Friday, May 31, 2024

P T SIR -பி டி சார் ( 2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( கோர்ட் ரூம் டிராமா )

                

    இந்தப்படம்  2022 ஆம்  ஆண்டு  நவம்பர்  மாதம்  பூஜை  போடும்போது  ஹிப் ஹாப்  தமிழா  ஆதியின்  17 வது  படம்  என்றார்கள் , ஆனால்  இப்போது  ரிலீஸ்  ஆகும்போது  அவரது  25  வது  படம்  என்கிறார்கள் . இடைப்பட்ட  கேப்பில் 8  படம்  முடிச்சுட்டாரா? என்ன? ( ஒரு  வேளை  இசை  அமைப்பில்  25  வது  படம், நடிப்பில்  17  வது  படமோ ? )

பிரியங்கா (1994) , நேர் கொண்ட  பார்வை   (2019) ,கார்கி (2022) , சித்தா (2023)  ஆகிய  படங்களின்  வரிசையில்  பாலியல்  ரீதியாக  கொடுமைக்கு  உள்ளாகும்  பெண்ணின்  போராட்டங்களை  சொல்லும்  கதையாக  இயக்குநர்  இதை  உருவாக்கி  இருக்கிறார், 


2022  ஆம்  ஆண்டு  கள்ளக்குறிச்சியில்  ஒரு  தனியார்  பள்ளி  மாணவிக்கு  உண்டான  கொடுமைகள்  பற்றிய  உண்மை சம்பவத்தை  அடிப்படையாகக்கொண்டு  இப்படத்தை  உருவாக்கி  இருக்கிறார்


முழுக்க  முழுக்க  ஒரு  கோர்ட்  ரூம்  டிராமாவாக  இதை உருவாக்கி  இருந்தால்  தரமான  படமாக  மாறி  இருக்கும், ஆனால்  கமர்ஷியல்  ஆக  கதை  சொல்லலாம்  என  ஹீரோ , ஹீரோயின் ,  பாடல்கள்  என  எல்லாவற்றையும்  கலந்து  கட்டி  அடித்ததில்  வீரியம்  குறைந்த  சாரைப்பாம்பாகவே  படம்  உருவாகி  இருக்கிறது 

 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  அம்மா  வுக்கு  ஜாதகம் , ஜோதிடம்  இவற்றில்  நல்ல  நம்பிக்கை உண்டு   நாயகனின்  ஜாதகப்படி  திருமணம்  ஆகும்  வரை  அவர்  எந்த  ஒரு  வம்பு  தும்புக்கும்  போகாமல்  இருக்க  வேண்டும். இல்லை  எனில்  அவருக்கு  கண்டம்  ஏற்படும்  என்கிறார்கள்  அதனால்  நாயகனை  அம்மா  புள்ளைப்பூச்சியாகவே  வளர்க்கிறார்.  எங்கே  என்ன  நடந்தாலும்  கண்டுக்காம  இரு , உன்  வேலையைப்பார்  என்றே  அட்வைஸ்  செய்து  வளர்த்து  வருகிறார் 


 நாயகன்  ஒரு     தனியார்  பள்ளியில்  பி டி  மாஸ்டர்  ஆகப்பணி  புரிகிறார். நாயகி  அதே  பள்ளியில்  ஆங்கில  ஆசிரியை, இருவருக்கும்  காதல். திருமணம்  வரை  போகிறது , நிச்சயதார்த்தம்  நடைபெறும்  நாளில்  ஒரு  சம்பவம்  நடக்கிறது 


 நாயகனின்    பக்கத்து  வீட்டில்  ஒரு  மாணவி  நான்கு  இளைஞர்களால்  கிண்டல்  செய்யப்படுகிறார். கிளாமர்  ஆக  டிரஸ்  செய்து  போனதால்  அவர்  அந்த  நிலைக்கு  ஆளாகிறார்.  சமூக  வலை  தளங்களில் அந்த  வீடியோ  வைரல்  ஆகிறது 


 இதனால் அந்த  மாணவி  படிக்கும்  பள்ளியில் அவருக்குக்கெட்ட  பெயர் , அவரை பள்ளியில்  இருந்து  நீக்க  நிர்வாகம்  முடிவு  செய்கிறது . அந்த  மாணவி  பள்ளியின்  நிர்வாகி  ஆன  வில்லனை  சந்தித்து  நியாயம்  கேட்கிறார். ஆனால்  வில்லன்  மாணவி மீதே  கை  வைக்கிறான்


 அந்த  மாணவி  தற்கொலை  செய்து  கொள்கிறாள் . இதனால்  பொங்கி  எழுந்த  நாயகன்  வில்லன்  மேல்  கோர்ட்டில்  கேஸ்  தொடுக்கிறான். அந்த  கேசில்  ஜெயித்தானா? இல்லையா? என்பதே  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  ஹிப் ஹாப்   தமிழா  ஆதி  காமெடி , காதல் , குறும்பு  கலந்த  கேரக்டர். நன்றாக  செய்திருக்கிறார். பாடல்  காட்சிகளில் , சில  சேஷ்டைகளில்  அவர்  ஏன் பிரபு  தேவா  பாணியில்  நடிக்க  முற்படுகிறார்  எனத்தெரியவில்லை 


நாயகி  ஆக  கஷ்மீரா  பர்தேசி.அழகாக  வந்து  போகிறார். ஆனால்  அதிக  வாய்ப்பு  இல்லை 

  நாயகியை  விட  கனமான  பாத்திரத்தில் , முக்கியத்துவம்  வாய்ந்த  ரோலில்   அனிகா  சுரேந்திரன்  நன்கு  நடித்திருக்கிறார்


நாயகனின்  அம்மாவாக  தேவதர்ஷினி  , அப்பாவாக  பட்டிமன்ற  ராஜா  கலகலப்பாக  படத்தைக்கொண்டு  போகிறார்கள் 


பாதிக்கப்பட்ட  பெண்ணின்  அப்பாவாக  இளவரசு  அட்டகாசமான  குணச்சித்திர  நடிப்பை  வெளிப்படுத்தி  இருக்கிறார் 


 வில்லன்  ஆக  தியாகராஜன்  மிரட்டி  இருக்கிறார். அவர்  கண்களும், குரலும்  பெரிய  பிளஸ்  பாயிண்ட் 


 கே  பாக்யராஜ்  ஜட்ஜ்  ஆக  வருகிறார்.  ஓப்பனிங்  சீனில்  அவர்  செய்யும்  காமெடி  அவரது  ஜட்ஜ்  ரோலுக்குப்பொருத்தமாக  இல்லை 


ஆர்  பாண்டிய  ராஜன், முனீஸ்காந்த்  போன்ற  வீணடிக்கப்பட்ட  திறமைசாலிகள்  பட்டியலும்  உண்டு 


நாயகனின்  மாமனார்  கம்  வக்கீல்  ஆக  பிரபு  கச்சிதம் 


இசை  ஹிப் ஹாப்  தமிழா. 2  பாடல்கள்  ஓக்கே  ரகம் 


ஓக்கே  பிரசன்னா  வின்  எடிட்டிங்கில்  படம்  2  மணி  நேரம்  10  நிமிடங்கள்  ஓடுகிறது   


 மாதேஷ்  மாணிக்கத்தின்  ஒளிப்பதிவு  குட் 


  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார்  கார்த்திக்  வேணுகோபால் 


சபாஷ்  டைரக்டர்


1  மாணவ  மாணவிகள்  யார்  வேண்டுமானாலும்  என்ன  வேண்டுமானாலும் இக்ந்த  சுவரில்  எழுதலாம், எழுதியது  நடக்கும் என்ற  அந்த  மேஜிக்  வால்  ஐடியா  அருமை .  பாத்ரூம் , டாய்லெட்களில்  கிறுக்கல்  எழுத்தாளர்களை பப்ளிக்காக  எழுத  வைக்கும்  ஐடியா  அது 


2   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  யாரும்  எதிர்பாராதது 


3  பாட்ஷா  ,  அந்நியன்  பாணியில்  நாயகனின்  கதாபாத்திரத்தை  உருவாக்கிய  விதம் 


4  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லை  என்றாலும்  நாயகி  நாயகனிடம்  தன்  காதலை  வெளிப்படுத்தும்  கவித்துவம்  மிக்க  காட்சி 


5 வில்லன்  தியாகராஜன், இளவரசு  ஆகியோரின்  நடிப்பு 


6  நாயகனின் அம்மா, அப்பா  இருவரின்  ஜாதகங்களை  நாயகன் , நாயகி  ஜாதகங்களுக்குப்பதிலாக  ஜோதிடரிடம்  மாற்றிக்கொடுத்து  விட்டு  பலா  பலன்கள்  பார்க்கும்போது  இந்த  ஜோடிக்கு  செட்டே  ஆகாதே  என  ஜோசியர்  சொல்வது  செம  காமெடி  சீன் 


  ரசித்த  வசனங்கள் 


1    யோவ்  , இந்த  வண்டில  நான்  வந்தா  இந்த  வருச  எக்சாமை  எழுத  முடியாது , அடுத்த  வருச  அரியரைத்தான்  எழுத  முடியும் 


2   ஹெல்மெட்  போட்டுக்கோ


  சைக்கிளுக்கு  எதுக்கு  ஹெல்மெட். நீ  சைக்கிள்  வேகத்துல தானே  போறே?


3  வெளில  சொல்ல  முடியாத  சில  விஷயங்களை  அது  பாசிட்டிவோ , நெகடிவ்வோ  ஓப்பனா  சொல்ல  முடிவது  மேஜிக்  வாலின்  ஸ்பெஷாலிட்டி .  நம்ம  மனபாரங்களைக்குறைக்குது 


4   எம்மா  உன்  கண்ல  ஏதாவது  பிராப்ளம் இருக்கா?


 இல்லையே? அங்க்கிள்   , ஏன்  கேட்கறீங்க ?

 போயும்  ;போயும்  இவனை  ஏன்  காதலிச்சே?


5   நான்  எப்படி  வாழனும்?னு  ஒரு  ஜோசியக்காரன்  சொல்ல  வேண்டியதில்லை ‘


‘6  பாதிக்கப்பட்ட  பொண்ணு  செத்துப்போயிட்டா  ஜனங்க  அவளுக்கு  ஆதரவா  கருத்து  சொல்வாங்க , ஆனா  உயிரோட  இருந்தா  அவளைப்பேசியே  சாகடிச்சுடுவாங்க 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   கோர்ட்  ரூம்  காட்சிகள்  அனைத்தும்  ஓவர்  டிராம்டிக். நம்பகத்தன்மையே  இல்லை 


2  இளவரசு  போலீஸ்  ஸ்டேஷனுக்குப்போய்  ஒரு  ஃபுல்  நைட்  அங்கேயே  இருக்கிறார்.  வீட்டுக்கு  தகவல்  சொல்ல  மாட்டாரா?  அவரைக்காணாமல்  குடும்பம்  தவிக்கும்  என்பது  தெரியாதா? 


3  நாயகன்  வில்லனை  அடிக்கும்  காட்சி  நம்பகத்தன்மையே  இல்லை. ஒரு  சாதாரண  ஆசிரியர்  பள்ளி  நிர்வாகியையே  அசால்டாக  அறைவது  எல்லாம்  சாத்தியமே  இல்லை .  அது  போக  வில்லனின்  கேரக்டர்  மிக  பலவீனம்  ஆகி  விடுகிறது . அந்தக்காட்சிக்குப்பின்  வில்லன்  மேல்  எப்படி  பயம்  வரும் ? 


4  பாதிக்கப்பட்ட  மாணவி  வில்லனின்  இடத்திற்கு  ஏன்  தனியாகப்போகிறார்?  அம்மா, அப்பாவை  அழைத்துச்சென்றிருக்கலாம், அல்லது  நாயகனை  அழைத்துச்சென்றிருக்கலாம் 


5 படத்தின்  டைட்டிலுக்கும், மெயின்  கதைக்கும்  என்ன  சம்பந்தம் ?  நாயகன்  கணக்கு  வாத்தியாராக  இருந்தாலும்  இதே  கதை  ஓக்கே  தான். எதுக்கு  பி டி மாஸ்டர் ?  ஸ்போர்ட்ஸ்  டிராமா  கதை  அல்லவே ? 


6  பாதிக்கப்பட்ட  மாணவி  நைட்  டைமில்  கிளாமர்  ஆக  டிரஸ்  பண்ணிட்டுப்போவது  தப்புத்தான். அதை  நியாயப்படுத்தும்  விதமாக  எனக்குப்பிடிச்ச  மாதிரி  நான்  டிரஸ்  பண்ணிட்டுப்போறது  தப்பா? என  டயலாக்  வருது , அதைத்தவிர்த்திருக்கலாம்  அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஒரு  நல்ல  கதைக்கரு  சாதாரண  மசாலா  திரைக்கதையால்  சுமாரான  அவுட்  புட்டைக்கொடுத்து  விட்டது .  ஜனரஞ்சகமாய் செல்கிறது  ரேட்டிங்  2.5 / 5 


PT Sir
Theatrical release poster
Directed byKarthik Venugopal
Written byKarthik Venugopal
Produced byIshari K. Ganesh
Starring
CinematographyMadhesh Manickam
Edited byPrasanna GK
Music byHiphop Tamizha
Production
company
Vels Films International
Release date
  • 24 May 2024
CountryIndia
LanguageTamil

0 comments: