Friday, February 22, 2013

வன யுத்தம்-சினிமா விமர்சனம் (விகடன் விமர்சனக் குழு)


வீரப்பனின் வாழ்வும் மரணமும்தான்... 'வன யுத்தம்’!


 ஆனால், நாளிதழ் செய்திகளிலேயே பாக்கெட் நாவல் சுவாரஸ்யம் தந்த வீரப்பனின் வாழ்க்கையை, சினிமா ஆக்கியதில் அந்த சுவாரஸ்யத்தைக் 'காவு’ கொடுத்துவிட்டது ஏன் ரமேஷ்?  


முதல் பாதிச் சம்பவங்கள் முழுக்க முன்பின் தொடர்பு இல்லாமல் 'டாக்குமென்டரி’ தொனியில் கடந்து செல்வது, வாசித்த செய்திகளையே வாசிக்கும் அலுப்பு. ஒரு சாதாரண கூலித் தொழிலாளி வீரப்பன் எப்படி மொத்த வனத்தையும் கட்டுப்படுத்தும் கடத்தல்காரனாக உருவெடுத்தான், வீரப்பனின் ஒவ்வொரு முடிவுக்கும் பின் இருக்கும் அரசியல், வீரப்பனை வில்லனாக உருவெடுக்கவைத்ததில் தமிழக -  கர்நாடக போலீஸாரின் பங்கு... இவை எங்குமே காட்சிப்படுத்தப்படவில்லை. 10 வருடக் கதையை 10 நிமிட ஃபாஸ்ட் ஃபார்வர்டில் சொல்வதுபோலக் கடகடவெனக் கடக்கின்றன காட்சிகள். பின்பாதியில் அர்ஜுன் ஆபரேஷனை ஆரம்பித்ததும் வேகமெடுக்கும் திரைக்கதையில் மட்டுமே யுத்த திகில்!  


வீரப்பனாக... கிஷோர் நச் தேர்வு. ஒல்லி உடலும், பெரிய மீசையும், மூன்றாவது கையாக துப்பாக்கியுமாக... க்ளோனிங் வீரப்பன். 'ஸ்லாங்’ இடித்ததாலோ என்னவோ, இரண்டு மூன்று வார்த்தைகளிலேயே வசனத்தை முடித்துக்கொள்பவர், தப்பிச் செல்வதற்காக டி-ஷர்ட், ஜீன்ஸ் அணியும் காட்சியில், ''சின்னப் புள்ள மாதிரி என்னையும் டிரெஸ் போடவெச்சிட்டீங்களே!'' என்று வெட்கப்படும் இடம்... இயல்பு! ''நானும் மீசையை எடுக்கணுமா?'' என்று அதிர்ச்சியாகக் கேட்கும் சேத்துக்குளி கோவிந்தனாக, சம்பத் ராம் கோபம், குழப்பம் என எல்லாவற்றிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.


விஜயகுமார் ஐ.பி.எஸ். கதாபாத்திரத்தில் அர்ஜுன் பெர்ஃபெக்ட் ஃபிட். வீரப்பன் கண்ணி வெடி மூலம் போலீஸை எப்படிக் கொன்றிருப்பான் என்று யோசிப்பது முதல் ஆம்புலன்ஸை இன்ச் இன்ச்சாக வடிவமைப்பது வரை அப்படியே விஜயகுமாரைப் பிரதி பலிக்கிறார். இந்தப் படத்துக்கு எதற்கு லட்சுமிராய்?  

'உன் மகளுக்கு காலேஜ் சீட், உன் மகனுக்கு கவர்மென்ட் வேலை’ என்று வீரப்பனுக்கு வேலை பார்க்கும் முன்னாள் மிலிட்டரியை பிரெய்ன்வாஷ் செய்யும் 'போலீஸ் புத்தி’, கோவை சிறை முதல் பாப்பாரப்பட்டி கிராமம் வரை துல்லியமாகக் காய் நகர்த்தி, வீரப்பனுக்குப் பொறிவைக்கும் வியூகம் என 'ஆபரேஷன் குக்கூன்-ஐ’ நேரில் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது பின் பாதித் திரைக்கதை.  


ஆனால், மலைவாழ் மக்கள் போலீஸால் ஏகப்பட்ட கொடுமைகளுக்கு ஆளானது, பல நூறு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது இவற்றைப் பற்றி ஒரு வார்த்தை, ஒரு காட்சிகூட இல்லையே படத்தில்?!
வீரப்பன் தரப்பு நியாயங்கள் எதுவுமே இல்லாமல் போலீஸ் தரப்பு விளக்கங்களாகப் படம் விரிவதால், இந்த யுத்தம் ஒரு பக்கச் சத்தம்!


- விகடன் விமர்சனக் குழு

Thursday, February 21, 2013

கவியரசு கண்ணதாசன் பயங்கர பிடிவாதக்காரரா? - -விகடன் மேடை எம்.எஸ்.வி. பதில்கள்!


கலையரசன், கிடாரங்கொண்டான்.


 ''இந்தக் காலத்தில் சில திரைப்படப் பாடல் களில் 'காப்பி’ நெடி தூக்கலாக இருக்கிறது. ஆனால், அந்தக் காலத்திலேயே எம்.ஜி.ஆர். உங்களிடம் சில ரெக்கார்டுகளைக் கொடுத்து, 'இது மாதிரி இசையமைத்துக் கொடுங்க’னு சொன்னாராமே... உண்மையா?''


'' 'உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்காக லொகேஷன் பார்க்க வெளிநாடுகளுக்குப் போன எம்.ஜி.ஆர்., ஒரு மூட்டை நிறைய ரிக்கார்டுகளும் கேசட்டுகளும் கொண்டுவந்து கொடுத்து, 'விசு... இதை எல்லாம் கேட்டுப்பார். ஒரு ஐடியா கிடைக்கும்’னார். நான் அதை எல்லாம் ஒரு ஓரத்தில் ஒதுக்கிவெச்சுட்டு, 'அண்ணே... நான் மெட்டுப் போட்டுத் தர்றேன். அதைக் கேட்டுட்டு அப்புறம் சொல்லுங்க’னு சொல்லி, கடகடனு நிறைய மெட்டு போட்டுக் கொடுத்தேன். அதையெல்லாம் கேட்டதுமே எம்.ஜி.ஆர். என்னைக் கட்டிப்புடிச்சுக்கிட்டார். அது எல்லாமே சூப்பர் ஹிட் மெட்டு ஆனதுதான் உங்களுக்கே தெரியுமே!''


பா.கீர்த்தனா, சென்னை-63.


''ஜெயலலிதா உங்களுக்கு ஜனாதிபதி விருதுக்கு சிபாரிசு செய்ய முன்வந்தும் நீங்கள் மறுத்தது ஏன்?''


''முதல்வர் அம்மா என்கிட்டேயே, 'உங்களுக்கு ஜனாதிபதி விருது கொடுக்க சிபாரிசு செய்யப்போறேன்’னு சொன்னாங்க. என் இசை மேல அவங்களுக்கு இருக்கிற மதிப்பின் காரணமா அப்படிச் சொன்னாங்க. 'இல்லம்மா... உங்களுக்கு வேற நிறைய வேலை இருக்கும். என்னால எதுக்கு உங்களுக்குச் சங்கடம்? வேண்டாம்மா. ஒவ்வொரு ரசிகரும் தன் மனசுல எனக்குக் கொடுத்துருக்கிற இடத்தைவிடவா விருதுகளும் பட்டங்களும் எனக்குச் சந்தோஷம் கொடுத்துடப் போகுது... நீங்க சொன்னதே போதும்மா’னு சொல்லிட் டேன். அது உண்மைதானே!''


க.சந்திரன், திருவண்ணாமலை.  


'' 'அன்னக்கிளி’ படத்தின் பாடல்கள் வெளிவந்தப்ப, அதைக் கேட்டதும் உங்க மனசுல என்ன நினைப்பு ஓடுச்சு?''


'' சிவகுமார் நடிச்ச பல படங்களுக்கு நான் மியூஸிக் போட்டிருக்கேன். 'அன்னக்கிளி’ பட வேலைகள் ஆரம்பிச்சப்பவே புது மியூஸிக் டைரக்டரை அறிமுகப்படுத்துறாங்கனு பேசிக்கிட்டாங்க. படத்தின் பாடல்களைக் கேட்டுட்டு, 'ரொம்பப் பிரமாதமா... இருக்கே’னு நினைச்சேன். அப்போ எங்கே போனாலும் இதே பேச்சாதான் இருந்துச்சு. தம்பி இளையராஜாவைப் பாராட்டினேன். 'அன்னக்கிளி’ வர்றதுக்கு முன்னயே அவரை எனக்குத் தெரியும். என் ட்ரூப்புல கீபோர்டு வாசிச்சிருக்கார். அற்புதமான மேதை. இன்னொரு விஷயம், யாரையும் நான் பொறாமை யோட பார்த்தது இல்லை. ஆனா, போட்டி இருக்கும்.''


தீன் முகம்மது, பூதமங்கலம்.


''நீங்கள் வாய்விட்டு அழுத சம்பவம் என்ன?''


''நான் கோல்டன் ஸ்டுடியோவுல ஒரு படத்துக்கு பாட்டு கம்போஸிங்ல இருந்தேன். அப்போ மெஜஸ்டிக் ஸ்டுடியோ ரெங்கசாமி கார்ல இருந்து இறங்கி வேக வேகமா வந்து, 'கண்ணதாசன் காலமாயிட்டார்’னு சொன்னார். அதைக் கேட்டதுமே எனக்கு ஈரக்குலையே நடுங்கிப்போச்சு. கண்ணீர் முட்டிக்கிட்டு வந்திருச்சு. என்ன செய்யிறதுன்னே தெரியலை. அழுது அழுது கண்ணு சிவந்துபோயிருச்சு. நெஞ்சு படபடப்பை அடக்கிட்டு கவிஞர் வீட்டுக்கு ஓடினேன். அங்கே போனா கண்ண தாசன் சோபாவுல ஜம்முனு உட்கார்ந்திருக் கார். 'டேய் விசு, நான் செத்துப்போயிட்டா நீ எப்படி அழுவேனு பார்க்க ஆசையா இருந்தது. அதான் அப்படி சொல்லச் சொன்னேன்’ னார். அதுதாங்க நான் என்னை மறந்து விம்மி வெடிச்சு அழுத தருணம்!''


அனுசுயா கோவிந்தராஜன், தஞ்சாவூர்.


''நீங்க புகழின் உச்சத்தில் இருந்த நேரத்தில் உங்களுக்கு நிகராக பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்த இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனைப் பற்றி உங்கள் நினைவுகள் என்ன?''



''ரொம்பப் பெரிய மேதைங்க அவர். நான் பெரிசா மதிக்கிற மியூஸிக் டைரக்டர்ல அவரும் ஒருத்தர். அப்போ நான் மியூஸிக் போட்ட ஒரு படத்தோட பாட்டெல்லாம் ஹிட் ஆச்சுன்னா... அடுத்ததா அவர் மியூஸிக் போட்ட பாடல்களும் ஹிட் ஆகும். ரெண்டு பேருமே பீக்ல இருந்தோம். முதன்முதலா கோரஸ் பாடுறதுக்கு நான் சான்ஸ் கேட்டுப் போனது கே.வி.மகாதேவன்கிட்டதான். என்னை அவர் சேர்த்துக்கலை. ஆனா, 'ஜூபிடர் பிக்சர்ஸுக்கே மறுபடியும் போய்ச் சேரு’ன்னு சொல்லி... எனக்கு வேட்டி, சட்டைலாம் எடுத்துக் கொடுத்து, கையில் ரெண்டு ரூபாயும் தந்து என்னை அனுப்பிவெச்சது அவர்தான். நான் கோயம்புத்தூர் ஜூபிடர் பிக்சர் ஸுக்குப் போய், எஸ்.எம்.சுப்பையா நாயுடுகிட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்தேன். பல பேர் என்னை வழிப்படுத்தி இருக்காங்க. அதில் கே.வி.மகா தேவன் அவர்களுக்கு முக்கியமான இடம் இருக்கு!''
ஆ.பிரணவ், முக்கூடல்.


''இப்போதும் நீங்கள் அடிக்கடி முணுமுணுக் கும் பாடல் எது... ஏன்?''


''ஏன்னு சொல்லத் தெரியலை. ஆனா, 'தேவனே என்னைப் பாருங்கள்...’ பாட்டைத்தான் இப்பெல்லாம் அடிக்கடி முணுமுணுத்துட்டு இருக்கேன்.''


கே.ஆர்.முத்தையா, திருச்சி-4.


''கமல், ரஜினி இருவரும் உங்களிடம் எப்படிப் பழகுவார்கள்?''


''எனக்கு எல்லா வயசுலயும் நண்பர்கள் இருக்காங்க. கமல் என் குட்டி நண்பன். என் குடும்பத்தில் பிறக்காத பிள்ளை. முன்னாடி அடிக்கடி என் வீட்டுக்கு வருவார். அப்பல்லாம், 'எனக்கு நல்லா பாட வரும். எனக்கு உங்க மியூஸிக்ல பாடுறதுக்கு சான்ஸ் கொடுங்களேன்’னு கேட்டுட்டே இருப்பார். என்னமோ தெரியலை என் மியூஸிக்ல அவரைப் பாட வைக்கணும்னு எனக்குத் தோணவே இல்லை.


ரஜினி என்னை எங்கே பார்த்தாலும், அவர் வீட்டுல உள்ள ஒரு பெரிய மனிதரை வணங்குற மாதிரி பணிவா வணங்குவார். 'நினைத்தாலே இனிக்கும்’, 'தில்லுமுல்லு’ படங்கள்ல அவருக்காக நான் போட்ட பாட்டைக் கேட்டுட்டு, ஓடி வந்து என்னைக் கட்டிப்புடிச்சிக்கிட்டாரு. இப்பவும் எங்கேயாச்சும் பார்த்தா, 'ராகங்கள் பதினாறு உருவான வரலாறு... நான் பாடும்போது அறிவாயம்மா...’ பாட்டை வாய்விட்டு முணுமுணுப்பார். அன்பான மனுஷன்!''


ப.ராணி, நாகர்கோவில்.


''திருநீறு, சந்தனம், குங்குமம் திவ்யமா மணக்குது உங்க நெத்தியில. நீங்க எப்படி 'அல்லா... அல்லா’னு பாட்டுப் பாடினீங்க?''


''அல்லா,  இயேசு, கிருஷ்ணர் எல்லாருமே எப்போதும் நல்லவங்களுக்குப் பக்கத்துலேயே இருப்பாங்க. 'முகமது பின் துக்ளக்’ படத்துல 'அல்லா... அல்லா...’ பாட்டை நான் நாகூர் ஹனீபாவைப் பாட வைக்கணுங்கிற முடிவோடதான் இருந்தேன். அவர் குரல்தான் அந்தப் பாட்டுக்குப் பொருத்தமான குரல்னு நிச்சயமா நம்பினேன். ஆனா, சோ அந்தப் பாட்டை நான்தான் பாடணும்னு ஒரே பிடிவாதமா இருந்தாரு. நான் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன். 'சரி... யாரையெல்லாம் நீ பாட வைக்கணும்னு விரும்புறியோ அவங்க பேரோட, உன் பேரையும் சீட்டு எழுதிப் போட்டுக் குலுக்கி எடுப்போம்’னார் சோ. அது மாதிரியே குலுக்கிப் போட்டு எடுத்தா, என் பேர் எழுதுன சீட்டுதான் வந்துச்சு. 'சரி... ஆண்டவன் சித்தம் அதுதான்போல’னு நானும் பாடினேன். அந்தப் பாட்டு வெளியாகி பட்டிதொட்டி லாம் பிரபலமான பிறகு, சோ ஒரு உண்மையைச் சொன்னார். அது... சீட்டு எழுதுனப்ப எல்லா சீட்டுலயுமே என் பேரைத்தான் எழுதிவெச்சிருக்கார் அந்த மனுஷன்!''


டி.ராகுல், தோப்பூர்.

''கவியரசு கண்ணதாசன் பயங்கர பிடிவாதக்காரராமே... அப்படியா?''
''பிடிவாதம்கிறது பெரிய வார்த்தை... கொண்ட கொள்கைல உறுதியா இருப்பார். அந்தக் கொள்கைக்குச் சரியான நியாயமும் வெச்சிருப்பார். 'யாரை நம்பி நான் பொறந்தேன்... போங்கடா போங்க; என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க...’ பாடல் பதிவு. பாடல் வரிகளைப் படிச்சுட்டு கவியரசுகிட்ட நான் சொன்னேன், 'என்ன கவிஞரே... வாடா போடானு மரியாதை இல்லாம எழுதியிருக்கீங்க. இதே மாதிரிதான், 'போனால் போகட்டும் போடா’ன்னும் எழுதிஇருந்தீங்க. இதெல்லாம் நல்லாவா இருக்கு?’ உடனே கண்ணதாசன் பளிச்னு சொன்னாரு, 'டேய்... நீ விஜயவாடாங்கிற ஊரைக்கூட 'விஜயவாங்க’னு சொல்றவன். நான் எழுதறதுக்கு மெட்டு போடுறதுதான் உன் வேலை. அதை மட்டும் ஒழுங்கா பார்த்துக்க.. போதும்’னு பட்டுனு சொல்லிட்டார். அதுக்கு அப்புறம் நான் எதுவும் பேச முடியுமா என்ன? அவரோட பிடிவாதம்லாம் இப்படித்தான் இருக்கும்.''
லதா ராமகிருஷ்ணன், திருச்சி-9.
''சமீபத்தில் வெளியானதில் நீங்கள் மிகவும் ரசிச்ச தமிழ்ப் பாட்டு எது?''
''ஒரு பாட்டு இல்ல... சில பாடல்களைச் சொல்லலாம். தம்பி இளையராஜா இசையமைச்ச 'நீதானே பொன் வசந்தம்’, ஏ.ஆர்.ரஹ்மான் இசைஅமைச்ச 'விண்ணைத் தாண்டி வருவாயா’... படப் பாடல்கள் எல்லாம் கேட்குறதுக்கு ரொம்ப இனிமையா இருந்துச்சு. புதுசாவும் இருந்துச்சு!''
அடுத்த வாரம்.


thanx- vikatan

கோவை காலேஜ் மாணவியை ஈவ் டீஸ் செய்து மாட்டிய சினிமா ஹீரோ

நடிகர் ஒருவரே சினிமாவில் நடப்பது​போல அதிரடியாகக் கைது செய்யப்பட்ட சம்பவம்தான், இப்போது கோவை பரபர! 


டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்​கார சம்பவத்துக்குப் பிறகு, பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தை கறாராக அமல்படுத்தத் தொடங்கி இருக் கிறார்கள் போலீஸார். இந்த நிலையில், கோவையில் சினிமா நடிகரும் அவரது நண்பரும் சேர்ந்து தனது துப்பட்டாவை இழுத்து அத்துமீறியதாக கல்லூரி மாணவி ஒருவர் புகார் கொடுத்ததை அடுத்து, கைது செய்யப்பட்டனர்.

என்ன நடந்தது?  


''கோவையில் தனியார் கல்லூரியில் படிக்கும் இரண்டு மாணவிகள், கடந்த 6-ம் தேதி கல்லூரி முடிந்து ஸ்கூட்டியில் வந்தனர். பாரதி பார்க் அருகே வந்தபோது பைக்கில் வந்த வாலிபர்கள் இருவர், அவர்களைக் கிண்டல் செய்தபடி பின்தொடர்ந்தனர். சாய்பாபா காலனி அருகே வந்தபோது, ஸ்கூட்டியின் மீது பைக்கை மோதியதோடு, மாணவி ஒருவரின் துப்பட்டாவை இழுத்து அத்து மீறினர். பொதுமக்கள் கண்முன் நடந்த இந்த சம்பவத்​தில் ஈடுபட்ட இளைஞரில் ஒருவர், சினிமா நடிகர். 2007-ம் ஆண்டு வெளிவந்த '18 வயசு புயலே’ எனும் திரைப்படம் மூலம் அறிமுகமாகி ஓரிரு படங்களில் நடித்த அஜய் பிரதீப் என்பவர் அவர்.



 சாய்பாபா காலனியைச் சேர்ந்தவர். தன் நண்பர் ஈஸ்வர​னுடன் இணைந்து இந்த அத்துமீறலில் ஈடுபட்டார். நடுரோட்டில் நடந்த இந்தச் சம்பவத்தை பொது​மக்கள் கண்டிக்க, அதைப்பற்றி துளியும் அலட்டிக்கொள்ளாமல், இருவரும் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தின் அவமானத்தாலும் அதிர்ச்சியாலும் பாதிக்கப்பட்ட மாணவிகள், சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளிக்க, நடிகரும் அவரது நண்பரும் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்'' என்கிறார்கள் சாய்பாபா காலனியைச் சேர்ந்தவர்கள்.


இந்தக் கைது குறித்து தகவல் பரவியதைத் தொடர்ந்து, சாய்பாபா காலனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியிலும் கல்லூரியிலும், மாணவிகள் இனிப்பு கொடுத்துக் கொண்டாடி உள்ளனர். ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் முன்னாள் மாணவிகள் சிலர், அஜய் பிரதீப் கைது செய்யப்​பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகக் கருத்து தெரிவித்து ஸ்டேட்டஸ் போட, பரபரப்பு தொற்றிக்​கொண்டது.



''ஈவ்டீசிங் வழக்கில் தமிழ் திரைப்பட நடிகர் கைது. உங்களுக்குத் தெரியுமா? இந்த நபர் நம் ஹாஸ்​டல் ரோட்டில் பைக்கில் சாய்ந்து நின்றபடி போஸ் கொடுப்பார். மாணவிகள் போகும்போதும் வரும்போதும் வம்பு செய்வார். இவர் கைது செய்யப்பட்டு இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’ என சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை மாணவிகள் பலரும் ஷேர் செய்துள்ளனர். இதேபோல் மேலும் சிலரும் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்து உள்ளனர்.



யார் இந்த அஜய் பிரதீப்? இவர் கைதான​தை மாணவிகள் கொண்டாட என்ன காரணம்? மாணவிகள் சிலர் தங்களின் பெயரை வெளியிட வேண்​டாம் என்ற வேண்டுகோளுடன் பேசி​னர். ''சாய்பாபா காலனி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே அஜய் பிரதீப்பின் அத்துமீறல் அதிக அளவில் இருந்தது. பைக், கார் ஆகியவற்றில் வந்து எங்களைத் தொடர்ச்சியாக கேலி, கிண்டல் செய்வதை வழக்கமாக வைத்திருந்தான்.



 சில மாணவிகளை ஏமாற்றிப் பழகி வந்தார். கல்லூரி செல்லும் மாணவிகளிடம் இவருடைய டார்ச்சர் சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது. ரெட் கலர் பைக், ஆரஞ்சு நிற கார், வித விதமான ஆடைகள் என்று வந்து பெண்களிடம் ஃபிலிம் காட்டு​வான். பெண்களை உற்றுப் பார்த்தபடி மிகவும் மோசமாக நடந்துகொள்வான். நாங்கள் மிகவும் அவமானப்​படுவோம். அஜய் பிரதீப்பின் தந்தை முக்கியமான நபர் என்பதால், இவரின் அத்துமீறல் தொடர்ந்தது. 'பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்’ என்பதுபோல இப்போது சிக்கிக்கொண்டான்'' என்றனர்.




அஜய் பிரதீப் தரப்பு கருத்தை அறிய, அவரது  அப்பா சண்முக கவுண்டரை பல்வேறு வழியிலும் தொடர்புகொண்டோம். ஆனால் அவர் நம்மிடம் பேசுவதைத் தவிர்த்துவிட்டார். அவர் தரப்பு விளக்கம் வந்தால் அதைப் பிரசுரிக்கத் தயாராகவே இருக்கிறோம்.



சாய்பாபா காலனி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசலு​விடம் அஜய் பிரதீப் மீது இதற்கு முன் புகார்கள் வந்துள்ளதா எனக் கேட்டோம். ''எழுத்துப்பூர்வமாக இதற்கு முன் புகார் பெறப்படவில்லை. தொடர்ந்து மாணவிகளைக் கேலி, கிண்டல் செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், யாரும் எழுத்து மூலம் புகார் அளிக்கவில்லை. 


இப்போதுதான் புகார் கிடைக்கப் பெற்றது. சாலையில் சென்றுகொண்டு இருந்தபோது, வாகனத்தை மோதி, அவரிடம் அத்துமீறியதாக மாணவி ஒருவர் புகார் அளித்தார். அதன்படி வழிமறித்தல், மானபங்கப்படுத்துதல், பெண் வன்கொடுமைத் தடுப்புப் பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவுசெய்து நடிகர் அஜய் பிரதீப்பையும் அவரது நண்பர் ஈஸ்வரனையும் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடக்கிறது'' என்றார்.



அண்மையில் கோவையில் மாணவி ஒருவர், கல்லூரிக்கு செல்லும்போது சிலர் தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்வ​தாக தன் தந்தையிடம் தெரிவித்துவிட்டுத் தற்கொலை செய்து​கொண்டார். அவரது தந்தை போலீஸில் புகார் அளித்து, விசாரணை நடந்துவருகிறது. இந்த நிலையில், ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட அஜய் பிரதீப் கைது செய்யப்பட்டு இருப்பது, கோவைப் பெண்​களிடையே காவல் துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.


மக்கள் கருத்து -


1. இந்த சண்முக கவுண்டர், தன அரசியல், பண பலத்தை பயன்படுத்தி இந்த பெண்ணை புகாரை வாபஸ் பண்ண செய்ய முயலுவார். பலர் குற்றம் சொல்லும் அளவிற்க்கு இவன் நடந்த போதும், புகார் என்ற ஒன்று இல்லாத பொழுது போலீசாரால் ஒன்றும் பண்ண இயலாது. இப்பொழுது சண்டை காரனை (அந்த பெண்களை) மிரட்டி, உருட்டி இதனை ஒன்றுமில்லாததாக ஆக்கி விடுவார்கள். அவர்களும் பயந்து (என்ன இருந்தாலும் அவர்கள் பணம் படைத்தவர்கள் இல்லையே ) ஒதுங்கி விடுவார்கள்.

இது நடக்காமல் இருக்க இந்த Facebook, Twitter பதிவுகளை ஆதாரமாக கொண்டு வழக்கை நடத்தினால் இவன் களி தின்ன நேரிடும்.

இல்லை எனில் அந்த புகார் தந்த பெண்கள் பாவம்.

இதுதான் தமிழகத்தின், தமிழக போலீசாரின் அவல நிலை 




2. அவரது குடும்பத்தாரிடம் தக்க செய்தி தந்து கண்டித்திருக்கும் வேலையில் புகாரே இல்லாமல் குற்றத்தடுப்பு நிகழ்ந்திருக்க முடியும்.

புகாருக்குரிய சம்பவம் விபத்தில் முடிந்திருந்தால் இழப்பு எல்லோருக்கும் தானே?

தண்டனை தரும் புகார் மட்டுமே குற்றத்தடுப்பு இல்லை, யாரால் பயனாக்கும்படி கட்டுப்படுத்த இயலுமோ அங்கு தக்க தகவல் சொல்லி நெறிப்படுத்துவது சமூக பங்களிப்பு.

அங்கு விரோதமும் கூட வராது.



3. புகார் கொடுத்த அந்தப் பெண்ணே இந்த வீணாப் போனவனை கல்யாணம் கட்டிகிடாம கடைசி வரைக்கும் வழக்கில் உறுதியா இருந்தா சரி. 



நன்றி - ஜூ வி 

Wednesday, February 20, 2013

வனயுத்தம்

வனயுத்தம்' படத்திற்காக சொந்த வீட்டையும் இழந்துவிட்டேன்: டைரக்டர் ரமேஷ் கண்ணீர்
போன வாரத்தில் ‘விஸ்வரூபம்’ படத்திற்காக கமல் கண்ணீர் விட்டார். இப்போது  டைரக்டர் ரமேஷ் கண்ணீர் விட்டுள்ளார். அப்படி என்னதான் படத்தில் பிரச்னை?

சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை, ‘வனயுத்தம்’ என்ற  பெயரில் திரைப்படமாக தயாரித்து இயக்கி இருக்கிறார் ஏ.எம்.ஆர்.ரமேஷ்.

இவர், ஏற்கனவே ‘குப்பி’ என்ற பெயரில், ராஜீவ்காந்தியின் வாழ்க்கையை  படமாக்கியவர்.தற்போது தமிழ், கன்னடம் ஆகிய 2 மொழிகளில் தயாரான ‘வனயுத்தம்’  படம், திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

வீரப்பன் வேடத்தில் கிஷோர் நடித்து இருக்கிறார். போலீஸ் அதிகாரி விஜயகுமார்  கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்துள்ளார். வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வேடத்தில்  விஜயலட்சுமி நடித்து இருந்தார். (படத்தில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள்  நீக்கப்பட்டுள்ளன.)இந்த படத்தை எதிர்த்து வீரப்பனின் மனைவி 

முத்துலட்சுமி உச்ச  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், முத்துலட்சுமிக்கு பட  தயாரிப்பு நிறுவனம் ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.

இந்நிலையில்,  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டைரக்டர் ஏ.எம்.ஆர்.ரமேஷ்,   ‘‘வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிக்கு பணம்தான் குறிக்கோள். முதலில் என்னிடம்  ரூ.1 கோடி கேட்டார். நான் கொடுக்க மறுத்ததால், தன்னையும், தனது மகள்களையும்  பாதிக்கும் என்று கூறி, படத்தில் இருந்த 32 காட்சிகளை நீக்கும்படி கூறினார். அவர்  ஆட்சேபித்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டன.

முத்துலட்சுமி அதோடு விடவில்லை. எனக்கு எதிராக பல்வேறு அமைப்புகளை தூண்டி  விடுகிறார். தமிழ்நாட்டு போலீசை உயர்வாகவும், கர்நாடக போலீசை தாழ்வாகவும்  காட்டியிருப்பதாக கன்னட அமைப்புகள் என்னை கண்டித்துள்ளன.

பெங்களூரில் எனக்கு சொந்தமாக 3 வீடுகள் இருந்தன. ‘குப்பி’ படத்துக்காக ஒரு வீட்டை  விற்றேன். ‘காவலர் குடியிருப்பு’ படத்துக்காக இன்னொரு வீட்டை விற்றேன். ‘வனயுத்தம்’  படத்துக்காக நான் குடியிருந்த மற்றொரு வீட்டையும் விற்று விட்டேன். இப்போது நான்  வாடகை வீட்டில் குடியிருக்கிறேன்.கடன்பட்டாவது முத்துலட்சுமிக்கு நான் பணம்  கொடுத்து விடுவேன். அப்படி கொடுத்தால், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படத்தில்  சேர்ப்பதற்கு அனுமதிப்பாரா?

‘வனயுத்தம்’ படத்தில் நான் உண்மையில் நடந்த சம்பவங்களைத்தான்  படமாக்கியிருக்கிறேன். வீரப்பனை நல்லவராக காட்டவில்லை என்று முத்துலட்சுமி  என்னை மிரட்டுகிறார். 2 மாநில மக்களிடையே கலவரம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்.  நீதிமன்றத்தில் என்னை முத்துலட்சுமி அடிக்க வந்தார். வழக்கறிஞர்களும், போலீசாரும்  அவரை தடுத்திருக்காவிட்டால், என்னை அவர் அடித்திருப்பார்.

எல்லாதுறையை சேர்ந்தவர்களும் அவர்கள் தொழிலில் சுதந்திரமாக செயல்பட முடிகிறது.  சினிமா கலைஞர்களுக்கு மட்டும் தொழில் சுதந்திரம் இல்லை. உண்மையை சொன்னால்,  மிரட்டுகிறார்கள். எல்லோருக்கும் இருக்கும் உரிமை எங்களுக்கு மட்டும் ஏன்  இல்லை?’’என்றார்



thanx - vikatan

30 வகை பாரம்பரிய சமையல்

30 வகை பாரம்பரிய சமையல்

தொகுப்பு: பத்மினி, படங்கள்: எம்.உசேன்
- தென்னிந்தியர்களைப் பார்த்து வெளிநாட்டினர் வியந்து அடிக்கும் கமென்ட் இது! நம் பாரம்பரிய சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும், உடல் உபாதைக்கு நிவாரணம் அளிப்பது மட்டுமின்றி, ரெகுலராக பயன்படுத்தினால், வருமுன் காக்காகும் பாதுகாவலானகவும் பரிமளிக்கின்றன. அதேசமயம், நாக்குக்கு ருசியாகவும் இருப்பது கூடுதல் சிறப்பு. இந்த இணைப்பிதழில் '30 வகை பாரம்பரிய சமையல்’ செய்முறையை வாரி வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் மாலதி பத்மநாபன்.


''இன்றைய அவசர வாழ்க்கை முறையால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து நிவாரணம் அளிக்கும் விதத்தில் அதிக செலவில்லாத, மருத்துவ குணம்மிக்க பாரம்பரிய உணவுகளை கொடுத்திருக்கிறேன். இவற்றை அடிக்கடி உங்கள் குடும்ப மெனுவில் இடம்பெறச் செய்யுங்கள். ஹேவ் எ ஹேப்பி அண்ட் ஹெல்தி ஃபேமிலி'' என்று மனம் உருகி சொல்லும் மாலதியின் ரெசிபிகளை, கண் கவரும் விதத்தில் அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.


கறிவேப்பிலை குழம்பு


தேவையானவை: கறிவேப்பிலை - ஒரு கப், துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகு - தலா 2 டீஸ்பூன்,  இஞ்சி - ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயம் - சிறிதளவு, புளி - எலுமிச்சை அளவு, கடுகு - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகு, தோல் சீவிய இஞ்சி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதைப் போட்டு நன்றாக கிளறவும். பிறகு, புளிக் கரைசலை சேர்த்து... உப்பு, மஞ்சள்தூள் போட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.
இது வயிற்றுக்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது. குழந்தை பெற்றடுத்திருக்கும் பெண்களின் உடல் நலத்துக்கு நன்மை விளைவிக்கும்.

 மாங்காய் பருப்பு சாதம்
தேவையானவை: மாங்காய் கொட்டையின் உள்ளிருக்கும் பருப்பு - ஒன்று, வெந்தயம் - அரை டீஸ்பூன், மணத்தக்காளிக்காய் வற்றல், சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு, சாதம் - ஒரு கப், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மாம்பருப்பு, வெந்தயம், மணத்தக்காளிக்காய், சுண்டைக்காய், வேப்பம்பூ, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து (தனித்தனியாக வறுத்தால் நல்லது), மிக்ஸியில் நைஸாக அரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, சாதத்துடன் சேர்த்து,  மாம்பருப்பு பொடி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
இது வயிற்றுப் பொருமல், பசியின்மை, வயிற்றுவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். பொடியை மோரில் அரை டீஸ்பூன் போட்டு குடித்தாலும் நல்லது.

மாங்காய் வற்றல் குழம்பு
தேவையானவை: மாங்காய் வற்றல் - 6 (மாங்காயை நறுக்கி, உப்பில் 3 நாட்கள் ஊற வைத்து. வெயிலில் நன்றாக காய வைத்து எடுக்கவும்), உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, மிளகு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு - அரை டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை,பெருங்காயம் - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மாங்காய் வற்றலை வெந்நீரில் ஊற வைக்கவும். வாணலியில் சிறிதளவு  எண்ணெய் விட்டு... உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து, அரைத்துக் கொள்ளவும். பிறகு, மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு கடுகு தாளித்து, அரைத்த விழுது, ஊற வைத்த மாங்காய் வற்றல், புளிக் கரைசல் விட்டு... மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு, இறக்கவும்.
மாங்காய் வற்றல் வயிற்றுக்கு நல்லது.

மிளகு ரசம்
தேவையானவை: துவரம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, புளி - எலுமிச்சை அளவு, பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து, மிக்ஸியில் அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசலை விட்டு... உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். கொதித்ததும், அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்க்கவும். இரண்டு கொதி வந்ததும் தண்ணீர் சேர்த்து, நுரைத்ததும்... நெய்யில் கடுகை தாளித்து சேர்க்கவும்.
ஜுரம், ஜலதோஷம், இருமலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ரசம் மிகவும் நல்லது.

 தூதுவளை சாதம்
தேவையானவை: தூதுவளை இலை - அரை கப், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயம் - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சாதம் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு... கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, கடைசியில் தூதுவளை இலையையும் சேர்த்து வறுக்கவும். இதை  மிக்ஸியில் நைஸாக பொடி செய்யவும்.வாணலியில் மீண்டும் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கடுகு தாளித்து, மஞ்சள்தூள் போட்டு, சாதத்தில் சேர்த்துக் கலக்கவும். பிறகு, தூதுவளை பொடி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
தூதுவளை, மார்சளியை எடுக்கும்.

 ஓமம் குழம்பு
தேவையானவை: ஓமம் - 2 டீஸ்பூன் (சுத்தப்படுத்தியது), கடுகு - அரை டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, பெருங்காயம் - சிறிதளவு, சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, ஓமத்தை சேர்க்கவும். கடுகு வெடித்ததும் புளித் தண்ணீர் விட்டு, சாம்பார் பொடியை போட்டு... உப்பு பெருங்காயம் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். கொதித்தவுடன் இறக்கி கறிவேப்பிலையை சேர்க்கவும்.
இந்தக் குழம்பை, குழந்தை பெற்றெடுத்திருப்பவர்களுக்கு பத்தியமாக தரலாம். வயிற்று பொருமல், வாயு பிரச்னையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

 கறிவேப்பிலை பொடி
தேவையானவை: கறிவேப்பிலை - ஒரு கப், ஓமம், சீரகம் - தலா 2 டீஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு வாணலியில் கறிவேப்பிலை, ஓமம், சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, அதன் நடுவில் இருக்கும் குச்சி எல்லாற்றையும் தனித் தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ளவும். வறுத்த பொருட்களுடன் உப்பு சேர்த்து நைஸாக பொடிசெய்து வைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியை சூடான சாதத்தில் கலந்து சாப்பிடவும். இதை மோரில் கலந்தும் சாப்பிட்டாலும் நல்லது.
இது, வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப்போக்கு ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.

 கொள்ளு ரசம்
தேவையானவை: கொள்ளு - ஒரு கப், காராமணி அல்லது ஏதாவது ஒரு வகை தானியம் -  2 டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு, புளி - எலுமிச்சை அளவு, நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொள்ளுடன் தானியத்தை சேர்த்து  3 மணி நேரம் ஊற வைக்கவும். தனியா, மிளகு, சீரகம். காய்ந்த மிளகாய் ஆகியவற்றை  நெய்யில் வறுத்து பொடி செய்து வைக்கவும். ஊறிய கொள்ளு - தானியத்தை குக்கரில் வைத்து 4 விசில் விட்டு எடுத்து, மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் கொள்ளு வேக வைத்த நீர்,  புளிக் கரைசல், வறுத்து அரைத்த பொடி, கொள்ளு விழுது, உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு கீழே இறக்கி... கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
இந்த ரசம், உடம்பிலிருக்கும் கெட்ட நீரை நீக்கக்கூடியது.

 பிரண்டை பொடி
தேவையானவை: பிரண்டை -  சற்று நீளமான துண்டு ஒன்று, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயம் - சிறிதளவு, புளி - சிறிய உருண்டை, நல்லெண் ணெய், மிளகு, கடுகு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கல் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரண்டையைக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, வதக்கவும். உளுத்தம் பருப்பு, மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை, புளி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை நன்றாக வறுக்கவும். ஆறியதும் எல்லா வற்றையும் ஒன்று சேர்த்து,  உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அரைத்து எடுத்த பொடியைப் போட்டு புரட்டி வைக்கவும்.
இந்த பொடி நாள்பட இருக்கும். சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். பிரண்டை, மூலச் சூட்டை தணிக்கும்.

 கறிவேப்பிலை  மிளகு சாதம்
தேவையானவை: கறிவேப்பிலை - ஒரு கப், மிளகு - 2 டீஸ்பூன் பெருங்காயம் - சிறிதளவு , கடுகு - அரை டீஸ்பூன். சாதம் - ஒரு கப், நெய் - ஒரு டீஸ்பூன், கல் உப்பு - தேவையான அளவு,
செய்முறை: வாணலியில் மிளகை சேர்த்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து,  கருகிவிடாதபடி வறுக்கவும். பிறகு, கறிவேப்பிலையை தனியாக வறுக்கவும் பெருங்காயத்தை பொரித்து எடுக்கவும். அடுப்பை நிறுத்தி, கடைசியில் கல் உப்பை போட்டு, வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக பொடி செய்யவும். வாணலியில் நெய் விட்டு கடுகு தாளித்து, சாதத்தில் சேர்த்து, கறிவேப்பிலை - மிளகு பொடியைப் போட்டு கலக்கவும்.
இதை சூடாக சாப்பிட்டால், இருமல் நிற்கும். பசியையும் தூண்டும்.

 இஞ்சித் தொக்கு
தேவையானவை: இஞ்சி - ஒரு பெரிய துண்டு, காய்ந்த மிளகாய் - 2, வெல்லம் - ஒரு சின்ன கட்டி, பெருங்காயம் - சிறிதளவு, புளி - ஒரு சிறிய உருண்டை, கடுகு - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இஞ்சியை நன்றாக கழுவி, சிறு துண்டு களாக நறுக்கவும். இஞ்சி, புளி, காய்ந்த மிளகாய், பெருங்காயம், வெல்லம், உப்பு ஆகிய வற்றை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் அரைத்து வைத்த விழுதைப் போட்டு நன்றாக கிளறவும்.
இதை நாள்பட வைத்து பயன்படுத்தலாம். பித்தம், வாயுத் தொல்லை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

 நெல்லிக்காய்  இஞ்சி லேகியம்
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 6, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, தக்காளி - ஒன்று, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், கல்கண்டு - 250 கிராம்.
செய்முறை: நெல்லிக்காயைக் கழுவி, தண்ணீர் சேர்க்காமல் குக்கரில் வேகவிடவும். தக்காளியை சுடுநீரில் போட்டு, ஒரு நிமிடம் கழித்து எடுத்து தோல் உரித்து வைக்கவும். நெல்லிக்காயை கொட்டை நீக்கி... இஞ்சி, தக்காளியுடன் சேர்த்து நைஸாக அரைக்கவும். கல்கண்டை பாகு போல காய்ச்சி, அரைத்த நெல்லிக்காய் விழுது, சீரகத்தூள், நெய் விட்டு, நன்றாக லேகிய பதம் வரும் வரையில் கிளறி இறக்கவும்.
இந்த லேகியம் கபத்தை நீக்கும். பித்தத்தை எடுக்கும்.

 கண்டத்திப்பிலி ரசம்
தேவையானவை: கண்டதிப்பிலி - 3 குச்சி, மிளகு, துவரம்பருப்பு, தனியா, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயம் - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் நெய் விட்டு,  கண்டதிப்பிலி, மிளகு, துவரம்பருப்பு, தனியா, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை வறுக்கவும் (சீரகத்தை மட்டும் கடைசியில் சேர்க்கவும்). வறுத்த பொருட்களை பொடி செய்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசல், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்ததும் வறுத்துப் பொடித்த பொடியைப் சேர்த்து, தண்ணீர் விட்டு, நுரைத்து வந்ததும் இறக்கவும். நெய்யில் கடுகு தாளித்து சேர்க்கவும்.
இது, குழந்தை பெற்றெடுத்த பெண்களுக்கு நல்லது. ஜலதோஷத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். இதை சாப்பிட்டால்... கை, கால் வலி நீங்கும்.

 சுரைக்காய் கூட்டு
தேவையானவை: சுரைக்காய் - ஒன்று, பாசிப்பருப்பு - அரை கப், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயம் - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சுரைக்காயை சின்னதாக நறுக்கவும், வாணலியில் சிறிதளவு நெய் விட்டு... உளுத்தம்பருப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, கடைசியில் தேங்காய் சேர்த்து வறுத்து, விழுதாக அரைக்கவும்.  பாசிப்பருப்புடன், சுரைக்காய், மஞ்சள்தூள் சேர்த்து, குக்கரில் வேக வைக்கவும். வெந்த காயுடன் அரைத்து வைத்த விழுது, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும் நெய்யில் கடுகை தாளித்து சேர்த்து இறக்கவும்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு சுரைக்காய் நல்லது.

 பச்சை சுண்டைக்காய் கறி
தேவையானவை: பச்சை சுண்டைக்காய் - 100 கிராம், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: பச்சை சுண்டைக்காயைக் கழுவி, நன்றாக நசுக்கி, விதைகள்போக அலசி வைக்கவும். குக்கரில் சுண்டைக்காயை 3 விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். பிறகு, சுண்டைக்காயை சேர்த்துக் கிளறி, உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
பச்சை சுண்டைக்காய், வயிற்றுக்கு மிகவும் நல்லது.

 வெற்றிலை சாதம்
தேவையானவை: வெற்றிலை - 3, கடுகு, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பூண்டு - 2 பல், சின்ன வெங்காயம் - 4,        மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சம்பழம் - பாதி மூடி - சாதம் - ஒரு கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: வெற்றிலை, மிளகு, சீரகத்தை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து... பூண்டு, வெங்காயம், மஞ்சள்தூள் போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் அரைத்து வைத்த வெற்றிலைக் கலவையை சேர்த்து, சாதம், உப்பு சேர்த்துக் கலக்கவும். கடைசியில் எலுமிச்சைச் சாறு பிழிந்து கிளறவும்.
இது, ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

 மணத்தக்காளி கீரை கூட்டு
தேவையானவை: மணத்தக்காளி கீரை - ஒரு கப், பயத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, கடுகு, நெய் - தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரையைக் கழுவி பயத்தம்பருப்புடன் வேக வைக்கவும். உளுத்தம்பருப்பு, மிளகு, சீரகம், பெருங்காயம் ஆகியவற்றை வாணலியில் சிவக்க வறுக்கவும். அதனுடன் தேங்காயை சேர்த்து நைஸாக அரைக்கவும். வேக வைத்த கீரையுடன் அரைத்த விழுதைச் சேர்த்து, உப்பு போட்டு கொதிக்கவிடவும். நெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்க்கவும்.
இது... வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை ஆற்றும்.

 நாரத்தங்காய் பச்சடி
தேவையானவை: நாரத்தங்காய் -  ஒன்று, தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெள்ளை எள் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, வெல்லம் - ஒரு சிறிய கட்டி, நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, பெருங்காயம் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நாரத்தங்காயைக் நன்றாக கழுவி, தோலை தனியாக சீவி எடுத்து பொடியாக நறுக்கவும்.  முதலில் எள்ளை வறுக்கவும். பிறகு. தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வறுத்து, எள் சேர்த்து பொடி செய்யவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, நாரத்தங்காயை போட்டு வதக்கவும். பிறகு புளிக் கரைசல், மஞ்சள்தூள், உப்பு, வறுத்த அரைத்த பொடி, வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவும்.
இது... வயிற்றுப் புரட்டல், பித்தம் ஆகியவற்றை தணிக்கும்.

 ஆரஞ்சு பழத் தோல் பச்சடி
தேவையானவை: ஆரஞ்சு பழத் தோல் - ஒரு பழத்தின் தோல், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, வெல்லம் - ஒரு பெரிய கட்டி, பெருங்காயம் - சிறிதளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, புளி - எலுமிச்சை அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஆரஞ்சு தோலை பொடியாக நறுக்கவும். கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்¬றை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து, மிக்ஸியில் நைஸாக பொடி செய்து வைக்கவும். வாணலியில் மீதியுள்ள எண்ணெயை விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, ஆரஞ்சு தோலை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, புளிக் கரைசல், அரைத்து வைத்த பொடி, தூளாக்கிய வெல்லம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவும்.
இது, சருமத்துக்கு நல்லது. பித்தத்தைத் தணிக்கும்.

 நாரத்தங்காய் சாதம்
தேவையானவை: நாரத்தங்காய் - ஒன்று, மிளகுத்தூள், சீரகத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயம் - சிறிதளவு, சாதம் - ஒரு கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நாரத்தங்காயை இரண்டாக நறுக்கி வைக்கவும். இரண்டு மூடியிலும் மிளகுத்தூள், சீரகத்தூளை தூவி, அடுப்பு பக்கத்தில் அனலில் வைக்கவும் (15 நிமிடம்). வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், மஞ்சள்தூள் தாளித்து, சாதத்தில் சேர்த்து, அனலில் வைத்த நாரத்தங்காயை எடுத்து சாறு பிழிந்து, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
இது, பித்தத்தைத் தணிக்கும்.

 வாழைப்பூ துவையல்
தேவையானவை: வாழைப்பூ - ஒன்று, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், மிளகு - 4, காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயம் - சிறிதளவு, புளி - ஒரு சின்ன உருண்டை, வெல்லம் - ஒரு சிறிய கட்டி, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து, நறுக்கி வேக வைக்கவும். துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து வைக்கவும். இதனுடன் வெல்லம், வாழைப்பூ, உப்பு, புளி சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு நைஸாக அரைக்கவும்.
பெண்களுக்கு ஏற்ற துவையல் இது. மெனோபாஸ் டைமில் இதை சாப்பிடுவது மிகவும் நல்லது.

 பருப்பு துவையல்
தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, பெருங்காயம் - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் துவரம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்துக் கொள்ளவும். பிறகு, வறுத்த பொருட்களுடன் உப்பு, தேங்காய், தேவையான நீர் சேர்த்து நைஸாக அரைக்கவும்.
ஜுரம் வந்தவர்களுக்கு, ஜுரம் விட்ட பிறகு சாப்பிட பிடிக்காது. அத்தகையோருக்கு இந்த பருப்பு துவையல் வாய்க்கு ருசியாக இருக்கும்.

 அங்காயப் பொடி
தேவையானவை: சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளிக்காய் வற்றல், தனியா, வேப்பம்பூ, ஓமம், சீரகம்  - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சுக்கு - ஒரு துண்டு, மிளகு - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கப், பெருங்காயம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையானஅளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் (உப்பு நீங்கலாக) தனித்தனியாக வாணலியில் வறுக்கவும். ஆறிய பிறகு உப்பு சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
இந்தப் பொடி குழந்தை பெற்றெடுத்திருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. அஜீரணம், பசியின்மை இரண்டையும் சரிசெய்யும்.

 வேப்பம்பூ துவையல்
தேவையானவை: வேப்பம்பூ - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 2, புளி - சிறிய எலுமிச்சை அளவு, வெல்லம் - ஒரு சிறிய கட்டி, பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வேப்பம்பூவை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு வேப்பம் பூவை நன்றாக வறுக்கவும். அதே வாணலியில் காய்ந்த மிளகாய், பெருங்காயத்தை வறுத்துக் கொள்ளவும். வறுத்த பொருட்களுடன் வெல்லம், உப்பு, புளி சேர்த்து, தேவையான நீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
இது பித்தத்தை தணிக்கும். வயிற்று பூச்சி, வயிற்றுப் புரட்டல் கோளாறுகளை நீக்கும்.

 கொள்ளுப் பொடி
தேவையானவை: கொள்ளு - 2 கப், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயம் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொள்ளை வாணலியில் தனியாக சிவக்க வறுக்கவும் (கொள்ளு நன்றாக வெடிக்கும்). பிறகு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும் வறுத்த பொருட்களுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
கொள்ளு சாப்பிட்டால் உடல் இளைக்கும். வாரம் இருமுறை சாதத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளுப்பொடி போட்டு சாப்பிடலாம்.

 பூண்டு  கறிவேப்பிலை  வெங்காய குழம்பு
தேவையானவை: பூண்டு - 5 பல், கறிவேப்பிலை - ஒரு கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, சின்ன வெங்காயம் - ஒரு கப், தக்காளி - ஒன்று, தனியா பொடி - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயை வறுத்து அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து... பூண்டு, நறுக்கிய தக்காளி, வெங்காயம் போட்டு சுருள வதக்கவும். பிறகு, புளியைக் கரைத்து விட்டு... அரைத்த கறிவேப்பிலை விழுது, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். இறக்கும்போது தனியா தூளை சேர்க்கவும்.
இது குழந்தை பெற்றெடுத்திருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.

 சுக்கு  மிளகு லேகியம்
தேவையானவை: சுக்கு - ஒரு துண்டு, மிளகு, சீரகம், தனியா - 2 டீஸ்பூன், பட்டை - ஒன்று, கசகசா - ஒரு டீஸ்பூன், லவங்கம் - 2, ஏலக்காய் - ஒன்று, விரளி மஞ்சள் -  சிறியது ஒன்று, ஓமம் - 2 ஸ்பூன், அதிமதுரம் - ஒன்று, வெல்லம் - கால் கிலோ, நெய் - 200 கிராம், நல்லெண்ணெய் - டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, மாதுளம்பழம் - ஒன்று.
செய்முறை: இஞ்சி, மாதுளம் பழத்தை சாறு எடுக்கவும். மற்ற எல்லா பொருட்களையும் (வெல்லம், எண்ணெய், நெய் நீங்கலாக) சுடுநீரில் ஊற வைத்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வாணலியில் இஞ்சி, மாதுளம் சாறு சேர்த்து, பொடித்த வெல்லத்தைக் கரைய விட்டு...  அரைத்த விழுதை சேர்த்து, வேக வைக்கவும். அதனுடன் நல்லெண்ணெய், நெய் சேர்த்து நன்றாக கிளறவும். லேகிய பதம் வந்த உடன் இறக்கவும்.
இது வயிற்று சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களுக்கும் நல்லது.

 புதினா ரசம்
தேவையானவை: புதினா - ஒரு கப், மிளகு, தனியா, சீரகம், துவரம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, பெருங்காயம் - சிறிதளவு, கடுகு, நெய் - தலா அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் நெய் விட்டு புதினாவை லேசாக வதக்கவும். மிளகு, தனியா, சீரகம், துவரம்பருப்பை ஊற வைக்கவும். புளியைக் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். ஊற வைத்த பொருட்களுடன் புதினாவை சேர்த்து நைஸாக அரைக்கவும். புளித் தண்ணீர் கொதித்ததும், அரைத்த புதினா கலவையை சேர்த்து,  ஒரு கொதி வந்ததும், தண்ணீர், உப்பு சேர்த்து, நுரைத்ததும் இறக்கவும். நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்க்கவும்.
புதினா, ரத்தத்தை சுத்திகரிக்கும்.

 முளைகட்டிய பயறு  காய் சாலட்
தேவையானவை: பச்சைப் பயறு - 50 கிராம், கேரட், வெள்ளரிக்காய், எலுமிச்சம்பழம் - தலா ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, வெங்காயம் - ஒன்று, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: பயறை முதல் நாள் இரவு ஊற வைக்கவும். மறுநாள் நன்றாக வடித்து அதை ஹாட் பேக்கிலோ அல்லது துணியில் கட்டியோ ஒரு நாள் வைக்கவும். மறுநாள் பயறு நன்றாக முளைத்திருக்கும். கேரட், வெள்ளரிக்காய், இஞ்சி, வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி, பயறுடன் சேர்க்கவும். உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து இதனுடன் சேர்க்கவும்.
இதில் புரதச்சத்து, நார்சத்து உள்ளது.

 வாழைத்தண்டு பச்சடி
தேவையானவை: வாழைத்தண்டு - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, கொத்தமல்லி - சிறிதளவு, சீரகம் - அரை டீஸ்பூன், தயிர் - ஒரு கப், நெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைத்தண்டை பட்டை நீக்கி நறுக்கி வைக்கவும். வாழைத்தண்டு, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லி, சீரகம், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக அரைத்து, தயிரில் கலக்கவும். கடைசியாக, நெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து சேர்க்கவும்.
வாழைத்தண்டு நார்சத்து மிக்கது. கிட்னியில் கல் இருப்பவர்கள் வாழைத்தண்டு பச்சடி, ஜூஸ் சாப்பிடுவது மிகவும் நல்லது.


THANX - VIKATAN

Tuesday, February 19, 2013

இண்ட்டர்வ்யூவில் லேடி டேமேஜர் சிட்டவுன் சொன்னா.....

1. ப்ளூ கலர் டிரஸ் போட்டா என்னா அர்த்தம்? காதலர்கள் செல் லுல நீல வான ஓடையில் பாட்டு போட்டு விட்டு BF பார்க்கறாங்கனு அர்த்தம்




2. டியர்.பீட்ரூட் அல்வா மாதிரி உன் உதடு.இனிமேலாவது மெரூன் கலர் லிப்ஸ்டிக் போடாதே




3. டேமேஜர் லீவ்.ரிசப்ஷனிஸ்ட் 2 மணி நேரம் பர்மிஷன். 1÷1=3




4. காதலியின் மரணத்தை விட காதலனுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவது ஒரு காதலின் மரணம்



5. காதலனைக்கை விடுபவள் தான் பெற்றோர் அகராதியில் நல்ல பெண்கள் என்றால் நல்ல பெண்கள் நரகத்துக்குப்போகட்டும்




6. டியர்.நாம மோதிரம் மாத்திக்கலாமா?



அஸ்கு புஸ்கு.உன்னுது சுண்டு விரல் கால் பவுன்.என்னுது மோதிர விரல் 1 பவுன்



7. ஆண்களால் தாங்கிக்கொள்ள முடியாத ஒரே வலி தன் காதலியின் சந்த்ர்ப்பவாதமும் நிராகரிப்பும்




8. 99% பசங்க 420 தான்.143 சொல்லும் முன் யோசிச்சுக்குங்க .144 போட்டுடுங்க.பெற்றோருக்கு எதிரான எண்ணத்துக்கு 356 போடவும்





9. மகாநதி சங்கராய் இருந்த என்னை தபுசங்கராய் மாற்றியது் நீ ஆட்டோசங்கராய் மாற்றியது் உன் தங்கை.ஜெ.மேன் ஷங்கராய் மாற்றியது உன் அம்மா # சும்மா




10. ஆபீஸ் ரிசப்ஷனிஸ்ட் ஜிலேபிக்கொண்டை போட்டு ரேடியோ பூ வெச்சிருக்கு.ஆல் இன்டியா ரேடியோ தினமாம் # மேட்சுக்கு மேட்ச் மேகலா




11. காதலிக்கு பரிசு கொடுக்க கையாலாகதவர்கள் " டியர்.என்னையே உனக்கு அர்ப்பணிக்கிறேன் னு ரீல் விடவும்.செலவும் மிச்சம்.டார்க்கெட்டும் அச்சீவ்டு




12. காதலர் தினம் .காதலி விரும்புவது ஒட்டியாணம்.( 12 பவுன் மினிமம் டார்கெட்) ,காதலனால் கையாளாவது - மூக்குத்தி (1 கிராம் போதும்)




13. நான் எடுக்கும் ஹாலிவுட் படம் ஹிட் ஆகலைன்னா செவ்வாய் கிரகம் போய்டுவேன் - கமல் மிரட்டல் # சும்மா





14. டேமேஜர் ரிசப்ஷனிஸ்ட் கிட்டே அவரோட சம்சாரம் ஊருக்கு போய் இருக்கறதை காலைல இருந்து 4 டைம் சொல்லிட்டாரு.என்ன பிளானோ?





15. டியர்.பக்கத்துல உட்கார ஏன் கூச்சம்?



உக்காந்தா மடில தான் உக்காருவேன் ;-))




16. டியர்.நீங்க பண்றது சரியாப்படலை.




அவ்ளவ் தள்ளி உக்காந்தா எப்டிப்படும்? கிட்டே வா # பார்க் பாரம்பரியம்






17. காதலி இல்லாதவர்களும் நாளை ( 14 2 2013 )பார்க் பீச் பக்கம் போகலாம்.கழட்டி விடப்பட்ட ,புட்டுக்கிட்ட காதல்கள் நிறைய தென்படும்.அதுல 1 உஷார் பண்ணிக்கலாம்





18. பதினெண் கீழ் கணக்கு நூல்கள்னா மேத்தமேடிக்ஸ் சப்ஜெக்ட்டா?




19. பிறரின் இடத்திலிருந்து யோசிக்கும் தருணங்களில்,இடத்தோட ஓனர் வந்து யோசிப்பதென்றால் ரூம் போட்டு யோசி.இது என் இடம் கறார் (பேர்வழி)




20. கரும்பிலிருக்கும் எறும்பு கரும்பை கடித்தால் எறும்புக்கு இனிக்கும்.நம்மை கடிச்சா வலிக்கும்.இதுதான் வாழ்க்கை்





21. லேடி போலீஸ் அடிக்கும்போது அடிக்காதீங்க வலிக்குதுன்னு கையைப்பிடிச்சுக்கனும்.டபுள் பர்பஸ்





22. காதலர் தினத்தன்னைக்கு பார்க் பீச் போனா ஓ சி ல சீன் பார்க்கலாம்.டோன்ட் மிஸ் இட்




23. இன்று உலக வானொலி தினம்.சர்வதேச கிஸ் டே.லொட லொட என ஆல்இண்டியாரேடியோ மாதிரி பிகர் பேசிட்டு இருந்தா டக்னு லிப் கிஸ் அடிச்சு வாயை அடைக்கவும்





24. ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ் தொடர்பு - பாஜக # நிலம் ,நீர்,ஆகாயம் ஒண்ணை விட்டுடாதீங்கடா




25. அட்வான்டேஜ் எடுத்துக்கறது = இண்ட்டர்வ்யூவில் லேடி டேமேஜர் சிட் டவுன் சொல்றப்ப அவர் மடில உட்காருவது

Monday, February 18, 2013

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் குற்ற வாளிக் கூண்டில் சி.பி.ஐ. வழக்கறிஞர்

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நீரா ராடியா, சி.ஏ.ஜி., கலைஞர் டி.வி. என வந்த அத்தியாயங்களுக்கு மத்தியில், சி.பி.ஐ. வழக்கறிஞர் ஒருவரே குற்ற வாளிக் கூண்டில் நிற்பது புதிய அத்தியாயம்!


2ஜிஅலைவரிசை உரிமத்தை தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவும் தொலைதொடர்புத் துறை தனியார் நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து லாபம் அடைந்தாக புகார்கள். ஓர் ஆண் டாக நடந்த விசாரணையில் திடீர் திருப்பம். குற்றம் சாட்டப்பட்ட யுனிடெக் டெலிகாம் அதிபர் சஞ்சய் சந்திராவும் குற்றம் சாட்டும் சி.பி.ஐ. வழக்கறிஞர் ஏ.கே.சிங்கும் பேசும் ஆடியோ டேப் வெளியாகி இருக்கிறது.
சுமார் 1,651 கோடி ரூபாய்க்கு அலைவரிசை உரிமத்தை வாங்கிய யுனிடெக் நிறுவனம், அதை அதிக விலைக்கு டெலிநார் என்ற நார்வே நாட்டு டெலிகாம் கம்பெனிக்கு விற்றது. ரியல் எஸ்டேட் பிசினஸில் பதிவுபெற்ற யுனிடெக் நிறுவனம், டெலிகாம் உரிமங்களைப் பெற தகுதியற்றதாகவும் இருந்தது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளில்தான் தொலைத்தொடர்பு அமைச்சர் ராசாவோடு கூட்டு சதியில் ஈடு பட்டதாகச் சொல்லி கைது செய் யப்பட்டார் சஞ்சய் சந்திரா. இந்தக் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க இவர் சி.பி.ஐ. வழக்கறிஞரோடு  சதித் திட்டங்கள் தீட்டியதற்கான ஆதாரம் என்று  இந்த ஆடியோ டேப் காட்டப்படுகிறது.
ஏராளமான இரைச்சல்கள். அருகே இருப் பவர்களின் பேச்சுக்கள் எல்லாம் பதிவாகி இருக் கின்றன. இவர்கள் ஓர் அறையில் சந்தித்து பேசும்போது தொலைவில் இருந்து மைக் மூலமோ அல்லது மறைத்து வைக்கப்பட்ட ரெக்கார்டர் மூலமாகவோ பதிவு செய்யப்பட்டதைப் போல ஒலியாக இருக்கிறது. சிறப்பு நீதிமன்றத்தின் வளா கத்தில் உள்ள சி.பி.ஐ. அறையில் இந்தச் சந்திப்பு நடந்து இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆனால், இருவருடைய பேச்சுக்களின் வேகத்தை வைத்துப் பார்த்தால் இது தொலைபேசி உரையாடலாகவும் இருக்கலாம்.  
இந்த ஆடியோ சி.டி-யை தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட பிறகே, சி.பி.ஐ. தரப்பு நடவடிக்கையில் இறங்கியது. 2ஜி வழக்கில் இருந்து ஏ.கே.சிங்கை நீக்கிவிட்டு, இந்த ஆடியோவை ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பியது.
ஆ.ராசா, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற கடைசி தேதி என்று முதலில் குறிப்பிட்டது...2007,அக்டோபர் 1-ம் தேதி. ஆனால், இந்த தேதி செப்டம்பர் 25 என்று பின்னர் மாற்றி அறிவிக்கப்பட்டு, அதன்பிறகு  வந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. யுனிடெக் நிறுவனத்தின் விண்ணப்பங்கள் கிடைத்தவுடன், அதன் பின்னர் வரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விண்ணப்பங்களை நிராகரிக்க இந்தச் சதி நடந்ததாக ஆ.ராசா மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க சி.பி.ஐ. வழக்கறிஞர் ஏ.கே.சிங்கும் யுனிடெக் அதிபர் சந்திராவும் பேசிய பல தகவல்கள், அந்த ஆடியோவில் உரையாடலாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பவர் ஏ.கே.ஸ்ரீவத்சவா. இவர் தொலைத்தொடர்புத் துறையில் வயர் லெஸ் பிரிவு துணை இயக்குநர் ஜெனரல். இவர் மூலமாக இந்தத் தேதி மாற்ற விவகாரங்கள் நடந்ததாக சொல் லப்படுகிறது. இவரை ராசாவுக்கும் சஞ்சய் சந்திராவுக்கும் எதிராக சாட்சியம் அளிப்பவராக சி.பி.ஐ. நிறுத்தியுள்ளது. ''நாங்கள் ஸ்ரீவத்சாவை உங்கள் வசதிக் காகவே நிறுத்தி இருக்கிறோம். நீயே குற்றவாளிதான் என்று அவரை மடக்கினால், பிறகு அவரது சாட்சியம் பயன் இல்லாமல் போகும்'' என்று, சஞ்சய் சந்திராவுக்கு ஏ.கே.சிங் ஆலோசனை கூறுகிறார். இவ்வாறு வழக்கு சம்பந்தப்பட்ட பல யோசனைகளை சஞ்சய் சந்திராவுக்கு கூறுகிறார் அவர்.  


சி.பி.ஐ-யில் கடந்த 20 ஆண்டுகளாக இருந்து, பல அரசியல் வழக்குகளை கையாண்டவர் ஏ.கே.சிங். ஹவாலா டைரி வழக்கு விவகாரம் முதல் சிபுசோரன் கொலை வழக்கு வரை சி.பி.ஐ. சார்பில் ஆஜரானவர். இந்த விவகாரத்தில் சிங் திட்டமிட்டு கவிழ்க்கப்பட்டு இருக்கலாம் என்றும் கருதப் படுகிறது.


நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு முதல்நாள் இந்த ஆடியோ லீக் செய்யப்பட்டது. கூட்டுக் குழு விசாரணைக்கு ப.சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டவர்களை அழைக்கும் பி.ஜே.பி-யின் கோரிக்கையை திசைதிருப்ப இந்த ஆடியோ வெளியிடப்பட்டதா என்ற சந்தேகமும் இருக்கிறது.


இந்த உரையாடல் விவகாரத்தால் ஏ.கே.சிங் பதவி பறிபோவதோடு, குரல் பரிசோதனையில் உண்மை வெளியாகும் பட்சத்தில், கிரிமினல் வழக்கு பதிவாகி ஜெயிலுக்குப் போவதும் நடக்கலாம். சஞ்சய் சந்திராவின் ஜாமீன் ரத்தாகி, ஜெயிலுக்குப் போவதிலும் சந்தேகம் இல்லை என்கின்றனர். விசாரணையில் நடந்த தில்லுமுல்லுகளை ஒட்டி, 2ஜி வழக்கை உச்ச நீதிமன்றம் மறு விசாரணைக்கு உத்தரவிடவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.


சி.பி.ஐ. வழக்கறிஞரே சிக்கி இருப்பதால் இந்த வழக்கின் விசாரணை எவ்வளவு தூரம் நியாயமாக நடக்கும் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது!


- சரோஜ் கண்பத்

thanx - vikatan 


1.
2g வழக்கில் இதை விட மிகப் பெரிய காமெடி 200 கோடி லஞ்சம் கொடுத்த சாஹிட் பால்வா சிறை மற்றும் அவனது நிறுவனங்களுக்கு சீல், லஞ்சம் வாங்கிய கலைஞர் டிவி சீரும் சிறப்புமாக இன்னும் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் 60% பங்குதாரர் மற்றும் நிர்வாக இயக்குனர் மீது ஒரு வழக்கு கூட இல்லை !! உலகத்திலேயே லஞ்சம் கொடுத்தவன் சிறையிலும் லஞ்சம் வாங்கியவன் சுதந்திரமுமாக திரிவது இந்தியாவில் மட்டுமே!! ஒன்று 2G வழக்கு மற்றொன்று இத்தாலியில் இருந்து வாங்க விருந்த ஹெலிகாப்டர் ஊழலில்.

இத்தனை நல்லவர்களான காங்கிரஸ் மற்றும் திமுக உடன் வியஜகாந்த் கூட்டணி ஏற்படுத்தினால் நாப்பதும் நமதே நாமமும் நமக்கே!! காவிரிக்கும் கரன்ட்டுக்கும் வழக்கம் போல உச்சநீதிமன்றத்தையே நாடலாம்



2. சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்குதாம். என்னத்த கண்காணிக்குது? கே.ஜி.பாலகிருஷ்ணன், தின்னகரன் மாதிரி நிறையா பேரு இருப்பாங்க போல். அந்த டிவி சேனல் மட்டும் இந்த ஆடியோ டேப்ப வெளியிடாடிட்டி இதையும் முடி மறைச்சுருப்பானுங்க. கூடிய சீக்கிரம் எல்லா ஆவணட்திஅயும் அழிச்சு கேசை ஒண்னும் இல்லாம பண்ணப்போறாங்க. திருட்டு பசங்க



3. என்றைக்கு ராசாவை மட்டும் உள்ளே தள்ளி விட்டு, சிதம்பரம் அவர்கள் மீது குற்றம் இல்லை என்று நீதிபதி சைனி தீர்ப்பு அளித்தாரோ, அன்றே இந்த வழக்கை ஊத்தி மூடும் வேலை துவங்கி விட்டது.....ஆனாலும், உண்மை ஒரு நாள் வெளியே வந்தே தீரும் என்று நம்புவோமாக... 


12-ம் வகுப்பு படிக்கும் மதியழகியை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மாபாதகன்

என்னைக் கல்யாணம் பண்ணிக்காத நீ, உயிரோடவே இருக்கக் கூடாது!

நேற்று வினோதினி இன்று மதியழகி
 
 
காதலிக்க மறுத்ததால் ஆசிட் ஊற்றப்பட்ட வினோதினி, சிலமாத சிகிச்சைக்குப் பிறகு இறந்த சோகச்செய்தி வந்த அதே நேரத்தில், நாகை மாவட்டம் சீர்காழியில் அதேபோல இன்னொரு கொடூரம். திருமணம் செய்துகொள்ள மறுத்த காரணத்துக்காக 12-ம் வகுப்பு படிக்கும் அத்தை மகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி இருக்கிறான் ஒரு மாபாதகன்!  
 
 
சீர்காழியை அடுத்த நெம்மேலி கிராமத்​தைச் சேர்ந்தவர்கள் பாவாடை - வசந்தா தம்பதி. கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு நான்கு மகள் கள். மூன்றாவது மகள் மதியழகி. நாங்கூர் அரசு மேனிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறார்.

தாய் - தந்தை வயல் வேலைக்குச் சென்றுவிட, வீட்டில் தனியாக படித்துக்கொண்டு இருந்தார் மதியழகி. அப்போது வந்​தான் ராஜசேகர். மதியழகியின் தாய்மாமன் ராஜாமணியின் மகன்தான் ராஜசேகர். ஒன்பதாம் வகுப்பு படித்துள்ள ராஜசேகருக்கு ப்ளஸ் டூ படிக்கும் அத்தை மகள் மதியழகி மீது தீராத காதல். 'எப்போ கல்யாணம் பண்ணிக்​கலாம்?’ என்று தொடர்ந்து கேட்டுக்​கொண்டே இருப்பான். 'இப்போ என்ன அவசரம்? படிப்பு முடிந்ததும் வைத்துக்​கொள்ளலாம்’ என்று மதியழகியும் இரண்டு வீட்டுப் பெரியவர்களும் சொல்லியும் ராஜசேகர் கேட்கவே இல்லை. அன்றும் அப்படி கேட்கத்தான் வந்திருப்பான் என்றுதான் நினைத் தார் மதியழகி.


என்ன நடந்தது? மதியழகியின் அக்கா ஜோதி சொல்கிறார்.
''இவ படிச்ச புத்தகத்தைக் கீழே வெச்சுட்டு அவன்கிட்ட பேசிட்டு இருந்திருக்கா. அந்தப் புத்த​கத்தை அவன் கையில் எடுத்துப் பார்த்துக்கிட்டே பேசி இருக்கான். அப்பவும் கல்யாணத்தைப்​பத்தித் தான் பேசி இருக்கான். 'படிப்பு முடியட்டும்... பாத்துக்கலாம்னு சொன்னேனே’னு இவ பதில் சொல்லி இருக்கா. 'இந்தப் புத்தகத்துல போன் நம்பர் இருக்கே... அது யாருது?’னு கேட்டிருக்கான். 'அது ஸ்கூல்ல என்னோட படிக்கிறவன் நம்பர். எதாச்சும் சந்தேகம் இருந்தா கேட்குறதுக்காக வாங்கி வெச்சேன்’னு இவ சொல்லி இருக்கா. அதைக் கேட்டதுமே அவனுக்கு கோபம் வந்து, 'எவன் கூடவோ எல்லாம் உனக்கு என்ன பேச்சு’னு கன்னா​பின்னான்னு திட்டி இருக்கான். 


'கல்யாணம் ஆகு றதுக்கு முன்னாடியே இப்படி சந்தேகப்படுறியே... உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா இன்னும் எப்படி எல்லாம் சந்தேகப்படுவே? உன்னைக் கல் யாணம் செஞ்சுக்கவே பயமா இருக்குன்’னு இவ சொல்லி இருக்கா. அவ்வளவுத​£ன்... 'என்னைக் கல்யாணம் பண்ணிக்கலைன்னா நீ எவனையுமே கல்யாணம் பண்ணிக்க முடியாது. என்னைக் கல்யாணம் பண்ணிக்காத நீ, உயிரோடவே இருக்கக் கூடாது’னு சொல்லி​க்கிட்டே, வண்டியில் வச்சிருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்துகிட்டு வந்து இவ மேலே ஊத்திட்டானாம். மாமா நம்மள மிரட்டத்தான் இப்படி செய்யுது, கொளுத் தாதுன்னு இவ நம்பிகிட்டு அப்படியே நின்னுருக்கா. ஆனா வெறியில இருந்த அவன், தீக்குச்சியைக் கொளுத்தி போட்டுட்டான். குபுக்குன்னு பத்திகிச்சு. முகம், மார்பு, நெஞ்சுப் பகுதினு தீப்பிடிச்சு எரியவும், இவ சாமர்த்தியமா செயல்பட்டு தீயை அணைச்சிருக்கா. அதுக்குள்ள சத்தம் கேட்டு மத்தவங்களும் ஓடியாந்திருக்காங்க'' என்று நடந்த கொடூரத்தைக் கண்ணீருடன் விவரித்தார்.


தீயை அணைத்ததும் காயங்களுடன் போராடிக்​கொண்டு இருந்த மதியழகியை தனது பைக்கில் ஏற்றிக்கொண்ட ராஜசேகர், நேராக சீர்காழிக்கு கொண்டு​வந்து மருத்துவமனையில் முதலுதவி மட்டும் செய்துவிட்டு, குமாரநத்தத்தில் உள்ள  தனது வீட்டுக்கு அழைத்துப்போய் படுக்க வைத்துவிட்டு வெளியேறி ​விட்டார். மதியழகி மீது பெட்ரோலை ஊற்றிக் கொளுத்திய தகவல் மதியழகியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியவர, அவர்கள் பதறியடித்துக் கொன்டு வீட்டுக்கு ஓடி வந்தனர். ஆனால், அங்கே மதியழகி இல்லை. பின்னர் ராஜசேகரின் வீட்டில் இருக்கும் தகவல் தெரிந்து போய் பார்த்தவர்களுக்கு... முகம், மார்பு, நெஞ்சு ஆகிய பகுதிகள் வெந்த நிலையில் மதியழகி இருந்ததைக் கண்டு பொறுக்க முடியவில்லை. அதன்பிறகே, போலீஸில் புகார் கொடுத்துவிட்டு, மதியழகியையும் மருத்துவமனையில் சேர்த்து இருக் கிறார்கள்.



30 சதவிகித பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் மதியழகி. ராஜசேகர் சிறையில் அடைக் கப்பட்டு இருக்கிறார். ''சொந்தக்காரங்க சிலர் வந்து, 'நீயா கொளுத்திக்கிட்டேனு போலீஸ்ல சொல்லிடு. ராஜசேகர் வெளியில வந்துடுவான். பிறகு, ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்யலாம்’னு பேசுறாங்க. அது எப்படிங்க? என் தங்கச்சியை இப்படி செஞ்ச​வனுக்கே, இவளைக் கல்யாணம் கட்டிக் கொடுக்க முடியும்?'' என்று கேட்கிறார் மதியழகியின் இன் னொரு அக்காவான கோமதி.


சீர்காழி டி.எஸ்.பி-யான பாலகுரு, ''ராஜசேகரைக் கைது செய்து ரிமாண்ட் செய்து விட்டோம். அவன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, தக்க தண்டனை வாங்கித் தரப்படும்'' என்றார்.


காதல் இல்லை என்றால் காதலியே இருக்கக் கூடாது என்னும் அளவுக்கு சில இளைஞர்களின் எண்ணம் கொடூரமாக மாறிபோன கொடுமையை என்னவென்று சொல்ல?



- கரு.முத்து

thanx - vikatan  


readers views 


1.
என்ன நடக்கிறது, நாட்டில் ?எல்லாம் சுலபமாக வேண்டும் , படிக்கமாட்டேன், சம்பாதிக்கமாட்டேன் உழைக்கமட்டேன் ஆனா அழ்கான பெண் தனக்கு மட்டுமே வேண்டும் என்ன புத்தி இது?யாருடைய தவறு சமுதாய சீரழிவு , யார் காரணம்?நிச்சயமாக அரசாங்கம் தான் , கடந்த முப்பது வருட அரசாங்கம்... லஞசம், தன் வாரிசு தன் குடும்பம் மட்டும் என்கிற போக்குதான் காரணம்.

எல்லா துறையிலும் லஞ்ஜம் ஸோ,, சரியான கல்வி , இறைஉணர்வு, நல்ல வழிநடத்துதல் இல்லாமல் (ஆசிரியரகளே பாலியல் குற்றம் செய்பவர்கள்) . என்று ஒருபக்கம் லாபம் பார்க்கிறவர்கள் பார்த்து க்கொண்டிருக்க வருங்காலத்தை அமைக்க வேண்டியவர்கள், மது, போதை, காமம் , காதல்(சும்மா)என்று சீரழிந்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் ஒரே வழி வரும் காலத்திலாவது மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து சரியான அரசாங்கம் அமைப்பதுதான்.
மக்கள், முக்யமாக இளைஞர்கள் தங்கள் நம்பிக்கையின் படி கோவில்கள், ஆன்மீக சொர்பொழிவுகள் இறையன்பு, கலாம் போன்றோர்களின் வழிகாட்டுதல் களை படிக்க வேண்டும். .



2. அவனுக்கும் இதே மாதிரி ரோட்டுல போட்டு "கொளுத்து" அப்பதான் மற்றவர்கல் செய்ய பயப்படுவார்கல்...

மனித உரிமை ஆர்வலர்களை குப்பையில் போடுங்கள்... (இந்த விசயத்தில்) கொலை செய்தவனுக்கு தண்டனை சோறு போட்டு வளர்ப்பது தான் என்கிறார்கள் அவர்கள்...

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்...இது தான் தண்டனை. தண்டனை பாதிக்கப்பட்டவனின் மனநிலையிலிருந்து கொடுக்கப்படவேண்டும்.

வினோதினியின் அப்பனுக்கு தான் உண்மையான வலி என்னான்னு தெரியும், நம் நாட்டு ஜனாதிபதிக்கு அல்ல!


3. ஒரு பெண்ணை அடைய விரும்புவது அது நடக்காவிட்டால் அவளை துன்புறுத்த்துவது . அதற்;கு காதல் என்னும் முகமூடி , காதல் என்பது வெறு இது பலாத்காரம் . ஒரு வகையில் கற்பழிப்பு முயற்சிதான்., மறைமுகமாக பயமுறுத்தி பெண்ணின் சம்மதத்தோடு களங்கப்படுத்தல். இது பாலியல் பலாத்காரமே அன்றி காதல் இல்லை . இதை தடுக்க அரசும் , சமுக ஆர்வலர்கள் முயற்சிக்க வேண்டும். மதியழகி விரைவில் குணமடைந்து நன்றாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.
-பிரியன் நெதர்லாந்தில் இருந்து -


4. கிராமங்களில் இப்படிப்பட்ட தவறுகளுக்கு வாய்ப்பிருக்கிறது... பையன் மண்டையில் படிப்பு ஏறாமல் பொறுக்கியாக சுற்றித்திரிவது... பெண்கள் படித்து நல்ல நிலமையில் வருவார்கள்... பையன் கெட்டிக்காரன், எங்கே பண்ணிரண்டாம் வகுப்புக்குமேல், கல்லூரி சென்று படித்தால் அப்பெண் தமக்கு கிடைக்கமாட்டாள் என்று நினைத்து இதுபோன்ற கேடுகெட்ட செயல்களில் ஈடுபடும் மிருகங்கள் அனேகம்...

 5. விடலைப் பசங்களை உசுப்பேத்தும் சினிமாவே முக்கிய காரணம். படிக்க துப்பில்லாத நாய்க்கு கல்யாணம் ஒரு கேடா. இதை ஆரம்பித்திலேயே கண்டிக்காத பெற்றோர்களும் ஒரு காரணம். மாமன் பெண் என்றால் தனக்குத்தான் என்ற கேடுகெட்டதனம் ஒழியட்டும். யாருக்கு யாரைப் பிடித்திருக்கிறதோ, தகுதியிருப்பின்(குடும்ப நடத்த, சம்பாதிக்க) அவர்களுடன் நடக்கட்டும் திருமணம்.

ஃபோர்ட்டபிள் டி வி ல பார்த்தாலும் நமீதா......

1. சொர்க்கமும் நரகமும் ஒரே வீட்டில் தான் மச்சினி மனைவி்




--------------------


2. ஒரு பிகரைப்பார்த்து கண் அடிக்கறது பெரிய மேட்டர் இல்லை.பண்ணிக்கலாம்.ஆனா அடிக்கறதுக்குள்ள ஓடிடனும்




---------------------------


3. பச்சப்பிள்ளைன்னா பச்சக் கலருல இருப்பாங்களானு கேட்பவர் அப்பாவி.த்ரிஷா மாதிரி கில்மாவா பச்ச குத்தி இருக்குமா னு கேட்டா அடப்பாவி.




-------------------------



4 பெண்ணை விட அதிக அறிவைப்பெற்றும் அது பற்றிய கர்வம் இல்லாத ஆண் தான் உண்மையிலேயே அழகு ்




--------------------------



5. தமிழகத்தை ஒளிமயமாக்குவதில் முதல்வர் மும்முரமாக உள்ளார்-நாஞ்சில் சம்பத்#டியூப்லைட் னு எங்களை நினைச்சீங்ளா?




-------------------------


6. பொண்ணுங்க பின்னாலயே போனா தான் பேரழகி என இன்னும் பொண்ணுங்க நம்பறது வியப்பா இருக்கு!!"




-------------------------


7. ஒரு சண்டையில் யாருடன் சண்டை இட்டோமோ அதை செல்லச்சண்டையாக மாற்றுவதே சாமார்த்திய்ம்




--------------------



8. 60 வயது ஆன ஜீனத் அமன் மறுமணம் செய்ய ஆசை # பாட்டி ஜொள்ள தட்டாதே



----------------------



9.  ஹை ஹீல்ஸ் செப்பலால ஃபிகர்ட்ட அடி வாங்குனா அதுதான் காலணி ஆதிக்கம் # நான் வாங்கலை, வாங்குனவங்க சொன்னது ;-)




-------------------------



10.  சின்ன வயசுல இருந்து நான் பார்த்த எல்லா நர்சும் ஸ்விட்டோ ஸ்வீட்டு, #லவ் நர்ஸ் அவாய்டு நெர்வஸ்



-----------------------------


11. நந்திதா தாஸ் டூ தீபா மேத்தா - யாரென்று தெரிகிறதா இவள் தீ என்று புரிகிறதா # FIRE




----------------------------


12. ஃபோர்ட்டபிள் டி வி ல பார்த்தாலும் நமீதா சின்னதா தெரிய மாட்டாங்க



----------------------



13. நீ எத்தனை முறை என்னை அறைந்தாலும் உன் ஹாஸ்டல் அறைக்கு தினம் வந்து கொண்டே தான் இருப்பேன்




-----------------------


14. சின்ன வயசு பெரிய மனசு - லட்சுமிமேணன், துளசி ,பெரிய வயசு , சின்ன மனசு - இலியானா,தமனா




----------------------


15. ஆர்யா, விஷால் 2பேருக்குமே எனர்ஜி லெவல் ஜாஸ்தி.-அஞ்சலி # அடடே! த்ரிஷாவும் இதேதான் சொன்னாங்க 2 பேர் ஒரே அனுபவம்,ஹி ஹி




------------------------


16.  படம் ஹிட்டானால் ஹீரோக்கள்தான் பெயரை தட்டிச் செல்கிறார்கள்! டைரக்டர்கள் ஹீரோயினை தட்டிச்செல்கிறார்கள்




-----------------------


17. படம் ஃபெய்லியர் ஆனால் ஹீரொயின்கள் தொழில் அதிபரைத்தற்காலிக கணவர்களாக கட்டிக்கொள்கிறார்கள்




----------------------------

18.  ஏன் நீங்க கடல் பார்க்கலை?



 கடலை போட்டுத்தான் பழக்கம்.மத்தவங்க கடலை போடறதை பார்த்துப்பழக்கம் இல்லை




------------------------------



19. எத்தனை வருசமா தான் ஹீரோயின கிளாமரான பொண்ணா காட்டுவீங்க?



 சாரி.சினிமாவோட கிராமரே கிளாமர்தான்




-----------------------------



20.குதர்க்கம் நரகம் இரண்டில் ஓன்று இங்கேயே நிச்சயம் கல்யாணம் பண்ணிப்பார்




----------------------------



21. கும்பமேளாவில் நித்தியானந்தா... புனித நீராடினார்! # புனிதா கூட னு படிச்சுட்டேன்




----------------------


22  ஜட்ஜ் - எதுக்காக 100 பேரை ரேப் பண்ணினே?



கைதி - எங்க தலைவர்தான் நிறைய குழந்தைகளை பெத்துக்கனும்னாரு



-------------------------



23. கடல் நஷ்டத்திற்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை: - மணிரத்தினம்- # படத்தை " முடிச்சு"க்குடுப்பதோட அவர் வேலை முடியுது




------------------------



24. சொந்தக் காலில் நிற்க வேண்டும் : இளைஞர்களுக்கு ப. சிதம்பரம் ஆலோசனை # கார்த்தி சிதம்பரம் மாதிரி அப்பாவை நம்பி இருக்கக்கூடாதா?




------------------------




25. ஆர்யா, விஷால் 2பேருக்குமே எனர்ஜி லெவல் ஜாஸ்தி.-அஞ்சலி # அடடே! த்ரிஷாவும் இதேதான் சொன்னாங்க 2 பேர் ஒரே அனுபவம்,ஹி ஹி




--------------------------------



Sunday, February 17, 2013

என்னை ஆச்சர்யப்படுத்தின படங்கள் - ஏ ஆர் முருகதாஸ் பேட்டி

சினிமாவில் 'அண்ணன் உடையான் அறிமுகத்துக்கு அஞ்சான்’கிறது புதுமொழி. சரிதானே!'' - தன் தம்பி திலீபனை அருகில் இழுத்து இறுக்கி அணைத்துக்கொண்டு சிரிக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். தன் தயாரிப்பில் உருவாகும் 'வத்திக்குச்சி’ படத்தில் திலீபனை ஹீரோவாக அறிமுகம் செய்கிறார் இந்த மாஸ் இயக்குநர். 



''கஷ்டப்பட்டு சினிமாவில் சாதிச்சவர் நீங்க. ஆனா, எந்தக் கஷ்டமும் இல்லாமல், ஹீரோவா திலீபன் அறிமுகமாகிறார்ல..?''


''அப்படிப் பார்க்காதீங்க. என் அசிஸ்டென்ட் கின்ஸ்லின் நல்ல கதையோட வந்தார். 'ஹீரோ யார்?’னு கேட்டேன். 'உங்க தம்பியை வெச்சே பண்ணலாம்’னு சொன்னார். திலீபனும் நடிக்கிறேன்னு சொன்னான். நான் சரின்னு சொல்லிட்டேன். திலீபன், தானா எடுத்த முடிவு இது. சினிமாங்கிறது எப்பவுமே கத்துட்டே இருக்க வேண்டிய ஒரு கலை. அதைக் கஷ்டம்னு சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. எந்தப் பின்னணியும் இல்லாம சினிமாவுக்கு வந்த நான், கஷ்டப்பட்டேன்னு சொல்ல முடியாது. 



ஆனா, கடுமையா உழைச்சேன். கத்துக்கிட்ட விஷயங்களைச் சந்தோஷமா செயல்படுத்த ஆரம்பிச்சேன். அந்த அனுபவம் சிலருக்கு ஆரம்பத்திலேயே கிடைக்கும். சிலருக்கு அப்புறமாக் கிடைக்கும். அதேபோல திலீபன் ஜெயிக்கிறது அவன் கையில்தான் இருக்கு.''
இங்கே சின்னதாக இடைமறித்தார் திலீபன்... ''இந்தப் படத்தில் நான் நடிக்கலாம்னு முடிவு எடுத்ததைவிட, அந்தக் கதைக்காக இயக்குநர் தான் என்னைத் தேர்ந்தெடுத்தார். அதுதான் நிஜம்.




 நான் விளம்பர நிறுவனம் நடத்திட்டு இருக்கேன். அப்போ அங்கே வந்து போகும் அண்ணனோட உதவியாளர்கள் பழக்கம்ஆனாங்க. அப்படி நட்பானவர்தான் கின்ஸ்லின். அவரோட 'வத்திக்குச்சி’ ஸ்க்ரிப்ட்டுக்கு மாஸ் ஹீரோக்கள் செட் ஆக மாட்டாங்கன்னு சொல்லிட்டே இருப்பார். திடீர்னு ஒரு நாள், 'நீங்க நடிச்சா நல்லா இருக்கும்’னு சொன்னார். 



ஸ்டேஜ் ஷோ, டான்ஸ், பாடி லாங்குவேஜ், வசன உச்சரிப்புனு ஒரு வருஷப் பயிற்சிக்கு அப்புறம்தான் நடிச்சேன்'' என்று தனக்கான சின்ன இன்ட்ரோ கொடுத்துவிட்டு, அண்ணன் முகம் பார்த்தார் திலீபன். முருகதாஸிடம் பேட்டி தொடர்ந்தது.



 ''தமிழ் சினிமாவில் நிறைய இளைஞர்கள் பளிச்னு முத்திரை பதிச்சிருக்காங்க. கவனிக்கிறீங்களா?''



'' 'பீட்சா’, 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படங்கள் ஆச்சர்யப்படுத்தின. தன்னை நிரூபிக்கணும்னு ஒரு இயக்குநர் அஞ்சாறு வருஷம் கஷ்டப்பட வேண்டிய சூழல் இப்போ இல்லை. ஒரு கேமரா இருந்தா தன்னோட கற்பனையை ஷூட் பண்ணி, கம்ப்யூட்டர்ல அவங்களே எடிட் பண்ணி, சின்னச் சின்ன மியூஸிக் சேர்த்து டி.வி.டி. பண்ணி கையில் கொடுத்துர்றாங்க. இந்த டிரெண்ட் பார்க்கும்போது தமிழ் சினிமா வில் இன்னும் நிறைய பவர்ஃபுல் படங்கள் வரும்னு நம்பிக்கை இருக்கு!''



 ''குறும்பட இயக்குநர்கள் சினிமாவில் சாதிப்பது நல்ல விஷயம். ஆனா, முதல் படத்தில் முத்திரை பதிச்ச பலர் இரண்டாவது படத்தில் சறுக்கிடுறாங்களே?''



''அதே ஃபார்முலாதான். சினிமாவில் நிறையக் கத்துட்டே இருக்கணும். முதல் வாய்ப்பில் தன் காதல் அல்லது தன் நண்பனின் காதல்னு ஏதோ ஒரு அனுபவம் அவங்களுக்கு இருக்கும். அது உண்மைக்கு நெருக்கமா இருக்கிறதால ரசிகர்களும் ரசிப்பாங்க... சிரிப்பாங்க... கை தட்டுவாங்க. படமும் ஹிட் ஆகிடும்.




ஆனா, ரெண்டாவது படமும் அப்படிப் பண்ண முடியாது. த்ரில்லர், ஆக்ஷன், குடும்ப உறவுகள், சமூக நலன் சார்ந்த படம்னு வேற வேற தளத்தில் டிராவல் பண்ண ணும். 'மோகமுள்’ மாதிரியான கதைகள் படிக்கும்போது ஒரு வாழ்க்கை வாழ்ந்த மாதிரி இருக்கும். அந்த மாதிரி நிறையப் படிக்கணும். சின்னச் சின்ன விஷயங்களையும் ரசிக்கும் மனசு, கற்பனைத் திறன், வாசிப்புப் பழக்கம் இருந்தா 'அழகி’, 'ஆட்டோகிராஃப்’ மாதிரி படங்களை இருபது வயசுலயே எடுக்கலாம். ஒவ்வொரு நிமிஷமும் நம்மளைச் சுத்தியே நிறைய சினிமா ஓடிட்டு இருக்கு. அதுல இருந்து சீன் பிடிச்சாலே, சிக்ஸர் அடிக்கலாம்!''



நன்றி - விகடன்