சின்னத்தம்பி (1992) தமிழ் சினிமாவில் மகத்தான வெற்றி பெற்ற படம் . ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி ( 1995) சுமாரான வெற்றிப்படம் .இரண்டு படங்களிலுமே நாயகி வசதியான குடும்பத்தில் பிறந்தவர்.நாயகன் ஏழை. இருவருக்குமான காதல் தான் ஒன் லைன் ஸ்டோரி.. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல. இந்திய . உலக சினிமாக்களிலுமே இந்த ஏழை - பணக்காரன் ஃபார்முலா நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி வருவதுதான்
2018 ல் ரிலீஸ் ஆகி செம ஹிட் ஆன கீத கோவிந்தம் படத்தின் வெற்றிக்கூட்டணி ஆன இயக்குநர் பரசுராம் + விஜய்தேவரகொண்டா கூட்டணி தான் மீண்டும் இணைந்திருக்கிறது . 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் பாக்ஸ் ஆஃபீசில் 35 கோடி மட்டுமே வசூல் செய்து தோல்வி அடைந்த படம். 5/4/2024 முதல் தியேட்டர்களில் ரிலீஸ் ஆன இப்படம் இப்போது தமிழ் டப்பிங்க்லயே அமேசான் பிரைம் ல 26/4/24 முதல் காணக்கிடைக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலி .அம்மா, அப்பா இல்லை .இரண்டு அண்ணண்கள் , இரண்டு அண்ணிகள் .அவர்களது குழந்தைகள் , பாட்டி என கூட்டுக்குடித்தனமாக வாழ்கிறான். அண்ணன்களில் ஒருவன் குடிகாரன், இன்னொருவன் வருமானம் இல்லாதவன், மொத்தக்குடும்பத்தையும் நாயகன் தான் பார்த்துக்கொள்கிறான்
நாயகன் பணி புரியும் இடத்தில் சக பணியாளினி கடந்த 3 வருடங்களாக நாயகனைக்காதலிக்கிறாள். ஆனால் நாயகனின் கூட்டுக்குடும்ப வாழ்க்கை அவளுக்குப்பிடிக்கவில்லை . ஆஃபீசில் பணியாற்றும் மற்ற பெண்களுக்கும் நாயகன் மீது ஒரு கண். ஆனால் நாயகனைக்கல்யாணம் செய்து கொண்டால் அவ்ளோ பெரிய குடும்பத்துக்கு சமைத்துக்கொட்ட வேண்டும் என எல்லோரும் அவனை விட்டு விலகியே இருக்கிறார்கள்
நாயகனின் வீட்டுக்கு மாடி போர்சனில் வாடகைக்கு நாயகி குடி வருகிறாள். மற்ற பெண்களைப்போல அல்லாமல் நாயகி நாயகனின் குடும்பத்தாருடன் நன்கு பழகி அனைவர் மனதையும் கவர்கிறாள் . நாயகனுக்கும் நாயகி மீது காதல் வருகிறது
அப்போதுதான் நாயகனுக்கு ஒரு உண்மை தெரியவருகிறது . நாயகன் பற்றி ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை எழுதுவதற்காகத்தான் நாயகி அவனுடன் நெருங்கிப்பழகி இருக்கிறாள் .. தன் சுயநலத்துக்காக தன்னை கருவேப்பிலை மாதிரி யூஸ் பண்ணி இருக்கிறாள் என்பது தெரிய வந்ததும் நாயகன் கடும் கோபம் கொண்டு பிரேக்கப் செய்து விடுகிறான்
ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனியில் நாயகன் சேர்கிறான், அப்போதுதான் ஒரு உண்மை அவனுக்கு தெரிய வருகிறது . அந்த கம்பெனியின் எம் டி யே நாயகி தான்.அவ்ளோ மல்ட்டி மில்லியனர் ஆன நாயகி ஏன் நாயகன் வீட்டுக்குக்குடி வந்தாள் ? அதற்குப்பின் இருக்கும் மர்மம் என்ன ? பிரேக்கப் ஆன காதல் என்ன ஆனது என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக விஜய் தேவரகொண்டா ஸ்மார்ட்டான பர்சனாலிட்டி . சுறுசுறுப்பான உடல் மொழி என கலக்குகிறார். இவர் மீது எல்லாப்பெண்களும் மேலே மேலே வந்து விழுகிறார்கள் என்பதெல்லாம் கமல் காலப்படங்களில் காட்டப்பட்ட பழைய டெக்னிக்
நாயகி ஆக மிருணாளி தாக்கூர் . பணக்காரத்தனமான பின் பாதிக்காட்சிகளில் கம்பீரம் . குடும்பப்பாங்கான முதல் பாதி படத்தில் எளிமையான அழகு கவர்கிறது . படம் முழுக்கவே அவரது ஆடை வடிவமைப்புகள் கண்ணியமான அ ழகு
இருவருக்குமான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை .
நாயகனின் பாட்டியாக வரும் ரோகினி ஹட்டாங்காரி அருமையான நடிப்பு .
வெண்ணிலா கிஷோர் , விடிவி கணேஷ் இருவரும் காமெடிக்கு. கச்சிதம்
மார்த்தாண்ட் கே வெங்கடேஷ்வராதான் எடிட்டிங். 162 நிமிடங்கள் படம் ஓடுகிறது . ரொம்பவே நீளம்.
கே யூ மோகனன் ஒளிப்பதிவில் ஃபாரீன் காட்சிகள் பிரம்மாண்டம்
கோபி சுந்தர் இசையில் 5 பாடல்கள் .,அவற்றில் 3 ஹிட் .பிஜிஎம் ஓக்கே ரகம்
சபாஷ் டைரக்டர்
1 மாந்தோப்புக்கிளியே சுருளிராஜன் மாதிரி நாயகன் அண்ணன் குழந்தைகளுக்கு மிக மிக லேசாக பேப்பர் போல தோசை சுட அண்ணி அதை வாயால் ஊத காற்றுக்குப்பறந்து போய் குழந்தை தட்டில் விழும் காட்சி கலகலப்பு
2 முதல் பாதி பெண்களைக்கவர்வது போல ஃபேமிலி செண்ட்டிமெண்ட்ஸ் காட்சிகளை கலகலப்பாக சொன்ன விதம். பின் பாதியைக்காதலர்களுக்குப்பிடித்தபடி சொன்னவிதம் கச்சிதம்
செம ஹிட் சாங்க்ஸ்
1 என்னை சுத்திப்பாரு , சொந்த பந்தம் நூறு
2 கோடை மழை ஒரு நொடிக்குள்ளே
3 அச்சுப்புன்னகை உதிர்க்கும் இதழே
ரசித்த வசனங்கள்
1 எல்லாருக்காகவும் வாழும் ஆண்களை பெண்கள் பாராட்டுவாங்க , ஆனா தனக்காக வாழும் ஆணை மட்டும் தான் பெண்கள் விரும்புவாங்க
2 கஷ்டத்துல வளர்ந்தவன் நான் கஷ்டத்துல இருக்கற உன்னை நிர்க்கதியா விட்டுட மாட்டேன்
3 என் அண்ணனின் குழந்தைகளுக்கு நான் செஞ்சா அது கடன், அதுவே அண்ணனே செஞ்சா அது பாசம்
4 அவங்க எல்லாரையும் பாத்துக்க நீ இருக்கே . உன்னைப்பார்த்துக்க ஒருத்தி இருக்கனுமில்ல?
5 நான் ரொம்ப பிடிவாதக்காரன்
ஆம்பளைன்னா பிடிவாதக்காரனாதான் இருக்கனும்
6 அவளுமா என் கூட ஃபாரீன் வர்றா?
யாரு?ஓனர் பொண்ணா?அவங்க கூட தான் நீங்க போறீங்க
7 தம்பி , உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?
இல்லை ஆண்ட்டி. உங்களுக்கு மேரேஜ் வயசுல பொண்ணு இருக்கா? என்னை அப்ரோச் பண்றீங்களா?
ச்சே ச்சே .பார்க்க அப்பாவியா இருக்கீங்க . மேரேஜ் பண்ணும்போதாவது விவரமான பொண்ணா பண்ணிக்குங்க. அப்பதான் குப்பை கொட்ட முடியும்
8 கார் அவங்களை இறக்கி விட்டுட்டு வருமா?
நோநோ வராது . அது ஓனர் போகும் கார். எம்ப்ளாயிஸ்க்கு வேற கார்
9 புளியோதரையைப்பார்த்தா நான் புலி ஆகிடுவேன்
10 நாம இருக்கும் இடம் சரியா இருந்தா நம்ம பிள்ளைகளை அந்த இடமே வளர்த்துடும்
11 கிழிஞ்சு போன புக்குக்கு அட்டை போட்ட கிறுக்கன் மாதிரி இருக்கான். அவனைப்பத்தியா புக் எழுதுனீங்க ?
12 ஐ லவ் யூ-ன்னா ஐ லவ் யுவர் ஃபேமிலினு அர்த்தம்
13 ஒரு குடிகாரனைக்கூட கூட வெச்சுக்கலாம், ஆனா நம்மை யூஸ் பண்ணிக்கிட்டு தூக்கிப்போடறவங்களை கிட்டேயே விடக்கூடாது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 கஞ்சப்பிரபுவான நாயகன் தன் அண்ணனின் குழந்தைகளுக்கு தோசை சுடுவதில் எல்லாம் கணக்குப்பார்த்து லேசான தோசையாக சுட்டு மாவை மிச்சம் செய்பவர் தன் அண்ணன் சரக்கு அடிக்க மட்டும் தாராளம் காட்டுவது ஏனோ? தண்ணி அடிப்பதே தண்டச்செலவு தான்.அதிலும் தன் அண்ணன் தண்ணி அடிக்க இவர் ஏன் அவ்ளோ செலவு பண்றார் ?
2 நாயகன் குடிகாரனான தன் அண்ணனுக்கு அட்வைஸ் செய்வதை தனிமையில் செய்து இருக்கலாம். வாடகைக்கு குடி இருக்கும் பெண் எதிரில் குடும்பத்தினர் அனைவர் முன்னிலையில் தான் அப்படி செய்வாரா?
3 வறுமையில் கஷ்டப்படும் குடும்பம் என அடிக்கடி நாயகன் தன் ஃபேமிலி பற்றி சொல்கிறார். ஆனால் ஹையர் மிடில் கிளாஸ் போல பங்களா வாழ்க்கை தான் வாழ்கிறார்
4 நாயகன் நாயகியை லைப்ரரியில் அனைவர் கண் முன் பளார் என அறைய காரணம் பலமாக இல்லை
5 நாயகியின் ஆராய்ச்சிகட்டுரை பைண்டிங் புக் தர வரும் ஆள் தரும் புக் 1000 பக்கங்கள் உள்ளது போல மொத்தமாக இருக்கு , ஆனா அதே புக்கை நாயகன் லைப்ரரில நாயகியிடம் தூக்கி எறியும்போது 20 பக்க அளவு தான் இருக்கு
5 நாயகியை நோஸ்கட் பண்ண நாயகன் டாம் டூம் என செலவு செய்வது ஓவர் எனில் அந்த செலவுக்காக தான் பணி புரியப்போகும் புதுக்கம்பெனியில் 2 வருச சம்பளத்தை அட்வான்ஸாகக்கேட்டு வாங்குவது காதில் பூ. இப்ப எல்லாம் ஒரு மாச சம்பளம் அட்வான்சாக்கேட்டாலே யாரும் தர்றது இல்லை . 2 கோடி ரூபாய் அட்வான்ஸ் கிடைப்பது எல்லாம் .....ஓவர்
6 நாயகன் ஆல்ரெடி 2 வருச சம்பளத்தை அட்வான்சா கடன் வாங்கிட்டார் . ஆனால் முதல் மாசமே அவர் ஃபோனில் சேலரி கிரெடிட்டட் என மெஜேஜ் வந்ததைக்கண்டு கமெண்ட் அடிக்கிறார். எப்படி மீண்டும் சம்பளம் வரும் ?
7 சின்னத்தம்பி , ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி ஆகிய படங்களில் நாயகன் அப்பாவியாக இருப்பதாகக்காட்டி இருந்தது ரசிக்கும்படி இருந்தது . ஆனால் இதில் நாயகனின் கேரக்டர் டிசைன் சரி இல்லை .நாயகியை பளார் என ஓங்கி அறைவது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை
8 நாயகன் - நாயகி இருவ்ரின் காதலில் உயிர்ப்பு இல்லை .காதல் கதையில் இது பெரிய பின்னடைவு
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ படம் தான் ஒரு லிப் லாக் சீன் உண்டு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - விஜய்தெவரகொண்டா ரசிகைகள் .மிருணாளி ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம். சராசரி தரம் உள்ள சுமாரான படம் . ரேட்டிங் 2 / 5
| The Family Star | |
|---|---|
| Directed by | Parasuram |
| Written by | Parasuram |
| Produced by |
|
| Starring | |
| Cinematography | K. U. Mohanan |
| Edited by | Marthand K. Venkatesh |
| Music by | Gopi Sundar |
Production company | |
Release date |
|
Running time | 163 minutes[2] |
| Country | India |
| Language | Telugu |
| Budget | ₹50 crores[3] |
| Box office | est.₹35 crores[4] |

0 comments:
Post a Comment