Wednesday, March 06, 2013

தஞ்சை பட்டு கைத்தறி நெசவாளரின் பேட்டி


கோர்வை மீது புதிய பார்வை!

ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

கைத்தறி நெசவு மீது பெருங்காதல் அந்த இளைஞருக்கு. நெசவாளர்களின் வாழ்வு நிலை, கைத்தறி நெசவுத்தொழிலின் இறங்குமுகம் குறித்தெல்லாம் மிகவும் நொந்து போனவர். கடந்த சில ஆண்டுகளாகவே அத்தொழிலின் மேன்மைக்கென பல புதிய சிந்தனைகளுடன் போராடி கைத்தறிப் பட்டுச் சேலை நெசவில் கோர்வை எனப்படும் பாரம்பரியமான கைவேலைப்பாடு முறையை மீண்டும் உயிர்ப்பித்துள் ளார். அந்த இளைஞர் விஜய் கணேஷ். வயது இருபத்தியெட்டு.
தஞ்சாவூர், மானம்புச்சாவடி பகுதியில் பூர்விகமாக வாழ்ந்து வருகிறது அந்த இளைஞரின் குடும்பம்.
என் தாத்தா காலத்தில் எங்களிடம் சுமார் எழுநூறு தறிகள் இருந்துள்ளன. தற்போது எங்களிடம் இருப்பது எழுபது தறிகள் மட்டுமே. காரணம், தொழில் முறையில் பெரும் வீழ்ச்சி. கோர்வை ரக கைத்தறிப் பட்டுச் சேலைகள் உற்பத்தி 1960 வரைக்கும் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. அதுவும் அப்போதெல்லாம் ஒரு பட்டுச் சேலைக்கு இருபுறக் கோர்வை. அதன் பின்னர் அதுவே ஒருபுறக் கோர்வையாக மாறிப்போனது. 2005க்குப் பின்னர் அந்த ஒருபுறக் கோர்வையும் ஒரேயடியாக ஒழிந்து போயிற்று. மீண்டும் அந்தக் கோர்வையை புதிய முயற்சிகளில் எளிதாக்கி, செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளான் என் இளைய மகன் விஜய் கணேஷ்!" எனக் கூறிய ராஜரத்தினத்திடம், அது என்ன சார் கோர்வை? அதிலும் ஒருபுறக் கோர்வை... இருபுறக் கோர்வை?" என்றோம்.

கைராட்டை மூலமாக நாடா தார்க்குச்சியில் நூல் சுத்திக் கொண்டிருந்த இளைஞர் விஜய் கணேஷ் எழுந்து வந்தார் நம்மிடம். தினசரி ஒரு மணி நேரமாவது கைராட்டையில் நூல் சுத்திடுவேன்" என்றவர், வெண்பட்டுப் போல புன்னகைத்தார். கைத்தறிப் பட்டுச் சேலையின் கரைக்கும் (பார்டருக்கும்), முந்திக்கும் (பெட்னி எனப்படும் முந்திக்கும்) இரு வேறு வண்ண நூல்களை ஒவ்வொரு இழையாகக் கைகளால் கோத்து நெய்வதே கோர்வை. இதில் ஒரு கைத்தறிப் பட்டுச் சேலையின் இருபுற பார்டர்களிலும் (சேலையின் மேலும் கீழும்) இடம்பெறுவது இருபுறக் கோர்வை. சேலையின் கீழ்ப்பகுதியில் மட்டும் இடம்பெறுவது ஒருபுறக் கோர்வை. 1960 மற்றும் 2005க்குப் பின்னர் மேற்கண்ட இரண்டு வகை வேலைப்பாடுகளுமே நெசவிலிருந்து விடைபெற்றுப் போய்விட்டன!" என்றார் விஜய் கணேஷ்.
உலகிலேயே இந்தியாவில்தான் மிக அதிக அளவில் கைத்தறிப் பட்டு நெசவு நடைமுறையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். உத்தரபிரதேசம், குஜராத், ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தொழில் வளர்ச்சியில் இறங்கு முகமே என்றாலும் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது. காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், கும்பகோணம், தஞ்சாவூர், சேலம், பரமக்குடி போன்ற நகரங்களில் கைத்தறிப் பட்டுச் சேலை நெசவு நிகழ்ந்து கொண்டிருந்தாலும், பெரும்பாலான இடங்களில் கோர்வை கை வேலைப்பாடு காணப்பட வில்லை என்றே கூறப்படுகிறது.

இருபுறக் கோர்வை வேலைக்கு ஒரு தறிக்கு இரு நெசவாளிகள் தேவை. ஒருபுறக் கோர்வைக்கு ஒரு நெசவாளி போதும். இத்துடன் ஒரு தறிக்கு பயிற்சி நெசவாளியும் ஒருவர் வேண்டும். விசைத்தறிக்கு இடம்பெயர்ந்தது பட்டுச் சேலை. அங்கு அதிக அளவு உற்பத்தி, அதிகக் கூலி என்றானதால், கைத்தறிப் பட்டுச் சேலை நெசவில் கோர்வை கை வேலைப்பாடு என்கிற பாரம்பரிய கலைத்திறன் நுட்பம் கரைந்து போனது!" என்று இடையில் ஊடுருவும் நூலிழையாகப் பேசுகிறார் அந்த இளைஞரின் மூத்த சகோதரரான விஸ்வநாத்.
நெசவாளர்களில் பலரும் தமது பூர்விகத் தொழிலிலிருந்து, வேறு வகை வேலைகளுக்கு மாறிப் போய் விட்ட நிலையில், பாரம்பரிய கோர்வை கை வேலைப்பாடு திறனையும் சற்றே எளிதாக்கி, மீட்டுருவாக்கம் செய்துள்ளார் விஜய்கணேஷ்.

எனக்குள் பெருங்கனவுகள் பல உள்ளன. எங்களுடைய ஏழு தறிகளில் இருபுறக் கோர்வை பட்டுச் சேலைகள், மீதமுள்ள தறிகளில் ஒரு புறக் கோர்வை பட்டுச் சேலைகள் நெய்யப் படுகின்றன. முதலில் எங்கள் தறிகளில் வேலை செய்யும் நெசவாளிகளுக்கு சற்றே கூடுதலான ஊதியம் தந்து வருவதென முடிவெடுத்தோம். மேலும் இதனைப் பெரிய கார்ப்பரேட் நிறுவனம் போல இயங்கச் செய்ய வேண்டுமென்கிற எதிர்காலத் திட்டமும் என் மனசுக்குள் உள்ளது




 பொதுவாகவே கைத்தறி பெரு உற்பத்தியாளர்கள் தாமாக முன்வந்து நெசவாளர்களுக்குக் கூடுதல் கூலி தரலாம். ஆனால், அவர்கள் தருவதில்லை. ஏனெனில் அவர்களிடமிருந்து போகும் ஒரு பட்டுச் சேலையின் விலையை அவர்கள் நிர்ணயிப்பதில்லை. ஜவுளி விற்பனையாளரே நிர்ணயிக்கின்றனர். இந்த இரு தரப்பினருக்கும் இடையேயான இடைவெளியைச் சுருக்க வேண்டும். பட்டுச் சேலையின் விலையை அதன் உற்பத்தியாளரே இறுதியாக்க வேண்டும். அப்போதுதான் அதன் உற்பத்தியாளருக்கும் சரி, நெசவாளிக்கும் சரி உரிய பலன்கள் கிடைக்கும். அப்போது பாரம்பரிய கோர்வை கை வேலைப்பாடு ரக கைத்தறிப் பட்டுச் சேலைகளுக்கு உரித்தான மதிப்பும் கௌரவமும் தடையின்றி கிடைக்கும். பாரம்பரியக் கலை நீடிக்கும்!" என்கிறார் விஜய் கணேஷ்.

கமல் மீது ஆர் பாண்டியராஜன் வழக்கு

துர்காம்பிகை @ கும்பகோணம்a
துர்காம்பிகை @ கும்பகோணம்  
1. ஏன் பெண்களில் பலர் தங்களை த்ரிஷா ,அஞ்சலி ,ஹன்சிகாவாகவே காட்டிக்கொள்கிறீர்கள்?



------------------------


2. நீதி காலதாமதம் ஆவதே பெரும் பிரச்னை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி: # ஜட்ஜ் லேட் ஜட்ஜ் ஆகும் வரை கேஸ் இழுத்துட்டே போகுது



-----------------------


3. சூரியநெல்லி கற்பழிப்பு வழக்கில் குரியன் மீது குற்றம்சாட்டும் பெண் ஒரு விலைமாது: கேரள எம்.பி. # அண்ணன் ரெகுலர் கஸ்டமர் போல


-------------------------


4. 58 1/2 மணி நேர 'தொடர் முத்தம்' மூலம் கின்னஸ் சாதனை படைத்த தாய்லாந்து # வாய் ப்பைப்பயன்படுத்திய வாய்லாந்து ஜோடி.பல் துலக்குச்சா?



---------------------------


5. உலகத்தில் 32% பிகருங்க மேரேஜ்க்கு முன்னமே கில்மா கோர்ஸ் கம்ப்ளீட்டட்.




அடடா.அதுல கூட 33%,கிடைக்கலையா? # சிஒச


---------------------------


6. எந்த ஒரு உறவும் அப்டேட் ஆகாம இருந்தா அந்த உறவே முறிய வாய்ப்பு இருக்கு # சி ஒ ச




-----------------------------


7. வயசுக்கு வராத பிகரும் வயாக்ரா யூஸ் பண்ணாத ஆணும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை # சி ஒ ச


-------------------------


8. மரணதண்டனையை விடக்கொடுமையான தண்டனை - நம்மை உண்மையா நேசிச்சவங்களை நாம பிரிஞ்சு வாழ நேர்வதே # சில்லுனு ஒரு சந்திப்பு



-----------------------


9. ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் "ஐ". இது அவருக்கு 50வது படம் # ஐம்பதிலும் அட்டர்பிளாப் வரும்்


-------------------


10. வாக்கிங் போகும்போது செல் போன் ல பேசிட்டே போனா அவரை செல்வாக்குள்ளவர் (் cell walk உள்ளவர்)னு சொல்லலாமா?


-----------------------
 
தெப்பக்குளம் இருக்கு.நடுவுல கொஞ்சம் (நஞ்சம் இருந்த)தண்ணீரைக்காணோம்
 a

தெப்பக்குளம் இருக்கு.நடுவுல கொஞ்சம் (நஞ்சம் இருந்த)தண்ணீரைக்காணோம்  

11. அபிலாஷா நடிச்ச கானக சுந்தரி படத்துலயே ஒரு வனயுத்தம் சீன் இருக்கு ;-)


------------------------


12. பாஜக தமிழகத்தில் செல்வாக்குடன் உள்ளது : பொன்.ராதாகிருஷ்ணன் # ஆமா.ஊர்ல 99% ஆண்கள் பிஜேபி ங்க தான்



-----------------------


13. கமல் மீது ஆர் பாண்டியராஜன் வழக்கு.அவர் பட டைட்டிலை வைத்து நெத்தியடி வெற்றி என போஸ்டர் ஒட்டிட்டாராம் # சும்மா



------------------------



14. பின்னங்கழுத்து பிடனி அடி வெற்றி னு போஸ்டர் ஒட்டி இருக்கீங்ளே? நெற்றி அடி வெற்றி னு ஒட்டுனா R பாண்டியராஜன் பட டைட்டில்னு எதிர்ப்பாரே?



--------------------------


15. காதலி கறிவேப்பிலை மாதிரி.சிருங்கார ரசத்துக்கும் மணம் சேர்க்கும் மனம்



-------------------------


16. சன்டே ஆச்சுன்னா போதும்.இந்த சம்சாரங்க புரண்டு புரண்டு படுப்பாங்களே தவிர எந்திரிக்க மாட்டாங்க



-------------------------


17. பெருமாள் கோயில் ல குருக்கள் பிரசாதமா துளசி யை குடுக்கும்போது தமிழன் கடல் துளசியை நினைச்சுக்குவான்



--------------------------


18. ஸண்டே சம்சாரத்தை வெளில கூட்டிட்டுப்போகனுமேன்னு அங்கலாய்ப்பவர்கள் நைஸா மனைவியின் மேல் உதட்டில் மார்க்கர் பென் னால் மீசை வரைந்து விடவும்


-----------------------

19. அறந்தாங்கில பொண்ணு கட்டுனா தாங்கு தாங்குனு தாங்கி காலம் தள்ளனுமா?


---------------------


20. பாண்டிச்சேரி ஜீவா தியேட்டர் அருகே கவுரமான கண்ணியமான குடும்பப்பாங்கான ஹாலிவுட் கில்மா சினிமா டி விடி உலக்த்தரத்தில் கிடைக்குது ;-)



-------------------------

 கும்பகோணம் மாசிமக பிரம்மோற்சவம் நிகழ்ச்சி நிரல் 
கும்பகோணம் மாசிமக பிரம்மோற்சவம் நிகழ்ச்சி நிரல்



21. பெருமாள் கோவிலுக்கும் கடலுக்கும் உள்ள பொதுவான அம்சம் துளசி



-------------------------


22. நான் சொல்வதை கேட்கும்படியான மத்திய அரசு அமைய வேண்டும்-ஜெ#அப்போ சிங் குக்கு பதிலாஒரு ஜிங்க் சக் தான் பி எம் ஆகனும்




---------------------


23. சம்சாரம் 4 மணி நேரத்துல சமைப்பதை புருஷன் 4 நிமிஷத்துல் சாப்பிட்டடறான் # நீதி - ஆண் பெண்ணை விட வேகம் வி வேகம்




--------------------


24. கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும். பெண்ணை நம்பாமல் இராதே.உன் வாழ்க்கைப்போக்கையே மாற்றும்




---------------------


25. ஸி யூ லேட்டர் = உன்னை தாமதமாக சந்திக்கிறேன் # சபாஷ் துபாஷ்



--------------------


26. சின்ன விஷயத்தை பெருசு பண்றவங்க 1,சம்சாரம் 2 டேமேஜர் 3 நடிகை


-------------------------


27. சோகம்னா என்னன்னே தெரியாம வளர்ந்தவங்களை அ சோகர் என அழைக்கலாமா? # செத்தாண்டா சேகரு



-----------------

28. க்ரைம் ஸ்டோரி ரைட்டர்ஸ்க்கு பிடிச்ச சப்ஜெக்ட் கெ"மிஸ்ட்ரி"



------------------


29. டாக்டர்ங்களுக்கு பிடிச்ச சப்ஜெக்ட் பிSICKஸ்


---------------------


30. கும்பகோணத்துல திரும்புன பக்கம் எல்லாம் கோயில்தான்.காதலர்கள்க்கு கொண்டாட்டம்தான்.



-----------------------

 கும்பகோணம் மீனாட்சி பவன் ல சாதா ரோஸ்ட் ரவா ரோஸ்ட் எல்லாம் 30 ரூபா.எதை எடுத்தாலும் ஒரே விலை தேர்க்கடை நினைவு  
 

 
கும்பகோணம் மீனாட்சி பவன் ல சாதா ரோஸ்ட் ரவா ரோஸ்ட் எல்லாம் 30 ரூபா.எதை எடுத்தாலும் ஒரே விலை தேர்க்கடை நினைவு



31. காங்கிரஸ் நினைத்தால் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் EVKS இளங்கோவன் # ஆனா நினைக்க மாட்டீங்க.அதானே?



-----------------------


32. பட்டுக்கோட்டை என்றதும் நாவல் நினைவு வந்தா நீ PKP ரசிகன்.SILK FORT ன் நேவல் சீன் நினைவு வந்தா நீ BJP



----------------------


33. தமிழர்களால் மறக்க முடியாத சுற்றுலாத்தள(ல)ங்கள் - 1. நமீதா 2 . ஷகீலா 3. ஹன்சிகா மோத்வானி 4. கலா மாஸ்டர்


-------------------------


34. சில்மிஷம் செய்பவர்களை பளார் என்று அடியுங்கள்! ராணி முகர்ஜி அட்வைஸ் # அடிக்கிற கைதான் அணைக்கும்னு எவனாவது கிளம்பிடப்போறான்




-------------------------


35. லவ்வர்ஸ் டே முடிஞ்சுது.இனி லவ்வர்ஸ் நைட் ;-))



-----------------------------






Tuesday, March 05, 2013

ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ் - சினிமா விமர்சனம் ( குமுதம் )

 

குமுதம் சினி விமர்சனம்

டான்ஸ், டான்ஸ், டான்ஸ். படம் பூராவும் டான்ஸ்தான். வேறு எதுவும் இல்லை.

பிரபுதேவா இருப்பதால் ஹிந்திப் படத்தை தமிழில் டப் பண்ணியிருக்கிறார்கள்.

ஸ்டிரீட் டான்ஸர், ஸ்டெப் அப் படங்களில் டீ! (காப்பி உடம்புக்குக் கெடுதலாம் பாஸ்!)

ஹெ லெவல் டான்ஸ் ஸ்கூலில் இருந்து, டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவைத் துரத்தி விடுகிறார்கள். அவர் பிள்ளையார் ஊர்வலத்தில் நடனமாடும் சில பசங்களை ஒன்று சேர்த்து, அவர்களுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்து, போட்டியில் ஜெயிக்க வைப்பதே கதை.

பிரபுதேவா அமைதியாகச் செய்திருக்கிறார். ஒரு டான்ஸ் மட்டும் ஆடி, எல்லோரையும் ஆட்டுவிக்கிறார். வெளியேற்றப்பட்ட வலியை அற்புதமாகக் காட்டியிருக்கிறார்.

படத்தில் பிரபுதேவாவைத் தவிர தெரிந்த முகம் யாருமே இல்லை என்பது பெரிய மைனஸ் பாயிண்ட் கதாநாயகி கூட கிடையாது. எங்கும் ஹிந்தி வாசனை வேறு ஜூனூன் ஸ்டைலில் டப் செய்திருப்பதும் வெறுப்படிக்க வைக்கிறது.

ஜஹாங்கீராக வருபவர் நல்ல தேர்வு. தோற்றபிறகு பொருமாமல் கைதட்டி கண் கலங்குவது நன்று.


ஏபிசிடி: டான்ஸ் பிடித்தவர்களுக்கு கொண்டாட்டம். மற்றவர்களுக்குத் திண்டாட்டம்

ஆஹா: டான்ஸ், டான்ஸ், டான்ஸ்.

ஹிஹி: டப்பிங் படம், பிரபுதேவாவைத் தவிர தெரிந்த முகம் ஏதுமில்லை.

குமுதம் ரேட்டிங்: ஓகே.


தினமலர் விமர்சனம்


இந்தியில் பெரிய இயக்குனராக பெயரெடுத்து விட்ட நம்மூர் நடன இயக்குனர், நாயகர் பிரபுதேவா, ரெமோ டிசோசா எனும் வட இந்திய இயக்குனரின் இயக்கத்தில், நாயகராக நடித்து தமிழிலும், இந்தியிலும் வெளிவந்திருக்கும் படம்தான் "ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்!"

கதைப்படி பிரபுதேவாவும், அவரது நண்பர் கே.கே.மேனனும் மும்பையில் பிரபலமான நடனப்பள்ளி ஒன்றை தொடங்கி நடத்துகிறார்கள். ஒருகட்டத்தில் பிரபுதேவாவுக்கும், நண்பர் கே.கே.வுக்குமிடையே ஈ‌கோ யுத்தம் கிளம்ப, அதனால் அங்கிருந்து கிளம்பும் பிரபுதேவா, தனது மற்றொரு நடன நண்பர் கணேஷ் ஆச்சார்யாவின் குடியிருப்புக்கு குடிபெயர்கிறார். கணேஷ் ஆச்சார்யாவும், கே.கே.வால் பாதிக்கப்பட்டவர் என்பதால் சென்னை கிளம்ப நினைக்கும் பிரபுதேவாவை மும்பையிலேயே பிடித்து வைத்து வேறு நடனபள்ளி ஆரம்பிக்க தூண்டுகிறார் கணேஷ்.

பிரபுதேவாவும், கணேஷ் எதிர்பார்க்காத வகையில் காசுக்காக நடனம் கற்று தருவதை தவிர்த்து திறமைகள் இருந்தும் பல்வேறு குரூப்களாக பிரிந்து கிடக்கும் அந்த குப்பத்து இளைஞர்களுக்கு டான்ஸ் சொல்லித்தர களம் இறங்குகிறார். அப்புறம், அந்த இளைஞர்களின் பெற்றோர் போடும் தடைகள், தன் நண்பர் கே.கேவின் நக்கல் நையாண்டி, சூழ்ச்சி ‌எல்லாவற்றையும் தாண்டி அந்த இளைஞர்களை மும்பையில் நடைபெறும் இண்டர்நேஷனல் டான்ஸ் போட்டிகளில் ஜெயிக்க வைக்கிறார், ரசிகர்களை வியக்க வைக்கிறார்.
 
 
 


பிரபுதேவாவின் அடிப்படையே நடனம் என்பதால் ஒரு பக்குவப்பட்ட நடன இயக்குனராக படத்தில் பாத்திரத்தோடு ஒன்றிப்போய், ரசிகர்களை இருக்கைகளில் கட்டிப்போடுகிறார். நட்பு, துரோகம், நம்பிக்கை என்று நடிப்பில் சாந்த சொருபியாக நம்மை வியக்க வைக்கும் பிரபுதேவா, நடனம் என்று விந்துவிட்டால், நடராஜரூபமாக வெளுத்து கட்டுவது படத்தின் பெரும்பலம்.

பிரபுதேவாவின் நல்ல நண்பர் கம் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யாவும் கூட அம்மாம் பெரிய உடம்பை தூக்கி கொண்டு அந்த அசத்து அசத்துவதும், கெட்ட நண்பர் கே.கே.மேனன் க்ளைமாக்ஸ் போட்டியில் பிரபுதேவா நடனக்குழுவினரை விலை பேசுவதும், அதில் ஒருவனை தூக்கி வந்து அவர்களது கான்செப்ட்டை இவரது குழு மூலம் அரங்கேற்றுவதும் எதிர்பாராத திருப்பங்கள். தனது நடன குழுவின் கான்செப்ட் களவாடப்பட்டது கடைசிநேரத்தில் தெரிந்தும் அதுபற்றி கவலைப்படாமல் மும்பை வீதிதோறும் குறிப்பாக விநாயகர் ஊர்வலங்களில் ஆடப்படும் பிள்ளையார் டான்ஸையே வித்தியாசமும், விறுவிறுப்பாக செய்து காட்டி நடன போட்டியில் பிரபுதேவா குழு வெல்வதும் சூப்பர்ப்!

பிரபுதேவா, கணேஷ் ஆச்சார்யா தவிர கே.கே.மேனன், சல்மான், லூரன் கோட்டிலிப் என்று நட்சத்திர பட்டாளம் மொத்தமும் வட இந்தியமுகங்களாகவே தெரிவது படத்தின் பலவீனம்!

ஆனாலும் சச்சின் ஜிகாரின் பிரமாண்ட இசையும், விஜய்குமார் அரோராவின் பிரமாதமான ஒளிப்பதிவும், ரெமோ டிசோசாவின் இயக்கத்தில், "ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்" படத்தை, இன, மொழி, முகபேதம் கடந்து தூக்கி நிறுத்துகின்றன பேஷ், பேஷ்!


ஆக மொத்தத்தில், "ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்" (ஏ.பி.சி.டி) - "ரசிக்கலாம் ஆடியன்ஸ்!"
 
 
நன்றி - தினமலர் , குமுதம் 
 
 
டிஸ்கி - மார்ச் மாசம் இயர் எண்டிங்க் ஒர்க் இருப்பதால் ஆஃபீசில் டைட் ஒர்க். அதனால் சுமாரான படங்களுக்கு படம் பார்த்து (ம்) விமர்சனம் டைப் பண்ண டைம் இல்லை 
 
 
 
 

சூது கவ்வும் இயக்குநர் கம் தீயா வேலை செய்யணும் குமாரு வசனகர்த்தா பேட்டி

வரிசையாக் குறும்படங்கள் எடுத்துப் பழகிட்டோமா? எந்தக் கதைக்குத் திரைக்கதை எழுதினாலும், 10, 20 நிமிஷத்துக்குள்ள படமே முடிஞ்சிருது. சுந்தர்.சி சார் இயக்கும் 'தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்துக்கு வசனம் எழுதினேன். அப்போதான் ஒரு சினிமாவுக்கான ஸ்க்ரிப்ட்டுக்கு, எதையும் கொஞ்சம் மேல இருந்து பார்க்கணும்னு கத்துக்கிட்டேன். இப்போ ஆல் இஸ் வெல்!'' - பளிச்செனச் சிரிக்கிறார் நலன். 'நாளைய இயக்குநர் சீஸன்-1’ வின்னர். இப்போது 'சூது கவ்வும்’ என்று வெள்ளித் திரைக்குப் படையெடுக்கிறார்.  


 ''திருச்சி பையன். எம்.டெக். படிச்சிட்டு ஈவென்ட் மேனேஜ்மென்ட் வேலை பார்த்துட்டு இருந்தேன். சும்மா இருக் கிறப்போ நெட்ல ஹாலிவுட் படங்களின் ஸ்க்ரிப்ட் படிச்சுட்டு இருப்பேன். ஏதோ ஒரு வெளிநாட்டு சேனலில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். ஆறேழு இளைஞர்கள் போட்டி போட்டுக் குறும்படங்கள் எடுப்பாங்க. 



அதை அக்குவேறு ஆணிவேரா அலசி ஆராய்ஞ்சு சிறந்த குறும்படத்தைத் தேர்ந்தெடுப்பாங்க நடுவர்கள் குழு. இங்கேயும் அப்படி ஒரு நிகழ்ச்சி வந்தா நல்லா இருக்கு மேனு மனசுல நினைப்பு ஓடிட்டே இருக்கிறப்ப, 'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சி அறிவிப்பு வந்துச்சு. ஓவர் டோஸ் உற்சாகத்துல வீட்ல பொய் சொல்லிட்டு, 15 ஆயிரம் ரூபா பணத்தோட குறும்படம் எடுக்க வந்துட்டேன்.



'நெஞ்சுக்கு நீதி’, 'உண்மையை சொல்லணும்னா’, 'நடந்தது என்னன்னா?’, 'துரும்பிலும் இருப்பார்’னு எட்டுக் குறும்படங்கள் எடுத்தேன். ஒவ்வொரு குறும்படமும் எனக்கு ஒரு பாடம் கத்துக்கொடுத்துச்சு. 'நாளைய இயக்குநர்’ டைட்டில் ஜெயிச்சதும் உடனே சினிமாவுக்கு வரக் கூடாதுனு உறுதியா இருந்தேன். நிறையக் கத்துக்கிட்டே இருந்தேன். அதனால்தான் என் நண்பர்கள் கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி மோகன் எல்லாம் முத்திரை பதிச்ச பிறகு ஃபீல்டுக்கு வந்திருக்கேன்.''



''அதென்ன குறும்பட இயக்குநர்கள் எல்லாருக்கும் விஜய் சேதுபதி செல்லமா இருக்கார்?'' 



''விஜய் சேதுபதி என் நண்பர். என் குறும்படத்தில் நடிச்சவர். அந்த நட்பில் 'சூது கவ்வும்’ ஸ்க்ரிப்ட் படிச்சிட்டு கமென்ட்ஸ் சொல்லச் சொன்னேன். படிச்சுட்டு 'நானே நடிக்கிறேன்’னு ஆசையா சொன்னார். 'சும்மா இருங்க சேது... நாப்பது வயசு கேரக்டருக்கு செட் ஆக மாட்டீங்க. நான் இந்த கேரக்டரை உங்களுக்குத் தந்து கஷ்டப்படுத்த மாட்டேன்’னு சொல்லிட்டு நான் மறந்துட்டேன்.



 கொஞ்ச நாள் கழிச்சு முடி, தாடிக்கு வெள்ளை டை அடிச்சுட்டு, கொஞ்சம் வெயிட் போட்டு, அந்த கேரக்டராவே வந்து நின்னார். அப்போ அவர் அடம்பிடிச்சது எவ்வளவு நல்லதுனு இப்போ சந்தோஷப்படுறேன். படத்தின் லீட் கதாபாத்திரத்தில் நடிக்கிறவருக்கு இருக்கும் அந்த டெடிகேஷன்தான் எங்களைப் போன்ற முதல் பட இயக்குநர்களுக்குத் தன்னம்பிக்கை தர்ற விஷயம். அந்த வகையில் விஜய் சேதுபதி குறும்பட இயக்குநர்களின் ஃபேவரைட்டா இருக்கார்.''  



''குறும்பட அனுபவம் சினிமாவுக்கு உதவும்கிறது ஓ.கே. ஆனா, இந்த டிரெண்ட் தொலைநோக்கில் சினிமாவுக்கு நல்லதா, கெட்டதானு ஒரு பக்கம் விவாதம் ஓடிட்டு இருக்கே..?'


'
''இப்போதான் குறும்பட இயக்குநர்களை மதிச்சு பொறுமையாக் கதை கேட்கும் பழக்கமே இண்டஸ்ட்ரியில் வந்திருக்கு. அதுக்குள்ள அதைப் பத்தின விவாதங்கள் எதுக்குங்க? எல்லாரும் ரசிக்கிற மாதிரி குறும்படம் இயக்குவதும் ரொம்ப சவாலான வேலைதானே. ரொம்பக் குறைஞ்ச பட்ஜெட், அவுட்டோர் அனுமதிகள், ஒரு வாரத்துக்குள் படம் பண்ண வேண்டிய நெருக்கடி, உதவி இயக்குநர், புரொடக்ஷன் மேனேஜர்னு பலர் பார்க்க வேண்டிய வேலையை தனி ஒரு ஆளா பார்க்கிறதுன்னு பல அவஸ்தைகள், அனுபவங்களுக் குப் பிறகுதான் ஒவ்வொரு குறும்பட இயக்குநரும் தன் படைப்பை உருவாக்குகிறார். அதனால், அவங்களைக் குறைச்சு மதிப்பிடத் தேவையில்லை!''



நன்றி - விகடன்

ஹெலிகாப்டர் ஊழல் -இத்தாலி -அதிரடி ( A TO Z SECRETS)


டெல்லி டு இத்தாலி!

கிலி கிளப்பும் ஹெலிகாப்டர் ஊழல்


இந்திய அரசியல் வரலாற்றில் பல புகழ்​பெற்ற ஊழல்கள் பூதாகரமாகத் தோன்றி சாதாரணமாக மறைந்துள்ளன. அதிலும் ராணுவ ஊழல்கள் சுதந்திரம் அடைந்த மறு வருடத்திலேயே தொடங்கியது. கிருஷ்ணன் மேனன் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் தொடங்கிய ஜீப் ஊழல் முதல், இப்போதைய ஹெலிகாப்டர் விவகாரம் வரை பட்டியலில் உண்டு. எல்லா ஊழல்களுமே மர்ம​மாகவே முடித்துவைக்கப்பட்டன. இப்போது புதிதாக விஸ்வரூபம் எடுத்துள்ள ஹெலிகாப்டர் விவகாரமும் இந்த ரகம்தான்.  


காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எதிர்க் கட்சிகள் தூக்கப்போகும் இந்த ஹெலிகாப்டர் ஆயுத விவாதத்தில், பல திருப்புமுனைகள் வர உள்ளன. ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகரான அதிரடிகள் இதோ...


பூனைக்குட்டி வெளியே வந்தது எப்படி? 


1999-ல் முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பைக் கருதி புதிய ஹெலிகாப்டர்களை வாங்க அன்றைய பி.ஜே.பி. அரசு முடிவுசெய்தது. மூன்று ஹெலிகாப்டர்கள் வாங்குவதாக ஆரம்பித்து, பின்னர் எட்டு ஹெலிகாப்டர்களாகி, இறுதியில் 12 வாங்க முடிவு எடுத்து டெண்டர் விடப்பட்டது. இந்த விவகாரம்தான் இப்போது வெடிக்கிறது.



51 மில்லியன் யூரோ ஊழல் தொகையாக இந்தியர்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கப்​பட்டுள்ளது என்று கடந்த பிப்ரவரி 12-ம் தேதி இத்தாலி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இது இந்திய ரூபாய் கணக்கில் 362 கோடி. 2010-ல் முடிவு செய்யப்பட்ட இந்த 12 ஹெலிகாப்டர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை 3,546 கோடி ரூபாய். இதில் 10 சதவிகிதம் கமிஷன் என பேரம் நடந்துள்ளது என்று இத்தாலி அரசு வழக்கறிஞர் அறிக்கை தாக்கல்செய்தது. 



 அந்த ஹெலிகாப்டர் நிறுவனத் தலைமை அதிகாரி கியூசெப் ஒர்சி என்பவர் கைதுசெய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்திய ராணுவத்தின் டெண்டரில் கொடுக்கப்பட்ட லஞ்ச விவகாரம் இத்தாலியில் வெடித்தது அதிர்ச்சியை பன்மடங்காக உயர்த்தியது.  



2011-ல் இத்தாலியில் பிரதமராக இருந்தவர் சில்வோ ப்ரூல்ஷ்கானி. அவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள், செக்ஸ் ஊழல்கள் எல்லாம் சுமத்தப்​படவே, பதவி விலக நேர்ந்தது. அவருக்கு அடுத்துப் பதவி ஏற்றவர் மரியோ மோன்ட்டி. பதவி விலகிய ப்ரூல்ஷ்கானி தன் மீது உள்ள செக்ஸ் வழக்குகள் போன்றவற்றையும் தாண்டி, மக்கள் விடுதலைக் கட்சி என்ற பெயரில் மீண்டும் அரசியலில் தீவிரமாக இறங்கினார். 


76 வயதைக் கடந்த ப்ரூல்ஷ்கானி மூன்று தடவை பிரதமராக இருந்தவர். இப்போது மீண்டும் பிரதமர் பதவிக்கான போட்டியில் இறங்க, இவருடைய அரசியலுக்கு வைக்கப்பட்ட குறிதான் இந்த ஹெலிகாப்டர் விவகாரம். இத்தாலி பிரதமர் மரியோ மோன்ட்டியின் அரசியல் ஆக்ஷன் இல்லை என்றால், இந்தியர்களுக்கு இந்த ஹெலிகாப்டர் பேரம் தெரியவே வாய்ப்பு இல்லை.  



இந்தியாவுக்கு ஹெலிகாப்டர்களை சப்ளை செய்த நிறுவனத்தின் பெயர் ஃபின் மெக்கனிகா. இது தனியார் நிறுவனம் என்றாலும், இதில் 30 சதவிகிதம் இத்தாலி அரசின் பங்கும் உண்டு. இந்த நிறுவனத்தின் ஹெலிகாப்டர்களை விற்பதில் ப்ரூல்ஷ்கானி செலுத்திய ஆர்வமும் இதில் நடந்த பேரங்கள் குறித்த தகவல்களும் பிரதமர் மரியோ மோன்டியால் கிளறப்படுகின்றன.


இத்தாலி தேர்தல்... இந்தியா ஆர்வம்! 



''இத்தாலியின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம்... மோசமான நிர்வாகமும் இத்தாலி நிறுவ​னங்களின் பணம் வெளிநாடுகளுக்குத் தவறான வழியில் போவதும்தான்'' என்று கூறி இந்த நடவடிக்கைகளுக்கு மரியோ மோன்ட்டி விளக்கம் சொன்னார்.



இத்தாலி பிரதமர் மரியோ மோன்ட்டியின் பதவிக்​காலம் இந்த மாதத்தோடு முடிவடைகிறது. 24, 25-ம் தேதிகளில் இத்தாலியில் தேர்தல் நடந்து முடிந்தது. யார் பிரதமராக வருகிறார்களோ அவர்களைப் பொறுத்தே ஹெலிகாப்டர் பேர விவகாரத்தின் தலைவிதி உள்ளது. அந்தத் தேர்தல் முடிவுகளை இத்தாலி அரசியல்வாதிகள் மட்டுமன்றி, இந்திய அரசியல்வாதிகளும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். கடந்த 2012 பிப்ரவரியிலேயே இந்த பேரம் குறித்த தகவல் வெளியாகியும் இந்திய ராணுவ அமைச்சகம் மட்டுமல்ல... எதிர்க் கட்சிகளும் தூங்கிக்கொண்டு இருந்ததுதான் வேதனை.  



இந்தியாவும் இத்தாலியும் 


இப்போதைய பிரதமர் மரியோ மோன்ட்டி தனது ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்கிற நோக்கத்​தோடு தொடங்கியதுதான் ஃபின் மெக்கனிகா ஆபரேஷன். ஆனாலும், அவரது ஆட்சிக்குக் கொடுத்துவந்த ஆதரவை சில கட்சிகள் வாபஸ்பெற, கடந்த டிசம்பர் மாதம் மெஜாரிட்டி பலத்தை இழந்தார்.


 மோன்ட்டிக்கு முன்பு பிரதமராக இருந்த சில்வியோ ப்ரூல்ஷ்கானி கூட்டணியில் ஏழுக்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. இதில் நார்த் லீக் என்கிற கட்சியைச் சேர்ந்த லிகா நோர்ட் போன்றவர்களின் ஆதரவாளர்கள்தான் ஊழல் நடைபெற்றுள்ள இந்த ஃபின் மெக்கனிகாவின் தலைமைப் பொறுப்​பில் இருந்தனர்.


 இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் இங்கிலாந்தில் இருக்கிறது. அந்த நிறுவனத்தின் கீழ்தான் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. இப்போது கைதாகி இருக்கும் ஃபின் மெக்கனிகாவின் தலைவரான கியூசெப் ஓர்சி, முன்னாள் பிரதமர் ப்ரூல்ஷ்கானிக்கும் லிகா நோர்ட்டுக்கும் வேண்டப்பட்டவர். ஓர்சி லண்டனில் ஹெலிகாப்டர் தயாரிக்கும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட்டில் முன்பு தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். இந்த சமயத்தில்தான் இந்த ஹெலிகாப்டர் டெண்டரும் பேரங்களும் நடந்​திருந்தன. அந்தப் பணத்தைக் கட்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்து இருக்கிறது.


முன்னாள் பிரதமர் சில்வோ ப்ரூல்ஷ்கானி ''லஞ்சம் கொடுப்பது இந்தியாவில் வேண்டு​மானால், அது சட்ட விரோதமாக இருக்கலாம். இத்தாலிய நிறுவனங்களில் இதுபோன்ற ஊழல்​களுக்காக டெண்டர்களை ஆய்வுசெய்தால், அது நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கும்'' என ஒரே போடாகப் போட்டு இருக்கிறார்.



இன்ஃபார்மர் 


2011-ல் இந்த ஊழல் வழக்கின் விசாரணை தொடங்கியது. இதில் வந்த முதல் இன்ஃபார்மர் இந்த நிறுவனத்தின் வெளி விவகாரங்களுக்கான முன்னாள் தலைமை அதிகாரி லோரென்சோ போர்கோனி. இவர்தான் முதன் முதலில் டெண்டர்களைப் பெறக் கொடுக்கப்பட்ட கையூட்டு விவகாரங்களை வெளிப்படுத்தினார். பின்னர் இத்தாலிய அரசு வழக்கறிஞர்களிடம் வாக்கு​மூலமாகவே கொடுத்தார்.


 இதில் இந்தியா சம்பந்தப்பட்ட ஹெலிகாப்டர் விவகாரத்தில் 51 மில்லியன் யூரோ வரை கையூட்டு கொடுக்கப்​பட்டது உட்பட பல விவகாரங்களைப் புலனாய்வுத் துறையிடம் கொட்டினார். மற்ற விவகாரங்​களும் ஒவ்வொன்றாகக் குவிந்தன. இதில் சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் ரால்ப் கைடோ ஹேஸ்செக், கார்லோ ஹெரோஸா, கிறிஸ்டியன் மிஷெல் மற்றும் இந்தியாவில் பலன் அடைந்த ராணுவத் தளபதி தியாகி ஆகியோரின் பெயர்களை சொல்ல விசாரணை சூடுபிடித்தது. இதில் ஹேஸ்செக் மற்றும் கிறிஸ்டியன் மிஷெல் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களின் ரகசியப் பதிவுகள் பல உண்மைகளை வெளியே கொண்டுவந்து இத்தாலி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டே ஒப்படைக்கப்​பட்டன.


முதல் பலி 


இப்படி தொடங்கிய இந்த விசாரணையில் ஃபின் மெக்கனிகா நிறுவனத்தின் லண்டன் பிரிவான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்​தின் வர்த்தகப் பிரிவு இயக்குநர் பலோ பஸ்காரி என்பவர்தான் முதன் முதலில் சிக்கினார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர் கைது​செய்யப்பட்டார். பிரேசில் மற்றும் பனாமா நாட்​டுக்கு முறையே ராணுவப் படகு மற்றும் ஹெலிகாப்டர் விற்ற விவகாரத்தில் நடந்த கையாடலில்தான் இவர் பிடிபட்டார். இந்தக் கைதுக்குப் பின்னர் இந்தியாவில் நடந்த ஹெலி​காப்டர் ஊழல்களும் தப்பாது என்று தெரிய... நம்ம புள்ளிகளின் வயிற்றையும் கலக்​கியது.


கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஊழல் விசாரணை தொடங்கியதுபற்றி தகவல் வந்தாலும், 'தவறு எதுவும் நடக்கவில்லை என்று ஃபின் மெக்கனிகா நிறுவனம் அறிக்கை கொடுத்துள்ளது’ என்றது இந்திய பாதுகாப்பு அமைச்சகம். தொடர்ந்து செய்திகள் வரவே, பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஏப்ரலில் இத்தாலியில் இந்திய தூதரகத்துக்குக் கடிதம் எழுதி விவரங்களைக் கேட்டதே தவிர, விசாரணையில் இறங்கவில்லை. இந்தியாவிடம் ஹெலிகாப்டர்கள் ஆர்டர்களைப் பெற, 362 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த விவகாரம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே வந்துவிட்டது. இத்தாலியின் புலனாய்வு அமைப்பினர் 568 பக்க அறிக்கையை நீதிமன்றத்திலும் தாக்கல்செய்தனர்.



லஞ்சப் பணத்தின் ஒரு பகுதி இத்தாலி அரசியல்​வாதிகளுக்குச் சென்றது என்றும், மற்றொரு பகுதி இந்தியாவுக்கு வந்தது என்பதும் குற்றச்சாட்டு. பணம் எந்த வழியாக எங்கே போனது என்பதைப் பார்த்துவிட்டு, ஹெலிகாப்டர் வாங்கப்பட்டதில் நடந்த அரசியல் கணக்குக்கு வருவோம்.


அது அடுத்த இதழில்...



- சரோஜ் கண்பத்

READER VIEWS


1. பாவம் இப்போது வெளியே வந்தது பூனை குட்டிதான்....ஆம்..அதிலும் 51 மில்லியன் யூரோ....அதில் கமிஷன் தொகை 8 சதவீதம் ம்ம்ம்ம்ம் சும்மார் 280 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்)....

இது வெளி வந்ததில் மிகப்பெரிய பங்கு ரஷ்ய உளவு நிறுவனத்தின் பங்கு அதிகம்....காரணம்.... மிஸ்டர் தியாகி தனது உறவினர்கள் வழியே.....ரஷ்ய மாடல்களை குறித்து அதில் உள்ளவாறு மாற்றங்களை செய்ய சொன்னதுதான்....அவர்கள் பேசியதை பின்மெக்கானிக்கா டேப் செய்தது "லீக்" ஆனதுதான் விபரம் விவகாரமாகிவிட்டது...

அது கிடக்கட்டும்.... சமீபத்திய இங்கிலாந்து பிரதமர் தீடீர் விஜயம்??....

அடுத்து வர இருக்கும் " யானை உழல் " ஆம்..... 126 போர் விமானம் வாங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது..... 2013-ல் இருந்து 1216 - க்குள்.... 2 பில்லியன் டாலர் மதிப்பிலானது.....

அதிலும் ??!!! ஒரு 8 சதவீதம் என்றால் கணக்கிட்டு கொள்ளுங்கள்.....



2.பிஜேபி என்ன அடக்கி வாசிக்கிறதுன்னு சொல்லுங்க. அவர்கள்தான் தீவிர விசாரணை வேணும்னு சொல்கிறார்கள். காங்கிரசு போலியாக நாடாளுமன்ற விசாரணை போதும்னு சொல்கிறது. ஏன்னா அவங்க அதில் மெஜாரிட்டி. அப்பத்தான் விசாரணையை அமுக்க முடியும். ஹெலிகாப்டர் வாங்க முடிவு எடுத்தது மட்டும்தான் பிஜேபி. அதில் திருத்தங்கள் செய்தத்து காங்கிரஸ் அரசு. அமெரிக்க நிறுவனத்தை நிராகரித்து இத்தாலிய நிறுவனத்துக்கு கொடுத்தது காங்கிரஸ். ஆதாரம் இல்லாமல் எதையாவது பேசாதீர்கள்.

3. இந்த டெண்டர் குறித்த பேச்சுவார்த்தையின் போதும் ஆர்டர் கொடுத்த போதும் பணம் வாங்கிய போதும் பி.ஜே.பி.ஆட்சியில் இல்லையே, அவர்கள் எதற்கு அடக்கி வாசிக்க வேண்டும்? என்ன சொன்னாலும் காங்கிரஸின் உதவியால் வாழும் மைனாரிட்டிகள் மாறப் போவதில்லை. 

THANX - JU VI 

நீயா நானா கோபிநாத் பெண்பார்க்கும் படலத்தில்...

1. லைப் ஆப் பை எனக்குக்கற்றுக்கொடுத்த நீதி - பை க்கு எப்பவும் விருது உண்டு # பை பை



-------------------


2. கரன்ட் பில் கட்ட முடியலைனா, நீங்கள் மின்சாரம் பயன்படுத்துவதை குறைத்து விடுங்கள்- ஷீலா தீட்சித் # ச்சீ LAW



------------------------


3. டாக்டர்.3 வருஷம் டயட்ல இருந்தேன்.உடம்பு குறைஞ்சிருக்கா? 



அடடா.எல்லாமே குறைஞ்சிடுச்சே மேடம்



-------------------------


4. கர்நாடக பிகரே.எனக்கு கன்னடம் தெரியாது.உன் கண் நடனம் புரியும்


---------------------


5. மிஸ் மியான்மர் சர்வதேச அழகி பட்டத்தை வென்ற மகிழ்ச்சியில் கோன்யி அயி கியாவ். # உங்க பேரே வாய்ல நுழையலயே..,மியாவ்



---------------------


6. டியர், வேணாம், என் கிட்டே எதுவும் வெச்சுக்காதீங்க.. 



போடி, உன்னையே வெச்சிருக்கேன் ;-))


-------------------------


7. சைக்காலஜி மிஸ் - ஒரு செயல் பழக்கமாக 21 நாள். பழக்கம் செயலிழக்க எத்தனை நாள் ?? 



லொள் ஸ்டூடண்ட் - சிம்பிள் டீச்சர் , 12 நாள்


----------------------


8. வெய்யில் காலம் ஆரம்பிச்சாச்சு, வீட்ல வெளித் திண்ணைல படுக்க வேண்டிய சூழல் வந்தாலும் காத்து வாங்கத்தான்னு கதை விட்டுக்கலாம்


--------------------



9. சொந்தத்துல பொண்ணு கட்டுனா அது சொந்த சம்சாரம், புது இடத்துல பொண்ணு கட்டுனா அது சாதா சம்சாரம் 



-------------------------


10. மிஸ் ஊட்டி  ஃபிகரையே மடக்கிட்டியே, நீ கொடுத்து வெச்சவண்டா.. 



ஆமா, ஆல்ரெடி ஃபிகர்ட்ட 5 லட்சம் ரூபா கொடுத்து ”வெச்சிருக்கேன் ”


---------------------------


11. சார், விளம்பரத்துல பழைய நகைக்கு புது நகைன்னீங்க. பழைய வளையல் குடுத்தா புதுசு தரணுமில்ல ?  



உங்க வளையல் குடுத்தா உங்க குழந்தைக்கு புதுசு


---------------------


12. நான் அரசியலுக்கு வர தூண்டுகோலாக இருந்தவர் விவேகானந்தர் -: ஜெ # அப்போ நான் யாரு ? - எம் ஜி ஆர்




------------------------


13. முதல்முறையாக கமல்-ன் விஸ்வரூபம் படம் ரூ.200 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் இணைந்துள்ளது.# முஸ்லீம் அமைப்புக்கும், ஜெ வுக்கும் நன்றி



------------------



14. அன்னக்கொடி ,மலர்க்கொடி ,இப்டி பேர் இருக்கும் பிகர்களுக்கு கொடி இடை இருக்குமா?




--------------------------



15. அடிக்கடி சாரி கேட்கும் சம்சாரம் அப்பப்ப சுடிதாரும் கேட்கும்



--------------------


16. ஜட்ஜ் - பாத்ரூம்ல வழுக்கி விழுந்ததுக்கு போலீஸ் ல அரெஸ்ட்டட்?



கைதி - வேலைக்காரி மேல விழுந்துட்டேன்.யுவர் ஆனர்



---------------------


17. டெமேஜர்களுக்கெல்லாம் என்ன நினைப்புன்னா தனக்கு மட்டும் தான் குடும்பம் இருக்கு, ஆஃபீஸ்ல ஒர்க்கர்ஸ் யாருக்கும் அது கிடையாதுன்னு


---------------


18. கலா மாஸ்டர் கிஸ் கொடுத்தா - கலா (இ)ச்சுட்டாராம் னு சொல்லலாமா?



----------------


19. என் காதலர் கை விட்டுட்டார்டி.



,எங்கே?



-----------------------

20. லவ் பண்ணி 5 வருசம் கழிச்சு இன்னைக்குத்தான் அவ கன்னத்துல கிஸ் பண்ணேன்.இதே ஸ்பீடுல போனா நீ மெயின் சுவிட்ச் ஆன் பண்ண 50 வருஷம் ஆகிடும்




---------------------


21. வாய் ப்பு கிடைக்கும்போது முத்தமிட்டு விடு



--------------------


22. அணு உலைகள் நம் தேசத்திற்கு தவிர்க்க இயலாதது - பிரணாப் முகர்ஜி # முதல்ல உங்க வேலைக்கு உலை வைக்கனும்


---------------------


23. ரிசப்ஷனிஸ்ட் - யாருமே என்னை் கண்டுக்கல ஏன்?



எல்லாரும் கண்டுக்கிட்டதை நீங்க கண்டுக்கல




-----------------------


24. ஊடல் கொண்ட காதலியை பேசிப்புரிய வெச்சு சமாதானப்படுத்துவது மிதவாதம்.நச் னு ஒரு கிஸ் அடிப்பது தீவிரவாதம்



-------------------------



25. பெண்பார்க்கும் படலத்தில் - இதுதான் பொண்ணு . நீயா நானா கோபிநாத் - வேற வேற வேற



-------------------


26. தமிழில் சினிமா செய்திகள்அம்மா வேடத்தில் மோனிகா பேடி |# ஜெ கேரக்டரா? ஜே ஜே னு இருக்கும்





-----------------


27. தேவயானி - என் புருஷன் குழந்தை மாதிரி.



 தேவையா நீ (லவேணி) - என் புருஷன் யார் கூடப்பழகினாலும் குழந்தை குடுக்கற மாதிரி



---------------------


28.  நீலவேணி க்கு கூந்தல் நீளமா இருக்குமா? # புதன் கிழமை பொழப்பத்த சிந்தனை




---------------------


29. பனி குளிரிலிருந்து தப்பிக்க பிரம்மச்சாரிகள் பெட்சீட் ,டீ .சிகரெட் ,சரக்கு ,தீ மூட்டிக்குளிர் காய்தல் என 5 வழிகளில்





---------------------


30. என் குழந்தை் மெலிந்தே காணப்படுகிறான். ஊட்டச்சத்துக்கு என்ன கொடுக்கலாம் டாக்டர்?



 அம்மா கையால எது ஊட்டி விட்டாலு ம்


--------------------------------------









-----------------------

மேட்டூர் அணையில் 66 பிணங்கள்! தேவாரம் ,போலீஸ் வன்முறை

மேட்டூர் அணையில் 66 பிணங்கள்!

பலாத்காரம்... பால்ரஸ் குண்டுகள்...
வீரப்பன் காட்டில் வெளியாகும் சோகம்
குளிர்ச்சியாகவும் பசுமையாகவும் இருக்கிற இந்த மலைகள் ஒரு காலத்தில் உக்கிரத்தின் உச்சியாக இருந்தது. பரிதவித்துக்கொண்டிருந்த எங்களை யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா? உண்மைகளை உலகத்துக்குச் சொல்ல மாட்டார்களா? நமக்கு விடிவு பிறக்காதா? என ஏங்கிய நாட்களில் எங்கள் சோகத்தைச் சொல்ல யாரும் முன்வரவில்லை. எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் எங்கள் கண் முன்னே சுட்டுக் கொல்லப்படுவார்கள். 



அடுத்த நாள் தினசரிகளில், வீரப்பனோடு அதிரடிப் படை நேருக்கு நேர் மோதல்... வீரப்பன் கூட்டாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பதே தலைப்புச் செய்தியாக இருக்கும். இன்றாவது மனம் திறந்து எங்கள் சோகத்தையும் அனுபவித்த வேதனையையும் கேளுங்களேன்'' என்ற வேதனைக் குரலோடு நிகழ்ந்து முடிந்தது வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஈரோடு மாநாடு.  



உடலில் குண்டுகளோடு இருக்கும் பெலியன், ''சாமி, நான் அந்தியூர் பக்கத்தில் இருக்கும் தேவர்மலை கிராமத்தைச் சேர்ந்தவன். ஒருநாள் மதிய நேரத்துல நான் செங்குளம் மலைப் பகுதியில மாடு மேய்ச்சுக்கிட்டு இருந்தேன். திடீர்னு ஐம்பது, அறுபது அதிரடிப் படை போலீஸ்காரங்க தூரத்துல இருந்து என்னைப் பார்த்து வீரப்பன் ஆளுன்னு நினைச்சு சரமாரியாச் சுட்டாங்க.



 சம்பவ இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்துட்டேன். மயக்கம் தெளிஞ்சு பார்க்கும்போது கோவை ஜி.ஹெச்-ல இருந்தேன். அதிரடிப் படை போலீஸார், 'வீரப்பன் எங்கடா இருக்கான்?’னு கேட்டு மிரட்டினாங்க. 'சாமீ, நான் புள்ளகுட்டிகாரங்க. சத்தியமா வீரப்பனைப் பார்த்ததே இல்லை’னு சொல்லி அழுதேன். இருந்தும் வீரப்பனின் கூட்டாளினு தடா வழக்குப் போட்டு மைசூர் சிறையில் 20 வருஷம் போட்டுட்டாங்க.


என் உடம்பில் 104 ரவைகள் (பால்ரஸ் குண்டுகள்) பாய்ஞ்சு இருந்தது. அதில் நாலு குண்டுகளை மட்டும் எடுத்தாங்க. மீதி குண்டுகளை எடுத்தால், செத்துப்போயிடுவேன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. இன்னும் என் உடலுக்குள்ள 100 குண்டுகள் இருக்குது. வலி தாங்க முடியல. வேலை வெட்டிக்குப் போக முடியல. ராத்திரியில் தூங்க முடியாம துடியாத் துடிச்சுட்டு இருக்கேன். இதோ பாருங்க சார்'' என்று சட்டையைக் கழற்றிக் காண்பித்து அழத் தொடங்கினார்.



ரக்கம்பட்டி மலைக் கிராமத்தை சார்ந்த மாதி, ''என் கணவர் பேரு கிருஷ்ணா. அவர் கடலை, மிளகாய் வியாபாரம் செய்வார். ஒரு நாள் காலையில... என் பொண்ணுக்குக் காய்ச்சல். 'கொளத்தூர் சந்தை போறேன். மத்தியானம் குழந்தையைத் தூக்கிட்டு வா. ஆஸ்பத்திரிக்குப் போகலாம்’னு என் வீட்டுக்காரர் சொன்னார். நானும் குழந்தையைத் தூக்கிக்கிட்டு சந்தைக்கு வந்தேன். அவரைக் காணலை. அங்க இருந்தவங்க, 'உன் வீட்டுக்காரரை போலீஸ் பிடிச்சுட்டுப் போயிடு’ச்சுன்னு சொன்னாங்க.


குழந்தையைத் தூக்கிட்டு மேட்டூர் கேம்ப்புக்கு ஓடினேன். நிர்வாணமா அடிச்சுச் சித்ரவதை செஞ்சதுல, உடம்பெல்லாம் ரத்தமா உக்கார்ந்து இருந்தார். அழுது துடிச்சேன். என் கண் முன்னே அவரை தீப்பந்தத்தில் ஆண் உறுப்பைக் கருக்கினாங்க. உடம்பு முழுசும் தீ பந்தத்தாலேயே சுட்டுக் கொன்னுட்டாங்க. என் மூத்த பையனையும் அடிச்சே கொன்னுட்டாங்க. என்னையும் அடித்துச் சித்ரவதை செஞ்சு தடா வழக்குப் போட்டு மைசூர் ஜெயில்ல அடைச்சுட்டாங்க. தலையில பூட்ஸ் கால்ல உதைச்சதால, அடிக்கடி தலை வலிக்குது. கண்ணு தெரியல. தொடர்ந்து முட்டியில அடிச்சதால நடக்க முடியல'' என்று கதறி அழுதார்.


மார்க்கம்பாளையம் மலைக் கிராமத்தை சார்ந்த சிவனையன், ''நான் பண்ணையத்தில் இருந்தேன். மாடுகளை ஓட்டிட்டுப்போய் மலங்காட்டுல மேய்ச்சுட்டு வரணும். மாடு மேய்ச்சுட்டு இருந்தப்ப, அங்க வந்த அதிரடிப் படை என்னைப் பிடிச்சுட்டுப் போயிட்டாங்க. முதல்ல குன்றி கேம்ப்ல வெச்சிருந்தாங்க. கொஞ்சநஞ்ச சித்ரவதை இல்லை. கண்களைக் கட்டிப் போட்டு, நிர்வாணமா நிற்கவெச்சு, கையிலயும் கால்லயும் விலங்கு போட்டுத் தலைகீழா தொங்கவிட்டு அடிப்பாங்க. ஆசனவாய்ல மிளகாய்ப் பொடி திணிச்சுக் கொல்லுவாங்க. கரன்ட் ஷாக் கொடுத்துக் கொடுமைப்படுத்துவாங்க. 36 நாள் கழிச்சு மேட்டூர் கேம்புக்குக் கூட்டிட்டு வந்தாங்க. அங்கேயும் இதே கொடுமை.



ஒரு நாள் ராத்திரி 9 மணிக்கு என்னையும் இன்னொருத்தரையும் மேட்டூர் டிராவல்ஸ் பங்களாவுக்கு 'ஐயா வந்திருக்கார்... வாங்கடா’னு கூட்டிட்டுப் போனாங்க. என்கூட வந்தவரை இரவு ரெண்டு மணி வரை அதிகாரி ஒருத்தர்  விசாரிச்சார். நான் ஓரமா நின்னுக்கிட்டு இருந்தேன். விசாரிச்சு முடிச்சதும் கண்ணையும் கை கால்களையும் கட்டிப்போட்டு அவரைச் சுட்டுக் கொன்னுட்டாங்க.


 எனக்கு பகீர்னு இருந்துச்சு. என்னை, அந்தப் பாடியைத் தூக்கி ஜீப்புல போட சொன்னாங்க. ஜீப் நேரா மேட்டூர் டேமுக்குப் போனது. பாடியைத் தூக்கி டேமுக்குள்ள போடச் சொன்னாங்க. போட்டேன். என்னை மறுபடியும் கேம்ப்ல கொண்டாந்துவிட்டுட்டாங்க.



இப்படி வாரத்துக்கு மூணு, நாலு பேரை விசாரிச்சுக் கொல்லுவாங்க. 66 பேர் பொணங்களை மேட்டூர் டேம்ல போட்டிருக்கேன். கடைசியா இதுவரை எத்தனைப் பேரை டேம்ல போட்டிருக்கனு அந்த அதிகாரி கேட்டார். '66’-னு சொன்னேன். 'இவனை வெளியில விட்டா, எல்லா உண்மையையும் சொல்லிடுவான். இவனையும் போட்டுடலாம்’னு சொல்லி என் கண்ணையும் கை கால்களையும் கட்டினாங்க. நான்  கதறினேன். கட்டின முடிச்சு அவிழ்ந்துடுச்சு. என்ன நினைச்சாங்களோ... விட்டுட்டாங்க.



இது மாதிரி ஏழு முறை என் கண்களைக்கட்டி, நான் கத்திக் கதறியதும் அவிழ்த்து விட்டுட்டாங்க. எப்படியோ நான் தப்பிச்சுட்டேன். இது எல்லாத்தையும் சதாசிவம் கமிஷன் விசாரிக்கும்போது சொல்லி இருக்கேன்'' என்றார்.



கர்நாடக மலைக் கிராமமான நல்லூர், அஞ்சிபாளையத்தைச் சேர்ந்த செல்வி, ''அப்ப எனக்கு 14 வயசு. குழந்தை பிறந்து 25 நாள் இருக்கும். அக்கா, மாமா, அண்ணன், அண்ணி எல்லாம் கூட்டுக் குடும்பமா வாழ்ந்துட்டு இருந்தோம். நைட்ல வந்த அதிரடிப் படை போலீஸ்காரங்க, எங்களை குடும்பத்தோட பிடிச்சுட்டுப் போய் தனித்தனியாகப் பிரிச்சு, அன்னூர் ஸ்டேஷனிலும், மாதேஸ்வரன் மலை கேம்ப்லேயும், பண்ணாரி கேம்ப்லேயும் போட்டுட்டாங்க. என்னையும் என் கைக்குழந்தையையும் மேட்டூர் ஜி.ஹெச்-ல சேர்த்தாங்க.



என்னைச் சுற்றி எப்போதும் பத்து, பதினைஞ்சு போலீஸ்காரங்க இருப்பாங்க. அடிச்சுத் துன்புறுத்துவாங்க. என் குழந்தைக்குப் பால் கொடுக்கக்கூட விட மாட்டாங்க. அந்தப் பிஞ்சுக் குழந்தை அழுது துடிக்கும். ஆஸ்பிட்டல்ல இருந்த ரெண்டாவது நாள் என் கண் முன்னாடியே குழந்தைக்கு விஷ ஊசி போட்டுக் கொன்னுட்டாங்க.


 பிறகு என்னை மாதேஸ்வர மலை கேம்ப்புக்குக் கூட்டிட்டுப் போய் நிர்வாணமா நிக்கவெச்சு, அங்க இருந்த ஆம்பளைங்க உறுப்புல என்னை கரன்ட் ஷாக் கொடுக்க சொல்லுவாங்க. அங்க இருந்த பொம்பளைங்க உறுப்புல ஆண்களை கரன்ட் வெக்கச் சொல்லுவாங்க. சொன்னபடி கேட்கலைனா, சுட்டுக் கொன்னுடுவாங்க. நாங்கெல்லாம் எப்பவோ செத்துப்போயிட்டோம். இப்ப வெறும் உடம்பு மட்டும்தான் இருக்கு'' என்று கதறி அழுதார்.



காட்டில் வசிப்பவர்களா காட்டுவாசிகள்?

readers views 


1. இந்த விசயத்தில் தேவாரம் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. அவர் தலைமையில் பொலீஸ் செய்ததெல்லாம் கற்பழிப்பும் கொடூர சித்திரவதைகளும் அப்பாவிகளின் மேல் அவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும்தான். அந்த ஏழை மக்களின் வாழ்வாதாரங்களான ஆடு மாடுகளையும் கூட விடு வைக்கவில்லை.



2. படிக்கும் போதே நெஞ்சு படபடக்கிறதே!!! அந்த கொடுமையை அனுபவித்தவர்கள் எவ்வளவு வேதனைப்பட்டு இருப்பார்கள்? இதை எல்லாம் படிக்கும் போது கடவுள் இருக்கிறதா என்ற சந்தேகம் வலுக்கிறது. இந்த போலீஸ்-கார கொடியவர்கள் நிச்சயம் இதே வலியை அனுபவிக்க வேண்டும். 



3. சிங்களர்கள் மட்டும் தான் தமிழனைக் கொடுமை செய்ய முடியுமா... தமிழனும் சளைத்தவனல்ல என்று காட்டியிருக்கிறார்களோ...



4. சமீபத்தில் சுரேஷ், இதற்கு முன் ஆலடி அருணா, அதற்கு முன் தா.கி. அவர்களுக்கு யார் செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? எத்தனையோ பேர், அவர்களது சமயம் வரும்முன்னே விடுதலை பெற்றுச் சென்று இருக்கிறார்கள்!! இந்த அடக்குமுறைகளுக்கும், விசாரணை முறைகளுக்கும், இந்தக் கொடுஞ்செயல்களுக்கும், அதிக வித்தியாசம் இல்லை! மனிதத் தன்மை குறைந்து கொண்டே வருகிறது!! மற்றது அதிகரிக்கிறது!!! கலி காலம் இன்னும் பல நூறு வருடங்கள் இருக்கிறதே? இன்னும் என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ?


5. ஒரு பக்க நியாயம் மட்டுமே சொல்லப்படிருக்கிறது...! முன்பு இப்படித்தான் ஐ.பி.கே.எப் பற்றி சொல்லப்பட்டது...! அதிரடிப்படையின் கூற்றையும் கேட்டு எழுதுங்கள்...! அதிரடி முழுக்க அயோக்கியர்களும் இல்லை காட்டில் முழுக்க புத்தர்களும் இல்லை...!


6. படிக்கும்போதே கண்களில் நீர் பீரிட்டு வருகிறது. படங்களில் வருவதைப்போல இவர்களெல்லாம் அக்கா, தங்ககைகள், அண்ணன் தம்பிமார்களோடு பிறக்கவில்லையா என்றெல்லாம் கேட்கவே தோன்ற வில்லை, இவர்களெல்லோரும் மனித பிறவிகளா என்றே கேட்க தோன்றுகிறது.

ஒரு வீரப்பனை பிடிக்க போகிறேன் என்று, இத்தனை காட்டுமிராண்டிகள்,ஹிட்லர், முசோலினியை நல்லவராக்கிடும் மாக்கள் நம்மிடையே இருந்திருக்கிறார்களே, இவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை கிடைத்தது?


7. தமிழன் இனி மெல்ல சாவன் - இது பொய்
தமிழன் கொத்து கொத்தாய் சாவான் - இது மெய் 


8. அதிரடிப் படையினர் வீரப்பனிடம் இருந்ததாக சொல்லப்படும் நூறு கோடி ரூபாயை என்ன செய்தனர்? இன்று அதிரடிப்படையினரின் பொருளாதார நிலை என்ன? சதாசிவம் கமிஷனில் சொல்லப்பட்ட புகார்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? பதிலில்லாத கேள்விகள். இதுவே இலங்கையிலும். நிச்சயமாக விலங்குகள் வனத்தில் இல்லை. வன உயிர்களே உண்டு. ஆனால் மனிதர்கள்?
 

Monday, March 04, 2013

நான்காம் பிறை - சினிமா விமர்சனம் ( தினமலர் )

 
 
இதுநாள் வரை ஹாலிவுட் படங்களிலே‌யே மனித இரத்தம் குடிக்கும் டிராகுலா எனும் ஓநாய் பேய்களை கண்டு வந்த தமிழ் ரசிகர்களுக்கு, முதன்முதலாக தமிழில் ஒரு டிராகுலா பேய் படம்! விக்ரம் நடித்து வெளிவந்த "காசி" உள்ளிட்ட தமிழ்படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் வினயனின் வித்தியாசமும், விறுவிறுப்புமான இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 3டி படம்தான் "நான்காம் பிறை!"

கதைப்படி, ருமேனியா நாட்டிற்கு, தனது ரகசிய டிராகுலா ஆராய்ச்சிக்காவும், கூடவே தன் புதுமனைவியுடனான ஹனிமூனுக்காவும் செல்லும் ராய் எனும் இளைஞனின் உடம்பில் உட்புகுந்து கொள்ளுகிறான் டிராகுலா இனத்தின் தலைவன்! இந்தியாவில் ஒரு புகழ்பெற்ற ஆன்மிகம் கம் மாந்திரீகவாதி வீட்டில் மறுபிறப்பு எடுத்திருக்கும் தன் காதல் இளவரசியை, ராய் உருவத்தின் மூலம் அடைந்து, அவளையும் கழுத்தோரம் கடித்து, டிராகுலா பேயாக்கி, தங்களது டிராகுலா உலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்பது டிராகுலா தலைவனின் திட்டம்.
 
 
 
 இதற்காக ராயின் புது மனைவியில் தொடங்கி டிராகுலா இளவரசியின் அக்கா, அப்பா உள்ளிட்ட இன்னும் பலரையும் படிப்படியாக தீர்த்து கட்டும் டிராகுலா தலைவன் அலைஸ் ராயின் திட்டத்தை புரிந்து அதை முறியடிக்க முயற்சிக்கின்றனர் டிராகுலாவின் காதல் இளவரசியின் இப்பிறவி காதலன் புதுமுகம் ஆர்யன், டிராகுலா சைன்டிஸ்ட் பிரபு, மாந்திரீகவாதி நாசர் மற்றும் இளம் போலீஸ் அதிகாரி உள்ளிட்டோர்...! இறுதி வெற்றி யாருக்கு...? என்பது க்ளைமாக்ஸ்!!
 


டிராகுலா வேடத்தில் ராய் எனும் ‌கேரக்டரிலும், டிசோசா எனும் பேராசிரியர் ரோலிலும் மாறி மாறி நடிகர் சுதிர் நம்மை பயமுறுத்தி இருக்கிறார் பலே, பலே!

டிராகுலாவின் காதல் இளவரசி மோனல் கஜாரும், அவரது அழகிய அக்காவாக வந்து டிராகுலாவால் கொல்லப்படும் ஷரத்தா தாஸூம் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். 3டியில் இருந்த இருவரது அங்க அவையங்களும் நம் கண்களுக்கு நேரடி பிரமாண்டத்தையும், பிரமிப்பையும் தருவது படத்தின் பெரும்பலம்!
 
 
 


டிராகுலா சைன்டீஸ் பிரபு, ஆன்மிகம் கம் மாந்திரீகவாதி நாசர், டிராகுலா புகழ்பாடும் வயதான டிராகுலா திலகன், மோனல் கஜ்ஜாரின் காதலன் புதுமுகம் ஆர்யன், பிரியா, ஸ்வேதா உள்ளிட்டோரும் படத்திற்கும் தாங்கள் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கும் பலம் சேர்த்திருக்கின்றனர்.

காமெடி போலீஸ் கஞ்சா கருப்பு "கடிக்கிறார். பிரபு, நாசர் தவிர்த்து பெரும்பாலும் மாலையாள நட்சத்திர முகங்களே தெரிவது குறையாகிவிடக்கூடாது என்பதற்காக இவரது காமெடி "ஓ... சாரி கடியையும் விலிய திணித்திருப்பதை இயக்குனர் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!


சதீஷ்பாபுவின் ஒளிப்பதிவும், பிபத் ஜார்ஜின் பின்னணி இசையும் ரசிகர்களை மேலும் பயமுறுத்துவது படத்தின் பலம்! பாடல் காட்சிகள் நச் என்று இருந்தாலும் ஹாரர் படத்தில் பாட்டு - டூயட்டெல்லாம் தேவையா? எனக் கேட்க தோன்றுகிறது. சி.ஜி., கலர் கரைக்ஷ்ன் மற்றும் கிராபிக்ஸ் வேலைகளில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் "நான்காம் பிறை நம்பக்கூடிய பிறையாக இருந்திருக்கும்!

வினயனின் எழுத்திலும், இயக்கத்திலும் இன்னும் நிறைய எதிர்பார்த்தோம் என்றாலும் "நான்காம் பிறை", தமிழ் டிராகுலா ஹாரர் கதைகளுக்கான "வளர் பிறை"
 
 
 
நன்றி -தினமலர்