Friday, June 06, 2025

THUG LIFE(2025)-தக் லைப் - சினிமா விமர்சனம் (கேங்க்ஸ்டர் மசாலா)

               THUG LIFE(2025)-தக் லைப் - சினிமா விமர்சனம் (கேங்க்ஸ்டர் மசாலா)


38 வருட இடைவெளிக்குப்பின் மீண்டும் இணைந்திருக்கும் "நாயகன்" காம்போ மணிரத்னம் + கமல் =      தக் லைப் ஒரு சராசரிப்படம் லெவலுக்காவது வந்திருக்கா? என்பதைப்பார்ப்போம்    


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் சிறுவனாக இருக்கும்போது நடந்த  ஒரு சம்பவத்தில் தவறுதலாக நாயகனின் அப்பா வில்லன் கேங்கால் சுட்டுக்கொல்லப்படுகிறார்.நாயகனின் 5 வயது தங்கை காணாமல் போகிறார்.


வில்லன் ஒரு கேங்க்ஸ்டர் லீடர்.இன்னொரு கேங்க்ஸ்டர் லீடருடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது அவன் போலீசுக்கு இன்பார்ம் பண்ணி மாட்ட வைக்கிறான்.அப்போது வில்லன் போலீசிடம் இருந்து தப்பிக்க சிறுவனாக இருந்த நாயகனைக்கேடயமாகப்பயந்படுத்திக்கொள்கிறான்.இதற்கு நன்றிக்கடனாக வில்லன் நாயகனை தன் வளர்ப்பு மகனாகவே வளர்க்கிறான்


காணாமல் போன நாயகனின்  தங்கையைக்கண்டுபிடித்துத்தருவதாக வில்லன் நாயகனுக்கு வாக்குத்தருகிறான்.


20 வருடங்கள் கழித்து கதை இப்போது நடக்கிறது.நாயகன் வில்லனின் ரைட் ஹேண்ட் ஆகிறான்.எங்கிருந்தோ வந்த சிறுவன் அடுத்த. வாரிசாக உருவாவது வில்லனின் கேங்கில் இருந்த மற்றவர்களுக்குப்பிடிக்கவில்லை.


நாயகனின் மனதை வில்லனின் சகோதரன் கலைக்கிறான்.உன் அப்பாவின் மரணத்துக்கு காரணமே இவர் தான் என வில்லனைக்காட்டிக்கொடுக்கிறான்.இவர்கள் பேச்சில் மயஙகி ,நம்பி நாயகன் இவர்களுடன் இணைந்து வில்லனை சுட்டுக்கொல்கிறான்.


இப்போது நாயகன் வில்லனின் சாம்ராஜ்யத்தைக்கைப்பற்றுகிறான்


இடைவேளை

இறந்ததாக நினைத்த வில்லன் உயிர் பிழைத்து மீண்டும்  வருகிறான்.துரோகிகளை வரிசையாகப்பழி வாங்குகிறான்.கடைசியில் நாயகனையும் பழி வாங்கினானா?இல்லையா? என்பது க்ளைமாக்ஸ்


நாயகன் ஆக சிம்பு.வித்தியாசமான ஹேர்ஸ்டைலில்,எதற்கும் அலட்டிக்கொள்ளாத புன்னகையில் அருமையான நடிப்பு.


வில்லன் ஆகக் கமல்.நாயகனை விட இவருக்குத்தான் அதிக முக்கியத்துவம்.பல காட்சிகளில் நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.வழக்கமாக தனக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைக்கு லிப் கிஸ் கொடுப்பதைத்தன் கொள்கையாகவே வைத்திருக்கும் கமல் இதில் ஒரு ஜோடிக்கும் மட்டும் கொடுத்து இன்னொரு ஜோடிக்குத்தராமல் அதிர்ச்சி அளிக்கிறார்.கமல் ரசிகர்களுக்குப்பெரிய ஏமாற்றம்.


4  கெட்டப்பில். கமல் வருகிறார்.ஏ ஐ தொழில் நுட்பத்தில் நாயகன் கமல் கெட்டப் அருமை.விசில் பறக்கிறது.பிறகு 20 வருடங்கள் கழித்து வரும் கெட்டப்பில் ஹேர் ஸ்டைல் அருமை.இடைவேளைக்குப்பின் வரும் கெட்டப் இந்தியன் 2 கெட்டப் போல எடுபடவில்லை.பிச்சைக்காரன் மாதிரி இருக்கிறார்.க்ளைமாக்ஸ் கெட்டப் பரிதாபமாக இருக்கிறது.


கமலின் மனைவியாக அபிராமி .லிப் கிஸ்க்கே சம்பளம் சரியாப்போச்சு.கமலின் கீப் ஆக திரிஷா.பிறகு சிம்பு வுக்கும் கீப் ஆக வருகிறார்.கீப் இட் அப்.


வில்லனின் அண்ணனாக நாசர்.சிறப்பான நடிப்பு.வழக்கமாகக்கமல் படஙகளில் இவரது கேரக்டர் டிசைன் வலுவாக இருக்கும்.ஆனால் இதில் அந்த அளவு இல்லை.


வில்லனின் அடியாட்களாக வீணடிக்கப்பட்ட நல்ல கலைஞர்கள் பகவதிப்பெருமாள்,ஜோஜூ ஜார்ஜ்


வில்லனைப்பிடிக்க வரும் போலீஸ் ஆபீசர் ஆக அசோக் செல்வன் கம்பீரமான தோற்றம்.ஆனால் குறைவாந காட்சிகள் தான்.அவரது மநைவியாக ஐஸ்வர்யா குறைவில்லாத நடிப்பு


வடிவுக்கரசி ஒரு கெஸ்ட் ரோலில் வருகிறார்

ஏ ஆர் ரஹ்மான் இசையில். சிங்குச்சா,சுகர் பேபி இரண்டும் அருமை.சின்மயி வெர்சன் ,தீ வெர்சன் என ட்ரெண்டிங் ஆன முத்தமழை பாட்டு படத்தில் இல்லை.பின்னணி இசை சுமார்தான்.நாயகன் ல இளையராஜா கலக்கி இருந்தார்.


ஒளிப்பதிவு,எடிட்டிங் போன்ற டெக்நிக்கல் அம்சங்கள் அருமை.

திரைக்கதை கமல் + மணிரத்நம்

இயக்கம் மணிரத்னம்


சபாஷ்  டைரக்டர்


1 கமலும் ,சிம்புவும் காரில் நடத்தும் உரையாடல் அருமை.அதில் கமல் நடிப்பு செம


2 செக்கச்சிவந்த வானம் ,அஞ்சான்,நாயகன் ஆகிய படங்களின் கதையை உல்டா அடித்த சாமார்த்தியம்

3 படம் வெளிவரும் முன் மீடியாக்களுக்கு அளித்த ஓவர் ஹைப்டு பேட்டிகள்

4 கன்னடம் பற்றிக்கமலைப்பேச வை இந்தியா முழுக்க ஓசி பிரமோ செய்த ஐடியா



  ரசித்த  வசனங்கள் 

1. ஐ லவ் யூ சொல்லுங்க

என்ன இது கண்றாவி?

பொய்யாவாவது சொல்லுங்க


2 முதல்ல என் பேரு என்ன என சொல்லுங்க


தெரியலையே? மனோரமா? காந்திமதி?


3 அகலக்கால் வைக்காதே?

4 சின்ன வீட்டுக்கு ஏன் போனீங்க?

அது என் வீக்னெஸ்.பி பி ,சுகர் மாதிரி


5  என்னை. சுத்தி எல்லாமே. புதுசா இருக்கு?மாறுனது நானா?மத்தவங்களா?

6 என் இடத்தை வேற  யாராலும் நிரப்ப முடியாது(பிடிக்க முடியாது)


7 சந்தேகம் என்பது கேன்சர் மாதிரி.பத்து வைக்காதீங்க


8 பவர் நம்மைத்தேடி வராது.நாம தான் அதைத்தேடிப்போகனும் ( பரத் ஆநே நேனு தெலுங்குப்படத்தில் இருந்து உருவல்)

9 சந்தேகம் நம் தொழிலுக்கு எதிரி

10 மகன் மாதிரினு சொன்னீங்க.என்னையே சந்தேகப்படறீஙக?


இது டெல்லி.முகலாய வம்சத்தில் மன்னர் காலத்தில் நடந்திருக்கு.அப்பாவை மகன்  கொல்வது ,அண்ணனைத்தம்பி கொல்வது சகஜவேணும். கேம் ஓவர்


அப்படி இருந்தா என் கிட்டே இப்படி பேசிட்டு இருக்க மாட்டீங்க.என்ன வேணும்? நேரடியாக்கேளுஙக

நான். பேராசைக்காரன்.   எனக்கு எல்லாமே வேணும்

11  சிவாஜி நடிச்ச படத்துல அவர் செத்துப்போன பின் சுபம்னு போடுவாங்க.அப்படி ஒரு தருணத்துக்காகக்காத்திருக்கேன்


12 நல்லவங்களை ஆண்டவன் சீக்கிரமாவே அழைச்சுக்குவான் ( எம் ஜி ஆர் கால டயலாக்)


13. எமன் எனக்கு பிரண்டுடா


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 ஒரு பணக்காரப்பெண் காதலனால் கர்ப்பம் ஆனதால் அவன் கை விட்டதால் இந்தக்காலத்தில் யாராவது தற்கொலை செய்வார்களா?( ஏழைப்பெண் என்றால் கூட ஓகே)


2 கேங்க்ஸ்டரை என்கவுண்ட்டர் பண்ண அபார்ட்மெண்ட்டில் மக்கள் வாழும் இடத்திலா போலீஸ் செய்யும்?


3 கமல் கர்ப்பம்  ஆன பெண்ணின் சாவுக்குப்பழி வாங்க அந்த வாலிபனைத்தனிமையில் போட்டுத்தள்ளாமல் சாட்சிகள் இருக்கும்போது எதனால் கொல்கிறார்?


4 மகள் கர்ப்பம் கலைந்தது அப்பாவுக்குத்தெரியலை.அடியாளுக்குத்தெரிஞசிருக்கு

5 கமலை சுடும்போது எதனால் ஒரே ஒரு முறை மட்டும் சுடுகிறான் அடியாள்?6 முறை சுட்டிருக்கலாமே?

6  ஜெயிலில் இருக்கும் கமல் சூப்பிரண்டண்ட் ஆபீஸ் ரூமில் திரிசாவுடன்  சரசம் செய்வது எல்லாம் ஓவர்

7 சிம்பு கமலை அண்ணன் என்கிறார்.அப்பா முறை என்கிறார்.அப்படிப்பார்த்தா கமலின் செட்டப் திரிசா அவருக்கு அண்ணி முறை.அல்லது சித்தி முறை.எப்படி காதலி ஆக்கிக்கொள்கிறார்?

8  சில்க்,அனுராதா,ஷகீலா மாதிரி ஆட்கள் நடிக்க வேண்டிய கேரக்டருக்கு திரிசாவை. ?

9 பரம எதிரி கூட டீலிங் வைப்பது எப்படி?

10 நெஞ்சில் 2 முறை ,வயிற்றில் 3 முறை சுடப்பட்டும் 1000 அடிபள்ளத்தாக்கில் விழுந்தும் கமல்  உயிரோடு இருப்பது எப்படி?11. என் லிங்குசாமியின் அஞ்சான் கதையிலிருந்து பின் பாதி கதையை உல்டா அடிக்கலாமா?

12 கமல் ஒரு கேங்க்ஸ்டர் என்பதைக்காட்ட ஒரு சீன் கூட வைக்கவில்லை


 13 அமரர் சுஜாதா இல்லாமல் தடுமாற்றம் ரைட்டிங்கில் தெரிகிறது.சுபா ,பிகேபி யாரையாவது இணைத்திருக்கலாமே?


14 ஆடியோவில். உள்ள முக்கியமான பாடல்களை படத்தில் இடம் பெற செய்யாதது ஏன்?

15 கமல் ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆனதும் திரிசா வீட்டில் 6 நாட்கள் தொடர்ந்து தங்குவது ஏன்? அபிராமி வீட்டில் 1 நாள் திரிசா வீட்டில் ஒரு நாள் என மாறி மாறி தங்கி இருக்கலாமே?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஆன் லைன் ரசிகர்கள் கழுவி ஊற்றியதைப்போல டப்பாப்படமோ ,குப்பைப்படமோ இல்லை.சுமார் ரகம்.விகடன் மார்க் யூகம் -40.ரேட்டிங் 2.25 / 5

0 comments: