முழுக்க முழுக்க அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்த தமிழ்ப் படம் இது . அதனால் பெரும்பாலான வசன ங்கள் ஆங்கிலத்தில் தான் இருக்கும்.தமிழ் சப் டைட்டில் உண்டு . முதல் பாதி முழுக்க கோர்ட் ரூம் டிராமா . பின் பாதி க்ரைம் த்ரில்லர்
ஸ்பாய்லர் அலெர்ட்
ஒரு கோடீஸ்வரி விதவை தனிமையில் இருக்கிறார் , . வாரிசு இல்லை . அவரிடம் 25 வருடங்களாக ஒரு ஆள் பட்லர் ஆக வேலைக்கு இருக்கிறான் நாயகி ஒரு மிடில் கிளாஸ் பேமிலி . நாடக நடிகை ஆக இருந்தவர் இப்போது ஷேர் மார்க்கெட் கன்சல்டடண்ட் ஆகப்பணி ஆற்றுகிறார் . ஒரு முறை அந்த கோடீஸ்வரியுடன் அறிமுகம் ஆகி பழக்கம் ஏற்படுகிறது . அவரின் பணத்தை எந்த சேரில் முதலீடு செய்யலாம் என ஐடியா கொடுக்கிறாள் நாயகி . . இதைத்தொடர்ந்து நாயகி அடிக்கடி அந்த கோடீஸ்வரி யின் பங்களாவுக்கு வந்து போய்க்கொண்டு இருக்கிறார் . அந்தக் கோடீஸ்வரி க்கு ஆஸ்துமா ட்ரபிள் உண்டு . அடிக்கடி மூச்சு விடுவதில் பிரச்சனை உண்டு .
ஒரு கட்டத்தில் நாயகியின் பணிவிடைகள் , பழக்க வழக்கங்கள் பிடித்துப்போய் நாயகிக்கு தன சொத்தின் பெரும்பகுதியை உயில் ஆக எழுதி வைத்து விடுகிறார் . இந்த விஷயத்தை நாயகியிடமும் சொல்லி விடுகிறார் .நாயகிக்கு ஒரு காதலன் உண்டு . அவனுக்குப்பெரிய சம்பாத்யமோ ., வேலையோ இல்லை . ஒரு பிரைவேட் ஹாஸ்பிடலில் நர்ஸ் ஆக வேலை செய்கிறான் . நாயகி தன காதலனிடம் இந்த சொத்து விஷயத்தைப்பகிர்கிறாள் .கோடீஸ்வரி இடம் பட்லர் ஆக வேலைக்கு இருக்கிறானே அவனுக்கு நாயகியைக்கண்டால் ஆகாது . காரணம் நாயகி இல்லை எனில் சொத்து பூரா தனக்கு வரும் என நினைக்கிறான்
இப்படியான சந்தர்பப்த்தில் அந்தக் கோடீஸ்வரி மூச்சுத்திணறி இறக்கிறார் .அது இயற்கை மரணமா ? கொலையா? யார் அதை செய்திருப்பார்கள் ? 1 நாயகி 2 நாயகியின் காதலன் 3 கோடீஸ்வரி இடம் பட்லர் ஆக வேலைக்கு இருக்கிற ஆள் இந்த கேஸ் தான் கோர்ட்டில் நடக்கிறது . முதல் பாதி முழுக்க வாத , பிரதிவாதங்கள் நடக்கிறது .
கோர்ட் தீர்ப்பு என்ன கிடைத்தது ? தீர்ப்புக்குப்பின் நடந்த அதிர்ச்சி ஊட்டும் சம்பவங்கள் என்ன? என்பதை திரையில் காண்க
கோடீஸ்வரி ஆக சுஹாசினி நடித்திருக்கிறார் . இவரது நடிப்பு எனக்குப்பிடிக்கும் .ஆனால் இவர் பல இடங்களில் செயற்கையாக சிரிப்பார் .அது பிடிக்காது . இவருக்கு அதிக வாய்ப்பில்லை . வந்த வரை ஓகே ரகம்
நாயகி ஆக சுருதி ஹரிஹரன் பிரமாதமான நடிப்பு .கலக்கி விட் டார் . குறிப்பாக கோடீஸ்வரி இறக்கும் காட்சியில் அவரது முகத்தில் தெரியும் பதட்டம் கிளாசிக்
நாயகி சார்பில் வாதாடும் வக்கீல் ஆக வரலடசுமி சரத்குமார் .கம்பீரமான நடிப்பு .கோர்ட்டில் அவர் உடல் மொழி , வாதிடும் பாங்கு டயலாக் டெலிவரிஅனைத்தும் அற்புதம்
நாயகியின் காதலன் ஆக பிரகாஷ் மோகன்தாஸ் நடித்திருக்கிறார் . ஒரு கமல் ஹாசனோ , தனுஷோ , சிம்புவோ நடித்திருக்க வேண்டிய ரோல் இவருடையது . ( அதாவது பெண் பித்தன் வேடம் ) ஆனால் அந்த கேரக்டருக்கு வலு சேர்க்கும் அளவுக்கு இவர் நடிப்பு இல்லை . எங்க ஊர்ப்பக்கம் ஒருபழமொழி சொல்வார்கள் .செத்துப்போனவன் கையில் வெத்தலை பாக்குக்கொடுத்தது போல என்று , அது மாதிரி தான் அவரது நடிப்பு தேமே என்றிருந்தது . ஒரு ரகுவரன் அல்லது பிரகாஷ் ராஜிடம் தந்திருந்தால் பின்னிப்பெடல் எடுத்திருப்பார்கள்
ஜுரி களில் ஒருவராக வரும் வித்யு லேகா ராமன் நடிப்பு கன கச்சிதம்
ஒளிப்பதிவு அர்விந்த் கிருஷ்ணா . கோர்ட் ரூமில் படமாக்கப்பட் ட காட் சிகள் தரம் . வெளிப்புறப்படப்பிடிப்பும் பிரம்மாண்டமான நேர்த்தி . ஆர்ட் டைரக்ஸன் நந்தினி முத்யம் , கோர்ட்ரூம் செட்டிங்க் செம . ஆதித்யா ராவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான் .பின்னணி இசை கூட இன்னமும் பிரமாதப்படுத்தி இருக்கலாம் .
கதை , திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் கிருஷ்ணா சங்கர்
சபாஷ் டைரக்டர்
1 கோர்ட்டில் நடக்கும் வாத , பிரதி வாதங்கள் மிக இயற்கையாக அமைத்த விதம் . வழக்கமான தமிழ்ப்படங்களில் காட்டுவது போல ஓவர் ஆக்டிங்க் இல்லை
2 கோர்ட் தீர்ப்பு வந்த பின் படமே முடிந்து விட்ட்து என நினைக்கும்போது ஒரு புது திரைக்கதை உருவாவது அருமை . பாதிப்படம் அதற்குப்பின் தான்
3 நாயகி , வக்கீல் ஆகிய இருவர் நடிப்பும் அருமை
4 கொரோனா கால கட்டத்தை சாமார்த்தியமாகப் பயன்படுத்திய விதம்
ரசித்த வசனங்கள்
1 குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் அப்பாவிகள்!தான்
2 சின்ன விஷயங்களைப்பண்ணி யாரும் நல்லவங்க ஆகிட ,முடியாது
3 விதில உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?
வாழ்க்கை ல எனக்கு நம்பிக்கை இருக்கு
4 நான் ஏழை தான் , ஆனா பேராசை இல்லை மத்தவங்க பணம் மேல பொறாமை இல்லை
5 கைல 10 பைசா கூட இல்லைன்னாதான் பணத்தோட அருமை , மதிப்பு தெரியும்
6 கோர்ட்டுக்குத்தேவை 1 எவிடென்ஸ் 2 மோடிவ்
7 நமக்கு முன்னே 10,000 அடி தள்ளி பிரச்சனை இருக்குன்னா அதை முதலிலேயே பார்த்துடுவேன்
ஆனா 10 அடி தூரத்த்தில் இருக்கும் பிரச்சனையை கவனிக்க மாட் டீங்க
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஹாஸ்ப்பிடலில் சிசிடிவி கேமரா இருக்கும் என்பது அங்கே பணிபுரியம் நர்சுக்குத்தெரியாதா? அப்படி ஈசியாக மாட்டுவாரா?
2 ஒரு கோடீஸ்வரி , ஆஸ்துமா ட்ரபுள் உள்ளவர் தனக்கென தனி நர்ஸ் வைத்துக்கொள்ள மாட் டாரா?
3 நாயகியின் காதலன் எந்த நம்பிக்கையில்; நாயகியின் வக்கீலிடம் சில ரகசியங்களை வெளியிடுகிறான் ?
4 எனக்கு ஒரே ஆளிடம் இருக்கப்பிடிக்காது , மலருக்கு மலர் தாவுவேன் என டயலாக் பேசும் ஆள் எப்படி ஒரே ஆளிடம் 10 வருசமாக குப்பை கொட்டுகிறான் ?
5 ஜாக்கிசான் உட்பட பல கோடீஸ்வரர்கள் தங்கள் சொத்துக்களை அநாதை ஆசிரமங்களுக்குத்தான் எழுதுகிறார்கள் . ஆனால் இதில் ஒரு கோடீஸ்வரி அறிமுகம் அதிகம் இல்லாத ஆளுக்கு 150 மில்லியன் டாலர் சொத்து எழுதி வைப்பது ஓவர்
6 ஒரு பிரபல லேடி வக்கீல் உண்மைகளை ரகசியங்களைக்கண்டு பிடிக்க ஒரு பொம்பளைப் பொறுக்கியிடம் காதலி ஆக நடிப்பார்களா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U/A
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - யூகிக்கக்கூடிய ட்வீஸ்ட்களுடன் ஒரு சராசரி க்ரைம் த்ரில்லர் படம் , பார்க்கலாம் . ரேட்டிங்க் 2.75 . 5 . விகடன் மார்க் யூகம் - 41
0 comments:
Post a Comment