Showing posts with label PIRIYAMANI. Show all posts
Showing posts with label PIRIYAMANI. Show all posts

Friday, September 21, 2012

சாருலதா - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4tDUZ24wqeI1wZ90oslh7ixGXOMrO7w_CWm2EVKPsRxQ2z_RPlb1qc2ykmbAnZKv2oyH-TdrCOsz5MDNzEtlSUCOQzmpSiutTxnhAsPaJU-xIkfigLyxTYvzJ19qYUSxfXUScnqPS-_k/s1600/0.jpg 

சாருவும் , லதாவும் ட்வின்ஸ்.ஒட்டிப்பிறந்த ரெட்டை சகோதரிகள்.சின்ன வயசுல இருந்தே ஒண்ணாவே வளர்றாங்க.ஒத்த ரசனை. சில காரணங்களால அவங்களை பிரிக்கலை. அப்படியே ஒட்டியேதான் இருக்காங்க.19 வயசு வரைக்கும் சரியாதான் போய்ட்டு இருந்திருக்கு.  19 வயசு ஆனதும் திடீர்னு இசை ஆர்வம் வந்து வயலின் கத்துக்க போறாங்க.. அங்கே தான் ஹீரோவும் வயலின் கத்துக்க வர்றார். 


2 பேருக்கும்  அவரை பிடிச்சிடுது.ஆனா ஹீரோ கமலோ, எஸ் ஜே சூர்யாவோ, கே பாக்யராஜோ கிடையாது . பாவம். அவர் ஒரு பொண்ணைத்தான் அதாவது சாருவை லவ்வறாரு.இது லதாவுக்கு பிடிக்கலை.காதலனை சந்திக்க போகக்கூடாதுன்னு தடை போடறா. இந்த சங்காத்தமே வேணாம், 2 பேரும் ஆபரேஷன் பண்ணி பிரிஞ்சுடலாம்னு முடிவு பண்ணிடறா சாரு. 


 ஆபரேஷன்ல ஒருத்தி உயிர் போயிடுது.லதா செத்துடறா. சள்ளை விட்டுதுன்னு  சாரு அம்மாவை அம்போனு ஊர்ல விட்டுட்டு காஷ்மீர் போய் லவ்வரோட லிவ்விங்க் டுகெதரா வாழறாங்க ( ஆனா நோ கில்மா )அம்மாவுக்கு சீரியஸ்னு தகவல் வருது.


சொந்த ஊர்க்கு போனா சந்திரமுகில வர்ற மாதிரி திகில் அனுபவங்கள்..செத்துப்போன லதா பேயா வந்து பயப்படுத்தறா.. அதுக்குப்பிறகு என்ன நடக்குது என்பதே கதை.. 


http://lh4.ggpht.com/-CCewH8xWxwg/T9dXEU_v8PI/AAAAAAAAQdM/Ry-geX6pbH0/Charulatha%252520Stills%252520%2525288%252529.jpg


கேட்க ரொம்ப சாதாரணமா இருந்தாலும் இதுல நான் சுவராஸ்யம் போய்டக்கூடாதுன்னு கலக்கலான 2 ட்விஸ்ட் மேட்டரை சொல்லாம விட்டிருக்கேன்.. ட்வின்ஸ் கதைல 2 ட்விஸ்ட்.. அடடே.. 


படத்துல முதல்ல பாராட்ட வேண்டியது பிரியாமணியைத்தான்.. ஆஹா! பருத்தி வீரன் முத்தழகு கேரக்டருக்குப்பிறகு  அவருக்கு அமைஞ்ச அல்வா கேரக்டர். வழக்கமா நாம பார்த்த அடக்க ஒடுக்கமான பிரியாமணியா குங்குமம் வெச்சு படிய தலை வாரிய ஹேர் ஸ்டைலில் பாந்தமா வர்றவர் அந்த  வில்லி கேரக்டர்ல மிரட்டிட்டார். சபாஷ்! 


 இதுக்கு முன்னால இப்படி அகம்பாவமான , ஆணவமான , மிரட்டலான, ஆண்மைத்தனமான கேரக்டரை ஜெயலலிதா கிட்டே , மன்னன் விஜயசாந்தி கிட்டே, படையப்பா ரம்யா கிருஷ்ணன் கிட்டே தான் பார்த்திருக்கோம். அவங்களை டச் பண்ணலைன்னாலும் கிட்டே வந்துட்டார்.. 


ஆர் பார்த்திபனின் முன்னாள் மனைவி சீதா டாக்டரா, சரன்யா அம்மாவா பாந்தமா நடிச்சிருக்காங்க.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqnMGlHpPsF5aIY_m-hEigQoGwXi1eWYsole_PGqvb7sDiVlOx8iilfidmTTQIVw61rtSzUb41Reo1gRDa_1l0RllFdCrlHfJv6oLJvGartoLW63X41Y9XVmwUsk6yDqxzHtl10IH1P4fw/s1600/guniguni.jpg



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. இயக்குநர் நினைச்சிருந்தா இது வாலி கதையின் உல்டா வெர்ஷன் தான் அப்டினு சமாளிச்சிருக்க முடியும், ஆனா அப்படி பண்ணாம முறையா தாய்லாந்துப்பட ஒரிஜினலான  அலோன் (ALONE)  தயாரிப்பு தரப்பு கிட்டே அனுமதி வாங்கி கதைக்கு கிரெடிட் அவங்கதான்னு ஒத்துக்கிட்டதுக்கு. ( மிஷ்கின், கே வி ஆனந்த் வகையறாக்கள் கவனிக்க ) 


2. பிரியாமணிக்கு இந்தப்படத்துல ஏகப்பட்ட காஸ்ட்யூம்ஸ்.ஆல் மாடர்ன் டிரஸ் தான். செம .. இதுக்கு முன்னால இந்த சாதனை செஞ்சவங்க பூக்களைப்பறிக்காதீர்கள் , உயிரே உனக்காக நதியா , வஸந்த் இயக்கத்தில் வந்த நீ பாதி நான் பாதி  படத்துல கவுதமி ( நிவேதா பாடல் காட்சில மட்டும்  65 டிரஸ்சாம் )


3. இடைவேளை ட்விஸ்ட்டில்  படத்தின் ட்விஸ்ட்டை சூசகமாக சொல்லும் அந்த  கண்ணாடி ஷேப்பில்  சிதறிய முத்து மணிகள் கூடுவது 



4. த்ரில்லர் பட விமர்சன மேனர்ஸ் கருதி சொல்லாமல் விட்ட அந்த 2 திருப்பு முனை காட்சிகள் 



5. பேய்ப்படம் என்பதற்காக கோரமான உருவம், ரத்தம், கசமுசா காட்சிகள் எல்லாம் வைக்காமல் மிக கண்ணியமாக படத்தை எடுத்தது


http://www.tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_83856928349.jpg



 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. த்ரில் , திகில் படங்களுக்கு காமெடி, பாடல் காட்சிகள் ஒரு பெரிய டிரா பேக். ஏன் ஓப்பனிங்க் ஷாட்ல ஹீரோயினுக்கு தேவை இல்லாம ஒரு பாட்டு?  சந்திர முகி படத்துல வடிவேல் காமெடி மேட்ச் ஆச்சு ஆனா இதுல  அந்த சின்னப்பையன் காமெடி எடுபடலை



2. அன்பே வா படத்துல எம் ஜி ஆர் தன் சொந்த பங்களாவுக்கு வந்தும் வாடகை கொடுத்து தங்கற மாதிரி சூழல், அப்போ நாகேஷ் காமெடி பண்ணுவாரு, மனோரமாவுக்கு எம் ஜி ஆர் தான் ஓனர்னு தெரியும். இந்த காமெடி டிராக் கதையோட ஒன்றி இருந்தது, ஆனா இதுல செட் ஆகலை.. பிரியாமணி எதுக்காக அப்படி நடிக்கனும்? அந்த டிராமா எதுக்கு? 



3. ஹீரோயின் ஒரு சீன்ல வாக்குவம் க்ளீனர் மூலம் வீட்டை சுத்தப்படுத்திட்டு இருக்காங்க. ஹீரோ உள்ளே வந்ததும் தன் காலால வாக்கும் க்ளீனர் ஸ்விட்சை ஆஃப் பண்றாங்க.. ஆயுத பூஜை கும்பிடறாங்க, இப்படித்தான்   பண்ணுவாங்களா? ஹீரோயின் கையால அதை ஆஃப் பண்ண மாட்டாங்களோ?


4. ஹீரோயின் அம்மா சரண்யா சீரியஸ்னு  ஐ சி யூ ல அட்மிட் ஆகி இருக்காங்க. டாக்டர் வெளீலயே பிரியாமணியை நிறுத்தி அவங்களை தொந்தரவு பண்ணாதீங்கன்னு சொல்லாம உள்ளே கூட்டிட்டுப்போய் அதே டயலாக்கை சொல்றாரு// ஆர்க்யூ பண்ணற இடமா அது? 



5. பேபி ஷாலினி சில படங்கள்ல வயசுக்கு மீறி பேசும்போது, சேட்டை பண்ணறப்போ ஒரு கோபம் வருமே ஆடியன்ஸுக்கு அந்த கோபம் இந்தப்படத்துலயும் அந்த பையன் மேல வருது.. பிஞ்சுலயே பழுத்துட்டான் போல.. 


6. ஹீரோயின் ஒரு சீன்ல காரை ரிவர்ஸ் எடுக்கறா. பின்னால நாய் உக்காந்து இருக்கு. பகல் டைம் தான்.  நாய் தூங்கலை, மயக்கம் இல்லை, ஆனா விலகலை.. கார்ல அடிபட்டு சாகுது.. அது எப்படி நாய்க்கு மனுஷனை விட கேட்கும் திறன் அதிகம் ஆச்சே? கார் சவுண்டை கேட்காம எப்படி விட்டுது? ( ரோட்ல விபத்து நடப்பது வேறு, வீட்டு கார் ஷெட்டில் அப்படி ஆகுமா? ) 


7. சரண்யா ஊர்ல தனியா இருக்காங்க.அவங்க ஹாஸ்பிடல்ல இருக்கற மேட்டரை யார் பிரியாமணிக்கு தகவல் சொல்றாங்க? ஏன்னா அந்த வீட்ல இருக்கற மத்த 2 பேரான ஆர்த்தி, அந்தப்பையன் 2 பேருக்கும் பிரியாமணி வர்ற மேட்டரே தெரியலை. 

http://www.vidikural.com/wp-content/uploads/2012/06/priyamani_002.jpg


8. ஹீரோயின் ஒரு சீன்ல ஒரு  டப்பாவை எடுத்து அதுல இருந்து கிட்டத்தட்ட 70 டேப்லட்ஸ் சாப்பிடறா.. தண்ணீர் குடிக்காமலேயே.. நம்மால 2 மாத்திரையே அப்படி சாப்பிட முடியறதில்லை.. அதுவும் ஒவ்வொண்ணா பொறுமையா சாப்பிடாம அப்படியே கொட்டிக்கறா.. 



9. சிஸ்டர்ங்க 2 பேருக்கும் பிராப்ளம் ஓக்கே. சக்களத்தி சண்டைக்காக ஆவி பயமுறுத்துது. ஏன் அம்மாவை பயப்படுத்தனும்?


10. படத்துக்கு முக்கியமான கேரக்டரே அந்த வில்லி கேரக்டர் தான். அதுக்கான ஸ்கோப்பை திரைக்கதைல எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேர்த்தாம எதுக்கு தேவை இல்லாம அந்த காமெடி போர்ஷன்.செம மொக்கை.. அதுவும் நட்பு படத்துல செந்தில் நடிச்ச 10 பைசா பைத்தியம் காமெடி டிராக் மாதிரி 1000 ரூபா எதுக்கெடுத்தாலும் லஞ்சமா கேட்பது மகா எரிச்சல் 



11. மந்திரவாதி, சஞ்சீவி வேர் , சூன்யம் எடுக்கறது இந்தக்கதைக்கு தேவையே இல்லை.. ஏன்னா இது பேய்ப்படம் கிடையாது, அந்த மாதிரி போக்கு காட்டும் ஒரு த்ரில்லர் சஸ்பென்ஸ் படம்.. அந்த மந்திரவாதி கேரக்டர் படத்தின் போக்கை கொஞ்சம் திசை திருப்புது ( அநேகமா ஒரிஜினல்ல இது இருந்திருக்காது, நீங்க சேர்த்து இருப்பீங்க?)


12. இந்த பங்களாவில் பேய் பிரச்சனைன்னு தெரிஞ்சதும் இடத்தை காலி பண்ணாம ஏன் அங்கேயே இருக்கனும்? அம்மா ஹாஸ்பிடல்ல . இவங்க வேற ஹோட்டல்ல தங்க வேண்டியதுதானே?


13. ட்வின்சை பிரிக்கும் சீன்ல ஆபரேஷன் நடக்காததுக்கு முன்பே ஒருத்தி செத்துடறா. டாக்டர் எந்த கேள்வியும் கேட்கலையே. இந்த த்ரில்லர்ல ஒரு சீன்ல கூட போலீஸே எண்ட்ரி ஆகலையே ஏன்? போலீஸ் பந்த்தா? 


14. க்ளைமாக்ஸ்ல  ஹீரோவை கட்டி வெச்சு ஹீரோயின் மிரட்றா. என்னை கட்டிக்கிறியா, உன்னை கொன்னுடவா?ன்னு. ஹீரோ பெரிய பருப்பு மாதிரி செத்தாலும் பரவாயில்லை உன்னை கட்ட மாட்டேன்கறான். அப்போதைக்கு ஓக்கே சொல்லிட்டு எஸ் ஆக பார்க்க மாட்டானா? 


15. ஹீரோவுக்கு சுய புத்தி இல்லையா? க்ளைமாக்ஸ்ல ஹீரோயினை வேண்டாமுனு சொல்லி எஸ் ஆகி வந்த பின் சரண்யா என் மகளை ஏத்துக்கோன்னு சொன்னதும் ஏத்துக்கறாரே? 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3zL5VIj_pLsQUKi3pbIB5ntsflA-UwI9quzgIBlhSudKSaxw4XouDzMRaadMAwznwW0DpKrxX6jkev8iOgXOT5cQUjmJFvYC5M8R2dciyIh7-7HdQvT_iVDnEMTGUnikP0joy2canzw8/s1600/priyamani.jpg




மனம் கவர்ந்த வசனங்கள் 


1. நம்மை மீறி நடக்கும் சில விஷயங்களுக்கு  விதி மேல பழியைபோட்டுட்டு  நாம சைலண்ட்டா இருக்கனும்


2.  என்னது? 2 வருஷமா ஒரே வீட்ல ஒண்ணா இருந்துட்டு ஒண்ணுமே பண்ணலையா? 


3. மேடம், பத்தாயிரம் ரூபா கொடுத்துட்டு ஏன் படிக்கட்டுல படுத்திருக்கீங்க, போய் உள்ளே பெட்ரூம்ல படுங்க.. 

 அடேய், நான் ஸ்லிப் ஆகி விழுந்திருக்கேன் 



4.  ரோசியா? யார் அந்த ஃபிகரு?


 அது அவ வளர்க்கும் நாய் 


5. இந்த உலகத்துல ஒவ்வொருவருக்கும்  ஒரு கவலை கண்டிப்பா இருக்கும். 


6. ட்வின்ஸ்ல ஒருத்தர் இறந்துட்டா இன்னொருத்தர் சீக்கிரம் செத்துடுவாங்கன்னு சொல்றது உண்மையா? அதே போல் செத்துப்போன ஒருத்தர் தன் ட்வின்ஸை வாழ விடமாட்டாங்களா? 



7. பொதுவா இந்த மாதிரி பேஷண்ட்ஸ் ரெக்கவர் ஆவது பேஷண்ட்ஸ் வில் பவரை பொறுத்தது



8.  கார் ஏத்தி  ரோசியை ரோஸ்ட் பண்ணிட்டாங்க 




9. நான் வேணா பாடி காட்டட்டா? 

 அய்யோ , பாடியை காட்ட வேணாம்.. பாடி காட்டுனா போதும்




10. எங்கக்காவைக்கட்டிக்கிட்டா ஒரே கல்லுல 2 பங்களா


11. உங்க எதிர்காலம் ரொம்ப பிரம்மாண்டமா அமையும்னு சொன்னியே அந்த பிரம்மாண்டம் இவ தானா? அவ்வ்வ் 



12. இந்த டிரஸ்ல நான் எப்படி இருக்கேன்?


 புலவன் மாதிரி வர்ணிக்கவா? பொறுக்கி மாதிரி சொல்லவா? 


 பொறுக்கி மாதிரி சொல்லு 


 ஒரு மரத்துப்பனை கள்ளு போல இருக்கே


 சரி, புலவன் மாதிரி சொல்லு 


தேனில் ஊறிய தேனடை மாதிரி இருக்கே. 
\


13. பொண்ணுங்களை பிக்கப் பண்ண பசங்க நாய் மாதிரி அலைவானுங்க,.ஆனா நீங்க அந்த நாயையே கிஃப்டா கொடுத்து பிக்கப் பண்ணிட்டீங்களே? 


14. நீ என்னை வெறுத்தாலும் நான் உன்னை வெறுக்க முடியாது 


15. ஜஸ்ட் 20 நாள் லவ்வுக்காக 20 வருஷ பாசத்தை கொன்னுட்டியே


16. சஞ்சீவி வேருக்கு அபூர்வ சக்தி இருக்கு. கம்பி மேல பட்டாக்கூட  கம்பி உடையும், வேர் உடையாது, நெருப்பால கூட அதை ஒண்ணும் பண்ண முடியாது 


17 . மேலே மேகத்தை பாரு என்ன தெரியுது?


 மேகம் தான் தெரியுது



 சிங்கம் மாதிரி தெரியலை? நிலாவுல பாட்டி வடை சுடற பிம்பம் தெரியறதும்
 இப்படித்தான். நம்ம மனசும் , கற்பனையும் தான் காரணம்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUFZuD3J-X9pajVKPjR1WHwXeo9K6uZ7Oz41RI2NU3Cfu4mFgmW28DBpdghUqFIoij_zP9-aLxpQ_0mFlQMVoRHcnKyAOul7pwoyUOyl96BsSrW8kNZmZl2sJLkC914pwatk-h-WsZzii6/s1600/alone-horror-2007.jpg

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 44


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - நன்று



சி.பி. கமெண்ட் - த்ரில்லர் , திகில் ரசிகர்கள் அனைவரும் பார்க்கலாம். பெண்களும் பார்க்கலாம்.. கண்ணியமான நெறியாள்கை.ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்

டிஸ்கி -சாட்டை -http://www.adrasaka.com/2012/09/blog-post_7166.html