Showing posts with label இரும்புத்திரை - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label இரும்புத்திரை - சினிமா விமர்சனம். Show all posts

Saturday, May 12, 2018

இரும்புத்திரை - சினிமா விமர்சனம்

Image result for irumbu thirai wall posters
ஹீரோ ஒரு மிலிட்ரி ஆஃபீசர், அவர் அடிக்கடி எதுனா என்கவுண்ட்டர் போட்டு சஸ்பென்சன் ஆர்டர் வாங்கறவரு. ஹீரோவோட தங்கைக்கு திருமணம், செலவுக்கு 10 லட்சம் தேவை. 4 லட்சம் அப்பாகிட்டே இருக்கு, 6 லட்சம் ஹீரோ ரெடி பண்ணனும், சஸ்பென்சன்ல இருப்பதால் லோன் கிடைக்கலை.அப்பா பேரில் பர்சனல் லோன் வாங்க முடியாது, ஏன்னா அவருக்கு 60 வயசு , 50 வயசுக்கு மேல இருந்தா பேங்க்ல பர்சனல் லோன் கிடைக்காது, அதனால ஒரு ஃபோர்ஜரி கும்பல் அட்வைஸ்படி டம்மி அட்ரஸ்ல ஒரு கடை நடத்துவதா கணக்கு காட்டி ஃபோர்ஜரியா லோன் வாங்கறாங்க

 அந்த லோன் அமவுண்ட்டை ஒரு கும்பல் ஆட்டையைப்போட்டுடுது. இதை ஹீரோ எப்படி மீட்கறார்  அந்த ஃபோர்ஜெரி கும்பலை எப்படி பிடிக்கறார்? என்பதே கதை


 ஹீரோவா புரட்சித்தளபதி விஷால். இவரோட கேரியர்ல ஆம்பள மாதிரி படங்களை தவிர்த்தா முன்னேறலாம், பாண்டிய நாடு , துப்பறிவாளன் போன்ற படங்களே இவருக்கு நல்ல பெர் கொடுக்கும்.


மிலிட்ரிமேனாக இவர் வருவது ஓக்கெ. பாடி லேங்குவேஜ் எப்டியோ ஜிம் பாடி ஃபிட்.43 வயசானாலும்  அது வெளியே தெரியாத மாதிரி கட்டுமஸ்தான  உடம்பு, வில்லனுடனான வாக்குவாதம் , க்ளைமாக்ஸ் ஃபைட் அனல் பறக்குது, நயகியுடனான ரொமான்ஸ் ஓக்கே


 நாயகியா சமந்தா. தமிழ் சினிமான்னாலே லைலா, ஜெனிலியாக்கள் மாதிரி லூஸ் தனமான நாயகிதான் என்ற நியதியை மாற்றி கேசுவலா வர்றார், இவருக்கு ஒரு டூயட் கூட இல்லை என்பது ஏமாற்றம், 40 லட்சம் ரூபா சம்பளம் கொடுத்துட்டு நல்லா யூஸ் பண்ணீக்கலை டைரக்டர்


வில்லனா \ஆக்சன் கிங்  அர்ஜூன் அதகளம் பண்ணி இருக்கார் , இடைவேளை பிளாக் , க்ளைமெக்ஸ் ஃபைட் எல்லாம் அனாயசம்

 ரோபோ ஷங்கர் காமெடிக்கு. வல்கரா 2 டபுள் மீனிங் டயலாக் பேசி கடுபேத்தறார் ( உதா , விஷாலை பார்த்து = இவனுக்கு காலே இவ்ளோ பெருசா இருகே.....) ரோபோ ஷங்கருக்கு செட் ஆவது “ விடிகாலை 6 மணீ இருக்கும் கோழி கொக்கரக்கோனு கூவுச்சு ரக காமெடி தான்


டெல்லி கணெஷ் அப்பாவா அமைதியா நடிச்சிருக்கார். 


ஒளிப்பதிவு , பின்னணி இசை பக்கா. வசனங்கள், ஆக்சன் காட்சிகள் படத்துக்கு பெரிய பலம்


 புதுமுக இயக்குநர் முதல் படத்துலயே சமகால சமூக பிரச்சனையை சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்தமாய் படம் ஆக்கியதற்கு சபாஷ்Image result for samantha hot

நச் டயலாக்ஸ்


இன்னைக்கு இருக்கற டிஜிட்டல் உலகத்துல பிரைவசி க்கு இடமே இல்ல

உங்க போன் நெம்பர் எத்தனை பேருக்கு தெரியும்?னு நினைக்கறீங்க?

என்ன?ஒரு 25 பேர்..
30 லட்சம் பேர்க்கு தெரியும்


டாக்டர் பேரு ரதிதேவியா? ரொம்ப பழைய பீசா இருக்கும் போலயே?
பேரைப்பாத்தா பழைய கிராமபோன் மாதிரி இருக்கும்னு பாத்தா இன்ஸ்டாகிராம் மாதிரி இருக்கே?


காசில்லாதவன் 10 ரூபா க்கு டாப் அப் பண்ணா 3 ரூபா பிடிச்சுக்கறாங்க,காசு இருக்கறவன் 500 ரூ க்கு டாப் அப் பண்ணா புல் டாக் டைம் ,இது தான் உலகம் (ஜியோ சிம் ?)


5 மிலிட்ரி சரக்கு ஆர்மி ஆளுங்களுக்கு மட்டும்தான் கிடைக்கும்
நானும் ஆர்மி தான் ,எனக்கு கிடைக்கலையே? ஏன்?
நான் ஓவியா ஆர்மீ


விவசாயிகளுக்கு நாங்க பர்சனல் லோன் தர்றதில்ல
விவசாயிகளை நீங்க மனுசனாவே மதிக்கறதில்லையே?


ஊர் பூரா கடன் வாங்கறவனை ஊர்ல யாரும் மதிக்க மாட்டாங்க,ஏன்?சொந்தப்பிள்ளையே மதிக்க மாட்டான்


8  லோன் வசூல் பண்ற முறைல மட்டும் உங்க தப்பு இல்ல.சும்மா இருக்கறவனுக்கு போன் போட்டு லோன் வேணுமா?னு கேட்டு கேட்டு அவனை கடன்காரன் ஆக்கறதே பேங்க் காரன் தான்


நம்ம நாட்டுப்பொண்ணுங்களை லவ் பண்றது கஷ்டம் ,கல்யாணம் பண்றது ஈசி,பாரீன் பைண்ணுங்களை லவ் பண்றது ஈசி ,கல்யாணம் பண்றது கஷ்டம்


10 நீ போடற ஓட்டு யாருக்குப்போய் விழனும்னு தீர்மானிக்கறதே நான்தான்


11 இந்தக்கால திருடனுக்கு உன் வீட்டு சாவி தேவை இல்லை,உன்னைப்பத்தி ஒரு தகவல் போதும்,உதா ஆதார்Image result for samantha hot


தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


விஷால் க்கு ் ஸ்டூடியோக்ரீன் ஞானவேல்ராஜன் மீது ஏதோ கடுப்பு போல.ஒரு உள் குத்து டயலாக்


ஹீரோ மிலிட்ரி ஆபீசர் ,அவரு டென்ஷன் பார்ட்டி .கோபப்படாம 21 நாள் இருக்கனும் .இந்த கான்செப்ட் போனவாரம் தான் ல பாத்தோம்.இப்ப அதை "அட்லி" வேலை பாத்து ல சுட்டாச்

3 ஆன் லைன் பரிவர்த்தனை ,ஆண்ட்ராய்டு போன் இரண்டையும் தவிர்க்கனும் என்பதுதான் படத்தின் மெசேஜ்.அதான் பாஜக எதிர்க்குது போல

Image result for samantha hot


சபாஷ் டைரக்டர்


1    சினிமாத்தனம் இல்லாம திரைக்கதை, ஹீரோ வில்லன் காம்போ காட்சிகள்


2  நாயகி நல்ல ஃபிகரா அமைஞ்சும்  டூயட் காட்சிகள் வைக்காதது 


3   படம் முழுக்க ரசிகனை நிமிர்ந்து உட்கார வைக்கும்படி விறு விறு திரைக்கதை
Image result for samantha hot
லாஜிக் மிஸ்டேக்ஸ்   திரைக்கதையில் சில ஆலோசனைகள்

லாஜிக் மிஸ்டேக் 1 − மிலிட்ரி ஆபீசராக பணிபுரியும் ஹீரோ வீட்டுக்கு பணமே தராதவர்,கெட்ட பழக்கம் ஏதும் இல்லை.ஆனா சேமிப்பு 10 பைசா இல்லை.6 லட்சம் ரூபா க்கு லோன் போடறார்.3 வருசம் × 12 மாசம் × சம்பளம் =? எங்க போச்சு?


 லாஜிக் மிஸ்டேக் 2 = ஹீரோ தன் அப்பா பேரில் லோன் வாங்க பேங்க் போறப்ப 60 வயசானவருக்கு பர்சனல் லோன் தர மாட்டோமகறாங்க.ஏன்?ஹீரோவோட தங்கை (21) ,அம்மா (54) வாங்கலாமே?


லாஜிக் மிஸ்டேக் 3− மாப்ளை வீட்ல 40 பவுன் சீர் கேட்கறாங்க.ஒரு பவுன் 25000 னா அதே 10 லட்சம் ஆகுது.கல்யாணச்செலவு எவ்ளோ ஆகும்னு கேட்டப்ப 10 லட்சம் போதும்கறாரே,அது எப்டி?

லாஜிக் மிஸ்டேக் 4− ஏடிஎம் பின் நெம்பர் ஹீரோவின் அப்பாவுக்கு தரப்படுது்.ஹீரோவோ ,அவர் அப்பாவோ அந்த பின் நெம்பரை மாற்றவே இல்லையே ஏன்?விதிப்படி அனைவரும் பின் நெம்பரை மாத்தனுமில்ல?

லாஜிக் மிஸ்டேக் 5 - ஃபோர்ஜரி ஆள் டம்மி அட்ரஸ் தர சொல்லும்போது ஹீரோ தான் குடி இருக்கும் ஏரியாவில் ஒரு அட்ரஸ் தரலாமே? அப்போ தானே வெரிஃபிகேசனுக்கு பேங்க்காரங்க வரும்போது சமாளீக்க வசதியா இருக்கும் ?ஃபோர்ஜரி பார்ட்டி தர்ற எங்கேயோ இருக்கும் ஏரியா அட்ரஸ்க்கு எப்படி ஒத்துக்கறார்<லாஜிக் மிஸ்டேக் 6 − கரிசல் காட்டுப்பெண் போல் மாநிறமாக ஒப்பனை இல்லாத முகத்துடன் இருக்கும் ஹீரோவின் தங்கை தன் அப்பாவை ஹாஸ்பிடல்ல பாக்க வரும்போது பியூட்டி பார்லர் ல இருந்து வந்தவர் போல் செக்கச்சிவப்பாக இருப்பது எப்படி?


லாஜிக் மிஸ்டேக் 7− மிலிட்ரி ஆபீசர் 15 நாள் லீவ்ல இருக்கும்போது / சஸ்பென்சன்ல இருக்கும்போது லோன் பிராசஸ் பண்ணமுடியாதுனு ஒரு வசனம் வருது.அவர் மேல க்ரிமினல் கேஸ் இருந்தாதான் அது கரெக்ட்
Image result for samantha hot
சி.பி கமெண்ட் -இரும்புத்திரை− சுவராஸ்யமான திரைக்கதை.லட்டு மாதிரி சமந்தா இருந்தும் கதைக்கு சம்பந்தம் இல்லாம ஒரு டூயட் கூட இல்லை.ஏ ,பி செண்ட்டரில் ஹிட் ஆகிடும்.விகடன் 43 ,ரேட்டிங் 3/ 5


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு) = 43


குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்)  3.5 / 5


இரும்புத்திரை @ கேரளா −சங்கணாச்சேரி தன்யா


=======