ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் லேப்டாப் ரிப்பேர் செய்பவன் ., அவனுக்கு 25 வயதில் ஒரு மகன் .தன நண்பர்களுடன் ஒரு பார்ட்டிக்குப்போனவன் திரும்ப வரவில்லை .நண்பர்களிடம் கேடடால் சரியான பதில் இல்லை . .போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்போகிறான்
நாயகி ஒரு சப் இன்ஸ்பெக்ட்டர் . தனது திருமணத்துக்கு சக போலீஸ் காரர்களை அழைக்க அதே .போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார்
அந்த .போலீஸ் ஸ்டேஷனில் தற்போது ஒரே ஒரு ஏட்டும் லாக்கப்பில் சில கைதிகளும் மட்டும் தான் இருக்கிறார்கள் . அந்த ஏரியாவில் வி ஐ பி வந்திருப்பதால் அனைவரும் பாதுகாப்புக்கு சென்றிருக்கிறார்கள்
அப்போது வில்லன் போன் செய்கிறான் . .போலீஸ் ஸ்டேஷனில் டைம் பாம் வைத்திருப்பதாகவும் அவன் சொன்னபடி செய்யாவிடடால் வெடிக்க வைக்கப்போவதாகவும் மிரட்டுகிறான் .அவனது கோரிக்கை என்ன? உடனடியாக ஒரு ஜட்ஜ் அங்கே வர வேண்டும் , ஒரு பழைய கேஸை விசாரித்துத்தீர்ப்பு தர வேண்டும்
இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை
நாயகன் ஆக அருண் பாண்டியன் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்க் தான் . ஊமை விழிகள் காலத்தில் இருந்தே இவருக்கு பைட் வரும் அளவுக்கு ஆக்டிங்க் வரவில்லை நாயகியாக வரும் அக்சரா ரெட்டி போலீஸ் ஆபீசர் கம்பீரம் மிஸ்ஸிங்க் . நீதிபதி ஆக வரும் வினோதினி சிறப்பான நடிப்பு .சப் இன்ஸ்பெக்ட்டர் ஆக வரும் நாட்டி என்கிற நடராஜ் பரவாயில்லை ரக நடிப்பு .,ஆனால் இவருக்கு அதிக வாய்ப்பில்லை . போலீஸ் ஏட்டாக வரும் மூணாறு ரமேஷுக்கு நடிக்க நல்ல வாய்ப்பு .சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார் திருடன் ஆக வரும் பழைய ஜோக் தங்கதுரை மொக்கை போடுகிறார்
இசை குணா சுப் ரமணியம் . பின்னணி இசை சுமார் ரகம் . ஒளிப்பதிவு பத்மேஷ் , பரவாயில்லை ரகம் . இயக்கம் அறிமுக இயக்குனர் சுப்ரமணியம் ரமேஷ் குமார்
எடிட்டிங்க் கச்சிதம் 2 மணி நேரம் டைம் ட்யூரேசன்
சபாஷ் டைரக்டர்
1 போலீஸ் ஸ்டேஷனில் கோர்ட் அமைக்கும் ஐடியா புதுசு
2 முதல் பாதி பரபரப்பு
3 நாயகன் தான் வில்லனோ என இடைவேளையில் ஒரு திருப்பம் தந்த விதம்
4 ஜட்ஜ் ஆக நடித்த வினோதினி ,போலீஸ் ஏட் டாக நடித்த மூணாறு ரமேஷின் நடிப்பு
ரசித்த வசனங்கள்
1 நானாவது போலீஸ் டிரஸ் போட்டுட்டு திருடறேன்,அவனவன் ஸ்டேஷன்லயே திருடறான்
2 வேலில போற ஓணானை வெள்ளிக்கிழமை ஆனா கானோமாம்
3 இது டைம் பாம் தான்னு கண்டு பிடிச்சுட் டேன்
எப்படி ?
பாம் பக்கத்தில் டைம் ஓடுதே?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பிளாஷ்பேக் கதை எடுபடவில்லை
2 மந்திரி மகன் தப்பு செய்வது , அவனுக்குத்தண்டனை தருவது எல்லாம் அரதப்பசாசான கதை
3 முக்கியமான நேரத்தில் உயர் அதிகாரிகள் ஸ்பாட்டுக்கு வராமல் வீடியோ காலில் பேசுவது அபத்தம்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்
- 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - முதல் பாதி பரபரப்புக்காக டி வி ல போடும்போது பார்க்கலாம் . பின் பாதி கொடுமை .விகடன் மார்க் யூகம் 39 . ரேட்டிங்க் 2 . 5
.jpg)