Showing posts with label சமந்தா. Show all posts
Showing posts with label சமந்தா. Show all posts

Thursday, August 14, 2014

அஞ்சான்

அஞ்சான்- லிங்குசாமி இயக்கதில், சூர்யா நடிக்கும் படத்திற்கு அஞ்சான் என்று டைட்டில் வைத்துள்ளனர். சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். லிங்குசாமியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் முடிந்துள்ளது.

லிங்குசாமி டைரக்ஷனில் ஆனந்தம், சண்டக்கோழி படத்தில் சூர்யா நடிக்க வேண்டியது அது தவறி இப்போதுதான் இருவரும் இணைந்திருக்கிறார்கள்.

அஞ்சானில் சூர்யாவுக்கு இரண்டு கெட்அப் இருக்கிறது. இதற்காக 300 கெட்-அப்புகள் வரை சூர்யாவுக்கு போட்டுப் பார்த்து அதில் இரண்டு கெட்அப்புகளை தேர்வு செய்திருக்கிறார்கள்.

மும்பை ஷூட்டிங்கின்போது சமந்தாவுக்கு சரும நோய் பிரச்னையால் ஷூட்டிங் தடைபட்டது. அவர் நடிப்பாரா மாட்டாரா என்ற சந்தேகம் எழுந்தது. அவர்தான் நடிக்கிறார் என்பதை லிங்குசாமி உறுதியாக கூறியிருக்கிறார்.

அஞ்சான் என்றால் அஞ்சாதவன், எதற்கும் அஞ்சாதவன் என்று பொருள். சாப்ட்வேர் என்ஜினீயரான சூர்யா, வேலை நிமித்தமாக மும்பைக்குச் செல்லும்போது அங்கு ஒருவருக்கு நல்லது செய்வதற்காக ஒரு காரியத்தை செய்து விடுகிறார். அவர் செய்த காரியம், மும்பை நிழல் உலக தாதாக்களையே அதிர வைக்கிறது. தான் செய்த காரியத்தின் முக்கியத்தும் தெரியாமலேயே சென்னை திரும்புகிறார். சூர்யாவைத் தேடி அண்டர்கிரவுண்ட் தாதாக்கள் பல்வேறு வடிவங்களில் சென்னை வருகிறார்கள். அவர்கள் சூர்யாவை கண்டுபிடித்தார்களா, சூர்யா செய்த காரியம் என்ன என்பதுதான் கதை என்று இப்போதைக்கு கசிந்திருக்கிறது.

ஆகஸ்ட் மாதம் படம் ரிலீஸ்.

சூர்யா, சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கியுள்ள படம் ‘அஞ்சான்’.


லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸும் யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துளார். சூர்யா நடித்த திரைப்படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட பட்ஜெட்டில் இந்த திரைப்படம் தயாராகியுள்ளது. வரும் 15ஆம் தேதி அஞ்சான் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸாகிறது. இந்தப் படத்துக்கு தமிழகத்தில் மட்டும் 450 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.


சூர்யா இதுவரை நடித்துள்ள படங்களிலேயே இந்த படம் தான் அதிகபட்ச திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. சென்னையில் மட்டும் 37 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. சென்னையில் இப்படத்தின் விநியோகஸ்த உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கியுள்ளார். இந்நிலையில் நீண்ட காலமாகவே பட தயாரிப்பாளர்களுக்கு தொல்லை கொடுத்து வரும் திருட்டு DVD-களுக்கு அஞ்சான் படம் மூலம் ஒரு தீர்வு காணப்பட்டுள்ளது.


முழுக்க முழுக்க ரெட் டிராகனில் பதிவாகியுள்ள இப்படத்தை உலகம் முழுவதும் டிஜிட்டல் திரைகளில் மட்டுமே வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. இது படத்தின் தரத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல் திருட்டு DVD-கள் வடிவெடுக்கும் விதத்தையும் அதில் இருக்கும் ‘கோட்’களை கொண்டு தயாரிப்பாளருக்கு காட்டிக் கொடுத்து விடுமாம். தென்-இந்தியாவில் இம்முறையில் வெளியாகும் முதல் படம் அஞ்சான் என்பது குறிப்பிடத்தக்கது.


அஞ்சான் 2014ம் ஆண்டு திரைக்கு வர இருக்கும் தமிழ் திரைப்படமாகும். இது அதிரடி திகில் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை லிங்குசாமி இயக்க. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயரிக்கிறது. சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க, இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இவர்களுடன் வித்யூத் ஜம்வால், விவேக், மனோஜ் பாஜ்பாய் நடிகின்றனர். இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை ஆகஸ்ட் 15, 2014 வெளியிட திட்டமிட்டுள்ளனர். இத் திரைப்படம் தெலுங்கு மொழியில் "சிகந்தர்" எனும் பெயரில் வெளியாகவுள்ளாது

#‎அஞ்சான்‬ புதிய டிரைலர்: யூடியூப்பில் 3 நாளில் 10 ஆயிரம் பேர் பார்த்தனர்
‪#‎சூர்யா‬ - ‪#‎சமந்தா‬ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஞ்சான்’. லிங்குசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். யுடிவி நிறுவனமும், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியாகவிருக்கிறது. 


இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இப்படத்தின் புதிய டிரைலர் யூடியூப் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட மூன்று நாட்களில் 10 லட்சத்துக்கு அதிகமானோர் இந்த டிரைலரை பார்த்துள்ளனர். மேலும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 


இந்த டிரைலர் வெளியான மூன்று நாட்களிலேயே இவ்வளவு பெரிய வரவேற்பு பெற்றுள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இப்படமும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெறும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


சிங்கம் படத்திற்கு சூர்யா நடித்து வரும் படம் அஞ்சான். முதன்முறையாக லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கிறார்.


சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. அஞ்சான் படம் ஒரு அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகி இருக்கிறது. காக்க காக்க, சிங்கம், சிங்கம்2 படங்களின் வரிசையில் சூர்யாவின் ஆக்ஷ்ன் இந்தப் படத்தில் பெரிதும் பேசப்படுமாம். சூர்யா, இதில் ராஜூபாய், கிருஷ்ணா என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அதில் ஒருவேடம் தாதா கேரக்டர்.


படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் தற்போது படத்தின் நீளம் குறித்த தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். அஞ்சான் படம் மொத்தம் 2 மணி நேரம் 50 நிமிடம் ஓடும் வகையில் தயாராகிவுள்ளதாம். தற்போதெல்லாம் படத்தின் நீளம் அதிகம் இருப்பதை ரசிகர்கள் விரும்புவதில்லை. அதனால், படத்தின் நீளத்தை சராசரியாக இரண்டரை மணி நேரத்திற்கு மேல் வராமல் பார்த்துக்கொள்கிறார்கள்.


சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா படத்தின் நீளம் 170 நிமிடங்கள்தான். ஆனால் இந்தப் படத்தையே நீளம் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவித்தார்கள். அந்த வரிசையில் அஞ்சான் படமும் இணைந்திருப்பதால் படத்தின் நீளத்தை தற்போதே குறைப்பார்களா, அல்லது ரிலீஸானப் பிறகு வரும் ரிப்போர்ட்டை வைத்து குறைப்பார்களா என்பது தெரியவில்லை.


சூர்யா ரசிகர்கள் அனைவரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு தான் வெயிட்டிங். அஞ்சானை எப்படியாவது திரையில் பார்த்து விடவேண்டும் என்று ரசிகர்கள் வேகமாக டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் படத்தில் இரண்டு சூர்யா இல்லை, ஒரே சூர்யா தானாம். தன் நண்பர் வித்யூ ஜம்வாலை கொலை செய்ததற்காக, டானாக இருந்த ராஜு பாய் சாதுவாக மாறி எதிரிகளை பலி வாங்குவது தான் கதை என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
இச்செய்தி வெளியே தெரிந்ததால் படக்குழு அதிர்ச்சி மட்டுமில்லாமல் யார் இதை வெளியே சொன்னது என்று கோபத்தில் இருக்கிறது. மேலும் நாம் முன்பே சொன்னது போல் பாஷா படத்தின் சாயலில் தான் படமும் வந்துள்ளது, இதை லிங்குசாமியே ஒரு பேட்டியில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/107293/#sthash.Uy7dSprf.dpuf

சூர்யா ரசிகர்கள் அனைவரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு தான் வெயிட்டிங். அஞ்சானை எப்படியாவது திரையில் பார்த்து விடவேண்டும் என்று ரசிகர்கள் வேகமாக டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர்.


இந்நிலையில் படத்தில் இரண்டு சூர்யா இல்லை, ஒரே சூர்யா தானாம். தன் நண்பர் வித்யூ ஜம்வாலை கொலை செய்ததற்காக, டானாக இருந்த ராஜு பாய் சாதுவாக மாறி எதிரிகளை பலி வாங்குவது தான் கதை என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.


இச்செய்தி வெளியே தெரிந்ததால் படக்குழு அதிர்ச்சி மட்டுமில்லாமல் யார் இதை வெளியே சொன்னது என்று கோபத்தில் இருக்கிறது. மேலும் நாம் முன்பே சொன்னது போல் பாஷா படத்தின் சாயலில் தான் படமும் வந்துள்ளது, இதை லிங்குசாமியே ஒரு பேட்டியில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, April 09, 2014

'கத்தி' தயாரிப்பாளர் பேட்டி - ராஜபக்சேவுக்கு ஆதரவானது அல்ல லைக்கா நிறுவனம்:

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு லைக்கா நிறுவனம் ஆதரவானது கிடையாது என்று விஜய் நடிக்கும் 'கத்தி' படத்தின் தயாரிப்பாளர் ஐங்கரன் கருணாமூர்த்தி தெரிவித்தார். 



விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'கத்தி' படத்தினை ஐங்கரன் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். 


இந்நிலையில் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ் கரன், இலங்கை அரசுடன் தொடர்புடையவர் என செய்தி பரவியது. இதனால், படத்திற்கு பெரும் பிரச்சினை ஏற்படும் என்று தயாரிப்பாளர்களின் ஒருவரான ஐங்கரன் கருணாமூர்த்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். 


அப்போது அவர் கூறும்போது, "இலங்கை அரசாங்கத்தோடு சேர்ந்து பணியாற்றிகிறோம் என்று இந்த படத்திற்கு சம்பந்தமில்லாத செய்தி வந்து கொண்டிருக்கிறது. அந்தச் செய்தியில் உண்மையில்லை. நான் 27 வருடங்களாக சினிமா துறையில் நிறைய ஏற்ற, இறக்கங்களைப் பார்த்திருக்கிறேன். 



நான் இலங்கையில் பிறந்து வளர்ந்தவன். நாட்டை விட்டு 30 வருடங்களுக்கு முன்பே வெளியே வந்துவிட்டேன். அங்கே தமிழர்கள் என்றால் புலிகள் என்று தான் சொல்வார்கள். 



உங்களுக்கே தெரியும்... ஐங்கரன் நிறுவனம் 2000 படங்களுக்கு மேலாக வெளிநாடுகளில் வெளியிட்டு இருக்கிறோம். 20 வருடங்களுக்கு மேலாக லைக்கா நிறுவனத்தின் சுபாஷ் கரன் எனக்கு நண்பர். அவர் இலங்கையில் முல்லைத்தீவை சேர்ந்தவர். அவர் 100 சதவீதம் தமிழர். அம்மா முல்லைத்தீவு, அப்பா திருக்கோணமலை. இப்போ லண்டனில் பிசினஸ் பண்ணிட்டு இருக்கார். 



நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாஸ் எங்கள் நிறுவனத்திற்குதான் தேதிகள் கொடுத்தார்கள். ஆனால், பல்வேறு காரணங்களால் எங்களால் தனியாக பண்ண முடியாமல் இருந்து வந்தது. அப்போது தான் எனது நண்பரான சுபாஷ் கரன், "இவ்வளோ அனுபவத்தை வைச்சுக்கிட்டு ஏன் சும்மா இருக்கீங்க, நாம சேர்ந்து பண்ணலாம்"னு சொன்னார். இந்தப் படத்தினை 100 சதவீதம் நான் மட்டும் தான் பண்றேன். அவர் எனக்கு பண உதவி பண்றார் அவ்வளவு தான். 



லைக்கா நிறுவனம் உலகத்தில் நம்பர் ஒன் டெலிகாம் நிறுவனமாகும். அவர்களுக்கு தொழில்முறை போட்டிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் கிளப்பிவிடும் செய்திகள்தான் இவை. 2013-ல் சுபாஷ் கரன் கம்பெனியில் இருந்து சுமார் 60-க்கும் மேற்பட்டோர் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்தார்கள். நானும் உடன் போயிருந்தேன். அவர் பிறந்த இடம், உள்ளிட்ட இலங்கை முழுவதும் சுற்றிப் பார்த்தோம். 


தனியார் ஹெலிகாப்டர்கள் எல்லாம் இலங்கை விமானப் படையினரிடம் இருந்துதான் பெற முடியும். 25 பேர் அமரக்கூடிய இரண்டு ஹெலிகாப்டர்கள் எடுத்து, 5 நாட்கள் சுற்றிப் பார்த்தோம். அப்படிச் சுற்றிப் பார்த்ததில் அவர் நிறைய உதவிகளை பண்ண முன்வந்தார். இலங்கையில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி வேண்டும் என்று இந்தாண்டு ரூ.20 கோடியும், அடுத்தாண்டு இன்னும் அதிகமாகவும் செய்ய முன் வந்திருக்கிறார். 


நாங்கள் போயிட்டு வந்தது அனைத்துமே உதவுவதற்காக மட்டுமே தவிர, வேறு எந்த ஒரு டீலிங்கும் கிடையாது. இலங்கை அரசிடம் தொடர்பு வைத்துக் கொள்ளும் அளவிற்கு லைக்கா நிறுவனம் சிறு நிறுவனம் அல்ல. 


