Monday, August 31, 2026

Elize-Shadows of a woman (2026)-பிரேசில்/ஆங்கிலம்- சினிமா விமர்சனம் (க்ரைம் ட்ராமா)@நெட் பிளிக்ஸ்

 2012ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உண்மை சம்பவத்தைத்தழுவி எடுக்கப்பட்ட படம் இது.24/7/2026 முதல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆன படம் இது




ஸ்பாய்லர் அலெர்ட்


நாயகி மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். நர்சாகப்பணி புரிகிறார்.வக்கீலுக்குப்படிக்கிறார்.நாயகி சிறுமியாக இருக்கும்போதே நாயகியின் அப்பா  ஊரைவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் ஓடி விட்டார்.அம்மா தான் நாயகியை  சிரமப்பட்டு வளர்த்தார்.


நாயகன் மிகப்பெரிய கோடீஸ்வரன்.தொழில் அதிபர்.முதல் மனைவியை டைவர்ஸ் செய்து விட்டார்.ஒரு குழந்தை உண்டு.மனைவிக்கும் ,குழந்தைக்கும் சேர வேண்டிய ஜீவனாம்சத்தை கோர்ட் மூலம் செட்டில் செய்து விட்டார்.

நாயகியைக்கண்டதும் நாயகன் காதல் கொள்கிறார்.நாயகி நாயகனது காதலை ஏற்றுக்கொள்கிறார்.சாப்பாட்டுக்கே வழி இல்லாத ஏழைக்கு மகாராணி மாதிரி வாழக்கசக்குதா?என்ன?

நாயகன் நாயகிக்குக்காதல் பரிசாக ஆடி கார் மாதிரி விலை உயர்ந்த காரைப்பரிசளிக்கிறார்.அரண்மனை மாதிரி வீட்டுக்கு  அழைத்து செல்கிறார்.

நாயகிக்கு இன்னமும் பிரமிப்பில் இருந்து வெளிவர முடியவில்லை.இது கனவா?நிஜமா?என கிள்ளிப்பார்த்துக்கொள்கிறார்.வலிக்கிறது.அப்போ நிஜம்தான்.


அந்த ஊர் வி ஐ பி கள் முன்னிலையில் நாயகன் ,நாயகி திருமணம் நடக்கிறது.மிகவும் சந்தோஷமாக அவர்களது இல்லற வாழ்க்கை நடக்கிறது.


திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.டாக்டரிடம் செக் செய்தபோது நாயகியிடம் எந்தக்குறையும் இல்லை.டாக்டர் நாயகனையும் செக்கப் செய்ய வேண்டும் என்கிறார்.ஆனால் நாயகன் மறுத்து விடுகிறான்.அதுதான் முதல் மனைவிக்கு ஒரு வாரிசு தந்து என் ஆண்மையை நிரூபித்து விட்டேனே? என அலட்சியமாக சொல்கிறான்.

நாயகன் அடிக்கடி தன்னைத்தனியாக விட்டு விட்டு லேப் டாப்பில் ஒர்க் செய்வதை நாயகி கவனிக்கிறாள்.பாஸ்வோர்டைக்கண்டு பிடித்து ஓப்பன் செய்தால் நாயகிக்கு அதிர்ச்சி.நாயகனுக்குப்பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது.

இதை நாயகியால். ஜீரணிக்க முடியவில்லை. நாயகனுடன்  வாக்குவாதம் செய்கிறாள்.நாயகனோ அலட்சியமாக உனக்குத்தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து விட்டேன், என்னிடம் வேறு என்ன எதிர்பார்க்கிறாய்?என விவாதிக்கிறான்.


ஒரு கெட்ட நேரத்தில் வந்த நல்ல செய்தி நாயகி கர்ப்பமாக இருக்கிறாள்.இருவரும் சந்தோஷப்படுகிறார்கள்.குழந்தை பிறந்து ஒரு வருடம் கழிகிறது.


குழந்தையைப்பார்த்துக்கொள்ள ஒரு நர்ஸ் நியமிக்கப்படுகிறாள்.இப்போது மீண்டும் பழைய பிரச்சனை வெடிக்கிறது.நாயகனின் பல பெண்களுடனான தொடர்பு.

இந்த வாக்குவாதத்தில் நாயகன் நாயகியை ட்ரிக்கர் செய்வது போல் பேச நாயகி கோபம் அடைந்து நாயகனைத்துப்பாக்கியால் சுட்டு விடுகிறாள்.

முதலில் போலீசுக்குத்தகவல் தெரிவிக்க நினைத்தவள் பின் தன் முடிவை மாற்றி விட்டு டெட் பாடியை டிஸ்போஸ் செய்ய முடிவெடுக்கிறாள்.இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.


நாயகி எலிசி மட்சுனாகாவாக லொரேனா கம்ப்பரோட்டா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.ஏழ்மையில் இருந்த பெண்ணிலிருந்து செல்வச்சீமாட்டி ஆகும் ட்ரான்ஸ்பர்மேஷனைப்பிரமாதமாக உடல் மொழியில் காட்டி இருக்கிறார்.நாயகனுடன் வேட்டையாடப்போகும்போது மிருகத்தை சுடப்பயிற்சி பெறுவது,இரக்கமே இல்லாமல் ஷூட் செய்து சாப்பிடுவது என கதிகலங்க வைக்கும் நடிப்பு.

நாயகன்  மார்க்கோஸ் மட்சுனாகாவாக  ஹென்றிக் கிமுரா சைக்கோத்தனமான நடிப்பில் கலக்கி இருக்கிறார்.இருவருக்கும் ஜோடிப்பொருத்தமே இல்லை.நிஜத்தில் அப்படித்தான் போல.

நாயகியின் அம்மாவாக ,நர்ஸ் ஆக வரும். பெண்களின் நடிப்பு கனகச்சிதம்.நாயகியிடம் இண்ட் ராகேஷன் செய்யும் போலீஸ் ஆபீசர் மிடுக்கும் அருமை.


ரபேல் மோண்ட்டஸ் +மரியானா டோரஸ்  இருவரும் இணைந்து திரைக்கதை எழுத பிலிப் வெல்லாஸ்கோ இயக்கி இருக்கிறார்.

திகில் ஏற்படுத்தும் கலர் டோனில் பிரமாதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். லிசியா அரோஸ்டகே.ஒவ்வொரு பிரேமிலும் அடுத்து என்ன நடக்குமோ?என்ற பயத்தை கேனரா மூலம் கடத்துகிறார்.

லிபியா அர்பெக்ஸ் +மொயாமா ராம்போ இருவரும் இணைந்து எடிட்டிங் செய்திருக்கிறார்கள்.படத்தின் ரன்னிங் டைம் 93 நிமிடங்கள்.


சபாஷ்   டைரக்டர்


1 திண்ணையில் படுத்துக்கிடந்தவனுக்கு திடுக்குனு வந்த வாழ்வு மாதிரி நாயகியின் கோடீஸ்வர வாழ்க்கை பிரமிப்பை ஆடியன்சுக்குக்கடத்திய விதம் அருமை.நல்ல எமோஷனல். கனெக்ட்

2 நாயகியின் அம்மாவின் புதுக்கணவன் அதாவது நாயகியின் சித்தப்பா  தவறான எண்ணத்தில். நாயகியை நெருங்கும்போது பென் புலி போல சீறுவதும் ,கத்தியை எடுத்து மிரட்டுவதும் மிரள வைக்கும் நடிப்பு.

3 இந்த சம்பவம் நடந்ததும் அம்மா தன் கணவனைக்கண்டிக்காமல் மகளிடம் கடிந்து கொள்ள மனம் ஒடிந்து போய் வீட்டை விட்டு வெளியேறுவது உருக்கமான செண்டிமெண்ட் சீன்.

4 காரில் டெட்பாடியுடன் நாயகி மெயின் ரோட்டில் பயணிக்கும்போது டிராபிக் போலீசிடம் மாட்டிக்கொள்ளும் சீன் ராட்சசன் படத்து செக்கிங் சீன நினைவுபடுத்தினாலும் திரில்லிங் மொமெண்ட்

5. படத்தில் பெரிய திருப்புமுனையோ ,க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டோ எதுவும் இல்லை என்றாலும் ஒவ்வொரு சீனையும்ன்பரபரப்பாக நகர்த்திய விதம் அருமை

6 நான் லீனியர்  கட்டில் கதை சொன்ன விதம் அருமை.க்ரைம் நடப்பதார்


லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 நாயகன் கோடீஸ்வரன்.முதல் மனைவியை டைவர்ஸ் செய்து விட்டான்.பல. பெண்களுடன் தொடர்பு உண்டு.அப்படியே ஜாலியாக இருக்க வேண்டியதுதானே?எதற்கு நாயகியைத்திருமணம் செய்ய வேண்டும்?

2. மிடில் கிளாஸ் ஆளே ரெண்டு போன் வைத்திருக்கும்போது கோடீஸ்வரன் ஏன் ஒரே ஒரு போன் வைத்திருந்து மனைவியிடம் மாட்டிக்கொள்கிறான்.ரகசிய மெசேஜ் இருக்கும்போனை ஆபீசில் வைத்து விட்டு வீட்டுக்கு வரும்போது வேறு போன் கொண்டு வந்திருக்கலாமே?


3 டெட் பாடி இருக்கும் காரில் நாயகி போலீசால் வழி மறிக்கப்படும்போது  செக் செய்யும் போலீஸ்க்கு டெட் பாடி ஸ்மெல் அடிக்கவில்லையா?

4 நாயகி மூன்று வருடங்களாக அந்த பங்ககாவில் வசிக்கிறாள்.சிசிடிவி கேமரா இருப்பது தெரியாதா?போலீசிடம் மாட்டுவோம் என முன் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாமே?

5 நாயகன் அடிக்கடி நாயகியை நீ ஒரு சைக்கோ.எது வேணாலும். செய்வே. என்கிறான்.ஆனால் கன் பாய்ண்டில் நாயகி நாயகனை மிரட்டும்போது நீ சுட மாட்டே என்று அலட்சியமாக சொல்வது ஏன்?


ரசித்த வசனங்கள்


1. எனக்கு இதுவரை யாருமே பரிசாக எதுவும் தந்ததே இல்லை.

2. கடந்த காலத்தை மறப்பது யாருக்கும் எளிதல்ல.

3. உனக்கு என்ன குறை வைத்தேன்? மாளிகை ,செல்வம் ,அதிகாரம் ,வசதி...


உன் அருகாமை ,சமீபம் இல்லையே?

4 எடுத்துக்கறேன்.உன்னையே எனக்குப்பரிசா எடுத்துக்கறேன்.




அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 18+. வன்முறைக்காக

CPS கமெண்ட் - ட்ரூ ட்ராமா டாக்குமெண்ட் ரி ,க்ரைம் ட்ராமா பார்க்கும் ஆர்வம் உள்ளவர்கள் பார்க்கலாம்.கமர்ஷியல் அம்சங்கள் எதுவும் இல்லை.ரா வான படம்
ரேட்டிங் 3 /5

Sunday, August 30, 2026

Secret of Kalinga (2026)-மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் (சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரில்லர்)@சன் நெக்ஸ்ட்

 


18/6/2026 முதல் கேரள திரையரங்குகளில் வெளியான இந்தப்படம் 24/7/2026 முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங் கில் காணக்கிடைக்கிறது.2024ம் ஆண்டு வெளியான கலிங்கா என்ற தமிழ்ப்படத்துக்கும் ,இந்தப்படத்துக்கும் சம்பந்தம் இல்லை 


ஸ்பாய்லர் அலெர்ட்


ஒரு காலேஜ்க்குப்பின் புறம் அடர்ந்த காடும் ,ஒரு பாழடைந்த கிணறும் இருக்கிறது.தடை செய்யப்பட்ட பகுதி அது.நாயகனின் நண்பன் குடிபோதையில் அந்த அடர்ந்த வனப்பகுதிக்கு வருகிறான்.அப்போது கிணற்றில் இருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்கிறது.மந்தாகினி என்ற பெண் பேய் அங்கே பல நூற்றாண்டுகளாக வசித்து வருகிறது.அங்கே யார் வந்தாலும் அவர்களை மயக்கி ,ஹிப்னாடிஸ் செய்து கிணற்றுக்குள் விழ வைத்து கொன்று விடும்.நாயகனின்  நண்பன் அந்த கிணற்றில் விழுந்து இறக்கிறான்.


அடுத்த நாள் காலேஜில் அதைப்பற்றித்தான் பேச்சு.இனி யாரும் அந்தக்காட்டுப்பகுதிக்கோ ,கிணற்றின் அருகேயோ செல்லக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் ஒன்று.கலிங்க நாட்டின் மன்னன் யாராலும் வெற்றி கொள்ள முடியாதவனாக இருந்தான்.அவனுக்கு ஆண் வாரிசு இல்லை.மந்தாகினி என்ற பெண் மட்டுமே.இளவரசி சின்ன வயதில் இருந்தே துணிச்சலுடன் வளர்ந்தாள்.பெரியவள் ஆனதும்  நாட்டின் அரசுப்பொறுப்பை ஏற்றுக்கொண்டாள்.அவளிடம் சக்தி வாய்ந்த மந்திர திரவம் இருந்தது.அது இருப்பதால் தான் யாராலும் வெல்ல முடியவில்லை என்ற பேச்சு எழுந்தது.எதிரிகள் சதித்திட்டம் தீட்டி அந்த மந்திர திரவத்தை இளவரசி மந்தாகினியிடமிருந்து  அபகரித்து,சதி செய்து அவளைத்தோற்கடித்து  ஒரு கிணற்றில்  அவளைப்போட்டு மூடி விடுகிறார்கள்.

தனது முடிவுக்குக்காரணமானவர்களை மந்தாகினி பழி வாங்குவதாக ஒரு ஐதீகம்.அந்த வழியில் யார் சென்றாலும் அவர்கள் தானாகவே கிணற்றில் குதித்து இறந்து விடுவார்கள்.

இந்தக்கதை காலேஜில் பரப்பப்பட்டதும் பலரும் அதை நம்பவில்லை. தடையை மீறி அந்த இடத்துக்கு செல்லத்துடிக்கிறார்கள்.

சில காலம் கழித்து பலரது வேண்டுகோளுக்கு இணங்க அந்தத்தடை அகற்றப்படுகிறது.புது வருடம் பிறக்க இருப்பதால் புது வருடக்கொண்டாட்டத்தின்  ஒரு பகுதியாக அந்தத்தடை செய்யப்பட்ட பகுதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

நாயகனின் தம்பி இப்போது அந்தக்காலேஜில் படிக்கிறான்.அவனுக்கு ஒரு காதலி உண்டு.


சில வருடங்களுக்கு முன் நாயகன் அங்கே சென்ற போதும் நாயகனுக்கு எந்த பாதிப்பும் நிகழவில்லை.நாயகனின் தம்பி கிணற்றுக்குள் விழுந்தும் உயிருடன் வந்து விடுகிறான்.


அப்போ நாயகனுக்கும்,நாயகனின் தம்பிக்கும் ,அந்த கலிங்க இளவரசி மந்தாகினிக்கும் ஏதோ ஒரு முன் ஜென்மத்தொடர்பு இருக்கும் என நாயகன் கணிக்கிறான்.அந்த ரகசியத்தைக்கண்டுபிடிக்க முயற்சிக்கிறான்.இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.

நாயகனாக சனீஷ் உன்னி கிருஷ்ணன் நடித்திருக்கிறார்.கச்சிதமான நடிப்பு.

நாயகனின் தம்பியாக வரும்  அல்தாப் சலீம் தான் படத்தில் அதிக நேரம் வருகிறார்.இவருக்கு ஒரு காதலியும் உண்டு என்பதால்  இவர் தான் நிஜ நாயகன்.இவரது காமெடி சென்ஸ் ,டயலாக் டெலிவரி கன கச்சிதம்.


தியான் சீனிவாசன்,மாளவிகா மேனன் ,ரியாஸ் கான்,கவுரி நந்தா,லக்‌ஷ்மி நந்தன்,உல்லாஸ் பந்தலம் என மற்ற அனைத்துக்கேரக்டர்களில் நடித்தவர்களும் அவரவர்க்குத்தந்த ரோலை சரியாக செய்திருக்கிறார்கள்.


ஜிஷ்னு எம் ஆர்யன்  உடன் இணைந்து திரைக்கதை எழுதி தனியாக இயக்கி ,நாயகனாகவும் நடித்திருக்கிறார் சனீஷ் உன்னி கிருஷ்ணன்.


ஒளிப்பதிவில் மிரட்டி இருக்கிறார்கள்.மந்தாகினி பேயால் பாதிப்பு அடைபவர்கள் விழிகள் மட்டும் முழு வெள்ளைக்கண்மணி ஆக மாறுவது திகில்.பின்னணி இசையும் அதன் பங்குக்கு ரசிகர்களை மிரட்டி இருக்கிறது


சபாஷ் டைரக்டர்

1 படத்தின் ஓப்பனிங்க் சீனில் மந்தாகினிப்பேயால் இறக்கும் முதல் ஆளின் கதையை. மூன்று வெவ்வேறு கோணத்தில் மாற்றி மாற்றி சொன்ன விதம் அருமை

2 மந்தாகினிபேயின் பிளாஸ்பேக் கதை நம்பும்படி சொல்லப்பட்ட விதம்.

3  நாயகனின்  தம்பிக்கும் ,அவனுடைய காதலிக்குமான ரொமாண்டிக் போர்ஷன் நல்ல காமெடி 

4  நாயகன் ,நாயகனின் தம்பி ,மந்தாகினிப்பேய் மூவருக்குமான தொடர்புக்கதையை வைத்து பாகம் 2 விரைவில் வரும் என்று க்ளைமாக்சில் காட்டியது குட்.


லாஜிக் மிஸ்டேக்ஸ்



1 பல நூற்றாண்டுகளுக்கு முன் கிணற்றில் சிறை வைக்கப்பட்ட மந்தாகினி தன் இறப்புக்குக்காரணமானவர்களை மட்டும் தானே பழி வாங்க வேண்டும்?அப்பாவி மாணவர்களை ஏன் கொல்ல வேண்டும்?

2 சரித்திரபுகழ் பெற்ற இடத்தை அரசாங்கம் ஏன் டேக் ஓவர்  செய்து உரிய பாதுகாப்புத்தரவில்லை?


3 நாயகியின் தோழி ஒரு காண்டம் பாக்கெட்டை நாயகியின் பேக்கில் வைப்பது அதற்கான காரணத்தை சொல்வது எதுவும் நம்பும்படி இல்லை.

4 நாயகியின் பேக் கில் தோழி வைத்த காண்டம் பாக்கெட் இருக்கிறது.அதை எடுக்க வேண்டும் என நாயகி பரிதவிப்பதும் செயற்கை.விடிந்தால் நியூ இயர் ,காலேஜ் லீவ் தானே?எதற்குப்பதற வேண்டும்?


அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் 16+

CPS கமெண்ட் -  ஹிஸ்டாரிக்கல் ஹாரர் திரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம்.பயமுறுத்தும் காட்சிகள் உண்டு .ரேட்டிங் 2.5/5

Saturday, August 29, 2026

ஒன்ஸ்மோர் (2026)-தமிழ்- சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா)

 



டாங்கே(2024) படத்தின் ஷூட்டிங்க் ஸ்பாட்டில் வசனகர்த்தாவாக அப்போது வளர்ந்து வந்த விக்னேஷ் ஸ்ரீகாந்த் அர்ஜூன் தாசிடம் ஒரு கதை சொன்னார்.2 வருடங்கள் கழித்து அறிமுக இயக்குநராக அதே கதையை எடுத்திருக்கிறார்.டாக்சிக்,டிசி மாதிரி வன்முறைப்படங்கள் வந்து தலைவலி தந்த சமயத்தில்  இந்த ரொமாண்டிக் டிராமா எப்படி வந்திருக்கிறது?என்பதைப்பார்ப்போம்.

ஸ்பாய்லர் அலெர்ட்






நாயகன் கடந்த எட்டு வருடங்களாக மன அழுத்தத்தில் இருக்கிறான்.அதற்காக சைக்கலாஜிக்கல் ட்ரீட்மெண்ட்டும் எடுத்துக்கொண்டிருக்கிறான்.காலேஜ் படிக்கும்போது ஏற்பட்ட காதல் தோல்வி தான் இதற்குக்காரணம்.இப்போது ஓரளவு சரியாகி வருகிறான்.

ஒரு நாள் நாயகன்  பைக் ரிப்பேர் ஆகி ரோட்டில் நிற்கும்போது நாயகி காரில் வந்து லிப்ட் கொடுக்கிறாள்.நாயகன் காலேஜில்  படிக்கும்போது நாயகி அவனுக்கு ஜூனியர் மாணவி.சகஜமாகப்பேசிக்கொண்டிருந்தவள் திடீர் என ஐ லவ் யூ சொல்கிறாள்.


நாயகி எட்டு வருடங்களுக்கு முன்பிருந்தே நாயகன் மீது காதல் வசப்பட்டிருந்தாள்.ஆனால் அதை சொல்ல சரியான சந்தர்ப்பம் அமையவில்லை.தயங்கிக்கொண்டிருந்தாள்.இப்போது துணிச்சலாக சொல்லி விட்டாள்.


நாயகன் ஆரம்பத்தில் நாயகியின் காதலை ஏற்கவில்லை.அவளை அலைக்கழிக்கிறான்.எறும்பு ஊறக்கல்லும் தேயும் என்பது போல் ஒரு கட்டத்தில் நாயகியின் காதலுக்கு ஓக்கே சொல்கிறான்.

இரு குடும்பத்தார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம்  எல்லாம் நடந்து முடிந்து விடுகிறது.

இப்போதுதான் கதையில் ஒரு ட்விஸ்ட்.நாயகனின் முன்னாள் காதலி நாயகனுக்கு போன் பண்ணி நாம் இருவரும் சந்திக்கனும்,ஒரு முக்கிய மேட்டர் பேசனும்  என்கிறாள்.

இருவரது சந்திப்பில் முன்னாள் காதலி சில காரணஙகளுக்காக நம் காதலை பிரேக்கப் செய்திருந்தேன்.ஆனால் இப்போ எனக்கு ஓக்கே என்கிறாள்.

திருமணத்துக்கு இன்னமும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் நாயகன் என்ன முடிவெடுத்தான்?என்பது தான் மீதி  திரைக்கதை.

நாயகனாக அர்ஜூன் தாஸ் .ரசவாதி(2024) யில் நாயகனாக ,குட் பேட் அக்லி(2024) யில் வில்லனாக ,கான் சிட்டி(2026)படத்தில் மீண்டும் நாயகனாக நடித்த அர்ஜூன் தாஸ் இதுவரை சைக்கோ,ரவுடி,பொறுக்கி மாதிரி கேரக்டரில் நடித்தவர் முதல் முறையாக நவரச நாயகன் கார்த்திக் மாதிரி லவ்வர் பாய் வேடத்தில் நடித்திருக்கிறார்.முதல் பாதிப்படம் முழுக்க இறுக்கமான முகத்துடன் வருபவர் பிளாஸ்பேக் காலேஜ் லவ் ஸ்டோரியில் கலகலப்பான நபராக வலம் வருகிறார்.இரு மாறுபட்ட கேரக்டர்களையும் சரியாக செய்திருக்கிறார்.


நாயகியாக அதிதிஷங்கர்.மணிரத்னம் இயக்கிய கீதாஞ்சலி (இதயத்தைத்திருடாதே) நாயகி கிரிஜாவின் கேரக்டர் டிசைனை+ சந்தோஷ் சுப்ரமணியம் ஜெனிலியா கேரக்டர்  டிசைனை நினைவுபடுத்தும் துடுக்குத்தனமான கேரக்டரில் அசால்ட் ஆக நடித்திருக்கிறார்.பல இடங்களில் அவரது முக பாவனைகள் அருமை.சில இடங்களில் ஓவர் ஆக்டிங்க்.


இன்னொரு நாயகியாக, ,முன்னாள் காதலியாக சோனா ஒலிக்கல்  சுமாரான அழகு தான்.நடிப்பு பர்பெக்ட்.

இரு நாயகிகள் இருக்கும் காதல் கதையில் இருவருமே சம அழகிகளாக காட்டினால் தான் நாயகன் யாரைத்தேர்ந்தெடுப்பானோ என்ற சஸ்பென்ஸ் எடுபடும்.

இவர்கள் மூவர் போக டிராவிட் செல்வம், தேவதர்சினி ஆகியோர் நடிப்பும் குட் .


ஹேசம் அப்துல் வகாபின் இசையில்  பாடல்கள் ஆறும் தேனாறு. செம மெலோடிஸ்.
அர்விந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு கண்ணுக்குள் ஒத்திக்கொள்ளலாம்.இரு நாயகிகளின் க்ளோசப் ஷாட்சும் அழகு.

நாஸ் தான் எடிட்டிங்க்.பின் பாதி கொஞ்சம் இழுவை.இன்னமும் ட்ரிம் செய்திருக்கலாம்.

கதை ,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீ காந்த்


சபாஷ் டைரக்டர்


1 இயக்குநர் மணிரத்னம் + கவுதம் வாசுதேவ் மேணன் இருவரும் சேர்ந்து  செய்த கலவை போல இயக்குநர் காட்சிகளைப்படமாக்கிய விதம் அருமை.

2 பிரமாதமான ஒளிப்பதிவு,செம ஹிட்  மெலோடி பாடல்களைத்தந்த இசை ,வசனங்கள்  மூன்றும் முத்துக்கள் மூன்று என சொல்லத்தக்கவை.

3  க்ளைமாக்சில் நாயகன் இரு நாயகிகளில் யாரைத்தேர்ந்தெடுக்கிறான்?அதற்கான காரணம் என்ன?என்பதை பர்பெக்ட்டாக சொன்ன விதம் பிரமாதம்.


லாஜிக் மிஸ்டேக்ஸ்


1 முதல் பாதி காதல் கதை மாதிரி பின் பாதியில் வரும் பிளாஸ்பேக் காதல் கதை மனதில் ஒட்டவில்லை.நமக்கு ஒரு எமோஷனல் கனெக்ட்டே ஆகவில்லை.

2  பிளாஸ்பேக் காதல் கதையில் வரும்  முன்னாள் காதலி தன் அப்பா பரிசாகக்கொடுத்த மோதிரம் மிஸ் ஆனதும் அப்பா யதேச்சையாய் இறந்ததும் நாயகன் பரிசாகக்கொடுத்த  செயின் தொலைந்ததால் நாயகனும் பிரிவார் என  நினைத்து பிரேக்கப் சொல்வது ஒட்டவே இல்லை.ஏற்றுக்கொள்ளும்படியும் இல்லை.

3 மேஜிக் ரைட்டர் அமரர் சுஜாதா எழுதிய பிரிவோம் சந்திப்போம் நாவலைத்தழுவி எடுக்கப்பட்ட ஆனந்த தாண்டவம் ,சில்லுனு ஒரு காதல் ,உன்னை நினைத்து , உட்பட பல படங்களில் பார்த்து சலித்த அதே டெம்ப்ளேட் கதை தான்.

4 இரு நாயகிகளும் லொட லொட என பேசிக்கொண்டே இருப்பது சலிப்படைய வைக்கிறது.

,5 காமெடி ஆர்டிஸ்ட்களை புக் பண்ணிய அளவு அவர்களுக்குக்காமெடி டிராக் அமைக்கவில்லை.

6 நாயகி அதிதி ஷங்கர் எட்டு வருடங்களாக காதலை ஏன் சொல்லாமல் இருந்தார்?என்பதற்கும், இப்போது மட்டும் திடீர் என ஏன் சொல்கிறார்?என்பதற்கும் காரணம் சரியாக  சொல்லப்படவில்லை.



ரசித்த வசனங்கள்

1 உன் பர்த் டே எப்போ?சொல்லு.

மூணு மாசத்துக்கு முன்னாடியே முடிஞ்சிடுச்சு.ட்ரை பண்ணாத.

என் பர்த் டே எப்போ?னு சொல்லு?

நீ என்ன மதர் தெரேசாவா?

ஓஹோ.எங்கே?மதர் தெரேசா பர்த் டே எப்போ?சொல்லு.

2 ஹாய்...ரகு...நான் தான் அஞ்சலி...

இங்கே என்ன பண்றே?

Flirt பண்றேன்.


3 நீ தப்பான ஆள் பின்னால சுத்தறே.

ஓ.நீ அந்த மாதிரி டைப்பா? (Gay)

4 ஒரு வேளை நான் உன்னைத்துரத்தி வர்றதை நிறுத்திட்டா நீ என்ன செய்வே?

நீ நிறுத்த மாட்டே.

ஒரு வேளை நிறுத்திட்டா?

நான் உன்னைத்தேடி வருவேன்.

5. நீ நல்லா பொண்ணா இருந்தா உன்னைக்கையெடுத்துக்கும்பிடறேன்,என்னை சுத்தி வர்றதை நிறுத்து

6 ஆமா,உனக்கு ஏன் என்னைக்கண்டதும் காதல் ?

நான் ஒரு நல்ல தமிழ்ப்பையன்,நீ ஒரு நல்லகேரளப் பொண்ணு.நீ எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் பார்த்ததில்லையா?


7 நீ ஆட்டோ கிராப் பார்க்கலையா?விண்ணைத்தாண்டி வருவாயா ?இந்த கிராஸ் கல்ச்சர் லவ் ( மாநிலம்.விட்டு மாநிலம்) எல்லாம் பெய்லியர் தான்.

டிராஜடினு நீயா ஏன் முடிவு பண்றே?இது காதல்.

8  உன் செக்சுவாலிட்டி என் புரிதலுக்கு அப்பாற்பட்டதா இருக்கலாம்.

9 என் கை ல சந்தோஷம் கிடைச்சாக்கூட என்ன பண்றதுனு தெரியாது.

10 பத்துப்பக்கத்தைத்தொலைச்ச மாதிரி இருக்கேன்.

11 என்னுடையை முழு எமோஷனல் ஸ்பெக்டரமை நீ ஆக்ரமித்துக்கொண்டாய்.


அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+
லிப் லாக் காட்சிகள் இருக்கின்றன.


CPS கமெண்ட் -  காதலர்கள் ,புதுமணத்தம்பதிகளுக்குப்பிடிக்கும்.வன்முறை,ரத்தம் இல்லாத ஜாலியான படம் வேண்டும் என நினைப்பவர்கள் பார்க்கலாம்.ரேட்டிங்க். 2.5 /5.ஆனந்த விகடன் மார்க் யூகம். 41 குமுதம்  ரேங்க்கிங்க் யூகம் ஓகே.


Once More
Theatrical release poster
Directed byVignesh Srikanth
Written byVignesh Srikanth
Produced byYuvaraj Ganesan
Starring
CinematographyAravind Viswanathan
Edited byNash
Music byHesham Abdul Wahab
Production
company
Million Dollar Studios
Release date
  • 28 August 2026
CountryIndia
LanguageTamil

The Truthers (2026)-ஸ்பானிஷ்/ஆங்கிலம்/தமிழ் - சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் க்ரைம் திரில்லர்)@நெட் பிளிக்ஸ் 18+

 


24/7/2026 முதல் நெட் பிளிக்ஸ் தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆன இந்தப்படம் வித்தியாசமான சைக்ககாஜிக்கல் கான்ஸ்பிரேசி திரில்லர் வடிவில் கொண்டு செல்லப்பட்டு மெடிக்கல் க்ரைம் திரில்லர் மாதிரி முடியும் கதை.இது தமிழ் டப்பிங் கில் கிடைக்கிறது.



ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகி ஒரு  பார் டெண்டர் ஆக  பெர்லின் நகரில் வசிக்கிறாள்.அவளது பெற்றோர்  ஸ்பெயினில் வசிக்கிறார்கள்.அம்மாவுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக நாயகி பெற்றோரைப்பிரிந்து தனியாக வசிக்கிறாள்.கடந்த இரண்டு வருடங்களாகப்பெற்றோருடன் போக்குவரத்து ,பேச்சுவார்த்தை எதுவும் இல்லை.


ஒரு நாள் நாயகியின் அம்மா நாயகிக்கு. போன் செய்கிறாள்.ஆனால் நாயகி போனை அட்டெண்ட் செய்யவில்லை.ஒரு முக்கியமான விஷயம் உன்னிடம் பேச வேண்டும் ,சில உண்மைகளை சொல்ல வேண்டும் என நாயகியின் அம்மா நாயகிக்கு வாட்சப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறாள்.அப்போதும் நாயகி அசால்ட்டாக இருக்கிறாள்.

அன்று இரவு ஒரு பார்ட்டிக்குப்போய் ஜாலியாக கொண்டாடி விட்டு வீட்டுக்குத்திரும்பும் நாயகிக்கு நாயகியின் அப்பா போன் செய்து உன் அம்மா குடித்து விட்டு போதையில் பாத் ரூமில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு இறந்து விட்டாள் என்று சொல்ல அதிர்ச்சி அடைந்த நாயகி உடனே அங்கே போகிறாள்.


அப்பாவின் நடவடிக்கைகள் ,பேச்சு ,உடல் மொழி அனைத்தும்  சந்தேகத்துக்கு இடமாகவே இருக்க நாயகி தன் அப்பாதான் அம்மாவைக்கொலை செய்து விபத்து என நாடகமாடுகிறாரோ?என சந்தேகப்படுகிறாள்.

நாயகிக்கு ஒரு முன்னாள் காதலன்  உண்டு.அவனை வர வைக்கிறாள்.

நாயகி அந்த வீட்டிலேயே தங்கி தன் அம்மாவின் மர்ம மரணத்தின் பின்னணி பற்றி. தகவல் சேகரிக்கிறாள்.இதற்குப்பின் நிகழும் பரபரப்பான சம்பவங்களே மீதித்திரைக்கதை.

நாயகியாக ஸ்டெபனி மாக்னின் பிரமாதமாக நடித்திருக்கிறார்.அப்பா மேல் சந்தேகப்படுவது,காதலனுடன் வாக்குவாதம் செய்வது ,போலீசில் புகார் கொடுப்பது என கலவையான உணர்வுகளை முகத்தில். வெளிப்படுத்தி இருக்கிறார்.

நாயகியின் அப்பாவாக ஜோஸ் கொரனாடோ நடித்திருக்கிறார்.இவர் சைக்கோவா? அரை லூசா? காரியக்கிறுக்கா?என்று தெரியாமல் ஆடியன்சைக்குழப்பும்  வித்தியாசமான நடிப்பு.அசத்துகிறார்.


நாயகியின். முன்னாள் காதலனாக  அல்பர்ட்டோ ஓமோ கெஸ்ட் ரோலில் வந்து  போகிறார்.கச்சிதமான நடிப்பு.

மேலே சொன்ன மெயின் கேரக்டர்கள் நால்வரைத்தவிர மற்ற சின்னச்சின்ன கேரக்டர்களில் நடித்தவர்கள் அவரவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

கார்லோஸ் மோண்ட்டரோ + டாரியோ மட்ரோனா இருவரும் இணைந்து திரைக்கதை அமைக்க  ரோஜர் குவால்  இயக்கி இருக்கிறார்.

பின்னணி இசை நிக்கோ கேஸ்டல் அருமை.ஜூவானா ஜ்மெனென்சியின் ஒளிப்பதிவு கச்சிதம்.டார்க் டோனை பிரமாதமாக செட் செய்திருக்கிறார்..படத்தின் ரன்னிங் டைம் 105 நிமிடங்கள்.


சபாஷ் டைரக்டர்

1 நம் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களுக்குக்காரண காரியத்தைத்தேடிக்கொண்டிருக்கக்கூடாது என்ற சைக்கலாஜிக்கல். தத்துவத்தை சொன்ன விதம் அருமை.

2 கதை ஆரம்பித்து  90% போர்ஷன் முடியும் வரை நாயகியின் அம்மாவை நாயகியின் அப்பாதான் கொலை செய்திருப்பார் என்ற சந்தேகத்தின் பாதையில் கதை செல்ல திடீரென நாயகியின் அப்பா நாயகியின் மீது சந்தேகப்படுவதாகபோலீசில்  புகார் தருவது எதிர்பாராத திருப்பம்.

3 நாயகியின் அப்பாவும் ,அவரது தோழியும் இணைந்து ஒரு மெடிக்கல் கம்பெனியின் சட்டத்துக்குப்புறம்பான வேலைகளைத்தோலுரிக்க முற்படுவதுதான் மெயின் கதை என்று க்ளைமாக்சில் யூ டர்ன் அடிப்பது நல்ல திருப்பம்.

4  க்ளைமாக்சில் நாயகியின் அப்பாவா?நாயகியா?யார் நாயகியின் அம்மாவின் மரணத்துக்குக்காரணம் என்பதை. சொல்லாமல் ஓப்பன் எண்ட் ஆக முடித்த விதமும் புத்திசாலித்தனம்


5 கொலையாளி யார்?என்பதை சொல்வதை விட இயக்குநரின் முனைப்பு துக்கம்,பயம்,ஆதாரமில்லாத நம்பிக்கைகள்  மனிதர்களை எப்படி தவறான முடிவுக்கு அழைத்து செல்லும்  என்பதை சைக்கலாஜிக்கலாக சொன்ன விதம் அருமை.



லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 நாயகியின் காதலன் பணிபுரியும் மெடிக்கல் கம்பெனியின் ஐ டி கார்டை நாயகியின் வீட்டில் மிஸ் செய்கிறான்.அப்போதே கம்பெனியில் அதைப்பற்றிப்புகார் கொடுத்து வேறு கார்டு வாங்கிக்கொள்கிறான்.மிஸ் ஆன கார்டை லாக் செய்து விடுவார்கள்.அதை எப்படி ஆக்சஸ் செய்து ஒருவர் கம்பெனியின் உள்ளே போக முடியும் ?

2 நாயகியின் அம்மாவுக்குக்குடிப்பழக்கமே இல்லை என நாயகி வாதிடுகிறாள்.நாயகி வீட்டை விட்டுப்போன சோகத்தில் கடந்த 2 வருடங்ககாகத்தான் குடிப்பழக்கம் இருந்தது என நாயகியின் அப்பா வாதிடுகிறார்.எதற்கு வீண் விவாதம் ?போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அது தெரிந்து விடுமே?

3 ஏரியில் நாயகி காலில் கிழித்தது காணாமல் போன சிறுவனின் சைக்கிள்,அதனால் சிறுவனின் பிணம் ஏரியில் இருக்கலாம் என நாயகி சொல்கிறாள்.அதை அப்போதே போலீசில் ஏன் சொல்லவில்லை?

4 படத்தின் ரன்னிங் டைம் 105 நிமிடங்கள்,ஆனால் 3 மணி நேரப்படம் பார்த்தது போன்ற ஒரு உணர்வு.பொறுமை மிகத்தேவை.


ரசித்த வசனங்கள்


1.  ரிட்டையர் ஆனபின் எல்லாமே முடிஞ்சிடுச்சு என்று அர்த்தம் இல்லை.

2 நேர்மையான வழியில் நான் போறேனா?இல்லையா?தெரியாது,ஆனா நிச்சயம் கெட்ட வழியில் இல்லை

3.  நம்ம கூட இல்லாத ஒருவர் மீது குறை சொல்லி என்ன பயன் ?

4.  இன்னொருவர் மீது குறை சொல்வது ,பழிப்போடுவது ரொம்ப ஈசி.

5. எப்பவும் யாரையாவது குத்தம் சொல்லிட்டே இருப்பது சிலருக்கு மிக எளிது.


அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 18+


CPS கமெண்ட் - மாறுபட்ட ஸ்லோபர்ன் க்ரைம் டிராமா பார்க்க விருப்பமுள்ளவர்கள் பார்க்கலாம்.பெண்களுக்குப்பிடிக்கும்.ரேட்டிங் 3/5.ஒரிஜினல் ஸ்பானிஷ்  டைட்டில்   Los Creyentes

Friday, August 28, 2026

கன்னத்தில் முத்தமிட்டாள் (2026)-தமிழ் - பைலட் சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் டிராமா)@யூ ட்யூப்

 


கன்னத்தில் முத்தமிட்டாள் (2026)-தமிழ் - பைலட் சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் டிராமா)@யூ ட்யூப்



ஒரு பாரில் ஒரு ஆள் குடித்து விட்டு மட்டை ஆகிக்கிடக்கிறான்.பார் ஓனரான நாயகன் அவனைக்கிளப்பி விட முயற்சித்தும் அவன் எழுந்தபாடில்லை.அப்போது அந்தக்குடிகாரனின் போன் ரிங்க்  அடிக்கிறது.நாயகன் அதை அட்டெண்ட் செய்கிறான்.

போனில் அந்தப்பக்கத்தில் இருந்து ஒரு பெண்ணின் குரல் ஒலிக்கிறது.அவள் பேசியதை வைத்து  அந்தக்குடிகாரனுக்கு நிச்சயம் ஆன பெண் அவள் என்பதையும் ,அந்தக்கல்யாணத்தில் அந்தப்பெண்ணுக்கு விருப்பம் இல்லை எனவும் தெரிந்து கொள்கிறான்.

நீங்களே வந்து இந்த ஆளை பிக்கப் பண்ணிக்குங்க என்று சொல்ல ஆரம்பத்தில் மறுத்த அந்தப்பெண் பின் வர சம்மதிக்கிறாள்.
இப்போது அந்தப்பெண் பாருக்கு வர நாயகனுக்கு ஒரு ஷாக் சர்ப்பரைஸ்.அந்தப்பெண் நாயகனுடன்  ஸ்கூலில் ஒன்றாகப்படித்த பெண்.நாயகனுக்கு ப்ரப்போஸ் செய்தவள்.
பல வருடங்களுக்குப்பின் இப்போது தான் பார்க்கிறான்.இதற்குப்பின் நிகழும்  சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.

நாயகி குடும்பப்பாங்கான அழகு.ஷாலினி அஜித் + சாய் பல்லவி இருவரின் முகச்சாயலும் கலந்த கலவை.நிச்சயம் தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் உண்டு.அவரது ஆடை வடிவமைப்பு அட்டகாசம்.ஒரு பெண்ணுக்கு கண்ணியமான உடை தான் அவளுக்கு கவுரம் தருகிறது.ரேவதி,சுஹாசினி,நதியா போன்ற  நடிகைகளுக்கு இருக்கும் மதிப்பு க்யாரா அத்வானி மாதிரி கிளாமர் காட்டும் நாயகிகளுக்கு இருக்காது.அந்த வகையில் நாயகியாக நடித்த ஷர்லி பபிதா குடும்பப்பாங்கான  அழகி.சிரிக்கும்போது அவரது கண்களும் சேர்ந்து சிரிக்கிறது.நல்ல நடிப்பு.

நாயகன் நடிகர் ஜெய் முக சாயலிலும் ,டைரக்டர் ஆர்வாவின் உடல் மொழியிலும் இருக்கிறார்.நல்ல நடிப்பு. அநியாயத்துக்குக்கூச்ச சுபாவியாக இருக்கிறார்.கேரக்டர் டிசைன் அப்படி.

பின்னணி இசை ,,ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் கச்சிதம். நாயகன் ,நாயகி இருவரது காஸ்ட்யூம் டிசைன் ,உடைத்தேர்வு அருமை.

டைரக்டர் ஆர்வாவின் குறும்படங்களில் வரும் நாயகர்கள் எல்லோரும்.அவரை மாதிரியே தாடியுடன் இருப்பது ஏனோ? ( இங்கே கேரளாவில் 90% இளைஞர்கள் தாடிவாலாக்கள் தான்.கேரளப்பெண்கள் தாடிவாலாக்களைத்தான் விரும்புகிறார்கள்)
விஜய் சேதுபதி + த்ரிஷா நடித்த 96 படம் நினைவில் வந்து போகிறது.ஸ்கூல் லவ் என்றாலே எல்லோருக்கும் அது கனெக்ட் ஆகி விடும்.



சபாஷ் டைரக்டர்.


1 டைரக்டரின் டச் டைட்டிலில் இருந்தே தொடங்கி விடுகிறது.என்ன!? மணிரத்னம் பட டைட்டிலாக இருக்கே?என்று சிலர் நினைக்கலாம்.அது கன்னத்தில் முத்தமிட்டால்...இது கன்னத்தில் முத்தமிட்டாள்.

2 நாயகி நாயகனிடம் முத்தம் கொடுக்கும் பனிஷ்மெண்ட் வேண்டாம் என்று சொன்னதும் நாயகன் பதறி இல்ல,இல்ல ,அந்த ப்ராஜெக்ட்டை முடிச்சிடறேன் என்று  சொல்வது அக்மார்க் கே பாக்யராஜ் தனம்.அந்த சீனில் நாயகனின் முகபாவனை இன்னமும் குறும்புடன் இருந்திருக்கலாம்.

3 நாயகனுக்கு ஏதாவது லவ் மேட்டர் இருக்கா?என்பதை. நாசூக்காக  விசாரிக்கும் நாயகியின் முயற்சி அருமை.

4 இரண்டு (முக்கிய)கேரக்டர்களை மட்டுமே  வைத்து ஒரு feel குட் மூவி தர முடியும் என நிரூபித்த விதம்  குட்.

5 நாயகன்,நாயகி இருவரது நடிப்பும் ,இயக்கமும் சேர்த்து நமக்கு நல்ல எமோஷனல் கனெக்ட் கொடுக்கிறது.ஒரு படம் ஹிட் அடைய இந்த எமோஷனல் கனெக்ட் ரொம்ப முக்கியம்.படம் பார்ப்பவர்கள் அந்த சிச்சுவேஷனுக்கு தன்னைப்பொருத்திப்பார்த்துக்கொள்ள வேண்டும்.

6 நாயகிக்குத்தேவைப்படும் அந்த மொமெண்ட்டை நாயகன் தரும் அந்த க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் குட்.

7  நாயகனின் ஆசையை நாயகி நிறைவேற்றிய அந்த மொமெண்ட்டில் படத்தின் டைட்டிலைப்போடுவது டைரக்சன் டச்.



லாஜிக் மிஸ்டேக்ஸ்


1 ஓப்பனிங்க் ஷாட்டே மதுபானக்கடை பார் தான். வில்லன் மட்டை ஆகிக்கிடப்பது போல்.எதுக்கு இப்படி?மதுபானக்கடை படம்  மாதிரி. சப்ஜெக்ட் என்றால் படம் முழுக்க டாஸ்மாக்கில் எடுத்தாலும் கேள்வி இல்லை.ஒரு காதல் கதையில். முதல் காட்சியே பாரில் மட்டை ஆகிக்கிடப்பதுதான் என்பது நெருடுகிறது.

2  வில்லனின்  போன் ரிங்க் ஆனதும் நாயகன் அப்போதான் எடுத்து அட்டெண்ட் பண்றான்.ஆனால் அது லாக் ஆகி இருக்கு,பாஸ்வோர்டு வேணும் என எப்படி சொல்கிறான்? லாக் ஆகி இருக்கலாம் என்று ஒரு  யூகத்தில் வேணா சொல்லலாம்.

3 நாயகி மிட் நைட்டில் வீட்டில் நைட் டிரசில் இருந்திருப்பார்.பாருக்குப்போக உடனே மாடர்ன் டிரஸ் தான் கரெக்ட்  சாய்ஸ் .சேலை  அணிந்து வர டைம் இருக்குமா?

4 ஆண்களுக்குனு ஒரு கெத்து இருக்கு.தேவையே இல்லாம நாயகன் நாயகியிடம் உன் காலில் வேணாலும் விழறேன் என்று சொல்வது  ஓவர்.எதுக்கு ரொம்ப இறங்கிப்போகனும்?எனக்கேட்க வைக்கிறது.

5 நாயகன்,நாயகி,மட்டை ஆகிக்கிடக்கும் வில்லன் இவர்கள் போக அந்த பாரில்  வேலை செய்யும் சக ஊழியர்கள் இருவர் மட்டும் தான் இருக்கிறார்கள்.கஸ்டமர்ஸ்  யாரும் இல்லை.அப்படி இருக்க நாயகி நாயகனிடம் "எல்லோரும் பார்க்கற மாதிரி ஒரு கிஸ் கொடு" எனக்கேட்பது எப்படி?அட்லீஸ்ட் 10 பேராவது இருக்க வேண்டாமா?

6  மட்டை ஆகிக்கிடக்கும் வில்லனை நாயகன் கூட இருக்கும் இருவரை வைத்து  கைத்தாங்கலாக வெளியே அழைத்துச்சென்றிருக்கலாம்நாயகியை டச் பண்ண விடலாமா?

7 பல வருடங்களுக்கு முன் நாயகி நாயகனுக்கு எழுதிய லவ் லெட்டரை பொக்கிஷமாக நாயகன் வைத்திருப்பது ஓக்கே.டைரியிலோ,ஒரு பெட்டியிலோ வைத்திருப்பார்கள்.இவர் ரெடி ஸ்டாக்காக மணிபர்சில் வைத்திருப்பது நம்பகத்தன்மை இல்லை. லாக்கரில் ஒரு டைரியிலிருந்து எடுப்பது போல் காட்டி இருக்கலாம்.



ரசித்த வசனங்கள்


1.  கருப்பு சட்டை போட்டவனை கோயிலில் பார்த்தா ஷாக் ஆவோமே அப்படித்தான் உன்னை இந்த பாரில் பார்த்ததும் ஷாக் ஆகிட்டேன்.
சபரிமலைக்குப்போறவங்க கூட கருப்பு சட்டை தானே போட்டிருக்காங்க?
2 நீ வெர்ஜினா?
இந்தக்கேள்வியை நாங்க பசங்க கிட்டே கேட்கலாம்.பசங்க பொண்ணுங்க கிட்டே கேட்கக்கூடாது.

3 இவ்ளோ இன்னொசண்ட்டா இருந்து மறுபடி என்னை ப்ரப்போஸ் பண்ண வெச்சுடாதே.

4 ஒரு  பையன்  வெட்கப்பட்டு இப்போதான் பார்க்கறேன்.க்யூட்டாதான் இருக்கு.

5 என்னை முதன் முதலா ப்ரப்போஸ் செய்த பொண்ணு நீ,அதனால் சாகும் வரை என் மைண்ட்ல இருப்பே.

6 பசங்க கிட்டே கிஸ் கேட்டா உடனே கொடுத்துடுவாங்க,ஆனா பொண்ணுங்க கிஸ் கொடுக்கனும்னா அதுக்கு ஒரு மொமெண்ட் க்ரியேட் ஆகனும்.

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்க். - 13+ 

சி பி எஸ் பைனல் கமெண்ட் -  காதலர்களுக்கு மட்டுமல்ல ,காதல் கிடைக்காத ஏக்கத்தில் இருப்பவர்களுக்கும் பிடிக்கும். ரேட்டிங்க் 3/5

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி-2026 ஆகஸ்ட் 28 வெளியாக இருக்கும் 5 தமிழ்ப்படங்கள்

/9/2026 முதல் புதிய தமிழ்ப்படங்கள் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை போட்டிருப்பதால் இந்த வாரம் போட்டி போட்டுக்கொண்டு பல படங்கள் ரிலீஸ் ஆகின்றன.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட   டாக்சிக் மெகா பிளாப் ஆனதால் தியேட்டர் கிடைக்கும் என்ற தைரியத்தில் கடைசி நேரத்தில் சில படங்கள் கூடுதலாக ரிலீஸ் ஆகலாம்.



எதிர்பார்ப்பில் இருக்கும் இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள் ,இரணடு
 லோ பட்ஜெட் படங்கள்,ஒரு ரீ ரிலீஸ் படம் என ஆக மொத்தம் 5 படங்கள் வெளியாகின்றன.



1 ஹாய்
2 ஒன்ஸ்மோர்
3 அமரம்
4 ஆக்குவாய் காப்பாய்
5 இதயத்தை திருடாதே(1989)




1 ஹாய்

நயன் தாராவின் சொந்தப்படம் இது.கவின் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நாயகியாக நடிப்பதில் இண்டஸ்ட்ரியில் ஆச்சரியமாகப்பார்க்கிறார்கள்.


ஏஜ் கேப் லவ் ஸ்டோரி இப்போது பிரபலம் ஆகி வருகிறது.18 வயது நாயகி + 41 வயது நாயகன் என்று கதை அமைப்பில் வந்த விஸ்வநாத் & சன்ஸ் ஹிட். 19 வயது நாயகி 30 வயது நாயகன் என்ற கதை அமைப்பில் வந்த பெத்லேகம் குடும்ப யூனிட் என்ற மலையாளப்படம் மெகா ஹிட்.

சச்சின் டெண்டுல்கர் கூட தன்னை விட வயதில் மூத்த  பெண்ணைதான் மணந்திருக்கிறார்.அது போல  வயதில் சீனியர் ஆன நயன் தாரா ,ஜூனியரான கவின் ஜோடியாக நடிப்பது பரபரப்பாகப்பேசப்படுகிறது.

ட்ரெய்லரைப்பார்க்கும்போது நயன் தாராவின் கெட்டப் யாரடி நீ மோகினி பட சாயலில் இருக்கிறது.கண்ணியமான உடை ,கவுரவமான  தோற்றத்தில் நடிகை நயன் தாராவைப்பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.




ரசித்த வசனங்கள்


1 ஆணின் வாழ்க்கையில் 3 ரகங்கள்

1 காதலிச்சுக்கல்யாணம் பண்றது.
2 கல்யாணம் பண்ணிட்டுக்காதலிக்கறது.
3 காதலிக்கவும் முடியாம ,கல்யாணம் பண்ணவும் வழியில்லாம  வேஸ்ட் லக்கேஜா சுத்திட்டு இருப்பது.

2. நாட்ல எவ்ளோ பிரச்சனைகள் இருக்கு ? நீ என்னடான்னா ஒரு பொண்ணு உன்னை லவ் பண்ணலைன்னு சாகப்போறேங்கற.உனக்கெல்லாம் மனசாட்சி இருக்கா?

3 என்னை விட கண்ணாடி மட்டும் தான் உனக்கு சிறுசு,மூத்த சமாச்சாரம் எல்லாம் பெருசு.
4 எப்பேர்ப்பட்ட பொண்ணா அவ இருந்தாலும் நீ எடுக்கற ரிஸ்க் ரொம்பப்பெருசு.

5 இதுவரை ஈசியா தோத்துட்டேன் ,இனி உசுரைக்குடுத்தாவது ஜெயிப்பேன்.

6 அவளை மாதிரி இன்னொருத்தி கிடைக்க மாட்டா

புது இயக்குநர் விஷ்ணு ஏதவன் இயக்கி இருக்கிறார் .ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார்.இதில் கவின்,நயன் தாரா,பிரபு,ராதிகா,கே பாக்யராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

சென்சாரில் யு ஏ சான்றிதழ் தந்திருக்கிறார்கள்.ரன்னிங்க் டைம் 144 நிமிடங்கள்.




2 ஒன்ஸ்மோர்


சிவாஜி கணேசன் ,விஜய் நடிப்பில் 1997ல் ரிலீஸ் ஆகி சுமாரான வெற்றி பெற்ற படம்.அதே டைட்டிலில் இப்போது அர்ஜூன் தாஸ் ,அதிதி ஷங்கர்   ஜோடியாக நடிக்கிறார்கள் 

இசை ஹிஷாம் அப்துல்  வஹாப்.இவர் தெலுங்கில் மெகா ஹிட்டான ஹாய் நன்னா ,மலையாளத்தில் ஹிட்டான ஹிருதயம் ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர்.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கி இருக்கிறார்.


வழக்கமாக அர்ஜூன் தாசை ரவுடியாக ,வில்லனாக ,ரப் அண்ட் டப் (rough and tough) கேரக்டரில் பார்த்துப்பழகிய நமக்கு ட்ரெய்லரில் லவ்வர் பாயாக ,லவ்வபிள் பாயாகப்பார்ப்பது புதுசாக இருக்கிறது.

ரசித்த வசனங்கள்

1 உன் பர்த் டே எப்போ?சொல்லு.

மூணு மாசத்துக்கு முன்னாடியே முடிஞ்சிடுச்சு.ட்ரை பண்ணாத.

என் பர்த் டே எப்போ?னு சொல்லு?

நீ என்ன மதர் தெரேசாவா?

ஓஹோ.எங்கே?மதர் தெரேசா பர்த் டே எப்போ?சொல்லு.

2 ஹாய்...ரகு...நான் தான் அஞ்சலி...

இங்கே என்ன பண்றே?

Flirt பண்றேன்.


3 நீ தப்பான ஆள் பின்னால சுத்தறே.

ஓ.நீ அந்த மாதிரி டைப்பா? (Gay)

4 ஒரு வேளை நான் உன்னைத்துரத்தி வர்றதை நிறுத்திட்டா நீ என்ன செய்வே?

நீ நிறுத்த மாட்டே.

ஒரு வேளை நிறுத்திட்டா?

நான் உன்னைத்தேடி வருவேன்.

5. நீ நல்லா பொண்ணா இருந்தா உன்னைக்கையெடுத்துக்கும்பிடறேன்,என்னை சுத்தி வர்றதை நிறுத்து

6 ஆமா,உனக்கு ஏன் என்னைக்கண்டதும் காதல் ?

நான் ஒரு நல்ல தமிழ்ப்பையன்,நீ ஒரு நல்லகேரளப் பொண்ணு.நீ எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் பார்த்ததில்லையா?


7 நீ ஆட்டோ கிராப் பார்க்கலையா?விண்ணைத்தாண்டி வருவாயா ?இந்த கிராஸ் கல்ச்சர் லவ் ( மாநிலம்.விட்டு மாநிலம்) எல்லாம் பெய்லியர் தான்.

டிராஜடினு நீயா ஏன் முடிவு பண்றே?இது காதல்.


சென்சாரில் யு ஏ சான்றிதழ் தந்திருக்கிறார்கள்.ரன்னிங்க் டைம் 137 நிமிடங்கள்.



3. அமரம்


நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த அமரன் படத்துக்கும்,மம்முட்டி நடிப்பில் 1991ல் ரிலீஸ் ஆன அமரம் படத்துக்கும் ,இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தேஜஸ் கிருஷ்ணன் + ஐரா அகர்வால் ஜோடியாக நடிக்க  திருவருள் கிருஷ்ணன் இயக்கி இருக்கும் ரொமாண்டிக் ஆக்சன் திரில்லர் இது.


 செம்மரக்கடத்தலை மையப்படுத்தி ஆல்ரெடி தமிழில் முரளி நடித்த அதர்மம் ,தெலுங்கில் புஷ்பா ,புஷ்பா 2 ஆகிய படங்கள் வந்திருக்கின்றன.

இதிலும் அந்த செம்மரக்கடத்தல் பேக்டிராப்பில் தான் கதை நகரும் போல் தெரிகிறது.

ட்ரெய்லரைப்பார்த்தால் அடிதடி வெட்டு குத்து என்று ரத்தம் தெறிக்கிறது.



ரசித்த வசனங்கள்

1 இங்கே சம்பவம் பண்ணாத்தான் காசு.துணிச்சலுக்குத்தான் முதல் மரியாதை.

2 அவன் பார்க்காத வன்மமும் இல்லை,செய்யாத  வன்முறையும் இல்லை.
3  அவன் தேவையானதை மட்டும் தான் பொறுத்துக்குவான்.
4 ஒரு உசுரைப்பார்த்தா மொத்தத்தொழிலும் வேற பக்கம் போயிடும்.

5 உன்னை நம்பி யாரை வேணா அனுப்பலாம்.கருப்பு சாமி மாதிரி நீ.

6 தன் தலையைக்குடுக்கறவந்தான் அடுத்த மாவட்டத்தலைவன்.

7 நீங்க நினைக்கற மாதிரி அங்கே இருக்கறவன் மந்தைல இருக்கும் ஆடு இல்ல.

மிக்கி ஜே மேயர் தான் இசை.

ஜார்ஜ் மரியான் ,ஹரீஸ் பெராடி முக்கிய ரோல்களில் நடித்திருக்கிறார்கள்..



4 ஆக்குவாய் காப்பாய்


கனடாவில்  தயாரிக்கப்பட்ட படம் இது.கதை ,திரைக்கதை ,இயக்கம் எஸ்  மதி வாசன்.

சகாப்தன்  எழுதிய அரங்காடல் நாடகத்தைத்தழுவித்திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

கனடாவில் வாழும் ஒரு தமிழ்ப்பெண்ணின் போராட்டங்களை மையமாகக்கொண்ட கதை இது.


தொடக்கம்,வெண்ணிலவின் அரங்கேற்றம்,நோக்க நோக்க ஆகிய படங்களைத்தயாரித்த லூனார் மோஷன் பிக்சர்சாரின் படம் இது.

அஸ்பெக்ட்ஸ் ஆப் அக்செப்ட் என்ற சப் டைட்டிலுடன் வருகிறது



ரசித்த வசனங்கள்

1 வாழ்க்கைல எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?வாழ்க்கைத்துணையைத்தேர்ந்தெடுப்பதில் என் முதல் சாய்ஸே ராங்க்.

2 நேச்சுரல்சை ஷேர் பண்றதுல ஆட்சேபனை இல்லையே?

நோ நோ

இப்போ நேச்சுரல்ஸ்...

விட்டா  லைபையே ஷேர் பண்ணச்சொல்லிக்கேட்பீங்க போலயே?

3 எல்லாத்தையும் வித்தியாசமான கண்ணோட்டத்திலேயே பார்ப்பது எதுக்கு ?நான் என்ன கிரிமினல் குத்தமா செஞ்சுட்டேன் ?





5 இதயத்தைத்திருடாதே (1989)


இயக்குநர் மணிரத்னம் தெலுங்கில் முதன் முதலாக இயக்கிய படம் கீதாஞ்சலி.அதன் தமிழ் டப் வெர்சன் தான் இது.

நாகார்ஜூன் ,கிரிஜா ,அமரர் சவுகார் ஜானகி நடித்த படம்.

இதில் வாலி எழுதி இளையராஜா இசையமைத்த 7 பாடல்களும் மெகா ஹிட்.


நாயகன் ,நாயகி இருவருமே விரைவில் இறக்க இருப்பவர்கள்.நோயாளிகள் இவர்கள் காதலித்தால் என்ன ஆகும்?என்பது தான் கதையின் ஒன் லைன்.படம் முழுக்க ஜாலி ,கலாட்டாவாக இருக்கும்.

இதில் நாயகன் நாகார்ஜூன் ஒரு சீனில் கூட சிரிக்கவே மாட்டார்.நாயகி கிரிஜா படம் முழுக்க சிரித்த முகத்துடன் இருப்பார்

சூப்பர் ஹிட் பாடல்கள்

1.  விடிய விடிய நடனம் சந்தோஷம் ( ஹீரொ ஓப்பனிங்க் சாங்க்)

2 ஆத்தாடி அம்மாடி  தேன்மொட்டுதான்  ( ஹீரோயின் ஓப்பனிங்க் சாங்க்)

3. காவியம் பாட வா தென்றலே 

4. ஓ ப்ரியா ப்ரியா (கனவு பாட்டு )

5 காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும் 

6 ஓ பாப்பா லாலி 

7 ஓம் நமஹ உயிரின்

பி சி ஸ்ரீராமின் கேமரா வர்ண ஜாலம் நிகழ்த்தி இருக்கும் படம் இது. தேசிய விருது பெற்ற படம்.