Saturday, December 29, 2012

டெல்லி பெண் இறப்பு சம்பவம் - வலுக்கும் போராட்டங்கள்



Victim of 
gang rape in India dies at hospital in Singapore
ஒரு மாணவிக்காக அல்ல... அத்தனை பெண்களுக்கான போராட்டம்!
ஒரு நல்ல அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது குடிமக்களின் பாதுகாப்பே!  


வலியான் வெல்கிறான்.மெலியான் ஒடுக்கப்படுகிறான்.எல்லாவற்றையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பதற்கு கடவுள் எதற்கு? 
கொடூரமான மரணங்கள் ,அடிக்கடி நிகழும் விபத்துக்கள் கடவுள் இருப்பை மேன்மேலும் சந்தேகம் கொள்ள வைக்கிறது  
இந்தியாவில் இறந்தால் பிரச்சனை என சிங்கப்பூர் கொண்டுபோய் திசை திருப்பி இருக்க வாய்ப்பு இருக்கு # டெல்லி சம்பவம்  






லைநகர் டெல்லி பற்றி எரிகிறது. இந்தியாவைத் தலைகுனியவைத்த பாலியல் பலாத்காரத்தின் ஆக்ரோஷம் மக்கள் மத்தியில் இன்னும் அடங்கவில்லை. 



பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிக்கொண்டு இருக்க... இந்தியாவில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான பெண்களும் தெருவுக்கு வந்து பாதுகாப்பு கேட்டுப் போராடு கிறார்கள். ஒட்டுமொத்தப் போராட்டத்துக்கும் தூண்டுதலாக நிற்கிறார்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள். லெனின், கலையரசன் என்ற இருவருமே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள். சம்பவம் நடந்த மறுநாளில் இருந்து இன்றுவரை போராட்டக் களத்தில் ஆக்ரோஷம் குறையாமல் நிற்கிறார்கள்


லெனினைத் தொடர்புகொண்டு பேசினோம். ''ஆரம்பத்தில் எங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டும்தான் போராட்டக் களத்தில் நின்றோம். இப்போது நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு மக்கள் திரண்டு விட்டனர். மக்களின் விழிப்பு உணர்வு மேலும் பெருக வேண்டும் என்பதற்காகத்தான் அமைதியான முறையில் எங்கள் போராட்டத்தைத் தொடர்கிறோம். இதற்குமுன், டெல்லியில் நடந்த பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும் நாங்கள் போராடி இருக்கிறோம். ஆனால், அப்போதெல்லாம் எங்கள் போராட்டம் யாருடைய கவனத்தையும் ஈர்த்தது இல்லை.
இந்த முறை மக்கள் கூட்டம் அதிகமாகி விட்டதால், மீடியா வெளிச்சமும் அதிகமாக இருக்கிறது. இந் தியாவின் மெட்ரோ நகரங்களில் எல்லாம் அதிக அளவு பாலியல் வன்முறைகள் நடக்கின்றன என் றாலும் டெல்லியில் இது மிகஅதிகம். இந்த நிலை நீடிக்கக் கூடாது என்பதற்காகத்தான் சில முக்கியமான கோரிக்கைகளை வைத்திருக்கிறோம்.



முதலாவது, டெல்லி நகர போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார், நடந்த சம்பவத்துக்கு முழுப்பொறுப்பு ஏற்றுக்கொண்டு பதவி விலக வேண்டும். கற்பழிப்பு சம்பவம் நடந்த நேரத்தில், அந்த பஸ் ஐந்து செக் போஸ்ட், மூன்று போலீஸ் ஸ்டேஷன்களைக் கடந்து சென்றுள்ளது. அங்கெல்லாம் இருந்த போலீஸாரின் கவனக்குறைவுதான் இப்படி ஒரு நிலை ஏற்படுவதற்குக் காரணம். அதனால், அந்த சமயத்தில் பணியில் இருந்த அத்தனை போலீஸ்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



பாலியல் சம்பந்தப்பட்ட எல்லா வழக்குகளையும் அதிகபட்சம் 100 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். பணி இடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல், வன்முறைக்கான மசோதா நாடாளுமன்றத்தில் இன்னமும் நிறைவேறாமல் இருக் கின்றன. அவற்றை சீக்கிரம் அமலுக்குக் கொண்டுவர வேண்டும். பாலியல் வன்முறை சம்பந்தமாக கொடுக்கப்படும்  அனைத்து புகார்களுக்கும் உடனே எஃப்.ஐ.ஆர். போட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவைதான் எங்கள் கோரிக்கைகள்.


பெண்கள் ஆபாசமாக உடை உடுத்துகிறார்கள், வரைமுறை மீறி லவ் செய்கிறார்கள் என்று சிலர் இந்த விஷயத்தைத் திசை திருப்ப முயல்கிறார்கள். உடைதான் பிரச்னை என்றால், ஏன் ஐந்து வயதுகூட நிரம்பாத சின்னக் குழந்தைகள் மீதும் பாலியல் பலாத்காரங்கள் நடக்கிறதே... இதற்கு என்ன பதில் சொல்வார்கள்?


அதேபோல, பெண்கள் இரவு நேரத்தில் வெளியே வரக்கூடாது என்று சொல்வதும் அபத்தம். இன்றைய சூழலில் பெண்களால் வெளியே செல்லாமல் இருக்கவே முடியாது. படிப்பு, வேலை போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காவது அவர்கள் போய்த்தான் தீர வேண்டும். அரசு எங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். பெண் களின் பாதுகாப்புக்கான இந்தக் கோரிக்கைகளை எல்லாம் ஏற்கவில்லை என்றால், டெல்லியில் தொடங் கிய எங்களது போராட்டம் அமைதியான முறையில் இந்தியா முழுக்க எல்லா மாநிலங்களிலும் தொடரும்'' என்று எச்சரித்தார்.



அடுத்துப் பேசினார் கலையரசன். ''இந்தியா என் னவோ புனிதமான நாடு மாதிரியும் இந்தக் கற்பழிப்பு சம்பவத்தால்தான் நம் நாட்டின் தூய்மைக்கே இழுக்கு வந்ததைப் போலவும் பேசுகிறார்கள். இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பும் இந்தியாவின் நிலை இதுதான். ஹரியானாவில் ஒரு பெண்ணை நடு ரோட்டில் வைத்து எட்டுப் பேர் செக்ஸ் டார்ச்சர் செய்தனர். இதே டெல்லியில்தான் மூன்று வயதுக் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்தது. அதாவது இந்தியாவில் 20 நிமிடங்களுக்கு ஒரு கற்பழிப்பு நடக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாங்கள் நடத்தும் இந்தப் போராட்டத்தை சட்டம் - ஒழுங்குப் பிரச்னையாகப் பார்க்கிறார்கள். இது மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சட்டம் - ஒழுங்குப் பிரச்னை கிடையாது; சமூகப் பிரச்னை.


பெண்கள் இரவில் தனியாக வெளியில் செல்வது தவறு, ஒழுங்காக உடை அணிய வேண்டும், அடக்க ஒடுக்கமாக இருக்க வெண்டும் என்றெல்லாம் சொல்லி, பெண்களை மறுபடியும் கற்காலத்துக்கே கொண்டு போகாதீர்கள். இப்போதுதான் எல்லாத் துறைகளிலும் பெண்கள் தைரியமாக நுழைந்து வரத் தொடங்கியுள்ளனர். அவர்களை மறுபடியும் கட்டிப் போடாதீர்கள். எங்களுடைய இந்தப் போராட்டம் பாதிக்கப்பட்ட ஒரு மாணவிக்காக மட்டும் நடக்கும் போராட்டம் அல்ல. ஒட்டுமொத்தப் பெண்களும் இனி எப்போதும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்கான போராட்டம்'' என்கிறார் அழுத்தம் திருத்தமாக.


- ஆ.அலெக்ஸ் பாண்டியன்


நன்றி - ஜூ வி 



சிங்கப்பூர்:டில்லியில் கற்பழிக்கப்பட்ட 23 வயது மருத்துவ மாணவி சிகி்ச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கடந்த இரு நாட்களாக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உடல் உறுப்புகள் செயல் இழந்த நிலையில் சிகிச்ச‌ை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.



கடந்த 16-ம் தேதியன்று டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் கற்பழிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார். பலத்த காயங்களுடன் அவர் டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக , மாணவர்கள், மகளிர் அமைப்பினர் டில்லியில் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகி்ன்றனர்.

இந்த விவகாரம் பார்லிமென்டிலும் எதிரொலித்தது. பெண் எம்.பி.க்கள் கொந்தளித்தனர். நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம் எனவும், குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் எனவும் கோரினர்.



இந்த பரப்பான சூழ்நிலையில் கடந்த 26-ம் தேதியன்று நள்ளிரவில் அந்த மாணவி டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து தனி விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு புகழ்பெற்ற மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயமும், நுரையீரல் மற்றும் வயிற்று பகுதியில் கிருமி தொற்றும் காணப்படுவதால், அவரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தார். செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.



உடல் உறுப்புக்கள் செயல் இழந்தன

மாணவி கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 2.15 மணி்யளவில் (சிங்கப்பூர் நேரப்படி 4.45 மணிக்கு ) இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல் உறுப்புக்கள் ‌கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழந்துவிட்டதால் அவரது உயிர்பிரிந்தது. கடந்த 13 நாட்களாக உயிருக்கு போராடிய அந்த மாணவி இறுதியில் மரணத்தின் வாசலை தொட்டுவிட்டார்.

முன்னதாக மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கெல்வின் லோக் , அதிகாலை 2.15 மணியளவில் மாணவி உயிரிழந்தது குறித்த தகவலை இந்திய தூதரகத்திற்கு தெரிவித்தார். இறந்த மாணவிக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்டோர் இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

மாணவி உடல் பிரேத பரிசோதனை

உயிரிழந்த மருத்துவம மாணவியின் உடல் பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்‌கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேத பரிசோதனைக்கு பின் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதையடுத்து அந்நாட்டு இந்திய தூதரகத்துடன் இந்தியா அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது. எனவே மாணவியின் உடல் விரைவில் இந்தியா வர உள்ளது.

டில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு

மருத்துவ மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து டில்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் மாணவி உயிரிழந்ததையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. போலீசார் குவிக்கப்பட்டு்ள்ளனர். இதனால் டில்லியில் பரபரப்பு காணப்படுகிறது.


 மக்கள் கருத்து 


 1. sandilyan கற்பழித்தவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பதால், கற்பழிப்புகள் நின்றுவிடாது. அதிக போலிஸ் பாதுகாப்பு தேவை. மேலும் இரவு நேரங்களில் அதிக ரோந்துகள் தேவை. மக்களிடம் விழிப்புணர்ச்சி தேவை. பெண்கள் பாதுகாப்பாக இருக்க பழகிக்கொள்ள வேண்டும். அதற்காக தனியாக செல்ல கூடாது. கவர்ச்சி உடைகள் அணியக்கூடாது என்று மட்டரகமாக சொல்லவில்லை. பாதுக்காபிற்காக பெண்கள் செல் போனை எடுத்து செல்ல வேண்டும். இந்த நேரத்திற்குள் வந்துவிடுவேன் என்று முன்பே குடும்பத்தாருக்கு தெரிவிக்க வேண்டும். 



பாதுகாப்பிற்காக தற்காப்பு கலை கற்றுகொள்ளுதல், மிளகு ஸ்ப்ரே போன்ற பொருள்களை வைத்திருப்பது தனியே செல்லும் பெண்களுக்கு நல்லது. குற்றம் புரிந்தோருக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை பத்தாது. ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கவேண்டும். அதற்காக மரணதண்டனை கொடுக்கவேண்டும் என்று சொல்வது தவறு. பலர் உணர்ச்சிவசப்பட்டு சொல்கிறார்கள். ஆனால் உயிரை எடுக்க ஆண்டவனுக்கு மட்டுமே உரிமை உண்டு. மனிதன் அந்த உரிமையை எடுத்துகொள்வது நாகரீக உலகுக்கு நல்லது அல்ல. பல சமயங்களில் உண்மையில் குற்றம் புரியாதவருக்கு உலகில் வளர்ந்த நாடுகளில் கூட இருபது ஆண்டுகள் வரை தண்டனை கொடுக்கப்பட்டு பின்னர் வருந்தபட்டது. நம் நாட்டில் நமது போலிசின் லட்சணம் தெரிந்தும், மரண தண்டனை கேட்பது மகா முட்டாள்தனம். 



2. அமெரிக்காவிலோ சிங்கபோரிலோ நாட்டில் எந்த சாலையில் ஒரு விபத்து நடந்தாலும் அயிந்து அல்லது பத்து நிமிடங்களில் உதவி தேடிவந்து விடுகின்றது...ஆம்புலன்ஸ் அல்லது போலீஸ்.......இந்த மாத்ரி அரக்கத்தனமான கொலைகளை தடுக்க இயலாத அரசால் அல்லது நாட்டால் என்ன பயன் ? ...அதுவும் தலைநகரில் ?...நாடு kdiyavarkalukkaakaa thaan valarnthu kondirukiratha? 



3. எது நடக்க கூடாது என்று எதிர் பார்த்தோமோ அது நடத்து முடித்து விட்டது.பெண் பிள்ளைகளை வைத்து இருக்கும் அனைவரும் நிம்மதியை இழந்து விட்டோம் . இவர்களுக்கு கொடுக்கும் தண்டனை தான் மற்ற காம வெறியர்களுக்கு பாடமாக அமையும்.தேர்தல் கலா வாக்குறுதி போல் இல்லாமல் உடன செயல் படுதும அரசும் அரசியல்வாதியும்.? 




4. முதற்கண் அந்த மாணவியின் பெற்றோருக்கு ஆண்டவன் அமைதியை வழங்கட்டும்............. இப்படியான நிகழ்வுகள் ஏற்படுவதற்கு இந்திய தண்டனை சட்டத்தின் பலவீனமும், காவல்த்துறை மற்றும் அதிகார மையங்களுக்குள் அரசியல்வாதிகளின் தலையீடுகளுமே முழுமுதற்காரணம். இறந்துபோன மாணவிக்கு ஆதரவாக இங்கு வாசகர்கள் பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர். நான் வேறு ஒருகோணத்திலும் பார்க்கலாம் என நினைக்கிறேன். 


அரசியல்வாதிகள் பணம்படைத்த அரசியல் செல்வாக்குள்ளவர்களின் குடும்பத்தில் இப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டால் காவல்த்துறை / நீதித்துறை எப்படியான எதிர்வினையை காட்டுமோ அப்பேற்பட்ட எதிர்வினையை கற்பழித்து படுகொலை செய்யப்பட்ட இந்த அப்பாவி மாணவியின் விடயத்திலும் காட்டவேண்டும். உதாரணத்துக்கு இப்படியான அனர்த்தம் ஒன்று காங்கிரஸ் தலைவி சோனியாவின் மகள் பிரியங்காவின் குழந்தைக்கு ஏற்ப்பட்டிருந்தால் சட்டப்படி என்ன செய்திருப்பார்களோ அதை குறிப்பிட்ட மாணவி விடயத்தில் கைக்கொள்ளவேண்டும். பொறுத்திருந்து பார்க்கலாம். 





5.  பாலியில் வன்முறையில் பாதிக்கப்பட்ட இந்திய இளம் பெண் சிங்கப்பூரில் மரணமடைந்ததால் ,இப்பிரச்னை சர்வதேச அளவில் அனைவரின் பார்வைக்கும் சென்றுள்ளது...இந்தியாவில் ஏதோ பெண்களெல்லாம் மிக அதிகாரம் மிக்க பதவிகளிலும் பொறுப்புகளிலும் இருகிறார்கள் இங்கே பெண்கள் மிகுந்த முனேற்றம் அடைந்து விட்டார்கள் என்ற மாய தோற்றத்தை ,இப்பெண்ணின் மரணம் உடைத்துள்ளது .. இந்தியாவின் மிக சக்தி வாய்ந்த பெண்மணியாக உலக பத்திரிகைகளால் உருவாக படுத்தப்படும் சோனியா காந்தி, கடந்த பதினைந்து ஆண்டுகளாக டில்லி முதல்வராக பதவி வகிக்கும் ஷீலா டிஷிட் ,உலகின் மிகபெரிய ஜனநாயக நாட்டின் பாராளுமன்றம் இருக்கு இடம் அதன் தலைவராக meera குமார் ,ஆகியோர் வசிக்கும் இந்திய தலை நகர் டில்லியிலேயே இப்படி ஒரு கொடூரம்,கேவலம் பெண்களுக்கு எதிராக இழைக்கபடுகிறது என்றால் நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் பெண்களின் நிலை குறித்து சொல்ல வேண்டிய அவசியமே இல்லை..



..பாலியல் வன்முறை, கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் இன்ன பிற அனைத்து சமூக விரோத மற்றும் தேச விரோத செயல்களுக்கு முக்கிய காரணம் சட்டங்களை கண்டு இதில் ஈடுபடும் நபர்கள் பயபடாமல் இருப்பதுதான்.சட்டம் செயல்படாமல் இருக்க காரணம் கீழ் மட்டத்தில் இருந்து உயர் மட்டம் வரை புரையோடிபோயுள்ள ஊழல் மற்றும் லஞ்சம் தான்...முக்கியமாக இது போன்ற சட்டங்களை செயல்படுத்தும் முக்கிய இடத்தில உள்ள போலிஸ் ,அரசு இயந்தரம், நீதி துறை அனைத்துமே ஊழலால் முடங்கி போயுள்ளது..ஊழலை ஒழிக்க ஒரு கடுமையான சட்டம் உருவாக்கப்படதவரை இந்திய மாற போவதில்லை..இந்தியாவின் இந்த ஒரு நிலைக்கு சோனியா காந்தி போன்ற தலைவர்களும் ஒரு மறைமுக காரணமே..



6. இந்த கயவர்களை சுப்ரீம் கோர்ட் உடனடியாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். 2. அதை உடனடியாக நிறைவேற்றவேண்டும். 3. இந்த நிகழ்வை திசை திருப்பிய போலீஸ் காரர்களையும் கழுவில் ஏற்ற வேண்டும் 4. இதை பப்ளிக்காக நாற்சந்தியில் வைத்து செய்ய வேண்டும். 5. இதை லைவ் ஆக எல்லா சேனல்களிலும் ஒளிபரப்ப வேண்டும். 6. இந்த இந்தியன் தாத்தா ஸ்டைல் தண்டனையை நிறைவேற்றினால் மட்டுமே இந்தியாவில் இதைப்போன்ற மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் நிகழாது. மேலும் இந்த கையால் ஆகாத அரசாங்கம் மக்களிடம் பப்ளிக்காக மன்னிப்பு கேட்கவேண்டும் 7. இதை போல ஒரு நடவடிக்கை உடனடியாக எடுக்ககவிட்டால், மேலும் குற்றங்கள் பெருகிவிடும் மேலும் இதைபோன்ற கயவர்களுக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச பயமும் போய்விடும். எந்த வகை குற்றங்கள் செய்தாலும் தப்பித்து விடலாம் என்ற தைரியம் ஏற்படும். எனவே மீண்டும் முதல் வரியைப்படியுங்கள் 



7. இந்த பெண்ணின் மரணம் உலகையே உலுக்கிவிட்டிருக்கும்.இந்தியாவின் மானமே போய்விட்டிருக்கும்..எப்போதுமே ஆணாதிக்கம் நிறைந்த நாடு என்கிற கேவலம் இனி நம்மை இழிவு படுத்தும். என்ன பாவம் செய்தாள் இந்த பெண்? இரவில் வெளியே வந்தது குற்றமா? அதிலும் தனது நண்பனோடு..? ஆடை குறைப்பை செய்தாளா? இவருக்கு நேர்ந்த நிலையை ஆதரித்து கருத்துரைத்த மேதாவிகளே..இப்போது உங்களுக்கு "திருப்தியா" உடலெல்லாம் காயங்கள்..உள்ளுறுப்புகளில் கூட கொடுமையான காயங்கள்..மனிதர்களா? மிருகங்களா? அதனையும் ஆதரிக்கும் பாவிகளே...பெற்றவர்களின் துயர் பற்றி தெரியுமா? கொதித்தெழுந்த மாணவ செல்வங்களின் கோபத்தின் கொடூரத்தை அறிந்தீர்களா?



 இரட்டை அர்த்தம் தரும் வார்த்தை பிரயோகம் போன்ற செயல்கள்தான் இந்த கொடுமையான செயல்கள் நடக்க ஏதுவாயிற்று..சிங்கப்பூரின் மருத்துவத்தை நம்பித்தானே நாம் இறந்துவிடுவார் என்றும் அனுப்பினோம்..அதே சிங்கப்பூருக்கு "நியாயமான" நேர்மையான" நீதி கிடைக்க வேண்டும் என்றால்..அந்த ஆறு கயவர்களை "இங்கே" அனுப்புங்கள்..நான் வாழும் இந்த திருநாட்டில்தான் நிச்சயம் நேர்மையான நீதி கிடைக்கும்..அங்கே அவர்கள் நீதி விசாரணை என்கிற பெயரில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள் நிம்மதியாய். மீளா துயரில் ஆழ்ந்திருக்கும் அணைத்து நல்ல உள்ளங்களின் அழுகையும்..கண்ணீரும்..சோகங்களும்.


.இறந்தபோன பெண்ணின் ஆத்மா சாந்தியடைய வைக்கும்..இவரோடு போகட்டும் பெண்ணடிமை..இந்த பெண்ணோடு ஒழியட்டும் ஆணாதிக்கம்..இந்த இந்தியாவில் சட்டங்கள் தர்மங்கள் நீதியும் மாற்றி அமைக்க இதுவே தருணமாக அமையட்டும்..கோழைகளின் ஆணாதிக்கம் இன்றோடு முற்றுபெறட்டும்.. 

 நன்றி - தினமலர்

Friday, December 28, 2012

cz 12 -Chinese Zodiac (2012) -சினிமா விமர்சனம்


http://kollytalk.com/posters/wp-content/uploads/2012/12/CZ12-december-12-Release-Poster.jpg 

சீனாவில்  1709 இல் பிரமாதமான கோட்டை ஒண்ணை எழுப்பி இருக்காங்க. அதுல  12 ராசிகளையும் குறிக்கும் அற்புதமான சிலைகள் செஞ்சு வெச்சிருக்காங்க . 1860 இல் பிரிட்டிஷ்  -  சீனா போர் வருது . 150 வருடங்கள் பாரம்பரியம் மிக்க அந்த சிலைகள் மற்றும் செலவ்ங்களை பிரிட்டிஷ் ஆட்டையைப்போட்டுடுது. அடுத்தவன் சம்பாதனையை அனுபவிக்கறதுதான் அவங்க குல வழக்கம் போல

 2000 ஆம்  வருஷத்துல அந்த சிலைகள் ஏலத்துக்கு வருது . லண்டன் ல நடக்கும் இந்த நிகழ்ச்சி உலகம் பூரா கவனம் கவருது.


ஹீரோவுக்கு கொடுக்கப்படும்  பிராஜக்ட் என்னான்னா அந்த 12 சிலைகளையும் கடத்தி ஒப்படைக்கனும். ஒரு சிலைக்கு  ஒரு மில்லியன் யூரோ டாலர் ரேட்.


வில்லன் புராதன சின்னங்களை , பழங்காலப்பொருட்களை ஒரிஜினல் மாதிரியே தயார் பண்ணி விற்பவன் . இருவருக்கும் ஏற்படும் போராடம் தான்  திரைக்கதை .



ஹீரோவோ உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான். இந்த வயசுலயும் இவ்ளவ் சுறு சுறுப்பான ஒரு ஹீரோவை நாம் பார்க்க முடியாது . ஓப்பனிங்க் ல நடமாடும் ஸ்கேட்டிங்க்  மிஷினா அவர் பண்ற சாகசம் செம . அதுக்கான ஐடியாவும் சண்டைப்பயிற்சியும்  அட்டகாசம் .ஜாக்கிசான் படங்களின் ஸ்பெஷாலிட்டியே ஃபைட் நடக்கும் சூழல் , கண்ணில் படும் பொருட்களை அந்த நிமிஷத்துல  யூஸ் பண்ணும் அதி புத்திசாலித்தன்ம் , வேகம் , மின்னல் வேக சுறு சுறுப்பு தான். 


நீண்ட இடைவெளிக்குப்பின்  பழைய ஜாக்கிசானைப்பார்க்கமுடியுது . மிராக்கிள்ஸ் , ஆர்மர் ஆஃப் காட் படத்துக்குப்பின் இதுல கடுமையா உழைச்சிருக்கார். வெல்டன் .இதுதான் அவரோட கடைசி ஆக்‌ஷன் படம்னு விளம்பரம்  செஞ்சது சும்மா பிஸ்னெஸ் ட்ரிக்னு தோணுது. இன்னும் பண்ண வாய்ப்பு இருக்கு


ஹீரோயின் பிரமாதமான ஃபிகர்னு அள்ளிக்கவும் முடியாது , மொக்கை ஃபிகர்னு தள்ளிடவும் முடியாது , மீடியம் ஃபிகர் தான். ஆனா அவர் கூந்தல் கலக்கலா இருக்கு நமக்கு கருங்கூந்தல் , செம்பட்டை டை அடிச்ச கூந்தல் , இளநரையை மறைக்க  மருதாணி , கேசவர்த்தணி ஆயில் தடவுனதால பிரவுனிஷ் கூந்தல் , கேரளா இயற்கை கூந்தல் இப்படிப்பார்த்தே பழக்கம் ஆன கண்களுக்கு  கோல்டு கலர்ல  தங்க கூந்தல் பார்க்க செமயா இருக்கு . மத்தபடி தமிழனைக்கவரும் அம்சம் எதுவும் இல்லை. ஹீரோயினுக்கு கண் , மூக்கு, உதடு எல்லாமே சின்னது , ஹி ஹி


 படத்துல்  மெயின் வில்லன்னு யாரும் இல்லை. அதனால க்ளைமாக்ஸ் ஃபைட் கசமுசா இல்லை. ஆனா க்ரூப் ஃபைட் தானே ஜாக்கி ஸ்பெஷல் அது 5 இடங்கள்ல வருது . சண்டைப்பயிற்சியும் அவராத்தான் இருக்கும்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhU-5zPB08KCzDrPAnqRvElopoRBYCrNzGbn9-3d_yx_IL6rF9SFLqciJzmaH2sPR-hHm0G_r4_qImH4PHuMiIib9HTY_9xjK93KbUKA2LKR3J7HS5mm27jlml7AUVHXkhkVQATNV2g94o/s1600/CZ12+Latest+Movie+Stills.jpg



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. ஓப்பனிங்க் சேசிங்க் சீன்ல ஜாக்கி ஒரு பெரிய் டிரக் பின்னால தொத்திட்டு போறாரு . அதை மோத வரும் வேன் . கடைசி மினிட் ல  அவர் ஜம்ப் பண்ண  வேன் மோதும் காட்சி தத்ரூபமா படமாக்கப்பட்டிருக்கு. வெல்டன் ஆக்‌ஷன்  ( க்ளைமாக்ஸ் ஆக்‌ஷ்ன ரீப்ளே ல அந்த சீன் எடுக்கும்போது என்ன ஆச்சு அப்டினு காட்டி இருக்கலாம்,. பல சீன்கள் காட்டறாங்க , அந்த சீன் மிஸ்ஸிங்க் )



2.  காட்டுல 5 அடி நீளமுள்ள பள்ளத்தாக்கு  , ஜாக்கி 2 காலையும் ஃபு;ல்லா விரிச்சு ஒரு மனித பாலமா மாறி நிக்கறார் . 3 ஹீரோயின்ஸும் அவரால் ரீப்ளேஸ் பண்ணப்படும் காட்சி  ஆக்‌ஷனுக்கு ஆக்‌ஷன் கிளுகிளுப்ப்புக்கு கிளு கிளுப்பு 



3.  கவர் செய்யப்பட்ட பாம் ல தேனிக்கள் மாதிரி பூச்சிகளை அடைச்சு வில்லன்க கூட்டத்துல விசிறி அடிக்கும் காட்சி 



4. தூங்காதே தம்பி தூங்காதே படத்துல நுணுக்கமான ஒரு பெஞ்ச் ஃபைட்டை கமல் ரொம்ப சிரமப்பட்டு பண்ணி இருப்பார் . அந்த மாதிரி ஒரு சோபா ஃபைட் வருது . சூப்பர் . கண்டிஷன்  என்னன்னா  இருவரும் சோபாவை தொட்டுட்டெ  இருக்கனும் . டச் விட்டுட்டா ஆள் அவுட் , ஹீரோவும் , வில்லனும் மோதும் ஃபைட் செம 



5. ஸ்பானிஷ் கனெக்‌ஷன் ல பண்ற மாதிரி இதிலும் ஒரு குடை ஃபைட் உண்டு . என்னா லாவகம் .



6.  ஹனி ஐ ஸ்ரங்க்  த கிட்ஸ் படத்துல வர்ற மாதிரி அழகான ஒரு கானகம் , அதில 50 நிமிடங்கள் ஓடும் படம் . ஒளிப்பதிவு , ஆர்ட் டைரக்‌ஷன் அற்புதம் . அந்த ராட்சச மரம் , தங்கக்கட்டிகள் ஐடியா எல்லாம் ஓக்கே 


7. படத்தோட  ஓப்பனிங்க ல பில்டிங்க்ல வவ்வால் மாதிரி , மங்கி மாதிரி ஹீரோ தாவும் காட்சிகள் ,  புதிர் பூங்கா காட்சிகள் குழந்தைகளை கவரும் 

http://cinema.gallery.net.pluzmedia.in/slide/goob_thumbs/index-3562-67293-CZ_12_Movie_Stillsb9760843242d6c96bbe8b5d680cfaa00.jpg



இயக்குநர் ஜாக்கிசானிடம் சில கேள்விகள் ( எப்படியும் அவருக்கு தமிழ் தெரியாது )




1. ஹீரோ ஒவ்வொரு ஏரியாவிலும் காமராவை கழுத்துல மாட்டிக்கிட்டு போறார். எல்லா மியூசியத்திலும் ஃபோட்டோ எடுக்கக்கூடாது என்கின்றனர். அவங்க ஏமாந்த சமயம் பார்த்து க்ளிக்கறார்.  கேமராவே நாட் அலோடுன்னு வாசலில் ஏன் வாங்கி வைக்கலை?  தமிழ் நாட்ல எல்லாம் அப்படித்தான் . டோக்கன் சிஸ்டமே போட்டு கேமராவை வாங்கி வெச்சுக்குவாங்க. அதுக்கு பதிலா ரகசிய கேமரா ஜேம்ஸ் பாண்ட் படத்துல வர்ற மாதிரி சின்னதா கொண்டு வந்து கனகச்சிதமா காரியத்தை முடிப்பது போல் காடி இருக்கலாம். இப்படி பட்டவர்த்தன்மாய் கேமராவோடு ஏன் அலையனும்? 




2. ஒரு 6 அடி நீளமும் , 4 அடி அகலமும் உள்ள மரத்துல  உள்ளுக்குள்ளே 8000 கிலோ தங்கக்கட்டிகள் இருக்கும்னு நம்ப முடியலை 



3. அந்த மரத்தை கப்பல்ல கட்டி இழுத்துட்டுப்போறாங்க . மரம்  கடல் தண்ணில . உப்புத்தண்ணில நீண்ட பயணத்தில் மரம் உளுத்துடும்கற  பேசிக் நாலெட்ஜ் கூடவா கப்பல்ல இருக்கும் 24 பேருக்கும் தெரியலை ?  மரத்தை கோடாலில வெட்டி முதல்ல தங்கக்கட்டிகளை எடுத்து கப்பல்ல வெச்சுட்டு பயணத்தை தொடராம இப்படி லூஸ் மாதிரி யாராவது  கோல்டு ஆப்புர்ச்சுனிட்டியை மிஸ் பண்ணுவாங்களா? ( கடல்ல கொட்டிடுது) 



4. ஒரு சீன்ல ஃபைட் காட்சில ஒரு பெரிய பீரோ ஜாக்கி காலட்டியில் விழுது . லாங்க் ஷாட்ல காட்டும்போது தெளிவா அவர் பாதம் அருகே விழுவது தெரியுது . அடுத்து க்ளோசப்ல காட்டும்போது அவர் பாதம் அந்த பீரோவுக்குள் மாட்டிக்குவது காட்டறாங்க 


http://www.chinadaily.com.cn/entertainment/images/attachement/jpg/site1/20121212/00221910da6c1232756f05.jpg



மனம் கவர்ந்த வசனங்கள் 


1. அவங்க தேச பக்தியை வெச்சு நாம லாபம் பார்த்துக்கலாம்னு சொல்றியா?



2. இங்கே யாரும் காரை பார்க் பண்னக்கூடாது 


 சாரி நான் அர்ஜெண்ட்டா பாத்ரூம் போகனும்



3. மீதி சிலைங்க எங்கே ?யார் கிட்டே இருக்கும்?


 இது என்ன கேள்வி? எடுத்துட்டுப்போனவங்க கிட்டேதான் இருக்கும் 




4. இதுதான் நீங்க பிரா வாங்கிட்டு வர்ற லட்சணமா?’


 சைஸை ஒரு குத்து மதிப்பாத்தான் சொன்னேன் , அவன் ஓவர் சைஸ்ல குடுத்துட்டான் போல  ஸாரிடி 


 ம்க்கும் 





5. இவை எல்லாமே அவங்க நம்ம கிட்டே இருந்து சுட்டது . இப்போ நாம சுடறோம் 


 பொழுது விடிஞ்சதும் இதே டயலாக்கை அவன் சொல்லப்போறான் , சாரி புலம்பப்போறான் 



6.  என்னடா பார்க் இது? ஒண்ணும் புரியலை , ஏ பி சி டியை தலைகீழாப்போட்டது மாதிரி இருக்கு, எப்படி எஸ் ஆக? சின்ன வயசுல படிச்சி இருந்தாலாவது புரியும் 



7. அய்யய்யோ, இத்தனை நாய்ங்களா? விடாது கறுப்பு , கால பைரவா? 



 8. ஆமா, நாய் குறுக்கே போனா நல்ல சகுன்மா? 


 9. மிஸ், வீடு உங்களை மாதிரியே அழகா இருக்கு 

 உள்ளே வந்து பாருங்க , இன்னும் பிரமாதமா இருக்கும் ( எது ? வீடா? ) 



10. அவங்க புத்திசாலித்தனமா கொள்ளை அடிச்சுட்டுப்போய்ட்டாங்க பாஸ் 



 அப்போ என்னை முட்டாள்ங்கறியா? 


http://image3.mouthshut.com/images/MoviesMusic/photo/CZ12-28774_1680.jpg



11. சைனா விவசாயம் மடும் தான் பார்த்துட்டு இருக்குன்னு அவங்க நினைச்சா அது அவங்க முட்டாள் தனம் 



12. நீங்க அவ கிட்டே சமாளிச்சது எனக்கு ரொம்பப்பிடிச்சிருக்கு 

 இப்போ நீங்க என் தோள் மேல கை போட்டது கூட எனக்கு பிடிச்சிருக்கு 


13. நியாயமே இல்லாத காரணங்களுக்காக  அநியாயமா போரில் பல உயிர்ச்சேதங்கள் நடக்குது 




14.  நீ சொன்னது ரொம்ப சரி , இப்பவாவது சிரி 



15.  சரி, கூடாரத்துல போய் டிரஸ் மாத்திட்டு வா. மாத்தும்போது லைட்டை ஆஃப் பண்ணிடு , இல்லைன்னா எவனாவது இப்படி வேடிக்கை பார்ப்பான் 



 ஓஹோ , அப்டி வேடிக்கை பார்த்த அனுபவம் இருக்கா? 


 ச்சே ச்சே  கண்டவனும் பார்த்துடக்கூடாதுன்னு சொன்னேன் 



16.  ஆஆஆஆஆஅ


 நாம லேண்ட் ஆகி 20 நிமிஷம் ஆகுது , இன்னும் ஏன் கத்திட்டு இருக்கே? 



17. அய்யய்யோ , என்  கொள்ளுதாத்தாவோட எலும்புக்கூட்டுக்கை?

 அதுக்குத்தானே கொண்டு வந்திருக்கேன் ஒரு பை 




18.  நாம மட்டுமே புத்திசாலிங்கன்னு நினைச்சுடக்கூடாது , எதிரிகளிம் புத்திசாலிங்கதான் 



19.  இப்போ என்ன பண்ணலாம் ?

 ஓடிடலாம் 




20.  நீ மெல்லிசா இருந்தாலும் படு வெயிட்டா இருக்கே


http://sin.stb.s-msn.com/i/12/FF8F95EDD38C982719564E69663A1B.jpg


21. எதா இருந்தாலும்  பேசித்தீர்த்துக்கலாம் 


 வில்லன் - ம்ஹூம் முதல்ல தீர்த்துட்டு அப்புறமா பேசிக்கலாம் ( தீர்த்துட்டா அப்புறம் யாரோட பேசுவே? )


22. நான் வயசானவன், என்னை விட்டுடுங்க.. உன்னைப்பார்த்தா என் 2 வது பொண்டாட்டி மாதிரியே இருக்கு 



23. பொக்கிஷங்கள் ம் அபூர்வ கலெக்சன்கள்னு சொல்வதில் , 10க்கு 9 டூப்ளிகேட் தான் 


 பாவம் பணக்காரங்க 



 24. குரங்குல இருந்து பிறந்தவன் மனுஷன்னு சொல்றாங்க, ஆனா நீ ஏன் இன்னும் குரங்காவே இருக்கே? 


 



ரேட்டிங்க் - 7 / 10


சி.பி கமெண்ட் - ஜாக்கிசான் ரசிகர்கள் , ஆக்‌ஷன் கம் காமெடி விரும்பிகள் குழந்தைகள் , பெண்கள் எல்லாரும் பார்க்க்கலாம் , ஜாலியான என்ண்டர்டெயின்மெண்ட் .



http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-prn1/c100.0.403.403/p403x403/548665_439143442820259_599606150_n.jpg

கோழிகூவுது

http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-prn1/c0.0.403.403/p403x403/537640_316794115103466_872665832_n.jpg

கோழிவிற்ற தனது அனுபவத்தைக் கதையாக்கி ஒரு சமுகப்பிரச்சினையுடன் அசோக் -சிஜா ரோஸ் மூலமாக ஒரு அற்புதமான காதல் கதையைக் கோர்த்துச் சொல்ல வந்திருக்கிறார் கோழிகூவுது இயக்குனர் ரஞ்சித்.டிசம்பர் 28 இல் படம் வெளீயாக தேதி குறிக்கப்பட்டிருக்கும் நிலையில் சினிமாவில் தான் சந்தித்த பழைய கசப்பான அனுபவங்களை மறந்து மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளார் கோழிகூவுது இயக்குனர் ரஞ்சித். 




பண்ருட்டி அருகில் இருக்கும் சிருவத்தூர்ங்கிற கிராமத்திலிருந்து சினிமாவிற்குப் புறப்பட்டு வந்தவர் ரஞ்சித்.  தனது சிறிய வயதில் பிழைப்புக்காகச் செங்கல் சூளையில் வேலைபார்த்திருக்கிறார். ஏன்.. கோழிக்குஞ்சு வியாபாரம் கூட செய்திருக்கிறார். அதில் சேர்த்தை காசை சென்னையில் உதவி இயக்குனராகனும்னு பலபேர்கிட்ட இழந்திருக்கிறார். கேட்கவே கஷ்டமா இருக்குல்ல… உதவி இயக்குனர்களிடம் காசு பிடுங்கித் தின்று உடம்பை வளர்க்கும் வீணாப்போன இயக்குனர்களும் இருக்கிறார்கள் என்பதே அருவருக்கத் தக்க விஷயம்தான்.




படங்களில் வேலை செய்தும் அவருடைய பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டதில் மிகவும் ஒடிந்து போயிருந்த ரஞ்சித் தனது  பூர்வீகத் தொழிலான கோழிக்குஞ்சு வியாபாரத்தையே  களமாக்கி, கூடவே ஒரு அழகான காதலைச் சேர்த்து கோழி கூவுது படத்தினை இயக்கி முடித்திருக்கிறார். இதன் கதையைக் கேட்ட தயாரிப்பாளர் ஏ.நாகராஜன் உடனே ஒத்துக் கொண்டு பட வேலைகளை ஆரம்பித்ததை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த ரஞ்சித்திடம் படத்தினைப் பற்றி சிறிது உரையாடினோம்.

http://www.mysixer.com/wp-content/uploads/2012/12/Kozhi-Koovuthu-Press-Meet-Stills-8.jpg


படத்தின் கரு என்ன ..? உங்க கோழி நாட்டுக்கோழியா..? அல்லது `ஈமு` கோழியா..?



புரிந்து கொண்டு உஷாரான ரஞ்சித்,`அட ஏங்க நீங்கவேற… பத்திரிக்கைகள்ல ஈமு கோழியோட விளம்பரம்தான் பார்த்திருக்கேனே தவிர, அதை நான் நேர்லகூட பார்த்தது கிடையாது. படம் ஆரம்பிச்சு பாதி ஷூட்டிங் முடிஞ்சா சமயத்துலதான், அந்தப்பிரச்சனையே ஆரம்பமாச்சு!. ஆனாலும், இதுல கோழிக்குஞ்சு வியாபாரத்துல நடக்கிற மோசடியைச் சொல்லியிருக்கேன். 




நானே இதைப் பதிவு பண்ணியிருக்கக்கூடாதுதான்!. இருந்தாலும், மக்களுக்கு சொல்லிடலாம்னு தோணுச்சு. ஏன்னா, நான் நூறு ரூபாய்க்கு பத்து கோழிக்குஞ்சுகளைக் கொடுக்கிறேன்னா, ரெண்டு, மூணு நாள்லேயே செத்துப்போயிரும்!. அந்தப்பாவத்தை நாம சம்பாதிக்கனுமா?ன்னு தோணுச்சு. அதனாலதான் இந்தக்கதையை கையிலெடுத்தேன்!. 



அதனால கோழிக்குஞ்சு வியாபாரிகளோட வாழ்வியல் கொஞ்சம் பாதிக்கப்படலாம்னு தோணுது. இருந்தாலும், எங்களுக்கு வேற வழி இல்லைங்கிறதையும் கொஞ்சம் அழுத்தமா பதிவு பண்ணியிருக்கேன்..



பாவத்தைப் போக்கக் காசு செலவுபண்ணிக் காசி ராமேஸ்வரம்னு போவாங்க… நீங்க என்னடான்னா  செஞ்ச பாவத்தைப் படம் பண்ணி காசாக்கிட்டீங்க…



சிரிக்கிறார்….


http://www.indiancinemagallery.com/Gallery2/d/882139-1/Kozhi+Koovuthu+stills+_76_.jpg



மாஸ் ஹீரோக்கள்  என்று முடிவுசெய்யாமல் வெற்றிப்படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருப்பவர்களை வைத்துப் படம் செய்ததன் நோக்கம்..?



வெற்றிப்படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருப்பவர்கள்தாம் ஈசியாக  உடன் வருபவர்களையும் கைகொடுத்து அழைத்துச் செல்வார்கள்… வெற்றியின் சிகரத்தில் இருப்பவர்கள் அப்படி செய்யமாட்டார்கள் என்பதல்ல… அவர்களுக்கும் நமக்குமான தூரம் அதிகமாக இருக்கும் அதுதான் பிரச்சினை…(ரொம்ப கவனமாத்தான் பேசுறாரு ) அத்துடன் இளம் நடிகர்கள் என்றால் அவங்களுக்குள்ள இருக்கிற திறமையை வெளியே கொண்டு வந்துடணும்ங்கிற சுதந்திரம் நமக்கு இருக்கும்…



 அப்பொழுது தான்  இயக்குனரா நாமளும் ஜெயிக்க முடியும். படத்தோட ஹீரோ அசோக், ரோகினி மேடம்கூட நடிச்ச ஒரு சீனுக்கு ஒரே டேக்ல மூணு பக்க வசனம் பேசுனாரு!. தவிர, வில்லனா நடிச்சிருக்கிற போஸ் வெங்கட், ரோகினி மேடம், புதுமுக ஹீரோயின் சிஜா ரோஸ். எல்லாருமே  அவங்களோட பங்களிப்பை, கொஞ்சம் அதிகமாவே கொடுத்திருக்காங்க!



சில்க்ஸ்மிதாவின் ‘கோழி கூவுது’ படத்திற்கும், இந்தப்படத்திற்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா?



படத்துக்கு முதல்ல ‘கோழி’ன்னுதான் தலைப்பு வச்சிருந்தோம்!. ஆனா, அது வேற ஒருத்தருடைய தலைப்புங்கிறதுனால பயன்படுத்த முடியலை.. அப்புறம் தான் ‘கோழி கூவுது!’ என்று பெயர் வைத்தோம், நேரா… கங்கை அமரன் சார்கிட்ட போய் நின்னோம்!. படத்தோட கதையைக் கேட்ட அவர் முழு மனசோட சம்மதிச்சு ‘சந்தோஷமா பயன்படுத்திக்கோ’ன்னு பாராட்டுனாரு.



 அவருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் தகும். அதேசமயம், அவருடைய ‘கோழி கூவுது’க்கும் இந்தப்படத்துக்கும் சம்மந்தம் கிடையாது! தமிழ் ரசிகர்கள் ரொம்ப நாளைக்கு முன்பு பார்த்து ரசித்த கிராமத்துக் காதலை அழகா சொல்லியிருக்கேன்!”



படத்துல அசோக் எந்தக் கோழியை அதிகம் விரட்டுகிறார்..?



ஆஹா… படம் டிசம்பர் 28 வெளியாகி இருக்கிறது… அப்புறம் நீங்களே தெரிந்து கொள்வீர்கள்…இப்போ கோழியை..சாரி ஆளை விடுங்க… என்று எஸ்கேப் ஆகிறார்.


 http://www.cinemahour.com/gallery/events1/moviestills/Kozhi%20Koovuthu%20Movie%20Latest%20Stills/76276704Kozhi-Koovuthu-Movie-Stills-62.jpg


 கங்கை அமரனின் கோழி கூவுது படம் பற்றி ஒரு சுவராஸ்யமான சம்பவம் 



‎1983-ஆம் ஆண்டு திருச்செந்தூர் இடைத்தேர்தலில் தி.மு.கவிடம் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஆளும் அ.தி.மு.க தோல்வியடைந்திருக்கிறது.



இந்த நிலையில் கங்கை அமரனை தனது அலுவலகத்திற்கு வரச்செல்லியுள்ளார் எம்.ஜி.ஆர். எதற்காக அழைத்துள்ளார் என்ற விபரம் தெரியாமல் அங்கு சென்றுள்ளார் கங்கை அமரன். மந்திரிகள் சூழ அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் " கோழிகூவுது படத்துல நம்ம ஊரு இப்ப ரொம்ப கெட்டுப்போச்சு"ன்னு ஏதோ பாட்டு எழுதுனியாமே" என்று கங்கை அமரனிடம் கேட்டிருக்கிறார். 



வெலவெலத்துப்போன கங்கை அமரன், "படத்தின் காட்சிக்குத்தான் அந்த மாதிரி எழுதினேன், மத்தபடி வேற எதயும் மனசுல வச்சிக்கிட்டு எழுதலண்ணே" என்று கூறி இருக்கிறார். 



இருந்தாலும் சமாதனமடையாத எம்.ஜி.ஆர் "ஏதோ தெரிஞ்ச பையன் அப்படிங்கிரதுனால விடுறேன், இனிமே இந்த மாதிரி எழுதாத" என்று எச்சரித்து அனுப்பியுள்ளார்.


எம்.ஜி.ஆரின் கடும் கோபத்திற்கு காரணம் எதிர்க்கட்சியினர், "நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப கெட்டுப்போச்சுண்ணே..ஒன்னரையனா காய்கறிய ஒன்னாரூவா ஆக்கிப்புட்டாங்க" என்று போஸ்டர் அடித்து பிரச்சாரம் செய்ததுதான்.



இதை தன்னுடைய பத்திரிகை, தொலைகாட்சி என்று அத்தனை பேட்டியிலும் கூறி இருக்கிறார் கங்கை அமரன் .
 http://www.cinemahour.com/gallery/events1/moviestills/Kozhi%20Koovuthu%20Movie%20Latest%20Stills/3670635Kozhi-Koovuthu-Movie-Stills-45.jpg
நன்றி - கையளவு உலகம் ,  மை சிக்சர்.காம்

மர்மயோகி- 4 கோடி மோசடி . கமல் மேல் கேஸ். விஸ்வரூபம் தடை வருமா?

http://mimg.sulekha.com/tamil/marmayogi/marmayogi_m.jpg 

CHENNAI: A film production company has approached the Madras high court seeking to stop the release of Kamal Haasan's big budget film 'Vishwaroopam', saying the actor had taken 4 crore to direct and act in a film titled 'Marmayogi' in 2008 but failed to keep his word.

Justice K Venkataraman, before whom the suit filed by Regent Saimira Entertainment Ltd came up for admission on Thursday, ordered notices to the actor and other partners of Rajkamal Films International, seeking replies by January 3, 2013. Vishwaroopam, a trilingual film made in Tamil, Hindi and Telugu, is set to be released through the Direct To Home platform on January 11, three days ahead of its scheduled screening in theatres. 
http://kollywood.myindianmovie.com/galleryimages/Heroin/Trisha-Krishnan-Images/trisha-in-marmayogi.jpg

Regent Saimira said it had entered into an agreement with Kamal in 2008 for 'Marmayogi' which was to feature, besides Kamal, Amitabh Bachchan, Hema Malini, Priyanka Chopra and Bipasha Basu. The film was to be produced in 18 months at 100 crore, the suit said. More than 6.5 crore was paid, and Kamal's salary for acting in and directing the film was 4 crore, it said. Shooting did not commence for months, though it was to start after Kamal's earlier film 'Dasavatharam', it said, adding that Kamal directed and acted in another film 'Unnaipol Oruvan' in the meanwhile in violation of the agreement.

He also failed to abide by the industry practice of returning the salary if the artist does not act in the film, it said. 'Unnaipol Oruvan' was released only after the actor deposited half the claim amount in the form of security, it said, adding the original civil suit is still pending in court. The production house said Kamal directed and acted in 'Vishwaroopam' violating the agreement conditions. 
 http://mimg.sulekha.com/tamil/marmayogi/stills/marmayogi-stills01.jpg

நன்றி -
TOI MOBILE

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 28.12.2012 ) 7 படங்கள் முன்னோட்ட பார்வை


இந்த ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமை 28ந் தேதி . அன்றைய தினம் தியேட்டர்கள் அனைத்தும் ஹவுஸ் புல்லாகிறது. அதாவது மக்கள் கூட்டத்தால் ஹவுஸ் புல் ஆகவில்லை. புதுப் படங்களால் ஹவுஸ் புல்லாகிறது. அன்றைக்கு பரங்கி மலை ஜோதி வரைக்கும் புதுப் படங்களால் நிறைந்து வழியப்போகிறது. ஆண்டுதோறும் அரசு திரைப்படங்களுக்கு வழங்கும் மானியத்தை பெறுவதற்காக இந்த ஆண்டு பட்டியலில் இடம் பெறுவதற்காகவும், அரசு விருது (கொடுத்தால்) பெற இந்த ஆண்டுக்குள் இருப்பதற்காகவும் இந்த தள்ளுமுள்ளு.


 வெளியாகிற படங்களில் விஷால், த்ரிஷா நடித்த சமர் மட்டுமே பெரிய பட்ஜெட் படம். மற்ற அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள்.


பத்தாயிரம் கோடி, கோழிகூவுது, புதுமுகங்கள் தேவை, பயபுள்ள, அகிலன், லொள்ளு தாதா பராக் பராக், பாரசீக மன்னன், கண்டுபுடிச்சிட்டேன், உண்மை, மாமன் மச்சான், குறும்புக்கார பசங்க, நண்பர்கள் கவனத்திற்கு போன்ற படங்கள் வெளிவருகிறது. இன்னும் சில படங்கள் வெளிவரலாம். அல்லது வெளிவருவதாக அறிவித்துள்ள படங்கள் பின் வாங்கலாம்.



அதுசரி... வாரத்துக்கு 3 படங்கள்தான் ரிலீசாகணுங்ற தயாரிப்பாளர் சங்க விதி என்னாச்சுங்கோ...!


சி.பி - கடைசி நிமிடத்தள்ளுபடி - சமர் , 10000 கோடி   -வர்லை 
http://twitchfilm.com/assets_c/2012/11/ChineseZodiacPoster2-thumb-630xauto-35236.jpg




1. CZ12 - உலகம் முழுவதிலும் பல கோடி ரசிகர்களைக் கொண்டவர் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான். இவரது அதிரடி ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த ஆக்ஷன் மூலம் ஆறிலிருந்து அறுபது வரை சகலமானவர்களையும் தன் பக்கம் இழுத்து வைத்துள்ளார்.



நூறு படங்கள் வரை ஆக்ஷன் நாயகனாக வலம் வந்த ஜாக்கிசானின் முடிவில் திடீர் மாற்றம். 101 வது படமாக உருவாகி உள்ள “CZ12″ என்ற படத்தோடு தனது ஆக்ஷன் அவதாரத்தை முடித்துக் கொள்ள இருப்பதாக அவரே அறிவித்து உள்ளார்.


இப்படத்தை ஜாக்கிசானே நடித்து இயக்கி இருக்கிறார். வழக்கமாக ஜாக்கியின் படங்களில் முக்கிய வேடங்களில் சீனர்கள் நடித்திருப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் ஜாக்கிசானைத் தவிர மற்றவர்கள் அனைவருமே ஹாலிவுட் படங்களில் நடிப்பவர்கள் என்பது இன்னொரு சிறப்பம்சம்.

நமது ஜோசியப்படி 12 ராசிகள் போல சீனர்களின் 12 ராசியை அடக்கி CZ12 என்று சொல்வார்கள். இது Armour of the God படத்தின் மூன்றாம் பாகம் ஆகும். இப்படம் 28ம் தேதி தமிழகம் முழுவதும் 250 திரையரங்குகளில் வெளியாகிறது.

ஈரோடு வி எஸ் பி , தேவி அபிராமி யில் ரிலீஸ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoccP5bZGAzw66n9nNEhqljxOkW_1t9ApUhzfqw_a3HRBlaL1qI6yyQYq8r9g9Ywv4xyOqzv7rki4dBo828EisUwViFHcaBkXGnu5MuSDL3TKXsAxTUZpfHMQbJBZFMnEqvLa8yCxFzCU/s1600/Kozhi-Koovuthu-2012-Tamil-Movie-Mp3-Songs-Free-Download.jpg



2. கோழிகூவுது - அசோக் ஹீரோவாக நடிக்க புதுமுகம் சிஜா ரோஸ் அவருக்கு ஜோடியாக நடிக்கும் படம் கோழிகூவுது. கே.ஐ.ரஞ்சித் என்பவர் இயக்குகிறார். இந்தப் படம் பிரபு, சில்க் ஸ்மிதா நடித்து கங்கை அமரன் இயக்கிய கோழிகூவுது படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதை மறுக்கிறார் ரஞ்சித்.



அவர் கூறியதாவது: கோழி வியாபாரிகளின் வாழ்க்கைதான் கதை களம். ஹீரோ அசோக், ஊர் ஊராக சென்று கோழி வியாபாரம் செய்வவர். ஹீரோயினுக்கும் கோழி விற்பார். ஆசையாக வளர்க்கும் அந்த கோழி இறந்து விடும். இதற்காக அசோக்கிடம் ஹீரோயின் சண்டைபோடுவார். இதுவே அவர்களுக்குள் காதலாக மாறும். ஊர் ஊராக கோழிவிற்பருக்கும் ஒரே ஊரில் வசித்து கல்லூரிக்கு செல்லும் பெண்ணுக்கும் காதல்.


http://www.tamilnow.com/movies/gallery/kozhi-koovuthu/kozhi-koovuthu-photos-8759.jpg



 இதனால் வரும் பிரச்சினைகளுடன் கோழி வியாபாரிகளின் வாழ்க்கையை சொல்கிறோம். இந்தக் கதைக்கு கோழிகூவுது என்ற தலைப்பு பொருத்தமாக  இருக்கும் என்று முடிவு செய்து வைத்தோம். கங்கை அமரனை நேரில் சந்தித்து அவரிடம் அனுமதி பெற்று வைத்திருக்கிறோம். மற்றபடி பழைய கோழிகூவுது படத்தின் ரீமேக் இல்லை. என்றார்.


ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் ரிலீஸ் 

http://kollytalk.com/posters/wp-content/uploads/2012/12/J-Suresh-Paraseega-Mannan-december-28-Release-Poster-219x300.jpg


3. பாரசீக மன்னன்.  - ரிச் ஆர்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.ஜே.பாலகிருஷ்ணன், கே.ஜே.திலீப் குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் பாரசீக மன்னன். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜே.சுரேஷ் இயக்குகிறார். இவரே இப்படத்தில் நாயகனாகவும் நடிக்கிறார்.

ஜே. சுரேஷ் ஏற்கனவே மாதவன், சினேகா நடித்த என்னவளே, மம்முட்டி நடித்த ஜூனியர் சீனியர் படங்களை இயக்கியவர்.

இதில் நாயகியாக ஸ்ருதி லட்சுமி மற்றும் ரமேஷ் கண்ணா, கே.கே. பாலாஜி, ஆர்த்தி, சி.எம்.பாலா, டி.வி. லட்சுமி, பாண்டு, ரவி பிரகாஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

படம் பற்றி ஜே.சுரேஷ் சொல்கிறார்,

இன்று உலகம் முழுவதும் அச்சப்பட வைக்கிற விஷயம் குழந்தை கடத்தல்கள். கடத்தப்படுகிற குழந்தைகள் பலவகைகளில் துன்புறுத்தப்படுகின்றனர். கடத்தல் கும்பலின் பின்னணி அவர்களின் ஆதாயம் என்ன என்பதை கருவாக வைத்து இப்படம் தயாராகிறது.

சென்னை, கோவை, கேரளா, மும்பை, பூனே, பாங்காங், துபாயில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. ஒளிப்பதிவு: நூதலபட்டி பிரகாஷ், இசை ஆலோசனை: யுவன் சங்கர் ராஜா, எடிட்டிங்: வி.ஜெய் சங்கர், இசை: ஜே. சுரேஷ், பாடல்: பா. விஜய், பேரரசு, உதய்.


ஈரோடு அண்ணா வில் ரிலீஸ் 


 http://kollytalk.com/posters/wp-content/uploads/2012/12/Akilan-Releasing-Tomorrow-Poster.jpg

4.அகிலன்  மிழ் சினிமா ஊறவைத்து அடியென அடித்துத் துவைத்துவிட்ட, இன்னும் துவைத்துக் காய போடவிருக்கும் காவல்துறை சம்பந்தப்பட்ட கதைதான். ஆனால் சொன்ன விதத்தில் ரொம்பவே வித்தியாசம் காட்டி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் அகிலன் படத்தின் இயக்குநர் ஹென்றி ஜோசப்.

  மதுரை ஏரியாவில் அடிக்கடி பெண்கள் காணாமல் போய்விடுகின்றனர். அவர்களைக் கடத்திக் கொண்டு போய் மிரட்டி பணம் சம்பாதிக்கிறது ஒரு கும்பல். அவர்களை பிடிக்க பெரும் முயற்சி எடுக்கிறது காவல்துறை. காவல்துறைக்கு அல்வா கொடுக்கும் அந்த கும்பலை எப்படி களையெடுக்கிறார்கள் என்பது க்ளைமேக்ஸ்.



பெண்கள் அடிக்கடி காணாமல் போகும் இந்த காலகட்டத்திற்கு ஏற்ற கதைதான். படத்தின் முதல் பாதி ஜெட் வேகத்தில் நகருகிறது. இடைவேளைக்கு பிறகு கல்யாண மண்டபத்திலேயே நகரும் காட்சிகள் தொடர்வதால் கொஞ்சம் சலிப்பு ஏற்பட்டாலும் அந்த வேளையில் காமெடியையும் புகுத்தி சலிப்பில்லாமல் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.


டாக்டர் சரவணன் என்பவர்தான் ஹீரோவாக நடித்து படத்தையும் தயாரித்திருக்கிறார். படத்தின் தயாரிப்பாளர்களே ஹீரோக்களாக நடிக்கும் போது, படம் முழுக்க அவர்களை காட்டியும் அவர்களின் அருமை பெருமையைக் காட்டி, அதோடு விட்டாலும் பரவாயில்லை சண்டை காட்சிகளில் ஒரே அடியில் நூறு பேரு பறக்கிற மாதிரி எல்லாம் காட்சிகளை வைத்து படத்தைப் பார்க்கிற ரசிகர்களுக்கு ரெண்டு நாளைக்கு வேறு வேலை பார்க்க முடியாதபடி தலைவலியை வரவழைத்துவிடுவார்கள்.


ஆனால் அகிலன் படத்தில் அப்படி எந்த காட்சியுமே இல்லை. சாதாரண போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக வருகிறார் அகிலன். பஞ்ச் வசனங்கள் ஏதும் இவர் பேசவேயில்லை. நண்பர் மதுரை முத்துவிடம் ‘எல்லாருக்குமே ஒரு வாய்ப்பு வரும் அதுவரைக்கும் காத்திருக்கணும்…’ என்று வசனம் பேசுகிற இடத்திலும் சரி, மேலதிகாரி தனது மனைவியை காரில் அழைத்துக் கொண்டு வீட்டில் கொண்டு விடுமாறு சொல்லுகிற காட்சியில் சலிப்பில்லாமல் அந்த வேலையை செய்வது, அவர் வீட்டிற்கு வந்த போது அவரது குழந்தையிடம் ‘நாங்கல்லாம் ஏழைங்கம்மா…’ என்று பேசுகிற இடங்கள், ‘போலீசுக்கு தகவல் கொடுத்தா யாரு என்ன ஏதுன்னு விசாரிக்க மாட்டியா…?’ என்று போலீஸ் அதிகாரி எகிறும் போது அந்த இடத்தில் தன் சக போலீஸ்காரரிடம் பதில் சொல்கிற போதும் ஹீரோ சரவணன் நம்மை ரொம்பவே ஈஸியாக இம்ப்ரஸ் செய்துவிடுகிறார்.


இந்த மூன்று காட்சிகளுமே போதும் ஹீரோவை அல்லது அந்த கேரக்டரை நமக்கு ரொம்பவே பிடித்துப் போவதற்கு. பெரும்பாலான காட்சிகளில் வசனம் மட்டுமே பேசி சமாளித்துவிடும் சரவணன் இன்னும் கொஞ்சம் நடிப்பை மேம்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


வெறுமனே வந்தோமா நாலு பாட்டுக்கு ஆடினோமா என்று இருக்கிற அறிமுக நாயகிகளுக்கு மத்தியில் இவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஹீரோயினுக்கு கதையுடன் இணைந்து பயணிக்கிற வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.


போலீஸ் அதிகாரியாக வருகிறார் ராஜ் கபூர். கொஞ்சம் அமைதியான அதிகாரியாக கேரக்டராக தெரியவேண்டும் என்பதால் மீசையை எடுத்துவிட்டார் போலிருக்கிறது.


கஞ்சாகருப்பு, போண்டா மணி, கிங்காங், மனோபாலா, சிங்கம்புலி கூட்டணி காமெடிக் காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார்கள். அதுவும் கல்யாண மண்டபத்தில் மாப்பிள்ளை, பொண்ணு, அந்த காது கேளாதவர், சிங்கம்புலி காம்பினேசன் செம காமெடி ரகளை.


சின்னத் திரைகளில் மட்டுமே காமெடி கலாட்டா செய்து கொண்டிருக்கும் மதுரை முத்து இந்தப் படத்தில் ஹீரோவுக்கு நண்பனாக வருகிறார். இவரது காமெடியும் காமெடி டயலாக்கும் ரொம்பவே ரசிக்க வைக்கிறது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் மதுரை முத்து பெரிய திரையில் பிரகாசிக்கலாம்.


கணேஷ் ராகவேந்திரா இசையில் பாடல்கள் பரவாயில்லை சொல்ல வைத்தாலும் பின்னணி இசையில் பல இடங்களில் பளிச்சிட வைத்திருக்கிறார்.


படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஹென்றி ஜோசப். முதல் பாதியின் படத்தை விறுவிறுப்பாக பயணிக்க வைத்தவர் இரண்டாவது பாதியில் கொஞ்சம் தடுமாறி சமாளித்திருக்கிறார். 


ஹீரோதானே படத்தை தயாரிக்கிறார் அதனால் அவரது புகழ் பாடுகிற மாதிரியான காட்சிகளை வைத்து கொடுமைப்படுத்தாமல் கதைக்கு என்ன தேவையோ அந்த காட்சிகளை மட்டும் வைத்திருக்கிறார். போலீஸ் கதையை வித்தியாசமாக சொன்னதற்காக ஹென்றி ஜோசப்புக்கு ஒரு சபாஷ் போடலாம்.


ஈரோட்டில் ரிலீஸ் இல்லை 

http://www.vanninet.com/mp3photo2012/Puthumugangal%20Thevai.jpg


5. புதுமுகங்கள் தேவை - வின்னர் புல்ஸ் பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம் புதுமுகங்கள் தேவை. இந்தப்படத்தில் சிவாஜிதேவ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே சிங்கக்குட்டி என்ற படத்தில் நடித்தார். இன்னொரு நாயகனாக ராஜேஷ் யாதவ் அறிமுகமாகிறார். இவர் மழை, லீ, பொக்கிஷம் ராமன்தேடிய சீதை உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் இவர். கதாநாயகியாக பானு மற்றும் விஷ்ணுப்ரியா இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ராஜ்கபூர், காதல் தண்டபாணி, எம்.எஸ்.பாஸ்கர், கிரேன் மனோகர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மஜா மற்றும் மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த மனீஷ்பாபு இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதரிக்கிறார்.

கதை, திரைக்கதை : எஸ்.ஏ.அபிமான், வசனம் : கவிதாபாரதி, ஒளிப்பதிவு : ராஜேஷ்யாதவ், ஆர்.சரவணன், இசை : ட்வின்ஸ் டியூன்ஸ், எடிட்டிங் : சுரேஷ் அர்ஸ். நாகர்கோவில், குற்றாலம், தென்காசி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்தது

ஈரோட்டில் ரிலீஸ் இல்லை  
http://onlinemoviesportsandtv.com/wp-content/uploads/2012/09/Orange1.jpg


6. ராம்சரண் -தெலுங்கில் வெளியான `ஆரஞ்ச்` படம் ராம்சரண் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இதில் சிரஞ்சீவி மகன் ராம்சரண் நாயகனாகவும் ஜெனிலியா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

பிரபு, பிரகாஷ்ராஜ், பூஜா ஆகியோரும் முக்கிய கேரக்டரில் வருகிறார்கள். இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி பொம்ம ரில்லு பாஸ்கர் இயக்கியுள்ளார். சிவம் அசோசியேட்ஸ் சார்பில் எஸ்.சுந்தரவல்லி தயாரித்துள்ளார்.

முழுக்க ஆஸ்திரேலியாவில் படமாகியுள்ளது. காதல் என்பது ரொம்ப நாள் நிலைக்கிற விஷயமில்லை. சீக்கிரமே துவங்கி சீக்கிரமே கருகிப் போகும் என்கிற நினைப்பில் நாயகன் இருக்கிறான். காதல் ஆண்டாண்டு காலமாக நிலைத்து நிற்கிற அருமை யான விஷயம் என்று நாயகி நினைக்கிறாள். இருவேறு எண்ணம் கொண்ட இவர்களின் காதல் கதையே இப்படம்.

வசனம்: ஏ.ஆர்.கே.ராஜராஜன், எடிட்டிங்: எல்.ராமாராவ், ஒளிப்பதிவு: பி.ராஜசேகர், இசை: ஹாரிஸ்ஜெயராஜ், பாடல்: அறிவுமதி, விவேகா, யுகபாரதி, அருண் பாரதி, ஜெயமுரசு.


ஈரோடு ஸ்டார், சங்கீதா இரு தியேட்டர்களில் ரிலீஸ் 

Kandupuduchittaen Movie Stills 26
7.  கண்டு பிடிச்சுட்டேன் -படத்தைப்பற்றி எந்த நியூசும் கூகுள்ல கிடைக்கலை. என்ன அப்டேட்டிங்க்கோ. விளங்கிடும் படம் . Kandupuduchittaen Movie Cast Sanni, Sana, VijayYogan, Divyashree, Rajarajan, Thirumurugan, Junitha, The film was directed by R. GopalRaj, and Music by Jeevaraaja.ஈரோட்டில் ரிலீஸ் இல்லை


நன்றி - மை சினி நியூஸ் ,தமிழ் டிஜிட்டல் சினிமா டாட்காம்




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1XgH2SU_BMEvvi0uFQBmDlRipNvTNHJr_pQLz3y_0my6k52TuuIMOywJYyvyE5PfJO74aoQG307aH8B7uy4epVuCDsFm3QqqGbaKhtVE-C_1nsmFvrcY_OmnnLhQOxoxKCY4ZjKN4BkC6/s1600/Kandupuduchittaen-actress-Hot-Stills-06.jpg




Thursday, December 27, 2012

டெல்லி கூட்டத்தில் ஜெ அவமதிக்கப்பட்டாரா? மக்கள் கருத்து




தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது: டெல்லி கூட்டத்தில் ஜெ. குற்றச்சாட்டு 

புதுடெல்லி: தமிழகத்தின் சிறிய கோரிக்கையை கூட மத்திய அரசு ஏற்கவில்லை என்றும், தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிப்பதாகவும் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமயில் நடைபெற்ற தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில், அனைத்து முதலமைச்சர்களுக்கும் 10 நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி வழங்கப்பட்டது.

இதனால் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 10 நிமிடம் மட்டுமே வழங்கபட்டது. இதனால் அவர் கூட்டத்திலிருந்து வெளி நடப்பு செய்தார்.

இக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசுவதற்கு தயாரிக்கப்பட்ட உரை செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் சுருக்கம் வருமாறு: 


கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் ஏராளமான முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது 12 ஆவது ஐந்தாண்டு திட்டம் குறித்த மதிப்புமிக்க நல்ல பயனுள்ள திட்டங்களை நான் எடுத்துரைத்தேன். அதன் அடிப்டையில் இத்திட்டம் 14 மாதங்களுக்கு பிறகு இறுதி வடிவம் பெற்றுள்ளது.

கடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் தெரிவித்த குறைந்த பட்ச கருத்துக்களாவது இதில் இடம் பெற்றிருக்கும் என நான் நம்புகிறேன். திருத்தப்படாத திட்ட நகலை படித்த போது, அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் மீது ஜனநாயக விரோத அணுகுமுறைகள் இருப்பது தெரிய வருகிறது.

வறுமையை குறைக்க வேண்டும் என்ற கருத்தில் மத்திய அரசு மாறுபட்டு இருப்பதாக கருதுகிறோம். ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்தின் போதும் வறுமை மற்றும் சமத்துவமற்ற நிலை அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் விலைவாசி உயர்வினால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை பல தடவை மாநில தேவைகள் குறித்து நினைவூட்டினாலும் அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாட்டை மட்டும் குறிப்பாக மத்திய அரசு கடுமையாக வஞ்சிக்கிறது. எந்த ஒரு சட்ட பூர்வமான கோரிக்கையும் தொடக்கத்திலேயே மறுக்கப்பட்டு ஒதுக்கப்படுகிறது. அது குறித்து மறு படியும் கோரிக்கை விடுத்தாலும் மத்திய அரசு கண்டு கொள்வதில்லை.

முதலீடுகளை ஊக்கு விக்க தமிழ்நாட்டில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. விமான நிலையங்கள், மெட்ரோ-ரயில் மற்றும் சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு துறை நிலங்கள் வழங்குவதில் தாமதப்படுத்துகிறது.அதனால் திட்ட மதிப்பீடும் அதிகரிக்கிறது. காவிரி நதி நீர் பிரச்னையில் இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு தமிழ்நாட்டுக்குரிய உரிமையை பெற்று தருவதில் முழு திறமையற்று மத்திய அரசு விளங்குகிறது.

கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். இதன் மூலம் நாட்டு மக்களை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது. தமிழகத்தின் மிக சிறிய கோரிக்கையான சென்னை நகருக்கு கேபிள் டிஜிட்டல் மயமாகும் திட்டத்துக்கு கூட உரிமம் வழங்குவதற்கு மறுக்கிறது. அது தொடர்ந்து பரிசீலனையில் உள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் டி.வி. ஒளிபரப்பை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. பிரதமருக்கும், சம்பந்தப்பட்ட துறை மத்திய மந்திரிக்கும் இது குறித்து பல முறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை செய்து வருகிறது. இதற்கு டிஜிட்டல் உரிமை வழங்குவதில் தாமதம் செய்வதன் மூலம் மத்தியில் ஆளும் கூட்டணியில் ஈடுபட்டுள்ள ஒரு கட்சியின் குடும்ப டி.வி. நெட்வொர்க்கில் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் சேர வழிவகுக்கும். கடந்த முறை நடந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் வளர்ச்சி விகிதம் 2 இலக்கமாக இருக்க வேண்டும் என்ற எனது கருத்தை வலியுறுத் தியிருந்தேன்.

ஆனால் வரைவு திட்டத்தை படித்த போது நான் ஏமாற்றம் அடைந்தேன். அதில் 9 சதவீதமாக வளர்ச்சி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. எனது தலைமையிலான தமிழ்நாட்டில் வளர்ச்சி விகிதம் 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் 2 இலக்கு வளர்ச்சி விகிதமாக இருக்கும்.

நான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய அரசின் செயல்பாடு இன்மையால் வளர்ச்சி விகிதம் குறைந்து இருந்தது.தற்போது தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் தேசிய வளர்ச்சி விகிதத்தை விட அதிகமாகும்.

பயிருக்கு நீர் இன்றியமையாதது. மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீர், முல்லைப் பெரியாறு, பெண்ணையாறு, அட்டப்பாடி அணை உள்ளிட்ட நீர் பகீர்மானம் பற்றி நாங்கள் மீண்டும் மீண்டும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

ஆனால் இதுவரை எந்த நீதியும் கிடைக்கவில்லை. மத்திய அரசின் ஆதரவும், தமிழ்நாட்டுக்கு கிடைக்க வில்லை. 12 ஆவது ஐந்தாண்டு திட்டத்திலும், இந்த நதிநீர் பங்கீடு தொடர்பாக எந்த முக்கியத்துவமும் தரப்பட வில்லை என்பதுதான் ஆச்சரியமூட்டும் விஷயம். தண்ணீர் விலை மதிப்பற்றது என்றாலும் அதை எப்போதும் வணிக ரீதியாக பார்க்கக்கூடாது.

தமிழக மீனவர்கள் இலங்கை கப்பல் படையினரால்  தாக்கப்பட்டு பலியாகும் நிலை நீடித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தி உள்ளோம். இந்த விஷயத்தில் மத்திய அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்" என்றார்.

பேச நேரம் ஒதுக்காததால் தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்திலிருந்து ஜெ. வெளிநடப்பு ! 

Posted Date : 11:39 (27/12/2012)Last updated : 12:38 (27/12/2012)
புதுடெல்லி: பிரதமர் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்று வரும் தேசிய வளர்ச்சிக் கவுன்சில்  கூட்டத்தில் பேச தமக்கு போதிய நேரம் ஒதுக்காததை கண்டித்து முதலமைச்சர் ஜெயலலிதா கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.
கூட்டத்தில் முதல்வர்கள் தங்கள் மாநில பிரச்னைகள் குறித்து பேச வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால், கூட்டத்தில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார்.

பின்னர் வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 நிமிடங்கள் மட்டுமே தம்மை பேச அனுமதித்ததாகவும், அதன் பின்னர் மணி அடித்து  பேச்சை நிறுத்துமாறு கூறி தம்மை அவமதித்துவிட்டதாகவும்  குற்றம் சாட்டினார் . 


இது தமக்கு மட்டுமல்ல;தமிழ்நாட்டிற்கும்,தமிழக மக்களுக்கும் ஏற்பட்ட அவமதிப்பு என்றும் அவர் கூறினார்.

தமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தமிழ்நாட்டின் தேவைகள் குறித்து தம்மால் முழுமையாக பேச முடியவில்லை என்றும், தாம் பேச நினைத்ததில் மூன்றில் ஒருபங்கு மட்டுமே பேசியதாகவும் ஜெயலலிதா தெரிவித்தார். 

மாநிலத்தின் பிரச்னையை எடுத்துரைக்க போதிய கால அவகாசம் வழங்க முடியாது என்றால்,   மாநில முதல்வர்களை ஏன் அழைக்க வேண்டும்  என்றும் அவர் மத்திய அரசுக்கு அவர் காட்டமாக கேள்வி எழுப்பினார்




 மக்கள் கருத்து




ஒரு கூட்டம் இங்கே வந்து ஜெயா ஒரு அகம்பாவம் பிடித்தவர், கோவத்தின் வெளிப்பாடு தான் இது என்று கூவ ஆரம்பிக்கும். அவர்களுக்கும் நமது தானைய தலைவர் கருணாவுக்கும் ஒரு கேள்வி
கடந்த 13 ஆண்டுகளாக மத்திய அரசில் திமுக அங்கம், மத்திய அரசை தாங்கிப் பிடிப்பதே திமுகதான். இதனை தவிர மத்திய அரசில் முக்கிய அமைச்சர்கள் தமிழக காங்கிரஸ் கட்சியினர். இவர்களால் தமிழகத்துக்கு கிடைத்த பயன் என்ன?
1. முல்லை பெரியாறு சாதகமாக தீர்ப்பு வந்தும் இன்னும் அதன் பலன் கேரளாவுக்குத் தான்
2. கேரளாவில் மீனவன் சுடப் பட்டால் உடனே தண்டனை, இங்கே பல முறை நடந்தும் கடிதத்துக்கு பதில் கூட எழுதாத மத்திய அரசு.
3. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்து 5 வருடங்கள் ஆகின்றன. இன்னும் அது அரசு இதழில் வரவில்லை. கருணா இதற்காக செய்த நடவடிக்கை என்ன? திமுக ஆதரவு இல்லை என்றால் மத்திய அரசே இல்லை என்கிற நிலையில் இருந்து இன்று குடியரசு தலைவரே வீட்டுக்கு வந்து சந்திக்கும் அளவுக்கு மத்திய அரசை தாங்கி பிடித்ததன் பலன் தான் என்ன?
4. காவிரி நீருக்காக மத்திய அரசு கைவிட்ட பின்னர், நீதிமன்றத்தை நாடி வெற்றித் தீர்ப்பும் வாங்கி அதனை செயல் படுத்த கர்நாடக மறுத்த நிலையில் நாடு நிலையாக செயல் படவேண்டிய மத்திய அரசு வேடிக்கை ஒரு துரும்பு கூட அசைக்காதது ஏன்? மத்திய அரசை திமுக இதற்காக கண்டிக்காதது ஏன்?
5. மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வழங்க கட்டமைப்பு இல்லை (இனிமேலும் கட்டமைப்பு அமைக்கப் படாது) என்று சொல்லும் மத்திய அரசு தமிழகத்தில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தை முழுவதுமாக தமிழகத்துக்கே தர மறுப்பது என்? மின்சாரம் வெளியே செல்ல மட்டும் கட்டமைப்பு உள்ளதா? உள்ளே வர மட்டும் மின்சாரம் மறுக்குமா?
6. எத்தனை முறை தமிழக பிரச்சனைகளுக்காக திமுக தலைவர் சோனியாவை சந்தித்திருக்கிறார்? தினம் ஒரு அறிக்கை விட்டு அதிமுக அரசை குறை சொல்வதை தவிர வேறு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் மக்கள் பிரட்சைகளுக்காக?

மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு கூட செவி மடுக்காத மத்திய அரசு தமிழகத்துக்கு செய்யும் துரோகம் தான் மிக அதிகம். இதில் உச்ச கட்டம் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட உச்ச நீதிமன்றமே சொல்லியும், உச்ச நீதிமன்றத்தில் இந்த மாதத்தில் வெளியிடப் படும் என்று மத்திய அரசே வாக்குறுதி கொடுத்தும் இன்னும் நிறைவேற்ற தயங்குவது. இப்போது கர்நாடக இதனை வெளியிட மறுப்பு தெருவிப்பதும், மத்திய அரசே நடுவர் மன்ற தீர்ப்பை மாற்ற செய்யும் சதி.

காங்கிரஸ் கட்சியின் எதிரியான பாஜக ஆளும் கர்நாடக மத்திய அரசால் பெற்ற நம்னைகளை விட திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு தமிழகத்துக்கு செய்யும் துரோகம் தான் அதிகம். இதில் முக்கிய பங்கு கருணாவுக்கு தான். மறந்தும் மத்திய அரசு தமிழகத்துக்கு எதுவும் செய்துவிடக் கூடாது என்பது இட்ட கட்டளை. நாளொன்றும் அதிமுக அரசை குறை சொல்லியே அறிக்கை விடும் கருணா மத்திய அரசின் துரோகம் மட்டும் கண்ணுக்கு தெரியாது. சோனியாவின் பிறந்த நாளுக்கு முதல் ஆளாக பிறந்த நாள் வாழ்த்து சொல்ல மட்டுமே தெரியும். இதன் மூலம் தமிழகத்துக்கு நல்ல நன்மை கிடைக்கும்.

வழக்கம் போல உள்ளூர் பிரச்சனைக்கு நாடாளுமன்ற தேர்தலில் பதில் சொல்லும் தமிழக மக்கள் பிரச்சனைகளின் மூலத்தை அறியாமல் மீண்டும் இந்த கூட்டத்தை தான் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்!!



2. இதுல அவமதிப்பு என்ன இருக்கு. ஒருவருக்கு எவ்வளவு நேரம் பேச அனுமதி என்பது ஏற்கன்வே முடிவு செய்த ஒன்றாகத்தானே இருக்கும்.
மற்ற முதல்வர்களுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கினார்கள். அதே 10 நிமிடம் தானே. பின்ன இதில் அவமதிப்பு எங்கிருந்து வந்ததோ?

ஏற்கனவே நான்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து அது தள்ளுபடி செய்யப்பட்டவுடன், அதற்கு மத்திய அரசும், மு,க.வும் தான் காரணம் என்று பொய் பிரச்சாரம் செய்தவராயிற்றே, இவர் சொல்வதை நம்பலாமா?



3. அது ஒண்ணும் தமிழக சட்டசபையல்ல. நீங்கள் வந்ததும் அனைவரும் எழுந்து நின்று கை கூப்பி 45 சாய் கோணத்தில் நிற்க. மாநிலத்தின் தேவையறிந்து பேசி இருக்க வேண்டும் 10 நிமிடத்தில். மற்ற மாநில முதல்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம்தானே உங்களுக்கும். அல்லது அனைவரையும் 1 மணி நேரம் பேசவிட்டு உங்களுக்கு மட்டும் 10 நிமிடம் கொடுத்து மணியடித்தார்களா?. நமது அரசியல் சட்டத்தின்படி மத்திய அரசை அண்டித்தான் பிழைக்க வேண்டும்.கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு "ஆடி கறக்க வேண்டிய மாட்டை ஆடி கறக்க வேண்டும். பாடி கறக்க வேண்டிய மாட்டை பாடி கறக்க வேண்டும்". நமக்கு தேவை பால். அதை பெற எதை செய்தால் என்ன? முறுக்கிட்டு திரிந்தால் 16 மணிநேர மின்வெட்டு 24 மணிநேரமாகிவிடும்.




4.
அழுதால் தான் பால்! உதாசீனம் செய்தால் பாழ் தான்!

தேசிய வளர்சிக்குழு கூட்டட்தில் நம் முதல்வர் அம்மா அவர்கள் கோவிச்சுகிட்டு வெளியேறினார். அங்க கிட்ட தட்ட யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்ப்பட்ட முதல்வர்கள் இருக்கும் நிலையில் பத்து நிமிடம் மட்டுமே பேச அனுமதி அளிக்கப்படும். இது நடைமுறை. பொதுவாக இது போன்ற கூட்டங்களுக்கு கலைஞர் போகும் போது தமிழக தேவைகளை ஒரு மணி நேர பேச்சாக தலைமைசெயலரை விட்டு ஒரு ட்ராப்ட் தயார் செய்து கொண்டு போவதும், பத்து நிமிடத்தில் அழகாய் தலைப்பு செய்திகளாக சொல்லி "இதன் மீதி விபரங்கள் இந்த பெட்டிஷனில் இருக்கு" என கூட்டத்தில் சமர்ப்பிப்பதும், அப்படி சமர்பிக்கும் போது அது "ரெக்கார்டட் டாகுமெண்டாக" ஆவதும் இயல்பு. இது ஒரு அப்பட்டமான புத்திசாலித்தனம்.

இந்த விபரங்கள் கூட தெரியாத அம்மையார் அவர்கள் முதல்வர் பதவியில் இருந்து கொண்டு தமிழக தேவைகளை சொல்லாமல் அல்லது ரெக்கார்ட் செய்யாமல் வந்தமை குறித்து நாம் வெட்கப்பட வேண்டும்! "அம்மா கோவக்காரங்க" என சொன்னா நமக்கு பெருமை இல்லை. அங்க வந்த பல முதல்வர்களும் "ஹய்யே, சரியான லூசா இருக்கே இந்தம்மா"ன்னு சக முதல்வர்களிடம் முனுமுனுத்து இருப்பர். இது ஒட்டுமொத்த தமிழர்களின் அவமானம்! இதைக்கூட "அம்மாவின் அதிரடி" என தினமலத்தில் நாளை போடுவானுங்க! "ஆமாம் ஆமாம்"னு இணைய போராளிகள் குதிப்பாங்க! பேசாம 21.12.2012ல உலகம் அழிஞ்சு தொலைச்சி இருக்கலாம்!



5. இது என்ன கூட்டம் என்று கூட தெரியாமல் பலர் கருத்து சொல்கிறார்கள். 10 நிமிட நேரம் என்கிற நடைமுறை இன்றைய கூட்டத்தில் மட்டுமே அறிமுகப் படுத்தப் பட்டது. இதற்க்கு முன்னர் இதே கூட்டத்துக்கு முதல்வர்களுக்கு ஒதுக்கப் பட்ட நேரம் 30 நிமிடங்கள். 5 ஆண்டுகளுக்காக நிதி ஒதுக்கீடு மற்றும் திட்ட கூட்டத்துக்கு 30 நிமிடம் கூட பேசாம என்ன திட்டம் போடப் போறாங்க? ஓர் ஆண்டுக்கு போடப் படும் பட்ஜெட் கூட்டத் தொடர் நாள் கணக்கில் நடைபெறும் பொது 5 ஆண்டு திட்டடக் கூட்டம் 10 நிமிடம் போதும்? 5 வருட செயல் திட்டம் பற்றி ஒரு மாநில முதல்வர் சொல்ல 10 நிமிடம் போதும் என்றால் இந்தக் கூட்டமே தேவை இல்லை. வழக்கம் போல இவர்கள் திட்டத்தை அறிக்கையாகவே வெளியிடலாம். தமிழகத்துக்கும் ஒன்னும் கிடைக்கப் போவது இல்லை.

வழக்கம் போல கருணாவின் துரோகத்துக்கு பதில் சொல்லாமல் ஜெயாவையே திட்டுவோம். அப்புறம் என்ன காங்கிரஸ் அரசு மீண்டும் அமைந்து தமிழன் நீருக்கு கர்நாடகாவையும் உயிருக்கும் சிங்களனையும் எதிர்பாத்து இருக்கட்டும். உள்ளூரில் அறிக்கை மட்டுமே விட்டுக் கொண்டு இணக்கமான மத்திய அரசில் வளம் கொழிக்கும் துறையை மிரட்டி வாங்குவோம்.
 
ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில்! 
 
 இந்நிலையில் ஜெயலலிதாவின் இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.இது  தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர்  ராஜீவ்சுக்லா,"தேசிய வளர்ச்சி கூட்டத்தில் பேசுவதற்கு ஒவ்வொரு மாநில  முதலமைச்சருக்கும் தலா 10 நிமிடம் அவகாசம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பேச  வேண்டியவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததால் இப்படி நேர அளவு நிர்ணயம்  செய்து ஏற்பாடு செய்யப்பட்டது.

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கும்,
 
காங்கிரஸ் அல்லாத மாநில  முதல்வர்களுக்கும் ஒரே மாதிரிதான் நேர அவகாசம் கொடுக்கப்பட்டது. காங்கிரஸ் மாநில  முதல்வர்கள் 10 நிமிடம் கடந்து பேசிய போதும் மணி ஒலிக்கப்பட்டது.எனவே இதில்  எப்படி அவமானம் செய்து விட்டதாக சொல்ல முடியும்?

தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தை பயன்படுத்தி மாநில முதல்வர்கள், தங்கள்  மாநிலத்துக்கு வேண்டியதை பெற்று கொள்ளும் வாய்ப்பை பெறுகிறார்கள்.இத்தகைய  கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தது சரியானது அல்ல.  இதுவரை எந்த முதல்வரும் இப்படி குற்றம் சாட்டியதில்லை" என்று கூறினார்.

டெல்லியிலே ஜனநாயகம் இல்லை என்கிறார்கள்...தமிழகத்தில் இருக்கிறதா?: கருணாநிதி

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டத்திற்கு அனுமதி  மறுக்கப்பட்டு,மேடை மற்றும் பந்தல் அகற்றப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள   கருணாநிதி,தமிழகத்தில் ஜனநாயகம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் கருணாநிதி  கூறியதாவது:

திமுகப் பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளும் - நாளை நடைபெறவுள்ள  தூத்துக்குடி செயல் வீரர்கள் கூட்டத்திற்கு ஏற்கனவே அனுமதி கொடுத்து விட்டு தற்போது  அனுமதியை மறுத்து அமைக்கப்பட்ட மேடை, பந்தல்களைப் பிரிப்பதைப் பற்றி தங்கள்  கருத்து என்ன?
 
 
 
 
 
ஜெயலலிதா கட்சியினர் டெல்லியிலே ஜனநாயகம் இல்லை என்கிறார்கள்.  ஆனால் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் கூட்டத்திற்கு அனுமதி கொடுத்து விட்டு,  அதற்காக அதை நம்பி போடப்பட்ட பந்தலை எல்லாம் அரசுக் காவலர்கள் பிரிக்கிறார்கள்.  இந்த ஜனநாயகவாதிகள் தான் மத்திய அரசைப் பற்றி குறை கூறுகிறார்கள்,  கண்டிக்கிறார்கள், வேடிக்கையாக இருக்கிறது.

தமிழக அரசின் பல தேவைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று  தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் ஜெயலலிதா பேசியிருக்கிறாரே? குறிப்பாக கேபிள்   டி.வி.க்கு உரிமம் தரவில்லை என்றெல்லாம் சொல்லியிருக்கிறாரே?
 
  அதிலே ஏதாவது விவகாரங்கள் இருக்கலாம். உண்மை என்ன என்பது  பற்றி முழு விவரம் தெரியாமல் பதில் சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.



ஜெ. அவமதிக்கப்பட்டிருந்தால் கண்டிக்கத்தக்கது: கருணாநிதி
Posted Date : 14:19 (27/12/2012)Last updated : 14:19 (27/12/2012)
சென்னை: தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா  அவமதிக்கப்பட்டிருந்தால் கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் கருணாநிதி  கூறியுள்ளார். 

டெல்லியில் 57 ஆவது தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் இன்று காலை பிரதமர்  மன்மோகன் சிங் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் பேச போதிய கால அவகாசம் வழங்கப்படாததை கண்டித்து தமிழக  முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார்.10 நிமிடங்களுக்கு மட்டுமே தம்மை பேச  அனுமதித்து,அதன் பின்னர் பேச்சை நிறுத்துவதற்கான மணியை ஒலிக்கச் செய்து தம்மை  மத்திய அரசு அவமதித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். 



இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர்  கருணாநிதியிடம் இது குறித்து கேட்டபோது,தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில்  ஜெயலலிதா கூறுவதுபோன்று அவமதிக்கப்பட்டிருந்தால், அது கண்டிக்கத்தக்கது என்றார்.

பொதுவாக தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் மாநில முதல்வர்களுக்கு 10  நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் பேச நேரம் ஒதுக்கப்படும் என்று கருணாநிதி மேலும்  கூறினார்.


நன்றி - விகடன்
+

எதிர்நீச்சல் - சிவ கார்த்திகேயன் கலக்கல் பேட்டி , பாடல்கள் , ட்ரெய்லர் வீடியோ

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_121030112136000000.jpg 
"நயன்தாராவைப் பிடிக்கும்!"

சிலிர்க்கிறார் 'சி'னா 'கா'னா!
ஆ. அலெக்ஸ் பாண்டியன்
ஹீரோ சாயலில் சார் நடித்த 'மெரினா’ படம் வெளியாகி ஒரு வருடம்கூட ஆகவில்லை. தடதடவென ஐந்து படங்கள் முடித்துவிட்டார் 'ஹீரோ’ சிவ கார்த்திகேயன். ''அப்ப இனிமே உங்களை டி.வி-யில் பார்க்கவே முடியாதா?'' என்று கேட்டால், ''ஏங்க முடியாது..? 'இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக’னு நான் நடிச்ச படம் எல்லாம் போடுவாங்களே... அப்ப பார்க்கலாம்!'' என்கிறார் அதே 'சினா கானா’ பிராண்ட் கிண்டலோடு.


''உங்களை ஹீரோவா வெச்சு 'எதிர்நீச்சல்’ படம் தயாரிக்கிற அளவுக்கு தனுஷ§டன் எப்படி க்ளோஸ் ஆனீங்க..?''
  ''அவர் மனசுல இடம் பிடிக்கணும்னு எல்லாம் நான் எதுவுமே பண்ணலை. நான் தனுஷோட ரசிகன். 'காதல் கொண்டேன்’ படம் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்தப் பட க்ளைமாக்ஸ் வசனத்தை காலேஜ்ல படிச்சிட்டு இருந்தப்போ, மிமிக்ரி பண்ணுவேன். அப்போ திருச்சி பக்கம் நான் மட்டும்தான் தனுஷ் குரலை மிமிக்ரி பண்ணதால, அது எனக்குத் தனி அடையாளம் கொடுத்துச்சு.



எதிர் காலத்துல அவர்கூடவே நடிப்பேன்னு அப்ப தெரியாது. '3’ படம் முடிச்சதுமே, 'படம் நல்லா வந்திருக்கு. வாழ்த்துக்கள்’னு சொல்லிட்டு, 'எனக்கு ஒரு படம் பண்ணித் தர்றீங்களா?’னு கேட்டாரு. ஜோக் அடிக்கிறார்னு நினைச்சேன். பார்த்தா, அடுத்த பத்து நாள்ல படத்துக்கான வேலை ஆரம்பிச்சு, ஷூட்டிங்கே போய்ட்டோம். இவ்வளவுதாங்க 'நடந்தது என்ன’ டீடெய்ல்!''





''சென்னைக்கு முதன்முதலா வரும்போது உங்க லட்சியம் என்ன?''



''அப்ப எனக்கு இருந்த ஒரே லட்சியம்... சென்னைல இருக்கிற தியேட்டர்கள்ல நிறையப் படம் பார்க்கணும்கிறதுதான். ஏன்னா, எங்க ஊரு தியேட்டர்ல எல்லாம் இன்டர்வெல்லோட ஏ.சி-யை அமத்திருவாங்க. கேன்டீன்ல எதுவுமே வாங்கிச் சாப்பிட முடியாது.  அப்புறம் மீடியா வேலைக்கு வந்ததும் ஆசைகள், ஆர்வங்கள் அதிகமாச்சு. கிடைக்கிற வாய்ப்புகளை நல்லபடியாப் பயன்படுத் திக்கணும்னு இழுத்துப் பிடிச்சு ஓடிட்டு இருக்கேன்!''



''ஒரு காமெடியனாத்தான் சினிமாவில் அறிமுகம் ஆனீங்க. இப்ப நீங்க காமெடியனா, ஹீரோவா?''



''காமெடி ஹீரோனு வெச்சுக்கங்களேன். நடுவுல கொஞ்சம் எமோஷ னும் சேர்த்துக்கணும்னு ஆசை. காமெடியையும் ஒரே மாதிரி பண்ணாம, ஒவ்வொரு படத்துலயும் வித்தியாசமாப் பண்ணணும்!''



''வடிவேலு பல வருஷம் காமெடி யனா நடிச்ச அப்புறம்தான் ஹீரோவா நடிச்சார். சந்தானம் இன்னும் யோசிச் சுக்கிட்டே இருக்கார். ஆனா, நீங்க ரெண்டாவது படத்துலயே ஹீரோ... ரொம்பத் துணிச்சலா?''  



''ஐயோ... அப்படி இல்லைங்க. ஆரம்பத்துல என்னை ஹீரோவா ஏத்துக்கு வாங்களானு மத்த யாரையும்விட எனக்குத்தான் ரொம்ப சந்தேகமா இருந்துச்சு. ரொம்ப யோசிச்சு, சீனியர்கள்கிட்ட பேசுனப்ப, நம்ம லிமிட் தாண்டாம நடிச்சா நிச்சயம் ஏத்துக்குவாங் கனு நம்பிக்கை வந்துச்சு. அதைச் சரியா பண்ணேன். க்ளிக் ஆகிடுச்சு!''



''பிடிச்ச ஹீரோயின் யார்?''


''கேத்ரீனா கைஃப். தமிழ்ல சொல்லுங்கன்னு கேப்பீங்கள்ல! அதுக்கும் பதில் வெச்சிருக்கேன். நயன்தாரா. ஷூட்டிங்ல ஒரு நாள் அவங்களை நேர்ல சந்திச் சேன். வெளியே அவங்களுக்கு இருக்கிற ஸ்டார் இமேஜை மனசுல ஏத்திக்காம ரொம்ப சிம்பிளா இருந்தாங்க!''



''ரஜினி-கமல், அஜித்-விஜய், சிம்பு-தனுஷ்... அந்த மாதிரி பவர் ஸ்டார் - சிவகார்த்திகேயன் காம்பினேஷன் எதிர் காலத்தில் கலக்குவாங்களா?''



''ஐயையோ... அவர் யாரு? அவர்கூட என்னை கம்பேர் பண்ண முடியுமா? அவர் ரேஞ்ச் என்ன... பவர் என்ன? அவரை தியாகராஜ பாகவதர் கேட்டகரில வைக்கணும்ங்க!''



''இப்போ டி.வி. காம்பியரிங் பண்றவங்கள்ல யாரைப் பிடிக்கும்?''



''சிவகார்த்திகேயன்னு ஒருத்தர் நல்லாப் பண்ணிட்டு இருந்தார். அவர்தான் நம்ம ஃபேவரைட். ஆனா, இப்ப அவர் பண்ண மாட்டேங்கிறாரு. இப்போ வித்தியாசமான டைமிங் சென்ஸோட காமெடி பண்ற மா.கா.பா. ஆனந்த் பிடிக்கும். அப்புறம் எப்பவுமே நம்ம கோபிநாத் அண்ணனைப் பிடிக்கும்!''



''ஷூட்டிங் ஸ்பாட்லயும் காமெடி பண்ணிட்டு இருக்கீங்களா?''


''என்னை வெச்சுதாங்க எல்லாரும் காமெடி பண்ணிட்டு இருக்காங்க. 'கேடி பில்லா கில்லாடி ரங்கா’ல நானும் விமல் அண்ணாவும் ரயில்வே டிராக்ல சண்டை போடுற மாதிரி சீன். உச்சி வெயில். டிரெயின் பாஸிங் வேணும்கிறதால நாலு மணி நேரமா விதவிதமா பத்துப் பதினஞ்சு ஷாட் எடுக்குறாரு பாண்டிராஜ் சார்.




 சீன்ல விமல் அண்ணா என்னை அடிக் கணும். வெயில், வெக்கை கடுப்புல நிஜமாவே என்னை டம்மு டம்முனு அடிக்கிறாரு. 'சார்... போதும் சார்... முடியலை... வலிக்குது’னு கெஞ்சுறேன்... கதர்றேன். 'அப்பதான் ஸ்க்ரீன்ல இயல்பா இருக்கும்’னு வெச்சு வெளுத்து வாங்கிட்டாங்க. ரொம்ப நொந்துட்டேன். டப்பிங்ல பார்த்தா, அந்த சீன் பத்தே நொடியில பாஸ் ஆகிருச்சு. என் மேல அவங்களுக்கு ஏதோ கோபம்னு மட்டும் புரிஞ்சுக்கிட்டேன்!''



''ப்ரியா ஆனந்த், ரெஜினா... ரெண்டு ஹீரோயின்கள்கூடவும் கெமிஸ்ட்ரி எப்படி வந்திருக்கு?''



''பிரமாதமா வொர்க்-அவுட் ஆகி இருக்கு. ரெஜினாட்ட 'முருகா’னு சொல்லச் சொன்னா, 'முர்க்கா’னு சொல்வாங்க. இப்படி அவங்க வசனங்களைக் குதாம் பண்றதாலேயே, கேமரா ரோலிங்ல இருக்கிறப்பக்கூடச் சிரிப்பை அடக்க முடியாமச் சிரிச்சுடுவேன். ப்ரியா ஆனந்த் செம கலாட்டா பார்ட்டி. ஸ்பாட்ல காமெடி பண்ணி சீனைக் கலாய்ச்சுவிட்ருவாங்களோனு பயந்துக்கிட்டே இருப்போம். இப்படித்தான் ஒரு நாள் ஸ்பாட்ல ஒரு தாத்தாவைப் பார்த்து, 'தாத்தா... என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?’னு கேட்டாங்க. அவர் அலறி அடிச்சுட்டு ஓடிட்டார். விசாரிச்சா, அவர் இன்னும் பேச்சுலராம். அதான் தெறிச்சு ஓடிட்டாரு!''



''இந்தப் புது வருஷ சபதம் என்ன?''


''இப்போதைக்குப் புதுசு புதுசாப் படம் பண்ணணும். உடம்பை, மனசை ஃபிட்டா வெச்சுக்கணும். அவ்ளோதான். ஆனா, இந்த தேசிய விருது வாங்கணும், ஆஸ்கர் வாங்கணும்கிறதெல்லாம் அடுத்த வருஷ சபதமா எடுக்கலாம்னு வெச்சிருக்கேன்!''

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_120609101458000000.jpg



''மறக்க முடியாத வெற்றி, தோல்வி, ஏமாற்றம், சந்தோஷம், கத்துக்கிட்ட பாடம்?''



'' 'மெரினா ரிலீஸ் ஆயிடுச்சு, அடுத்தடுத்து இவனுக்குப் படம் கமிட் ஆயிடுச்சு. சந்தோஷமா இருக்கான்’னு வெளில இருந்து பார்க்கிறவங்களுக்குத் தெரியும். ஆனா, அதுக்குப் பின்னாடி எவ்வளவு கஷ்டம், வருத்தம், துரோகம், சோகம் எல்லாம் இருக்குன்னு எனக்குத்தான் தெரியும்.


எங்க டீம்லயே ஒரு படம் எடுக்கலாம்னு பிளான் பண்ணி பக்காவா ரெடி ஆனோம். ஆனா, 'ஒரு பெட்டர் ஹீரோ வேணும்’னு என்னைக் கழட்டிவிட்டுட்டாங்க. ஆனா, அதே நேரம் தனுஷ் சார் கூப்பிட்டு, 'நீதான் ஹீரோ... இதுதான் டீம்’னு சொல்லி, 'எதிர்நீச்சல்’ மூலமா பெரிய வாய்ப்பு கொடுத்திருக்கார். சுத்தி நல்லவங்களை மட்டுமே வெச்சுக்கணும்னு பாடம் கத்துக்கிட்டேன். அதே சமயம், வெற்றி பயம் தருது. அடுத்து என்னன்னு திகிலா இருக்கு. ஆனா, எல்லாத்தையும் தாண்டித்தானே போகணும்!''

http://reviews.in.88db.com/images/Priya-Anand-unseen-2012/Priya-Anand-unseen-2012-photo-shoot.jpg



நன்றி - விக்டன்


Ethir Neechal Making | Sivakarthikeyan - Priya anand - Dhanush | Anirudh | Latest Tamil Movie




a



Ethir Neechal - Promo Songs [HQ]






a



Ethir Neechal - Title Song - Anirudh ft. Yo Yo Honey Singh, Aadhi 

 

 

Ethir Neechal - Sathiyama Nee Enakku MP3