Showing posts with label LTTE. Show all posts
Showing posts with label LTTE. Show all posts

Monday, November 26, 2012

பிரபாகரன் - ஈழப்போரின் கடைசி நிமிடங்கள்


மாவீரன் அலெக்ஸாண்டர் ,பகத்சிங் மற்றும் நேஜாஜி ,இவ்வுலகில் வாழ்ந்தார்கள் என்று வரலாற்றுப்  பாடப்  புத்தகத்தில் படித்து தெரிந்திருக்கிறோம்  ..

நாம்  வாழும் காலத்திலேயே ,வாழ்ந்த ஒரு மாவீரன்... 
"தலைவன்" என்று சொல்வதற்கு, முழுத்தகுதி உடைய,
தன் குடும்பத்தையே போர்களத்திற்கு அனுப்பிய,  
 "சுயநலம்" என்பதன் அர்த்தம் அறியாத, 
 அண்ணன் பிரபாகரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....
மாவீரன் அலெக்ஸாண்டர் ,பகத்சிங் மற்றும் நேஜாஜி ,இவ்வுலகில் வாழ்ந்தார்கள் என்று வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் படித்து தெரிந்திருக்கிறோம் ..

நாம் வாழும் காலத்திலேயே ,வாழ்ந்த ஒரு மாவீரன்...
"தலைவன்" என்று சொல்வதற்கு, முழுத்தகுதி உடைய,
தன் குடும்பத்தையே போர்களத்திற்கு அனுப்பிய,
"சுயநலம்" என்பதன் அர்த்தம் அறியாத,

அண்ணன் பிரபாகரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...-ஃபேஸ்புக்கில் இருந்து

இலங்கை இறுதிப் போர்: பிப்ரவரி 2009ல் மலேசியாவில் நடந்தது என்ன?: கேபி (பகுதி1)

 Sl War What Happened Feb 09 Kp
Shopping In Sri Lanka
கொழும்பு: இலங்கை இறுதிப் போரில் நார்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் முன்னெடுத்த முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிராகரித்திருக்காவிட்டால் பல தளபதிகள் உயிரோடு இருந்திருப்பார்கள் என்று புலிகளின் சர்வதேச தொடர்பாளர் கேபி என்ற குமரன் பத்மநாபா விவரித்திருக்கிறார்.


இலங்கையில் வெளியாகும் டெய்லி மிர்ரர் நாளேட்டுக்காக அதன் செய்தியாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் எடுத்த கேபியின் பேட்டி:


கேள்வி: பிபிசி ஊடகத்துக்கு பேட்டியளித்திருந்த எரிக் சொல்ஹெய்ம், போரின் இறுதியில் ஐநா உதவியுடனான யுத்த நிறுத்தத்துக்கு முயற்சியை மேற்கொண்டதாக கூறியிருந்தார். அந்த முயற்சியை புலிகளின் தலைவர் தடுத்ததாகவும் தெரிவித்திருந்தார். இதற்காக அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமரான உருத்திரகுமாரனும் சொல்ஹெய்மின் கருத்தை மறுத்திருந்தார். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?கேபி: எரிக் சொல்ஹெய்மின் கருத்து 100% உண்மையானது. அவர் மேற்கொண்ட முயற்சிகள் விடுதலைப் புலிகளின் தலைவரால் தடுக்கப்பட்டது. அப்படியான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தால் பேரழிவைத் தவிர்த்திருக்கலாம். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல தளபதிகள் இன்று உயிரோடு இருந்திருக்க முடியும்.கேள்வி: அப்படியெனில் ஏன் அப்படி ஒரு முயற்சியே நடைபெறவில்லை என்று ஏன் உருத்திரகுமாரன் சொல்ல வேண்டும்?


கேபி: உருத்திரகுமாரனைப் பொறுத்தவரையில் 2009- ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்ததை பற்றி பேசுகிறார். பிப்ரவரிக்கு பின்னர் என்ன நடந்தது என்பதைப் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை.


கேள்வி: 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக நியமிக்கப்பட்டீர்கள்.. நீங்களும் யுத்த நிறுத்தம் தொடர்பான முயற்சிகளில் பங்கெடுத்தவர்.. அப்போது என்ன நடந்தது என்பதை விவரிக்க முடியுமா?கேபி: நிச்சயமாக... 2008-ம் ஆண்டிலேயே புலிகளின் கதை முடிவுக்கு வருகிறது என்பதை பார்வையாளர்கள் பலரும் ஊகித்திருந்தனர். புலிகளின் பதில் தாக்குலுக்கு அப்பாலும் இலங்கை ராணுவம் மெதுவாக ஆனால் முன்னேறிக் கொண்டிருந்தது. ஏ-9 நெடுஞ்சாலையின் மேற்குப் பகுதியில் யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஏ-9 பாதையின் கிழக்குப் பகுதிக்கு ராணுவம் முன்னேறுவதற்கு முன்பாக ஒரு கெளரவமான யுத்த நிறுத்தத்துக்கு வாய்ப்பும் இருந்தது. ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமையும் அதன் வெளிநாட்டு அமைப்புகளும் அதைச் செய்யவிடவில்லை.


2003-ம் ஆண்டின் தொடக்கத்தில் இயக்கம் எனக்கு "ரிடையர்மெண்ட்" கொடுத்து விடுவித்துவிட்டது. நடைமுறையில் நான் விடுதலைப் புலிகளின் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டேன். ஆனால் தொலைவில் இருந்து கள நிலைமைகளை பார்த்து வந்தேன். 2008-ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் என்னுடன் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்க தலைமை தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. அப்போது புலிகளின் தலைவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க யுத்த நிறுத்தம் அவசியம் என்பதை நான் வலியுறுத்தினென். 2008-ம் ஆண்டு டிசம்பரில் பிரபாகரன் என்னை சர்வதேச பொறுப்பாளராக நியமிக்க ஒப்புக்கொண்டார். யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வரவும் ஒப்புக் கொண்டார்.2008-ம் ஆண்டு டிசம்பரில் அப்படி ஒரு முடிவு எடுத்திருந்தாலும் யுத்த நிறுத்தத்தை நோக்கிய நகர்வுகள் புலிகள் தரப்பில் மிகவும் மெதுவாகவே இருந்தன. புத்தாண்டு பிறந்தபோது ராணுவமானது பரந்தன், கிளிநொச்சி, ஆனையிறவு ஆகியவற்றை கைப்பற்றியிருந்தது.


அப்போதுதான் விடுதலைப் புலிகளின் தலைமை கவலைகொண்டு அதன் வெளிநாட்டு பிரிவுகளை என் தலைமையின் கீழ் இயங்கவும் உத்தரவிட்டது. எனக்கு ஆதரவு தரவும் சொன்னது. ஆனால் வெளிநாட்டுப் பொறுப்பாளராக இருந்த காஸ்ட்ரோ, தமது பிரதிநிதி நெடியவன் மூலமாக எனது செயல்பாடுகளை சீர்குலைத்தார். போதுமான பண உதவி செய்யப்படவில்லை. இருந்தபோதும் ஒரு யுத்த நிறுத்தத்துக்கான தீவிர முயற்சிகளை நான் மேற்கொண்டிருந்தேன். சர்வதேச சமூகத்தின் முக்கிய நபர்களுடன் இந்த விவகாரத்துக்காக தொடர்பு கொண்டிருந்தேன்.


கேள்வி: எப்படி தொடர்பு கொண்டிருந்தீர்கள்? நேரடியாக தொடர்பு வைத்திருந்தீர்களா?


கேபி: நிறைய கடிதங்கள், ஃபேக்ஸ்கள், மின் அஞ்சல்கள் வழியாக தொடர்பு கொண்டிருந்தேன். யாரையெல்லாம் எப்படி தொடர்பு கொள்ள முடியுமோ அதை மேற்கொண்டேன். சிலரை நேரடியாகவும் தொடர்பு கொண்டேன். சில நேரங்களில் எனது பிரதிநிதிகள் சந்தித்தனர்.


கேள்வி: இதில் நார்வேயின் பங்கு என்ன?


கேபி: யுத்த நிறுத்தம் மற்றும் அமைதி முயற்சிகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட நாடு நார்வே. நார்வே மட்டும் குறிப்பிடத்தக்க அர்த்தமுள்ள பணியை ஆற்றியிருக்காவிட்டால் போர் நீண்டு இன்னும் மிக மோசமாக இருந்திருக்கும். ஆகக் கூடுமானவரையில் உயிரிழப்புகளைத் தடுக்கவே நார்வே விரும்பியது. மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் போரை முடிவுக்கு கொண்டுவர விரும்பினர்.


கேள்வி: அதற்காக நார்வே செய்தது என்ன?


கேபி: நார்வேயின் எரிக் சொல்ஹெய்ம் என்னுடன் தொடர்பில் இருந்தார். யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வருவதற்காக ஒரு சந்திப்பை நடத்த நாங்கள் முடிவு செய்தோம். 2009-ம் ஆண்டு பிப்ரவரி இறுதி வாரத்தில் இப்படியான ஒரு ரகசிய சந்திப்பு நடைபெற்றது.


கேள்வி: அந்த சந்திப்பு எங்கு நடைபெற்றது?


கேபி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஹில்டன் ஹோட்டைல் நடைபெற்றது. 2 நாட்கள் அந்த கூட்டம் நடந்தது.


கேள்வி: யார் யார் கலந்து கொண்டனர்? எரிக் சொல்ஹெய்ம் கலந்து கொண்டாரா?


கேபி: இல்லை... நார்வே அமைச்சராக அவர் இருந்ததால் அவர் கலந்து கொள்ளவில்லை. நார்வேயின் முக்கிய அதிகாரி, அவரது பிரதிநிதியாக வந்தார். மேலும் இரு நார்வே அதிகாரிகள் ஆஸ்லோவில் இருந்து வந்திருந்தார். இலங்கைக்கான நார்வே தூதரும் கலந்து கொண்டார்.


கேள்வி: யார் அவர்?


கேபி: கொழும்பில் அப்போது நார்வே தூதராக இருந்த ஹட்ரெம். இப்பொழுது அவர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறார் என நினைக்கிறேன்.


கேள்வி: விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளாக யார் கலந்து கொண்டது?


கேபி: நான், என்னுடைய செயலாளர் "அப்பு", ஜோய் மகேஸ்வரன், உருத்திரகுமாரன். இவர்களுடன் வெளிநாட்டைச் சேர்ந்த சில விடுதலைப் புலி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். அவர்களது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. உருத்திரகுமாரன், ஜோய் மகேஸ்வரன் இருவரும் நார்வே முன்னெடுத்த முந்தைய அமைதிப் பேச்சுவார்த்தைகளில் புலிகளின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டவர்கள்.


கேள்வி: அந்தப் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?


கேபி: யுத்த நிறுத்தம் பற்றியும் பேச்சுவார்த்தை பற்றியும் தெரிவித்தேன். பொதுமக்களின் நிலைமையை கண்ணீர்மல்க எடுத்துக் கூறி அவர்களைக் காப்பாற்ற எப்படியாவது யுத்த நிறுத்தம் அவசியம் என்று நார்வேயிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்.


கேள்வி: அதற்கு என்ன பதில் கிடைத்தது?


கேபி: அது மிகவும் எதிர்பாராதது.... நார்வே தூதர் ஹட்ரம் வெளிப்படையாக கடுமையான குரலில் ஆனால் உண்மைகளை விவரித்தார்.


கேள்வி: அவர் சொன்னது என்ன?


கேபி: யுத்த களத்தின் உண்மை நிலவரத்தை எங்களிடம் விவரித்தார். இலங்கை ராணுவத்தின் கைதான் ஓங்கி இருக்கிறது என்பதை விளக்கினார். சாளையில் 55-வது டிவிசன், விசுவமடுவில் 57 வது டிவிசன், தேவிபுரத்தில் 58-வது டிவிசன், முல்லைத்தீவு நகரில் 59-வது டிவிசன் நிலை கொண்டிருக்கிறது. சிறப்பு படை-2 உடையார்கட்டிலும் சிறப்பு படையணி 3 அம்பகாமமிலும் சிறப்பு படை 4 ஒட்டுசுட்டானிலும் நிற்கிறது என்றார்.தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு சிறிய நிலப்பரப்பில் அட்டை பெட்டி வடிவத்தில் சுற்றி வளைக்கப்பட்டிருக்கின்றனர் என்று கூறினார். புலிகளை அழிக்க சிறிது காலம்தான் ராணுவத்துக்கு தேவை. அதனால் இலங்கையைப் பொறுத்தவரையில் யுத்த நிறுத்தம் என்பது தேவையில்லாத ஒன்று. ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரையில் புலிகளைத் தோற்கடித்துவிடுவது உறுதி என்றார் அவர்.மேலும் பொதுமக்களுக்கு விடுதலைப் புலிகள்தான் பொறுப்பு. பொதுமக்களை மனித கேடயங்களாக கட்டாயப்படுத்தி புலிகள் வைத்திருக்கின்றனர். நீங்கள் சிலவற்றை விட்டுக் கொடுத்துதான் சிலவற்றைப் பெற முடியும் என்றும் கூறினார்.கேள்வி: அது என்ன ஆயுத ஒப்படைப்பா?


கேபி: ஆம். சரியானதே.. விடுதலைப் புலிகள் ஆயுதங்களை சரணடைய ஒப்புக் கொண்டால் நார்வேயும் இதர நாடுகளும் யுத்த நிறுத்தம் குறித்து இலங்கையை கேட்டுக் கொள்ளும் என்றார். விடுதலைப் புலிகளுக்கு இனி வாய்ப்பு என்பதே இல்லை.. நிச்சயமாக இலங்கை ராணுவம் வெற்றி பெறத்தான் போகிறது என்றார். ஆகையால் உயிரிழப்பைக் குறைக்க விரும்பினால் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.


 அப்படி தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட உண்மையாக ஒப்புக் கொண்டால் அமெரிக்கா, இந்தியா, நார்வே போன்ற நாடுகள் யுத்த நிறுத்தத்துக்கு இலங்கையை வலியுறுத்தும் என்றும் கூறினார். அப்படி விடுதலைப் புலிகள் ஒப்புக் கொள்ளவில்லையெனில் யுத்தம் சிறிது காலத்தில் முடிந்துவிடும். அத்துடன் விடுதலைப் புலிகளின் கதையும் முடிந்துவிடும் என்றார்.


இதையடுத்து நாங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தொடர்பு கொண்டு பதில் கேட்கிறோம் என்றோம். இதுதான் அந்த சந்திப்பில் நடந்தது என்று கேபி கூறியுள்ளார்.


2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு என்ன நடந்தது? நார்வே எடுத்த முன் முயற்சி என்ன? பிரபாகரன் நிராகரிக்க காரணம் என்ன?


-அடுத்த பகுதியில்...

2009 பிப்ரவரியில் நார்வே முன்னெடுத்த அமைதி முயற்சிக்கு பிறகு என்ன நடந்தது?: கேபி பேட்டி (பகுதி 2)


 We Have 2 Plans Sl Final Warl Kp
Indian media misquoted me: Sri Lank...
கொழும்பு: இலங்கை இறுதிப் போரின் போது நார்வே முன்னெடுத்த முயற்சிகளைப் பற்றி மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளர் கேபி விவரிக்கும் பேட்டியின் 2-வது பகுதி:புலிகளை காப்பாற்றும் திட்டம் -1கேள்வி: நார்வே அதிகாரிகளுடனான 2009-ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற சந்திப்பு சாதகமாக இருக்கவில்லை. 2010-ம் ஆண்டு என்னிடம் நீங்கள் பேசும்போது, பிரபாகரனுக்கு 16 பக்க யுத்த நிறுத்த யோசனை பற்றி அனுப்பியதாகவும் அதனை 3 வார்த்தைகளில் அவர் நிராகரித்துவிட்டதாகவும் கூறினீர்கள். 2009-ம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு என்ன நடந்தது?பதில்: நார்வேயின் யோசனையை பிரபாகரன் நிராகரித்த பின்னரும்கூட என்னுடைய முயற்சிகளை நிறுத்தவில்லை. நாளுக்குநாள் நிலைமை மோசமடைந்து கொண்டே இருந்தது. இதனால் நார்வே தரப்புடனும் சர்வதேச தலைவர்களுடனும் கூடுதலான முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன்.இது வாழ்வா? சாவா? என்ற விவகாரம்... எப்படியாவது யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தி பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டும்.. இயக்கத்தை அதன் தலைமையை காப்பாற்ற வேண்டும் என்று கருதினேன். ஐ.நா.வின் உயர் அதிகாரிகள், தூதர்கள், கொள்கை வகுப்பாளர்கள் என பலதரப்போடும் போராடிப் பார்த்தேன். சிலரை நேரில் கூட சந்தித்தேன்.மார்ச் மாத பிற்பகுதியில் சர்வதேச அனுசரனையுடன் ஐ.நா. பிரதிநிதிகளிடம் ஆயுதங்களை ஒப்படைப்பது என்ற திட்டத்தை உருவாக்கினேன். ஆயுதங்களை "மெளனிக்க" செய்தல் அது தேவைப்பட்டால் 25 முதல் 50 புலிகளின் முக்கிய தளபதிகள் குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவும், நடுத்தர போராளிகள் தடுத்து வைக்கப்பட்ட அவர்களுக்கு குறைந்த தண்டனை வழங்குதல், இளநிலைப் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்தல் என்பதுதான் அத்திட்டம்.விடுதலைப் புலி தலைவர்களின் குடும்பத்தினருக்கு அடைக்கலம் கொடுக்க 3 நாடுகளுடன் பேசியிருந்தேன். இதில் ஆசிய நாடு ஒன்றும் அடக்கம். மற்றவை ஆப்பிரிக்க நாடுகள்.இந்தத் திட்டம் நார்வே, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றால் ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்தியாவுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. தேவைப்பட்டால் போர்க் கப்பலை அனுப்பவும் அமெரிக்காவும் தயாராக இருந்தது.


இந்தத் திட்டம் பற்றி தெரிவித்து இதற்கான ஒப்புதலை தெரிவிக்கக் கோரி மார்ச் மாத இறுதியில் பிரபாகரனுக்கு கடிதம் அனுப்பினேன். அவர் செய்யலாம் என்று சொல்லியிருந்தால் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முழு முயற்சிகளில் இறங்கினேன். இதற்காக 16 பக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஃபேக்ஸ் மூலம் அனுப்பியும் வைத்தேன்.


16 பக்கத்துக்கு நான் அனுப்பி இருந்ததை "இதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று மூன்று வார்த்தைகளில் சொல்லிவிட்டார். அதனால் இந்தத் திட்டத்தையே நான் கைவிட்டேன்.


கேள்வி: விடுதலைப் புலிகளின் தலைவரை எப்படி தொடர்பு கொண்டீர்கள் நீங்கள்?கேபி: சாட்டிலைட் தொலைபேசிகளை பயன்படுத்தினோம். பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக வேலு (குமாரவேல்) என்பவர் மூலமாக தொடர்பு கொண்டோம். அவர்தான் எனது தகவல்களை தலைவருக்கு தெரியப்படுத்தி அவரிடம் இருந்து பதில் பெற்றுத் தருவார்.


அதன் பின்னர் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன், கடற்புலி பொறுப்பாளர் சூசை ஆகியோரும் தலைவருக்கும் எனக்குமான தொடர்பாளர்களாக இருந்தனர்.


கேள்வி: ஐ.நா.வின் தலையீடு என்பது எந்தளவு இருந்தது?


கேபி: நார்வேதான் ஐ.நா.வுடன் இணைந்து செயல்பட்டது.என்னைப் பொறுத்தவரை ஐ.நா. அதிகாரிகளான ஹோல்ம்ஸ், விஜய் நம்பியார், தம்ர சாமுவேல் ஆகியோருடன் தொடர்பில் இருந்தேன்.பிரபாகரன் நிராகரித்தது ஏன்?கேள்வி: உங்களது திட்டத்தை பிரபாகரன் நிராகரிக்கக் காரணம் என்ன? உண்மையான களநிலவரம் அவருக்கு தெரியவில்லையா? என்ன நினைக்கிறீர்கள்?


கேபி: அவர் கேணல் தீபன் தலைமையில் ஒரு பதிலடித் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்தார் என்பது பின்னர் தெரிய வந்தது. ஆனந்தபுரம் பகுதியில் இதற்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பிரபாகரனைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய ராணுவ ரீதியான வெற்றியைப் பெற முடியும் என்று நம்பியிருந்திருக்கிறார்.


 இதன் மூலமாக நிலைமையை தலைகீழாக்க முடியும்... ராணுவத்தை சீர்குலைய வைக்க முடியும் என்று நம்பியிருக்கிறார்.


ராணுவம் முதலில் ஆனந்தபுரத்தில் தாக்குதல் நடத்தியது. புலிகளை அட்டைப் பெட்டி வடிவில் சுற்றி வளைத்தது. இதில் தீபன் உள்ளிட்ட ஏராளமான புலிகளின் தளபதிகள் உயிரிழந்தனர். அதன் பின்னர் நிலைமை வேறானது.


புலிகளை காப்பாற்றும் திட்டம் -2


கேள்வி: பிரபாகரன் நிராகரித்த பிறகு என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன?


கேபி: அந்த முயற்சிகளைத்தான் பிபிசி ஊடகத்திடம் எரிக்சொல்ஹெய்ம் விவரித்தது.... அதாவது தற்காலிக யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவிப்பது. அதன் பின்னர் ஐ.நா. அதிகாரிகள், பிரதிநிதிகள் (இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா. ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நார்வே) மற்றும் இந்திய பார்வையாளர்கள் அடங்கிய குழுவினர் வடபகுதிக்கு கப்பலில் செல்வது.


யுத்த முனையில் இருக்கும் புலிகள் மற்றும் பொதுமக்களுடன் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொள்வது.. அதன் பின்னர் இலங்கையின் பாதுகாப்பில் அனைவரையும் முகாம்களுக்கு அனுப்புவது என்பதுதான் எரிக்சொல்ஹெய்ம் சொல்லும் திட்டம்.அதேபோல் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மெளனிக்க செய்துவிட்டு ஐநாவிடம் அவற்றை ஒப்படைப்பது. மார்ச் மாதம் என்ன திட்டமிடப்பட்டதோ அதன்படி விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களை வெளிநாட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்து அவர்களை கண்காணிப்பது. நடுநிலையான போராளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனையும், மற்றோருக்கு பொதுமன்னிப்பும் கொடுத்தல் என்பதும் அத்திட்டம்.கேள்வி: இதில் பிரபாகரன்., பொட்டு அம்மான் சேர்க்கப்படவில்லையா?கேபி: அவர்களும்தான் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவோர் பட்டியலில் இருந்தனர். அதை அவர்கள் ஏற்கவில்லை.


கேள்வி: எரிக்சொல்ஹெய்ம் வேறு மாதிரி சொல்கிறாரே..


கேபி: எனக்கும் தெரியும். எரிக்சொல்ஹெய்ம் வேறு மாதிரியாக சொல்கிறார் என்பது.. அந்தத் திட்டத்தின்படி பிரபாகரனும் பொட்டு அம்மானும் வெளிநாட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.கேள்வி: ஒருவேளை ராஜிவ் கொலை விவகாரத்தில் பிரபாகரனையும் பொட்டு அம்மானையும் இத்திட்டத்தில் சேர்க்க வேண்டாம் என்று இந்தியா கேட்டுக் கொண்டதா?பதில்: உண்மையில் என்ன நடந்தது எனத் தெரியவில்லை.. எனக்கே சொல்ஹெய்ம் சொல்வது புதிராக இருக்கிறது.ஆனால் இந்தத் திட்டம் பிரபாகரனிடம் ஒப்படைக்கப்படவில்லை. ஏனெனில் அவர் இது விஷயமாக வேறு எதுவும் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.நார்வே முன்னெடுத்த முயற்சிகளுக்கு பிரபாகரன் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் நான் வன்னிப் பகுதிக்கு நேரடியாக சென்று தலைவரை சந்தித்து பேசியிருப்பேன்.. என்றார் கேபி.யுத்த நிறுத்த முயற்சிகளை பிரபாகரன் நிராகரித்தன் பின்னணியில் இருந்த தமிழக தலைவர்கள் யார்? பிரபாகரன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமல் போனது எப்படி? என்பவற்றை அடுத்த செய்திகள்ல் பார்க்கலாம்..இலங்கை இறுதிப் போரில் பிரபாகரனுக்கு தவறான நம்பிக்கை கொடுத்த வைகோ-நெடுமாறன் : கேபி பேட்டி(பகுதி 3)

 Vaiko Misled Prabhakaran Kp
Vaiko argues for lifting ban on LTT...
கொழும்பு: இலங்கை இறுதிப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் தவ்றான நம்பிக்கையைக் கொடுத்தனர் என்று புலிகளின் சர்வதேச பொறுப்பளர் கேபி குற்றம்சாட்டியுள்ளார்.வைகோ- நெடுமாறன்


இலங்கை ஊடகமான டெய்லி மிர்ரரில் வெளியான மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜூக்கு கேபி அளித்த பேட்டியில், பிரபாகரனைப் பொறுத்தவரை சமரசத்துக்கு இடமில்லாமல் போராட வேண்டும் என்ற மனநிலை உடையவர். அவர் எப்போதும் சமரசத்துக்கோ சரணடையவோ விரும்பாத்வர். மேற்குல நாடுகளை சந்தேகக் கண்ணோடு பார்த்தவர். இறுதிப் போரின் போது மேற்குலக நாடுகள் கொடுத்த உறுதி மொழிகள் மீது அவருக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது.


 இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது என நினைக்கிறேன்... தமிழ்நாட்டில் உள்ள வைகோ, நெடுமாறன் ஆகியோர் தவறான நம்பிக்கையை கொடுத்திருக்கின்றனர்.. அதாவது இந்தியாவின் மத்தியில் பாஜக வெற்று பெற்று ஆட்சி அமைக்கும் தமிழகத்தில் ஜெயலலிதா வெற்றி பெறுவார்.. தேர்தலுக்கு பிறகு நிலைமைகள் மாறலாம் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர் என்று கேபி தெரிவித்திருக்கிறார்.


பிரபாகரன் குடும்பத்தைக் காப்பாற்றும் பிளான்


மேலும், பிரபாகரனின் மகன் சார்ளஸ் ஆண்டனி என்னுடன் தொடர்பில் இருந்தார். அவர் தமது குடும்பத்தை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல கேட்டுக் கொண்டார். பிரபாகரன் குடும்பத்தை சிறிய ரக விமானம் மூலம் கள முனையிலிருந்து காப்பாற்றி அழைத்து செல்லத் திட்டமிட்டேன். இதற்கான செலவுத் தொகை 3.5 மில்லியன் டாலர். என்னிடம் அவளவு பணம் இல்லை.. இது தொடர்பாக புலிகளின் வெளிநாட்டு நிதி விவகாரங்களை கவனித்து வந்த நெடியவனிடம் பல முறை உதவி கேட்டேன். ஆனால் நெடியவனோ பணம் கொடுக்கவில்லை என்றும் அதில் கேபி கூறியுள்ளார்.


 நன்றி - தட்ஸ் தமிழ்

Monday, July 09, 2012

குப்பி -ஒற்றைக்கண் சிவராசனின் கடைசி நிமிடங்கள் -சினிமா விமர்சனம்

http://stat.homeshop18.com/homeshop18/images/product/radical/05Sep11-Mov-1240.jpg

ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையமா வெச்சு ஆர் கே செல்வமணி எடுத்த  குற்றப்பத்திரிக்கை 14 வருடங்கள் தடை செய்யப்பட்டு பின் வந்தும் வெற்றி பெறாத நிலையில் அந்த கொலை வழக்கில் தேடப்பட்ட ஒற்றைக்கண் சிவராசனின் கடைசி 21 நாட்கள் பற்றிய 2 மணி நேர படத்தை இப்போதான் பார்க்கும் வாய்ப்பு கிடைச்சது.. 2007இல் ரிலீஸ் ஆன இந்தப்படம் செய் நேர்த்தி,நெறி ஆள்கை என பல விதத்தில் உலகப்படத்துக்கு இணையாக எடுக்கப்பட்டிருக்கு.. டோண்ட் மிஸ் இட்.. 

21.5.1991 இந்தியாவுக்கு கறுப்பு தினம்.. ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட நாள்.. அந்த கொலை பற்றிய விசாரணைல சிறப்பு புலனாய்வுக்குழு இயங்குது.. வழக்கில் தேடப்படும் முக்கியக்குற்றவாளிகளான ஒற்றைக்கண் சிவராசன்,சுபா இருவரும் தங்கள் ஆட்களுடன் எங்கே பதுங்கி இருந்தாங்க. எவ்வளவு சிரமங்களை அனுபவிச்சாங்க.. ஒரு வாடகை வீட்டில் தங்கக்கூட முடியாம எப்படி எல்லாம் அலைக்கழிக்கப்பட்டாங்க.இதுதான் படத்தோட கதைக்கரு.. 


படத்தோட டைட்டிலா குப்பி என வைக்காம வாடகை வீட்டிற்கான தீவிரத்தேடல்னு வெச்சிருக்கலாம் போல.. அவ்வளவு நுணுக்கமா வாடகை வீட்டின் தேடல் பற்றி சொல்லி இருக்காங்க.. 

 ரங்க நாத் ஒரு வீடு புரோக்கர்.. அவர் 1985ல விடுதலைப்புலிகளுக்கான நிதி உதவி அளித்தவர்.. அவங்க மேல  பாசமும், பரிதாபமும் கொண்டவர்.. அவருக்கு ஒரு மனைவி.. பயந்த சுபாவம்.. அவரு சிவராசன் & கோவுக்கு தன் வீட்டில் அடைக்கலம் அளிக்கிறார்,.. இது அவர் சம்சாரத்துக்கு பிடிக்கலை.. அவங்களை சீக்கிரம் அனுப்பிட துடிக்கிறார்.. 

 சிவராசன் இதையே துருப்புச்சீட்டா வெச்சுக்கிட்டு என் ஆளுங்களுக்கு ஒரு வீடு பிடிச்சுக்கொடுத்துட்டா நாங்க இங்கே இருந்து கிளம்பிடுவோம்னு சொல்றான்,.. உடனே ரங்கநாத் அதே போல அலைஞ்சு வீடு பிடிச்சு தர்றான்.. ஆனால் அவங்க அங்கே குடி போகலை. அவங்க ஆட்கள் கொஞ்சம் பேர் தான் அந்த வீட்டுக்கு குடி போறாங்க..


http://www.hindu.com/fr/2007/04/13/images/2007041300200201.jpg


சிவராசனின் நினைப்பு என்னான்னா ஃபேமிலியோட இருக்கற இந்த வீட்லயே குடி இருந்துட்டா  யாருக்கும் டவுட் வராது.. தனியா குடி போனா யாராவது கேள்வி கேப்பாங்க.. இதான் அவன் எண்ணம்.. ஆனா ரங்க நாத்தின் மனைவி அவங்களை துரத்துறதுல குறியா இருக்கா,.

 எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு பங்களா டைப் வீட்ல சிவராசன் -சுபா குடி போறாங்க.. போலீஸ்க்கு இந்த தகவல் எப்படியோ தெரிஞ்சுடுது.. அந்த பங்களாவை ரவுண்ட் அப் பண்ணிடுது.. அப்போ சிவராசன் நடவடிக்கை என்ன? என்ன நடந்தது? என்பதை நேரடி ரிப்போர்ட்டை படிக்கற மாதிரி டீட்டெயிலா படமா எடுத்திருக்கார் டைரக்டர்.. 


படத்தோட முதல் ஹீரோ திரைக்கதை , காட்சி அமைப்பு தான்..  சினிமா பார்க்கற உணர்வே இல்லை.. என்னமோ நேர்ல அந்த சம்பவம் நம் கண் முன் நடக்குதுங்கற மாதிரி பிரமை.. ஹாட்ஸ் ஆஃப் டைரக்டர்.. 


 2 வது ஹீரோ ஒற்றைக்கண் சிவராசன்.. இவர் டி வி சீரியலில் நடிச்சவர்னு நினைக்கறேன்.. நல்ல நடிப்பு. படம் பூரா ஒரு கண்ணை மட்டும் இவர் மூடி நடிச்சது அவன் இவன்ல விஷால் மாறுகண்ணாளரா நடிக்க சிரமப்பட்டதுக்கு எந்த விதத்திலும் குறை இல்லாத அளவு சிரமப்பட்டு நடிச்சிருக்காரு.. வெல்டன்.. அவர் பாடி லேங்குவேஜ் அபாரம்.. எதாவது சத்தம் கேட்டா அவர் ஒரு நாயைப்போல, பூனையைப்போல உஷார் ஆகி மற்றவரை வழி நடத்துவது அபாரம்.. 


அடுத்து ரங்கநாத்தின் மனைவியாக வருபவர்.. இவர் நடிகை தாரா .. இங்கேயும் ஒரு கங்கை என்ற பட நாயகி ( சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்). படம் முழுக்க இவர் ராஜ்யம் தான்.. சராசரி மனைவிக்குள்ள பயம், துடிப்பு, ஆத்திரம் என கலந்து கட்டி, உணர்வுகளை முகத்தில் கொட்டி நடித்திருக்கிறார்.


வீடு புரோக்கராக வரும் இவர் நடிப்பு யதார்த்தம்.சிவரசனிடம் மாஸ்டர் மாஸ்டர் என பம்மும்போதும் சரி, மனைவியின் மிரட்டலுக்கு அடி பணியும் போதும் சரி சபாஷ் போட வைக்கும் நடிப்பு..

 உண்மைச்சம்பவத்தில் இந்த ரங்க நாத் கேரக்டரின் நெருங்கிய உறவினர் தான் இந்தப்படத்தின் இயக்குநராம்.. அதனால் தானோ என்னவோ படத்தின் திரைக்கதை பக்காவாக உண்மைசம்பவத்தை அப்படியே கண் முன் நிறுத்துவதாக இருக்கு.. 

 சுபாவாக மாளவிகா .  குறை சொல்ல முடியாத நடிப்பு.. சிற்சில இடங்களில் செயற்கை தட்டுகிறது.. என்னை கேட்டா இந்த கேரக்டருக்கு உண்மையான இலங்கை  அகதிப்பெண்ணை தேடி பிடித்து நடிக்க வைத்திருக்கலாம்./. 

 போலீஸ் ஆஃபீசர்ஸ், சி பி ஐ ஆஃபீசர் அனைவரின் நடிப்பும் ஓக்கே.. நாசர் கூட 2 சீன் ஸ் வர்றார்.. 


http://mimg.sulekha.com/tamil/kuppi/stills/kupppii_15.jpgமனதில் நின்ற வசனங்களில் நினைவில் நின்றவை

1. அரசாங்கத்துல வேலை செய்யறீங்க, அரசாங்க சம்பளம் வாங்கறீங்க, ஆனா அரசாங்கத்தோட கண்ல மண்ணைத்தூவறீங்க.. 


2. சுபா - உங்களை அக்கான்னு கூப்பிடலாமா?

 ஏன்? உன் அக்கா என்ன ஆனா?


 அவளை கொன்னுட்டாங்க.. என் கண் எதிரே... 3. பதவில இல்லைன்னாலும் எனக்கு 3 லிங்க் இருக்கு 1. பொலிட்டிகல் லிங்க், 2. போலீஸ் லிங்க், 3. இண்டெலிஜெண்ஸ் ஆஃபீஸ் லிங்க்..


4. நாம ஏதாவது சேஃபான இடத்துக்கு போயிடலாமே?

 இந்த பூமில பாதுகாப்பான இடமே எங்கேயும் இல்லை. 5. போலீஸ் - வண்டியை ஏன் விட்டுட்டு வந்துட்டீங்க. வீதில அநாதையா நிக்குது. டெரரிஸ்ட் யாராவது எடுத்து யூஸ் பண்ணுனா என்ன செய்வீங்க? என்னசார்? கதவைதட்டுனதும் கதவை டக்னு திறந்தீங்க, ஆனா வாயைத்திறக்க மாட்டேங்கறீங்க?


6.  குட் நைட்


 மிட் நைட்ல என்ன குட் நைட் வேண்டிக்கிடக்கு?


7. யார் இவங்க? புதுசா இருக்காங்க?


 இவர் என் வீட்டுக்காரருக்கு வேண்டியவர்.. அவர் என் வீட்டுக்காரருக்கு வேண்டியவர்னு சொன்னேனே அவரோட உறவினர். ... அவரோட உறவினர்க்கு இவர் உறவினர்.. 8. இந்த எலி அடிக்கடி கீச் கீச்னு கத்தி எனக்கு தொந்தரவு தருது.. இதைக்கொன்னுடவா?


 வேணாம்.. அது இருக்கறதால தான் நீ அலர்ட்டா இருக்கே..


9. இது என்ன தெரியுமா? சயனைடு.. இந்த குப்பியை ஒரு கடி கடிச்சா போதும். தொடர்ந்து 7 பிறப்புக்கும் பர்த் சர்ட்டிஃபிகேட்  வாங்க வேண்டியதிருக்காது. 10. உங்களுக்கு வாழ ஆசை இல்லையா?

எண்டைக்கு எங்கட நாடும் மக்களும் சுகமா இருக்கிறனமோ அண்டைக்குத்தான் ஓய்வு, வாழ்வு எல்லாம்


11.   நான் அமரனா இருக்கனும், அதுதான் என்  கடைசி ஆசை12.  சிவராசன் எங்கே இருக்கான்னு எனக்குத்தெரியும்.. 10 லட்சமும் எனக்குத்தான்.. 


 டீக்குடிச்சுட்டு காசை வெச்சுட்டு கிளம்பு.. உனக்கு எல்லாம் அந்த வல்லமை பத்தாது.. 


13. டெல்லிக்கு ஐ பி எஸ் ட்ரெயினிங்க் போனப்ப  என்னையே செக் பண்ணுனாங்க.. செக்கிங்க் என்பது அவமானப்படுத்தும் செயல் அல்ல.. 


14. வெளில போன பிசாசு புதுப்புது பேய்களோட உள்ளே வந்த மாதிரி இவனுங்க என்ன புது புது ஆள்ங்களோட வந்துட்டே இருக்காங்க?


15. சுபா -வீட்டுக்குள்ளே வாழை மர நிழல்  விழுந்தா எங்களை மாதிரி சோல்ஜர்ஸ்க்கு நல்ல சகுனம் இல்லை ( வீட்டுக்குள்ள வாழமர நிழல் வளர்ந்தா எங்கள மாதிரி ராணுவக்காரங்களுக்கு சகுனம் சரியில்ல)


16. எங்க நாட்டுல வந்து எங்க பி எம்மை கொன்னது தப்புதானே?


 ஆமா, எங்க மேல மக்கள் வெச்சிருந்த மரியாதை, சிம்ப்பதி எல்லாம் போச்சு..


17. நாங்க இந்த மண்ணில் வந்து மீண்டும் பிறப்போம்.. வீரர்கள் ரத்தம் சிந்தலாம், கண்ணீர் சிந்தலாமா? ( நாங்க திரும்பவும் இந்த மண்ணுல வந்து பிறப்போம்.. வீரர்கள் ரத்தம் சிந்தலாம்.. கண்ணீர் வடிக்கக்கலாமோ?)


18. முதல் தடவையா நம்ம வீடு நம்மளுது இல்லையோன்னு தோணுது.. அவங்க போன பின்பும் அவங்க நிழல் நம்ம கூடவே இருக்கறது மாதிரி தோணுது.. இங்கேயே சுத்திட்டு இருக்கற மாதிரி தோணுது.. ஏன்னா அவங்க வீட்டை விட்டுத்தான் போனாங்க, ஊரை விட்டுப்போகலையே?


சரி, அதனால நமக்கு என்ன இழப்பு?


 நிம்மதி, சந்தோஷம்..  எல்லாம் இழந்தோமே?


19. உண்மையான நண்பன் நீ தான், அடுத்த பிறப்பில் நீ எங்களுடன், எங்க நாட்டில் பிறக்கப்போகிறாய்(என்ட உண்மையான நண்பன் நீதான்.. அடுத்த பிறவில நீ எங்கட நாட்டில தான் பிறக்கப்போறாய்..)


20. உயிரோட அவங்களை பிடிக்கனும், போலீஸோட பவர் என்ன?ன்னு அவங்களுக்கு நாம காட்டனும்


21. சரண்டர் ஆனா தூக்கிலே தானே போடுவாங்க, அதுக்கு குப்பி சாப்பிட்டு மரணிக்கலாம்


22. என்னை நீ சரண்டர் ஆகச்சொல்றியா? உன் முதுகை காட்டாம அப்படியே போய்ட்டா நீ உயிர் தப்பிக்கலாம்


23. நம்ம கிட்டே இருக்கற ஒரே ஆயுதம் சயனைடு தான்.. நம்ம மரணம் சரித்திரத்தில் இடம் பெறனும்


http://2.bp.blogspot.com/_FylGS8_9K7U/STqtfdR8VwI/AAAAAAAALDs/RGSlyCEaW3g/s400/kuppi.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. வாடகைக்கு வீடு பிடிச்சு கொடுக்கும் புரோக்கர் ஒரு பெரிய மனுஷன் பேரை ஒரு சீட்ல எழுதி தர்றார்.. அதை விடுதலைப்புலிகள் சர்ட் பாக்கெட்ல வெச்சுக்கறாங்க.. அது ஒரு முக்கியமான தடயமா போலீஸ் கைல சிக்குது.. அவ்வளவு  அசால்ட்டாவா ஆதாரத்தை வெச்சுக்குவாங்க.. படிச்சுட்டு அழிச்சுட மாட்டாங்களா?


2.  வீடு பார்ப்பது, குடி போறது எல்லாம் ஓக்கே.. அவங்களூக்கு பணம் எப்படி வருது? அதை பற்றி காட்டவே இல்லையே?


3.  ஒரு சீன்ல அதாவது க்ளைமாக்ஸ் சீன்ல சிவராசன் பங்களாவை   போலீஸ் ரவுண்ட் அப் பண்ணினதை பார்த்து பொது மக்கள் கூட்டம் கூடுவது போல் சீன்.. அப்போ ஒரு வசனம்.. கூட்டத்தை முதல்ல விரட்டுங்க.. உடனே 12 பேர் உள்ள கூட்டத்தை காட்டறாங்க.. சிரிப்பா இருக்கு.. அந்த சீன்ல அட்லீஸ்ட் 100 பேரையாவது காட்டி இருக்க வேணாமா?


4. ரவுண்ட் அப் பண்ணுன போலீஸ் மயக்க மருந்து , கண்ணீர்ப்புகை இதை எல்லாம் யூஸ் பண்ணவே இல்லையே? அவங்க கிட்டே பணயக்கைதி யாரும் இல்லை.. அப்புறம் என்ன தயக்கம்?உயிரோட பிடிக்க ஆசைப்படறவங்க மாஸ்க் அணிஞ்சு மயக்க மருந்தை அந்த வீட்டில் விட்டிருக்கலாமே?

5. சிவராசன் ஜோக் அடிச்சுக்கிட்டு அங்கங்கே காமெடி பண்ணீட்டு இருக்கற மாதிரி சீன்கள் நிறைய வெச்சிருக்காங்க.. உண்மையில் அவன் சீரியஸ் டைப் என்று படித்த மாதிரி ஞாபகம்./.


6. சுபாவாக வரும் கேரக்டர் ஒரு  ரிசர்வ் டைப் என்று படிச்சிருக்கேன். ஆனா படத்துல தாரா கிட்டே அவங்க தொண தொணன்னு பேசிட்டு இருக்காங்க.. அந்த அக்கா செண்ட்டிமெண்ட் எடுபடலை..


7. அடிக்கடி வீட்டுக்குள் சூரியனின் கிரணங்கள் படுவது போல் செயற்கையான மஞ்சள் லைட்டை உபயோகப்படுத்தி இருக்க வேணாம்././ 


8. ஏகப்பட்ட பேருக்கு வீடு பிடிச்சு தர்றாரே சிவராசன்.. அவங்க எல்லாம் விடுதலைப்புலிகள் போல தோணலை.. அகதிகள் மாதிரியும் காட்டலை.. இன்னும் தெளிவு வேணும்..

9.  இலங்கைத்தமிழ் சரியா பதிவு செய்யப்படலை.. இங்கே இருக்கற ஆள்ங்க பேசற தமிழ் போலவே இருக்கு,..


http://mimg.sulekha.com/tamil/kuppi/stills/kupppii_10.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் ( ramesh)

1. ரங்கநாத்தாக வரும் ஜெகன் நல்லா நடிச்சிருக்கார்.. அவரது பாத்திர படைப்பு கன கச்சிதம்.. அதே போல் சிவராசன்.. பாராட்ட வைக்கும் நடிப்பு தாராவின் பண் பட்ட நடிப்பு


2. படத்தில் தொய்வைத்தரும் சீன்கள் என எதுவுமே இல்லை.. செம விறு விறுப்பு.


3. மொத்த படத்திலும் ஒரு சீனில் கூட ராஜீவ் காந்தி, விடுதலைப்புலி , இலங்கை போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகள் ஏதும் வராமல் பார்த்துக்கொண்டது.


4. இயக்குநரின் நோக்கம் விடுதலைப்புலிக்கு ஆதரவாகவோ,  போலீஸ்க்கு ஆதரவாகவோ இல்லாமல் என்ன நடந்ததோ அதை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என்பதை தெள்ளத்தெளிவாக உணர்த்தும் திரைக்கதை வடிவமைப்பு


இந்தப்படம் ரிலீஸ் ஆனப்போ ஈரோடு பாரதி தியேட்டரில் ஓடுச்சு.. ஆனா அப்போ பார்க்கலை.. நேற்றுத்தான் பார்த்தேன்.. டி வி டியில்


http://tamil.galatta.com/entertainment/wallpaper/tamil/movies/Kuppi/bigimage/12_Kuppi2.jpg
சி.பி கமெண்ட் -  பரபரப்பான  செய்திகளை ஆர்வமாகப்பார்ப்பவர்கள், விறு விறுப்பான படம் பார்க்க ஆசைப்படுபவர்கள் பார்க்கலாம்.. பெண்களும் பார்க்கும்படி வன்முறைக்காட்சிகள், முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் எதுவும் இல்லாம தான் இருக்கு.. மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் பள்ளி மாணவ மாணவிகள் பார்ப்பதை தவிர்க்கவும்

நன்றி - ,,தாமரைக்குட்டி @Thamaraikkutty ( இலங்கைத்தமிழ் மொழி பெயர்ப்புக்கு )