Wednesday, June 11, 2025

மனிதர்கள் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

   

     அறிமுக இயக்குனர் ராம் இந்திரா  முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க ஒரே இரவில்  ஒரே  காரில்  நடக்கும் பயணக்கதையாக ஒரு த்ரில்லர் படத்தைத்தந்திருக்கிறார் . அது  எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆனது என்பதைப்பார்ப்போம் 


 ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  மற்றும்  ஐந்து  நண்பர்கள்  6 பேரும் நண்பர்கள் . குடிகாரர்கள் . ஒரு நாள்  குடித்து விட்டு  மட்டை ஆகி இருக்கும்போது  ஒரு வாக்குவாதத்தில் ஒரு நண்பர் பாட்டில் குத்துப்பட்டு இறந்து கிடக்கிறார் அவர்  எப்படி இறந்தார் ?  யார்  அவரைக்கோலை செய்தது ? என்பது  மப்பில்  இருந்த மற்ற  ஐவருக்கும் தெரியவில்லை . டெட் பாடியை எங்காவது புதைத்து விடலாம் என நினைத்து  காரில்  கிளம்புகின்றனர் . வழியில்  அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் மீதி திரைக்கதை 


க்ளைமாக்சில்  அந்தப்பிணத்தைப்புதைக்கும்போது அந்த உடலில் ஒரு அசைவு தோன்றுகிறது . உயிர் இருப்பதை அனைவரும் உணர்கிறார்கள் . ஆனால்  புதைத்து விடலாம் என்று  இருவரும் ஹாஸ்பிடல்  கொண்டு  போகலாமா?  என மூவரும்  யோசிக்கிறார்கள் . இதில் ஐவருக்கும் கை  கலப்பு மற்றும் வாக்கு வாதம் உருவாகிறது .இறுதியில் என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ் 


நாயகன் ஆக கபில்  வேலவன்  கச்சிதமாக நடித்திருக்கிறார் . முடிவு எடுக்கும்   திறன் கொண்ட  ஒரே ஆண்  இவர் தான் இந்தக்குழுவில் . ஆல்பா மேல் . மற்ற  அனைவரும்  கோழைகள் , பயந்தாங்கோலிகள் . தக்சா ,குணவந்தன் தனபால் , , அர்ஜுன் தேவ் , சம்பா சிவம்  ஆகிய ஐவரும்  முகத்தில்  பயத்தை நன்கு வெளிப்படுத்தி இருக்கிறார்கள் . டி வி சீரியலில்  வருவது  போல  படம் முழுக்க  இருவர் அழுது கொண்டே  வருவது எரிச்சல் உண்டாக்குகிறது ( ஒரு வேளை  பெண்களின்  மனம்   கவரவோ என்னவோ? )


ஐந்து  பேரில்  ஒருவர் எஸ்கேப் ஆகி ஓடுவது ,அவரைத்தேடி  , துரத்தி மற்றவர்கள் போவது , பெட்ரொல்  பங்க்கில்  அவர்களை  சந்தேகமாகப்பார்ப்பது . கார் டிக்கிக்கதவில் ரத்தக்கறை  படிந்திருப்பது ,  கோவில்  திருவிழாக்கூட்டம்  கடக்கையில்  டென்ஷன் ஆவது , ஒரு வழிப்பறிக்  கும்பலிடம் மாட்டிக்கொள்வது  என திரைக்கதையை சுவராஸ்யப்படுத்த பல சம்பவங்கள் வருகின்றன  


அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ்  தான் ஒளிப்பதிவு .பிரமாதபப்டுத்தி இருக்கிறார் . ஒரு காருக்குள்  இரவில்  நடக்கும் கதை என்பதால் இவருக்கு சவாலான பணி  . காரின் ஹெட் லைட்  வெளிச்சத்தில் சாலையைக்காட்டும்போது கலக்கலான ஒளிப்பதிவு 


  அநிலேஷ்  எல் மாத்தியூ  தான் இசை .இரண்டு பாடல்கள் சுமார் ரகம் .பின்னணி இசை பரவாயில்லை ரகம் .


மகேந்திரன் பாண்டியன் தான் ஆர்ட் டைரக்ஸன் . திரு விழா செட்டிங்க்   அருமை . 


ஒளிப்பதிவு   எந்த அளவுக்கு படத்துக்குப்பெரிய பிளசோ   அந்த   அளவு  ஒலிப்பதிவு  மைனஸ் .வசனமே  புரியவில்லை .     பாதிநேரம்  அழுது கொண்டே இருப்பதாலும் .அனுதாபத்தைப்பெற  கதறிக்கொண்டே  இருப்பதாலும்  வசனங்கள் ஒன்றும் புரியவில்லை 



சபாஷ்  டைரக்டர்


1  பெண் கதாப்பாத்திரமே  இல்லாமல்   ஒரு படம் தரலாம் என்ற துணிச்சல் 


2  ஒரே  கார் ,ஒரே இரவு  என்பதால்  அதிக அலைச்சல் இல்லை .துணை நடிகர்கள் சம்பளம் மிச்சம் 


3  படம் பார்க்கும்   அனைவருக்கும்  ஒரு பதட்டத்தை  உருவாக்கியது . ஆடியன்ஸுக்கு கதையுடன் ஒரு கனெக்ட்டிவிட்டி உருவாக்குவது மிக முக்கியம் .பெரிய  பெரிய  இயக்குனர்களே  அதை செய்யத்தவறும்போது அறிமுக இயக்குனர்  செய்திருப்பது சபாஷ் போட வைக்கிறது 


  ரசித்த  வசனங்கள் 

 படம் முழுக்க  கெட் ட  வார்த்தைகள் தான் ஐவரும் பேசுகிறார்கள் .எதுவும் ரசிக்கும்படி இல்லை 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  பேனிக்  அட் டாக்  வந்து  ஒருவன்   துடித்துக்கொண்டிருக்கிறான் . அவனுக்குத்தண்ணீர்  தராமல்  வெட்டியாகப்பேசிக்கொண்டிருக்கிறார்கள் 


2   ஆறு  பேர்  பயணிக்கும் காரில்  ஒரு வாட் டர்   பாட்டில் கூடவா இருக்காது ? 


3   ஒரு ராத்திரி   முழுக்க  எங்கெங்கேயோ  அலைகிறார்கள்  காரில் .ஆனால்  போலீஸ்  செக்கிங்கே  ஒரு இடத்தில் கூட இல்லை 


4  அழுக்கோண்டே  இருப்பது .பயத்தில் கத்திக்கொண்டே  இருப்பது  எரிச்சலைக்கொடுக்கிறது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+   (கெட் ட  வார்த்தைகள்) 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - வித்தியாசமான  படங்கள்  பார்ப்பவர்கள் , சினி பீல்டில் ஒர்க்  செய்பவர்கள்  பார்க்கலாம்.பொது ஜனங்களுக்குப்பிடிக்ககாது . விகடன் மார்க் 41  ரேட்டிங்க் 2.25 / 5 

0 comments: