்த்திருக்க மாட்டேனா?

டிஸ்கி - மேலே உள்ள ஃபோட்டோல ஜிகிடிங்க 3 பேரு சாப்பிட்டு இருக்காங்க, அதுல இடம் இருந்து வலமா 2 பேரும் நடிகைங்க, 3 வதா இருக்கறது யார்னு தெரியல. ஆனா அவங்களுக்குத்தான் வாட்டர்கேன்ல தண்ணீர் இருக்கு, ஏன்?எதற்கு ? எப்படி? ( ஹி ஹி ஒரு ஜி கே கேள்வி )

Monday, January 09, 2012

நிலா அபகரிப்பு கேஸ்ல மாட்டிய எஸ் ஜே சூர்யாவும் ,நில அபகரிப்பு கேஸ்ல மாட்டிய தலைவரும்

http://s3.hubimg.com/u/1494362_f496.jpg 

1.புத்திசாலித்தனமாக முடிவெடுத்தாலும் பெண் அடிக்கடி தன் முடிவை மாற்றிக்கொள்கிறாள்,முட்டாள்தனமாக முடிவெடுத்தாலும் ஆண் தன் முடிவில் நிலையாய்!

-----------------------------------

2. வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் - கருணாநிதி  # காதலில் தோல்வி ஏற்படுவது பெண்ணுக்கு சகஜம் - நயன் தாரா

--------------------------------

3. எப்படி இருந்தாலும் நான்உன் காலில் விழுந்துதான் ஆக வேண்டும் என நீயும், எங்கே சென்றாலும் என்காதலில் நீ நெகிழ்ந்துதான் ஆகவேண்டும் என நானும்

------------------------------------

4. என் அன்பில் நீ உருகிவிடக்கூடாது என வெறுப்பு முகமூடியை அணிந்து கொள்கிறாய்! என் அன்பு நேரடியாய் உன் உள்ளத்தில் வந்து இறங்கி விடுகிறது

-------------------------------------

5. மழைக்காலங்களை, மழலைக்காலங்களை மறக்க முடிவதும் இல்லை, மறைக்க விரும்புவதும் இல்லை

-----------------------------------

http://s1.hubimg.com/u/1494376_f496.jpg

6. தியானம் செய்யும்போது மனதை ஒரு முகப்படுத்தச்சொன்னார்கள், அந்த ஒரு முகம் உன் முகம் ஆனது

----------------------------

7. கல்லால் கட்டப்பட்ட கோட்டை தி.மு.க.-கருணாநிதி # பாளையங்கோட்டை ஜெயில் கூட கல்லால் கட்டப்பட்டதுதான் - ஜெ

-------------------------------

8. உன் உதட்டிலிருந்து வரும் பொய்கள் கூட அழகிய கவிதை ஆகிவிடுகிறது, நான் எழுதும் கவிதைகள் உன் பார்வையில் பொய் ஆகிவிடுகிறது

--------------------------------

9. பகலில் மழை வரும்போது நம் இணைந்த கைகள் நினைவும், இரவில் மழை வரும்போது உன் நனைந்த கூந்தலும் நினைவில் வரும்

-------------------------------

10. நேசம் வீசும் ஒரு மழை நாளில் என்னிடம் உன் வாசனைப்பூக்களை கொடுத்து விட்டு நறுமணத்துடன் நீ போய் விட்டாய்!!

--------------------------------

http://c3.yousaytoo.com/rss_temp_image/pics/77/18/11/4874177/original/remote_image20100702-14312-rq8ant-0.jpg

11. உள்ளாட்சித்தேர்தல் தேதி ஏன் அஷ்டமி,நவமி நாளா பார்த்து வெச்சாங்க?

தலைவரே, அதுக்காக கவுதமி நாளா பார்த்து வைக்க முடியும்?

-------------------------------

12. டைரக்டர் எஸ் ஜே சூர்யா அரசியல்லயே இல்லையே, எப்படி நில அபகரிப்பு கேஸ்ல மாட்னாரு?

அது  “நிலா” அபகரிப்பு கேஸ்!

-------------------------------------

13. நாடோடி மன்னன், உத்தம புத்திரன் மாதிரி டபுள் ஆக்‌ஷன் படங்களா பார்க்கறாரே, தலைவர்.ஏன்?

அரசியல்ல ரெட்டை வேஷம் போட வேண்டி இருக்காம், ட்ரெயினிங்க்  எடுத்துக்கறாராம்.



------------------------------------

 14. இனி எல்லா தேர்தலிலும் தனித்து போட்டி: தங்கபாலு  # இனி எல்லா படங்களிலும் நான் குணச்சித்திரமாக நடிக்க முடிவு - மல்லிகா ஷெராவத்

---------------------------------

15. விஜயகாந்த்துக்குப் பிறகுதான் அன்னாவே குரல் கொடுத்தார்- பிரேமலதா # பேகனுக்கு முன்பே மயிலுக்கு போர்வை குடுத்தது பாரதிராஜா தான் - ஸ்ரீதேவி

----------------------------


 16. ஏய், மிஸ்டர்,நான் தான் உன்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டேனே? எதுக்கு என்னையே சுத்தி சுத்தி வர்றே?

மிஸ், +2 ல பாஸ் பண்ணவே 4 அட்டெம்ப்ட் ஆச்சு, லவ்ல முதல் முயற்சிலயே ஜெயிக்க முடியுமா?

------------------------------

17. XQS மீ மிஸ்.இந்த CD பாருங்க.

யோவ்!அய்யோ, தப்பா நினைக்காதீங்க, லவ் லெட்டர் குடுக்கறது ஓல்டு ஃபேஷன், இது லவ் சி டி # வீட்டுக்குப்போய் பார்டி

------------------------------------

18. என் காதலை ஈரோட்ல இருக்கற 58,430 சொந்தக்காரங்க கிட்டேயும் சொல்லிட்டேன்..

டேய், நாயே, முதல்ல நீ லவ் பண்ற ஃபிகர்ட்ட சொல்டா.

----------------------------------

19. ஸாரி மிஸ்டர்! எனக்கு காதல்ல நம்பிக்கையே இல்லை.

. அட!! எனக்கு கூட மேரேஜ்ல நோ நம்பிக்கை. நமக்குள்ள எவ்ளவ் ஒத்துமை பார்த்தீங்களா?

-------------------------------------

20. உன் மனைவிக்கு சமையலோட அரிச்சுவடியே தெரியாதாமே?

அப்டி சொல்ல முடியாது, நல்லா பத்தவைப்பா..

------------------------------

சென்னை புத்தகக்கண் காட்சி - அப்துல்கலாம் உரை - விவசாயிகள், நதி நீர் இணைப்பு ஆர்வலர்கள்க்கு..

சென்னை புத்தகக் காட்சியில் ஞாயிற்றுகிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய  உயர் திரு  ஏ பி ஜே அப்துல்கலாம்  கூறியது:

தமிழக நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

அவ்வாறு நதிகளை இணைந்தால் தண்ணீருக்காக, அண்டை மாநிலங்களை நம்பியிருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது

சி.பி - அப்போ ஆந்திரா, கேரளா பண்ற அழிச்சியாட்டங்களை வேடிக்கை பார்க்க சொல்றீங்களா? மத்திய அரசோ, கோர்ட்டோ கூட அவங்களை அடக்க வோ, நல்வழிப்படுத்தவோ கையாலாகாதுன்னு சொல்றீங்களா?

"இந்த வாரத்தில் 2 தமிழ் புத்தகங்களை அருமையான, வாழ்க்கைக்கு மிகவும் உபயோகமான புத்தகங்களை படித்தேன். ஒன்று விவசாயத்தைப் பற்றியது, எப்படி விவசாயம் ஒரு லாபகரமான தொழிலாக மாறி இருக்கிறது என்பதைப்பற்றியும், இன்னொரு புத்தகம், எப்படி செயற்கைக்கோள் தொழில் நுட்பம் நதிகளை பற்றி அறிந்து கொண்டு நம்மை வளப்படுத்த உதவுகிறது என்பதாகும். 

சி.பி - விவசாயம் லாபகரமான தொழில்னா ஏன் விவசாயிகள் தற்கொலை செஞ்சுக்கறாங்க? விவசாயிகளிடம் கம்மி விலைக்கு கொள்முதல் பண்ணி அதிக விலைக்கு மக்களிடம் விற்கும் இடைத்தரகர்கள் தான்  லாபம் பார்க்கறாங்க.. உழவர் சந்தை வாசலிலேயே இந்த அக்கிரமங்கள் நடந்துட்டுதான் இருக்கு..  

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தை சேர்ந்த முனைவர் இ. வடிவேல் தலைமையிலான ஆசிரியர் குழு உழுதவன் கணக்கு (துல்லிய பண்ணையத்தில் பயிர் பாதுகாப்பு அனுபவங்கள்) என்ற ஒரு அருமையான புத்தகத்தை எழுதியிருக்கிறார்கள். இந்த புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி, துல்லிய பண்ணைய திட்டத்தின் மூலம் கடைப்பிடிக்கப்பட்ட சிறு சிறு தொழில்நுட்ப மாற்றங்கள், பெரும் செலவை குறைத்தது மட்டுமின்றி அதிக விளைச்சலையும், நஞ்சற்ற உணவையும் பெற உறுதுணையாக இருந்தது என்பதைப்பற்றி விளக்குகிறார்.

எப்படி ஓரு புதுமையான திட்டத்தை வேளாண்மையில் புகுத்தி அதைக்கடைப்பிடிப்பதினால் விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவர இயலும், அது மட்டுமல்ல அவர்களின் தனிநபர் வருமானத்தை உயர்த்த முடியும் என்பதைப்பற்றி மிகவும் அழகாக எழுதியுள்ளார்.

1. உளிக்கலப்பை உழவு கோடையில் செய்தால் கோரை முழுமையாக கட்டுப்படுவதுடன், மழை நீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் மட்டம் உயருதல், மழை நீர் தேங்காமல் இருப்பதால் வேரழுகல், வாடல் மற்றும் பூச்சிகள் இவற்றிலிருந்து விடுதலையும் கிடைத்தது என்கிறார். 2. சொட்டு நீர் அமைப்பு மூலம் நீர் வழங்குவதால் தேவையான நீர் மட்டுமே செடிக்கு கிடைக்கும். இதனால் நீர் விரையம் தவிர்க்கப்பட்டு களை, பூஞ்சாமை மற்றும் பூச்சிகள் வளர்ச்சி குறைக்கப்பட்டது என்கிறார்.

2. துல்லிய பண்ணையத்தில் நிலம் தயார் செய்ய உளிக்கலப்பை, கொக்கிக்கலைப்பை, சட்டிக்கலைப்பை மற்றும் உழவின் முடிவில் மேட்டுப்பாத்தி அமைப்பதாலும் மண் பொலபொலப்பாக இருப்பதாலும் முதல் பயிரின் முடிவில் அடுத்த பயிர் நடவுசெய்யலாம். குறிப்பாக தக்காளிக்கு பின்னர் பீன்ஸ், டபுள் பீன்ஸ், பீர்க்கன், பாகல், வெள்ளரி, நடவு செய்வதால் அடுத்த உழவு செய்யவேண்டிய அவசியம் இல்லை. இதனால் குறைந்தது ஏக்கருக்கு ரூ 2000 முதல் ரூ 2800 வரை சேமிக்கலாம் என்கிறார்.

3. களைகளை கட்டுப்படுத்தபடுவதால் 25-30 சதம் உரம் விரயமாவது தடுக்கப்பட்டு 5-10 சதம் வரை கூடுதல் மகசூல் பெற முடிந்தது. பெரும்பாலான பூச்சி, வைரஸ், பூஞ்சானங்களுக்கு களைகள் புகலிடமாக திகழும். ஆனால் துல்லிய பண்ணையத்தில் களைகள் முற்றிலும் அகற்றப்படுவதால், பூச்சி மற்றும் நோய் சேதம் படிப்படியாக குறைக்கப்பட்டு இறுதியில் கட்டுக்கள் கொண்டு வரமுடியும் என்கிறார்.

4. சொட்டுநீர் அமைப்பு மூலம் தண்ணீரும், உரமும் செல்வதால் தேவையற்ற உரம் விரயமாவது தடுக்கப்படுகிறது. பயிரின் வளர்ச்சிக்கேற்ப உரம் தரப்படுவதால், நோய் மற்றும் பூச்சி வளர்ச்சிக்கேற்ப உரம் தரப்படுவதால், நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு திறன் பெற்று கூடுதல் மகசூல் கிடைக்கவும் எதிர்ப்பு திறன் பெற்று கூடுதல் மகசூல் கிடைக்கவும் ஏதுவாகிறது. சாதாரண முறையில் உரமிடுவதால் 20 சதம் வரை விரையமாக அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இங்கு 95 சதம் வரை உரம் செடிக்கு நேரிடையாக சென்றடைகிறது.

இந்த மாதிரி புத்தகங்கள் படித்த விவசாயிகளின் வாழ்க்கை எப்படி விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் விவசாயியின் வாழ்க்கைக்கு ஒரு வளமான மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பதை விளக்குகிறது. அப்படி ஒரு மாற்றத்தை ஒரு புத்தகம் கொண்டுவரும் என்றால், அப்படிப்பட்ட புத்தகம் தான், அதைப்படிக்கும் ஒருவருக்கு அள்ள அள்ள குறையாத கற்பக விருட்சகமாக இருக்க முடியும்.

புத்தகம் நம் வாழ்வில் ஒவ்வொரு பகுதியிலும் இன்றியமையாததாக இருக்கிறது, நம்முடன் நம் வாழ்க்கப்பயணத்தில் நடந்து வருகிறது, இன்ப துன்பத்தில் பங்கு பெற்று, நம்பிக்கை விதையை விதைத்து, வாழ்வை செவ்வனே நடத்த நம்மை செம்மைப்படுத்துகிறது, நமது வாழ்க்கையை மேம்படுத்த அறிவையும், தொழில்நுட்பத்தையும் கொடுக்கிறது, வாழும் முறையை அனுபவத்தின் அடிப்படையில் சொல்லிக்கொடுக்கிறது, நமது கலாச்சாரத்தை, வரலாற்றை, அடுத்த அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்கிறது, சமூக பொருளாதார சித்தாந்தத்தை, வளர்ச்சிக்கான அரசியலை சொல்லிக்கொடுக்கிறது.

எவ்வளவு தூரம் கடந்திருக்கிறோம் என்பதில் நம் ஊக்கம் மலர்வதில்லை, இன்னும் எவ்வளவு தூரம் கடக்க இருக்கிறோம் என்கிற சிந்தனைதான் ஊக்கத்தை மலரச் செய்கிறது. நமக்கான வழிகளைப் புலரச் செய்கிறது. அந்த சிந்தனைகளை, வழிகளை நமக்கு புலப்படுத்தும் கருவிதான் புத்தகங்கள்.

இப்படி புத்தகத்தின் பயன்கள் கணக்கிலடங்கா. எனவே தினமும் புத்தகம் படிப்பது வாழ்வில் இன்றியமையாதது ஆகும். தற்காலிக சந்தோஷங்களுக்குத் தலை கொடு்த்து விடாமல் அபாரமான சாதனைகளை நிகழ்த்த முனைபவர்களால்தான் உலகின் வளர்ச்சி உவப்படைகிறது. உலகின் வளர்ச்சியில் உங்கள் பங்கு அவசியம்தானே, அபாரமான சாதனைகளுக்கு அச்சாரமிடுங்கள், புத்தகங்களை படிப்பதன் மூலம்.

நதிநீர் இணைப்பு...

சமீபத்தில் நான் படித்த இரண்டாவது புத்தகம், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சோம. இராமசாமி அவர்கள் எழுதிய செயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல் என்ற ஒரு அற்புதமான ஆய்வுக்கட்டுரையை மக்களுக்கு புரியும் விதத்தில் எளிமையாக புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

அதாவது அவர் சொல்கிறார், நதிகளை நாம் ஒரு நீர் வழங்கும் இயந்திரம் என்ற அளவிலேதான் பார்க்கிறோமேயொழிய நதிகளின் வாழ்க்கை வரலாறுகளைப் பற்றியும் அதன் இயங்கியல் பற்றியும் (River histories and Dynamics) அதனால் உள்ள பல்முனை நன்மைகளைப்பற்றியும் நாம் சிந்திப்பதே இல்லை.

நதிகளின் பிறப்பு, அவை ஒடும் விதம், அவற்றின் பாதைகளிலே ஏற்படும் மாற்றங்கள், மலைப்பகுதி, சமவெளிப்பகுதி மற்றும் கடலோரப்பகுதி ஆகியவற்றில் நிகழும் நதிகளின் செயல்பாடுகளை நாம் ஆராய்ந்து கணித்தோமேயானால், இந்நதிகள் நீர்வழங்கும் அமுத சுரபி மட்டும் அல்ல, அவை பூமியின் மேற்பரப்பியல் மற்றும் அவற்றில் ஏற்படும் மாற்றங்கள், பூமிக்கு கீழே நடைபெறும் புவியியல் மாற்றங்கள், கனிம வளம், பூமி நகரும் தன்மை மற்றும் பூகம்பம், கடலுக்கும் நதிகளுக்கும் இடையே நடைபெறும் செயல்பாடுகள், கடல்மட்ட மாறுதல்கள், கடந்த கால வெள்ளங்கள் மற்றும் எதிர்கால வெள்ளங்களின் கணிப்பு, காலநிலை மாற்றம், பண்டைய நாகரீகம், அணைகள், நீர்த்தேக்கங்கள் அமைக்க ஏதுவான இடங்கள் ஆகியவற்றைப் பற்றிய உண்மைகளையும் மற்றும் சான்றுகளையும் தன்னிடத்தே கொண்டுள்ளன என்பது புலனாகும்.

ஆகவே நதிகளின் வாழ்க்கையில் குறுக்கிடாமலும் அவற்றின் வளம் குன்றாமல் நதிகளின் வளத்தைப்பயன்படுத்தினால் நதிகளைப் பாதுகாப்பதோடு எதிர்காலச் சந்ததியினருக்கு விட்டுச் செல்ல முடியும் என்பதை மிகவும் அழகாக, செயற்கைக்கோள் படங்களின் மூலம் இன்னும் எவ்வளவு நாம் அறிந்து கொள்ளவேண்டும், நதிகளைப்பற்றி புரிந்து கொள்ளவேண்டும் என்பதை மிகவும் அருமையாக விளக்குகிறார்.

இதில் என்னைக்கவர்ந்த ஒரு பகுதி காவிரி ஆற்றைப்பற்றியது. அவரது எண்ணங்களின் படி செயற்கைக்கோள்கள் மூலம் காவிரி வடிநிலத்தில் வடதமிழ் நாட்டில் ஆராய்ந்தவை பல வியத்தகு உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளன.

காவிரி ஆரம்பத்தில் கொகனேக்களில் இருந்து 8000 ஆண்டுகட்கு இடைப்பட்ட ஒரு காலக் கட்டத்தில் உருவாகி, 3000 ஆண்டுகட்டு முன்பு வரை ஒடியிருக்கிறது.
மங்களூர் - பெங்களூர்-சென்னைப் பகுதியில் பூமி ஆர்ச் போன்று உயர ஆரம்பித்ததால் கொஞ்சம் கொஞ்சமாக 5 முறை தடம் மாறி தெற்கே நகர்ந்து தடம் மாறி ஒடியிருக்கிறது. பூமியின் உயர்வுக்கு ஈடு கொடுக்க முடியாததால் முதல் பாதையை விட்டு விட்டு இரண்டாம் பாதை ஆக மேற்கே மேட்டூர் நீர்த்தேக்கதிலிருந்து கிழக்கே கடலூர் வரை 2700-2300 ஆண்டுகள் காலகட்டத்தில் தற்காலப் பொன்னையாற்றின் பாதையில் ஒடி, கடலூரில் கடலில் கலந்திருக்கிறது.

கடலூர் பகுதியில் அலைகள், ஆழிப்பேரலைகள், பிற நதிகளால் வெள்ளம், பூமி கீழே செல்வதால் காவிரி பாதை 2ல் ஏற்பட்ட தடுமாற்றம், வடக்கு தெற்காக உருவாகி வரும் வெடிப்புகளின் தாக்கம் மற்றும் தெற்கிலிருந்து வளர்ந்து வந்த அமராவதியின் உபநதியின் கையகப்படுத்துதல் ஆகியவற்றால் பாதை 2ஐ முற்றிலுமாக விட்டு விட்டு பாதை 3ஆன திருச்சிராப்பள்ளி சமவெளியை அடைந்திருக்கிறது. திருச்சிராப்பள்ளியில் 12 தடங்களில் தெற்கே புதுக்கோட்டையிலுருந்து வடக்கே, தற்கால கொள்ளிடத்திற்கு தெற்கே வரை இன்றிலிருந்து 2300 ஆண்டுகள் முதல் 900 ஆண்டுகள் வரை ஒடியிருக்கிறது.

ஆரம்பத்தில் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக இப்போதைய வெள்ளாற்றில் தடம் 7 ஆக ஒடிய காவிரி கொஞ்சம் கொஞ்சமாக வடக்கே நகர்ந்து தற்கால அம்புலியாறு, அக்னியாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி ஆறு, பழம்காவிரி ஆகிய பல தடங்களின் வழியாக ஒடி பின்னர் கொள்ளிடத்தில் தடம் மாறி 750 ஆண்டுகட்கு முன்பு நிலை கொண்டுள்ளது.

இப்படி பாதை மாறும் பொழுது, வாழ்க்கை முறை மாறுகிறது, ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது, விவசாய முறையில் மாற்றம் வருகிறது, கலாச்சாரம் மாறுகிறது. அதைப்பற்றி படிக்கும் போது எப்படி நதிகள் நம் வாழ்க்கையில் ஒன்றியிருக்கிறது என்பது புரியும். அதன் தன்மைகளை புரிந்து கொண்டேமேயானால், நதிகளை இணைந்து, தமிழகத்திலேயே நீர்வழிச்சாலைகளை அமைத்து நாம் நம்மை வளப்படுத்திக்கொள்ளலாம்.

அடுத்த மாநிலத்தை நம்பி தமிழகம் இருக்க தேவையில்லை. வருடா வருடம் வெள்ளம்போல் ஒடும் காவிரிமூலம், வைகையையும், பாலாற்றையும், தாமிரபரணியையும் இணைந்து நீர்வழிச்சாலையை ஏற்படுத்தினால், வெள்ளத்தை தேக்கிவைக்கும் நீர்வழி அணையாக அது செயல் படும். அந்த நீரை தமிழகமே, வேண்டிய பகுதிக்கு திருப்ப முடியும். அதில் கிட்டத்தட்ட 100 டி.யெம்.சி நீரை வருடாவருடம் தேக்கிவைக்க முடியும். அப்படி தேக்கி வைக்கும் பட்சத்தில், வரண்ட தமிழகம் வருடம் தோறும் வளமான தமிழகமாக கண்டிப்பாக மாறும்.

அப்படிப்பட்ட ஒரு தொலை நோக்கு திட்டத்தை, கண்டிப்பாக செய்ய முடியும். அப்படி செய்ய முடியும் என்ற மனப்பான்மை கொண்ட தலைமையாலும், அதை செயல்படுத்த கூடிய இளைஞர்களை கொண்ட தமிழக தொழில் நுட்ப வல்லுனர்களைக்கொண்டு, சாதிக்க முடியும் என்ற எண்ணம் கொண்ட தமிழக அரசு அதிகாரிகளைக்கொண்டும், ஒரு Public Private Partnership உடனும், உலக வங்கியின் உதவியுடனும், மத்திய அரசின் உதவியுடனும், தமிழக அரசு செயல் படுத்த நினைத்தால் தமிழகம் கண்டிப்பாக என்றைக்கும் வற்றாத வளமான நாடாக மாறும் என்பது திண்ணம்.

அப்படிப்பட்ட ஒரு வளமான தமிழகத்தை 2020க்குள் கண்டிப்பாக நான் காண்பேன் என்ற கனவு எனக்கு இருக்கிறது. அதே கனவு தமிழக மக்களுக்கும், தமிழக அரசிற்கும், தமிழக அரசியல் கட்சிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், தொழில் நுட்ப வல்லுனர்களுக்கும் ஏற்படும் என்று நம்புகிறேன். அந்த கனவு, கனவு நினவாகும் வரை அவர்களை தூங்கவிடாது,"

தனியார் வங்கிகளை துவைச்சு காயப்போட்ட மகான் கணக்கு வசனங்கள்

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/12/Mahaan-kanakku-Movie-stills-3.jpg

1. ஒவ்வொரு மாநிலத்துலயும், அந்தந்த பிராந்திய மொழிகளில் லோன் வாங்குபவர்களுக்கு விளக்கற மாதிரி விதி முறைகளை ஏன் தனியார் பேங்க் வைக்கலை?மக்கள் ஈசியா புரிஞ்சுக்கிட்டா அவங்களுக்கு டேஞ்சர் என்பதாலா?

2.லோன் வேணும் ,லோன் வேணும்னு நாங்களாடா வந்து கேட்கறோம், நீங்க தானே நாக்கை தொங்கப்போட்டுட்டு வர்றிங்க, அப்புரம் நீங்களே கழுத்தை பிடிச்சு திருகறீங்க, உங்களால சிதைஞ்சு போன குடும்பங்கள் எத்தனை?

3. சாயங்காலம் 6 மணிக்கு மேல கலெக்‌ஷன்க்கு ஏஜெண்ட்ஸ் யாரும் எந்த வீட்டுக்கும் போகக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு,.. அதை ஃபாலோ பண்றீங்களா?

4.  மிஸ்டர்.. டேக் திஸ் டீ


ஸாரி, நோ ஃபார்மாலிட்டிஸ்

திஸ் ஈஸ் த ஒன்லி அவெய்லபிலிட்டி, நாட் ஃபார்மாலிட்டி

5.  ரேஷன் கடைல போடற ஒரு ரூபா அரிசில கூட நீ கமிஷன் அடிக்கிறியாமெ? நிஜமா?

6. லேடி வாய்ஸ் - ஹலோ

ஹாய்.. நீங்க பவித்ராவா?

அட!! ஆமா.. இப்போதான் முதல் முறையா உங்க நெம்பர்க்கு பண்றேன், எப்படி நான் தான்னு கண்டு பிடிச்சீங்க?

கோவைலயே என் கிட்டே இல்லாத ஒரே ஜிகிடி நெம்பர் உங்களுதுதான் ஹி ஹி

7.  ஐ ஆம் இன் லவ் வித் யூ - இதை விட லவ்வை சொல்ல அழகான வரிகள் கிடையாது..

அப்டியா ? யார் சொன்னது?

ஹி ஹி வாரணம் ஆயிரம் படத்துல கவுதம் வாசுதேவ் மேனன் சொன்னது

ஓ ம் ம் ஆனா சாரி , எனக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகிடுச்சு

8.  ஓ சி ஓசி பேங்க்ல இருந்து கால்.. ஏதாவது லோன் வேணுமா? சார்?

ஓ சி ன்னா ஓக்கே

9.  சார்.. இது வாடகை வீடா? சொந்த வீடா?

வாடகை வீடுதான்..

ஆனா எங்க பேங்க்ல இருந்து வெரி-ஃபிகேஷனுக்கு யாராவது வந்தா சொந்த வீடுன்னு சொல்லிக்குங்க.

அதெப்பிடி சார்.. வெளீயூர்ல இருக்கற ஹவுஸ் ஓனர் ஒரு பேச்சுக்கு உங்க வீடு மாதிரி நினைச்சுக்குங்கன்னு சொன்னது உண்மைதான், அதுக்காக நிஜமாலுமே சொந்த வீடுன்னு எப்படி வாய் கூசாம பொய் சொல்றது?

10.  பசங்க சைக்காலஜி உனக்கு தெரிலடி.. மேரேஜ் ஆனவனு பொய் சொன்னா உன்னை விட்ருவான்னு நீ நினைக்கறே.. மேரேஜ் ஆன லேடி தான் கில்மாவுக்கு  சரின்னு அவன் நினைச்சு இன்னும் டீப்பா உன்னை லவ் பண்ணப்போறான் பாரு..

http://2.bp.blogspot.com/-Nh2NQx_hSW4/TselS-fs8bI/AAAAAAAAU5o/iQ_C1d8O9Uo/s1600/gandhi_kanakku_21_89201153836123.jpg

11. எனக்கு அந்த குழந்தையை 4 வயசுல இருந்தே தெரியும்..

கிட் ( KID) என்பதால் ஈசியா கிட்நாப் பண்ணிட்டாங்களா?

12.  போலீஸ்ட்ட போனா கொன்றுவேன்னு மிரட்றான்

அய்யய்யோ யாரை?

பயப்படாதீங்க, உங்களை இல்ல, என்னை தான்./..

13.  தேவாரத்தை நேர்ல பார்த்திருப்பே, திருவாசகத்தை சி டி ல பார்த்திருப்பே.. ரெண்டையும் ஒரே ஆளா இப்போ பார்க்கப்போறே..

14. உங்களுக்கு குங்க்ஃபூ தெரியுமா?

ம்ஹூம், எனக்கு குஷ்பூ தான் தெரியும்..

15.  நீதான் அந்தாளோட அக்கா பொண்ணா?

ம்ஹூம், எங்கம்மாவோட தம்பி தான் அவரு

ரெண்டும் ஒண்ணுதான், உனக்கு ஓவர் லொள்ஸ்

16.  ஹலோ.. உனக்கு ஃபோன் வந்திருக்கு..

அவ்ளவ் தானே, ஏன் பாம்பு வந்த மாதிரி பதர்றே?

17.  என்ன நினைச்சுட்டு இருக்கே உன் மனசுல?ன்னு கேட்டிருந்தா உன்னைத்தான் நினைச்சுட்டு இருந்தேன்னு சொல்லி இருப்பேன்..

அதான் கேட்கலை அப்படி ஹி ஹி

18.  இப்போவெல்லாம் அவனால எனக்கு எந்த தொந்தரவும் இருக்கறதில்லை, ஆனா அந்த தொந்தரவு எனக்கு இப்போ தேவைப்படுது..

19.  இவன் நம்மளை எங்கேயோ கொண்டு போகப்போறான்..

ஹூம்.. பார்ப்போம்

20.  இப்போ பேங்க்கை ஏமாற்ற ஒரு வழி.. வருமானமே இல்லாட்டியும் பரவாயில்லை, உங்க பிஸ்னெஸ்ல லாபம் வந்ததுன்னு சொல்லி ஒன்றரை கோடிக்கு வருமான வரி கட்டுங்க,, இவ்லவ் வரி கட்றவர் நேர்மையான ஆளாவும் இருப்பார், ஏகப்பட்ட பண்ணம் வெச்சிருப்பார்னு நம்பி பேங்க் உங்களுக்கு லோன் தரும்.. நாம அந்த அமவுண்ட்டை ஆட்டையை போட்றலாம்..

http://kumarsrinivas04.files.wordpress.com/2011/11/director.jpg

21.  ஐ வில் டேக் ஹேர்

டேய் அது ஐ வில் டேக் கேர் டா

தெரியும்.. நான் அவ கூந்தல் கற்றை பற்றி சொல்லிட்டு இருக்கேன்..

22.  சார்.. ஆஃபீஸ் அட்மாஸ்ஃபியர், எல்லாம் நல்லா செட் பண்ணி வெச்சிருக்கீங்க.

ஹூம்.. பொண்ணு எதுவும் செட் ஆக மாட்டேங்குதே?

நான் வேணா ரெடி பண்ணித்தரவா?

23. ஜிகிடி - நான் சொன்ன புளிக்குழம்பு செஞ்சு பார்த்தியா?

ம்ஹூம், சரியா வர்லை.. நீ வேணா என் ரூம்க்கு வந்து செஞ்சு காட்றியா? நான் புளிக்குழம்பை சொன்னேன் ஹி ஹி

24. லோன் வாங்குனவங்களை வீடு தேடி வந்து அடியாட்கள் விட்டு மிரட்டுதே இந்த பிரைவேட் பேங்க் எல்லாம்.. நம்ம இந்தியா கூடத்தான் உலக வங்கில கடன் வாங்கி இருக்கு.. நாடாளுமன்றத்துல ரவுடிங்க வந்து எம் பிக்களை மிரட்னா எப்படி இருக்கும்?

கோர்ட் கேஸ் , ஜெயில்-ல் நக்கீரன் கோபால் ? - காமெடி கும்மி கலாட்டா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHSb3n_MMlxvf3H4Vevh-NS8TOrDl8KGbjoTT6DpWIlAVgoS1NsH-pymX_XjM3uwNOI_H9sTHvtwLVBRiNEf6Xn6sIN_GYNuGnYpZKN23veNlau2ZotMqoR4A_BNx-JthL4s_Mc3NQjDBD/s1600/1.jpg

1.மன்னா! மகாராணி மாட்டுக்கறி சாப்பிட்டதை  சஞ்சிகைகள் படம் பிடித்து விட்டன, இப்போ என்ன செய்வது? 

சஞ்சிகையை எரித்து விடு, பிரச்சனையை திசை திருப்பி விடு

----------------------------------

2. மிஸ்டர் கோபால்,உங்களுக்கு வேலூர் பிடிக்குமா? பாளையங்கோட்டை பிடிக்குமா?

மொதல்ல போலீஸ்தான் பிடிக்கும் போல

----------------------------------

3. உங்க பத்திரிக்கையை இன்சூர் பண்ணி இருக்கீங்களா? 

அது ஆல்ரெடி பண்ணிட்டேன், என்னைத்தான் இன்னும் பண்னலை, பண்ணனும்

--------------------------------

4. எடிட்டர் - எதையும் பாசிட்டிவ்வா எடுத்துக்கனும். 


அதுக்காக சேல்ஸ் அதிகரிக்க வழிவகை செய்த முதல்வருக்கு நன்றி-னு போஸ்டர் அடிக்கனுமா?

-------------------------------------

5. ஜட்ஜ் - எதுக்காக எடிட்டரை தாக்குனீங்க? 

கைதி- தலையங்கத்துல அவரு எங்க தலைவரை தாக்குனாரு, பதிலுக்கு அவர் தலை, அங்கத்தை நாங்க தாக்குனோம்

------------------------------

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/dece09/13.10.09/yutham1.jpg

6. ஜட்ஜ் - வழக்கை நல்லா விசாரிச்சுட்டேன், சம்பந்தப்பட்ட எடிட்டர்  தன் ஆயுள் முழுவதும் இனி சைவம் மட்டுமே சாப்பிடனும் 

கைதி - இதுக்கு ஆயுள் தண்டனை பெஸ்ட்

--------------------------------------

7. சார்,உங்க புக் பார்த்தேன், நியூஸ் எல்லாம் மட்டனா இருந்துச்சு, உங்க ரசனை ரொம்ப மட்டமா இருந்துச்சு

----------------------------------

8. சிங்கப்பூர்,மலேசியா புகழ் கோபால் பல்பொடிக்கு தடை, கம்ப்யூட்டர் கோர்ஸில் கோபால் லேங்குவேஜ் நீக்கப்பட்டது - ஜெ அதிரடி அறிவிப்பு@இமேஜினேஷன்

-----------------------------------

9. முதல்வர் ஜெயலலிதா சமையலில் ஈடுபடுவதே இல்லை- பொன்னையன் # சட்டசபைக்குப்போகச்சொன்னா அண்ணன் சமையல் அறைல போய் உக்காந்து சாப்பிட்டு இருக்காரு

--------------------------------------
10. ஜெ - நான் வெஜ்னு சொன்னதை அவர் தப்பா புரிஞ்சுக்கிட்டார்..

கோபால் - ஜெ நான்வெஜ்-னு நான் சொல்லவே இல்லை ஜெ நான் -வெஜ் அப்டினுதான் சொன்னேன்

-----------------------------

http://4.bp.blogspot.com/-S7lWYkJLaRU/Tc6HUM5r0II/AAAAAAAAAvA/G2lKaEE6d7Q/s1600/2132_1.jpg

11. பீஃப் எனக்குப்பிடிக்காதுன்னு சொன்னா அவங்க பக்கா  சைவமா இருக்கனும்னு அவசியம் இல்ல, பி எஃப் எனக்குப்பிடிக்காதுன்னா அவங்க பக்கா அசைவமா இருக்கனும்னு அவசியம் இல்ல # கில்மா கண்டு பிடிப்[பு

----------------------------------------

12. நீங்க மட்டன் சாப்பிட்டதை பார்த்த சாட்சிகள் 4 பேர் இருக்காங்க...

  ஓஹோ, அதை பார்க்காத சாட்சிகள் 4 கோடி பேர் இருக்காங்க ,4 பெருசா? 4 கோடி பெரிசா?

-----------------------------------

13. உங்க மேல சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போறோம்

கோபால்- அப்போ இதுவரை எடுத்தது? 

போலீஸ் -சுளுக்கு

-----------------------------------------

14. நான் சைவம் மட்டும் தான் சாப்பிடுவேன், எனக்கே ஓட்டு போடுங்க ... நான்  எதுவுமே சாப்பிட மாட்டேன்,எனக்கே ஓட்டு போடுங்க # 2016 எலக்‌ஷன்

-------------------------------------

15.மாட்டுக்கறி பிரச்சனையில் சிக்கியதால் இனி ஜெ கோமாதா என அழைக்கப்படுவாரா?

-----------------------------------

16. நக்கீரன் கோபால் மீது நெல்லை தொழிலதிபர் தீடீர் மோசடி வழக்கு #  ம்ஹூம்,இது எடுபடலை, யாராவது ஒரு லேடி என் கையைப்பிடிச்சு இழுத்துட்டார்னா OK

----------------------------------------------

17.பார்ப்பதற்கே பயங்கரவாதி தோற்றம் தரும் மீசையுடன் இருந்ததால்தான் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார், மற்றபடி பழி வாங்கும் எண்ணம்  அரசுக்கு இல்லை - ஜெ அதிரடி அறிவிப்பு

---------------------------------------

18. நக்கீரன் கோபால் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு# அட போங்கம்மா, உங்க ராசி நெம்பரை மறந்துட்டீங்களே? இன்னும் 3 சேர்க்கவும்

--------------------------------

டிஸ்கி -

PLAYERS - அபிஷேக் -பிபாஸாபாஷா பாலிவுட் ஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்

 

விநாயகா - HITCH பட தழுவலா?-சினிமா விமர்சனம்

 

குங்குமம் வலைப்பேச்சு வாழ்த்துகள்

 



Sunday, January 08, 2012

ஸ்பெக்ட்ரம் ஊழல்-ப சிதம்பரத்துக்கு எதிரான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்த சு,சாமி

http://www.envazhi.com/wp-content/uploads/2011/09/P-Chidambaram.jpg 

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரம், தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா ஆகியோர் சந்தித்துப் பேசி எடுத்த முடிவுகள் தொடர்பான ஆதாரங்களை, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, டில்லி பாட்டியாலா கோர்ட்டில் நேற்று சமர்ப்பித்தார்.


சி.பி - அரசியல் கோமாளி என்று சு சாமி வர்ணிக்கப்பட்டாலும் ஸ்பெக்ட்ரம் ஊழலைப்பொறுத்தவரை  இவர் தான் அச்சாணியாக செயல்பட்டு  வழக்கின் போக்கை நிர்ணயிக்கும் சக்தியாக வருகிறார்.. பாராட்ட வேண்டிய விஷயம்.. 

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில், முன்னாள் அமைச்சர் ராஜாவோடு, உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று கோரி, கடந்த செப்டம்பரில், ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, டில்லி பாட்டியாலா கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஷைனி, இவ்வழக்கில் சிதம்பரத்தை சேர்ப்பதற்கான ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்கும்படி, கடந்த டிசம்பர் 17ம் தேதி உத்தரவிட்டார். அதன்படி, நேற்று சுப்ரமணியசாமி தன்னிடம் உள்ள அதிகாரப்பூர்வமான ஆதாரங்களை கோர்ட்டில் ஒப்படைத்தார்.

சி.பி - இவரை விலைக்கு வாங்க முடியாது என்பதால் விபத்து மூலமாகவோ ,மிரட்டல் மூலமாகவோ தடை ஏற்படுத்த மேலிடம் முனையக்கூடும், கோர்ட் விரைந்து நடவடிக்கை எடுக்கவும், சு சாமிக்கு தக்க பாதுகாப்பு அளிக்கவும் ஆவன செய்யவேண்டும்.. 

சாமி ஒப்படைத்த ஆதாரங்களில் முக்கியமானது, பிரதமர் மன்மோகன் சிங், அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரம், தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா ஆகிய மூவரும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சந்தித்துப் பேசி எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான ஆறு பக்க ஆவணம். தவிர, ஸ்பெக்ட்ரம் தொடர்பாக 2008 ஜனவரி 15ம் தேதி, நிதி அமைச்சர் சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பிய கடிதம். அதைத் தொடர்ந்து, ஜனவரி 30ம் தேதி நிதி அமைச்சரும் தொலைத் தொடர்பு அமைச்சரும் சந்தித்துப் பேசி எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான ஆவணம். மேலும், 2008 ஏப்ரல் 21ம் தேதி ஸ்பெக்ட்ரம் பற்றி அமைச்சர் ராஜா, சிதம்பரத்திற்கு எழுதிய கடிதம் ஆகியவையும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.


சி.பி - இந்த வழக்கில் ப சிதம்பரம் ஆஜர் ஆவதை ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் விரும்பவில்லை, காரணம் அதற்கு அடுத்த கட்டமாக பிரதமரும், அவருக்குப்பின்னால் இருந்து இயக்கி வரும் சோனியா காந்தியும் வழக்கை எதிர் கொள்ள வேண்டி வரும் எனப்தால் இதற்கு முட்டுக்கட்டை போட முயலக்கூடும்.. இந்தியாவில் நடக்கும் மிக பெரிய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு இது.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQONY3B73DuvQJFR9pLxX0awWviiNm0ysxH2d3PnlHiW1Y8kqN7aoSNBnBvEE7_BAh4t5fG_9TKG7YUDrZ5K-1wVxGX5vRfDMAsgLA8Z0UhncV0cvL1m9FD3E8ihhH4EzZ9l8KTgkSTBL7/s1600/susamay.jpg

அத்துடன், 2011 மார்ச்சில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கொடுத்த தீர்ப்பின் விவரம். கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதியிட்ட நிதி அமைச்சகத்தின் ஆவணத்தையும் சாமி ஒப்படைத்தார். இந்த ஆவணத்தில் தான், "சிதம்பரம் வலியுறுத்தியிருந்தால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏலமுறையை கடைபிடித்திருக்கலாம்' என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல், "2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான முடிவுகளை நிதி அமைச்சரும் தொலைத் தொடர்பு அமைச்சரும் இணைந்து தான் எடுக்க வேண்டும்' என்றும், 2003ம் ஆண்டு அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. அதற்கான ஆதாரத்தையும் சாமி சமர்ப்பித்தார்.


சி.பி - அசிஸ்டெண்ட் மேனேஜர் தப்பு செய்யறார்னா மேனேஜர் சரி இல்லைன்னு அர்த்தம் .. மேனேஜர் செயல்பாட்டால கம்பெனிக்கு நஷ்டம் வருதுன்னா அதுக்கு மேனேஜரை நியமித்த & மேனேஜரை கண்காணீக்க வேண்டிய  ஜி எம் பொறுப்பேத்துக்கனும்.. மேனேஜர் - சிதம்பரம், ஜி எம் - மன்மோகன்சிங்க்

சிதம்பரத்திற்கு பங்கு:அனைத்து ஆதாரத்தையும் சமர்ப்பித்த சாமி கோர்ட்டில் கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராஜா மீது இரண்டு முக்கிய குற்றச்சாட்டு உள்ளது. ஒன்று, 2008ல் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரத்திற்கு, 2001ம் ஆண்டு விலையை நிர்ணயித்தது. இரண்டாவது, ஸ்வான் மற்றும் யூனிடெக் கம்பெனிகளின் பங்குகளை வெளிநாட்டு கம்பெனிகளான எடிசாலட் மற்றும் டெலினார் கம்பெனிகளுக்கு விற்பனை செய்ய அனுமதித்தது. இந்த இரண்டு குற்றங்களிலும் அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு பங்கு இருக்கிறது. இங்கே சமர்ப்பித்த ஆதாரங்கள் அதை உறுதி செய்கின்றன.

எனவே, இந்த ஆதாரங்களின் அடிப்படையில், ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது போல், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிதம்பரம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எடிசாலட் மற்றும் டெலினார் கம்பெனிகள் உள்துறை அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டவை. இந்த விவரங்களை சிதம்பரம், ராஜாவிடம் தெரிவிக்கவில்லை. எனவே, தேசப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சிதம்பரம் மீது, "நம்பிக்கை சதி மோசடி' யின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜா மட்டும் அல்லாமல், அவரோடு சேர்த்து சிதம்பரத்திற்கும் பங்கு இருக்கிறது.இவ்வாறு சுப்ரமணியசாமி கூறினார்.

சி.பி - போற போக்கை பார்த்தா ஆ ராசாவை விட ப சிதம்பரத்துக்குத்தான் அதிக பங்கு இருக்கும் போல தெரிதே? சிதம்பர ரகசியம் எப்போ வெளில வரப்போகுதோ? சிதம்பரம் எப்போ உள்ளே போகப்போறாரோ? வெயிட்டிங்க்



அதிகாரப்பூர்வ ஆவணங்கள்:இதைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் சிலவற்றையும் சமர்ப்பிக்கும்படி கூறினார். அதை ஏற்பதாக சாமி பதிலளித்தார். அத்துடன், இந்த ஆதாரங்கள் தொடர்பான விசாரணையை ஜனவரி 21க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

சி.பி - இந்த மாதிரி பிரச்சனையான கேஸ்களை முடிஞ்ச வரை சீக்கிரமா விசாரிச்சு தீர்ப்பு சொல்லிடறது நாட்டுக்கு நல்லது.. அப்புரம் சாதிக்பாட்சா மாதிரி சாட்சி தற்கொலை செஞ்சுக்குவார், அல்லது கொலை செய்யப்படுவார்..

PLAYERS - அபிஷேக் -பிபாஸாபாஷா பாலிவுட் ஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்

http://bollywoodtadka.com/wp-content/uploads/2011/12/players-new-poster.jpg

THE ITALIAN JOB (2003) என்ற ஆங்கிலப்படத்தின்  தழுவல் தான் அபிஷேக் நடிச்ச ப்ளேயர்ஸ் படக்கதை, அது போக OCEAN ELEVEN படத்தை அங்கங்கே ஞாபகப்படுத்துது, அது பார்க்காதவங்களுக்கு மங்காத்தா நினைவு வரும்.. படத்தோட ரெண்டே பிளஸ் இதுவரை யாருமே போகாத வெர்ஜின் ப்ளேசஸ் ( லொக்கேஷன் செலக்‌ஷன்ஸ் இன் நியூ ) பிபாஸா பாஸா,சோனம் கபூர் கிளாமர் ..

மணிரத்னத்தின் திருடா திருடா படத்துல ஒரு ட்ரங்க் நிறைய கோடிக்கணக்கில் பணம் ஒரே இடத்துல பிரமிப்பா பார்த்தமே அதே போல். இதுல 10,000 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் ( கோல்டு பிஸ்ட்கெட்).. அதை ஆட்டையை  போட அபிஷேக் & கோ போடற திட்டமும், ஸ்டைலிஸான ஒளிப்பதிவும்  படத்தை போர் அடிக்காம கொண்டு போகுது..

ஓடும் ரயில்ல 10 நிமிஷ கேப்பில் அதுல இருக்கற கோல்டு பிஸ்கெட்டை அபேஸ் பண்ணனும். அதுக்கு அபிஷேக் தன் கூட்டாளிகளா சிலரை செலக்ட் பண்ணிக்கறார்.. வெடிகுண்டு ஸ்பெஷலிஸ்ட் சிகந்தர் கர், குறி பார்த்து ஷூட் பண்ணுவதில்,மேஜிக்கில்  கேடியான பாபி தியோல், ஆட்டோ மெக்கானிஸத்தில் அலப்பறை செய்யும்  ஜானி லீவர், மேக்கப் ஸ்பெஷலிஸ்ட் ஓமி வைத்யா ஆகிய கில்லாடி கேடிகளை பார்ட்னரா சேர்த்துக்கறார்.

சோனம் கபூர் தன் அப்பாவை கொலை செஞ்சவனை பழி வாங்க கொலையாளியை தேடறவர். அவர் படத்தோட செகண்ட் ஆஃப்ல அபிஷேக் கூட சேர்ந்துக்கறார் ( முதல் பாதில 2 சீன் மட்டும் வர்றார்),அவர் கம்ப்யூட்டர்ல எதையும் ஹேக் பண்ணும் நாலெட்ஜ் உள்ளவர்..

ஓப்பனிங்க் ஷாட்ல ஒரு நகைக்கடை எக்ஸிபிஷன்ல அபிஷேக் வைர நெக்லஸை அபேஸ் செய்யும் அமர்த்தலான சீனோடு குதூகலமாய் படம் துவங்குது.. அப்புறம் போகப்போக எதிர்பார்க்கப்பட்ட ஃபார்முலாவில் கதை ஒரே மாதிரி மூவ் ஆகுது..



http://cdn.wewomentoday.com/wp-content/uploads/2012/01/Players-movie-Sonam-Kapoor-hot-picture.jpg

அபிஷேக் இளம்பெண்கள் விரும்பும் ஆகிருதியான தோற்றம், 6 அடி உயரம், அலட்டிக்கொள்ளாத முகம் என பர்சனாலிட்டியாக இருந்தாலும்  அண்ணனுக்கு நடிப்பு சரியா வர்லையே? ,மங்காத்தா, பில்லால தல காட்டிய கம்பீரத்துல பாதி கூட இவரால காட்ட முடியல.. எல்லா சீனுக்கும் ஒரே மாதிரி முக பாவனை.. அப்பா அமிதாப் கிட்டே இருந்து கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. 

பிபாஸா பாஸூ இவர் நடிப்பை பற்றி யாரும் கவலைப்படலை.. ஒரு சீனில் ஸ்விம்மிங்க் பூலில்  சிங்கிள் பீஸ் டிரஸ்ஸில் ஹீரோவை எகத்தாளமாய் வரவேற்கும் அந்த ஒரே சீனில் ஸ்கோர் பண்ணிடறார்.. ரம்பா பார்த்தால் பொறாமைப்படுவார்.. அழகிய கால்கள்

சோனம் கபூர் க்கு நடிப்பு சுமாரா வருது.. அவர் ஒரு சீன்ல வில்லனோட ஆட்கள்ட்ட ஹாலிவுட் வில்லன் மாதிரி நடு விரலை காட்டி கிண்டல் பண்றதெல்லாம் ஓவர்.. மாடர்னா, வித்தியாசமா காட்டனும்கறதுக்காக இப்போவெல்லாம் பெண்களை ஓவர் அலப்பறை செய்வது மாதிரி காட்றது ஃபேஷன் ஆகிடுச்சு.. அப்போதான் தியேட்டர்ல ஆண்களோட கை தட்டல் கிடைக்கும்னு நினைக்கறாங்க போல..




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8pct2DPG08xSsBsTLi8FFoRvq7BAmIaYQfbKLY7Wl2Vs5kjWnR6b9c6lGA_ioHjYwYPz7fnorV94AuNo95NSv-hrofo3PYLL1m0yMTUbjfqEk1WY3BJR0EQOvZ2LYlNYUUHaAIcVh9jVf/s550/sonam_kapoor_players_movie_wallpaper-2012.jpg
மனம் கவர்ந்த வசனங்கள்

1. என் கணவர்ட்ட எவ்ளவ் பணம் இருக்கும்னு நினைக்கறே?

தெரிலங்க, ஸ்விம்மிங்க் பூல்ல இருக்கற தண்ணியை கூட அளந்துடலாம்,ஆனா உங்க கணவர்ட்ட இருக்கற பணத்தை எண்ணிட முடியுமா?

2. நாம ஜெயிச்சுட்டோம், இனியாவது நீங்க வாயைத்திறந்து ஏதாவது பேசுவீங்களா? இல்ல, சைலண்ட் மொடுல தான் இருப்பீங்களா?

3.  நீங்க தான் இந்த உலகத்தின்  பெஸ்ட் டீம்னு சொன்னீங்க ,உங்களையே நாங்க ஜெயிச்சுட்டோம். அப்போ நாங்க யாரு?

4.  ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு முடிவு வந்தே தீரும்.. ( ஜெ சசிகலாவை அதிரடியா நீக்க முடிவு எடுத்தாரே அந்த ரகசியத்துக்கு மட்டும் முடிவே வர மாட்டேங்குதே/)

5. அடுத்தவன் பொண்டாட்டியை அளவுக்கதிகமா வர்ணிக்கறவங்க தன் மனைவியை கண்டுக்காம இருக்கறது ஏனோ?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqCXQcQoi_QsTriDiufPA3RWtHO7qJni99YYM5JTt-bf46I_gZBWE0mptkXhNbDUZegsQoSapG9aGItXc97nKa99ffFiX0qagqfw_cN4btOq3S6fO9-YQLdufXzwgr9vDdr_Kd81QZ-Ef8/s550/sonam_kapoor_glamour_in_players.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. திரையில் படம் நெடுக பிரம்மாண்டம்.. பெரும்பாலான காட்சிகள் ஏரியல் வியூ என சொல்லப்படும்  ஹெலி காப்டர் ஷாட்டாக இருப்பது செம பிளஸ்.. ஆம்ஸ்டர்டாம்,ரஷ்யா-ஷிட்னி, என ஏகப்பட்ட லொக்கேஷன்கள்  கண்ணுக்கு குளுமையான ஒளிப்பதிவில்..

2. அனைத்து நடிகர்களின் ஆடை வடிவமைப்பு கன கச்சிதம்.. பிபாஸா பாஸு, சோனம் கபூர் இருவரையும் சம்பளம் குடுத்த அளவு யூஸ் பண்ணிக்கிட்டது..

3. படத்தின் முக்கிய காட்சிகளான ரயில் கொள்ளை, 3 கார்கள் தங்கத்துடன் எஸ் ஆகும் சீன்கள் பரபரப்பு குறையாமல் படமாக்கப்பட்டது..



http://youngindiainformation.com/wp-content/uploads/2011/12/Players-movie-wallpaper.jpg

இயக்குநர் கவனிக்கத்தவறிய லாஜிக் மிஸ்டேக்ஸ்..

1.  ஓப்பனிங்க்‌ஷாட்ல ஹீரோயின் கவுனுக்குள் ஹீரோ கொள்ளை அடிச்ச நகையை போட்டுட்டு எஸ் ஆகறார்.. பொதுவா இந்த மாதிரி கொள்ளை நடந்தா உடனே அங்கே இருந்தவங்களை செக் பண்ணூவாங்க.. கோடிக்கணக்கான நகை கொள்ளை போயும் எந்த செக்கிங்கும் இல்லாம ஹீரோயின் அசால்ட்டா எஸ் ஆவது எப்படி?

2. படத்தில் 3 காட்சிகளில் ஹீரோயின் செம ஸ்பீடாக டைப் அடிக்கும் காட்சிகள் வருது.. பொதுவா வேகமா டைப் அடிக்கும் டைப்பிஸ்ட்கள் தன் வேகத்திற்கு இடையூறாக இருக்கக்கூடாதுன்னு நகங்களை கட் பண்ணி வெச்சுக்குவாங்க.. ஆனா க்ளோசப்ல ஹீரோயின் டைப் அடிக்கறதை காட்றப்ப அவர் நீளமா நகம் வெச்சிருக்காரு.

3.  என்னதான் படத்தோட டைரக்டருக்கு 16 வயதினிலே பட கமல் கெட்டப் பிடிச்சிருந்தாலும் ஹீரோயினுக்கு அதே மாதிரி கோவணத்தை மாட்டி விட்டு விழாவில் கலந்துக்கறதா காட்றது ரொம்ப ஓவர்.. கண்ணியமாக ஆடை வடிவமைப்பு ஸ்டைலிஸா காட்டி இருக்கலாம்.

4. ஹீரோயின் ஒரு ஷாட்ல  ஒயினில் மயக்க மருந்து கலக்கறாரு.. தன் வலது கை விரலாலே கலக்கறாரு.. ஏன்? ஸ்பூன் இல்லையா?




http://www.movieplaner.com/wp-content/uploads/2011/10/players-movie-sonam-kapoor-pictures.jpg

5.  ஓஸன்ஸ் லெவன்  மேலும் மங்காத்தா படத்துல வர்ற கார் பஞ்சர் ஆகும் காட்சி அப்படியே சுட்டிருக்காங்க.. கொஞ்சம் மாற்றி இருக்கலாம்..

6.  க்ளைமாக்ஸ்க்கு முந்திய ரயில் ஃபைட்ல எல்லாத்தையும் வீடியோ பண்ணும் கேமரா சிஸ்டம் குளறு படி ஆகறதால ரயிலில் என்ன நடக்குதுன்னு ஹெட்குவாட்டர்ஸ்க்கு தெரியாம இருக்கு.. ஆனா ஹீரோ ஃபைட் போட்டு ஆளுங்களை மானாவாரியா ரயிலை விட்டு கடாசிடறாரு. அந்த அடியாளூங்க மேட்டரை செல் ஃபோன் மூலமா சொல்ல மாட்டாங்களா?

7.  கண்காணிப்பு கேமரா ரும்ல இருக்கா? இல்லையா?ன்னு ஹீரோ தேடறார். ஏன் அவ்லவ் கஷ்டம்? தன் செல்ஃபோன்ல  ஒரு அவுட் கோயிங்க் கால் போட்டாலே ர்ர்ர்ர்ர்னு ஒரு சத்தம் வருமே அதை வெச்சு கண்டு பிடிச்சிடலாமே?

8. ரூ 10000 கோடி மதிப்புள்ள தங்கத்தை வெறும் 3 தங்க கார்ல செஞ்சு சரி பண்ண முடியுமா? ஏன்னா சமீபத்துல ஈரோட்ல நடந்த கோல்டு பிளஸ் ஜூவல்லரி நடத்துன கோல்டு கார் எக்ஸிபிஷன்ல ஒரு தங்க கார்  50 கிலோ தங்கத்துல செய்யப்பட்டதுன்னு சொல்றாங்க, அதிக பட்சம் 100 கிலோ தங்கம்னாலும்  3 கார்க்கு 300 கிலோ தங்கம் தானே வருது?அப்போ 30,000 பவுன்.. அதன் மதிப்பு சராசரியா பவுன் ரூ 25,000னாலும்  75 கோடி தானே வருது? கதைப்படி 10,000 கோடி மதிப்புள்ளதுன்னா 112 கார் வரனுமே?

9. கொள்ளை நடந்ததும் போலீஸ் எந்த இடத்திலும் செக் போஸ்ட் வைக்கலையா? அந்த 3 காரும் கேட்பார் இல்லாம போய்ட்டே இருக்கே?



http://heroinespicsx.files.wordpress.com/2010/06/bipasha-basu-hot-unseen-stunning-spicy-masala-wallpapers.jpg

சி.பி கமெண்ட் - படம் போர் அடிக்காம த்ரில்லிங்கா போகுது.. ஆக்‌ஷன் ரசிகர்கள் பார்க்கலாம்.. ஆனா ஆல்ரெடி மங்காத்தா, இத்தாலியன் ஜாப், ஓசன் லெவன் பார்த்தவங்க இதை பார்க்க தேவை இல்லை

ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் படம் பார்த்தேன்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVNx0KQZe3yZAQ_jdYFPMCyk1OWjys9qb1P80nd7Gidi94AgpUsENcgqMVtRzXqY2_SVB8_KkeuzfWbgsMnIOna0Cx1hJTikP7mXvUDh3GJZ4zpE_v3qpDxecykXR4B4R_fWH0Xsjsj2I/s1600/sonam_kapoor_players_movie-wallpaper.jpg

நவ நாகரீக பெண்ணின் கற்பும், இல்லற வாழ்வில் ஆணின் தன்மானமும் ( ஜோக்ஸ் ,ட்வீட்ஸ்)

http://moviegalleri.net/wp-content/gallery/pooja-hegde-photo-shoot/pooja_hegde_hot_pics_1298.jpg

1. மாப்ளே, எதுக்காக என் பொண்ணை எழவே-ன்னு திட்னீங்க? 

மாமா, யூ ஆர் மிஸ்அண்டர்ஸ்டேண்டிங்க் மீ , என் காதல் இளவரசி அவ,சுருக்கமா செல்லமா இளவே என்றேன்

----------------------------

2. பிரதமர் பதவிக்காக யாத்திரை மேற்கொள்ளவில்லை-அத்வானி# கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்பதற்காக நான் நயன் தாராவை காதலிக்க வில்லை - பிரபுதேவா

--------------------------
3. அன்பே! ஆருயிரே! 


யோவ், உன்னோட உயிர்தான்யா நான், அதுக்குள்ள என்ன சந்தேகம்?ஆரோட உயிர்னு ஒரு கேள்வி? # காதல் கலாட்டா கடலை

-----------------------------
4.  கவிதை எழுதறவங்க எல்லாம் அன்பேன்னு ஆரம்பிக்கிறாங்க. நிசத்துல எப்படி சொல்லுவாங்க?

அன்புக்கரசியை அன்பேனுதானே கூப்பிட முடியும்?

------------------------
5. பொண்ணு பார்க்கப்போனியே? பொண்ணு எப்படி? 

சினிமாப்பைத்திய மாப்ளை  - ஒரு தடவை பார்க்கலாம்

------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLI43RFEeuYnml9MUpyI63aT0OMYkSvMtZwAk674LJ4Vi7A1x6DOZf2VTD7tn3Phiq7WzEQeWcLn6okw2_9raHngLd-tWWV-hKCazBXiJWXjByKNb6fdXPM4AZdNXu6KkqFWRTmuOpIOE/
6.ஐஸ்வர்யா ஒரு ஜீனியஸ்: தனுஷ்# இல்லையே, பிரெக்னென்ஸ்னு சொன்னாங்க?

-------------------------

7. பேராசை கொள்ளாத பெண்கள் இல்லை,பேரன்பு இல்லாத ஆண்கள் இல்லை!!

----------------------------

8. சார், நீங்க உங்க மனைவிக்கு பயந்தவரா?

ஆமா, நீங்க எப்படி? மத்தவங்க மனைவிக்கும் பயப்படுவீங்களா?

--------------------------------

9. டெயிலி காலைல 9 மணி வரை நீங்க யார்கிட்டேயும் பேச மாட்டேங்கறேங்களே? ஏன்?

என்னா கேள்வி இது ராஸ்கல்?என் மனைவி அதுக்குப்பின் தான் ஆஃபீஸ் போவா

-----------------------------------

10. டியர்,உன்னோட டி என் ஏ வை தூண்டிவிட்டா என்னாகும்?

டேய் நாயே லிமிட்டை தாண்டி விட்டா என்னாகும்னு சொல்லனுமா? கையை எட்றா கபோதி # காதல் அறிவு

---------------------------

http://www.bollywoodplunge.com/wp-content/uploads/2011/10/sonakshi-sinha-walpaper.jpg

11. போதி தர்மரா நடிக்க சூர்யா, கமல், விக்ரம்னு 3 சாய்ஸ் உண்டு, ஆனா போதை வர்மரா நடிக்க கேப்டனை விட்டா ஆள் ஏது? # கண்டு பிடிச்சிங்க்

-------------------------

12. உங்க படம் காலைலதானே ரிலீஸ் ஆச்சு,அதுக்குள்ள சூப்பர் ஹிட்னு எப்டி சொல்றீங்க?

நான் சொல்லலை, படத்தை அதுக்குள்ள ஒளிபரப்புன டிவி சொல்லுச்சு

-------------------------------------

13. டியர், எதுக்காக என் இதயத்தை திருடுனே?

டேய், லூஸ், அப்பப்ப உன் பர்ஸ்ல இருந்து அஞ்சு , பத்து திருடுவேன், அவ்ளவ் தான்


-----------------------------------------

14. அத்தான்,எனக்காக சமையல் பண்றப்ப நீங்க எதை யூஸ் பண்ணுவீங்க?

இதென்ன கேள்வி? நம்ம வீட்ல இருக்கறது ஒரே ஒரு கேஸ் அடுப்புதானே? அதைத்தான்

------------------------------

15. முக நக நட்பது நட்பன்று - வள்ளுவர் .# மு. க,தி மு க சேர்ப்பது கூட்டணியன்று! - சோனியா

-----------------------------

http://moviestem.com/wp-content/gallery/pooja-umashankar/pooja_umashankar%20(2).jpg

16. உனக்குப்பார்த்திருக்கற பொண்ணு பயங்கர அழகி...

அய்யய்யோ, பார்க்கறதுக்கு அவ்ளவ் பயமா இருக்குமா? ,அப்போ வேணாம்..

---------------------------

17. நினைவாற்றல் உள்ள அனைவருக்கும் நினைத்துப்பார்ப்பது எளிதாக இருக்கிறது, இதயம் உள்ளவர்களுக்கு மறப்பது அரிதாக இருக்கிறது

------------------------------

18. என் இதயம் 20 % ரத்தத்தாலும் 80 % உன் அன்பாலும் ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது

-

----------------------------------

19. மனைவியின் ஊடலை சமாதானப்படுத்தும் முயற்சியில் கணவன் ஒரு அடி எடுத்து  முன்னே வைக்கையில் மனைவி 4 அடி வீம்புடன் பின்னேறுகிறாள்

-------------------------

20. ஒரு பெண்ணின் கற்பு பற்றி தோண்டிப்பார்ப்பதும் தவறு, ஒரு ஆணின் தன்மானத்தை தூண்டிப்பார்ப்பதும் தவறு

--------------------------------