YOUNG SHERLOCK (2026) -ஆங்கிலம்/தமிழ்-வெப் சீரிஸ் விமர்சனம் (க்ரைம் இன்வெஸ்டிகேசன் திரில்லர் @அமேசான் பிரைம்
இது ஒரு பிரிட்டிஸ் வெப் சீரிஸ். மொத்தம் 8 எபிசோடுகள்,ஒவ்வொரு எபிசோடும் 43 நிமிடங்கள் டூ 55 நிமிடங்கள். ஆக மொத்தம் ஆறே கால் மணி நேரம் இருந்தால் ஒரே சிட்டிங்கில் பார்த்து விடலாம்.தமிழ் டப்பிங் கில் கிடைக்கிறது.மர்டர் மிஸ்ட்ரி க்ரைம் இன்வெஸ்டிகேசன் திரில்லர் ஆக வந்திருக்கிறது.
ஆர்தர் கனான் டோலே எழுதிய யங்க் ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற நாவலைத்தழுவி திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த வெப் சீரிஸ்க்கு நாவலின் டைட்டிலே வைக்கப்பட்டது.
ஸ்பாய்லர் அலெர்ட்
1870 ஆம் ஆண்டு நடக்கும் கதை.
நாயகன் 19 வயது நிரம்பிய இளைஞன்.பணத்தேவைக்காக இல்லாமல் ஒரு சாகசத்துக்காக,சவாலுக்காக ,திரில்லிங்க் அனுபவத்துக்காக பிக் பாக்கெட் அடித்து மாட்டிக்கொள்கிறார்.கோர்ட்டில் ஜட்ஜையே எதிர்த்துப்பேசுகிறார்.இதனால் கோபம் ஆன ஜட்ஜ் பிக் பாக்கெட் குற்றத்துக்காக 2 மாதங்கள் ,எதிர்த்துப்பேசியதற்கு தண்டனையாய் 4 மாதங்கள் ஆக மொத்தம் 6 மாதங்கள் சிறை தண்டனை என தீர்ப்புக்கொடுக்கிறார்.
சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த நாயகனை நாயகனின் அண்ணன் அழைத்து வந்து ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில் புரொபசர்களுக்கு உதவியாளராக சேர்த்து விடுகிறார்.
அங்கே நிகழும் ஒரு வெடி குண்டு விபத்து சம்பவம்,ஒரு புரொபசர் கொலை,ஒரு திருட்டு சம்பவம் ஆகிய 3 வழக்குகளில் நாயகன் கைது செய்யப்படுகிறார்.
சிறையில் இருந்து தப்பி வந்த நாயகன் தான் நிரபராதி என்பதை நிரூபித்து உலகிற்குக்குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதுதான் மொத்தக்கதை.
நாயகன் ஆக ஹீரோ பியன்னெஸ் டிபின் பிரமாதமாக,இளமைத்துள்ளலுடன் நடித்திருக்கிறார்.இவர் ஒவ்வொரு முறை துப்பு கண்டு பிடிக்கும் லாவகம் அருமை.
நாயகனின் நண்பன் ஆக டோனல் பின் நையாண்டித்தனமான காமெடி செய்வதில் கை தட்டல் பெறுகிறார்.மேஜிக் ரைட்டர் அமரர் சுஜாதாவின் நாவல்களில் வரும் வசந்த் கேரக்டரை நினைவுபடுத்துகிறார்.
நாயகனின் அண்ணன் ஆக மேக்ஸ் அயன்ஸ் பொறுப்பாக நடித்திருக்கிறார்.ஒவ்வொரு முறை நாயகன் சிக்கலில் மாட்டும்போதெல்லாம் அவருக்குப்பக்க பலமாக இருந்து உயர் அதிகாரிகளிடம் வாதிடுவது அருமை.
நாயகனின் அம்மாவாக நடாசா மெக்கலின் தரமான நடிப்பு.
சைனீஷ் இளவரசியாக வில்லித்தனம் காட்டும் ஜின் செங்க் ஆக்சன் சீக்வன்சில் தூள் பரத்துகிறார்.மார்ஷியல் ஆர்ட்ஸ் நிஜமாகக்கற்ற ஒருவரால் தான் இப்படிப்பட்ட சாகசங்களை செய்ய முடியும்.
மற்ற அனைத்து நடிக,நடிகையரின் பங்களிப்பும் கன கச்சிதம்.
ஒளிப்பதிவு,எடிட்டிங்,பின்னணி இசை போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் தரம்.
இயக்கி இருப்பவர் கை ரிக்சி.
சபாஷ் டைரக்டர்
1 நாயகனின் தங்கை சிறுவயதில் இறந்ததாகவும்,அதற்கு நாயகன் தான் காரணம் என்று குற்றம் சுமத்தப்படுவதும் அந்த மர்மங்கள் விலகுவதும் ஒரு மர்ம நாவல் படித்த திருப்தி
2 சைனீஷ் இளவரசி ஏன் வில்லியாக செயல்படுகிறார்?நாயகனை எதனால் மாட்டி விடுகிறார் என்பதற்கான காரணங்கள் சுவாரஸ்யமானவை.
3 ஆரம்பத்தில் 3 கேஸ்கள் என்று காட்டிவிட்டு மொத்தத்தில் ஒவ்வொன்றாகப்பல கேஸ்களை டீல் செய்வது அருமை.
4 நாயகன்,நாயகனின் நண்பன்,நாயகனின் அண்ணன் இந்த மூன்று கேரக்டர்களின் கேரக்டர் டிசைன்,நடிப்பு அனைத்தும் அருமை.
5 இது ஒரு பீரியாடிக் ஹிஸ்டாரிக்கல் ஸ்டோரி என்பதால் ஆர்ட் டைரக்சன்,ஆடை வடிவமைப்பு,புரொடக்சன் டிசைன் எல்லாம் பிரம்மாண்டம்
6 ஷெர்லாக் ஹோம்சின் இளமைப்பருவம் எப்படி இருந்தது என்பது நாம் இதுவரை கேள்விப்படாதது.அதனால் காட்சிகளில் ரொம்பவே சுவராஸ்யம்.
7:இன்வெஸ்டிகேசன் போர்சன்ஸ்,ட்விஸ்ட்,காமெடி என ஜனரஞசக அம்சங்களைக்கலந்து கட்டித்தந்த விதம் பிரமாதம்.
ரசித்த வசனங்கள்
1 மனுசன் செய்யும் பெரிய தப்பே எதிரி வெளில இருக்கான்,உள்ளே இல்லை என்று நம்புவதே.
2 உன் எதிரியைப்பற்றித்தெரிய வேண்டும் எனில் நீயே உன் எதிரி ஆக மாறு
3. எதிரியைக்குழப்புவதில் தான் நம் திறமை இருக்கிறது.
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 மெயின் கதை என்ன?என்பதை நாம் ஒரு டைரியில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டுமோ?என்று நினைக்கும் அளவு திரைக்கதையில் ஏகப்பட்ட லேயர்கள்,மானாவாரியான சம்பவங்கள் குழப்பி அடிக்கின்றன.
2 பரபரப்பு , வேகம்,விறுவிறுப்பு குறைவு.கொஞ்சம் மெதுவாகத்தான் காட்சிகள் நகர்கின்றன.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+ ஒரு இதழ் முத்தக்காட்சி உண்டு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - க்ரைம் இன்வெஸ்டிகேசன் திரில்லர். விரும்பிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.ஆனால் பொறுமை தேவை.முதல் 2 எபிசோடுகள் மெதுவாகத்தான் நகரும்.கடைசி எபிசோடில் பல திருப்பங்கள் உண்டு.ரேட்டிங்க் 3/5
| Young Sherlock | |
|---|---|
| Genre | Mystery |
| Created by | Matthew Parkhill |
| Inspired by | Young Sherlock Holmes by Andrew Lane Sherlock Holmes canon by Arthur Conan Doyle |
| Developed by | |
| Starring | |
| Opening theme | "Days Are Forgotten" by Kasabian |
| Country of origin | United Kingdom |
| Original language | English |
| No. of series | 1 |
| No. of episodes | 8 |
| Production | |
| Executive producers |
|
| Producer | Max Keene |
| Running time | 43–55 minutes |
| Production companies |
|
| Original release | |
| Network | Amazon Prime Video |
| Release | 4 March 2026 |
