Monday, February 25, 2013

பதினோராவது பொருத்தம் - ராஜேஷ்குமார் - சிறுகதை

பதினோராவது பொருத்தம்

ராஜேஷ்குமார்
ஓவியங்கள் : ஸ்யாம்
இப்படி ஒரு தேசிய விருது உங்களுக்குக் கிடைக்கும்னு நினைச்சீங்களா?''

 தன்னைச் சூழ்ந்து நின்ற பத்திரிகை நிருபர்களில் இந்தக் கேள்வியைக் கேட்ட அந்த இளம் நிருபரை ஒரு பளிச்சிடும் புன்னகையோடு பார்த்தாள் வர்ஷா. 23 வயதான சித்தன்னவாசல் ஓவியம்.

'' 'மகிள ரத்னா’ என்கிற பெயரில் ஒரு விருது இருப்பதும், அது சமூக சேவையில் ஈடுபட்டு இருக்கும் சிறப்பான பெண்களைத் தேர்ந்தெடுத்
துக் கொடுக்கப்படுகிறது என்கிற விஷயமும் இன்னிக்குக் காலையில்தான் எனக்குத் தெரியும். பொதுவாக, எனக்கு விருதுகளில் விருப்பம் இல்லை. இது எல்லாம் ஒரு நாள் சந்தோஷம்!''

மூத்த நிருபர் ஒருவர் கேட்டார்...

''இந்தச் சின்ன வயதிலேயே சமூக சேவையில் இறங்கிட்டீங்க. அதுல சிறப்பா சேவை செஞ்ச துக்காக தேசிய விருதையும் வாங்கிட்டீங்க. உங்களுடைய எதிர்காலக் குறிக்கோள் என்ன?''

அழகாகப் புன்னகைத்த வர்ஷாவின் சீரான பல் வரிசை ஒரே ஒரு விநாடி வெளிப்பட்டு உடனே மறைந்தது.

''நான் இப்போ ஒரு குழந்தையோட மனநிலையில் இருக்கேன். ஒரு குழந்தைக்குத் தன்னோட கடந்த காலத்தைப் பத்தின கவலையும் இருக்காது. எதிர்காலத்தைப் பற்றின பயமும் இருக்காது. அது தன்னோட நிகழ்காலத்தில் மட்டும் சந்தோஷமாக இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் நான் இருக்கேன். என்னோட அப்பா சத்தியநாதன் ஒரு பெரிய பிசினஸ் மேன்.



 எனக்கு அம்மா கிடையாது. அப்பாகிட்ட செல்லம் அதிகம். நான் எம்.ஏ. சோஷியாலஜி முடிச்சதும் அப்பா என்கிட்ட 'என்னம்மா... அடுத்தது கல்யாணம்தானே? மாப்பிள்ளை பார்க்கட்டுமா?’னு கேட்டார். நான் அதுக்கு உடனே, 'இல்லப்பா... எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம். ஒரு மூணு வருஷத்துக்காவது சமூக சேவை பண்ணாலாம்னு இருக்கேன். நான் சொல்லும்போது நீங்க எனக்குக் கல்யாணம் பண்ணிவெச்சா போதும்னு சொன்னேன். அவரும் ஒப்புக்கிட்டார். நான் கடந்த ஆறு மாத காலமாக இந்த 'மயிலிறகு’ என்கிற சமூக அமைப்பை நடத்திட்டு வர்றேன்!''


''மயிலிறகு என்ற தலைப்பைத் தேர்ந்து எடுத்ததற்கு என்ன காரணம்?''

''மயிலிறகு ஒரு மென்மையான பொருள். நான் தொடங்கி இருக்கிற இந்தச் சமூக அமைப் போட நோக்கமே, வாழ்க்கையில் தோல்விகளைச் சந்திச்சு, ஒருவித விரக்தி மனப்பான்மையோடு இருக்கிறவங்களோட இதயங்களை மென்மையான வார்த்தைகளால் வருடி, அவங்களுக்கு நம்பிக்கையையும் பலத்தையும் ஊட்டுவதுதான்!''

''அதாவது, இது ஒரு வகையான கவுன்சிலிங்?''

''ம்... அப்படியும் வெச்சுக்கலாம்.''

''உங்களுடைய மயிலிறகு மூலமாகப் பயன் அடைந்து, வாழ்க்கையில் வெற்றிபெற்ற நபர்கள் யாராவது உண்டா?''

''ஒரு சின்னப் பட்டியலே இருக்கு. அவங்க சம்பந்தப்பட்ட விவரங்களை நான் தர்றேன். நீங்க அவங்களையே போய்ப் பார்க்கலாம். வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலையோட விளிம்புக்குப் போன எத்தனையோ பேருக்கு வாழ்க்கையோட வசந்த காலத்தைக் காட்டியிருக்கேன்'' - வர்ஷா சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவளுடைய இடது உள்ளங்கையில் பதுங்கி இருந்த செல்போன், தன்னுடைய ரிங்டோனை வெளியிட்டது. எடுத்து நிருபர்களுக்கு ஒரு 'எக்ஸ்கியூஸ் மீ’யைச் சொல்லிவிட்டு... இடது காதுக்குப் பொருத்தினாள். மெள்ளக் குரல் கொடுத்தாள்.

''ஹலோ!''

''அம்மா வர்ஷா... நான் சபாபதி பேசறேன்...''

சபாபதி அவளுடைய அப்பாவின் பால்ய காலத்து நண்பர். மாதம் ஒரு தடவையாவது வீட்டுக்கு வந்துவிடுவார். ஒரு மணி நேரமாவது அப்பாவோடு உட்கார்ந்து அயனாவரத்தில் நடந்த விபத்தில் இருந்து ஐ.நா. சபையில் நிறை வேற்றப்பட்ட அண்மைக்காலத் தீர்மானம்வரை பேசிவிட்டுப் போவார்.

நிருபர்களைவிட்டுச் சற்று விலகி வந்து பேசினான்.
''வணக்கம் அங்கிள்!''
''என்னம்மா... விருதெல்லாம்வாங் கிட்டே போலிருக்கு. கொஞ்ச நேரத் துக்கு முன்னாடிதான் பேப்பரைக் கொண்டுவந்து காட்டினான் விகாஷ். ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. கங்கிராட்ஸ் வர்ஷா!''

''தேங்க்யூ அங்கிள். பை த பை... உங்க சன் விகாஷ் எப்போ யு.எஸ்-லேர்ந்து வந்தார்?''

''ரெண்டு நாளாச்சும்மா. ஜெட்லாக்னு சொல்லி, பகல் பூராவும் தூங்கிட்டான். ஒரு மாச லீவுல வந்திருக்கான். உன்னை நேர்ல க்ரீட் பண்றதுக்காக அங்கே கிளம்பி வந்துட்டு இருக்கான்.''

''வரட்டும் அங்கிள்... நான் பேசிக்கிறேன்.''

''வர்ஷா...''

மறுமுனையில் குரலை இழுத்தார் சபாபதி.

''சொல்லுங்க அங்கிள்...''

''இந்தத் தடவையாவது நீ அவனை கன்வின்ஸ் பண்ணி, கல்யாணத்துக்குச் சம்மதிக்கவைக்கணும். இன்னிக்குக் காலையிலகூட ரிட்டையர்டு ஹை கோர்ட் ஜட்ஜ் ராமானுஜத்தோட பொண்ணு ஜாதகமும் போட்டோவும் வந்தது. பொண்ணு பேரு லயா. பொண்ணு அவ்வளவு லட்சணம். ஆனா, விகாஷ§க் குப் பிடிக்கலை. போட்டோவை ஒரு விநாடிதான் பார்த்தான். தூக்கி வீசிட்டுப் போயிட்டான். பொண்ணுக்கு டபுள் சின்னாம். பிடிக்கலைனு சொல்லிட்டான். எவ்வளவு அழகான பொண்ணைக் காட்டினாலும் ஏதாவது ஒரு குறையைச் சொல்லித் தட்டிக்கழிச்சுடறான்.''


''அங்கிள்... நீங்க கவலையை விடுங்க. இந்தத் தடவை விகாஷை மடக்கிடலாம். போன தடவை அவர் வந்தபோது நான் கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன். இந்தத் தடவை அவரை எப்படியாவது கல்யாணத்துக்குச் சம்மதிக்கவைக்க வேண்டியது என் பொறுப்பு. அவர் ஒரு அழகான பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படறார். நம்மோட பார்வைக்கு அழகா இருக்கிற பெண்கள் அவரோட பார்வைக்கு அப்படி இருக்கிறது இல்லை. அது மட்டும் எனக்குப் புரியுது. அவருக்குக் கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இருக்கு. ஆனா, அவரோட விருப்பத்துக்கு ஏத்த மாதிரி பொண்ணு அமையாததுதான் பிரச்னை.''


''அம்மா வர்ஷா... நீ 'மயிலிறகு’ சமூக அமைப்பின் மூலமா யார் யாருக்கோ கவுன்சிலிங் பண்ணி, மனரீதியா ஒரு ரிலீஃப் கொடுத்திருக்கே... அந்த ரிலீஃபை விகாஷ§க்கும் கொடும்மா. அவன் எந்தப் பெண்ணை விரும்பினாலும் சரி, நான் அந்தப் பெண்ணையே அவனுக்குக் கல்யாணம் பண்ணிவைக்கத் தயாரா இருக்கேன்.''


''அட! கவலையை விடுங்க அங்கிள். இந்தத் தடவை விகாஷ் ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு யு.எஸ்ஸுக்குக் கூட்டிட்டுப் போறது நிச்சயம்!''- உற்சாகமான குரலில் சொல்லிவிட்டு செல்போனை அணைத்தாள் வர்ஷா.


நிருபர்களிடம் பேசிவிட்டு வந்த வர்ஷாவுக்கு முன்பாக அமர்த்தலாகக் கால்மேல் கால் போட்டுக்கொண்டு நாற்காலியில் சாய்ந்திருந்தான் விகாஷ்.
ஆறடி உயரம். அவனுடைய இயற்கையான சிவப்பு நிறம் லேசாக அமெரிக் கச் சிவப்புக்கு மாறியிருந்தது. சீராக ட்ரிம் செய்யப்பட்டு இருந்த தாடியும் மீசையும், தலைகொள்ளாத சுருள் முடியும் அவனுடைய தோற்றத்துக்கு போனஸ் பாயின்ட்களை அள்ளிக் கொடுத்திருந்தது. உதட் டில் ஒட்டியிருந்த புன்னகையோடு பேசினான்.

''அரசாங்கம் விருது குடுத்திருக்காங்க போலிருக்கு. வாழ்த்துக்கள்!''

''நன்றி!'' என்றாள் வர்ஷா.


''அப்புறம்?''
''அமெரிக்கா எப்படியிருக்கு விகாஷ்?''
''அப்படியேதான் இருக்கு.''

ஒபாமா?

 
''அமெரிக்காவோட பொருளாதாரச் சீர்குலைவைச் சரிப்படுத்த அமெரிக்காவில் டாஸ்மாக் கடைகளை ஆரம்பிக்கலாமானு யோசனை பண்ணிட்டு இருக்கார்.''


வர்ஷா சிரித்தாள். ''விகாஷ்! நீ இப்போ ஜாலியான மூடுல இருக்கே. உன்னோட கல்யாண விஷயத்தைப் பத்திப் பேசலாமா?''

''அதாவது, நீ எனக்கு கவுன்சிலிங் குடுக்கப்போறே.''

''நீ எப்படி எடுத்துக்கிட்டாலும் சரி. நீ உன்னோட கல்யாண விஷயத்துல ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறே?''

''என்னடா இது பெரிய வம்பாப்போச்சு. எனக்கு வரப்போற மனைவி அழகா இருக்கணும்னு நினைக்கிறது தப்பா?''

''இதோ பார் விகாஷ்... உன்னோட அப்பாவும் என்னோட அப்பாவும் நெருங்கின ஃப்ரெண்ட்ஸ். நீயும் நானும் சின்ன வயசில் இருந்து ஒண்ணாப் பழகிட்டு வர்றோம். ஒரு சமயத்துல உனக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணிவைக்கிற முடிவுக்கு அவங்க வந்தபோது, நாம ரெண்டு பேருமே மறுத்துட்டோம். காரணம், அது மாதிரியான எண்ணத்துல நாம பழகலை. போன வருஷம் நீ அமெரிக்காவில் இருந்து வந்தபோது உனக்குப் பெண் பார்க்கும் ஏற்பாடுகள் நடந்தன.


 அந்த ஒரு மாச காலத்துல சுமார் பத்துப் பெண்களை யாவது பார்த்திருப்போம். என்னைப் பொறுத்தவரைக்கும் அந்த பத்துப் பெண்களுமே அழகா இருந்தாங்க. அதுல ஆறு பெண்கள் ரொம்பவுமே அழகா இருந்தாங்க. உன்னோட குடும்ப அந்தஸ்துக்கு ஈடான பெண்களும்கூட. ஆனா, நீ யாரையுமே பிடிக்கலைனு சொல்லிட்டு அமெரிக்காவுக் குக் கிளம்பிட்டே. உன்னோட அப்பா எவ்வளவு வருத்தப் பட்டார் தெரியுமா?'' - வர்ஷா பேசப் பேச... விகாஷ் தன் இடது கையை உயர்த்தி அவளை அமர்த்தினான்.


''என்னோட அப்பா வருத்தப்படறாருங்கிறதுக்காக நான் என் மனசுக்குப் பிடிக்காத பெண் ணைக் கல்யாணம் பண்ணிக்க முடியுமா என்ன? என் வாழ்க்கையோட லட்சியம் ஒரு அழகான மனைவி!''

''அதாவது ஐஸ்வர்யா மாதிரி?''

''அதுக்கும் மேல!''

''விகாஷ்! உன்னோட மென்டாலிட்டி ஏன் இப்படி இருக்குனு தெரியலை. உனக்குப் பார்த்த பெண்கள் எல்லாருமே அழகா இருந்தாங்க.''

''எனக்கு அப்படித் தெரியலையே?''

''ஜோதிடரீதியா பத்துக்குப் பத்து பொருத்தமும் இருந்தது.''

''நான் எதிர்பார்த்த பதினோராவது பொருத்தம் இல்லையே?''



''விகாஷ்... நான் ஒண்ணு சொல்லட்டுமா?''

''என்ன?''
''நீ தேடற அந்த அழகான பெண், உனக்கு இந்தியாவில் கிடைக்க மாட்டா. பேசாம அமெரிக் காவுல எவளையாவது பார்த்துக் கட்டிக்கிட்டு செட்டிலாயிடு.''

''எனக்கு இந்தியப் பொண்ணுதான் வேணும். உலகத்திலேயே இந்தியப் பெண்கள்தான் அழகுன்னு 'டபிள்யூ.ஹெச்.ஓ’ சொல்லுது தெரியுமா?''

வர்ஷா விகாஷையே முறைத்தாள். அவன் உதட்டில் ஒரு புன்னகை இழையோடியது.

''என்ன அப்படிப் பார்க்கிறே?''

''ஒண்ணுமில்லை. இந்த 'மயிலிறகு’ மையத்துக்கு எத்தனையோ பேர் எத்தனையோ பிரச்னைகளோடு வர்றாங்க. நான் அவங்களோட பிரச்னைகளை எல்லாம் கேட்டு கவுன்சிலிங் பண்றேன். மன வேற்றுமைகளோடு வருகிற கணவன்-மனைவியை ஒற்றுமைப்படுத்தி அனுப்பிவைக்கிறேன். வாழ்க்கையில் விரக்தி அடைஞ்சு தற்கொலை எண்ணத்தோடு வர்றவங்களைக்கூட ஒரு புது வாழ்க்கைக்குத் திருப்பியிருக்கேன். ஆனா, உன்னோட விஷயத்துல நான் தோத்துட்டேன். உன்னை எப்படி கன்வின்ஸ் பண்றதுன்னு தெரியலை.''


''அட! என்ன வர்ஷா? இதுக்குப் போய் இவ்வளவு ஃபீல் பண்றே? எனக்கு வர்ற மனைவி ரொம்பவும் அழகா இருக்கணும்னு நினைக்கிறேன். இதை ஏன் ஒரு பிரச்னையா நீ நினைக்கிறே? நான் லீவு முடிஞ்சு அமெரிக்கா போறதுக்குள்ள நான் தேடிக்கிட்டு இருக்கிற அந்த அழகான பொண்ணு கிடைச்சுடுவா.''

''ஸாரி விகாஷ்...''

''எதுக்கு ஸாரி?''
''நியாயமான ஆசைகள் மட்டுமே ஜெயிக்கும். உன்னோடது பேராசை. இந்தத் தடவையும் நீ அமெரிக்காவுக்கு தனியாத்தான் போகப்போறே.''

''உன்னோட சாபத்துக்கு நன்றி... நான் வரட்டுமா!'' விகாஷ் எழுந்துகொண்டான். ''உனக்குக் கிடைச்சிருக்கிற 'மகிள ரத்னா’ விருதுக்கு மறுபடியும் என் வாழ்த்துகள்.''


வர்ஷாவின் கையை வலிந்து பற்றிக் குலுக்கிவிட்டு வேகமாகக் கிளம்பினான் விகாஷ்.

அந்த வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் கரைந்துபோயிருக்க, மூன்றாவது நாள் மதியம் வர்ஷா பிளஸ் டூ பரீட்சையில் தோல்வி அடைந்த ஒரு மாணவிக்கு கவுன்சிலிங் கொடுத்துவிட்டு, மதிய உணவுக்கு வீட்டுக்குக் கிளம்பலாம் என்று நினைத்த நேரத்தில், வாசலில் கார் வந்து நின்றது.

விகாஷ§ம் அவனுடைய அப்பா சபாபதியும் காரைவிட்டு இறங்கி உள்ளே வந்துகொண்டு இருந்தார்கள்.

வர்ஷா மலர்ந்தாள்.

''வாங்க அங்கிள்...''

''என்னம்மா... வீட்டுக்குக் கிளம்பிட்டியா? ஒரு ரெண்டு நிமிஷம் உன்கிட்டே பேசிட்டு நான் கிளம்பறேன்.''

''மொதல்ல உட்காருங்க அங்கிள். விகாஷ் நீயும் உட்கார்.''

இருவரும் உட்கார்ந்தார்கள். வர்ஷா அவர்களுக்கு எதிரே இருந்த நாற்காலியில் குழப்பத்தோடு சாய்ந்தாள். 'இரண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கிறார்கள். எதற்காக இருக்கும்?’

''சொல்லுங்க அங்கிள்...''

''மொதல்ல உனக்கு ஒரு பிக் தேங்க்ஸ். நீ என்ன சொன்னியோ... ஏது சொன்னியோ... எனக்குத் தெரியாது. விகாஷ் கல்யாணம் பண்ணிக்க ஒப்புக்கிட்டான். இன்னிக்குக் காலையில் புரோக்கர் ஒரு அலையன்ஸ் கொண்டுவந்தார். மிடில் க்ளாஸ் ஃபேமிலிதான். பொண்ணோட அம்மா ஒரு ஸ்கூல்ல ஹெச்.எம். அப்பா பேங்க் அக்கவுன்டன்ட். பொண்ணு ஐ.டி. கம்பெனியில வேலை பார்க்குது. பொண்ணோட போட்டோவைப் பார்த்துட்டு, விகாஷ் ஓ.கே. சொல்லிட்டான். இன்னிக்குச் சாயந்தரம் அஞ்சு மணிக்கு பெசன்ட் நகர்ல இருக்கிற பொண்ணு வீட்டுக்குப் பெண் பார்க்கப் போறோம். நீ அவசியம் வரணும்!''


வர்ஷா தன் அழகிய விழிகளை வங்கக் கடலாக விரித்தாள்.

''என்ன விகாஷ்... அப்பா சொல்றது நிஜமா?''

''நிஜமோ... நிஜம். சாயந்தரம் நாலு மணிக்கெல்லாம் நீ ரெடியாயிடணும். நான் கார்ல வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கறேன்''- சொன்ன விகாஷ் சபாபதியிடம் திரும்பினான்.

''அப்பா... நீங்க ஆபீஸுக்குப் போய்ட்டு எனக்கு காரைத் திருப்பி அனுப்புங்க. நான் வர்ஷாகிட்ட பேசிட்டு வீட்டுக்குப் போயிடறேன். வீட்டுக்குப் போற வழியில் எனக்குக் கொஞ்சம் பர்ச்சேஸ் இருக்கு.''

சபாபதி மறுபடியும் வர்ஷாவிடம் சொல்லிக்கொண்டு காரில் கிளம்பிவிட, வர்ஷா ஒரு குறுஞ்சிரிப்போடு விகாஷை ஏறிட்டாள்.

''யார் அந்தப் பேரழகி?''

''பேரு பூஜா.''

''பூஜா?''

''ம்... போட்டோவைப் பார்க்கறியா?'' - சொன்னவன், தன்னுடைய சட்டைப் பாக்கெட்டில் இருந்து போட்டோவை எடுத்து வர்ஷாவிடம் நீட்ட, அவள் அதை வாங்கிப் பார்த்துவிட்டு கண்கள் நிறைய அதிர்ச்சி காட்டினாள். பதற்றத் தோடு எழுந்தாள்.

''வி... வி... விகாஷ்... பூஜாவை உங்களுக்கு எப்படித் தெரியும். இந்த போட்டோ உங்களுக்கு எப்படிக் கிடைச்சது?''

விகாஷ் ஒரு புன்னகையோடு அவளைக் கையமர்த்தினான்.

''இப்ப எதுக்காக உன்னோட குரலில் இப்படிஒரு சுனாமி? கூல் டவுன். இந்த பூஜாவை ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் எனக்குத் தெரியும். இந்த லெட்டரும் பூஜாவோட போட்டோவும் உன்னோட இதே மேஜை மேலிருந்து தான் எடுத்தேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி நீ விருது வாங்கினதைப் பாராட்டறதுக்காக நான் இங்கே வந்தப்ப, நீ பத்திரிகை நிருபர் களுக்குப் பேட்டி கொடுத்துட்டு இருந்தே. நான் உன்னோட ரூமுக்குள்ளே வந்து உனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தப்ப, மேஜை மேல லெட்டரும் லெட்டரோடு இணைக்கப்பட்டு இருந்த பூஜாவோட போட்டோவும் என் பார்வைக்குப்பட்டது. என்னையும் அறியாம அதைக் கையில் எடுத்துட்டேன். படிச்சும் பார்த்துட்டேன்.''


''அந்த லெட்டரைப் படிச்சுப் பார்த்த பின்னாடியும் அந்த பூஜாவைக் கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் உனக்கு எப்படி வந்தது விகாஷ்?''


''இதோ பார் வர்ஷா... அந்த பூஜா தன் சித்தி பையனோட கல்லீரல் மாற்று ஆபரேஷனுக்குத் தன்னோட கல்லீரலில் இருந்து இருபது சதவிகிதத்தைத் தானமாக் குடுத்து அந்தப் பையனோட உயிரைக் காப்பாத்தி, அவனுக்கு ஒரு புது வாழ்க்கைக் கொடுத்திருக்கா. பூஜாவைக் கல்யாணம் பண்ணிக்க எந்த வரன் வந்தாலும் பூஜா ஒரு லிவர் டோனர் என்கிற விஷயம், மாப்பிள்ளை வீட்டுக்குத் தெரியக் கூடாதுனு பூஜாவோட அப்பாவும் அம்மாவும் சொல்றாங்க.



அவங்க அப்படிச் சொல்றதுல பூஜாவுக்கு உடன்பாடு இல்லை. இது சம்பந்தமா உன்கிட்ட ஆலோசனை கேட்டு பூஜா லெட்டர் எழுதியிருக்கா. தன்னைக் கல்யாணம் பண்ணிக்கப்போறவன் யாராயிருந்தாலும், அவனுக்கு, தான் ஒரு லிவர் டோனர் என்கிற விஷயம் தெரியணும்னு நினைக்கிற நேர்மை எனக்குப் பிடிச்சிருந்தது.



அதனால பூஜாவைக் கல்யாணம் பண்ணிக்கிற முடிவுக்கு வந்தேன். லெட்டர்ல அட்ரஸ் இருந்ததால பூஜா வேலை செய்யற ஐ.டி. கம்பெனிக்குப் போய் அவளைப் பார்த்தேன். பேசினேன். ஆரம்பத்துல அவள் சம்மதிக் கலை. அதுக்கப்புறம் அவளுக்கும் எனக்கும் இருக்கிற பதினோராவது பொருத்தத்தைப் பற்றிச் சொன்னதும் ஒப்புக்கிட்டா.''


வர்ஷா குழப்பத்தில் நெற்றியைச் சுருக்கினாள்.

''பதினோராவது பொருத்தமா?''

''ஆமா... இந்த கவர்ல என்ன இருக்குன்னு பாரு''- விகாஷ் நீட்டிய கவரை வாங்கிப் பிரித்துப் பார்த்தாள்.

அது ஒரு மெடிக்கல் ரிப்போர்ட். அமெரிக்காவின் சின்சினாட்டி மெடிக்கல் லேப்பில் இருந்து எண்டாஸ்கோப்பிக் டாக்டர் ரோஜர் ஹென்றி என்பவரால் பூர்த்திசெய்யப்பட்ட ஒரு ரிப்போர்ட்.

ரிப்போர்ட்டை முழுமையாகப் படித்துப் பார்த்த வர்ஷா அதிர்ந்து போய் விகாஷை ஏறிட்டாள்.

''வி... வி... விகாஷ். நீ... நீ... ஒரு 'ஸ்மால் இன்டஸ்டைன்’ டோனரா?''

விகாஷ் ஒரு புன்னகையோடு தலையசைத் தான்.

''ஆமா... ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அமெரிக்காவின் சின்சினாட்டி நகர்ல ஒரு சாலை விபத்தில் என் ஃப்ரெண்ட் ஒருத்தனுக்கு வயிற்றில் அடிபட்டு, சிறுகுடல் பகுதி முழுவதும் சிதைந்து உயிருக்குப் போராடிக்கிட்டு இருந்தான். அவனோட உயிரைக் காப்பாற்ற உடனடியாக ஒரு மீட்டர் நீளம் அளவுள்ள சிறுகுடல் வேணும்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க.



 பொதுவா, மனிதர்களோட சிறுகுடல் மூணு மீட்டர் நீளம் இருக்கும். ஒரு மனுஷன் ஆரோக்கியமா வாழ அவனுக்கு ரெண்டு மீட்டர் நீளம் உள்ள சிறுகுடல் போதுமானதுனு டாக்டர்கள் சொன்னதால, நான் என்னோட ஃப்ரெண்ட்டுக்கு ஒரு மீட்டர் நீள அளவுக்கு என்னோட சிறுகுடலை டொனேட் பண்ணினேன்.



அவனும் இப்போ ஆரோக்கியமா இருக்கான். நானும் எவ்விதமான ஆரோக்கியக் குறைபாடும் இல்லாம சந்தோஷமாக இருக்கேன். நான் சிறுகுடலை டொனேட் பண்ணது என் அப்பா உட்பட வெளியுலகத்துல யாருக்கும் தெரியாது. ஆனாலும், நான் இந்த உண்மையை மறைச்சு எந்த ஒரு பெண்ணையும் கல்யாணம் பண்ணிக்க விரும்பலை.



 அதனால்தான் அப்பா காட்டின பெண்களை எல்லாம் பிடிக்கலைனு சொன்னேன். எனக்கு ஏத்த மாதிரியான ஒரு பெண் கிடைக்கிற வரை கல்யாணத்தைத் தள்ளிப்போட ரொம்பவும் அழகான பொண்ணு வேணும்னு அழிச்சாட்டி யம் பண்ணினேன். இப்போ நான் எதிர்பார்த்த படி பூஜா எனக்குக் கிடைச்சுட்டா. பூஜா ஒரு லிவர் டோனர். நான் ஒரு ஸ்மால் இன்டஸ்டைன் டோனர். எங்க கல்யாணத்துக்கு பத்துப் பொருத்தங்களைக் காட்டிலும் இந்த ஒரு பொருத்தம் போதாதா?''

வியப்பிலும் அதிர்ச்சியிலும் விக்கித்துப்போயிருந்த வர்ஷா, சுதாரித்து மெள்ள நடந்து போய் சுவரோர பீரோவைத் திறந்தாள். நீளமான அந்த பிரவுன் நிற கவரை எடுத்தாள்.

''வி... வி... விகாஷ்!''- குரல் உடைந்து இருந்தது.

''என்ன வர்ஷா?''

''இப்படி என் பக்கம் திரும்பி நில்லு...''

விகாஷ் நின்றான்.

வர்ஷா தன் கையில் இருந்த கடித உறையை விகாஷின் கைகளில் திணித்தாள்.

''விகாஷ்! நான் செய்த சமூக சேவைக்காக அரசாங்கம் எனக்குக் கொடுத்த 'மகிள ரத்னா’ விருது இது. இந்த விருது உன் வீட்டை அலங்கரிக்கிறதுதான் சரி... என்னோட கல்யாணப் பரிசா இது இருக்கட்டும்'' என்று சொல்லிவிட்டு விகாஷை பெருமை பொங்கப் பார்த்தாள் வர்ஷா.



நன்றி - விகடன்

ஆஸ்கார் அவார்டு லிஸ்ட்

லைஃப் ஆஃப் பைக்கு 4 ஆஸ்கர் விருதுகள்! 
 
 
லாஸ் ஏஞ்சல்ஸ்:அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட புதுச்சேரியை கதைக்களமாகக் கொண்டுலைஃப் ஆஃப் பை படத்திற்கு 4 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. ஆஸ்கர் விருதை நூலிழை அளவில் தவறவிட்டார் பாடகி ஜெயஸ்ரீ.


திரை உலகின் மிகப்பெரிய விருதான 85வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று காலை நடந்தது.


இதில் புதுச்சேரியை கதைக்களமாகக் கொண்டு, இந்திய சிறுவனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட லைஃப் ஆஃப் பை படத்திற்கு 4 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த ஒளிப்பதிவுக்காக இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கிளாடியோ மிராண்டாவுக்கும், விஷூவல் எபெக்ட், சிறந்த இயக்குனர் மற்றும் இசைக்கான விருதும் இந்த படத்திற்கு கிடைத்துள்ளது.


விருதுபட்டியல்


சிறந்த ஒரிஜினல் பாடல் : அடிலி (ஸ்கைஃபால்)

சிறந்த தழுவல் திரைக்கதை : கிறிஸ் டேரியோ(அர்கோ)

சிறந்த ஒரிஜினல் திரைக்கதை : குயின்டின் டரன்டியோ

சிறந்த டைரக்டர் : ஆங் லீ(லைப் ஆஃப் பை)

சிறந்த நடிகை : ஜெனிஃபர் லாரன்ஸ்

சிறந்த நடிகர் : டேனியல் டே லீவிஸ்(லிங்கன்)

சிறந்த திரைப்படம் : அர்கோ

சிறந்த துணை நடிகர் : கிறிஸ்டோபர் வாட்ஸ்

சிறந்த அனிமேஷன் குறும்படம் : பேப்பர் மேன்

சிறந்த அனிமேஷன் படம் : பிரேவ்

சிறந்த ஒளிப்பதிவு : லைப் ஆஃப் பை


சிறந்த விசுவல் எபைக்ட்ஸ் : லைப் ஆஃப் பை

சிறந்த ஒளிப்பதிவாளர் : கிளாடியோ மிராண்டோ (லைப் ஆஃப் பை)

சிறந்த ஆடை வடிவமைப்பு:அன்னா கரீனினா

சிறந்த மேக் ஆப் : லிசா வெஸ்ட்கோட்

சிறந்த சிகை அலங்காரம் : ஜூலி டார்ட்னெல்

சிறந்த நேரடி ஆக்ஷன் குறும்படம் : கர்ஃப்யூ

சிறந்த ஆவண குறும்படம் : இனோசென்ட்

சிறந்த குறும்படம் : சர்ச்சிங் ஃபார் சுகர் மேன்

சிறந்த வேற்று மொழி படம் : அமோர்

சிறந்த சவுண்ட் மிக்சிங் : லேஸ் மிசெரபில்ஸ் படம்

சிறந்த சவுண்ட் எடிட்டிங் : ஜீரோ டார்க் தர்ட்டி மற்றும் ஸ்கைஃபால் படங்கள்

சிறந்த துணை நடிகை : அன்னா ஹாத்வே

சிறந்த திரைப்பட எடிட்டிங் : அர்கோ

சிறந்த புரோடெக்ஷன் டிசைன் : லிங்கன்

சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் : லைப் ஆஃப் பை
 

 
 
நன்றி - விகடன் 
 
 
 டிஸ்கி -  4 ஆஸ்கார் அவார்டு பெற்ற லைஃப் ஆஃப் பை விமர்சனம் - ( டிஸ்கி- நோட் பண்ணுங்க )

ஹரிதாஸ் - சினிமா விமர்சனம்



பாலுமகேந்திரா வின் வீடு , சந்தியாராகம் மாதிரி  கலை அம்சம் பொருந்திய படங்கள் வருவது அபூர்வம் , அதே போல்  மகேந்திரன் -ன் உதிரிப்பூக்கள் மாதிரி பிரமாதமான ஆர்ட் ஃபிலிம்  கம் கமர்ஷியல் படங்கள் வருவதும் குறைவே. தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப்பின் மனதை கனக்க வைக்கும்  கதைக்கருவுடன் களம் இறங்கி இருக்கும் இயக்குநருக்கு வாழ்த்துகள் .

 அமீர்கான் -ன் தாரே ஜமீன் பர் ( ஆகாய நட்சத்திரம் பூமியின் மேல் )  ஹிந்திப்பட கதைக்கருவான ஆட்டிச நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை  வளர்ப்பு பற்றிய கதை ஒரு டிராக். அப்படி எடுத்தால் படம் டாக்குமெண்ட்ரி ஆகி விடக்கூடிய அபாயம் இருப்பதால் கமர்ஷியலுக்காக சூர்யாவின் காக்க காக்க , அப்புறம் தெலுங்கு ப்படமான ஹிட் லிஸ்ட் இரண்டின் கதைக்கருவான என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் கதை  இன்னொரு டிராக்கில் . இரண்டையும் பிரமாதமாக இரட்டைத்தண்டவாளமாக ( தண்ட வாளம்னாலே இரட்டை தானே? ) கொண்டு போவதில் இயக்குநருக்கு வெற்றி .


ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர். என்கவுன்ட்டர் ஸ்பெஷ;லிஸ்ட். மனைவியை இழந்தவர் . அவருக்கு ஒரு பையன் . தான் என்ன செய்யறோம், என்ன செய்யனும் என்பதை அறியாத  ஆட்டிச நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை அவன்.  அவனை எப்படி அவர் வளர்க்கறார்  என்பதே திரைக்கதை .
 




 ஹீரோ கிஷோர் . ரகுவரன், பிரகாஷ் ராஜ்க்குப்பின் தமிழ் சினிமாவின் பிரமாதமான கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்.  இயல்பாகவே இவர் ஜிம் பாடி என்பதால் பெரும்பாலும் இவருக்கு கோச் , போலீஸ் ஆஃபீசர் ரோல் தான் கிடைக்குது . இந்தப்படத்தில் குணச்சித்திர நடிப்பில் மனிதர் பிய்ச்சு உதறிட்டார் . போலீஸ் ஆஃபீசராக வரும்போது அவர் பாடி லேங்குவேஜ் , குழந்தை அருகில் இருக்கையில் ஒரு அப்பாவாக குழையும் நடை என  பின்னிப்பெடல் எடுக்கிறார் . 


ஹீரோயினாக சினேகா . மேரேஜ் ஆகி விட்டதால் தமிழனின் அடிப்படை நாகரீக குணப்படி ( அதாவது மேரேஜ் ஆன பொண்ணை வர்ணிப்பதோ , சைட் அடிப்பதோ கூடாது , வீ வாண்ட் ஒன்லி ஃபிரெஸ் )  சினேகாவை வர்ணிக்கலை . டீச்சர் ரோலில் ஆல்ரெடி தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம் படத்தில் பிரமாதமாய்  நடிச்சிருந்தாலும் இதிலும் அழகாக நடிச்சிருக்கார் . ரீ எண்ட்ரி பிரசன்னாவாக சாரி பிரசன்னமாக வாழ்த்துகள் 


அந்தக்குட்டிப்பையன் பிரிதிவிராஜ் தாஸ் செம ஆக்டிங்க் . ஆட்டிச நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் முக பாவத்தை உள் வாங்கி ஹோம் ஒர்க் பண்ணி நடிச்சிருக்கான் . அவனுக்கும் , அவனை இயக்கிய இயக்குநருக்கும் ஒரு ஷொட்டு ( பையனின் பெற்றோர் திருஷ்டி சுற்றிப்போடவும் , 2013ன் சிறந்த குழந்தை நட்சத்திர விருது உறுதி ) 


 இந்த 3 கேரக்டர்கள் போக யாருமே எதிர்பார்க்காத வகையில் ஸ்கூல் ஹெச் எம்மாக வரும் புது முகம் பிரமாதப்படுத்தி விட்டார் , சிடு சிடு வென்ற பேச்சு , ஓங்கி உயரும் குரல் என எல்லோருக்கும் அவரவர் மனைவியை  நினைவுபடுத்தி பயப்படுத்தும் கேரக்டர் . வெல்டன்

 சினேகாவின் தங்கையாக வரும் ஃபிகர் கவனிக்க வைக்கிறார், சினிமாத்தனம் இல்லாத மேக்கப் அதீதம் இல்லாம இயல்பான  முகம்

 


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 



1. இந்த மாதிரி படங்களுக்கு ஒளிப்பதிவும் , இசையும் இரு கண்கள் . இரண்டும் பிரமாதம் .  குறிப்பா படத்தின் பின் பாதியில் வரும் 30 நிமிடங்கள் பின்னணி இசை பட்டாசு , ஒளிப்பதிவு மத்தாப்பு . அந்தப்பையன் ரேஸ் கிரவுண்டில் குதிரைகளைப்பார்த்து குதூகலிப்பது செல்லுலாயிடு கவிதை


2. அன்னையின் கருவில்  கரையாமல் பிறந்தாயோ  பாடலில் படப்பிடிப்பு , எடிட்டிங்க் , கேமரா கோணம் எல்லாம் அருமை . பீச் மணல் ஓரம் வெள்ளை உடையில் வருவது கண்களுக்கு குளிர்ச்சி . வெள்ளக்குதிரை பாடல் காட்சியும் அதே போல் 



3,. யுவன் யுவதி, புத்தகம் பட தயாரிப்பாளரின் 3 வது படம் இது , நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி ஆகிய படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேல் இன் இயக்கத்தில் வரும் 3 வது படம் . மற்ற 2 படங்களில் மற்றவர் கதையை இவர் இயக்கினார், இதுதான் அவர் கதை திரைக்கதை வசனத்தில் இயக்கும் முதல் படம் . இந்த ஒரு படத்தால் அவர் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் அந்தஸ்து பெற்று விடுவார். திரைக்கதை அறிவு இவரிடம் பிரமாதம்


4. கனமான கதைக்களத்தில் ரிலாக்ஸ்க்காக புரோட்டா சூரியின் காமெடி , டீச்சர் காதல் பிரமாதமாக கை கொடுக்கலைன்னாலும் நாட் பேட்.. 


5. ஓப்பனிங்க்கில் வரும் என்கவுண்ட்டர் சீன் செம . என்ன நடக்குமோ என்ற திகிலை  கூட்டி விடுது . என்கவுண்ட்டர் செய்யப்படும் ஆள் தன் குடும்பத்துடன் இருப்பது சுவராஸ்யத்தை கூட்டி விடுது 


6. க்ளாஸ் ரூமில் ஹீரோ தன் பையனுடன் அமர்ந்த பின் சினேகாவால் முன் போல் இயல்பாக பாடம் நடத்த முடியாமல் போவதும் அடுத்த நாள் சுடிதார் அணிந்து வருவதும் , பசங்க கிண்டல் செய்வதும் கவிதை



 



இயக்குநரிடம் சில கேள்விகள் , திரைக்கதையில் சில ஆலோசனைகள் 


1. வெளீல கூட்டிட்டு வந்த இடத்துல குழந்தையைக்காணோம். இன்சார்ஜ் ஆக இருக்கும் டீச்சருக்கு பதட்டம் இருக்கும், பயம் இருக்கும், பெற்றோர்கள் வந்து கேட்டா என்ன பதில் சொல்வது என்ற பயமும் , மேலிடம் நடவடிக்கை எடுப்பாங்க்ளே என்ற எண்ணமும் வரும் . இவ்வளவுதான் அந்த டீச்சர் கேரக்டர் காட்ட வேண்டிய உணர்ச்சி . ஆனால் அந்தப்பையன் காணாம போனதும் சினேகா காட்டும் முக பாவனைகள் , 13 நிமிட அழுகை ஓவர் டோஸ் . பிரமாதமா  நடிச்சிருந்தாலும் மிகை நடிப்பே .. ஏன்னா ஹீரோ மேல அப்போ அவருக்கு காதல் இல்லை , அந்தப்பையன் மேல அட்டாச்மெண்ட்டும் இல்லை . அதுக்குப்பின் தான் அட்டாச்மெண்ட் வருது . ஆனா அவர் அழுகைல  ஓவர் செண்ட்டிமெண்ட் இருக்கு . கொஞ்சம் லிமிட் பண்ணி இருக்கனும்



2.   என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டா வரும் போலீஸ் ஆஃபீசர்கள் எல்லாருமே தாடியுடன் , பரட்டைத்தலையுடன் இருப்பது ஏன்? அவங்களே ரவுடி மாதிரி இருக்காங்க . ஹீரோ மட்டும் தான் போலீஸ் கட்டிங்க் ( இயற்கையாவே அவருக்கு  அப்டி )


3.  போலீஸ் துதி பாடும் உச்சி வெய்யில் பாட்டு எடுபடலை . போலீஸ் மேல மக்கள் செம காண்ட்ல இருக்காங்க . பாடல் வரிகள் ஜெ வை புகழும் ஓ பி எஸ் வார்த்தைகளா ஓவர் உயர்வு நவிற்சியா இருக்கு 


4.  ஹீரோ நீண்ட விடுப்பில் இருக்கும்போது  தினமும் போலீஸ் ஜீப் , போலீஸ் டிரைவர் வந்து பிக்கப் பண்ணிக்கறாரே? எப்படி? சட்டத்துல அதுக்கு இடம் இருக்கா? 


5. ஹீரோ முதன் முதலாக ஹீரோயின் வீட்டுக்கு வரும்போது சினேகாவின் கண்களில் ஓவர் உற்சாகம், பரவசம் ஏன்? அப்போ அவர் மனசுல காதல் இல்லையே?


 


6. சினேகாவுக்கு ஹீரோ பர்சனலா கால் பண்ணும்போது சினேகா தன் அம்மா, தங்கை முன் ஸ்பீக்கர் ஃபோனில் போட்டு விடுவது ஏத்துக்கற மாதிரி இல்லை . 


7. ஹீரோவோட நண்பர் காணாமப்போன விசாரனையில் ஒரு வசனத்தில் பஸ்ல ஒரு சீட்ல ஆள் இல்லாததால் டிரைவர், கண்டக்டர் 2 பேரும் இறங்கித்தேடியதாகவும், பயணிகள் எதிர்ப்பு தெரிவிச்சாங்க எனவும் ஒரு வசனம் வருது . எந்த பஸ் டிரைவர் அப்டித்தேடி இருக்கார்? நிஜத்தில் கண்டக்டர் மட்டும் சும்மா குரல் கொடுப்பார் , அப்புறம் விசில் ஊதிடுவார்./. 



8. போலீஸ் ஆஃபீசர் கிஷோர்க்கு சல்யூட் அடிக்கும்போது எப்பவும் அந்த 4 பேர்ல 2 பேர் போலீஸ் சல்யூட்டும் 2 பேர் ஆஃபீஸ்ல நாம டேமெஜருக்கு ஒப்புக்கு சப்பாணி விஷ் பண்ணுவமே அப்படி விஷ் பண்றாங்க



9. கிஷோர்  வீட்டில் ரிலாக்சா இருக்கும்போதும், நடு ராத்திரிலயும் , எப்பவும் பேண்ட் சர்ட்டோடயே இருக்காரே? காசுவலா  ( CASUAL) இருக்கவே மாட்டாரா?


10. சின்சியர் ஆஃபீசரான கிஷோர் 6 மாசம் லீவ் கேட்கும்போது ஹையர் ஆஃபீசர் மறுப்பதும் , அதுக்காக  வேலையை ரிசைன் பண்ணிடுவேன்னு மிரட்டுவதும்  ஏத்துக்க முடியல . ஹையர் ஆஃபீசர் லீவ் தர்லைன்னா  கோர்ட் உதவியை நாடலாம்.


 



மனம் கவர்ந்த வசனங்கள் 


1. ஏற்கனவே ஹீரோவா இருக்கறவங்களைத்தான் எல்லாரும் ஹீரோவா பார்ப்பாங்க, ஆனா நான் எங்கப்பாவை ஹீரோவா பார்க்கறேன்



2.  டீ போடப்பா

 எத்தனை?

 ஒரு ஆள் எத்தனை டீ குடிப்பான்?


 சொல்ல முடியாது , சிலர் 3 டீ எல்லாம் குடிச்சிருக்காங்க


3.  என்கவுண்ட்டர் ஆஃபீசர் டூ ரவுடி - உனக்கு பால் தானே? சொல்லியாச்சு


4. திருந்தனும்னு நினைக்கிறவன் மறுபடி மறுபடி மன்னிப்பு கேட்க மாட்டான்”


5. டேய் . நீ திருந்தவே மாட்டியா?

 நாங்க எல்லாம் ஆம்பளைங்க, அப்படித்தான்



6.  பகல் கனவு பலிக்காது எப்பவும்


 ம்க்கும், எப்பவும் என் கனவையே என்கவுண்ட்டர் பண்ணுங்க



7.  ஒவ்வொரு அரிசிலயும் பேர் இருக்கும்பாங்க , அவன் பேருக்கான தோட்டா என் கிட்டே இருக்கு


8. ஆளைச்சுடறது மட்டும் அவங்க , ஆம்லெட்டைச்சுடுவது மட்டும் நான் 


9. 'நாங்கெல்லாம் ஒரே டீம்...


 கிரிக்கெட் டீமா?


 என்கவுன்ட்டர் டீம்.


இது என் கவுன்ட்டர்',


10.  ஆட்டிசம்கறது டிசீஸ் இல்லை , டிஸ் ஏபிலிட்டி



 



11.  நீங்க அதை பொம்மையா பார்க்கறீங்க , அவன் அதை குதிரையாவே பார்க்கறான்



12.  என்னடா? டீச்சர் துப்பட்டா எல்லாம் போட்டுட்டு வந்திருக்காங்க?


 தெரியலடா


13.  பள்ளிக்கூடத்துலயே மாங்கா அடிக்கறியே , டீச்சர் திட்ட மாட்டாங்க ?

 அடிக்கறதே டீச்சருக்காகத்தான்



14,.  எல்லா மூஞ்சியும் காஞ்சு போன பெயிண்ட் டப்பா மாதிரி இருக்கு , ஒரு ஃபிகர் கூட தேறாது



15.  சட்டமும் சாமியும் எல்லாருக்கும் ஒண்ணுதான்



16.  நம்ம பொழப்பு எட்டிப்பார்த்த நாய் ஏரில விழுந்த கதை ஆகிடுச்சு



 17.  டீச்சர் ,  ஹரியோட அப்பா வோட ஃபோன் நெம்பர் நான் வாங்கி வெச்சிருக்கேன் , பேசறீங்க்ளா?

 நீ எதுக்கு அதை வாங்கி வெச்சிருக்கே?


 எல்லாம் ஒரு ஜெனரல் நாலெட்ஜை வளர்த்திக்கத்தான்



18. பார்த்தும் பார்க்காதது மாதிரி இருக்கீங்க்ளே?


 இல்லையே பார்த்துட்டுத்தானே இருக்கேன்


 இதை எப்படி எடுத்துக்க?

 எப்படி வேணாலும்  எடுத்துக்கோ , ஆனா என் உயிரை எடுக்காதே



19. வலியும் , வேதனையும்  வெளில இருந்து பார்க்கறவங்களை விட  அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும்



20. ”விழுந்தாத்தான் எழுந்துக்கிறது எப்படின்னு தெரியும்”


 



21. அவர் தான் கோச் இப்படி பேசறவன் வெறும் காக்ரோச்'


22. கோச், டாக்டர் மாதிரி பேசுறாரு.. டாக்டர், கோச் மாதிரி பேசுறாரு..


23.
'நல்லத மட்டுமே நெனைக்கணும்னு சொல்லிட்டு நீங்க ஏன் சார்..?இப்படி...


24. வாழ்க்கைல ஜெயிக்கறதுக்கு தகுதியை விட தன்னம்பிக்கைதான் அதிகம் வேணும்






25.  அந்தாளு கோச்சா? கார் மெக்கானிக்கா?






26.  எல்லாக்குழந்தைகளுக்கும் அவங்கப்பா தான் முத ஹீரோ , முடியாதுன்னு நினைச்ச  என்னை விட முடியும்னு நினைச்ச நீங்க தான் அவனுக்கு பெஸ்ட் கோச்



 




 எதிர்பார்க்கப்படும்  ஆனந்த விகடன் மார்க்  - 50




 குமுதம் ரேங்கிங்க் - நன்று




 ரேட்டிங்க் - 8 /10



 சி பி கமெண்ட் - 1000 குற்ற வாளிகள்  தப்பிக்கலாம், ஆனா ஒரு நிரபராதி  தண்டனை பெற்று விடக்கூடாது என்பது மாதிரி , படம் ரிலீஸ் அன்னைக்கே ரிசல்ட் கேட்காம போய் 1000 குப்பை படங்களை நாம பார்த்து ஏமாந்திருக்கலாம், ஆனா ஒரே ஒரு நல்ல படத்தைக்கூட பார்க்காம மிஸ் பண்ணிடக்கூடாது , அப்படி ஒரு படம் தான் ஹரிதாஸ் . டோண்ட் மிஸ் இட் . குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் செல்லலாம்., தன்னம்பிக்கை ஊட்டும் வாழ்க்கையைத்தரும் படம் . ஈரோடு சண்டிகாவில் படம் பார்த்தேன்

டிஸ்கி - இந்தப்படத்துக்கு 1. சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது 2. சிறந்த  இயக்கம் 3 , சிறந்த திரைக்கதை   4. சிறந்த மாநிலப்படத்துக்கான ஸ்பெஷல் விருது   என 4 விருதுகள் நிச்சயம்





வீடியோ விமர்சனம்




 

தவிர்க்கவே முடியாத கொங்கு புரோட்டா நீ!

இனிய காலை வணக்கம் நண்பர்களே...
1. குடிகாரர்களுக்குப்பிடிச்ச காய் ..பீர் க்கங்காய்



----------------------------

2. என்கிட்ட இல்லாதது... ஒவியாகிட்ட என்ன இருக்கு? - தீபா ஷா # மேடம்.ஓவியா வை விட கண் உங்களுக்கு சிறுசு



-------------------------


3. வை கோ - ஜெ சந்திப்பில் என்ன நடந்தது? தெரில.வைகோ தோட்டத்தை சுத்தி நடந்தார்.ஜெ அரியனையில் அமர்ந்திருந்தார்்



------------------------


4. நாத்திகனாய் இருப்பதில் ஒரு நன்மையென்னவென்றால், கோயிலில் சாமி தரிசனம் செய்து தேவி தரிசனத்தை இழக்கத்தேவை இல்லை


-----------------------

5. டியர்.லவ் பெய்லியர் மேட்டரை வெட்கமே இல்லாம ஊரெல்லாம் தம்பட்டம் அடிப்பது ஏன்? 



அப்போதான் லவ் பெய்லியர் பிகர் செட் ஆகும் 



--------------------------------



Pictures's photo.
Sky Walking, Mt. Nimbus, Canada.


6. நந்தினி நந்தி நீ # பிகர் செம குண்டு



-----------------------------


7. சுமாரான கதைகள்கூட சுமா நீ சொல்லக்கேட்கும் பொழுது கில்மாக்கதை ஆகிவிடுகிறது!



----------------------------


8. அமலா பால் கோவா போனா அமலா "பால் கோவா"



--------------------------


9. பரிமளா! உன் கண்கள் பார்வைகளைப்பரிமாறிக்கொண்டிருக்கையில் இமைகள் பறிமுதல் செய்கிறதே



--------------------------


10. டாக்டர். பூசணிக்காய் ஜூஸ் குடிச்சா குண்டாகிடுவேனா?



 நல்ல வேளை.கொத்தவரங்காய் சாப்பிட்டா...னு கேட்கலை 



-----------------------------

 
Photo: இனிய இரவு வணக்கம்


11. நாம 10 பேருக்கு டி எம் அனுப்புனாத்தான் நமக்கு 2 பேராவது டி எம் அனுப்புவாங்க.# ட்விட்டர் விதி




-----------------------


12. டியர்.என்னைப்பார்த்ததும் ஏன் உன் தோழியை கழட்டி விட்டுட்டே? 




என் தோழியை நீங்க கரெக்ட் பண்ணி என்னை கழட்டி விட்டுட்டா? 



---------------------------


13. உன் மீது நேசமாய் வந்தேன்.சொத்தெல்லாம் தந்தேன்.நாசமாய்ப்போனேன்




-------------------------


14. அன்பே! வெட்கத்தைக்கேட்டால் என்ன தருவாய்? எங்க குடும்பத்துல யாருக்கும் தந்து பழக்கம் இல்லை.வாங்கித்தான் பழக்கம்



--------------------------


15. தவிர்க்கவே முடியாத கொங்கு புரோட்டா நீ!


---------------------


இன்‌றைய தினம் அனைவருக்கும் இனிமையானதாக அமைய வாழ்த்துகளுடன் இனிய காலை வணக்கம்!


16. சம்சாரம் உன்னை துரத்துகிறது என்றால், நீ மச்சினியை நெருங்குகிறாய் என அர்த்தம் !!!



---------------------


17. இலக்கு வைத்துக்கொண்டு பணி ஆற்றினால் நீ இLUCKகியவாதி



--------------------------


18. நான் பூக்கடையில் அதிக நேரம் நிற்பதில்லை!நின்றால் பூக்காரி - பூவை வாங்கு.இப்டி என் உயிரை வாங்காதே என் கிறாள்



------------------------


19. வாசிக்க மறந்த சரோஜாதேவி நீ



-----------------------


20. மிஷ்கின் பஞ்சதந்திரக்கதை எட்டாங்கிளாஸ் நீதிக்கதை புக் ல இருந்து கதையை சுட்டுட்டாரு போல # ஓநாயும் ஆட்டுக்குட்டியும்



---------------------------



Photo: அடிக்கடி நிகழ்கின்ற
தொடர்புகளில்தான்
நட்பின் ஆழமும்
ஆயுளும்
தீர்மானிக்கப்படுகிறது....


21. விஷ த்தை எக்ஸ்பயரி டேட் முடிஞ்சு சாப்பிட்டா சாவு சீக்கிரம் வருமா? சாவே வராதா? அன்பே.நீ குடிச்சுப்பார்த்து சொல்லு



----------------------



22. திருமணமான ஆண்களுக்கு கிடைத்த வரம் எந்த முடிவும் நாம் யோசித்து எடுக்கவேண்டியதில்லை.மனைவி சொல்வதை ஆமோதித்தால் போதும்



-------------------


23. அதிமுகவில் மீண்டும் சேர எஸ்.வி.சேகர் விருப்பம் # 1000 முறை கட்சி மாறிய அபூர்வ சிகாமணி்



-----------------------


24. மர்டர் 3 ஹிந்திப்படத்தை தமிழில் டப் பினால் டைட்டில் (ஐடியா) = கண்ணாடிக்குப்பின்னாடி என்னாடி?



----------------------


25. என் பிறந்த நாளில் ஆடம்பர விழாக்களை தவிர்க்க வேண்டும்: --ஜெ# சிக்கனமா இருக்கச்சொன்ன சிம்மராசித்தலைவியே நீவிர் வாழி னு 10 லட்சம் ரூபாக்குAD



---------------------------

Sivakeerthi Siva shared Well-bred Kannan's photo.
பிரதோஷம்::::
===========

வளர்பிறையில் ஒரு பிரதோஷம், தேய்பிறையில் ஒரு பிரதோஷம் என மாதத்திற்கு இருமுறை பிரதோஷ காலம் வருகிறது. பிரதோஷ காலம் என்பது சரியாக ஏழரை நாழிகை மட்டும்தான். திரியோதசி தினத்தன்று சூரியன் மறையும் மாலைப் பொழுதில், சூரியன் மறைவதற்கு மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையுமாக உள்ள ஏழரை நாழிகை காலம் தான் பிரதோஷ காலமாகும்.

மாதம் இருமுறை திரியோதசி நாளில் பிரதோஷம் வந்த போதிலும் சனிக்கிழமை நாளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்தது. முன் ஒரு காலத்தில் தேவலோகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அசுர குலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கடுமையான போர் மூண்டது. இந்த போரில் இரு தரப்பினரும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர்.

இதன் காரணமாக இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரிட்டது. இப்படியே போனால், போர் முடிவுறும்போது தேவலோகத்தில் தேவர்கள் யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள் இதனை நினைத்து கலக்கம் கொண்டனர். பின்னர் இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டி தேவர்கள் அனைவரும் இந்திரதேவன் தலைமையில் பிரம்மதேவரை சந்தித்து, தங்கள் கலக்கம் குறித்து எடுத்துரைத்தனர்.

இதையடுத்து பிரம்மதேவரும், தேவர் களுடன் சேர்ந்து இறவா நிலையில் இருக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்பது குறித்து ஆராய்ந்தார். நெடிய சிந்தனைக்கு பின் மகா விஷ்ணுவிடம் தான், தங்களின் கலக்கத்திற்கு தகுந்த விடை கிடைக்கும் என்று பிரம்மதேவர் ஆலோசனை வழங்கினார்.

இதையடுத்து தேவர்கள் அனைவரும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள விஷ்ணு பகவானை சந்தித்து தங்களின் கலக்கத்தை தெரிவித்து, இறவா நிலையை அடைய வழி கூறும்படி வேண்டி நின்றனர். தன்னிடம் முறையிட்டு நின்ற தேவர்களை நோக்கிய விஷ்ணு, `பாற்கடலை கடைந்து அதில் இருந்து வெளிப்படும் அமிர்தத்தை அருந்தினால் இறவா நிலை ஏற்படும்' என்று உபாயம் கூறினார்.

இந்த வார்த்தையை கேட்டதும் தேவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை. மாறாக, கவலையே மேம்பட்டது. பாற்கடலை கடைவதா? அது எப்படி முடியும் என்று கவலை கொள்ளத் தொடங்கினர். அதற்கான வழியையும் தாங்களே கூறும்படி மகாவிஷ்ணுவை பணிந்தனர்.

`மந்தாரகிரி மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாக கொண்டு, பாம்பின் தலைப் பகுதியில் அசுரர்களும், வால் பகுதியில் தேவர்களும் நின்று பாற்கடலை கடையும்போது அமிர்தம் கிடைக்கும்' என்று வழியையும் தெரிவித்தார் மகாவிஷ்ணு. பாற்கடலை கடைய அசுரர்கள் உதவி அவசியம் என்றால், அவர்களுக்கும் அமிர்தத்தில் பங்கு தர வேண்டும்.

அப்படி கொடுத்தால் அவர்களும் சாகா வரம் பெற்றுவிடுவார்கள் என்பதால் தேவர்களின் கலக்கம் நீடித்தது. தேவர்களின் கலக்கத்திற்கான காரணத்தை அறிந்துகொண்ட மகாவிஷ்ணு, `கவலை வேண்டாம். உரிய நேரத்தில் உதவுவோம்' என்று கூறியதை அடுத்து பாற்கடலை கடையும் பணி தொடங்கிற்று.

இந்த பணி ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது மத்தாக பயன்படுத்தப்பட்ட மந்தாரகிரி மலை ஒருபக்கமாக சரியத் தொடங்கியது. ஆபத்தை உணர்ந்த மகாவிஷ்ணு, கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்து கடலுக்கு அடியில் சென்று மந்தாரகிரி மலையை தாங்கிப்பிடித்தார். பின்னர் மீண்டும் பாற்கடலை கடைவது தொடர்ந்தது.

இதற்கிடையில் தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் மறுபுறமும் மாறி, மாறி இழுத்ததன் காரணமாக வாசுகி பாம்பின் உடல் புண்ணாகி விட்டது. இதனால் ஏற்பட்ட வலியை பொறுக்க முடியாத ஆயிரம் தலைகளை கொண்ட வாசுகி, தனது ஆயிரம் வாய்களில் இருந்தும் விஷத்தை கக்கியது. அதே நேரத்தில் பாற்கடலை கடைந்ததன் காரணமாக கடலில் இருந்தும் விஷம் பொங்கி வெளியேறியது.

இவ்வாறு பாம்பினால் கக்கப்பட்ட `காளம்' என்ற நீல விஷமும், கடலில் இருந்து பொங்கிய `ஆலம்' என்ற கருப்பு விஷமும் சேர்ந்து கடுமையான வெப்பத்தையும், கடும் புயலையும் ஏற்படுத்தியது. இதனால் தேவர்களும், அசுரர்களும் அச்சத்தில் ஆளுக்கொரு பக்கமாக சிதறி ஓடினர். பின்னர் தேவர்கள் அனைவரும் கயிலைக்கு விரைந்தனர்.

அங்கு கயிலை வாயிலில் காவலுக்கு நின்ற நந்தி தேவரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு உள்ளே சென்று ஆபத்து காலங்களில் எல்லாம் உலகை காத்து அருள்புரியும் சிவபெருமானிடம், அழுது, தொழுது முறையிட்டனர். அப்பொழுது ஈசன், தன் நிழலில் இருந்து தோன்றியவரும், பேரழகருமான அணுக்கத் தொண்டர் சுந்தரரை அழைத்து, `அவ் விஷத்தை இவ்விடம் கொண்டுவா!' என்று உத்தரவிட்டார்.

சிவபெருமான் கட்டளைப்படி சுந்தரரும், கொடிய ஆலகால விஷத்தை ஒரு துளியாக மாற்றி கொண்டு வந்தார். உலகையே அச்சுறுத்திய கொடிய விஷத்தை ஒரு துளியாக மாற்றி, சுந்தரர் கொண்டு வந்ததை பார்த்து தேவர்கள் அனைவரும் அதிசயித்து நின்றனர். அந்த விஷத்தை வாங்கிய ஈசன், அதனை அருந்தினார். அப்போது அருகில் அமர்ந்திருந்த பார்வதிதேவி பதற்றம் கொண்டாள்.

`கடும் விஷத்தை ஈசன் உண்டால் சகல புவனமும் அழியுமே' என்று கருதிய பார்வதி, சிவபெருமான் உண்ட விஷத்தை அவர் கழுத்திலேயே நிற்கும்படி தனது கரங்களால் கழுத்தை இறுக்கமாக பிடித்தார். இதனால் விஷம் சிவபெருமானின் கழுத்திலேயே தங்கி அந்த பகுதி நீல நிறமாக மாறியது. `கண்டத்தில்' விஷத்தை நிறுத்தியதால் நீலகண்டர் என்ற பெயர் பெற்றார்.

விஷம் கொண்டுவந்த சுந்தரர், `ஆலால சுந்தரர்' என்று அழைக்கப்பட்டார். சிவபெருமான் விஷத்தை சாப்பிட்ட தினம் கார்த்திகை மாதம் ஏகாதசி தினமாகும். அபாயம் நீங்கியதும் அன்று மாலை பொழுதில், தேவர்களும் அசுரர்களும் மீண்டும் பாற்கடலை கடைய தொடங்கினர். மறுநாள் துவாதசி திதியன்று பாற்கடலில் இருந்து அமிர்தம் தோன்றியது.

மகாவிஷ்ணுவின் தந்திரத்தால் அந்த அமிர்தம் தேவர்களுக்கு மட்டும் கிடைத்தது. அதன் மூலமாக அவர்கள் இறவா நிலையை அடைந்தனர். ஏகாதசியன்று விஷம் உண்ட பெருமான் துவாதசி முழுவதும் பள்ளி கொண்ட நிலையில் இருந்தார். அமிர்தம் கிடைத்த மகிழ்ச்சியின் காரணமாக, அதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்து கடும் விஷத்தை உட்கொண்ட சிவபெருமானை, தேவர்கள் அனைவரும் மறந்து விட்டனர்.

தேவர் களின் இந்த தவறை அவர்கள் உணரும்படி பிரம்மதேவர் எடுத்துரைத்தார். குற்ற உணர்ச்சியால் வெட்கி தலைகுனிந்த தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கயிலையை அடைந்து, கயிலைநாதனை தரிசித்து தங்களை மன்னித்து அருள வேண்டினர்.

இதனால் உளம் கனிந்து மகிழ்ச்சி அடைந்த ஈசன், நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே, அம்பிகை காண திருநடனம் புரிந்தார். அவர் புரிந்த நடனத்திற்கு `சந்தியா நிருத்தம்' என்று பெயர். நந்தி தேவர் சுத்த மத்தளம் வாசிக்க, சரஸ்வதி வீணை மீட்ட, மகா விஷ்ணு புல்லாங்குழலையும், பிரம்மன் தாளத்தையும், மேலும் எண்ணற்ற இசைக்கருவிகளை பூதகணங்களும் வாசிக்க ஈசனின் இனிய நடனத்தை அனைவரும் அதை கண்டு களித்து பெருமானை துதித்து பாடி வணங்கினர்.

ஈசன் நடனம் புரிந்தது திரயோதசி தினத்தில் ஒரு சனிக்கிழமை அன்று ஆகும். எனவே தான் மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Sunday, February 24, 2013

ஆனந்த விகடனில் புதிய தலைமுறை நிருபரின் அலப்பரை

புதிய தலைமுறை பத்திரிக்கையின்  முக்கிய நிருபரும் லக்கி லுக் என அழைக்கப்படும் பிரபல வலைப்பதிவாளருமான யுவகிருஷ்ணா ஆனந்த விகடனில் பிப் 14 காதலர் சிறப்பிதழில் நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார், அவருக்கு வாழ்த்துகள் .
 
நாதாவுக்கும் டைவாவுக்கும் லவ்வோ லவ்வு!

லக்கி லுக்
 
 ஓவியங்கள்: ஹரன்
 
லவ்’டப்
 சில காலமாக
இதுதான்
என் இதயத்தின் ஒலி!
சண்டாளி
தயவுசெய்து என்னை
சாகடிச்சிட்டுப் போடி!
இப்போதெல்லாம் இதுபோல ஏதாவது காமாசோமாவென்று கவிதை என்கிற பெயரில் எதையாவது கிறுக்கிவிட்டு, இமெயிலோ, எஸ்.எம்.எஸ்.ஸிலோ நம் டைவாவுக்கு (டாவடிக்கும் ஃபிகர்) அனுப்பிவிட்டால் போதும். காதலை இதயம் கிழித்து வெளிப்படுத்திவிட்ட திருப்தி கிடைத்துவிடும்.



 நெஞ்சில் மாஞ்சா சோறு இல்லாத, கொஞ்சம் 'தில்’ குறைந்த காதலன்கள் இந்த மாதிரி எழுதப்படும் கவிதை கந்தாயத்தை ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸாகப் போட்டுவிட்டு, 'அவளுக்கு’ மட்டும் டேக் செய்வார்கள். 'லைக்’ விழுந்தால் லக்கு. இல்லையேல் வேற ஃபிகருக்கு ரூட்டு. ஒரு குறிப்பிட்ட ஃபிகருக்கு டேக் செய்து, அது செட் ஆகாமல், பட்டர்ஃப்ளை எஃபெக்ட் போல உலகின் ஏதோ ஒரு மூலையில் வாழும் ஃபிகர் அந்தக் கவிதையை வாசித்து, கவரப்பட்டு கரெக்ட் ஆவதும் உண்டு. அவ்வப்போது 'ஜப்பானியப் பெண் மதுரை வாலிபரை இந்து முறைப்படி தாலி கட்டி மணந்தார்’ என்று வரும் செய்திகளின் பின்னணி என்னவாக இருக்கும்?




அதே சமயம் ஃபிகர்களும் காதலைக் கொஞ்சம் ஜாலியாகவே, பார்ட் டைம் டைம்பாஸாகவே எடுத்துக்கொள்கிறார்கள். உலகத்தில் இருக்கும் எல்லா ஆண்களுமே அவர்களுக்கு 'சப்பை’தான்! (நன்றி: ஆரண்ய காண்டம்). அநேகமாக டாஸ் போட்டுப் பார்த்து இவனைக் காதலிக்கலாமா, வேண்டாமா என்று முடிவுசெய்கிறார்கள். இதனால்தான் எங்கு பார்த்தாலும் காதலர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. பா.ம.க. மருத்துவருக்கு பி.பி. எகிறுகிறது.



லவ் செட் ஆகிவிட்டால், காதலனின் கிரெடிட் கார்டு பேலன்ஸ் இஷ்டத் துக்கும் எகிறிவிடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா என்ன? நமக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் பெர்சனல் லோன் போட்டுக் காதலிக்கிறார். 'பெட்ரோல் விலையேற்றம் நள்ளிரவு முதல் அமல்’னு ஸ்க்ரோலிங் ஓடத் துவங்கியதும், பறந்து சென்று பெட்ரோல் பங்க்கில் லைன் பிடிப்பவர்களில் முக்கால்வாசிப் பேர் காதலர்கள் அல்லாமல் வேறு யாராம்? 


பைக்குக்கு பெட்ரோல் போட்டே திவாலான காதலர்களை நீங்களும் பார்த்துஇருக்கலாம். ஏதாவது டிராஃபிக் சிக்னலில் 'ங்ங்ஙே...’ என்று சீத்தலைச் சாத்தனார் மாதிரி தலையில் கையால் குத்திக்கொண்டு திரிபவர்கள் அந்த கேட்டகிரி ஆட்கள்தான். இந்த அமரக் காதலன்களுக்குக் காதலிகள் தரக்கூடிய நஷ்டஈடு என்னவென்றால், அதிகபட்சம் ஒரு லிப் டு லிப்.



உலகமயமாக்கலால் நமக்கு எது நடந்ததோ இல்லையோ, காதல் இத்தனை சுலபமாகிவிட்டது. பெட்டிக் கடையில் கமர்கட் வாங்குவது எத்தனை சுலபமோ, இன்று காதலிப்பதும் அத்தனை சுலபம். என்ன... கமர்கட் 50 பைசா; காதல் கொஞ்சம் காஸ்ட்லி.



ஆனால், இதே முந்தைய தலைமுறை யைச் சேர்ந்த நம் சித்தப்பன்களும் மாமாக்களும் காதலிக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் தெரியுமா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். செல்போன் இல்லை. இமெயில் இல்லை. வீட்டுக்குக் கடிதமும் போட முடியாது. வெள்ளைத் தாளில், நீட்டாக மார்ஜின் விட்டு, பால்பாயின்ட் பேனா வால் குண்டு குண்டான கையெழுத்தில் ஒரு கவிதையை எழுதிவைத்துக்கொண்டு 'தேவதை’ வரும் வரை பேருந்து நிறுத்தத்திலோ, தெருமுக்கிலோ வியர்க்க விறுவிறுக்கத் தேவுடு காத்துவந்தார்கள். கொஞ்சம் பெர்சனாலிட்டி குறைந்தவர்கள் செருப்படிகூட வாங்கியிருக்கிறார்கள்.



 அப்படிப்பட்ட சூழல் காரணமாகவோ என்னவோ, 'காதல் பூ மாதிரி... காதலி கனி மாதிரி’ என்று மொக்கை வசனம் இடம்பெற்ற திரைப்படங்கள் வெள்ளி விழா கொண்டாடின. 'பூவே உனக்காக’, 'லவ் டுடே’ மாதிரியான படங்களில் ஹீரோ இது மாதிரி முழம் முழமாக சரம் கட்டிப் பேசியதாலேயே க்ளைமாக்ஸில் அவருக்கு லவ் ஃபெய்லியர் ஏற்பட்டது என்பதை நாம் எக்காலத்திலும் மறந்துவிடக் கூடாது.



அதற்கு முந்தைய தலைமுறைக் காதலன்கள் பெரும்பாலும் ஏதேனும் அலுவலகத்தில் குமாஸ்தா வேலை பார்த்தார்கள். அல்லது மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ்களாகவோ, மெடிக் கல் ரெப்களாகவோ நாய் படாதபாடுபட்டார்கள். கிடைக் கும் சொற்ப வருமானத்தையும் காதலுக்கு மடை திறந்து விட்டுவிடுவதால், மாசக் கடைசியில் பெரும்பாலான காதல் உடைந்துவிடும். 'ஹீரோ’ என்பதால் தேவையே இல்லாமல் உடன் நாலு நண்பர்களையும் எப்போதும் வைத்திருக்க வேண்டும். அந்தத் தடிமாடுகளுக்கு தம், டீ செலவையும் ஹீரோவான காதலனே அழுதாக வேண்டும்.



அந்தக் கூடுதல் செலவினங்களைத் தவிர்க்கவே லாட்டரி டிக்கெட், மங்காத்தா, வீட்டில் திருட்டு என்று சட்டத்துக்குப் புறம்பான முயற்சிகளில் இறங்கி செலவை பேலன்ஸ் செய்து வந்தார்கள். இத்தனைக்கும் அந்தக் காலத்தில் காதலிகள் வைக்கும் செலவு மிஞ்சிப்போனால்... ஒரு மேட்னி ஷோ சினிமா. தலையில் வைக்க ஒன்றரை முழம் மல்லிகைப் பூ. ஹோட்டலில் ஒரு செட் போண்டாவும் காபியும். அவ்வளவு தான்!



அதற்கு முந்தைய ஜெனரேஷன் ஒரு அழுமூஞ்சி ஜெனரேஷன். 'ஒருதலை ராகம்’, 'மைதிலி என்னைக் காதலி’ மாதிரி படங்கள் வந்த தலைமுறை. காதல் ஓ.கே. ஆகாதவர் கள் தாடிவைத்து கோமாளிகளாக அலைந்தார்கள். வைரமுத்துவின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன காலம் என்பதால், ஒருதலைக் காதலர்கள் சந்தநயத்தோடு கவிதை எழுத வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி னர். பெருவாரியான தமிழ்ப் பெண் கள் முதன்முதலாக பத்தாவதுக்கு மேல் படிக்க வீட்டு வாசல்படியைத் தாண்டிய தலைமுறை இது. பழமையும் நவீனமும், ஃபிப்டி ஃபிப்டியாக வாய்த்த பெண்கள் என்பதால், அவ்வளவு சுலபமாகக் காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.



 ஜன்னலைத் திறந்துவைத்துப் படபடவென்று கண் இமைப்பார்கள். மொழுமொழுவென்று தேங்காய் எண்ணெய் தடவி, கவனமாக பின்னல் இட்ட இரட்டைச் சடையை ஸ்டைலாக ஆட்டுவார்கள். இதெல்லாம் காதலை ஏற்றுக்கொண்டதற்கான சிக்னல் என்று நினைத்து, நம் காதலர்கள் குஷியாக கனவில் டூயட் பாடுவார்கள். தங்களைக் காதலித்ததாக நினைத்த பெண்ணுக்கு அவள் தாய்மாமனோடு கல்யாணம் எனும்போது, 'நான் ஒரு ராசியில்லா ராஜா’ என்று தனியே முக்கு ரோட்டிலும், பீச்சிலும் பாட்டுப் பாடி நடந்தார்கள். அடுத்த, 'கண்டதும் காதல்’ தோன்றும் வரை ஷேவிங் செய்யாமல் காசை மிச்சப்படுத்துவார்கள். அவ்வாறு சேர்ந்த காசுதான் புது காதலுக்கு முதலீடு.



அதற்கு முந்தைய தலைமுறைக் காதல் ஜெமினி கணேசன் காலத்துக் காதல். புதுக்கவிதை அறிமுகம் ஆகாத காலகட்டத்துக் காதல் என்பதால், காதலர்கள் மரபுக் கவிதைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெண்கள் வெளியே தலைகாட்டுவதே அதிசய நிகழ்வாக இருந்த காலம். கவிதை எழுதுவதும் கஷ்டம். பெண்ணைப் பார்ப்பதும் கஷ்டம்.




 எனவே, கண்ணில் படும் முதல் பெண்ணையே காதலித்துவிடுவது என்று அந்தக் காலத்துக் காளையர்கள் சபதம் செய்துஇருந்தார்கள். காதலியோடு பேசும்போதும்கூட எதுகைமோனையில் பத்து, இருபது நிமிடங்களுக்கு நான்ஸ்டாப்பாக வசனம் பேசியாக வேண்டும். 'அப்பப்பா... என் மீது உங்களுக்கு இவ்வளவு காதலா?’ என்று காதலி பதிலுக்கு ஒரே வாக்கியத்தில் கொஞ்சிவிட்டுப் போய்விடுவாள். நாம் கேள்விப்பட்டவரை, அந்தக் காலத்தில் ஒரு காதலர் பக்காவாக வசனம் ரெடி செய்துகொண்டு, மெரினா பீச்சில் தன் காதலியிடம் நீண்ட காதல்மொழி பேசிக்கொண்டு இருந்தாராம். 



அவரது டயலாக் முடிவதற்குள்ளாகவே காதலிக்கு வேறு ஒருவரோடு திருமணம் முடிந்து, குழந்தையும் பிறந்துவிட்டதாம். காதலன் என்பவன் எம்.ஜி.ஆர். மாதிரி வீரமாகச் சண்டை போட வேண்டும் என்று காதலிகள் எதிர்பார்த்தனர். இந்த ஒரு நிபந்தனையாலேயே இல்லற வாழ்வைத் துறந்து துறவிகளாகப் போனவர்களின் எண்ணிக்கை ஏராளம்.



தியாகராஜ பாகவதர் காலத்து காதலைத்தான் நினைத்தே பார்க்க முடியவில்லை. ஏனெனில், அப்போது பெண்களுக்கு ஐந்தில் இருந்து பத்துப் பதினைந்து வயதுக்கு உள்ளேயே திருமணம் நடந்துவிடுமாம். எனவே, காதலிக்கும் வாய்ப்பு சதவிகிதம் மிகக் குறைவானதாக, அதிகபட்சம் இரண்டு, மூன்று சதவிகிதத்துக்குள்தான் இருந்திருக்கும். மீறி ஏதோ ஒரு பெண்ணைக் காதலித்தாலும், அவளுக்கு எழுதப்படும் காதல் கவிதை என்பது சங்கத் தமிழ் செய்யுள் வடிவத் தில் இருக்க வேண்டும். இதையெல்லாம் விட முக்கியம், அவளுக்குப் படிக்கத் தெரியுமா என்ப தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.




அந்தக் காலக்கட்டத்துக் காதல் படங்களின் காட்சிகளைப் பார்த்தோமானால், நமக்குக் காதலே வெறுத்துப்போகிறது.


'தேவி’
'நாதா’
'தேவி’
இப்படியெல்லாம் ஒருவேளை யாராவது நிஜ வாழ்க்கையில் காதலித்து இருந்தால், அப்போதே சுனாமி வந்திருக்கும்.


இதையெல்லாம் பார்க்கும்போது நம்முடைய சமகாலத்தை நாம் போற்றியாக வேண்டும். முந்தைய தலைமுறையினர் காதலிக்கப்பட்ட சிரமங்கள் மாதிரி இல்லாமல் ஏழைக்கேத்த எள்ளுருண்டை என்பதைப் போல, அவரவர் லெவலுக்கு ஏதோ ஒரு காதல் செட் ஆகிவிடு கிறது.


காதலியைத் தேர்ந்தெடுக்க, காதலிக்க ஏராள மான வாய்ப்புகளும், சூழல்களும் அமைந்துஇருக்கின்றன. குறிப்பாக, காதல் கடிதம் நீட்டுபவனை யாரும் செருப்பால் அடிப்பது இல்லை. நாகரிகமாக மறுத்துவிடுகிறார்கள். அட.... காதலிக் கப் பெண்ணே கிடைக்கவில்லை என்றால்கூட, மற்றொரு ஆணைக் காதலிக்கும் கலாசாரம் பிரபலமாகிக்கொண்டு இருக்கிறது. அடுத்த தலைமுறையில் ஜோடி ஜோடியாக ஆண்கள் பீச்சி லும், பார்க்கிலும் கைகோத்து நடப்ப தாகக் கற்பனை செய்துபார்த்தாலே... கல்லீரல், கணையம் எல்லாம் கலங்குகிறது!


நன்றி - விகடன் 

பத்மபூஷண்’ விருதை மறுத்த எஸ் ஜானகி பேட்டி

ஜானகியின் பாடல்கள் கொடுக்கும் பரவசத்தை அவருடனான உரையாடலும் கொடுக்கும் என்பதை அந்த அரை மணி நேரத் தின் ஒவ்வொரு நொடியும் உணர்த்திக்கொண்டே இருந்தது. தனக்கு அளிக்கப்பட்ட 'பத்மபூஷண்’ விருதை மறுத்ததன் மூலம் அகில இந்தியக் கவனம் ஈர்த்தவர், இப்போது அந்தப் பரபரப்பின் சின்ன சாயல் கூட இல்லாமல் தன் வாழ்க்கையின் முக்கியமான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.  



''நான் முதல்ல பாடுனது வி.சந்திரசேகரன் என்கிற ஒரு மேடை நாடகக் கலைஞருக்காக. அற்புதமான மோனோ ஆக்டிங் கலைஞர் அவர். அவரோட நாடக இடைவேளைகளின்போது என்னைப் பாடவைப்பார். அப்படி ஒரு சமயம் போனபோது, அவரோட பாக்கெட்டில் இருந்து ஒரு போட்டோ கீழே விழுந்துடுச்சு. எடுத்துப் பார்த்தா அது ஒரு கம்பீரமான இளைஞரின் படம். என்னமோ தெரியலை...


 பார்த்த உடனே அவர் மேல ஒரு ஈர்ப்பு உண்டாகிருச்சு. அப்புறம் அவர் சந்திரசேகரனோட மகன் ராம்பிரசாத்னு தெரிஞ்சிக் கிட்டேன். அவரை நேர்ல பார்க் காமலேயே காதலிக்க ஆரம்பிச் சிட்டேன். தெய்வீகக் காதல் மாதிரினு வெச்சுக்கங்களேன். ஒவ்வொரு நாள் மேடையில பாடும்போதும் அவர் கூட்டத்தில் அமர்ந்திருக்காரான்னு கண்கள் தேடும். இல்லைன்னா மனசு ஏங்கும்.



ஒரு நாள் சந்திரசேகரன் சார், 'இன்னைக்கு என் மகன் உன் பாட்டைக் கேட்க வந்திருக்கான்’னு சொன்னார். அந்த வார்த்தைகள் உண்டாக்கிய பரவசத்தை இன்னும் என்னால மறக்க முடியலை. அன்னைக்குக் கண்கள் மூடி மெய்மறந்து பாடினேன். கண்ல ஆனந்தக் கண்ணீர் கட்டிக்கிச்சு. பாடி முடிச்சதும் ராம்பிரசாத் ஆச்சர்யமா என்னைப் பார்த்துக்கிட்டே அவர் அப்பாகிட்ட சொன்னார், 'எவ்வளவு திவ்யமா பாடுறாங்க. அந்தக் குரல் உங்களை எதுவும் செய்யலையா? இந்தக் குரல் என் உசுரை, மனசை உலுக்கிடுச்சு. இவங்க இங்க பாட வேண்டியவங்க இல்லை. இந்தக் குரல் உலகம் முழுக்கக் கேட்கணும்.’ என்னை சினிமா பக்கம் திசை திருப்பினவர் ராம்பிரசாத்தான்.
அவர் சொல்லிட்டாருங்கிற ஒரே காரணத்துக்காகவே சினிமாவில் பாடும் முயற்சிகளை மேற்கொண்டேன். என் மனசுல இருந்த காதலை அவர்கிட்ட சொல்லத் தயக்கம். அந்தக் காலத்துல அது அவ்வளவு சுலபமா என்ன? ஆனா, நான் தயங்கித் தாமதிச்சதே என் காதலுக்கு ஒரு சோதனையை உண்டாக்குச்சு.
ஒரு முறை அவர் அப்பா சந்திரசேகரன் சார், 'எங்கேயோ வெளியே போகணும்’னு சொல்லி என்னைக் கூப்பிட்டு அனுப்பிச்சார். போய் நின்னா, ராம்பிரசாத்துக்குப் பொண்ணு பார்க்க என்னையும் அழைச்சுட்டுப் போனாங்க. 




 கண்ணுல துளிர்த்த கண்ணீரை மறைச்சுட்டு கலங்கிப்போய் உட்கார்ந்து இருந்தேன். நல்லவேளை அந்தப் பொண்ணு கைகூடலை. அப்புறம் அவரோட அப்பாவே என் நடவடிக்கைகளைக் கவனிச்சிட்டு, 'பக்கத்துல லட்சுமியை வெச்சிக்கிட்டு ஊரெல்லாம் தேடுறேனே’னு என்கிட்ட வந்து என் விருப்பத் தைக் கேட்டார். சந்தோஷமா தலையாட்டுனேன். அப்புறம் ராம்பிரசாத்தும் மனசு நிறைய என் மேலே காதலை மறைச்சி வெச்சிருந்ததைப் பின்னாடி சொன்னார். இப்படி ரெண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தர் காதலைச் சொல்லாமலேயே வாழ்க்கைத் துணை ஆனோம். என் கணவர்தான் சென்னைக்கு என்னை அழைச்சிட்டு வந்தார். ஏவி.எம். ஸ்டுடியோவுல மாசச் சம்பளத்துக்கு ஆர்ட்டிஸ்ட்டா சேர்ந்தேன்.''



''அந்தச் சமயம் பி.சுசீலா, பி.லீலா, ஜிக்கின்னு பிரமாதமான பாடகிகள் சினிமாவில் கோலோச்சிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு நடுவில் எப்படி எஸ்.ஜானகி உருவானாங்க?'' 



''தானா எல்லாம் நடந்துச்சு. ஏவி.எம்-ல மாசச் சம்பளம் 300 ரூபான்னு மூணு வருஷம் ஒப்பந்தம் போட்டாங்க. அப்ப ஏவி.எம். ஆர்ட்டிஸ்ட்னா பெரிய மரியாதை. ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, அங்கே நான் பாடின முதல் பாட்டைக் கேட்ட எல்லாரும், 'யாரு இந்த சின்னப் பொண்ணு. குரல் ஃப்ரெஷ்ஷா இருக்கே... பாட்டைக் கேட்டுட்டே இருக்கணும்போல இருக்கே’னு ஆச்சர்யப்பட்டாங்க. அந்த ஒரு பாட்டைக் கேட்டதுமே வெளியே இருந்து நிறைய அழைப்புகள் வந்தன. எதிர்பார்க்க முடியாத இடங்களில் இருந்தெல்லாம் பெரிய வாய்ப்புகள் வந்தன. 



ஆனா, ஏவி.எம். நிறுவனத்தோட இருந்த ஒப்பந்தத்தை மனசுல வெச்சுட்டு நான் தயங்கி நின்னேன். என் தர்மசங்கடம் புரிஞ்சுட்டு ஒரு கட்டத்துல அவங்களே மனசு கேட்காம ஒப்பந்தத்தைத் தளர்த்திட்டாங்க. ஏவி.எம்-ல நான் முழுசா ஒரு வருஷம்கூடப் பாடலை. நான் கோரஸ் பாடி அறிமுகம் ஆனதா சிலர் நினைக்கிறாங்க. ஆனா, நான் கோரஸ் பாடுனதே இல்லை. முதல் பாடலே ஸோலோவாகத்தான் பாடினேன். அந்தக் காலகட்டத்தில் மேதைகளுக்கு நடுவில் எனக்கு ஒரு சின்ன இடம் கிடைச்சதுக்கு ஏவி.எம். நிறுவனம் எனக்குக் கொடுத்த வாய்ப்பும் சுதந்திரமுமே முக்கியக் காரணம்.''



''17,000 சினிமா பாடல்கள், சுமார் 20,000 தனிப் பாடல்கள், திருவையாறில் மூன்று முறை அரங்கேற்றம்... இந்தச் சாதனைகளுக்கான சின்ன அங்கீகாரமாகத்தானே உங்களுக்கு பத்மபூஷண் அறிவிக்கப்பட்டது. அதை ஏன் மறுத்தீங்க?'' 



''ரசிகர்களின் அன்பை விட இந்த உலகத்துல வேற எதையும் பெரிய அங்கீகாரமா நான் நினைக்கலை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பெங்காலி, படுகா, சிங்களம், இங்கிலீஷ், ஜெர்மன் உட்பட 17 மொழிகளில் பாடியிருக்கேன். விருதை எதிர்பார்த்து இத்தனை மொழிகளில் நான் பாடலை.



ஒருத்தருக்கு விருது அங்கீகாரம் எப்ப கிடைக்கணும்? அவர் கம்பீரமா... நல்ல நிலைமையில் இருக்கிறப்போ, 'இந்த விருதுக்கு முழுத் தகுதியானவன் நான்’ங்கிற எண்ணம் மனசுல அலை அடிக்கிற சமயம் கொடுக்கிறதுதானே நியாயம்? அதை விட்டுட்டு, வீல் சேர்ல ஒருத்தர் தள்ளிட்டு வர்ற நிலைமையில ஒருத்தருக்கு விருது கொடுக்கிறது என்ன நியாயம்?



தமிழில் பாடுவதற்கு ரொம்பவும் சிரமமான பாட்டான 'சிங்காரவேலனே தேவா’ பாடினப்பவே என்னைக் கவனிச்சு, தொடர்ந்த சில வருஷங்களிலே என் திறமையைக் கணிச்சு விருது கொடுத்திருந்தா, அதை நான் ஏத்துட்டு இருந்திருப்பேன். ஆனா, இப்போ எதுக்கு எனக்குச் சம்பந்தம் இல்லாம அந்த விருது? அப்போ வடக்கத்திய ஆட்கள் நினைச்சு மனசு வெச்சாதான் தெக்கத்திய ஆட் களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்னா, அது எதுக்கு நமக்கு? அதான் வேண்டாம்னு மறுத்துட்டேன். அதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை.''



''எல்லா காலகட்டத்திலும் எல்லா இசையமைப்பாளர்களின் முதல் தேர்வாக நீங்கள்தான் இருந்திருக்கிறீர்கள். சினிமாவில் உங்களுடையது சுகமான பயணமாகத்தானே இருந்திருக்கிறது. ஆனா, 'பத்மபூஷண்’ விருதை மறுக்கும் அளவுக்கு மனதில் என்ன காயம்?'' 



''எல்லாரும் நினைக்கிற மாதிரி சினிமாவில் ஜானகியின் வளர்ச்சி சுலபமா இல்லை. பலருக்கும் தெரியாத ஒரு உண்மையை இப்போ சொல்றேன்... நான் சினிமாவில் பாடத் தொடங்கிய சில வருஷங்கள்லயே கடுமையான ஆஸ்துமா பிரச்னையால் பாதிக்கப்பட்டேன். 'சுமைதாங்கி’ படத்துல 'ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ’ பாடுனப்ப மூச்சுத் திணறல் அதிகமாகி நெஞ்சை அடைச்சிருச்சு.




 ஆனாலும், தொடர்ந்து பாடினேன். 'தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’ பாட்டு இப்பவும் எத்தனை பேரைத் தாலாட்டித் தூங்கவைக்குது. ஆனா, அந்தப் பாட்டைப் பாடுறப்ப எனக்குக் கடுமையான மூச்சுத்திணறல்.  அதைப் பொறுத்துக்கிட்டு பாடினேன். பாடி முடிச்சதும் மயங்கிட்டேன். உடனே ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப்போய் உயிரைக் காப்பாத்தினாங்க. இப்படி என் உயிரின் சில இழைகளை இழந்துதான் என் ஒவ்வொரு பாட்டிலும் ஜீவன் சேர்க்குறேன்.  ஆனா, அதைக் கவனத்தில் கொள்ளாமல், 'என் குரல் சுமார்தான். ஆனா, பாடுற விதத்துல திறமையா இருக்கிறதால பாட்டு நல்லா வருது’னு விமர்சிச்சாங்க. அதுதான் என் மனசை  கஷ்டப்படுத்திய விஷயம். ஆனா, அதையெல்லாம் இப்போ கடந்து வந்துட்டேன்.''



''இன்னைக்குப் பாடிட்டு இருக்கும் பின்னணிப் பாடகர், பாடகிகளில் யாரை உங்களுக்குப் பிடிக்கும்?'' 



''நிறையப் பேர் வர்றாங்க. அருமையா பாடுறாங்க. எல்லாரையும் ரசிக்குறேன். இன்னைக்கும் சினிமாவுல பாடச் சொல்லி தினமும் என்கிட்ட கேட்குறாங்க. ஆனா, தோணுறப்போ வருஷத்துக்கு ஒண்ணு, ரெண்டுதான் பாடுறேன். அடுத்தடுத்த தலைமுறைக்கு வழிவிடணும். என் குழந்தைங்க பாடட்டும். நான் இப்போ ரசிகை மட்டும்தான்.''


 நன்றி - விகடன் 

பாரதிராஜா, இளையராஜா மீண்டும் மோதல் @ அன்னக்கொடியும் கொடிவீரனும்"

பாரதிராஜா, இளையராஜா, அன்னக்கிளி செல்வராஜ் இந்த மூன்று பேருமே மதுரை வைகை ஆற்று மணலில் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தவர்கள். அன்னக்கிளி செல்வராஜ் கதை எழுத, இளையராஜா இசை அமைக்க, பாரதிராஜா இயக்க இவர்கள் நாடகம் மதுரை தேனி, கம்பம், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் பிரபலம். மூவருமே சினிமா ஆசையோடு சென்னைக்கு புறப்பட்டு வந்தார்கள். பாரதிராஜா பல இயக்குனர்களிடம உதவியாளராக பணியாற்றி "16 வயதினிலே" படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.

அன்னக்கிளி செல்வராஜ் எழுதிய "அன்னக்கிளி" கதை பஞ்சு அருணாசலத்துக்கு பிடித்துப்போக அவர் கதையும் -ஓகேவாகி, செல்வராஜ் சிபாரிசில் இளையராஜாவும் அறிமுகமானார். அடுத்த சில வருடங்களில் இவர்களோடு சேர்ந்தவர் வைரமுத்து. அவரும் வடுகபட்டியைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் இணைபிரியாத நண்பர்களாக இருந்த இவர்கள் இணைந்து காலத்தால் அழிக்க முடியாத அரிய படைப்புகளை தந்தார்கள். இசையில் இளையராஜாவும், பாடலில் வைரமுத்துவும், இயக்கத்தில் பாரதிராஜாவும், கதையில் செல்வராஜும் அதன் உச்சம் தொட்டார்கள்.

காலப்போக்கில் வெற்றிகள் வந்து குவிந்தபோது இவர்களின் குணங்கள் மாறத் தொடங்கியது. முதலில் இந்த நால்வர் அணியில் இருந்து பிரிந்தவர் செல்வராஜ். கதைக்கு இவர்கள் தரும் ஊதியம் குறைவு என்பதால், பலருக்கு கதை எழுத கிளம்பினார் செல்வராஜ். புகழ்பெற்ற "அலைபாயுதே" படத்தின் கதை செல்வராஜுடையது. அடுத்து வைரமுத்து விலகிக் கொண்டார். இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்குமிடையே இருந்த ஈகோ பிரச்சினை ஒரு முக்கிய சம்பவத்தில் வெடித்துச் சிதற நிரந்தரமாக பிரிந்து விட்டார்கள். பாரதிராஜா மட்டும் அனைவரிடமும் நெருக்கமாக இருந்து வந்தார்.

பாரதிராஜா, இளையராஜாவை வாடா போடா என்று பொது மேடையிலேயே அழைக்ககூடியவர். உலகமே தன்னை இசை மேதையாக கொண்டாடும்போது இவன் மட்டும் இப்படி பேசுகிறானே என்ற கவலை இளையராஜாவுக்கு உண்டு. வைரமுத்துவையும், இளையராஜாவையும் சேர்த்து வைக்கும் சில முயற்சிகளைச் செய்தார் பாரதிராஜா. அதை முளையிலேயே கிள்ளி எரிந்தார் இளையராஜா. வைரமுத்துவுடன் மீண்டும் இணைவதையும், பாரதிராஜா தன்னை ஒருமையில் விழிப்பதையும் அடியோடு வெறுத்து வந்தார் இளையராஜா.

இது அண்மையில் மதுரையில் நடந்த "அன்னக்கொடியும் கொடிவீரனும்" படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக வெடித்தது. அதில் இளையராஜாவை பாராட்டி பேசிய பாரதிராஜா வழக்கம்போல இளையராஜாவை வாடா போடா என்று ஒருமையில் பேசினார். சொந்த மண்ணில் நடக்கும் விழாவில் இப்படி அவர் பேசியது இளையராஜாவை அதிர்ச்சி அடைய வைத்தது. "நீ யார்கிட்டேயும் பத்து நிமிஷம் உட்கார்ந்து பேச மாட்டேங்ற. எல்லார்கிட்டேயும் பேசு. நீ தலைக்கனம் பிடிச்சு ஆடுற. நாம என்ன இன்னொரு தடவை பொறக்கவா போறாம். இருக்கிறப்போ சந்தோஷமா இருந்துட்டு போவோம். நாங்க மூணு பேரு, அதுல ஒருத்தன் (வைரமுத்து) இங்க இல்லை. திரும்பவும் மூணு பேரும் ஒண்ணா சேர்வோம்" என்று பேசினார்.

இது இளையராஜாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அன்று விழா முடிந்ததும் பாரதிராஜாவிடம் சொல்லிக் கொள்ளாமலே சென்னை திரும்பினார். இப்போது அதுபற்றி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:  அவருக்கு (பாரதிராஜா) என் மீதுள்ள குறையெல்லாம், நான் அவனைப்போல இல்லையே என்பதுதான். அதாவது குடித்துக் கொண்டும், கூத்தடித்துக் கொண்டும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ? அப்படி நான் மாறுவது நடக்கிற காரியமா? அவர் நினைக்கிறபடி நான் இருக்க வேண்டுமா?. இல்லை என்றால் ஏன் இந்த புத்திமதி. என்னை மேடையில் அவமதிப்பதா?. அவர் பேச்சை வெறும் பைத்தியக்காரன் பேச்சு என்று விட்டு விட வேண்டியதுதான். அவ்வளவு பெரிய விழாவில் என்னை வற்புறுத்தி அழைத்துச் சென்று அவமதித்த பேசியது மட்டும் ஏற்புடையதுதானா?" என்று கூறியிருக்கிறார்.

"பாரதிராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் அவ்வப்போது சிறு ஊடல்கள் வருவது சகஜம்தான். ஆனால் அதனை மீடியாக்களிடமும், பொது இடங்களிலும் வெளிப்படுத்தும் அளவுக்கு வளர்ந்திருப்பது வேதனையாக உள்ளது" என்று அவருக்கு நெருக்கமான நண்பர்கள் கூறுகிறார்கள். பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து சேர்வது மட்டுமல்ல இனி இளையராஜாவும், பாரதிராஜாவும் இணைவது என்பதே கடினமானது என்கிறார்கள்.


 நன்றி - தினமலர்



மதுரையில் இருந்து கிளம்பி வந்து பல்வேறு போராட்டங்களைக் கடந்து தங்களது திறமையால் தமிழ் திரையுலகத்தின் உச்சானிக் கொம்பில் ஏறி உட்கார்ந்தவர்கள் பாரதிராஜாவும், இளையராஜாவும். ஒருவர் இயக்கத்திலும், மற்றொருவர் இசையமைப்பிலும் நிகரற்று விளங்குகிறார்கள்.


இருவரும் பால்ய கால நண்பர்கள் என்பதால் அடிக்கடி ஊடலும், கூடலும் இருக்கும் என்பது இயற்கை.


ஆனால் தற்போது இருவருக்குள்ளும் இனி சேரவே முடியாது என்ற அளவுக்கு ஏதோ பிரச்னை வெடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.



சமீபத்தில், அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் பாடல் வெளியீடு தங்களது சொந்த மண்ணான மதுரையில் நடந்தது. இவ்விழாவில் கலந்து கொண்ட இளையராஜாவை, பாரதிராஜா ஒருமையில் அழைத்துப் பேசியதும், சில அறிவுரைகள் வழங்கியதும், இளையராஜாவுக்கு பிடிக்காமல் போனது. சொந்த மண்ணில் தன்னைப் பற்றி பாரதிராஜா இவ்வாறு கூறியது இளையராஜாவின் மனதை பாதித்தது.



இதுதான் இருவருக்குள்ளும் அவ்வப்போது உண்டான சண்டை, வெளி உலகுக்குத் தெரிய வரக் காரணமாகிவிட்டதாம்.


தங்களது திறமையால் தமிழ் உலகில் நிகரற்று விளங்கும் இருவரும் நட்பிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதே தமிழ் ரசிகர்களின் ஆசை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


thanx - dinamani