Tuesday, September 30, 2025

பல்டி (2025 ) - மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் (ஸ்போர்ட்ஸ் ஆக்சன் த்ரில்லர் )

 

          அறிமுக  இசை அமைப்பாளர் சாய் அப்யங்கர் தன முதல்படத்திலேயேயே ரூ  2 கோடி சம்பளம்  பெற்று இருக்கிறார் . மலையாளப்பட உலகில் இது முதல் முறை .அறிமுக  இயக்குனர்  உன்னி சிவலிங்கம்  பாதி தமிழர் , பாதி மலையாளி  என்பதாலோ என்னவோ  மலையாளத்தில்  படத்தை இயக்கி அதை தமிழில் டப்செய்து வெளியிட்டு இருக்கிறார் ( இரு மொழிகளில்  உருவான படம் என்று விளம்பரம் ) .லோ பட்ஜெட்டில் உருவான இந்தப்படம்  26/9/25 அன்று திரை அரங்குகளில் வெளியாகி  முதல் 3 நாட்களில்  3 கோடி  ரூபாய் வசூல் செய்து இருக்கிறது     

பிரேமம்  மெகா ஹிட் படத்தின் இயக்குன ர் அல்போன்ஸ் புத்திரன் வில்லன் ஆக அறிமுகம்  ஆகி இருக்கும் படம் இது . நாயகன்  ஷேன் நிகாம் நடிக்கும் 25 வது படம் இது          

ஸ்பாய்லர்  அலெர்ட்

வில்லன் நெம்பர் ஒன்  ,வில்லன் நெம்பர் 2 , வில்லி   ஆகிய   மூவரும் ஒரே ஊரில்  வட்டித்தொழில்  செய்து வருபவர்கள் ..அவர்களுக்குள்  தொழில் முறை போட்டி இருப்பதால் மூவருக்கும் ஆகாது 

நாயகன் கபடி   பிளேயர் .தனது நண்பர்கள்   மூவருடன் இணைந்து  பல கபடி  மேட்ச்களில்  கலந்து  கொண்டு கப் அடித்தவர் /வில்லன் நெம்பர் ஒன் வைத்திருக்கும் கபடி டீம்  உடன் நாயகண் அண்ட் கோ   விளையாடி  அவர்களை ஜெயித்து கப் அடித்து விடுகிறது 


உடனே   வில்லன் நெம்பர்  2   நாயகன் அண்ட் கோ   வை தனது   டீம்   உடன் இணைந்து  விளையாடக்கேட்டு க்கொள்கிறான். சுதாரித்த  வில்லன் நெம்பர் ஒன்  நாயகன் அண்ட் கோ    வுக்கு 3 மடங்கு   அதிகம் சம்பளம் தருவதாக ஆசை காண்பித்து தனது  டீமில் சேர்த்துக்கொள்கிறான் 


ஒரு கட்டத்துக்குப்பின்  நாயகன்  அண்ட் கோ  வில்லன் நெம்பர் ஒன்   உடைய அடியாட்கள்  போல ஆகிறார்கள் 

வில்லன் நெம்பர் ஒன்   கொடுமையான வட்டி வசூல் செய்பவன் . அவனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம் . நாயகனுக்கு ஒரு காதலி உண்டு அவளுக்கு ஒரு அண்ணன் உண்டு . அவன்  வில்லன் நெம்பர் ஒன்னால்  பாதிக்கப்படும்போது  வில்லனின் அடியாள்  நாயகி மீது   கை  வைக்கிறான்  . அப்போது  நாயகன்  வில்லன் நெம்பர் ஒன் உடைய   அடியாட்களை அடித்து   துவம்சம் செய்து விடுகிறான் .அப்போது   வில்லன் நெம்பர் ஒன்  க்கும்   அடிபடுகிறது 

வில்லன் நெம்பர் ஒன்   நாயகனைபழி  வாங்கத்துடிக்கிறான் .ஆல்ரெடி   நாயகன்  வில்லன் நெம்பர் ஒன்  னிடம்  அடியாள் ஆக   இருந்த போது வில்லன் நெம்பர் 2  வை   அடித்து   வெளுத்து விட் டவன் தான் . இப்போது  இரு வில்லன்களும்   நாயகனுக்கு எதிரி ஆகிறார்கள் . இந்த  சந்தர்ப்பத்தைப்பயன்படுத்தி  வில்லி  ஒரு கேம் ஆடுகிறாள் 

வில்லன் நெம்பர் ஒன்  , வில்லன் நெம்பர்2  , வில்லி   ஆகிய  மூவரையும் நாயகன் எப்படி சமாளிக்கிறான்  என்பது மீதி திரைக்கதை 

நாயகன்  ஆக ஷேன் நிகாம்  நன்றாக   நடித்து இருக்கிறார் .கபடி  ஆடும்போதும் , சண்டைக்காட்சிகளிலும்  கலக்கி இருக்கிறார் .காதல்   காட் சிகளில்  நாயகியிடம்    பம்மும்போதும்  கச்சிதம் .

நாயகி ஆக  ப்ரீத்தி   அஸ்ராணி  இளமைத்துள்ளலுடன் நடித்து இருக்கிறார் . அதிக வாய்ப்பு இல்லை .ஆனால் வந்தவரை அருமை 

வில்லன் நெம்பர் ஒன்   ஆக   இயக்குனர்   செல்வராகவன் கொடூரமான  வில்லத்தனம்செய்கிறார் . ஆனால்  ஆல்ரெடி  பல படங்ககளில்  அவரை  நல்லவராகப்பார்த்து  விட்டு வில்லனாகப்பார்க்க என்னவோபோல் இருக்கிறது 

வில்லன் நெம்பர் 2  ஆக  பிரேமம்  மெகா ஹிட் படத்தின் இயக்குன ர் அல்போன்ஸ் புத்திரன் தெனாவெட்ட்தாக வருகிறார் . ஆனால்  ஓப்பனிங்கிலேயே  நாயகன்   அவரை  துவைத்துக்காயப்போட்டு விடுவதால் அவரது கேரக்ட்டர்  வலிமை இழக்கிறது 

வில்லி ஆக பூர்ணிமா மோகன்  பரவாயில்லை ரகம் தான் . சுருட்டு  நன்றாகப்பிடிக்கிறார் , மற்றபடி  அதிக வேலை இல்லை 

நாயகனின்   நண்பன் ஆக சாந்தனு கே   பாக்யராஜ் நடித்து இருக்கிறார்   , இவரது  கேரக்ட்டர்  டிசைனில் தெளிவில்லை .இவர்   நல்லவரா? கெட்டவரா? தெரியவில்லை 

அறிமுக  இசை அமைப்பாளர் சாய் அப்யங்கர்  இசையில்  3 பாடல்கள் .ஜாலக்காரி  செம ஹிட்டு மெட்டு .பின்னணி இசையில்  முத்திரை  பதித்து இருக்கிறார் . 

ஒளிப்பதிவு  அலெக்ஸ்  ஜெ பலிக்கல் .ஆக்சன்  சீக்வன்ஸ் , கபடி மேட்ச்  களை  படமாக்கிய விதம் அருமை .சிவகுமார் வி பணிக்கரின்  எடிட்டிங்கில்  படம் 151 நிமிடங்கள்   ஓடுகிறது . எந்த சீனும்  பெரிதாக போர் அடிக்கவில்லை . விறுவிறுப்பாக நகர முக்கியக்காரணம் கபடி மேட்ச் தான்


சபாஷ்  டைரக்டர்


1  விக்கி  அண்ட்  சந்தோஷ்  டீமின் ஆக்சன்  சீக்வன்ஸ்   அதகளம் .படத்தின்  பெரிய  பிளஸ் பாயிண்ட் டே  பைட் தான் . குறிப்பாக  ஹோட்டல்  கடையில்  நடக்கும்   முதல்  பைட் . வில்லன் நெம்பர்  2 வை  துவம்சம் ஆக்கும்     சோடா  பேக்ட்ரீ  2வது  பைட் , லாட்ஜில்   நடக்கும்  பைட் ,க்ளைமாக்ஸ்  பைட்  அனைத்தும்  அட் டகாசம் 


2  நாயகன் அண்ட்     டீம்  போலீசிடம்  இருந்து      தப்பிக்கும் சீனை  கபடி  மேட்ச்சில் ரைடு  வரும்போது எஸ் ஆகும்  சீனோ டு  மேட்ச்   பண்ணி  எடிட்   செய்த   விதம் அருமை 


3  நாயகன்  வில்லனின்  இடத்திலேயே   வில்லனை  , அடியாட்களை  அடித்து   துவம்சம்  செய்யும்  ஆக்சன்  ஸீக்வன்ஸ் ரன் படத்தில் வரும்  ஓப்பனிங்க்  பைட்டுக்கு நிகரான  கூஸ்பம்ப் சீன் 


4  நாயகன்  - நாயகி ரொமாண்டிக்   போர்சன்  குறைவாக வந்தாலும் நிறைவாக இருந்தது . இருவரின் கெமிஸ்ட்ரி  நன்கு ஒர்க் அவுட் ஆகி இருந்தது 


5  சண்டைக்காட் சிகளி ல்  டூப்  இல்லை .அனைவரும்  ரியலாக பைட் போட்டிருக்கிறார்கள் . குறிப்பாக நாயகன்  ஷேன் நிகாம் ,வில்லன் நெம்பர் 2   இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்  இருவரும்  செம உழைப்பு 

 ரசித்த  வசனங்கள் 


1   நடக்காத  ஒரு காரியத்தை நடத்திக்காட்டுவதுதான் கெத்து 

2  தெரு   நாய்கள்   யாரு பிஸ்கெட் போட் டாலும்  சாப்பிடும் 

3  நாம நாலு பேர் .நீ  பாட்டுக்குத் தனியா இனி முடிவு எடுக்காதே 

4  அவங்க   பேரு ,நாம நாலு பேர் . பொளக்கலாம்கறியா?  தெறிக்க   விடலாம்கறியா? 

பொளந்துட்டு   தெறிக்க விடலாம் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   கொடூரமான   வில்லன் என சித்தரிக்கப்பட்ட  செல்பவராகனை   நாயகன்  இடைவேளைக்கு   முன்பே அடித்து    விடுவதால்  அந்த  வில்லன் மேல்  இருக்கும் பயம் குறைகிறது 

2  இடைவேளைக்கு முன்பேயே   வில்லன்  நெம்பர்  2 சோடாபாபுவை   ஹீரோ அண்ட் கோ   துவைத்துக்காயப்போ ட்டு விட்டு   வில்லியிடம் க்ளைமாக்சில்  சோடா பாபு வை  நீங்க தான் முடிக்கணும் என கெஞ்சுவது  முரண் 

3  இது   ஒரு அரதப்பழசான  கதை .

4  சாந்தனு  கேரக்டர்  டிசைன்  பல இடங்களில்  குழப்பம்

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  16+

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - கபடி  மேட்ச் பார்ப்பதில்   ஆர்வம் உள்ளவர்கள் ,  சண்டைக்காட் சிகளை  ரசிப்பவர்கள்  பார்க்கலாம் .விகடன்  மார்க் யூகம் 42 . ரேட்டிங்க் 2.75 / 5 


thanx  - anicham  2025 oct  month issue

Balti
Theatrical release poster
Directed byUnni Sivalingam
Written byUnni Sivalingam
Produced bySanthosh T. Kuruvilla
Binu George Alexander
Starring
CinematographyAlex J. Pulickal
Edited byShivkumar V. Panicker
Music bySai Abhyankkar
Production
companies
STK Frames
Binu George Alexander Productions
Release date
  • 26 September 2025
Running time
151 minutes[1]
CountryIndia
LanguagesMalayalam
Tamil
Box office₹3.00 crore [2]





Monday, September 29, 2025

ரைட் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( சஸ்பென்ஸ் த்ரில்லர் )

               

          


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் லேப்டாப்   ரிப்பேர்  செய்பவன் ., அவனுக்கு 25 வயதில் ஒரு மகன் .தன  நண்பர்களுடன்  ஒரு பார்ட்டிக்குப்போனவன் திரும்ப வரவில்லை .நண்பர்களிடம் கேடடால் சரியான பதில் இல்லை .    .போலீஸ் ஸ்டேஷனில்  புகார் கொடுக்கப்போகிறான் 


 நாயகி  ஒரு சப் இன்ஸ்பெக்ட்டர் . தனது  திருமணத்துக்கு  சக  போலீஸ் காரர்களை அழைக்க   அதே    .போலீஸ் ஸ்டேஷனுக்கு   வருகிறார் 


அந்த    .போலீஸ் ஸ்டேஷனில்  தற்போது  ஒரே  ஒரு ஏட்டும்  லாக்கப்பில் சில கைதிகளும் மட்டும் தான் இருக்கிறார்கள் . அந்த ஏரியாவில்  வி ஐ பி  வந்திருப்பதால் அனைவரும் பாதுகாப்புக்கு சென்றிருக்கிறார்கள் 



அப்போது வில்லன்   போன் செய்கிறான் .   .போலீஸ் ஸ்டேஷனில்  டைம்  பாம் வைத்திருப்பதாகவும் அவன் சொன்னபடி செய்யாவிடடால்  வெடிக்க வைக்கப்போவதாகவும் மிரட்டுகிறான் .அவனது கோரிக்கை என்ன? உடனடியாக  ஒரு ஜட்ஜ்  அங்கே  வர வேண்டும் , ஒரு பழைய கேஸை  விசாரித்துத்தீர்ப்பு தர வேண்டும் 


இதற்குப்பின்  நடக்கும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை 


 நாயகன்  ஆக அருண் பாண்டியன்  கொஞ்சம்    ஓவர் ஆக்டிங்க் தான் . ஊமை  விழிகள்  காலத்தில் இருந்தே  இவருக்கு பைட்  வரும்  அளவுக்கு ஆக்டிங்க் வரவில்லை நாயகியாக  வரும் அக்சரா ரெட்டி  போலீஸ் ஆபீசர் கம்பீரம் மிஸ்ஸிங்க் . நீதிபதி  ஆக வரும் வினோதினி சிறப்பான நடிப்பு .சப்  இன்ஸ்பெக்ட்டர்  ஆக வரும் நாட்டி என்கிற நடராஜ்  பரவாயில்லை ரக நடிப்பு .,ஆனால் இவருக்கு அதிக வாய்ப்பில்லை . போலீஸ்  ஏட்டாக வரும்  மூணாறு ரமேஷுக்கு  நடிக்க நல்ல வாய்ப்பு .சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார் திருடன்  ஆக வரும் பழைய  ஜோக் தங்கதுரை  மொக்கை  போடுகிறார் 


இசை  குணா சுப் ரமணியம் . பின்னணி இசை சுமார் ரகம் . ஒளிப்பதிவு பத்மேஷ் , பரவாயில்லை ரகம் . இயக்கம் அறிமுக இயக்குனர் சுப்ரமணியம் ரமேஷ் குமார் 

எடிட்டிங்க்  கச்சிதம்  2 மணி நேரம்  டைம் ட்யூரேசன் 


சபாஷ்  டைரக்டர்

 1 போலீஸ்  ஸ்டேஷனில்  கோர்ட்  அமைக்கும் ஐடியா புதுசு 


2  முதல் பாதி பரபரப்பு 


3  நாயகன் தான்  வில்லனோ  என இடைவேளையில் ஒரு திருப்பம் தந்த விதம் 


4 ஜட்ஜ் ஆக நடித்த வினோதினி ,போலீஸ் ஏட் டாக  நடித்த   மூணாறு ரமேஷின் நடிப்பு 


  ரசித்த  வசனங்கள் 

1   நானாவது போலீஸ்  டிரஸ்  போட்டுட்டு  திருடறேன்,அவனவன் ஸ்டேஷன்லயே திருடறான் 


2   வேலில  போற  ஓணானை  வெள்ளிக்கிழமை  ஆனா கானோமாம் 


3 இது   டைம்  பாம்  தான்னு கண்டு பிடிச்சுட் டேன் 


எப்படி ? 


பாம்  பக்கத்தில் டைம் ஓடுதே? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 பிளாஷ்பேக்  கதை எடுபடவில்லை 


2  மந்திரி  மகன்   தப்பு செய்வது , அவனுக்குத்தண்டனை  தருவது  எல்லாம் அரதப்பசாசான கதை 


3  முக்கியமான  நேரத்தில்  உயர் அதிகாரிகள் ஸ்பாட்டுக்கு வராமல் வீடியோ காலில் பேசுவது அபத்தம் 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்

 - 16+


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - முதல் பாதி பரபரப்புக்காக டி வி ல போடும்போது பார்க்கலாம் . பின் பாதி  கொடுமை .விகடன் மார்க் யூகம் 39 . ரேட்டிங்க்  2 . 5 

Friday, September 26, 2025

INSPECTOR ZENDE (2025) -ஹிந்தி /தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் காமெடி த்ரில்லர் ) @ நெட் பிளிக்ஸ்

       

                  

புகழ்  பெற்ற  சீரியல்  கில்லர் ஆன சார்லஸ்  சோப்ராஜ்  பற்றிய  உண்மைக்கதைதான் இது . 5/9/2025  முதல் நெட் பிளிக்ஸ்  ல நேரடியாக ரிலீஸ்  ஆன படம் இது.தமிழ்   டப்பிங்கில்  கிடைக்கிறது . 


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  ஒரு போலீஸ்  இன்ஸ்பெக்ட்டர் .மும்பை யில் பணி  புரிகிறார் . வில்லன்  ஒரு கொலைக்குற்றவாளி .ஏகப்பட் ட  கொலை  வழக்குகள்  இவன் மேல்  உண்டு . டெல்லி  திகார் ஜெயிலில்  இருந்து   இவன் தப்பி விடுகிறான் . வில்லனின்  பிறந்த நாள்   அன்று  ஜெயிலில்       இருக்கும்  அனைவருக்கும் பாயாசம்  கொடுத்து  அதில் மயக்க மருந்து கலந்து  வில்லன்   தப்பி விடுகிறான் . 


 டெல்லியில் இருந்து  தப்பிய வில்லன்  மும்பைக்கு வந்ததாக தகவல்   கிடைக்கிறது . நாயகன்  வில்லனைப்பிடிக்க  நியமிக்கப்படுகிறார் . ஆல்ரெடி  ஒரு முறை   நாயகன்   வில்லனைக்கைது  செய்து   இருப்பதனால்  சில நெளிவு சுளிவுகள்  நாயகனுக்குத்தெரியும்   என்பதால்   நாயகனைக்களம் இறக் குகிறார்கள் . பல காமெடி  சம்பவங்களுக்குப்பின் நாயகன்  வில்லனை எப்படிக்கைது செய்தார் என்பது இந்தப்படத்த்தின் கதை 

நிஜத்தில்   1971ல் ஒரு முறை  1986ல் ஒரு முறை  என இரு முறை  சோப்ராஜ்  இன்ஸ்பெக்டர்  ஜிண்டே வால்  பிடிபட்டிருக்கிறான்  


நாயகன்  ஆக மனோஜ்  பாஜ்பாய்  நடித்திருக்கிறார் .பலஇடங்களில்  டைமிங்க்  காமெடி  அடிக்கும் வாய்ப்பு  வில்லன் ஆக   ஜிம் ஷார்ப்  கச்சிதமாக நடித்திருக்கிறார்.இவரது   மேனரிஸங்கள்  ரசிக்கும்படி இருந்தன 

எடிட்டிங்க்  கச்சிதம் 112   நிமிடங்கள்   டைம் டியூரேச ன் 

சபாஷ்  டைரக்டர்


1   டெல்லியை   சேர்ந்த  போலீஸ்  உயர் அதிகாரி   நாயகனிடம்    நக்கலாக  நான்கு நாட் களாக   வில்லன் மும்பையில் இருக்கிறான் , அவனைப்பிடிக்கத்  துப்பு இல்லையா?எனக்கேட் கும்போது நாயகன்   கூலாக  சார்  , அவன் தம்பியதே  உங்க ஏரியா டெல்லில இருந்துதான் .அவனை நீங்க தப்பிக்க விட் டதாலதான்  இங்கேயே வந்திருக்கான் என் சொல்லும்போது செம   காமெடி 


2   போலீஸ்  உயர் அதிகாரி    சில   முக்கியமான நபர்களுடன் நாயகன்    வீட்டுக்கு வரும்போது  உட்கார  சேர்  இல்லாமல்  நாயகன்   அங்கே  இருக்கும்  குழந்தைகள் ஓட்டும் சைக்கிள் ல   அமர்ந்து பேசும் சீன காமெடிக் கல கல 


3   கோவாவில்  நாயகன்   அண்ட்   டீம்   ஹோட் டலில்  ரூம்   எடுக்கும்போது   ரிஷப்சனி ஸ் ட்    எல்லார் பேரையும்   கேட் கும்போது  ஆளாளுக்கு   ஒரு  கற்பனை பேரை   அடித்து விடும்போது  ஒரு ஆள்   மட்டும்   ரிஷி கபூர் என சொல்ல அதைத்தொடர்ந்து நடக்கும் காமெடி 


4    நாயகன்  ,வில்லன் ,நாயகனின்  சுப்பிரியர்  என  3 முக்கியக்கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் நடிப்பு ,லைவ் லொக்கேஷன்ஸ்  , ஒளிப்பதிவு 

5  டெக்நிக்கல்  ஆக செம பிரில்லயன்ட் ஆன படம் 


6  க்ளைமாக்சில்  நிஜத்தில்  சோப்ராஜை ப்பிடித்த  ஒரிஜினல்  இன்ஸ்பெக்டர்  ஜிண்டே  கெஸ்ட் ரோலில் வருவது 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   காமெடியாகப்படம்   எடுக்கிறேன்  என  பல ஜாலி மொமெண்ட்ஸ் களால்  திரைக்கதையை  நிரம்பியதால்   சீரியஸ்னஸ்  மிஸ்   ஆகி விட்ட்து 


2   படத்தில்   பெரிய   திருப்பங்களோ ,சஸ்பென்ஸோ   இல்லை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - 


 ஜாலியாக  ஒரு க்ரைம் த்ரில்லர்  டிராமாவைப்பார்க்க நினைப்பவர்கள் பார்க்கலாம் , ரேட்டிங்க்  2.5 / 5 


Inspector Zende
Official release poster
Directed byChinmay Mandlekar
Written byChinmay Mandlekar
Produced by
Starring
CinematographyVishal Sinha
Edited byMeghna Manchanda Sen
Music bySanket Sane
Production
company
Northern Lights Films
Distributed byNetflix
Release date
  • 5 September 2025
Running time
112 minutes[1]
CountryIndia
LanguageHindi

Thursday, September 25, 2025

தண்டகாரண்யம் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா)

                   


       இரண்டாம்  உலகப்போரின்  கடை சிக்குண்டு (2019)  என்ற  வித்தியாசமான படம் கொடுத்த  இயக்குனர் அதியன் ஆதிரை  இயக்கிய இரண்டாம் படம் இது இயக்குனர் பா ரஞ்சித்தின் சொந்தப்படம் 


தண்டகாரண்யம்  என்பது  தண்டனை பெற்றவர்கள் வசிக்கும் இருப்பிடம் என்று பொருள் .இராமாயண  காலத்தில் ராமர் ,  சீதை  இருவரும் இங்கே  வசித்ததாக நம்பப்படுகிறது ஒடிசா ,பீகார்  ஆகிய  சுற்றுப்பகுதிகளில்  உள்ள  காட்டுப்பகுதியை தண்டகாரண்யம் என்று சொல்கிறார்கள் 


2008ல்  நிகழ்ந்த  உண்மை சம்பவம்  இது .வெற்றி மாறனின்  விசாரணை  படம் போல  மனதை பாதிக்கும் கதை அம்சம் உள்ள படம் என்பதால்   கமர்ஷியல் சினிமா ஆர்வலர்கள் இதைத்தவிர்ப்பது நல்லது . வித்தியாசமான  படங்களைப்பார்ப்பவர்கள் மட்டும் பார்க்கவும் 


ஸ்பாய்லர்  அலெர்ட்



நாயகன்  ஒரு மலை  கிராமத்தை சேர்ந்தவன் .அம்மா, அப்பா ,அண்ணன் , அண்ணி , ஒரு காதலி உண்டு தமிழக வனத்துறையில் பணியாற்றுகிறான் . ஒரு  அரசியல்வாதி செய்த தப்பை சுட்டிக்காட்டியதற்காக வேலை பறி போகிறது ஜார்க்கண்ட்  மாநிலத்தின் துணை ராணுவப்படையி ல்   தற்காலிக பணியில் சேர்கிறான் . இந்தப்பணியை நிரந்தரம்  ஆக்க   நாயகனின் அண்ணன்  படாதபாடு படுகிறான் . 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து ஒரு ட்ரெய்னிங்க் செண்ட்டரில்  சேர்ந்தால் பணி  நிரந்தரம் ஆகுமென்ற தகவல் கிடைக்கிறது 



நாயகனின்  அண்ணன் , இருந்த  ஒரே சொத்தான நிலத்தை விற்று  அந்தப்பணத்தைக்கட்டுகிறான் . நக்சல்   என்று பொய் சொல்லி  ராணுவத்திடம் சரண்டர் ஆனால்  நக்சல்  மறுவாழ்வு  இயக்கம் மூலம் அரசுப்பணி கிடைக்கும் என மூளைச்சலவை செய்கிறார்கள் . நாயகனும்  அதை   நம்பி  அப்படியே   செய்கிறான் .இதற்குப்பின் அவன் அடையும் சிரமங்கள் , குடும்பத்தார் சந்திக்கும் இன்னல்கள்  தான்   மொத்தப்படமும் 



நாயகன் ஆக  கலையரசன்  யதார்த்தமாக நடித்து இருக்கிறார் . ராணுவப்பயிற்சியில்     அவர்  படும் சிரமங்கள் எல்லாம்  தத்ரூபமாக  ஆடியன்சுக்குக்கடத்துகிறார் நாயகனின்  அண்ணன் ஆக  அட்டக்கத்தி தினேஷ் கச்சிதமாக  நடித்து இருக்கிறார்.ஆனால்  இவரது கேரக்ட்டர் டிசைனில்  தேவை இல்லாமல்   ஹீரோயிசம் புகுததி க்கெடுத்து விட்டார்கள் 


 நாயகன்   உடன் பணியாற்றும் சக வீரர் ஆக சார்பேட் டா பரம்பரை புகழ்  டான்சிங்க் ரோஸ்  ஷபீர்  கலக்கி இருக்கிறார் .சில இடங்களில் நாயகனை ஓவர் டேக் செய்யும் நடிப்பு 


நாயகி ஆக  வின்சு சாம் , நாயகனின் அண்ணியாக ரித்விகா  இருவரும் கனகச்சிதம் .


இறுக்கமாகப்பயணிக்கும் கதையில்  பாலசரவணன்   சில  இடங்களில்  சிரிக்க  வைக்கிறார் 


ஒளிப்பதிவு  பிரதீப்  காளிராஜா .படம் முழுக்க  அடர்ந்த  வனப்பகுதியில் கதை நடப்பதால்  கேமரா  புகுந்து விளையாடுகிறது .காதல்  காட் சிகளில்   சிலிர்ப்பையும் .இரவு நேரக்காடசிகளில் பயத்தையும்   புகுத்துகிறது   கேமரா 


 இசை  ஜஸ்ட்டின் பிரபாகரன் .இரண்டு  பாடல்களில்  அந்த  ஒப்பாரிப்பாட்டு  மனதை  என்னவோ  செய்கிறது 

பின்னணி   இசை அருமை .இளையராஜாவின் 2 பாடல் கள்  பயன்படுத்தப்பட்டு இருக்கு .இதுக்கு வேற அவர் தனியாகக்கேஸ் போடுவார் . 


சபாஷ்  டைரக்டர்


1   ஜார்க்கண்ட்  மாநிலத்தில்  2014ல்     உண்மை  சம்பவத்தைத்தழுவி எழுதப்பட் ட திரைக் கதை   என்பதால் 

நம்பகத்தன்மை அதிகம் 


2  பழங்குடி மக்களுக்கு நடக்கும் கொடுமைகள் , வனத்துறை  துஷபிரயோகம்    ஆகியவற்றை  சொன்ன விதம் 


3   நக்சல்  சரண்டர்  ,  நக்சல்  மறுவாழ்வு  என்று  சொல்லி நடக்கும் கொடுமைகள்  படம் பிடித்த விதம் 


4    நாயகி ,டான்சிங் ரோஸ் இருவரின் மாறுபட் ட நடிப்பு   


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  அட்டக்கத்தி தினேஷ்  பல  இடங்களில் வசனம் பேசும்போது  லிப் சிங்க்  சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை /

2    அட்டக்கத்தி தினேஷ் கேரக்டரை     சினிமாத்தனம்  மிக்க  ஓவர் ஹீரோயிசமாகக்காட்டியது 

3  முதல்பாதியில் இருந்த   உயிர்ப்பு பின் பாதியில் இல்லை .மெயின் கதையே  பின் பாதிதான் .ஆனால்   அதை சரியாகசொல்லவில்லை 

4  இயக்குனர்  பா ரஞ்சித்தின்  படங்களில்  ரெகுலராக  வரும் ஆர்ட்டிஸ்ட்  செய்யும் ரெகுலர் கேரக்டர்கள்   ரிப்பிட் ஆவது போர் 

5  டாணாக்காரன் , விடுதலை , விசாரணை  படங்களை   பல இடங்களில்  நினைவுபடுத்துது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் = 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - 


 இது அனைத்துத்தரப்புக்கான படம் அல்ல . வித்தியாசமான படங்களைபார்ப்பவர்களுக்கு மட்டும் . விகடன் மார்க் யூகம் 42 .   ரேட் டிங்

 2.75 / 5



Wednesday, September 24, 2025

சினிமா விமர்சனம் : Mirage (2018 film)

     
த்ரிஷ்யம்  மெகா ஹிட்டுக்குப்பின்  ஜீத்து ஜோசப் பேருக்கு  ஒரு பிராண்ட் வேல்யூ ஏறி விட்ட்து . டைட்டிலில்  ஏ  ஜீத்து ஜோசப் பிலிம்  என போடும்போதே அரங்கம் அதிரும் கைதட்டல்  எழுகிறது. இந்தப்படம்  அவர் பெயரைக்காப்பாற்றியதா?என்பதைப்பார்ப்போம்  

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு அநாதை . ஒரு கம்பெனியில்  ஒர்க் பன்றார் .அதே  கம்பெனியில்   நாயகிக்கு ஹையர் ஆபிஸர் ஆகப்பணி ஆற்றும் வில்லன் நாயகியின் காதலன் . அந்தக்கம்பெனி  மணி லாண்டரி  செய்யும்  இல்லீகல்   பிஸ்னஸ்  செய்யும்  கம்பெனி .பல கஸ்டமர்களின் டே ட்டாக்கள் அங்கே இருக்கு . ஒரு மில்லியன் டாலர்  சம்பளம் பேசி  வில்லன்  அந்த ரகசிய  டே ட்டாக்களை  திருடிக்கொள்கிறான் 


 அதே   கம்பெனியில்  பணியாற்றும்  இன்னொரு பெண் நாயகியின் தோழி .அவள்   அடிக்கடி   நாயகியை எச்சரிக்கிறாள் . உன் காதலனை நம்பாதே , அவனைப்பார்த்தால் நல்லவன் போல் தெரியலை  என்கிறாள் , ஆனால்   நாயகி   அதை சட்டை செய்யலை 


நாயகன்  நக்கீரன் மாதிரி  ஒரு புலனாய்வு  ஆன் லைன்  ரிப்போர்டடர் .பரபரப்பான  செய்திகளை சேகரிப்பவன் 


ஒரு நாள்   வில்லன்  ஆன நாயகியின் காதலன்   திடீர்   எனக்காணாமல்   போகிறான் .ஒரு ரயில் விபத்தில்   அவன் இறந்து விட்டதாகத்தகவல் வருகிறது .பிணத்தை அடையாளம் காட்ட நாயகி  அங்கே  போகிறாள் 


இப்போது  அந்தக்கம்பெனியின்  ஓனர் , போலீஸ், நாயகன்  என ஆளாளுக்கு  நாயகியை  விசாரிக்கிறார்கள் . வில்லன்  டே ட்டாக்களை    நாயகியிடம்  கொடுத்து   வைத்திருப்பான் என்பது அவர்களது சந்தேகம் 


 இதற்குப்பின்  நிகழும் திருப்பங்கள் தான் மீதித்திரைக்கதை 



மேலே  சொன்னவை எல்லாம் முதல் 20 நிமிடத்தைத்தான் .அதன்பிறகு  பல  திருப்பங்கள் ,பல சம்பவங்கள்   உண்டு 



நாயகி  ஆக அபர்ணா பால முரளி  அபாரமாக   நடித்திருக்கிறார் .  ஆக்சன்  காட் சிகளில்   கலக்குகிறார்  .வில்லனிடம்  காதல்   காட் சிகளில்  கண்ணியம்   காட்டுகிறார் , நாயகனிடம் சில உண்மைகளை மறைத்தததற்கு குற்ற உணர்வு கொள்கிறார் .அனைத்தும் அருமை 


 நாயகன்   ஆக  ஆசிப்  அலி .அதிக   முக்கியத்துவம் இல்லாத  டம்மி  கேரக்ட்டர்  ஆக இருக்கே   என நினைக்கும்போது ஒரு டிவிஸ்ட் இருக்கு . படம் ,முழுக்க  அண்டர் பிளே  ஆ க்டிங்க்   செம 


 வில்லன்   ஆக ஹக்கீம் ஷாஜகான்  பொருத்தமான   நடிப்பு 


கம்பெனி  ஓனர் ஆக பருத்தி வீரன் சரவணன்  அதிக   வாய்ப்பில்லை 


போலீஸ்  ஆபீசர்  ஆக சம்பத்  செம கம்பீரம் 

 விஷ்ணு   ஷியாமின்  இசை அருமை .பல சீன்களில்  பின்னணி   இசை   டெம்போ ஏத்துது 


சதீஷ்  குரூ ப்பின் ஒளிப்பதிவு  அற்புதம் .எடிட்டிங்க்   விநாயக் . 150 நிமிடங்கள்   டைம் ட்யூரேசன் 


கதை  அபர்ணா   ஆர்  தரக்காட் 


திரைக்கதை  சீனிவாசன் அப்ரோல் + ஜீத்து  ஜோசப் 


 இயக்கம்   ஜீத்து  ஜோசப் 


சபாஷ்  டைரக்டர்


1   படம்  சீன்  பை     சீன்    பரபரப்பாக , விறுவிறு ப்பாக நகர்கிறது 


2    நாயகன்  , வில்லன் , நாயகி   மூவர் நடிப்பும் குட் 


3   எதிர்பார்க்காத  க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் 


  ரசித்த  வசனங்கள் 


1  நியூஸ்  சேனல் - நடந்ததை  மறக்க   மாட் டேன் .இனிமேல் நடக்க இருப்பதை நேயர்களுக்கு சொல்லாமல் இருக்க மாட் டேன் 


2  நமக்கு உதவிய   ஒருவருக்கு  பிரதி உபகாரம் செய்வது தப்பில்லை 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


 1 படத்தில்   தேவை இல்லாமல்   ஏகப்பட் ட   ட்வீஸ்ட்ஸ் .  ஓவர்  டோஸ் 


2   நாயகி  பர்ஸ்   இல்லாமல் ,  ஜி  பே  செய்ய வழி இல்லாமல்   போன் இல்லாமல் பைவ் ஸ் டார் ஓட் டலில் சாப்பிட வருவது நம்பும்படி இல்லை 


3  வில்லனும் , அவனது   நண்பனும் 10 வயது   சிறுமியை   பாலியல்   வன் கொடுமை  செய்தவர்கள் . ஆனால் வாய்ப்பிருந்தும் நாயகியை எதுவும் செய்யாமல் விடுவது எப்படி ? 



4  நாயகி  பல இடங்களில்    தாக்கப்படுவது எல்லாம் கொடூரம் .ஒரு பெண்ணை  அப்படியா  தாக்குவார்கள் ? 


5   வில்லன்   பல ரகசியங்கள் அட ங்கிய  தனது    செல்  போனை காரில்   நாயகி இருக்கும்போது  விட்டு விட்டு வெளியே செல்வது நம்பும்படி இல்லை . நாயகி  எடுத்துப்பார்ப்பாள்   என்பது   தெரியாதா? 


6   வில்லன்   நாயகிக்கு போன்  போடும்போது   வீடியோ  காலில்  ஏன் வரவில்லை ? 


7 வில்லனின்   அம்மா வீட்டுக்கு  நாயகனும்,நாயகியும் விசாரிக்க வரும்போது  வில்லனைப்பற்றிய  ஒரு உண்மை  தெரிய    வருகிறது . ஒரு நாள்   தங்கி   அடுத்த நாள்   மீண்டும்  விசாரிப்போம் என்கின்றனர் , ஆனால் வில்லனின் அம்மாவை மீண்டும் விசாரிக்கவே இல்லை 


8      கோடிக்கணக்கான  பணம்  கைக்கு வரும்போது  வில்லன்  ஒரே ஒரு  கோடியை  தனது  நண்பனுக்கு  தர மறுப்பது நம்பும்படி இல்லை 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  

ஜீத்து ஜோசப் ரசிகர்கள்  , அபர்ணா பால முரளி  ரசிகர்கள் மட்டும்   பார்க்கலாம் .நம்பமுடியாத  கதை . ட்விஸ்ட்கள்  அதீதம் . ரேட்டிங்க்  2.5 / 5 


யோகா கற்கலாம் வாங்க -5

   இரா ஆண்டியப்பன் எழுதிய ஆரோக்கிய வாழ்வு  என்ற  புத்தகத்தில்  இருந்து  எடுக்கப்பட்டது -நன்றி - விக்கி பீடியா 

  • பத்மாசனம்
  • வீராசனம்
  • யோகமுத்ரா
  • உத்தீதபத்மாசனம்
  • சானுசீரானம்
  • பஸ்திமோத்தாசனம்
  • உத்தானபாத ஆசனம்
  • நவாசனம்
  • விபரீதகரணி
  • சர்வாங்காசனம்
  • ஹலாசனம்
  • மச்சாசனம்
  • சப்தவசீராசனம்
  • புசங்காசனம்
  • சலபாசனம்
  • தனுராசனம்
  • வச்சிராசனம்
  • மயூராசனம்
  • உசர்ட்டாசனம்
  • மகாமுத்ரா
  • அர்த்தமத்த்ச்யோந்தராசனம்
  • சிரசாசனம்
  • சவாசனம்
  • மயூராசனம்
  • உசர்ட்டாசனம்
  • அர்த்த மத்ச்யோந்திராசனம்
  • அர்த்த சிரசானம்
  • சிரசாசனம்
  • நின்ற பாத ஆசனம்
  • பிறையாசனம்
  • பாதாசுத்தானம்
  • திருகோணசனம்
  • கோணாசனம்
  • உட்டியானா
  • நெளலி
  • சக்கராசனம்
  • சவாசனம்/சாந்தியாசனம்
  • பவனமுத்தாசனம்
  • கந்தபீடாசனம்
  • கோரசா ஆசனம்
  • மிருகாசனம்
  • சர்வாங்காசனம்
  • நடராசா ஆசனம்
  • ஊர்த்துவ பதமாசனம்
  • பிரானாசனம்
  • சம்பூரண சபீடாசனம்
  • சதுரகோனோசனம்
  • ஆகர்சன தனூராசனம்
  • ஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம்
  • உருக்காசனம்
  • ஏக அத்த புசங்காசனம்
  • யோகா நித்திரை
  • சாக்கோராசனம்
  • கலா பைரப ஆசனம்
  • அர்த்தபாத பச்சி மோத்தாசனாம்
  • கவையாசனம்
  • பூர்ண நவாசனம்
  • முக்த அகத்த சிரசாசனம்
  • ஏகபாத சிரசாசனம்
  • துரோணாசனம்

யோகா கற்கலாம் வாங்க -3

  யோகா  கற்கலாம் வாங்க -3


யோகாசனம் 



யோகாசனங்கள்  கற்கும் முன்   சில  முன் பயிற்சிகள் , வார்ம் அப் செய்ய வேண்டும் 


1   நாற்காலியில்  அமர்ந்திருப்பது போல  கற்பனை செய்து கொண்டு  அந்தரத்தில் உட்கார்ந்திருப்பது போல  30  வினாடிகள்  இருக்கவேண்டும் .இது முழங்காலுக்கான பயிற்சி . படம்  இணைத்திருக்கிறேன் .படத்தில்  பார்க்க  சுலபமாக இருக்கும்  , ஆனால்  சிரமம் 


2  நெக்  ரொட்டேஷன்  -  இரு கைகளையும்  இடுப்பில் 

 வைத்துக்கொண்டு தலையை மெதுவாக சுழற்ற  வேண்டும் . இடது பக்கமாக  மூன்று முறை , வலது பக்கமாக  மூன்று முறை 


3  ஷோல்டர்  ரொட்டேஷன்  -  இரு உள்ளங்கைகளையும்  குவித்து  இரு ஷோல்டர்களில்  வைத்து  முன்புறமாக சுழற்ற வேண்டும் . பின்   ரிவர்ஸில் சுழற்ற வேண்டும்

யோகா கற்கலாம் வாங்க -2

 யோகா  கற்கலாம் வாங்க -2 


  நடைப்பயிற்சி (வாக்கிங்க் ) , ஓட்டப் பயிற்சி (ரன்னிங்) , ஜிம்  எக்சசைஸ்   அனைத்துக்கும்  எப்படி  வார்ம்  அப் முக்கியமோ அதே  போல்  யோகாசனம்  செய்யும்  முன்   வார்ம்  அப்  செய்ய  வேண்டும் .

1    பிரேயர் - முதலில்  30  வினாடிகள்  கண்களை  மூடி  கோயிலில் சாமி  கும்பிடுவது  போல கும்பிட  வேண்டும் . கடவுள்  நம்பிக்கை  அற்றவர்கள்  அவரவர்  பெற்றோருக்கோ பெரியவர்களுக்கோ  வணக்கம்  வைப்பது  போல் நினைத்துக்கொள்ளலாம் 

2  கண்  சுழற்சிப்பயிற்சி  ( ஐ  ரொட்டேஷன் )

 உங்கள்  வலது  கையை  முகம்  முன்  நீட்டி  ஆள் காட்டி  விரலை  மட்டும்  தனியாக  உயர்த்திப்பிடிக்க  வேண்டும்  கண்களை   , பார்வையை அதில்    செலுத்த  வேண்டும் . கையை முன்  பின்  சைடு கிராஸ்   என  மாற்றி  மாற்றி  செய்ய  வேண்டும் 
பின்  கையை  ஒரு  முழு  வட்டம்  இடுவது  போல  சுற்ற வேண்டும் . உங்கள்  கண்கள்  ஆள் காட்டி விரலைப்பார்க்க  வேண்டும் . தலையைத்திருப்பக்கூடாது . கண்களூக்கான  பயிற்சி  இது 


3    தோப்புக்கரணம்  - இதுவும்  ஒரு  யோகா  நிலை தான்  பிள்ளையாருக்கு  முன்பே  தோப்புக்கரணம் இடுவோமே  அதை ச்செய்ய  வேண்டும். ஸ்கூலில் லேட்டாக  வந்தால்  அந்தக்காலத்தில் இந்த  தண்டனை  கொடுப்பார்கள். ஆக்சுவலாக  அது ஒரு  யோகா  நிலை . 30  முறை  அமர்ந்து  எழ  வேண்டும் 

யோகா கற்கலாம் வாங்க - 1

யோகா  கற்கலாம் வாங்க  - 1 

 யோகாசன்ம் கற்க வரும் நபர்கள் சந்திக்கும் முதல்  பிரச்சனை  பத்மாசனத்தில்  தரையில் அமர்தல் . இதன்  முதல் நிலை  தரையில்  சம்மணமிட்டு அமர்தல் . ஏழைகள் , நடுத்தரக்குடும்பங்களில்  இருப்பவர்களுக்குப்பிரச்சனை இல்லை ., ஆனால்  செல்வந்தர்கள் . பரம்பரைப்பணக்காரர்கள்  தரையில் உட்கார்ந்து பழக்கம் இல்லாததால் தடுமாறுகிறார்கள் .


 பொதுவாக  செல்வந்தர்கள்  வீட்டில்  சாப்பிடும்போது  டைனிங்க் டேபிள்  முன்  பிளேட்  வைத்து சேரில்  அமர்ந்து  சாப்பிட்டுப்பழக்கம்   ஆகி இருக்கும் .சிலர்  சோபாவில்  அமர்ந்தோ , கட்டிலில்  அமர்ந்தோ    சாப்பிட்டுப்பழக்கமாக  இருக்கலாம் . அவர்கள் யோகாசனம்  செய்ய  முயலும்போது  தரையில்  சம்மணமிட்டு  அமர  முடியாது . இதற்கான  பயிற்சியை  அவர்கள்  மேற்கொள்ளவே  ஒரு  மாதம்  பிடிக்கும் 


உங்கள்  குழந்தைகளுக்கு   தரையில்  அமர்ந்து  சாப்பிட பழக்கி விடுங்கள் .  ஐந்தில்  வளைவது  ஐம்பதில் வளையும் . பிராணயாமம் , மூச்சுப்பயிற்சி , 2நாடி  சுத்தி  இவை  அனைத்திற்கும்  பதமாசனம்  தேவை . அதற்கு சம்மணமிட்டுப்பழகுதல் தேவை .

சாப்பாடு  என்பது  அன்ன லட்சுமி . . தரை  என்பது  பூமி பூமா தேவி . தரையில்  அமர்ந்து  சாப்பிடுவதே நல்லது .


 சிலர்  குத்துக்காலிட்டு  அமர்ந்து  சாப்பிட்டுப்பழகி இருப்பார்கள் . அவர்களூம் சம்மணமிட்டு  அமர  முடியாது 


அடுத்தது   முஸ்லீம்கள்  தொழுகையின் போது  அமர்ந்திருக்கும்  போஸ்  தான்  வஜ்ராசனம் . நிறைய  பேருக்கு  முழங்கால்   மூட்டு  வலி  எடுக்கும். அது  போல்  அமர  முடியாது . அதைப்பழக வேண்டும் 


 சபரி மலை  அய்யப்பன்  அமர்ந்திருக்கும்  போஸ்  கூட  ஒரு  யோகாசன  நிலையே . உங்கள்  வீடுகளீல்  வெஸ்டர்ன்  டாய்லெட்  ஆக அமைக்கப்பட்டிருந்தால் அது  ஆரோக்கியத்திற்கு  நல்லது அல்ல, இந்தியன் டாய்லட்  மாடல் தான்  நல்லது . அந்த  போசில்  அமர்ந்து பழகுவது  அவசியம் 


 யோகாசனம் பழக விரும்புபவர்கள் , படிக்க  வருபவர்கள்  முதலில்  கற்க  வேண்டியது இவை  மூன்றும்  தான் 


