குடும்பக்கதைகளை சொல்வதில் இயக்குனர் விசு சம்சாரம் அது மின்சாரம் காலத்தில் இருந்து பிரபலம் . வரவு எட்டணா செலவு பத்தணா காலத்தில் இருந்து இயக்குனர் வி சேகர் பி அண்ட் சி செண்ட் டர் ரசிகர்களைக்கவர்ந்தவர் . இவர்களுக்குப்பிறகு குடும்பக்கதைகளைப்பார்ப்பதே அரிதாகி விட்டது .ஆக்சன் ஹீரோக்கள் அரிவாள் , துப்பாக்கி சகிதம் களம் இறங்கி வில்லன்களையம் , ஆடியன்ஸையும் கொத்து புரோட்டா ஆக்கிக்கொண்டிருக்கும் கால கட்டம் இது .இயக்குனர் கார்த்திகேயன் மணி குடும்பங்கள் கொண்டாடும் ஒரு வெற்றிப்படத்தை தந்திருக்கிறார்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு ஆட்டோ டிரைவர் , மனைவி ,மகன், மகள் என ஒரு அழகான குடும்பம் .அப்பாவாய்ப்புரிந்து கொள்ளாத மகன் .அம்மா, அப்பாவை விட்டுப்பிரிந்து நகரத்தில் வேலை பார்க்கும் மகள் . இவர்கள் நால்வர் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் மொத்தக்கதையே . ஒரு மிடில் கிளாஸ் மனிதனின் வாழ்க்கையை இவ்வளவு ,சுவராஸ்யமாக மனதைத்தொடும்படியாக சொல்ல முடியும் என நிரூபித்தமைக்காக இயக்குநரைப்பாராட்டலாம்
நாயகன் ஆக காளி வெங்கட் அமைதியான நடிப்பு . உடல் மொழி , பார்வையாலேயே அருமையாக நடித்திருக்கிறார் .அவரது மனைவியாக ஷெல்லி பொறுமையான பெண்ணாக பார்வையாலேயே நம்மைக்கவர்கிறார் .மகள் ஆக ரோஷினி ஹரிப்ரியன் பாந்தமான தோற்றம் .அவரது கண்ணியமான ஆடை வடிவமைப்பு ஒரு கவுரவத்தைத்தருகிறது . அரைகுறை டிரஸ்களில் வலம் வரும் நாயகிகளையே பார்த்து சலித்த நம் கண்களுக்கு உடல் அழகை வெளிக்காட் டாத கவுரவமான உடையில் இவர் வல ம் வருவது மிக்க மகிழ்ச்சியைத்தருகிறது
மகன் ஆக வரும் விஷவா ஆரம்பத்தில் எரிச்சலைத்தரும் நடிப்பை வழங்கினாலும் தன் அம்மாவை வீட்டு வேலைக்காரி போல் இருக்கா என சொன்ன இ பி ஆபீசரை வெளுத்து வாங்கும் இடத்தில் ஜொலிக்கிறார் .
முக்கியமான இந்த நான்கு கதாபாத்திரங்கள் போக பச்சோந்தி அரசியல்வாதி ஆக வரும் கீதா கைலாசம் ,பூமர் ஆண்ட்டி ஆக வரும் ஜாங்கிரி மதுமிதா ,இருவரும் கலகலப்பான நடிப்பை தந்திருக்கிறார்கள் .சிறிது நேரமே வந்தாலும் இருவரும் அருமை .
இ பி ஆபீசர் ஆக வரும் சுனில் சுகாதா ,டிரைவிங்க் ஸ்கூல் ட்ரெய்னர் ஆக வரும் ஜார்ஜ் மரியம் இருவரும் மனதில் பதிகிறார்கள்
டி வி புகழ் அர்ச்சனா எனக்குப்பிடித்த ஒரு சிரிப்பழகி , ஆனால் இதில் அவரது நடிப்பு கொஞ்ச்ம ஓவர் ஆக்டிங்க் மாதிரி தோன்றியது
கதை சொல்லும் ரைட் டர் ஆக சத்யராஜ் சில இடங்களில் ஒன் லைனர்களால் கவர்கிறார் .பல இடங்களில் சலிப்பூட்டுகிறார்
கே சி பாலசாரங்கனின் இசையில் பாடல்கள் இரண்டு அருமை . பின்னணி இசை கவனிக்க வைக்கிறது .ஜி கே ஆனந்தின் ஒளிப்பதிவில் உயிரோட் டம் , ஆர்ட் டைரக்ஸன் ஜாக்கி மிடில்கிளாஸ் பேமிலியின் வீடடைக்கண் முன் நிறுத்துகிறார் .சதீஷ்குமார் தான் எடிட் டிங்க் .இரண்டேகால் மணி நேரம் டியூரேசன்
சபாஷ் டைரக்டர்
1 ரைட் டர் சத்யராஜ் அந்த மலையாளப்பெண்ணுடன் நடத்தும் உரையாடல்கள் அருமை
2 நாயகனின் மகள் தன்னைப்பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையின் சித்தி தன் அப்பாவின் ஜாதியை மட்டம் தட் டும் சீனில் பொங்கி எழுவது செமயான சீன்
3 மெயின் கதை முழுக்க ஒரு சீரியஸ் மோடில் போய்க்கொண்டிருக்கும்போது அந்த இ பி ஆபீசர் - பூமர் ஆண்ட்டி ரொமாண்டிக் போர்சன் ஒரு ரிலாக்ஸ் .கலாட் டா மின்சார ஒயர் விழுந்து நாய் இறப்பது . அது சம்பந்தமாக நடக்கும் ரகளைகள்
4 க்ளைமாக்சில் ஹீரோ வில்லன் சோலோ பைட் டையே பார்த்து சலித்த நமக்கு குடும்பமாக நால்வரும் அமர்ந்து ஒன்றாக சாப்பிட்டு டிஸ்கஸ் செய்யும் சீன் கவிதை
5 அந்த ஊறுகாய் வியாபாரி கேரக்ட்டர் டிசைன் , நடிப்பு இரண்டும் செம
ரசித்த வசனங்கள்
1 பெண்ணின் நிராகரிப்பை ஆண்களால் தாங்கிக்கொள்ள முடியாது
2 திருமணம் ஆகாத பெண்கள் சந்திக்கும் சவால் என்ன? எல்லாரும் நம்மையே பார்க்கிற மாதிரி இருக்கும்
3 வீட்டுக்கு வெளியில் கிடைக்கும் வலிகளை வீட்டின் உள்ளே கிடைக்கும் பாசம், அன்பு சரி ஆக்கிடும்
4 பாப்பா எப்படி என்னை விடக்கலரா இருக்கா?
பிறக்கும்போது எல்லாரும் இந்த மாதிரி கலராதான் இருப்பாங்க , போகப்போக கறுப்பாகிடுவாங்க
5 நம்ம மனசு சந்தோஷமா இருக்க பொருள் தேவை இல்லை
6 பாசமான அப்பாவா இருப்பதை விட பொறுப்பான அப்பாவா இருப்பது முக்கியம்
7 நாம டம்மி ஆகிடக்கூடாதுன்னு எல்லார் லைஃப்லயும் ஒரு பயம் இருக்கும்
8 தப்பா வழி நடத்தக்கூட அவனுக்குன்னு யாரும் இல்லை
9 திமிராகப்பேசும் ஆண்களை நம்பு , ஆனால் அம்மாக்கோண்டுகளை நம்பாதே
10 நீ இதுவரை கஷ்டங்களை மட்டுமே பார்த்திருக்கே , கல்யாணம் ஆகிப்போகும் இடத்திலாவது சந்தோஷமா இருக்கணும் என்பதுதான் என் ஆசை
11 போறவன், வர்றவன் எல்லாம் நம்மை அசிங்கப்படுத்தறான் . பெத்த புள்ளை தானே ? பேசினா பேசட்டும்
12 எல்லார் மனசுலயும் ஒரு துயரம் . இதுல கொடுமை என்னன்னா நேற்றை விட இன்று அதிக துன்பம் வரும்
13 வார்த்தையால் அடிப்பது தப்பு
14 இந்த நாட்டின் பெரிய சாபக்கேடு இந்த தகவல் அறியும் உரிமை சட்டம்
15 எமன் எப்போ எப்படி ஆபரேட் பண்ணுவான்னு யாராலும் சொல்ல முடியாது
16 என்னை பிரேமா எனக்கூப்பிட் டா போதும் .,பச்சோந்தி என்பது எனது பட் டப்பெயர் தான்
17 கிளியோபாட்ரா நான்கு கல்யாணம் பண்ணிக்கிட் டா . நாலுமே டைவர்ஸ் வரை போயிடுச்சு . நானா இருந்திருந்தா அவளை கண்ணுக்குள்ளே வெச்சு பார்த்திருப்பேன்
18 சாதாரண மனிதனின் கதைதான் வெகு ஜனங்களைக்கவரும்
19 மிடில் கிளாஸ் கதைல அட்வென்ச்சர் இருக்காது , ரொமான்ஸ் இருக்காது , ஆக்சன் இருக்காது .செம போர்
20 நீங்க அழுவது போல எதுனா சம்பவம் உங்க வாழ்க்கைல நடந்திருக்கா மேடம் ?
சரக்கு அடிச்சு டைட் ஆனா நைட் அழுவேன்
21 நாய் பிரவுன் கலர்ல இருந்தா பிரவுனி . பிளாக் கலர்ல இருந்தா பிளாக்கி , ஒயிட் கலர்ல இருந்தா ரோஸி
22 இந்த அண்டம் , ஆகாயம் எங்கே இருந்து வந்தது ?
முண்டம் எங்கே இருந்து வந்தது ? தண்டம்
23 மேரேஜ் லைப்ல நான் சந்தோஷமா இல்லை ,இப்ப டைவர்ஸ் பண்ணிட்டேன்
இப்ப சந்தோஷமா இருக்கீங்களா?
ம்ம்ம்
24 கஷ்டம் தெரியாம உங்கப்பா உன்னை வளர்த்திட் டாரு
25 பேசுன வார்த்தைகளை விட பேசாத வார்த்தைகள் தான் அதிக வலி களைத்தரும் , காயங்களை உண்டாக்கும்
26 எல்லாப்பக்கங்களிலிருந்தும் எல்லாரும் எனக்குப் பிரஷர் போடற மாதிரி இருக்கு
27 நான் பட்ட எல்லாக்கஷ்டங்களோட பலன் நீங்க ரெண்டுபேரும் தான் . ஆனா நான் பட் ட கஷ்டங்கள நீங்க படக்கூடாது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 மெயின் கதையில் நாம் ஒன்றி இருக்கும்போது சத்யராஜ் வாய்ஸ் ஓவரில் ஆங்காங்கே தலையிடுவது எரிச்சல்
2 நாயகனின் மகள் மாப்பிள்ளையின் சித்தியிடம் எரிந்து விழுவது சரி . ஆனால் மாப்பிள்ளையை அவ்ளோ கேவலமாக டீல் செய்திருக்க வேண்டாம்
3 டீ டோட் டலர் ஆக எந்த தீய பழக்கங்களும் இல்லாத நாயகன் திடீர் என தண்ணி அடிப்பது தம் அடிப்பது தேவை இல்லாத திணிப்பு
4 மெயின் கதைக்கும் , டைட்டிலுக்கும் சம்பந்தம் இல்லை , நல்ல தமிழ் டைட்டில் வைத்திருக்கலாம்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - கிளீன் யு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - 150 ரூபா கவுண்ட்டர் டிக்கெட்டை முன்னணி ஹீரோ படம் என்பதால் முதல் நாள் முதல் ஷோ வை 1000 ரூபா கொடுத்துப்பார்த்து அது குப்பைப்படம் என்பதை உணர்ந்து நொந்து கொள்வதை விட இது மாதிரி லோ பட்ஜெட் படங்களை தியேட்டரில் பார்க்க அனைவரும் முன் வந்தால் நல்ல சினிமாக்கள் மேலும் மேலும் வரும் . விகடன் மார்க் யூகம் . 41 . ரேட்டிங்க் 3 / 5
0 comments:
Post a Comment