ராஜபக்சேவுக்கும் சுபாஷ் கரணுக்கும் எந்த விதத்திலும் தொடர்பு கிடையாது. அதுமட்டுமல்லாது, இந்தப் படத்தில் நான் இப்போது அவரை தயாரிப்பாளராக வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால், வந்தச் செய்தி உண்மையாகி விடும். அதனால் மட்டுமே இதனை செய்யாமல் இருக்கிறேன். 


'கத்தி' படத்தினைப் பொறுத்தவரை 40% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. விஜய் இருவேடத்தில் நடித்து வருகிறார். தீபாவளிக்கு வெளியாகும். இப்போதைக்கும் என்னால் இதை மட்டுமே கூறமுடியும்" என்றார் அவர். 


thanx - the hindu


Sunday, July 21, 2013

60 வது பிலிம்பேர் விருதுகள்

60வது பிலிம்பேர் விருதுகள் - தனுஷ், சமந்தாவுக்கு இரண்டு விருதுகள்! சிறந்த படம் - வழக்கு எண்

Dhanush-Samantha gets Two awards in 60th Filmfare award
தென்னிந்திய திரைப்பட விழாவில் ஒன்றான பிலிம்பேர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 60வது ஐடியா பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் நடிகர் தனுஷூக்கு சிறந்த நடிகர் மற்றும் பின்னணி பாடகருக்கான இரண்டு விருதுகள் கிடைத்தன. இதேப்போல் நடிகை சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்காக இரண்டு விருதுகள் கிடைத்தன. தமிழில் சிறந்த படமாக தேசிய விருது பெற்ற ‘‘வழக்கு எண் 18/9‘‘ படம் பெற்றது.

60வது தென்னிந்திய திரைப்பட விருதுகளின் முழு விபரம்...

சிறந்த படம்

தமிழ் - வழக்கு எண் 18/9
தெலுங்கு - ஈகா
மலையாளம் - ஆயளும் நஞ்சனம் தம்மீழ்
கன்னடம் - கிராந்தி‌வீரா சங்கோலி ரயாணா

சிறந்த நடிகர்

தமிழ் - தனுஷ் (3)
தெலுங்கு - பவன் கல்யாண் (கபார் சிங்)
மலையாளம் - பகத் பாசில் (22 பீமேல் கோட்டயம்)
கன்னடம் - தர்ஷன் (கிராந்தி‌வீரா சங்கோலி ரயாணா)

சிறந்த நடிகை

தமிழ் - சமந்தா (நீதானே என் பொன்வசந்தம்)
தெலுங்கு - சமந்தா (ஈகா)
மலையாளம் - ரீமா கல்லிங்கல் ((22 பீமேல் கோட்டயம்)
கன்னடம் - பிரியாமணி (சாருலதா)

சிறந்த டைரக்டர்

தமிழ் - பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)
தெலுங்கு - ராஜமெளலி (ஈகா)
மலையாளம் - லால் ஜோஸ் (ஆயளும் நஞ்சனம் தம்மீழ்)
கன்னடம் - விஜயஒரசாத் (சித்திலிங்கு)

சிறந்த துணை நடிகர்

தமிழ் - தம்பிராமையா (கும்கி)
தெலுங்கு - சுதீப் (ஈகா)
மலையாளம் - பிஜூ மேனன் (ஆர்டினரி)
கன்னடம் - அதுல் குல்கர்னி (எதிகாரிகி)

சிறந்த துணை நடிகை

தமிழ் - சரண்யா பொன்வண்ணன் (நீர்ப்பறவை)
தெலுங்கு - அமலா அக்கினி (லைப் இஸ் ப்யூட்டிபுல்)
மலையாளம் - கவுதம் நாயர் (டையமண்ட் நெக்ளஸ்)
கன்னடம் - சுமன் ரங்கநாதன் (சித்திலிங்கு)

சிறந்த இசை

தமிழ் - டி.இமான் (கும்கி)
தெலுங்கு - தேவிஸ்ரீ பிரசாத் (கபார் சிங்)
மலையாளம் - வித்யாசாகர் (டையமண்ட் நெக்ளஸ்)
கன்னடம் - வி.ஹரிகிருஷ்ணா (டிராமா)

சிறந்த பின்னணி பாடகர்

தமிழ் - தனுஷ் (3, கொலவெறிடி...)
தெலுங்கு - வேதபள்ளி ஸ்ரீனிவாஸ் (கபார் சிங்)
மலையாளம் - விஜய் ‌யேசுதாஸ் (ஸ்பிரிட்)
கன்னடம் - அவிநாஸ் செப்ரி (சித்திலிங்கு)

சிறந்த பின்னணி பாடகி

தமிழ் - என்.எஸ்.கே.ரம்யா (சற்று முன்பு பார்த்து... நீதானே என் பொன்வசந்தம்)
தெலுங்கு - சுஜித்ரா (பிஸினஸ்மேன்)
மலையாளம் - ஸ்வேதா (அரிகி)
கன்னடம் - இந்து நாகராஜ் (கோவிந்தயான்மகி)

சிறந்த புதுமுக விருதுகள்

நடிகர்

உதயநிதி ஸ்டாலின் - (ஒரு கல் ஒரு கண்ணாடி, தமிழ்)

தல்குர் சல்மான் - (செகண்ட் ஷோ, மலையாளம்)

நடிகை

லட்சுமி மேனன் - (சுந்தரபாண்டியன், தமிழ்)

ஸ்வேதா ஸ்ரீவட்சா - (சைபர் யுக‌தால் நவ யுகா, கன்னடம்)

வாழ்நாள் சாதனையாளர் விருது : வாணி ஜெயராம் மற்றும் பாபு

விழாவில் ஸ்ருதிஹாசன், நாவ்யா நாயர் உள்ளிட்ட பல நடிகைகளின் நடனங்களும் இடம்பெற்றன.
 
 
thanx -dinamalar

Friday, December 14, 2012

நீ தானே என் பொன் வசந்தம் - சினிமா விமர்சனம்

http://www.tamilstar.com/photo-galleries/tamil-cinema-neethane-en-ponvasantham-new-posters/images/tamil-cinema-neethane-en-ponvasantham-new-posters01.jpg 

ஹீரோ ஹீரோயின் இருவருமே  ஸ்கூல் மேட்ஸ் , காலேஜ் மேட்ஸ் , 3 படத்துல வர்ற மாதிரி ஆரம்பத்துல இருந்தே லவ். ஆனா பாருங்க 2 பேரும் வாயை வெச்சுக்கிட்டு சும்மாவே இருக்கறதில்லை. எதையாவது உளறி அது ஈகோ மோதல் ஆகி ஊடல் பிரிவுன்னு அடிக்கடி ஆகிடுது. லவ்வர்ஸ்னா கிஸ் அடிக்க மட்டும்தான் வாயைத்திறக்கனும்னு அவங்களுக்குத்தெரியலை ( கிஸ் அடிக்க எதுக்கு வாயைத்திறக்கனும்? நாராயணா! நாராயண! )


 மு க் அ ழகிரியும் , மு க ஸ்டாலினும் மாதிரி இருக்கும் அவங்க எப்படி பிரசன்னாவும் சினேகாவும் போல் சேர்றாங்க என்பது தான் திரைக்கதை .


படத்தின் முதல் ஹீரோ சந்தேகமே இல்லாம இளையராஜா தான். சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது பாட்டு ஓடும்போது ஏதாவது ஒரு பொண்ணு மடில சாஞ்சுக்கலாம்னு நினைக்காத ஆண் இல்லை. கிளாசிக் மியூசிக். அதே போல் என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன். செம கலக்கலான பாட்டு , மற்ற பாட்டுக்களும் நல்லா இருக்கு . ஒரு ஆள் கூட தம் அடிக்கப்போகலை. ஆனா BGM ஸ்பெலிஸ்ட்டான இளையராஜா  ஏன் இவ்வளவு அடக்கி வாசிச்சிருகாரோ?பல காட்சிகளில் போயஸ் தோட்டத்து மயான அமைதி நிலவுது. அவரே அப்படி இருக்கட்டும்னு விட்டுட்டாரா? கவுதம் ஏதாவது  தகரர்று பண்ணி அதுக்குப்பழி வாங்கிட்டாரா?  தெரில



ஜீவா. கோ படத்துல செம க்யூட்டா இருந்தவர் அதை விட யங்கா சில காட்சிகள்ல தெரிஞ்சாலும் மீசை இல்லாம அவரைப்பார்க்க என்னமோ மாதிரி இருக்கு. ஸ்கூல் பையனா வர்றப்ப அந்த கெட்டப் ஓக்கே . ஆனா காலேஜ் படிக்கறப்போ , ஜாப்க்குப்போறப்போ எல்லாம் அதே கெட்டப் ஏன்? ஏன்னா பல காட்சிகள்ல அவர் வசனம் பேசும்போது வில்லத்தனமாவே இருக்கு.ஈகோ மோதல்கள் கன கச்சிதமான நடிப்பு . 


 சந்தானம். ஒரு படத்தின் பல மைனஸ்களை  தாங்கி நிற்கும் தூண். ஓக்கே ஓக்கே படம் மாதிரி படம் முழுக்க வராவிட்டாலும் பாதி அளவுக்கு வர்றார். அவர் பேசும் கவுண்ட்டர் பஞ்ச்க்கு டக் டக்னு ஆடியன்ஸ் அப்ளாஸ்.. அவருக்கும் ஒரு ஜோடி. காமெடி கலாட்டாக்கள்.. 



ஹீரோயின் சந்தனதேக அஜந்தா  சமந்தா .பவுடர் போடறாரா? வெண்ணெய் யூஸ் பண்றாரா? என கேட்க வைக்கும்  நைஸ் ஃபேஸ். முகத்துக்கு அதீதமான ஒப்பனை இல்லாமலேயே மிளிர்கிறார். இவரது டிரஸ்சிங்க் சென்ஸ் அபாரம். 6 காட்சிகளில்  ஜீவாவுக்கு லிப் கிஸ் தர்றார். பல காட்சிகளில் ஜீவாவுக்கு இணையான  நடிப்பு . ஆனா ஆவேசமா பேசும் காட்சிகளில் அவர் ஏன் ஒரு மாதிரி தடுமாறி நடக்கறார்னு தெர்யல . அப்படி பாடி லேங்குவேஜ் கோப காட்சிகளில் செட் ஆகலைன்னா ஒரே இடத்துல நின்னு டயலாக் பேசி எடுத்திருக்கலாம். 


ஸ்கூல் , காலேஜ் ஆஃபீஸ் என 3 வெவ்வேறு கட்டங்களில் திரையில் உலா வரும் பல ஃபிகர்கள் நேர்த்தியான தேர்வு .பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவு அள்ளுது .



http://moviegalleri.net/wp-content/gallery/neethane-en-ponvasantham-movie-stills/neethane_en_ponvasantham_movie_stills_jeeva_samantha_97aaaee.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. படத்தின் ஓப்பனிங்க் சீனில் ஜீவா சமந்தாவைப்பார்த்து பாடும் நீதானே என் பொன் வசந்தம் , புது ராஜ வாழ்க்கை பாடலைப்பாட முகத்தில்  வெட்கம் , தோழிகள் பார்ப்பதில் பெருமிதம் என அந்த ஆடிட்டோரியமே காதல் வெள்ளத்தில் தத்தளிக்கிறது . 



2. அந்த குண்டுப்பெண் பள்ளிக்கூட அறையில்  ஜீவாவைப்பார்க்க சமந்தாவுக்கு உதவும் காட்சிகள் கல கல. யதார்த்தம் .  இளமை 


3. சமந்தா நிலைக்கண்ணாடி முன் டைட் டி சர்ட் போட்டு நெஞ்சை நிமிர்த்தி அழகு பார்க்கும் காட்சி தியேட்டரில் அபார அப்ளாஸ் ( அவரோட நெஞ்சு அவர் நிமிர்த்தறாரு, இவ்ங்க ஏன் கிளாப்ஸ்?  - அப்பாவி கோவிந்து) 


4. சமந்தா ஒரு காட்சியில் சாம்பல் நிற காட்டன் சேலையும் , ரத்தச்சிவப்பு அமெரிக்கன் ஜார்ஜெட் ஜாக்கெட்டும் போட்டுக்கிட்டு ஜீவா கூட உலாத்தறாரே? ஆஹா ... 


5. ஹீரோவோட அண்ணன் தான் விரும்புன பொண்ணு வீட்டுக்கு அப்பா, அம்மாவோட போய் பொண்ணு கேட்டு அவமானப்பட்டு திரும்பி வந்த பின்  பரஸ்பரம் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொள்ளும் காட்சியும் , ஜீவா குற்ற உணர்வில் பரிதவிக்கும் காட்சியும் 


6. சந்தானம் , குண்டுப்பெண்  லவ் போர்ஷன் ஜீவா - சமந்தா லவ் போர்ஷன் போர் அடிக்கும்போதெல்லாம் ரிலாக்ஸ்க்கு உதவுது. சந்தானம் பண்ணும் சேட்டைகள் கல கல 


7. சமந்தா மொட்டை மாடியில் ஜீவாவிடம் வெடித்துக்கதறும் காட்சி , க்ளைமாக்ஸ் காட்சியில்  என குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் பின்னணி இசை இசை ஞானி பெயர் சொல்லுது 


8. ரிசப்ஷனில் தன் அண்ணியின் தங்கையையே  மனைவியாக ஏற்றுக்கொள்ள முன் வரும் ஜீவாவை சமந்தா சோகத்துடன் கை குலுக்கி சம்பிராதய வாழ்த்து சொல்ல வரும்போது ஜீவா நாசூக்காக மறுப்பதும் அப்போது அடிபட்ட பார்வையுடன் சமந்தா அவரைப்பார்ப்பதும் நுணுக்கமான இயக்கம் .


9. க்ளைமாக்ஸ் நெருங்கும்போது விண்ணைத்தாண்டி வருவாயா மாதிரி நெகடிவ்  என பதட்டப்பட வைத்து  கடைசி 15 நிமிடத்தில் ஹீரோ - ஹீரோயின் வாக்குவாதம் செய்யும் காட்சி 


http://www.tamilstar.com/photo-galleries/tamil-movies-neethane-en-ponvasantham-movie-wallpapers/images/tamil-movies-neethane-en-ponvasantham-movie-wallpapers09.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்



1. படத்தின் திரைக்கதையில் உள்ள மிகப்பெரிய மைனஸ் ஆண்களை  பழிக்கும் விதமான கதை ஓட்டமே. அதாவது 99%  உண்மைக்காதலர்கள் சில பிரச்சனைகளால் சேர முடியாமல் போய் விட்டால் ஆண் முதல்ல வேற பெண்ணைக்கல்யாணம் பண்ணிக்கவே மாட்டான். தப்பு பொண்ணு சைடில் என்றாலும், அவதான் வேண்டாம் என்று சொன்னாலும் அவளுக்கு மேரேஜ் ஆகி சில வருடங்கள் கழிச்சுத்தான் ஆண் மேரேஜ் பண்ணிக்குவான். நீங்க யாரை வேணா கேட்டுப்பாருங்க . ஆனா இதுல ஹீரோ காதலியுடனான சண்டையில், ஊடலில் தன் அண்ணியின் தங்கையை மணக்க சம்மதிக்கிறான். அதை ஏற்றுக்கொள்ளும் விதமாய் சொல்லப்படலை .



2. இசைஞானி இளையராஜா சாய்ந்து சாய்ந்து பாட்டை என்னமா உருகி இசை அமைச்சிருக்கார். ஆடியோ வெர்ஷன் மட்டும் கேட்கும்போது  காதலியை தாய் ஸ்தானத்தில் வைத்து  ஒரு சோகத்துக்கு அரவணைப்பும் ஆறுதலும் தேடும் ஒரு காதலனின் பாட்டாகவே அது வடிவமைக்கப்பட்டிருக்கு. ஆனா பிக்சரைசெஷனில் அது இளமைக்குறும்பு , கில்மாக்கொண்ட்டாட்டமாகக்காட்டப்படுவதால் ரசிகன் தடுமாறுகிறான். பாட்டை லயித்து ரசிப்பதா? கிளு கிளுப்பை ரசிப்பதா? என . எப்படி இயக்குநரு இதுல ஸ்லிப் ஆனாரு



3. உன் அம்மா , அப்பாவைப்பற்றி என் கிட்டே ஏன் நீ சொல்லவே இல்லை? என ஹீரோயின் கடைசியில் குற்றம் சாட்டும்போது ஹீரோ மவுனமா இருக்கார் . “ ஏன் நீ கேட்கவே இல்லை?னு பதிலடி தர்லை . சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கோவித்துக்கொள்ளும்  ஹீரோயின் ஹீரோ வேறு ஒரு பெண்ணுடன் மேரேஜ் , ரிசப்ஷன் என்றதும் ஓங்கி வெடிப்பார் என்று பார்த்தால் அழுது டிராக் மாறிட்டாரே? 



4. இடைவேளை வரை சந்தானத்தின் காமெடியில் இசையில்   ஓரளவு ஸ்பீடாகப்போகும் படம் பின் பாதியில் தட்டுத்தடுமாறுது . திருச்செந்தூரில் ஹீரோயின் ஸ்கூல் நடத்துவது , அவரை சமாதானம் பண்ண ஹீரோ வருவது அது சம்பந்தமான காட்சிகள் கொஞ்சம் இழுவை 


5. விடிய விடிய ஹீரோ அனுப்பிய மெயிலை தூங்காமல் படிச்சுட்டு விடிஞ்சதும் எனக்கு இன்னும் கோபம் போகலை, சும்மா தான் படிச்சேன் என்பது மாதிரி அவர் வசனம் பேசுவது வால்மார்ட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்த டாக்டர் கலைஞர்  மாநில அரசிடம்  வர விடக்கூடாது என்று பல்டி அடிபப்து போல் படு கேவலமாக இருக்கு 



6. ஹீரோ 8 வயசுல இருந்து ஸ்கூல் , காலேஜ் , ஆஃபீஸ் என பல கட்டத்துல ஹீரோயின் வீட்டுக்குப்[போயிருக்கார். ஆனா ஒரு முறை கூட ஹீரோயின் அப்பாவும் அவரும் சந்திக்கவே இல்லை என்பதும் ஹீரோயின் அப்பாவுக்கு இவர்கள் காதல் மேட்டரே தெரியாது என்பதும் காதில் பூச்சுற்று .


7. இவர்கள் காதல் ஈகோ யுத்தத்தில் ஹீரோவின் அண்ணியின் தங்கையை ரிசப்ஷன் எல்லாம் முடிச்சு , மேரேஜ்ல தாலி கட்ட கடைசி ஒரு மணி நேரம் முன்பு நைசா கழட்டி விடுவது  வை கோவுக்கு நாஞ்சில் செஞ்ச துரோகம் போன்றது .



8. ஹீரோ , ஹீரோயின் ஈகோ மோதல் காட்சிகள் 4 இடங்களில் வருகிறது . எல்லாமே செம இழுவை. நறுக் சுருக் என முடிச்சிருக்கலாம் . 



9. பல லட்சம் மதிப்புள்ள கார் எல்லாம் வெச்சிருக்கும் , கம் ஆஸ்திரேலியா அடிக்கடி போகும் வசதி உள்ள ஹீரோயின் ஹீரோவுக்கு கிஃப்டாக நோக்கியா 1100 மாடல் மாதிரி ஒரு டப்பா ஃபோனை தருவதும், அதே போல் ஹீரோயினும் மட்டரகமான ஃபோன் வைத்திருப்பதும் காதில் பூச்சுற்றல் 



10. ஹீரோ அவ்வளவு ஈகோ பார்ப்பவர் ஹீரோயினிடம் ஒனத்தியாக ஓ சி செல் ஃபோன், ஓ சி சர்ட், என ஏகப்பட்ட ஓ சி களை வாங்கிக்கொள்வது 


11. இளையராஜாவை வ்லுவந்தமாய்ப்பாராட்டும் ஒரு வரியாவது அவர் இசை அமைக்கும் படத்தில் வந்துடும் , இதுலயும் வருது . 


http://behindwoods.com/tamil-movie-news-1/sep-12-01/images/neethane-en-ponvasantham-jiiva-04-09-12.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1. லவ் பண்றப்ப எல்லா சாங்க்ஸும் நமக்காகவே எழுதுன மாதிரியே இருக்குது இல்ல? 


 ஆமாமா . இன்க்ளூடிங்க் போடா போடா புண்ணாக்கு போடாதே தப்புக்கணக்கு




2. டேய் , நிஜமா அவ செம ஃபிகர்டா. இப்படி ஒரு ஃபிகரை நான் பார்த்ததே இல்லை 

 விட்ரா மச்சான், எனக்கு எல்லா பொண்னுங்களூமே செம ஃபிகராத்தான் தெரியுது. ஏன்னா நான் படிச்சது பாய்ஸ் ஹைஸ்கூல் 



3. லாரிக்குக்கீழே விழுந்தவனைக்கூட காப்பாத்திடலாம், ஆனா லவ்வுல விழுந்தவனைக்காப்பாத்தவே முடியாது




4. அவ கிட்டே என்னடா பேசறது?

