Thursday, October 20, 2011

விஜய் -ன் வேலாயுதம் விண்ணைத்தொடும் வெற்றியா? மண்ணைத்தொடும் தோல்வியா? காமெடி கும்மி கலாட்டா

http://www.boxoffice9.com/gallery/var/albums/Tamil-Movie-Gallery/Tamil-Movie-Stills/Velayudham-Stills,Photos,Pics/velayutham%20latest%20stills%20201100-9.jpg?m=1315983965

1. வேலாயுதத்துக்கு பெரிய தியேட்டர் வேணும் - கொடி பிடிக்கும் விஜய் ரசிகர்கள் # இனி விஜய்க்கு ஜோடியாக பெரிய நடிகைகள் தான் வேண்டும் லைக் நமீதா


----------------------------------

2. வேலாயுதம் படத்தில் விஜய் பால்காரராக வருகிறார் # அப்போ புரொடியூசருக்கும், டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்க்கும் பால் ஊத்திடுவாரு?

------------------------------

3. நான் எடுத்த படங்களிலேயே வேலாயுதம் தான் உச்சம் - இயக்குநர் எம் ராஜா # எடுத்த படங்களிலேயே கெடுத்த படம் இதுதான்னு சொல்லுங்க..

-----------------------------

4. வேலாயுதம் ஒரு தாவரவியல் சப்ஜெக்ட் படம்னு எப்படி சொல்றே? 

விவேகா எழுதுன முளைச்சு மூணு இலை விடலை பாட்டு செம ஹிட் ஆச்சே அதை வெச்சுத்தான்.

--------------------------------
5. உலகம் 2012இல் அழியப்போகிறதாம் 


,அப்போ வேலாயுதம் ஸ்லோ பாய்சனா?

-----------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgq6kWrRMgaMhwTB2Jdaiq9PZ85DK-VtZ7LB8X1Xt8ScOe9eb0YxFLOsXxc119uT9HLVk7Crr6YaqTtvIBoYHp8epxizTRNRyITtVdQuk3Y5cst6RnZMVaIqAyNkEFvUv-Nc8WPQ3NlAQ/s1600/Velayutham-Movie-latest-Stills.jpg

6. வேலாயுதம் இதுவரை தமிழில் வெளிவராத கதை - விஜய் 


# தெரியும், தெலுங்குக்கதையை அப்படியே தமிழ் ஜெராக்ஸ் பண்ணிட்டு.. ராஸ்கல்ஸ்

---------------------------------------

7.  வேலாயுதம்-ல் எந்த அளவு இறங்கி நடிக்க முடியுமோ அந்த அளவு  இறங்கி நடிச்சிருக்கேன் - விஜய் # அப்போ அண்டர்கிரவுண்ட்லதான் ஃபுல் படமுமா?

------------------------------

8.வேலாயுதம் படத்துக்கு சுமாரானா தியேட்டர்கள் தானா? ரசிகர்கள் கொதிப்பு # குமாரு, சுமாரான படத்துக்கு  சுமாரான தியேட்டர்தான் ஒதுக்கமுடியும்

------------------------

9. இளைய தளபதி 7 எழுத்து, வேலாயுதம் 5  எழுத்து,தீபாவளி 4 எழுத்து, விஜய் 3  எழுத்து # எல்லாம் நம்ம தலை  எழுத்து

---------------------------

10. உலகம் அழியப்போகுதாமே?

விஜய் - அய்யய்யோ,அதுக்குள்ள ஒரு தடவை ஆட்சியைப்பிடிச்சிடனும்

----------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkBNrrS_Wdlop264f1LdOnu6QIbLOHdykUoFzeKLorPKhOUD16r_9H2XVnaOCbyaSy7nDWXa9AuRy-WO-MBzPOXt2uvHg-CSnixS8xaQJxagiuEy_HihzJtVM3q9LdvZnLbfkvfh0IljY/s1600/velayutham_movie_latest_stills_01.jpg
11. கொலைமாமணி பட்டம் உங்களுக்கு எப்படி கிடைச்சதுங்க்ணா?

விஜய் - தொடர்ந்து 6 டப்பா படம் குடுத்தேன்,ஆட்டோமேட்டிக்கா விருது வீடு தேடி ஆட்டோல

-------------------------

12. கில்லி எடுத்த தரணியின் அடுத்த சூப்பர் ஹிட் தான் ஒஸ்தி - சிம்பு  # குப்புறப்படுத்த குருவி கூட தரணி டைரக்‌ஷன் தான், லேட்டஸ்ட் அப்டேட்

--------------------------

13. டைரக்டர் - கதைப்படி ஹீரோவுக்கு மெம்மரி லாஸ் ஆகுது...

நிருபர் - ஜாதகப்படி புரொடியூசருக்கு அவரோட சொத்து லாஸ் ஆகுதா?

--------------------------

14.  நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன்,இதுல நீ வேற காட்டு காட்டுன்னு சொல்றே, காட்டாம இருந்தா நல்லாருக்குமா? - விஜய் பஞ்ச் டயலாக்

அடடா, ஹீரோயின் ஹன்சிகா மோத்வானி இதை பேசி இருந்தா இன்னும் கில்மாவா இருந்திருக்குமே?

--------------------------------

15. வேலாயுதம்ல ஒரு ஃபைட் சீனுக்காக வெற்றுடம்புடன் விஜய் # அய்யய்யோ, டாப்லெஸ் சீனா? எப்டி யூ சர்ட்டிஃபிகேட் கிடைச்சது? மாதர் சங்கங்களே!பாரீர்

-------------------------------

http://city-blogger.com/wp-content/uploads/2011/10/Velayutham-2011-Tamil-Movie-Stills.jpg

16. வேலாயுதம் படத்துல ஹீரோவுக்கு 2 ஹீரோயின்ஸ், ஜெனிலியா, ஹன்சிகா # ஆனா வில்லன் ஒருத்தர்தான், அது யார்னு நான் சொல்ல மாட்டேன், பஞ்ச் டயலாக்கர்

----------------------------------

17. நம்ம படத்தை பற்றி நாமளே பேசக்கூடாதுங்க்ணா.. விஜய் #


சரி, SMS ஆவது அனுப்புங்க, உங்க பட நியூஸ் எல்லாம் SMS ல தான் செம இண்ட்ரஸ்ட்டிங்க்.. 

-----------------------------------