Friday, October 12, 2012

கேர்ள் ஃபிரண்ட்ஸ் நிறைய பேர் வேணும்னா இன்னா பண்ணனும்?

1.மறுபடியும் சட்டை கலரை மாற்றினார் கருணாநிதி - செய்தி # யாரும் அவரை சட்டை பண்ணத்தேவை இல்லை -ஜெ




---------------------


2. கண்மணி வம்போட புருஷன் எழுதும் மடல்.நான் இங்கே பசியோட இருக்கேன்.நீ உங்கம்மா வீட்ல கொட்டிக்கிட்டு இருக்கியாம் பாப்பா சொன்ன தகவல்.




------------------------


3. உன் கூந்தல் அழகு பிரமாதம்.ஆனால் ஏன் தினம் மாலையில் அதை கழற்றி ஸ்டேண்டில் மாட்டி விடுகிறாய்? உன் "சவுரி"யத்துக்காகவா?



---------------------


4. நான் மிஸ் தான் ஆனா மிசஸ் என ஒரு பெண் உன்னை குழப்பினால் அவள் மேரேஜ் ஆன டீச்சர் என்பதை அறிக # சைட்டாலஜி




------------------------


5. மனைவியை அடித்துக் கொன்ற கணவன்! ஆனமடுவில் சம்பவம்!# ஆனமட்டும் பொறுத்துப்பார்த்தானாம்



--------------------



நிறைய அறிவுஜீவிங்களோட எதிரிப்பை சம்பாதிச்சு வச்சுருக்கேன்.. அதுவும் ஒரு வகைல நல்லதுக்கு தான்.
இல்லனா ஒருவேளை நாளைக்கு நான் செத்துப் போனப்பிறகு..

``சமகாலத்தில் ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட்டை இழந்துட்டோம்..”னு பொய்யா கண்ணக் கசக்கிக்கிட்டு மொக்கப் போடுவாய்ங்க..

அப்புறம் அதைக் கேட்டுட்டு நான் ஆவியானப் பிறகும் ஒரு சூசைட் அட்டம்ப்ட் பண்ண வேண்டியிருக்கும்.. :)

6. நீ போட்டிருந்த நகையை அடகு வைக்கப்போனேன்.நீ கவரிங்க் மான் பரம்பரை என தெளிந்தேன்



------------------


7. அன்பே! எறும்புகள் கூட உன்னை துரத்துதே,நீ சர்க்கரை நிலவா? சுகர் பேஷன்ட்டா?





------------------------------


8. பச்சை உடையணிந்து அதிமுக-வினர் துண்டுப் பிரசுரம் வழங்கினர்!-செய்தி # சனங்க பச்சை பச்சையா திட்டலை? @ மின்வெட்டு



------------------


9. கர்நாடகா அரசை 356-வது பிரிவில் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: கருணாநிதி அதிரடி # தலைவர் வாய்க்கு ஒரு 144 போடனும்



-------------------


10. டியர்.ஒரு பொண்ணு 10 இட்லி சாப்பிடறத இப்போ தான் பார்க்கறேன்



ம்க்கும்.கண்ணு வைக்காதீங்க.கையும் # ஊடல்



--------------------------------


uFaNi KarTe hAi's photo.



11. ஒரு பொண்ணு பெருமூச்சு விட்டா,சோம்பல் முறிச்சா அது் அபாயத்துக்கு அறிகுறி, அருகில் ் இருக்கவங்க உசாரா இருக்கனும்:))) --




--------------------


12. கருப்பு = சாதா நிறம் .கறுப்பு = அடர்த்தியான நிறம் ( டார்க் பிளாக் )



---------------


13. கலந்து பேசித்தான் கல்யாணத்தை ரத்து செய்தோம் - சுஜிபாலா # "கலந்து"பேசினதா நியூஸ் போட்றப்போறாங்க




-------------


14. பி காம் படிச்ச பொண்ணுங்க எல்லாம் CALM டைப்பும் இல்லை.காமர்ஸ் படிச்ச பசங்க எல்லாம் நித்தி டைப்பும் இல்லை #
தத்ஸ்




--------------------


15. காவிரி நீர் தாங்க.இல்ல 'கரண்ட்' கிடைக்காது: சீமான் # சி எம் மே அமுக்கி வாசிக்கும்போது இவர் என் தமுக்கம் அடிக்கறாரு?




---------


சுட்டி இளவரசி was tagged in Picturesssssssssssssssssssss's photo.



16. ரங்கீலா ஊர்மிளாவுடன் ராம் கோபால் வர்மாவுக்கு தொடர்பு. முன்னாள் மனைவி அம்பலம்.# ஊர் அறிந்த ரகசியம் இப்போதான் மனைவிக்கே தெரியுதா?




----------------


17. டூயல் சிம் ஃபோன் வைத்திருப்பது ஒரே சமயத்தில் இரு வேறு இணைப்புகளின் பலா பலன்களை அனுபவிக்க ;-0



--------------


18. தன்னுடன் ஒரு ”பென்” ட்ரைவ் கூட வைத்திருக்காத கணினித்துறை நிபுணர் தான் உலகின் உத்தமமான மாப்ளை




----------------



19. நீ மையல் கொள்ளும் தையல் தையல் கலை அறிந்தவளாக இருந்தால் உனக்கு எதிர்காலத்தில் டெய்லரிங்க் செலவு மிச்சம் # நீதி - டெய்லரை காதலி



-----------------


20. கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் கிளியின் பிரதான கவலை தனக்கு ஒரு ஜோடிக்கிளி இருந்தால் தேவலை என்பதாக இருக்கும்




-----------


ஆஞ்சநேயர் மந்திரம்
a


21. பிறந்த நாள் பரிசாக தங்கக்கொலுசு கேட்டாள். கன்னிப்பெண் அதை அணியக்கூடாது என்றேன், அப்போ மேரேஜுக்குப்பின்? உன் பாடு உன்  புருஷன் பாடு



-------------------------


22. GF நிறைய இருப்பவர்கள் சிடுமூஞ்சியாக இருப்பதில்லை. (அல்லது சிடுமூஞ்சிகளுக்கு GF அதிகம் இருப்பதில்லை) # நித்தி டைரி 



----------------------------


23. எதிர்மறையாகப் பேசாதீர்கள்!': சி.பி.ஐ., மாநாட்டில் பிரதமர் # மறை கழண்ட மாதிரி பேசாதீங்க சிங் 



------------------------


24. புதிய மத்திய மந்திரி பதவி வேண்டாம்: கருணாநிதி உறுதி- # எலி ஏன் எரவானத்துல இருக்குன்னு தெரிலே 




-----------------------


25. சுற்றுசூழல் சீர்கேட்டினால் மழை வளம் குறைந்துவிட்டது- நடிகர் விவேக் #போச்சு.இவர் கட்சி ஆரம்பிச்சு டி ஆர்க்கு டப் பைட் தரப்போறார் 



----------------------





26. மத்திய அரசுக்கு ஆதரவு தொடருமா? முடிவை ஒத்தி வைத்தார் மாயாவதி - தினமணி # பேரம் படியல ,ரேட் பேசி முடியல் 




-----------------------


27. பேரவை துணைத் தலைவராகிறார் பொள்ளாச்சி ஜெயராமன் # வாழ்த்துகள் "ஜெ"ய ராமர்.நல்லா கூழைக்கும்பிடு போட்டு பழகிக்கவும் 




------------------------


28. நீதிமன்றத்தில் ஆஜராக தடை விதிக்கக் கோரி கருணாநிதி வழக்கு:# மானாட மயிலாட சன்டேதானே தலைவா?வேற என்ன் ஒர்க் இருக்கு? 




----------------------

29. வாரம் 7 நாள் மவுன விரதம் இருந்தா வீட்டுக்கு மகாலட்சுமி வரும்னு கிரஹ லட்சுமிட்ட சொல்லிடனும்.சம்சாரம் சைலண்டாகிடும் 





-------------------------


30. மாற்றான் டுயட் செம காமெடியா இருக்கும்.ட்வின்ஸ் என்பதால் ஒரு த்தியை 2 பேர் பாலோ 



-----------------------------------



தமிழக அரசியலை , மக்களின் வாழ்வுகளை, தமது ஊழல் மற்றும் ஊதாரிதனதிற்காக மிக கேவலமாக திட்டங்களை , செயல்களை, திட்டமிட்டு , இடுகுழியில், இருட்டு குழியில் தள்ளி விட்ட இரண்டு இயக்கங்கள் திமுக மற்றும் அதிமுக.

Thursday, October 11, 2012

மாற்றான்

http://www.tamil.cinebuzzz.com/img_previews/6b.jpg

இது மாற்றான் படம் பற்றிய முன்னோட்ட பார்வை + தொழில் நுட்ப கலைஞர்களின் பேட்டி தான்.


 மாற்றான் விமர்சனம் -http://www.adrasaka.com/2012/10/blog-post_12.html

ஹாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், அதுல 'ஹாலி' இருக்கு, இதுல 'கோலி' இருக்கு என்று சிலர் சொல்லக் கூடும். ஆனால் அதையும் மீறி 'ஜாலி'யான சொந்தமும் இருக்கிறது - அதுதான் 'இன்ஸ்பிரேஷன்'. அதாவது ஹாலிவுட்டில் வெளியான படங்களின் கதையைத் தழுவி இங்கு புது 'ரொட்டி' போல சுட்டுக் காட்டுவார்கள். அதை 'அப்பாவிகள்' சுட்டுட்டாங்கப்பா என்று கூறுவார்கள், கோலிவுட்டிலோ அதை 'இன்ஸ்பிரேஷன்' என்று சொல்லிக் கொள்வார்கள்.



அப்படி ஒரு 'இன்ஸ்பைர்' கதைதான் மாற்றான் படக் கதை என்று புதிய டாக் கிளம்பியுள்ளது. சூர்யா நடிக்க, கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள படம் இது. இந்தப் படத்தின் கதை குறித்து கே.வி.ஆனந்த் கூறுகையில், ஷங்கருடன் விமானத்தில் ஒன்றாகப் பயணித்தபோது அவர் மூலம் கிடைத்த புத்தகம் ஒன்றில் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் குறித்துப் படித்தேன். அதை அடிப்படையாக வைத்துத்தான் இந்தக் கதையை உருவாக்கினேன் என்று கூறியிருந்தார்.









அப்படீன்னா, பிரியாமணி இரண்டு வேடங்களில் நடித்துள்ள சாருலதா படத்தின் கதைக்கும், உங்க கதைக்கும் ஒரு ஒற்றுமையும் இல்லையா என்ற கேள்விக்கு நிச்சயம் ஒற்றுமை இல்லை, அது வேறு இது வேறு என்று கூறியிருந்தார்.



ஆனால் ஏற்கனவே 2003ம் ஆண்டு ஹாலிவுட்டில் வந்து விட்டஒரு படத்தின் கதையைத்தான் 'உட்டாலக்கடி' செய்து தனது மாற்றான் படக் கதையை ஆனந்த் உருவாக்கியுள்ளார் என்று ஒரு புதுப் பேச்சு கிளம்பியுள்ளது.


அது என்ன உட்டாலக்கடி??.... ஒரு பிளாஷ்பேக்குக்குப் போவோம்...!



மேட் டேமன், கிரேக் கின்னேர் ஆகிய இருவரும் இணைந்து நடித்த படம் ஸ்டக் ஆன் யூ (Stuck on You). 2003ல் வெளியான காமெடிப் படம். இருவரும் ஒட்டிப் பிறந்த சகோதரர்களாக நடித்திருந்தனர். இருவருக்கும் வேறு வேறு சிந்தனைகள், ரசனைகள். இதை எப்படி இருவரும் சமாளிக்கின்றனர், எப்படி தங்களது ரசனைகளை அடைய போராடுகிறார்கள் என்பதை நகைச்சுவையாக சித்தரித்திருந்தனர் இப்படத்தில்.



இதில் ஒரு சகோதரருக்கு ஹாலிவுட்டுக்குப் போய் பெரிய நடிகராக வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஆனால் இன்னொருவருக்கோ சினிமாவே பிடிக்காது. இதனால் இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை செம காமடியாக காட்டியிருப்பார்கள் படத்தில். இப்படம் பெரிய ஹிட் இல்லை என்றாலும் கூட பேசப்பட்ட படமாக இருந்தது.



.....இப்ப கோலிவுட்டுக்கு வருவோம். இந்தப் படத்தைத்தான் சற்று மாற்றி சூர்யாவைப் போட்டு மாற்றான் என மாற்றி விட்டார் கே.வி.ஆனந்த் என்று திரையுலகிலேயே பேசிக் கொள்கிறார்கள்.



ஏற்கனவே ஆனந்த் எடுத்த அயன், கோ ஆகிய படங்களும் கூட ஆங்கில் படங்களின் தழுவல்களே என்று பேசப்பட்டது. இருந்தாலும் அவை இரண்டும் ஹிட் ஆகி விட்டன. ஆனந்த்தும் எங்கேயோ போய் விட்டார். இப்போது மாற்றான் மூலம் ஹாட்ரிக் அடிக்க வருகிறார்.



மாற்றான்- 'மாற்றான் தோட்டத்து மல்லிகையா' அல்லது ஒரிஜினல் 'மதுரை மல்லியா' என்பதை விரைவிலேயே படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்வோம்.



ஒருவேளை 'ரெபரன்ஸ்' தேவைப்படுவோர் பர்மா பஜார் பக்கம் போய் ஸ்டக் ஆன் யூ படத்தின் சிடி கிடைத்தால் வாங்கிப் பார்த்து விட்டு மாற்றானைப் பார்க்கக் காத்திருக்கலாம்...!


http://www.tamilcloud.com/wp-content/uploads/2012/07/Maatran-movie-stills-_2_-2.jpg



மாற்றான் திரைப்படம் எந்த ஆங்கிலப் படத்தின் தழுவலும் அல்ல... ஒரிஜினல் கதை... சமூக நலன் சார்ந்தது, என்று நடிகர் சூர்யா கூறினார்.



ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக, இரு வேடங்களில் சூர்யா நடித்திருக்கும் படம், `மாற்றான்.' காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கிறார். கேவி ஆனந்த் இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.



இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அப்போது படத்தின் ஹீரோ சூர்யா பேசுகையில், "இது எனக்கு முக்கியமான காலகட்டம். நான் எடுக்கிற ஒவ்வொரு முடிவையும் மிகக் கவனமாக எடுக்க வேண்டிய கட்டம் இது. அப்படி மிக கவனமாக எடுத்த முடிவுதான், `மாற்றான்.'



இந்த படத்துக்காக, ஒன்றரை வருடம் உழைத்து இருக்கிறேன். ஒன்றரை வருடமும் `மாற்றான்' படத்துக்காக என்னை நான் அர்ப்பணித்துக்கொண்டேன்.


இது, ஒட்டிப்பிறந்த சகோதரர்களை பற்றிய கதை மட்டுமல்ல. அப்பா-மகன் பாசம் இருக்கிறது. சமூக நலன் சார்ந்த கரு இருக்கிறது. ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடிய படமாக இருக்காது. ஆங்கில படமோ அல்லது வேறு எந்த படத்தின் தழுவலோ அல்ல. 4 வருடங்களாக உட்கார்ந்து எழுதப்பட்ட கதை,'' என்றார்.



அவரிடம், 'படத்தில் இரட்டையர்களாக நடித்ததால், இரண்டு சம்பளம் வாங்கினீர்களா?' என்று கேட்டனர் நிருபர்கள்.


அதற்கு சூர்யா, 'ஒரே சம்பளம்தான் வாங்கினேன்,' என்றார் சிரித்தபடி.


இயக்குநர் கே.வி.ஆனந்த், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் சவுந்தர், ஆர்ட் டைரக்டர் ராஜீவன், எழுத்தாளர்கள் சுபா, பாடல் ஆசிரியர்கள் நா.முத்துக்குமார், விவேகா, தாமரை, ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ரங்கராஜன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


சூர்யாவின் மாற்றான் படத்தின் வெளியீட்டு உரிமையை பெரிய விலைக்கு வாங்கியுள்ளது, ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்.


கேவி ஆனந்த் இயக்கத்தில், ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள மாற்றான் படம், ஆரம்பத்திலிருந்தே பெரும் எதிர்ப்பார்ப்புக்குரியதாக இருந்தது.


இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் சூர்யாவும், அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.


மாற்றானின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா வெளியீட்டு உரிமை மற்றும் தமிழ் ஆடியோ வெளியீட்டு உரிமையை பெரும் விலைக்கு வாங்கியுள்ளது ஈராஸ் நிறுவனம். இதுகுறித்த அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஈராஸ்.


அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுனில் லுல்லா கூறுகையில், "பிராந்திய மொழி சினிமாவில் எங்களுக்கு உள்ள ஆர்வத்தைக் காட்டும் வகையில் மாற்றானை வாங்கியுள்ளோம். எதிர்காலத்தில் இன்னும் பல படங்களை வாங்கி வெளியிட உள்ளோம்," என்றார்.






 1.
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்:ஜாவிட் அலி,மஹாலக்ஷ்மி ஐயர்
பாடல்: மதன் கார்க்கி

கால் முளைத்த பூவே
என்னோடு பலே ஆட வா வா!
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா!

கேமமில் பூவின் வாசம் அதை - உன்
இதழ்களில் கண்டேனே!
சோவியத் ஓவியக் கவிதைகளை - உன்
விழிகளின் விளிம்பினில் கண்டேன்!

அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே
இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே
உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே
எரியும் வெறியை தெறித்தாய்.

நிலவுகள் தலைகள் குனிந்ததே
மலர்களின் மமதை அழிந்ததே
கடவுளின் கடமை முடிந்ததே
அழகி நீ பிறந்த நொடியிலே!

தலைகள் குனிந்ததோ?
மமதை அழிந்ததோ?
கடமை முடிந்ததோ?
பிறந்த நொடியிலே!

ஹே பெண்ணே...உன் வளைவுகளில்
தொலைவதுபோலே உணருகிறேன்
இடையினிலே திணறுகிறேன்
கனவிதுதானா… வினவுகிறேன்.

அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே
இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே
உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே
எரியும் வெறியை தெறித்தாய்.

இரவெலாம் நிலவு எரிகையில்
திரிகளாய் விரல்கள் திரியுதே!
அருகிலே நெருங்கி வருகையில்
இளகியே ஒழுக்கம் உருகுதே!

நிலவு எரிகையில்
விரல்கள் திரியுதோ?
நெருங்கி வருகையில்
ஒழுக்கம் உருகுதோ?

எனை ஏனோ... உருக்குகிறாய்
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்
இடைவெளியை சுருக்குகிறாய்
இரக்கமே இன்றி... இறுக்குகிறாய்!

அசையும் அசைவில் மனதை பிசைய ம்ம் ம்ம்
இதய இடுக்கில் மழையை பொழிய ம்ம் ம்ம்
உயிரை உரசி அனலை எழுப்ப ம்ம் ம்ம்
எரியும் வெறியை தெறித்தாய்.







2. படம்: மாற்றான்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக்,ப்ரியாஹிமேஷ்
பாடல்: தாமரை

யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?

காற்றே காற்றே சொல்வாயோ !
காலம் தாண்டி செல்வாயோ !
கண்ணீர் விட்டு கரையும் என்னை காப்பாயோ ?

இது கனவா கனவா ?
இல்லை நெனவா நெனவா ?
இது கணவாய் இருந்தால் கலைதே போகும் போகட்டும்

இது நிழலா நிழலா ?
இல்லை ஒளியா ஒளியா ?
இது நிழலாய் இருந்தால் இருளில் கரைந்தே மறையட்டும்

ஹோ ..யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?

முதல் முறை இங்கு நீ இன்றி
நடக்கிறேன் தனியாக
இறந்தும் உன் மூச்சு காற்றை
உணர்கிறேன் இதமாக

சரிபாதியில் இரவும் பகலும்
என்கூறியே உலகம் சுழலும்
ஒரு பாதியே பிரிந்தே போனால் என்னாகும் ?

நினைவால் இனி நான் வாழ
நதி போல் இனி நாள் போக
எதனால் இனி ஆறும் ஆறும் என் காயம்

யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?

கனாக்களில் வரும் பெண் பின்பம்
திகைக்கிறேன் யார் என்று
முகத்திரை அதை தள்ளி பார்த்தால்
முறைக்கிறாய் நீ நின்று

கனகாம்பர இதழை விரித்து
குறும்பாய் ஒரு சிரிப்பை உதிர்த்து
திரும்பாமலே நடந்தால் சென்றால் எது மிஞ்சும்

நிறமாலையை போல் நெஞ்சம்
நெளிந்தாடிடும் பல வண்ணம்
உன்னை பார்த்ததும் பாராதது போல்
சிறு வஞ்சம்
உன்னை பார்த்ததும் பாராதது போல்
சிறு வஞ்சம்

யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?

காற்றே காற்றே சொல்வாயோ !
காலம் தாண்டி செல்வாயோ !
கண்ணீர் விட்டு கரையும் என்னை காப்பாயோ ?

இது கனவா கனவா ?
இல்லை நெனவா நெனவா ?
இது கணவாய் இருந்தால் கலைதே போகும் போகட்டும்

இது நிழலா நிழலா ?
இல்லை ஒளியா ஒளியா ?
இது நிழலாய் இருந்தால் இருளில் கரைந்தே மறையட்டும்






3. படம்: மாற்றான்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: பிராங்கோ,சத்யன்,ஆலாப்ராஜு,சாருலதாமணி,சுசிச்ரா  
பாடல்: பா.விஜய்

இது மாலை மயங்கும் வேலையா
நீ வா வா கைகூட
இரு விழிகள் ஆடும் வேட்டையா
நீ வா வா மெய் சேர

கண்ணோடு உதடு பேசுமா ?
கையோடு இளமை சேருமா ?
கஜலாடும் நெஞ்சம் ஏங்குமா ?
கன நேரம் உள்ளம் தூங்குமா ?

தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர சேர்ந்தியே

அடி ராங்கனி ராங்கனி ராங்கனி
என்னை ரம்மில் ஊற போடு
இனி காமணி காமினி காமினி
நெருங்காமல் நெருங்கி ஆடு

செம் மாங்கனி மாங்கனி மாங்கனி
இரு கன்னம் தந்த சூடு
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி
இது இரவுக் காடு இரையை தேடு

தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர சேர்ந்தியே

அழகான வார்த்தை நீ என்றால்
முற்று புள்ளி வெட்கம்
மெதுவாக உன்னை வர்ணித்தால்
மொழியே சொர்கி நிற்கும்

அணு சிதைவில்லாமல் பெண்ணில் மின்சாரம்
இருவரி கவிதைகள் மின்னும் இதழாகும்

அட மேல் உதட்டை கீழ் உதட்டை
ஈரம் செய்யும் நேரம்
உயிர் மேலிருந்து கீழ் இறங்கி
என்னென்னவோ ஆகும்
இது தீண்டளுக்கும் தூண்டலுக்கும்
இடையில் உள்ள மோகம்
முத்த தேனில் மூழ்க முன்நேரம்

தீயே தீயே ..
தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர செர்ந்தியே

this is how we like to do it
this is how we like to do it

உறையாமல் செய்த அங்கங்கள்
நெஞ்சை முட்டி கொள்ளும்
குறையாமல் செய்த பாகங்கள்
கொஞ்சி குலவ சொல்லும்

அசைகின்ற சொத்துக்கள் உன்னில் ஏராளம்
அசத்திடும் வித்தைகள் என்னில் தாராளம்

ஒரு கால் முளைத்த வானவில்லை
சாலையோரம் கண்டேன்
நடமாடும் அந்த பூவனத்தில்
சாரல் வீச கண்டேன்
பனி தூவலாக புன்னைகைக்கும்
பறவை ஒன்றை கண்டேன்
தீயும் தேனும் சேருமே கண்டேன்

தீயே தீயே ராதியே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர செர்ந்தியே

அடி ராங்கனி ராங்கனி ராங்கனி
என்னை ரமில் ஊற போடு
இனி காமணி காமினி காமினி
நெருங்காமல் நெருங்கி ஆடு

செம் மாங்கனி மாங்கனி மாங்கனி
இரு கன்னம் தந்த சூடு
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி
இது இரவுக் காடு இரையை தேடு

தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர சேர்ந்தியே

தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீர தீர சேர்ந்தியே ..







4. படம்: மாற்றான்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: விஜய்பிரகாஷ்,கார்த்திக்,ஷ்ரேயா கோஷல்
பாடல்: விவேகா

நாணி கோணி ராணி உந்தன்
மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத காரி உன்னை
தா நே என்று கேட்கிறேன்

நீ தூரம் நின்றால் வேற்கிறேன்
என் பக்கம் வந்தால் போகிறேன்
ஏவல் ஏழாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன்

நீரை நீரை நீ மேகம் தாண்டி வரை
தரை தரை என் தாகம் தூண்டி நூறாய்
பாறை பாறை நன் உன்னால் ஆனேன் தேவை
கோயம் கண்கள் மேயும் பேசுமா

நாணி கோணி ராணி உந்தன்
மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத காரி உன்னை
தா நே என்று கேட்கிறேன்

நீ தூரம் நின்றால் வேற்கிறேன்
என் பக்கம் வந்தால் போகிறேன்
ஏவல் ஏழாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன்

நீரை நீரை நீ மேகம் தாண்டி வரை
தரை தரை என் தாகம் தூண்டி நூறாய்
பாறை பாறை நன் உன்னால் ஆனேன் தேவை
கோயம் கண்கள் மேயும் பேசுமா

ஒரு காலை நேரம் நீ வந்தாலே
பனி வீசும் காற்றுக்கு
பணியாமல் தேகம் சூடேறும்

கண் பேசும் மௌனமே ஒன்றாக
நாம் போகும் சாலைகள்
முடியாமல் எங்கெங்கோ நீளும் நீளும்

நதியிலே இல்லை போல பயணம்
இனிப்பான தருணம்
மனதோடு மாய மின்சாரம்

எதிரே நனையாமல் கரைந்தேன்
நகராமல் உறைந்தேன்
மெதுவாக மெதுவாக உணதாகிறேன்
உயிரே உயிரே உயிர் போக போக தோடு

நாணி கோணி ராணி உந்தன்
மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத காரி உன்னை
தா நே என்று கேட்கிறேன்

நீ தூரம் நின்றால் வேற்கிறேன்
என் பக்கம் வந்தால் போகிறேன்
ஏவல் ஏழாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன்






5.படம்: மாற்றான்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்:க்ரிஷ்,பாலாஜி,மிலி,ஷர்மிளா
பாடல்: நா.முத்துக்குமார்

ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
பற்றி படறி தொலை நிமிர்த்து

திரே திரே திரே திரே
திரே திரே திரே

வண்ணம் வேறு வானம் வேறு
இருவரின் காதல் வேறு
புயல் அடித்தும் வாழுதே
இருபறவை ஒரு கூட்டில்
மெது மெதுவாய் பூக்கட்டும்
இந்த பூக்கள் எதிர்காற்றில்

ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
பற்றி படறி தொலை நிமிர்த்து

கருவாச்சு உடல் உருவாச்சு
அது தவறாச்சு இரு உயிராச்சு
இரண்டும் வளர்ந்தாச்சு
எனக்காச்சு எது உனக்காச்சு
இனி புவி எல்லாம் அட புதுகாட்சி
வருடம் உருண்டசு
இவன் ஒரு பக்கம் அவள் மறு பக்கம்
இது எதுவோ ? அட பூவும் தலையும்
சேர்ந்த பக்கம் பொதுவோ

ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
பற்றி படறி தொலை நிமிர்த்து

இவள் வார்த்தை மழை துளியாக
அவள் மறு வார்த்தை சர வெடியாக
இணைந்தும் தனியாக
நதிபோலே இவன் மனம்போக
பெரும் புயல் போலே அவன் செயல் போக
யார் இங்கே இணையாக ..
இவள் கண்ணாடி அவன் முன்னாடி
தரும் உருவம்
இது பிரிந்தால் கூட
ஒன்றாய் நின்ற்கும் உருவம்

ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
பற்றி படறி தொலை நிமிர்த்து

திரே திரே திரே திரே
திரே திரே திரே


நன்றி - மாலை மலர், தட்ஸ் தமிழ்,தமிழ் பாடல் வரிகள்,தினமலர், தினகரன், நக்கீரன்,கல்கி

விஜய், அஜித்தை ரொம்பப் பிடிக்கும்!"

சுள்ளென்று இருக்கிறார் சூர்யா. 'மாற்றான்’ திருப்தியாக வந்த சந்தோஷத்தில், முறுக்கிய போலீஸ் மீசையில் 'சிங்கம் 2’-க்குத் தயாராகும் ஆர்வம் கண்களில் தெரிகிறது.



 ''இரட்டையர் படம்னு ஈஸியா சொல்றீங்க. ஆனா, அது அத்தனை ஈஸி இல்லைங்க. ஒட்டிப் பிறந்தவங்களைப் போய் பார்த்தேன். ஒண்ணு மலர்ந்து சிரிச்சா, இன்னொண்ணு முகம் சிவக்குது. ஒண்ணு தூங்கும்போது, அடுத்தது சத்தம் போட்டு அழுது அடம்பிடிக்குது. முதல்ல... இது பரீட்சைனு தோணுச்சு. அப்புறம் பார்த்தா, ஜாலி, கேலி, சந்தோஷம், வேதனை, ஆட்டம் பாட்டம்னு ஒரு எம்.ஜி.ஆர். பட பேக்கேஜ் வந்துடுச்சு.



 ஒரு வசனம் பேசுறதைக்கூட கே.வி.ஆனந்த் சார் சாதாரணமா எடுத்துக்க மாட்டார். நக்கலா, அலட்சியமா, கோபமா... தேவைப்படுற டோன்ல சொல்லவெச்சு, சுவாரஸ்யத்தோட உச்சத்துக்கே கொண்டுபோய்டுவார். 'மாற்றான்’ படத்தின் முதல் ரசிகன் நான்தான்.''




''சம்பளம், படங்களின் வியாபாரம், நல்ல அபிமானம்... ரஜினி, கமலுக்கு அடுத்த பட்டியலில் வந்துட்டோம்னு தோணுதா?''




''நாம மரியாதை வெச்சிருக்கிறவங்களே, நம்மிடம் நீங்க நல்ல இடத்தில் இருக்கீங்கன்னு சொல்றப்போ, 'ஒழுங்கா வேலை பார்த்துக்கிட்டு இருக்கோம்’கிற திருப்தி வருது.



ஆனா, அதுக்கு மேல தலையில எதையாவது ஏத்திக்கிட்டா, அது கஷ்டம். ரொம்ப சிம்பிளா சொல்லணும்னா, வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் எல்லாப் படங்களும் ஹிட் ஆகணும்.



அதில் என் படங்களும் இருக்கணும். ஒரு ரசிகனா இதுதான் என் எதிர்பார்ப்பு. எனக்கு விஜய், அஜித் எல்லாம் ரொம்பப் பிடிக்கும். எல்லாருக்கும் இங்கே இடம் இருக்கு. அவங்கவங்க பாதையில் அவங்கவங்க ஓடிக்கிட்டு இருக்காங்க. என்கிட்ட சோம்பேறித்தனம் கிடையாது. தந்திரம் இல்லை. கொஞ்சம் கோபப்படுவேன். அதை மட்டும் குறைச்சுக்கணும். இப்போ எல்லாத்தையும் காது கொடுத்துக் கேட்கிறேன். என்னைப் புதுப்பிச்சுக்கிட்டே இருக்கேன். என் வெற்றி முழுக்க முழுக்க எனக்கு மட்டுமே சொந்தம் இல்லை. அந்த ஒரு விஷயத்தில் நான் தெளிவா இருக்கேன்.''



''சிம்பு, தனுஷ், 'ஜெயம்’ ரவி, ஆர்யானு உங்களுக்கு அடுத்த வரிசையும் ஆரோக்கியமா இருக்கு. அவங்க படங்களைப் பார்க்கும்போது என்ன தோணும்?''



''அதெல்லாம் மதிப்பிட்டுச் சொல்ற அளவுக்கு எனக்குத் தகுதி வந்துட்டதா நான் நினைக்கலைங்க. '3’ படத்தில் தனுஷின் நடிப்பு ரொம்பப் பிடிச்சிருந்தது. அவ்வளவு எனர்ஜியோட இருந் தார் ஒவ்வொரு சீன்லயும். ஜாலியா நடிக்கி றதுன்னா அசால்ட்டா பின்றார் ஆர்யா. அவ ரால சீரியஸாவும் நடிக்க முடியும். அதை அவர் ட்ரை பண்ணிப் பார்க்கலாம்.



 'சுந்தரபாண்டியன்’ல சசிகுமார் ரொம்ப யதார்த்தமா, லவ்லியா நடிச்சிருக்கார். இதெல்லாம் போக... சமீபத்தில் பார்த்ததில் 'பர்ஃபி’ படம் ரொம்பப் பிடிச்சது. இவ்வளவு சின்ன வயசில் ரன்பீர் கபூர் அப்படி அசத்தியிருக்கிறதைப் பார்த்தா, நான் ஒண்ணும் பெரிசா சாதிக்கலையேனு தோணுது. இன்னும் நிறைய தூரம் போகணும்.''




''ஹீரோன்னா ஹீரோக்கள்பத்தி மட்டும்தான் பேசுவீங்களா... ஹீரோயின்கள்பத்தியும் பேசலாமே?''



''காஜல் ரொம்ப இன்டெலிஜென்ட். ரஷ்ய மொழியில் பேச வேண்டிய சூழலில் ரொம்ப சுலபமாக் கத்துக்கிட்டுப் பேசினாங்க.  'மாற்றான்’ல இரண்டு ஆண்கள். அவங்கள்ல ஒருத்தனோட பழகுற பொண்ணுனு கொஞ்சம் சிக்கலான கேரக்டர். அதை அவங்க சமாளிச்சு நடிச்ச விதம்... செம ஸ்மார்ட்!



அனுஷ்கா ரொம்ப ஃப்ரெண்ட்லி. யாரும் அவங்ககிட்ட பழகலாம். எல்லார்கிட்டேயும் சமமாப் பழகுவாங்க. யோகா டீச்சர்ங்கிறதால ஹெல்த் டிப்ஸ் நிறையக் கொடுப்பாங்க. ஸ்ருதிகிட்ட இன்னும் நிறையத் திறமைகள் இருக்கு. ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விஷயத்திலும் துணிச்சலா தனக்கான அடை யாளம் தேடிக்கிறது ஸ்ருதி ஸ்டைல். ஒரு சமயம் பாடினாங்க. அதில் நல்லா ட்யூன் பண்ணிட்டு மியூஸிக் ஆல்பம் வரைக்கும் வந்தாங்க. இப்போ பாருங்க... சினிமாவில் க்ளீன் க்ரீன் ஹீரோயினா வந்து நிக்கிறாங்க. சூப்பர்ல?!''


 நன்றி - விகடன்



கே வி ஆனந்த் பேட்டி







சூர்யா - கா” ஜில் ”அகர் வால் பேட்டி



பரதேசி -இயக்குநர் பாலா பேட்டி

சினிமாவுக்கு வராவிட்டால், செத்தே போயிருப்பேன்!"


'பரதேசி' பாலா
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPhnhmo-P9VVq0EljHSVawfVso7iHmhA43mQOzoiVOHy_KJUmhn-kDpXq3MDaiRat5a2IiA8EUxoEWLwEFcp5CBJNh6UqY9J1QvAByEIvZtIfqbkQfNQ-3C0IR6QPkhK-e227y2GDfJOY/s400/2004092113060201.jpg

'வலி சொல்லவே இல்லையே
வாய்மொழி
கண்ணீருதான் ஏழையின்
தாய்மொழி’




- வைரமுத்துவின் பாடல் வரிகள் எடிட்டிங் அறையின் வெளியே சன்னமாகக் கேட்கின்றன.



அதர்வாவா இது? ஆச்சர்யம் கண்களில் விரிய எதிரில் இருந்த புகைப்படங்களில் அடிமைகளின் உறைந்த சரித்திரம். 100 வருடம் வளர்கிற தேயிலைச் செடிகளின்  இலைகளைப் பறித்து, நறுக்கிக் குறுக்கி வளரவிடாமல் ஒரு செடியாகவே வைத்திருக்கிற பெரும் சோகம். நாம் அருந்தும் ஒவ்வொரு கோப்பைத் தேநீருக்காக, தேயிலைத் தோட்டங்களில் காலம் காலமாக ரத்தம் சிந்திய கொத்தடிமை உயிர்களின் உலகம்.



எடிட்டிங் அறையில் இருந்து பாலா வெளியே வருகிறார். உரையாடலில் இருந்து...



''பாலா பட வரிசையில் 'அவன் இவன்’ பெரிய ஏமாற்றம் தந்துச்சு. என்ன ஆச்சு உங்களுக்கு?''



''ஒண்ணும் ஆகலையே'' எனச் சிரிக்கிறார். ''சினிமா ஒரு பரமபதம். பகடைகள் இங்கே உருட்டப்பட்டுக்கிட்டே இருக்கும். எப்போ ஏணி... எப்போ பாம்பு வரும்னு  தெரியாது. தெரிஞ்சா அதுல என்ன சுவாரஸ்யம் இருக்கு? 'அவன் இவன்’ உங்க விமர்சனப் பார்வையில் தோல்விதான்.



ஆனா, என்ன விமர்சனம் வந்தா எனக்கென்ன? விஷாலுக்குள் ஒளிஞ்சிருந்த அற்புதமான கலைஞனைக்  கண்டு பிடிச்சேன். ஹாலிவுட் ஹீரோ மாதிரி இருக்கும் ஆர்யாவை என் கிராமம் வரைக்கும் அழைச்சுக் கிட்டுப் போனேன். என்னோட தயாரிப்பாளரை நிம்மதியா தூங்க வெச்சேன். இது மாதிரி சில நல்ல விஷயங்கள் 'அவன் இவன்’ மூலமா நடந்துச்சு. 'ஜாலியா ஒரு படம் எடேன்’னு சொன்ன உங்களை மாதிரி ஆளுங்களே 'நீ உன் ஸ்டைல்லயே படம் எடுடா’னு கேட்டுக்கிட்ட தால் இப்ப 'பரதேசி’.''





''இந்த மாதிரி டைட்டில்களை எங்கே பிடிக்கிறீங்க? 'பரதேசி’ங்கிற தலைப்பே பயங்கரமா இருக்கே?''





''என்ன பயங்கரமா இருக்கு? நாம எல்லாருமே பரதேசிகள்தான். பிழைக்க வழி இல்லாமல் சொந்த மண்ணைவிட்டுப் பிரியும் ஒவ்வொருத்தனும் பரதேசிதான். படம் எடுக்கிற நானும் பேட்டி எடுக்கிற நீங்களும்கூட பரதேசிகள்தான். கார்ல போற பரதேசியும் இருக்கான்; பிச்சை எடுக்கிற பரதேசியும் இருக்கான். இப்படி 1940-கள்ல டீ எஸ்டேட்டுக்குக் கொத்தடிமையாப் போன பரதேசிகள்ல ஒருத்தன்தான் அதர்வா. நீங்க 'பரதேசி’ங்கிற தலைப்பே பயங்கரமா இருக்குங்கிறீங்க. இதுக்கு முதல்ல வெச்ச பேர்... 'சனி பகவான்’. சிரிக்காதீங்க!''




''விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால்... இப்போ அதர்வா?''




''அதர்வாவைக் கவனிச்சுப் பாருங்க. வெள்ளந்தியா சிரிக்கும்போதும் அவன் கண்ணுல மெல்லிசா ஒரு சோகம் தெரியும். ஒரு நடிகனுக்கு அது பேரழகு. நூறாவது படத்தில் தொட வேண்டிய உச்சத்தைத் தன்னோட மூணாவது படத்திலேயே அதர்வா தொட்டுட்டான்னு நினைக்கிறேன்.''



''ஒரு படத்துக்கான கதையை எப்படி முடிவு செய்றீங்க? 'ரெட் டீ’ நாவலைத்தான் 'பரதேசி’யாப் பண்றீங்களா?''



''அந்தக் களத்தை மட்டும் எடுத்துக்கிட்டு அதுல இந்தப் பரதேசியை இறக்கிவிட்டுஇருக்கேன். இன்ஸ்பிரேஷன் இல்லாம நாம யாருமே இல்லை. ஒரு மனுஷன் அவனோட இருபது வயசு வரைக்கும்தான் வாழ்றான். அப்புறம், வேலை, குடும்பம், குழந்தைகள், அவங்க கல்வினு பிழைப்புதான் எல்லாமே.




நான் தறிகெட்ட ஒரு வாழ்க்கை வாழ்ந்து இருக்கேன். அவ்வளவு அனுபவங்கள், மனிதர்கள், தரிசனங்கள் என் மனசுக்குள்ள இருக்கு. உள்ளுணர்வுதான் என்னை நகர்த் துது. என்னைப் பொறுத்தவரைக்கும் கதைனு ஒண்ணு கிடையாது. பாத்திரங்கள் தான். ஒரு காதல், ஒரு துரோகம், ஒரு பகை, ஒரு வலி, ஒரு வெற்றினு அவங்களுக்குள்ளே நடக்கிற பரமபதம்தான் எல்லாம்.



'இருட்டிண்ட ஆத்மா’னு ஒரு மலையாளச் சிறுகதை தந்த பாதிப்புதான் 'சேது’. ராமநாதபுரம் பகுதியில் பார்த்த அகதிகள் முகாம்தான் 'நந்தா’. ஜெயகாந்தனோட  'நந்தவனத்தில் ஒரு ஆண்டி’தான் 'பிதா மகன்’. கமல்ஹாசனின் 'அன்பே சிவம்’, ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்’, காசியில் பார்த்த அகோரிகளின் அமானுஷ்யம் எல்லாம் சேர்ந்து 'நான் கடவுள்’. இது எல்லாத்தையும் சேர்த்துவெச்சுப் பாருங்க. நான் எங்கே கதையை முடிவு பண்றேன்? இங்கே யாரும் சுயம்பு இல்லை!''




''கதாநாயகர்களை வதைக்கிறீங்களே... 'சேது’வில் தொடங்கி 'பரதேசி’ வரை உங்கள் ஹீரோக்கள் எல்லோரையும் 'ஒரு டைப்பாக’ மாத்திடுறீங்களே?''




''படங்கள் கேட்குதே... என்ன செய்ய? சினிமால ஒரு நடிகன் தனியா துருத்திக்கிட்டு தெரியக்கூடாதுனு நினைக்கிறேன். அவனை ஒரு மனுஷனா, அந்தக் கதாபாத்திரமாதான் நீங்க பார்க்கணும். அதுக் குக் கொஞ்சம் மெனக் கெடத்தான் செய்யணும்; 'ஒரு டைப்பா’ மாத்திதான் ஆகணும்!''




''இந்தப் படத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?''



''நீங்கள் எதிர்பார்க்காத விஷயங்கள்தான் இருக்கும். கிட்டத்தட்ட என்னைத் தவிர, கேமராமேன் செழியன் முதல் எடிட்டர் கிஷோர் வரைக்கும் எல்லோரும் இதில் புதுசு.



முதல்முறையா என் படத்தில் வைரமுத்து பாடல்கள், ஜி.வி.பிரகாஷ் இசை. 25 வயசுக்கு 25 படங்கள் முடிச்சு நிக்கிறான் ஜி.வி.பிரகாஷ். அவனுக்குள்ள இருக்கிற பணிவும் பக்குவமும் பிரமிக்கவைக்குது. 'பரதேசி’யில பிரமாதப்படுத்தி இருக்கான்.



வைரமுத்து சார்... ஜி.வி.பிரகாஷின் வயசைக் காட்டிலும் கவிஞரின் அனுப வத்துக்கு வயசு பெருசு. அதுவும் இந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொண்ணும் கதை பேசணும். மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்துல கெடந்தவன்தான் அதை எழுத முடியும். மொத்தப் படத்தையும் முடிச்சுட்டு வந்து, எடிட் பண்ணிப் போட்டுக் காட்டித்தான் பாடல்கள் கேட்டேன். மூணு மாசமாப் போராடி எடுத்துட்டு வந்த கதைக்கு மூணே வாரத்தில் வலி கூட்டிட்டார். நெஞ்சுக்குள்ள முள்ளு குத்துற தமிழ்!''




''ஆமா, உங்களுக்குப் பெண்கள் மீது மரியாதையே கிடையாதா? உங்க படங்கள்ல ஏன் ஆணாதிக்கம் தலைவிரிச்சு ஆடுது?''




''ஆணாதிக்கம் இருந்ததுங்கிறது உண்மைதான். எனக்கு ஒரு மகள் பிறந்து, அவள் தன்னோட பிஞ்சுக் கைகளால் அடிக்க ஆரம்பிச்சப்பவே எனக்குள் இருந்த, நான் கர்வப்பட்ட ஆணாதிக்க உணர்வு போய்டுச்சு. அவள் கற்றுத்தந்த அன்பு இந்தப் படத்தில் வேதிகா, தன்ஷிகாவுல ஆரம் பிச்சு படத்துல வர்ற ஒரு குட்டிப் பாப்பா வரைக்கும் இருக்கும்!''




''ஜாலியாப் பதில் சொல்லுங்க. பாலாவோட டாப் 10 மாதிரி வெச்சுக்கலாம்...''




''ம்... இது வேறயா?''



''பிடித்த 10 மனிதர்கள்... பிடித்த படைப்புகள் சொல்லுங்களேன்?''



''எம்.ஜி.ஆர். - 'பெற்றால்தான் பிள்ளையா’
சிவாஜி - 'தேவர் மகன்’
கலைஞர் - 'பராசக்தி’
ஜெயலலிதா - 'எங்கிருந்தோ வந்தாள்’
கமல் - 'மகாநதி’
ரஜினி - 'முள்ளும் மலரும்’
பாலுமகேந்திரா - 'வீடு’
போதும்ல?''





''இன்னும் மூணு இருக்கே...''



''இன்னுமா?''

''உங்களுக்குப் பிடிச்ச இயக்குநர்?''




''ருத்ரய்யா, மணிரத்னம், பாலாஜி சக்திவேல்.''



''நீங்க இயக்க விரும்பின நடிகர்கள்?''



''நானா படேகர். ஜோதிகா.''



''பிடித்த நடிகர்கள்?''    



''என் பட நாயகர்கள் எல்லோரும். இப்போ தைய மனநிலையில்... அதர்வா. ஹீரோயின்... அனுஷ்கா.''



''சரி, சினிமாவுக்கு வரலைன்னா, என்னவாகி இருப்பீர்கள்?''



''டாக்டராவா ஆயிருப்பேன்... ம்ஹூம்... நான் வாழ்ந்த கேடுகெட்ட வாழ்க்கைக்கு, செத்தே போயிருப்பேன். போதுமா? முடிச்சுக்குங்க!''



நன்றி - விகடன்

கே பாக்யராஜ் பேட்டி @ ஆனந்த விகடன்


http://lh5.ggpht.com/-jRoOR5gKn9s/SoHJLf4OiwI/AAAAAAAAIfI/-Adh8mCNNxo/Director%252520K%252520Bhagyaraj%252520Family%252520%2525281%252529.jpg

1.   '' 'தாவணிக் கனவுகள்’ படத்தை ரீ மேக் செய்தால், பாக்யராஜ் யார்... சிவாஜி யார்? ஒரிஜினலைக் கெடுக்க மாட்டேன்... ரீ மேக் வேண்டாம் என்றெல்லாம் சொல்லாமல் பளிச்என்று சொல்லுங்கள்?'' 



''பாக்யராஜ் - சாந்தனு... சிவாஜி - ரஜினி.''




2. ''நீங்கள் இயக்கியதில் உங்களுக்குப் பிடித்த படம் எது?''



'' 'அந்த 7 நாட்கள்’ பார்த்துட்டு மணிரத்னம் சார், 'திரைக்கதையில் இதுதான் உச்சம்’னு சொன்னார். 'எப்படிங்க இப்படிலாம் கதையில ட்விஸ்ட் கொண்டுவர்றீங்க’னு ஆச்சர்யமாக் கேட்பாங்க. ஆனா, எனக்கென்னவோ என் பேரை காலாகாலத்துக்கும் சொல்ற மாதிரி பெஸ்ட் படம் இன்னும் கொடுக்கலைனுதான் தோணுது. அப்படி ஒரு படத்தை இனிமேல்தான் நான் இயக்கணும். அவை அடக்கத்துக்காகச் சொல்லலை. மனசுல பட்டதைச் சொல்றேன். அது மாதிரி எனக்குப் பிடிச்ச படத்தை எடுக்கிறப்போ, பாஸ்கர பாண்டியன்... உங்களுக்கு ஒரு ட்ரீட் இருக்கு.''





3. ''உங்க குரு பாரதிராஜா இயக்கத்தில் உங்களுக்குப் பிடிச்ச படம்... பிடிக்காத படம் எது?''



'' பிடிச்சது... '16 வயதினிலே’,


பிடிக்காதது 'வாலிபமே வா வா’.''



4. ''சிவாஜி, நீங்க, டி.ராஜேந்தர்... அபார திறமைசாலிகளா இருந்தும் அரசியல் வெற்றி மட்டும் உங்களுக்கு எல்லாம் எட்டாக் கனியாவே ஆயிடுச்சே... ஏன்?''



''இங்கே வரும்போது அதை நினைச்சு வரலை. சினிமா மட்டுமே லட்சியமா ஊறியிருந்தது காரணமா இருக்கலாம்.''




5. '' இந்தப் படத்தை ஏன் இயக்கினோம்னு உங்களை வருத்தப்பட வெச்ச படங்கள் என்னென்ன?'' 



''இயக்கினதுக்காக வருத்தப்படலை. 'ஏண்டா நடிச்சோம்?’னு வருத்தப்பட்ட படங்கள் உண்டு. அதை எதுக்கு வெளியே சொல்லிக்கிட்டு... விடுங்க!''


 சி.பி - நான் சொல்றேன் .ஞானப்பழம், ருத்ரா,வேட்டியை மடிச்சுக்கட்டு,என் ரத்தத்தின் ரத்தமே




'6. ' 'காதல்’, 'சுப்ரமணியபுரம்’, 'களவாணி’ படங்களை சாந்தனு மிஸ் செய்ததில் உங்க பங்கு என்ன?''



''அப்படிலாம் எந்தப் பங்கும் இல்லைங்க. 'காதல்’ படத்துக்குக் கேட்டப்போ சோனு ரொம்பச் சின்னப் பையன் மாதிரி இருந்தான். காதலிக்கிறது, பொண்ணைக் கூட்டிட்டு ஓடுறதுனு அவன் நடிச்சா, அது ஏத்துக்கிற மாதிரி இருக்குமானு நான் தயங்குனேன். அதான் உண்மை.



'சுப்ரமணியபுரம்’ கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அப்போ அவனும் ஒரு பக்குவத்துக்கு வந்துட்டான். சசிகுமார் ஒரே ஷெட்யூல்ல முடிக்கிற மாதிரி டேட்ஸ் கேட்டார். சரி... கொடுத்திரலாம்னு முடிவு பண்ண சமயம், திடீர்னு அதுக்கு முன்னாடியே சோனு நடிச்சிட்டு இருந்த 'சக்கரைக்கட்டி’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் எல்லாப் பாடல்களையும் போட்டுக் கொடுத்துட்டாரு. சோனு நடிச்சு வெளிவர்ற முதல் படம் 'சக்கரைக்கட்டி’தான்னு தாணு சாருக்கு நான் வாக்கு கொடுத்திருந்தேன். அதை மீற முடியலை. எப்பவும் நம்ம வார்த்தையில் நிக்கணும்னு நினைக்கிறவன் நான். அதனால அவன் 'சுப்ரமணியபுரம்’ பண்ண முடியாமப்போச்சு.



'களவாணி’ கதையும் எனக்குப் பிடிச்சது. கதை விவாதத்திலும் ஆர்வமாக் கலந்துக்கிட்டேன். ஆனா, அப்புறம் என்ன நடந்துச்சுன்னே தெரியலை. அந்தப் படத்தில் வேறு ஒரு நடிகர் நடிச்சார். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். சோனுவுக்கு மூன்று வாய்ப்புகளுமே தவறிப்போனது யதார்த்தமா நடந்ததுதான்.''





7. ''நெருக்கமானவங்களைக்கூட எம்.ஜி.ஆர். அதட்டி மிரட்டிருவாராமே... உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே. சொல்லுங்க?''




''அதட்டி மிரட்டிருவாரா... முறைச்சுப் பார்க்கிறதுலயே உண்டு இல்லைனு பண்ணிருவாருங்க!


'அண்ணா என் தெய்வம்’னு வாத்தியார் கடைசியா நடிச்ச படம் கொஞ்சமே கொஞ்சம் எடுத்ததோட நின்னுபோச்சு. காரணம், தலைவர் அரசியலுக்கு வந்து முதல்வராகவும் கோட்டையில் உட்கார்ந்தாச்சு. அப்ப அந்தப் படத் தயாரிப்பாளர்கள் என்கிட்ட வந்தாங்க. 'நீங்க இந்தப் படத்தை ஏதாவது பண்ண முடியுமா?’னு கேட்டாங்க. 'ஐயா, நீங்க முதல்ல வாத்தியார்கிட்ட கேட்டுட்டு வாங்க. இன்ன மாதிரி 'அந்த’ நடிகர் நடிச்சா நல்லா இருக்கும். இதையும் தலைவர்கிட்ட சொல்லி ஒப்புதல் வாங்கிட்டு வாங்க’னு அனுப்பிவெச்சேன். திடீர்னு தலைவர்கிட்ட இருந்து அழைப்பு. 'கையோட உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க’னு ஆளுங்க வந்து நிக்கிறாங்க. 



என்னமோ ஏதோனு கலவரத்தோட வாத்தியார் வீட்டுக்குப் போனேன். வீட்ல பயங்கரக் கூட்டம். ஏகப்பட்ட பெரிய மனுஷங்க அவரைப் பார்க்கக் காத்துட்டு இருந் தாங்க. ஆனா, என்னை உடனே உள்ள வரச் சொல்லிக் கூப்பிட்டாங்க. போனேன். வேற எதுவும் கேட்கலை. எடுத்த எடுப்பிலேயே, 'அந்தப் படத்தை நீ டைரக்ட் பண்றேன்’னு சொன்னியானு கேட்டார். நான் மென்னு முழுங்கிட்டு, பயத்தை மறைச்சுக்கிட்டு, ஒரு வழியா 'ஆமா’னு சொல்லிட்டேன். 'அந்த’ நடிகர் நடிச்சா நல்லா இருக்கும்னு சொன்னியா?’னு அடுத்த கேள்வி பாய்ஞ்சு வருது. அதுக்கு தயங்கித் தயங்கி 'ஆமா’னு சொன்னேன். அப்படியே முறைச்சுப் பார்த்தாரு. இன்னைக்குத் தொலைஞ்சோம்னு நினைச்சு வெலவெலத்து நிக்கிறேன்.



'தயாரிப்பாளருக்கு எவ்வளவு நஷ்டம் ஆகுதோ, அதை நான் கொடுத்திடுறேன். அந்த நடிகரை வெச்சுலாம் நீ டைரக்ட் பண்ணணும்னு அவசியம் கிடையாது. அதுல நீ நடி. என் ஆசீர்வாதம் உண்டு. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். என்ன?’னு கேட்டுட்டு அப்படியே கடகடனு சிரிச்சார். நம்ப முடியாம இன்ப அதிர்ச்சியில் அப்படியே சிலையாகிட்டேன். 



சுதாரிச்சு, 'உங்களை மாதிரி எப்படிங்க நான் சண்டை எல்லாம் போட முடியும்?’னு சொல்லிப் பார்த்தேன். 'அதான் 'தூறல் நின்னுபோச்சு’ படத்துல பிரமாதமா சண்டை போட்டியே... சிலம்பம்லாம் என்னை மாதிரி சுத்தினியே... அது போதாதா?’னு கேட்டார். அந்தப் படம்தான் 'அவசர போலீஸ் 100’. அதட்டி மிரட்டுறதுல மட்டுமில்லை, தட்டிக்கொடுத்துத் தூக்கிவிடுறதுலயும் வாத்தியாருக்கு நிகர் வாத்தியார்தாங்க. இன்னும் நிறைய இருக்குங்க. வாராவாரம் வருதுல்ல... பேசுவோம் நிறைய.''





8. ''இந்த திரைக்கதை ஞானம் உங்களுக்கு எப்படி வந்ததுனு யோசிச்சிருப்பீங்களே... என்ன தோணுச்சு?'' 



''என்னைச் சுத்தி நடக்கிறதை எப்பவும் கூர்ந்து கவனிச்சுட்டே இருந்ததில் வந்திருக்கலாம். கடவுளின் அனுக்கிரஹமாகவும் இருக்கலாம்!''



9. ''தி.மு.க-வில் குஷ்புவுக்கு அளிக்கப்படும் அதீத முக்கியத்துவம் பற்றி என்ன நினைக்கிறீங்க?'' 



''லேடீஸ் ஃபர்ஸ்ட். அதோட வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு. இதுல பெருமையா சந்தோஷப்பட்டுக்கிறதைத் தவிர, வருத்தப்பட என்ன இருக்கு?''




10. ''சமீபத்தில் பார்த்த படங்களில் உங்களுக்குப் பிடிச்ச படங் கள் என்னென்ன?''



'' 'பர்ஃபி’ ரொம்பப் பிடிச்சது. படம் முழுக்கச் சின்னச் சின்ன பஞ்ச்களா திரைக்கதையை அழகாக்கி இருந்தாங்க. 'சாட்டை’ - கொஞ்ச நீளம். ஆனா, சுத்தமான படம். 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ பார்த்தேன். வித்தியாசமான முயற்சி. படத்தின் நீளத்தைக் கொஞ்சம் குறைச்சா, இன்னும் விறுவிறுப்பு சேரும்!''





11. '' 'விடியும் வரை காத்திரு’... செம த்ரில்லர் படம். அந்தக் காலத்துல அப்படி ஒரு படம் எடுக்க ணும்னு எப்படி தோணுச்சு?''



''வித்யாசமா முயற்சி பண்ணலாம்னு தோணுச்சு. அதை விட 'ஒரு கைதியின் டைரி’ என்னைக் கவர்ந்த கதை.''





12/ ''நிஜமாவே முருங்கைக்காய் 'அந்த’ விஷயத்துக்கு செட்டாகுமா?''



''இன்னுமா சந்தேகம்?''



13. ''உங்கள் குரு பாரதிராஜா விடம் கற்றுக்கொண்டது என்ன?''



''சுறுசுறுப்பு.''



- நிறைய பேசலாங்க...




அடுத்த  வாரம்


''ரஜினி, கமல் சேர்ந்து நடிக்கிற மாதிரி ஒரு படம். ஒன் லைன் சொல்லுங்க பார்ப்போம்..?''



''இப்போதைய ஹீரோக்களில் உங்களைப் போல டான்ஸ் ஆடுறவங்க யார்..?''



''திரைக்கதையை அடிப்படையா வெச்சு தமிழ் சினிமாவின் தலைசிறந்த 10 படங்களைச் சொல்லுங்களேன்?''



டிஸ்கி1  -தமிழ் சினிமாவின் டாப் 10 படங்கள் - கே பாக்யராஜ் பேட்டி http://www.adrasaka.com/2012/10/10.html


டிஸ்கி 2 - 

இந்தியாவின் டாப் 11 திரைக்கதை ஆசிரியர்கள் - கே பாக்யராஜ் பேட்டி @ விகடன் |...

http://www.adrasaka.com/2012/10/11.html


டிஸ்கி 3 -சிவப்பு ரோஜாக்கள்,சுவர் இல்லாத சித்திரங்கள் ஷூட்டிங்க் ஸ்பாட் சுவராஸ்யங்கள் - கே பாக்யராஜ் பேட்டி
http://www.adrasaka.com/2012/11/blog-post_159.html

 
 

 

d

துப்பாக்கி - கிடாவெட்டு

http://www.tamil.cinebuzzz.com/img_articles/918b.jpg

1. 'துப்பாக்கி' நவம்பர் 9 ரிலீஸ்! 9.11.2012 கூட்டுத்தொகை 7 வருது 7 1 / 2 கன்ஃபர்ம் 



------------------------------


2. டியர், ஓரண்ட இழுக்கறதுன்னா என்ன?


 இப்படி ஓரமா வா, நடு ரோட்ல நின்னா எவனாவது ஓரண்ட இழுத்துடப்போறான் ;-0 



---------------


3. விஜய் - என் படத்தை பத்தி நான் எதும் பேசமாட்டேன், என் படம்தான் பேசும் 



# சார் ஒரே டுமீல் டுமீல் சத்தம் தான் வருது, காது வலி ,தலைவலி ;-0 



----------------


4. விஜய் - வீரமா முனிவர் பிறந்த நாள் இங்கே எத்தனை பேருக்கு தெரிஞ்”சுருக்கு”.? அந்த விழிப்புணர்வுக்காகவே 9.11.2012 இல் துப்பாக்கி ரிலீஸ் 




----------------------------



5. துப்பாக்கி நவம்பர் 9 இல் , கும்கி நவம்பர் 13 இல் ரிலீஸ் # மினிமம் 4 நாட்கள் ஓடிடும் விஜய் நம்பிக்கை ;-0 



---------------------

6.  நாயகன் ரீமேக்கில் விஜய் - நான் நல்லவரா? கெட்டவரா? # நீங்க நல்லவர் தான், ஆனா உங்களை சி எம் ஆக்கனும்னு நினைக்கறாரே உங்கப்பா ,பேராசை



--------------------


7. துப்பாக்கி ஹிட் ஆனால் விஜய் ரசிகர்கள் பட்டாசா இருக்குன்னு பட்டாசு வெடிப்பாங்க.அடாசா இருந்தா புஷ்வாணம் வைப்பாங்க # தீபா வலி


----------------------



8. இந்தப்படத்துல வில்லன் யார்னு சொல்லவே இல்லையே?



  உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன், படத்தோட  ஹீரோதான் படத்துக்கு,புரொடியூசருக்கு வில்லன்



-----------------------


9. இயக்குநர் @ நவம்பர் 10 - ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை, அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்




---------------------


10. சார், உங்க பட ட்ரெய்லர் செம, மிரட்டிடுச்சு! விஜய் -படம் வந்ததும் பாருங்க, அவனவன் தெறிச்சு ஓடப்போறான், பட்டாசா இருக்கும்




-----------------------

 


11.  காமராமேதை கர்ணன் இயக்கிய இரட்டைக்குழல் துப்பாக்கி கார்த்திக்கை ஒரு தூக்கு தூக்கி விட்டுச்சாம்;-)




-------------------------


12. தாண்டவம் கதை என்னுதுன்னு கோர்ட் வரை கேஸ் போச்சு.படம் ஸெம ஹிட்.துப்பாக்கி டைட்டில் பிரச்சனைல கோர்ட் போச்சு.என்ன ஆகப்போகுதோ:-).



-----------------------


13. டாக்டர்.என் குழந்தைக்கு 8 வயசு ஆகுது.துப்பாக்கி கொள்ளு பட்டாசு வெடிக்கனும்கறான். துப்பாக்கி படத்துக்கு கூட்டிட்டு போனாதான் ஆபத்து




----------------------


14. ஆர் பார்த்திபன் ன் வித்தகன் வித் த கன் ஊத்திக்கிச்சு.# பிளாஸ்பேக்


------------------



15. விஜய் சார்.கூகுள் பற்றி எதுவுமே தெரியாம எப்படி கூகுளை புகழ்ந்து பாடுனீங்க?



விஜய் - ராகுல் யார்னே தெரியாம காங்கிரஸ்ல சீட் கேட்டேனே?



-----------------------------

 



16.  சார்.சாக்ஸ் போட்டா ஷூ போடனும்.நீங்க செப்பல் போட்டிருக்கீங்க?



விடுங்க ஷூ போட்டா நான் ஓடலாம்.படம் ஓடுமா? :-)




------------------

17. சார்.உங்க பட போஸ்டர் செம கலக்கல் படம் எப்டி?



 சாரி சார்.பாசிடிவ் பார்வை என்னுது.எது நல்லாருக்கோ அதான் சொல்ல முடியும் ்



----------------------


18. எட்டு பாட்டு ஆறு பைட்டு மொத்தம் 14 ரீல் :-)




-------------------------


19. விஜய் படத்துல பாட்டு ஹிட் ஆகறது பெரிய விஷ்யமே இல்லை.குருவி கூட பாட்டு ஹிட் தான்(



-------------------


20. துப்பாக்கி ஹிட் ஆனா பாகம் 2 எடுப்பேன்.ஆகலைன்னா கேப்டனை வெச்சு ரமணா2 எடுப்பேன் - ஏ ஆர் முருக்தாஸ்




---------------------


 


21. முருகதாஸ் ஒரு குட்டி மணிரத்னம்! - விஜய் புகழாரம் # அய்யய்யோ, அப்போ துப்பாக்கி இருட்டுக்குள்ளேயே எடுத்திருப்பாரோ?




-------------------------


22. கடைசில கள்ளத்துப்பாக்கி ஹிட் ஆகி துப்பாக்கி பிளாப் ஆகிடனும், செம யா இருக்கும்



--------------------------


23.  நானும் இப்போ மும்பைவாலா நாளைமுதல் தௌசன்வாலா மேலே போறேன் சிக்ஸர் பாலா # thuppakki opening song # பிரமாதமான கருத்து



---------------------------


24. தீபா வளி தலை வலி 1 துப்பாக்கி 2 போடா போடி # முதல் இரண்டாம் இடங்கள் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவை



-----------------------------


25. விஜய் - ஐ ஆம் வெய்ட்டிங் .# காலமெல்லாம் காத்திருப்பேன்னு தமிழ்ல.சொல்லுங்க ஸார்.;-)




-----------------------

 



26. கதைப்படி ஹீரோ மும்பைவாலா என்பதால் ஹிந்தி தெரிந்தவாலா மட்டும்தான் படம் பார்க்க அனுமதியாம் # 30 நாளில் ஹிந்தி கற்க ;-)




---------------------


27. எனக்குப்பிடிச்ச கேர்ள் பிரண்ட் காஜல் அகர்வால் - விஜய் # அப்போ சங்கவிக்கு சங்கா?



-------------------------


28. காஜல் அகர்வால் தன் பெயரிலேயே இனிப்பை வைத்திருக்கிறார் -விஜய் # உங்களுக்கு ஸ்வீட் பிடிக்காதுன்னு குமுதம் பேட்டில சொன்னீங்க்ளேண்ணா?்



-------------------------


29.மாற்றான் ஊத்திக்கிச்சுன்னா 2 யூஸ் 1,விமர்சனத்துல தோற்றான்னு ரைமிங்கா 2 காஜல் ராசி இல்லைனு துப்பாக்கிக்கு பீதி கிளம்பிடும்



-------------------------


30. குருவி , சுறா , அழகிய தமிழ்மகன்,வில்லு வரிசையில் துப்பாக்கி பாடல்களும்  ஹிட்டாம் ;-0






---

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-b5WrP0UhqsLq0ubeVoR0swzCW1ridIDAjsKfy3yCtHlLkgTpaOYES_VzYEY2eeoc5OqJCePQzTJpagYqWM1lgHmmXrNQdDO9ma-vEZ4L87krtjVYw-pi3VEPGBrY0v6_V_or-ojPzes/s1600/383748_303843279635954_286579361362346_1017341_858724782_n.jpg






டிஸ்கி - விஜய் ரசிகர்களுக்கு  இதெல்லாம் சும்மா கலாய்ப்பு தான் டேக் இட் ஈசி. விஜய் படங்களை நடு நிலைமையுடன் தான் விமர்சித்து இருக்கேன்


1. காவலன் - விஜய் -ன் புதிய பரிமாணம் - சினிமா விமர்சனம்
http://www.adrasaka.com/2011/01/blog-post_2419.html


2.நண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2012/01/blog-post_5575.html


3. வேலாயுதம் - விஜய் -ன் கமர்ஷியல் ஹிட்- சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2011/10/blog-post_26.html

அன்பே வா அருகிலே ! சம்சாரம் வெளியூரிலே

1. தாண்டவம் இயக்கிய இயக்குனர் விஜய், அடுத்து, நடிகர் விஜய்யை வைத்து, "தலைவன் "என்ற படத்தை இயக்குகிறார்.#  தலை தப்புவது தம்புரான் புண்ணியம்




----------------------


2. நீர்ப்பறவை என்னை வேறு ஒரு இடத்திற்கு அழைத்து செல்லும்! இசையமைப்பாளர் ரகுநந்தன்! # தண்ணி இல்லா  COT ல இருந்தா சரி 



----------------

3. விவசாயிகளுக்காக 100 கடிதங்கள் எழுதுவேன் - கத்காரி # ஹிந்தில கத் = கடிதம், அதான் அப்பவே பேரு அப்படிகத்காரின்னு  வெச்சுட்டாங்க போல 




-----------------------


4. ஆதி அட்டர்ஃபிளாப். பகவான் டப்பா. அப்போ ஆதிபகவான் எப்படி இருக்கும்? 




---------------------------


5. மணமான ஆணுக்கு தனி அடையாளம் தேவை இல்லை, மனைவிக்கு சேவகம் செஞ்சு செஞ்சு அவன் முதுகு கூன் விழுந்தாற்போல இருக்கும் ;-0 




----------------------------

அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்ததே (பனை துணை)


6. ஒரு பெண் ஆணுக்கு பணிந்து தலை குனிவது தாலி கட்டும்போது  மட்டும்தான் # பட்டுத்தெளிந்தது




----------------------


7. டியர், நான் கட்டுன தாலிக்கு இதுதான் மதிப்பா? ஹேங்கர்ல இருக்கு? 



ம்க்கும், உன்னையே நான் மதிக்கறதில்லை, தாலியை மட்டும் மதிக்கனுமாக்கும்?



-------------------


8. டியர், ஹார்லிக்ஸ் ஒண்ணு வாங்கி அதை ஆளுக்கு பாதியா குடிப்போமா? 



 ஒன் பை டூ போட நீ கஞ்சனா? ரைட்டரா?



----------------------


9. அவதூறு வழக்கில் டாக்டர் ராமதாஸ் கோர்ட்டில் ஆஜர் # யுவர் ஆனர், சரக்கு அடிச்சிருக்கீங்களா? அது தப்பில்லையா?



------------



10. ஒரு பத்திரிகை எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிய விரும்பினால்,2 கோடி ரூபாய் கொடுங்கள்"- ஞாநி # ஜஸ்ட் 5 ரூபாய்க்கு டைம் பாஸ் வருதே?



--------------------

நான் எடுத்த புகைப்படம்......... இனிய காலை வணக்கம் நண்பர்களே.........



11. 2017ம் ஆண்டு முதல் 24 மணி நேரமும் மின்சாரம் - மன்மோகன் # அடடா, அப்போ பி ஜே பி ஆட்சிதன் நடக்கும், நல்ல பேரு அவங்களுக்குப்போயிடுமே?




-----------------------------


12. 1 லட்சம் வீடுகளுக்கு கரண்ட் கனெக்சன் கொடுப்போம் - பிரதமர் # காங்க்ரஸ் கனெக்டிங்க் கரண்ட்? ஒன்லி டிஸ்கனெக்டிங்க்




=------------



13.  கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் கிளியின் பிரதான கவலை தனக்கு ஒரு ஜோடிக்கிளி இருந்தால் தேவலை என்பதாக இருக்கும்



------


14. நீ மையல் கொள்ளும்  தையல் தையல் கலை அறிந்தவளாக இருந்தால் உனக்கு எதிர்காலத்தில் டெய்லரிங்க் செலவு மிச்சம் # நீதி - டெய்லரை காதலி




----------------


15. தன்னுடன் ஒரு ”பென்” ட்ரைவ் கூட வைத்திருக்காத கணினித்துறை நிபுணர் தான்  உலகின் உத்தமமான மாப்ளை



-----------------------





16. டூயல் சிம் ஃபோன் வைத்திருப்பது ஒரே சமயத்தில் இரு வேறு இணைப்புகளின் பலா பலன்களை அனுபவிக்க ;-0



-----------------


17. ரங்கீலா  ஊர்மிளாவுடன்  ராம் கோபால் வர்மாவுக்கு தொடர்பு. முன்னாள் மனைவி அம்பலம்.# ஊர் அறிந்த ரகசியம் இப்போதான் மனைவிக்கே தெரியுதா?





-------------------

18. மிஸ் - ஐ ஆம் FINE. #



 நீங்களே சொல்லிக்கிட்டா எப்டி?



----------



19. கூலிங்க் கிளாஸ் போட்டுக்கிட்டா நாம கண்ணைப்பார்த்துத்தான் பேசறோம்னு பொண்ணுங்க ஏமாந்துடுவாங்க கி கி கி




-------------------


20. எப்போ பாரு அலைபேசியில் கடலை போடும் விடலைப்பெ்ண்ணே! உன் குல தெய்வம் "செல்"லாத்தா? செல்ல மாரியாத்தா ; :-)




---------------------



Planning good gift for beloved this Navrathri - Give them the health and wellness gift coupon from rVita- Gift coupon for rejuvenation - Rs.549; Gift coupon for...


21. வானம் மும்மாரி பெய்தாலும் நீ உம்மா மாரி பொழிய யோசிப்பு ஏன்? கஞ்சக்காதலியே.நீ கடன் கேட்டாலும் தருவதில்லை




-----------------


22. அன்பே! சாலையில் கவனித்து செல்.வீட்டை விட்டு வெளியே போகும் முன் என் கன்னத்தை கவனித்து செல்




--------------


23. மனைவி - அத்தான்.உங்க வாழ்க்கை பூரா நான் துணையா இருப்பேன்.விலக மாட்டேன். #



அய்யய்யோ இதுக்கு பரிகாரம் ஏதாவது இருக்கா?



------------------------


24. அன்பே வா அருகிலே ! சம்சாரம் வெளியூரிலே!உல்லாச மழை போடுது தூறலே! நாம் செய்வோம் எல்லை மீறலே! # சும்மா




-------------------


25. அம்மா வீட்டுக்குப்போகும் மனைவிமார்கள் அங்கிருந்து ஏதாவது காய்கறி ,பலகாரம் என ஆட்டையை போட்டுட்டு வந்துடறாங்க. மகிழ்ச்சி




------------------------------


டுடே டைம்பாஸ்


ஈரோடு வந்த பிரபல பர்சனாலிட்டி ட்வீட்டர்1. உடன் 2.சி பி , 3.வள்ளலார் பதிப்பகம் மணிகிருஷ்ணா , 4 மார்க் சங்கர்