Friday, October 01, 2010

எந்திரன் விமர்சனத்தை முதன்முதலில் எழுதி பதிவிடுவது எப்படி?

போட்டி நிறைந்த இந்த உலகில் நாம் தனித்துத்தெரிய எதிலும் முந்திக்கொள்ள வேண்டும்.டாக் ஆஃப் த டவுன் ,கிராமம் எல்லாம் இப்போ எந்திரன்தான்.அந்தப்படத்தை முதல் ஷோவே நிறைய பேர் பார்த்தாலும் அவர்களை முந்திக்கொண்டு முதல் விமர்சனத்தை எப்படி பதிவு போடுவது என்று (இல்லாத)மூளையை கசக்கி யோசித்தேன் 3 ஐடியாக்கள் தோன்றின.


வழி 1.விடிகாலை 3 மணிக்கு எழவும்.(என்ன எழவுடா இது என புலம்பாமல்..)குளித்து மாற்றுத்துணி எடுத்துக்கொள்ளவும்.(கூட்ட நெரிசலில் மீண்டும் ஒரு முறை டிரஸ் மாற்ற நேரிடும்.)ஓ சி யில் ஒரு லேப்டாப் ஏற்பாடு செய்துகொள்ளவும்.அதில் முதலில் படத்தின் ஸ்டில்ஸை டவுன்லோடு பண்ணி ஸ்டோர் பண்ணி வைத்துக்கொள்ளவும்.டைட்டிலை ரெடி பண்ணி பக்காவாக தயாராகவும்.
தியேட்டரின் ஓரமாக சீட் பிடித்துக்கொள்ளவும்.(அப்பதான் சார்ஜ் போட பிளக்பாயிண்ட் கிடைக்கும்.)பொதுவாக தமிழ் சினிமாவில் படம் போட்ட 20 நிமிடத்தில் உத்தேசமாக கதை தெரிந்துவிடும்.அது தெரிந்ததும் படத்தோட கதை என்னன்னா ...... என டைப் செய்து 10 லைனுக்குள் எழுதி இடுகையை வெளியிடவும்.பொதுவாக தமிழ் மணத்தில் அரைமணி நேரம் கழித்தே இடுகை ஜாயிண்ட் ஆகும்.அதற்குள் இடைவேளை வந்து விடும்.
இடைவேளை 15 நிமிஷம் இருக்கும்.அதற்குள் மீதிக்கதையை டைப் செய்து இடுகையை எடிட் செய்து மீண்டும் ரீ ரிலீஸ் செய்யவும்.ஈரோட்டில் விடிகாலை 4.30 மணிக்கு முதல் காட்சி.காலை 6 மணிக்குள் விமர்சனம் வந்து விடும்.

நீங்கள் படம் பார்த்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு உட்கார்ந்து விமர்சனம் எழுதினால் மதியம் ஆகி விடும்,நான் சொன்ன வழியில் செய்தால் நீங்கள்தான் நெம்பர் ஒன்.

 
வழி 2. பணம் செலவு செய்யாமலேயே விமர்சனம் செய்ய ஆசையா?அதற்கும் வழி உண்டு.ஏர்செல் டூ ஏர்செல் 24 மணி நேரமும் ஃப்ரீ கனெக்‌ஷன் எடுத்த ஒரு நெம்பர் உங்களிடமோ உங்கள் நண்பரிடமோ இருக்கும்.(மாதம் ரூ 500 வாடகை).அந்த சிம் உள்ள ஃபோனை படம் பார்க்கப்போகும் ஒரு நபரிடம் உங்கள் இன்னொருஏர்செல்  நெம்பருக்கு கால் செய்து ஆன் பண்ணி ஸ்பீக்கர் ஃபோன் ஆன் செய்து குடுத்து விடவும்.(ஜாக்கிரதை இந்த ஐடியாவில் செல்ஃபோன் அபேஸ் ஆகும் ரிஸ்க் உண்டு.படம் ஓட ஓட கதை வசனம் நீங்கள் டைப் பண்ணலாம்.இடைவேளையின் போது நபரிடம் ஃபோட்டோகிராஃபி எப்படி என கேட்டுக்கொள்ளவும்.ஏனெனில் ஒளிப்பதிவை நீங்கள் பார்க்கும் வாய்ப்பு இல்லை.


வழி 3 - லேப்டாப்பும் ஓசியில் கிடைக்கவில்லை,செல்ஃபோனும் கிடைக்கவில்லையா?கவலை வேண்டாம்.படம் எத்தனை மணிக்கு விடும் என தியேட்டர் வாட்ச் மேனிடம் கேட்டுத்தெரிந்து கொண்டு வாசலில் காத்து நிற்கவும்.படம் முடிந்து வெளியே வரும் நபர்களில் தோதான ஒரு நபரை தேர்ந்தெடுக்கவும்.பெரும்பாலும் அவர் வேலை வெட்டி இல்லாத வெட்டாஃபீசாகத்தான் இருப்பார்,அவரை டீக்ககடைக்கு அழைத்து செல்லவும்.ஒரு டீயும் ,பஜ்ஜியும் வாங்கிக்குடுத்து படத்தை பற்றி அபிப்ராயம் கேட்கவும்.டைரியில் மறக்காமல் குறித்து வைத்துக்கொள்ளவும்.பிறகு எதற்கும் இருக்கட்டும் என தியேட்டர் ஆப்பரேட்டரை போய் பார்க்கவும்,அண்ணே,படம் தேறுமா என ரிசல்ட் கேட்டு வைத்துக்கொள்ளவும்.அப்பாடா,இனி விமர்சனம் ரெடி.




டிஸ்கி- மேற்கூறிய வழிமுறைகளில் ஏதேனும் பிழை ஏற்பட்டு விமர்சனம் மிஸ்கால்குலேஷன் ஆனால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.