Monday, June 02, 2025

AGNYATHAVASI(2025_ கன்னடம் - சினிமா விமர்சனம் ( மர்டர் மிஸ்ட்ரி க்ரைம் டிராமா ) @ ஜீ 5

         


               

இந்தப்படத்தை  நண்பர்   பெங்களூர்  பிரேம்  கனடாவில் இருந்து  பரிந்துரைத்தபோது  விபரம் அறிய டைட்டிலை டைப்பி கூகுளில்  தேடினேன் . 2018ம் ஆண்டு  வெளியான  எவரு  தெலுங்குப்படத்தின் ஹிந்தி வெர்சன் எனக்காட்டியது .விட்டேன் . த இன்விசிபிள்  கெஸ்ட்  என்ற ஸ்பானிஷ்  படத்தின் தெலுங்கு  பட் டி டிங்கரிங் வெர்சன் தான் எவரு  தெலுங்கு. ஹிந்தியில்  பதலா  என்ற  டைட்டிலில்  வந்தது பிறகு  எதற்காக  அதே  தெ லுங்கு வெர்சனை ஹிந்தியில் டப் செய்ய வேண்டும் ? என நினைத்தேன் . குழப்பம் நீங்கியது . அது   வேறு படம் இது வேறு படம் 


1997ல்   நடந்த  மலைநாடு  மர்டர்   என்ற  உண்மை சம்பவம் தான் கதை . அதே  லொக்கேஷனில்  ஷூட் செய்து இருக்கிறார்கள் 11/4/2025   அன்று  திரை   அரங்குகளிலே  ரிலீஸ் ஆன இந்தப்படம்  இப்போது  ஜீ 5  ஓ டி டி  யில் காணக்கிடைக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்



 25 வருடங்களாக குற்றமே  நடக்காத ஊர் அது .முதல் முதலாக அந்த ஊர் பெரிய மனிதர்  கொலை செய்யப்பட்டு இருக்கிறார் .அவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து போகும்  ஒரு இளைஞன் அவன் தான் அந்த  ஊருக்கு முதல் முதலாக கம்ப்யூட் டரைக்கொண்டு வந்தவன் . (கதை நடக்கும் காலகட் டம் 1990 )  அவன் மேல்  போலீஸ் சந்தேகப்பட்டு அவன் வீ ட்டுக்குப்போனால் அவனும் இறந்து கிடக்கிறான் . இந்த இரு  மரணங்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்று போலீஸ் சந்தேகிக்கிறது . இதற்குப்பின்  நிகழும்  சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை 


நாயகன் ஆக  , போலீஸ் ஆபீசர் ஆக ரங்கையனா   ரகு  அருமையாக நடித்து இருக்கிறார் . துப்பறியும் சீன்கள் அருமை .  நாயகி ஆக பாவனா  கவுடா  அழகு முகத்துடன் இளமைப்பொலிவுடன் வருகிறார் ( இவர் நம்ம ஊர் பாவனா அல்ல )நாயகி   மீது ஒருதலையாக ஆசைப்படும் இளைஞன் ஆக  சித்து  மூலிகனி  நடித்து இருக்கிறார் .இவர்   வில்லன் ஆக மாறும் சீன்கள் மிரட்டல் எனில்  நாயகி   வில்லி ஆக  மாறும் சீன்கள்   செம .


 கொலை   செய்யப்படும்  ஊர்ப்பெரியவர் ஆக சரத்  லோகிதாசவா  நல்ல நடிப்பு . உதவி   துப்பறிவாளர் ஆக  வரும் ரவி சங்கர்  கவுடா   கச்சிதமான   நடிப்பு . போலீஸ்  ஆபீசரையே   சந்தேகப்படும் சீன அருமை 

சரண்  ராஜின் இசையில்  படத்துக்குப்பெரிய வேகம்கொடுக்க முடியவில்லை .அத்வைதா குருமூர்த்தியின் ஒளிப்பதிவு அருமை . 1990 ல் நடக்கும் கதை என்பதால் லைட்டிங்கில் பழைய பாணியை  கடைப்பிடித்தது குட் . பரத்தின் எடிட்டிங்கில்  படம்  2 மணி நேரம் ஓடுகிறது ,முதல் அரை மணி நேரம் ரொம்ப ஸ்லோ ..கதை , திரைக்கதை  கிருஷ்ணராஜ் ( இது உண்மை சம்பவம் ) இயக்கம்  ஜனார்த்தன சிக்கன்னா 


சபாஷ்  டைரக்டர்


1  முதல்   அரை மணி நேரம்  ,கடைசி   அரை மணி நேரம்  இரண்டும் இழுவை . ஆனால் மெயின் கதையை  சுவராஸ்யமாக சொல்லி இருக்கிறார் . ஒரு மணி  நேரத்தில்   சொல்ல வேண்டிய கதையை   இழுத்து விட் டார் 



2   மெயின் கதைக்கு சம்பந்தமே இல்லாமல்  நாயகிக்கு  ஒரு கிஸ்  சீன்  வைத்தது 


3    ரசிக்க வைக்கும் வசனங்கள் 


  ரசித்த  வசனங்கள் 



1. எல்லாருமே நாட்டை விட்டுப்போய்ட்டா யார் தான் மீதி இருப்பாங்க?

பெருசுங்க தான்

2. இளசுங்க எப்பவும் வானத்தில் குதிக்க ரெடியா இருப்பாங்க

3. இந்தப்போலீஸ் ஸ்டேஷன் ஓப்பன் பண்ணி 25 வருசம் ஆகுது.இதுவரை ஒரு கேஸ் கூட பைல் ஆகலை.இவரை எதுக்குப்பெரிய ஆபீசர் மாதிரி ஆக்ட் குடுக்கறாரு?

4. IPL 300?

Incident. Prasath collection

5. மூளை தான் மிகப்பெரிய ஆயுதம்

6. படிச்சிருந்தாப்பத்தாது.உலக நடப்புத்தெரியனும்

7 இந்த கம்ப்யூட்டருக்கு  செலவு செய்வதும் ,யானையைக்கட்டித்தீனி போடுவதும் ஒண்ணு.கட்டுபடி ஆகாது

8. கண்ணி மோகம் இன்னமும் எத்தனை உயிர்களைக்கொல்லும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்

9 இந்த உலகில் பூமியும் அம்மாவும் தான் இலவச சேவை செய்கிறார்கள்.மற்ற அனைவருமே சர்வீஸ் சார்ஜ்  வாங்கிக்கறாங்க.நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ

10  இயற்கையை யாரும் குறுக்கீடு செய்யக்கூடாது

11 சட்டப்படி அடுத்தவங்க லெட்டரைப்படித்தால் 2 வருசம் ஜெயில் தண்டனை இருக்கு.

12 மனம் அபாயகரமானது  .நம் பேச்சை அது கேட்காது சரி  எது ?  தப்பு எது ? அதுக்குத்தெரியாது 


13   மனசு தான் என்ன விரும்புதோ அதை அடைய முயற்சிக்கும் 


14  சில உறவுகள் நீண்ட தூரம் பயணிக்காது 


15 பாஸாம்பரம் என ஒரு மூலிகை செடி .அதை  தண்ணீரில் 3  நாட்கள்   ஊற   வைத்தால் அதன் விஷம் தண்ணீரில் இறங்கும் . அந்தத்தண்ணீரை உணவில் கலந்தால் மரணத்திற்குக்காரணம் கண்டு பிடிக்க முடியாது 


16 சாமி பூஜைக்கே  பூ பறிப்பதாக இருந்தாலும் ஒரே செடியில் பூ  பறிக்கக்கூடாது .செடி தான் என்றாலும் அதுக்கும் வலிக்கும் தானே ? 


17   குற்றவாளிக்குத்தரும் பெரிய தண்டனை  மன்னிப்பு


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   வெளிநாட்டில்  வசிக்கும் காதலனை வர வைக்க  நாயகி தன்  வருங்கால மாமனாரைக்கொ லை செய்ய முடிவு  எடுப்பது அபத்தம் . ஆனால்   உண்மை  சம்பவம் ஆச்சே ?  


2  நாயகி  மீது   ஒருதலையா க   ஆசை   வைக்கும்  வில்லன்  நாயகியின் காதலன் இங்கே   வந்து விடக்கூடாது   எனபதற்காக  நாயகியி ன்  வருங்கால மாமனாரைக்கொ லை செய்ய முடிவு  எடுப்பது அபத்தம்


3  இன்ஸ்பெக்ட்டர்   தன அம்மாவைக்கொலை செய்ய முடிவு  எடுப்பது  நம்ப முடியவில்லை .நந்தா க்ளைமாக்சில் உல்டா  வடிவம் தான் . ஆனால் நந்தாவில் அ ழுத்தமான காரணம் இருந்தது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - U / A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பொறுமை ரொம்ப வேண்டும் . ஆனால்   சுவாரஸ்யமான கதை தான் . ரேட்டிங்க்  2.5 / 5 


Agnyathavasi
Theatrical release poster
Directed byJanardhan Chikkanna
Written byKrishna Raj
Produced by
  • Hemanth M Rao
  • Prachura P P
  • Jayalakshmi
Starring
CinematographyAdvaitha Gurumurthy
Edited byBharath MC
Music byCharan Raj
Production
company
Dakshayini Talkies
Release date
  • 11 April 2025
Running time
122 minutes
CountryIndia
LanguageKannada

0 comments: