Showing posts with label எதிர்நீச்சல். Show all posts
Showing posts with label எதிர்நீச்சல். Show all posts

Thursday, December 27, 2012

எதிர்நீச்சல் - சிவ கார்த்திகேயன் கலக்கல் பேட்டி , பாடல்கள் , ட்ரெய்லர் வீடியோ

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_121030112136000000.jpg 
"நயன்தாராவைப் பிடிக்கும்!"

சிலிர்க்கிறார் 'சி'னா 'கா'னா!
ஆ. அலெக்ஸ் பாண்டியன்
ஹீரோ சாயலில் சார் நடித்த 'மெரினா’ படம் வெளியாகி ஒரு வருடம்கூட ஆகவில்லை. தடதடவென ஐந்து படங்கள் முடித்துவிட்டார் 'ஹீரோ’ சிவ கார்த்திகேயன். ''அப்ப இனிமே உங்களை டி.வி-யில் பார்க்கவே முடியாதா?'' என்று கேட்டால், ''ஏங்க முடியாது..? 'இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக’னு நான் நடிச்ச படம் எல்லாம் போடுவாங்களே... அப்ப பார்க்கலாம்!'' என்கிறார் அதே 'சினா கானா’ பிராண்ட் கிண்டலோடு.


''உங்களை ஹீரோவா வெச்சு 'எதிர்நீச்சல்’ படம் தயாரிக்கிற அளவுக்கு தனுஷ§டன் எப்படி க்ளோஸ் ஆனீங்க..?''
  ''அவர் மனசுல இடம் பிடிக்கணும்னு எல்லாம் நான் எதுவுமே பண்ணலை. நான் தனுஷோட ரசிகன். 'காதல் கொண்டேன்’ படம் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்தப் பட க்ளைமாக்ஸ் வசனத்தை காலேஜ்ல படிச்சிட்டு இருந்தப்போ, மிமிக்ரி பண்ணுவேன். அப்போ திருச்சி பக்கம் நான் மட்டும்தான் தனுஷ் குரலை மிமிக்ரி பண்ணதால, அது எனக்குத் தனி அடையாளம் கொடுத்துச்சு.



எதிர் காலத்துல அவர்கூடவே நடிப்பேன்னு அப்ப தெரியாது. '3’ படம் முடிச்சதுமே, 'படம் நல்லா வந்திருக்கு. வாழ்த்துக்கள்’னு சொல்லிட்டு, 'எனக்கு ஒரு படம் பண்ணித் தர்றீங்களா?’னு கேட்டாரு. ஜோக் அடிக்கிறார்னு நினைச்சேன். பார்த்தா, அடுத்த பத்து நாள்ல படத்துக்கான வேலை ஆரம்பிச்சு, ஷூட்டிங்கே போய்ட்டோம். இவ்வளவுதாங்க 'நடந்தது என்ன’ டீடெய்ல்!''





''சென்னைக்கு முதன்முதலா வரும்போது உங்க லட்சியம் என்ன?''



''அப்ப எனக்கு இருந்த ஒரே லட்சியம்... சென்னைல இருக்கிற தியேட்டர்கள்ல நிறையப் படம் பார்க்கணும்கிறதுதான். ஏன்னா, எங்க ஊரு தியேட்டர்ல எல்லாம் இன்டர்வெல்லோட ஏ.சி-யை அமத்திருவாங்க. கேன்டீன்ல எதுவுமே வாங்கிச் சாப்பிட முடியாது.  அப்புறம் மீடியா வேலைக்கு வந்ததும் ஆசைகள், ஆர்வங்கள் அதிகமாச்சு. கிடைக்கிற வாய்ப்புகளை நல்லபடியாப் பயன்படுத் திக்கணும்னு இழுத்துப் பிடிச்சு ஓடிட்டு இருக்கேன்!''



''ஒரு காமெடியனாத்தான் சினிமாவில் அறிமுகம் ஆனீங்க. இப்ப நீங்க காமெடியனா, ஹீரோவா?''



''காமெடி ஹீரோனு வெச்சுக்கங்களேன். நடுவுல கொஞ்சம் எமோஷ னும் சேர்த்துக்கணும்னு ஆசை. காமெடியையும் ஒரே மாதிரி பண்ணாம, ஒவ்வொரு படத்துலயும் வித்தியாசமாப் பண்ணணும்!''



''வடிவேலு பல வருஷம் காமெடி யனா நடிச்ச அப்புறம்தான் ஹீரோவா நடிச்சார். சந்தானம் இன்னும் யோசிச் சுக்கிட்டே இருக்கார். ஆனா, நீங்க ரெண்டாவது படத்துலயே ஹீரோ... ரொம்பத் துணிச்சலா?''  



''ஐயோ... அப்படி இல்லைங்க. ஆரம்பத்துல என்னை ஹீரோவா ஏத்துக்கு வாங்களானு மத்த யாரையும்விட எனக்குத்தான் ரொம்ப சந்தேகமா இருந்துச்சு. ரொம்ப யோசிச்சு, சீனியர்கள்கிட்ட பேசுனப்ப, நம்ம லிமிட் தாண்டாம நடிச்சா நிச்சயம் ஏத்துக்குவாங் கனு நம்பிக்கை வந்துச்சு. அதைச் சரியா பண்ணேன். க்ளிக் ஆகிடுச்சு!''



''பிடிச்ச ஹீரோயின் யார்?''


''கேத்ரீனா கைஃப். தமிழ்ல சொல்லுங்கன்னு கேப்பீங்கள்ல! அதுக்கும் பதில் வெச்சிருக்கேன். நயன்தாரா. ஷூட்டிங்ல ஒரு நாள் அவங்களை நேர்ல சந்திச் சேன். வெளியே அவங்களுக்கு இருக்கிற ஸ்டார் இமேஜை மனசுல ஏத்திக்காம ரொம்ப சிம்பிளா இருந்தாங்க!''



''ரஜினி-கமல், அஜித்-விஜய், சிம்பு-தனுஷ்... அந்த மாதிரி பவர் ஸ்டார் - சிவகார்த்திகேயன் காம்பினேஷன் எதிர் காலத்தில் கலக்குவாங்களா?''



''ஐயையோ... அவர் யாரு? அவர்கூட என்னை கம்பேர் பண்ண முடியுமா? அவர் ரேஞ்ச் என்ன... பவர் என்ன? அவரை தியாகராஜ பாகவதர் கேட்டகரில வைக்கணும்ங்க!''



''இப்போ டி.வி. காம்பியரிங் பண்றவங்கள்ல யாரைப் பிடிக்கும்?''



''சிவகார்த்திகேயன்னு ஒருத்தர் நல்லாப் பண்ணிட்டு இருந்தார். அவர்தான் நம்ம ஃபேவரைட். ஆனா, இப்ப அவர் பண்ண மாட்டேங்கிறாரு. இப்போ வித்தியாசமான டைமிங் சென்ஸோட காமெடி பண்ற மா.கா.பா. ஆனந்த் பிடிக்கும். அப்புறம் எப்பவுமே நம்ம கோபிநாத் அண்ணனைப் பிடிக்கும்!''



''ஷூட்டிங் ஸ்பாட்லயும் காமெடி பண்ணிட்டு இருக்கீங்களா?''


''என்னை வெச்சுதாங்க எல்லாரும் காமெடி பண்ணிட்டு இருக்காங்க. 'கேடி பில்லா கில்லாடி ரங்கா’ல நானும் விமல் அண்ணாவும் ரயில்வே டிராக்ல சண்டை போடுற மாதிரி சீன். உச்சி வெயில். டிரெயின் பாஸிங் வேணும்கிறதால நாலு மணி நேரமா விதவிதமா பத்துப் பதினஞ்சு ஷாட் எடுக்குறாரு பாண்டிராஜ் சார்.




 சீன்ல விமல் அண்ணா என்னை அடிக் கணும். வெயில், வெக்கை கடுப்புல நிஜமாவே என்னை டம்மு டம்முனு அடிக்கிறாரு. 'சார்... போதும் சார்... முடியலை... வலிக்குது’னு கெஞ்சுறேன்... கதர்றேன். 'அப்பதான் ஸ்க்ரீன்ல இயல்பா இருக்கும்’னு வெச்சு வெளுத்து வாங்கிட்டாங்க. ரொம்ப நொந்துட்டேன். டப்பிங்ல பார்த்தா, அந்த சீன் பத்தே நொடியில பாஸ் ஆகிருச்சு. என் மேல அவங்களுக்கு ஏதோ கோபம்னு மட்டும் புரிஞ்சுக்கிட்டேன்!''



''ப்ரியா ஆனந்த், ரெஜினா... ரெண்டு ஹீரோயின்கள்கூடவும் கெமிஸ்ட்ரி எப்படி வந்திருக்கு?''



''பிரமாதமா வொர்க்-அவுட் ஆகி இருக்கு. ரெஜினாட்ட 'முருகா’னு சொல்லச் சொன்னா, 'முர்க்கா’னு சொல்வாங்க. இப்படி அவங்க வசனங்களைக் குதாம் பண்றதாலேயே, கேமரா ரோலிங்ல இருக்கிறப்பக்கூடச் சிரிப்பை அடக்க முடியாமச் சிரிச்சுடுவேன். ப்ரியா ஆனந்த் செம கலாட்டா பார்ட்டி. ஸ்பாட்ல காமெடி பண்ணி சீனைக் கலாய்ச்சுவிட்ருவாங்களோனு பயந்துக்கிட்டே இருப்போம். இப்படித்தான் ஒரு நாள் ஸ்பாட்ல ஒரு தாத்தாவைப் பார்த்து, 'தாத்தா... என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?’னு கேட்டாங்க. அவர் அலறி அடிச்சுட்டு ஓடிட்டார். விசாரிச்சா, அவர் இன்னும் பேச்சுலராம். அதான் தெறிச்சு ஓடிட்டாரு!''



''இந்தப் புது வருஷ சபதம் என்ன?''


''இப்போதைக்குப் புதுசு புதுசாப் படம் பண்ணணும். உடம்பை, மனசை ஃபிட்டா வெச்சுக்கணும். அவ்ளோதான். ஆனா, இந்த தேசிய விருது வாங்கணும், ஆஸ்கர் வாங்கணும்கிறதெல்லாம் அடுத்த வருஷ சபதமா எடுக்கலாம்னு வெச்சிருக்கேன்!''

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_120609101458000000.jpg



''மறக்க முடியாத வெற்றி, தோல்வி, ஏமாற்றம், சந்தோஷம், கத்துக்கிட்ட பாடம்?''



'' 'மெரினா ரிலீஸ் ஆயிடுச்சு, அடுத்தடுத்து இவனுக்குப் படம் கமிட் ஆயிடுச்சு. சந்தோஷமா இருக்கான்’னு வெளில இருந்து பார்க்கிறவங்களுக்குத் தெரியும். ஆனா, அதுக்குப் பின்னாடி எவ்வளவு கஷ்டம், வருத்தம், துரோகம், சோகம் எல்லாம் இருக்குன்னு எனக்குத்தான் தெரியும்.


எங்க டீம்லயே ஒரு படம் எடுக்கலாம்னு பிளான் பண்ணி பக்காவா ரெடி ஆனோம். ஆனா, 'ஒரு பெட்டர் ஹீரோ வேணும்’னு என்னைக் கழட்டிவிட்டுட்டாங்க. ஆனா, அதே நேரம் தனுஷ் சார் கூப்பிட்டு, 'நீதான் ஹீரோ... இதுதான் டீம்’னு சொல்லி, 'எதிர்நீச்சல்’ மூலமா பெரிய வாய்ப்பு கொடுத்திருக்கார். சுத்தி நல்லவங்களை மட்டுமே வெச்சுக்கணும்னு பாடம் கத்துக்கிட்டேன். அதே சமயம், வெற்றி பயம் தருது. அடுத்து என்னன்னு திகிலா இருக்கு. ஆனா, எல்லாத்தையும் தாண்டித்தானே போகணும்!''

http://reviews.in.88db.com/images/Priya-Anand-unseen-2012/Priya-Anand-unseen-2012-photo-shoot.jpg



நன்றி - விக்டன்


Ethir Neechal Making | Sivakarthikeyan - Priya anand - Dhanush | Anirudh | Latest Tamil Movie




a



Ethir Neechal - Promo Songs [HQ]






a



Ethir Neechal - Title Song - Anirudh ft. Yo Yo Honey Singh, Aadhi 

 

 

Ethir Neechal - Sathiyama Nee Enakku MP3