குபேரா(2025)-தமிழ்- சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா)
ஏற்கனவே தமிழில் வெளி வந்த குபேரன் ,குசேலன் ஆகிய இரு படங்களுமே ஓடவில்லை.அதனால் ஆட்டோவில் கண்ணாடியைத்திருப்பிய கதையாக குபேரா என டைட்டில் வைத்துத்தெலுங்குப்படம் எடுத்துத்தமிழில் டப் செய்து இருக்கிறார்கள்
ஸ்பாய்லர் அலெர்ட்
ஒரு ஆராய்ச்சி நிலையத்தில் அடுத்த 15 வருடங்களுக்குத்தேவையாய் இருக்கும் ஆயில் இருப்பதைக்கண்டறிகிறார்கள்.இந்த விஷயத்தை முறைப்படி அரசுக்குத்தான் சொல்ல வேண்டும்.ஆனால் வில்லன் ஆன கோடீஸ்வரர் கம் தொழில் அதிபருக்குத்தகவல் போகிறது.வில்லன் செண்ட்ரல் மினிஸ்டருடன் டீலிங் போடுகிறார்.ஒரு லட்சம் கோடி பணம் உங்களுக்குத்தந்துடறேன்.விஷயத்தைக்கமுக்கமா முடிங்க என்கிறான்.
50,000 கோடி கறுப்புப்பணம் ,50,000 கோடி வெள்ளைப்பணமாக வேண்டும் என்கிறார் மினிஸ்டர்.அதை எப்படி மாட்டிக்காமல் தருவது என யோசிக்கிறான் வில்லன்
நேர்மையாய் இருந்ததற்காக பொய்க்கேசில் மாட்டி 10 வருடங்கள் சிறை தண்டனைப்பெற்று 5 வருடங்கள் சிறை வாழ்க்கை வாழ்ந்த ஒரு சி பி ஐ ஆபீசருடன். வில்லன் சிறைக்குப்போய் டீலிங் பேசுகிறான்.உன்னை ரிலீஸ் பண்ண உதவறேன்.கை மாறாக 50,000 கோடி ரூபாய் பணத்தை வினியோகிக்க உதவு என் கிறான்
எழுதப்படிக்கத்தெரியாத 4 பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுத்து போலியான ஐ டி தயாரித்து அவர்கள் பெயரில் பணத்தை டெபாசிட் செய்து மினிஸ்டருக்கு வழங்கத் திட்டம்.காரியம் முடிந்ததும் நால்வரையும் போட்டுத்தள்ளி விடலாம் என்பது வில்லனின் திட்டம்
அந்த நால்வரில் ஒருவர் தான் நாயகன்.இதுவரை நான் சொன்னது முதல். அரை மணி நேரக்கதையை.இதற்குப்பின் நடந்தது என்ன? என்பது தான் மீதித்திரைக்கதை
நாயகன் ஆக தனுஷ். ஓப்பனிங சீனில் பிச்சைக்காரனாக வரும்போது தியேட்டர் அதிர்கிறது கை தடலால்.செம மேக்கப்.உடல் மொழி.படம் முழுக்க ஹீரோயிசம் காட்டாத ஹீரோ கேரக்டர்.ஒரு ஆக்சன் ஹீரோவைப்படம் முழுக்க ஆக்சன் செய்ய விடாமல் யதார்த்த நாயகனாய்க்காட்டியது ஒரு வகையில் பிளஸ்.ஒரு வகையில் மைனஸ்.
நாயகி ஆக ராஷ்மிகா மந்தனா. அதிக வாய்ப்பில்லை.டூயட் இல்லை.கிளாமர் இல்லை.மெயின் கதைக்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லை
சிபி ஐ ஆபீசர் ஆக நாகார்ஜூன். நடிப்பு கன கச்சிதம்.ஆனால் இவரது. கேரக்டர் டிசைனில் குழப்பம்.நல்லவர் மாதிரி தெரிகிறார்.கெட்டவன் ஆகிறார்.மீண்டும் திருந்தி நல்லவன் ஆகிறார்
வில்லன் ஆக ஹிந்தி நடிகர் ஜிம் சர்ப்.மிரட்டலான நடிப்பு முதல் அரை மணி நேரத்துக்கு.பின் டம்மி ஆகி விடுகிறார்.
போலீஸ் ஆபீசர் ஆக வரும் சாயாஜி சிண்டே,ஜெயப்பிரகாஷ ,சுநைனா மூவரும் சிறிது நேரமே வந்தாலும் மனதில். பதிகிறார்கள்
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் போய் வா நண்பா செம ஹிட் பாட்டு.பி ஜி எம் மும் குட்.ஒளிப்பதிவு நிகித் பொம்மி ரெட்டி வேலையில் கெட்டி.காட்சிகளில் பிரம்மாண்டம் காட்டி இருக்கிறார்.கார்த்திகா சீனிவாசின் எடிட்டிஙகில் படம் 3 மணி நேர ஓடுகிறது.
இயக்கம் சேகர் கம்முலா.இவரது முந்தைய படஙகளுடன் ஒப்பிடுகையில் இது கொஞ்சம் கம்மி லா
சபாஷ் டைரக்டர்
1 மசாலாப்படத்தில் டூயட் வைக்காதது
2 ஆக்சன் ஹீரோவுக்கு பைட் இல்லை.துணிச்சல் ஆன முடிவு
3 திருமண விழாக்களில் எப்படி 100 வருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான் பாட்டு எப்படி ரிப்பீட் ஆகிறதோ அது போல இழவு வீடுகளில். இனி போய் வா நண்பா பாட்டு எதிரொலிக்கும்
4 முதல் அரை மணி நேரம் கதையை தெளிவாக சொன்ன விதம்
5 ஹீரோ இன்ட் ரோ படம் போட்டு 23 வது நிமிடத்தில் தான்.தில்
6 தனுஷ் நடிப்பு
ரசித்த வசனங்கள்
1 பப்ளிக் மேலயும் ,அரசாங்கம் மேலயும் எப்பவும் நம்பிக்கை வைக்கவே கூடாது.ஏன்னா அவங்க மாறிக்கிட்டே இருப்பாஙக
2 இருட்டில் இருப்பவனுக்கு தீக்குச்சி வெளிச்சத்தைக்காட்டினாலே நாம கடவுளாத்தான் தெரிவோம்
3 கோர்ட்டும்,கடவுளும் ஒன்று.என்னைக்காவது நல்லது செய்யும்
4 இந்த நாட்டில் பவரும் பணமும் இருந்தாதான் நியாயம் ஜெயிக்கும்
5 நாய் ,பன்றி யால் கூட நாட்டுக்கு பயன் இருக்கு.பிச்சைக்காரனால் நாட்டுக்கு என்ன பயன்?
6 யானை மாதிரி உனக்கு ஞாபக சக்தி
7 மேடம்.உங்களை விட்டால் எனக்கு வேற யாரையும் தெரியாது
டேய்.எனக்கு. உன்னையையே யாரு?ந்னு தெரியாது
8 தனக்கு நல்லது செஞ்சவஙகளை யானை ஒரு நாளும் மறக்காது
9 எல்லா சிஸ்டமும் என்னை ஏமாத்திடுச்சு.ஆனா என்னை நானே ஏமாத்திக்க முடியாது
10. நீ வாழ எல்லாரையும் சாகடிச்சுட்டு இருக்க
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நடுக்கடலுக்கு படகில் பிச்சைக்காரனைக்கூட்டிப்போய் திமிங்கலத்துக்கு அவனை இரையாக்க வேண்டும்.இது தான் சீன்.கிறுக்கு பேக்கு வில்லன் தன் கையை கத்தியால் அறுத்து அந்த ரத்தத்தை கடலில் ஊற்றி ரத்த வாசத்தை காட்டி வர வைக்கிறான்.இந்த மாதிரி செய்ய லூசால் தான் முடியும்.சாக இருப்பவனைக்காயப்படுத்தி அவன் ரத்தத்தை யூஸ் பண்ணி இருக்கலாம்.ரத்த வங்கியில் ஒரு பாட்டில் ரத்தம் வாங்கி வந்திருக்கலாம்.
இந்த சீன் ராணி காமிக்சில் வெளி வந்த டாக்டர் நோ ஜேம்ஸ் பாண்ட் படத்தில் இருந்து சுட்டு இருக்கிறார்கள்
2'கிளை வில்லன் பெரிய கோடீஸ்வரன்.அவன் நினைத்தால் நடிகைகளை ,அழகான பெண்களை அனுபவிக்க முடியும்.ஆனால் கர்ப்பம் ஆக இருக்கும் பிச்சைக்காரி மேல் கை வைக்கப்பார்க்கிறான்
3 நாயகனும்,நாயகியும் ஹோட்டல் ரூமுக்கு வந்து ரூம் கதவைக்கூட மூடாமல் கோடிக்கணக்கான பணம்,தங்கத்தைப்பார்ப்பது எப்படி?
4 கோடீஸ்வரனான வில்லன் பிச்சைக்காரன் ஆன ஹீரோவைத்தேட தடுமாறுகிறான்.படத்தின் பாதி நேரம் தேடல் படலம் தான்
5 நாயகிக்கும் மெயின் கதைக்கும் சம்பந்தம் இல்லை
6 சிபி ஐ ஆபீசர் கேரக்டர் டிசைன் சரியாக வடிவமைக்கப்படவில்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்- U/A
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - குபேரா(2025)-தமிழ் - 30 நிமிடங்களில் சொல்ல வேண்டிய கதையை 3 மணி நேரம் ஜவ்வாக இழுத்து விட்டார்கள்.இது தமிழ்ப்படம் என்று சொல்கிறார்கள்.ஆனால் தெலுங்கு டப்பிங் தான்.தனுஷ் நடிப்பு ,பிஜி எம் மட்டுமே பிளஸ்.விகடன்மார்க். யூகம். 39. ரேட்டிங் 2 /5
0 comments:
Post a Comment