Sunday, November 04, 2012

தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி @ தீராநதி

ஒரு படைப்பாளிக்கு அவசியமானது – தமிழச்சி தங்கபாண்டியன்

 

 

கவிஞர் தமிழச்சி 2004-கிற்கு பிறகு அறியப்பட்ட பெண் கவிஞர். பன்முகப் பரிமாணம் கொண்டவர். நேரடி அரசியலுக்கு சென்றபிறகும் இலக்கியம் குறித்த உரையாடலை தொடர்ந்து கொண்டிருப்பவர்.



தீராநதி:
உங்களுடைய பூர்வீகம் விருதுநகர் மாவட்டத்திலுள்ள மல்லாங்கிணறு என்ற சிறு கிராமம். உங்களின் அப்பா தங்கபாண்டியன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தென் தமிழகப் பகுதியில் முக்கிய பிரமுகராக ஒரு காலத்தில் அறியப்பட்டவர். அரசியல் செல்வாக்கு நிறைந்த ஒரு குடும்பப் பின்புலத்திலிருந்து வந்திருக்கிறீர்கள். உங்களின் பால்ய பருவம், சிறு வயது வாசிப்பு அனுபவம், இலக்கியத்தின் மீதான தேடல் என்று உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தோடு நமது பேச்சைத் தொடங்கலாமா?




தமிழச்சி தங்கபாண்டியன்:

அப்பா முதலில் திராவிட கழகத்தில் உறுப்பினராக இருந்து பெரியாரின் தொண்டனாக அவரது கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பவராக செயலாற்றிக் கொண்டிருந்தார். பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, அதன் உறுப்பினராகவும் பொறுப்பாளராகவும் எங்கள் பகுதியில் செயலாற்றினார். அந்த நேரத்தில் பெரியாருடைய, பேரறிஞர் அண்ணாவுடைய கருத்துக்களும் விவாதங்களும் வீட்டில் நடந்து கொண்டிருக்கும். சிறு பிள்ளைகளான நாங்கள் அதைக் கேட்டும் கேட்காமலும் விளையாடிக் கொண்டிருப்போம். என்னுடைய ஒன்றாம் வகுப்பையும் மூன்றாம் வகுப்பையும் என் கிராமத்து பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன். அப்போது ”டபுள் பிரமோஷன்” என்ற ஒன்று இருந்ததினால் நான் இரண்டாம் வகுப்பு படிக்கவில்லை. நேரடியாக மூன்றாம் வகுப்புக்கு வந்துவிட்டேன். அதற்கடுத்த என் படிப்பை விருதுநகரிலுள்ள ஓர் ஆங்கிலப் பள்ளியில் படித்தேன்.



பண்டைய தமிழிலக்கியத்தினுடைய பரிட்சயம் திராவிட இயக்கத்தினருக்கு இருக்கக் கூடிய அளவிலான பரிட்சயமாகத்தான் அன்றைக்கு என் இலக்கியப் பரிட்சயம் இருந்தது. பக்தி இலக்கியங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனது எட்டாம் வகுப்பு காலகட்டத்தில் கிடைக்கிறது. ஏனென்றால், நான் அப்போது முறையாக பரதநாட்டியம் கற்க ஆரம்பித்தேன். அப்போது ஆண்டாளின் பாசுரங்களின் வழி பக்தி இலக்கியம் என்ற ஒரு அறிமுகம் நிகழ்கிறது.
தீராநதி:



தனியாக ஒரு ஆசிரியரிடம் பரதம் கற்றீர்களா?
தமிழச்சி தங்கபாண்டியன்:
தஞ்சை நடராஜன் என்பவர்தான் என்னுடைய பரதநாட்டிய குரு. அவரிடம்தான் அரங்கேற்றம் நடத்தக்கூடிய அளவிற்கு பரதநாட்டியம் கற்றுக் கொண்டேன். ஆக, இந்த அளவிற்குத்தான் என்னுடைய பள்ளிப் பருவத்து இலக்கியப் பரிட்சயங்கள் இருந்தன. இது முடிந்து மதுரை மீனாட்சி கல்லூரியில் பி.ஏ.வும், தியாகராயர் கல்லூரியில் எம்.ஏ.வும் படித்தேன்



. பி.ஏ. படிக்கின்ற காலத்தில் அதாவது 80களுக்கு பிற்பகுதியில் ஒரு பரவலான இலக்கிய அறிமுகம் எனக்கு கல்லூரி வட்டாரத்தின் மூலமாகக் கிடைத்தது. அதுவரைக்கும் நான் அறிந்திருந்த இலக்கிய வாசிப்பு என்பது சிவசங்கரி, ரமணிசந்திரன், இந்துமதி என்ற அளவில்தான் இருந்தது. கல்லூரிக்குள் வந்தபிற்பாடுதான் சாவி ஆசிரியர் நடத்திய ”திசைகள்” என்ற பத்திரிகை அறிமுகம் கிடைத்தது. பிறகு மீராவின் ”அன்னம்” மிகத் திருப்புமுனையாக அமைந்த என் இலக்கிய வாசிப்பைச் சொல்ல வேண்டும் என்றால், அது என்னுடைய முதுகலை படிப்பைத்தான் சொல்வேன். சுப்பாராவ் என்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியரிடம் நான் முதுகலையில் படித்தேன். இன்றைக்கும் தமிழிலக்கியத்தில் பரவலான ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருக்கின்ற பேராசிரியர் சிவராமன் என்னுடைய ஆசிரியர். அவர் டி.ஹெச். லாரன்ஸ’ல் பி.ஹெச்.டி முடித்தவர். அதே போல நவீன தமிழிலக்கியத்தில் ஆர்வமும் ஒரு தீர்க்கமான விமர்சனப் போக்கும் கொண்ட பேராசிரியர் சுகுமாரன் என் ஆசிரியர். இவர் லலிதா ஜூவல்லரியின் நிர்வாக இயக்குனராக இருந்தவர். கி.ஆ.பெ.வின் பேரன் இவர். முற்றிலுமான நவீன தமிழலக்கிய போக்குகளுக்குள் என்னை ஈடுபாடு கொள்ளச் செய்தவர் சுகுமாரன் அவர்களும், மதுரை தியாகராசர் கல்லூரியும்தான். ஆனால், இலக்கியம் என்றால் என்ன என்ற புரிதலை எனக்கு உண்டாக்கிக் கொடுத்தவர் என்றால், அவர் என் பேராசிரியர் சுப்பாராவ் அவர்கள்தான். அதற்கு முன்னால் நான் மேலோட்டமான இலக்கியம் படித்துவிட்டு, மேட்டுக் குடித்தனமாக அலம்பித் திரியும் ஒரு பெண்ணாகவே இருந்திருப்பேன் என்று இன்றைக்கு என்னால் கணிக்க முடிகிறது. சுப்பாராவ்தான் தாய்மொழி இலக்கியம் என்பது ரொம்ப முக்கியம். தாய்மொழியில் உங்களுடைய படைப்புத் திறனைப் பற்றி யாருடைய உதவியும் இன்றி ஒரு பத்து வார்த்தை எழுதிக் கொண்டு வாருங்கள். துணைக்கு ஷெல்லியையோ, ஷேக்ஸ்பியரையோ கூப்பிடக்கூடாது என்பார். மொழி என்பது ரொம்ப முக்கியம். அலங்காரமற்ற சொற்கள் என்பது மிக முக்கியம் என்பார். அப்போது நான் மிக அலங்காரமான நடையில் எழுதுவேன். ”மெட்ட ஃபாரிக்கல் மெர்மைடு” என்றுகூட என்னை கேலி பேசுவார். வெறும் கமா, கமாவாக எழுதுவது மட்டுமே இலக்கியம் என்று நம்பிக் கொண்டிருந்த என் எண்ணத்தை உடைத்தவர் சுப்பாராவ்தான்




மனதை பயிற்சி செய்வதற்கு செவ்வியல் படிப்பென்பது மிக முக்கியம் என்று அடிக்கடி சொல்லுவார். சுப்பாராவ் காண்ட், ஹெகல், மார்க்ஸ் இந்த மூன்றிலுமே மிக ஆழ்ந்த தத்துவப் பார்வையும், அதை இன்றைய நடைமுறைக்குள் எப்படி பொருத்திப் பார்க்க வேண்டும் என்று சொல்லுவதில் தீர்க்கமான ஒரு பார்வையையும் கொண்டிருந்தார். அந்தப் பார்வைகள் எல்லாம் எனது வளர்ச்சிக்கு உதவி புரிந்திருக்கின்றன என்று சொல்வேன். என்னுடைய எம்.பில் பட்டத்திற்கான ஆய்வு ”லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ்”-ஐ நிறுவிய பிரியாட்டிரிஸ் வெப் என்ற பெண்மணியின் சுயசரிதை பற்றியது. அவர் விக்டோரியன் சொஸைட்டி என்று சொல்லப்படுகின்ற மேல்தட்டு ஆங்கில குடிமகளாக இருந்த போதும், எப்படி லண்டன் கூலித் தொழிலாளர்களுடைய வாழ்க்கையை ஆழ்ந்து கவனித்தார். அதிலிருந்த வாழ்க்கைக்கான விஷயத்தை எப்படி எடுத்துக் கொண்டார் என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்தேன்.




இவர் ஃபேபியன் வெப் என்ற பொருளாதார நிபுணரைத் திருமணம் செய்து கொண்டவர். அவர் சார்ந்திருந்த கம்யூனிஸ தத்துவத்தை எப்படி தன் வாழ்க்கையோடு பொருத்தி வாழ்ந்து காட்டினார் என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்யும்போது காரல் மார்க்ஸ’ன் கம்யூனிஸ தத்துவத்தின் மீது எனக்கு ஆர்வம் உண்டாகிறது. அதோடு தமிழ் நவீன இலக்கியத்தின் பரிட்சயம் என்று கிடைக்க ஆரம்பிக்கிறது. சங்க இலக்கியத்தைப் படிப்பதாகட்டும், தி. ஜானகிராமனைப் படிப்பதாகட்டும், சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகளைப் படிப்பதாகட்டும் எல்லாவற்றையும் இவரது அறிவுரையின் பேரில்தான் ஆழமாகப் படிக்க ஆரம்பித்தேன்.




தீராநதி:
கல்விச் சூழலோடு கூடிய இலக்கிய பரிட்சயம் என்பது உங்கள் விஷயத்தில் சாத்தியமாகி இருக்கிறது. உங்களின் பேராசிரியர் சுப்பாராவ் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். அவருக்கு தமிழ் செவ்வியல், நவீன இலக்கியம் பற்றியெல்லாம் ஆழ்ந்த புலமை இருந்ததா?




தமிழச்சி தங்கபாண்டியன்:
தமிழ் செவ்வியல் இலக்கியம் சம்பந்தமான ஆழ்ந்த அறிதல் அவரிடம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கான வாய்ப்பு அவருக்குக் குறைவாக இருந்திருக்கலாம். ஆனால், அவருடைய மாணவர்களாகிய சிவராமனுக்கோ, சுகுமாரனுக்கோ அந்தப் புலமை ரொம்பவே அதிகமாக இருந்தது. ஆனால் சுப்பாராவைப் பொறுத்த அளவில் தெலுங்கு இலக்கியம் சார்ந்த ஒரு தெளிவு இருந்ததாகத்தான் நான் உணருகிறேன். அவர் தெலுங்கு மொழியில் பிரசித்தி பெற்ற பல நல்ல கவிஞர்களை எங்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். ஸ்ரீநாரயணகுருவின் கவிதைகளையெல்லாம் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். 



கத்தாரின் பாடல்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவர், நான் ஒரு ஆந்திர விவசாயக் குடியிலிருந்து வந்தவன் என்பதை பெருமை பொங்க அடிக்கடி சொல்லுவார். மண் சார்ந்த – கிராமம் சார்ந்த மக்கள் எதை நமக்கு வாழ்வியல் அனுபவமாக விட்டுவிட்டுச் செல்கிறார்கள். அதை நாம் படைப்பாக்க வேண்டும் என்ற பார்வையை அவர்தான் எனக்கு வழங்கினார். உதாரணமாக, தயிர் உறை ஊற்றுவதை ஒரு முக்கியமான பண்பாகப் பேசுவார். அதை ஒரு ஆந்திர விவசாயப் பெண் எப்படி திறம்படச் செய்கிறார். அது ஒரு கைவினைப் பொருள் செய்வதற்கு ஈடான காரியம் என்பார். இந்த மாதிரியே வாழ்வியல் அறிவைப் பற்றி பல விதங்களில் விளக்கிக் காட்டுவார். தமிழிலக்கியத்தைப் பற்றிய அறிமுகத்தை அவர் எங்களுக்குக் கொடுக்காவிட்டாலும் ஐரோப்பிய, பிரிட்டிஷ் செவ்வியல் இலக்கியங்கள் குறித்த அறிவை அவர்தான் எங்களுக்குக் கொடுத்திருக்கிறார்.




தீராநதி:
இந்த மாதிரியான புரிதலோ வாசித்த நீங்கள் எப்போது எழுதத் தொடங்கினீர்கள்?



தமிழச்சி தங்கபாண்டியன்:



ஆழ்ந்த படிப்பனுபவத்தின் காரணமாக ஏதாவது எழுதலாம் என்று நினைக்கின்றபோது கவிதை என்பது அகவயமான வெளிப்பாடு என்று அச்சமயத்தில் தோன்றியதால் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். அப்போது நான் எழுதியவை மிகவும் சாதாரணமானவை. ”மாரி” என்ற தலைப்பில் வானம் பார்த்து பயிரிடும் மானாவாரி விவசாயிகள் எப்படி அவல நிலைக்கு ஆட்படுகிறார்கள் என்பது பற்றி எழுதினேன். அது புதுக் கவிதையா? மரபுக் கவிதையா? என்பதெல்லாம் தெரியவில்லை. என் கவிதையைப் பொறுத்த அளவில் என் கவிதை தனக்கான வடிவத்தை தானே தீர்மானிக்கும் என்பதில் அன்று தொட்டு இன்றுவரை தெளிவாக இருந்திருக்கிறேன் என்று இன்றைக்குப் படுகிறது. எந்த முன் தயாரிப்போடும் நான் கவிதைக்குள் போகவில்லை. தியாகராயர் கல்லூரியில் வெளியான ”அருவி” என்ற இதழில் அக்கவிதை வெளியானது. அதன் பிற்பாடு நல்ல வாசிப்பிற்கு பிறகுதான் கவிதையை நாம் அணுகவேண்டும் என்ற ஒரு உணர்வு உண்டாகிறது. மேத்யூ அர்னால்டு, அய்.ஏ.ரிச்சர்ட் சொல்வது மிக முக்கியம் ஆனால் அவர்கள் சொல்வதை மட்டுமே வைத்துக்கொண்டு தமிழ்க் கவிதையைப் படிக்கக்கூடாது என்று எண்ணினேன். அதை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு தமிழ்க்கவிதை எழுதமுடியாது. ஆகவே ஏறக்குறைய ஏழு, எட்டு வருடங்கள் இது சார்ந்தே என்னுடைய தமிழ் வாசிப்பை பெருக்கினேன்.




இரண்டாயிரத்திலிருந்து நிறைய கவிதைகளை எழுத ஆரம்பித்தாலும் 2004-ல்தான் என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான ”எஞ்சோட்டு பெண்” என்ற தொகுதியை வெளியிட்டேன். என் கவிதைகளை நான் முழு தொகுப்பாக கொண்டுவர வேண்டும் என்று நினைத்தபோது இரண்டு விஷயங்களில் நான் தெளிவாக இருந்தேன். ஒன்று – என்னுடைய கவிதை என்னுடைய கவிதைகளுக்காக மட்டுமே பேசப்பட வேண்டும். இரண்டு – என்னுடைய எந்தப் பின்புலமும் இருக்கக்கூடாது. என் தந்தையினுடைய எந்த செல்வாக்கும் என்மீதும் என் கவிதைகள் மீதும் விழக்கூடாது என்று தீர்மானித்தேன். ஆகவேதான் அத்தொகுப்பு மிகத் தாமதமாக ”மித்ர” பதிப்பகம் மூலம் வெளியாயிற்று.





தீராநதி:
ஏழு, எட்டு வருடங்கள் தொடர் வாசிப்புக்காக நீங்கள் ஒதுக்கிய காலத்தில் வாசிக்கப்பட்ட கவிஞர்கள் யார் யாராக இருந்தார்கள்?
தமிழச்சி தங்கபாண்டியன்:
பழந்தமிழ் இலக்கியம் குறித்தும், நமது மரபான அகம் புறம் குறித்த தேடலும் இருந்ததைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இன்றைக்கு வரை அதுகுறித்த பெரும் புலமை எனக்கில்லை என்றாலும் ஒரு சிறு அறிமுகம் கிடைத்திருக்கிறது, என்றால் அது அந்த வாசிப்பால்தான் சாத்தியப்பட்டிருக்கிறது. நவீன இலக்கியச் சூழல் சார்ந்து அந்தக் காலத்தில் எனக்கு ஆத்மாநாம் அறிமுகமாகிறார். சிறு பத்திரிகை என்ற தீவிரமான ஒரு இலக்கியச் சூழல் இருக்கிறது. அதில் பெண் கவிஞர்களான சுகந்தி சுப்ரமணியம், இரா. மீனாட்சி, லதா ராமகிருஷ்ணன், பெருந்தேவி என்ற கவிஞர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியவந்தது அந்தச் சமயத்தில்தான். இவர்களைத் தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினேன். இந்த நேரத்தில் என்னை மிக பாதித்த கவிஞர் இரா. மீனாட்சிதான். அவர் எனக்கு ஒரு ”ஐகான்” ஆகவே இருந்தார் என்றுகூட சொல்லுவேன்.
அவரின் மொழி என்பது முழுவதுமான ஒரு பெண் விடுதலையையும் பெண்ணிய மொழியையும் கொண்டிருந்தாலும் நிலம் சார்ந்த – இயற்கை சார்ந்த ஒரு நுண்ணுணர்வை அவரிடம் நான் கற்றேன். இதே காலத்தில் 80-84-ல் ஈழக் கவிதைகளும் வரத்தொடங்குகின்றன. சிவரமணி, செல்வி இவர்களின் கவிதைகளை வாசித்தேன். இந்தக் கவிதைகள் வேறு உலகத்தை எனக்கு அறிமுகம் செய்தது. போர்ச்சூழல் சார்ந்து ஒலிக்கும் பெண்களின் குரலை வெளிப்படுத்துவதாக இவர்களின் கவிதைகள் இருந்தன. ஆத்மாநாமின் அறிமுகம் மிக மிக முக்கியமானதாக எனக்கு இருந்தது. சுதந்திரத்தினூடே நவீன மனம் சார்ந்து எழக்கூடிய பிரச்னைகளும் எதற்குள்ளும் வாழமுடியாது வெளியேற விரும்புகின்ற ஒரு படைப்பாக அவரது படைப்புகள் எனக்குப்பட்டன. கவிதை என்பது நிரோஸ’யஸ் என்பதின் முழு உருவமாக அவர் எனக்குத் தெரிந்தார். அதேபோல நகுலனின் கவிதைகளையும் அச்சமயத்தில்தான் வாசிக்கத் தொடங்கினேன்.
தீராநதி:
அப்பாவினுடைய அரசியல் அடையாளம் என்பது தன் மீது விழக்கூடாது என்ற தெளிவோடு எழுத வந்திருக்கிறீர்கள். தன் கவிதைகள் கவிதை என்ற அம்சத்திற்காக மட்டுமே பேசப்படவேண்டும் என்றும் விரும்பியிருக்கிறீர்கள். ஆனால் முதல் தொகுப்பிற்கு உங்களுக்கென்று ஒரு புனைபெயரைத் தேர்ந்தெடுக்கும்போது ”தமிழச்சி” என்று மிக பட்டவர்த்தனமாக பெயரைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். அரசியல் சார்ந்த குறுக்கீட்டை நீங்கள் விரும்பாவிட்டாலும் ஆழ்மன ரீதியாக நீங்கள் திராவிட அரசியலுக்கும் அதன் கருத்தாக்கத்திற்கும் ஆட்பட்டிருக்கிறீர்கள் என்ற வெளிப்பாடாகவே அப்பெயர் புலனாகிறது. இந்தப் பெயருக்கான அடையாளம் எதுவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழச்சி தங்கபாண்டியன்:
அந்த அடையாளம் கண்டிப்பாக என் தந்தை சார்ந்த ”தமிழ் அடையாளம்”தான். அந்த அடையாளத்தை மிகத் தெளிவாக நான் தேர்ந்தெடுப்பதற்குக் காரணமாக இருந்ததென்று திராவிட இயக்கத்தையும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும்தான் சொல்வேன். நீங்கள் குறிப்பிட்டபடியே அதற்கான ஓர்மையை ஆழ்மனத்தில் எனது அப்பா அப்போதே பதித்திருக்கலாம். தமிழ் வாழ்வு சார்ந்த, தமிழர் பண்பாடு சார்ந்த ஒரு புரிதலையும் அது குறித்தான ஒரு பெருமையையும் அந்த இயக்கம்தான் என்னுடைய வளர் பருவத்தில் எனக்கு உருவாக்கித் தந்திருக்கிறது. அதிலே எனக்குப் பெருமிதம் உண்டு.
அப்போது என்னுடைய புனை பெயர் குறித்து பலர் விமர்சித்தார்கள். ”உங்களுடைய பெயர் fundamental ஆக இருக்கிறது” என்று சொன்னார்கள். ”நான் தமிழச்சி” என்று நீங்கள் சொல்லுவதால் தமிழ், தமிழச்சி என்ற ஆதிக்க மனப்பான்மையை அது நிறுவுவதாக ஒரு சாரார் சொன்னார்கள். இரண்டாவது வகைப்பட்டவர்கள் அதை மிகத் தெளிவாக எடுத்துக்கொண்டார்கள். இதுதான் உங்களுக்கான அடையாளம் என்பதற்கான பக்குவம் இருப்பதாகச் சொன்னார்கள். ”ஒரு தமிழ்ப்பெண், அதில் என் கிராமம் சார்ந்த அடையாளமும் இருக்கிறது என்று துணிந்து சொல்வதை நீங்கள் ஏன் ஆதிக்க மனோபாவம் இருப்பதாகப் பார்க்கிறீர்கள். அதைச் சொல்லுவதற்கான மனப்பக்குவமும், துணிவும் எனக்கிருப்பதாகத்தான் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று அப்போது நான் அவர்களுக்குப் பதில் சொன்னேன். ஆங்கிலத்திலேயே படித்த, ஆய்வு செய்த ஒரு பெண்ணாக என்னை நான் முன் நிறுத்தாமல் என் மண் சார்ந்த, என் மொழி சார்ந்த, என் வேர் சார்ந்த ஒரு படைப்பாளியாக என்னை முன்நிறுத்தும்போது இவர்கள் வரவேற்கத்தானே வேண்டும்?
தீராநதி:
மூன்றாம் வகுப்பிற்கு பிற்பாடு முழுக்க முழுக்க ஆங்கில வழிக் கல்வி என்பதுதான் உங்களின் முதுகலை படிப்பு வரைக்கும் இருந்திருக்கிறது. ஷேக்ஸ்பியரையும், ஷெல்லியையும், சில்வியா பிளாத்தையும் இயல்பாகப் படிக்கும் வாய்ப்பு உங்களுக்கு பாடத்திட்டத்திலேயே இருந்திருக்கும். ஆனால் உங்களின் முதல் கவிதைத் தொகுதியை நீங்கள் வெளியிடும்போது அதிலுள்ள கவிதைகள் முழுக்க மக்கள் மொழியிலானதாக வெளிப்பட்டிருக்கிறது. ”சனங்களின் கதை” மூலமாக தமிழ்க்கவிதை வடிவத்தை வட்டார தனிமையலாக முன்வைத்த பழமலய்யின் வழித்தோன்றலாக நீங்கள் வெளியில் அறிமுகமாகிறீர்கள். முதல் தொகுதிக்கு முன்னுரை கூட பழமலய்யிடமே வாங்கி இருக்கிறீர்கள். இந்த முரணை எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழச்சி தங்கபாண்டியன்:
திருமணம் வரைக்கும் முழுக்க முழுக்க விடுதி வாழ்க்கைதான் எனக்கு வாய்த்திருக்கிறது. விடுதியை விட்டு எனது சொந்தக் கிராமத்திற்குச் செல்லும்போது தாய் தந்தையிடம் பேசுவது அல்லது கடித பரிவர்த்தனைகள் நடத்துவது எல்லாமே இயல்பான என் தாய் மொழியாகத்தான் இருக்கிறது. என்னுடைய அப்பா ”மிசா”வில் ஒரு வருட காலம் சிறையில் இருந்தார். அப்போது எனக்கு எழுதிய கடிதங்கள் முழுவதும் தமிழ் மொழியில்தான் வந்திருக்கிறது. எவ்வளவு தூரம் ஆங்கில வழியில் நீங்கள் படித்தாலும் எனது உணர்வுபூர்வமான மொழியை நான் தாய்மொழியில்தான் செய்யமுடியும். என்னுடைய தாய், தந்தை இருவரும் பள்ளி ஆசிரியராக இருந்தவர்கள். கிராமத்தில் சக வயது பிள்ளைகளுடன் நொண்டிக் குதிரை, பச்சைக்குதிரை தாண்டும் போதோ கோலி, பேந்தாக்குண்டு விளையாடும் போதோ ஒரு மணல் தள்ளி விளையாடும் போதோ என்னுடைய அத்தனை வெளிப்பாடுகளும் எளிமையான கிராமம் சார்ந்ததாகவே அதன் மொழியாகவே இருந்திருக்கிறது. ஆக, படைப்பு என்று வரும்போது அது ஓர் இயற்கையான செயலாகத்தான் நிகழ்கிறது. இந்தத் தெளிவை அதாவது ஆங்கில இலக்கியத்தோடு மட்டுமே பயணம் போகாமல் தன் சொந்த மக்களின் மொழியில்தான் வரவேண்டும் என்ற தெளிவை எனக்குக் கொடுத்தது ஐரோப்பிய இலக்கியங்களும், ஆங்கில இலக்கியங்களும், திராவிட இயக்கப் பின்புலமும்தான். என்று சொன்னால் மிகையாகாது. உதாரணத்திற்கு சினுவா ஆச்சிபி சொல்வார். ”உங்களுடைய படைப்பை உங்களுடைய கிராமத்தின் புழுதி படிந்த ஒரு கிளைச் சாலையிலிருந்து தொடங்குங்கள்” என்று. இந்தத் தெளிவை எனக்கு ஆங்கில படிப்பு கொடுத்திருக்கிறது. இன்றைக்கும் ”சுமதி” என்று என் பெயர் சொல்லி அழைக்கத் தெரியாமல் ”செமதி” என்று அழைக்கக்கூடிய மக்கள் என் கிராமத்தில் இருக்கிறார்கள். அங்கிருந்துதான் நான் வருகிறேன். அந்த மொழியில் தானே என் படைப்பும் வரமுடியும்? கவிதையை கருத்தும், அனுபவமும் கலந்த கலவை என்று சொல்லலாம். அனுபவத்தில் உண்மையும், அது சார்ந்த சிறு நெறிப்படுத்தலும் இருக்கவேண்டுமென்றால் நம் மொழியில்தான் நாம் சொல்லவேண்டும். எனது திராவிட இயக்க மரபும் இதற்கு ஓர் அடிப்படை என்பது இங்கு மிக முக்கியமானது.




தீராநதி:
உங்களுக்கான கவிதை மொழியைத் தேர்ந்தெடுத்ததைப் போலவே அந்தக் கருத்தியல் சார்ந்து இயங்கக்கூடிய பழமலய் என்ற மூத்த கவிஞரின் முன்னுரையையும் வாங்குகிறீர்கள். உங்களுடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு என்று வருகிறபோது அதன் மொழி மாறுகிறது. சொல்லப்படும் உத்தி, விதம் மாற்றமடைகின்றன. அதற்கு தகுந்த கருத்தியலில் இயங்கக்கூடிய பிரம்மராஜனின் முன்னுரைக்குச் செல்கிறீர்கள். கவிதை குறித்த ஒரு கருத்தியலிலிருந்து வேறு கருத்தியலுக்கு நீங்கள் நகர்ந்து வரும் அடையாளமாக இதைக்கொள்ளலாமா?





தமிழச்சி தங்கபாண்டியன்:
இந்த நகர்வு என்பது ஒரு படைப்பாளிக்கு ரொம்ப முக்கியமான விஷயம். முதல் தொகுப்பை எடுத்துக்கொண்டால் மிக நெகிழ்ந்த ஒரு நடையாக – ஒரு விரிவடைந்த நடையாக அது இருக்கும். கவிதைக்கு செறிவும், அடர்த்தியான நடையும், கட்டுமானமும், சொல்ல வந்ததை மிகக் குறைந்த வார்த்தைகளில் அதே சமயம் வலிமையாக சொல்லவேண்டும். அதுதான் கவிதை. அந்த அம்சத்தோடு சொல்லக்கூடிய திறன் என் முதல் தொகுப்பில் எனக்கு குறைவாகத்தான் கை வந்திருக்கிறது. அதற்குக் காரணம் அன்றைக்கு நான் கையாண்ட கருப்பொருள். என்னுடைய கவிதை அந்த சமயம் அந்த மொழியைத் தானே எடுத்துக்கொண்டது. உதாரணத்திற்கு அந்தக் கவிதைகள் முழுக்க கதைப் பாடல்களாக இருக்கும். ஆக அதற்கு பழமலய் முன்னுரை வழங்கினால் சரியாக இருக்குமென்றெண்ணி அவரிடம் போகிறேன். ”சனங்களின் கதை” என்ற கவிதைத் தொகுப்பின் மூலமாக என்னை ஆகர்ஷ’த்திருந்த கவிஞர் அவர். அப்போது அந்தக் கவிதைத் தொகுதியில் வருகின்ற கதாப்பாத்திரங்களை எல்லாம் ஆவணமாகப் பதிய வைக்கவேண்டும் என்று நினைத்து அந்த மக்களையெல்லாம் புகைப்படமாக பதிய வைத்தேன். இந்த யோசனையை அறிவுமதிதான் கொடுத்தார். இது வெறும் புகைப்படங்களின் தொகுப்பாக இருக்கிறது என்று சிலர் விமர்சித்தார்கள். அறியப்படாத மக்களின் ஆவணமாக இந்தத் தொகுப்பு இருக்கிறது என்ற கருத்தைக்கூட அப்போது பாரதிபுத்திரனும், க. பஞ்சாங்கம் அவர்களும் பதிவு செய்திருந்தார்கள். பூர்வ குடிகளுக்கும் ஆங்கிலேயர்களுக்குமான காலனிய சொல்லாடலில் ஆங்கிலேயர்கள் செய்கின்ற மிகப் பெரிய தவறு என்னவென்றால் பூர்வ குடியினருக்கும், நமக்கும் இருக்கின்ற சில தடைகளை மொழியின் மூலம் மாற்றலாம் என்று அவர்கள் (ஆங்கிலேயர்கள்) நம்பினார்கள் என்ற குறிப்பு வருகிறது. ஆக, மொழி என்பது கவிதையில் ஒரு இறுக்கமான வடிவத்தைக் கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறோம். இது ஒரு பிரக்ஞை பூர்வமான செயல்பாடு என்றுகூட நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். விரிவாகச் சொல்லவேண்டிய ஒரு விஷயத்தை அதற்கென்று இருக்கின்ற உரைநடையில் நீங்கள் சொல்லிவிடலாம். ஒரு விஷயத்தை கவித்துவமாகச் சொல்ல ஆசைப்படும்போது அந்த கவித்துவ உச்சத்தைத் தொட முயலும்போது எனது மொழி மாறுகிறது. படிமங்கள் மாறுகிறது. அந்தச் சமயத்தில் நான் மிகவும் நேசிக்கின்ற கவிஞர் பிரம்மராஜன் எனது கவிதை ஓட்டத்தைச் சரியாக வெளிக்கொண்டு வருவார், நான் எந்தத் தளத்தில் இருக்கிறேன் என்பதை அவரால் சொல்லமுடியும் என்பதால் நான் அவரிடம் முன்னுரைக்காகச் செல்கிறேன். கவிதை குறித்த தெளிவான ஒரு புரிதல் உடையவர் அவர் என்பதாலும்தான் அவரைத் தேர்தெடுத்தேன். அடுத்து என்னுடைய கவிதை எப்படிப் போகுமென்று எனக்குத் தெரியாது.
தீராநதி:
அடுத்து தன் கவிதை எப்படி போகுமென்பது உங்களுக்கு மட்டுமல்ல, எந்தவொரு கவிஞனுக்கும் தெரியாதுதான். பிரம்மராஜன் கவிதையில் ஆண் மொழி, பெண் மொழி என்றெல்லாம் தனித்தனியாக இல்லை என்ற கருத்தியலுடையவர். ஆனால் சமகால பெண்கவிஞர்களோ பெண்மொழியை பிரதானமாக வென்றெடுப்பதில் தீவிரமாக செயல்படுகிறார்கள்? பிரமராஜனின் கருத்தோடு நீங்கள் ஒன்றிப் போகிறீர்களா?
தமிழச்சி தங்கபாண்டியன்:




கவிதை என்பது ஆண் பால், பெண்பால் என்ற எல்லையைக் கடந்து இயங்க வேண்டும் என்ற நம்பிக்கை உடையவள் நான். பெண்ணிற்கான ஒரு மொழி, பெண்மொழி, பெண்ணியம் என்ற ஒரு போக்கு இன்றைக்கு இருந்தாலும் கூட, என்னுடைய கவிதைகள் என்பது அப்படி ஒரு கருத்தியலுக்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை என்ற நம்பிக்கையில் எழுதும் பெண்படைப்பாளி நான் என்பதை பிரம்மராஜனால் சரியாக கணிக்கமுடியும் என்று நினைத்தேன். அவரும் அதையே சொல்லியிருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும்.
தீராநதி:
கவிதையில் ஆண்மொழி, பெண் மொழி என்பது வெளிப்பாட்டளவில் எந்தளவிற்கு சரியாக, உண்மையாக இருக்கும் என்பது குறித்து இன்றைய வரைக்கும் ஒரு விவாதம் நடந்து தான் கொண்டுருக்கிறது. ஒரு படைப்பை சிருஷ்டிக்கும் போது ஆண் என்ற பிரக்ஞையோடு பெண் என்ற பிரக்ஞையோடு உண்டாக்குகிறார்கள் என்று கூட பொது அளவிட்டில் எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் தன்னையே அறியாமல் பெண், ஆண் என்ற அனடயாளத்தை ஒரு படைப்புக்குள் நாம் விட்டு விட்டுதான் செல்கிறோம். இதை ஒரு படைப்பின் நியதி என்ற அளவில் கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நமது மொழி என்பது பொது தளத்தில் ஆண் சார்பு உள்ள ஒரு மொழியாகத் தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதில் உங்களுக்கு கருத்து மாறுபாடு இருக்கிறதா?
தமிழச்சி தங்கபாண்டியன்:




எனக்கு அதில் கருத்து மாறுபாடே கிடையாது. பொதுவான தளத்தில் கட்டப்பட்டிருக்கின்ற ஆண்மொழி என்ற தளத்திலிருந்து விலகி வரவேண்டும் என்பதை பெண் கவிஞர்கள் ஒரு முக்கியமான விஷயமாக செய்கிறார்கள். ஆண் சார்ந்த ஒரு மொழியாகவே, நமது பொதுத்தளத்தில் மொழி என்பது இருக்கிறது என்பதில் எனக்கும் சந்தேகமில்லை. ஆனால் பெண்மொழி, பெண்உடல் என்று ஒரு விஷயத்திற்குள்ளாக மட்டுமே கவிதையின் எல்லையைக் குறுக்குவதை நான் ஏற்கவில்லை. கவிதையில் அதுவும் ஒரு போக்கு. ஜனநாயக ரீதியில் அந்தக் குரலையும் நாம் கணக்கில் கொண்டுதான் ஆக வேண்டும். அது மிக முக்கியமான குரலும்கூட.
தீராநதி:



படைப்பை பொறுத்தளவில் பல்வேறு குரல்கள் ஒலிப்பதைதான் ஜனநாயகத்தின் குறியீடாக கொள்ள முடியும். உங்களின் சக கவிஞர் தோழியுமான கவிஞர் கனிமொழி ஒரு நேர்காணலில் பெண்ணிய விடுதலை என்ற குரல் கூட ஒரு விதத்தில் ஆணாதிக்கத்தின் மறுவடிவம் தான் என்ற தொனியில் பேசி இருந்தார். நீங்களும் இதை ஆணாதிக்கதின் மறு வடிவமாகவே பார்க்கிறர்களா?




தமிழச்சி தங்கபாண்டியன்:
ஆணாதிக்கத்தின் மறு வடிவம் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் ஆணாதிக்கத்தின் தூண்டுதலினால் வரக்கூடிய வெளிப்பாடு என்று தான் சொல்வேன். தாகூர்கூட மண்ணிலிருந்து விடுதலை பெறுவது மரத்திற்கு சுதந்திரமாகது என்று சொல்வார். அதைப் போலத்தான் பெண்ணியமும். பெண் விடுதலை என்பது ஆண்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஆக, ஆணுக்கான பொறுப்புணர்வுடன் கூடிய ஒரு பெண்விடுதலையைத்தான் எங்களைப் போன்ற கவிஞர்கள் முன்வைக்கின்றோம். அதனால்தான் பிராந்திய பெண்ணியம் என்ற ஒரு கருத்தியலை நான் முன்வைக்கின்றேன். மேலைய பெண்ணியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அளவு கோல்கள் மிக முக்கியமானவை. இதற்கான ஒரு வெளியை உருவாக்கக் கூடிய பொறியை தூண்டுகின்ற விஷயமாக ஆணாதிக்கம் என்பது இருக்கிறது என்று சொல்வேன்.



தீராநதி:
பெண்ணியத்திற்குள் பிராந்தியம் என்ற கருத்தியலை நீங்கள் முன்வைப்பதற்கு இன்றைக்கு நடப்பில் இருக்கக் கூடிய பின்காலனிய போன்ற தத்துவங்கள் உதவக்கூடும். அந்தத் தத்துவப்பார்வைதான் உங்களுக்கு இதை வழங்கியும் இருக்கிறது என்றே நம்புகிறேன். ”எஞ்சோட்டு பெண்” என்ற உங்களின் தொகுப்பின் மூலம் பாரதி மரபு வழி வந்த பெண்ணாக அடையாளப் படுத்திக் கொண்டீர்கள். இரண்டாவது தொகுப்பான வனப்பேச்சியின் மூலம் தன் மரபு சார்ந்து மக்கள் சார்ந்து மண் சார்ந்து ஒலிக்கக் கூடிய காவல் தெய்வமான நாட்டார் வழி பெண்ணாக அடையாளம் கொள்கிறீர்கள். தமிழ்ச் சமூகம் இப்படி பல்லாயிரக்கணக்காண காவல் தெய்வ வழிபாட்டைக் கொண்டியங்கும் பன்முக பண்பாடு கொண்ட ஒரு சமூகம். ஆனால் நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கமோ ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற சிந்தாந்தத்தைக் கொண்டியங்கும் ஓர் அரசியல் இயக்கம். இங்கு சிறு நெருடல் எழுகிறது. இந்த முரண்பாட்டை எப்படி விளக்குவீர்கள்?



தமிழச்சி தங்கபாண்டியன்:




மிக நுட்பமான ஒரு கேள்வி இது. அந்தப் பெயரிலேயே ஒரு தகவலை வைத்துதான் அந்தத் தலைப்பை நான் வைத்தேன். உக்கிரமான, மண்ணிற்கு மிக நெருக்கமான, அதே சமயம் ஒரு சமூகத்திற்கான காவல் தெய்வமான அவளை நான் எப்படி சோட்டு பருவத்திலிருந்து இன்றைக்கு வரை தூக்கிக் கொண்டிருக்கிறேன். வனத்தில் இருக்கும் அவளை எப்படி ஒரு நகரத்தில் கொண்டு வந்து வைத்திருக்கிறேன். என்னுடைய சிக்கல்களைப் பேசுகின்ற ஒரு பெண்ணாக எப்படி அவளை நான் கொண்டு வருகிறேன் என்பதெல்லாம் மிக முக்கியமாவை.
இவளை ஒரு ”ஐகான்” ஆக நான் முன்வைக்கவில்லை. நான் சார்ந்திருக்கின்ற இயக்கத்திற்கு மாற்றாக இவளை நான் முன் வைக்கவில்லை. ஒருகுரலாகத் தான் வைக்கிறேன். என்னைப் போலவே பிராந்திய தமிழ் கிராமத்து மண் சார்ந்த அடையாளத்துடன் இயங்குகின்ற பெண்ணினுடைய குரலாக வனப்பேச்சி என்பவள் வருகிறாள். அவள் இன்றைக்கு இருக்கின்ற மெட்ரோ பாலிடென், காஸ்மோ பாலிடென் லிபரலைஷேசன் குளோபளைஷேசன் என்று சொல்லப்படுகின்ற முற்றிலும் வேறான ஒரு வெளிக்குள் வரும்போது அவளுக்கு எற்படுகின்ற சிக்கல்கள், சிதைவுகள், ஒன்றாமை தனிமைத் துயர், இவற்றால் எப்படி உபாதைக்குள்ளாகிறாள் என்பதை வனப்பேச்சியின் மூலம் நான் ஒரு பெண்ணின் அவஸ்தைகளை முன்வைக்கிறேன்.




இன்றைக்கு இருக்கின்ற உலகமயமான நாகரிக உலகத்தை நான் எப்படிப் பார்க்கிறேன். எப்படி எதிர்கொள்கிறேன் என்பதன் பெண் குரலாகவே இங்கு ”வனப்பேச்சி” வருகிறாள். நாகரிகத்திற்கும் தொழில் வளர்ச்சிக்கும் எதிரானவர் இல்லை நாம். அதன் வளர்ச்சி நம் சமூகத்திற்குத் தேவையான ஒன்றாக இருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் இந்த மாதிரியான வளர்ச்சிகள் வருகின்ற போது நம்மண்ணிற்கே உரித்தான திணை மரபையும், ஆதாரங்களையும் நாம் கொஞ்சம் காப்பாற்றி வைக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. நீங்கள் கேட்பதைப் போல அண்ணாவின் அரசியல் சித்தாத்தத்துக்கு எதிரான ஒரு தத்துவமாக மாற்றி இதை நான் முன்வைக்கவில்லை. அதற்கு அவசியமும் இல்லை இப்பொழுது.
தீராநதி:
பின் காலனியம் போன்ற தத்துவங்கள் நடப்பில் இன்றைக்கு விவாதிக்கக் கூடிய ஒன்றாகவும், அதை முன் வைத்து நம் சமூகத்தின் அடையாளங்களை, வேர்களை மீட்டெடுக்கும் வேலைகளைப் பிரதானப்படுத்தி செய்து கொண்டிருக்கிறோம். நீங்களே குறிப்பிட்டது போல ”திணை” வாழ்க்கையில் பல்வேறு தெய்வங்கள் இருந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் சுருக்கி ஒரு தெய்வ வழிபாடு என்பதை அண்ணா முன் வைக்கிறார். அண்ணாவின் அரசியல் தத்துவ அறிவைக் குறைத்து மதிப்பிட முடியாவிட்டாலும், அவரின் இச்சித்தாந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது என்பதை உணருகிறீர்களா? ”திணை” பண்பாட்டை வெறும் படைப்பு ரீதியாக மட்டுமே காப்பாற்றுவது என்பதை விட அரசியல் ரீதியாக காப்பாற்றுவது முக்கியமில்லையா?
தமிழச்சி தங்கபாண்டியன்:




அதில் ஒரு சின்ன அபாயம் இருக்கிறது. ஏனென்றால் இந்தக் குழு சார்ந்த வாழ்க்கையில் சேர்ந்து, கூடி, கொண்டாடி உணவையோ, கள்ளையோ பகிர்ந்து ஒரு காவல் தெய்வத்தினை, ஒரு இடத்தில் வழிபடுவது என்பது வேறு. அதையே இன்றைக்கு மாற்றாக முன் வைக்கும் போது அது ஒரு இந்துத்துவா பெரும் தெய்வமாக மாறிவிடக் கூடிய அபாயம் இருக்கிறது. ஆகவே அதை அரசியல் கட்சிகள் மிக கவனமுடன் அணுகவேண்டிய பொறுப்பு இருக்கிறது. திணைக்கோட்பாடு பல்வேறு பண்பாட்டு அடுக்குகள் கொண்டது. ஆக, இந்தத் திணைக்கோட்பாட்டை பிரதிபடுத்துகின்ற ஓர் அடையாளமாக இது இருக்கும் என்ற ஒரு சின்ன காரணத்திற்காக அண்ணாவின் கொள்கைக்கு மாற்றாக நாம் இதை முன் வைக்க முடியாது. பெரியாரின் சமூக சீர்திருத்தக் கருத்துகளை முன் வைத்துச் செல்வதே உகந்த வழியாக இருக்குமென்று திராவிட முன்னேற்றக் கழகம் நம்புகிறது. நானும் நம்புகிறேன்.
தீராநதி:
நீங்கள் இந்துத்துவ சக்திகளின் செயல்கள் குறித்து பேசியதனால் இதைக் கேட்கிறேன். இன்றைக்கு தி.மு.க. ஆட்சி பொறுப்பில் வந்தவுடன் இந்துத்துவ சக்திகளின் ”பதற்றக்குரல்கள்” வலுவாக சேர்ந்து ஒலிக்கின்றனவே, ஏன்?
தமிழச்சி தங்கபாண்டியன்:




எனது தலைவரே சொல்லி இருப்பதைப் போல ஒரு தமிழர் ஐந்தாவது முறையாக முதல்வராக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து, தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் அடையாளப்படுத்துகின்ற காரியங்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறாரே என்ற ஒரே காரணத்திற்காகத்தான். அக்குரல்கள் வலுத்து ஒலிக்கின்றன. அதற்கு சரியான சமீபத்திய உதாரணம் ”சென்னை சங்கமம்” கலைநிகழ்ச்சி. அது குறித்து காழ்ப்புணர்ச்சி விமர்சனங்கள் சில இருந்தாலும் வேறு எந்த ஆட்சியில் தமிழர்களின் பண்பாட்டை அடையாளப்படுத்துகின்ற இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் நடந்து இருக்கின்றன? தமிழ் குறித்த விவாதங்கள் – தமிழர் பிரச்னை குறித்த போராட்டங்கள் வேறு எந்த ஆட்சிக் காலத்தில் எழுந்திருக்கிறது. ஆக, இப்படியான வெளியை உண்டாக்கித் தருகின்ற செயல்பாடுகள் இந்தத் ”தமிழ்” முதல்வரது ஆட்சியில் நடைபெறுவது இந்துத்துவ சக்திகளை எரிச்சல் கொள்ளச் செய்கின்றன என்பதே உண்மை.




தீராநதி:
முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் படைப்புகள் குறித்த ஆய்வுகள், அது சமூகத்திற்குள் நிகழ்த்திய தாக்கங்கள் பற்றிய விவாதங்கள் உருவாவதற்கு முன்பாகவே அவரை இலக்கியத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்கான சகல வேலைகளும் வேக வேகமாக நடக்கின்றன. நான் கூட அவரின் நெருங்கிய அலுவலக உதவியாளனாகப் பணியாற்றி இருக்கிறேன். அவர் எழுத்தின் மீது வைத்திருக்கின்ற பொறுப்புணர்வை நேரில் கண்டிருக்கிறேன். அவரது ”தூக்கு மேடை” உள்ளிட்ட பல நாடகங்கள் தமிழுக்கு முக்கியமானவை. இந்த அப்புறப்படுத்துதல் பற்றிப் பேசுங்களேன்?




தமிழச்சி தங்கபாண்டியன்:
அவரது தமிழ்ப் பங்களிப்பு அசைக்கமுடியாததது. மிக முக்கியமாக அவரது நாடகங்கள் பற்றி எடுத்துக் கொண்டோம் என்றால், அந்தக் காலத்தில் தலைவர் கலைஞர் உட்பட இரண்டே பெயர் தான் ”பர்மா”வுக்கும் ”ரங்கோன்”னுக்கும் புலம்பெயர்த்தவர்களைப் பற்றி நாடகம் எழுதி இருக்கிறார்கள். தலைவர் கலைஞரின் அந்த நாடகங்கள் குறித்து எந்த நவீன இலக்கியவாதிகளும் பேசியதும் இல்லை. விவாதித்ததும் இல்லை. அதே போல எம்.ஆர்.ராதா அவர்களும் நாடகம் எழுதி இருக்கிறார். இந்த மிக முக்கியமான பதிவை இவர்கள் இருவரும்தான் செய்திருக்கிறார்கள். நாடக வரலாற்றை எடுத்துக்கொண்டால் மறுமலர்ச்சிக் காலங்களில் பிரெஞ்சு நாடகத்தில் வரக் கூடிய ”மோலியர்” பற்றி எல்லோரும் குறிப்பிடுவார்கள். அந்த அளவுக்கான மிக முக்கியமான வேலையை அவருடைய காலகட்டத்தில் தலைவர் கலைஞர் செய்திருக்கிறார்.




நம் சமூகம் உலுத்துப்போய், புரையோடிப் போய் இருந்த விளிம்பு நிலை மக்கள் பற்றிய சிறு புரிதல் கூட இல்லாத ஒரு கால கட்டத்தில் மக்களை நேரடியாக போய்ச் சேருகின்ற ”நாடகம்” என்ற ஒரு சாதனம் மூலமாக வலிமையான மாற்றத்தை நம் சமூகத்திற்குள் நிகழ்த்திக் காட்டியவர் கலைஞர். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் எப்படி அந்தச் சமூகத்திற்குள் ஒரு கலகத்தை உருவாக்கியதோ அந்த அளவுக்கு நிகரான வேலையைக் கலைஞர் அந்தக் காலத்தில் செய்திருக்கிறார். இதை நானும் ஒரு நாடகக் கலைஞர் என்ற முறையில் பெருமையாக சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு இன்றைக்கு வருகின்ற நவீன இலக்கியவாதிகள் அதுவெல்லாம் வெறும் பிரச்சாரம் – கலைவடிவம் அல்ல என்று சொல்லலாம். அப்படிச் சொல்ல அவர்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. அந்தக் காலகட்டத்தில் ஒரு ”புரட்சி”யின் குரலாக வெளிப்பட்ட நாடகங்கள் அந்தக் குரலில்தான் பேசும். பேச வேண்டும். அதுபோலவே தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் முதலான நமது மரபின் அச்சிலே தலைவருக்கிருக்கின்ற ஆழ்ந்தப் புலமையும், வெளிப்பாடுகளும் மிகக் காத்திரமானதொரு படைப்பாளி அவர் என்பதை நிறுப்பிக்கிறது.
தீராநதி:



மறைமலை அடிகள் முன் வைத்த சைவம் சார்ந்த தமிழுணர்ச்சிக்கும் திராவிட இயக்கம் முன் வைத்த அடுக்கு மொழி தமிழுணர்ச்சிக்கும் பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. அதே போலவே திராவிட இயக்க இலக்கியம் என்பது ஓசை நயத்தோடும், ஒலி நயத்தோடும், எதுகை மோனையோடும் தான் வெளிப்பட வேண்டும் என்ற போக்கு இருந்தது. இன்றைக்கு திராவிட இயக்கம் சார்ந்து இயங்கக் கூடிய எழுத்தாளர்கள் சிறுபத்திரிகைகளின் மொழி நடையைப் பின்பற்றத் தொடங்கி இருப்பது கூட எங்களுக்குக் கிடைத்த முழு வெற்றியைத்தான் அது காட்டுகின்றது என்று சில நவீன இலக்கியவாதிகள் ஒரு கருத்தை முன் வைக்கிறார்கள். இவர்களின் விமர்சனத்தை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்கிறீர்கள். ஏனென்றால் உங்கள் மொழிநடை திராவிட இயக்கப் போக்கின் மொழி நடையை ஒத்தாக இல்லை. ஆகவே இதைக் கேட்கிறேன்?
தமிழச்சி தங்கபாண்டியன்:



மிக எளிதாக என்னால் இந்த விமர்சனத்திற்குப் பதில் சொல்ல முடியும். ஒரு படைப்பாளியின் எழுத்தை தீர்மானிப்பதற்கு அந்தச் சமூகத்தினுடைய காலகட்டம் மிக மிக முக்கியமானது. அதை விட்டுவிட்டு ஒரு படைப்பாளியின் எழுத்தை நீங்கள் பார்க்கவே முடியாது. ”வானம்பாடி” இயக்கத்தின் மீது கூட இந்த விமர்சனத்தையேதான் வைத்தார்கள். தமிழிலக்கிய கவிதையின் வரலாறு, சமகாலப்போக்கு குறித்து புத்தகம் எழுதுகின்றவர்கள் வானம்பாடிகள் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லாமல் எழுதுகின்ற மோசடியும் இங்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒலி நயமும், ஓசை நயமும் தமிழ்க் கவிதை மரபுகளிலே வரக்கூடிய ஒன்று. அதை யாரும் மறுக்க முடியாது. சந்த நயம் என்பது மரபுக் கவிதையில் இருக்கக் கூடிய மிகப் பெரிய பண்பு.





அடுத்தது, சமூக மாற்றத்திற்காகக் கவிதையை ஒரு பெரிய சக்தியாகப் பயன்படுத்திய காலத்தில் கவிதையின் மொழி என்பது அப்படித்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் பெரும் மக்கள் திரளை உங்களை நோக்கி இழுக்க முடியும். அந்த நேரத்தில் நகுலனுடைய ”நீங்கள் ராமச்சந்திரனா என்றேன்? ராமச்சந்திரன் என்றார் எந்த ராமச்சந்திரன் என்று நான் கேட்கவும் இல்லை. அவர் சொல்லவும் இல்லை” என்ற கவிதையை முன் வைக்க முடியாது. அகவயமான என்னுடைய தனிமனித சிக்கல்களை மட்டுமே பேசுவது இலக்கியம் என்று உங்களை நீங்கள் சமூகத்திலிருந்து விடுவித்துக் கொள்கிற கோழைத்தனத்தை ”திராவிட இயக்கமோ” ”வானம்பாடி” இயக்கமோ என்றைக்கும் செய்ததே கிடையாது. இன்குலாப் அய்யா மீது கூட நவீன இலக்கியவாதிகள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்கள். ”படகோட்டிச் செல்கின்ற படகுக்காரரே மிக மெதுவாகப் போங்கள் வழியில் இருக்கின்ற வாத்து முட்டைகள் உடைந்து விடாமல் படகை செலுத்துங்கள்” என்று அகவயமான அழகான கவிதையை அவர் எழுதி இருக்கிறார். இப்படி அகவயமான கவிதை எழுதிய அவர்தான் சமூகம் சார்ந்த பல கவிதைகளையும் எழுதி இருக்கிறார். ஆக, நீங்கள் கவிதைகளில் சொல்கின்ற விஷயம் உங்களின் மொழியைத் தீர்மானிப்பதாக இருக்கிறது என்பது ஒன்று.
இரண்டாவது; நான் எழுத வருகின்ற இன்றைய சமூகச் சூழல் எப்படி இயங்குகிறதோ அதற்கான மொழியைத் தேர்ந்தெடுக்கிறேன். இது இயல்பானதொன்று. அப்படிப் பார்த்தால் எனக்கான மொழியைத் தேர்ந்தெடுத்ததற்காக நான் ஐரோப்பிய மேலை இலக்கியத்திற்கு வேண்டுமென்றால் நான் நன்றி சொல்லிக் கொள்ளலாம். இல்லை என்றால், எனக்கான மொழியை நானே தேர்ந்தெடுத்துக் கொண்டதற்கு எங்களுக்கு முன்னால் இயங்கிய தமிழ்ப் பெண் கவிஞர்களுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்ளலாம். ஆண்டாளின் மொழி என்பது புரட்சியான ஒரு கவித்துவ மொழி. ”உன்னுடைய மார்பைச் சேராத என்னுடைய கொங்கைகளைத் திருகி எரிவேன்” என்ற ஆண்டாளின் பாடலை விட வேறு என்ன புதியதாக சொல்லி விட முடியும். ஆக, நானும் சக கவிஞர்களும் வெள்ளிவீதி ஆண்டாளின் வாரிசாக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.
தீராநதி:



ஆண்டாளைப் பற்றி உங்களின் பேச்சு போனதால் இதைக் கேட்கிறேன். ஆண்டாள் என்பவள் ஒரு பழங்குடி மரபில் வந்த பெண். இதைத்தான் வைணவ மரபு பிறகு உள்வாங்கிக் கொள்கிறது. ”வில்லி” ”குடும்பம்” ”வேடன்” ”கந்தன்” என்ற பழங்குடி இனத்தில் ”வில்லி” இனத்திற்கும் கந்தன் இனத்திற்கும் இடையில் நடந்த ஊடாட்டத்தில் அவர் மணம்புரிவதை தவிர்த்ததாக ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இன்றைக்கு ஆண்டாளை முன் வைக்கின்ற பெண் கவிஞர்கள் இது பற்றி விவாதங்களையெல்லாம் முன்னெடுப்பதாகத் தெரியவில்லையே?
தமிழச்சி தங்கபாண்டியன்:
முருகனுக்கும் இதுதான் நிகழ்ந்தது. ”தெய்வானை” என்ற ஒன்றே முதலில் கிடையாது. வள்ளிதான் வேட்டுவக்குடி தலைவனுடைய மனைவி என்ற குறிப்புகள் இருக்கிறது. தெய்வானை என்ற ஒன்றைக் கொண்டு வருகிறார்கள். பிறகு முருகன் சுப்ரமணியன் ஆகிறார்.
தீராநதி:
பெண்படைப்பாளிகளிடம் இதுபோல ஒரு ”மறு வாசிப்பு” தேவையில்லையா? அதைக் கேட்கிறேன்.
தமிழச்சி தங்கபாண்டியன்:
கண்டிப்பாகத் தேவை. அகலிகையையோ, ஆண்டாளையோ மறுவாசிப்பு செய்வதோடு நாம் மறுகட்டமைப்பும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
தீராநதி:




உங்களுக்கு கவிதையில் இருக்கின்ற ஈடுபாட்டைப் போலவே நாடகத்திலும் நடனத்திலும் இருக்கிறது. நீங்கள் சுந்தரராமசாமியின் ஜே.ஜே. சிலகுறிப்புகள் நாவல் வாசிப்பில் கூட நாடகக் கலைஞராக வெளிப்பட்டு இருக்கிறீர்கள்.
நான் என்ன கேட்க வருகிறேன் என்றால், இந்த நவீன நாடகங்கள் தமிழ் மரபில் ஊடாடி வந்த தியேட்டர் ஃபார்மை இழந்து விட்டது. அல்லது கை நழுவிப் போக விட்டு விட்டது என்கிறார்கள். உதாரணமாக ஊரில் பொது வெளியில் நாடகம் நிகழ்த்தப்படும் போது அந்தப் பார்வையாளன் எப்போது வேண்டுமென்றாலும் வெளியேறி தன் சொந்த வேலைகளை முடித்துக் கொண்டு மறுபடியும் நாடகத்திற்குள் நுழைவார். இதற்கான சுதந்திரம் நமது நாடக மரபில் திளைத்த ஒன்று. ஆனால் இன்றைக்கு நவீன நாடகங்கள் அரங்கத்திற்குள் நம்மை அடைக்கச் செய்து சமூகத்திற்கும் நமக்குமாக இருந்த ஒரு பொது வெளியைக் காலி செய்து விட்டது. நாடகத்திற்கான (அ) கூத்திற்கான வடிவத்தைக் கையிலெடுத்த நவீன நாடகவாதிகள் அதிலிருந்த சுதந்திரத்தன்மையைப் பறித்து விட்டார்கள் என்கிறார்கள்? நவீன நாடகம் என்ற பெயரில் நாடகத்தின் அம்சத்தையே ந. முத்துசாமி சிதைத்து விட்டார் என்கிறார்களே?



தமிழச்சி தங்கபாண்டியன்:




அதை நான் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள மாட்டேன். முத்துசாமி அய்யாதான் கூத்து என்ற ஒன்றையே அறிமுகப்படுத்துகிறார். அதன் பிறகுதான் கூத்து என்ற கலை வடிவம் பெரிய திருப்பத்தை அடைந்தது. நாட்டார் மரபையோ, கூத்து மரபையோ, செவ்வியல் நாடகமரபையோ நாம் கொண்டு வந்து அரங்கத்திற்குள் நிகழ்த்தும் போது மிக முக்கியமான ஒரு பங்களிப்பை நீங்கள் செய்கிறீர்கள். ஆனால் அதோடு நின்று விடாமல், அதை பரீட்சித்து பல வடிவங்களோடு தொடர்படுத்தியோ விரிவுபடுத்தியோ செல்லும் போதுதான் அடுத்த தளத்திற்கு நாம் போக முடியும். இராமாணுஜம் அய்யா பங்களித்து இருக்கிறாரே. ஆக, இந்த மாதிரியான மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. இதையும் தாண்டி தேரிக்காடுகளிலே முருக பூபதி நிகழ்த்துகின்ற நாடகங்கள் மிக முக்கியமானவை. அதில் அவர் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் அந்த மண்ணிலேயே நடத்திக் கொண்டிருக்கிறார். நீங்கள் குறிப்பிட்டதைப் போல பங்கேற்பவர்களுக்கும் நாடகத்தை நிகழ்த்துபவர்களுக்கும் உள்ள சுதந்திரத்தைக் கொடுக்கின்ற ஒரு வடிவமாக அது இருக்கிறது. 



நவீன நாடகத்தை எடுத்துக்கொண்டால் அ. மங்கை, பிரசன்னா ராமசாமி, கருணாபிரசாத், வெளி ரங்கராஜன் இவர்கள் எல்லோருக்கும் மரபு சார்ந்த பிரக்ஞை என்பது இருக்கிறது. நவீன பரீட்சித்தலும் இருக்கிறது. கருணா பிரசாத் தன்னுடைய ”அரவான்” நாடகத்தை அலையன்ஸ் பிரான்சைஸ’ன் பின்னால் திறந்த வெளியில் தான் நடத்தினார். மரபு சார்ந்த பிரக்ஞை இருந்தாலும் நமது கலை வடிவத்தை நாம் பிற கலாச்சாரத்தோடு இணைத்து எடுத்துச் செல்கின்ற ஒரு கட்டாயமும் தேவையும் இன்றைக்கு இருக்கிறது. அதனால்தான் இவர்கள் அரங்கத்திற்குள் நடத்துகிறார்கள். உதாரணத்திற்கு கிராமத்தில் நடைபெறுகின்ற ஒரு ராவணக் கூத்தையோ அரிச்சந்திரன் நாடகத்தையோ இங்கே இருக்கின்ற பிரெஞ்ச் பார்வையாளர்களுக்கு அல்லது மிக்ஸ்டு காஸ்மோபாலிடன் பார்வையாளர்களுக்குக் கொடுத்தாக வேண்டிய நிலைமை இருக்கிறது. அப்படித்தான் உங்கள் கலை வடிவத்தை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அப்படி வரும் போது புரசையிலே நடக்கக் கூடிய கண்ணப்பத்தம்பிரானின் கூத்தை நேரில் போய் பார்க்கின்ற வாய்ப்பென்பது எத்தனை நபர்களுக்கு வாய்க்கும். நம்முடைய தமிழ் வடிவத்தை அந்த மண்ணிலிருந்து கொண்டுவர முடியாது என்ற நோக்கத்தை வைத்துக் கொண்டிருந்தால், அது பிறருக்குச் சென்று செல்லக்கூடிய சாத்தியங்கள் குறைந்து போகும்.




தீராநதி:
இங்கு தான் சிறு நெருடல் அல்லது சங்கடம் உருவாகிறது. வெளிநாட்டவர்கள் நமது மரபைப் புரிந்து கொள்வதற்காக அரங்கத்தில் இந்த நாடகங்கள் நடத்தப் படவேண்டும் என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். பல ஆண்டுகாலமாக தமிழ்க் கலைத் தன்மையான ஒரு வாழ்க்கையை மட்டுமே நம்பி வாழ்கின்ற மண் சார்ந்த கலைஞர்களிடமிருந்து சில அம்சங்களை மட்டும் எடுத்து, அதன் ”மாதிரியை” மட்டுமே வெளிநாட்டவரிடம் இவர்கள் காண்பிப்பதனால் அதையே வெளிநாட்டவர்கள் ”அசல்” வடிவமாக நம்பிவிட மாட்டார்களா? பேராசிரியர்களுக்கும், நிறுவனங்களுக்கும் இருக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்வியல் சார்ந்து இயங்குகின்ற அசல் கலைஞர்கள் நொடித்துப் போக செய்து விடுகிறார்கள் அல்லவா?



தமிழச்சி தங்கபாண்டியன்:



மேலை நாடுகளில் இன்றைக்கு எழுந்திருக்கின்ற முக்கியமான குற்றச்சாட்டு இதுதான். ஆஸ்திரேலிய பழங்குடிகளின் சடங்குகளையோ பண்புகளையோ காட்டாமல் ”அறிமுகம் செய்கிறோம்” என்ற பெயரில் திணை குடிகளிடமிருந்து (indegenoustribe) மரபை அபகரித்து பன்னாட்டு நிறுவனத்திடம் விற்பனை செய்கிறார்கள். என்பதுதான் அது. அந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கவில்லை. அப்போது இரண்டுவிதமாகத்தான் இப்பிரச்னையை நாம் அணுக முடியும். அந்தக் கலைஞர்களையே இங்கு அழைத்து வந்து அவர்களையே இங்குள்ள பார்வையாளர்களுக்கு அக்கலை வடிவத்தை நிகழ்த்திக் காட்டச் சொல்லி அறிமுகம் செய்வது. அதற்கான சூழல் தமிழகத்தில் வந்தால் நன்றாகதான் இருக்கும். டெல்லியில் ”நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா” இருக்கிறது. பெங்களூரில் ”ரங்கஷங்கரா” இருக்கிறது. அதேபோல ஓர் அரங்கம் இங்கிருந்தால் அது சாத்தியப்படும். கூத்து நடக்கும் ஊருக்கே சென்று பார்வையாளர்களைப் பார்க்கச் செய்வது என்ற இந்தப் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது என்று தான் நினைக்கிறேன்.




தீராநதி:
நாடகவியலாளர்கள் தமிழகத்தில் பல காலமாக முன் வைக்கும் கோரிக்கை தமிழகத்திற்கு என்று ஒரு நாடகப்பள்ளி வேண்டும் என்பது. உங்களைப் போன்றவர்கள் அரசின் அருகாமையில் இருப்பவர்கள் என்ற வகையில் இதற்காக ஏதாவது முயற்சி எடுத்து வருகிறீர்களா?




தமிழச்சி தங்கபாண்டியன்:


இதுவரைக்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நான் ஒரு தி.மு.க. குடும்பத்தைச் சார்ந்தவள் என்றாலும் கூட, இப்போதுதான் இந்த அரசியல் தளத்திற்கு வந்திருக்கிறேன். எனக்கான ஒரு வாசல் திறக்கும் காலத்தில் அதற்கான முயற்சியை நிச்சயம் எடுப்பேன் என்றுதான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும். ஏனென்றால், இது ஒரு முக்கியமான விஷயம். ”நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா”வை போலவே இங்கும் ஒரு அமைப்பு இயங்கும் அளவிற்கு ஒரு தனி பாரம்பரியமும், அதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளதுதான் தமிழ் நாடகங்களும் தமிழ் நாடக மரபுகளும் என்றால் மிகையல்ல.



தீராநதி:


நாடகக் கலைஞர்கள் எவ்வளவு முக்கியமானவர்களோ அதே அளவுக்கு நாடக ஒப்பனை உபகரணங்களைத் தயாரிக்கும் தொழிலாளர்களும் முக்கியமானவர்கள். சேலம், ஆத்தூர் மாதிரியான பகுதிகளில் கண்ணாடிக் கூத்து என்று அறிமுகப்படுத்தப்படுகின்ற கலைஞர்களின் ஒப்பனை பொருட்களை, உடை அலங்காரங்களைத் தயாரிக்கின்ற தொழிலாளர்கள் இன்றைக்கு அத்தொழிலை விட்டுவிட்டு சித்தாள் வேலைக்கும் கட்டிட வேலைக்கும் கூலிகளாகச் செல்லத் தொடங்கிவிட்டார்கள். கலைஞர்களைக் காப்பாற்ற முயற்சித்ததைப் போலவே இந்த நாடக, கூத்து உபகரணம் தயாரிக்கும் தொழிலாளர்களைக் காப்பாற்றும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறதா?




தமிழச்சி தங்கபாண்டியன்:



இந்த முயற்சிகளும் கண்டிப்பாக எடுக்கப்பட்டு வருகின்றன. மிக முக்கியமாக இந்த விஷயத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். மாற்றுப் பாலினர் என்று சொல்லப்படுகின்ற ”திருநங்கை”களுக்காக தனியாக ஒரு வாரியம் அமைத்தது, நாட்டுப்புறக் கலைஞர்களுக்காக தனியான ஒரு நலவாரியம் அமைத்துக் கொடுத்தது கலைஞர் தலைமையிலான இந்த அரசுதான்.




சென்னை சங்கமத்திற்காக பங்கேற்க வந்தவர்களை தனித்தனியாகச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார் முதல்வர் கலைஞர். அப்போதுதான். 200 ரூபாயாக இருந்த உதவித் தொகையை 1000 ரூபாயாக மாற்றினார். கூத்து கட்டுகின்ற, கரகக்கலைஞர்களான பெண்களுக்கு 35 வயதிற்கு மேல் நாடகங்களில் நடிக்க முடியாது என்பதால் ஆண்களுக்கு தனி வயது வரம்பையும், பெண்களுக்கென்று தனி வயது வரம்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார். பெண்களுக்கு 32 வயதிலேயே அந்த உதவித் தொகையைக் கொடுக்க வேண்டும் என்றறிவித்திருக்கிறார். அச்சமயத்தில் ஒப்பனைக் கலைஞர்களுக்கான இந்தக் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. அதற்கான கள ஆய்வைச் செய்து தாருங்கள் என்று முதல்வர் கேட்டிருக்கிறார்.





தீராநதி:


பெர்டோல் ப்ரக்ட், மகா ஸ்வேதா தேவி, கேரளப் பெண் எழுத்தாளர் ஸ்ரீகுமார், அருந்ததி ராய், பாப்லோ நெரூடா, ழான் பால் சார்த்தர் போன்ற பல எழுத்தாளர்கள் அரசியல் இயக்கம் சார்ந்த நிலைப்பாடு, இயக்கச் செயல்பாடு என்று இயங்கிக் கொண்டிருந்தவர்கள். இயங்கிக் கொண்டிருக்கிறவர்கள். எழுத்தையும் இயக்கச் செயல்பாட்டையும் இரு கண்ணென கொள்பவர்கள். சுகுதகுமாரி (ஸ்ரீகுமார்). அமைதிப் பள்ளத்தாக்கு பிரச்னையில் தீரமாக நின்று போராடியவர். பெர்டோல் ப்ரக்ட் தன் அரசியல் இயக்கச் செயல்பாட்டிற்காக நாடு கடத்தப்பட்டவர். 


ஆனால் இங்கு பெர்டோல் ப்ரக்ட் மாதிரியான படைப்பாளியை மொழிபெயர்ப்பவர்கள் படைப்பை மட்டுமே பிரதானப்படுத்துகிறார்கள். அவர்கள் இயக்கச் செயல்பாட்டிற்கு சம்பந்தமற்றவர்களாக இருக்கிறார்கள். ஃபேன் காற்றில் உட்கார்ந்து கொண்டு பேராசிரியர் பணியில் மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு சௌகர்யமாக வாழ்ந்து வருபவர்களாக இருக்கிறார்கள். பெர்டோல் ப்ரக்ட் போன்றவர்கள் இயக்கச் செயல்பாட்டிலிருந்துதானே தன் படைப்புக்கான தீரத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஒரு படைப்பாளிக்கு இயக்கச் செயல்பாடென்பது முக்கியமானதல்லவா?





தமிழச்சி தங்கபாண்டியன்:



மிக மிக அவசியமானது அது. அதை மறுதலித்துவிட்டு உங்களுடைய வாழ்க்கையையோ, படைப்பையோ முன்னெடுத்துக் கொண்டு செல்ல முடியாது. இந்தக் கேள்விக்கு அறம் சார்ந்து நான் ஒரு பதிலைச் சொல்ல வேண்டுமென்றால் நானே அந்த இயக்கப் பணியைச் செய்யத் தொடங்கவில்லை. ஆகையால் தார்மீக ரீதியாக நான் மற்றவர்களின் மீது இக்குற்றச்சாட்டை வைக்க முடியாது. இனிமேல் வரப்போகின்ற என்னுடைய வாழ்க்கைதான் இதற்கான பதிலைத் தரமுடியும் என்று நம்புகிறேன்



.
நன்றி : தீராநதி 2008

வாலிப வயோதிக அன்பர்களே!


1. ஹலோ சதீஷா? எங்கேப்பா இருக்கே?

நெட்ல...,

நீ மாணவனா? மீனவனா?

..............................
.........................................

2. இரண்டாம் கட்ட தலைவர்களை நீங்க மதிக்கிறதில்லையாமே?! ஏன் தலைவரே?

முதல் கட்டத்துலயே ஃபுல்லா சரக்கை அடிச்சுடனும், 2வது, 3வது ரவுண்டுன்னு இழுக்க கூடாது.

...............................................

3. நான் காந்தி கிடையாது. ஆனா, காந்தியவாதின்னு தலைவர் குழப்பறரே?

13 வயசுலயே கல்யாணம் கட்டிக்கிட்டாராம்.

.................................................................................


4. தலைவர் டாஸ்மாக்ல தில்லாலங்கடி வேலை பண்ணிட்டாராமே ஏன்?!

எல்லாம் ஒரு கிக்குக்காகத்தான்.

....................................................................................

5. பச்சை தமிழந்தான் நீ! ஒத்துக்கொள்கிறோம்.

அதுக்காக சிக்னலில் எந்த விளக்கு எரிந்தாலும் அதை பச்சை என்று நினைத்து நிற்காமல் பறக்கிறாயே உனக்கு நிறக்குருடா?!

.......................................................................

எங்கண்ணன் படிக்காத மேதை..., ஆனா, கலர் கலரா டிரெஸ் போடுவார்..,

ஓஹோ ராமராஜன் மாதிரின்னு சொல்லு..

........................................................

7.  அந்த டாக்டருக்கு மனசுக்குள்ள பெரிய ஜவுளிக்கடை ஓனர்ன்னு நினைப்பு...,

ஏன்?

போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சுது. அள்ளிட்டு போக ஆர் யூ ரெடின்னு கேட்குறாரு...

..................................................................

8. தலைவருக்கு புதுசு புதுசா சந்தேகம் வருது..

என்னனு?

ஜீன்ஸ் ஐஸ்வர்யா ராய்க்கு இருந்த மாதிரியே எந்திரன் ஐஸ்வர்யா ராய்க்கு எடை 50 கேஜிதானா?ன்னு

.......................................

9. தலைவர் அரசியலை விட்டு விலகி பிஸினெஸ் பண்ணப் போறாராமே?

ஆமா, சுருட்டு வியாபாரம்.
................................................................

10. தலைவருக்கு மகளிர் அணி தலைவி மேல வெறி வந்துடுச்சாம்.

அதுக்கா, வரி விளம்பரம் போல வெறி விளம்பரம் தரனுமா?
----------------------------






11. என்னடா? எல்லா சப்ஜெக்ட்லயும் சிங்கிள் டிஜிட்ல மார்க் எடுத்திருக்கே?


 ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம், இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம், இதுதான் சார் என் பாலிசி




12. நேர்மா, நிரைமா , புளிமா அடுத்து என்னடா?

 அரிமா சார்



13. டீச்சர், காஞ்சனா 65 % மார்க் வாங்கி இருக்கா, புவனா 87 % மார்க் வாங்கி இருக்கா, இதுல ஏதோ ஊழல் இருக்கு


 எப்படி சொல்றே?


 பெண்களுக்கு 33% தானே ஒதுக்கி இருக்காங்க?



14. மகாபாரதக்கத்கதைல இருந்து  நாம தெரிஞ்சுக்க வேண்டிய நீதி என்ன?


சூதாட க்ளப்புக்கு போறப்ப கூட நம்ம சம்சாரத்தை கூட்டிட்டு போகக்கூடாதுன்னு தெரியுது சார்.




15. ராமன் ராவனனை கொன்றான், இது செய் வினையா? செயப்பாட்டு வினையா?

 2ம் இல்லை, சார், இது ராமன் செஞ்ச தீ வினை



16. த்லைவர் - எங்க ஊர்ல ரோஸி ரோஸினு ஒரு குட்டி இருந்தது..


 தலைவரே, குட்டிக்கதைதான் சொல்லனும், குட்டிங்க கதை எல்லாம் சொல்லக்கூடாது




17. தலைவர் குழந்தைக்கு - கல் வீசம்மா கல் வீசு , மேடையை கலைக்கலாம் கல் வீசு




18. தலைவரோட சொந்த ஊரு பழநி அல்லது சேலம்னு எப்படி கெஸ் பண்றே?


 வாலிப வயோதிக அன்பர்களே!  அப்டினு மேடைல பேச ஆரம்பிக்கறாரே?



19. தலைவர் எதுக்காக 2 கைலயும் லேடீஸ் மாதிரி மருதாணி வெச்சிருக்காரு?


 கொடுத்து கொடுத்து சிவந்த கரம்னு பேர் எடுக்க



20. ஆட்சிக்கு வந்தா என்ன செய்வீங்க?


 ஆட்சிக்கு வர என்ன வேணும்னாலும் செய்வோம், ஆனா  ஆட்சிக்கு வந்துட்டா ஊழல் மட்டும் தான் செய்வோம்

Saturday, November 03, 2012

அமரர் சுஜாதாவின் அபார எழுத்து அர்ப்பணிப்பு -மனுஷ்ய புத்திரன்

சுஜாதா, மனுஷ்ய புத்திரன்
 

சுஜாதா:நம் காலத்து நாயகன் ( 1935-2008 ) – மனுஷ்ய புத்திரன்

 

பெசன்ட் நகர் மின்சார மயானத்தில் பிப்ரவரி 29ஆம் தேதி வெயில் தகித்த ஒரு மதியத்தில் சுஜாதா ஒரு பிடி சாம்பலாக மாறினார். மயானத் தின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த என்னிடம் யாரோ ஒரு உறவினர் சுஜாதா மீது போடப்பட்ட நாணயங்களில் இருந்து ஒரு இரண்டு ரூபாய் நாண யத்தைக் கொடுத்து ‘நினைவாக வைத்துக்கொள் ளுங்கள்’ என்று கொடுத்தார்.





சுஜாதா 90களின் ஆரம்பத்தில் இருந்து இந்த 17 ஆண்டுகளில் எனக் குக் கொடுத்தவைகளை லௌகீகக் கணக்குகளால் அளவிடுவது கடினம். இப்போது அவரிடம் இருந்து கிடைத்த அந்த இரண்டு ரூபாய் நாணயம் ஒரு இரும்புக் குண்டாகிக் கனத்துக் கொண்டிருக்கிறது. ஒருபோதும் தொலைக்கவோ செலவழிக்கவோ கை மறதியாய் வைக்கவோ முடியாத நாணயம்.



புற உலகிற்கான பாதைகள் மூடப்பட்டு எனது வெளிச்சக் குறைவான அறையின் சொற்களால் ஆன ரகசிய வழிகளைக் கண்டுபிடித்து வெளியேற நான் தத்தளித்துக்கொண்டிருந்த காலம் அது. எங்கள் கிராமத்து நூலகத்தில் குமரி பதிப்பகம் வெளியிட்ட சுஜாதாவின் நூல்கள் என் அலுப்பூட் டும் பொழுதுகளில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தின. நைலான் கயிறும், 24 ரூபாய் தீவுகளும், கொலை யுதிர் காலமும் வழியே உருவாக்கிய மொழியின் சாகசங்கள் பெரும் பரவசத்தை ஏற்படுத்தின.




 ‘அவள் புன்னகை மட்டும் அணிந்திருந்தாள்’ என்பது போன்ற ஆயிரக்கணக்கான குதூகலமும் பொறியமைவும் கொண்ட நூதனமான வாக்கியங் கள் நான் அறிந்த மொழி பழக்கங்கள் அனைத்தை யும் கலைக்கத் தொடங்கின. வாசிப்பின் இன் பத்தை சுஜாதா அளவுக்கு உருவாக்கிய ஒரு எழுத் தாளன் தமிழில் இல்லை என்பதை இப்போது தர்க்க பூர்வமாக நிறுவ முடியும். ஆனால் அந்த இளம் வயதில் அவர் மொழியை ஒரு தூண்டி லைப் போலப் பயன்படுத்துகிறார் என்பதை நான் அறியவில்லை. தொடர்ந்து அந்தத் தூண்டிலை நோக்கிச் சென்றுகொண்டே இருந்தேன். பின்னர் அவரே தூண்டில் கதைகள் என்ற ஒரு தனித்த கதை வரிசையையும் எழுதினார். 



கோவை ஞானி, நிகழ் இதழில் எனது கவிதைகளை 90களின் ஆரம்பத்தில் வெளியிட்டு உற்சாகமூட்டிய சமயம் அது. ‘கால்களின் ஆல்பம்’ அப்போதுதான் நிகழில் வெளிவந்திருந்தது. கோவையில் நடந்த ஒரு சிறுகதைப் பயிலரங்கில் அந்தக் கவிதையை வாசித்த சுஜாதா, அதற்குப் பார்வையாளர்கள் ஆற்றிய உணர்ச்சிபூர்வமான எதிர்வினை குறித்து பலமுறை வெவ்வேறு இதழ்களில் எழுதினார். மேடைகளில் பேசினார். எந்த அடையாளமும் அற்ற ஒரு இளம் கவிஞனின் ஒரு கவிதை குறித்து சுஜாதா போன்ற ஒரு நட்சத்திர எழுத்தாளர் காட்டிய இந்த உற்சாகம் அவனுக்கு அந்த வயதில் அளிக்கக்கூடிய தன்னம்பிக்கையையும் சக்தியையும் விவரிப்பது கடினம். ஒரு முறை தற்செயலாக தூர் தர்ஷன் பார்த்துக்கொண்டிருந்தபோது அதில் ‘அம்மா இல்லாத முதல் ரம்ஜான்’ கவிதையை அவர் வாசித்துக்கொண்டிருப்பதைக் கேட்டு என் வீட்டில் அனைவரும் அதிர்ந்தனர். அவருக்கு நன்றி தெரிவித்து முதன்முதலாக ஒரு சிறிய கடிதம் எழுதி னேன்.


ஒரு போஸ்ட் கார்டில் பதில் எழுதினார், ‘உங்களுக்குப் பிடித்த கவிஞர்களின் கவிதைகளை எனக்கு அனுப்புங்கள். நான் அவற்றை வாசகர் களுக்கு அறிமுகம் செய்கிறேன்’ என்று. நான் ஒரு நோட்டுப் புத்தகத்தில் அப்போது என்னை ஆக்கிர மித்துக்கொண்டிருந்த நகுலன், பிரமிள், தேவதேவன், சுகுமாரன், கல்யாண்ஜி, ஆத்மாநாம், சுயம்புலிங்கம் என பலரது கவிதைகளையும் அவ ருக்கு அனுப்பினேன். அடுத்தவாரமே இந்த நோட் டுப் புத்தகம் பற்றிய குறிப்புடன் சுயம்புலிங்கத்தின் ‘தீட்டுக் கறை படிந்த பூ அழிந்த சேலைகள்’ கவிதை பற்றி குமுதத்தில் எழுதினார்.


பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ‘நீ அனுப்பிய நோட்டுப் புத்தகத்தை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்’ என்றார். அவர் வாசிப்பில் காட்டிய மூர்க்கமான, தளர்ச்சியற்ற ஈடுபாடு அபூர்வமானது. எப்போதும் ஒரு வாசகனாகவும் ரசிகனாகவும் தன்னை வைத்திருப்பதில் அவர் சளைக்கவே இல்லை. சமீப காலம்வரை அவரைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் தனக்கு அனுப்பப்பட்ட ஏதாவது ஒரு கவிதைத் தொகுப்பை எடுத்துக்கொண்டு வருவார். ‘இந்தத் தொகுப்பில் 37ஆம் பக்கத்தில் உள்ள கடைசி இரண்டு வரிகள் மட்டும்தான் கவிதை’ என்பார். அவருக்கு கவிதை வரி களைக் கண்டுபிடிப்பதில் விநோதமான ஒரு மோப்பசக்தி செயல்பட்டது. பல சமயங்களில் அவர் நினைவிலிருந்து மேற்கோள் காட்டும் வரிகள் அதன் மூலத்திலிருந்து வெகுவாக விலகியும் சுருக்கப்பட்டும் இருப்பதைக் கண்டிருக்கிறேன். வாக்கியங்களின் மிகையான, சுமையான சொற்களைக் களையாமல் அவரால் அவற்றை நினைவில் நிறுத்த முடியாது. மொழி குறித்த இந்தக் கறாரான நுட்பமான அணுகுமுறையே அவரது எழுத்துகளை நவீனத் தமிழின் நிர்ணய சக்தியாகவும் மாற்றியது. 



சுபமங்களா நாடக விழாவிற்காக சுஜாதா மதுரைக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்து அங்கு போனேன். முதல் நாளே அவர் உரை முடிந்து விட்டிருந்தது. அவரைச் சந்திக்க வரலாமா என்று ஒரு நண்பர் மூலம் கேட்டு அனுப்பினேன். ‘சிரமம் வேண்டியதில்லை, நானே வந்து பார்க்கிறேன்’ என்று நேராக விழா மண்டபத்திற்கு வந்துவிட்டார். அன்றைக்கு அவரைப் பொறுத்தவரை ஒரே ஒரு கவிதை மூலம் அறியப்பட்ட நபர். ஆனால் அவருக்கு அது போதுமானதாக இருந்தது. சில நிமிடங்களில் அவரைப் பலரும் சூழ்ந்துகொண்டனர். அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன் என்பதைவிட பார்த்துக்கொண்டிருந்தேன். 


சென்னைக்கு வந்தபிறகு அவரை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகரித்தன. பின்னர் கனிமொழி மற்றும் அவரது கணவர் அரவிந்தனின் நட்பு கிடைத்தபோது எங்கள் மூவருக்கும் பொதுவான ஒரு நண்பராக, மையமாக சுஜாதா மாறினார். 2002ஆம் ஆண்டு துவக்கத்தில் கடும் மன அழுத்தம் என்னை சூழ்ந்தது. அதுவரையிலான எனது உறவுகள் அவை சார்ந்த நம்பிக்கைகள் அனைத்தும் கலைந்து நான் எனது தனிமையின் மயான வெளிகளுக்கு திரும்பிவிட்டிருந்த காலம். உடைந்த மனோரதங்களுடன் வாரம் ஒரு முறை எனது மனநல மருத்துவர் டாக்டர் மோகன்ராஜை சந்திப்பேன். எனது பிரச்சினைகளுக்கான காரணத்தை முற்றாக மறைத்து தொடர்ந்து அவரிடம் பொய் களையும் குழப்பமூட்டும் தெளிவற்ற வாக்கியங்களையும் கூறிக்கொண்டிருந்தேன்.


நெஞ்சைப் பிசையும் இரும்புக் கரங்களிலிருந்து என்னை விடுவியுங்கள் என்று அவரிடம் கெஞ்சினேன். அவர் எனக்கு மருந்துகளைக் கொடுத்தார். அவை தூக்கத்தைக் கொண்டுவந்தன. நெஞ்சின் ஆழத்தில் கொந்தளிக் கும் கடல்கள் தூங்க மறுத்தன. அந்தக் காலகட்டத் தில்தான் சுஜாதா அபாயகரமான நிலையில் அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டு மரணத்தின் எல்லை வரை சென்று மீண்டிருந்தார். அவரைத் திரும்பத் திரும்ப போய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். எனது பனி எங்கோ உருகத் தொடங்கியது. அவருடைய புத்தகங்கள் சிலவற்றைப் பதிப்பிக்கும் அனுமதியை வழங்கினார். அது ஒரு துவக்கம். எனது துயரத்தின் இருள் படிந்த முகம் கண்ணாடியில் வேறுவிதமாக மாறத் தொடங்கியது. எனக்குத் தேவை மருந்துகள் அல்ல செயல்பாடுகள் என்பதை சுஜாதா எனக்குப் புரிய வைத்தார்.


மிக நெருக்கடியான சந்தர்ப்பங்கள் வந்தன. அவர் மிகுந்த உறுதி யுடன் என்னை ஆதரித்தார். நான் தவறு செய்த சந்தர்ப்பங்களில்கூட அவர் என்னை விட்டுக் கொடுக்கவில்லை. என் வாழ்நாளில் நான் ஒரு போதும் அந்த சந்தர்ப்பங்களை பதிவு செய்யப் போவதில்லை. அவை அந்தரங்கத்தின் வலி மிகுந்தவை. சுஜாதா என் மனதின் ஆழத்தில் இருந்த இருள் முடிச்சுகளை அவிழ்த்தார். அன்பின் வெளிப்படையான உணர்ச்சிகளை அவர் ஒருபோதும் காட்டியவரல்ல. நான் மனம் உடைந்த சந்தர்ப்பங்களில் அவர் ஒரு ஆறுதலோ மறு மொழியோ சொல்ல மாட்டார். மாறாக சில புதிய திட்டங்களைக் கொடுப்பார். அதுவரையிலான துயரத்தின் வாசனை நீங்கிச் சென்றுவிடும்.



உயிர்மை, சுஜாதாவின் புத்தகங்களின் மிகச் சிறந்த பதிப்புகளைக் கொண்டுவந்தது. நண்பர் தேசிகனின் உதவியுடன் அவரது சிறுகதைகள், குறுநாவல் கள், நாடகங்கள் அனைத்தையும் வகைப்படுத்தி தொகை நூல்களாகக் கொண்டுவந்தோம். சிதறிக் கிடந்த அவரது எழுத்துகள் இவ்வாறு தொகுக்கப் பட்டதன் வழியாக சுஜாதாவின் படைப்பின் ஆளுமை துல்லியமாக வெளிச்சம் பெற்றது. உண்மையில் ஊடகங்கள் வழியாக அறியப்படும் பொது முகம் அல்ல சுஜாதாவினுடையது. அவரது எழுத்துகள் தமிழ் எழுத்து முறையின் திசை வழியையே முற்றாக மாற்றி அமைத்தன. தமிழ்ப் புனைகதை மொழியையும் உரைநடை முறையையும் சுஜாதா ஒரு இயக்கமாக செயல்பட்டு மாற்றியதற்கு சாட்சியம் இந்தத் தொகை நூல்கள். 



கடந்த சில ஆண்டுகளில் நான் கவிதைகள் எழுதுவது குறைந்து போனது பற்றி அவர் என்னிடம் திரும்பத் திரும்ப பேசினார். ‘உனது தொழில் உன் எழுத்துகளை கொன்றுவிடக் கூடாது’ என்றார். இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வாசகர்களுக்குக் கையெழுத்திட்டுக்கொண்டிருந்த இடைவெளியில் ‘சார் உங்கள் கடைசி பக்கத்தை உயிர்மையில் ஆரம்பிக்கிறீர்களா?’ என்று கேட்டேன். ‘எழுதுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை, நீயும் தொடர்ந்து ஏதாவது எழுதுவதாக இருந்தால் நானும் எழுதுகிறேன்’ என்றார். 


அவர் நோய்மையின் துர்க்கரங்களிலிருந்து பல முறை வெற்றிகரமாக மீண்டு வந்திருக்கிறார். இந்த முறை அது நிமோனியாவின் ரூபத்தில் வந்தது. ஒன்றரை மாதங்கள் மருத்துவமனைக்கும் வீட்டிற்குமான போராட்டம் பிப்ரவரி 27ஆம் தேதி இரவு 9.22க்கு முடிவுக்கு வந்தது. செயற்கை சுவாசத்தில் ஏறி இறங்கிக்கொண்டிருந்த அவரது உடல் ஒரு கொடுங்கனவாக மாறியது. ஒருபோதும் கடக்க முடியாத கொடுங்கனவு அது.
சுஜாதா இந்த நூற்றாண்டில் தமிழ் அடைந்த நவீனத்துவத்தின் மாபெரும் மைய நீரோட்டம். அதில் கால் வைக்காமல் படைப்பின் சவால்களை மொழியின் சவால்களை ஒருவர் கடப்பது மிகவும் கடினம்.


எமது எல்லாச் செயல்பாடுகளிலும் சுஜாதாவின் சொல்லின் வலிமையும் அன்பின் நிழலும் படிந்திருக்கிறது. உயிர்மை குடும்பத்தினர் அவரது நினைவு களை நெஞ்சில் ஏந்துகின்றனர்.


( நன்றி: உயிர்மை மார்ச் 2008 )
தமிழ் தொகுப்புகள்

ஹாலிவுட் டைரக்டருடன் கமல்

கமலுக்கு உலகநாயகன் பெயர் பொருத்தமானது தான்! ஹாலிவுட் டைரக்டர்

Ulaganayagan title is suitable for kamal says hollywood director கமல்ஹாசனுக்கு உலகநாயகன் என்ற பெயர் பொருத்தமானது தான் என்று, ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஆங்லீ தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டின் பிரபல டைரக்டர் ஆங்கலீ. இவர் தற்போது "லைப் ஆப் பை" எனும் ஹாலிவுட் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இந்தி நடிகர் இர்பான்கான், நடிகை தபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.



இப்படத்தினை பிரபலபடுத்துவதற்காக இந்தியா வந்துள்ளார் ஆங்லீ. சென்னை வந்த அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். பின்னர் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். அப்போது கமல் தன்னுடைய விஸ்வரூபம் படத்தின் டிரைலரை ஆங்லீக்கு திரையிட்டு காண்பித்துள்ளார். கமலின் படைப்பாற்றலை பார்த்து அவரை பாராட்டினார் ஆங்லீ.


கமல் உடனான சந்திப்பு குறித்து ஆங்லீ கூறியுள்ளதாவது, சினிமாவில் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். அந்த அர்ப்பணிப்பு கமலிடம் நிறைய உள்ளது. அவரின் விஸ்வரூபம் படத்தின் டிரைலரை பார்த்தேன். மொழி தெரியாதவர்கள் கூட அவரது படத்தை பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். கமலுக்கு பல விஷயங்கள் தெரிந்துள்ளது. என்னைப்பற்றி கூட அவர் நிறைய தெரிந்து வைத்திருக்கிறார். உலகம் சினிமா பற்றி அவர் நன்கு புரிந்து வைத்து இருக்கிறார். அவருக்கு உண்மையிலேயே உலகநாயகன் என்ற பட்டம் கொடுத்து இருப்பது பொருத்தமான ஒன்றுதான். அவரை சந்தித்தது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

கமலுக்கு தேசியவிருது கிடைத்தது எப்படி? பாலுமகேந்திரா ருசிகரம்!

Balumahendra praises kamal hassan`மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீதேவி சிறப்பாக நடித்திருந்தும், கமல்ஹாசனுக்கு தேசிய விருது கிடைத்தது எப்படி? என்பது பற்றி டைரக்டர் பாலுமகேந்திரா ருசிகர தகவலை வெளியிட்டுள்ளார். எழுத்தாளர் மணா எழுதிய `கமல் நம் காலத்து நாயகன் என்ற புத்தக வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. புத்தகத்தை டைரக்டர் பாலுமகேந்திரா வெளியிட, பட்டிமன்ற நடுவர் கு.ஞானசம்பந்தன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் டைரக்டர் பாலுமகேந்திரா, கமல்ஹாசனைப் பற்றி பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அவர் பேசுகையில், "மூன்றாம் பிறை படத்தின் கதையை முதலில் ஸ்ரீதேவியிடம்தான் கூறினேன். அதைக் கேட்டவுடன், அவர் உருகி அழத்தொடங்கி விட்டார். பிறகு கமல்ஹாசனிடம் கதையை சொன்னேன். "எனக்கு இது சரிப்பட்டு வருமா? என்று கமல் முதலில் சந்தேகப்பட்டார். "நிச்சயமாக இது உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று சொல்லி சம்மதிக்க செய்தேன். அந்த படம், கதாநாயகியை மையமாக கொண்ட படம் என்பதால், எல்லா காட்சிகளிலும் ஸ்ரீதேவியே வருவார். படத்தில் அவர் பிரமாதமாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

கமல், ஸ்ரீதேவியுடன் தோன்றுகிற காட்சிகளில் எல்லாம், "நீங்கள் நடிக்க முயற்சிக்காதீர்கள். இயல்பாக இருங்கள் என்று கமலிடம் சொன்னேன். அவரும் அதை அப்படியே செய்தார். மலையில் இருந்து கொட்டுகிற அருவி, பாறையின் மீது பட்டுத் தெறிக்கும்போது, தோன்றும் அழகே தனிதான். அதுபோல் கொட்டுகிற அருவியாக ஸ்ரீதேவி இருந்தார். பட்டுத் தெறிக்கிற பாறையாக கமல் இருந்தார். அதனால்தான் அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

கமல்ஹாசன் தேடல் உள்ள ஒரு அற்புதமான கலைஞர். ஆரம்ப காலங்களில், என்னிடம் எப்போதும் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பார். அவரிடம் இருக்கக்கூடிய நகைச்சுவை உணர்வு, எனக்கு மிகவும் பிடிக்கும். கமல்ஹாசனை நான் ஒரு ரசிகனாகவே பார்க்கிறேன். பட்டத்து இளவரசனுக்கு முடிசூடும்போது எப்படி நாடே மகிழுமோ, அதுபோல் அவரை பாராட்டுகிறபோது, நானும் மகிழ்கிறேன், என்றார்.

விழாவில், டைரக்டர் - நடிகர் பார்த்திபன் பேசும்போது, கமல் ஒரு பரிசோதனை கூடம் போன்றவர். திரைப்படத்தின் பல்வேறு கூறுகளை, தன்னை முன்னிலையாகக் கொண்டு பரிசோதித்து பார்ப்பவர். அவர் முதல் படத்துக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? 250 ரூபாய்தான். அதில் இருந்து நாள்தோறும் வளர்ந்து, இன்றைக்கு இந்த உயர்வை எட்டியிருக்கிறார். அவரே ஒரு தொகுப்புதான். அவருக்கு ஒரு தொகுப்பு நூல் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில்  நடிகர்கள் சார்லி, சண்முகராஜா, நடிகை ரோகிணி, கவிஞர் நா.முத்துக்குமார், கு.ஞானசம்பந்தன் ஆகியோரும் கமலை பாராட்டி பேசினார்கள்.




Ang Lee and Kamal HaasanWhen Hollywood director Ang Lee  visited Chennai to promote his filmLife of Pi, he was interviewed by a TV channel. And the interviewer was none other than Kamal Haasan


 .
The interview session was attended by several prominent film makers from the South. Kamal Haasan is a huge fan of Ang Lee's cinema and was thrilled to meet him and discuss his style of filmmaking.



After the interview, Ang Lee said he was happy that Kamal Haasan knew so much about him and his films.



"I am totally stunned by Kamal Haasan's brilliance," said the Taiwanese-born American director of Academy award winning films such as Crouching Tiger, Hidden Dragon andBrokeback Mountain.



"I never thought that he would know so much about me and my films. Inspired would be the word. He is not only an amazing actor but a great human being who knows everything about world class cinema. I am happy to have been interviewed by him," he added.



After the interview, Kamal Haasan took Lee to his office and showed him the trailer of his latest film Viswaroopam.


After watching the trailer, Lee said, "A person who is not aware of the language too can understand the movie. It's totally stunning. I am sure this movie will be a huge hit."

நன்றி - தினமலர், டெக்கான் கிரானிக்கல்

இந்தியாவின் கல்வியை மாற்றக்கூடிய 11 விஷயங்கள்


இந்தியாவின் கல்வியை மாற்றக்கூடிய பதினோரு விஷயங்கள்


அரிந்தம் சவுத்ரி, பிரதம ஆசிரியர் |
இந்தியாவின்  எதிர்காலம் இந்நாட்டின் கல்வியின் எதிர் காலத்தைப் பொருத்து அமையும்  என்று நான் அடிக்கடி கூறிவருகிறேன். நமது இந்திய இளைஞர்களின் தொகை குறித்துப் பெருமைப்படுகிறோம். ஆனால் நமது கல்வி அமைப்பால் இந்தப் பெருமை கானல்நீராகவே தொடரும். நீதித்துறையில் தாமதங்களைக் களைவது, சுகாதாரத்தில் அதிகபட்ச முதலீடு ஆகியவற்றோடு கல்வியிலும் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவது அவசியம். அதுதான் நமது இளைஞர்கள் தொகையிலிருந்து நல்ல பலன்களை அடைவதற்கு வழிவகுக்கும். நம்மிடம் போதுமான அவகாசம்கூட இல்லை.



60 ஆண்டுகளுக்குப் பிறகு கல்வி அடிப்படை உரிமை என இந்தியா உணர்ந்து அறிவித்திருக்கிறது. இது ஒன்று மட்டுமே நமது கல்வி அமைப்பை மாற்றிவிடும் என்று நம்பவில்லை. ஆனால் கல்விச் சீர்திருத்தங்களில் இது முக்கிய படிக்கல்லாக இருக்கும். 2001&ல் ஆரம்பிக்கப்பட்ட சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திலிருந்து 14  வயதுக்குக் கீழ் உள்ள எல்லா இந்திய குழந்தைகளும் இலவச கட்டாயக் கல்வியைப் பெறவேண்டும் என்ற நிலை படிப்படியாக உருவாகியுள்ளது.



 சமூகத்தில் தாழ்ந்த நிலையில் உள்ள குழந்தைகளுக்குத் தனியார் பள்ளிகளிலும் குறிப்பிட்ட அளவு இடங்களை ஒதுக்கவேண்டும் என்றும் சட்டம் உருவாகியுள்ளது. சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் பள்ளிகள் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளுடன் அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஆசிரியர் களையும் கொண்டிருக்க வேண்டியது அவசியம். இன்றுகூட நடுநிலைப் பள்ளி அளவில் மூன்று லட்சம் வகுப்பறை களுக்குத் தட்டுப்பாடு உள்ளது. உயர்நிலைப் பள்ளி அளவில் 1.7 லட்சம் வகுப்பறைகள் தேவை. இந்தியாவில் உள்ள பாதி பள்ளிகளில் அடிப்படைக் குடிநீர், சுகாதார வசதிகள் கிடையாது. ஒரு குழந்தை அடிப்படைக் கல்வி முடித்து மேல்நிலைக் கல்விக்குச் செல் வதற்கு இந்த வசதிகள் மிகவும் அவசியம்.



நான் மேற்சொன்ன நடவடிக்கைகள் அனைத்தும் பகுதி அளவு பலன்களையே தரும். சமூகத்தின் ஒரு வகுப்பினருக்கே பயன்படும். இதை சரிசெய்ய கல்வியில் நிலவும் பாலின பாகுபாட்டை சரிசெய்ய வேண்டும். பெண் குழந்தைகள் கல்வியில் பிரம்மாண்டமான முதலீட்டைச் செய்ய வேண்டியது  இரண்டாவது முக்கிய படிக்கல்லாகும்.  உலகளாவிய அளவில் பெண்கள் கல்வி பெறும்போது சமூகப் பொருளாதார வசதிகளை அடையும்போது சமூகத்தில் தீமைகள் குறைகின்றன. நாடுகள் வளம்பெறுகின்றன. மனித வளர்ச்சிக் குறியீட்டில் கேரள மாநிலம் முன்னணியில் இருப்பதற்குக் காரணம் அங்குள்ள பெண்கள் அதிக கல்வி அறிவைப் பெற்றிருப்பதே.



ஆசிரியர்கள் பற்றாக்குறை முழுமையாக கல்வி அமைப்பை சீர்குலைப்பதாக உள்ளது. பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் போன்ற தொழில்முறை பயிலகங்கள் மட்டுமின்றி, உயர்கல்வி அமைப்பில்கூட ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஆசிரியர்களுக்கு போதுமான கல்வியைக் கொடுப்பதுதான் மூன்றாவது பெரிய சீர்திருத்த படிக்கல்லாக இருக்கும். இந்தியாவில் ஆசிரியர்களின் தரம் மிக மோசமாக உள்ளது. நமது கல்வி அமைப்பில் ஆசிரியர்கள் பாடத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளதையே கிளிப்பிள்ளை களைப்போல சொல்லிக் கொடுத்து கொண்டிருக்கின்றனர். இந்தப் பாடத் திட்டங்கள் முழுவதும் காலத்துக்கு ஒவ்வாதவை. நவீன மாற்றங்கள் மற்றும் போக்குகளைக் கற்பிக்கும் முறைகளில் தொடர்ந்து அனுசரிக்க வேண்டும். இதன் மூலம்தான் வேலைத்திறன் உள்ள பட்டதாரிகளை நம்மால் உருவாக்க முடியும்.



ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் பணித்திறனை மதிப்பிட அரசு வெளிப்படையான நேர்மையான முறை ஒன்றை அமல்செய்யவேண்டும். தற்போது தரம் இல்லாத சோம்பேறி ஆசிரியர்கள் வாழ்க்கை முழுவதற்குமான வேலை உத்தரவாதத்தைப் பெற்று ஆண்டுதோறும் சம்பள உயர்வையும் பெற்று நிம்மதியாக இருக்கின்றனர். இந்திய பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஒரு பேராசிரியருக்கு எந்த நிலையிலும் தனது வேலை பறிபோகாது என்று தெரியும். இச்சூழ்நிலையில் நேர்மையாக, கடினமாக உழைக்கும் ஆசிரியர்கள்தான் பலியாகின்றனர். அவர்கள் சோம்பேறி ஆசிரியர்களின் உழைப்பையும் சேர்த்து கொடுக்க வேண்டியுள்ளது. ஆசிரியரின் பணித்திறனை மாணவர்களும் பெற்றோர்களும் மதிப்பிட ஒரு முறைகூட இல்லையே ஏன்?



அடுத்த ஐந்தாவது படிநிலை முக்கியமானது. மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டங்கள் போன்ற திட்டங்களில் நாம் ஏற்கெனவே ஆயிரக்கணக்கான கோடிகளை ஆண்டுதோறும் செலவழிக் கிறோம். இந்தத் திட்டங்களை உறுதியான பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டடங்கள் கட்ட செலவழிக்கவேண்டும். தற்போது இத்திட்டங்களின் கீழ் நடக்கும் வேலைகள் எதுவும் சமூகத்திற்கு நீண்டகால பலன் தருவதாக இல்லை. இந்தத் திட்டங் களின்கீழ் பணிபுரிபவர்கள் தாங்கள் கட்டும் கட்டடங் களில் தங்கள் குழந்தைகள் படிக்கப்போவதை எண்ணிப் பார்த்தால் கூடுதல் பயனாக உணர்வார்கள்.



அடுத்த படிநிலை பிரம்மாண்டமான சீர்திருத்த மாகும். ஆரம்பக்கல்வி நிலையை ஒரு குழந்தை தாண்டி, அடுத்ததாக கல்லூரிக் கல்வியில் நுழைவதற்கான அடிப்படைப் பயிற்சிக்குச் செல்கிறது. இது ஆறாவது படிநிலை. ஆரம்ப உயர்நிலைப்பள்ளி கல்வியோடு மேல்நிலைக்கல்வியிலும் தரத்தை உருவாக்க வேண்டியது அவசியம். கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள நகரங்களிலும் சிற்றூர்களிலும் 14 முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் மதிப்பெண்கள் தொடர்பான அழுத்தத்தால் தற்கொலை செய்யும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. மதிப்பெண் மற்றும் சதவிகித முறையை மாற்றும் திட்டங்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. கிரேடு முறை மூலம்  தேவையற்ற அழுத்தத்தையும் போட்டிகளால் பிஞ்சுக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தப்படும் சங்கடங்களும் குறைந்துள்ளன.



இன்று பட்டப்படிப்போ, முதுகலைப் படிப்போ படிக்காவிட்டால் கல்வி முழுமையற்றது என உணரப்படுகிறது. அதனால் உயர்கல்வி அளவில் அதிகபட்ச சீர்திருத்தங்களைச் செய்யவேண்டும். சுதந்தரம் பெற்றபோது ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற நிறுவனங்கள் தரமாக தொடங்கப்பட்டன. தற்போதைய நிலையில் மிகக்குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்களுக்கே அந்த நிலையங்கள் சேவை செய்கின்றன. அதனால் உயர் கல்விக்காக நிறைய கல்வி நிலையங்களை உருவாக்கவேண்டும். தேசிய அறிவு ஆணையத்தின் கணக்குப்படி நமக்கு இன்னும் ஆயிரம் பல்கலைக் கழகங்கள் தேவை. 500 பல்கலைக் கழகங்களே உள்ளன.



முந்தைய வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றிவிட்டு கல்வியின் முழுமையான தரத்தை அதிகரிக்க தனியார்களை கல்வித்துறைக்குள் அனுமதிப்பது அவசியம். தனியார் துறையினரின் தேசக்கட்டுமான பங்கேற்பை ஊக்குவிப்பது அவசியம். இந்திய தொழில் முனைவோரை உயர்கல்வியில் அதிகம் முதலீடு செய்ய வைப்பது எட்டாவது படிநிலையாகும்.



ஏஐசிடிஇ போன்ற காலாவதியான அமைப்புகள் ஊழலின் பிறப்பிடங்களாக உள்ளன. அவற்றிற்கு எல்லையற்ற அதிகாரமும் தரப்பட்டுள்ளது. இந்த அதிகாரங்களைக் களைந்து அனைத்தை யும் வெளிப்படையாக மாற்றவேண்டும். இது அடுத்த படிநிலை.  இந்த ஒரு நடவடிக்கையின் மூலம் தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் லட்சக் கணக்கான மாணவர்கள் பயன் பெறுவார்கள். இதை தற்போதைய அரசு பரிசீலித்துவருகிறது.



கல்விக்கான மானியங்களில் அதிக கவனம் செலுத்துவது 10வது படிநிலையாகும். ஏழைப் பின்னணியுள்ள எத்தனையோ மாணவர்கள் தரமான படிப்புகளில் சேரமுடியாமல் உள்ளனர். அரசுக்கு நல்ல எண்ணங்கள் இருப்பினும் வங்கிகள் அவர்களுக்குக் கடன் தர மறுக்கின்றன. இவர்களுக்கு ஒரு பெரிய தொகை கொண்ட நிதியை அரசு உருவாக்கவேண்டும். மதம், சாதி வித்தியாசம் இல்லாமல் இது உதவுவதாக இருக்கவேண்டும்.



பதினொன்றாவதும் முக்கிய மானதுமான படிநிலை என்னவெனில், நாட்டின் ஜிடிபியில் 1.5 சதவிகிதத்தி லிருந்து கல்விக்கான முதலீட்டை 5 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும். ஆரம்பக் கல்வியில் அரசு மிகச்சிறந்த பங்கேற்பைச் செய்யமுடியும். ஆரம்பக் கல்வி மற்றும் அடிப்படை ஆரோக்கியத் தில் தனியார் துறையினர் காப்பாற்று வார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். 



இந்த பதினோரு வழி முறைகளும் இந்தியா வின் கல்வி நிலையை மாற்று வதற்கு உதவும் என நான் நினைக்கிறேன். ஆனால் இன்னொன்றையும் நான் அறிவேன். எல்லாம் வேகமாக மாறிக் கொண்டிருக்கும் உலகில் திறந்த மனதுடன் இருக்கவேண்டி யதும் அவசியம். அதுதான் இந்த பதினோரு வழிமுறைகளைவிட முக்கிய மான வழிமுறையாகும்

thanx - The Sunday Indian

ஓ பக்கங்கள் ஞானியின் கடிதம் டூ சின்மயி

அன்புள்ள சின்மயிக்கு

அன்புள்ள சின்மயிக்கு


வணக்கம். 


நாம் ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறோம். எந்திரன் பட வெளியீடு சமயத்தில் ரஜினியின் பிம்பம் பற்றிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நாம் பங்கேற்றோம். எதிரெதிர் அணியில் இருந்தோம் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நீங்கள் எந்திரன் படத்தில் பங்கேற்றவர். நான் எப்போதும் விமர்சகன்.
பின்னர் அண்மையில் என் சிநேகிதி பத்மாவும் நீங்களும் பங்கேற்ற ஒரு சமூக மேம்பாட்டு நிகழ்ச்சியில், இளம் மாணவிகளுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஏற்படும் விதத்தில் நீங்கள் பேசியதாக அவர் எனக்குச் சொன்னார்.

 சிறு வயதில் தந்தையால் கைவிடப்பட்டபோதும் தாயின் உறுதியான மனமும் கடும் உழைப்பும் உங்களை வாழ்க்கையில் முன்னேறச் செய்ததைப் பற்றி நீங்கள் பேசி அந்தச் சிறுமிகளுக்கு வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடுவதற்கான உத்வேகத்தை அளித்ததை அறிய. மகிழ்ச்சியாக இருந்தது. பொதுவாக சினிமா பிரபலங்கள் தங்கள் இளமைக் காலக் கசப்புகளை பேசுவதோ ஒப்புக் கொள்வதோ அவற்றிலிருந்து கற்றுக் கொண்டதைப் பகிர்வதோ அரிது.



அதன்பின் இணைய உலகில் டிவிட்டர் தளத்தில் உங்களுக்கும் உங்கள் அம்மாவுக்கும் எதிராக பாலியல் அவதூறுகளை செய்வதாக சிலரைக் குற்றம் சாட்டி நீங்கள் காவல் துறையில் புகார் செய்ததால் இருவர் கைதான செய்திகளைப் பார்த்ததும், இது தொடர்பான டிவிட்டுகளைத் தேடிப் படித்தேன். எல்லாம் கிடைக்கவில்லை. கிடைத்த வரை படித்தேன்.



முதலில் உங்கள் ட்விட்டுகளைப் பற்றிப் பேசிவிடுவோம். இட ஒதுக்கீட்டுக்கு எதிரான உங்கள் குமுறல் அதில் முக்கியமானது. தாழ்ந்த மனிதர் என்று யாரும் இல்லை. உங்கள் சம்மதம் இல்லாமல் உங்களை யாரும் தாழ்த்தப்பட்டவர்களாக வைத்திருக்கமுடியாது என்று நீங்கள் சொல்வது மிகச் சரி. அப்படி யாரேனும் தாழ்த்தி வைக்க முயன்றால், அடங்க மறு, அத்துமீறு, போராடு என்றுதான் இன்று தலித் தலைவர்களும் சொல்கிறார்கள். இதைத்தான் அம்பேத்கரும் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் சொன்னார். ஆனால் அவர் அதைச் சொல்வதற்கு முன்னால் நிலைமை அப்படி இருக்கவில்லை என்பதை நீங்கள் அறியவேண்டும். தலித்துகளின் சம்மதம் இல்லாமலேதான் அவர்கள் தாழ்த்தி வைக்கப்பட்டிருந்தார்கள். 



உங்கள் அறிக்கையில் உங்கள் கொள்ளுப் பாட்டனார்கள் தமிழறிஞர்கள் மு.ராகவைய்யங்காரையும் ரா.ராகவைய்யாங்காரையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இருவரும் தமிழர் வரலாற்றில் மறக்கக் கூடாத மாமேதைகள் என்று நண்பர் ஆய்வாளர் பொ.வேலுசாமி நெகிழ்ச்சியுடன் சொல்கிறார். எனவே வரலாறு முக்கியம் என்று உங்களுக்குத் தெரிந்திருப்பதால்தான் உங்களுடைய தமிழ்ப் பாரம்பரியத்தை வரலாற்றிலிருந்து தூசு தட்டி எடுத்துச் சொல்கிறீர்கள். வரலாறு முக்கியம். மிக மிக முக்கியம். ஆனால் முழு வரலாறும் முக்கியம். அதில் ஏதோ ஒரு பகுதி மட்டும் அல்ல. 



ராகவைய்யங்கார்களின் சம கால மேதைதான் கணித அறிஞர் ராமானுஜம். மூவருமே உங்கள் டிவிட்டர் பாஷையில் ‘ஹையங்கார்கள்’தான். ராமானுஜத்தை, அன்றைய உங்கள் ஜாதி வைதீகர்கள் ஜாதிப்பிரஷ்டம் செய்தார்கள். பாரதியாவது கலகக்காரன். வைதீகர்களுக்குப் பிடிக்காததில் வியப்பில்லை. ஆனால் ராமானுஜம் அவர்களை எதிர்க்காமல், தன் கணக்கிலேயே மூழ்கிக் கிடந்தவர். அவரை விலக்கக் காரணம், ‘சாஸ்திர விரோதமாக’ அவர் கடல் கடந்து போய் வந்ததுதான். அவர் செத்தபோது சம்பிரதாயமான இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்தார்கள். அன்றைய ஹிந்து இதழ் ஆசிரியரின் முயற்சியால் ஒருவர் சடங்கு செய்ய முன்வந்தார். மொத்தமாகவே ஆறேழு பேர்தான் சுடுகாடு வரை சென்றார்கள்.




சொந்த ஜாதிக்காரனையே கடல் கடந்த குற்றத்துக்காக இப்படி நடத்திய வைதீகர்கள் அன்று தங்கள் பார்வையில் கீழ் ஜாதி என்று கருதப்பட்டவர்களை எப்படி நடத்தியிருப்பார்கள் என்று யோசியுங்கள். அந்த வரலாற்றையும் நீங்கள் தேடிப் பிடித்து படிக்க வேண்டும். ராகவைய்யங்கார்கள் ஏட்டுச் சுவடிகளைப் படித்து ரசித்து தமிழமுதில் இன்புற்றிருந்த வேளையில், இருளாண்டிகளும் அஞ்சலைகளும் என்ன நிலையில் இருந்தார்கள் என்பதும் வரலாற்றில் இருக்கிறது. உங்கள் நண்பர் ‘ஈ’ இயக்குநர் ராஜமௌலி டிவிட்டில் தவறாகச் சொல்வது போல அந்த நிலை தொழிலால் வந்ததல்ல. 


பிறப்பால் சுமத்தப்பட்டதுதான். அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்படுவதற்கு அவர்களுடைய சம்மதத்தை யாரும் கேட்டது இல்லை. எதிர்த்தவர்களுக்கு சாணிப்பால் அபிஷேகமும் கசையடி அர்ச்சனையும்தான் கிடைத்தன. அந்த வரலாறுகளைத் தேடிப் பிடித்துப் படித்தால்தான், அந்த இடைவெளியை நிரப்பவே இன்றிருக்கும் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்பது உங்களுக்குப் புரியமுடியும். 



‘மறவர் சீமைப் பொண்ணு நான்’ என்று பெருமைப்படுகிறீர்கள். உங்கள் கொள்ளுப் பாட்டனார் காலத்தில் அந்த மறவரெல்லாம் குற்றப் பரம்பரையினர் என்று அரசாங்கத்தால் முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட வரலாற்றையும் சேர்த்துப் படித்தால்தான், ஏன் இன்று மறவருக்கும் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்பது புரியும்.



ட்விட்டரில், பேஸ்புக்கில் எல்லாம் எவரும் தங்களுக்கு ஆழமாக நேரடியாக தெரிந்திராத இட ஒதுக்கீடு போன்ற விஷயங்களைப் பற்றி டைனிங் டேபிளில் போகிற போக்கில் கமெண்ட் அடிப்பது போல எழுதும் பொறுப்பற்ற சுதந்திரம் இருப்பதே பிரச்சினை. இந்த விஷயங்களில் உங்களுக்கோ பிறருக்கோ அக்கறை இருப்பதை நான் நிச்சயம் வரவேற்கிறேன். 99.9 மதிப்பெண் வாங்கிய பிராமணப் பெண்ணுக்கு சீட் கிடைக்காத பிரச்சினைக்கும் தீர்வு தேவைதான். ஆனால் தீர்வைத் தடுப்பது இட ஒதுக்கீடு அல்ல என்பது புரிய, நீங்கள் நிறைய படிக்க வேண்டும். பல மொழிகளைப் படித்துத் தேர்ந்துள்ள உங்களால் இது முடியாதது அல்ல. தேவைப்படுவது நிஜமான தேடலும் ஜாதிகளுக்கு அப்பால் எல்லா சக மனிதர்கள் மீதான அன்பும் அக்கறையும்தான்.



இனி உங்கள் புகாரால் கைதாகியும் கைதை எதிர்நோக்கியும் இருக்கும் சக ட்விட்டர்களின் நடத்தையைப் பார்ப்போம். அதில் ஒருவரை நான் நேரடியாகவே அறிவேன். நான் நடத்தும் கேணி இலக்கிய கூட்டங்களுக்குத் தொடர்ந்து வருபவர். ஓராண்டாக சிறப்பாக வெளிவரும் தமிழின் அருமையான ஒரு சிற்றிதழுக்குப் பங்காற்றுபவர். உங்களுடன் சண்டையிட்ட ட்விட்டர்கள் பலர் இட ஒதுக்கீடு, மீனவர் நலன் இவற்றில் எல்லாம் அக்கறையும் உணர்ச்சிப் பூர்வமான ஈடுபாடும் உடையவர்கள். உங்களுடைய சில கருத்துகள் அவர்களுக்கு எரிச்சலாகத்தான் இருக்கும். 



ஆனால் அதற்காக பாலியல் சார்ந்த அவதூறுகளை கேலிகளை அவர்களில் யார் எழுதுவதையும் யாருக்கு எதிராக எழுதுவதையும் நான் நிச்சயம் ஏற்கவில்லை. கடுமையாகக் கண்டிக்கிறேன். நீங்களோ வேறு யாரோ இட ஒதுக்கீடு பற்றியோ, தாழ்த்தப்பட்டவர்கள் பற்றியோ, மீனவர் கொலைகள் பற்றியோ புரிந்தோ புரியாமலோ எவ்வளவு அபத்தமாகப் பேசினாலும், அவையெல்லாம் எப்படி அபத்தம் என்றுதான் புரிய வைக்க முயற்சிக்கலாம். அதற்கான பொறுமை இல்லாவிட்டால் உங்களை அலட்சியம் செய்துவிட்டுப் போகலாம். ஆனால் ஒருபோதும் யார் மீதும் பாலியல் வக்கிர அவதூறுகள், கேலிகள் செய்வது நிச்சயம் தவறு. 



இங்கே நான் கவலையும் கவனமும் கொள்ள விரும்பும் இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன. இவற்றை நிச்சயம் சட்டத்தால் தீர்க்கமுடியாது.

 .
அறிவுக் கூர்மையும் திறமையும் கடும் உழைப்பும் தன்னம்பிக்கையும் உடைய உங்களைப் போன்ற பலர் இதே சமூகத்தில் வாழும் கோடிக்கணக்கான சாதாரண மக்களின் பிரச்சினைகளை, அவற்றின் வேர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் உழைப்பே இல்லாமல் ஒரு முழு வாழ்க்கையை இன்றைய சமூகத்தில் வாழ்ந்து முடித்துவிட முடியும். புகழும் செல்வாக்கும் தரும் வசதியில் அந்தப் பிரச்சினைகளைப் பற்றி குழப்பமான மேம்போக்கான கருத்துகளைச் சொல்லவும் முடியும்.



 ராகவைய்யங்கார் முத்தொள்ளாயிரத்தைப் பதிப்பிக்கும்போது ஒரு பாட்டில் தனக்கு ஒரு விஷயம் இன்னும் ஆழமாகத் தெரியவில்லை என்றால் எவ்வளவு தயங்கியிருப்பார், எவ்வளவு தேடியிருப்பார்.. தேடிப் பிடித்து படிக்காமல் அவசரப்பட்டு முடிவைச் சொல்லியிருந்தால் அவரை ஆய்வுலகம் கொண்டாடியிருக்குமா ? 



மறுபக்கம் இந்த பிரச்சினைகளில் உணர்வுப் பூர்வமான ஈடுபாட்டுடன் , அவற்றிற்குத் தீர்வு வரவேண்டுமென்ற ஆர்வமும் கொண்டு பல்வேறு சமூக சித்தாந்தங்களில் ஓரளவு பரிச்சயமும் உடைய மிகச் சிலராக இன்று ஒரு புதிய தலைமுறை துடிப்புடன் உருவாகி வந்துள்ளது. சோகம் என்னவென்றால், அதில் சிலர், கூடவே பாலியல் வக்கிர மனசும் உடைய டாக்டர் ஜெக்கில் அண்ட் மிஸ்டர் ஹைடாக விளங்குகிறார்கள்..



 உங்களை பகடி செய்த ட்விட்டர்களின் விரல்கள் கம்ப்யூட்டர் பட்டன்களில் பாலியல் வக்கிரத்தை தட்டும்போது, அவர்கள் படித்த பெரியாரோ, அம்பேத்கரோ, மார்க்சோ, சேகுவேராவோ ஏன் அவர்களுடைய தலைக்குள்ளிருந்து ஒரு எதிர்த் தட்டு தட்டமுடியாமல் போகிறது என்பதே என் இன்னொரு கவலை. 



இன்றைய மீடியா சூழல்தான் காரணம். நீங்களும் சரி, உங்கள் டிவிட்டர் எதிரிகளும் சரி, ட்விட்டரில் எழுதிய பல வரிகளை ஒரு போதும் அச்சுப் பத்திரிகைகளில் எழுதமுடியாது. பத்திரிகை ஆசிரியர் தடுத்துவிடுவார். இணையம் தரும் சுதந்திரம் கட்டற்றது. ஆனால் அதைப் பயன்படுத்துவோருக்கு சுய கட்டுப்பாடும் பொறுப்பும் சொல்வதில் தெளிவும் தேவை. அது இல்லாத இருபிரிவினரிடையே நடக்கும் சண்டைதான் இந்த விவகாரம். இதனால் இணைய சுதந்திரத்துக்கே ஆபத்து. 


உலக மகா அரசியல் சித்தாந்தங்களுடனெல்லாம் பரிச்சயம் கொண்டவர்களுக்கு, அடிமனதில் பெண் மீதான பாலியல் வக்கிரம் மட்டும் ஏன் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டே இருக்கிறது ? மீடியாதான் காரணம். எத்தனை அறிவார்ந்த நூல்களைப் படித்தாலும் கேட்டாலும், சினிமாவும் டி.வியும் காமப் பிசாசுகளை உசுப்பி விடும் வேலையையே பெரும்பாலும் செய்து கொண்டிருக்கின்றன. அதனால்தான் மற்றபடி நல்லவர்களாக தெரிபவர்கள் கூட இணைய முகமூடி மாட்டியதும் நிர்வாணக் குத்தாட்டம் ஆடுகிறார்கள். அவர்கள் தலைக்குள், நீங்கள் பணி புரியும் வணிக சினிமா துறை விதைத்த காமவித்துகள், குத்தும் கூரிய முட்களோடு தழைத்துக் கொண்டே இருக்கின்றன.



நீங்கள் ஆபாசப் பாடல்களைப் பாடியிருப்பதால்,உங்களுக்கு எதிராக ஆபாசமாக எழுதினால் என்ன தப்பு என்ற அராஜகமான வாதத்தை நிச்சயம் நான் ஏற்க மாட்டேன். ஆனால் அறிவுக்கூர்மை, மொழிப் புலமை எவ்வளவு இருந்தாலும், என்ன பாடுகிறோம் என்பதை முடிவு செய்யும் தேர்வைக் கறாராக செய்யாமல் வாய்ப்பு, பணம், புகழ் என்ற அளவுகோல்களை மட்டுமே பயன்படுத்தி நீங்கள் பாடிக் கொண்டிருக்கும் சினிமா பாடல்களின் விளைவுகள் என்ன என்ற கேள்வியை நீங்கள் புறக்கணிக்க முடியாது.




“ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி நான். என்னை மேய்ந்துவிடு மொத்தம்” என்று ஒரு பெண் பாடுவது ஆண் மனதில் என்ன உணர்ச்சியை எழுப்பும் ? ‘உன்னுள்ளே நுழைஞ்சதாரோ, பையக் குழைஞ்சதாரோ ?’ என்ற வரிகளை எழுதியவருக்கு பெரும் பணமும் சமூக அந்தஸ்தும் தரும் இதே சமூகம், அந்த வரிகளின் அர்த்தத்தை ஒருவர் ட்விட்டரில் எழுதினால் கழுத்தில் கை வைத்து சைபர் கிரைமுக்கு அல்லவா தள்ளிக் கொண்டு போகும் ? ‘தினம் ஆடை சண்டையிலே முதலில் தோற்பவள்‘ என்று தன்னைப் பற்றி பாடும் பாத்திரம் அதே பாட்டில் ‘நீ இடம் சுட்டிப் பொருள் விளக்கு’ என்று சொல்லும்போது எந்த இடத்தை, என்ன பொருளைச் சொல்கிறாள் என்ற சூட்சுமம் ஆபாசமாக எழுதும் ட்விட்டர்களுக்குத் தானே அல்வாவாக இனிக்கும். அது ராகவைய்யங்கார்கள் படித்த தமிழ் இலக்கணத்திற்கு அப்பாற்பட்டதல்லவா? 



இந்தப் பாடல்களைக் கேட்டு வளரக் கூடிய ஒரு சிறுவன், நாளை க்வாண்ட்டம் பிசிக்ஸ் படித்து ஐஎஸ்ஆர்ஓ விஞ்ஞானியானாலும் அவன் அடிமனதில் பதிந்துவிட்ட பாலியல் வக்கிரம், வேறொரு சின்மயியுடன் சண்டை வரும்போது வெளிப்படத்தான் செய்யும். ‘பாடுவது என் தொழில். கொடுப்பதைப் பாடுகிறேன் ‘ என்று வாதாட இடமில்லை. அந்தப் பாட்டு, அதைக் கேட்கும் மனங்களை இழிவான மனநிலைக்கு அழைத்துப் போனால், அதற்கான பொறுப்பில் உங்கள் பங்கும் இருக்கிறது. ஒருவரின் சம்மதம் இல்லாமல் அவரை யாரும் தாழ்த்தப்பட்டவராக்கிவிடமுடியாது என்பது போலவே, உங்கள் சம்மதமில்லாமல் யாரும் உங்களை இழிவான பாடலகளைப் பாட வைத்துவிடமுடியாது. அப்படிப் பாட மறுத்ததால் வாய்ப்புகளை இழந்த உன்னிகிருஷ்ணன் ஒன்றும் நலிவுற்று ஓய்வூதியம் வாங்கவேண்டிய நிலைக்குப் போய்விடவில்லை. 



சமூகத்தில் நாம் ஒவ்வொருவரும் மறைமுகமாகவோ நேரடியாகவோ இன்னொருவர் வாழ்க்கையோடு சம்பந்தப் பட்டிருக்கிறோம். அந்தப் பொறுப்பை நாம் உதறிவிடமுடியாது. உங்கள் மீது பாலியல் அவதூறுகளை வீசுபவர்களின் மன வக்கிரங்கள், காலம் காலமாக நம் ஊடகங்களால் விதைக்கப்பட்டவை. அதற்காக நியாயமாகவே பதறும் நீங்கள், அறிந்தோ அறியாமலோ அதே விஷ விதைகளை தூவிக் கொண்டிருக்கிறீர்கள். அவை விருட்சங்களாகும்போது உங்கள் மகளை அழைத்துக் கொண்டு நீங்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கும் நிலை வரலாம். அல்லது உங்கள் மகன் மீது வேறொரு தாய் புகார் கொண்டு வரலாம்.



இந்தப் பிரச்சினைகளை நாம் சட்டத்தால் மட்டும் திருத்திவிடமுடியாது. ஒருவரோடொருவர் விவாதிப்பதன் மூலம் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அடுத்த பாட்டைப் பாடும் முன்பு வரிகளின் அர்த்தத்தை யோசியுங்கள். அவற்றுக்கு என்ன மாதிரி காட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று யோசியுங்கள்.


 அது உங்களுக்கு உடன்பாடானதுதானா என்று யோசியுங்கள். அடுத்த ட்விட்டை எழுதும் முன்பு அந்த விஷயம் பற்றிய உங்கள் புரிதல் முழுமையானதுதானா என்று யோசியுங்கள். இல்லையென்றால் முதலில் புரிந்துகொண்டு அப்புறம் விமர்சியுங்கள். நீங்கள் மட்டுமல்ல, உங்களையும் இன்னும் பலரையும் கீழ்த்தரமாக பகடி செய்த பதிவர்களும் கூட, தாங்கள் படித்த பெரியாரும் மார்க்சும் அம்பேத்கரும் ஏன் தங்கள் மூளைக்குள் பதிந்தார்களே ஒழிய மனங்களில் படியவில்லை என்பதை யோசிக்கவேண்டும் என்றே வேண்டுகிறேன். நாம் எல்லாரும் வெறும் செராக்ஸ் மெஷின்களல்ல.



உலகின் மிகச் சிறந்த நீதிமன்றம் நம் மனசாட்சிதான். அதையே உங்களுக்கும் சரவணகுமாருக்கும் ராஜனுக்கும் இன்னபிறருக்கும் பரிந்துரைக்கிறேன். இந்த மோசமான சூழலிலிருந்து நீங்கள் அனைவரும் மீண்டு வர வாழ்த்துகிறேன்.
அன்புடன் ஞாநி


கல்கி 3-11-2012

thanx - kalki ,gnani

பச்சைப்புயலின் ஆட்சியில் நீலம் புயல்

http://www.thedipaar.com/news/news.php?id=54126

கூந்தலுக்குள் மறைத்து வைத்து தங்க பிஸ்கட் கடத்தல் : ஏர்போர்ட்டில் இலங்கை பெண் கைது - Thedipaar.com


கூந்தலுக்குள் மறைத்து வைத்து தங்க பிஸ்கட் கடத்தல் : ஏர்போர்ட்டில் இலங்கை பெண் கைது -
1. தன்னோட நெத்தியில பொட்டு வெச்சா அடக்கமான பொண்ணு! அடுத்தவன் நெத்தில நாமம் போட்டா  நாகரீகமான பொண்ணு # பட்டதில் தெளிந்தது




-----------------------


2. நம்மிடையேயுள்ள அபாயகரமானவர் சீமான் : தமிழச்சி தங்கப் பாண்டியன் # ஹலோ மேடம், இது என் டயலாக் - விஜய லட்சுமி




----------------------


3. அன்பே! உன் உள்ளங்கைகள் புத்தம்புதுசா இருக்கு, என்  கை ரேகைகள் ரேகைகள் பாத்திரங்கள் துலக்கி தேஞ்சே போச்சு




------------------------


4. ஒவ்வொரு டைம் போஸ்ட் பாக்ஸ்ல  லெட்டர் போஸ்ட் பண்ணும்போதும் நாம பண்ணும் மேனரிசம் தான் போஸ்ட் மேனரிசமா?




------------------------


5./ஈறு கெட்ட எதிர் மறை வினையெச்சம் உதாரணம் - சஹானா ,ரஞ்சிதா



----------------------



குட்டி எமன்கள்.
குட்டி எமன்கள்.


6. சூரியமின்சக்தி தூய்மையானது மற்றும் சுற்றுச்சூழல் மாசில்லாதது-ஜெ # சூரியன் உங்களுக்கு ஆகாதே?



-----------------


7. கிங்பிஷர் ஏர்லைன்ஸ்க்கான உரிமம் தற்காலிகமாக ரத்து!#அந்த ஏரஹோஸ்டல்ஸ் எல்லாம் இனி என்ன செய்வாங்க ?



---------------------


8. கூடங்குளம் அணு உலையில் வரும் நவம்பர் மாதம் இறுதியில் மின்சார உற்பத்தி துவங்கும்:-நாராயண சாமி# நாராசம் சாமி



---------------------


9. புதுக்கோட்டையில் பணத்துக்காக 3 பெண்களை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் - போலீசாரால் கைது# 3* 14 வருஷம் தீட்டுங்க


------------------


10. எந்த ஒரு சூழ்நிலையிலும் சம்சாரத்துக்கு பயந்து வாழ்வதே ஆண்களின் சாபக்கேடு..


-------------------



கன்னிமரத்தோப்பு எங்க ஊரு பக்கம்
தீபாவளி வரைக்கும் தண்ணி வந்தா நல்லாயிருக்கும்
கன்னிமரத்தோப்பு எங்க ஊரு பக்கம்
தீபாவளி வரைக்கும் தண்ணி வந்தா நல்லாயிருக்கும்

11. ஒரே ஒரு வெற்றி பல கதவுகளை திறக்க வல்லது.அதில் நாம் விரும்பிய மனக்கதவும் ஒன்றென்றால் காதல் சிறக்க நல்லது




------------------------

12 ஒவ்வொரு டைம் போஸ்ட் பாக்ஸ்ல லெட்டர் போஸ்ட் பண்ணும்போதும் நாம பண்ணும் மேனரிசம் தான் போஸ்ட் மேனரிசமா?




---------------------


13. தமிழர்கள் எந்த அளவுக்கு அப்பாவிகள் என்றால் அன்பே சிவம் படத்தின் இயக்குநர்: சுந்தர்.சி, என இன்னும் நம்புவதே # கமல் பாறைகள்


------------------------ 

14. என்னைப்பொறுத்தவரை தீவிர வாசிப்பு என்பது மழை , புயல் வந்தாலும் எதிர்ப்படும் ஃபிகரின் டி சர்ட் வாசகத்தை விவரமாக படிப்பதே ;-)) 



-----------------

15. மெரீனா பீச்சில் இருக்கும் கள்ளக்காதலர்கள் உடனடியாக அவரவர் வீட்டுக்கு செல்லுமாறு காவல் துறை புயல் எச்சரிக்கை விடுத்துள்ளனர் 




--------------------



"தேய்ந்த பாதை பாதுகாப்பானது "
ஆன்மீகம் பல கோடிக்கணக்கானவர்கள் பயணித்த,பயணித்துக்கொண்டு இருக்கும் நம்பிக்கையான பாதை இதுவும் பாதுகாப்பானதே
"தேய்ந்த பாதை பாதுகாப்பானது "
ஆன்மீகம் பல கோடிக்கணக்கானவர்கள் பயணித்த,பயணித்துக்கொண்டு இருக்கும் நம்பிக்கையான பாதை இதுவும் பாதுகாப்பானதே


16. நல்ல வேளை டைப் ரைட்டிங்கில் நான் லோயரிலேயே ஃபெயில் என்பதால் ஹையர் போகவில்லை ;-)) 


-----------------------


17. இன்னும் ஒரு வருஷம் பொறுங்க.மின் வெட்டு சீராகும் -ஜெ # அதுவரை உங்க வீட்டுக்கும் அப்பப்ப மின்வெட்டு இருக்குமா? மேடம் 


----------------------


18. யாருக்கும் பங்கம் வராமல் பம்மிக்கொண்டே ட்வீட் போடுவது எப்படி? ஓ பி எஸ் ட்விட்டர்களுக்கு பயிற்சி - ஜெ அறிவிப்பு 




-----------------------------


19. நான் எப்போது தவறு செய்தாலும், அம்மா தவறாமல் என் நண்பர்களிடம் சொல்வது, "இவன் கூட சேர்ந்தா நீங்களும் உருப்படாம போய்டுவீங்க" 




----------------------------


20. கடந்த ஆட்சியில் கடலை சரியாக பராமரிக்காமல் விட்டதே நீலம் புயலுக்கு காரணம் - ஜெ அறிவிப்பு.மு.க திகைப்பு 



----------------------



hay friends


21. விருமாண்டி இப்போ ரீ மேக் ஆனா கமல் வைக்கும் டைட்டில் "சாண்டி"யர் என இருக்கலாம் 


----------------


22. அருண்பாண்டியனுக்கு சான்ஸ் வாங்கிக் கொடுத்ததே நான் தான்-கேப்டன்!# உங்களை எதிர்க்கட்சித்தலைவர் ஆக்கியதே நான்தான் -ஜெ் 




------------------------


23. என் மனைவி விலை மதிப்பில்லாதவள் – நரேந்திர மோடிக்கு சசி தரூர் # இது தேவல சார்.என் மனைவி யாரையும் மதிக்காதவர். 




------------------------


24. அன்பே! நீயும் ,உங்கம்மாவும் வீடு கூட்டினால் 15,ஐ மீன் ஏழரையும் ஏழரையும் கூட்டினா 7 1/2 & 7 1 /2 = 15 




-------------------------


25. ஹன்சிகா இட்லி மார்க்கெட்க்கு வந்துடுச்சாம்.ரோஸ் கலர்ல இருக்கா?அதே வெள்ளையா? 




-------------------------





26. மழைக்காலங்களில் ஆண்கள் கண்கள் சுறுசுறுப்பாகின்றன. 




------------------------


27. அதிமுக வின் அழைப்பிற்காக காத்திருக்கிறேன்- எஸ்.வி.சேகர் # அல்வா எனக்கு பிடிச்ச நாடகம் -ஜெ 



--------------------



28. மிளகுதக்காளிக்கீரை (கரிஞ்சிக்குட்டி கீரை )வாங்குனா 1,கீரைத்தழை ஆயனும் 2,காய் பொறுக்கனும் 3,பழத்தை குழந்தைக்கு தரனும# உஷ் அப்பா் 



--------------------


29. டெங்கு நோய் சிகிச்சைக்கு பப்பாளி இலைச்சாறு: # அரளி தவிர கசப்புச்சுவை உள்ள அனைத்து காய்களும் மருந்தாக (பாகற்காய் ,வேப்பங்காய்) 



------------------


30. மு க @ முரசொலி - பச்சைப்புயலின் ஆட்சியில் நீலம் புயல் .கழக ஆட்சியாய் இருந்திருந்தால் ஆந்திரா எல்லையிலேயே தடுத்திருப்போம# சும்மா் 



---------------------------



Photo