Sunday, May 26, 2024

பாறை (2003)-தமிழ் -மாகாயானம் (1989)-மலையாளம் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா)

     

  மகாயானம்  படத்தில்  நாயகன்  ஆக  நடித்ததற்காக  மம்முட்டிக்கு  1989 ஆம்  ஆண்டின்   கேரள மாநில  அரசின்   சிறந்த  நடிகர்  விருது கிடைத்தது, கமர்ஷியல்  சக்சஸ் , மீடியாக்கள்  பாராட்டு  ஆகியவற்றை  ஒருங்கே  பெற்ற  இப்படத்தை  கே  எஸ்  ரவிக்குமார்  தமிழில்  ரீமேக்கினார். மம்முட்டி  ரோலில்  சரத்  குமார் , முகேஷ்  ரோலில்  ஜெயராம்  நடித்தார்கள் .  ஆனால்  எதிர்பார்த்த  வெற்றியை  ஏனோ  பெறவில்லை 


சரத் குமார்  கே  எஸ்  ரவிக்குமார்  காம்பினேஷன்  படங்கள் புரியாத  புதிர் (1990), சேரன்  பாண்டியன் (1991) ,ஊர்  மரியாதை (1992)  ,  பேண்டு  மாஸ்டர் (1993)  , நாட்டாமை (1994) ,நட்புக்காக  (1998)  பாட்டாளி (1999) , சமுத்திரம் (2001) , பாறை (2003) ,ஜக்குபாய் (2010)   என  மொத்தம்  10  படங்கள் , இவற்றில்  கடைசி  இரண்டு  படங்கள்  மட்டுமே  சுமாராகப்போன  படங்கள் , மற்றவை  வெற்றிப்படங்கள் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு  லாரி  டிரைவர் , கொஞ்சம்  முன்  கோபி. வாய்  பேசாது , கை  தான்  பேசும். எல்லோரிடமும்  கோபமாகவே  நடந்து  கொள்ளும்  இவர்  தன்  லாரி  கிளீனர்  ஆக  வேலை  செய்யும்  நபரிடம்  மட்டும்  பாசமாகப்பழகுகிறார். அவரும்  இவரை  அண்ணன்  என்றே  அழைத்து  அன்பாகப்பழகுகிறார்


 நாயகனுக்கு  சொந்த  பந்தம்  யாரும்  இல்லை ,  அவருக்கு  என  லட்சியம்  ஏதும்  இல்லை . ஆனால்  நாயகனின்  நண்பரும்  லாரி  க்ளீனரும்  ஆன  நபருக்கு  ஒரு  மனைவி , அம்மா, குழந்தை  உண்டு . எப்போதும்   தான்  ஒரு  சொந்த  வீடு  கட்ட  வேண்டும்  , லைஃபில்  செட்டில்  ஆக  வேண்டும்  என்ற  நினைப்போடும், சேமிப்பில்  முனைப்போடும்  இருப்பவர் 


ஒரு  நாள்  நாயகனின்  நண்பர்  விபத்தில்  இறக்கிறார்.  நாயகன்  அவரது  பிணத்தை  அவர்கள்  வீட்டில்  ஒப்படைக்க  செல்பவர்  அந்த  ஊரிலேயே  தங்குகிறார். நண்பரின்  குடும்பத்துக்கு  உதவி  செய்கிறார். நண்பரின்  லட்சியம்  ஆன  சொந்த  வீடு  கட்டுவதை  இவரே  கையில்  எடுத்து  வீடு  கட்டித்தரும்  முனைப்பில்  இருக்கிறார்


 ஊர்  மக்கள் , வில்லன்  என  எல்லோரும்  நாயகனை   நாயகனின்  நண்பனின்  மனைவியுடன்  இணைத்துத்தப்பாகப்பேசுகிறார்கள் . ஆனால்  கடைசி  வரை  நாயகன்  அண்ணன்  முறையில்  தான்  பழகுகிறார். இறுதியில் வில்லனின்  எண்ணம்  நிறைவேறியதா? நாயகன்  வீடு  கட்டி  முடித்தானா? என்பது  க்ளைமாக்ஸ் 


 நாயகன்  ஆக சரத்  குமார் , கச்சிதமான  நடிப்பு. இறுக்கமான  முகம், எப்போதும்  வாயில்  பீடியுடன்  சுற்றும்  கேரக்டர். அசால்ட்  ஆக  நடித்திருக்கிறார்


 நண்பர்  ஆக  ஜெயராம், காமெடியாக  வந்து  போகிறார். அதிக  காட்சிகள்  இல்லை .இவருக்கு  ஜோடி  ஆக  மீனா  கச்சிதம், மீனாவின்  மாமியார்  ஆக  வடிவுக்கரசி  பொருத்தமான  நடிப்பு  


  நாயகி  ஆக  ரம்யா  கிருஷ்ணண். அதிக  காட்சிகள் இல்லை 


 வில்லன்  ஆக  உதிரிப்பூக்கள்  விஜயன், எடுபுடி  ஆக  மன்சூர்  அலிகான்  வந்து  போகிறார்கள்  , அதிகம்  வாய்ப்பு   இல்லை 


லாரி  ஓனர்  ஆக    வரும்  வினுச்சக்கரவர்த்தி  நடிப்பும், அவரது  கேரக்டர்  டிசைனும்  குட் 

ரமேஷ்  கண்ணா , சிட்டி  பாபு  இருவரும்  காமெடிக்கு , ஆனால்  சிரிப்பு   வரவில்லை 


சபாஷ்  டைரக்டர்


1  திருமணம்  ஆன  பின் சாதித்த  நடிகர்கள்  பட்டியலை  வெளியிட்டு  ஜெயராம்  பேசும்போது  சரத்குமார்   திருமணம் ஆகாமல்  சாதித்த    வாஜ்பாய் , அப்துல்கலாம்  லிஸ்ட்  சொல்லி  விளக்கும்  காட்சி 


ஏரோப்ளான்  பறக்குது  பார்  மேலே   பாட்டுக்கு  ஆடும்  அசோக்  ராஜா  குட் 


சபேஷ்  முரளியின்   இசையில்  ஆறு  பாடல்கள்  . அவற்றில்  இரண்டு  செம  ஹிட்  


செம  ஹிட்  சாங்க்ஸ்


  1  ஏரோப்ளான்  பறக்குது  பார்  மேலே 


2  நான் ஒரு  கனாக்கண்டேன்


3 கண்ணுக்குள்  டிக் டிக் 


4 நண்பனே  நண்பனே


5  வினாயகா வினாயகா  


6  என்  தாய் 


  ரசித்த  வசனங்கள் 


1  நாமெல்லாம்  ஏழைகள் , நம்ம  கிட்டே  கொஞ்சமாப்பணம்  இருந்தாலும்  அதை  அடிக்கடி  எண்ணிப்பார்ப்பது  ஒரு  சுகம்  ( கவுண்ட்டிங்) 


2 வாயாடிப்பொண்ணுக்கே  வாய்ல  ரத்தம்  வர்ற  அளவு  முத்தம்  கொடுத்திருக்கான்


3  உன்  பேரு  பாவாடை , ஆனா  நீ  எப்பவும்  வேட்டி தான்  கட்றே, எப்பவாவது  பாவாடை  கட்டி  இருக்கியா? 


4  சைக்கிள்  கேப்ல  கிடா  வெட்டுவாங்கனு  கேள்விப்பட்டிருக்கேன், இங்கே  சைக்கிளையே  அடிச்சுட்டாங்களே  சின்ன  கேப்ல


5    யாரோ  கம்மலைத்திருடிட்டாங்க ‘


  அய்யய்யோ  நான்  சுடலை 


 நீ  சுடலை  என்பது  தெரியும், ( பேரு  சுடலை )  கம்மலை  சுட்டியா? இல்லையா? அதை  சொல்லு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஜெயராம், சரத்  குமார்  உயிரைக்காப்பாற்றுகிறார்  இதுதான்  சீன். இதைப்படமாக்கிய  விதம்  மிக  மோசம்,    ரோட்டிலேயே  சரத் குமார்  படுத்துத்தூங்குகிறார். லாரி  வருது . ஜெயராம்  வந்து  காப்பாத்தறார். நம்பற  மாதிரியே  இல்லை 


2  ஜெயராம்  விபத்தில்  இறங்கும்  காட்சியும்  மனதைத்தொடும்  அளவில்  படம் பிடிக்காமல்  ஏனோ தானோ  என  அசால்ட்  ஆகப்படம்  பிடிக்கப்பட்டிருந்தது


3  வில்லன்  விஜயன்  கேரக்டர்  டிசைன்  மகா  பலவீனம்.  வில்லனிடம்  வேலை செய்யும்  ஐடியாக்களை  எல்லாம்  கேட்கிறார். பத்துப்பைசாவுக்குப்பிரயோஜனம்  இல்லாத  ஐடியாக்கள் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   சுமாரான  படம்  தான், சரத்  குமார்  நடிப்புக்காகவும், ஏரோப்ளான்  பாட்டுக்காகவும்  பார்க்கலாம். ரேட்டிங் 2.25 / 5


Paarai
DVD cover
Directed byK. S. Ravikumar
Story byA. K. Lohithadas
Based onMahayanam (Malayalam)
Produced byS.S.Durairaj
StarringSarath Kumar
Meena
Jayaram
Ramya Krishnan
CinematographyS. Sriram
Edited byK. Thanikachalam
Music bySabesh–Murali
Production
company
Mass Movie Makers
Release date
  • 13 June 2003
Running time
170 minutes
CountryIndia
LanguageTamil

0 comments: