Friday, May 17, 2024

AAVESHAM (2024) -மலையாளம்- சினிமா விமர்சனம் ( ஆக்சன் காமெடி ) @ அமேசான் பிரைம்


30  கோடி  பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு  150  கோடி  வசூல்  செய்த  படம் , அது போக  மலையாள  இண்டஸ்ட்ரியில்  வசூல்  ரீதியாக  ஐந்தாவது  இடத்தைப்பிடித்த  படம்     டாப் 10  கமர்ஷியல்  சக்செஸ்  ஆல்டைம் 

1    புலிமுருகன்   2  லூசிஃபர்   3  மஞ்சுமேல்  பாய்ஸ்  4  பிரேமலு  5  ஆவேசம்  6  2018  7  ஆடு ஜீவிதம்  8  பீஷ்மா  பர்வம் 9  நேரு 10  ஆர்டிஎக்ஸ்

ஸ்பாய்லர்  அலெர்ட்


கேரளாவில்  இருந்து  பெங்களூர்  காலேஜூக்குப்படிக்க  வருகிறார்கள்  மூன்று  இளைஞர்கள் .  ஜி வி  பிரகாஷ்  நடித்த  டப்பா  படமான  ரெபெல்  படத்தில் வருவது  போல  அந்த  மூன்று  இளைஞர்களும்  சீனியர்  மாணவர்களால்  ரேக்கிங்  செய்யப்பட  அது  மோதலாக  உருவெடுக்கிறது. சீனியர்கள்  அந்த  மூவரையும்  வெளுத்து  வாங்கி  விட  பழி  வாங்கத்துடிக்கிறார்கள்


உப்புமா , உதிரிக்கட்சிகள்  எல்லாம்  கூட்டணிக்கு  ஒரு  பெரிய  ரவுடிக்கட்சியுடன்  கூட்டணி  வைத்துக்கொள்வது  போல  அந்த  மூன்று  மாணவர்களும்  ஏதாவது  ஒரு  பெரிய  தாதா  உடன்  கூட்டு  அல்லது  நட்பு  வைத்துக்கொண்டு  அவனை  வைத்து  அந்த  சீனியர்  மாணவர்களைப்பழி  வாங்கலாம்  என  திட்டம்  இடுகிறார்கள்: 


 நாயகன்  ஒரு  தாதா . கேங்க்ஸ்டர் . அவனுக்குக்கீழ்  ஏராளமான  அடியாட்கள் காலேஜ்  நண்பர்கள்  மூவருக்கும்  அந்த  தாதாவின்  நட்பு  கிடைக்கிறது . காலேஜ்  மாணவர்களின்  திட்டமோ , சுயநலத்துக்காகத்தான்  தன்னிடம்  பழகுகிறார்கள்  என்பதோ  தாதாவுக்குத்தெரியாது 


 ஒரு  கட்டத்தில்  தங்கள்  நோக்கத்தை  நிறைவேற்றிக்கொண்ட  மாணவர்கள்  மூவரும்  தாதாவுடனான  தங்கள்  நட்பை  முறித்துக்கொள்ள  முடிவெடுக்கின்றனர் 


தாதாவின்  கேங்க்ஸ்டர்  குரு  தாதாவை  பழி  வாங்கத்துடிக்கிறான் . அவனுக்குக்காலேஜ்  மாணவர்கள்  உதவுகின்றனர் . இந்த  துரோகத்தை  நாயகன் ஆன  தாதாவால்  தாங்கிக்கொள்ள  முடியவில்லை , இதற்குப்பின்  நிகழும்  அதிரி  புதிரி  சம்பவஙக்ளே  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  தாதாவாக  ஃபகத்  ஃபாசில்  கலக்கி  இருக்கிறார். பம்மல்  கே  சம்பந்தம்  கமல்  போல  உடல்  பூரா  நகைகளுடன்  அவர்  வலம்  வருவது  நகைக்க  வைக்கிறது . அவரது   உடல்   மொழி  அபாரம் , வழக்கமாக  இயற்கையான  நடிப்பை  வழங்கும்  இவர்  இந்த  கேரக்டருக்காக  ஓவர்  ஆக்டிங்கை  அளவாகத்தந்து  இருக்கிறார்


நாயகனுக்கு  இணையாக  காட்சிகள்  இல்லாத  போதும்  அந்த  புதுமுகங்கள்  மூவருமே  அருமையான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்கள் .நாயகன்  ஆன  தாதாவின்  ரைட்  ஹேண்ட்  அம்பான்  ஆக  வரும்  சஜின்  கோபு  விசுவாசம்  என்றால்  இப்படி  இருக்க  வேண்டும்  என  எண்ண  வைக்கும்  அருமையான  நடிப்பு 


நாயகனின்  குருவாக  வரும்  மெயின்  வில்லன்  ஆக  மன்சூர்  அலிகான் , இவருக்கு  போதுமான  அளவு  கேரக்டர்  வலு  சேர்க்கப்படவில்லை . டம்மி  வில்லன் ஆகவே  வலம்  வருகிறார்


தாதாவான  நாயகனுக்கோ , காலேஜ்  மாணவர்கள்  மூவருக்கோ  ஜோடி  இல்லை . அது  ஒரு  பெரிய  குறையாகத்தெரியவில்லை . பூஜா  மோகன்  ராஜ்  வந்தவரை  ஓக்கே  ரகம் 


சமீர்  தாஹிரின்  ஒளிப்பதிவு  குட் . குறிப்பாக  இரவுக்காட்சிகளில்  முத்திரை  பதிக்கிறார். எடிட்டிங்க்  விவேக் ஹர்சன்  ,181  நிமிடங்கள்  படம்  ஓடினாலும்  போர்  அடிக்கவில்லை சுஷின்  ஷியாம்  இசை  கச்சிதம் , குறிப்பாக  பின்னணி  இசையில்  பல  இடங்களில்  கை  தட்டல்  பெறுகிறார்


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ஜித்து  மாதவன் 


சபாஷ்  டைரக்டர்


1    இடைவேளைக்கு  முன்பு  வரும்  அந்த  ஹோலி  பண்டிகை  பேக்  டிராப்  ஃபைட்  சீன்  அதகளமான  ஆக்சன்  சீக்வன்ஸ் , ஸ்டண்ட்  மாஸ்டருக்கு  ஒரு  சபாஷ் . ஜாக்கி  சான்  நடித்த  ஸ்பானிஷ்  கனெக்சன்  படத்தின்  ஒரு  ஆக்சன்  சீக்வன்சை  நினைவு  படுத்துகிறது. செமயான  ஃபைட்  சீன் 


2  நாயகன்  நிஜமான  தாதாவா? டம்மி  பீசா? என்பதை  கடைசி  வரை  சஸ்பென்சாகவே  கொண்டு  போன  விதம்  அருமை


3  க்ளைமாக்சில்  நாயகன்  தனியாக 200  ரவுடிகளிடம்  மாட்டிக்கொள்ளும்  காட்சியும்  அதைத்தொடர்ந்து  நடக்கும்  எதிர்பாராத  நடவடிக்கையும்  அருமை 


செம  ஹிட்  சாங்க்ஸ்


 க்ல  கல கலாட்டா  கலாட்டா 


  ரசித்த  வசனங்கள் 


1    அதோ   அந்த  3  பசங்களைப்பார்க்கும்போது  எனக்கு  என்  காலேஜ்  லைஃப்  தான்  ஞாபகம்  வருது


 நீங்க  தான்  காலேஜே  போகலையே?


 அவங்க கூடத்தான்  காலேஜ்  போகலை , இங்கே  தண்ணி  அடிச்சுட்டு  இருக்காங்க 


2    பெரியரவுடி    கேங்க்னு  நினைச்சோம் இந்த  நாலு  பேரை  அடிக்க  இத்தனை  பேரா?


 நம்ம  மூணு  பேரை  எத்தனை  பேர்  சேர்ந்து  அன்னைக்கு  அடிச்சாங்க ?


3   உனக்கு  லைசென்ஸ் உண்டோ? இல்லைன்னா  என்  லைசென்சை  எடுத்துக்க


4  என்ன?  நீங்க  மட்டும்  வந்திருக்கீங்க ?> அடியாளுங்க  எல்லாம்  எங்கே?


 ஹோலி  இல்லையா? எல்லாருக்கும்  லீவ்


 சுத்தம் , இன்னைக்கு  நாம  அடிவ்  வாங்கப்போறோம்


5  உங்களோட  இருக்குமோது  தலைல  பாம்  கட்டிட்டு  இருக்கற  மாதிரி  இருக்கு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  அந்த  மூன்று  மாணவர்களிடன்  ஏன்  அவ்ளோ  பிரியமாக  இருக்கிறான்  என்பதற்கு  வலுவான  காரணங்கள்  இல்லை 


2  போலீஸ்  என்ற  ஒரு  இலாகா  இருக்கா? இல்லையா? என்ற  சந்தேகம்  வருகிறது . ஒரு  சீன்ல  கூட  போலீசே  வர்லை 


3  குடி , குட்டி , வசதியான  வாழ்க்கை  என  ஜாலியாக  இருக்கும்  மாணவர்கள்  மனம்  மாறுவதும்  நம்ப  முடியவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஃபகத்  ஃபாசில்  ரசிகர்கள்  கொண்டாடுவார்கள்.  மற்ற  பொது  ரசிகர்கள்  கூட  பார்க்கலாம்  லெவலில்  தான்  இருக்கு . ரேட்டிங்  2. 75 / 5 


Aavesham
Theatrical release poster
Directed byJithu Madhavan
Written byJithu Madhavan
Produced by
Starring
CinematographySameer Thahir
Edited byVivek Harshan
Music bySushin Shyam
Production
companies
Distributed byA & A Release
Release date
  • 11 April 2024
Running time
161 minutes
CountryIndia
LanguageMalayalam
Budgetest. ₹30 crores[1]

0 comments: