Sunday, February 05, 2012

மகளிர் அணித்தலைவி ரத்னாவோட வாழ்க்கைல தலைவர் .... (joks)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEij8lH-nSbqEY0XsUK_OrRsdCi8FcB7dXoCxOLF9UsY_4wT4UDgHOLJoDPTjJmfCwvBt2GoGH4xrAZPde7BQWbZ7rIphMjrftY49pApyx5lCkTIOm30fUEKVMyp8IAZofY_6rq3EzqsZxo/s1600/Anuya10.jpg


1. உங்க பாடல்கள் எல்லாமே செம ஹாட்டா இருக்கு. அது எப்படி?

பல ஆல்வங்கள்ல இருந்து ‘சுட்டு’ தர்றேனே...  அதான்.

----------------------------------------

2. இளைய தலை முறைக்கு வழி விடுவோம்-னு தலைவர் சொல்றாரே?

அவரோட பேரன் ரெடி ஆகிட்டான்-னு அர்த்தம்.

---------------------------------------

3. மாதர் சங்கத்த் தலைவியை மேரேஜ் பண்ணிக்கிட்டது தப்பா போச்சு

ஏன்?

ஆண் குழந்தை எனக்கு பிடிக்கு-னு சொன்னாக் கூட ஆணாதிக்கவாதியா!-னு கேட்கறா!

-----------------------------------------

4. தலைவர் எட்டாத உயரத்தை அடையப் போறார்-னு எப்படி சொல்றே?

பொதுக்குழு நடக்கறது 8-வது மாடில. இப்போ அவரு 7-வது மாடி போயிட்டாரு. அடுத்து 8-வது தானே?

----------------------------------------

5. தலைவருக்கு பிடிச்சது இந்திய நாடா? வெளிநாடா?

எந்த நாடா இருந்தாலும் தலைவர் கை போகும் திசை அந்த நாட்டுப் பெண்ணின் சுடிதார் நாடா.

----------------------------------------

6. தலைவர் டயட்-ல இருக்கறது வேஸ்ட்.

ஏன்?

வாரத்துக்கு 6 நாள் டயட்ல இருக்காரு. எல்லாத்துக்கும் சேர்த்து வெச்சு சண்டே செம கட்டு கட்டிடறாரே?

--------------------------------------

7. என் ஆளுக்கு ‘ஆண்’ என்றாலே அலர்ஜி.

நிஜமாவா?

ஆமா! பயத்துல, வலி-ல கத்தறப்பக்கூட ‘ஆ’-னு கத்தமாட்டா! ‘பெ’, ‘பே’-னு தான் கத்துவா!

-------------------------------------

8. மோசமான படைப்புகளை நாம குப்பைல போடனும்.

சார். எங்கெங்கிருந்தோ எழுத்தாளர்கள் எழுதுவாங்க! அதை இங்கே இருக்கற நாம எப்படி குப்பைல போடறது?

-------------------------------------


http://4.bp.blogspot.com/-_WjlsPzn7o8/TezrZPK8QvI/AAAAAAAAE_g/GYQUSl5rROw/s1600/Anuya+hot1.jpg

9. மகளிர் அணித்தலைவி ரத்னாவோட வாழ்க்கைல தலைவர் விளையாடிட்டாராம்.

ஆனா இதுக்காக எல்லாம் கேல் ரத்னா விருது எதிரிபார்த்தா எப்பிடி?

----------------------------------

10. கட்சிக்காக எதை வேணும்னாலும் தியாகம் செய்வேன்னு சொன்னது உண்மைதான். அதுக்காக அடிப்படை உறுப்பினர் பதவி வரை தியாகம் செய்யச் சொன்னா எப்படி தலைவரே?

--------------------------------------

11. ஆத்துல குளிச்சா 10 நிமிஷத்துல வெளில வந்துடுவேன்.

ஏன்?

அரை மணி நேரம் இருந்தா, வெளில வந்ததும் “உடம்பு ஊறிடுச்சு போல”-னு யாராவது கேட்டுட்டா?

----------------------------------------

12. உன் சம்சாரம் சமையல்ல வீக்கா?

எப்படி தெரியும்?

சம்சாரம் என்பது வீணை! சமையல் செய்யறது எல்லாம் வீணே!-னு பாடறீங்களே?

--------------------------------------

13. சம்பளம் உயர்த்தப்பட்ட மேட்டரை யார் கிட்டயும் சொல்லலையே, ஏன்?

ஃபிரண்ட்ஸ் கிட்டே சொன்னா பார்ட்டி கேப்பாங்க. மனைவிட்ட சொன்னா நகை கேப்பா. ஹவுஸ் ஓனர்ட்ட சொன்னா வாடகை ஏத்திடுவாரு.

--------------------------------------

14. தலைவர் பலி கெடா ஆகிட்டார்.

அடடா! வழக்கமா அவர் பழிவாங்கற கெடாவாத்தானே இருப்பாரு?

---------------------------------------

15. ஆண்கள் 3 வகையா? எப்படி?

1. திருமணம் ஆனவங்க
2. திருமணம் ஆகாதவங்க
3. திருமணம் ‘ஆகாத’வங்க (பிடிக்காது-னு சொல்றவங்க)

--------------------------------

`16. உங்க வீட்ல டெய்லி காலைல இட்லி, நைட் உப்புமா... தானா? ஏன்?

காலைல மீந்து போன இட்லியை உப்புமா ஆக்கிடலாம்

------------------------


http://gallery.southdreamz.com/cache/movie-gallery/madurai-sambavam/madurai-sambavam-harikumar-anuya-karthika-10_720_southdreamz.jpg