  ஜிம்மில்  போய்  செய்யும்  பயிற்சிகள்  உடலின்  வெளி உறுப்புகளை    உறுதிப்படுத்தும், அழகுபடுத்தும் . ஆனால்  யோகாசனம்  உடலின்  உள்ளுறுப்புகளை  ஆரோக்கியம்  ஆக்கும் . எனவே  மதுப்பழக்கம் , சிகரெட்  பழக்கம்  உள்ளவர்கள்  யோகா  செய்வது  நேர விரயம் . ஏன்  எனில்  குடிப்பழக்கம் உள்ளவர்களூக்கு கல்லீரல்  , மண்ணீரல், சிறு நீரகம்  எல்லாம்  ஆல்ரெடி  டேமேஜ்  ஆகி  இருக்கும் . சிகரெட்  பழக்கம்  உள்ளவர்கள்  நுரையீரல்  கெட்டு இருக்கும் . .ஏற்கனவே  ஆரோக்கியமாக  இருக்கும்  உள்ளுறுப்புகளை  மேலும்  ஆரோக்கியம்  ஆக்கவே  யோகா  பயன்படும் , சீரழிந்த  , கெட்டுப்போன  உறுப்புக்களை  கடவுள்  தான்  காப்பாற்ற  வேண்டும்,. யோகாவால்  அது  முடியாது  


 உயர் ரத்த  அழுத்தம்  ,  சர்க்கரை  நோய் , , தைராய்டு , இன்சோம்னியா  என்னும்  தூக்கமின்மை  , மன அழுத்தம்  . மனப்பதட்டம்  இவை  அனைத்தும்  யோகா  செய்தால்  குணம்  ஆகும் 

--

 சென்னிமலை சி.பி. செந்தில்குமார்,

YOGA- காமன் யோகா ப்ரோட்டா கால் - COMMON YOGA PROTOCOL (CYP)




 காமன் யோகா ப்ரோட்டா கால் - COMMON YOGA  PROTOCOL (CYP)

============================


1   பிரேயர்  1 நிமிடம்  - PRAYER 1 MINUTE


 கண் பயிற்சி -- EYE   PRACTICE, EYE ROTATION 


========================


உடலை  தளர்வாக்கும்  பயிற்சிகள் -5  நிமிடங்கள் - LOOSENING EXERCISE

================================


2   தலையை முன்னும் பின்னும்  அசைத்தல்  - FORWARD AND BACKWARD BENDING


3   தலையை  இடம் , வலமாக  அசைத்தல் - RIGHT AND LEFT BENDING 



4  தலையை  இடம் , வலமாக  திருப்புதல் -RIGHT AND LEFT TWISTING 


5  தலையை  360 டிகிரி  சுழற்றுதல் - NECK ROTATION 


6  சோல்டர் ஸ்ட்ரெட்ச் - SHOULDER  STRETCH

7  சோல்டர்   ரொட்டேஷன் - SHOULDER  ROTATION 

8 ட்ரங்க்    மூவ்மெண்ட் -   TRUNK MOVEMENT 

9    முழங்கால் மூவ்மெண்ட் - KNEE MOVEMENT 


10 இடுப்பை இடம் வலமாக  அசைத்தல்  HIP MOVEMNET  LEFT & RIGHT 


11   கால்  பாதத்தை  சுற்றுதல் , இடம் வலமாக அசைத்தல் , விரல்களை மடக்குதல்  FEET  ROTATION ,RIGHT AND LEFT TWISTING 


==============





1  தாடாசனம் - TADASANA 

2 விருக்சாசனம் 

3 பாத ஹஸ்தாசனம் 


4 அர்த சக்ராசனம் 


5 திரிகோணாசனம் ( சேம் சைடு +ஆப்போசிட்  சைடு )



6 பத்ராசனம் 

7 பத்மாசனம் 

8 வஜ்ராசனம் 

9 அர்த - உஷ்ட்ராசனம்

10   உஷ்ட்ராசனம்


11 சசாங்காசனம் 

12  உத்தன்  மண்டூகாசனம் 

13 வக்ராசனம் 

14 மகராசனம் 

15 புஜங்காசனம் 

16 சலபாசனம் 

17 சேதுபந்தாசனம் 

18 உத்தன பாடாசனம் 

19 அர்த ஹாலாசனம்  

20 பவனமுத்தாசனம் 





21  சவாசனம் ( ரெஸ்ட் ) 

============


பிராணாயாமம் ( மூச்சுப்பயிற்சி ) 

சூரியபேதம் '

சந்திரபேதம் 

சீதலிப்பிராணயாமம்

பிரம்மப்பிராணயாமம் 

த்யானம்  





Tuesday, September 23, 2025

HRIDAYAPOORVAM ( 2025) - ஹிருதயப்பூர்வம் - மலையாளம் - சினிமா விமர்சனம் ( எ ஃபீல் குட் மூவி ) @ ஜியோ ஹாட் ஸ்டார்

           

              30  கோடி  பட்ஜெட்டில் தயார் ஆகி 80 கோடி வசூலித்த படம் . புலி முருகன் மாதிரி ஆக்சன் படங்கள்  வசூலில் சாதனை செய்வது பெரியவிஷயம் இல்லை . ஒரு மெலோ டிராமா  இவ்ளவ் வசூல் செய்தது அதிசயம் தான் . இது மோகன் லாலின் சொந்தப்படம் .28/8/2025  அன்று திரை  அரங்குகளில் வெளியான இந்தப்படம்   26/9/2025 முதல்  ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் காணக்கிடைக்கும் 


நீ  வருவாய் என (1999)  படத்தில்  தன் காதலனின் கண்களை  தானமாகப்பெற்ற ஒருவனை   நாயகி விசேஷ கவனிப்பு காட்டுவதை  நாயகன் காதலாக நினைப்பது அதன் பின் நடப்பதுதான் கதை  அழகன் ( 1991)  படத்தில் ஒருவரை மூன்று பெண்கள் காதலிப்பதுதான் கதை . இந்த  2 படங்களின் டிவிடியை இயக்குனர் அட்லீயிடம் கொடுத்து ஒரு புதுக்கதை  ரெடி பண்ணுங்க என்றால் அவர் என்ன செய்வார்? அதுதான் இந்தப்படம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனுக்கு  குடிப்பழக்கம் , தம் பழக்கம் உண்டு , அவரது இதயம் கெட்டுப்போய் விடுகிறது . அவர்  பெரிய பணக்காரர் ஆக இருப்பதால் மாற்று இதயம் வைத்துக்கொண்டு தப்பி விடுகிறார்


 நாயகனுக்கு இதய தானம் செய்தவருடைய மகள்   நாயகனைத்தேடி வருகிறார் . விரைவில்  அவருக்குத்திருமணம் . அந்தத்திருமணத்தை நாயகன் நேரில் வந்து நடத்திக்கொடுத்தால் அவளது அப்பாவே அருகில் இருந்து ஆசீர்வதித்தது போல இருக்கும் என நாயகி கூறுகிறாள் 


 ஆரம்பத்தில் மறுத்த நாயகன் பின் மனம் மாறி  திருமண விழாவுக்கு வருகை தர சம்மதிக்கிறார். .ஆனால் நாயகிக்குத்திருமணம் தடைபடுகிறது . நாயகி வீட்டிலேயே நாயகன் தங்கி இருக்கிறார். நாயகனுக்கு நாயகி மீது காதல் பிறக்கிறது . ஆனால் நாயகி நாயகனை அப்பா வடிவில் தான் பார்க்கிறாள் , காரணம் நாயகியின் அப்பாவின் இதயம் தான் நாயகனுக்கு வைக்கப்பட்டிருக்கிறது 


 நாயகியின் அம்மாவுக்கு நாயகன் மீது ஒரு பிரியம் உருவாகிறது . காரணம்  புருசனின் இதயம் தான் நாயகனிடம் .நாயகன் அதைக்காதல் என்று நினைக்கிறார். ஆனால் காதல் இல்லை 


 நாயகனுக்கு ஒரு முன்னாள் காதலி உண்டு . ஆனால் காதலிக்குத்திருமணம் ஆகி விட்டது ஒரு மகளும் உண்டு . காதலியின் கணவன் ஓடிப்போய் விட்டான் . இப்போது காதலி  நாயகனிடம்  ப்ரப்போஸ் செய்கிறார்


 இந்த  மூன்று காதல்களில் எது நாயகனுக்கு செட் ஆகிறது என்பதுதான் மீதித்திரைக்கதை 


 நாயகன் ஆக மோகன் லால் அண்டர் ப்ளே ஆக்டிங்கில் அசத்தி இருக்கிறார். . பல இடங்களில்,அவரது அனுபவம் மிக்க நடிப்பு கை கொடுக்கிறது 


 நாயகி ஆக  மாளவிகா மோகனன் நடித்து இருக்கிறார் . இவர் நாயகனுக்கு ஜோடி இல்லை   என்பதும்   அப்பா  முறை தான் என்பதும் தெளிவாகத்தெரிந்து விட்டதால்   இவரை  ஜோடி ஆகப்பார்க்கத்தோன்றவில்லை . நடிப்பில் குறை இல்லை 


 நாயகனின்  நண்பன் ஆக  நர்ஸ்  ஆக  சங்கீத் பிரசாத் காமெடி நடிப்புக்கு 


நாயகியின் அம்மாவாக சங்கீதா  மாதவன்  நாயர் ஆச்சரியம் அளிக்கும் நடிப்பு . 


நாயகனின்  முன்னாள்  காதலியாக  சவும்யா பாக்யம் பில்லா  உற்சாகமான நடிப்பு 


இவர்கள் போக சித்திக் ,சபீதா ஆனந்த்   போன்ற தெரிந்த   முகங்களும் உண்டு , அனைவர்  நடிப்பும் கச்சிதம் 


ஜஸ்டின்  பிரபாகரன் இசையில் நான்கு பாடல்கள் . இரு பாடல்கள் நல்ல மெலோடிஸ் . பின்னணி இசையும் அருமை 


ஒளிப்பதிவு  அனு.  காட்சிகளில் பிரம்மாண்டம் காட்டி இருக்கிறார். 3 நாயகிகளையும் அழகாக , கண்ணீயமாகக்காட்டி இருக்கிறார் 


 கே  ராஜகோபாலின் எடிட்டிங்கில் படம் 150 நிமிடங்கள் ஓடுகிறது 


 கதை  அகில் சத்யன்  திரைக்கதை  சோமு . இயக்கம் சத்யன் அந்திக்காடு 


சபாஷ்  டைரக்டர்


1   படத்தின் முதல்  காட்சியிலேயே நேரடியாகக்கதைக்கு வந்து விடுவது அருமை , பெரும்பாலான  மலையாளப்படங்களில் முதல் 30 நிமிடங்கள்   கேரக்டர்ஸ்  இண்ட்ரோவுக்கே எடுத்துக்கொள்வார்கள் 


2   இது ஒரு மெலோ டிராமா என்பதால் போர் அடிக்காமல் இருக்க ஆங்காங்கே காமெடிசேர்த்தது குட் ஐடியா 


3  நாயகியின்  அம்மா நிச்சயம்  உன் மேல் கிரஷ்  கொள்வார்  காரணம்  உன்னிடம் இருப்பது   அவளது  கணவனது இதயம் என நண்பன் உசுப்பேற்றும் சீனும் , நாயகியின் அம்மா நாயகனைக்கண்டு கொள்ளாமல் இருப்பதும் செமக்காமெடி 


4  நாயகனின் முன்னாள் காதலி அடிக்கடி வீடியோ காலில் வருவதும்  நாயகன் தவிப்பதும் நல்ல காமெடி  என்றால்  நாயகி  அவள்  முன்  நாயகனின்  ஜோடி போல நடித்து கடுப்பேற்றுவது அருமை 


5    நாயகியின்  அம்மா நாயகனின் குணத்தில்  மதி மயங்குவதும் ஒரு நாள் கூட தன் கணவன் சாரி சொன்னதே இல்லை என மருகுவதும் செமயான காட்சிகள் 


  ரசித்த  வசனங்கள் 


1   சார்  நீங்க பார்க்க  யங்கா , புதுசா இருக்கீங்க 


 அப்படியா? அப்போ இதுக்கு முன்னால நான் பழசா , வயசான மாதிரி இருந்தேனா? 

  அய்யோ அப்டி இல்லை சார் 


 அப்பறம் ஏன் பொய் பேசறே ? 


2   என்  புருசன் போய்ட்டாரு


 அடப்பாவமே செத்துப்போய்ட்டாரா? 


 இல்லை , அஃபிசியலா ஓடிப்போய்ட்டாரு 


3  புனே  நகரில்  பெண்கள் ரொம்ப ஓப்பனா இருப்பாங்களாமே? 


 அப்போ  புனே வில் பொண்ணுங்களை டீப்பா வாட்ச் பண்ணி இருக்கீங்க ? 


4   அப்பாவோட ஹார்ட் உன்னிடம் இருப்பதால்  மகளுக்கு   நீ அப்பா  ஓக்கே , ஆனா  கணவனோட  ஹார்ட் உன்னிடம் இருப்பதால்  மனைவிக்கு  நீ புருசனா , இது நாட் ஓக்கே 


5   நான்  ஃபகத் ஃபாசில் ஃபேன் 


 ஏன் இந்த சீனியர்  ஹீரோஸ் மம்முட்டி மோகன்லால் எல்லாம் பிடிக்காதா? 


 நோ 


6  வாழ்க்கைல நாம் தோல்வியை சந்திக்கிறோம் . அது ஜஸ்ட்  ஒரு தோல்வி தான் , அதுக்காக இடிஞ்சு விழுந்துடக்கூடாது 


7  நாம  மிகவும் விருப்பப்பட்டு ஒரு ரயில் பயணம் போறோம்,, அப்போ  டக்னு டி டி ஆர் வந்து உங்க ஸ்டேஷன் வரப்போகுது அடுத்த ஸ்டாப்ல இறங்கிக்கனும்னு சொன்னா நமக்கு எப்படி இருக்கும் ? அப்படித்தான் நான் வாழ்க்கையை அனுபவிக்கறப்ப திடீர்னு  ஹார்ட் ஃபெய்லியர் ஆகி கடவுள் என்னை  முடிச்சுக்க சொல்லிட்டாரோ என நினைத்தேன் 


8   உங்களுக்குப்பிடித்த விலங்கு எது ?


 ஆடு. சாப்பிட அல்ல . பெட் அனிமல் 





லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  அழகன்  படத்தில் வருவது போல ஆடியன்சுக்கு மூவரில் யாரா இருக்கும் ஜோடி என்ற குழப்பம் இதில் வரவில்லை , அது  பெரிய மைனஸ் 


2  நாயகன் - நாயகி அப்பா மகள் உஅவு என்பது க்ளீயர் ஆகத்தெரிந்து விட்டதால் நாயகனின் காதல் நமக்கு ஃபீல் ஆக வில்லை 


3   நாயகனின் முன்னாள்   காதலி திருமணம்  ஆகி 20 வயது மகளுடன் வருவது   அவரை நாயகன் ஏற்றுக்கொள்வது  மனதில் ஒட்டவில்லை 


4    வலிய திணிக்கப்பட்ட க்ளைமாக்ஸ் ஃபைட்  சீன்  திருஷ்டிப்பூசணி 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -    ஃபீல்  குட் மூவி பார்க்க நினைப்பவர்கள் , மெலோ டிராமா பார்க்கும் பொறுமைசாலிகள் பார்க்கலாம் . ரேட்டிங்க் 3 / 5 


Hridayapoorvam
Theatrical release poster
Directed bySathyan Anthikad
Screenplay bySonu T. P.
Story byAkhil Sathyan
Produced byAntony Perumbavoor
Starring
CinematographyAnu Moothedath
Edited byK. Rajagopal
Music byJustin Prabhakaran
Production
company
Distributed byAashirvad Cinemas
Release date
  • 28 August 2025
Running time
151 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Budget₹30 crore
Box office₹80 crore[2]