Wednesday, June 04, 2025

MOON WALK(2025) -மூன் வாக் - மலையாளம் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா )

               


         டான்ஸ்க்கு  முக்கியத்துவம் தந்த படங்கள் என்று  பட்டியலெடுத்தால் என் நினைவுக்கு வரும்   முக்கியமானவை   மிதுன் சக்கரவர்த்தி  நடிப்பில்  ஹிந்தியில்   வெளியான டிஸ்கோ   டான்ஸர் (1982)  ஆல்  சென்ட்டர் ஹிட் .9 பாடல்கள் . வெரைட்டி  டான்ஸ் .இதன்  தமிழ்  ரீமேக்கான  பாடும் வானம்பாடி (1985)8 பாடல்கள். ஆனந்த்பாபுவை உச்சத்துக்குக்கொண்டு போன படம் .மாற்றுத்த்திறனாளியாக இருந்தும் சுதா சந்திரன்  நடனத்தில்  அசத்திய  மயூரி (1985)தெலுங்கு , தமிழ்  இரு மொழிகளிலும்    மெகா ஹிட் ஆனது  கமலின்  பரத நாட்டியத்திறமையை  உலகுக்குச்சொன்ன படம் தெலுங்கில் வெளியான சாகர சங்கமம் -(1983 )  .இதன்  தமிழ்  டப்பிங்க் தான் சலங்கை ஒலி (1983). கமலின்  மாறுபட்ட   நடன  அசைவுகளை வெளிக்கொணர்ந்த இன்னொரு படம் புன்னகை மன்னன்..கிராமிய  நடனக்கலையை  மையமாகக்கொண்டு  வந்த மாபெரும்  ஹிட் படம் கரகாட்டக்காரன் (1989)  


மைக்கேல்  ஜான்சன்  பாணியில்  பிரபுதேவா  நட னம்   ஆடிய காதலன்  (1994) செம  ஹிட் .ஆனால் இந்து (1994) , மிஸ்டர்  ரோமியோ  இரண்டும் அட்டர் பிளாப் . சங்கமம் (1999)  ஏ ஆர்  ரஹ்மானின்  இசையில்  பாடல்கள்   செம   ஹிட் ஆனாலும்  படம் டப்பா . 


மாற்றுத்த்திறனாளியாக இருந்தும்   குட்டி  என்பவர் நாயகன்   ஆக  நடித்து  கேயார்  இயக்கத்தில்வெளியான டான்சர்(2005)  -தமிழ்ப்படம்  சுமார் ஹிட் ( இந்த  குட்டி  2007ம் ஆண்டு  ஒரு டான்ஸ்  புரோகிராமில்  ஸ் டெப்பில்  ஸ்லிப் ஆகி கீழு விழுந்து இறந்தார் )


சிவராஜ் குமாரின்  101 வது  ப டமான  லட்சுமி (2013) ஹிட் . ஆடலாம் பாய்ஸ்  சின்னதா  ஒரு டான்ஸ் (ஏபிசிடி ) எனிபடி கேன் டான்ஸ் (2013)    சுமார் 


க்ரைம்  த்ரில்லர்  படங்களில்  சமீப காலங்களாக மலையாளப்பட  உலகத்தின் பங்கு அளப்பரியது .  .உலகம் முழுக்க வரவேற்பு உண்டு . இப்போது  கேரளாவில் முற்றிலும்  புதுமுகங்கள்  நடித்து  லோ பட்ஜெட்டில் உருவாகி  ரிலீஸ் ஆகி  மெகா ஹிட் ஆகி இருக்கும் மூன்  வாக் மலையாள  சினிமா பற்றிப்பார்ப்போம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்

ஒரு காலேஜில்  படிக்கின்ற  சில மாணவர்களை  நடனம் என்ற  மையப்புள்ளி இணைக்கிறது . கதை  நடக்கும் கால கட்டம் 1990 .அப்போதுதான்   மைக்கேல்   ஜாக்சனின் இசையும்  , நடனமும்   பிரபலம் ஆகி  வருகிறது .டிஸ்கோ டான்ஸ்  சகாப்தம்  முடிந்து  பிரேக் டான்ஸ்  கோலோச்சும் சமயம்  . தமிழ்  நாட்டில்   எப்படி  மதுரை   அபிநயா நடன  நாட்டியக்குழு  புகழ் பெற்றதோ  அது  போல   கேரளாவில்   திருவனந்தபுரத்தில்  ஒரு டான்ஸ்  ட்ரூப்புக்கு அபார வரவேற்பு மக்களிடம்  கிடைப்பதைப்பார்த்து   அவர்களிடம்  இந்த காலேஜ் மாணவர்கள்  ஐடியா கேட் கிறார்கள் . எங்களுக்குனு டான்ஸ்   மாஸ்டர்   என   யாரும் இல்லை .மைக்கேல்   ஜாக்சனின்   வீடியோ  ஆல்பம் பார்த்து நாங்களாகக்கற்றுக்கொண்டோம் என்கின்றனர் 


சிங்கப்பூரில்  இருந்து கேரளா  வந்திருக்கும் ஒரு இளைஞருக்கு  பிரேக் டான்ஸ்  தெரியும் என்ற   தகவல் கிடைக்கிறது .இந்த காலேஜ்  மாணவர்களுடன்  படிப்பு இல்லாத   ஒரு கட்டிடக்கலை பணியாள்  இளைஞரும்  சேர்ந்து கொள்கிறார் 


 மெல்ல மெல்ல   அவர்களது ,நடை  உடை , பாவனைகள்   மாறுகிறது . இதனால் சமூகத்தில் , குடும்பத்தில்   அவர்கள்  சந்திக்கும் பிரச்சனைகள்  என்ன?  என்பது    மீதி   திரைக்கதை .மாநில  அளவிலான  டான்ஸ்  போட்டியில் அவர்கள் வென்றார்களா?என்பது க்ளைமாக்ஸ் 

இந்தப்படத்தில்  ஹீரோ ,  , வில்லன் ,காமெடியன் என   யாரும் இல்லை 


சஞ்சனா  தாஸ் , நைனிடா  மரியா   ஆகிய   இரு நாயகிகளின் நடிப்பும் அருமை . அவர்களது  வெட்கப்புன்னகை  கலக்கல் ரகம் .சிறிது  நேரமே   வந்தாலும்  நடிப்பில்  முத்திரை பதிக்கிறார்கள் .


புதுமுகங்கள்  ஆக   வரும் அனுநாத் , அப்பு ஆசாரி , அர்ஜுன்  மணி லால் , ரிஷி  கைநிக்கரா , சிபி  குட்டப்பன் ,சுஜித் பிரபாகர் மனோஜ் மோசஸ் , சித்தார்த்   என அனைவர் நடிப்பும் யதார்த்தம் .ஓவர் ஆக்டிங்க்கே  யாரும் செய்யவில்லை 


வீணா   நாயர் ,    துஷாரா பிள்ளை ,ஸ்ரீகாந்த்  முரளி   போன்ற  பழைய  நடிகர்கள்  நடிப்பும் அருமை 


 மேத்யூ வர்க்கீ ஸ் , சுனில் கோபால கிருஷ்ணன்  ஆகிய இருவரும்   கதை , திரைக்கதை   எழுத  இயக்கி இருப்பவர்  ஏ கே  வினோத் 


ஸ்ரீஜித்  பி டேஸ்லர்ஸ்   தான்  டான்ஸ்   மாஸ் டர்  . கலக்கலான  நடன அமைப்பு . இசை   பிரசாந்த் பிள்ளை .பாடல்கள்  2 ஹிட் ., பின்னணி இசை அருமை .அன்சார் ஷாவின் ஒளிப்பதிவு  ஒரு லோ பட்ஜெட்  படத்தை  பிரம்மாண்டமான  படம் ஆக்கிக்காட்டி இருக்கிறது . ஆர்ட் டைரக்ஸன்  பிரமாதம் . சாபு மோகனின் உழைப்பு 1990   கால  கட்டத்தைக் கண்  முன் நிறுத்துகிறது 


தீபு ஜோசப் +கிரண் தாஸ்  இருவரும் இணைந்து  எடிட்டிங்க்  செய்து இருக்கிறார்கள் . டைம் டியூரேசன்  2 மணி நேரம் மட்டும் 

சபாஷ்  டைரக்டர்


1  க்ளைமாக்சில்  வரும்  போட்டி நடனங்கள்  க்ரூப்  டான்ஸ் , டபுள்  டான்ஸ் , சோலோ டான்ஸ்  அனைத்தும் ஸ்டெப்ஸ்    அருமை . குறிப்பாக   கட்டிடக்கலை பணியாளாக  வரும் இளைஞரின்  டான்ஸ்   கலக்கல் ரகம் 


2  இரு இளைஞர்களின்   காதல்  எபிசோடு  நாஸ்டாலாஜிக்கல் மொமெண்ட்ஸ்  தர வல்லவை 


3 ஒரு  சீன்  கூட போர்  அடிக்காத   திரைக்கதை வடிவமைப்பு 


  ரசித்த  வசனங்கள் 


1  இது   என்ன? 


 பிரேக் டான்ஸ் 


 சாவி   குடு   அவன் கையில்.   . காக்கா   வலிப்பு  சரி ஆகிடும் 



2   அங்க்கிள் ,  யானை    வரைஞ்சு      தர்றீங்களா?  என் அக்காவுக்கு மட்டும்  வரைஞ்சு       தந்தீங்களே? 


 அது வந்து .... பூ   ஓக்கேவா?



3  ஆளும்  , அவன்   தலை முடியும் பாரு .. காதுல கடுக்கண்  வேற ,எனக்கு   2 பொண்ணுங்க .இவனோட சேர்ந்து  3 பொண்ணுங்க  என வெச்சுக்கணும் 


4   கை  வலி  இப்போ   எப்படி   இருக்கு ? 


 பரவாயில்லை . வலி  வந்தா  தகவல் தெரிவிக்க   உங்க  போன்  நெம்பர்  தந்தா   நல்லாருக்கும் 



5  பைக்  ஓட்டக்கூடாதுன்னுதானே போலீஸ்   கண்டிஷன் ? ஸ்கூட்டர்  ஓட்டினா? 


6  ஜெயிக்க  புது ஸ்டெப்ஸ்  மட்டும்  பத்தாது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  பெரிய  டிவிஸ்ட்  ஆக  இயக்குனர் நினைத்து  வைத்த   அந் த போலீஸ்   ஸ்டேஷனில் மாணவர்களுக்கு  ஹேர்  கட்டிங்க்  பண்ணி விடும்  சீன்   பெரிய   சோகத்தை உண்டாக்கவில்லை .இப்போதான்   நீட்டா  இருக்காங்க .இது தண்டனையா?  என எண்ணத்தோணுது 


2  காதலில்   ஈடுபடும்  மாணவனின்  காதலியின் அண்ணா அடித்து   கை  உடைப்பது  இந்த   டான்சர்   கதைக்குத்தேவை இல்லை 



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-கிளீன்  யு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - டி வி சீரியல்   பார்க்கும்   பெண்களுக்குப்பிடிக்காது . சோகம் இல்லை .சதித்திட்டம் இல்லை , குடும்பத்தைக்கெடுத்துக்குட்டிச்சுவர் ஆக்கும் சீன்கள்  இல்லை.யூத்துக்கான படம்  . ஜாலியான  படம் .ரேட்டிங்க்  3 / 5 

0 comments: