Friday, February 21, 2014

பிரம்மன் - சினிமா விமர்சனம்


வெய்யில் பட ஹீரோ மாதிரி இந்தப்பட ஹீரோவும்  சினிமா தியேட்டர்ல  தன் வாழ்க்கையைத்தேடுபவர் தான். அந்த சாயல் வராம இருக்க தாவணிக்கனவுகள் பின் பாதி சாயலை மிக்ஸ் பண்ணி எம் சசிகுமார் பிராண்ட் நட்பு , காதல் தியாகம்  சேர்த்தா  பிரம்மன் கதை ரெடி .


ஹீரோ பழைய சினிமா தியேட்டரை லீசுக்கு எடுத்து ஓட்டிட்டு இருக்கார் . தியேட்டர்ல  கூட்டமே வர மாட்டேங்குது . புதுப்படம் தர மாட்டேங்கறாங்க, பழைய படத்துக்கு மக்கள் வர மாட்டேங்கறாங்க. 5 லட்சம் ரூபா கடன் ஆகிடுச்சு.சின்ன வயசுல சினிமாக்கனவோட  இருந்த சக நண்பன் இப்போ  சினிமா ல புகழ் பெற்ற இயக்குநர்.அவரை சந்திச்சா உதவி கிடைக்கும்னு சென்னை கிளம்பறார். 


சென்னைல எதிர்பாராத விதமா  ஹீரோவுக்கு இயக்குநர் ஆகும் வாய்ப்பே கிடைச்சுடுது .அவரோட கதையை நண்பனுக்காக விட்டுத்தர்றார். காதலியையும் விட்டுத்தர தயார் ஆகறார். கடைசி வரை தான் யார்?னு நண்பன் கிட்டே சொல்லவே இல்லை. 

 உண்மை தெரிஞ்ச நண்பன் என்ன முடிவெடுக்கறான்  என்பதே கதை. 




இதுவரை கிராமீய மணம் கமழும் படங்களிலேயே நடிச்சு வந்த எம் சசிகுமார் முதன் முறையா தைரியமா நகர கதைக்கு மாறி இருக்கார் . பெருசா மாற்றம் தெரியல . தங்கச்சி செண்ட்டிமெண்ட் , அம்மா , அப்பா விடம் பாசம் காட்டுவது அக்மார்க் எம் ஜி ஆர் ஃபார்முலாக்கள் வழக்கம்  போல் உண்டு . நண்பன் சம்பந்தப்பட்ட வசனங்களுக்கு தியேட்டரில் கை தட்டல் அள்ளுது ( இன்னும் எத்தனை நாளுக்கு இதை வெச்சே ஓட்டுவாரோ /? ) 

டூயட் காட்சிகளில்  ராஜூ சுந்தரத்தின்  தயவில் யதார்த்தமான , கண்ணை உறுத்தாட நடன அசைவுகள் . முதன் முறையா ஃபாரீன் லொக்கேசன் ல ஆட்டம் . 



ஹீரோயின் புதுமுகம் லாவண்யா த்ரிவேதி . இவர் 2006ல் மிஸ் உத்தர்காந்த் ஆக தேர்வானவர் . மாடலிங்க் துறையில் கொடி கட்டிப்பறந்தவர் , சிக் ஷாம்புவின் மாடல் . 2012 ல் தெலுங்குப்படத்தில் அறிமுகம் ஆனவர் . 

அகத்தியன் -ன் காதல் தேவதையில் அறிமுகம் ஆன இஷா கோபிகர் முக அழகு சாயல் , தமனா வின் முக பாவனைகள் இரண்டையும் கலந்து கட்டி அடித்த நீள் வட்ட நிலா முகம் . பிரமாதமாக நடிக்கா விட்டாலும் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என பட்சி சொல்லுது ( இந்த பட்சிக்கு வேலையே இருக்காதா? எப்போ பாரு எதையாவது சொல்லிட்டே இருக்குமா? 


இவருக்கு கண்களும் , உதடுகளும் சின்னதாக இருந்தாலும்  ரசிக்க வைக்கும் நளினங்கள் தான். 




படத்துக்கு பலம் சேர்க்கும் சந்தானம் படத்தின் கதையோடு ஒன்றிய காமெடி செய்கிறார். மொத்தப்படத்திலும் 24  ஜோக்ஸ் தான் சொல்றார் என்றாலும் அப்ளாஸ் அள்ளறார் . 


 சூரி  பின் பாதி கதையில் தான் வர்றார் . வழக்கம் போல் ஓவராக மொக்கை போடாமல் சுமாராக  மொக்கை போடுகிறார் .

எம் சசிகுமார்-ன் நண்பராக வருபவர் ஒரு கல்லூரியின் கதை ஆர்யா மாதிரி  பாடி லேங்குவேஜில்  அடக்கி வாசிக்கிறார் . 


படத்தில் வசனம் செம ஷார்ப் .  பின் பாதி திரைக்கதையில் தான் தடுமாறி விட்டார்கள் .  செயற்கையான சம்பவங்கள் ,  வலிந்து திணிக்கப்பட்ட நண்பன் செண்ட்டிமெண்ட் , காதலியை விட்டுத்தரும் ஒட்டாத  தியாகம்  எடுபடவில்லை 



ஆனாலும் சந்தானம் காமெடிக்காகவும் , எம் சசிகுமாருக்காகவும் ஒரு முறை பார்க்கலாம் . 





இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1.வ்ழக்கமான சசிகுமார் படங்களில் தவறாமல் இடம் பிடிக்கும் வன்முறை சுத்தமாக இல்லை . குடும்பத்துடன் பார்க்கும்படியான திரைக்கதை 



2 சோப்புக்குமிழி போல் வாழ்க்கை என்பதை பூடகமாக சொல்லும்  ஓப்பனிங்க் ஷாட் , இயக்குநர் பெயரை டைட்டில் கார்டில் போடும்போதும் சோப்புக்குமிழிகளை வான்  நோக்கிபறப்பதை  உயர்வுக்கு குறியீடாக காட்டுவது  சபாஷ் காட்சிகள் 


3 ஒரே ஒரு பாடல் காட்சிக்கு வந்தாலும் பத்மப்ரியாவின் குத்தாட்டம் செம கிக் 


4  சினிமா தியேட்டரின் அவலத்தை  சீரியசாக சொல்லாமல் காமெடியாகச்சொல்லி மனதில் பதிய வைத்த பாங்கு , குழப்பம் இல்லாத திரைக்கதை , உறுத்தாத இசை 


இயக்குநரிடம்  சில கேள்விகள்


1.  வீட்டுக்குத் தெரியாமல் காதலிக்கும் பொண்ணு அண்ணன் நடத்தும் சினிமா தியேட்டரிலேயே  கட் அடிச்சுட்டு வந்து படம் பார்க்குமா? அந்தளவு வேய்க்கானம் ( விவரம் ) இல்லாமயா இந்தக்காலப்பொண்ணுங்க  இருக்காங்க ? 


2 காதலிக்கும்  ஹீரோவின் தங்கை  நிச்சயிக்கப்பட்ட மாப்ளை வீட்டில் வாங்கி அனுப்பிய நெக்லசைப்பார்த்ததும் மனம் மாறுவது , காதலனை மறப்பது பெண்களை அவமானப்படுத்துவதாக இருக்கிறது 


3 முன் பின் தெரியாத ஆள் கதை சொன்னதும் டக்னு அவன் கைல 5 லட்ச ரூபா செக் அட்வான்சா  யார் தருவாங்க ? அவன் பாட்டுக்கு ஓடிட்டா?  இந்தக்காலத்துல  மொத்தக்கதைக்கே 2 லட்சம் தான் தர்றாங்க ( புது முக இயக்குநர்க்கு ) அதே படத்தில்  ஸ்டோரி ரைட்டருக்கெல்லாம் வேல்யூவே இல்லை என ஒரு வசனம் வேற வருது



4  ஓப்பனிங்க் ஷாட்டில் வரும் சேசிங்க் காட்சி ஜாக்கிசான் -ன் ப்ராஜக்ட் ஏ , ஆர் பாண்டியராஜன் -ன் நெத்தி அடி யில் பார்த்த காட்சிகளே ! 



5 ஹீரோவைப்பார்க்க  ஹீரோயின் நகரத்துக்கு வருவதும்  அவரை சந்திக்க முடியாமல் திரும்புவதும் படு செயற்கை . செல்  ஃபோன், ஃபோன் எல்லாம் எதுக்கு இருக்கு ? 


6  நண்பனுக்காக எதைத்தியாகம் செய்தாலும் ஏத்துக்கலாம், காதலியையே தியாகம் செய்யத்துணியும் ஹீரோவின் நட்பு செண்ட்டிமெண்ட் காதலை கொச்சைப்படுத்துவதாய் இருக்கு 


7  ஹீரோ - ஹீரோயின் காதல் அழுத்தமாக காட்டப்படாததால்  க்ளைமாக்ஸில் அவர்கள் சேருவார்களா? சேரமாட்டார்களா? என்ற பதைப்பு எல்லாம் வரவே  இல்லை 





நச் வசனங்கள் 


1. சந்தானம் - என்னடா இது? 


லவ் லெட்டர். 



அவனவன் ட்விட்டர் ல லவ் பண்றாங்க.நீ இப்போ போய் லெட்டர்? போடாங் # பிரம்மன்



2 சந்தானம்
- எனக்கு சேர்க்கை சரி இல்லை.பீரோடு சேர்ந்து ஒயினும் நாறும்னு சொல்ற மாதிரி




3 சந்தானம் - பொதுவா தியேட்டர் காரங்க போஸ்டர் ஒட்டறது 1,ஓட்றது 1 ,இது எல்லா பக்கமும் நடப்பது தானே?



4 சந்தானம் - கிரிக்கெட்னா பால் போடறதும் ,தியேட்டர்னா கால் போடறதும் சகஜம் தானே?



5 நீங்க ஆசைப்பட்ட விஷயத்தை நிஜமா நீங்க நேசிச்சா அது நிச்சயம் உங்களுக்கு ஒரு நாள் கிடைச்சே தீரும் #,பிரம்மன்


6 தெரிஞ்சவங்க யார் கிட்டேயாவது கடன் கேட்கலாமா? தெரியாதவன் கிட்டே கேட்டாக்கூட ஏதாவது கிடைக்கும்.நம்மைப்பத்தி தெரிஞ்சவன்் கிட்டே ம்ஹூம்



7 பொதுவா ஒருத்தர்ட்ட 1 இருந்தா 1 இருக்காது.ஆனா இப்டி 1 மே இருக்காதுனு எப்டி தெரியும் # பிரம்மன்



8 டீச்சர்.காதலுக்கு வயசு இல்லைனு ஜெயகாந்தன் சொல்லி இருக்காரு.நீங்க ஓக்கே ன்னா எனக்கும் ஓக்கே # சந்தானம்



9 பார்க்க முடியாத இடத்துல நண்பன் இருக்கான்னு பெருமையா இருக்கு 



10 முன்னே பின்னே தெரியாதவனையே நான் நண்பனாப்பார்க்கறவன் #,சசிகுமார் பஞ்ச்


11 சந்தானம் - ஏம்மா அவன் என்ன ஆர்டிஓ வா? ஏன் இப்டி அவனை சுத்தி 8 போடறே?


12 அடிபட்டாதான் வாழ்க்கைல எதையும் கத்துக்க முடியும் # இயக்குநர் சாக்ரடீஸ்



13 யாருக்கும் பயன்படாத குப்பை கூட ஒருத்தருக்கு பயன்படுது.நம்ம வாழ்க்கையும் அப்டித்தான்.யாருக்காவது பயன்படனும் # பிரம்மன்



14 ஒவ்வொருத்தருக்கும் தான் காதலிக்கும் பெண் தான் தேவதை .என் காதலி என் மனசுல இருக்கா



15 நண்பன் கேட்டா கட்டை விரலையே தருவேன்.சினிமா எடுக்க் வெச்சிருந்த கதையைத்தரமாட்டேனா? # எம் சசி யின் அப்ளாஸ் டயலாக்



16 ஸ்டோரி ரைட்டருக்குனு தனி மார்க்கெட் இங்கே இல்லை # பிரம்மன்



17 காதலா? லட்சியமா? னு வந்தப்ப லட்சியம் தான் முக்கியம்னு காதலைத்தூக்கி எறிஞ்சே.ஆனா காதலியை நண்பனுக்காக விட்டுத்தர்றதா? ச்சே! # பிரம்மன்



18 உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஆனா எதையுமே வெளில காட்டிக்கிட்டதில்லை # பிரம்மன்


19 என்னை ஜெயிக்க வெச்சு நீ தோத்துட்டியேடா? நண்பன ஜெயிச்சா நான் ஜெயிச்ச மாதிரி




20 நீ எதையும் வியாபரமா பார்க்கறே , நான் வாழ்க்கையாப்பார்க்கறேன்


 படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ் 


1. புதுமுகம் லாவண்யா த்ரிபாதி தமனாவில் பாதி.தமிழன் தமனாவையே நொட்டை சொன்னவனாச்சே? ஏத்துக்கறது கஷ்டம் தான்




2 பிரம்மன் @ இடைவேளை.பிரமிக்க வைக்கவில்லை.ஆனாலும் மொக்கை இல்லை.சந்தானம் ஓரளவு காப்பாத்தறார்



3 டூயட் சீனில் விஜய் மாதிரி ரொமான்டிக்கா முகத்தை வெச்சுக்காம விஷால் மாதிரி விரைப்பா சசி ;-)(



4 பின் பாதியில் தாவணிக்கனவுகள் சாயல் தெரியுதே # பிரம்மன்.








சி பி கமெண்ட் பிரம்மன் - நேர்த்தியான முன் பாதி , சந்தானம் காமெடி,செயற்கையான,நம்ப முடியாத  பின் பாதி,

நச்  வசனம், 



ஆனந்தவிகடன் எதிர்பார்ப்பு மார்க் =42 , 

குமுதம்  ரேட்டிங்க் - ஓக்கே 



ரேட்டிங்க் 2.75/5


 ஏ செண்ட்டர் ,ல் சுமாராகவும் ,  பி செண்ட்டர், சி செண்ட்டர் களில்  இன்னும் சுமாராகவும் தான் ஓடும் 

ஈரோடு ராயலில் படம் பார்த்தேன் , ஓப்பனிங்க் பெரிய அளவில் இல்லை. முதல் ஷோவே 1200 சீட்ட்க்கு 560 பேர் தான்  இருந்தாங்க 



வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (21 2 .2014 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

1.பிரம்மன் -  படத்தில் சசிக்குமார் நண்பராக சுதீப்!
ராஜமௌலி இயக்கிய, ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்து பாராட்டு பெற்றவர் சுதீப். 


கன்னட நடிகரான இவர் தற்போது புதிதாக நேரடித் தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கமல்ஹாசன் உதவியானர் சாக்ரடீஸ் இயக்குனராக அறிமுகமாகும் இந்தப் படத்துக்கு பிரம்மன் என பெயரிடப்பட்டுள்ளது. சசிகுமார் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருடன் இணைந்து லாவண்யா திரிபாதி, சந்தானம், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 


கே.மஞ்சு தயாரிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு கோவையில் 17 நாட்கள் நடைபெற்றது. படத்தில் முக்கிய வேடத்தில் சுதீப் நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தனர். இதனை படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் கே. மஞ்சுவிடம் கூறியிருக்கிறார். மஞ்சுவும் சுதீப்பும் நண்பர்கள் என்பதால் கதையை கேட்ட சுதீப் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். 


‘நான் ஈ படத்துக்குப் பிறகு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்த போதிலும் தமிழில் நடிக்க மறுத்து வந்தவர், இக்கதையைக் கேட்டவுடன் நடிக்க சம்மதித்திருப்பது கதையின் முக்கியத்துவத்தை காட்டுகிறது’ என்று படக்குழுவினர் தெரிவித்தனர். இப்படத்தில் சசிக்குமார் நண்பராக சுதீப் நடிப்பதால் ரொம்பவே உற்சாகமாக இருக்கிறாராம். சென்னையில் இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் முதல் முறையாக தமிழில் தயாரிக்கும் படத்துக்கு பிரம்மன் என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். சந்தானம் அவருடன் முதல் முறையாக இணைகிறார். தயாரிப்பாளராக லட்சுமி மஞ்சு இதுதான் முதல் தமிழ்ப் படம் என்றாலும், அவர் பல்வேறு வெற்றிப் படங்களை தெலுங்கில் தயாரித்துள்ளார். தெலுங்கில் லட்சுமி மஞ்சு தயாரித்துள்ள குண்டெல்லோ கோடாரி என்ற படம் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. 



ஆதி, டாப்ஸி, லட்சுமி மஞ்சு நடித்துள்ள இப்படம் தமிழில் 'மறந்தேன் மன்னித்தேன்' என்ற பெயரில் விரைவில் வரவிருக்கிறது. இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த வெற்றி களிப்போடு தமிழில் நேரடிப் படம் பண்ணுகிறார் லட்சுமி. பிரம்மன் என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தினை கமல்ஹாஸன், மெளலி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சாக்ரடீஸ் இயக்குகிறார். 


ஈரோடு ராயல், ஆனூர், அன்னபூரணி யில்  ரிலீஸ்

பிரம்மன் - சினிமா விமர்சனம்- http://www.adrasaka.com/2014/02/blog-post_3664.html


2 ஆஹா கல்யாணம்  பிரபல இந்திப்பட நிறுவனமான யாஷ் சோப்ரா நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படம் 'ஆஹா கல்யாணம்'. 


இதில் நானி ஹீரோவாக நடிக்க, வாணி கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். சிம்ரன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். விஷ்ணுவர்தனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கோகுல் கிருஷ்ணா, இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தரண் இசையில், கார்கியின் வரிகளில் படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளன. திருமண ஏற்பாடு செய்யும் நிறுவனம் நடத்தும் இருவருக்கு இடையில் வரும் காதலை கலகலப்பாக சொல்லும் படம்.


படத்தின் இயக்குனர் கோகுல் கிருஷ்ணா, தனது முதல் பட அனுபவத்தைப் பற்றி கூறுகையில், " இந்த படத்தின் மேல் எனக்கு உள்ள காதல் இது என்னுடைய முதல் படம் என்பதால் மட்டுமல்ல. படத்தின் தரமும், இந்தியாவின் மிக சிறந்த காதல் படமான ‘ பேண்ட் பஜா பராட்‘ படத்தை தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்ப மாற்றி வழங்கி உள்ளேன் என்ற பெருமையும் தான்.



படத்தின் முதல் பிரதியை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். சக்தியாக நாணியும், ஸ்ருதியாக வாணியும் கலக்கி இருக்கிறார்கள். காட்சிக்கு காட்சி திரையில் இவர்களில் இளமை குறும்பு கொப்பளித்து கொண்டே இருக்கும். எந்த ஒரு காதல் கதையின் வெற்றிக்கும் இளமையான நல்ல நாயக, நாயகி, இனிமையான இசை, கண்ணை கவரும் காட்சி அமைப்பு, மற்றும் இளமையான பாடல் வரிகள் அடிப்படை உத்திரவாதம். இந்த அனைத்து அம்சங்களும் அமைய பெற்ற இந்த படத்தை இயக்குவது எனது அதிர்ஷ்டமே. எங்களது ஒட்டு மொத்த குழுவுக்கும் சராசரி வயது 26க்கு மேல் இருக்காது.



அதனால் மட்டுமே எங்களால் இந்த காதலர் மாதத்தில் காதலர்களை மட்டுமல்ல எல்லோரையும் கவரும் படம் வழங்க முடிகிறது. இதற்ககு எல்லாம் மேல், என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு படம் வாய்பளித்த ‘ யாஷ் ராஜ் films ‘ நிறுவனத்தினர், படத்தை பார்த்து பாராட்டியதுதான் எனக்கு கிடைத்த மாபெரும் வரம். புதிய இயக்குனரான நான் வெற்றி பெற்றால் பல்வேறு புதிய இயக்குனர்களுக்கும் வாய்ப்புகள் பெருகும் என்பதால் என் பொறுப்புணர்ச்சியும் அதிகமாகிறது என்றார்.



ஈரோடு தேவி அபிராமியில் மட்டும் ரிலீஸ் 



3 வெண்மேகம் - இரட்டை சகோதரர்கள் ராம் மற்றும் லட்சுமணன் இயக்கிய ‘வெண்மேகம்’ திரைப்படம் வருகிற 21–ந் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது. வெண்மேகம் படம் குறித்து இயக்குனர்கள் ராம் – லட்சுமணன் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

வெண்மேகம் படம் குடும்பபாங்கான, காமெடி மற்றும் திரில்லர் ஆக்ஷன் நிறைந்த சினிமா ஆகும். இந்த படம் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பிடிக்கும். இந்த படத்தில் மைனா பட விதார்த் கதாநாயகனாகவும், பிரபல மாடல் அழகி இஷாரா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் பள்ளி மாணவியான ஜெயஸ்ரீ சிவதாஸ், முன்னணி காமெடி நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தில் தாய் – மகளுக்கு இடையேயான உறவை ஆழமாக வெளிப்படுத்தி உள்ளோம்.

படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மிகபிரமாண்டமாக வெளிவந்துள்ளன. படத்தில் கோவை தனபால் எழுதியுள்ள பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. படத்தின் முடிவில் படத்திற்கு வெண்மேகம் என ஏன் பெயர் வைத்துள்ளோம் என்பதை ரசிகர்களே தெரிந்து கொள்வார்கள்.


ஈரோடு சங்கீதா  வில் ரிலீஸ் 




4   நிலா காய்கிறது -இந்தப்படத்தைப்பத்தி  பூர்வீகம் எதும்  தெரியல . உத்தேசமா , பார்க்கும்போதும் ஸ்டில்ஸ் ஹீரோயின் தேகத்தைப்பார்க்கும் போதும் இது சீன் இல்லாத  சீன் பட கேட்டகிரி என அப்ராக்சிமேட்டா அவதானிக்கிறேன் . ஈரோட்டில்  ரிலீஸ் இல்லை  ( பகுத்தறிவுக்குப்பேர் போன ஊர்யா . சீன் இருந்தாதான்  ரிலீஸ் ஆகும் )


5 POMBEII - எரியும் எரிமலையின் பின்னணியில் ஒரு காதலை சொல்லும் படமாக ஹாலிவுட்டில் உருவாகி உள்ளது பாம்பய். கிட் ஹரிங்டன், கேரி அன்னீ நடித்துள்ள இந்தப் படத்தை பால் டபிள்யூ.எஸ்.ஆண்டர்சன் டைரக்ட் செய்துள்ளார்.  பிப்ரவரி 21ந் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது.  3டி தொழில்நுட்பத்திலும் ரிலீசாகிறது.


ஈரோடு வி எஸ் பி யில்  ரிலிஸ்


அலட்சியம்தான் அழகிகளின் வாழ்வின் அழகியல் எனில்

1நஸ்ரியாவின் இந்நாள் மாப்பிள்ளை ஆன்ட்ரியாவின் முன்னாள் காதலர்.அப்போ அனிரூத் ஆன்ட்ரியாவின் முன்னாள் காதலருக்கு ஜூனியரா? குழப்பமா இருக்கே ?



=================


2எந்த வித முன்னறிவுப்பும் இன்றி திடீர் எனத்திருமணம் செய்ய முடிவெடுத்த நஸ்ரியா மீது 420 கேஸ் பதிவு செய்ய ரசிகர்கள் முடிவு#சும்மா


===============



3நிச்சயதார்த்தம் நடந்தது எனக்கல்ல.அது என் டூப்.நஸ்ரியா அதிரடி அறிவிப்பு .ஆன்ட்ரியா மகிழ்ச்சி.அனிரூத் திகைப்பு.ரசிகர்கள் களிப்பு



===================



4நாடு முழுவதும் புல்லட் ரெயில் பாதை: நரேந்திர மோடியின் கனவு திட்டங்கள்... # புல்லட் பைக்லயே தண்டவாளத்தில் போலாமா? ஐ ஜாலி




====================



5இன்றைய அதிர்ச்சி செய்தி 1 நையாண்டி நஸ்ரியாவுக்கு திருமணம் நிச்சயம் ஆனது 2 ஆண்ட்ரியாவின் முன்னாள் காதலர் தான் நஸ்ரியாவின் இந்நாள் மணாளன்



=================



6தெப்பத்தேர் விழாவில் வாணவேடிக்கை பட்டாசுக்காக கோயில் நிர்வாகம் ஒதுக்கிய 5 லட்சம் ரூபாயை 20,000 பேருக்கு அன்னதானம் செய்திருக்கலாம்


=================



7ஜில்லா 100 கோடி கலெக்சன் டார்கெட்டை அச்சீவ் பண்ணிடும்னு ஜில்லா ல யார் சொன்னாலும் நம்பிடாதீங்க ;-))))



=================



8மிசஸ் சசிதரூர் ( சுனந்தா)தான் இந்தியாவில் முதல் முறையாக தன் ட்வீட்சையே மரண வாக்குமூலமாக போலீசை எடுக்க வைத்த முதல் பெண் ட்வீட்டர்



===================



9தரையில் ஓடும் தேரை இழுக்க ஜில்லா வில் எல்லாரும் ரெடியா இருப்பாங்க.ஆனா குளத்தில் ஓடும் தெப்பத்தேரை இழுக்க நீச்சல் தெரிந்த வீரம் தேவை


==================


10கழக ஆட்சியிலே எந்த கனவுக்கன்னிக்கும் மணம் ஆனதில்லை.ஆக விட்டதில்லை.ஆனால் அம்மையார் ஆட்சியில் நஸ்ரியாவுக்கு கல்யாணமாம்.உடன்பிறப்பே!



====================


11ஓ வரா பிலிம் காட்டும் ஓவர் கான்பிடன்ஸ் ஓமனாக்களுக்கு சராசரிக்கும் கீழ் பர்சனாலிட்டி ஆள் ஜோடியாக ஆகும்போது ஏற்படும் ஆத்ம திருப்தி ஆகா!



====================



12டீ வித்தவரைக்கண்டு காங்கிரஸ்க்கு கலக்கம் ,சும்மா டீ குடிச்ட்டு போஸ் குடுத்தவரைக்கண்டு தமிழ் நாட்ல சிலருக்கு கலக்கம் # என்ன நான் சொல்றது?



=================


13கொசு வலையைக்கட்டிட்டு கொ்ஞ்சம் கேப் விட்டா வெளில இருக்கும் கொசுக்கள் ஆர்வமா உள்ளே வரும்.டக் னு நாம வெளில வந்துடனும்் # டிப்ஸ்



===============


14நீ என்னை அவமானப்படுத்துகிறாய் அலட்சியப்படுத்துகிறாய். இருந்தாலும் என் மனசை மகிழ்ச்சிப்படுத்துகிறாய் காரணம்என்கண்ணுக்கு நீதான் ஐஸ்வர்யாராய்



===================



15ஏனக்காக உன் ஒப்பனையில் கொஞ்சம் மெனக்கெட்டாய்! என்னைக்கொஞ்ச வருகையில் உன் உதடுகள் இரண்டும் பஞ்சு மிட்டாய்!




===============


16அலட்சியம்தான் அழகிகளின் வாழ்வின் அழகியல் எனில் அவர்களை விட்டு விலகியல் தான் நம் லட்சியம்


===================



17ஒரு பெண்ணின் வாழ்வில் முதல் காதலனாக இருப்பது அரிது.அதனினும் பெரிது அவளின்.வாழ்நாள் முழுவதும் ஒரே காதலனாக இருப்பது


=================


1810 வது நாள் போஸ்டர் டிசைனில் ஜில்லா வீரத்தை முந்தியது




===============



19,,,திருமணம் ஆன பெண்ணின் முன் தின சந்தோசம் கூந்தலில் சூடி இருக்கும் பூ சொல்லும்




====================



20த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கிற்கு பரிசீலிக்கப்படும் ஹீரோக்கள் விக்ரம் .விஜய்.ஆனால் அதை பிரமாதமாகச்செய்ய தகுதி படைத்தவர்கள் கமல் ,அஜித்




===============




கிச்சன் கில் லேடி கேடிகள்

1.நம் அருகில் இருக்கையில் காதலியின் இதயம் நமதாகவும் நம்மை விட்டு விலகி இருக்கையில் வேறாகவுமாறி விடும் மர்மம் என்ன?


======================



2 எனக்கான நியாயங்கள் மறுக்கப்படும்போது சமூகத்தில் கோபத்துடன் போராடுவேன்.உன் மீதான உரிமைகள் உன்னால் மறுக்கப்படும்போது மவுனமாக மன்றாடுவேன்



===================



3 வாக்கிங் போற வழி ல வாசல்ல கோலம் போட்ட பிகரு டக்னு உள்ளே போய்டுச்சி.இவன் போன பின் வரலாம்னு.எதிர் வீட்டுத்திண்ணைல உக்காந்துட்டேன்



======================


4 கல்யாணமான பொண்ணுங்க எல்லாருமே ஆன்ட்டிகள் தான் னு தமிழன் தப்பா கணிச்சுட்டு இருக்கான்.35 வயசு ஆனா தான் ஆன்ட்டி


==================


5 இந்தப்பொண்ணுங்க எல்லாம் டக் டக் னு சிச்சுவேசனுக்குத்தகுந்தாப்டி வீடியோ லிங்க் ,போடறாங்க்ளே.அதுக்கு தனியா ஆள் வெச்சிருப்பாங்க்ளோ?


====================


6   கோலம் போட்ட பிகரோட அம்மா வெளில வந்துது.அய்யய்யோ என் ஸ்கூல் மேட்.ஓடிடுடா கைப்புள்ள ;-)))



==================


7 சந்தான லட்சுமியிடம்-ஏம்மா.உன் புருசன் உன்னை செல்லமா சந்தானம் னு கூப்புடுவார்ங்கறியே,அவருக்கு எப்டி மூடு வரும்.இந்தியா எப்டி வல்லரசு ஆகும்?



====================


8 உலகின் முதல் யூஸ் & த்ரோ டூத் பிரஸ் வேப்பங்குச்சி



==================


9 சில பொண்டாட்டிங்க = தோசை சுடவா? எனவும் சிலர் = தோசை சுட வா! எனவும் அழைக்கிறார்கள் # கிச்சன் கில் லேடி கேடிகள்



====================


10 பொதுவா ஆண்கள் இது எங்க வீடுன்னும் ,பொண்ணுங்க என் வீடுன்னும் சொல்லுவாங்க # நோட் பண்ணிப்பாருங்க



======================


11  ராஜூ முருகன் ன் குக்கூ பட விளம்பரம் தினமும் தினத்தந்தியில் 17 நாட்களா வருது. படம் ஊத்திக்கும்னு தோணுது



=====================


12 உலக ரேடியோ தினமான இன்று மேட்சுக்கு மேட்சா பஸ் ல எத்தனை பிகருங்க ரேடியோ பூ வெச்ட்டு வருதுனு பார்ப்போம்



===================


13 மக்கள் ரசனை மாறி வருகிறது என்பதை உணர்ந்தவன் ஜெயிக்கிறான்.தன் மேதா விலாசத்தைக்காட்ட நினைப்பவன் தோற்கிறான் # தமிழ் சினிமா



====================


14 சமூக வலைத்தளங்களில் எந்த பரிச்சயமும் இல்லாத ஒரு ஆண் திடீர் என தனக்கு நெருக்கமாக நினைப்பதை எந்தப்பெண்ணும் விரும்புவதில்லை



======================



15 பொண்ணுங்க நம்மை டேய் போட்டு கூப்பிட்டா அது செல்லத்துக்கு ,கிக் குக்கு ,நாம பொண்ணை டி போட்டுக்கூப்பிட்டா அது ஆணாதிக்கம்



==================


16 ரெகுலரா ஹேன்ட் பேக்கை நம்ம கிட்டே கொடுக்கும் பிகர் இன்னைக்கு மட்டும் தர்லைன்னா பின்னால செக்யூரிட்டி யாரோ இருக்காங்க னு அர்த்தம்



====================



17 பொண்டாட்டி வீட்டில் இருக்கும் எல்லோர்க்கும் தினம் தினம் மோதலர் தினம் தான் # எத்தன சண்ட



=======================


18  இந்த உலகத்தில் பிடிவாதம் பிடிக்கும் ஒரே ஒரு ஆண்மகனையாவது காட்டுங்களேன்.பார்த்துடுவோம்.பூரா பொம்பளைபுள்ளைங்கதான்



=========================



19 நீ எனக்கு எட்டாத உலக அதிசயம்.



==================


20 யாராவது அட்ரஸ் விசாரிக்கும்போது தனக்குத்தெரியலைன்னா அதை ஒத்துக்காம நேராப்போய் லெப்ட் திரும்புங்க என அடிச்சுவிடுபவன் தான் தமிழன்



=========================

Thursday, February 20, 2014

விடுதலைக்கு தடை !!!; வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை: - கோர்ட்

ராஜிவ் கொலையாளிகள் விடுதலைக்கு தடை ; வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை: கோர்ட்


புதுடில்லி: புதுடில்லி: ராஜிவ் கொலையாளிகள் விடுவிக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. ராஜிவ் கொலையாளிகள் 7பேர்களின் இது தொடர்பாக தமிழக அரசின் பதிலை 2 வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 



பிரிவு 432ன் படி குற்றவாளிகள் சிறையில் இருந்த காலம் அடிப்படையில் மாநில அரசு முடிவு செய்யலாம். என்ற சட்ட ரீதியான விஷயம் இன்று கோர்ட்டில் முக்கிய பிரச்னையாக இருந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு உரிய வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றும், இதனால் விடுதலைக்கு தடை விதிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். 



இந்த வழக்கு மத்திய அரசின் சி.பி.ஐ., விசாரித்த வழக்கு என்பதால் மாநில அரசு மத்திய அரசுடன் கலந்து பேசித்தான் முடிவு செய்ய முடியும். ஆனால் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்தது தவறானது என்றும் மத்திய அரசு மூலம் எடுத்துரைக்கப்பட்டது.

ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்வதில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வழக்கறிஞர் மோகன்பராசரன் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்தார். ராஜிவ் கொலையாளிகளை மாநில அரசு , மத்திய அரசை கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுத்துள்ளது. இதற்கு மாநில அரசுக்கு உரிமை கிடையாது. நீதி வழங்கும் உரிமை விஷயத்தில் தமிழக அரசு செயல்பாடு சரியல்ல. மனுவை ஏற்று கொண்ட நீதிபதிகள் மதியம் விசாரித்தனர்.

ராஜிவ் கொலையாளிகள் 3 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது மத்திய அரசையும் காங்கிரசையும் பெரும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தமிழக அரசின் முடிவிற்கு எதிராகவும், கடந்த 18 ம்தேதி சுப்ரீம் கோர்ட் விதித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரவும் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகும் என தெரிகிறது. இது தொடர்பாக முடிவு எடுப்பதற்கென பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை அவசரமாக கூடியது. இது குறித்து மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வாகனவதியிடம் அரசு சட்ட யோசனை கேட்டுள்ளது. மேலும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர்.

ராஜிவ் கொலை வழக்கில் மரணத்தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆகிய 3 பேர் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் தூக்கை ரத்து செய்து கடந்த 18ம் தேதி தீர்ப்பளித்தது. ஜனாதிபதியிடம் நிலுவையில் இருந்த கருணை மனு மீது முடிவு எடுப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தை ஏற்று இவர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக தீர்ப்பளித்தது. மேலும் இவர்கள் சிறையில் இருந்த காலத்தை கணக்கில் கொண்டு விடுதலை செய்வது குறித்து மத்திய , மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்தது.

இதனையடுத்து தீர்ப்பு வெளி வந்த மறுநாள் ( நேற்று) தமிழக அமைச்சரவை கூட்டத்தை ஜெ., அவசரமாக கூட்டினார். இதில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது என்று, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். மேலும் 3 நாட்களுக்குள் மத்திய அரசு உரிய பதில் அளிக்காவிட்டால் நாங்களே முடிவு எடுப்போம் என்றும் ஜெ., கெடு விதித்தார்.

இந்த தமிழக அரசின் முடிவு குறித்து கருத்து தெரிவித்த ராஜிவ்மகனான காங்., துணை தலைவர் ராகுல் கவலை தெரிவித்தார். ஒரு பிரதமரை கொன்றவர்களுக்கே இப்படி கருணை தெரிவித்து தண்டிக்காமல் விட்டு விட்டால் சாமானியமனிதனினுக்கு எப்படி நீதி கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் மத்திய அமைச்சரவை, மத்திய உள்துறை அதிகாரிகள், தலைமை வழக்கறிஞர்கள் ஆகியோர் டில்லியில் அவசர ஆலோசனை நடத்தி வனர். இதில் ராஜிவ் கொலையாளிகள் 3பேரை தப்பிக்க விடக்கூடாது என்பதற்கான சட்ட நடவடிக்கைகளில் மத்திய அரசு முழு அளவில் இறங்கியுள்ளது.

1991 மே 21: ஸ்ரீபெரும்புதூரில், தாணு எனும் மனித வெடிகுண்டால், ராஜிவ் கொலை.

1998 ஜன., 28: முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

1999 அக்., 17: தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி விண்ணப்பித்த கருணை மனு, கவர்னரால் நிராகரிப்பு.

2000 ஏப்., 26: தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி, ஜனாதிபதிக்கு கருணை மனு.

2011 ஆக., 26: ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், கருணை மனுவை நிராகரித்தார்.

2011 ஆக., 30: தூக்கு தண்டனையை ரத்து செய்யும்படி, சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம்.

2011 செப்., 9: மூவருக்கும் தூக்கு நிறைவேற்ற குறிக்கப்பட்ட தேதி. போராட்டம் மற்றும் சட்டசபை தீர்மானத்தால், தூக்கு தண்டனை நிறைவேறவில்லை.


readers views 


1. இரு பக்கமும் மாநிலம் மற்றும் மத்தியில் இந்த வழக்கு அரசியல் ஆக்கப்பட்டு விட்டது. இந்திய மக்கள் அனைவரும் காங்கிரஸ் அரசை வலுவாக ஒரு கேள்வி கேட்க வேண்டும். ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்தபின் உடனடியாக தூக்கு தண்டனை நிறைவேறாமல் இவ்வளவு கால தாமதம் செய்ததற்கு என்ன பின்னணி....? மற்றும் பிரதமரை கொலை செய்தவர்களை சுதந்திரமாக வெளியே உலவ விடுவது தவறுதான். இது ஒரு தவறான முன் உதாரணமாகும். ஆனால் ..இதே ராகுலின் சகோதரி பிரியங்கா வேலூர் சிறைக்கு வந்து நளினிக்கு ஆறுதல் சொல்லி சல்லாபம் செய்தது என்ன நாடகம். இவ்வளவு ஆண்டுகள் ஏனப்பா தண்டனை நிறைவேற வில்லை. இதற்கு சட்ட ரீதியான மழுப்பல்கள் வரும். பொது மக்கள் நம்ப வேண்டாம். இது அரசியல் விளையாட்டுக்கள். இதில் கொலையாளிகளுக்கு கொண்டாட்டம். கொல்லப்பட்ட பிரதமருக்கு நீதி கிடைக்க வில்லை. மக்கள் அனைவரும் முட்டாள்கள் ஆக்கப்படுகிறார்கள். 



 2 கருத்து Swadhi முதல்வர் எடுத்த முடிவை குறைகூறுபவர்கள் , ஒரு நிமிடம் யோசிக்க வேண்டும்.. இந்த ஏழு பேரையும் ஏதோ நேரடியாக கொலையில் ஈடுபட்டது போல தான் சித்தரித்து வருகின்றனர்.. இவர்கள் கொலையை ஏதோ வேடிக்கை பார்த்தவர்கள் போலதான்.. கொலையில் நேரடியாக ஈடுபட்டவர்கள் எல்லாம் சம்பவ இடத்திலேயும், சைநைடூ குப்பிகளை விழுங்கியும், குண்டடி பட்டும் இறந்துவிட்டனர்.. நடக்கபோவது கொலை என்றே தெரியாமல் உதவியவர்கள் தான் இவர்கள்... அதற்க்கு பல ஆண்டுகள் விசராணை கைதிகளாகவே சிறைவாசம் அனுபவித்துவிட்டனர்.. விசாரணை என்கிற பேரில் பல சொல்லோனா துயரத்துக்கு ஆளாகியும்விட்டனர்.. 23 ஆண்டுகள் சிறையிலேயே களித்துவிட்டனர்.. நீதி மன்றம் கேட்ட கேள்விகளுக்கு மத்திய அரசிடம் தெளிவான பதில் இல்லை.. ஏன் பிரதிபா பாட்டில் கருணை மனுவை காலதாமதமாக பரிசிலித்தார். கோபித்து கொள்பவர்கள் மத்திய சட்ட அமைச்சகத்திடமும், உள்துறை அமைச்சகத்திடமும் , பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் மீது தான் கோபித்து கொள்ள வேண்டும்.


. அவர்கள் தான் நீதி மன்றம் கேட்ட கேள்வி கணைகளுக்கு திருப்தியான பதில் அளிக்கவில்லை.. முதல்வரை கோபித்து கொள்பவர்கள் , இந்த முடிவை ஆதரித்த கலைஞர்,வைகோ, ராமதாஸ்,திருமா போன்றோர்களையும் எதிர்த்து அறிக்கை விட வேண்டியது தானே காங்கிரஸ்... ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த நேர்மையான பல அதிகாரிகளே , ராஜீவ் கொலையில் அவிழ்க்க முடியாத பல மர்ம முடிசுகள் இருப்பதாக தெளிவாக தெரிவித்து உள்ளனர்.. இந்த ஏழு பெரும் செய்த குற்றத்திற்காக 23 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விட்டனர்.. இது போதாது என்று தங்கள் ரெத்த உறவுகளை சசன்யா,வவுனியா, முல்லைத்தீவு,ஆனியறிவு,திரிகோணமலை என்று ஒன்றரை லட்சத்திற்கு மேல் இழந்துவிட்டனர்.. இன்னும் என்ன தான் வேண்டும் மத்திய அரசுக்கு.. ஒரு கொலைக்காக 23 ஆண்டுகள் மௌன அஞ்சலி செலுத்திய ஒரே இனம் நம் தமிழ் இனமாக தான் இருக்கும்.



3 ராஜீவ் மரணதிருக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய சொல்லி கேட்க்கும் மத்திய அரசு இந்திரா காந்தி கொலைவழக்கில் பல குற்றவாளிகள் தப்பித்திருக்கலாம் அவற்றையும் மறு ஆய்வுக்கு நீதிமன்றம் எடுத்துக்கொள்ளவேண்டும் 




4  யோவ் வந்துடிங்கலழ் பெரிய சட்ட மேதை மாறி.ஏற்கனவே 20 வருஷம் ஜெயில் ல இருந்துதாங்க,அப்புறம் இவர்களுக்கு நேரடிய தொடர்பு இல்லன்னு வேற சொல்றாங்க.Atleast,இது நடந்ததுகான background தெரியாம,ஒரு தமிழன் என்ற அடிப்படை உணர்வு இல்லாம பேசாதிங்க.இலங்கை தமிழ்மக்களை,போராளிகளை india தன்னுடைய சுய லாபத்திற்காக,உருவாக்கி கொன்னுடாங்க.இப்போ சொல்லுங்க,தப்பு யார் மேல.பண்ணாத உருபுடிய,முழுமையா பன்னிர்கனும்,இப்டி பாதில உட்ட அப்டி தான் ஆகும்.எல்லாரும் சொல்ரிங்கல,அடிகடி தீவிரவாதம் இரு முனை கத்தி மாறி.இப்டி வர news ku ஏற்ற மாறி கமெண்ட் போடாம,உங்க சிறு மூளைய use பண்ணுங்க. 


thanx - dinamalar 

நாட்டின் பிரதமரையே கொன்றவர்களை விடுவிப்பதா?- தமிழக அரசின் முடிவு பற்றி ராகுல் வேதனை




ராகுல் காந்தி |
 
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்துள்ள முடிவு வேதனை தருவதாக அவரது மகனும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 



எனினும், மரண தண்டனையை தான் ஆதரிக்கவில்லை என்றும் அவர் சொன்னார். 


ஜெகதீஷ்பூரில் உள்ள புராவ் கிராமத்தில் புதன்கிழமை உரையாற்றும்போது தமிழக அரசு எடுத்துள்ள முடிவு பற்றி உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது: 



மக்களின் உரிமைகளுக்காக பாடுபட்டவர் எனது தந்தை.அவரது கொலைக்கு காரணமான குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று செய்தி கேட்டு நான் வேதனைப்படுகிறேன். 



நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ஒரு பிரதமருக்கே நீதி கிடைக்கவில்லை என்றால் சாமானியனுக்கு எப்படி நீதி கிடைக்கும். இது எனது இதயத்திலிருந்து ஒலிக்கும் குரல். 


பிரதமரை யாரோ ஒருவர் கொல்கிறார். அவர் விடுதலை செய்யப்படுகிறார் என்றால் ஒரு சாமானியனுக்கு எப்படி நீதி கிடைக்கும். இதுபற்றி நன்கு சிந்திக்க வேண்டும். மரண தண்டனை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அது எனது தந்தையை மீண்டும் கொண்டு வரப்போவதில்லை. 


அதே வேளையில், இந்த விவகாரம் எனது தந்தை சம்பந்தப்பட்டது மட்டும் சார்ந்தது அல்ல. நாடு சார்ந்த விவகாரம் ஆகும் என்றார் ராகுல் காந்தி. 

ஜெயலலிதாவுக்கு சட்டம் தெரியாது: சுப்பிரமணியன் சுவாமி




ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது என்ற தமிழக அரசின் முடிவை, பாஜக தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார். 


இது தொடர்பாக வதோதராவில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறும்போது, "ஜெயலலிதா ஒரு சினிமா நடிகை. அவருக்கு சட்டங்கள் தெரியாது. சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றி கவலைப்படாமல், அவர் இப்படி முடிவெடுத்திருக்கிறார். 



ஜெயலலிதா இத்தகைய முடிவை எடுப்பதைத் தடுப்பதற்கு, மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேவை எனில், அவர் மீது நடவடிக்கையும் மேற்கொள்ளலாம்" என்றார் சுப்பிரமணியன் சுவாமி. 


இதனிடையே, பாஜகவின் மற்றொரு தலைவரான ஷானவாஸ் ஹுசைன் கூறும்போது, "தமிழக அரசு இந்த விவகாரத்தில் பல்வெறு தவறுகளைச் செய்துவிட்டது. இது மிகவும் முக்கியமான விவகாரம் என்பதுடன், இது தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மக்களுக்கு நீதித் துறை மீது நம்பிக்கை உள்ளது. அனைவருக்குமே சமமான நீதி கிடைக்க வேண்டும்" என்றார். 



அதேவேளையில், "தமிழக அரசின் முடிவில் நான் எந்தத் தவறையும் பார்க்கவில்லை. இது கட்சியின் முடிவு அல்ல; தமிழக அரசின் முடிவு. இது அரசியலும் அல்ல. இதை அரசியல் விவகாரமாக நான் பார்க்கவில்லை. 



இது, சட்ட அமைப்பு விவகாரம். தூக்கு தண்டனையை ஆயுளாக குறைத்த உச்ச நீதிமன்றம், மாநில அரசு விரும்பினால், அவர்களை விடுதலை செய்யலாம் என்று சொல்லியிருக்கிறது" என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா.

 thanx  - the tamil hindu




மணிமேகலையுடன் MONEY மேக்கிங் கலை.

1. ஊழல் எதிர்ப்பு பற்றிப் பேச கெஜ்ரிவாலுக்கு மன் மோகன் சிங் ு அழைப்பு. # pm = கை யை எதிர்க்காதீங்க . cm = கறை படிஞ்ச கை நல்லதில்லை




=======================


2 கேப்டன் - மன்மோகன்சிங் விரைவில் சந்திப்பு #பிரதமர் - நமஸ்கார் ஜி . கேப்டன் - கார் ல வர்லைங்க.ரயில் ல தான் வந்தேன்




======================



3 காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விஜய்காந்த் திட்டம்? 14ம் தேதி பிரதமருடன் சந்திப்பு
# வருங்காலப்பிரதமர் கூட சேருவார்னு பார்த்தா !!!


=====================



4 பீரில் ஆணி…..அதிர்ந்த குடி”மகன்”…..டாஸ்மாக்குக்கு அபராதம் # ஆணி போனா ஆவனி ,நீ பாருக்குப்போனா நல்லா கவனி




=========================



5 மதம் மாறச் சொல்லும் கணவரை விவாகரத்து செய்யப் போகிறேன்: நடிகை ஷர்மிளா # இஷ்டப்படி இல்லை எல்லாம் சட்டப்படி ஏன்னா ஷர்மிLAW




==========================



6 திருச்சி மாநாட்டுக்கு வருபவர்கள் பாதுகாப்போடு வரவேண்டும்-கலைஞர்.# என்ன தலைவரே..? போலீஸ் கைல காப்போட காத்திருப்பாங்களா?




=======================



7 தமிழகத்தில் நடப்பது ஜெ வின் ‘வெத்து அனவுன்ஸ்மெண்ட்’ ஆட்சி: ஸ்டாலின் # நம்ம ஆட்சில (குற்றம்) நடந்தது என்ன தலைவரே?்




==========================



8 ஃபேஸ்புக் ஆபீஸுக்கு விசிட் அடித்த முதல் தென்னிந்திய நடிகர் விஜய் # என்னை கலாய்ச்சு யார் என்ன ஸ்டேடஸ் போட்டாலும் அதை வெளியிடாதீங்கன்னாரா?




=================




9 2014 தனிநபர் வருமானம் 10.4 சதவிகிதம் உயரும்!!! # எவ்ளவ் உயர்ந்தாலும் பொண்டாட்டி புடுங்கிக்குவாளே!




=========================




10 த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்க ரூ. 20 கோடி வாங்கும் கமல் ஹாஸன் # கதை உரிமைக்கு 50 லட்சம் கூட குடுத்திருக்கமாட்டானே தமிழன்



==================


11 கொள்ளையடித்த வீட்டில் குட்டித் தூக்கம். போலீசில் சிக்கிய திருடன் # கொள்ளை அடிச்சதை விட பெரிய தப்பு.குட்டி இருந்தும் தூங்குனது



=====================



12 குடிபோதையில் பெப்சி உறுப்பினர்கள் பத்திரிகையாளர்களுடன் மோதல்! # தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்.சரக்கு அடிச்சவரெல்லாம் கேப்டன்



========================



13 அமெரிக்காவில் மீண்டும் புயலைக் கிளப்பும் மோனிகா லெவின்ஸ்கி! # எந்த புயலை யார் கிளப்பினாலும் ஏதாவது ஆதாரம் காட்டுங்க


========================



14 சென்னை ஐகோர்ட்டில் பணியாற்ற பிற மாநில நீதிபதிகள் தயங்குகிறார்கள்: தலைமை நீதிபதி பேச்சு..# பயம் போகட்டும,ஜெ யம் உண்டாகட்டும்்



=====================


15 கோலி சோடா படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி! # படம் ஹிட்டா? இல்லையா?,னு குழப்பம் இருந்துச்சு.இப்போ க்ளியர் ஆகிடுச்சு




=====================


16 விஜயகாந்த் நடிக்காதது எங்களுக்கு இழப்புதான்! - ஒரு புதுமுக இயக்குநரின் ஆதங்கம் # அரசியல்ல தான் செம நடிப்பு.ஊழல் எதிர்ப்பு மாநாடுல



====================


17 நாங்கள்தான் ‘டிரென்ட் செட்டர்’ ஆக இருப்போம்: கார்த்திக் பேட்டி # ஆளே இல்லாத கடைல டீ ஆத்துவதில் ட்ரென்ட் செட்டர்



===================



17 சோனியா காந்தியின் முதுகில் குத்தியவர்-சரத்பவார்: கே.வி.தாமஸ் ..# ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் முதுகில் குத்தியவர் முதுகிலேயே இவர் ?


====================



18 சோனியாகாந்தியுடன் கனிமொழி எம்.பி. திடீர் சந்திப்பு..# மணிமேகலையுடன் MONEY மேக்கிங் கலை.



====================


19 திருமணமாகி 50 வருடம் சேர்ந்து வாழும் ஜோடிகளைக் கௌரவித்து விருது வழங்கும் போலந்து.#சகிப்புத்தன்மைக்குப்பரிசு



===================



20 நாளை காதலர் தினம்: பெண்களை கிண்டல் செய்தால் நடவடிக்கை - மாமல்லபுரத்தில் போலீஸ் குவிப்பு..# ஆமா.போனமா வேடிக்கை பாத்தமானு இருக்கனும்



======================