Tuesday, September 25, 2012

அரசுப்பள்ளி -சாட்டை அடி வசனங்கள்

1.பசங்க நம்மள நம்புறாங்க சார். ஆனா பெத்தவங்க நாமதான் அவங்களை நம்புறது இல்லை .


--------------------------


2. பிடிச்சிருக்கோ, பிடிக்கலையோ எல்லா பொண்ணுங்களும் பசங்களை திரும்பிப் பார்க்கத்தான் செய்வோம் ஏன்னா சனியன் இன்னும் இருக்கா போயிருச்சான்னு பார்க்கத்தான்”


-----------------------------


3. ஏணியை கூரை மேல போடாதீங்க வானத்துக்கு போடுங்க



---------------------


4. 18 வருசமா இங்கேதான் குப்பை கொட்டிட்டு இருக்கேன் ..


 நிறைய சேர்ந்திருக்குமே? 



----------------------


5. நம்ம நாட்டுல அன்றாடங்காய்ச்சிகளைத்தவிர எல்லாருமே தனியார் ஸ்கூல்லதான் நம்ம குழந்தைகளை சேர்த்தறோம்,இந்த நிலை மாறனும்



-------------


6. இந்த ரூம்ல பேடு ஸ்மெல் வருதே?


 நாட் ஒன்லி திஸ் ரூம், டோட்டல் ஸ்கூல்லயே வருது


----------------------



7. ஹார்ஸ் ஆன ஸ்டூடண்ட்ஸ் வெச்சுக்கிட்டு ஹானஸ்ட்டான ரிசல்ட்டை எதிர்பார்க்கறது எந்த வகைல சார் நியாயம்?



----------------------


8. திறமையான ஸ்டூடண்ட்ஸை மட்டும் ஸ்கூல்ல சேர்த்தி 100 % ரிசல்ட் காட்டறதுதான் நல்ல ஸ்கூலுக்கான இலக்கணமா?



-------------------------


9. எவனோ எப்படியோ போய்ட்டுபோறான்னு நினைக்கறீங்களே. நம்ம பசங்களா இருந்தா இப்படியே விட்ருவோமா?


--------------------


10. அடப்பாவி, வாத்தியார் அடிக்குப்பயந்து ஒரே ஆள் இத்தனை டவுசராடா போடறது?



----------------------


11. நேத்து என்னமோ மாத்தறேன்னீங்க. இப்போ லட்டு தர்றீங்க? 

 இந்த லட்டை உதிர்த்தா பூந்தி, மறுபடி பிடிச்சா மறுபடி லட்டு. மாற்றம் நிலையானது 



--------------------



12. பிடிச்சு வெச்சா பிள்ளையார், வீசி எறிஞ்சா சாணி, எல்லாமே நாம கையாள்வதைப்பொறுத்தே இருக்கு.. 



---------------



13. சார் சார் அப்படியே அவ அட்ரசும் கேளுங்க சார்.. 


 டேய். யூ ஆர் மிஸ்யூசிங்க் மீ 



====================


14. டேய் பார்த்துப்போடா , வழுக்க போகுது.. 

 சார் உங்களைத்தான் வழுக்கைனு மறைமுகமா திட்டறான்



------------------


15. கமூகதே கவி அப்டின்னா என்ன ?


 கட் ஆல் க.. மூதேவின்னு அர்த்தம் 



---------------------


16. பெரும்பாலும் எல்லாருக்கும்  வலது மூளைதான்  அதிகம் யூஸ் ஆகும் இடது மூளையும் அதே அளவு வேலை செஞ்சா அதாவது யூஸ் பண்ணிக்கிட்டா எல்லாரும் மாஸ்டர் ஆகிடலாம்



 டீ மாஸ்டராவா? 



---------------------


17. அந்தப்பொண்ணு இருக்கும்போது எதுக்குடா  என்னை அடிச்சே?


 சும்மா வெயிட் காட்ட.. 



-------------------------


18. ஐஸக், நீ ஏண்டா இப்போ க்ளாஸ் ரூமை வெட்டு வெளீல போனே\?


 ஐ செட், யூ கெட் அவுட்னு சொன்னீங்களே? சார்.. 


 உஷ் அப்பா அது உன்னை இல்லைடா. 



--------------------


19. இவன் பண்ணுன தப்புக்கு ஏண்டா ஜாதியை இழுக்கறே? 



----------------



20. லேடீஸ் டாய்லெட்டை இனி எட்டிப்பார்க்க மாட்டேன்னு 1008 தடவை இம்ப்போசிஷன் எழுத வச்சா அது அவன் மனசுல ஆழமாப்பதியுமா? மறையுமா? அது என்ன பைபிளா? குரானா?




---------------------


21. எதுக்குடா ஸ்கூல் பெஞ்ச்சை எடுத்துட்டு போறீங்க? 



காதுகுத்துக்கு


 டேய், இது கவர்மெண்ட் பிராப்பர்ட்டிடா.. 



-------------



22. எதிரிகளை கற்பனையிலாவது உருவாக்கிக்குங்க, அப்போ உன் தகுதிகள் தானா உயரும்  




--------------------------


23. கம்ப்யூட்டர் படிச்சு அவங்க என்னத்தை கிழிக்கப்போறாங்க?

 கொடுத்துப்பார்த்தாத்தானே தெரியும்? 




----------------------



24. பசங்களுக்கு படிப்பு மேல விருப்பு இல்லாம கூட இருக்கலாம், ஆனா வெறுப்பு வர்ற மாதிரி நாம பண்ணிடக்கூடாது




--------------------


25. உங்க கிட்டே டியூஷன் வர்லைங்கறதுக்காக நீங்க பழி வாங்கறதில்லை?



----------------------



26. இப்போ நாம திருத்த வேண்டியது பசங்களை இல்லை, வாத்தியாருங்களை




----------------



27. இந்தியாவை ஆண்டுகொண்டிருப்பது சட்டம் இல்லை, சட்டத்துல இருக்கற ஓட்டைகள் தான்



-----------


28. ஹேவ் யூ ஃபினிஸ்டு யுவர் லஞ்ச்?


 யா ஃபுல், ஹவுஸ் ஃபுல்



-----------------



29. மாங்காய் ஊறுகாய்னா பொட்டாசியம் சல்பேட் தானே? 




-------------------


30. எனக்கு ஒருத்தரை பிடிக்கலைன்னா அவனுக்கு பேனா கிஃப்டா கொடுப்பேன், இப்போ புரியுதா? நான் ஏன்  உனக்கு பேனா தந்தேன்னு.?



-----------------------


31. ஒரு பொண்ணு வயசுக்கு வந்த பின் பார்க்கும் முதல் ஆணை எப்படி மரக்க முடியாதோ அதே மாதிரி அவளை முதன் முதலில் கட்டிப்பிடிச்ச ஆணையும் மறக்க மாட்டா. 


-------------------


32. நீயாவது + 2 படிக்கும்போது வாத்தியார் கையை பிடிச்சே, நான் டென் த் படிக்கும்போதே வாத்தியார் கையை உடைச்சேன்



-------------------


33. நூத்துக்கு 4 மார்க்கா? வெரி குட்  போன டைம் 2 இப்போ 4 நல்ல முன்னேற்றம் தானே? 




 ----------------------

34. தப்பே செய்யலைன்னாலும் சில விஷயங்கள்ல முதல்ல பாதிக்கப்படறது பொண்ணுங்க தான்




-----------------------


35. எல்லாரும் ஒரு ரூட்ல போய்ட்டு இருக்கும்போது நீ மட்டும் ஏன் தனி ரூட்ல போறே.. இரிட்டேட்டிங்க் ஃபெலோ



--------------------



36. பொண்ணுங்க முத டைம் ஏதாவது புகார் சொல்லும்போது அதை காது குடுத்து கேட்டிருந்தா எப்போ எது நடந்தாலும் அவ முதல்ல நம்ம கிட்டேதான் வந்து சொல்வா, நீங்க கேட்டீங்களா சார். 



--------------------


37. இந்த உலகத்துல உருப்படாதவங்கன்னு ஒரு கேட்டகிரியே கிடையாது, எல்லார்ட்டயும் தனித்திறமை இருக்கு



---------------------


38. நான் செத்தாத்தான் அவனுக்கு நிம்மதின்னா வாழறோம், நாம நல்லா வாழறோம்.. 





--------------------


39. போட்டில தோற்பது வெட்கக்கேடான விஷயம் தான், ஆனா அதை விட வெட்கக்கேடு போட்டில கலந்துக்காம வெளில நின்னு வேடிக்கை பார்ப்பது



---------------------


40. ஒரு ஸ்கூல்ல படிப்பு சொல்லித்தர்றதை விட முக்கியம் தனி மனித ஒழுக்கம் பற்றி சொல்லித்தர்றது.. நீங்களே இப்படி இருந்தா உங்க கிட்டே இருந்து வர்ற ஸ்டூடண்ட்ஸ் எப்படி இருப்பாங்க? 




-----------------------


41. இந்த உலகத்துல பசங்க புலம்பல்ஸ் என்ன தெரியுமா? எப்போ பாரு பேரண்ட்ஸ் படி படின்னு டார்ச்சர் பண்றாங்க... பேரண்ட்ஸ் தரப்புல என்ன சொல்ராங்க? பசங்க எங்க பேச்சை கேட்கரதே இல்லை.. பலூன்ல எவ்ளவ் காத்து போக முடியுமோ அவ்ளவ் தான் போகும் , அதிகமா திணிச்சா வெடிச்சுடும். 



--------------------


42. ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர் ஏன்  கற்பித்தலில் கவனம் இல்லாம இருக்கார்னா அவர் சரியா வேலை செய்யலைன்னா டி பிரமோஷன்னு ஒண்ணு கிடையது, அதான்



-------------------------


43. நாலெட்ஜ் டெவலப் பண்ணின அளவு  பசங்க தங்களோட பெற்றோரை புரிஞ்சிக்க தெரியலையே?



-----


4 4  கில்லி தான் கிரிக்கெட்.. பச்சைக்குதிரைதாண்டறதுதான் ஹை ஜம்ப்



------------------------



45. ஒரு உண்மையான குருவிடம் கல்வி கற்றவங்க குரு உயிரோட இருந்தாலும் சரி இல்லைன்னாலும் சரி குரு பேரை காப்பாத்தற மாதிரி நடந்துக்குவாங்க, நடந்துக்கனும்


---------



46. தேடல் உள்ள ஒவ்வொரு மனுஷனும்  ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல எதையாவது இழந்தே தீரனும்



----------


47. கபடி கபடி இதுல க வை கட் பண்ணி படி


 படி படி 



-------------------



48. போர்டுல சிவப்புன்னு எழுதி இருக்கேன் . இது என்ன கலர்?னு கேட்டா சிவப்புன்னு சொல்லக்கூடாது , வெள்ளை நிற சாக்பீஸ்ல தான் எழுதுனேன், அதனால் வெள்ளைன்னு தான் சொல்லனும், இதுதான் க்ரியேட்டிவிட்டி பார்வை



--------









டிஸ்கி - சாட்டை விமர்சனம் -http://www.adrasaka.com/2012/09/blog-post_7166.html

ஷகீலாவின் தாழ்வு மனப்பான்மையும். தமிழனின் வாழ்வு மனப்பான்மையும்

.
1. உங்க வீட்ல பொரியல் உருளைக்கிழங்கு வறுவல்னா சம்சாரம் கோபம்னும் ,உ கி
பொடிமாஸ்னா சம்சாரம் மகிழ்ச்சி எனவும் கொள்க# வெங்காயம் அரியனுமாம்


------------------------------------------

2.சீமாட்டி உள்பாவாடைதான் வேண்டும் என கேட்டு கேட்டு வாங்குங்கள் -
விளம்பரம் # அவங்க கட்டி இருக்கறதை நான் கேட்டா எனக்கு டின்
கட்டிடமாட்டாங்க?


---------------------------------

3.இருவரும் பிரம்மசாரிகளே.ஆனாலும் பிள்ளையார் போல் ஐயப்பன் பெண் மன ம்
கவரவில்லை # சிட்டிங்க் போஸ் சரி இல்லையோ?


-------------------------------




4.சுழி மார்க் வாங்குபவன் கூட எக்சாம் பேப்பர்ல பிள்ளையார் சுழி போட்டே
எழுதத்தொடங்குகிறான்


-----------------------

5.பிள்ளையார்,அப்துல்கலாம் ,காமராஜர்,விவேகானந்தர் ,வாஜ்பாயி ,அனுமன்
இவர்கள் மட்டும் தான் பேச்சிலரா இருந்து மதிப்பு பெற்றவர்கள்-----


--------------------------------------




6.எல்லாத்துக்கும் பூட்டு போடுற ராமதாஸ்,பொண்ணுங்க வாய்க்கு மட்டும்
பூட்டு போடுங்க பார்ப்போம்

-----------------------------------


7.தலை கீழா நின்னாலும் ஷ்கீலா படம் பார்க்கறதை தமிழனால விட முடியாது போலயே?

------------------------------




8.நான் சின்னப்பையனா இருக்கும்போது ஒரிஸான்னா த்ரிஷா தங்கச்சின்னு நினச்சேன்


-----------------------

9. வெங்காயம் அரியாமையை உடனே சம்சாரத்திடம் சொல்வது கண்ணீருக்கு பயந்துதானே தவிர  வேலை செய்யக்கையாலாகாமல் அல்ல



-------------

10. எனது தன்மானத்தை அழிக்க தமிழ்நாட்டில் எவனும் பிறக்கவில்லை-கலைஞர் # நான் ஒருத்தி இருக்கறதையே மறந்துட்டீங்க - ஜெ அட்டகாசம்









பொண்ணுகள எப்படியெல்லாம் பிடிகிறங்கா பார்த்திங்களா ..
Sam Sam Bubbleman - otherwise known as Sam Heath - engulfs a woman inside a bubble on the South Bank in London. He holds nine world records, including fitting 50 people inside a bubble, creating 56 bubbles inside another and the world's largest bubble, measuring 500 cubic feet. Sam is set to create the world's first bubble art exhibition at the Grand Marnier Bubble Bar at the Britannia in Hackney on Friday 21..


11.எல்லாத்துக்கும் பூட்டு போடுற ராமதாஸ்,பொண்ணுங்க வாய்க்கு மட்டும்
பூட்டு போடுங்க பார்ப்போம்




12.தமிழில் எந்த சேனலிலும் விநாயகர் சம்பந்தப்பட்ட படமே போடலை.அட்லீஸ்ட்
பிள்ளையார் பட்டி ஹீரோ நீதாம்பா கணேஷா பாட்டு பட மாவது போட்டிருக்கலாம்



13.திராவிடகட்சிகளை விரட்டுவதே என் வேலை -ராமதாஸ் # சும்மா மிரட்ட
மட்டும்தான் உங்களால முடியும.வாய்ச்சொல் கோழை்




14.நமீதா விநாயகர் சதுர்த்தி கொண்டாடினால் - ஒரு கொழுக்மொழுக் கட்டை
கொழுக்கட்டை சாப்பிடுதே அடடே!




15.விநாயகர் கற்றுக்கொடுத்தது - முருகன் போல் அழகா இருந்தா 2 சம்சாரம்.
தொப்பையுடன் இருந்தா தேடி வருவாங்க பல தாரம் அவதாரம்






16.அருகம்புல்லுக்கு மரியாதை செய்யும் நாளில் கூட குடிமகன் கள்
புல்லுக்கு மரியாதை செய்கிறார்கள்




17.நுட்பமான நகை என்பது சம்சாரம் பக்கத்தில் இருக்கும்போதே எதிரில்
நிற்கும் மச்சினியிடம் சிரிப்புப்பார்வை பார்ப்பதே




18.பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு மனைவியை நைசாக அவங்கம்மா
வீட்டுக்கு அனுப்பிட்டு ஜாலியா டி வி பார்க்க உக்காந்தா நீயும் என்
நண்பனே




19.பிள்ளையார்க்கு கூட வாழ்த்து அப்பாலிக்கா சொல்லிக்கலாம்,என்
சுவாசக்காற்று இஷா கோபிகர்க்கு இப்பவே சொல்லிடனும் பி நா வா!




20.நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு திமுக ஆதரவு: கருணாநிதி
# இப்போ அதிமுக முடிவு என்ன?னு நான் சொல்லத்தேவை இல்லை -ஜெ






21.கர்லாக்கட்டை போல் இருக்கும் நீ சந்தனக்கட்டை போல் இல்லாவிட்டாலும்
மரக்கட்டை காதலியிடம் கொழுக்கட்டை போல் உன் கன்னங்கள் என ரீல் விடு




22.வாராவாரம் ஒரு புது புதன் கிழமை வருவது போல் புது பொண்ணு கிடைப்பா
என்று எதிர்பார்த்தால் நீயும் ஒரு பேராசைக்காரனே - நித்தி டைரி




23.பிள்ளையாரை பெண்களும் ரசிக்கிறார்கள் என்று வாக்கிங் போகாமல்
தொப்பையுடன் இருந்தால் நீ யும் சராசரித்தமிழனே




24.மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்: மம்தா பானர்ஜி # ஒரு பொண்ணுக்கு இன்னொரு
பொண்ணுதான் ஆப்பு வைக்கமுடியும்.சோனியா இனி ஆகுமா போனியா




25.பணியில் இருக்கையில் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ. ஓய்வு பெற்ற
பிறகு கைது# இதுக்குத்தான் நான் ஓய்வே எடுப்பதில்லை - கலைக்னர்





26.மன்மோகனுடன் சோனியா சந்திப்பு: # மமோ - நமஸ்தே. சோனியா - சொந்தமா
டயலாக் பேசற அளவுக்கு வளர்ந்தாச்சா?




27.சமூக நீதிக்காக இன்னும் போராடி வரும் இயக்கம் தி.க மட்டுமே-கி.வீரமணி
# ஆமா இவரு பெரிய எஸ் ஏ சந்திரசேகரு




28.புரட்டாசி மாசம் என்றால் புரோட்டா சாப்பிடும் மாசம் என்றுபுரிந்து
கொண்டால் நீயும் என் நண்பனே




29.அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் தயக்கம்-செய்தி #
அரசுப்பள்ளியில் படித்தோர்க்கே அரசு வேலைனு சொல்லிடனும்




30.காதலியை குப்பை படத்துக்கு கூட்டிச்செல்க! தலைவலி என அவள்
அங்கலாய்க்கையில் தலையை தடவி விடுக ! # டிப்ளமோ இன் லவ்வாலஜி





31.பெண்கள் நம் கண்கள்! ஆண்கள் அவர்களை பாதுகாக்கும் இமைகள்




32.பலருடன் இருந்த சகானாவை ஏற்க முடியாது-கணவர்# சரி, இனி சிலருடன்
மட்டுமே இருக்கிறேன், ஓக்கேவா? - சஹானா கேள்வி, ஜட்ஜ் மயக்கம்




33.மனைவி ஆஃபீஸிலிருந்து வரும் முன்னரே டிஷ் ரெடி செய்து வைத்திருந்தால்
கணவன் மனைவிக்குள் நடக்கும் பல டிஷ்யூம் டிஷ்யூம்களை தவிர்க்கலாம்






34.ராகுல் ஒரு சர்வதேச தலைவர்-மோடி கிண்டல்# அவர் ஒரு இண்ட்டர்நேஷனல் லக்ஸ்ங்கோவ்


35.பீகாரில் 65 ஆயிரம் போலீசார் ஸ்டிரைக் # மாமூல் வாழ்க்கை பாதிச்சிருக்குமே?



Photo: பிடிபடா ஒன்றிலும்
ப்ரியம் உணர்ந்தால்

#இதுவும் காதலே...

Monday, September 24, 2012

சாட்டை - சினிமா விமர்சனம்

http://www.musictub.com/Picture/Tamil_MusicTamil_Movie_SongsSaattai_(2012)cover.jpgஉன்னால் முடியும் தம்பி படத்தை சமூக சீர்திருத்தக்கருத்துக்களோடு கே பாலச்சந்தர் கொடுத்த மாதிரி அரசுப்பள்ளிகள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் எப்படி நடந்துக்கனும், என்ன செய்யனும் என்பதை பிரச்சார நெடி இல்லாமல்  கமர்ஷியலாகச்சொல்ல முயன்று இருக்கும் நல்ல ஆரோக்யமான தமிழ் சினிமா இது. 


ஒரு அரசுப்பள்ளில புதுசா வாத்தியாரா சேர வந்திருக்காரு ஹீரோ. அந்த ஸ்கூல்ல எல்லாமே உதவித்தலைமை ஆசிரியர்தான், ஹெச் எம் டம்மி. காரணம் என்னன்னா ஸ்கூல்ல எல்லாருமே  அவர் (உதவித்தலைமை ஆசிரியர்) கிட்டே வட்டிக்கு கடன் வாங்குனவங்க. 

ஸ்கூலை ஸ்கூல் மாதிரி நடத்தாம தன் சொந்த சத்திரம் போல் நடத்திட்டு இருக்கும்  அவர் கிட்டே இருந்து  எப்படி திறமையா அந்த பள்ளியை மீட்டு முன் உதாரண ஸ்கூலா மாத்தறார் ஹீரோ என்பதே கதை. 


படம் பிரச்சார நெடியுடன் இருக்கக்கூடாது, ரொம்ப போர் அடிச்சுடக்கூடாதுன்னு ஒரு காதல் கதையை ஊடால விட்டதும் , பசங்க அடிக்கற லூட்டிகளை இயல்பான காமெடி டிராக்காக அமைத்ததும்  இயக்குநரின் திறமைக்கு  சான்று.


 படத்தில் முதல் ஹீரோ வசனகர்த்தாதான். சும்மா ச்சாட்டையால  அடிச்சா மாதிரி சுளீர் பளீர் வசனங்கள். ஹீரோ வசனம் பேசும்போதெல்லாம் தியேட்டரில் கைதட்டல் ஒலி ,விசில் சத்தம் பறக்குது


ஹீரோவாக எம் சசிகுமாரின் ஆருயிர் நண்பர்  சமுத்திரக்கனி. ஆள் செம கம்பீரம்.அவரது கணீர்க்குரல் படத்தின் உயிரோட்டமான திரைக்கதைக்கு பெரிய பிளஸ். நிர்மலா பெரிய சாமிக்கு செம போட்டி.


 ஏ ஹெச் எம்மாக வரும் தம்பி ராமையா நண்பன் பட சத்யராஜ் மாதிரி வில்லனிக் கேரக்டர்.. செம நடிப்பு.. குணச்சித்திரக்கேரக்டர் கொடுத்தால் பிச்சு உதறிடுவேன்னு சொல்லாம சொல்றார்.. 


இன்னொரு ஹீரோவாக வரும் யுவன் முதல் படம் என்ற அளவில் ஓக்கே.. 


ஹீரோயினாக அறிவழகி கேரக்டரில் வரும்  மஹிமா  குண்டு முகம், ஒல்லி உடல் , சமச்சீரான நடிப்பு, கண்ணியமான உடை அலங்காரம் , உறுத்தாத அழகிய ஒப்பனை , சட் சட் என மாறும் முக பாவனைகள் என கவனிக்க வைக்கிறார்.

http://mimg.sulekha.com/tamil/saattai/stills/saattai-stills-0248.jpg



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஹீரோவுக்கு ஒரு மனைவி இருந்தும்  படத்தின் திரைக்கதையில் அவருக்கு டூயட்டோ முக்கியத்துவமோ தராமல் ஒப்புக்குச்சப்பாணி போல் அதிமுக ஆல் மினிஸ்டர்ஸ் போல் அடக்கி வாசிக்க வைத்திருப்பது.. 


2. ஸ்கூலில், வகுப்பறையில் படத்தின் 70% சம்பவங்கள் நடப்பதால் படம் பார்ப்பவரை அவர்கள் பதின்ம பருவ நினைவுகளை கிளறி விட்டு படத்தோடு ஒன்ற வைத்தது 



3. ஹீரோ அந்த ஸ்கூலை எப்படி ஸ்டெப் பை  ஸ்டெப் பாக மாற்றுகிறார் என்பதை விலா வாரியாக காட்டுவது 


4. லேடீஸ் டாய்லெட் எப்படி இருக்கும் என்று  ஒரு  ஆர்வத்தில் அந்த பாத்ரூமில் எட்டிப் பார்த்ததற்காக ( வெறும் காலி பாத்ரூம் தான் ) முட்டிப் போட வைக்கப்பட்ட சிறுவனுக்காக டீச்சரிடம்  ஹீரோ பேசும் பாசிட்டிவான காட்சி, தோப்புகரணம் போட்டால் ஞாபகசக்தி  எப்படி அதிகரிக்கும்? என்பதை விளக்கும் காட்சி ,ஹீரோ வித்தியாசமான முறையில் பாடம் நடத்தும் முறைகள், மாணவர்களை பக்குவமாக அவர் அணுகுவது, தேவைப்படும் இடங்களில் கண்டிப்பு காட்டுவது என பல பால பாடங்கள் ஆசிரியர்களுக்கு எடுத்து சொல்வது






5. டி இமானின் இசை பிரமாதப்படுத்தாவிட்டாலும் 2 செம மெலோடியை கொடுத்திருப்பது, பின்னணி இசை உறுத்தாமல் தேவைப்படும்போது தலை காட்டுவது.அடி ராங்கி என் ராங்கி, நீ போறே என் உசுரை வாங்கி ,


6. க்ளைமாக்ஸில் தான் வந்த வேலை முடிந்தது என வேற ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிச்செல்லும் ஹீரோவை தடுக்கும் மாணவர்களிடம் அதுக்கு விளக்கம் சொல்லு ஹீரோ பேசும் அட்டகாசமான வசனங்கள்


http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/saattai/wmarks/saattai04.jpg



 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. ஹீரோ ஒரு சாதாரண அரசு ஆசிரியர்தான். ஆனா அவர் என்னமோ போலீஸ் ஆஃபீசர் மாதிரி கெத்தா சீன் பை சீன் வர்றார். அவர் நடை, பாடி லேங்குவேஜ் எல்லாம் ஜிம்முக்கு போய் செஸ்ட்க்கு வெயிட் லிஃப்ட் 4 செட் அடிச்சுட்டு அப்படியே கிளம்பி வந்தவர் போல் தேவையற்ற செயற்கைத்தனம் எதுக்கு? கேப்டன் பிரபாகரன் விஜய்காந்த் போல் , சி பி ஐ டைரி குறிப்பு மம்முட்டி போல் ஒரு கம்பீரம் தேவை இல்லாதது.. ( ஈசன் பாதிப்பு?)



2. ஹீரோவா நடிப்பவர் தான் படத்தின் தயாரிப்பாளர் என்பதால் அவருக்கு ஏகப்பட்ட ஸ்கோப் குடுத்த மாதிரி இருக்கு. நாயகன் படத்துக்குப்பின் கமலுக்கு  இப்படி ஒரு நினைப்பு,எண்ணம் உண்டு. அதாவது ஸ்க்ரீன்ல சீன் பை சீன் தான் மட்டும் தான் டாமினேட் பண்ணனும்னு ஒரு எண்ணம் அவருக்கு உண்டு.. அது போல் சமுத்திரக்கனியும் ஆகி விட்டாரோ? டவுட்.


3. படத்தின் முக்கியமான டர்னிங்க் பாயிண்ட்டே ஹீரோ மேல் அபாண்டமான பழி விழுவதும், ஊர் மக்கள் அவரை தப்பா நினைப்பதும்தான். எஜமான், சின்னக்கவுண்டர் படங்களில் வருவது போல், ஆனால் அந்த சீனில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ். மாணவி மீது தப்பான எண்ணம் வரக்கூடாது என்பதற்காக, சக மாணவனை காப்பாற்ற என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லப்பட்டாலும் நம்பற மாதிரியோ ஏத்துக்கற மாதிரியோ இல்லை..



4. ஹீரோயின் மாணவி பாட்டனி ஆசிரியரால் பாலியல் அத்துமீறலுக்கான முன்னோட்ட அணுகுமுறை வலை வீசலுக்கு ஆளாக நேரிடும்போது  அந்த மேட்டரை , தகவலை ஏன் ஸ்கூலே கொண்டாடும் ஹீரோ ஆசிரியரிடம் சொல்லவில்லை? பின் வரும் காட்சியில் பெற்றோரிடம் ஏன் சொல்லலை? என சப்பைக்கட்டு கட்டுவது நம்பும்படி இருந்தாலும்  ஹீரோவிடம் ஏன் சொல்லலை? என்பதற்கு பதில் இல்லை.



5. தம்பி ராமையா கேரக்டர் வில்லன் மாதிரி தான். அவரைப்பார்த்ததும் வெறுப்பு வர வேணும் என்பதற்காக ரொம்ப ஓவரா அவரை வில்லன் ஆக்கி இருக்க வேண்டாம்.. ரசிக்க வைத்தாலும் இயல்பாய்  இல்லை..


http://moviegalleri.net/wp-content/gallery/sattai-movie-stills/sattai_movie_stills_0102.jpg



6. ஹீரோ உயிருக்குப்போராடும் நிலைல ஹாஸ்பிடலில் இருக்கார்.கூட ஒர்க் பண்ணுன ஆசிரியர்கள், படிச்ச மாணவர்கள் எல்லாம் பதட்டத்தோட  ஹாஸ்பிடல் வாசல்ல கூடி நிற்கறாங்க. ஆனா அப்போதான் பிறந்த குழந்தையுடன் வரும் ஹீரோவின் மனைவி கொஞ்சம் கூட பதட்டமே படாம என்னமோ ஜான்சி ராணி கணக்கா வீர வசனம் பேசுவதும், அவருக்கு ஒண்ணும் ஆகாது என்று கம்பீரமாய் சொல்வதும் நம்பற மாதிரியே இல்லை.. தேவையே இல்லை. ஓவரா சீன் போட்டு அழ வேண்டாம். அட்லீஸ்ட் அந்த பதட்டத்தையாவது ,பயத்தையாவது பதிவு பண்ணி இருக்கலாம் .


7. ரெக்கார்டு நோட் சப்மிட் என்பது எல்லா மாணவிகளும் ஒரே டைமில் செய்வது, ஏன் அந்த 4 மாணவிகள் மட்டும் தனியா போறாங்க? பின்னால வரும் ஒரு வசனத்தில் அந்த ஆசிரியர் அப்படித்தான் எங்களுக்கு முதல்லியே தெரியும், பலர்ட்ட கை வைக்க ட்ரை பண்ணி இருக்கார் என்று மாணவிகளே பேசறாங்க. அப்புறம்  ஏன் தனியா போகனும்? அட்லீஸ்ட் 4 பசங்களை கூட கூட்டிட்டுப்போய் இருக்கலாமே?


8. விளையாட்டுப்போட்டி நடக்குது. படத்துல முக்கியமான சீன் அது. வில்லன் குரூப் தூக்க மருந்தை  கலந்து கொடுக்கறாங்க. ஓட்டப்பந்தயத்தில் ஓடும் மாணவன் தூக்கத்தை முறியடிக்க பச்சை மிளகாயை  கடிச்சு வெறி ஏத்துவது , எலும்மிச்சை பழச்சாற்றை  முகத்தில் ஊற்றி கண்களை எரிய வெச்சுத்தூக்கத்தை விரட்டுவது இந்த வேலை எல்லாம் பண்றார். இது எல்லாம் போட்டில அனுமதி உண்டா? ஊக்கமருந்து மாதிரிதானே இதுவும்? ( ஜாக்கி சானின் மிராக்கிள்ஸ் படத்தில் வெறி ஏத்திக்க ஹீரோ அப்டி செய்வார்)



9. நடப்பது 200 மீ ஓட்டப்போட்டி . அதிக பட்சம் 20 விநாடிகள் தான். அதுல ஹீரோ மாணவன் பின் தங்கி நிற்பது பின்   லெமன் ஜூசை முகத்தில் ஏற்றி வெற்றி இலக்கை எட்டுவது இதுக்கே 1 நிமிஷம் ஆகுமே? அட்லீஸ்ட் அந்த ஓட்டப்பந்தயம்  800 மீ ஓட்டப்பந்தயமாகவாவது அறிவிச்சிருக்கலாம்.


10. ஆரம்பத்துல லவ்வுக்கு நாட் ஒக்கேன்னு சொன்ன ஹீரோயின் க்ளைமாக்ஸ்ல ஓக்கே சொல்றா. ஹீரோ மாணவன் அப்போ பெரிய இவரு மாதிரி  நான் லவ்க்கு ஓக்கே இல்லைங்கறார். அதுக்கு அவர் சொல்ற ரீசன் ஏத்துக்கற மாதிரியே இல்லை.. அந்த பொண்ணு கிட்டே “ இப்போ காலதல் வேணாம், படிப்பை முடிப்போம், அப்புறம் லவ்வலாம், என்னைக்கு இருந்தாலும் நீ எனக்குத்தான் “ அப்டினு வசனம் வெச்சிருந்தா காதலுக்கு காதலும் ஜெயிச்சா மாதிரி, படத்தின் பேஸ் மேட்டரான ஆசிரியர் கண்டிப்பு மாணவர் நன்னடத்தை கான்செப்ட்டும் சரி பண்ண மாதிரி ..


http://moviegalleri.net/wp-content/gallery/saattai-movie-new-stills/saattai_movie_new_stills_samuthirakani_magima_ajmal_khan_61e6ee3.jpg


11. க்ளைமாக்ஸில் ஏ.ஹெச்.எம்மாக வரும் தம்பி ராமையா  கலெக்டர் கலந்து கொள்ளும் விழாவில் தயாளனைக் கொல்ல இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டு போவதெல்லாம் சாரி ரொம்ப ஓவர். அப்படி பப்ளிக்கா குத்துனா அவர் ஜெயிலுக்குத்தான் போவார், கமுக்கமா கலைஞர் மாதிரி ஊழல் பண்ணாம  இப்படியா ஜெயா - வளர்ப்பு மகன் மேரேஜ் மாதிரி ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க?


12. அதே போல் ஹீரோ தன்னை கொலை செய்ய ஆள் வெச்சு அடிச்ச வில்லனை  தனக்குப்பின் இந்த ஸ்கூலை வழி நடத்த சொல்லி பொறுப்பை ஒப்படைப்பது, இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயன் செய்து விடல் குறளுக்கு எடுத்துக்காட்டாய் இருந்தாலும் அதை காட்சிப்படுத்திய விதம் படு செயற்கை..



13. தனியார் பள்ளி ஆகட்டும், அரசினர் பள்ளி ஆகட்டும், எந்த பள்ளி காலை 9,30 மணிக்கு திறக்கிறது? எல்லா பள்ளிகளும் காலை 8.30 டூ 9 மணி தான்.அதே போல் மாலை 4.30 க்கு ஸ்கூல் முடிஞ்ச பின் ஸ்பெஷல் கிளாஸ் வைப்பது ஓக்கே , நைட் 9 மணி வரையா? ஓவர் ஓவர்/. அவ்ளவ் லேட்டா ஸ்கூல் விட்டும் ரிசீவ் பண்ண பேரண்ட்ஸ் தரப்பில் யாரும் வராமல் பெண்கள்  அதாவது மாணவிகள் தனியே போவதும் லாஜிக் மிஸ்டேக்கே ( இதை குறிப்பிட்டு சொல்லக்காரணம் படத்தின் முக்கிய ட்விஸ்ட்டே இந்த இடத்தில் வருவதால் தான் )

14. க்ளைமாக்ஸில் வில்லன் திருந்துவது எல்லாம் விக்ரமன் டைப் பழைய ஸ்டைல். ரொம்ப செயற்கையா இருக்கு..அவரை விட்டா வேற ஆளே கிடையாதா என்ன? அந்த ஸ்கூலை காப்பாற்ற , முன்னின்று நடத்த?


http://moviegalleri.net/wp-content/gallery/saattai-movie-new-stills/saattai_movie_new_stills_samuthirakani_magima_ajmal_khan_9b17c6f.jpg


இயக்குநருக்கு திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. ஹீரோவை பி டி மாஸ்டராக காட்டி இருக்கலாம்.அவர் பாடி லேங்குவேஜ், உயரம் எல்லாத்துக்கும் மேட்சா இருந்திருக்கும்


2. அரசுப்பள்ளியின் அவலம் குறித்து சொன்னதெல்லாம் சரிதான். அதுக்கு என்ன தீர்வு என்பதை படத்தில் சொல்லவே இல்லை.. அரசுப்பள்ளியில் படிப்பவருக்கே அரசாங்க வேலை என்று அறிவிக்க வேண்டும் என்றோ அரசுப்பள்ளி மாணவர்களுக்கே அரசுப்பணியில் முன்னுரிமை என்றோ வாதிடுவது மாதிரி காட்சி வைத்திருக்கலாம்.


3. க்ளைமாக்ஸ் திரைக்கதையின் போக்கில் தேவை இல்லாமல் ஹீரோவை தூக்கி நிறுத்தும் ஒளி விளக்கு எம் ஜி ஆர் மாதிரி இறைவா உன் மாளிகையில் பாடல் போடாதது ஒன்று தான் குறை.. கே பாலச்சந்தரின் வானமே எல்லை க்ளைமாக்ஸ் முகத்தில் அறைவது போல் இருந்தது அது போல் அரசுப்பள்ளி சார்பாக சீன் யோசிச்சு இருக்கலாம்..


http://moviegalleri.net/wp-content/gallery/sattai-movie-stills/sattai_movie_stills_4718.jpg




எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 50


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - நன்று



 சி.பி கமெண்ட் - மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் சமூக நல ஆர்வலர்கள் அனைவரும் பார்த்து கற்றுக்கொள்ள , பின் பற்ற ஏகப்பட்ட மேட்டர்கள் இருப்பதால் எல்லாரும் பார்த்துடுங்க. டோண்ட் மிஸ் இட்..



டிஸ்கி - படத்தின் மனம் கவர்ந்த வசனங்கள் 72.. அவற்றில் எடிட்டிங்கில் தேர்வான 52 பளீர் வசனங்களை தனி பதிவாக பின்னர் போடுகிறேன்.. இவ்வளவு குறை சொல்லி எதுக்கு  50 மார்க்னா  இது எல்லோரும் பார்க்க வேண்டிய சமூக சீர்திருத்தப்படம் என்பதால் குறைகளை பின் தள்ளி நிறைகளை  பின் பற்ற..

சாருலதா -http://www.adrasaka.com/2012/09/blog-post_7975.html
http://www.moviephotos.in/tamil/movies/sattai/saattai-new-movie-stills-9.jpg

ஹன்சிகாவும் , பள்ளியறைக்காட்சிகள் நிறைந்த படமும்

1.புவனா - எனக்கு கடலை பார்க்க ரொம்ப பிடிக்கும். (TO see sea)


புவனாப்ரியன் - எனக்கு உன் கூட கடலை போடப்பிடிக்கும் # பி கு -அது நான் இல்லீங்கோ



----------------------


2. என்னமோ போடி ஜிகிடின்னு ஓடுது லைஃப்ஃபு --



--------------------

3. இன்று என் மனைவி காலண்டர் ஷீட் கிழித்தபோது மனசுக்குள் ஓடிய வரி - ஒரு சனியே சனியை துவக்கி வைக்குதே அடடே!!



-----------------------


4. மாப்பிள்ளை வீட்டார் - மாப்ளையை பிடிச்சிருக்கா?


DR  புவனா - 24 மணி நேரம் கழிச்சுத்தான் எதையும் சொல்லமுடியும்.


-------------------


5. ஹிந்தில சனிக்கிழமைக்கு சனிவார் = சனி WAR வித் மை ஓன் ஒன்லி ஒன் சம்சாரம்




------------------------






6. வெற்றிக்கு வழி - புதுசா எந்த ஒரு பிராஜக்ட் செஞ்சாலும் உங்க சொந்த சம்சாரம் கிட்டே ஐடியா கேட்டுக்குங்க.அவ சொல்றதுக்கு நேர்மாறா செயங்க்



---------------------------


7. பொய் பிரச்சாரங்களை நம்பாதீங்க: பிரதமர்: # நிலக்கரி ஊழலில் காங்கிரஸ்க்கு பங்கு இல்லைன்னு சோனியா பிரச்சாரம் பண்றாங்ளே அதையா?



-------------------------------


8. வருங்கால வைப்பு நிதின்னா தொடுப்புக்காக சேமிக்கும் பணமா? டவுட்டு டேவிட்டு மிசஸ் ரிிவிட்டு



--------------------------


9. மனம்விட்டு பேச காதலியை நல்ல ஹோட்டலுக்கு கூட்டிப்போனேன்!ரிசப்ஷனிஸ்ட காதலி ஆகும் சூழல்



--------------------------


10. இந்தியா ஒளிர்கிறது அர்த்த்சாம மின் தடைகளில் ஆங்காங்கே விழிப்புணர்வும் ,புணர்வும்




---------------------------




11. வெட்கம் மானம் சூடு சுரணை எல்லாம் இருந்தும் சிலருக்கு எதிர்பாராமல் திருமணம் செய்ய வேண்டிய சூழல்் வந்துவிடுகிறது!



---------------------------


12. அன்னிய முதலீடு : நாட்டு மக்களுக்கு இன்று இரவு பிரதமர் விளக்கம் # ஐ ஜாலி யாருக்கும் இங்கே ஹிந்தி தெரியாது



-------------------------


13 இன்னைக்கு பி எம் பேசும்போது மேடைல இந்தப்பாட்டு போட்டு விட்ரனும் = நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது



---------------------


14. பெண்கள், வாசகம் எழுதிய டி-ஷர்ட் அணிவதே ஆண்களுக்கு கல்வி அறிவை ,கவனிக்கும் கூரிய பார்வையை வளர்க்கத்தானே?



-----------------------------


15. உங்களை வெறுப்பவர்களின் காரணம், உங்களை போல கடலை மன்னனாக இருக்க முடியவில்லையே என்பதாக கூட இருக்கலாம்.



-------------------





16. காலையில் 5 மணிக்கு விழிப்பு வந்துடணும் அப்போதான் என் கணவரை எழுப்பி விட்டு உத்தரவு கொடுத்தா சொன்னா சொன்னபடி கேட்பார




-------------------------


17. சராசரியாக ஒரு பெண் தனது வாழ் நாளின் 50 வருடத்தை கணவனை திட்ட் செலவழிக்கிறார்! ஆண்கள் மனைவியை திட்டுவது 1 வருடம்தான் :



----------------------


18. பில் கிளிண்டனுடனான 'கசமுசாக்களை' புத்தகமாக வெளியிடும் மோனிகா லெவின்ஸ்கி!# புக்கை விட சி டி தான் கிக்.அதை ரிலீஸ் பண்ணுங்க மேடம்



-------------------------


19. பள்ளிக்கூட மாணவியாக ஹன்சிகா! # பள்ளி அறை காட்சி எடுத்துட்டு பள்ளியறைக்காட்சிகள் நிறைந்த படம்னு விளம்பரம் பண்ணலாம்




----------------------


20. ட்ரான்ஸ்பரன்ட் சேலையில் எல்லாம் தெரிந்தும் எதுவுமே தெரியாத மாதிரி இருக்கிறது தான் பெண்கள் இயல்பு -- )



-----------------------------



Friday, September 21, 2012

சாருலதா - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4tDUZ24wqeI1wZ90oslh7ixGXOMrO7w_CWm2EVKPsRxQ2z_RPlb1qc2ykmbAnZKv2oyH-TdrCOsz5MDNzEtlSUCOQzmpSiutTxnhAsPaJU-xIkfigLyxTYvzJ19qYUSxfXUScnqPS-_k/s1600/0.jpg 

சாருவும் , லதாவும் ட்வின்ஸ்.ஒட்டிப்பிறந்த ரெட்டை சகோதரிகள்.சின்ன வயசுல இருந்தே ஒண்ணாவே வளர்றாங்க.ஒத்த ரசனை. சில காரணங்களால அவங்களை பிரிக்கலை. அப்படியே ஒட்டியேதான் இருக்காங்க.19 வயசு வரைக்கும் சரியாதான் போய்ட்டு இருந்திருக்கு.  19 வயசு ஆனதும் திடீர்னு இசை ஆர்வம் வந்து வயலின் கத்துக்க போறாங்க.. அங்கே தான் ஹீரோவும் வயலின் கத்துக்க வர்றார். 


2 பேருக்கும்  அவரை பிடிச்சிடுது.ஆனா ஹீரோ கமலோ, எஸ் ஜே சூர்யாவோ, கே பாக்யராஜோ கிடையாது . பாவம். அவர் ஒரு பொண்ணைத்தான் அதாவது சாருவை லவ்வறாரு.இது லதாவுக்கு பிடிக்கலை.காதலனை சந்திக்க போகக்கூடாதுன்னு தடை போடறா. இந்த சங்காத்தமே வேணாம், 2 பேரும் ஆபரேஷன் பண்ணி பிரிஞ்சுடலாம்னு முடிவு பண்ணிடறா சாரு. 


 ஆபரேஷன்ல ஒருத்தி உயிர் போயிடுது.லதா செத்துடறா. சள்ளை விட்டுதுன்னு  சாரு அம்மாவை அம்போனு ஊர்ல விட்டுட்டு காஷ்மீர் போய் லவ்வரோட லிவ்விங்க் டுகெதரா வாழறாங்க ( ஆனா நோ கில்மா )அம்மாவுக்கு சீரியஸ்னு தகவல் வருது.


சொந்த ஊர்க்கு போனா சந்திரமுகில வர்ற மாதிரி திகில் அனுபவங்கள்..செத்துப்போன லதா பேயா வந்து பயப்படுத்தறா.. அதுக்குப்பிறகு என்ன நடக்குது என்பதே கதை.. 


http://lh4.ggpht.com/-CCewH8xWxwg/T9dXEU_v8PI/AAAAAAAAQdM/Ry-geX6pbH0/Charulatha%252520Stills%252520%2525288%252529.jpg


கேட்க ரொம்ப சாதாரணமா இருந்தாலும் இதுல நான் சுவராஸ்யம் போய்டக்கூடாதுன்னு கலக்கலான 2 ட்விஸ்ட் மேட்டரை சொல்லாம விட்டிருக்கேன்.. ட்வின்ஸ் கதைல 2 ட்விஸ்ட்.. அடடே.. 


படத்துல முதல்ல பாராட்ட வேண்டியது பிரியாமணியைத்தான்.. ஆஹா! பருத்தி வீரன் முத்தழகு கேரக்டருக்குப்பிறகு  அவருக்கு அமைஞ்ச அல்வா கேரக்டர். வழக்கமா நாம பார்த்த அடக்க ஒடுக்கமான பிரியாமணியா குங்குமம் வெச்சு படிய தலை வாரிய ஹேர் ஸ்டைலில் பாந்தமா வர்றவர் அந்த  வில்லி கேரக்டர்ல மிரட்டிட்டார். சபாஷ்! 


 இதுக்கு முன்னால இப்படி அகம்பாவமான , ஆணவமான , மிரட்டலான, ஆண்மைத்தனமான கேரக்டரை ஜெயலலிதா கிட்டே , மன்னன் விஜயசாந்தி கிட்டே, படையப்பா ரம்யா கிருஷ்ணன் கிட்டே தான் பார்த்திருக்கோம். அவங்களை டச் பண்ணலைன்னாலும் கிட்டே வந்துட்டார்.. 


ஆர் பார்த்திபனின் முன்னாள் மனைவி சீதா டாக்டரா, சரன்யா அம்மாவா பாந்தமா நடிச்சிருக்காங்க.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqnMGlHpPsF5aIY_m-hEigQoGwXi1eWYsole_PGqvb7sDiVlOx8iilfidmTTQIVw61rtSzUb41Reo1gRDa_1l0RllFdCrlHfJv6oLJvGartoLW63X41Y9XVmwUsk6yDqxzHtl10IH1P4fw/s1600/guniguni.jpg



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. இயக்குநர் நினைச்சிருந்தா இது வாலி கதையின் உல்டா வெர்ஷன் தான் அப்டினு சமாளிச்சிருக்க முடியும், ஆனா அப்படி பண்ணாம முறையா தாய்லாந்துப்பட ஒரிஜினலான  அலோன் (ALONE)  தயாரிப்பு தரப்பு கிட்டே அனுமதி வாங்கி கதைக்கு கிரெடிட் அவங்கதான்னு ஒத்துக்கிட்டதுக்கு. ( மிஷ்கின், கே வி ஆனந்த் வகையறாக்கள் கவனிக்க ) 


2. பிரியாமணிக்கு இந்தப்படத்துல ஏகப்பட்ட காஸ்ட்யூம்ஸ்.ஆல் மாடர்ன் டிரஸ் தான். செம .. இதுக்கு முன்னால இந்த சாதனை செஞ்சவங்க பூக்களைப்பறிக்காதீர்கள் , உயிரே உனக்காக நதியா , வஸந்த் இயக்கத்தில் வந்த நீ பாதி நான் பாதி  படத்துல கவுதமி ( நிவேதா பாடல் காட்சில மட்டும்  65 டிரஸ்சாம் )


3. இடைவேளை ட்விஸ்ட்டில்  படத்தின் ட்விஸ்ட்டை சூசகமாக சொல்லும் அந்த  கண்ணாடி ஷேப்பில்  சிதறிய முத்து மணிகள் கூடுவது 



4. த்ரில்லர் பட விமர்சன மேனர்ஸ் கருதி சொல்லாமல் விட்ட அந்த 2 திருப்பு முனை காட்சிகள் 



5. பேய்ப்படம் என்பதற்காக கோரமான உருவம், ரத்தம், கசமுசா காட்சிகள் எல்லாம் வைக்காமல் மிக கண்ணியமாக படத்தை எடுத்தது


http://www.tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_83856928349.jpg



 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. த்ரில் , திகில் படங்களுக்கு காமெடி, பாடல் காட்சிகள் ஒரு பெரிய டிரா பேக். ஏன் ஓப்பனிங்க் ஷாட்ல ஹீரோயினுக்கு தேவை இல்லாம ஒரு பாட்டு?  சந்திர முகி படத்துல வடிவேல் காமெடி மேட்ச் ஆச்சு ஆனா இதுல  அந்த சின்னப்பையன் காமெடி எடுபடலை



2. அன்பே வா படத்துல எம் ஜி ஆர் தன் சொந்த பங்களாவுக்கு வந்தும் வாடகை கொடுத்து தங்கற மாதிரி சூழல், அப்போ நாகேஷ் காமெடி பண்ணுவாரு, மனோரமாவுக்கு எம் ஜி ஆர் தான் ஓனர்னு தெரியும். இந்த காமெடி டிராக் கதையோட ஒன்றி இருந்தது, ஆனா இதுல செட் ஆகலை.. பிரியாமணி எதுக்காக அப்படி நடிக்கனும்? அந்த டிராமா எதுக்கு? 



3. ஹீரோயின் ஒரு சீன்ல வாக்குவம் க்ளீனர் மூலம் வீட்டை சுத்தப்படுத்திட்டு இருக்காங்க. ஹீரோ உள்ளே வந்ததும் தன் காலால வாக்கும் க்ளீனர் ஸ்விட்சை ஆஃப் பண்றாங்க.. ஆயுத பூஜை கும்பிடறாங்க, இப்படித்தான்   பண்ணுவாங்களா? ஹீரோயின் கையால அதை ஆஃப் பண்ண மாட்டாங்களோ?


4. ஹீரோயின் அம்மா சரண்யா சீரியஸ்னு  ஐ சி யூ ல அட்மிட் ஆகி இருக்காங்க. டாக்டர் வெளீலயே பிரியாமணியை நிறுத்தி அவங்களை தொந்தரவு பண்ணாதீங்கன்னு சொல்லாம உள்ளே கூட்டிட்டுப்போய் அதே டயலாக்கை சொல்றாரு// ஆர்க்யூ பண்ணற இடமா அது? 



5. பேபி ஷாலினி சில படங்கள்ல வயசுக்கு மீறி பேசும்போது, சேட்டை பண்ணறப்போ ஒரு கோபம் வருமே ஆடியன்ஸுக்கு அந்த கோபம் இந்தப்படத்துலயும் அந்த பையன் மேல வருது.. பிஞ்சுலயே பழுத்துட்டான் போல.. 


6. ஹீரோயின் ஒரு சீன்ல காரை ரிவர்ஸ் எடுக்கறா. பின்னால நாய் உக்காந்து இருக்கு. பகல் டைம் தான்.  நாய் தூங்கலை, மயக்கம் இல்லை, ஆனா விலகலை.. கார்ல அடிபட்டு சாகுது.. அது எப்படி நாய்க்கு மனுஷனை விட கேட்கும் திறன் அதிகம் ஆச்சே? கார் சவுண்டை கேட்காம எப்படி விட்டுது? ( ரோட்ல விபத்து நடப்பது வேறு, வீட்டு கார் ஷெட்டில் அப்படி ஆகுமா? ) 


7. சரண்யா ஊர்ல தனியா இருக்காங்க.அவங்க ஹாஸ்பிடல்ல இருக்கற மேட்டரை யார் பிரியாமணிக்கு தகவல் சொல்றாங்க? ஏன்னா அந்த வீட்ல இருக்கற மத்த 2 பேரான ஆர்த்தி, அந்தப்பையன் 2 பேருக்கும் பிரியாமணி வர்ற மேட்டரே தெரியலை. 

http://www.vidikural.com/wp-content/uploads/2012/06/priyamani_002.jpg


8. ஹீரோயின் ஒரு சீன்ல ஒரு  டப்பாவை எடுத்து அதுல இருந்து கிட்டத்தட்ட 70 டேப்லட்ஸ் சாப்பிடறா.. தண்ணீர் குடிக்காமலேயே.. நம்மால 2 மாத்திரையே அப்படி சாப்பிட முடியறதில்லை.. அதுவும் ஒவ்வொண்ணா பொறுமையா சாப்பிடாம அப்படியே கொட்டிக்கறா.. 



9. சிஸ்டர்ங்க 2 பேருக்கும் பிராப்ளம் ஓக்கே. சக்களத்தி சண்டைக்காக ஆவி பயமுறுத்துது. ஏன் அம்மாவை பயப்படுத்தனும்?


10. படத்துக்கு முக்கியமான கேரக்டரே அந்த வில்லி கேரக்டர் தான். அதுக்கான ஸ்கோப்பை திரைக்கதைல எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேர்த்தாம எதுக்கு தேவை இல்லாம அந்த காமெடி போர்ஷன்.செம மொக்கை.. அதுவும் நட்பு படத்துல செந்தில் நடிச்ச 10 பைசா பைத்தியம் காமெடி டிராக் மாதிரி 1000 ரூபா எதுக்கெடுத்தாலும் லஞ்சமா கேட்பது மகா எரிச்சல் 



11. மந்திரவாதி, சஞ்சீவி வேர் , சூன்யம் எடுக்கறது இந்தக்கதைக்கு தேவையே இல்லை.. ஏன்னா இது பேய்ப்படம் கிடையாது, அந்த மாதிரி போக்கு காட்டும் ஒரு த்ரில்லர் சஸ்பென்ஸ் படம்.. அந்த மந்திரவாதி கேரக்டர் படத்தின் போக்கை கொஞ்சம் திசை திருப்புது ( அநேகமா ஒரிஜினல்ல இது இருந்திருக்காது, நீங்க சேர்த்து இருப்பீங்க?)


12. இந்த பங்களாவில் பேய் பிரச்சனைன்னு தெரிஞ்சதும் இடத்தை காலி பண்ணாம ஏன் அங்கேயே இருக்கனும்? அம்மா ஹாஸ்பிடல்ல . இவங்க வேற ஹோட்டல்ல தங்க வேண்டியதுதானே?


13. ட்வின்சை பிரிக்கும் சீன்ல ஆபரேஷன் நடக்காததுக்கு முன்பே ஒருத்தி செத்துடறா. டாக்டர் எந்த கேள்வியும் கேட்கலையே. இந்த த்ரில்லர்ல ஒரு சீன்ல கூட போலீஸே எண்ட்ரி ஆகலையே ஏன்? போலீஸ் பந்த்தா? 


14. க்ளைமாக்ஸ்ல  ஹீரோவை கட்டி வெச்சு ஹீரோயின் மிரட்றா. என்னை கட்டிக்கிறியா, உன்னை கொன்னுடவா?ன்னு. ஹீரோ பெரிய பருப்பு மாதிரி செத்தாலும் பரவாயில்லை உன்னை கட்ட மாட்டேன்கறான். அப்போதைக்கு ஓக்கே சொல்லிட்டு எஸ் ஆக பார்க்க மாட்டானா? 


15. ஹீரோவுக்கு சுய புத்தி இல்லையா? க்ளைமாக்ஸ்ல ஹீரோயினை வேண்டாமுனு சொல்லி எஸ் ஆகி வந்த பின் சரண்யா என் மகளை ஏத்துக்கோன்னு சொன்னதும் ஏத்துக்கறாரே? 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3zL5VIj_pLsQUKi3pbIB5ntsflA-UwI9quzgIBlhSudKSaxw4XouDzMRaadMAwznwW0DpKrxX6jkev8iOgXOT5cQUjmJFvYC5M8R2dciyIh7-7HdQvT_iVDnEMTGUnikP0joy2canzw8/s1600/priyamani.jpg




மனம் கவர்ந்த வசனங்கள் 


1. நம்மை மீறி நடக்கும் சில விஷயங்களுக்கு  விதி மேல பழியைபோட்டுட்டு  நாம சைலண்ட்டா இருக்கனும்


2.  என்னது? 2 வருஷமா ஒரே வீட்ல ஒண்ணா இருந்துட்டு ஒண்ணுமே பண்ணலையா? 


3. மேடம், பத்தாயிரம் ரூபா கொடுத்துட்டு ஏன் படிக்கட்டுல படுத்திருக்கீங்க, போய் உள்ளே பெட்ரூம்ல படுங்க.. 

 அடேய், நான் ஸ்லிப் ஆகி விழுந்திருக்கேன் 



4.  ரோசியா? யார் அந்த ஃபிகரு?


 அது அவ வளர்க்கும் நாய் 


5. இந்த உலகத்துல ஒவ்வொருவருக்கும்  ஒரு கவலை கண்டிப்பா இருக்கும். 


6. ட்வின்ஸ்ல ஒருத்தர் இறந்துட்டா இன்னொருத்தர் சீக்கிரம் செத்துடுவாங்கன்னு சொல்றது உண்மையா? அதே போல் செத்துப்போன ஒருத்தர் தன் ட்வின்ஸை வாழ விடமாட்டாங்களா? 



7. பொதுவா இந்த மாதிரி பேஷண்ட்ஸ் ரெக்கவர் ஆவது பேஷண்ட்ஸ் வில் பவரை பொறுத்தது



8.  கார் ஏத்தி  ரோசியை ரோஸ்ட் பண்ணிட்டாங்க 




9. நான் வேணா பாடி காட்டட்டா? 

 அய்யோ , பாடியை காட்ட வேணாம்.. பாடி காட்டுனா போதும்




10. எங்கக்காவைக்கட்டிக்கிட்டா ஒரே கல்லுல 2 பங்களா


11. உங்க எதிர்காலம் ரொம்ப பிரம்மாண்டமா அமையும்னு சொன்னியே அந்த பிரம்மாண்டம் இவ தானா? அவ்வ்வ் 



12. இந்த டிரஸ்ல நான் எப்படி இருக்கேன்?


 புலவன் மாதிரி வர்ணிக்கவா? பொறுக்கி மாதிரி சொல்லவா? 


 பொறுக்கி மாதிரி சொல்லு 


 ஒரு மரத்துப்பனை கள்ளு போல இருக்கே


 சரி, புலவன் மாதிரி சொல்லு 


தேனில் ஊறிய தேனடை மாதிரி இருக்கே. 
\


13. பொண்ணுங்களை பிக்கப் பண்ண பசங்க நாய் மாதிரி அலைவானுங்க,.ஆனா நீங்க அந்த நாயையே கிஃப்டா கொடுத்து பிக்கப் பண்ணிட்டீங்களே? 


14. நீ என்னை வெறுத்தாலும் நான் உன்னை வெறுக்க முடியாது 


15. ஜஸ்ட் 20 நாள் லவ்வுக்காக 20 வருஷ பாசத்தை கொன்னுட்டியே


16. சஞ்சீவி வேருக்கு அபூர்வ சக்தி இருக்கு. கம்பி மேல பட்டாக்கூட  கம்பி உடையும், வேர் உடையாது, நெருப்பால கூட அதை ஒண்ணும் பண்ண முடியாது 


17 . மேலே மேகத்தை பாரு என்ன தெரியுது?


 மேகம் தான் தெரியுது



 சிங்கம் மாதிரி தெரியலை? நிலாவுல பாட்டி வடை சுடற பிம்பம் தெரியறதும்
 இப்படித்தான். நம்ம மனசும் , கற்பனையும் தான் காரணம்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUFZuD3J-X9pajVKPjR1WHwXeo9K6uZ7Oz41RI2NU3Cfu4mFgmW28DBpdghUqFIoij_zP9-aLxpQ_0mFlQMVoRHcnKyAOul7pwoyUOyl96BsSrW8kNZmZl2sJLkC914pwatk-h-WsZzii6/s1600/alone-horror-2007.jpg

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 44


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - நன்று



சி.பி. கமெண்ட் - த்ரில்லர் , திகில் ரசிகர்கள் அனைவரும் பார்க்கலாம். பெண்களும் பார்க்கலாம்.. கண்ணியமான நெறியாள்கை.ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்

டிஸ்கி -சாட்டை -http://www.adrasaka.com/2012/09/blog-post_7166.html

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 21.9.2012 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

http://123tamilforum.com/imgcache2/2012/09/Saattai-1.jpg 

1.சாட்டை -  "மைனா" படத்தை தொடர்ந்து ஷாலோம் ஸ்டூடியோஸ் சார்பில் இயக்குனர் பிரபுசாலமன் வழங்க ஜான்மேக்ஸ் தயாரிக்கும் படம் "சாட்டை"

இதில் கதை நாயகனாக சமுத்திரகனி, இளம் நாயகனாக யுவன் நடிக்கின்றனர். கதாநாயகியாக மகிமா அறிமுகமாகிறார். மற்றும் தம்பி ராமய்யா, கோபி பீம்சிங் இவர்களுடன் பள்ளி மாணவ-மாணவிகள் 500 பேர் நடிக்கிறார்கள்.



சமுத்திரகனி பள்ளி ஆசிரியராக வருகிறார். அதற்கான சிறப்பு பயிற்சியாக தனக்கு தெரிந்த ஆசிரியர்களிடம் சில விஷயங்களை கேட்டறிந்துள்ளார். யுவன் நடிப்பு பயிற்சியுடன், உடற்பயிற்சியிலும் அக்கறைக்காட்டி நடித்திருகிறார். 


பிரபல இயக்குனர் பீம்சிங் மகன் கோபி பீம்சிங் முதன் முறையாக நடிகராக களம் இறங்குகிறார். இப்படத்திற்கான கதைக்களம் பள்ளியை அடிப்படையாகக் கொண்டது என்பதால் ஒவ்வொரு பள்ளிக் கூடத்திற்கும் போய் அங்கு நடப்பவற்றை காட்சிகளாக் குகின்றனர்.


ஜீவன், ஒளிப்பதிவு செய்ய, இமான்  இசையமைக்கிறார். கதை திரைக்கதை, வசனம், எழுதி டைரக்ஷன் செய்கிறார் அன்பழகன்.


 ஈரோடு தேவி அபிராமி ,சண்டிகாவில் ரிலீஸ்

http://www.adrasaka.com/2012/09/blog-post_7166.html
விமர்சனம் படிக்க
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4tDUZ24wqeI1wZ90oslh7ixGXOMrO7w_CWm2EVKPsRxQ2z_RPlb1qc2ykmbAnZKv2oyH-TdrCOsz5MDNzEtlSUCOQzmpSiutTxnhAsPaJU-xIkfigLyxTYvzJ19qYUSxfXUScnqPS-_k/s1600/0.jpg


2.  சாருலதா - கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சாருலதா படம் தமிழில் அதேபெயரில் ரீமேக் ஆகிறது. இதில் ஒட்டிபிறந்த இரட்டை பிறவிகளாக நடிகை ப்ரியாமணி நடிக்கிறார். குளோபல் ஒன் ஸ்டுடியோ புரோடக்ஷன் சார்பில் ரமேஷ் கிருஷ்ண மூர்த்தி தயாரிக்கும் இப்படத்தை கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பொன்குமரன் இயக்கவுள்ள இப்படத்திற்கு யோகனந்த். எம்.வி பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார். சுந்தர் சி பாபு இப்படத்திற்கு இசை அமைக்கிறார். 


தாய்லாந்து படமான ‘அலோன்’ என்ற படத்தின் இன்ஸ்பிரேஷனில் இது உருவாக்கப்படுகிறது.  


ஈரோடு அபிராமி, ஸ்ரீ அன்னபூரணி யில் ரிலீஸ்

http://www.adrasaka.com/2012/09/blog-post_7975.html
விமர்சனம்
 http://2funbd.com/wp-content/uploads/2012/08/heroine-hindi-movie.jpg

HEROINE -முன்னாள் உலக அழகியும், பாலிவுட் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் புதிய படமொன்றில் நிர்வாணமாக நடிக்க உள்ளார். ஹீரோயின் என்ற பெயரில் பிரபல இயக்குநர் மதுர் பந்தர்கர் இயக்கும் படத்தில்தான் அம்மணியை முழுமையாக தரிசிக்க ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கப் போகிறது. முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு வயது சற்று தெரிந்தாலும் அழகும், நளினமும் குறையவில்லை. இருந்தாலும் ஏஜ் பேக்டர் பயம் ஐஸ்வர்யாவை தொற்றிக் கொண்டதாகவே தெரிகிறது. கரீனா, கத்ரீனா, தீபிகா, பிரியங்கா, சோனம் கபூர், சோனாக்ஷி என நீண்டு செல்கிறது பாலிவுட்டின் சின்ன சிட்டுகளின் பட்டியல். இவர்களுடன் போட்டாப் போட்டி போட மாஜி உலக அழகி அந்தஸ்து மட்டும் போதாது, அதுவும் வயது ஏறிக் கொண்டே போகும் போது...! எனவே தான் தனது புதிய படத்தில் ஐஸ்வர்யா அதிரடியாக நிர்வாணமாக தோன்ற சம்மதித்திருப்பதாக பாலிவுட் வட்டாரம் சலசலக்கிறது.

முன்னதாக இந்தப் படத்திற்கு தேசிய விருது புகழ் இயக்குநர் மதுர் பந்தர்கர் கரீனா கபூரைத்தான் ஒப்பந்தம் செய்ய இருந்தார். ஆனால் நிர்வாண காட்சியா... அய்யய்யோ என்னால முடியாது... என கரீனா கபூர் ஓட்டம் பிடித்ததால், ஐஸ்வர்யாவை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். முதலில் நிர்வாண காட்சியில் நடிக்க தயங்கிய ஐஸ், பின்னர் படத்தின் கதையை முழுமையாக கேட்ட பிறகு, கணவரின் சம்மதத்துடன் நடிக்க சம்மதித்துள்ளார்.

அப்படியென்ன கதை? அங்கேதான் விவகாரமே இருக்கிறது. ஹீரோயின் என்ற தலைப்பு கொண்ட இந்த படம் முழுக்க முழுக்க ஒரு நடிகை சினிமா உலகில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள எப்படி எல்லாம், யார் யாரையெல்லாம் அனுசரித்து போக வேண்டி இருக்கிறது என்பது பற்றிதான்.  ஏற்கனவே இதுபோன்ற கதையம்சங்களுடன் ஒருசில படங்கள் வெளியான போதிலும், அவற்றிலெல்லாம் இலைமறை காயாகத்தான் இதுபோன்ற அந்தரங்க காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன. ஆனால் முதன் முதலாக இந்த படத்தில்தான் திரையுலகின் மறுமுகம் தெரியப் போகிறது என்பது கூடுதல் தகவல்.

கதைக்கு பொருத்தமாகத்தான் நிர்வாண காட்சிகள் இருக்கும்; எதையும் மிகைப்படுத்தி காட்ட மாட்டேன் என்று கூறியிருக்கும் டைரக்டர் மதுர் பந்தர்கருக்கு கண்டிப்பாக திரைத்துறையில் இருந்தே எதிர்ப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. யார் எதிர்த்தால் என்ன... ரசிகர்கள் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பார்களே... கலையுலகின் அழகுச்சிலையை நிர்வாணமாக காட்டுவதற்கு!!

ஈரோடு ஸ்ரீநிவாசாவில் ரிலீஸ் 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipfj-5srS3yHDD6pyxJx09O75-C4Eiw87WKQUah_6SgNd2jrQTJkbOEIftubjPo7J-zfzNsIy-UrwGErRmzHnxglodfwC1xcVSeTpm4L98Dc_SR2e_X5xjH_-_LtOZbEGwjgDU0BPxO24/s1600/don-seenu-dvd-2010.jpg
4.don seenu telugu movie - ரவி தேஜா நடிச்ச பழைய படம் 2010 இல் ரிலீஸ் ஆனது. இப்போ தான் இங்கே வருது




5.DREDD ட்http://www.themesdownload.org/wp-content/uploads/Dredd-2012-1200x1920TD-1.jpgA


ஈரோடு வி எஸ் பி யில் ரிலீஸ் 

கந்தரகோல பாண்டியனும், அவன் சம்சாரமும்

இறைவனின் படைப்பு ஒவ்வொன்றும் அழகுதான்.......
1.ரசிகர் மன்றத்திறப்பு விழாவுக்கு நடிகை வந்தால் அவ்விழா மேடையில் ஒலிக்கக்கூடாத பாடல் - மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையா?



---------------------


2. மிஸ்.உங்களை டீ போட்டு கூப்பிடலாமா?


எனக்கு நெருக்கமானவங்களுக்கு மட்டுமே அந்த உரிமை


.இப்போ உங்களுக்கு நெருக்கமாத்தான் நிக்கறேன் :-)



------------------------


3. பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் - திரிணா.காங் # சைன் பண்றது ,ரிசைன் பண்றது எல்லாம் சோனியாஆணைப்படி- சோனியாவின் ரோபோ ம மோ சிங்



-----------------------------



4. தன்னிச்சையாக செயல்படுகிறது மத்திய அரசு: பிரகாஷ் காரத் # அபாண்டம்.சோனியா , ராகுல் இச்சைப்படி நடக்குது என் மண்டகப்படி - ம மோ சிங்க்



-----------------------------


5. இந்திய கிரிக்கெட் டீம்க்கு சென்ற இடம் எல்லாம் ஆப்பு


---------------------------


பந்தாவா திறந்திருக்கு...பந்த்தாம்!!!
அகில " உலக பந்த் " முழு கதவடைப்பாக இருந்தாலும் சரி,,,,
எங்க ஊர்ல "இந்த" கடைகள் மட்டும் எப்பவுமே திறந்தே இருக்கும்,,,,,
ஏன் என்றால் - "" இந்த கடைக்கு தான் கதவே கிடையாதே ! ""


6. வாரம் ஒரு நாள் உங்கள் மனைவியின் விரல் நகங்களை வெட்டி விடுங்கள்.சண்டையின் போது நமக்கு காயம் ஏற்படுத்துபவை அவைதான்



----------------------------


7. குத்தினது ,குட்டுனது,அடிச்சது,திட்டுனது உன் சம்சாரமா இருந்தா செத்தாக் கூட வெளில சொல்லக் கூடாது! # குந் த வைத்த பாண்்டியன்.



--------------------------


8. இன்று உதய சூரியன் பந்த்க்கு ஆதரவு.ஆனாலும் உதித்து விட்டது சூரியன் -ஜெ கவிதை எழுதினால்.




----------------------


9. தமிழகத்துக்கு தண்ணீர் விடுவதை தடுப்போம்: ஜெகதீஷ் ஷெட்டர் # ஷட் அப் யுவர் மவுத்,ஓப்பன்வாட்டர ஷட்டர் -ஜெ்



-------------------------


10. கடவுளே! ஆண்களை விட பெண்களுக்கு ஆயுள் அதிகம் வெச்சிருக்கே,ஏன்?


 புண்ணிய ஆத்மாக்கள் விரைவில் மோட்சம் அடைகின்றன



--------------------------





11. குருவே! சித்தி பெற என்ன வழி ?


நித்தி - ஐ ஆம் நாட் விஜய்காந்த்,ரிச்சர்டு,சரத்குமார்.என்னை கேட்டா?



---------------------------



12. நீவாழ பிறரை கெடுக்காதே..# ரேப்க்கு இப்போ எல்லாம் தண்டனை ஜாஸ்தி



-----------------------


13. அன்பே! என்னோடு வா ரேஷன் கடை வரைக்கும்.் அதன் எடை குறைச்சல் ,உன் உடை குறைச்சல் எது அதிகம்?பார்த்து விடுவோம்




-------------------


14. குழந்தைபோல நீ உன் நாக்கை நீட்டி பழிப்பு காட்டும்போது பளார்னு ஒண்ணு விடனும் போல இருக்கு :-P வெவெவவவ:-P



--------------------------


15. மிஸ் குமுதினி - மேத்ஸ் ல நமக்கு தெரியாத நெம்பரை X னு வெச்சுக்கனும்.



 லொள் மாணவன் - டீச்சர்.அப்போ ட்ரிபிள் எக்ஸ்க்கு எதை வெச்சுக்கனும்?



---------------------------





16. வீடு கட்றத விட இடிச்சுக் கட்றது கஷ்டம் - குஷ்பு #அதனாலதான் நான் பழைய வீட்டையே வாங்கி ்.எந்த ஆல்டரும் பண்ணல- சுந்தர் சி



------------------------


17. லவ் பண்ணுன பொண்ணுக்கு மேரேஜ் பண்ணாமயே பேபி குடுத்துட்டு just kidding:)) னு சொல்லிடறாங்க



-----------------------------


18. எங்கிருந்தாலும் வீட்டிற்கு செல்ல சரியான வழிகாட்டும் புதிய காலணி கண்டுபிடிப்பு # நல்ல வேளை நாம எங்கெல்லாம் போறோம்னு கண்டுபிடிக்கலை




---------------------------


19. குணச்சித்திர நடிகைகள் கொஞ்சமா காட்டும் கவர்ச்சி போல் பந்த்தை முன்னிட்டு டீக்கடை ,பேக்கரிகள் கொஞ்சமாக கதவை திறந்து வைத்திருக்கின்றன



----------------


20. நவராத்திரி கொலுவுக்கு நமீதா சிறப்பு விருந்தினரா வந்தா அவர் கொலுக்கட்டை ஆகிடுவாரா?



--------------------


21. அன்பே ! நீ சுட்ட பூரி உன் வெட்கம் போல் தொட்டதும் உடைகிறது.நீ கடனை கட்ன சப்பாத்தி நீ பார்க்கும் சீரியல் போல் இழுக்க இழுக்க வருது




----------------------


Thursday, September 20, 2012

இயேசு கிறிஸ்து திருமணம் ஆனவரா?


ஏசுநாதர் திருமணமானவர் என்றும் அவருடைய முதன்மையான சிஷ்யையாக கருதப்படும் மேரி மெகதலீன்தான், ஏசுநாதரின் மனைவி என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இறையியல் பிரிவு தலைவரான பேராசிரியர் கேரன் கிங் என்பவர்தான் இதுதொடர்பான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளார். ஏசுநாதர் குறித்த இந்த முக்கிய தகவலை வெளியிட்டு அவர் கூறியதாவது:-


மிக மிகப் பழமையான கையால் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய கோரைப் புல்லால் ஆன கையெழுத்துப்படி ஒன்று கிடைத்துள்ளது. அதில் ஏசுநாதரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. முழுமையான வாசகங்கள் அதில் இல்லை.

பண்டைய எகிப்திய கோப்டிக் மொழியில் வாசகங்கள் உள்ளன. அதை ஆராய்ந்து பார்த்ததில், ஏசுநாதரின் மனைவிதான் அவரது முதன்மையான பெண் சிஷ்யையான மேரி மெகதலீன் என்பது தெரிய வருகிறது. இருவரும் கணவன், மனைவியாக இருந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த கையெழுத்துப் படியானது 8 செமீ நீளமும், 4 செமீ அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த கையெழுத்துப் படியில் உள்ள வாசகங்கள் மூலம் ஏசுநாதரும், மேரி மெகதலீனும் கணவன் மனைவி என்பது திட்டவட்டமாக தெரிய வருகிறது.


ஒரு இடத்தில் மேரி மெகதலீனை எனது மனைவி என்று ஏசுநாதர் தனது சீடர்களிடம் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது. நான் அவருடன் வசித்து வருகிறேன் என்றும் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த கையெழுத்துப்படி நம்பகத்துக்குரியதாக இருக்க வேண்டும் என்றே நம்புகிறோம் என்றும், அப்படி இருந்தால் இது மிகப்பெரிய ஆச்சரியகரமான தகவலாக அமையும் எனவும் கூறியுள்ளார்

ஏற்கனவே மேரி மெகதலீனும், ஏசுநாதரும் தம்பதியர் என்று அமெரிக்க எழுத்தாளர் டேன் பிரவுன் தனது 'தி டாவின்சி கோட்' நூலில் குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையையும், எதிர்ப்புகளையும், புயலையும் கிளப்பியிருந்தது என்பது நினைவிருக்கலாம்.

இந்நிலையில் மேரி மெகதலீன், ஏசுநாதரின் மனைவிதான் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேரி மெகதலீன் குறித்து பைபிளில் பல்வேறு தகவல்கள் உள்ளன. அவர் குறித்த சர்ச்சைக்கிடமான கருத்துக்களும் நிறைய உள்ளன.

மேரி மெகதலீன் ஏசுநாதரின் முதன்மையான பெண் சீடராக இருந்தவர். அவருக்கு சீடர்கள் குழுவில் மிகுந்த முக்கியத்துவம் இருந்தது. மேரி மெகதலீன் ஒரு விபச்சாரப் பெண்ணாக ஆரம்பத்தில் இருந்தார் என்று 591ம் ஆண்டு ஒரு குறிப்பு உள்ளது. பின்னர் ஏசுநாதர் அவரை சீர்திருத்தி தனது சிஷ்யையாக ஏற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

மேரி மெகதலீன் குறித்து ஏசுநாதரின் சீடர்களான லூக், மார்க், ஜான் ஆகியோரும் நிறையவே குறிப்பிட்டுள்ளனர். ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட பின்னர் அவரது ஆண் சீடர்கள் பலரும் போய்விட்டனர். ஜான் மட்டுமே இருந்தார். மேரி மெகதலீனும் அவருடன் இருந்தார்.

இதேபோல ஏசுநாதர் உயிர்த்தெழுந்தபோது அதை முதலில் கண்டவர் மேரி மெகதலீன்தான். இதை ஜானும், இதை ஜானும், மார்க்கும் தங்களது குறிப்புகளில் சொல்லியுள்ளனர். இந்நிலையில்தான் ஏசுநாதருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த மேரி மெகதலீன் உண்மையில் ஏசுநாதரின் மனைவி என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.மார்க்கும் தங்களது குறிப்புகளில் சொல்லியுள்ளனர். இந்நிலையில்தான் ஏசுநாதருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த மேரி மெகதலீன்.

இதை ஜானும், மார்க்கும் தங்களது குறிப்புகளில் சொல்லியுள்ளனர். இந்நிலையில்தான் ஏசுநாதருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த மேரி மெகதலீன் உண்மையில் ஏசுநாதரின் மனைவி என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.


நன்றி -மாலை மலர்

கள்ளப்பருந்து - சினிமா விமர்சனம்

http://www.thiruttuvcd.com/wp-content/uploads/2012/09/7638Kalla-Parunthu.jpg 

ஒரு ஊர்ல ஒரு கோடீஸ்வரர். அவருக்கு ஒரே ஒரு சம்சாரம். 2 பொண்ணுங்க.அவ்ளவ் பெரிய பங்களாவுல வேற யாருமே இல்லை. உடனே அட்ரஸ் எங்கேன்னு கேட்கக்கூடாது,.,. இது சினிமா . கதை.. அவ்ளவ் தான்.


கோடீஸ்வரர்க்கு இப்போ ஒரு டிரைவர் கம் கார்டியன் டூ ஹிஸ் மகள் வேணும்.தெரிஞ்சவன் கிட்டே சொல்றாரு. 


இப்போதான் ஹீரோ எண்ட்ரி. இவன் ஒரு மொள்ள மாரி. பொண்ணுங்க  சுடி , பாவாடை முடிச்சவுக்கி.. சிட்டி பாய் தான். ஆனா அடக்க ஒடுக்கமா கிராமத்தான் மாதிரி வேஷம் போட்டுட்டு வர்றான். 


முத பொண்ணுக்கு ஆல்ரெடி ஒரு பாய் ஃபிரண்ட் இருக்கான். அவன் கூட இவ அடிக்கற கூத்துகளை ஹீரோ செல் ஃபோன்ல படம் எடுத்து வெச்சுக்கறான். அதைக்காட்டி ஹீரோயினை மிரட்டி சாரி எதுக்கு மிரட்டனும்? அவ என்ன உத்தம பத்தினியா? சஹானாவுக்கு தங்கச்சி. நயன் தாராவுக்கு அக்கா தானே..


2 பேரும் பெட் மேட் ஆகிடறாங்க. இப்போ ஃபாரீன்ல இருக்கற இன்னொரு பொண்ணு இங்கே வர்றா. அவ இவளுக்கும் மேல லோலாயி.. அவளும் ஹீரோ வலைல சிக்கறா.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoF6BsTxbAz58935Rc2NY7bDXoSnn6uormVkevtkm8BaarnmrN4ZSytfgQsOy4UiZ5kUR89GQioYovviRJOQtZqmEu4Wx64QtrY_J4OT0lwD_ATE_kle8cOpTHaKpvO2I7UWPn3MX8tQ/s1600/Kalla+Parunthu+Movie+Stills+%25283%2529.jpg


இப்போ 2 பேருக்கும் சக்களத்தி சண்டை. யார் பர்மனண்ட்டா வெச்சுக்கறதுன்னு.இப்போ ஹீரோவோட பார்வை கண்ணுக்குட்டிகள் டூ  பசுவுக்கு தாவுது.


 கோடீஸ்வரருக்கு இந்த மேட்டர் எல்லாம் தெரிய வருது. அந்தாள் உடனே இந்த நாயை அடிச்சு விரட்டாம  கண் தெரியாதவர் மாதிரி நோய் வந்தவர் மாதிரி வீட்டுக்குள்ளேயே. படுத்துக்கறார். மனசுக்குள்ளே பெரிய சிவாஜி கணேசன்னு நினைப்பு.


 எல்லா கண்றாவியையும் தன் கண்ணால பார்க்கறார். அப்புறம் அவர் யார் யாரை கொலை பண்றார்? பலி ஆவது ஆடியன்ஸ் போக வேற யார் யார் என்பதை திரையில் காண்க. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8h_GEqwmoV3fHxJZXGcOCX6J_r8I_PdMU_yHPXfBYfNsE-Tg8zUTptcVo22-NbEjlJDq0IGtPQUA3vcOB9_SJ10Q9AYn6pyelazKVoXX5mY4-p4hebdS4WRtF5_YnJKsPmsEINekZTiYB/s1600/Kalla+Parunthu+Movie+Stills+%25286%2529.jpg



 மனம் கவர்ந்த வசனங்கள்


1. ஆம்பளை மாதிரி ஏன் விசில்  அடிக்கறே?
ஏன் பொம்பளை  விசில் அடிக்கக்கூடாதா? 


2. இது வயசுப்பொண்ணுங்க இருக்கற இடம், இங்கே வேலை செய்ய வர்றவன் சாமியார் மாதிரி இருக்கனும்.


அவ்வ்வ்வ்வ், சாமியாரா? அவங்க பொழப்புதான் சந்தி சிரிச்சுக்கிடக்கே?



3. லேடீஸ் எல்லாம் சாமி சாமின்னு கூப்பிடறாங்க.. அவன் என்னடான்னா காமி காமின்னு சொல்லிட்டு இருக்கான் 


4.  நீ புகை பிடிப்பியா? 

 புகையை எப்படிங்க பிடிக்க முடியும்?சிக்காதே? 


 நீ அவ்ளவ் அப்பாவியா? 





 கேனத்தனமான திரைக்கதையில் பல கிறுக்குத்தனமான சறுக்கல்கள்



1. அவ்ளவ் பெரிய கோடீஸ்வரர் வீட்ல  தோட்டக்காரன் , வாட்ச்மேன் யாரும் இல்லை. வீடு கூட்டறது, கண்னாடி ஜன்னல் க்ளீன் பண்றது
 எல்லாமே கோடீஸ்வரிதான் பார்த்துக்கறா.. அவ்லவ் லோ பட்ஜெட்டா? 


2. அப்பா மகள் மேல் டவுட் வந்து கார் டிரைவரை  கண்காணீப்பாளரா போட்டிருக்கா.. மக ஒரு கேப்மாரி . என்ன பண்ணனும்? காலேஜ் வரை கார்ல வந்த பின் அவனை அனுப்பிட்டு இவ டாக்சியை பிடிச்சு காதலன் வீட்டுக்கோ பார்க்குக்கோ போய் கில்மா பண்ணுனா மேட்டர் ஓவர். அதை விட்டுட்டு அந்த லூசு அந்த டிரைவரை நீ இங்கேயே இரு , நானும் அவனும் கில்மா பண்ணிட்டு வந்துடறோம், இதை அப்பா கிட்டே சொல்லாம இருக்க மாசா மாசம் ரூ 10000 சம்பளம் நான் தனியே தந்துடறேன்கறா. உஷ் அப்பா முடியல 



3. இந்தக்காலத்துல மீடியம் பட்ஜெட் அல்லது மிடில் க்ளாஸ் ஃபேமிலி காரங்களே ரூம் எடுத்து தங்கறாங்க. அவ்ளவ் பெரிய கோடீஸ்வரி ஏன் காட்டுக்குள்ளே கில்மா பண்றா? 



4. கோடீஸ்வரர் வீட்டுல எப்பப்பப்போ என்ன நடக்குது? எவ்ளவ்  பணம் சுருட்ட முடியுதுன்னு ஹீரோவே தான்   ஜி சேகரன் கிட்டே சொல்றாரு.அப்புறம் அவர் பங்கு கேட்கும்போதாவது மறைச்சிருக்கலாம். அதை விட்டுட்டு  அவரை ஏன் பகைச்சுக்கனும்?



5. ஜி சேகரன் , கிங்க்காங்க் காமெடி டிராக் படத்துக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத மரண மொக்கை. படு கேவலமா, ரம்பமா, இருக்கு. இந்த லட்சணத்துல கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம போஸ்டர்ல  ஜி சேகரன் கிங்க்காங்க் காமெடியில் கலக்கும்னு சப் அட்வர்ட்டைஸ்மெண்ட் வேற... 



6. ஃபாரீன்ல இருந்து வர்ற அக்கா என்னமோ அமெரிக்காவுல ஆம்பளைங்களே இல்லாத மாதிரி ஹீரோவை அங்கே கூட்டிட்டு போறதா சொல்றது செம காமெடின்னா அவளோட மிக்சர் பார்ட்டி புருஷன் அதுக்கும் ஓக்கே சொல்வது அதை விட கூத்து



7. கோடீஸ்வரரா இருக்கும் ஆள் தன் கிட்டே வேலைக்கு சேர்ந்த டிரைவர் வீட்டுக்கு வருவதும் , அவனை செக் பண்ண வந்தேன் என சொல்வதும்  இன்னொரு கூத்து. 



8. ஹீரோ கில்மா மேட்டர் கோடீஸ்வரருக்கு தெரிஞ்சதுமே கதை முடிஞ்ச மாதிரி. அதுக்குப்பின் தேவையே இல்லாம இழு இழுன்னு இழுத்தது மன்னிக்க முடியாத குற்றம் 



9. கோடீஸ்வரர் மனைவியா வர்ற ஆண்ட்டி கூட தேறிடும், ஆனா மகள்களா வர்ற பேரும் உவ்வே.  இயக்குநர்க்கு அழகியல் ரசனையே கிடயாதா? 





இயக்குநர் பாராட்ட வேண்டிய இடங்கள்



 கொலை தான் பண்ணனும்



 சி பி கமென்ட் - படத்துல மருந்துக்குக்கூட சீன் இல்லை. போஸ்டரைக்கூட பார்க்க லாயக்கு இல்லை.