 ரேஷன்ல பாமாயில் ஊத்தறாங்க , வா 2 பேரும் போய் வாங்கிட்டு வரலாம்னு கூப்பிடு



5. சில பசங்க கிட்டே ஜாக்கிரதையா இருங்கன்னு நம்ம பேரண்ட்ஸ் சொல்வாங்களே, அவன் தான் அது 





6. ஏற்காடு போறேன், நீ அங்கே போய் இருக்கியா? 


 நோ 

 அடடா, வாட் எ பிளேஸ்... சரி நீ எங்கே போகப்போறே? 

 ஆஸ்திரேலியா 



7. எனக்காக சந்தோஷமா இருக்கறது மாதிரி அட்லீஸ்ட் நடிக்காத 




8.  அவன் அடிக்கற மொக்கை ஜோக்குக்கெல்லாம் ஏன் சிரிக்கறே? நான் சொல்றதுக்கு மட்டும் தான் நீ சிரிக்கனும் 


9. மாப்பி , கத்திரிப்பூ கலர்ல கேவலமா  ஒரு சர்ட் வெச்சிருப்பியே அதை போட்டுட்டுப்போகலையே? 



10. சந்தானம் - ஏண்டி, உங்களை எல்லாம் சமாளிக்க நான் ஒருத்தன் போதாதா?


வாட்?

 எல்லாரையும் சேர்த்துப்போட 


 மை திங்க்..... 

 வாட்? திங்க்?

 என்ன? எல்லாமே டபுள் மீனிங்க்ல வருது?  ( இது கவுண்டமணியின் காமெடி உல்டா ) 




11. ப்ளீஸ், நீ வடையை பிராக்டீஸ் பண்ணு, இதுல தலையிடாத, நீ தின்னத்தான் லாயக்கு 



12. நீ ஏதாவது சொல்லனுமா? நான் ஐ லவ் யூ சொல்லிட்டேன்

 அதான் இப்போ  சொன்னேனே?

 ஒண்ணும் சொல்லலையே? 



கிஸ் அடிச்சேனே? 



13. வாடா வா, சுடிதார்ங்க  காய விட்ட பின்னாலதான் உங்களுக்கெல்லாம் பேண்ட் சர்ட் கண்ணுக்குத்தெரியுமே? 



14. கரண்ட் பில்லுல அதுக்கு வெச்சிருந்த பணத்துல தண்ணி அடிச்சுட்டேன் 



15. அண்ணனுக்கு பெண் பார்க்க நான் வர்லை, அந்தப்பொண்ணு திடு திப்னு என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டா? 


http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/pictures/uploads/Kollywood/2012/Sep/04/Neethane_En_Ponvasantham_Latest_Stills/Neethane_En_Ponvasantham_Latest_Stills96132685227bc3e15c84d4362430fc0d.jpg


16.  என் கிட்டே ஏதாவது மாற்றம் தெரியுதா? 


 ம்ஹூம்

 முடி வெட்டி இருக்கேன்

 ஓஹோ சரி 

 சுத்தம் 



17.  நான் எம் பி ஏ படிக்கலாம்னு இருக்கேன்

 இதானா? நான் கூட ஏதோ சீரியஸ் மேட்டர்னு நினைச்சேன் 



அப்போ நான் படிக்கறது சீரியஸ் மேட்டர் இல்லையா? 



18. உன் நல்லதுக்கும்  எ ன் நல்லதுக்கும் , நம்ம .  நல்லதுக்கும் ஒண்னே ஒண்னு சொல்றேன் , கேட்கறியா?

 ம் 

 என்னை விட்டுடு 


19.  நான் வேணா உனக்கு சிட்டுக்குருவி லேகியம் வாங்கித்தர்றேன் ,  என்னை தயவு செஞ்சு தம்பின்னு கூப்பிடாதே, ஏன்னா ஹாஸ்பிடல் நர்சைக்கூட சிஸ்டர்னு கூப்பிட்டதில்லை 



20. அப்பாவை வருத்தப்பட வெச்சுட்டேன், அதான் வருத்தமா இருக்கு 



21. இங்கே என்ன தோணுதோ அதை பேசு 

 இதே டயலாக்கை இன்னும் எத்த்னை படத்துல சொல்வே? 



22. இந்தப்பொம்பளைங்க இருக்காளுங்களே 2 மணி நேரப்படம் பார்க்க 3 மணி நேரம் மேக்கப் போடுவாளுங்க



23. ஏண்டா , நீ மட்டும் இறங்கி வந்துட்டே, நீயும் ஈகோல அவளை செர்த்தான் போடினு சொல்லி இருக்கலாமே? 


 சொல்லி இருக்கலாம், அப்புறம் காலம் பூரா கைல பிடிச்சுக்கிடு உக்காந்திருக்கனும் 


24. கரண்ட் கட் கூட முன் கூட்டியே சொல்லிட்டு கட் பண்றாங்க, ஆனா இந்த கன்னிப்பொண்ணுங்க சொல்லாம கொள்ளாம காதலை கட் பண்ணிருவாளுங்க #nepv 



25.  எப்படியும் அவ சமாதானம் ஆக 10 நாள் ஆகும் போல 


 20 நாள் ஆனாலும் சரி  பரவாயில்லை

 டேய் நாம என்ன டூரா வந்திருக்கோம்?



26. நீ என்னை வெறுத்துடக்கூடாது

 அது முடியாது, ஐ ஹேட் யூ 



27.  குட்பை சொல்லிட்டு வந்துட்டேன் 


 குட்பை சொல்ல முடிஞ்சுதா?



28. ஈசியா அழ முடியுதேன்னு அழுதுட்டே இருக்காதே  


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSpgR4vljUMDJ1vVLx0UaSa6tINuaoJMDIJV-R8YzhibbBXd9T4A3x5g8EbRfJqKCvQGyUOmdldbQkfx3WETz88fLMKcKNRR-nRDRXK_0pvnieNGnH7oVXEq_M00TaxxvDjNygDg2EZZxs/s1600/Samantha+Hot+Navel+Stills+With+No+Watermark+(3).jpg


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க் - 43 


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்  - ஓக்கே 



 சி .பி கமெண்ட் - காதலர்கள் , யூத்ங்க, பிரிந்து வாழும் தம்பதிகள் பார்க்கலாம். இளையராஜா ரசிகர்கள் மிஸ் பண்ணவே  கூடாத படம் .ஈரோடு வி எஸ் பி ல படம் பார்த்தேன் . சி செண்ட்டர்ல சுமாராத்தான் போகும், பி செண்ட்டர்ல பொங்கல் வரையும் , ஏ செண்ட்டர்ல 50 நாள் தாண்டியும் ஓடும் 

http://tamilhotactress.files.wordpress.com/2010/12/samantha-hot-stills61.jpg

கும்கி - சினிமா விமர்சனம்

  
http://www.adrasaka.com/2012/12/blog-post_14.html


நீதானே என் பொன்வசந்தம்

http://www.adrasaka.com/2012/12/blog-post_7091.html

கவுதம் அதிர்ச்சி! நெட்டில் வந்த முதல் 2 விமர்சனங்களும் நெகடிவ் ரிசல்ட்!

 http://www.adrasaka.com/2012/12/2_13.html

 

 

அனைத்துப்பாடல்களையும் வரி வடிவில்

கும்கி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/12/blog-post_6836.html

 

http://actresspadam.com/wp-content/uploads/2012/05/samantha-hot-sexy-pics-from-tamil-movie-008.jpg



Saturday, September 24, 2011

DOOKUDU -சமந்தா இளமை, மகேஷ் ஆக்‌ஷன் - தெலுங்கு சினிமா விமர்சனம்

http://www.mirchi9.com/postyourclip/wp-content/uploads/2011/06/1303967432_mahesh-dookudu.jpg 

படத்தோட டைரக்டர் பற்றி ஒரு வார்த்தை, அண்ணன் இது வரை ஒரு ஃபெயிலியர் படம் கூட தந்ததில்லை ..பேரு சீனு வைத்யாலா. இவரது முந்தைய ஆந்திரா அதிரடி ஹிட்ஸ்.. வெங்கி, கிங்க்,துபாய் சீனு, தி , ரெடி ... 

படத்தோட ஹீரோ மகேஷ் பாபு பற்றி சொல்லவே தேவை இல்லை.. ஒக்கடு ஹீரோ.. இவரும் பல சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தவர் தான்.. இவர் ட்விட்டர்ல டைரக்டர்க்கு சொன்ன ட்வீட் - சார்.. என் வாழ் நாளில் சந்தித்திராத வெற்றியை இந்தப்படம் எனக்கு தரப்போகுது. நன்றி - இது சும்மானாச்சுக்கும் சொன்னதா? படத்தோட பில்டப்புக்காக சொன்னதா? அப்டின்னு பார்த்துடலாம்னு தான் முதல் முறையா ஒரு தெலுங்குப்படத்துக்கு முதல் நாளே போனேன்..

ஈரோடு சீனிவாசா தியேட்டருக்குப்போனா ஒரே ஆந்திரா அழகிகள் கூட்டம். எல்லாம் ஹை க்ளாஸ் ஃபிகர்ஸ் தான்.  அவங்க...... சரி விடுங்க பட விமர்சனத்துல எதுக்கு சம்பந்தம் இல்லாம ஃபிகர்ஸ் பற்றிய வர்ணிப்பு, அப்புறம் இதை சாக்காட்டி, தாக்கி ஒரு பதிவு யாராவது போட்டுடுவாங்க. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjWBnulLMMhuU3YW0HJOnVK07U7-EgncuUfbtpf-cB2CLjRwQtjgEkk9wNzi3y1AWvR0nPA2rId15OvvA_R-aM8l3432H65ocsyPNfoW-5Cbnf77SkL3fFDw8LQGtLp7Ou_gN6wYx2Hy4e/s1600/mahesh-babu-dookudu-heroine-samantha-wallpapers-1.jpg

 பிரகாஷ் ராஜ் நம்ம அன்னா ஹஜாரே மாதிரி மக்கள் ஆதரவு பெற்ற பிரபல அரசியல் தலைவர்.. அவரை ஒரு கும்பல் தாக்குது. விபத்து ஏற்படுத்துது. அதுல அவர் தப்பிச்சாலும் கோமா ஸ்டேஜ்க்கு போயிடறாரு.. அவரோட மகன் தான் ஹீரோ மகேஷ். அப்போ அவர் என்ன செய்வாரு?அப்பாவை கொல்ல முயற்சி செஞ்சது யாரு? ஏன்? அப்டிங்கறதை கண்டு பிடிச்சு பழி வாங்கறாரு.. பலி எடுக்கறாரு.. போதாததுக்கு அண்ணன் ஐபிஎஸ் ஆஃபீசர் வேற. கேட்கனுமா?


மகேஷின் பிளஸ் பாயிண்ட்டே. அவரது முகம் தான், எப்படி ஸ்ரேயா என்னதான் கிளாமர் காட்னாலும் அவரது குழந்தை முகம் அதை மறைச்சுடுதோ அது போல அவருக்கு சைல்டிஸ் ஃபேஸ்.. ஆனா ஆக்‌ஷன் காட்சிகள்ல அவர் காட்ற சுறு சுறுப்பு , டயலாக் டெலிவரில ஷார்ப்னெஸ் எல்லாம் தூள்.. 


ஹீரோயின் சமந்தா.. 60 மார்க் வாங்கற ஃபிகர்..  ( தமிழில் ஏற்கனவே மாஸ்கோவின் காவிரியில் நடிச்சிருக்கே அதே ஃபிகர்.)ஹீரோவோட ஹையர் ஆஃபீசர் நாசரின் மகள்...பாப்பாவுக்கு நடிப்பு சுமாராத்தான் வருது. மற்றதெல்லாம் நல்லாவே வருது.. ஹி ஹி 

http://cdn4.supergoodmovies.com/FilesFour/caaa8aede94d42679fd72a9c3dc55ef7.jpg

பிரகாஷ்ராஜின் நடிப்பு கனகச்சிதம். கம்பீரமான நடிப்பு. நாசருக்கு அதிகம் வேலை இல்லை. காமெடியனாக பிரம்மானந்தம் செம கலக்கு கலக்கறார்.. தமிழில் இந்தப்படம் ரீ மேக் செய்யப்பட்டால் விஜய் - சந்தானம் கரெக்ட் மேட்ச்சாக இருக்கும்.. 

கோட்டா சீனிவாசராவ்க்கும் அதிக வேலை இல்லை.. தமிழ் சினிமாவில் பொதுவாக முதல் பாதியில் காமெடி போர்ஷனை முடிச்சுட்டு செகண்ட் ஆஃப்ஃபில் ஆக்‌ஷனுக்கு தாவிடுவாங்க. இந்தப்படத்துல வித்தியாசம் செகண்ட் ஆஃப்ல ஃபுல் காமெடி. 

பிரகாஷ்ராஜ் கோமால இருந்து எழுந்து வர்றப்ப அவருக்கு பல வருடங்கள் கழிந்தது தெரியாது , மகன் ஐபிஎஸ்னு தெரியாது எம் எல் ஏ என் நினைக்கிறார் என்பது ஒரு சுவராஸ்ய முடிச்சு. அவரை நம்ப வைக்க ஹீரோ ரியாலிட்டி ஷோ நடத்துவது காமெடி கலாட்டாக்களூக்கு வழி வகுக்கிறது

படத்தில் உத்தேசமாகப்புரிந்த வசனங்கள்

http://www.movies.stanzoo.com/gallery/images/Samantha-latest-gallery13.jpg

1. எதுக்காக அவனை சுட்டே?

அவன் ரொம்ப ஓவரா பேசுனான்.. போலீஸ்க்கும், போஸ்ட் மேன்க்கும் வித்தியாசம்  தெரிய வேணாம்..?அதான்.. ( போலீஸ்னா மிரட்டி மாமூல் வாங்குவார், போஸ்ட் மேன் கெஞ்சி இனாம் வாங்குவார். இதை சொல்லாம ஒரு ஆளையே போடனுமாண்ணே?)

2.  சேல்ஸ் கேர்ள் இன் ஜவுளிக்கடை - XQS மீ சார்.. வாட் யூ வாண்ட்?

இதை பேக் பண்ணுங்க.. 

சார்!!!!!!!!!!! இது பிரா... ( ஏன்? பிராவை பேக் பண்ண முடியாதா?)

ஓ . சாரி நாட் திஸ். 

3.  உன் கலருக்கும், என் கலருக்கும் மேட்ச் ஆகாதுடா... 

சோ வாட்? 

கோ டூ ஹெல் ( நரகத்துக்குப்போ)

( அப்போ கறுப்பா இருக்கறவனுக்கெல்லாம் கல்யாணமே ஆகாதா சமந்தா மேடம்.. ?)

4.  ஆம்பளைங்கள்ல 2 வகை இருக்கு.. 

1. தன்னை லவ் பண்ற பொண்ணுங்களுக்காக உயிரையே கொடுக்கறவங்க. 

2. தன்னை நம்பி வந்த பொண்ணுங்களை ஏமாத்தி யூஸ் பண்றவங்க.. நீ 2 வது வகை.

( அப்போ பாப்பா பல பேரை பார்த்துட்டு தான் வந்திருக்கு போல.. )

5  உனக்கு பத்ம ஸ்ரீ பட்டம் வாங்கித்தர்றேன்.

அந்த அளவு உனக்கு செல்வாக்கு இருக்கா?

டேய் நாயே. நீ நல்லா நடி.. அவங்களே தருவாங்க. 

http://www.kerals.com/kerala/wp-content/uploads/2010/11/Samantha.jpg

6. ரியாலிட்டி ஷோன்னா என்னன்னு தெரியுமா/?

ம். தெரியுமே.. ஷில்பா ஷெட்டி பிரச்சனை பண்ணாங்களே அதானே.? ஐ நோ ஆல்..

7.  பத்ம ஸ்ரீ பட்டத்துக்கு நாமினேசன் தாக்கல் பண்ணீட்டேன். இப்போ மக்களுக்காக உழைக்கப்போறேன்.. 

8.   மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணீட்டேன். ப்ளைண்ட்னு....

9.  என்னய்யா அவர் அநியாயத்துக்கு பணக்காரரா இருக்காரு. வீட்டுக்கு விருந்தாளியா வந்தவங்களுக்கு காபி குடுத்தா அதுக்கே டிப்ஸா 1 லட்சம் ரூபா தர்றாரே.?

10.  இவர் யாரு.?


மாமாவோட லோக்கல் ஒயிஃப்... 

அப்டின்னா..?

அவர் போற ஊர்ல எல்லாம் ஒரு ஆளை செட்டப் பண்ணிக்குவார். 

( அப்போ அண்ணனுக்கு எஸ் டி டி ஒயிஃப் நிறைய இருக்குமே..?)

இடைவேளைக்குப்பிறகு வரும் பல காட்சிகளில் காமெடி கொடி கட்டிப்பறந்தது.. அந்த ஆந்திரா ஃபிகர்ஸ் 24 பேரும் குலுங்கி குலுங்கி சிரிச்சதை உத்தேசமாத்தான் புரிஞ்சுக்க முடிஞ்சது,., லைட்ஸ் ஆஃப்ல இருந்ததால டீட்டெயிலா எதுவும் பார்க்க முடியல... 

3 பாட்டு செம ஹிட் அடிக்கும். 

http://s4.hubimg.com/u/3836279_f520.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. கோமாவில் இருந்து மீண்டு வந்த பிரகாஷ்ராஜ் ஏன் அந்த பங்களாவை விட்டு வெளியேவே போக வில்லை.? வில்லன் கண்ணில் படாமல் மாறுவேஷத்தில் கூட வெளி உலகம் பார்க்க ஆசைபடமாட்டாரா?

2.  வீட்டிலேயே இருப்பவர்  டி வி கூட பார்க்க மாட்டாரா? நியுஸ் சேனல் பார்த்தா தெரிஞ்சிடுமே. ( ஒரே சீன்ல ஹீரோ செட்டப் பண்ணுன டி வி யை பார்க்கறாரு. )

3. ஐ பி எஸ் ஆஃபீசரின் ஹையர் ஆஃபீசராக வரும் நாசர் அப்படித்தான் கேனத்தனமாக நடந்துக்குவாரா? தன் மகளை ஹீரோவுக்கு கூட்டிக்கொடுக்காதது ஒன்று தான் குறை. 

4. தனது பேக்கை ஹீரோயின் தொலைத்து விடுகிறார். ஹீரோ ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அதை கொண்டு வந்து கொடுத்ததும் காதல் வந்துடுதே, அது எப்படி? 

5. ஹீரோ ஏன் இருட்டில் கூட கூலிங்க் கிளாஸ் போட்டுட்டே வர்றார். அவ்ளவ் பில்டப் தேவைன்னு சொன்னாரா?

6. ஐ பி எஸ் ஆஃபீசராக வரும் ஹீரோ எப்போதும் லைட்டான தாடியுடன் வருகிறார். அது கூட தேவலை..  யூனிஃபார்ம் போட்டிருக்கும்போது முதல் சர்ட் பட்டனை கழட்டி விட்டே தான் வருகிறார். அவர் போலீஸா? ரவுடியா?

7.  வில்லனை கொலை செய்ய ஹீரோ பிரகாஷ் ராஜை ஒரு ஹாஸ்பிடலுக்கு கூட்டி செல்கிறார். கதைப்படி அவர் 20 வருஷத்துக்கு முந்தைய கால கட்டத்தில் இருக்கிறார். அப்போ நவீன மாற்றங்கள், பஸ் ,சாலைகள் பற்றி எந்த  கேள்வி, சந்தேகமும் கேட்கலையே ஏன்?


http://1.bp.blogspot.com/_FDULgrSOClk/TLe_igffPTI/AAAAAAAAHvA/WkbOc-48PGw/s1600/brindaavanam-images0118.jpg

தெலுங்கு படங்களூக்கு ஆனந்த விகடன்ல நோ விமர்சனம்.. 

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - ஜாலியான ஆக்‌ஷன் படம் தான் பார்க்கலாம். பார்த்து வெச்சுக்கிட்டா விஜய் நடிப்பில் வரும்போது கும்ம வசதியா இருக்கும். 

 டிஸ்கி - ஹீரோ ஃபோட்டோ 1 தான் இருக்கு ஆனா ஹீரோயின் ஃபோட்டோ எதுக்கு இத்தனை என கேட்பவர்களூக்கு . படத்துல தான் ஹீரோவோட டாமினேஷன் ஜாஸ்தியா இருக்கு, விமர்சனத்துலயாவது ஹீரோயின் டாமினேஷன் இருக்கட்டும்னு தான் ஹி ஹி

http://www.thedipaar.com/pictures/resize_20110627070412.jpg