Thursday, June 05, 2025

மனைவி ஒரு மாணிக்கம் (1990) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரிவெஞ்ச் த்ரில்லர் ) @you tube


                         

 நான்  10 வது , 12 வது  படிக்கும்போதெல்லாம்  ராமராஜன்  படம் .  ராமநாராயணன்  படம்  பார்க்கவே முடியாது .அந்தப்படப்போஸ்டர்களைப்பார்த்தாலே   நண்பர்கள்  கிண்டல் செய்வார்கள் . அதனால்  ரிலீஸ்  டைமில்  பார்க்கவில்லை . டைட்டில்  கூட  ஒரு மார்க்கமாக  பெண்களுக்குப்பிடிக்கும் விதத்தில் இருப்பதால்  தவிர்த்து  வந்தேன்  நேற்று    டிவிட் டரில்  ஒரு கான்வெர்சேஷன்  படித்தேன் .கே டி வி யில்  இந்தப்படம் ஓடுது . எப்போ போட்டாலும்  மிஸ் பண்ணாம  பார்ப்பேன்  என பேசிக்கொண்டார்கள் . சரி  பார்ப்போம் என  உட்கார்ந்தேன் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


ஒரு கோடீஸ்வரியின் மகன்   சிறுவனாக  இருந்தபோது  நாவல்  பழம்  பறிக்க மரத்தில் ஏறும்போது  அங்கே  பாம்பு இருப்பதைப்பார்த்து பயந்து  கீழே  விழுந்து  இறந்து விடுகிறான் .உடனே  அம்மா  அவன்  உடலை  எடுத்துக்கொண்டு  அபூர்வ சக்தி கொண்ட  சித்தரைப்பார்க்கிறாள் . உயிர்ப்பிக்குமாறு  வேண்டுகிறாள் . அப்போது   அந்த சித்தர்  அது  முடியாது . ஒரு உயிரை  எடுத்தால்தான் இன்னொரு உயிரை  உயிர்ப்பிக்க முடியும்.,அது பாவம் என்கிறார் . அம்மா   தொடர்ந்து  அழவே  வேறு வழி  இல்லாமல்   மகனின் இறப்புக்குக்காரணமான பாம்பின் உயிரை எடுத்து  மகன்  உயிரைக்காப்பாற்றுகிறார் .அப்போது  ஒரு கண்டிஷனும்  போடுகிறார் . இறந்த  பாம்பின்  துணை  பாம்பு பழி   வாங்கும் . இனி உன் மகன் இந்த ஏரியாவி லேயே  இருக்கக்கூடாது   என்கிறார் . அதன்படி  அம்மா  தன மகனை  வெளிநாடு அனுப்பி விடுகிறாள் .



வெளிநாடு  போன மகன்  அங்கேயே  வளர்ந்து  நாயகியைக்காதலித்துக்கல்யாணம் செய்து கொள்கிறான் . அவனுக்கு இந்த பாம்பு மேட்டர்  எல்லாம் தெரியாது . எக்காரணம் கொண்டும்  இந்தியா வரக்கூடாது என்ற  அம்மா கண்டிஷனை மீறி அம்மாவுக்குத்தகவல்  தராமல் இங்கே வருகிறான் . . இங்கே  அம்மாவின் வளர்ப்பு மகன் ஒருவன் இருக்கிறான் . அவன்  தான்   நாயகன் 



இறந்து போன  பாம்பு  ஆண் . அதன் உடலைப்பத்திரமாக வைத்திருக்கிறது அதன் துணையான பெண்பாம்பு . இப்போது  மகனின் உயிரை  எடுத்து  தன  கணவனுக்கு உயிர் கொடுக்க நினைக்கிறது   பெண்பாம்பு . கூடு விட்டுக்கூடு பாயும் வித்தை அறிந்த  பெண் பாம்பு  மகனின்  மனைவியின்  உடலில்  அதாவது   நாயகியின் உடலில்  புகுந்து கொள்கிறது . இப்போது  நாயகியின்  கணவனுடன் நாயகி இணைந்தால்  ஆள்  க்ளோஸ் 


 இந்த சதித்திட் டத்தை  நாயகன்   எப்படி முறியடிக்கிறான் என்பது  மீதித்திரைக்கதை 


நாயகன் ஆக அர்ஜுன்  ஓவர் ஆக்டிங்க் . தனக்கு ஜோடி இல்லை என்ற கடுப்பிலோ என்னவோ  ஏனோ தானோ  என  நடித்திருக்கிறார் . அடிக்கடி   அவர் பபுள்கம் மெல்வது கடுப்பு .கோடீஸ்வரியின் மகன்   ஆக    மலையாள நடிகர் முகேஷ் .. தமிழில் இவர் அறிமுகம் ஆன முதல் படம் . ஆனால்   நடிக்க அதிக வாய்ப்பில்லை . நாயகியைக்கட்டிப்பிடிக்கும் வேலை மட்டும் தான் . செவ்வனே அந்த வேலையை செய்திருக்கிறார் 


 நாயகி ஆக ராதா . படம்   முழுக்க அவரது  வேலை  கணவன் கூட சரசம்  செய்வது மட்டும்தான் . அருமையாக  அந்த கடினமான பணியை செய்திருக்கிறார் .


பழி  வாங்கத்துடிக்கும் பெண்பாம்பாக சாதனா  .இவர்   நடிப்பு தான்  உயிரோட்டமான நடிப்பு . இவரது   கணவன் ஆக   பப்லு எனும் பிருத்விராஜ் . அதிக   வாய்ப்பில்லை 

அபூர்வ சக்தி கொண்ட  சித்தர்   ஆக ராதாரவி  கச்சிதமான நடிப்பு 

காமெடி டிராக்கில் எஸ்  எஸ் சந்திரன் - கோவை சரளா . ஒய் விஜயா . டபுள்   மீனிங்க்  டயலாக்குகள்  சி சென்ட்டர் ரசிகர்களை   அந்தக்காலத்தில்   விசில்  அடிக்க வைத்திருக்கும் 


சங்கர்  கணேசின்  இசையில்  3 பாடல்களுமே   சுமார் ரகம் . டபிள்யு  ஆர் சந்திரனின்  ஒளிப்பதிவு  பரவாயில்லை ரகம் 

ராஜகீர்த்தியின்  எடிட்டிங்கில்  படம்  போர் அடிக்காமல் போகிறது . 2 மணி நேரம் தான் டைம் டியூரேசன் 


கதை , திரைக்கதை  ராமநாராயணன் . வசனம் - புகழ்மணி . இயக்கம்  சோழ ராஜேந்திரன் 


சபாஷ்  டைரக்டர்


1   நீயா?(1979)படத்தின்   சாயல்  தெரியாதவாறு  திரைக்கதை   அமைத்த விதம் 


2   டி வி சீரியல்களில்  வரும்  முதல் இரவு நடக்காமல்  தடுப்பது   எப்படி என்ற  கான்செப்ட்டை  வைத்துத்திரைகக்தை அமைத்த விதம் 


3 அனைவருக்கும்  பிடிக்கும் விதத்தில்  மாயாஜாலம் . மந்திரம்,கூடு விட்டுக்கூடு பாய்தல்   என்  திரைக்கதை   அமைத்த விதம் 


4   காமெடி   டிராக்கிலும்  கூடு விட்டுக்கூடு பாய்தல்   கான்செப்ட்டில்  கழுதையை வைத்து   டபுள்   மீனிங்க்  காமெடி டிராக் அமைத்த விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1  பெண்   மனசு நிமிசத்துக்கு நிமிஷம் மாறும் 


2 பெண்ணும் , காரும்  ஒரே விதம் , எப்போ  மக்கர் பண்ணும் என்பதை சொல்லவே முடியாது 


3 சித்தனுக்கும் , பித்தனுக்கும்  பசிக்காது 


4   உன் ஜாதகத்தில் இருக்கும் ஒரே தோஷம் சந்தோசம் தான் 


5  நோய்  என்ன?என தெரியாம மருந்து சாப்பிடக்கூடாது 


 அது டாக்டருக்குத்தெரிந்தா போதாதா? 


6 கட்டில்   அறையைக்கல்லறையா மாத்திடறேன் 


7  செஸ்  விளையாட்டு   ரொம்ப போர் . நடுவில் க்  சேர்த்தால்  செம கிக் ( அமரர்  சுஜாதாவின் நாவலில் வரும் வானம் இது ) 


8  பொன்   என என்னை எதனால கூப்பிடறே? 


 பொன்னையாவில் அய்யாவைக்கட் பண்ணிட் டேன் 


9  கிளிக்கு எகனால  சிலுக்குனு பேரு வெச்சிருக்கே? 


கிளி டிரஸ் போடலையே? 


10  என்ன  வியாதி ?

 அதை சொல்ல கூச்சமா இருக்கு 


  அவ்ளோ  அசிங்கமான வியாதியா? 



11   உங்க  கிட் டே   இருக்கும் எல்லா வாத்தியமும்  வாய்ல   வெச்சு   வாசிக்கற   மாதிரியே இருக்கே? 


 வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் 


12  தனியா  பேசணும் 


 சரி நான் போறேன் . தனியா பேசிட்டு இரு 


 ஐயோ , உங்க கிட் டே    தனியா  பேசணும் 


13  இது   என்ன ராகம் ?


 காம்போதி ராகம் 


 கபோதி  வந்த   விஷயத்தை சொல்லு 


14     புல்லாங்குழல்   இவ்ளோ   பெருசாவா இருக்கும் ?


பெருசா   இருந்தா அது நாதஸ்வரம் . சின்னதா  இருந்தாதான்   அது புல்லாங்குழல்  ( இதே   டயலாக்கை  கரகாட்டக்காரன்ல பயன்படுத்தி இருப்பாங்க ) 


15   மத்தவங்க  கிட் டே  சொல்லிட்டு செய்வது ஆம்பளை யோட லட்ஷணம் இல்லை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   பாம்பு  சிறுவனைக்கொத்தவில்லை . அவன் பயந்துதான் கீழே  விழுந்தான் .அதற்காக பாம்பைக்கொள்வது நியாயமே இல்லை 


2   பெண் பாம்பு  பழி   வாங்க வேண்டியது  மகனின் உயிரை . ஆனால் அம்மாவைக்கொல்வது எதுக்கு ? 


3  அம்மா   இறந்ததுக்கு   மகன் முகேஷோ  , வளர்ப்பு மகன் அர்ஜுனோ  வருத்தப் படவே இல்லை . ஆனால் மருமகள்  ராதா   கண்ணீர்   விடுகிறாள் 


4  பல   வருடங்களாய்ப்புழங்காத  அய்யாவின் அறை   சாவி வேலைக்காரன் இடுப்பில் இருப்பது எப்படி ? 


5  எஸ்டேட்   ஓனர்   ஆனா அர்ஜுன்  திடீர்   என மகுடி ஊதுவது   எப்படி ?  அவர் என்ன   பாம்பாட்டியா? 


6  புது பெண்  அல்லது   அறிமுகம் ஆகாத  பெண்ணுடன்  சரசம் என்றால் பரவாயில்லை  யாராவது  தாலி கட்டின சொந்த சம்சாரத்துடன்  ஓபன்  பிளேஸில்  தோட்டத்தில் சரசம்  கொள்ள   முயல்வார்களா? 


7   மின்சாரத்தைக்கட்  செய்ய   ராதா  மெயின் ஸ்விட்ஸை  ஆப் செய்யறார் . எலக்ட்ரீஷியனை அழைத்து வர செல்லும் முன் நாயகன் அதை செக் செய்ய மாட் டாரா? 


8 விஷம்  கலந்த  பாலைக்குடிக்க  நாயகன் ,நாயகி ,, மகன்   மூவரும்  போட்டி போடுவது , அதைக்குடித்து   விஷம் இல்லை என நிரூபிக்க முயல்வது  அனைத்தும்   டி ஆரின் ஒரு தாயி ன் சபதம் (1987) கோர்ட்   சீனில் இருந்து உருவி இருக்கிறார்கள் 



9  அர்ஜுன்   முகேஷுக்கு அளித்த   அய்யப்பன்   டாலர்  மிஸ்   ஆனதை   அர்ஜுன் கண்டு கொள்ளவே இல்லையே? 


10   ஒரு விழாவுக்கு  அழைக்க வருபவர்கள்  விழா நடக்க 10 நிமிஷம் இருக்கும்போது  தான் வந்து அழைப்பார்களா? 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+  டபுள்  மீனிங்க்   டயலாக்ஸ் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - படம்  சுவாரஸ்யமாகத்தான் போகிறது .பார்க்கலாம் . ரேட்டிங்க்  2.5 / 5 ,படம்  சுவாரஸ்யமாகத்தான் போகிறது .பார்க்கலாம் . ரேட்டிங்க்  2.5 / 5 . இப்போதும்   இந்தப்படத்தை  ரீமேக்கலாம் . ரீமேக்கினால்  டைட்டில் மனைவி ஒரு மாணிக் பாட் சா  


மனைவி ஒரு மாணிக்கம்
இயக்கம்சோழராஜேந்திரன்
தயாரிப்புஎன். இராமசாமி
கதைராம நாராயணன்
புகழ்மணி (வசனம்)
திரைக்கதைராம நாராயணன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஅர்ஜுன்
முகேஷ்
ராதா
எஸ். எஸ். சந்திரன்
ஒளிப்பதிவுடபல்யூ. ஆர். சந்திரன்
படத்தொகுப்புஇராஜகீர்த்தி
கலையகம்தேனாண்டாள் பிச்சர்ஸ்
விநியோகம்தேனாண்டாள் பிச்சர்ஸ்
வெளியீடு17 march 1990
நாடுஇந்தியா
மொழிதமிழ்

0 comments: