ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லி ஒரு பாட்டி .திருடி .ஹாஸ்ப்பிடலில் முறுக்கு, மிக்ஸர் விற்பது போல இரண்டு கட்டைப்பைகளுடன் போய் நைசாக கைக்குழந்தையைத்திருடி ஒரு கும்பலிடம் விற்று விடுவாள் .
வில்லன் ஒரு டாக்டர் .ஒரு நாள் காரில் போகும்போது முன்னால் பைக்கில் போன ஒரு தம்பதியை விபத்துக்கு உள்ளாக்குகிறார் . ஹாஸ்ப்பிடலில் சேர்க்கிறார் . ஆனால் தம்பதி இருவரும் அவுட் .அவர்களது கைக்குழந்தை உயிருடன் அநாதை ஆகிறது .அதே ஹாஸ்ப்பிடலில் பிரசவத்தில் இறந்து பிறந்த குழந்தையால் கதி கலங்கி நின்ற ஒரு தம்பதிக்கு வில்லன் விபத்தில் உயிர் இழந்த தம்பதியின் கைக்குழந்தையை தானமாகத்தருகிறார் . உடனே குழந்தையை வாங்கிக்கொண்டவர் ஒரு பெரிய தொகையை வில்லனுக்குத்தருகிறார் . இது வில்லனை யோசிக்க வைக்கிறது
ஒரு நெட் ஒர்க்கை உருவாக்குகிறார் .குழந்தையைத்திருடுவது . , குழந்தை இல்லாத தம்பதிக்குத்தானமாகத்தருவது , சன்மானம் பெறுவது .இதுதான் இனி வில்லனின் தொழில்
நாயகன் ,, நாயகி இருவரும் தம்பதி .பிரசவத்தில் பிறந்த இவர்களது குழ்ந்தை ஒரு மணி நேரத்தில் காணாமல் போகிறது . அந்தக்குழந்தையை எப்படிக்கண்டுபிடிக்கிறார்கள் என்பது மீது திரைக்கதை
நாயகன் ஆக அதர்வா .அப்பாவை விடத்திறமைசாலி . ஆனால் அப்பா முரளி போல நல்ல படங்கள் அமையவில்லை ,அந்தக்குறையை இந்தப்படம் போக்கும் .
நாயகி ஆக நிமிசா சஞ்சயன் . பிரமாதமாக நடித்திருக்கிறார் .நாயகனை விட நடிக்க அதிக வாய்ப்பு இவருக்குத்தான் ,நன்றாக பயன்படுத்தி இருக்கிறார் ( இயல்பாகவே இவரது முக அமைப்பு சிடுமூஞ்சி அல்லது அழுது வடிந்த முகம் தான் ஆனால் சிரித்தால் அழகாக இருக்கிறார் )
இயக்குனர் பாலாஜி சக்திவேல் போலீஸ் ஆபிஸர் ஆக வருகிறார் .பரவாயில்லை ரக நடிப்பு / தொப்பையுடன் அவர் வருவது சகிக்கவில்லை
நாயகியின் அம்மாவாக வரும் விஜி சந்திர சேகர் , நாயகனின் அப்பாவாக வரும் சேத்தன் இருவரும் நல்ல குணச்சித்திர நடிப்பு
ஒளிப்பதிவு பார்த்திபன் . அருமை .இசை ஜிப்ரான் . நான்கு பாடல்களும் பாஸ் மார்க் . பின்னணி இசை அருமை . இயக்கம் நெல்சன் வெங்கடேசன் . திரைக்கதை , வசனம் உதவி அதிஷா
சபாஷ் டைரக்டர்
1 திரைக்கதை நல்ல விறுவிறுப்பு .இடைவேளை பிளாக் சீன் ,கடைசி 20 நிமிடங்கள் செம கலக்கல் ரகம்
2 பாட்டியாக நடித்த வில்லி நடிப்பு செம . அதே போல் நாயகியின் நடிப்பும் அருமை
3 ஜிப்ரானின் பின்னணி இசை அருமை .
ரசித்த வசனங்கள்
1 தப்பு செய்யற யாருமே தப்பிக்கறதில்லை ,தண்டனைக்கான காலத்தைத்தள்ளிப்போட்டுடறாங்க
2 பார்டர் லைன் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் என்பது வெ ட் டவெட்ட வளரும்
3 மூஞ்சியை கொஞ்ச்ம் சிரிச்ச மாதிரி வையேண்டா
பேசாம நாம அவனுக்கு சிரிச்ச மாதிரி மேக்கப் போட்டு விட்டுடலாமா?
4 ஒரு பொருளை எடுத்துட்டு அதே மாதிரி இன்னொரு பொருளை வைப்பது நகைக்கடத்தல்ல, சிலைக்கடத்தலில் தான் . குழந்தைல இதுதான் முதல் டைம்
5 பெண்பிள்ளைன்னா வட நாடு ,ஆண்பிள்ளைன்னா சுடுகாடு . தலைச்சன் பிள்ளைன்னா நரபலி கொடுப்பாங்க
6 மனுஷன் மாடா , பேயாய் உழைப்பான் ,மானமா? பசியா? என வந்தா அவன் சாய்ஸ் பசி தான்
7 பணக்காரனுக்கும் , மிடில் கிளாசுக்கும் உள்ள வித்தியாசமே இந்த ரிஸ்க் தான்
8 உன் கிட்டே காசில்லைன்னா ,, வசதி இல்லைன்னா , வேலை இல்லைன்னா ஒரு பய என்ன? ஏது என கேட்க மாடடான் , ஆனா குழந்தை இல்லைன்னா கண்டிப்பா கேட்பான் , பிரஸர் தான்
9 குற்றத்தில் கூட்டணி போட் டவன் என்னைக்கும் நம்மைக்காட்டிக்கொடுக்க மாட் டான்
10 இந்த ஜோசியர் சொல்றதெல்லாம் நம்பும்படியாவா இருக்கு ?
நம்புனா காசு வாரும்
கண்டிப்பா 100% நம்பறேன்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் குடிகாரன் , கஞ்சா கேஸ் , ஆனால் திருமணம் ஆன உடனே அப்படியே நல்லவனாக மாறி விடுகிறார் .பாடியை ஜிம் பாடி போல் பிட் ஆக வைத்திருக்கிறார் . சாத்தியமே இல்லை
2 நாயகன் பைக்கில் போகும்போது ஹெல்மெட் போடுவதே இல்லை
3 ஒரு சீனில் போலீஸ் ஆபீசர் கான்ஸ்டபிளிடம் , சின்னசாமி இருக்காரா?எனக் கேட்கும்போது இருக்கார் இல்லை என பதில் சொன்னால் போதும் . சும்மாதான் இருக்கார் என்கிறார் .
4 நாயகி நாயகனிடம் நான் சொன்னதில் நம்பிக்கை இல்லை , டி என் ஏ டெஸ்ட் எடுத்தபின் தான் நம்பினாயா?எனக்கேட் கும்போது நாயகன் எதனால் மவுனமாக இருக்கிறான் ?கோர்ட்டுக்கு த்தேவை என உண்மையை சொல்லி இருக்கலாமே?
5 படத்தில் வரும் அனைத்துப்பெண்களும் தாலிச்செயினை மறைவாக வைக்க நாயகி மட்டும் சேலை , ஜாக்கெட்டுக்கு வெளியே வைததிருக்கிறார் . இதெல்லாம் எம் ஜி ஆர் , கால சிவாஜி கால நாயகிகள் செய்யலாம் .மாடர்ன் பெண்கள் தாலியை மதிப்பது இல்லை
6 தீண்ட தீண்ட பாடல் இசை , நடன அமைப்பு அனைத்தும் கோடானு கோடி பாட்டின் உல் டா வெர்சன்
7 இது நல்ல க்ரைம் த்ரில்லர் படம் . ஆனால் தேவை இல்லாமல் நாயகனுக்கு 4 பைட் சீன்கள்
8 போலீஸ் ஆபிஸர் நாயகன் சொல்படி எல்லாம் கேட்பது எப்படி ?
9 நாயகனின் குசந்தையை எதற்காகத்திருடுகிறார்கள் என க்ளைமாக்சில் சொல்லும் காரணம் நம்ப முடியவில்லை
10 குழ்ந்தை திருட்டில் நர்ஸ் ட்வின்ஸ் என்ற டிவிஸ்ட் எல்லாம் அடேங்கப்பா போதும்டா உங்க உருட்டு என சொல்ல வைக்கிறது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U/A
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளி வந்திருக்கும் நல்ல க்ரைம் ஆக்சன் த்ரில்லர் . படம் பார்க்கலாம் . விகடன் மார்க் யூகம் -42. ரேட்டிங்க் 3 / 5
0 comments:
Post a Comment