Monday, November 26, 2012

பிரபாகரன் - ஈழப்போரின் கடைசி நிமிடங்கள்


மாவீரன் அலெக்ஸாண்டர் ,பகத்சிங் மற்றும் நேஜாஜி ,இவ்வுலகில் வாழ்ந்தார்கள் என்று வரலாற்றுப்  பாடப்  புத்தகத்தில் படித்து தெரிந்திருக்கிறோம்  ..

நாம்  வாழும் காலத்திலேயே ,வாழ்ந்த ஒரு மாவீரன்... 
"தலைவன்" என்று சொல்வதற்கு, முழுத்தகுதி உடைய,
தன் குடும்பத்தையே போர்களத்திற்கு அனுப்பிய,  
 "சுயநலம்" என்பதன் அர்த்தம் அறியாத, 
 அண்ணன் பிரபாகரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....
மாவீரன் அலெக்ஸாண்டர் ,பகத்சிங் மற்றும் நேஜாஜி ,இவ்வுலகில் வாழ்ந்தார்கள் என்று வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் படித்து தெரிந்திருக்கிறோம் ..

நாம் வாழும் காலத்திலேயே ,வாழ்ந்த ஒரு மாவீரன்...
"தலைவன்" என்று சொல்வதற்கு, முழுத்தகுதி உடைய,
தன் குடும்பத்தையே போர்களத்திற்கு அனுப்பிய,
"சுயநலம்" என்பதன் அர்த்தம் அறியாத,

அண்ணன் பிரபாகரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...-ஃபேஸ்புக்கில் இருந்து

இலங்கை இறுதிப் போர்: பிப்ரவரி 2009ல் மலேசியாவில் நடந்தது என்ன?: கேபி (பகுதி1)





 Sl War What Happened Feb 09 Kp
Shopping In Sri Lanka
கொழும்பு: இலங்கை இறுதிப் போரில் நார்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் முன்னெடுத்த முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிராகரித்திருக்காவிட்டால் பல தளபதிகள் உயிரோடு இருந்திருப்பார்கள் என்று புலிகளின் சர்வதேச தொடர்பாளர் கேபி என்ற குமரன் பத்மநாபா விவரித்திருக்கிறார்.


இலங்கையில் வெளியாகும் டெய்லி மிர்ரர் நாளேட்டுக்காக அதன் செய்தியாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் எடுத்த கேபியின் பேட்டி:


கேள்வி: பிபிசி ஊடகத்துக்கு பேட்டியளித்திருந்த எரிக் சொல்ஹெய்ம், போரின் இறுதியில் ஐநா உதவியுடனான யுத்த நிறுத்தத்துக்கு முயற்சியை மேற்கொண்டதாக கூறியிருந்தார். அந்த முயற்சியை புலிகளின் தலைவர் தடுத்ததாகவும் தெரிவித்திருந்தார். இதற்காக அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமரான உருத்திரகுமாரனும் சொல்ஹெய்மின் கருத்தை மறுத்திருந்தார். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?



கேபி: எரிக் சொல்ஹெய்மின் கருத்து 100% உண்மையானது. அவர் மேற்கொண்ட முயற்சிகள் விடுதலைப் புலிகளின் தலைவரால் தடுக்கப்பட்டது. அப்படியான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தால் பேரழிவைத் தவிர்த்திருக்கலாம். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல தளபதிகள் இன்று உயிரோடு இருந்திருக்க முடியும்.



கேள்வி: அப்படியெனில் ஏன் அப்படி ஒரு முயற்சியே நடைபெறவில்லை என்று ஏன் உருத்திரகுமாரன் சொல்ல வேண்டும்?


கேபி: உருத்திரகுமாரனைப் பொறுத்தவரையில் 2009- ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்ததை பற்றி பேசுகிறார். பிப்ரவரிக்கு பின்னர் என்ன நடந்தது என்பதைப் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை.


கேள்வி: 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக நியமிக்கப்பட்டீர்கள்.. நீங்களும் யுத்த நிறுத்தம் தொடர்பான முயற்சிகளில் பங்கெடுத்தவர்.. அப்போது என்ன நடந்தது என்பதை விவரிக்க முடியுமா?



கேபி: நிச்சயமாக... 2008-ம் ஆண்டிலேயே புலிகளின் கதை முடிவுக்கு வருகிறது என்பதை பார்வையாளர்கள் பலரும் ஊகித்திருந்தனர். புலிகளின் பதில் தாக்குலுக்கு அப்பாலும் இலங்கை ராணுவம் மெதுவாக ஆனால் முன்னேறிக் கொண்டிருந்தது. ஏ-9 நெடுஞ்சாலையின் மேற்குப் பகுதியில் யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஏ-9 பாதையின் கிழக்குப் பகுதிக்கு ராணுவம் முன்னேறுவதற்கு முன்பாக ஒரு கெளரவமான யுத்த நிறுத்தத்துக்கு வாய்ப்பும் இருந்தது. ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமையும் அதன் வெளிநாட்டு அமைப்புகளும் அதைச் செய்யவிடவில்லை.


2003-ம் ஆண்டின் தொடக்கத்தில் இயக்கம் எனக்கு "ரிடையர்மெண்ட்" கொடுத்து விடுவித்துவிட்டது. நடைமுறையில் நான் விடுதலைப் புலிகளின் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டேன். ஆனால் தொலைவில் இருந்து கள நிலைமைகளை பார்த்து வந்தேன். 2008-ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் என்னுடன் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்க தலைமை தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. அப்போது புலிகளின் தலைவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க யுத்த நிறுத்தம் அவசியம் என்பதை நான் வலியுறுத்தினென். 2008-ம் ஆண்டு டிசம்பரில் பிரபாகரன் என்னை சர்வதேச பொறுப்பாளராக நியமிக்க ஒப்புக்கொண்டார். யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வரவும் ஒப்புக் கொண்டார்.



2008-ம் ஆண்டு டிசம்பரில் அப்படி ஒரு முடிவு எடுத்திருந்தாலும் யுத்த நிறுத்தத்தை நோக்கிய நகர்வுகள் புலிகள் தரப்பில் மிகவும் மெதுவாகவே இருந்தன. புத்தாண்டு பிறந்தபோது ராணுவமானது பரந்தன், கிளிநொச்சி, ஆனையிறவு ஆகியவற்றை கைப்பற்றியிருந்தது.


அப்போதுதான் விடுதலைப் புலிகளின் தலைமை கவலைகொண்டு அதன் வெளிநாட்டு பிரிவுகளை என் தலைமையின் கீழ் இயங்கவும் உத்தரவிட்டது. எனக்கு ஆதரவு தரவும் சொன்னது. ஆனால் வெளிநாட்டுப் பொறுப்பாளராக இருந்த காஸ்ட்ரோ, தமது பிரதிநிதி நெடியவன் மூலமாக எனது செயல்பாடுகளை சீர்குலைத்தார். போதுமான பண உதவி செய்யப்படவில்லை. இருந்தபோதும் ஒரு யுத்த நிறுத்தத்துக்கான தீவிர முயற்சிகளை நான் மேற்கொண்டிருந்தேன். சர்வதேச சமூகத்தின் முக்கிய நபர்களுடன் இந்த விவகாரத்துக்காக தொடர்பு கொண்டிருந்தேன்.


கேள்வி: எப்படி தொடர்பு கொண்டிருந்தீர்கள்? நேரடியாக தொடர்பு வைத்திருந்தீர்களா?


கேபி: நிறைய கடிதங்கள், ஃபேக்ஸ்கள், மின் அஞ்சல்கள் வழியாக தொடர்பு கொண்டிருந்தேன். யாரையெல்லாம் எப்படி தொடர்பு கொள்ள முடியுமோ அதை மேற்கொண்டேன். சிலரை நேரடியாகவும் தொடர்பு கொண்டேன். சில நேரங்களில் எனது பிரதிநிதிகள் சந்தித்தனர்.


கேள்வி: இதில் நார்வேயின் பங்கு என்ன?


கேபி: யுத்த நிறுத்தம் மற்றும் அமைதி முயற்சிகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட நாடு நார்வே. நார்வே மட்டும் குறிப்பிடத்தக்க அர்த்தமுள்ள பணியை ஆற்றியிருக்காவிட்டால் போர் நீண்டு இன்னும் மிக மோசமாக இருந்திருக்கும். ஆகக் கூடுமானவரையில் உயிரிழப்புகளைத் தடுக்கவே நார்வே விரும்பியது. மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் போரை முடிவுக்கு கொண்டுவர விரும்பினர்.


கேள்வி: அதற்காக நார்வே செய்தது என்ன?


கேபி: நார்வேயின் எரிக் சொல்ஹெய்ம் என்னுடன் தொடர்பில் இருந்தார். யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வருவதற்காக ஒரு சந்திப்பை நடத்த நாங்கள் முடிவு செய்தோம். 2009-ம் ஆண்டு பிப்ரவரி இறுதி வாரத்தில் இப்படியான ஒரு ரகசிய சந்திப்பு நடைபெற்றது.


கேள்வி: அந்த சந்திப்பு எங்கு நடைபெற்றது?


கேபி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஹில்டன் ஹோட்டைல் நடைபெற்றது. 2 நாட்கள் அந்த கூட்டம் நடந்தது.


கேள்வி: யார் யார் கலந்து கொண்டனர்? எரிக் சொல்ஹெய்ம் கலந்து கொண்டாரா?


கேபி: இல்லை... நார்வே அமைச்சராக அவர் இருந்ததால் அவர் கலந்து கொள்ளவில்லை. நார்வேயின் முக்கிய அதிகாரி, அவரது பிரதிநிதியாக வந்தார். மேலும் இரு நார்வே அதிகாரிகள் ஆஸ்லோவில் இருந்து வந்திருந்தார். இலங்கைக்கான நார்வே தூதரும் கலந்து கொண்டார்.


கேள்வி: யார் அவர்?


கேபி: கொழும்பில் அப்போது நார்வே தூதராக இருந்த ஹட்ரெம். இப்பொழுது அவர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறார் என நினைக்கிறேன்.


கேள்வி: விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளாக யார் கலந்து கொண்டது?


கேபி: நான், என்னுடைய செயலாளர் "அப்பு", ஜோய் மகேஸ்வரன், உருத்திரகுமாரன். இவர்களுடன் வெளிநாட்டைச் சேர்ந்த சில விடுதலைப் புலி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். அவர்களது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. உருத்திரகுமாரன், ஜோய் மகேஸ்வரன் இருவரும் நார்வே முன்னெடுத்த முந்தைய அமைதிப் பேச்சுவார்த்தைகளில் புலிகளின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டவர்கள்.


கேள்வி: அந்தப் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?


கேபி: யுத்த நிறுத்தம் பற்றியும் பேச்சுவார்த்தை பற்றியும் தெரிவித்தேன். பொதுமக்களின் நிலைமையை கண்ணீர்மல்க எடுத்துக் கூறி அவர்களைக் காப்பாற்ற எப்படியாவது யுத்த நிறுத்தம் அவசியம் என்று நார்வேயிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்.


கேள்வி: அதற்கு என்ன பதில் கிடைத்தது?


கேபி: அது மிகவும் எதிர்பாராதது.... நார்வே தூதர் ஹட்ரம் வெளிப்படையாக கடுமையான குரலில் ஆனால் உண்மைகளை விவரித்தார்.


கேள்வி: அவர் சொன்னது என்ன?


கேபி: யுத்த களத்தின் உண்மை நிலவரத்தை எங்களிடம் விவரித்தார். இலங்கை ராணுவத்தின் கைதான் ஓங்கி இருக்கிறது என்பதை விளக்கினார். சாளையில் 55-வது டிவிசன், விசுவமடுவில் 57 வது டிவிசன், தேவிபுரத்தில் 58-வது டிவிசன், முல்லைத்தீவு நகரில் 59-வது டிவிசன் நிலை கொண்டிருக்கிறது. சிறப்பு படை-2 உடையார்கட்டிலும் சிறப்பு படையணி 3 அம்பகாமமிலும் சிறப்பு படை 4 ஒட்டுசுட்டானிலும் நிற்கிறது என்றார்.



தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு சிறிய நிலப்பரப்பில் அட்டை பெட்டி வடிவத்தில் சுற்றி வளைக்கப்பட்டிருக்கின்றனர் என்று கூறினார். புலிகளை அழிக்க சிறிது காலம்தான் ராணுவத்துக்கு தேவை. அதனால் இலங்கையைப் பொறுத்தவரையில் யுத்த நிறுத்தம் என்பது தேவையில்லாத ஒன்று. ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரையில் புலிகளைத் தோற்கடித்துவிடுவது உறுதி என்றார் அவர்.



மேலும் பொதுமக்களுக்கு விடுதலைப் புலிகள்தான் பொறுப்பு. பொதுமக்களை மனித கேடயங்களாக கட்டாயப்படுத்தி புலிகள் வைத்திருக்கின்றனர். நீங்கள் சிலவற்றை விட்டுக் கொடுத்துதான் சிலவற்றைப் பெற முடியும் என்றும் கூறினார்.



கேள்வி: அது என்ன ஆயுத ஒப்படைப்பா?


கேபி: ஆம். சரியானதே.. விடுதலைப் புலிகள் ஆயுதங்களை சரணடைய ஒப்புக் கொண்டால் நார்வேயும் இதர நாடுகளும் யுத்த நிறுத்தம் குறித்து இலங்கையை கேட்டுக் கொள்ளும் என்றார். விடுதலைப் புலிகளுக்கு இனி வாய்ப்பு என்பதே இல்லை.. நிச்சயமாக இலங்கை ராணுவம் வெற்றி பெறத்தான் போகிறது என்றார். ஆகையால் உயிரிழப்பைக் குறைக்க விரும்பினால் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.


 அப்படி தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட உண்மையாக ஒப்புக் கொண்டால் அமெரிக்கா, இந்தியா, நார்வே போன்ற நாடுகள் யுத்த நிறுத்தத்துக்கு இலங்கையை வலியுறுத்தும் என்றும் கூறினார். அப்படி விடுதலைப் புலிகள் ஒப்புக் கொள்ளவில்லையெனில் யுத்தம் சிறிது காலத்தில் முடிந்துவிடும். அத்துடன் விடுதலைப் புலிகளின் கதையும் முடிந்துவிடும் என்றார்.


இதையடுத்து நாங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தொடர்பு கொண்டு பதில் கேட்கிறோம் என்றோம். இதுதான் அந்த சந்திப்பில் நடந்தது என்று கேபி கூறியுள்ளார்.


2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு என்ன நடந்தது? நார்வே எடுத்த முன் முயற்சி என்ன? பிரபாகரன் நிராகரிக்க காரணம் என்ன?


-அடுத்த பகுதியில்...

2009 பிப்ரவரியில் நார்வே முன்னெடுத்த அமைதி முயற்சிக்கு பிறகு என்ன நடந்தது?: கேபி பேட்டி (பகுதி 2)






 We Have 2 Plans Sl Final Warl Kp
Indian media misquoted me: Sri Lank...
கொழும்பு: இலங்கை இறுதிப் போரின் போது நார்வே முன்னெடுத்த முயற்சிகளைப் பற்றி மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளர் கேபி விவரிக்கும் பேட்டியின் 2-வது பகுதி:



புலிகளை காப்பாற்றும் திட்டம் -1



கேள்வி: நார்வே அதிகாரிகளுடனான 2009-ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற சந்திப்பு சாதகமாக இருக்கவில்லை. 2010-ம் ஆண்டு என்னிடம் நீங்கள் பேசும்போது, பிரபாகரனுக்கு 16 பக்க யுத்த நிறுத்த யோசனை பற்றி அனுப்பியதாகவும் அதனை 3 வார்த்தைகளில் அவர் நிராகரித்துவிட்டதாகவும் கூறினீர்கள். 2009-ம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு என்ன நடந்தது?



பதில்: நார்வேயின் யோசனையை பிரபாகரன் நிராகரித்த பின்னரும்கூட என்னுடைய முயற்சிகளை நிறுத்தவில்லை. நாளுக்குநாள் நிலைமை மோசமடைந்து கொண்டே இருந்தது. இதனால் நார்வே தரப்புடனும் சர்வதேச தலைவர்களுடனும் கூடுதலான முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன்.



இது வாழ்வா? சாவா? என்ற விவகாரம்... எப்படியாவது யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தி பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டும்.. இயக்கத்தை அதன் தலைமையை காப்பாற்ற வேண்டும் என்று கருதினேன். ஐ.நா.வின் உயர் அதிகாரிகள், தூதர்கள், கொள்கை வகுப்பாளர்கள் என பலதரப்போடும் போராடிப் பார்த்தேன். சிலரை நேரில் கூட சந்தித்தேன்.



மார்ச் மாத பிற்பகுதியில் சர்வதேச அனுசரனையுடன் ஐ.நா. பிரதிநிதிகளிடம் ஆயுதங்களை ஒப்படைப்பது என்ற திட்டத்தை உருவாக்கினேன். ஆயுதங்களை "மெளனிக்க" செய்தல் அது தேவைப்பட்டால் 25 முதல் 50 புலிகளின் முக்கிய தளபதிகள் குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவும், நடுத்தர போராளிகள் தடுத்து வைக்கப்பட்ட அவர்களுக்கு குறைந்த தண்டனை வழங்குதல், இளநிலைப் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்தல் என்பதுதான் அத்திட்டம்.



விடுதலைப் புலி தலைவர்களின் குடும்பத்தினருக்கு அடைக்கலம் கொடுக்க 3 நாடுகளுடன் பேசியிருந்தேன். இதில் ஆசிய நாடு ஒன்றும் அடக்கம். மற்றவை ஆப்பிரிக்க நாடுகள்.



இந்தத் திட்டம் நார்வே, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றால் ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்தியாவுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. தேவைப்பட்டால் போர்க் கப்பலை அனுப்பவும் அமெரிக்காவும் தயாராக இருந்தது.


இந்தத் திட்டம் பற்றி தெரிவித்து இதற்கான ஒப்புதலை தெரிவிக்கக் கோரி மார்ச் மாத இறுதியில் பிரபாகரனுக்கு கடிதம் அனுப்பினேன். அவர் செய்யலாம் என்று சொல்லியிருந்தால் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முழு முயற்சிகளில் இறங்கினேன். இதற்காக 16 பக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஃபேக்ஸ் மூலம் அனுப்பியும் வைத்தேன்.


16 பக்கத்துக்கு நான் அனுப்பி இருந்ததை "இதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று மூன்று வார்த்தைகளில் சொல்லிவிட்டார். அதனால் இந்தத் திட்டத்தையே நான் கைவிட்டேன்.


கேள்வி: விடுதலைப் புலிகளின் தலைவரை எப்படி தொடர்பு கொண்டீர்கள் நீங்கள்?



கேபி: சாட்டிலைட் தொலைபேசிகளை பயன்படுத்தினோம். பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக வேலு (குமாரவேல்) என்பவர் மூலமாக தொடர்பு கொண்டோம். அவர்தான் எனது தகவல்களை தலைவருக்கு தெரியப்படுத்தி அவரிடம் இருந்து பதில் பெற்றுத் தருவார்.


அதன் பின்னர் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன், கடற்புலி பொறுப்பாளர் சூசை ஆகியோரும் தலைவருக்கும் எனக்குமான தொடர்பாளர்களாக இருந்தனர்.


கேள்வி: ஐ.நா.வின் தலையீடு என்பது எந்தளவு இருந்தது?


கேபி: நார்வேதான் ஐ.நா.வுடன் இணைந்து செயல்பட்டது.என்னைப் பொறுத்தவரை ஐ.நா. அதிகாரிகளான ஹோல்ம்ஸ், விஜய் நம்பியார், தம்ர சாமுவேல் ஆகியோருடன் தொடர்பில் இருந்தேன்.



பிரபாகரன் நிராகரித்தது ஏன்?



கேள்வி: உங்களது திட்டத்தை பிரபாகரன் நிராகரிக்கக் காரணம் என்ன? உண்மையான களநிலவரம் அவருக்கு தெரியவில்லையா? என்ன நினைக்கிறீர்கள்?


கேபி: அவர் கேணல் தீபன் தலைமையில் ஒரு பதிலடித் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்தார் என்பது பின்னர் தெரிய வந்தது. ஆனந்தபுரம் பகுதியில் இதற்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பிரபாகரனைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய ராணுவ ரீதியான வெற்றியைப் பெற முடியும் என்று நம்பியிருந்திருக்கிறார்.


 இதன் மூலமாக நிலைமையை தலைகீழாக்க முடியும்... ராணுவத்தை சீர்குலைய வைக்க முடியும் என்று நம்பியிருக்கிறார்.


ராணுவம் முதலில் ஆனந்தபுரத்தில் தாக்குதல் நடத்தியது. புலிகளை அட்டைப் பெட்டி வடிவில் சுற்றி வளைத்தது. இதில் தீபன் உள்ளிட்ட ஏராளமான புலிகளின் தளபதிகள் உயிரிழந்தனர். அதன் பின்னர் நிலைமை வேறானது.


புலிகளை காப்பாற்றும் திட்டம் -2


கேள்வி: பிரபாகரன் நிராகரித்த பிறகு என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன?


கேபி: அந்த முயற்சிகளைத்தான் பிபிசி ஊடகத்திடம் எரிக்சொல்ஹெய்ம் விவரித்தது.... அதாவது தற்காலிக யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவிப்பது. அதன் பின்னர் ஐ.நா. அதிகாரிகள், பிரதிநிதிகள் (இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா. ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நார்வே) மற்றும் இந்திய பார்வையாளர்கள் அடங்கிய குழுவினர் வடபகுதிக்கு கப்பலில் செல்வது.


யுத்த முனையில் இருக்கும் புலிகள் மற்றும் பொதுமக்களுடன் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொள்வது.. அதன் பின்னர் இலங்கையின் பாதுகாப்பில் அனைவரையும் முகாம்களுக்கு அனுப்புவது என்பதுதான் எரிக்சொல்ஹெய்ம் சொல்லும் திட்டம்.



அதேபோல் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மெளனிக்க செய்துவிட்டு ஐநாவிடம் அவற்றை ஒப்படைப்பது. மார்ச் மாதம் என்ன திட்டமிடப்பட்டதோ அதன்படி விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களை வெளிநாட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்து அவர்களை கண்காணிப்பது. நடுநிலையான போராளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனையும், மற்றோருக்கு பொதுமன்னிப்பும் கொடுத்தல் என்பதும் அத்திட்டம்.



கேள்வி: இதில் பிரபாகரன்., பொட்டு அம்மான் சேர்க்கப்படவில்லையா?



கேபி: அவர்களும்தான் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவோர் பட்டியலில் இருந்தனர். அதை அவர்கள் ஏற்கவில்லை.


கேள்வி: எரிக்சொல்ஹெய்ம் வேறு மாதிரி சொல்கிறாரே..


கேபி: எனக்கும் தெரியும். எரிக்சொல்ஹெய்ம் வேறு மாதிரியாக சொல்கிறார் என்பது.. அந்தத் திட்டத்தின்படி பிரபாகரனும் பொட்டு அம்மானும் வெளிநாட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.



கேள்வி: ஒருவேளை ராஜிவ் கொலை விவகாரத்தில் பிரபாகரனையும் பொட்டு அம்மானையும் இத்திட்டத்தில் சேர்க்க வேண்டாம் என்று இந்தியா கேட்டுக் கொண்டதா?



பதில்: உண்மையில் என்ன நடந்தது எனத் தெரியவில்லை.. எனக்கே சொல்ஹெய்ம் சொல்வது புதிராக இருக்கிறது.



ஆனால் இந்தத் திட்டம் பிரபாகரனிடம் ஒப்படைக்கப்படவில்லை. ஏனெனில் அவர் இது விஷயமாக வேறு எதுவும் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.



நார்வே முன்னெடுத்த முயற்சிகளுக்கு பிரபாகரன் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் நான் வன்னிப் பகுதிக்கு நேரடியாக சென்று தலைவரை சந்தித்து பேசியிருப்பேன்.. என்றார் கேபி.



யுத்த நிறுத்த முயற்சிகளை பிரபாகரன் நிராகரித்தன் பின்னணியில் இருந்த தமிழக தலைவர்கள் யார்? பிரபாகரன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமல் போனது எப்படி? என்பவற்றை அடுத்த செய்திகள்ல் பார்க்கலாம்..



இலங்கை இறுதிப் போரில் பிரபாகரனுக்கு தவறான நம்பிக்கை கொடுத்த வைகோ-நெடுமாறன் : கேபி பேட்டி(பகுதி 3)

 Vaiko Misled Prabhakaran Kp
Vaiko argues for lifting ban on LTT...
கொழும்பு: இலங்கை இறுதிப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் தவ்றான நம்பிக்கையைக் கொடுத்தனர் என்று புலிகளின் சர்வதேச பொறுப்பளர் கேபி குற்றம்சாட்டியுள்ளார்.



வைகோ- நெடுமாறன்


இலங்கை ஊடகமான டெய்லி மிர்ரரில் வெளியான மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜூக்கு கேபி அளித்த பேட்டியில், பிரபாகரனைப் பொறுத்தவரை சமரசத்துக்கு இடமில்லாமல் போராட வேண்டும் என்ற மனநிலை உடையவர். அவர் எப்போதும் சமரசத்துக்கோ சரணடையவோ விரும்பாத்வர். மேற்குல நாடுகளை சந்தேகக் கண்ணோடு பார்த்தவர். இறுதிப் போரின் போது மேற்குலக நாடுகள் கொடுத்த உறுதி மொழிகள் மீது அவருக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது.


 இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது என நினைக்கிறேன்... தமிழ்நாட்டில் உள்ள வைகோ, நெடுமாறன் ஆகியோர் தவறான நம்பிக்கையை கொடுத்திருக்கின்றனர்.. அதாவது இந்தியாவின் மத்தியில் பாஜக வெற்று பெற்று ஆட்சி அமைக்கும் தமிழகத்தில் ஜெயலலிதா வெற்றி பெறுவார்.. தேர்தலுக்கு பிறகு நிலைமைகள் மாறலாம் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர் என்று கேபி தெரிவித்திருக்கிறார்.


பிரபாகரன் குடும்பத்தைக் காப்பாற்றும் பிளான்


மேலும், பிரபாகரனின் மகன் சார்ளஸ் ஆண்டனி என்னுடன் தொடர்பில் இருந்தார். அவர் தமது குடும்பத்தை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல கேட்டுக் கொண்டார். பிரபாகரன் குடும்பத்தை சிறிய ரக விமானம் மூலம் கள முனையிலிருந்து காப்பாற்றி அழைத்து செல்லத் திட்டமிட்டேன். இதற்கான செலவுத் தொகை 3.5 மில்லியன் டாலர். என்னிடம் அவளவு பணம் இல்லை.. இது தொடர்பாக புலிகளின் வெளிநாட்டு நிதி விவகாரங்களை கவனித்து வந்த நெடியவனிடம் பல முறை உதவி கேட்டேன். ஆனால் நெடியவனோ பணம் கொடுக்கவில்லை என்றும் அதில் கேபி கூறியுள்ளார்.






 நன்றி - தட்ஸ் தமிழ்

PM பற்றி அரசியல் ஜோக் ஃபேஸ்புக்கில் போட்டதால் மும்பை சைபர் க்ரைம் போலீஸால் இருவர் கைது

Two Air India employees arrested for Facebook posts, spend 12 days in custody

ஃபேஸ்புக்ல சும்மா ஜாலிக்கு கூட அரசியல்வாதிக்ளை கிண்டல் பண்ணிடாதீங்கப்பா, ஆப்பு காத்திருக்கு , டைம் சரி இல்லை, சமூக வலைதளங்களுக்கு , எச்சரிக்கை 

Two Air India employees arrested for Facebook posts, spend 12 days in custody

Mumbai: Even as outrage over the arrest of two Maharashtra girls for their Facebook post on Bal Thackeray continues, another instance of harassment involving two Air India employees has come to light.

Air India cabin crew members Mayank Mohan Sharma and KVJ Rao were arrested by the cyber crime cell of the Mumbai police in May this year for material they put up on Facebook.

The two are alleged to have shared lewd jokes about politicians, made derogatory comments against the Prime Minister and insulted the national flag in their posts. That prompted a past-midnight police raid at their homes and arrest under the controversial 66(A) and 67 sections of the Information Technology Act. The two spent 12 days in police custody and were suspended by Air India.

Mr Rao said they had merely shared content easily available on the Internet.

It took the police nearly two months to make the arrests after lodging the FIR in March. Mr Sharma said the cyber cell wing investigated the complaint for over a year but never summoned them even once. The police were unavailable for comment.

Mr Rao alleged the police acted under political pressure from NCP politician Kiran Pawaskar. 


நன்றி -

ஃபர்ஸ்ட் கீர், செகண்ட் கீர் , பாதாம் கீர்


Photo: காலியாகி கொண்டிருக்கும் என் பர்ஸ் ..கவலையின்றி பசங்க!இடையே இடையே விடுமுறைகள் வந்தாலும் ,இந்த வருட கடைசி விடுமுறைதான் அதுகளுக்கும் புடிச்சிருக்கு.ஹோம்வெர்க் எல்லாம் செய்ய வேண்டாம், .அடுத்த வருசம் புத்தகங்கள் இன்னும் வாங்கலையே?
1. டியர் ! டெய்லி பஜ்ஜி சாப்பிட்டா முகத்துல பிம்பிள்ஸ் வந்துடுமா? 




அது தெரில , ஆனா உனக்கு தொப்பை வரும், எனக்கு காசு பற்றாக்குறை வரும் 



---------------------------


2. உங்க வீட்ல எப்பவும் சண்டையும் , சச்சரவுமா இருக்கே, ஏன்? 



எங்கம்மா அஜித் ரசிகை , என் மனைவி விஜய் ரசிகை 




---------------------



3. பல் துலக்கும்போது எல்லாரும்  வீதில நின்னு துலக்கறாங்க , ஆனா நீ மட்டும் பாத்ரூம்லயே துலக்கி முடிச்சுடறியே? 



 யார் கிட்டேயும் பல்லை காட்டி நின்னா என் கணவருக்கு பிடிக்காது 




-------------------



4. மேடம், ஜப்பான் அழகி பட்டம் குடுத்தது சந்தோஷமா? 

 ம் ம் , ஆனா அதுக்கு செலவு தான் 20 லட்சம் ஆகிடுச்சு 



----------



5.  125 கோடிக்கு சரக்கு வித்தே ஆகனும், இதான் டாஸ்மாக் டார்கெட் 



 விக்க முடியலைன்னா  டாஸ்மாக் ஊழியர்களே குடிச்சு அக்கவுண்ட்ல எழுதிக்குங்கன்னு சொல்ல ப்போறீங்களா? 



-------------------



Photo: தமிழ்நாட்டு மின்சாரம் போல என் லாப்டாப்பும் விட்டு விட்டு கனெக்சன் ஆகுது??எல்லாம் யாருடைய வயித்தெரிச்சலோ??மீ பாவம்!ஆஅனாலும் மொக்கைகள் தொடரும்.மின்சாரம் இல்லாமல் வாழும்போது..விட்டுவிட்டு வரும் நெட் கனெக்சன் என்ன பெரிய தைடையா
பூச்சோங்கில் அடை மழை.
இனிய மாலை வணக்கம் .


6 . ஒரு கோடிக்கு எத்தனை சைபர்னு கூட எனக்குத்தெரியாது 


 இந்த காரணத்துக்காக எல்லாம் ஊழல் வழக்குல இருந்து உங்களை ரிலீஸ் பண்ணிட முடியாது 



-------------------------


7. என்னது? கடைசில இவதான் உன்னோட சம்சாரமா? 


 நோ நோ ஆரம்பத்துல இருந்தே அவ தான் என் சம்சாரம் 



---------------


8. டாக்டர், என் மனைவி என்னை மதிப்பதே இல்லை 


 விடுங்க, எந்த வீட்ல எந்த பொண்டாட்டி தன் புருஷனை மதிச்சிருக்கா? 





-----------------


9.  காதலின் மையப்புள்ளி நட்புன்னு எப்படி சொல்றே?


 புள்ளி வெச்சுக்கோலம் போடும் பொண்ணு எனக்கு நட்பாச்சு , இப்போ காதல் ஆகிடுச்சு 




----------------



10. டியர் ! நீங்க என்னை மட்டும் தானே லவ் பண்றீங்க 

 உன்னையும் 




-----------------



Photo: தவறியது தந்தையோ தனயனோ தமக்கையோ??தப்பு தப்புதான்..தரணியை ஆளும் தயாபரனாக  இருந்தாலும்,த்ண்டனை பொதுதான்? பேசியதுக்கு ...வெயிட் பண்ணியே ஆகனும்???ஒட்டா இருந்தால் என்ன உறவா இருந்தால் என்ன??wait for your turn ?


11 ரேஸ் பைக்ல வேகமாப்போன நீங்க ஏன் வேகத்தை திடீர்னு குறைச்சுட்டீங்க? 


 மித வேகம் மிக நன்றுன்னு போர்டு பார்த்தேன் 




------------------



12. எதுக்காக இப்போ ஆம்புலன்ஸ்க்கு  ஃபோன் பண்றே?


 என் மாமியார்க்கு ஐம்புலன்சும் அடங்கிடுச்சு 





-----------------


13. -சார் ! உங்க நடிப்பை ஈசியா டாமினேட் பண்ணிடுச்சு 


 எது? 


 கூட நடிச்ச நாய் டாமி தான் 



 --------------------------


14. உன் கூந்தல் வளர கொள்ளு டெய்லி சாப்பிடறியா? ஏன்? 

 நான் போடறது குதிரை வால் கொண்டை ஆச்சே?




---------------------------


15. ஆஸ்கார் அவார்டு  ஏன் வேணாம்னு சொல்லீட்டீங்க? 



எனக்கு சுகர் இருக்கு , டாக்டர் அஸ்கா அவாய்ட் பண்ணனும்னு சொல்லீட்டார் 




--------------------



Photo: நெல்லுக்கும் உமி உண்டு,நீருக்கும் நுரை உண்டு.புல்லுக்கும் பூவிதழ் உண்டு.
(சற்றுமுன் இதைச் சொல்லி என் மகள் ,எனக்கு அறிவுறுத்துகிறாள்)வீட்டு வேலைகள்செய்ய தெரியவில்லைன்னு பாட்டியிடம் கோல் முட்டியதால்?


16. தலைவரே! ஆண்டவனுடன் மட்டும் தான் கூட்டணின்னு எப்படி சொன்னீங்க தில்லா? 



 அதாவது தமிழ் நாடை ஆ;ல்ரெடி ஆண்டவருடன் ஆளூங்கட்சியுடன் கூட்டணின்னு அர்த்தம் 



---------------------------



17. சலூன்ல பாப் சாங்க் கேட்குதே? 


 பாப் கட்டிங்க் பண்றப்ப  பாப் சாங்க் போட்டு விடுவாராம் 



--------------------------


18. டாக்டர் ! ஒரே மாசத்துல 10 கிலோ வெயிட் குறைக்க ஏதாவது வழி இருக்கா? 



 ஒரு கையை மட்டும் கட் பண்ணி ஆபரேஷன் பண்ணிடலாமா? 



-----------------------------


19. புதுசா இப்போத்தான் பைக் வாங்கறீங்களா? 


 ஆமா எப்டித்தெரியும்? 



ஃபர்ஸ்ட் கீர், செகண்ட் கீர் எப்டி போடனும்னு சொல்லிக்குடுத்துட்டு இருக்கேன், இதுல பாதாம் கீர் எதுன்னு கேட்டா எப்படி? 



---------------------------------------------


20. ரவையை ஏன் விழுங்குனே? 


 வெ:ளீல வற்றப்போ அது  வைரமா வரும்னு ஒரு நம்பிக்கை தான் 



----------------------------------




Sunday, November 25, 2012

you tube - 81 கோடி முறை பார்க்கப்பட்டு உலக சாதனை புரிந்த வீடியோ காட்சி

நம்ம ஆளுங்க ஒரு படத்தோட ட்ரெய்லரை 5 லட்சம் பேர் பார்த்தாலே அலப்பறை பண்ணுவாங்க. ஒண்ணும் இல்லை கொலை வெறிப்பாட்டை  ஒரு கோடி டைம் பார்த்ததுக்கு பண்ணுன அட்டகாசம் அடடா. ( அந்தப்படம்  அட்டர் ஃபிளாப் ஆகினது தனிக்கதை )

 யூ டியூப் ல ஒரு பாடல் காட்சி  81 கோடி முறை பார்க்கப்பட்டு உலக சாதனை புரிஞ்சிருக்கு . செம கலக்கல் டான்ஸ் , பாட்டு , இசை துள்ள வைக்குது




இன்னிக்கு பான் கீ மூன் இந்த dancer ஐ பாராட்டி பாட்டுக்கு ஒரு step போட்டு இருக்காரு



GAYLE illy endral GANGNAM STYLE nu oru dance irundhadhe namaku theriama poirukum?.WINNING MOMENT A.R. RAHMAN-TAMIL=GAYLE=GANGNAM

ரெண்டாவது படம் - கில்மாப்படமா? தமிழ் படம் புகழ் சி.எஸ். அமுதன். பேட்டி

http://chennaionline.com/images/articles/September2012/00ba38d2-7975-44a4-9d14-600af2093050OtherImage.jpg 

 

சீரியஸ் சினிமாதான் பிடிக்கும்!

 

என் முதல் படமான தமிழ் பட'த்தை காமெடி தவிர்த்து வேறு எந்த வகையிலும் வைத்து பார்க்க முடியாது. போஸ்டர் பார்க்கும் போதே அதன் வகை தெரிந்தது. ஆனால் இப்போது நான் எடுத்துக் கொண்டிருக்கும் "ரெண்டாவது பட'த்தை அப்படி எந்த வகையிலும் சேர்க்க முடியாது.


இதுதான் என தீர்க்கமாக முடிவெடுத்தால், இல்லை இல்லை இது வேறு எதுவோ சொல்லுகிறது என தோன்றும். காமெடியாக பார்த்தால் சட்டென்று சீரியஸ் தோற்றம் கொடுக்கும். எந்த வகை படம் என பார்த்து விட்டு சொல்லுங்கள்.'' திண்டுக்கலில் இருந்து மொபைலில் பேசுகிறார் சி.எஸ். அமுதன்.


http://liveupdates.in/wp-content/gallery/rendavathu-padam-movie-stills/rendavathu-padam-movie-stills-4.jpg

"தமிழ் படம்' மூலம் கோலிவுட் ஸ்டார்களுக்கு கிலி கொடுத்த இயக்குநர்.
எந்த வகை படம் இதுவென உங்களுக்கே குழப்பம் இருந்தால்.... ரசிகர்கள் என்ன ஆவார்கள்?





ரசிகர்கள் எப்போதுமே தெளிவுதான். சினிமாக்காரர்கள்தான் ஏதாவது சொல்லி அவர்களை குழப்புகிறார்கள். ""இது நல்ல படம். பாருங்கள்'' என வரும் பப்ளிசிட்டிகளை அவர்கள் நம்புவதே இல்லை. ஏதோ ஒரு ரசிகன் பார்த்து விட்டு, வெளியே வந்து ""இது நல்ல படம். பார்க்கலாம் பாஸ்'' என சொன்னால் போதும், நம்பி தியேட்டருக்கு போகிறார்கள்.



 பெரிய ஸ்டார், ஸ்டார் இயக்குநர், கிளாமர் குயின் எதுவுமே இல்லாத படங்கள்தான் இந்த வருஷ ஹிட். அந்த வகைதான் இந்தப் படம். ஆனால் காமெடியா, சீரியஸô இதில் எது அதிகமாக இருக்கும் என சொல்லத் தெரியவில்லை. ஒரு சினிமா கதைன்னா ஹீரோ, ஹீரோயின் இருவருக்கும் சம்பந்தமான சிலர், ஒரு காமெடியன், வில்லன் நடிகர்கள் இதுவெல்லாம்தான் இருக்கும். இதையெல்லாம் தவிர்த்து இதில் முப்பது பேர் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் கூட இல்லாமல் கதை நகராது. இதை எந்த வகையிலும் சேர்க்க முடியாதென சொன்னதற்கு காரணம், திரைக்கதை ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு முகம் காட்டும்.




இதுவரை எடுத்த காட்சிகளையெல்லாம் போட்டு பார்த்த போது இது எந்த வகை படம் என எங்களுக்கே புரியவில்லை. சென்டிமெண்ட் கிடையாது. எமோஷன் கொஞ்சம் கூட இல்லை. காதல் இருக்கிறது. சண்டை காட்சிகள் நிறைந்த படம். உருக வைக்கும் திரைக்காவியம் என எதுவுமே போட முடியாது. எது மாதிரியாகவும் இல்லாமல் புது மாதிரியாக இருக்கும். அது எப்படி இருக்கும் என தெரிந்து கொள்வதற்காகவே ரசிகர்கள் இந்தப் படத்தை அவசியம் பார்க்க வேண்டும்


http://liveupdates.in/wp-content/gallery/rendavathu-padam-movie-stills/rendavathu-padam-movie-stills-16.jpg

அப்படி என்ன கதை?



இவ்வளவு விவரம் சொன்ன பிறகும் கதை என்னவென்று கேட்டால் என்ன பாஸ் சொல்லுவது? உங்களுக்காக சொல்கிறேன். சென்னை திருவல்லிக்கேணி மேன்ஷனில் தங்கியிருக்கிற மூன்று இளைஞர்கள். காதல், நட்பு என அவர்களின் வாழ்க்கையில் வந்து போகும் மூன்று பெண்கள். இந்த ஆறு பேரையும் சுற்றி வருவதுதான் கதை.



 இது தவிர இன்னும் முப்பது பேர். அவர்களுக்கு படத்தில் என்ன வேலை? அதுதான் கதையின் சுவாரஸ்ய பகுதி. எல்லோரும் படுத்தி எடுக்கிற விஷயங்கள் இன்னும் பிரதான விஷயமாக இருக்கும். இதுவரை இப்படியொரு கதைக் களம் நம் சினிமாவில் கையாளப்படவில்லை. அந்தளவுக்கு விறுவிறுப்பு கூட்டியிருக்கிறேன்.



 படத்தின் இறுதி வரை உங்களால் கணிக்க முடியாத கதையும் இருக்கிறது. அதுதான் திரைக்கதையின் பலம். ரிச்சர்ட் என் கூட படித்தவன். கிட்டத்தட்ட 16 வருஷ பழக்கம். எப்போதுமே மிடுக்காக இருக்கும் மேனரிஸம்தான் அவன் பாணி. ஆனால் இதில் அவனை சுத்தமாக மாற்றியிருக்கிறேன். சும்மா ஒரு அரை மணி நேரம் படம் பார்த்தே அதிர்ச்சியாகி விட்டான்.



""தியேட்டரில் விசிலடிக்கும் ரசிகர்களுக்கு மத்தியில்தான் இந்தப் படத்தை பார்க்க வேண்டும்'' என சொல்லி அதன் பின் எந்த காட்சியையும் பார்க்கவில்லை. "களவாணி' படம் பார்த்து விட்டு விமலுக்கு வாழ்த்து சொன்னேன். ""தமிழ் படம்' முடிந்த பின் அடுத்த படத்தில் நடிக்கிறீங்க''ன்னு சொன்னேன். அதுதான் இது.



அர்விந்தும் என் நண்பன். அவனுக்கும் நல்ல பிரேக் வைத்திருக்கிறேன். நண்பர்களாக சேர்ந்து ஒரு படம் செய்யும் போது, கதைக்கு தேவையான விஷயங்களை கூடி பேச முடிகிறது. விமலுக்கு ஜோடி ரம்யா நம்பீசன். செம ஸ்கோர் கொடுத்திருக்கிறோம். அவங்க கண்களை உற்றுப் பார்த்தால் ஒரு சோகம் தெரியும். அது ஒரு நடிகைக்கு ரொம்பவே ஸ்பெஷல். அதை சரியாக நான் பயன்படுத்திருக்கிறேன்.



ரம்யாவின் கேரக்டருக்கு முதலில் பிடித்து வைத்திருந்தது விஜயலட்சுமியை. ஆனால் பழகிய விதம், ஸ்டைலான மேனரிஸங்கள் எல்லாமும் இடம் மாற்றி போட்டு விட்டது. இத்தனை வருஷம் பார்க்காத விஜயலட்சுமியை இதில் பார்க்கலாம். கிளாமரில் உச்சம் தொட்டிருக்கிறார். அவரே நினைத்தால் கூட இது மாதிரியான ஒரு கிளாமரில் இனி நடிக்க முடியாது. ஒவ்வொரு பாடலுக்கு வந்து ஆடி விட்டுப் போகும் சஞ்சனா சிங்குக்கு இதில் முக்கிய பாத்திரம். இவர்களையெல்லாம் திரைக்கதையின் புள்ளிகளாக வைத்து இணைத்திருக்கிறேன். படம் பார்த்து விட்டு சொல்லுங்கள், புது அனுபவத்தை.

http://www.kollytalk.com/wp-content/uploads/2011/12/Vijayalakshmi-hot-pic.jpg-large.jpg


ஒரு புறம் பார்த்தால் தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம் பற்றி மேடைக்கு மேடை முழங்குகிறார்கள். ஆனால் உங்களை மாதிரியான சில பேர் சினிமாவை சீரியஸாக கூட எடுத்துக் கொள்வதில்லையே? ஏன்?



எனக்கும் சீரியஸ் சினிமா பிடிக்கும். அதை எடுக்கிறவர்களையும் ரொம்பவே பிடிக்கும். ஆனால் அந்த மாதிரியான சினிமாவுக்குள் என்னால் போகவே முடியாது. இப்படித்தான் சினிமாக்கள் இருக்க வேண்டும் என எந்த கொள்கையும் எனக்கு கிடையாது. போகிற போக்கில் கதை கிடைக்கும். அப்படித்தான் "தமிழ் பட'த்தை பிடித்தேன். அதில் நிச்சயம் கதை கிடையாது.



 "ரெண்டாவது பட'த்தில் இருக்கும் கதை என்ன பாணியென்று நிச்சயம் தெரியாது. இதுதான் என் சினிமா புரிதல். "தமிழ் படம்' தயாரிப்பாளரை நிம்மதியாக தூங்க வைத்தேன். ஒவ்வொரு நிமிடமும் டென்ஷனாகி கிடந்த ரசிகர்களை அந்தப் படம் மூலம் சிரிக்க வைத்தேன். இது போதும். "பருத்தி வீரன்', "சுப்பிரமணியபுரம்' எடுத்தவர்களை பார்த்து பாராட்டி இருக்கிறேன். அது மட்டுமேதான் என்னால் செய்ய முடியும். என் பாதை வேறு. என்னை அப்படியே விட்டு விடுங்கள்


http://liveupdates.in/wp-content/gallery/rendavathu-padam-movie-stills/rendavathu-padam-movie-stills-12.jpg
.நிறைய கோலிவுட் ஸ்டார்களுக்கு "தமிழ் படம்' தந்த வருத்தம் இன்னும் இருக்குமே? ஒவ்வொரு நடிகரின் ரியாக்ஷன் எப்படி இருந்தது.




நிறைய பேர் இன்னும் வருத்தமாகத்தான் இருக்கிறார்கள். எங்கேயாவது பார்த்தால் கூட பேசமால் போகிறவர்களை பார்த்திருக்கிறேன். ஏன் என்னை மட்டும் குறி வைத்தீர்கள் என சில பேர் கேட்டார்கள். ""ஜாலியா ஒரு சினிமா. தேவைப்பட்டதை எடுத்துக்கிட்டோம். யாரையும் கஷ்டப்படுத்த எடுக்கலை''ன்னு சொன்னேன். இருந்தும் அவர்களுக்கு வருத்தம்தான். இன்னும் சில பேர். ""ரசித்து பார்த்தேன்''னு சொன்னார்கள். முதல் ஆளா பாரதிராஜா சார். "ஏய் என்னையே கிண்டல் பண்ணிட்டியாய்யா''ன்னு கேட்டார். பதில் சொல்ல தெரியாமல் நின்றேன். ""ஏன் என்னுடைய "அயன்' படத்தை கிண்டல் செய்யவில்லை என கே.வி.ஆனந்த் கேட்டார். இது மாதிரி நிறைய அனுபவங்களை "தமிழ் படம்' கொடுத்தது. சிலருடைய வருத்தங்களை வரப்போகும்"ரெண்டாவது படம்' மாற்றும் என்று நம்புகிறேன்
thanx - dinamani
http://gallery.oneindia.in/viewimage.php?module=ph&size=big&path=2012/10/&file=rendavathu-padam_134907398114.jpg

பரதேசி படத்தின் திரைக்கதை நெட்டில் வெளியானது

எரியும் பனிக்காடு எனும் நாவலைத்தான் பாலா பரதேசி ஆக்கி இருக்கிறார். அது பற்றி திரு எஸ் ராம கிருஷ்ணன்


சமீபத்தில் நான் வாசித்த தமிழ்நாவல்களில் முக்கியமானது எரியும்பனிக்காடு. பி.எச்.டேனியலால் எழுதப்பட்ட இந்த நாவல் ரெட் டீ என்ற பெயரில் ஆங்கிலத்தில் முப்பத்தியெட்டு வருடங்களுக்கு முன்பாக வெளிவந்தது.

இந்த நாவல் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழ்நாட்டின் வால்பாறையில் தேயிலை தோட்டம் உருவானதையும் அங்கு வேலைக்குச் சென்ற கூலிகளின் அவலவாழ்வையும் விவரிக்கிறது. தமிழக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வை நுட்பமாக விவரிக்கும் ஒரே நாவல் இது தான் என்பேன். இந்த நாவலைத் தமிழாக்கம் செய்தவர் இரா. முருகவேள்.

1940 ம் ஆண்டுகளில் தலைமை மருத்துவ அதிகாரியாக வால்பாறை காரமலை எஸ்டேட்டில் கால் பதித்த டேனியல் அங்குள்ள நிலவிய சகிக்க முடியாத மனிததன்மையற்ற சூழலைக்கண்டு அதை எதிர்த்துக் குரல் தந்ததோடு தென்னிந்திய தோட்ட உத்தியோகிஸ்தர்கள் சங்கம் என்ற ஒன்றையும் நிறுவி தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்காக துணை நின்றிருக்கிறார்.

தேயிலைத் தோட்டத்தின் பனிமூட்டத்தில் மறைந்து போயிருந்த ஆயிரமாயிரம் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வை நேர்த்தியாக பதிவுசெய்திருக்கிறது டேனியலின் நாவல். பிளான்டேஷன் பனோரமா என்ற கட்டுரைத்தொகுப்பும் டாக்டர்ஸ் டேல்ஸ் என்ற சிறுகதை தொகுப்பையும் ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறார் டேனியல்.  அவை இன்னமும் தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. 1969ல் இந்த நாவல் வெளியான போது அதற்கு முன்னுரை எழுதியிருக்கிறார் துணை குடியரசு தலைவர் விவிகிரி.

**

1925 ஆண்டின் டிசம்பரில் நாவல் துவங்குகிறது.  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமத்தில் வசிக்கும் அன்றாட வேலை செய்து பிழைக்கும் கருப்பனின் வாழ்வு விவரிக்கபடுகிறது. ஆறுமாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்ட கருப்பன் வேலை கிடைக்காத காரணத்தால் மிகுந்த சிரமப்படுகிறான். அவன் மனைவி வள்ளி இருப்பதைக் கொண்டு காலத்தை ஒட்டுகிறாள். நாளைக்கு என்ன செய்வது என்ற கவலை அவன் மனதை அரிக்கிறது. வேலை தேடி அதிகாலையில் அருகாமையில் உள்ள ஊரான கயற்றாறுக்கு புறப்படுகிறான்.

கயற்றாறின் அன்றைய காட்சி விவரிக்கபடுகிறது. உணவங்ககளில் தலித் மக்களுக்கு தனிக்குவளை தரப்படுவது. அவர்கள் தரையில் உட்கார்ந்து தனியே சாப்பிட வேண்டும் என்று கட்டாயபடுத்துவது. சிரட்டையில் உணவை கொண்டுவந்துவைத்துவிட்டு போய்விடும் பழக்கம் என யாவும் விவரிக்கபடுகிறது. அந்த அவலங்களுக்கு நடுவே வேலை கேட்டு யாசிக்கிறான் கருப்பன்.

அப்போது தேயிலை தோட்டங்களுக்கு ஆள்பிடிக்கும் கங்காணியான சங்கரபாண்டி. அவன் தேயிலை தோட்டத்தில் வேலை செய்தால் கைநிறைய பணம் சம்பாதிக்கலாம் நீ உன் மனைவியை கூட்டிக் கொண்டு வந்துவிடு என்று ஆசைவார்த்தை காட்டி அவனை நம்ப வைத்து முன்பணம் தந்து அனுப்பி வைக்கிறான்

வேலையில்லாமல் கரிசல்காட்டில் கிடப்பதை விட தேயிலை தோட்டவேலைக்கு போகலாம் என்றுகருப்பனும் அவன் மனைவியும் கிளம்புகிறார். அவர்களைப் போல கூலிகளாக அழைத்துவரப்பட்டவர்கள் ஒன்றாக ரயிலில் பயணம்செய்கிறார்கள். பலிமுகாம்களுக்கு ரயிலில் யூதர்கள் அழைத்துச் செல்லப்பட்ட காட்சிகளை நினைவுபடுத்துவது போன்றிருக்கிறது இந்த ரயில் பயணவிவரணை.

ரயிலில் பயணம் செய்து இறங்கி நடந்து மலையேறி அவர்கள் தேயிலைத் தோட்டம் உள்ள மலைப்பகுதிக்கு செல்வதற்குள் இருட்ட துவங்கிவிடுகிறது. இந்த பயணம் நாவலின் மிக முக்கிய பகுதியாக விவரிக்கபடுகிறது. கண்முன்னே விரியும் காட்சிகள் போல எழுத்தின் வழியே அவை நமக்கு புலப்படுகின்றன.

அவர்கள் நினைத்தது போலின்றி தேயிலை தோட்டத்து வேலை ஒரு அடிமை வாழ்வு என்பது போய் இறங்கிய முதல் நாள் இரவே தெரிந்து போய்விடுகிறது. அந்த மலையிலிருந்து எவரும் தப்பிபோக முடியாது என்ற நிலையில் அவர்களை ஆடுமாடுகளை போல கொட்டடியில் அடைக்கிறார்கள். குளிரும், கடினமான மலையில் ஏறி நடந்த வேதனையும் அவமரியாதையாக நடத்தபடுவதும்  அவர்களை உறக்கமற்று செய்கிறது.

மறுநாள் அவர்கள் கூலிகளாக பதிவு செய்யப்படுகிறார்கள். அங்கு காரணமில்லாமல் கருப்பன் அடிபடுகிறான். அவன் மனைவியை பகிரங்கமாக ரசிக்கிறான் எஸ்டேட் நிர்வாகி. இங்கே நடப்பவற்றை சகித்து கொண்டால் மட்டுமே வாழமுடியும் எதையும் சகித்து கொள்ளுங்கள் என்று உடன் இருந்தவர்கள் அமைதிபடுத்துகிறார்கள். ஆனால் கிராமத்து மனிதர்களான கருப்பனுக்கும் வள்ளிக்கும் இந்த அவமானங்கள் மிகுந்த வலியை உருவாக்கின்றன.

அங்கிருந்து வெளியேறி போகவே முடியாது என்ற  நிலையில் உடல்வருத்தம் பாராமல் அடிமை வாழ்வை நடத்த துவங்கி மூன்று ஆண்டுகள் கூலிகளாக அவர்கள் வேலை செய்வதையும் அந்த நாட்களில் பாலியல் ரீதியாக வள்ளி சந்திக்கும் நெருக்கடியும் கருப்பன் அவமதிக்கபடுவதும் அடிவாங்குவதும், அவர்களை போன்ற சக தொழிலாளர்களை வெள்ளைகார முதலாளிகளும் அவர்களது ஏவல் நாய்களும் பன்றிகளை விடவும் மிக மோசமாக நடத்தும் விதமும் விஸ்தாராமாக விவரிக்கபடுகிறது.

ஒருவகையில் அன்றைய தேயிலைத் தோட்டம் ஒரு இருண்ட உலகம். ஒரு நரகம். அதன் அவலங்கள் உலகம் அறியவில்லை. முறையான சாலைகள் கிடையாது. கடுங்குளிர். போதுமான உணவில்லை. போதுமான உடையில்லை. உறக்கமில்லை. நோய்மை எதிர்பாராத சாவு, நம்பிக்கையிழப்பின் உச்சநிலை என்று நாவல்  காட்டும் மலைவாழ்வு அதிர்ச்சியானதொரு உண்மை.

தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது, பெண்கள் பாலியல் ரீதியாக தொடர்ந்து வன்முறைக்கு உள்ளாகிறார்கள், ஆண்கள் காரணமின்றி அடித்து நொறுக்கபடுவது. அன்றாட உணவிற்கு கூட போராட வேண்டிய சூழல் என நீளும் தேயிலைத் தோட்ட வரலாறு கண்முன்னே கதையாக விரிவடைகிறது.

நாவல் வாசிப்பின் ஊடாக வாசகன் திகைத்தும் கலங்கியும் நிற்கும் தருணங்கள் நிறைய உள்ளன. குறிப்பாக தேயிலை தோட்டத்தில் திடீரென காய்ச்சல் பரவுகிறது. மலேரியா போன்ற கடும் சுரத்தில் பாதிக்கபட்டு நடுங்குகிறார்கள். ஆனால் அவர்களுக்கு வைத்தியம் செய்வதற்கு முறையான மருத்துவர்கள் கிடையாது. கம்பௌண்டராக இருந்த ஒருவர் மருத்துவராக வேலை செய்கிறார். அவராலும் அத்தனை நோயாளிகளையும் கவனிக்கமுடியவில்லை.

கருப்பனுக்கும் காய்ச்சல் அடிக்கிறது. நடுங்குகிறான். மருத்துவர் வந்து மருந்து தருகிறார். வள்ளி செய்வதறியாமல் தடுமாறுகிறாள். நோய்மையிலும் மறுநாள் காலை வேலைக்கு கிளம்பும்படியாக கங்காணி மிரட்டுகிறான். தன்னால் முடியாது என்று கருப்பன் சொன்னதும் அவன் மனைவியை வேலைக்கு அனுப்ப சொல்லி கத்துகிறான். வேறுவழியில்லாமல் அவள் வேலைக்கு செல்கிறாள். நோய் முற்றி இறந்தவர்கள் அதே மண்ணில் புதைக்கபடுகிறார்கள். நோய் பலரை காவு கொள்கிறது. அதே நேரம் இதே எஸ்டேட்டில் வெள்ளைகாரர்கள் மதுவிருந்து நடத்தி தங்கள் வாரஇறுதி கொண்டாட்டங்களை இசையோடு கழிக்கிறார்கள்.

எளிய மனிதர்களின் வாழ்க்கை எந்த அர்த்தமும் இன்று காலனிய பிரபுக்களுக்கு அடிமைதொண்டு செய்தவற்கே முடிந்து போகிறது. குளிரில் பெண்கள் விரல்கள் எரிய தேயிலை கொழுந்து கிள்ளுகிறார்கள். ஆனால் அதை எடைபோடும் ஆள் பாதியை தனது கள்ளமனைவியின் பெயரில் பதிவு செய்துவிடுகிறான். அழகான பெண்ணாக இருந்தால்இச்சைக்கு மயங்கும்படியாக வற்புறுத்துகிறான்.

நாவல் முழுவதும் வள்ளியின் மீது இச்சை மிகுந்த கண்கள் விழுந்து கொண்டேயிருக்கின்றன. ஒரு பக்கம் தொழிலாளர்கள் கீழ்தரமாக நடத்தபடுகிறார்கள். இன்னொரு பக்கம் தேயிலைத் தோட்டத்தை நிர்வாகம் செய்கின்றவர்கள் அதை சுரண்டி வாழ்கிறார்கள். அப்படி சுரண்டி வாழ்வதற்காக தனது மனைவியை வெள்ளைகாரனுக்கு கூட்டிக் கொடுக்கிறார்கள். வீட்டில் விருந்து தந்து  வெள்ளைகார பிரபுக்களை குளிப்பாட்டுகிறார்கள். ஒருவருக்கொருவர் குழிதோண்டி புதைத்து கொள்கிறார்கள். பிழைப்பிற்காக மனிதர்கள் எந்த அளவு மோசமாக நடந்து கொள்வார்கள் என்பதற்கு இந்த நாவலில் வரும் ஒட்டுண்ணிகள் சிறந்த உதாரணம்.

நாவலின் சிறப்பு அது கவனம் கொள்ளும் அடிநிலை மக்களின் வாழ்வு. நேரடியான அனுபவம் கொண்டவர் டேனியல் என்பதால் துல்லியமாக அதை விவரித்திருக்கிறார். அதுபோலவே இயற்கையை உற்று நோக்கி அவதானிக்கும் கூர்மை அவருக்கு இருந்திருக்கிறது. ஆகவேதான் தேயிலைத் தோட்டங்களில் உள்ள பறவைகள், பூச்சிகள், விதவிதவிதமான பூக்கள், ஒடைகள், மழைக்காலத்தின் அடைமழை. ஆளை மறைந்து பெய்யும் பனி என்று இயற்கையின் அத்தனை நுட்பங்களையும் தன் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார்.

மருத்துவர் என்பதால் அவருக்கு நோய்மை பற்றியும் அதனால் உருவாகும் வலியும் உளப்பிரச்சனைகளும் நன்றாக தெரிந்திருக்கிறது. இந்த நாவலில் எல்லா கதாபாத்திரங்களின் மனநிலைகளும் விரிவாக வெளிப்படுத்தபட்டுள்ளன. மோசமான குணமுடைய கதாபாத்திரங்கள் கூட அப்படி நடந்து கொள்வதற்கான காரணங்கள் விவரிக்கபடுகின்றன.

நாவலின் ஊடாக டேனியல் போல இரக்கமனது கொண்ட மருத்துவராக  ஆபிரகாம் என்ற ஒரு கதாபாத்திரம் அறிமுகமாகிறார்.  தேயிலை தோட்ட தொழிலாளர்களின் ஆரோக்கியம் குறித்து முதலாளிகளுடன் போராடுகிறார். தொழிலாளர்களை பரிவோடு கவனிக்கிறார். வள்ளி கருப்பன் இருவருமே இவரது வருகைக்கு பிறகு ஆறுதல் அடைய துவங்குகிறார். நோய்வாய்பட்ட  வள்ளி மீண்டும் தனக்கு ஒரு புதுவாழ்வு பிறக்க போகிறது என்று நம்பிக்கை கொள்கிறாள். அவர்களை போலவே அங்கிருந்த பலரும் தங்களுக்கு இனிவிடிவு காலம் என்று நம்புகிறார்கள். ஆனால் எதிர்பாராமை அவர்கள் மீழ கவிழு கருப்பனின் கனவு நிர்மூலமாக்கபடுகிறது.

நாவலின் அத்தியாயங்கள் துவங்கும் போது அதற்கு பொருத்தமானதொரு மேற்கோள்கள் டேனியலால் இணைக்கபட்டிருக்கின்றன. அவர் எந்த அளவு ஆழ்ந்து இலக்கியம் படித்தவர் என்பதை அது ஒரு பக்கம் நிருபிக்கிறது.  டிக்கன்ஸில் துவங்கி காந்தி, தோரு, லாங்பெல்லோ என்று விரிந்து பைபிள் வரையான பல்வேறு முக்கிய பகுதிகள் மேற்கோள்களாக தரப்படுகின்றன. ஒருவகையில் இந்த மேற்கோள்கள் அத்தியாயங்களின்  பிரதான அம்சத்தின் குறியீடுகளை போல காணப்படுகின்றன.

உயிரியல் ரீதியாக பார்த்தால் விலங்குகளிலேயே வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவன் மனிதன் தான். திட்டமிட்டு தனது சொந்த இனத்தை வேட்டையாடும் ஒரே விலங்கும் மனிதன் தான் என்ற வில்லியம் ஜேம்ஸின் மேற்கோள் தான் இந்த நாவலின் மொத்த சாரமும்.

நான் வாசித்தவரை இந்திய நாவல்களில் மிக அரிதாகவே தோட்ட தொழிலாளர்களின் வாழ்வு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மலையாளத்தில் விஷகன்னிகா என்ற நாவலை வாசித்திருக்கிறேன். புதுமைபித்தன் துன்பக்கேணி என்ற நீண்ட சிறுகதையை எழுதியிருக்கிறார். மலையக தேயிலை தோட்ட வாழ்வு பற்றிய தனித்த நாவல்கள் இலங்கையில் வெளியாகி உள்ளன.  சமீபத்தில் கூட டார்ஜலிங் என்ற பெயரில் தேயிலை தோட்டம் குறித்து ஆங்கில நாவல் வெளியாகியிருக்கிறது.

டேனியலின் கதை சொல்லும் குரலின் அண்மையும், கதையின் ஊடாக அவர் காட்டும் இருளும்வெளிச்சமும் மிக முக்கியமானது. குறிப்பாக நாவல் முடியும் போது ஏற்படும் மனவெழுச்சி சொல்லில் அடங்காதது.

தேயிலை தோட்டங்களின் பசுமைக்கு பின்னால் அதை உருவாக்கிய மனிதர்களின் எலும்புகள் புதையுண்டு கிடப்பதையும் பிழைக்க வந்து அங்கேயே மடிந்து போன நூற்றுக்கணக்கான மக்களின் வலி நிரம்பிய குரல்கள் இன்றும் காற்றில் கேட்பதையும் நாவலின் வழியே உணர முடிகிறது.

சுரங்க தொழிலாளர்களை பற்றிய எமிலி ஜோலாவின் நாவல் சுரங்க தொழில் முறைக்கே பல புதிய சட்ட மாற்றங்களை கொண்டுவந்தது. டிக்கன்ஸின் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய பதிவுகள் புதிய சட்டங்கள் உருவாக காரணமாக இருந்திருக்கின்றன. அந்த வகையில் ஒரு போராளியாக மலையக மக்களின் வாழ்வை செம்மைபடுத்த முன்நின்ற டேனியலின் படைப்பு நேர்மை நாவல் முழுவதும் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது.

நேரடியாக தமிழில் எழுதப்பட்டது போன்ற நெருக்கத்தை மொழிபெயர்ப்பில் கொண்டு வந்த  மொழிபெயர்ப்பாளர் முருகவேள் பாராட்டுக்கு உரியவர். நாவலை வெளியிட்ட விடியல் பதிப்பகத்திற்கு இந்த நாவல் வெளிவரக்காரணமாக இருந்த நண்பர்களும் குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.

நாம் குடிக்கும் ஒவ்வொரு கோப்பைத் தேநீருக்கு பின்னாலும் முகம் தெரியாத மனிதர்களின் வியர்வையும் கண்ணீரும் கலந்திருக்கிறது என்பதை இந்த நாவல் அழகாகப் பதிவு செய்திருக்கிறது. அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நாவல் என்று இதைச் சிபாரிசு செய்கிறேன்.

எரியும் பனிக்காடு. பி.எச்.டேனியல்.  தமிழில் இரா. முருகவேள். விடியல் பதிப்பகம். கோவை.  விலை ரூ.150.


நன்றி - எஸ் ராம கிருஷ்ணன்

பரதேசி - கலக்கல் ட்ரெய்லர், பாலாவின் பேட்டி

http://chennai365.com/wp-content/uploads/Poster/Paradesi-Movie-Latest-Posters/Paradesi-Movie-Latest-Posters-Stills4355Aa12.jpg

பாலாவின் பரதேசி படம் விரைவில் ரீலிஸ் ஆகும் என கூறப்படுகிறது. தேசிய விருது இயக்குனர் பாலா இயக்கியுள்ள படம் பரதேசி. நடிகர் முரளியின் மகன் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். தன்ஷிகா மற்றும் வேதிகா ஹீரோயினாக நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்



. இந்தப் படம் மலையாள நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. படத்திற்கு பரதேசி என்று பெயரிட்டிருக்கிறார் பாலா. படத்தின் சூட்டிங் முழுமையாக முடிந்துள்ள நிலையில், தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. இதனையடுத்து பாலா,


. இதனால் அடுத்த மாதம் மத்தியில் பரதேசி படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறும் என படக்குழு தெரிவித்துள்ளது. பரதேசி படத்துக்கு பிறகு விஷாலை வைத்து படம் இயக்க பாலா திட்டமிட்டு இருக்கிறாராம்.


நன்றி - தினமலர்



பாலாவின் ’பரதேசி’! சில தகவல்கள்!


அவன்-இவன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கும் படம் ’பரதேசி’. நடிகர் முரளியின் மகன் அதர்வா,தன்ஷிகா,வேதிகா ஆகியோர் ஹீரோ ஹீரோயின்களாக நடிக்க நடிகை உமா ரியாஸ்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘எரியும் தணல்’ என்ற மலையாள நாவலைத் தழுவி எடுக்கப்படும் பரதேசி. தமிழ்நாட்டின் மலைக்கிராமப் பகுதிகளில் படமாக்கப்பட்டுக்கொண்டிருந்த பரதேசி, கேரளாவின் சில பகுதிகளிலும் படமாக்கப்பட்டது. மூணார், குற்றாலம் போன்ற பகுதிகளில் கடைசிகட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு இப்போது டப்பிங் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறது பரதேசி யூனிட்.


இந்த படத்தில் 
வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை தன்ஷிகா அரவான் படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தன்ஷிகாவின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படாமல் போனதால் தன்ஷிகாவிற்கு எமாற்றமே.ஆனாலும் மனம் தளராமல் பாலா படத்திலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் தன்ஷிகா. 

பாலா படத்தில் நடிக்கும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சினிமா உலகில் ஒரு நல்ல மார்கெட் கிடைக்கும். எனவே தன்ஷிகா அரவானில் விட்டதை பரதேசியில் பிடிக்கிறாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த மாத இறுதியில் பரதேசி படத்தின் இசை வெளியிடப்படும் எனத் தெரிகிறது. பரதேசி படத்தின் மொத்த ஷூட்டிங் ஷெட்யூல் 90 நாட்கள் தான் என்கிற போது படம் ரிலீஸ் செய்ய தாமதம் ஆகாது என்கின்றனர் படக்குழுவினர்.
 
 நன்றி - நக்கீரன் 

http://www.cinegemini.com/wp-content/uploads/2012/10/bala-in-paradesi-movie-stills-adharvaa-murali-9.jpg

1930-களில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக அதர்வா முரளி மற்றும் கதாநாயகிகளாக வேதிகா C குமார், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.



திரைப்படத்தின்  படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாலூர், மானாமதுரை மற்றும் கேரள மாநிலம் மூணார், தலையார், தேனி மாவட்ட கண்ணக்கரை வனப் பகுதிகளில் இடைவிடாது நடைபெற்று முடிவடைந்துள்ளது.



சிறப்பு தகவல்கள்:


http://www.galatta.com/assets/gallery/movie/paradesi-9683/image-big/paradesi-18.jpg

இயக்குனர் பாலா இசை அமைப்பாளர் G V பிரகாஷ் குமார், ஒளிப்பதிவாளர் செழியன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், படத்தொகுப்பாளர் கிஷோர் ஆகியோருடன் முதன் முறையாக இணைந்து பணி புரிந்திருக்கிறார்.

பரதேசி படத்தின் படப்பிடிப்பு 90 நாட்களில் முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 இத்திரைபடத்தின் பாடல் மற்றும் டிரைலர் லண்டனில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.




இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியிட உறுதி செய்யப்பட்டுள்ளது.


நன்றி - தமிழ் மீடியா  

ஆனந்த விகடனில் வந்த பரதேசி பாலாவின் பேட்டி -http://www.adrasaka.com/2012/10/blog-post_7245.html





21.12.2012 உலகம் அழியும் என்பது உண்மையா? ஆராய்ச்சிக்கட்டுரை

உலக அழிவு- மிக அபத்தமானது


பேராசிரியர் யு.ஆர். ராவ், |

நம் முன்னே இருக்கும் தவிர்க்க இயலாத அபாயம் சூரியன் முழுமையாக எரிந்துபோவது மட்டுமே


தலைவர் பி.ஆர்.எல். கவுன்சில் & முன்னாள் தலைவர், இஸ்ரோ

ஜோதிடர்கள், கிளி ஜோதிடர்கள் மற்றும் போலி விஞ்ஞானிகள் ஆகியோர் டிசம்பர் 21-ம் தேதி உலகம் கடுமையான அழிவைச் சந்திக்கும் என கணித்துள்ளனர். மீசோ அமெரிக்கன் ஆண்டு சுற்று 5125-ன் இறுதி நாளாக இந்த தினம் வருகிறது. கருந்துளை, விண் கற்கள், விண்மீன்கள் ஆகியவற்றின் தாக்குதலால் உலகம் அழியும் என அவர்கள் கூறுகிறார்கள். இதுபோல எத்தனையோ முறை இப்படியான கணிப்புகள் உலகைப் பீதியூட்டியுள்ளன. ஆனால் அவை பலித்ததில்லை.



எந்தக் கருந்துளையும் சூரியனோடு மோதினாலோ அல்லது சூரியனைக் கடந்தாலோகூட மொத்த  கோள் குடும்பமும்  ஸ்தம்பித்துவிடும். இதில் பூமியும் அடங்கும். இருப்பினும் நமது சூரியன் பால்வெளித்திறன் வளையத்தின் ஒரு பகுதியில் அமைந் துள்ளது. அருகில் உள்ள கருந்துளையே சூரியனிடமிருந்து  28 ஆயிரம் ஒளி ஆண்டுகள் (ஒளி ஆண்டு ~ 9500 பில்லியன் கி.மீ.) தூரத்தில் இருக்கிறது. இதனால் சூரியன் கருந்துளையோடு மோதும் சாத்தியம் அறவே இல்லை.




இருப்பினும் விண் கற்கள், விண்மீன்கள் அல்லது பூமிக்கு அருகில் உள்ள வான் பொருட்கள் பூமியை மோதுவதற்கும் வாய்ப்பிருக்கிறதா என்று பார்த்தால் அதற்கும் வழியில்லை. அப்படியான நிகழ்ச்சி ஏதாவது நடந்துள்ளதா என்று பின்னோக்கிப் பார்த்தால் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்துள்ளது. இதில் பூமியில் உள்ள 60 சதவிகிதம் உயிர்கள் காலியாயின. அவற்றில் டினோசர்களும் அடங்கும்.



உலகம் முழுவதும் உள்ள வான்வெளி விஞ்ஞான அமைப்புகளும், விஞ்ஞானிகளும் நடத்திய ஆய்வில் இதுபோன்ற தாக்குதல்களால் பூமியில் குறைந்தபட்ச பாதிப்பே இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. டினோசர் உள்ளிட்ட உயிரினங்களை அழித்த நிகழ்வுபோல பேரழிவு நிகழ்வு நடப்பதற்கான வாய்ப்பும் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறையே உள்ளது. 1-6 கிமீ வரை விட்டம் உடைய வான்பொருட்கள் தாக்குவதற்கு ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறையே வாய்ப்பு உள்ளது. இந்தத் தாக்குதலால் சிறிய அளவிலான பாதிப்பே இருக்கும்.



பூமிக்கு அருகில் உள்ள அளவில் பெரிய வான் பொருட்களால் உருவாகும் ஆபத்துகளை எதிர்கொள்ளவும், கணிக்கவும் சர்வதேசரீதியில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அப்படியான வான்பொருட்கள் 1100-ல் 80 சதவிகித பொருட்களின் இயல்பை முழுமையாக விஞ்ஞானிகள் வரையறுத்துவிட்டனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிச்ச 20 சதவிகிதம் பொருட்களின் இயல்பு தாக்கத்தையும் வரையறுத்துவிட முடியும்.



140 மீட்டர் முதல் ஒரு கி.மீ வரை விட்டம் உள்ள பூமிக்கு அருகில் உள்ள வான் பொருட்கள் குறித்த விவரங்கள் கொஞ்சம் சேதங்களை அவை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கின்றன. அவற்றின் குணாதிசயங்களும் 2020க்குள் வரையறுக்கப்பட்டுவிடும். இந்த வான் பொருட்களை கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து சர்வதேச சிறு கிரக மையத்திற்கு தகவல்கள் அனுப்பப்படுகின்றன. இது கேம்ப்ரிட்ஜில் உள்ளது. இந்த அமைப்புதான் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வான் பொருட்களின் நிலைமைகளை கண் காணிக்கிறது.



இத்துடன் வான்வெளி விஞ்ஞானிகள் வான்பொருட்களால் பூமிக்கு ஆபத்து ஏற்படும்போது அந்தப் பொருட்களையே பூமியைத் தாக்கும் முன்பே சிதறடித்து விடக்கூடிய முறைகளையும் உருவாக்கி யுள்ளனர். அணு ஆயுதம் அல்லது வேறு தாக்குதல் முறைகள் வழியாக அந்த ஆபத்தை அவர்கள் தவிர்த்துவிடக்கூடிய நிலைமைதான் தற்போது உள்ளது.



நம்முன் உள்ள ஒரே தவிர்க்கஇயலாத அபாயம் என்னவெனில் சூரியன்,  தனது எரிபொருள் அனைத்தையும் இழந்து தீர்ந்துபோவதுதான். இருப்பினும் சூரியன் தொடர்பாக நடத்திய விரிவான ஆய்வுகளின்படி, அது 5000 மில்லியன் ஆண்டுகளுக்கு சுடர்ந்து  ஒளிவிட்டுக் கொண்டு தான் இருக்கும் என்பது தெளிவாகியுள்ளது. அதனால் தற்போதைக்கு நமது உலகமோ கோள் குடும்பமோ எந்த வகையான அழிவு நிலையையும் சந்திக்கும் வாய்ப்பே இல்லை என்றே சொல்லிவிடலாம். அதற்கு இன்னும் நீண்டகாலம் நாம் காத்திருக்க வேண்டும்.



இந்நிலையில் உலக அழிவு பற்றி வரும் அபத்தமான கணிப்புகளை மக்கள் நம்புவது துயரமானது. இதுபோன்ற கணிப்புகளுக்கு முழுமையாக விஞ்ஞான அடிப்படையே இல்லை. உலக அழிவு நாள் அல்லது பிரளயம் டிசம்பர் 21-ம் தேதி ஏற்படலாம் என்பதும், இதனால் உலகம் அழியும் என்பதும் முழுமையாக பொய்யானது, ஆதார மற்றது, முட்டாள்தனமானது.   


நன்றி - சண்டே இண்டியன்

கமலிடம் நான் கற்றுக்கொண்டது - பேராசியர் கு.ஞானசம்பந்தன் பேட்டி

http://www.natpu.in/wp-content/uploads/2011/12/Kamal-Nam-kalathu-nayakan-Manaa-122.jpgஎன் உடம்புதான் எனக்கு டாக்டர்!''


ஆரோக்கிய ரகசியம் சொல்கிறார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்
பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் எனப் பல முகங்கள் கொண்டவர்   கு.ஞானசம்பந்தன். மேடைப் பேச்சில் மட்டும் அல்ல... நேரடியாகப் பேசும்போதும் நெஞ்சம் கவர்கிறார்          கு.ஞா. கல்லூரி, பட்டிமன்றம், சினிமா எனச் சிறிதும் ஓய்வின்றி பம்பரமாகச் சுழலும் இந்தச் சோழவந்தான்காரரிடம் ஓர் அழகிய மாலைப்பொழுதில் பேசினோம். 



''என் வயசை மட்டும் கேட்காதீங்க... ஆனால், இன்னும் ரெண்டு வருஷத்துல பேராசிரியர் பணியில் இருந்து 'ரிட்டையர்டு’ ஆகப்போறதை மட்டும் சொல்லிக்கறேன்...'' என்று தனக்கே உரித்தான வெகுளிச் சிரிப்போடு பேச்சை ஆரம்பிக்கிறார்.


''உங்களின் முகத்தில் எப்போதும் சிரிப்பு ஒட்டியிருக்கும்... எப்படி அப்படியே மெயின்டெய்ன் செய்கிறீர்கள்?' 



''மகிழ்ச்சியாக இருந்தாலே போதும், எந்த வியாதியும் நம்மை அண்டாது. நான் மட்டும் அல்ல, என்னைச் சுத்தி இருக்கிறவங்களும் எப்போதும் மகிழ்ச்சியா இருக்கணும்னு நினைக்கிறவன் நான். இப்படி ஒவ்வொரு நாளும்  நானும் மகிழ்ச்சியாக இருந்து மத்தவங்களையும் மகிழ்ச்சிப்படுத்துறதுதான் என்னோட வேலை. மகிழ்ச்சின்னு வார்த்தையால சொன்னால் மட்டும் போதுமா...? மகிழ்ச்சியின் பிரதிபலிப்பு மலர்கின்ற புன்னைகையில்தானே தெரியும்!''




''நீங்களும் கமல் சாரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு... அவர் உங்களுக்குச் சொன்ன ஹெல்த் டிப்ஸ் என்ன?'' 



''கமல் சார் என்கிட்ட சொன்னதைவிட, அவரைப் பார்த்தே நான் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டு இருக்கேன். அவர் சாப்பிடும்போது, சாதாரணமாக் கூட்டு, பொரியல் வைக்கிற மாதிரியான ஒரு சின்ன கிண்ணத்துலதான் அவர் சாப்பிட வேண்டிய மொத்த சாதமும் இருக்கும். ஆனால், அதேசமயம் நிறையக் காய்கறிகள் சாப்பிடுவார். 'சாதம் வைக்கிற கிண்ணத்துல காய்கறிகளை வெச்சு சாப்பிடணும்; காய்கறிகள் வைக்கிற கிண்ணம் அளவுக்குத்தான் சாதம் சாப்பிடணும்’னு சொல்வார்.



 அதையேதான் நானும் கடைப்பிடிக்கிறேன். அவர் என்கிட்ட அடிக்கடி, 'உடற்பயிற்சி எல்லாருக்குமே ரொம்ப முக்கியம். அதிலும் குறிப்பாக 40 வயசைத் தாண்டினவங்க தினமும் குறைந்தபட்சம் ஒரு பயிற்சியாவது செய்யணும்’னு சொல்வார். 'ஆன்மிகத்துக்கும் யோகாவுக்கும் சம்பந்தம் இல்லை, எல்லோரும் அவசியம் யோகா பண்ணணும்!’, 'புரதச் சத்து நிறைந்த உணவுகளை அதிகமா எடுத்துக்கணும்’ இதெல்லாம் கமல் சார் எனக்குச் சொன்ன ஹெல்த் டிப்ஸ். கமல் சார் ஒரு கல்லூரி மாதிரி. உணவு தொடங்கி உணர்வு வரைக்கும் எல்லாத்தையும் அவர்கிட்ட இருந்து கத்துக்கலாம்!



''உங்க உணவு முறை எப்படி?'' 



''நான் எப்போதுமே பசியோட சாப்பிட உட்கார்ந்து, பசியோடவே டைனிங் டேபிள்ல இருந்து எழுந்திடுவேன். தட்டுல குறைவான உணவை வைத்துத்தான் சாப்பிடுவேன். தட்டுல நிறையப் போட்டுக்கிட்டு அப்புறம் சாப்பாடு வீணாயிடுமேன்னு மல்லுக்கட்டி சாப்பிடமாட்டேன்.''



''ஆரோக்கிய ரகசியம் சொல்லுங்க?'' 



''பொதுவா என்னை மாதிரி ஆட்களுக்கு ராத்திரி ரொம்ப நேரம் கண் விழிக்கும் பழக்கம் இருக்கும். தினமும் ராத்திரி கண் விழிச்சு எதையாவது எழுதிக்கிட்டே இருப்பேன். அதை ஈடு செய்யும் விதமாகத் தினமும் காலேஜ் முடிஞ்சு மதியம் வீட்டுக்கு வந்ததும் சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டித்தூக்கம் தூங்குவேன். அந்தத் தூக்கம் என்னைச் சோர்வடையாமல் பார்த்துக்கும்.



 ராத்திரி கண் விழிப்பிற்கு உதவும். தினமும் தவறாமல் வாக்கிங் போவேன். யோகா செய்யத் தவற மாட்டேன். 28 வருஷமாக வாத்தியார் வேலை பார்க்கிறேன். இதுவரைக்கும் நான் ஒருநாள்கூட வகுப்புல உட்கார்ந்து பாடம் நடத்தியது இல்லை. நின்னுக்கிட்டுதான் பாடம் நடத்துவேன். பத்து வருஷங்களுக்கு முன்னாடி வரைக்கும் சைக்கிள்லதான் வெளியில் போய்க்கிட்டு இருந்தேன். இப்போ பிரபலம் ஆகிட்டதால அது முடியறதில்லை.



 எல்லா விவசாய வேலைகளும் எனக்குத் தெரியும். காலையில் எழுந்ததுமே வெறும் வயித்துல ஒரு லிட்டர் தண்ணீர் குடிச்சுடுவேன். மற்ற நேரங்கள்லயும் நிறையத் தண்ணீர் குடிப்பேன். வெளி இடங்களில் தண்ணீர் குடிக்கவே மாட்டேன். அது என்னோட தொண்டைக்கு ஆகாது. அதனால், எங்கே போனாலும் வீட்டில் இருந்தே தண்ணீர் எடுத்துட்டுப் போயிடுவேன்.



 ஐஸ்கிரீம் மாதிரியான குளிர்ச்சியான பொருட்களைத் தொடவே மாட்டேன். எனக்கு எதெல்லாம் ஒத்துவரும், வராதுன்னு பார்த்துப் பார்த்து நடந்துப்பேன். என் உடம்பே எனக்கு டாக்டர் மாதிரி. அது எனக்கு எல்லாத்தையும் சரியாச் சொல்லிடும். ஏன்னா, ஒருதடவை நம்ம உடம்புக்கு ஏற்றுக் கொள்ளாத ஒரு உணவுப்பொருளைச் சாப்பிட்டோம்னா அதை வெளியேத்த நம்ம உடம்பு எவ்வளவு கஷ்டப்படுது, அந்த கஷ்டத்தை நான் புரிஞ்சு நடந்துப்பேன்.''



''உடல் ஆரோக்கியம் பற்றி மத்தவங்களுக்கு நீங்க சொல்ல விரும்புவது? 




''வள்ளுவர், 'நா காக்க காவாக்கால்...’ அப்படின்னு சொன்னது, பேச்சை மட்டும் இல்லை, உணவு விஷயத்தையும் சேர்த்துத்தான். அதை நாம கடைப்பிடிக்கணும். நாற்பது வயதைக் கடந்தவங்க சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், கொழுப்பு இந்த மூன்றும் சரியான அளவில் இருக்கான்னு அடிக்கடி பரிசோதனை பண்ணிக்கனும். சுய வைத்தியம் கூடாது. மருந்து விஷயத்தில் கண்ட பரிந்துரைகளைக் கேட்கக்கூடாது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் கண்டிப்பா ஒரு 'ஃபேமிலி டாக்டர்’ இருக்கணும். பல் டாக்டர்கிட்டப் போனாலும்கூட ஃபேமிலி’ டாக்டரை ஒருதடவை கன்சல்ட் பண்ணனும். நமக்குன்னு ஏதாவது 'மெடிக்கல் ரெக்கார்ட்ஸ்’ இருந்தால் அதை நாம எந்த ஊருக்குப் போனாலும் கூடவே எடுத்துக்கிட்டு போகணும். பசிச்சா சாப்பிடணும். தூக்கம் வந்தால் தூங்கணும்!'' என்றவர் இறுதியாக எல்லோருக்குமான ஆரோக்கிய அறிவுரையாகத் தன் தந்தை பகர்ந்த வார்த்தைகளை நம்மிடம் பகர்ந்தார்.




''ஐம்பது வயசு வரைக்கும் நாம சொல்றதை உடம்பு கேட்கும், ஐம்பது வயசுக்கு மேல உடம்பு சொல்றதை நாம கேட்டே ஆகணும்!''



எவ்வளவு உண்மையான வார்த்தைகள்!


நன்றி - டாக்டர் விகடன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghdwVN_NMji84PYSAwv2JBhkqtPniEif3WBIC1HX5RlfoOQ8QK3_6iu52BKf6eHKHYAF6kO6ScyJi0pr003rTW_MmuWY2t1xc1K6dcLi0sQE6-evyisKnbSkD3_yzoMto0rhrjGFAkZF7N/s0/kamal_hassan_gautami_film_france_20.jpg

ஒல்லியா இருக்கும் பெண்ணை கட்டிக்கிட்டா ஆபத்து கம்மியா?


@senthilcp neenga thane??
1. உங்க எழுத்தை ரசிக்கிறேன், ஆனா உங்களை லவ் பண்ண முடியாது.


குழப்பாதே, நான் எழுதுனதே உன்னை வர்ணிச்சுதான் ;-)


--------------------



2.  மின்சாரம்கறது கிட்டத்தட்ட மச்சினியோட சிரிப்பு மாதிரி , பார்க்கறது ரொம்ப அபூர்வம்,டக்னு யூஸ் பண்ணிக்கனும் 




-------------------



3. மனைவி எப்பவும் போல் கோபமா இருந்தா அதைகுறைக்கும் குறுக்கு வழி டியர் ,நம்ம மேரேஜ் வீடியோ பார்க்கலாமா? என கேட்பதே;-) 




--------------------------



4. டியர்.நான் கோபமா இருக்கேன்.உங்க கை என் மேல படக்கூடாது. 



நீ மட்டும் என்னை அடிச்சியே? 



------------------------------


5. ஒல்லியா இருக்கும் பெண்ணை கட்டிக்கிட்டா ஆபத்து கம்மின்னு சிலர் நினைக்கறாங்க .அவங்க அடிச்சாதான் சுரீர்னு வலிக்கும் 




-------------------------
http://pbs.twimg.com/media/A6iXDDzCQAA0IkD.jpg


6. உள் குத்துன்னா என்ன? 


ரோட்ல சம்சாரம் கூட பேசிட்டு வரப்ப ஏதாவது சண்டை வந்தா வீட்டுக்கு வந்ததும் எல்லா கதவும் க்ளோஸ் பண்ணிட்டு நம்மை குமுறு குமுறு என  குமுறவதே உள் குத்து 



----------------------------



7. புருஷன் கிட்டே கோவிச்சுக்கிட்டு தாய்வீடுு போகும் சம்சாரமும் ,தமிழ்நாட்ல அடிக்கடி காணாம போகும் மின்சாரமும் எப்போ வரும்னு சொல்லமுடியாது 



------------------------


8. காதலிக்கும்போது - தேவர்கள் போற்றும் தேவயானி .

மணம் ஆன 90 நாட்கள் கழித்து - தேவயானி இனியும் தேவையா நீ? 




-------------------------------------



9. நான் பச்சை மண்ணுனு சொல்றவங்க பச்சை பச்சையா பேசுவாங்களோ ? 



------------------


10. மற்ற நாட்களில் சைட் அடிப்பதை விட வெள்ளிக்கிழமைகளில் சைட் அடித்தால்் திருப்தியாக உள்ளது. 




--------------------------------

Enjoy ur weekend....!


11. லாங் ஷாட்ல பாத்தா அஸ்கா அனுஷ்கா மாதிரி தெரியும்,கிட்ட போனா தான் வரலட்சுமி ின்னு புரியும்#வாழ்க்கை 


----------------


12. சிம்புவோட டேன்ஸ் ஆடுவது சுலபமில்லை-வரலட்சுமி # ஆமா அடிக்கடி சில்மிஷம் பண்ணுவாரு 



------------------


13.  லிங்க் = சுட்டி ,பெண்கள் அணியும் நெத்திச்சுட்டி = ஹெட் லிங்க்?


--------------



14. சனிக்கிழமை மட்டுமில்லாமல் சம்சாரத்துடன் விவாதிக்காமல் இருக்கும் எல்லா நாளும் நமக்கு இனிய நாளே! வாயைகுடுத்து மாட்டிக்கிட்டா ஏழரை ;-))




---------------------------


15.  பொண்ணு ட்விட்டராமே?அவங்க ட்வீட்ஸ் காட்டுங்க பார்ப்போம் #




 தனி ட்வீட்ஸ் அதிகம் இருக்காது.மேக்சிமம் கடலை ட்வீட்ஸ்தான் ,ஓக்கேவா?




------------------------



Photo




16. தையல் சொல் கேளீர். -ஒளவையார் # தையல் போட்ட நர்ஸ் சொல்லையா? தையல் தெச்ச லேடி டெய்லர் பேச்சையா?




---------------------



17. ட்விட்டர்ல இருக்கற யாரும் அரட்டை அடிச்சேன்னு சொல்லிட முடியாது.கோவை கலவரம் ஆகிடும் # அரட்டை கேர்ள் ;-))





--------------------



18. பசங்க மீசையை எடுத்துட்டா இன்னும் யூத் ஆகிடுவோம்.பொண்ணுங்க மீசை வெச்சா என்ன ஆகும்? கி கி கி




----------------------



19வாழ்ந்து அனுபவச்சவங்களை வாழ்த்தி அனுப்பும் இழவு வீட்டு மேளம் தான் தப்பாட்ட ஒலி # 90 வயசு தாண்டி இருந்தா




-----------------


20. பொண்ணுங்க சேலை கட்ட ஒரு மணி நேரம் பண்ணுவாங்க.டி பி மாத்த மட்டும் ஒரு நிமிஷம் போதும் போல. டக்கு டக்குனு மாத்துறாங்க.




------------------



உனது பாடல் கேட்கும் காலம் :

விசுவாசமற்ற ஒரு நபரின் முன்பு
உன் கதறல்
அல்லது நாடகம்
துவங்குகிறது
நான் இரவெல்லாம் செருமுகிறேன்

ஆழ்ந்த கனவுகளில்
உன் உடலின் புனைவு குறித்து
ஒரு தலையணையை
போதத்தின் காரணமாக
படுக்கை விரிப்புகளின் முனையைப்
பற்றுகிறேன்
கீழே விழுகிறேன்

ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான
மரண பயம் கொண்ட
ஆழ்ந்த பள்ளத்தாக்கில்
படுக்கையிலிருந்து கீழே விழுபவர்கள்
முதலில் மரங்களில் இருந்து உறக்கத்தில்
தவறி விழுந்தவர்கள்தான்

நான் வேட்டையாடும் மாமிசங்களின் வரிசையில்
தற்செயலாய் உன்னைச் சேர்த்தேன்
உன் மேனியின் உப்பு நெடி
என்மேல் அதனை நிகழ்த்தியது
சொல்லக் கூடாது உன் முன் தத்துவம்
அது காட்டு எலிகளின் வசிப்பிடம்போல்
அத்தனை குப்பைகளையும் சேகரித்து
வைத்திருக்கிறது
நீ அடித்துப் புரட்டு
தலைகீழாக்கு
என் வரலாற்றின் பிரயோசனமற்ற செய்தியை
அதன் துளிர்களை
ஒட்டகங்கள்போல் அசைபோடு
மேலும்
உன் முகம் பிரகாசமாயிருக்கிறது
ஆயினும்
நிலவின் கீழ் அமைதியாக உறங்கும்
என் பால்யத்தினுள்
உன் பாடல் கேட்கும் காலம்
எத்தனை விசுவாசமற்றது.


21. டியர், காதலி-தோழிக்கு ஆறு வித்தியாசங்கள் சொல்லுங்க .


முதல்ல உன் தோழியை கூட்டிட்டு வா, பார்த்துட்டு ஒப்பிடறேன் ;-)



-------------------


22. கமல் - சார், கிராம வழக்குல படுவா-ன்னா ஒரு செல்லத்திட்டல் சார்



 , சென்சார் - ஒத்துக்க மாட்டோம், படு வா அப்டினு டபுள் மினிங்க் # விஸ்வரூபம்



--------------------------


23. ஆம் ஆத்மி" பார்டி =மாம்பழ மனிதர் = டாக்டர் ராம்தாஸ்? # கேஜ்ரிவால் மயக்கம்





------------------------



24. இன்பம், துன்பம், சுகம், துக்கம், வெற்றி, தோல்வி கலந்தது தான் வாழ்க்கை- ஜெ# ஏதோ புது வரி போடப்போறாங்க போல



--------------------------



25. கைது செய்யவில்லை அந்த பெண்களை பாதுகாக்கவே அழைத்து சென்றோம் - மும்பை போலிஸ்# டகால்டி பல்டி




-----------------------------

http://pbs.twimg.com/media/A8d0PZBCMAEVuoQ.jpg
26. மேத்ஸ் மிஸ் - லாகரிதம் பத்தி நடத்தப்போறேன், எனி டவுட் ?



 லொள் மாணவன் - எப்போ லாக் ஆஃப்? மிஸ்



------------------------


27. ஒரு பொய்யாவது சொல் கண்ணே! உங்கம்மாதான் என் மாமியா என்று, அந்த சொல்லில் மச்சினி வருவா




----------------------------


28. அரவிந்த் ஜெஜ்ரிவால் கட்சியின் பெயர் 'ஆம் ஆத்மி' # தமிழ் ல பொது மனிதன், கொள்கைப்பாட்டு -மனிதன் மனிதன் எவன் தான் மனிதன்?




--------------------------



29. கடனட்டை,டவுன் பஸ்ஸில் ஏறிய கட்டை தேய்ப்பதில் உள்ள மகிழ்ச்சி பின்பு அடிபட்டதும் காணாமல் போய்விடுகிறது. # சும்மா ஒ எ கீ ;-)




----------------------



30. அமலா பால் இளைச்சுட்டா அவரை அமலா லைட் பால்னு சொல்லலாமா?



------------

Good Morning,

Saturday, November 24, 2012

அஜ்மல் கசாப்புக்கு டெங்கு என்ற புரளி ஏன்? ஜூ வி கட்டுரை

அஜ்மல் கசாப்பின் கடைசி நிமிடங்கள்!

டெல்லி, மும்பை அரசு மேல்மட்ட அதிகாரிகள் கடந்த வாரம் ரொம்பவே பிஸி. 'சி- 7096' என்று குறிப்பிட்ட ஃபைல் அதிரகசியமாக பல இடங்களுக்கும் சென்றுவந்தது. அது, அஜ்மல் கசாப் ஃபைல் என்பது, அவர் தூக்கில் போடப்பட்ட பிறகுதான் மற்றவர்களுக்குத் தெரியவந்தது. 


மும்பைத் தாக்குதல் தீவிரவாதி கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து 2010-ம் ஆண்டு உத்தரவிட்டது நீதிமன்றம். அதன் பிறகு, பல்வேறு கட்டங்களைக் கடந்து, தூக்குத் தண்டனையை மறுபரிசீலனை செய்யும் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இந்தத் தகவலை கசாப்பிடம் சிறைச்சாலை அதிகாரி பக்குவமாக எடுத்துச்சொல்லி, மரண அறிவிப்பு அறிக்கையில் கையெழுத்து வாங்கினார். 'குப்'பென்று வியர்த்துக்கொட்ட, கைகள் நடுங்க அந்த வாரன்ட்டில் கையெழுத்துப் போட்டாராம் கசாப். 


அந்த நிமிடம் முதல் மரண பீதி அவர் முகத்தில் தொற்றிக்கொண்டது. அதையடுத்து, அவ்வப்போது பிதற்ற ஆரம்பித்தாராம். கடந்த நான்கு வருடங்களாக கசாப்புடன் நன்கு பழகிய சிறைச்சாலை அதிகாரிகளிடம் அவர் சொன்ன விஷயங்களின் சாராம்சம் இதுதான். 'என்னுடன் சேர்த்து 10 பேர் கடல் வழியாக படகில் மும்பைக்குள் நுழைந்தோம். அவர்கள் அனைவரும் 26/11 தாக்குதலில் இறந்துவிட்டனர். அவர்களின் உடல்களை என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை. என் உடலையும் அதுபோல செய்துவிடாதீர்கள்!’ என்று கெஞ்சி இருக்கிறார்.



ஏன் என்பதற்குக் காரணம் இருக்கிறது.


மும்பையில் 2008-ம் வருடம் நவம்பர் 26-ம் தேதி திடீரென எட்டு இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது ஒன்பது தீவிரவாதிகள் 60 மணி நேரத் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்​பட்டனர். அஜ்மல் கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டார். இறந்த ஒன்பது தீவிரவாதிகளின் உடல்களை ரகசியமாக எடுத்துச் சென்று கடலில் அடக்கம் செய்துவிட்டதாக போலீஸ் சொல்கிறது. அது போலவே, தனது உடலையும் கடல் சமாதி செய்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார் கசாப். மதரீதியாக சடங்குகள் செய்யப்பட வேண்டும் என்பது அவரது விருப்பம். அப்படித்தான் நடந்தது என்று இப்போது சிலர் சொல்கிறார்கள்.

கசாப்பைத் தூக்கில் போடும் ஆபரேஷன் 'எக்ஸ்'ஸின் முதல் கட்டமாக, அவருக்கு டெங்குக் காய்ச்சல் என்று செய்தி பரப்பப்பட்டது. மின்னல் வேகத்தில் அவரின் ரத்த சாம்பிள்கள் சிறைச்சாலைக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது. மேல் சிகிச்சைக்காக எந்த நேரமும் சிறைக்கு வெளியே காரில் அழைத்துச் செல்லக்கூடும் என்ற தகவலையும் கசியவிட்டனர்.




நவம்பர் 19-ம் தேதி இரவு. ஆர்தர் ரோடு சிறைச்சாலை. தூங்கப்போவதற்கு முன், கசாப் எப்போதும் பிரபல பாடகர் முகேஷ் பாடிய பாடலை தனக்கே உரித்தான குரலில் பாடுவாராம். 'நான் இந்த உலகத்தைவிட்டுப் போகிறேன். என்னை நினைப்பதாக இருந்தால், தயவுசெய்து எனக்காக அழக் கூடாது' என்கிற பாடல் அது. 




அன்றும் இந்தப் பாடலை கசாப் பாடி முடித்தவுடன், சிறைச்சாலை அதிகாரி அவரது செல் உள்ளே எட்டிப்பார்த்து, 'கசாப்... உன்னை புனேயில் இருக்கும் எரவாடா சிறைச்சாலைக்கு மாற்றும்படி மேலிடத்தில் இருந்து திடீர் உத்தரவு. அதிகாலை ரெடியாக இரு. இங்கே இருக்கும் உனது பொருட்களை விட்டுவிடு. இனி அவை உனக்குத் தேவைப்படாது' என்று சொல்லிவிட்டுப் போனார். கசாப்புக்கு நன்றாகவே தெரியும்... எரவாடா சிறைச்சாலையில் தன்னைத் தூக்கில் போடப்போகிறார்கள் என்பது.




நள்ளிரவு நேரம்...



ராணுவ ஹெலிகாப்டர் மத்திய மும்பையின் முக்கியமான இடத்தில் வந்து இறங்கியது. அதிரடித் தாக்குதலில் கில்லாடிகளான தேசியப் பாதுகாப்புப் படை (என்.எஸ்.ஜி) கமாண்டோக்கள் அதில் இருந்து குதித்தனர். மறு உத்தரவுக்காகக் காத்திருந்தனர்.
மரண பீதியில் தூங்காமல் தவித்த கசாப்பை, நள்ளிரவு நேரத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் தட்டி எழுப்பி காரில் ஏற்றினர். 



சீறிப் பாய்ந்து இருளில் மறைந்தது கார். இந்தோ-திபெத்தியன் போலீஸ் படையினரின் அணிவகுப்புத் தொடர்ந்தது. கசாப்புக்கு டெங்குக் காய்ச்சல் சிகிச்சைக்காக காரில் அழைத்துச் செல்கிறார்கள் என்ற தகவல் வெளியே கசியவிடப்பட்டது.




அதே நேரம், புனேயில் உள்ள எரவாடா சிறைச்சாலையில் ஏழு அதிகாரிகள் பரபரப்பாக இயங்கிக்​கொண்டு இருந்தனர். 'யாரோ ஒரு தீவிர​வாதியை அழைத்துவரப் போகிறார்கள். அவரை சிறப்பு செல்லில் அடைக்கவேண்டும்'  என்று சிறைச்சாலையின் உயர் அதிகாரி, சக அதிகாரிகள் ஆறு பேரிடமும் சொல்லிக்கொண்டு இருந்தனர். டாக்டர்கள், வருவாய்த் துறை அதிகாரிகள், வீடியோகிராஃபர், போட்டோகிராஃபர், நீதித் துறை அதிகாரி, புனே போலீஸ் கமிஷனர் ஆகியோர் அடுத்தடுத்து சிறைச்சாலைக்குள் வந்து சேர்ந்தனர்.




'ஒரு முக்கிய அசைன்மென்ட். நவம்பர் 21 காலை 7.45 வரை நீங்கள் யாரும் வெளியே போக முடியாது. இங்கேதான் இருக்கவேண்டும்’ என்று விவரங்களை அடுக்கினர். மேலும் அனைவரது செல்போன்களையும் வாங்கிக் கொண்டு, அசைன் மென்ட் முடிந்த பிறகு தருவதாகக் கூறினர்.



அந்த நேரத்தில், தூக்குத் தண்டனை நிறைவேற்றும் நபர் வந்து சேர்ந்தார். 'யாரை அவர் தூக்கில் போடப்போகிறார்?' என்பதைச் சொல்லாமல், ஒரு தீவிரவாதி என்று பொத்தாம்பொதுவாகச் சொன்​னார்கள். இதே நேரத்தில், சிறைச்சாலை ஊழியர்கள் சிலர் ஆறு அடி நீளத்துக்கு குழி ஒன்றைத் தோண்டி இருந்தனர். சிறைச்சாலை முன்னேற்பாடுகளை டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகள் 'லைவ்'வாகப் பார்க்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டன.




இது ஒருபுறம் இருக்க... கசாப்பின் குடும்பத்தின​ருக்கு கூரியரில் தபால் அனுப்பியது, பாகிஸ்தான் நாட்டுத் தூதரகத்துக்கு முன்கூட்டியே தகவல் சொல்லி உடலை வாங்கிக்கொள்வது பற்றி கருத்துக் கேட்டது போன்ற விவகாரங்களை, இந்திய வெளிவிவகாரத் துறை கனகச்சிதமாய் செய்தது.  



கசாப் இருந்த கார் நேராக ஹெலிபேடுக்குச் சென்றது. அங்கே நின்ற ஹெலிகாப்டரில் கசாப் ஏற்றப்பட்டார். அங்கே இருந்து 120 கி.மீ தொலைவில் புனேயில் உள்ள எரவாடா சிறைச்சாலைக்கு அருகே ஹெலிகாப்டர் இறங்கியது. அங்கு தயாராக நின்ற காரில் கசாப் ஏற்றப்பட்டார். சிறைச்சாலை நோக்கி கார் சென்றது. சிறைச்சாலை வாசல் கதவு திறக்கப்பட்டு, உள்ளே நுழைந்தது கார். சிறப்பு செல் உள்ளே கசாப்பை அழைத்துச்சென்று அடைத்தனர். அங்கேயும், பிரபல பாடகர்கள் முகேஷ், ரஃபி இருவரும் பாடிய பாடல்களைப் பாடியபடி இருந்தார் கசாப்.




தூக்கிலிடுவதற்கு முன் மனம் வெறுத்த நிலையில், செல்லின் சுவரில் தலையை மோதியோ அல்லது வேறு வகையில் உடலில் காயம் ஏற்படுத்திக் கொண்டாலோ, அது சர்ச்சையைக் கிளப்பி​விடும் என்பதால்,  கசாப்பை அருகில் இருந்து கவனித்துக்கொண்டே இருந்தார் சிறைச்சாலையின் உயர் அதிகாரி ஒருவர். விடிய விடிய இவர் தூங்கவில்லை. 


ஆனால், கசாப் தூங்கியதாகச் சொல்கிறார்கள். எரவாடி சிறைச்சாலைக்கு வந்தது முதல் கசாப்பை எந்தத் தொந்தரவும் செய்யாமல், மௌனம் காத்திருக்கிறார்கள் அதிகாரிகள். சில நேரம் ஏதோ யோசித்தபடி நடந்தாராம். சிறைச்சாலை சாப்பாடுகளை சரிவரச் சாப்பிடவில்லையாம். பசி இல்லை என்று சொல்லி முகத்தைத் திருப்பிக்​கொண்டாராம். ஒரு தக்காளிப் பழம் உண்ட​தாகச் சொல்கிறார்கள்.  



நவம்பர் 21. அதிகாலை நேரம்... கசாப்பை சிறைச்சாலை அதிகாரிகள் எழுப்பிவிட்டனர். பிரார்த்தனை செய்தார். டாக்டர்கள் உள்ளே நுழைந்தனர். அவரது உடலைப் பரிசோதித்தனர். 52.5 கிலோ எடை. ரத்த அழுத்தம் 120/80. ஆக, உடல்நிலை நார்மலாக இருப்பதாக சர்ட்டிஃபிகேட் தந்தனர். அதையடுத்து, சிறைச்சாலையில் அதிகாரி கசாப்பிடம் கடைசி ஆசை என்ன என்று விசாரித்தார். 'எதுவும் இல்லை' என்று சிம்பிளாகப் பதில் அளித்தாராம் 



கசாப். அடுத்த சில நிமிடங்களில் தூக்கு மேடை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டார். மேடையில் ஏற்றி நிற்கவைத்து, கழுத்தில் தூக்குக் கயிறை மாட்டினர். உயர் அதிகாரி சிக்னல் காட்டியதும், மேடையின் லீவர் திறக்கப்பட... ஒரே ஒரு துள்ளலுடன் அடங்கியது கசாப்பின் உயிர். 10 நிமிடங்கள் அதே கயிற்றில் தொங்கியபடி உடல் இருக்க... அதை இறக்கிப் பரிசோதித்த டாக்டர், கசாப் இறந்துவிட்டதாக அறிவித்தார்.



 அடுத்த ஒரு மணி நேரத்தில் மதச் சடங்குகளின்படி சிறைச்சாலையின் உள்ளே அடக்கம் செய்து முடித்தனர் சிறைச்சாலை அதிகாரிகள். அதன் பிறகுதான், கசாப் எரவாடி சிறைச்சாலையில் தூக்கில் போடப்பட்டு இறந்த விஷயம் வெளி உலகுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.



சுமார் 24 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையின் முட்டை வடிவ செல், தற்போது கசாப் இல்லாமல் வெறுமை​யாகக் காட்சி அளிக்கிறது! 


நன்றி - ஜூ வி