2017 ல் நடந்த உண்மை சம்பவம் இது 30/5/2025 முதல் நெட் பிளிக்ஸ் ரிலீஸ் ஆக வெளி வந்துள்ள இந்தப்படம் மிக மெதுவாக நகரும் ஒரு க்ரைம் டிராமா . 18+ காட் சிகள் கொண்ட படம் என்பதால் குடுப்பத்துடன் பார்க்க முடியாது . பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லாத ஒரு கதை . . பொறுமை உள்ளவர்கள் மட்டும் பார்க்கலாம் . இந்த மாதிரி கான்செப்ட்டில் 1988 - 1992 காலகட்ட்ங்களிலேயே பிகேபி , சுபா , ராஜேஷ் குமார் போன்ற ரைட்டர்கள் இது போன்ற கதைகளை எழுதி விட் டார்கள்
ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லி ஒரு நர்ஸ் . திருமணத்துக்கு முன்பே வில்லிக்கு ஒரு காதலன் உண்டு.திருமணம் ஆன பின் கணவனுடன் ஒரு வருடம் குடித்தனம் நடத்தி இருக்கிறாள் . ஹாஸ்பிடலில் தன்னுடன் பணி புரியும் ஒரு ஆளை மயக்கி , வளைத்துப்போட்டு தன்னைத்தன் கணவன் தினமும் டார்ச்சர் செய்வதாக அளந்து விடுகிறாள் . அவனும் நம்பி விடுகிறான் . எனக்காக ஒரு உதவி செய் , நான் நிம்மதியாக வாழ வேண்டும் எனில் என் கணவனை கொலை செய்ய வேண்டும் செய்வாயா?எனகேட்கிறாள்
அவனும் ஒக்கே சொல்ல எப்படிக்கொலை செய்வது என வில்லி பிளான் போட்டுக்கொடுக்கிறாள் .கொலை நடந்த பின் வில்லி தன கணவனைக்கொலை செய்தவனுக்கு அல்வா கொடுத்து விட்டு தனது பழைய காதலனுடன் வாழத்திட்டம் போடுகிறாள் .வில்லி யின் திட் டம் எந்த அளவு நிறைவேறியது ? போலீஸ் வில்லியை எப்படிப்பிடித்தது ? என்பது மீதித்திரைக்கதை
வில்லி ஆக இவானா பேக்கரோ பிரமாதமாக நடித்திருக்கிறார் . மீரா ஜாஸ்மின் சாயலில் இருக்கிறார் .இளமைத்துள்ளலுடன் நடிப்பு . தன சொந்த அம்மாவிடம் கூட அளந்து விடும்போது இவரது நடிப்பு அட போட வைக்கிறது
வில்லியின் கணவனைக்கொலை செய்யும் காதலன் ஆக ட்ரிஸ்ட்ட்ன உள்ளோ நடித்திருக்கிறார் . வில்லியை நம்பி ஏமாறுவது அவர் மேல் பரிதாபம் வர வைக்கிறது
வில்லியை கையும் களவுமாகப்பிடிக்கும் போலீஸ் ஆபிசர் ஆக கார்மன் மச்சி அசால் ட் ஆக நடித்து இருக்கிறார்
வில்லியின் இன்னொரு காதலனாக ஜோல் சாஞ்சஸ் நடித்திருக்கிறார் .அதிக வாய்ப்பில்லை
வில்லியின் அப்பாவிக்கனவன் ஆக அலெக்ஸ் கேடா நடித்திருக்கிறார்
ஒளிப்பதிவு டேனியல் ஜோசா .அழகான வில்லியை கில்லி மாதிரி படம் பிடித்து இருக்கிறார்
இயக்கம் கார்லஸ் செடோஸ் கேர்லஸ் இல்லாமல் தெளிவாக திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் / எடிட்டிங்க் ஷார்ப் என சொல்ல முடியாது . பரவாயில்லை ரகம் , 122 நிமிடங்கள் ரன் டைம்
சபாஷ் டைரக்டர்
1 பேசிக் இன்ஸ்ட்டிங்க்ட் போஸ்ட்டர் டிசைனை சுட்டது
2 எங்கெல்லாம் திரைக்கதை தொய்வு அடைகிறதோ அங்கெல்லாம் கில்மா சீன்களை புகுத்தியது
3 வில்லியின் ஐடியாக்கள்
ரசித்த வசனங்கள்
1 நீதி தூங்காது , ஆனா அப்பப்ப ஓய்வு எடுத்துக்கும்
2 மனதில் நான் என்ன நினைக்கிறேன் என்பதை அறிந்து கொள்ள நீ முயற்சிக்காதே? மென்ட்டல் ஆகி விடுவாய் !
3 நீ இந்த இடத்துக்குக் கூட் டி வரும் முதல் பெண் நான் தான?
அப்படி சொல்ல முடியாது , ஆனா கடைசி பெண் நீ தான்
4 நீ கொடுத்திருக்கும் பரிசு மிக விலை மதிப்பு மிக்கதா இருக்கும் போலயே ?
நான் உனக்காக செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவும் ஒர்த் தான்
5 நிம்போ மேனியாக் ஒரே சமயத்தில் 5 பேருடன் ஜோடியாக இருக்க முடியும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வில்லி தன காதலனிடம் நைட் டைமில் மெசேஜ் செய்ய வேண்டாம் என சொல்லமாட் டாளா?
2 வில்லி தன காதலன் பெயரை டேனியல் என்றே செல் போனில் சேவ் செய்து வைத்திருக்கிறாள் . பெண் பெயரில் சேமிக்கலாம்?
3 கொலை நடந்த நான்காவது மாதத்திலேயே கணவனின் பெற்றோரிடம் சொத்து கேட் கிறாள் வில்லி .டவுட் வராதா?
4 கொலைக்கேஸ் இன்னமும் முடியவில்லை . விசாரணை நடக்கிறது . வில்லி என்ன தைரியத்தில் காதலனுடன் வெளியே சுற்றுகிறாள்? போனில் பேசுகிறாள்? தன் பேச்சை ஒட்டுக்கேட்பார்கள் என்பதை யூகிக்க முடியவில்லையா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -18+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பல விமர்சனங்கள் படத்தை சிலாகித்து வந்திருக்கின்றன . ஆங்கிலப்பத்திரிக்கைகள் எல்லாம் 3/5 , 3.5 /5 என ரேட்டிங்க் கொடுத்து இருக்கின் றன .எனக்கென்னவோ சுமார் ரகம் என்றே தோன்றுகிறது . ரேட்டிங் 2.25 / 5
A Widow's Game | |
---|---|
![]() Theatrical release poster | |
Spanish | La viuda negra |
Directed by | Carlos Sedes |
Starring | |
Cinematography | Daniel Sosa |
Production company | Bambú Producciones |
Distributed by | Netflix |
Release date |
|
Running time | 122 minutes[1] |
Country | Spain |
Language | Spanish |
0 comments:
Post a Comment