Tuesday, July 23, 2013

லக்னௌவின் சாப்பாட்டு ராமன்கள்!




லக்னௌவின் சாப்பாட்டு ராமன்கள்!


இந்தியா ஒரு சுவையான சாப்பாட்டு தேசம். ஒவ்வொரு மாநில உணவுக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு. ஒரு மாநிலத்துக்குள்ளேயும் கூட, ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான சுவை கொண்ட உணவு பிரபலம். இந்த வரிசையில்ஆவாத்என அழைக்கப்படும் உத்தரப்பிரதேசத்தின் லக்னௌ பகுதியின் உணவானது, ஸ்பெஷல் ருசியும், மணமும் கொண்டது" என்கிறார் லக்னௌ நகரத்தைச் சேர்ந்தஆவாத்உணவு நிபுணரான அப்துல் ஹலீம்.
இவருடைய முன்னோர்கள் லக்னௌ நவாப்களின் அரண்மனை சமையற்கூடத்தில் பணியாற்றியவர்கள். லக்னௌவாசியானஆவாத்உணவு ஸ்பெஷலிஸ்ட் ஹலீமுடன் ஒரு ருசிகரமான சந்திப்பு:
லக்னௌவை ஆண்ட நவாபுகள் உணவுப் பிரியர்கள். வகை, வகையான ருசியான விருந்து என்பது அவர்களின் அன்றாட வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. அரண்மனையின் சமையல் கூடம் பிரம்மாண்டமானது. அங்கே நூற்றுக்கணக்கான சமையல்காரர்கள் வேலை செய்வார்கள். முக்கியமான உணவு ஐட்டங்களை செவதற்கு ஸ்பெஷலான சமையல் காரர்கள் உண்டு. நவாபின் சமையல்கூடத்தில் முந்திரி, பாதாம் என்று 120 விதமான பொருட்கள் இருக்குமாம்.

லக்னௌ நவாப்களின் உணவுப் பழக்கம் பற்றி பல கதைகள் சொல்லுவார்கள்.
ஆவாத் சமையலின் சிறப்பே அது மிகவும் நிதானமான சமையல் என்பதுதான். பெரிய பாத்திரத்தின் கீழேயும், அதன் மூடியின் மேலாகவும் மிதமான தணல் பயன்படுத்தி நீண்ட நேரம் சமையல் செய்வார்கள். இதனால், சமைக்கப்படும் அசைவ உணவு நன்றாக வெந்து, ஊறி, ருசியை அதிகரிக்கும். இப்படி சமைக்கப்படும் உணவு வெகு நேரம் சூடாக இருக்கும். மேலும், பாலைப் பயன்படுத்தி விதம் விதமான பானங்களைத் தயாரிப்பார்கள். ஷர்பத்களும் நவாப்களுக்கு மிகவும் பிடித்தமானது.
லக்னௌ நவாப்கள் உணவு பற்றிய ஆழ்ந்த அறிவு பெற்றவர்களாக இருந்தார்கள். ஒரு முறை ஒரு நவாப், லக்னௌவின் புகழ்பெற்ற உணவகத்திலிருந்து கபாப் வாங்கிக்கொண்டு வரச் சொன்னார். அதை ரசித்துச் சாப்பிட்ட நவாப் கொஞ்சம் தங்கக் காசுகளை அள்ளிக் கொடுத்து, நவாபின் அன்பளிப்பாக இந்தப் காசுகளை அந்த கடைக்காரருக்குக் கொடுங்கள்! இதில் பாதியை அவர் எடுத்துக் கொண்டு மீதியில் கபாப் தயாரிக்க புதிதாக வேண்டிய அடுப்பு மற்றும் உபகரணங்களை வாங்கிக் கொள்ளச் சொல்லுங்கள்" என்று சொன்னாராம். காரணம், அந்த ஓட்டலின் உணவு ருசியாக இருந்தாலும், அது தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பல வருட பழசு என்பதை அவர் ருசியிலிருந்தே கண்டுபிடித்து விட்டாராம்!

ஒருநாள் அரண்மனை சமையல் கூடத்தில் தயாரிக்கும் சமையல்காரர் ஒருவர் அன்று ஸ்வீட் செய்வதற்கான மாவு, சர்க்கரை மற்றும் இதர பொருட்களை, அரண்மனை சமையல் முறைப்படி அளந்து எடுத்து வைத்திருந்தார். அந்த நேரத்தில் பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பிய அந்த சமையல்காரரின் மகன் அப்பாவிடம்பசிக்கிறதுஎன்று சொல்ல, சமையல்காரர், உடனே அங்கே அளவுப்படி வைக்கப்பட்டு இருந்த சர்க்கரை, மாவு இரண்டிலிருந்தும் கொஞ்சம் எடுத்து அவசரம் அவசரமாக ஏதோ ஒரு ஐட்டம் செய்து, மகனுக்குக் கொடுக்க, அவன் சாப்பிட்டுப் பசி ஆறினான். அன்று மீதி இருந்த பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்பட்ட ஸ்வீட்டை சாப்பிட்ட நவாப், ஸ்வீட்டில் ஏன் மாவும், சர்க்கரையும் குறைவாக இருக்கிறது?" என்று கேட்ட அடுத்த நிமிடம் அந்த ஸ்வீட்டை செய்த சமையல்காரர் நவாபின் முன் ஆஜரானார். தன் மகனுக்கு பசியாற கொஞ்சம் மாவும், சர்க்கரையும் எடுத்ததைச் சொல்லி, மன்னிப்புக் கேட்க, நவாப், ‘குழந்தைக்குப் பசித்தால், எதுவேண்டுமானாலும் செய்து கொடு. ஆனால், சமைப்பதற்காக அளந்து எடுத்து வைக்கப்பட்ட பொருட்களிலிருந்து எடுக்காதேஎன்று அறிவுரை சொல்லி தண்டிக்காமல் அனுப்பி வைத்ததாகவும் ஒரு கதை சொல்வார்கள்.
நவாப்கள் தினமும் விருந்து சாப்பிட்ட பிறகு, பான் பீடா போடுவது வழக்கம். நவாபுக்கு பீடா தயாரித்துக் கொடுப்பதற்கென்றே ஒரு ஆள் இருப்பார். ஒரு நாள் அந்த ஆள், மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். அவரை மருத்துவரிடம் கொண்டு சென்றார்கள் அவரைப் பரிசோதித்த அரண்மனை மருத்துவர், ‘இவர் நவாப் போடுகிற பானை போட்டுக் கொண்டதால், மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்என்றுசொல்லி, மருத்து கொடுத்தாராம். அதெப்படி பான் போட்டால் மயக்கம் வரும்? லக்னௌ நவாப்கள் உண்ணும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவு செரிக்க தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களை மிக நுண்ணிய அளவில் பான் பீடாவில் சேர்ப்பார்ளாம். சாமானிய மக்களின் சாப்பாட்டை சாப்பிடும் பான் காரர் நவாப் போடும் பீடாவை சாப்பிட்டதும், ஏடாகூடமாகி விட்டது!



நன்றி-மங்கயர்மலர்

Monday, July 22, 2013

காதலி ஓட்டைவாயா அமைஞ்சா என்ன ஒரு சவுகர்யம்னா......

1. உன் சமீபம் எனக்கு சரிகமபதநி.உன் ஸ்பரிசம் எனக்கு கோடையில் பாலையில் கிடைத்த இளநி



------------------------------


2. புருஷ்ன் பொண்டாட்டி 2 பேரும் ஒரே பிரான்ட் ் சென்ட் (PERFUME) போட்டுக்கிட்டா அவங்க 2 பேரும் மணம் ஒத்த தம்பதியா?



----------------------


3. பொண்டாட்டிக்கு டெய்லி பூ வாங்கிக்கொடுத்து ,வாரம் ஒரு சாரி வாங்கிக்கொடுத்தா அவன் பொண்டாட்டியால் பூஜிக்கப்படும் பூ சாரி ஆகிடுவான்



-------------------------


4. ஸ் வீட் வாய்ஸ் வேணும்னா டெய்லி ஸ்வீட் சாப்பிடனுமா? வாய் நிறைய ஸ்வீட் இருந்தா அது ஸ்வீட் வாய் ஸ்?


----------------------


5. உன் தரிசனம் கிடைக்க பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்கிறது.உன் கரிசனம் கிடைக்க லட்சுமி கடாட்சம் பெற வேண்டி இருக்கிறது



------------------------


6. கெளதம், முருகதாஸை விட ஹரியுடன் வேலை பார்ப்பது வசதியாக இருக்கு: சூர்யா # எங்களுக்கு அசதியா இருக்கு.காது வலிக்குது



------------------------


7. குழப்பமாய் இருக்கிறேன் என்றாள்.பயமாய் இருக்கிறது.அன்பாய் இருப்பாய் தானே என்றாள்.நம் இருவருக்கும் ஒரு பாய் என்றேன்


----------------------


8.திமுகவுக்கும் காங்கிரஸ்க்கும் கூட்டணி இல்லை-ஸ்டாலின் # ஆர்யாவுக்கும் எனக்கும் இடையே 1ம் இல்லை - நயன் தாரா


-----------------------


9. உன் உதட்டை என் உதட்டால் தொட்டபோதுதான் இன்று உலக சாக்லெட் தினம் என்பதே நினைவு வருகிறது



-----------------------------

10. மனசுக்குபிடித்தவரை தேடிக் கொண்டிருக்கிறேன் - அசின் பேட்டி # பணம் படைத்த தொழில் அதிபரை னு சொல்லுங்க



---------------------------


11. செல்வா காதலிச்சா காதலி குழப்பிடுவா - செல் வா



--------------------


12 பிரம்மச்சாரிகள் அனைவரும் தனிக்COTடு ராஜாக்களே


---------------------


13. இடியே ஆனாலும் தாங்கிக்கொள்ளும் இதயம் உன் அப்பாவின் அடி தாங்க முடியலையே



--------------------

14 இளவரசன் மரணத்துக்கும், பா.ம.க.வுக்கும் தொடர்பில்லை- அன்புமணி # அதாவது நேரடியான தொடர்பில்லை.




-----------------------


15  . லிங்குசாமியின் புதிய படத்தில் சூர்யா டாக்டரா வர்றார் # அடித்தொண்டைல சவுன்ட் குடுக்க முடியாதே.அடடா



--------------------------


16. ஸீ யூ லேட்டர்  = உன்னை லேட்டா சந்திக்கறேன் # லேட் பிக்கப் லேகா வின் சபாஷ் துபாஷ்








---------------------------




17. தனிமையில் இருக்கும்போது  “ஊர்ல கூட்டமே வராத தியேட்டர் எது?ன்னு” சிந்திச்சுட்டு இருக்கறவன் கண்டிப்பா காதலனாத்தானிருப்பான்




----------------------------




18. பொண்ணுங்க என்ன பேசினாலும், எவ்வளவு தெளிவா பேசினாலும் “ புரியலை , என்ன சொல்றீங்கன்னுதெரியலை”ன்னு சொல்லிட்டிருந்தா ஜவ்வு இழுப்பு இழுக்கலாம்






--------------------------




19. இன்று: அனைத்துலக சதுரங்க நாள். அதனால  எல்லாரும் செஸ் மட்டும் விளையாடுங்க # மழை வேற வந்துட்டு இருக்கு ;-))






------------------------------




20. காதலி ஓட்டைவாயா அமைஞ்சா ஒரு சவுகர்யம், காதலன் பிளம்ப்பரா மாறி அடிக்கடி லிப் கிஸ் அடிச்சுக்கலாம்

Sunday, July 21, 2013

60 வது பிலிம்பேர் விருதுகள்

60வது பிலிம்பேர் விருதுகள் - தனுஷ், சமந்தாவுக்கு இரண்டு விருதுகள்! சிறந்த படம் - வழக்கு எண்

Dhanush-Samantha gets Two awards in 60th Filmfare award
தென்னிந்திய திரைப்பட விழாவில் ஒன்றான பிலிம்பேர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 60வது ஐடியா பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் நடிகர் தனுஷூக்கு சிறந்த நடிகர் மற்றும் பின்னணி பாடகருக்கான இரண்டு விருதுகள் கிடைத்தன. இதேப்போல் நடிகை சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்காக இரண்டு விருதுகள் கிடைத்தன. தமிழில் சிறந்த படமாக தேசிய விருது பெற்ற ‘‘வழக்கு எண் 18/9‘‘ படம் பெற்றது.

60வது தென்னிந்திய திரைப்பட விருதுகளின் முழு விபரம்...

சிறந்த படம்

தமிழ் - வழக்கு எண் 18/9
தெலுங்கு - ஈகா
மலையாளம் - ஆயளும் நஞ்சனம் தம்மீழ்
கன்னடம் - கிராந்தி‌வீரா சங்கோலி ரயாணா

சிறந்த நடிகர்

தமிழ் - தனுஷ் (3)
தெலுங்கு - பவன் கல்யாண் (கபார் சிங்)
மலையாளம் - பகத் பாசில் (22 பீமேல் கோட்டயம்)
கன்னடம் - தர்ஷன் (கிராந்தி‌வீரா சங்கோலி ரயாணா)

சிறந்த நடிகை

தமிழ் - சமந்தா (நீதானே என் பொன்வசந்தம்)
தெலுங்கு - சமந்தா (ஈகா)
மலையாளம் - ரீமா கல்லிங்கல் ((22 பீமேல் கோட்டயம்)
கன்னடம் - பிரியாமணி (சாருலதா)

சிறந்த டைரக்டர்

தமிழ் - பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)
தெலுங்கு - ராஜமெளலி (ஈகா)
மலையாளம் - லால் ஜோஸ் (ஆயளும் நஞ்சனம் தம்மீழ்)
கன்னடம் - விஜயஒரசாத் (சித்திலிங்கு)

சிறந்த துணை நடிகர்

தமிழ் - தம்பிராமையா (கும்கி)
தெலுங்கு - சுதீப் (ஈகா)
மலையாளம் - பிஜூ மேனன் (ஆர்டினரி)
கன்னடம் - அதுல் குல்கர்னி (எதிகாரிகி)

சிறந்த துணை நடிகை

தமிழ் - சரண்யா பொன்வண்ணன் (நீர்ப்பறவை)
தெலுங்கு - அமலா அக்கினி (லைப் இஸ் ப்யூட்டிபுல்)
மலையாளம் - கவுதம் நாயர் (டையமண்ட் நெக்ளஸ்)
கன்னடம் - சுமன் ரங்கநாதன் (சித்திலிங்கு)

சிறந்த இசை

தமிழ் - டி.இமான் (கும்கி)
தெலுங்கு - தேவிஸ்ரீ பிரசாத் (கபார் சிங்)
மலையாளம் - வித்யாசாகர் (டையமண்ட் நெக்ளஸ்)
கன்னடம் - வி.ஹரிகிருஷ்ணா (டிராமா)

சிறந்த பின்னணி பாடகர்

தமிழ் - தனுஷ் (3, கொலவெறிடி...)
தெலுங்கு - வேதபள்ளி ஸ்ரீனிவாஸ் (கபார் சிங்)
மலையாளம் - விஜய் ‌யேசுதாஸ் (ஸ்பிரிட்)
கன்னடம் - அவிநாஸ் செப்ரி (சித்திலிங்கு)

சிறந்த பின்னணி பாடகி

தமிழ் - என்.எஸ்.கே.ரம்யா (சற்று முன்பு பார்த்து... நீதானே என் பொன்வசந்தம்)
தெலுங்கு - சுஜித்ரா (பிஸினஸ்மேன்)
மலையாளம் - ஸ்வேதா (அரிகி)
கன்னடம் - இந்து நாகராஜ் (கோவிந்தயான்மகி)

சிறந்த புதுமுக விருதுகள்

நடிகர்

உதயநிதி ஸ்டாலின் - (ஒரு கல் ஒரு கண்ணாடி, தமிழ்)

தல்குர் சல்மான் - (செகண்ட் ஷோ, மலையாளம்)

நடிகை

லட்சுமி மேனன் - (சுந்தரபாண்டியன், தமிழ்)

ஸ்வேதா ஸ்ரீவட்சா - (சைபர் யுக‌தால் நவ யுகா, கன்னடம்)

வாழ்நாள் சாதனையாளர் விருது : வாணி ஜெயராம் மற்றும் பாபு

விழாவில் ஸ்ருதிஹாசன், நாவ்யா நாயர் உள்ளிட்ட பல நடிகைகளின் நடனங்களும் இடம்பெற்றன.
 
 
thanx -dinamalar

சிம்பு லக் கடி பம்பா - ஹன்சிகா மெத்மெத் வா நீ பர பரப்புபேட்டி

சிம்புவுடன் எப்போது திருமணம்....? ஹன்சிகா எக்ஸ்குளூசிவ் பேட்டி!

After 5 years I will marry simbu says Hansika
 கடந்த சில மாதங்களாகவே மீடியாக்களில் கிசுகிசுக்களாக கசிந்து வந்த சிம்பு-ஹன்சிகா காதல், இப்போது உறுதியாகியுள்ளது. இருவரும் காதலிப்பதாக, தங்களது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் நடிகை ஹன்சிகா நமது தினமலர் நிருபருக்கு அவரே போன் செய்து அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டி இதோ...

என் தொடர்பான உண்மை செய்திகளை கொடுக்கும் மீடியாக்களில் தினமலர் ரொம்ப முக்கியமானது. அதனால் தான் நானே போன் செய்தேன். தற்போது பிரியாணி படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு மும்பையில் உள்ள என் வீட்டுக்கு வந்துள்ளேன். தற்போது தமிழில் எனக்கு 4 படங்கள் கைவசம் உள்ளன. ரொம்ப பிஸியாக நடித்து வருகிறேன்.
 
 
 
 
 இந்த நேரத்தில் சிம்புவுடன் காதல் பற்றி‌ய செய்திகள் வெளியாகியுள்ளன. ஆமாம், நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். ஆனால் திருமணம் இப்போது கிடையாது. எனக்கும் பல படங்கள் இருக்கிறது, அதேபோல் சிம்புவுக்கும் பல படங்கள் இருக்கிறது. எங்கள் காதல் செய்திகளால் எங்களை நம்பி படம் எடுக்க முன் வந்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. மேலும் தற்போது எனக்கு 21 வயது தான் ஆகிறது.
 
 
 
 அதனால் திருமணத்தை தள்ளி வைத்துள்ளோம். திருமணம் தொடர்பாக இன்னும் நாங்கள் நிச்சயம் கூட செய்யவில்லை. எங்கள் படவேலைகள், எங்களுக்கான கமிட்மென்ட்டுகளை எல்லாம் முடித்துவிட்டு திருமணம் செய்ய எண்ணியுள்‌ளோம். இன்னும் 5 வருடங்கள் கழித்து சிம்புவை நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.


மேலும் சிம்புவை உங்களுக்கு எதனால் பிடித்தது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹன்சிகா, சிம்புவிடம் இதுதான் பிடித்தது என்று என்னால் குறிப்பிட்டு சொல்ல முடியாது. சிம்புவின் ஒவ்வொரு செயலும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அது அவரது திறமையாக இருக்கலாம், குணமாக இருக்கலாம், பேச்சாக கூட இருக்கலாம் என்று கூறினார்.
 
thanx-dinamalar


சிம்பு-ஹன்சிகா -143 ,144 , 420

ஆமா... நாங்க லவ் பண்றோம்...! உறுதி செய்த சிம்பு-ஹன்சிகா

Simbu - Hansika Love confirmed
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை ஹன்சிகா, சிம்புவுடன் ‘‘வாலு‘‘, ‘‘வேட்டை மன்னன்’’ படத்தில் நடித்து வருகிறார். நயன்தாராவுடனான காதல் முறிவுக்கு பின்னர் சிம்பு, ஹன்சிகாவை காதலிப்பதாக கூறப்படுகிறது. சில மாதங்களாகவே இந்த செய்தி கோலிவுட்டில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இதனை இருவரும் மறுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்தவாரம் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்த சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர், தனது மகன் யாரை காதலித்தாலும் சரி, அது ஹன்சிகாவாக இருந்தாலும் சரி அவரது காதலுக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இந்த செய்தி வெளியான அடுத்த சில நாட்களிலேயே ஹன்சிகா, நான் சிம்புவை காதலிக்கவில்லை, எங்களுக்குள் இருப்பது வெறும் நட்பு மட்டும் தான், என் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறியிருந்தார். இதேபோல் சிம்புவும் பலமுறை நான் ஹன்சிகாவை காதலிக்கவில்லை என்று கூறியிருந்தார்.

ஆனால் இப்படி இவர்கள் இருவரும் மாறி மாறி நாங்கள் காதலிக்கவில்லை... காதலிக்கவில்லை... என்று கூறி வந்தவர்கள், இப்போது நாங்கள் காதலிக்கிறோம் என்று கூறியுள்ளனர். சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில், ஆமாம் நான் ஹன்சிகா கூடத்தான் இருக்‌கிறேன். ரொம்ப நல்ல பொண்ணு ஹன்சிகா, நாங்கள் திருமணம் செய்வது பற்றி விரைவில் எங்‌களது பெற்றோர் முடிவு செய்ய உள்ளனர், எங்களது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பு கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

சிம்பு டுவிட் செய்த அடுத்த சில நிமிடங்களில் ஹன்சிகாவும் டுவிட் செய்துள்ளார். அதாவது, எனது சொந்த வாழ்க்கையை பற்றி நிறைய கிசுகிசுக்கள்  வெளிவருகின்றன. இப்போது அதை தெளிவுப்படுத்துகிறேன். ஆமாம், நான் சிம்புவை காதலிக்கிறேன். இதற்கு மேல் எனது சொந்த விஷயங்களை நான் பேச முடியாது என்று கூறியுள்ளார்.

ஆக சிம்பு-ஹன்சிகா காதல் உறுதியாகியுள்ளது...!!
 
நன்றி- தினமலர்

Saturday, July 20, 2013

WHITE HOUSE DOWN -சினிமா விமர்சனம்

 

ஹீரோ ஒரு முன்னாள் மிலிட்ரி மேன் . அவருக்கு ஒரு  பொண்ணு. அவர் கிட்டே கோவிச்சுக்கிட்டு  மூஞ்சியை இழுத்துட்டு இருக்கு . அவளை தாஜா பண்ண அமெரிக்க அதிபர் இருக்கும் வெள்ளை மாளிகையை சுத்திக்காட்ட  கூட்டிட்டு வர்றார்.. அப்போதான் வில்லன் க்ரூப் மாளிகையை அட்டாக் பண்ண  திடீர்னு ரவுண்ட் அப் பண்ணிடறாங்க .

அமெரிக்க அதிபர்னா சும்மாவா? ஏகப்பட்ட செக்யூரிட்டி இருக்குமே? ஆனா பாருங்க எல்லா ஊர்லயும் கூடவே இருந்து குழி பறிக்கும் ஒரு நாஞ்சில் சம்பத் இருப்பாங்க போல . ஒரு எட்டப்பன். அவன் தான் அதிபரின் பாதுகாப்புப்படைத்தலைவன் .அவனுக்கு ஒருஃபிளாஸ்பேக் கோபம் இருக்கு 


 அதாவது அவனோட பையன் மிலிட்ரில இருந்தப்ப ஒரு பிரச்சனையால அவனை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. அதுக்கு பழிவாங்க அதிபரைபோட்டுத்தள்ள பிளான். 


மாளிகைல  டமால்னு ஒரு பாம் போட்டுடறாங்க . ஒரே களேபரம் .  இந்த  பரபரப்பான சூழல்ல ஹீரோவும் , அவர் மகளும்   வெவ்வேற இடத்துலமாட்டிக்கறாங்க 



 புலிக்குப்பிறந்ததுகுட்டிப்புலியாத்தானேஇருக்கும்? ( நன்றி - எம் சசிக்குமார் ) அந்த பாப்பா தன் கிட்டே இருக்கும் கேமரா மொபைல்ல  தீவிரவாதிங்க பேசிட்டு இருப்பதை  வீடியோ எடுத்து டக்னு  மீடியாவுல பரப்பிடுது 


 அதை வில்லன் குரூப்  பார்த்து செமகாண்ட் ஆகிடறாங்க /. அப்பவே அவளை போட்டுத்தள்ளிட்டா மேட்டர் ஓவர், ஆனா படம் சீக்கிரமாமுடிஞ்சுடும் . அதனால அவளை பணயக்கைதியா பிடிச்சு வெச்சுக்கிட்டு     அலப்பறை பண்றாரு வில்லன் . 


ஹீரோ அமெரிக்க  அதிபரை எப்படி காப்பாத்தறார்? என்பதே மிச்ச மீதி பர பர திரைக்கதை 


 ஒண்ணும் இல்ல , கேப்டன் விஜய்காந்த் நடிச்ச ஏவி எம்மின் மாநகரக்காவல், OLYMPUS HAS FALLEN இந்த 2 படங்களோட உல்டா தான்  படம் . ஆனாலும் பார்க்கலாம் . விறுவிறுப்பா இருக்கு 


ஹீரோ ஆல்ரெடி வெள்ளை மாளிகையில் பணிஆற்றியவர்தான்  என்பதைக்காட்டஒரு ஃபிளாஸ் பேக் வெச்சிருக்கலாம்


ஹீரோ ஜான் கேல் . இவர் கமல் , சரத்குமார், அர்ஜூன் மாதிரி டபக் டபக்னு சட்டையை கழட்டிடறார். அதுல என்ன தொழில் ரகசியம்னா எக்சசைஸ் பாடி மெயிண்ட்டெயின் பண்றவங்க தங்கள் உடல் அழகை காட்ட , ரசிகைகளை மயக்க , தக்க வெச்சுக்க அடிக்கடி சட்டையை கழட்டிடுவாங்க ( நல்ல வேளை )


 ஆள் அம்சமாஇருக்கார். மகளிடம் சமாதானம் பேசுவது , அதிபரிடம் மரியாதையா நடப்பது, வில்லனிடம் எகத்தாளமா பேசுவது   என கேப் கிடைக்குமிடம் எல்லாம் கிதார் வாசிக்கறார் (   கிடா வெட்றார்னுதான் சொல்லனும், ஆனா நான் சைவம் ஆச்சே? ) 


அவரோட மகளா வரும் பொண்ணுசெம சுட்டி . அப்பாவிடம் வாதம் பண்ணும்போதும்  , வீடியோ எடுக்கும்போதும் ரசிக்கவைக்கிறாள் 

 ஜான் கேல் கதாபாத்திரத்தில் சார்மிங் டாட்ரூம், அவனுடைய மகள் எமிலியாக ஜோகிங்கும், அமெரிக்க அதிபராக ஜாமி ஃபாக்ஸýம் நடித்துள்ளனர். 


அதிபரா வரும்   .  ஜாமி வசனங்களில் நக்கல் ஆங்காங்கே காப்பாற்றிவிடுது


"தி இன்டிபெண்டன்ஸ் டே', "டே ஆஃப்டர் டுமாரோ', "காட்ஸில்லா', "பேட்ரியாட்' போன்ற படங்களின் இயக்குநர்  ரோலண்ட் எமெரிக் தான் இந்தப்பட இயக்குநர் .


இப்படத்திற்காக வெள்ளை மாளிகையை செயற்கையான உருவாக்கினார் ஆர்ட் டைரக்டர் கிரிக்எம். பெர்ருஸிலி. சண்டை காட்சிகளை வடிவமைத்திருப்பவர் ஜான் ஸ்டோன்ஹம் ஜூனியர். ஒளிப்பதிவு ஜேஃபாரஸ்டர்




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்  



1. படம் ஆரம்பிச்சு 10 நிமிஷத்துல டேக் ஆஃப் ஆகுது , அதுக்குப்பின்  ஒன்ற்ரை மணி நேரம் போர் அடிக்காம திரைக்கதை சுவராஸ்யமான சம்பவங்களால் விறுவிறுப்பா அமைச்சது
2.  அப்பா  மகள் செண்ட்டிமெண்ட்   ஓவரா ஃபீல் பண்ணவைக்காம  நாசூக்கா போற போக்குல சொன்னது 


3. படம் ஃபுல்லா ஒரே பில்டிங்க்ல நடந்தாலும் சலிப்பு ஏற்படா வண்ணம் கேமராவை வித வித லொக்கேஷன்ல   வெச்சது 


4.   ஹீரோ  வில்லன் ஆக்‌ஷன் காட்சிகள் , சேசிங்க் சீன்கள் பர பரப்பு 






 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. வில்லன்  குரூப் செக்யூரிட்டிகள் இருக்கும் ரூம் கதவை தட்டறாங்க . பிரச்சனையான அந்தசூழல்ல  சாவித்துவாரம் வழியா யார் வந்திருக்காங்க?ன்னு பார்க்காம யாராவதுகதவைத்திறப்பாங்களா? 
2. ஹீரோ தன் மக செல்லுக்கு  ஃபோன் பண்ணும்போது செல் ஸ்விட்ச் ஆஃப்னு வருது. அவர்  ஏன் மகளுக்கு அபாயத்தை   எஸ் எம் எஸ் பண்ணலை? அதே போல் மகள்கூட அப்பாவுக்கு தன் நிலை என்ன:? என்பதை எஸ் எம் எஸ்  பண்ணலாமே? பேசுனாத்தான் சத்தம் காட்டிக்குடுத்துடும் , எஸ் எம் எஸ் பண்ணா என்ன? சைலண்ட் மோடுல  வெச்சு பண்ணலாமே? 



3. அதிபரின் அத்தனை செக்யூரிட்டிஆட்களும்  அதிபருக்கு எதிராகத்திரும்ப  ஹீரோ ஒரே ஒரு ஆளா தனியா நின்னு எல்லாரையும் சமாளிக்கறது காதில் பூக்கூடை 



 மனம் கவர்ந்த வசனங்கள் 


1. ஒரு நல்ல அப்பாவா நடந்துக்க முயற்சி பண்ணிட்டு தான் இருக்கேன். எல்லா ஆண்களும் இப்படித்தான் சொல்றாங்க, ஆனா செயல்ல காட்றது இல்லை 



2. பொம்பளைங்க சீக்கிரமா முடிவு எடுக்கறதை உங்க வாழ்க்கைல எப்பவாவது பார்த்திருக்கீங்களா?


3.  எங்கப்பா ரொம்ப டேலண்ட்டான ஆள்


இதைச்சொல்ல என் கிட்டே லஞ்சம் வாங்கிக்கிட்டா 


4. மிஸ்டர் பிரசிடெண்ட் , எப்படி இருக்கீங்க? 

 இன்னும் உயிரோட தான் இருக்கேன் 


5. சின்ன வயசுல பொண்ணுங்க  தன் அப்பா மேல அபரிதமான அன்பு வெச்சிருப்பாங்க, நாளாக நாளாக அது குறைஞ்சுடும்

 




சி பி கமெண்ட்  -  படம் போர் அடிக்காம போகுது . பார்க்கலாம் ,. ஆக்‌ஷன் பட விரும்பிகள்  எல்லாரும் பார்க்கலாம், பெண்களும் பார்க்கும் விதத்தில் மிக கண்ணியமான படமாக்கம் 


ரேட்டிங்க்  -    3.5  /5 

ஈரோடு வி எஸ் பி  ல படம் பார்த்தேன்

Friday, July 19, 2013

மரியான் - சினிமா விமர்சனம்



ஹீரோ   சரக்கு  அடிக்கும்  நல்ல (!?) மீனவர். இவர் அதே ஊரில் மீனவரொருவரின் மகளை லவ்வறார். அவருக்கு   ஊருக்குள்ளே கடன். சொந்த அம்மா அப்பா கடன்  வாங்குனாக்கூட தமிழன் அதைப்பத்திகவலைப்பட  மாட்டான். ஆனா காதலிக்கு கடன்னா? துடிச்சுடுவான். 


 வில்லன்  கொடுத்த  பணத்தை  கரெக்ட் பண்ண ஹீரோயினை   மேரேஜ் பண்ணிக்க ஆசைப்படறான் . ( மேரேஜ் பண்ணிட்டா அவன் என்ன வில்லன் ? ) ஆனா  ஹீரோ விடலை .  2 வருஷ காண்ட்ராக்ட்ல   ஃபாரீன் போறார்.  திரும்பி வரும்போது   2 ஜி யை  அடிச்ச ஆ ராசாகுரூப்பை  விட பயங்கர கொள்ளைக்காரங்க கிட்டே  மாட்டிக்கறார். அப்புறம் என்ன ஆச்சு? இதுதான் மரியான் .


சும்மா சொல்லக்கூடாது , கமல் , விக்ரம்க்குப்பிறகு நடிப்புக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும்  ஹீரோக்கள் லிஸ்ட்ல்  தனுஷ்  சர்வசாதாரணமா  சைன்  பண்ணிட்டார் .  பிரமாதமான நடிப்பு . ஆங்காங்கே  கமல் ( நாயகன் ) ரஜினி ( தளபதி )  சாயல்  இருந்தாலும் சந்தேகமே இல்லாம தனுஷ்க்கு இது ஒரு மைல் கல் படம் தான் . வெல்டன் சார் 




ஹீரோயின் பூ பட நாயகி பார்வதி . தமிழ் சினிமா   உலகம் வெட்கப்படும் அளவுக்கு பிரமாதமான நடிப்பு   இவருடையது.  திறமையை மட்டும் காட்டிட்டு இருந்தா தமிழன் ஒத்துக்க மாட்டான்னு பூ படம் கத்துக்குடுத்த பாடத்தை மறக்காம   ஒளிப்பதிவாளர்  உதவியுடன்    தாவணி  இல்லாம வெறும் ஜாக்கெட் மட்டும் போட்டு   லோ ஆங்கிள் ஷாட்ஸ் மட்டும் 45இடங்கள் ல  வர்ற மாதிரி செம காட்டு காட்டி இருக்கார் .  முழு நிலா மாதிரி முகம் இருக்கும் பார்வதி   பிறை நிலாக்கள்  தெரிய ஓடி வரும் காட்சிகள் காம்ப்ளான்


கவிதாயினி குட்டி ரேவதி  படத்துக்கு  சீனியர்  அசோசியேட் டைரக்டர்  ஜாப் . டைட்டில் ல அவர் பேரைப்பார்த்ததும்  பெண்ணிய காட்சிகள் வரும்னு எதிர்பார்த்தேன். ஆனா  ஹீரோ   ஹீரோயினை  தேவையே இல்லாம இடுப்புல ஓங்கி உதைக்கும்  பழம் பஞ்சாங்க காட்சி தான் வருது . காம்ப்ரமைஸ்? 


முக்கியமான ஆள் ஏ ஆர் ரஹ்மான் . 2 பாட்டு சூப்பர் ஹிட்டு .  பி ஜி எம் ல உழைப்பு பத்தாது ( இளையராஜா  மாதிரி ஃபேமஸ் ஆகனும்னா  பி ஜி எம் ல சைன் பண்ணனும்-இது எல்லா இசை அமைப்பாளருக்கும் பொருந்தும் ) படம்  பாலைவனத்துல பயணம் செய்யும்போது    பின்னணி இசைல கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கார். ஒளிப்பதிவு பக்கா,. கடல் அடியில்  காமரா வெச்சு எடுக்கப்பட்ட காட்சிகள் அழகு . 


இயக்குநர்  பாராட்டு பெறும் இடங்கள்



1.  ஏ ஆர் ரஹ்மானை புக் பண்ணி படத்துக்கு சர்வதேச மார்க்கெட்டை பிடிச்சது . ராஞ்சனா ஹிந்தில ஹிட் ஆன பின் சாமார்த்தியமா   இப்போ ரிலீஸ் பண்ணியது . 



2.   போஸ்டர்  டிசைன்ல  நல்ல லவ் ஸ்டோரி மாதிரி பில்டப் கொடுத்தது .  பார்வதியை   முழுக்க முழுக்க  கிளாமராவும் , கேரக்டர்வைஸும் நல்லாஆஆ யூஸ் பண்ணிக்கிட்டது



3. பின் பாதியில்   படம் ரொம்ப ட்ரை ( dry )  தெரிந்தும் தைரியமாய்    படத்தை   ரியலிஸ்ட்டிக்காய் எடுத்தது


4.   பாலை வனத்தில்  ஹீரோ புல் சாப்பிடும் காட்சி . 2 புலிகளிடம் மாட்டிக்கொள்ளும் லைஃப் ஆஃப் பை உல்டா காட்சி  . தியேட்டரில்; செம ரெஸ்பான்ஸ் 


5.  நமீபியா  , சூடான் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தியது


 இயக்குநரிடம் சில கேள்விகள்  



1. மீனவரா வரும் ஹீரோ படகில் கடல் ல போறார். இன்னொரு படகு அருகில் வந்ததும் கிட்டே போய் தீப்பெட்டி வாங்கிட்டா மேட்டர் ஓவர் . அவர்   உடனே  கடல்ல  டைவ் அடிச்சு    நீந்தி அந்த படகு கிட்டே போய் தீப்பெட்டி வாங்கி வாய்க்குள்ளே அடக்கிட்டு   கடப்பாறை நீச்சல் அடிச்சு இந்த படகு வந்து ஏறுவது தான் ஹீரோயிசமா? செம காமெடி பாஸ். சிரி சிரினு சிரிக்கறாங்க .. படு கேவலமான ஹீரோயிச மேக்கிங்க்



2. வில்லன்  ஹீரோ கிட்டே ஃபோனை கொடுத்து கம்பெனில பேசி பணம்கேளு அப்டிங்கறார் . ஹீரோ டக்னுஹீரோயினுக்கு  ஃபோனைப்போட்டு  கடலை போட்டுட்டு இருக்கார் கட்டதுரை மாதிரி.  வில்லன் பே -னு பார்த்துட்டு இருக்கான் . பெண் குரல் எதிர் முனைல இருந்து கேட்காம போகுமா?  ( மொழி தான் புரியாது ,  பாவனை கூட தெரியாதா? )  அதைவிடக்காமெடி வில்லன் அவன் வீட்டு ஃபோனைஎதுக்கு  டமால்னு உடைக்கனும்? 


3. பணயக்கைதியா   3 பேரை  பிடிச்சு வெச்சவங்க  எதுக்கு  ஹீரோ வைக்  கொல்லாம    இன்னொரு ஆளை டக்னு கொல்றாங்க ? ஆளுங்க இருக்கற வரை அவங்களுக்கு லாபம் தானே?  ( அதிக பணயத்தொகை கேட்கலாம்)


4. இடைவேளைக்குப்பின்   அந்த நீக்ரோ பசங்க ஏன் லூசுங்கமாதிரிவானத்துல  துப்பாக்கியால  சுட்டுட்டே இருக்காங்க ? விலை வாசி எப்படி ஏறிக்கிடக்கு>? கொஞ்சம்   கூட பொறுப்பே   இல்லாம வேஸ்ட் பண்ணுவாங்களா?


5. ஹீரோ ஹீரோயினை லவ் பண்றார். ஆனா அதை வெளிக்காட்டிக்கலை . ஹீரோயின்  ஹீரோவைப்பார்க்க வரும்போது   ஹீரோவோட நண்பர் செத்திருக்கார் . ஹீரோயின்   வானு கூப்ட்டது ஒரு குத்தமாய்யா? வில்லனை விட கேவலமா   ஹீரோ தான்  உயிராய்  காதலிக்கும் காதலியை இடுப்புலஓங்கி  உதைக்கிறார்  . படு கேவலமான   ஆணாதிக்ககாட்சி மட்டுமல்ல . லாஜிக் மீறல் . பொண்டாட்டியை புருஷன் அடிப்பான் . ஆனா  காதலியை   காதலன்  அப்டி உதைக்க மாட்டான் 


6.   படத்தின்    திரைக்கதைக்கு தேவையே இல்லாமல்   ஹீரோ எதுக்கு தண்ணி அடிச்சுட்டே , தம் அடிச்சுட்டே  இருக்காரு ?  இதுதான் சாக்குன்னு தயாரிப்பாளர் செலவுல  சரக்கா?




7. பாலை வனத்துல பசி உள்ள   இரு புலிகளுக்கு நடுவில்   ஒரு ஆள் மாட்டினா   முதல்ல புலி ஆளை அடிச்சு கொன்னுடும். அதுக்குப்பின் தான்   அந்த 2 புலிகளும் தங்களுக்குள்ளே அடிச்சுக்கும் . ஆனா ஹீரோ வை புலிங்க கண்டுக்காம   அதுங்க 2ம் முறைச்சுக்கிட்டு  இருக்கு



8.  வில்லன்   ஹீரோயின்  கோயிலுக்குப்போய்  இருக்கும்போது ஹீரோயின்  செருப்பை தடவிப்பார்க்கறான் . அட பரதேசி . நீ லட்சக்கணக்குல ஹீரோயின் அப்பாவுக்கு கடன் கொடுத்திருக்கே . ரவுடி . டைரக்ட்டா  ஹீரோயினையே   பலவந்தமா தடவலாமே? கேவலம் அவ செருப்பை தடவி ஆம்பளைங்களையே அவமானப்படுத்திட்டியே?  மனசுக்குள்ளே   ராவணன் -னு நினைப்பா? 


9. வில்லன் ஹீரோயின்  செப்பலை காலால தடவிட்டு இருக்கும்போது 1 கிமீ தூரத்துல இருக்கும்   ஹீரோவுக்கு வில்லன் தன் காதலியோட செப்பலைத்தான் தடவறான்னு எப்படித்தெரியுது? பைனாகுலர் வெச்சிப்பார்த்தாரா?


10.  கதைப்படி   ஹீரோ  உள்ளூரில் இருந்து வெளியூரில் வந்து வேலைக்காக அல்லது  வேலையில்  சேர்ந்து  என்ன  கஷ்டம் எல்லாம் அனுபவிக்கறார் என்பதை  டீடெய்லாக சொல்லனும் . அப்போத்தான் பரிதாபம் வரும் .  ஆனா   அந்த எப்பிசோடே இல்லை படத்துல . திரைக்கதையின் பெரிய பலவீனம் அதுதான்


11 . ஹீரோவின் அம்மா , ஹீரோயின் பேசும்  மாமியார் மருமக சண்டை வ்சனங்கள்  மண் வாசனை காந்தி மதி  டூ ரேவதி , சின்னக்கவுண்டர்   மனோரமா டூ சுகன்யா வசனங்களின் அப்பட்டக்காப்பி . # ஏம்மா தேவிப்ரியா நோட்  இட்


12.   அப்புக்குட்டி , இமான்  இருவரும்  வீணடிக்கப்பட்டிருப்பது ஏனோ?


13. வில்லன் எப்பவும் பாலை வனத்திலேயேஇருப்பவன் . ஹீரோ  கடல் வாசி . ஆனா ஹீரோ வில்லனை சர்வசாதாரணமா  அடிச்சு ஜெயிப்பது எப்படி ?


14. ஹீரோ  சுறா மீன் ,திமிங்கிலம் வகையறா மீன்களை பிடிப்பதில் கில்லாடி . அப்படி வாரம் 2 மீன் பிடிச்சா செம காசு வருமே? எதுக்கு பிஸ்கோத்த்து 2 லட்சம் ரூபாய்க்காக அடிமையா சூடான் போகனும்?


15.  ஏ ஆர் ஆர் வழக்கமா வம்பு தும்புக்கு போகாதவர் , ஆனா பாடல் வரிகளில்   என்ன ஆச்சுராசா உனக்கு?  நான் தான் கடல் ராசா என இளைய ராஜாவை வம்புக்கு இழுக்கும் வரிகள் எதுக்கு?


மனம் கவர்ந்த வசனங்கள் 


1. ஆம்பளையோட வீராப்பெல்லாம் பொம்பளை மூச்சுக்காத்து படற வரைக்கும் தான்.பட்டுட்டா அவன் கோலிசோடா தான்



2. யாரையாவது பிடிச்சிருந்தா ஒண்ணா குத்தகைக்கு எடுக்கனும்.இல்ல கொள்முதல் பண்ணிடனும். பம்மிட்டு இருக்கப்படாது



3. கடலும் பொண்ணும் ஒண்ணு.எத்தனை தடவை பார்த்தாலும் புதுசுதாம்லே


4.  ஹீரோயின் - உன் கண்ணுல என்னை நான் பார்த்துட்டேன்யா.மறைக்காத # நீ தாம்மா மறைக்காம ஓப்பனா இருக்கே.அவர் சர்ட் போட்டிருக்காரு



5. யோவ்.என்னை பிடிக்காதுன்னே.ஆனா என்னையவே பார்த்துட்டு இருந்தே? உன் கூட இருந்தவளையும் தான் பார்த்தேன்.அதுக்கு ?


6. தீக்குச்சி தீப்பெட்டிலயே இருந்தா எப்டி பத்திக்கிம்? உரசனும்.போ.அவனை உரசு # அடேங்கப்பா கண்டுபிடிப்பு அடேய் -))



7. ஹீரோ பஞ்ச் - மரியான் பிடிக்காத வேலையை செய்ய மாட்டான்.பிடிச்ச வேலையை செய்யாம விடமாட்டான் # தியேட்டரை விட்டு வெளியே போக விடமாட்டான் ( ஹீரோ ஃபிரண்ட் பேசும் வசனம்)


8. எங்காளுக்குப்போட்டியா ஷாருக்கான் ரா ஒன் எடுத்தாரு.ஊத்திக்கிச்சுல்ல? # மாப் ளை சப்போர்ட்டிங் டூ மாமா


9.   எல்லாரும்  நம்மை  மாதிரி மனுஷங்க  தானே?   புது ஊர்னாலும்  பழகிடும்


10 மரியான்னா   சாவே இல்லாதவன்னு அர்த்தம்  # சாகடிக்கப்போறான்னு அர்த்தம் இல்லையா? ஹி ஹி


11. சாதனை பண்றவனுக்கு பொம்பளை வாசனை பட்டுகிட்டே இருக்கணும்




படம் பார்க்கும்போது ட்விட்டரில் போட்ட ட்வீட்ஸ் 


1. ஏ ஆர் ஆர் க்கு பாடலில் வரும் ஹம்மிங்னா செம கொண்டாட்டம் போல


2. அய்யய்யோ.தனுஷ்க்கு பார்வதி வலியனாப்போய் லிப் கிஸ் தருது.தடுக்க முடியல :-(


3. ஆஹா.தனுஷ் கமல் மாதிரி ரஜினி மாதிரி எல்லாம் ட்ரை பண்றாரே


4. இடைவேளை விட்டாச்சு.ஆனா வெளில விடமாட்டாங்களாம் # மாட்டிக்கிட்டாங்க ஜனங்க.இது வரை படம் சுமாரு தான் குமாரு


5.  பம்பாய் பி ஜி எம் மை மரியான் ல எ ஆர் ஆர் சுட்டுட்டாரு.தேவிப்ரியாவுக்கு போன் போடேய்





ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  40

 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

ரேட்டிங் =  3  / 5


சி பி கமெண்ட் - - ஹீரோ ஹீரோயினுக்கு விருது நிச்சயம்.ஸெம ஆக்டிங் - ஆனா படம் அட்டர் பிளாப் - தனுஷ்  ரசிகர்கள் பார்க்கலாம் . பார்வதியை மேலோட்டமா ரசிக்க நினைப்பவர்கள் பார்க்கலாம் . மற்றவர்கள் டி வி யில் போட்டபின் பார்க்க. ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன் 



வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 19.7 2013 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

 

மரியான் - மரியான் திரைப்படம் தமிழகம் முழுவதும் (19ம் தேதி) 300 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.


'ராஞ்சனா' இந்திப் பட வெற்றிக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் தமிழ்ப் படம் 'மரியான்'. இசை ஆல்பங்கள், விளம்பரங்களை படமாக்கி வந்த பரத்பாலா முதன்முறையாக இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். 


ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவரும் ஐரோப்பாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவருமான மார்க் கோனிக்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பார்வதி நடித்துள்ளார்.


சோதனைகளை சந்திக்க நேரிடும் ஓர் இளைஞன் வாழ்வா சாவா போராட்டத்தில் இருக்கிறான். அவனுக்கு துணையாக இருப்பது காதலும் காதல் பற்றிய நினைவும்தான். அந்த சோதனைகளில் இருந்து அவன் எப்படி வெற்றி பெறுகிறான் என்பது கதை. தமிழக மீனவ கிராமங்களிலும் ஆப்ரிக்க காடுகளிலும் பாலைவனத்திலும் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது.


இந்த படம் (வெள்ளிக்கிழமை) தமிழகம் மற்றும் ஆந்திராவில் ரிலீசாகிறது. தமிழகத்தில் மட்டும் 300 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும் படத்தை தமிழ் தவிர, இந்தி, மலையாளம், ஆங்கிலத்திலும் வெளியிட உள்ளனர். அதற்கான பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. தமிழில் வெளியான ஒரு வாரத்துக்கு பிறகு மற்ற மொழிகளில் இப்படம் ரிலீசாகும். இப்படம் ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட்டாக அமையும். இதன் இசையும் புது அனுபவத்தை தரும் என குறிப்பிட்டுள்ளார் தனுஷ்.


ஈரோடுஅபிராமி,  ஆனூர், ஸ்ரீசண்டிகா என 3தியேட்டரில் ரிலீஸ்  

மரியான் - சினிமா விமர்சனம்



http://www.adrasaka.com/2013/07/blog-post_5457.html


2. திவ்யா மீது காதல் - பிரிலியண்ட் மூவிஸ் எனும் புதிய பட நிறுவனம் தயாரிக்கும் தமிழ்ப் படம் திவ்யா மீது காதல். கிராமத்து இளைஞர்களின் எதார்த்தமான வாழ்க்கையும், அந்த மண்ணுக்குரிய காதலும்தான் இதன் கதை! மனித நாகரீகத்தின் வளர்ச்சிக்கும், பண்பாட்டிற்கும், சமூகத்தில் பல புரட்சிகரமான மாறுதல்களும் காரணகர்த்தா காதல்தானாம். அந்தக் காதலை புதிய களத்தில், புதுக் கோணத்தில் சொல்ல வருகிறது திவ்யா மீது காதல் திரைப்படம்.



ஜெ.ஆர். ஜோசப் இசையில், ராஜராஜன் ஒளிப்பதிவில் புதியவர் மதன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் திவ்யா மீது காதல் திரைப்படத்தில் இயக்குனர் மதனே ஹீரோ, புரொடியூசர் என ஏகப்பட்ட அவதாரங்கள் எடுது்திருக்கிறார். நிஷா ஷெட்டி நாயகியாக அறிமுகமாகிறார். எம்.எஸ்.விஸ்வநாதன், கலைப்புலி எஸ்.தாணு, கலைப்புலி சேகரன் உள்ளிட்ட விஐபிக்கள் முன்னிலையில் சமீபத்தில் ஆடியோ வெளியீடு கண்ட திவ்யா மீது காதல் திரைப்படம் முழுதாக முடிந்து முதல் பிரதி தயார் என்பதால் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.



  • நடிகர் : மதன்
  • நடிகை : நிஷா ஷெட்டி
  • இயக்குனர் :மதன்
 
 3.   (WHITE HOUSE DOWN)

"ஒயிட் ஹவுஸ் டவுன்'

                                   (WHITE HOUSE DOWN) ஹாலிவுட்டின் புகழ் பெற்ற இயக்குநர் ரோலண்ட் எமெரிக்கின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் "ஒயிட் ஹவுஸ் டவுன்'.  ஜான் கேல் என்கிற முன்னாள் ராணுவ வீரன், தன் மகள் எமிலிக்கு அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையை சுற்றிக் காட்டுவதற்காக அவளைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வெள்ளை மாளிகையை நெருங்கி வருகிறான்.
  அப்போது பயங்கரமான ஆயுதங்களை ஏந்திய கலகக்காரர்கள் சிலர் வெள்ளை மாளிகையை கைப்பற்றுவதற்காக மாளிகையை சூழ்ந்து நிற்கின்றனர். ஜான் கேல் அவர்களைப் பார்த்துவிட அந்த கலகக்காரர்களும் ஜான் கேலைப் பார்த்துவிட அடிதடி ஆக்ஷன் ஆரம்பமாகிறது. தன் மகளையும், வெள்ளை மாளிகையும், அமெரிக்க அதிபரையும் கலகக்காரர்களிடமிருந்து காப்பாற்றுகிறான் ஜான் கேல்.  
ஏற்கனவே வெள்ளை மாளிகையில் காவல்காரனாக பணியாற்ற வந்து நிராகரிக்கப்பட்டவன் ஜான் கேல். இப்போது அவனே வெள்ளை மாளிகையைக் காப்பாற்றி எல்லோராலும் பாராட்டப்படுகிறான்.  ஜான் கேல் கதாபாத்திரத்தில் சார்மிங் டாட்ரூம், அவனுடைய மகள் எமிலியாக ஜோகிங்கும், அமெரிக்க அதிபராக ஜாமி ஃபாக்ஸýம் நடித்துள்ளனர்.
  இப்பட இயக்குநர் ரோலண்ட் எமெரிக்கின் முந்தைய படங்களான "தி இன்டிபெண்டன்ஸ் டே', "டே ஆஃப்டர் டுமாரோ', "காட்ஸில்லா', "பேட்ரியாட்' போன்ற படங்களை விட இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்குமாம்.  இப்படத்திற்காக வெள்ளை மாளிகையை செயற்கையான உருவாக்கினார் ஆர்ட் டைரக்டர் கிரிக்எம். பெர்ருஸிலி. சண்டை காட்சிகளை வடிவமைத்திருப்பவர் ஜான் ஸ்டோன்ஹம் ஜூனியர். ஒளிப்பதிவு ஜேஃபாரஸ்டர். இப்படம் இந்தியா முழுவதும் ஜூன் 28-ம் தேதி வெளியாகிறது. சோனி பிக்சர்ஸ் வெளியிடும் இப்படத்தின் தமிழ் பதிப்புக்கான தலைப்பு "ஒயிட் ஹவுஸ் வேட்டை'.
ஈரோடுதேவிஅபிராமி, விஎஸ் பி 2தியேட்டர்களில் ரிலீஸ் 
 
4. Title :Om 3D (2013)

Telugu Film Industry is evolving technically. Our film makers are taking up experiments to introduce audience to a new kind of cinematic experience. As part of this trend, 3D movies are flooding in Telugu. Recently ‘Action 3D’ released and now Om 3D is ready. Hero Kalyanram himself has produced it with huge budget on a grand scale. Sunil Reddy is debuting as director with this sophisticated film. Let’s find out what are the highlights of ‘Om 3D’ releasing this Friday.





* Kalyanram has established his own production company NTR Arts and has been producing movies himself from the past five or six years. Right from the beginning he has been encouraging new and upcoming directors. He earned the first hit of his career with Athanokkade. Later bagged another hit in the form of ‘Hare ram’. But Kalyanram has been facing bad patch of late. He is coming up once again with ‘OM 3D’. 



* Top Hollywood technicians, who worked for movies like ‘Final Destination’ and Avatar, have worked for ‘Om 3D’. ‘Om 3D’ team took one year just for post production activities.




* Om is produced with a whopping Rs 25 crores budget. This is the biggest budget movie in Kalyanram’s career.



* Latest 3D cameras and technology has been used in the making of Om movie. Hollywood team which gave technical support to Avatar movie has been part of ‘Om 3D’ team.


* Revenge dramas have worked well for Kalyanram. Both his hit movies Athanokkade and ‘Hare ram’ are revenge based stories. ‘Om 3D’ is also a revenge based story. Om depicts the fight which a hero takes up for his father’s sake. Karthik appears as Kalyanram’s father. Jayasudha is playing an important role. 


* Flop heroines Kriti Karbanda and Nikisha Patel have acted as heroines. It has to be seen whether they will get a hit at least with this movie.

 


* Nandamuri fans expect sensational punch dialogues from their heroes. ‘Om 3D’ is said to be filled with many such emotional dialogues.


* Kalyanram promises that ‘Om 3D’ will be very refreshing in all aspects either in story or script or technical elements. 


* Superstar Rajini gave a big boost up for ‘Om 3D’ movie. After watching ‘Om 3D’ he said, he felt the same feeling which he experienced when he watched Avatar. Right from the beginning ‘Om 3D’ has been receiving positive talk. It has to be seen whether this positive talk will convert into hit talk.

 a


டிஸ்கி- மரியான் படம்பிரிவ்யூ ஷோபார்த்தநண்பரினச்டேட்டஸ்

Maryan‬ --- Dhanush yet again proves that he is THE BEST actor in Indian Cinema in present generation. Parvathi was equally good & had lived the role of village girl. She will disturb the sleep of youngsters. Cinematography by French person was the major highlight of the movie. 


 ARR Music was good but was it used properly? Had Bharath Bala satisfied only Dhanush fans who likes his acting skills or people who likes him as an entertainer? This is not a COMMERCIAL movie. It is a movie which will receive awards & will be remembered by Dhanush fans for his awesome performance. 

Thursday, July 18, 2013

LOOTERA - சினிமா விமர்சனம்

 
 
 தினமலர் விமர்சனம்

சிறுகதை மன்னன் ஓ ஹென்றியின் ‘கடைசி இலை’ சிறுகதையை தழுவிய காதல்காவியம். ஐம்பொன் சிலையை களவாட வந்தவனிடம், அழகுப்பெண் ஒருத்தி காதலில் வீழ்வதும், கடைசியில்... பட்ட மரத்தின், ஒற்றை இலையாக அவள் தனியே தவிப்பதும்தான் கதை.

பாஜ்பாய் (ஆரிப் ஜாகாரியா) பலே கடத்தல்காரன். அவனுடைய குறி எல்லாம் பழங்கால சிலைகள். ஜமீன்தார் சவுமித்ர ராய் சவுத்ரியின் (பருன் சந்தா) குலக்கோயில் சிலையை திருட அனுப்பப்படுகிறான் வருண் ஸ்ரீவத்சவ் (ரன்வீர் சிங்). மூச்சுத்திணறல் நோயால் அவதிப்படும் ஜமீன்தாரின் ஒரே மகள் சவுதாமினி பக்கி ராய் சவுத்ரி (சோனாக்ஷி சின்கா), வருணால் காப்பாற்றப்படுகிறாள். காதல் அங்கே பற்றிக் கொள்கிறது.
 
 
 வருண் தன் குறிக்கோளில் ஜெயிக்கிறான். அந்த நேரத்தில் ஜமீன்தாரின் சொத்து அரசு வசமாகிறது. துயரம் தாளாமல் கடவுளோடு ஐக்கியமாகிறார் ஜமீன்தார். ‘தன் காதலை களவுக்குப் பயன்படுத்திக் கொண்டானே தன் காதலன்’ என்கிற சோகத்தோடு... எல்லாம் அற்றுப்போய், ஒற்றை இலையாக, உயிரைப் பற்றிக்கொண்டிருக்கும் பக்கி ராயின் வாழ்வில், மீண்டும் வசந்தம் வீசியதா? என்பது, இன்னும் கொஞ்ச காலத்துக்கு மறக்க முடியாத ‘ஸ்வீட்’ க்ளைமாக்ஸ்.
 
 


ஐம்பதுகளின் ரம்மியத்தை, அழகு குலையாமல் டிஜிட்டலில் எடுத்து, தங்கத் தட்டில் பரிமாறி இருக்கிறார் இயக்குனர் விக்கிரமாதித்யா மோட்வானே. வட இந்தியாவின் ஆங்கிலேய கால சூழலை, அச்சு பிசகாமல் அள்ளி வந்திருக்கிறது மகேந்திர ஷெட்டியின் கேமரா! சென்ற நூற்றாண்டை நினைவில் கொண்டுவரும், இனிமையான பாடல்களை தந்திருக்கிறது அமித் திரிவேதியின் இசை. ரன்வீர் சிங்கும், சோனாக்ஷி சின்ஹாவும் பாத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள். இன்றைய திரைச் சூழலுக்கு 142 நிமிடங்கள் என்பது கொஞ்சம் நீளம்தான்! ஆனால்... நல்ல ஓவியமோ, சிற்பமோ, நாள் கணக்கு வைத்தா உருவாக்கப்படுகிறது?

மொத்தத்தில் ‘லூட்டேரா’ - உயிர் பருகும் காதல்

ரசிகன் குரல்: ஏன் பங்காளி... 60 வருஷத்துக்கு முன்னாடி லவ்வர்ஸ் கிஸ் பண்ணிக்க மாட்டாங்களோ?
 
 
 
 
  • நடிகர் : ரன்வீர் சிங்
  • நடிகை : சோனாக்ஷி சின்ஹா
  • இயக்குனர் :விக்கிரமாதித்யா மோத்வானே
 
 
A