Thursday, May 30, 2024

THE LAST STOP IN YUMA COUNTRY (2023) - அமெரிக்கன் மூவி - சினிமா விமர்சனம் (க்ரைம் த்ரில்லர் )

   

   கனடா , யூ எஸ் ஏ  வில்  ரிலீஸ்  ஆன  முதல்  வாரத்திலேயே  42,000  டாலர்  வசூல்  செய்து  அந்த  ஆண்டின்  வசூல்  படங்களில்  29  வது  இடத்தைப்பிடித்த   கமர்ஷியல்  சக்சஸ்  ஃபிலிம்  இது , மீடியாக்களீன்  ஏகோபித்த  பாராட்டுக்களையும்  பெற்றது              


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  காரில்  பயணம்  செய்து  ஒரு  கேஸ்  ஃபில்லிங்  ஸ்டேஷனுக்கு  வருகிறான் காரில். பெட்ரோல்  , டீசல் க்குப்பதிலாக  கேஸ்  ஃபில்லப்  செய்து  ஓட்டும்  மாடல்  அது . ஆனால் அங்கே  கேஸ்  இருப்பு இல்லை . இன்னும்  10  நிமிடங்கள்  கழித்து கேஸ்  வருமாம், அதுவரை  அட்டாச்டு  ரெஸ்டாரண்ட்டில்  டீ, காஃபி  ஏதாவது  சாப்பிடலாம்  என  வெயிட்  செய்கிறான்


ஒரு  போலீஸ்  காரர்  தன்  மனைவியை  அங்கே  டிராப்  பண்ணீ  விட்டுப்போகிறார். அவர்  தான்  நாயகி . அந்த  ரெஸ்டாரண்ட்டில்  சர்வர்.


அப்போது  அங்கே  ஒரு  காரில்  இருவர்  வருகிறார்கள் . பார்க்கவே  முரட்டு  ஆட்களாக  இருக்கிறார்கள் . அப்போது  தான்  நியூசில்  ஒரு  தகவல்  சொல்கிறார்கள் , அருகில்  உள்ள  வங்கியில்  பணத்தைக்கொள்ளை  அடித்து  விட்டு  காரில் இருவர்  தப்பிச்சென்றார்கள்   என்ற  செய்தி  ஒலிபரப்பாகிறது 


 நாயகன்  நாயகியிடம்  நைசாகப்பேச்சுக்கொடுத்து  உங்க  புருசன்  போலீஸ்  தானே? அவருக்கு  ஃபோன்  பண்ணி  தகவல்  சொல்லுங்கள் . வந்திருக்கும்  இருவரும்  வங்கிக்கொள்ளையர்களாகத்தான்  தெரிகிறது  என்கிறான்


  அதே  சமயம்   ஒரு  லவ்  ஜோடி  காரில்  அங்கே  வந்து  சேர்கிறார்கள் . இதற்குப்பின்  நடக்கும்  பரபரப்பான  சம்பவங்கள்  தான்  மீதிக்கதை 


 ஒரே  ஒரு  ஹோட்டலில்  நடக்கும்  சம்பவங்கள் . மிக  மிக  லோ பட்ஜெட். எந்த  செலவும்  இல்லை . நல்ல  ஐடியா 


கத்தி  வியாபாரியாக , நாயகன்  ஆக  ஜிம்  கம்மிங்க்ஸ்  நடித்திருக்கிறார். முதல்  பாதியில்  அமைதியாக  இருந்து  விட்டு பின்  பாதியில்  ஆக்சனில்  இறங்கும்  கேரக்டர். கச்சிதமாக  செய்திருக்கிறார்


 நாயகி  ஆக  , ஹோட்டல்  சர்வர்  ஆக  ஜாக்லின் பிரமாதப்படுத்தி  இருக்கிறார்


வில்லன்களாக  வருபவர்கள்  தோற்ரம் , கெட்டப் , உடல்  மொழியால்  மிரட்டி  இருக்கிறார்கள் 


 போலீஸ்  ஆஃபீசர்களாக  வரும் இருவர்  நடிப்பும்  நல்ல  சுறுசுறுப்பு 


மிகச்சரியாக  90  நிமிடங்கள்  ஓடும்படி ஷார்ப்  ஆக  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர் 


மாத்யூ  காம்ப்ட்டனின் பின்னணி  இசை  ஒரு  த்ரில்லர்  படத்துக்குத்தேவையான  பணீயைச்செவ்வனே  செய்திருக்கிறது . ஒளிப்பதிவும்  தரம் 


 திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ஃபிரான்சிஸ்  காலுப்பில்


சபாஷ்  டைரக்டர்


1   தேவை  இல்லாமல்  லொக்கேஷன்  சேஞ்ச் ,  நடிகர்கள் , நடிகைகள்  கூட்டம்  எதுவும் இல்லாமல்  10  பேர் , ஒரே  ஒரு  ஹோட்டல்  என்று  தேர்ந்தெடுத்து  திரைக்கதை  அமைத்த  விதம் . லோ பட்ஜெட்டில் படத்தை  முடித்த  விதம் 


2  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்   அபாரம்,  என  சொல்ல  முடியாவிட்டாலும்  ஓக்கே  ரகம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஒரு  பேங்க்கில்  கொள்ளை  அடிப்பவர்கள்  அவ்ளோ  பணத்துடன்  நேராக  வீட்டுக்கோ , மறைவான  இடத்துக்கோ போய்  பணத்தைப்பத்திரப்படுத்தாமல்  காரில்  டிக்கியில் பணப்பேக்கை  வைத்து  விட்டு  அசால்ட்  ஆக  ஹோட்டலுக்குள்ளே  நுழைவார்களா? 


2    நாயகன்  ரொம்ப  தூரம்  காரில் போக  வேண்டிய  தேவை  இருக்கு . பெட்ரோலை காரிலிருந்து  கேனுக்கு  மாற்றும்போது  அருகில்  இருந்து  கச்சிதமாக  அந்த  வேலையை  செய்யாமல்  பெட்ரோலை  லீக்  செய்து  வேஸ்ட்  செய்வது  ஏன் ?  (  அதனாலேயே  பாதி  வழியில்  கார்  நிற்கிறது ) அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   தரமான  க்ரைம்  த்ரில்லர் , குடும்பத்துடன்  பார்க்கலாம், கொஞ்சம்  ஸ்லோ  மூவி  . ரேட்டிங்  3/ 5 


The Last Stop in Yuma County
Theatrical release poster
Directed byFrancis Galluppi
Written byFrancis Galluppi
Produced by
  • Matt O'Neill
  • Atif Malik
  • Francis Galluppi
Starring
CinematographyMac Fisken
Edited byFrancis Galluppi
Music byMatthew Compton
Production
companies
Distributed byWell Go USA Entertainment
Release dates
Running time
90 minutes
CountryUnited States
LanguageEnglish
Budget$1 million[2]
Box office$41,520[3][4]

0 comments: