Tuesday, May 28, 2024

நியதி (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

     

 ஒரு  படத்தின்  இயக்குநரே  அந்தப்படத்தின்  நாயகனாக  இருப்பதில்  பல  சவுகரியங்கள்  இருக்கின்றன.நாயகனுக்கு  இயக்குநர்  நடித்துக்காட்ட  வேண்டியதில்லை . இந்தப்படத்தின்  இயக்குநர்  நவீன்  சந்திரன்  லோ  பட்ஜெட்டில்  ஒரு  தரமான  க்ரைம்  த்ரில்லர்   படத்தைக்கொடுத்துள்ளார்          


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  ஒரு  பிரைவேட்  டிடெக்டிவ்  ஏஜென்சியில்  துப்பறிவாளர்  ஆகப்பணி  புரிகிறார்.மிக  சாமார்த்தியமாக  கேஸ்களை  டீல்  செய்வதில்  இவர்  விற்பன்னர் 


ஒரு  நாள்  ஒரு  பெரியவர்  ஒரு  ஆணின்  ஃபோட்டோவைக்கொண்டு  வந்து  கொடுத்து  இந்தப்படத்தில்  இருக்கும் நபர்  பற்றிய  தகவல்  வேண்டும். இவர்  ஒரு  காலேஜ்  லைப்ரரியில்  ஒர்க்  பண்ணியவர் , இப்போது  ஆளைப்பிடிக்க  முடியவில்லை  என்கிறார். தன்  மகளுக்கு  பார்த்திருக்கும்  வரன்  இவர் ., இவர்  பற்றிய  தகவல்  வேண்டும்  என்கிறார்


 நாயகன்   அன்று  இரவு  காரில்  போய்க்கொண்டிருக்கும்போது  ஒரு  ஆள்  மீது  மோதி  விடுகிறார்.  ஆள்  ஸ்பாட்  அவுட் . டெட்  பாடியை  காரில்  போட்டு  டிஸ்போஸ்  பண்ண  ஒரு  இடத்துக்கு  எடுத்துச்செல்லும்போதுதான்   அந்தப்பெரியவர்  காட்டிய  லைப்ரரியன்  இவன்  தான்  என்பது  தெரிய  வருகிறது 


 அதே  போல்  அவன்  கார்  மோதி  இறக்கவில்லை , ஏற்கனவே  கத்திக்குத்து  பட்டு  இறக்கும்  தருவாயில்  இருந்தவன்  என்பது  தெரிய  வருகிறது 


  வில்லன்  ஒரு  காலேஜ்  லைப்ரரியில்  பணி  புரிபவன் .இவன்  பெண்  சபலிஸ்ட் .காலேஜ்  மாணவிகளை  பாத்ரூமில்  அந்தரங்க  வீடியோக்கள்  எடுத்து  அவர்களை  மிரட்டி  பணம்  பறிப்பவன் 


நாயகி  தோற்றத்தில்  பெண்  ஆக  இருந்தாலும்  உள்ளத்தில்  ஆணாக  தன்னை  நினைப்பவர் .வில்லன்  செய்த  ஒரு  கொடுமையைத்தடுத்துத்தட்டிக்கேட்டதால்  கடுப்பான  வில்லன்   நாயகியைப்பழி  வாங்கத்துடிக்கிறார்


  நாயகன் ஆன  துப்பறிவாளன்  ,  வில்லன்  ஆன  லைப்ரரியன் ,  நாயகி  ஆன  திருநம்பி ( திருநங்கைக்கு  எதிர் பதம் ) இவர்கள்  மூவர்  வாழ்க்கையிலும்  நடக்கும்  திருப்பங்கள்  தான்  மீதித்திரைக்கதை 


நாயகன்  ஆக  நவீன்  கச்சிதமாக  நடித்திருக்கிறார். ஓப்பனிங்  காட்சியில்  இவர்  டீல்  செய்யும்  இரண்டு  கேஸ்களும்  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லையென்றாலும்  சுவராஸ்யம் 


நாயகி  ஆக அஞ்சனா  பாபு  அற்புதமாக  நடித்திருக்கிறார்.இது  போன்ற  கேரக்டரில்  நடிக்கவே  ஒரு  துணிச்சல்  வேண்டும். இன்னும்  சில  காட்சிகள்  வர  மாட்டாரா? என  ஏங்க  வைக்கும்  அளவு  இவரது  அழகு , நடிப்பு  கவர்ந்திழுத்தது


நாயகனின்  அசிஸ்டெண்ட்  ஆக  கோபிகா  சுரேஷ்  கனகச்சிதம் .   கொடுக்கப்பட்ட  வேலையை  சரியாகச்செய்து  இருக்கிறார்


வில்லனாக  நடித்தவர்  பெயர்  தெரியவில்லை .ஓக்கே  ரகம் 


 நாயகியின்  அப்பாவாக  தேனி  முருகன்  சிறந்த  குணச்சித்திர  நடிப்பை  வெளிப்படுத்தி  இருக்கிறார்.  நாயகிக்கும் , இவருக்குமான  உணர்ச்சிகரமான  ஒரு  உரையாடலில்  இருவர்  நடிப்பும்  அதகளம் 


ஜாக்  வாரியர்  தான்  இசை .ஒரு  க்ரைம்  த்ரில்லர்  படத்துக்கு பின்னணி  இசை  எந்த  அளவு  முக்கியம்  என்பதை  உணர்ந்து  பிஜிஎம்  போட்டிருக்கிறார் 


பிரபு  கண்ணனின்  ஒளிப்பதிவு  கச்சிதம் . நாயகிகள்  இருவரையும்  க்ளோசப்பில் , லாங்க்  ஷாட்டில்  அழகாகக்காட்டி  இருக்கிறார்


அஜூ  வில்பரின் எடிட்டிங்  ஷார்ப்  ஆக  இரண்டு  மணி  நேரத்தில்  படத்தை  ட்ரிம்  செய்து  இருக்கிறது 



சபாஷ்  டைரக்டர்


1  ஓப்பனிங்  காட்சியில்  வரும்  கணவன் -  மனைவி  -  மனைவியின்  முன்னாள்  காதலனின்  மிரட்டல் கடிதம்  கேசை  நாயகன்  டீல்  செய்த  விதம்  அருமை 


2  பூட்டிய  வீட்டை  உடைத்துக்கொள்ளை  நடந்ததாக  சொல்லப்படும்  ஸ்பாட்டை  போலீஸ்  ஆஃபீசர்  பார்த்து  கண்டு  பிடிக்காத  ஒரு  விஷயத்தை  நாயகன்  கண்டு  பிடித்து  போலீஸ்  ஆஃபீசரிடமே  சொல்வது  பிரமாதம் 


3  நாயகன் , வில்லன் , நாயகி  இந்த  மூன்று  பேருக்கான  கேரக்டர்  டிசைன்  வடிவமைப்பு  கச்சிதம் 


  ரசித்த  வசனங்கள் 


1   பிரச்சனையை  சால்வ்  பண்றது  மட்டும்  ஒரு  டிடெக்டிவோட  வேலை  இல்லை , அதை  எக்சிக்யூட்  பண்ண  கத்துக்கனும் 


2  பொறுமை  தான்  ஒரு  மனிதனுக்கு  மிக  முக்கியமான  குணம், அதை நீ  உன்  அப்பா  கிட்டே  இருந்து  கத்துக்கோ 


3 நமக்கு  நடக்கும்  எல்லாப்பிரச்சனைகளுக்கும்  தீர்வு  நம்ம  கிட்டே  தான்  இருக்கும் , யோசிச்சா  நாமே  அதைக்கண்டு  பிடிச்சுடலாம் 


4 பயம்  தான்  எல்லாப்பிரச்சனைகளுக்கும்  காரணம் 

5    இப்ப   வர்ற  திருடனுங்க  எல்லாம்  சிசிடிவி  ல  சிக்க  மாட்டானுங்க . அவங்களுக்கும்  டெக்னாலஜி  தெரிஞ்சிருக்கு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   டெட் பாடியை  கார்  டிக்கியில்  போட்டு  காரில்  போகும் நாயகன்  அந்த  டிக்கி  டோரை  பிராப்பர்  ஆக  ஏன்  சாத்தவில்லை ? 


2   ஆள் அரவம்  இல்லாத  சாலை , சிசிடிவி  கேமரா  இல்லாத  ஏரியா . யாராவது  ஒரு  ஆள்  மீது  மோதினால்  ஆளை  அப்படியே  விட்டுட்டு  எஸ்  ஆகப்பார்ப்பாங்களா? பூனையை  மடியில் கட்டிக்கிட்டே  சகுனம்  பார்ப்பது  போல  அந்த  ஆளை  கார்  டிக்கியில்  எடுத்துப்போட்டுக்கொண்டு புதைக்கப்போவார்களா?ரிஸ்க்  அதிகம்  ஆச்சே? இதே  மாதிரி  காட்சி  படத்தில்  இரண்டு  இடங்களில்  வருகிறது 


3    டெட்  பாடியை  மறைவாகப்போட்டு  விட்டுக்கிளம்பாமல்  எதற்காக  மெனக்கெட்டு  அதை  புதைக்கனும் ?


4   கடப்பாறை  , மண்  வெட்டி  எதுவும் இல்லாமல்  ஒரு  மரக்குச்சியை  வைத்தே  ஆறு  அடி  நீளம் , 3  அடி  அகலம் , ஆறு  அடி ஆழம்  உள்ள குழியைத்தோண்ட  முடியுமா?


5   டெட்  பாடியை  தூக்கி  புதைக்கும்போது  முதுகில்  கத்திக்குத்தால்  வழியும்  ரத்தத்தைப்பார்க்கவில்லையே  நாயகன் , ஏன் ? 


6   நாயகியின்  அப்பா  வெளியே  போகும்போது  கதவை  தாழ்  போட்டுக்கோ  என்கிறார். நாயகி  தாழ்  போடுவதை  க்ளோசப்ல  காட்றாங்க . அப்பா  திரும்பி  வரும்போது  கதவு  தாழ்  இல்லாமல்  இருப்பது  எப்படி ? 


7  அப்பாவுக்குத்தெரியாமல்  வீட்டுக்குள்  தம் அடிக்கும்  நாயகி  புகை  வாசம்  காட்டிக்கொடுக்கும்  என்பதை உணராதவரா?


8 பொதுவாக  தம்  பார்ட்டிகள்  அந்த  தம்  நாற்றம்  வாயில்  அடிக்காமல்  இருக்க  ஏலக்காய் , ஹால்ஸ் , ஏதாவது  மென்று  மறைப்பார்கள் . நாயகி  அப்படி ஏதும்[  செய்யாமல்  அப்பாவிடம்  மாட்டிக்கொள்கிறார் 


9  நாயகியின் சகோதரன்  வில்லனைக்கொன்ற  போதே  அந்த  சிம்  கார்டு ,மெமரிக்கார்டை  ஏன்  கைப்பற்ற வில்லை ?



10 வில்லன்  காலேஜ்  லைப்ரரியில் எடுத்த  ஆபாசப்படத்தை  வைரல்  ஆக்குகிறான் .அதில்  லைப்ரரியும்  காட்டப்படுது . லைப்ரரியன்  ஆன  வில்லன்  மாட்டிக்க  மாட்டானா?லொக்கேஷனை  மறைக்க  மாட்டானா ? 

11  வில்லன்  ஆன  லைப்ரரியன்  ஒரு  அப்பாவிப்பெண்ணின்  கையைப்பிடித்து  தர  தர  என  இழுத்து  வந்து  இன்னைக்கு  லைப்ரரி  க்ளோஸ்  பண்றேன் , எல்லாரும்  கிளம்புங்க  என்றதும்  எல்லாரும்  பேசாமல்  கிளம்புறாங்க .யாரும்  எதுவும்  தட்டிக்கேட்க  மாட்டாங்களா? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ / ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   இது  ஒரு  தரமான  க்ரைம்  த்ரில்லர்  படம், அவசியம்  பார்க்க  வேண்டிய  படம் , ரேட்டிங்  3 / 5 

0 comments: