Monday, September 03, 2012

சஹானா - ஜிகினா - கிடாவெட்டு

 
 
 காலைல கண்ணியக்கன்னி ,கற்புன்னா கிலோ என்ன விலை என கேட்கும் சஹானா பற்றி ட்வீட் போட்டுட்டு இருந்தேன்.. யார் இந்த சஹானா?னு ஒருத்தர் கேட்டார்.. நாட்ல இன்னும் எத்தனை பேர் இந்த ஜி கே இல்லாம இருக்காங்களோன்னு ஒரு ஆதங்கம்,..
 
சென்னை:பல வாலிபர்களுடன், நெருக்க மாக பழகி, அவர்களை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, நகை, பணத்துடன் மாயமான, கேரள அழகி சகானாஸ், நேற்று பெங்க ளூருவில் கைது செய்யப்பட்டார். தற்போது, ஆறு மாத கர்ப்பிணியாக உள்ள அவரின் குழந்தைக்கு, தந்தை யார் என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது.







கேரள மாநிலம், பத்தனம் திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஷானு வேல் என்ற சகானாஸ், 25. சென்னை உட்பட, பல இடங்களில், ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக பழகி, அவர்களை ஏமாற்றி, நகை மற்றும் பணத்துடன், இவர் மாயமானதாக, சென்னை மாநகர போலீசில், ஏராளமானவர்கள் புகார் செய்தனர்.


அடையாறு உதவி கமிஷனர் மோகன்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார், பாதிக்கப்பட்ட வாலிபர்களை, நேரில் அழைத்து விசாரித்தனர்.



அதில், புளியந்தோப்பைச் சேர்ந்த பிரசன்னா என்ற வாலிபருடன் மட்டும், சகானாஸ் அலைபேசியில், தொடர்ந்து பேசி வந்த விவரம் தெரிய வந்தது. ஒரு கட்டத்தில், அலைபேசியில் பேச, பணம் இல்லாமல் தவித்த சகானாசின் அலைபேசிக்கு, சென்னையில் இருந்த பிரசன்னா, "இ - ரீசார்ஜ்' மூலம் பணத்தைச் செலுத்தினார்.அலைபேசி கோபுரம் மூலமாக, அவர் பெங்களூருவில் மறைந்திருப்பது, போலீசாருக்கு தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார், அவரது அலைபேசி இயங்கிய பகுதியில் உள்ள விடுதிகளில் விசாரித்தனர். அப்போது, பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் நின்றிருந்த சகானாசை, நேற்று முன்தினம் இரவு, போலீசார் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர்.



சகானாஸ், போலீசாருக்கு அளித்த பரபரப்பு வாக்குமூலத்தின் முழு விவரம்:கேரள மாநிலம், பத்தனம் திட்டா மாவட்டம், கலஞ்சூர் போஸ்ட், புத்தன் வீடு என்ற பகுதியில், வசித்து வந்தேன். என் தாயின் நடத்தை சரியில்லாததால், தந்தை இஸ்மாயில் எங்களை விட்டு விலகினார்.நான், 10ம் வகுப்பு படித்த போது, கேரளாவைச் சேர்ந்த சித்திக் என்பவருடன், திருமணம் நடந்தது. படிப்பை தொடர்ந்து, பிளஸ் 2 முடித்தேன். அதன்பின், சித்திக் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தேன்.


 சித்திக்குடன் குடும்பம் நடத்தியதில், ஒரு பெண் குழந்தை பிறந்தது; அக்குழந்தைக்கு தற்போது, 10 வயது ஆகிறது.சித்திக்கை பிரிந்து, அனாதையாக இருந்த நான், கேராளாவில் உள்ள துணிக் கடையில், வேலை செய்தேன். 2005ம் ஆண்டு, பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்து, சென்னை வேப்பேரியில் உள்ள, சம்சுதீன் என்பவரின் சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்ந்தேன்.விழா ஒன்றில், சினிமா இணை இயக்குனர் ராகுல் என்பவருடன், பழக்கம் ஏற்பட்டது. சினிமா நடிகை போல் இருப்பதாகக் கூறிய ராகுல், என்னை சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறினார். அதனால், சூப்பர் மார்க்கெட் வேலையை உதறி விட்டு ராகுலுடன் சுற்றினேன்.



திருச்சியை அடுத்த வேப்பூரில், 2007ம் ஆண்டு, ராகுலை திருமணம் செய்து கொண்டேன். சென்னை வடபழனியில் நடந்த, எங்களது திருமண வரவேற்பில், சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். ராகுலுடன் ஆறு மாதம் குடும்பம் நடத்திய பின், கருத்து வேறுபாட்டால் பிரிந்தேன்.அதன் பின், மீண்டும் வேப்பேரியில், சம்சுதீனின் சூப்பர் மார்க்கெட்டிலேயே, வேலைக்கு சேர்ந்தேன். அவருடன் நெருக்கமாக பழகியதால், என்னை முழுமையாக நம்பினார். சென்னையில் வீடு வாங்க வேண்டுமெனக் கூறி, சம்சுதீனிடம் இருந்து, 1.85 லட்ச ரூபாய் வாங்கினேன்.பின், அவரிடம் இருந்து விலகி, பல வாலிபர்களுடன் பழகி, அவர்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்கி, ஏமாற்றினேன்.


என்னால் பாதிக்கப்பட்ட வாலிபர்கள், ஒருவருடன் ஒருவர் பேசி, என் மோசடியின் பின்னணியை, தெரிந்து கொண்டனர்.கடந்த மாதம் 21ம் தேதி, திரு வொற்றியூர் சரவணன், அடையாறு சரவணன், தி.நகர் ராஜா ஆகியோர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், என் மீது மோசடி புகார் கொடுத்தனர். அச்செய்தி, பத்திரிகைகளில் வெளியானவுடன், முகலிவாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், புளியந்தோப்பைச் சேர்ந்த பிரசன்னா ஆகியோர், திருமண போட்டோ ஆல்பத்துடன், கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து விட்டனர்.



ஹெல்மெட் அணிந்து



இதனால், போலீசார் என்னை தேடத் துவங்கினர். சென்னையில், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து, சுற்றிக் கொண்டிருந்த நான், வேலூரில் உள்ள, தோழி பிரியாவின் வீட்டிற்குச் சென்று பதுங்கினேன். அவரின் உதவியுடன் ஆந்திரா சென்றேன்; அங்கிருந்து, பெங்களூரு சென்று பதுங்கினேன்.பிரசன்னா மட்டும், என்னுடன் தொடர்பில் இருந்தார். இவ்வளவு பிரச்னைக்கு பிறகும், பிரசன்னா என்னை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக, பேட்டி அளித்திருந்ததால், அவருடன் நம்பிக்கையாக பேசினேன்.ஆனால், அவர் பெங்களூருவில் என் இருப்பிடத்தை காட்டிக் கொடுத்து, என்னை போலீசில் சிக்க வைத்து விட்டார். இப்போது, நான் ஆறு மாத கர்பிணியாக உள்ளேன். என் குழந்தைக்கு பிரசன்னா தான் தந்தை. ஆனால், அவர் அதை ஏற்க மறுக்கிறார்.இவ்வாறு, கேரள அழகி சகானாஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.




சிறையில் அடைப்பு



போலீஸ் விசாரணைக்கு பின், சைதாப்பேட்டை, 9 கோர்ட்டில், சகானாஸ் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு செல்வதற்கு முன், பிரசன்னாவுடன் அவர் பேச முயன்றார். ஆனால், "என்னைத் தவிர வேறு ஆண்களுடன், சகானாஸ் பழகியுள்ளார்; அதனால், அவரது பேச்சை நம்ப முடியாது. சகானாசை மருத்துவச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்' எனக் கூறி, பிரசன்னா பேச மறுத்து விட்டதாக, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.



நிர்வாண படம் எடுத்து மிரட்டலா?




போலீசாருக்கு சகானாஸ் அளித்த வாக்குமூலத்தில், "சென்னையில் நான் வேலை செய்த தனியார் நிறுவன நிர்வாகி, என்னிடம் நெருங்கி பழகினார். அவருக்கு நான் இடம் கொடுத்த போது, அதை கேமராவில் பதிவு செய்து வைத்து, என்னை மிரட்டி வந்தார்,' என்ற, பரபரப்பு தகவலை கூறியுள்ளார். தனியார் நிறுவன நிர்வாகியிடம், விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.



வீழ்ந்தவர்கள் பட்டியல் வெளியிட்டார் சகானாஸ் :



தனது காதல் மொழிக்கு மயங்கி, ஏமாந்தவர்கள் குறித்து, போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், சகானாஸ் தெரிவித்த பட்டியல்:
*அலைபேசி விற்பனை நிறுவனத்தில் வேலை பார்த்த, அடையாறைச் சேர்ந்த சரவணனுடன், போனில் பேசி, அவரை காதலிப்பதாகக் கூறினேன். வெறும் கழுத்துடன் இருப்பதால், தோழியின் திருமணத்திற்கு செல்ல வேண்டுமென கூறி, அவரிடம் இருந்த, இரண்டு சவரன் செயினை வாங்கிச் சென்றேன்; அத்துடன் அவரை, "கட்' செய்து விட்டேன்.



*திருவொற்றியூரில் அலுமினிய பேக்டரியில் வேலை செய்து வந்த சரவணனுடன் பழகி, வழக்கறிஞர் படிப்புக்கு உதவி செய்யுமாறு கேட்டேன். என் பேச்சை முழுமையாக நம்பிய அவர், 1.50 லட்ச ரூபாய் வரை கொடுத்தார். ஒரு கட்டத்தில், வழக்கறிஞராக உள்ள அவரது நண்பர் மூலம், பார் கவுன்சிலில் விசாரித்து, உண்மையை தெரிந்து கொண்டார்.


*புளியந்தோப்பைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை, திருமணம் செய்து குடும்பம் நடத்தினேன்.


*சுரேஷ் வீட்டிற்கு, இரண்டு தெரு தள்ளி, எனக்கு முன்பே அறிமுகமான, பிரசன்னா வசித்து வந்தார். அவரை ஒரு நாள் மடக்கி, என் கையில் கீறி ரத்தம் வர வைத்தேன்; அதை பார்த்த பிரசன்னா பயந்து விட்டார். அவரிடம், "என்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், தற்கொலை செய்து கொள்வேன்' என, மிரட்டினேன். அவர் மீது, உண்மையான அன்பு வைத்திருப்பதாக நினைத்த பிரசன்னா, என்னை, திருவள்ளூரில் உள்ள ஒருகோவிலில், திருமணம் செய்து கொண்டார்.


*அதன்பின், போரூர், முகலிவாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டனை, திருமணம் செய்து கொண்டேன். அவருடன், சில மாதங்கள் குடும்ப நடத்தினேன். ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு படிக்க விரும்புவதாகக் கூறி, சைதாப்பேட்டையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கினேன். பின், அங்கிருந்து வேறு இடத்துக்கு மாறிவிட்டேன்.


*தி.நகர் ரங்கநாதன் தெருவிற்கு சென்ற போது, பிளாட்பாரத்தில், துணி வியாபாரம் செய்து கொண்டிருந்த, ராஜா என்பவருடன் நெருக்கமாக பழகினேன். அனாதை குழந்தைகளுக்கு, துணி மற்றும் அன்பளிப்பு பொருட்கள் கொடுக்க வேண்டுமென கூறி, அவரை ஏமாற்றி பணத்தைக் கறந்தேன்.

நன்றி - தினமலர்


1. சப்ப பிகர் சஹானா - 3000 FOLLOWERS இருக்கறவங்களை எல்லாம் விட்டுட்டு ஜஸ்ட் 50 பாலோயர்ஸ் " வெச்சிருக்கும்" என்னை ஏன் போலீஸ் விசாரிக்குது?









------------------------





2. ஜட்ஜ் - 50 பேரை எப்படி உன்னால் மேரேஜ் பண்ணிக்க " முடிஞ்சுது"?







 சஹானா - இன்னும் முடியல.கண்ணா இது ஆரம்பம்தான்







------------------------





3. யார்ப்பா அந்த சஹானா? நான் விஸ்வரூபம் ரிலீஸ் பண்றதுக்கு முன்னாடி அது விஸ்வரூபம் எடுத்துடுச்சே?- கமல் ?









--------------------------





4. ட்வெண்ட்டி ட்வெண்ட்டி மேட்ச்னாக்கூட 40 தானே வருது ? 50 க்கு கணக்கு உதைக்குதே# சஹானா கில்மா பாறைகள்







------------------





5. கல்யாண மாலை பிரமிடு நடராஜன் பெருமிதம். சஹானாவின் 50 மேரேஜையும் நாங்கள் தான் நடத்தினோம்.அண்ணே ஒரு விளம்பரம்









-----------------------





6. சஹானாவை விசாரிக்க 50 பேர் கொண்ட தனி போலீஸ் படை நியமிப்பு.#சஹானா குதூகுலம்





---------------------



7. மேத்ஸ் மிஸ் - இதோ இந்த 1 ல 50 போகாது.அதனால பக்கத்துல கடன் வாங்கறோம்.







லொள் மாணவன் - ஒரு மாசம் வெயிட் பண்ணுங்க. போயிடும்







----------------------------





8. சஹானா ,நான் தான் உன்னை விசாரிக்க வந்திருக்கும் இன்ஸ்பெக்டர்.லாக்கப் ரூம்க்கு வா .









 சஹானா - பெட்ரூம்னா உடனே வருவேன்







-------------------------



9. சஹானா கர்ப்பமா? மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு # பொம்பள நர்சை அனுப்புங்கப்பா.பாப்பா ஸ்கோரை ஏத்திக்கபோகுது









--------------------------





10. ரியாஸ் - ஏம்மா போன மாசம் தானே காப்பர் டி பொருத்திட்டு போனே?





 சஹானா - அது போன மாசம்,இது இந்த மாசம் # கிழிஞ்சுது கிருஷ்ணகிரி







-------------------------------



11. நான் பாஞ்சாலி போல் 10 மடங்கு .எனவே சஹானா பாரதம் எழுத வேண்டும் -ஸஹாணா வேன்டுகோள் டூ கில்மா ரைட்டர்ஸ்











-------------------------





12. 365 லட்சியம் .50 நிச்சயம் - சஹானா பாறைகள் .நோ உறைகள்









------------------





13. fifty kg தாஜ்மஹால் ஆக நினைச்சேன் முடியல.குண்டானேன்.பின் உண்டானேன்.50 புருஷன்ஸ் தங்கும் திருமதி ”நாய்”க்கர் மஹால் ஆகிட்டேன்- சஹானா









-------------------------------



14. 50 : 50 பிஸ்கெட் சாப்பிட்டேன்.தவறு என் மீது இல்லை - சஹானா அதிரடி வாக்குமூலம். ஃபிஃப்டி ஃபிஃப்டி பிஸ்கட் கம்பெனி ஓனர் அதிர்ச்சி













---------------------------------





15. என் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பிரசன்னா தான் அப்பா -சஹானா # 26 லெட்டர்ஸ் தாம்மா இருக்கு இனிஷியல் வைக்க.50 டாடீஸ.வாட் டூ டூ?்


 --------------------
16. மாணிக்கம் - >>>நான் ஆறுமாத கர்ப்பிணியாக உள்ளேன். இந்த குழந்தைக்கு பிரசன்னாதான் அப்பா >>>
 
 இது எதோ மருதமலை படத்தில் வரும் வடிவேல் காமெடி போல தெரியுது. வடிவேல்: நாய் சேகர், மாட்டு ரவி, நாகபாம்பு.............அனிமல்ஸ் பேரா அடைமொழியா வச்சுருக்கானோ வடிவேல் பெண்மணியிடம்: சரி உனக்கு பிள்ளை பொறந்த இதுல யார அப்பன்னு சொல்லுவ............அப்படின்னு சொல்லிட்டு எல்லார் பேரையும் சீட்டுல எழுதி குலுக்கி போட்டு தேர்ந்தெடுப்பாங்க. 
 
அதுக்குதான் நான் இருக்கனேன்னு இன்னொருத்தன் வருவான். பெண்மணி: ஏட்டையா உங்க மீசைய பார்த்ததுல இருந்து எனக்கு ஆசையா இருக்கு...............உங்க பேரையும் சேர்த்து குலுக்கி போடுங்க..........................அந்த காமெடி இப்ப உண்மையாயிடுச்சு..............ஒரே குஷ்டமப்பா.........இது கஷ்டமப்பா.......இளைஞர்களே இந்த கேசு நடக்கும் பக்கமா போயிடாதீங்க..க.....உங்க பேரும் குலுக்கலில் சேர்ந்தாலும் சேரலாம்.









--------------------------

 

பெண்களுடன் அதீத சகவாசம் வைப்பவருக்கு எச்சரிக்கை!

1.எதைக் காட்டி ஏமாற்றப்படுவதையும் தாங்கிக் கொள்ளலாம்..ஆனால் சீன் இருக்குன்னு போஸ்ட்டர் ஒட்டி ஏமாற்றப்படுவதை ஒரு போதும் தாங்க முடியாது --



--------------------------


2. டி டி ஆர் = ஜஸ்ட் ரயில் கண்டக்டர்தான் # ஆனா என்னமோ கலெக்டர் மாதிரி சீன் போடறாங்களே? அடேய்



--------------------------



3. சார்.டைவர்ஸ் லோன் வேணும்.கொடுப்பீங்களா? 




போன மாசம் தானே மேரேஜ் லோன் வாங்குனே?


 அதை அடைக்கத்தான் இது் 


-------------------------


4. டாக்டர்.எனக்கு கண்டகண்ட கனவா வருது. 



யூ மீன் ஆல்ரெடி கண்ட கனவு?யூ வாண்ட் எ நியூ @டெயிலி 




--------------------------


5. எல்லா பெண்களுக்கும் அழகு தரும் செலவில்லாத எளிய நகை புன்னகை # ஹி ஹி



----------------------------



அடங்கொன்னியா பார்ட் - 117


----------------------------
· ·



6. எதிர்க்கட்சித்தலைவருக்கு பி நா வா சொல்ல வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூட நம் சி எம் முக்கு இல்லை - கேப்டன் ஆவேசம் 



-------------------------


7. மகா உத்தமியாக தன்னை காட்டிகொள்ளும் பெண்களே ஆண்களுக்கு மிக எளிதாக நடத்தை கெட்டவன்் பட்டத்தை வழங்கிவிடுகிறார்கள்



---------------------


8. வறட்டுப் பிடிவாதம் பிடிப்பதற்கும்,முரட்டுப் பிடிவாதம் ் பிடிப்பதற்கும் உதாரணம் நீயும், நானும்தான் 


------------------------------


9. சீதை ஏன் ராமனுடன்காட்டுக்குபோனாள்?



COT க்கு போக வழி இல்லாததால் 




----------------------


10. டாக்டர் ரியாஸ்.டெலிவரி பார்க்கும்போது சில்மிஷம் செஞ்சீங்களாமே? 



யார் சொன்னது? பிறந்த குழந்தைதான் சொல்லுச்சு # பிறந்த குழந்தை பேசியது வதந்தி எதிரொலி




------------------------






11. பெண் தனியா சிரிச்சா ஒரு இ வா சிக்கிட்டான்னுஅர்த்தம், ஆண் தனியா சிரிச்சா ஜிகிடி கிட்டே சிக்கிட்டான்னு அர்த்தம் ! -- 


---------------------


12. பாம்பு புத்துக்குள்ளே கையை விட்டவனும் ஜன்னல் வெச்ச ஜாக்கெட்ல பார்வையை விட்டவனும் காயம் படாம தப்பிச்சதில்ல 



-----------------------


13. எந்த மிருகமும் எதிர்காலத்துக்காக வேட்டையாடி சேமித்து வைப்பதில்லை... மனிதனைப் போல.! -ஏன்னா அனிமல் பேங்க் இன்னும் ஓப்பன் ஆகல 




------------------------


14. அதிகமாக ஆபீஸ் மீட்டிங்கில் கலந்துகொள்பவருக்கு ஓ சி பிஸ்கெட் லபக்குவது எப்படி என்ற வித்தை தெரிந்திருக்கும் 



---------------------


15. ஹாசரே குழுவில் நக்சல் உள்ளனர்-சுப்ரமணியசாமி# ஆம்,நக்மா குடும்பமும் எங்கள் ஜோதியில் ஐக்கியம் - அன்னா ஹசாரே ஒப்புதல் 



------------------------





16. நிலவுக்கு போனது ஆம்ஸ்ட்ராங்ஆ இருக்கலாம் நான்நிலாவை கண்டதென்னவோ எஸ் ஜே சூர்யா மூலம்தான்! 



---------------------


17. சமுத்திரக்குமாரி -கடல் கன்னி.. இரண்டுக்கும் என்ன #வித்தியாசம்? 




ச கு = கடலில் குடி இருக்கும் பெண்,க க = இடைக்கு கீழ் மீன் வடிவம்- 




----------------------



18. எப்பவும் அண்ணனை விட தம்பிக்குதான் லக் ஜாஸ்தி 1,சாருஹாசன் ,கமல் 2 சூர்யா ,கார்த்தி 3, ராம்குமார் ,பிரபு 4,ராஜூசுந்ரம்,பிரபு தேவா 



--------------------------


19.சென்னை சாலையில் நடக்கும் பெண்கள் 80% பேர் வாக்மேன் கேட்டுக்கொண்டோ ,செல் கடலையுடனோதான் நடக்கிறார்கள் # கணக்கெடுப்பு 



----------------------


20. லாஸ் ஏஞ்சல்  என்றதும் பெண்களுடன்  அதீத சகவாசம் வைப்பவருக்கு பணம், காலம் LOSS தான் என்பது நினைவு வந்தால் நீ விழிப்புணர்வு உள்ளவன்



----------------------------



Sunday, September 02, 2012

நீர் மின்சக்தி திட்ட ஒதுக்கீட்டில் முறைகேடு அம்பலம்!

நீர் மின்சக்தி திட்ட ஒதுக்கீட்டிலும் முறைகேடு அம்பலம்! 

Posted Date : 10:34 (01/09/2012)Last updated : 10:36 (01/09/2012)


 நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை தொடர்ந்து, நீர் மின்சக்தி திட்டங்களை  ஒதுக்கீடு செய்ததிலும் முறைகேடு நடைபெற்றிருப்பது, தலைமை கணக்கு தணிக்கையாளர்  (சி.ஏ.ஜி.)அறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

நிலக்கரி சுரங்கங்களை ஏலம்விடாமல், நியமன முறையில் ஒதுக்கீடு செய்ததால்  அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட  தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 


இந்த விவகாரத்தினால் ஏற்பட்ட அமளி ஓய்வதற்குள் மற்றொரு முறைகேட்டையும்  சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களில் நீர் மின்சக்தி ஆற்றல்  விரிவாக்கம் செய்வது தொடர்பான தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கை,  நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையில்,"மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் 2007-12  காலக்கட்டத்தில் 11 ஆயிரத்து 813 மெகாவாட் மின்சாரத்துக்கு அதிகமாக கூடுதல்  மின்உற்பத்தி செய்ய வேண்டும் என்று முதலில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நீர் மின் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தவறான கணக்கீடு மற்றும்  தவறான திட்டமிடல் காரணமாக இலக்கினை அடைய முடியாமல் போய் விட்டது.

மாநில அரசுகளுடன் கலந்தாலோசனை செய்யாமல், பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள்  திட்டங்களை தீட்டி உள்ளனர். அதனால் திட்டமிட்டபடி உரிய பலனை அடைய  முடியவில்லை. இதனால் 11 ஆயிரத்து 813 மெகாவாட் நீர் மின்சக்தி உற்பத்தி செய்ய  வேண்டும் என்ற இலக்குக்கு பதிலாக 6 ஆயிரத்து 794 மெகாவாட் மின்சார உற்பத்தி  என்கிற அளவுக்கு இலக்கு குறைக்கப்பட்டுள்ளது.

முதலில் நிர்ணயித்ததைவிட 42 சதவீதம் குறைத்து, மாற்றியமைக்கப்பட்ட  இலக்கையாவது அடைய முடிந்ததால் என்றால் அதையும் சாதிக்க முடியவில்லை.

நீர் மின்சக்தி உற்பத்தி விரிவாக்கத்துக்கான சுற்றுச்சூழல் ஒப்புதலை அளிக்க, ஆய்வு  நடத்துவதற்கு தேசிய நீர்மின் கழகம் 49 மாதங்கள் எடுத்துக்கொண்டுள்ளது. இது  மட்டுமல்ல, ஆய்வு அறிக்கையை சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பதில்  மேலும் 11 மாதங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் இருந்து குறித்த அறிவுரைகள் வந்த பின்னரும், அருணாச்சல  பிரதேசத்தில்,பிரம்மபுத்ரா படுகையில்,சியாங்க்,சுபான்சிரி பன்னோக்கு திட்டங்களை  சர்வே செய்து,ஆராய்ந்து அறிந்து,செயல்படுத்துவதற்கான சிறப்பு நோக்க அமைப்பினை   மத்திய மின்துறை அமைக்கவே இல்லை.

தேசிய நீர்மின் கழகம் முதலில் 6 திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு ஒதுக்கீடு  செய்துள்ளது.அவற்றில் 2 திட்டங்களை குறைந்த எண்ணிக்கையிலான டெண்டர்களைப்  பெற்று,அருணாச்சல பிரதேசத்தில் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இரண்டு திட்டங்களை தேசிய நீர்மின் கழகம் தனது சொந்த கூட்டு நிறுவனத்துக்கு  எடுத்துக்கொண்டுள்ளது.ஒரு திட்டம் தேசிய அனல்மின் கழகத்துக்கு தரப்பட்டுள்ளது.

அந்த வகையில், நீர் மின்சக்தி திட்டங்களை ஒதுக்கீடு செய்வதில்,ஒளிவுமறைவற்ற  தன்மை பின்பற்றப்பட வேண்டும்,போட்டியை ஏற்படுத்த வேண்டும் என்ற இந்திய அரசின்  நீர்மின் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படவில்லை.

மத்திய மின்துறையின் சிறப்பு நோக்க அமைப்பிடமிருந்து தேசிய நீர்மின் கழகத்துக்கும்,  தனியார் நிறுவனங்களுக்கும்,கூட்டு நிறுவனங்களுக்கும்,தேசிய அனல்மின் கழகத்துக்கும்  ஜனவரி 1999-ம் ஆண்டு 5 நீர்மின் திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.12 வருடங்கள்  கடந்த நிலையிலும்,அவை மின்உற்பத்தியைத் தொடங்கவில்லை.

சத்யம் ராமலிங்க ராஜுவின் மாய்டாஸ் நடத்துகிற எச்ஐவி நிறுவனத்துக்கு, ஏல ஆவண  விற்பனையை முடிவுக்கு கொண்டுவந்த பின்னரும் சலுகை காட்டப்பட்டுள்ளது.

நீர்மின் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தாமதம்,திட்டச்செலவு அதிகரிக்க  காரணமாகி உள்ளது.

4 பொதுத்துறை நிறுவனங்களின் 16 நீர்மின் திட்டங்களை அமல்படுத்துவதற்கு  அனுமதிக்கப்பட்ட ரூ.30 ஆயிரத்து 5 கோடி என்ற அளவிலான திட்டச்செலவினம்  ரூ.44 ஆயிரத்து 712 கோடியாக அதிகரித்துள்ளது. முடிவு அடைந்துள்ள 7  திட்டங்களில்,திட்டச்செலவினம் 53 சதவீதத்தில் இருந்து 148 சதவீதம் வரை  அதிகரித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. 
நன்றி - விகடன்

அறிமுகப் படத்தில் உள்ளம் கொள்ளைகொண்ட அழகிகளின் பேட்டி

அறிமுகப் படத்தில் உள்ளம் கொள்ளைகொண்ட அழகிகளின் பயோடேட்டா இங்கே.... 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkwtg3hEyQ6Q8bTfrkvpKK5lxEedoBskAzJuhql8EDeuonnDWS5O4KhegY_xXvUjmTm51fzsZHsY2yPio032uhsu1gwqQIm2hX2-rVH2Nsj88Cz4idFypSjYjc1sQwiqurxVyrHbYk3iDg/s1600/Manisha+Yadav+at+Vazhakku+Enn+189+%25284%2529.jpg

'வழக்கு எண் 18/9’-ன் மனீஷா பெங்களூரு கிளி! 

''சமீபத்திய சந்தோஷம்?'' 


'' 'வழக்கு எண் 18/9’ படம் தெலுங்கிலும் ரிலீஸ் ஆச்சு. அந்தப் பட புரொமோஷனுக்காக ஆந்திரா போனப்போ, அங்கே தமன்னாவைப் பார்த்தேன். 'பாலாஜி சக்திவேல் சாரோட 'கல்லூரி’ படம்தான் எனக்குப் பெரிய பிரேக் கொடுத்தது. அவர் படத்துல நடிச்சா, சீக்கிரமே முன்னுக்கு வந்துடலாம். நல்லா பெர்ஃபார்ம் பண்ணுங்க’னு வாழ்த்தினாங்க. மறுநாளே சுசீந்திரன் சார் இயக்கத்தில் 'ஆதலால் காதல் செய்வீர்’ படத்துக்கு கமிட் ஆனேன். அப்புறம் ஒரு தெலுங்குப் பட வாய்ப்பும் வந்திருக்கு!''



'' 'வழக்கு எண்’ படத்தில் கஷ்டமான சீன்?'' 


''அதுல என்னை ரொம்பக் கஷ்டப்படுத்துற ஹோம் வொர்க் எதுவும் இல்லை. என் வயசுப் பொண்ணுங்க எப்படி இருப்பாங்களோ, அதை அப்படியே பண்ணேன். ஆனா, நான் சைக்கிள்ல போகும்போது கார் வந்து வேகமா ஆக்சிடென்ட் பண்ற சீன்லதான் ரொம்பவே பயந்துட்டேன். அப்போ நான் பயந்து பதறி நின்னதை நினைச்சா, இப்பவும் சிரிப்பு வருது!''


''ரோல்மாடல்?'' 


''ஜோதிகா!''



அத்வைதா.. 'கொண்டான் கொடுத்தான்’  விழி அழகி! 

http://cinema.lankasri.com/photos/full/actresses/others/advaitha12.jpg

''நடிகை ஆனது எப்படி?'' 


''கிளாசிக்கல் டான்ஸ், ஃபோக், ஃப்ரீ-ஸ்டைல், மோகினி ஆட்டம்னு அத்தனையும் அத்துப்படி. தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டா அஞ்சு வருஷம். ரோட்ல போனா, என்னைப் பார்க்கிற பசங்க கமென்ட்ஸ் அடிக்காம இருக்க மாட்டாங்க. இவ்வளவு தகுதிகளை வெச்சுக்கிட்டு நடிக்க வராம என்ன பண்றதாம்!'


''பியூட்டி டிப்ஸ்?'' 


''வெந்நீர் அதிகம் குடிப்பேன். நல்ல சன் ஸ்க்ரீன் லோஷன் பயன்படுத்துவேன். தினமும் பேஸிக் எக்சர்சைஸ், டென்ஷனா இருந்தா சாக்லேட். அவ்வளவுதான்!''


''சினிமா ஃப்ரெண்ட்?'' 


''சூப்பர்மேன் இளவரசு! ’கொண்டான் கொடுத்தான்’ ஷ§ட்டிங்ல குழந்தை மாதிரி என்னைப் பார்த்துக்கிட்டார். எந்தப் பிரச்னையோட போய் நின்னாலும், சுலபமாத் தீர்த்துவெச்சிடுவார்!''


''ஹீரோயின் போட்டி பலமா இருக்கே? சமாளிப்பீங்களா?'' 



''நான் மத்தவங்களைப் போட்டியா நினைக்கல. எனக்கு நான்தான் போட்டி!'



'ராட்டினம்’ ஸ்வாதி கேரள மோகினி! 

''ஸ்வாதி வரலாறு?'' 


'’திருச்சூர். ப்ளஸ் டூ. ஒரு தம்பி. மத்தபடி வரலாறு இனிமேதான் படைக்கணும்!''


''சினிமாவுக்காகப் பட்ட கஷ்டம்?'' 


''திருச்செந்தூர் கோயில்ல முதல் சீன். நானும் ஹீரோ லகுபரனும் பேசுறது, நடக்குறது, விளையாடுறதுனு மான்டேஜ் ஷாட்ஸ்தான். அதெல்லாம் டக் டக்னு டேக் ஓ.கே. ஆகவும் 'ஐ.... சினிமா ஈஸி’னு நினைச்சுட்டேன். மறுநாள் அம்மா அடிக்கி றப்போ, நான் அழுவுற சீன். ஆனா, அழுகையே வரலை. அப்புறம் நிஜமாவே அடிக்கச் சொல்லிட்டாங்க. பளார்னு விழுந்த அறையில், நிஜமாவே அழுதேன்!''



''கலகலன்னு பேசுறீங்க... ஃப்ரெண்ட்ஸ் ஜாஸ்தியோ?'' 


''அய்யோ... படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடி நான் செம சைலன்ட். வீட்லயே அதிகம் பேச மாட்டேன். யூனிட் ஆட்களோட பேசிப் பேசி வாயாடி ஆகிட்டேன். படபடன்னு நான் பேசுறதைப் பார்த்து ஃப்ரெண்ட்ஸே 'நீயாடி?’னு ஆச்சர்யப்படுறாங்க!''


http://moviegalleri.net/wp-content/gallery/pathirama-pathukkunga-swathi-hot-pics/pathirama_pathukkunga_actress_swathi_stills_9083.jpg


கும்பகோணம் -கோயில் சொத்துக்கள் கோடிக்கணக்கில் மோசடி

ஒப்பிலியப்பன் நகை அரோகரா!


காரணமானவர்களைக் காப்பாற்றுகிறார்களா?

பலே திருட்டு அம்பலம்


ஒரு கோயில் கொள்ளை மெதுவாக மறக்கப்பட்டது. இப்​போது மறைக்கப்படும் கொடுமை நடப்​பதாகச் செய்திகள் வருகின்றன!


108 வைணவத் திருத்தலங்களில் புகழ்பெற்றது கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயில். தொன்​மையான இந்தக் கோயில் நகைகளைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே, மோசடி செய்திருப்பதுதான் திடுக்.



கடந்த 2008-ம் ஆண்டு பெருமாள் மற்றும் தாயாருக்கு இருப்பதுபோலவே மார்க்கண்டேயருக்கும் தங்கக் கவசம் செய்ய முடிவெடுத்தார்கள். அதற்காக கோயில் இருப்பில் இருந்த நகைகளோடு பாரம்பரியம் மிக்க அரிய வகையான தங்க, வைர நகைகளையும் சேர்த்து உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றியதாகக் கணக்குக் காட்டினார்கள். 


அதில் தில்லுமுல்லு நடந்திருப்​பதாக அப்போது புகார் கிளம்பியது. விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கோயில் செயல் அலுவலர் விஜயகுமார், நகைகள் சரிபார்ப்புப் பிரிவின் மயிலாடுதுறை துணை ஆணையர் இளம்பரிதி, திருப் பணிகள் பிரிவின் சென்னை இணை ஆணையர் திருமதி ஹரிப்பிரியா ஆகியோர் மீது இப்போது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.



எப்படி ஊழல் நடந்தது என்று அறநிலையத் துறை அதிகாரிகளிடம் பேசினோம். ''மார்க்கண்டேயருக்குத் தங்கக்கவசம் செய்ய அறங்காவலர் குழு முடிவு செய்ததும், அதற்காகக் கோயிலில் இருக்கும் தேவை இல்லாத நகைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று திட்டமிட்டனர். அதில்தான் தங்கள் கைவரி சையைக் காட்டிவிட்டனர்.

 தேவைஇல்லாத நகைகளோடு பெருமாளின் நித்யபடிக்கு என்று வைத்திருந்த அரிய, பழைமையான நகைகளையும் அதில் சேர்த்துவிட்டனர். இரட்டைவடச் சங்கிலி, பொன்சங்கிலி, ஒற்றைவட வரிமணிமாலை, திருமாங்கல்யம் குண்டு, சரடு, பொன் அரசலங்கை, மாங்கா மாலை, காசுமாலை, செண்பகப் பூ மாலை, பொன்லட்சுமி டாலர் ஆகிய மிக முக்கியமான திருவாபரணங்கள் அதில் சேர்க்கப்பட்டு வீணடிக்கப்பட்டன.



அடுத்து, அழுக்கு அரக்கு நீக்கி சுத்தம் செய்வதில் பெரும் ஊழல் செய்திருக்கிறார்கள். அதாவது, மொத்தம் உள்ள 7,191 கிராம் பொன்னை அழுக்கு அரக்கு நீக்கிய பின் 6,191 கிராம்தான் இருந்ததாக ஆவணப்படுத்தி உள்ளார்கள். ஒரு கிலோ தங்கம் இழப்பாகக் காட்டி இருக்கிறார்கள். அடுத்து, நகைகளில் இருந்து எடுக்கப்பட்ட கற்களிலும் மோசடி செய்தனர். அந்த நகைகளில் இருந்து எடுக்கப்பட்ட முத்து, வைரம் போன்ற விலை மதிப்புள்ள 1,895 கற்களையும் தரவாரி​யாகப் பிரித்து வகைப்படுத்தாமல் மொத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

 அதில் விலை மதிப்புள்ள கற்கள் அனைத்தும் மாற்றப்பட்டு அதற்குப் பதிலாக போலியான தரம் குறைந்த கற்களை வைத்திருப்பதாக சந்தேகப்படுகிறோம். அடுத்து உருக்குவதற்​காக மும்பை எடுத்துச் சென்றதாக பதிவேட்டில் குறிப்பிடப்பட்டு இருப்பது 7,251 கிராம் பொன். ஆனால் எடுத்துச்சென்றதோ 7,295 கிராம். ஆக அதில் 44 கிராம் தங்கத்தை மோசடி செய்திருக்கிறார்கள்.



அதேபோன்று ஆணையருக்கு அனுப்பி வைத்த நகைகள் பட்டியலில் இல்லாத 13.300 கிராம் எடையுள்ள வைரக்கற்கள் பதித்த பதக்கத்தையும் எடுத்துச் சென்று உருக்கியதாகக் கணக்குக் காட்டி இருக்​கிறார்கள். அதற்கான அனுமதியைப் பின் தேதியிட்டு வாங்கி இருக்கிறார்கள். இவை எல்லாமே மயிலாடுதுறை நகைகள் சரிபார்ப்புத் துணை ஆணையர் இளம்பரிதிக்கும் சென்னை இணை ஆணையர் (திருப்பணி) ஹரிப்பிரியாவுக்கும் தெரிந்தே நடந்திருக்கிறது. அதனால் மூவர் மீதும் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று விவரித்தார்கள் அறநிலையத் துறை அதிகாரிகள்.



செயல் அலுவலர் விஜயகுமார் மீது மொத்தம் 16 வகை குற்றச்சாட்டுகளும், துணை ஆணையர் இளம்பரிதி மீது 8 குற்றச்சாட்டுகளும், இணை ஆணையர் ஹரிப்பிரியா மீது 11 குற்றச்சாட்டுகளும், சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அலுவலகம் பதிவு செய்துள்ளது. 2008-ல் நடந்த இந்த மோசடி குறித்து 2011 மே மாதம் தான் விஷயம் தெரிந்து விசாரணை நடைபெற்றது. விஜயகுமார் மாறுதல் செய்யப்பட்டு செந்தில்குமார் என்பவர் அதிகாரியாக வந்த பிறகுதான், இதைக் கண்டுபிடித்து உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்து இருக்கிறார். அவர் சொல்லும் புகாரில் உண்மை இருக்கிறதா என்பதை ஜே.சி.கல்யாணி என்ற நகை சரிபார்ப்பு அதிகாரியை அனுப்பி உறுதிசெய்துகொண்ட பின்னர்தான் நடவடிக்கைகள் தொடங்கின.



இத்தகைய சூழ்நிலையில் நடவடிக்கை எடுக்கப்​பட்​டவர்களை மீண்டும் பணியில் சேர்ப்பதற்கான காரியத்தை சிலர் தொடங்கி இருக்கிறார்களாம். இது சம்பந்தமாக இந்து சமய அறநிலையத் துறைச் செயலாளர் ராஜாராமை சந்தித்து நாம் விளக்கம் கேட்​டோம். 'இதுபற்றி முழுமையாகத் தெரிந்தவர் இணை கமிஷனர் தனபால்தான். அவரிடம் கேளுங்கள்’ என்றார். தனபாலிடம் இதுதொடர்பாகக் கேட்டுக் காத் திருந்தோம். இரண்டு வாரங்களாக எந்தப் பதிலும் இல்லை.



கோடிக்கணக்கான மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் எத்தகைய அலட்சிய மனிதர்​களிடம் மாட்டிக்கொண்டு இருக்கிறது என் பதைப் பாருங்கள்!




நன்றி - ஜூ வி

926 ஃபவுன்டன் கேட்! - சங்கரி அப்பன் - சிறுகதை

926 ஃபவுன்டன் கேட்!


சங்கரி அப்பன்


காலைக் காற்றில் குளிர் இருந்தது. வின்டர் சீஸன் ஆரம்பமாகிவிட்டது. சரியாக 8.15க்கு 926 ஃபவுன்டன் கேட் பஸ் வந்து நின்றது. காலியான பஸ்ஸில் பள்ளி மாணவர்களுடன் நானும் ஏறினேன். அரக்கப் பரக்க ஓடி வந்து ஏறிக் கொண்டாள் என் சைனீஸ் பஸ் ஸ்டாப் தோழி. மை கீ கார்டைத் தேய்த்துவிட்டு ஸீட்டில் உட்கார்ந்தேன். இமயமலை மனசுக்குள் டென்ட்டடித் திருப்பது மாதிரி பாரமாக உணர்ந்தேன். தினமும் இப்படித்தான் ஒடிந்த மனசுடன் ஏறுகிறேன். எந்த நாட்டில் எத்தனை எத்தனை சௌகர்யங்களுடன் வாழ்ந்தால் என்ன! பெண் மனம் எதிர்பார்ப்பது கணவனின் அன்பைத்தானே!



திங்கட்கிழமை வாரத்தின் முதல் நாள் இப்படியா அமையவேண்டும்! மைக்ரோவேவ் அவனில் சூடாக்கிய பாலில், கார்ன் ஃப்ளேக்ஸ் போட்டு டேபிளில் வைத்து, குடிக்கத் தண்ணீரும் வைத்தாயிற்று. இப்பவெல்லாம் உங்களுக்கு வேலை ரொம்ப ஈஸி. அப்படியிருந்தும் நாலு நாளா என் பேன்ட்ஷர்ட் துவைக்காம போட்டிருக்கே. வாஷிங் மிஷினைத் தட்டிவிடக் கூட வலிக்குதா? சோம்பேறித் தனம் அதிகமாகிவிட்டது..." சொகுசான வாழ்க்கை முறைக்கு மாறின பிறகு இடுப்பொடிய மனைவி வேலை செய்தால்தான் திருப்தியாக இருக்குமா? என்ன உள் மனச் சிக்கலோ புரியலை. இப்படித்தான் சுப்ரபாதத்தை ஆரம்பித்து வைப்பார் என் கணவர் பாபு.



இத பாருங்க மூணு நாளா தூறிட்டிருக்கு. நான் துவைச்சுக் காயப்போட்டுட்டு வேலைக்குப் போயிட்டா... பெரு மழை பெய்து முழுக்க நனைஞ்சுட்டா துணிகளில் துர்வாடை வரும்... அதான்"- காரணம் சொன்னேன். நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு..." ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடி சொல். நல்ல சொற்களே தமிழில் இல்லையோ என்று நினைக்கும் அளவுக்கு இங்கு வந்ததிலிருந்து கெட்ட வார்த்தைகளால் அர்ச்சிக்கிறார். நாலு ப்ரட்டை சாண்ட் விச் பண்ணி ஆறு வயது மகன் சூரியாவுக்கு லஞ்ச் கட்டிக் கொடுத்து நானும் கட்டிக் கொண்டேன்.




சூரி ஸ்கூல் பேக் எடுத்துக்க..." ஓடி வந்த குழந்தையின் கைபிடித்துத் தெருவில் இறங்கியபோது ஏதோ மத்தியச் சிறையிலிருந்து விடுபட்ட மாதிரி இருந்தது. பத்து நிமிட நடை... மகனை பள்ளியில் விட்டுவிட்டு எதிரே உள்ள பஸ் ஸ்டாப்பில் என் அலுவலகம் செல்ல நான் வந்து நிற்கிறபோது மணி சரியாக எட்டு பத்தாகிவிடும். எட்டு பதினைந்துக்கு டான் என்று வந்து நிற்கும் பஸ். அலுங்காமல்... இடிபடாமல்... கசகசவேர்வை இல்லாமல் சுகமாகப் பிரயாணித்தும் மனசு என்னவோ குலுங்கி இடிபட்டு வெலவெலத்து அலறிற்று.



யூ ஆல் ரைட்?" சைனீஸ் தோழி சங்மிங் கேட்டாள். மனசை அவசரமாக மூடி சமன் செய்துவிட்டுப் புன்னகைத்தேன்.


நல்லாயிருக்கேன்... நீங்க எங்கே வேலை பார்க்கறீங்க?"


ஒரு சைனீஸ் ப்யூட்டி பார்லரில் மசாஜ் செய்யும் வேலை. ரொம்ப கஷ்டமாயிருக்கு. எனக்கு சரியா ஆங்கிலம் பேச வராததால் இந்த வேலை. இங்கு வந்து எட்டு வருஷமாச்சு."



அவள் இங்குள்ள ஆஸ்திரேலியரான டான் என்பவரை கல்யாணம் பண்ணி இருக்காளாம். சைனாவில் அவள் மணந்த சைனீஸ் புருஷன் விவாகரத்துப் பண்ணித் துரத்திவிட்டானாம். ஒரே மகனுடன் இங்கு வந்து டானைக் கல்யாணம் பண்ணி செட்டிலாயிட்டாளாம். இரண்டாவது கணவன் அன்பாக இருக்கிறாராம். ஆனால் முதல் கணவன் அவள் பத்து வயது மகனுக்கு ஃபோன் செய்து அம்மாவை விட்டு விட்டு அப்பாவிடம் வந்து விடு என்று கூறிக் கூறி குழந்தையை ப்ரெயின் வாஷ் பண்ணி அவளிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறானாம். சொல்லும்போதே அவள் கண்கள் கலங்கிவிட்டன. பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் கடல் கடந்தாலும் விட்டபாடில்லை.



அலுவலகத்தில் நுழைந்ததும் ரோஜர் எதிர்பட்டார். ஸ்நேகமுடன் ஹாய் தீபா... ப்ளீஸ் கம் டு மை கேபின்..." என்றார். டெலிவரி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கையும் அதன் விலைப் பட்டியல் பற்றியும் ஒரு டிராஃப்ட் தயாரிக்கக் கூப்பிட்டிருக்கார்.



அரை மணியில் முடித்துத் தரவேண்டும் ப்ளீஸ்..." என்று வேண்டுகோள் வைத்தார். பிறகு மென்மையாக என்னைப் பார்த்து தீபா... கேன் ஐ சே சம்திங்?" என்றார். அவர் பர்மிஷன் கேட்டது எனக்குப் பிடித்தது.



சொல்லுங்க..." என்றேன்.



யூ லுக் ப்ரிட்டி அண்ட் யங் இன் சாரி" என்றார். மனசிலேதுமில்லாமல் வந்து விழுந்த இந்தப் பாராட்டுக்கு நன்றி சொன்னேன். பௌர்ணமி நிலா மனசுக்குள் பொழிந்தது போல் அந்தப் பாராட்டில் முழுதாக மகிழ்ச்சியில் நனைந்து போனேன். பாராட்ட வேண்டிய கணவர் ஒரு நாளாவது பாராட்டியிருப்பாரா? நான் ப்ரிட்டியா இல்லையா என்கிற கவனமே இல்லாமல் ஏதோ... டீசென்டாக உடை உடுத்தணும் என்ற எண்ணம் மட்டுமே குறியாக இருந்திருக்கிறேன்


. எப்பொழுதாவது ஏதும் அகப்படவில்லை என்றால்தான் புடைவை அணிவேன். மற்றபடி சூடிதார்... பேன்ட் ஷர்ட்தான். நான் புடைவை அணியும்போது - இடுப்பும்... கழுத்தும் ப்ளா என்று தெரிகிறது. அது என்ன முதுகில், மேலே ஒரு கயிறு கட்டி முடிச்சுப் போட்டிருக்கு. குழந்தை பெற்ற உனக்கு இந்த ஸ்டைல் தேவையா?" என்று சாடுவார்.




நான் சூடிதார் அணிந்தால் - துப்பட்டாவை அலட்சியமா தொங்க விடற... சகிக்கலை" என்பார்.



குளிர் காலத்தில் பேன்ட் ஷர்ட் போட்டால் - துப்பட்டாவும் இல்லே, சுத்தம்... ஆஸி ஸ்டைலுக்கு மாறிட்டே" என்பார்.



கண்களில் முட்டி நிற்கும் நீரைக் கட்டுப்படுத்தி, அப்ப என்னதான் உடை உடுத்தணும் நான்?"



பர்தா... முடியுமா உன்னால? வெள்ளைத் தோலையும் கட்டான சிக் உடலமைப்பையும் கடை பரத்தணும் உனக்கு" என்று என் பெண்மையை அவமானப்படுத்துவார். அவர் மேல் இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையும் எனக்குப் போயிற்று. இதுதானா வாழ்க்கை! மனசுக்குள் இத்தனை கசையடி விழுந்தும் துளிர்க்கப் பார்க்கிறேன்... அடித்த அவரோ சோர்ந்து போகிறார். இந்த முரணில் ஊஞ்சலாடும் பயணம் என்று விபத்துக்குள்ளாகுமோ! பயமாக இருந்தது.



என் ஒரே சந்தோஷம் என் மகன் சூர்யாதான். யூநோ விளையாடுவோம். மோனோப்பலி விளையாடுவோம். பவுலிங் கூட்டிப் போவேன். சேர்ந்து கொலை வெறி டி பாட்டு கேட்போம். அதுக்கு சூப்பராக டான்ஸ் ஆடுவான். வி - கேம்ஸ், கம்ப்யூட்டர் கேம்ஸ் ஆடுவோம். எங்கள் உலகமே தனி. இந்த ஆனந்தத்தைக் கெடுக்க மிஸ்டர் பாபுவால் முடியவேயில்லை. என் மகனின் மினுக்கும் கண்கள். கனிந்த அம்மா என்ற அழைப்பு. துறு துறு தோற்றம். எல்லாம் எனக்குக் கடவுள் தந்த இதங்கள்.



ஏன் உன்னை அப்பா எப்பவும் திட்றார்மா..." என்றான் ஒரு நாள்.



தெரியலைடா..."


ஒரு வேளை நீ ஸ்மார்ட்டா அழகாயிருக்கே. அப்பா குண்டா கறுப்பா இருக்காரே... அதனாலே இருக்குமோ?"


ஆறு வயது குழந்தையின் அப்சர்வேஷன் பவர் என்று வியப்பதா? அதிகப் பிரசங்கி என்று கண்டிப்பதா என்று தெரியவில்லை.


நான் பார்த்த சில பெண்களின் குறைகளைக் கவனிக்கும்போது எனக்கு இன்னும் ஆணாதிக்க நூற்றாண்டுகளின் சொச்சம் இருப்பதாகவே தோன்றுகிறது. என் மலையாளத் தோழி யாமினி சொன்னாள் -



தீபா... நல்ல வேலையை விட்டுட்டார். இங்கே இந்த புலாரா அத்வான இடத்தில் மூன்று ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டு நாய்களை வளர்க்கிறார். இங்குதான் ஆஸ்திரேலியர்களுக்கு நாய் என்றால் கொள்ளை ப்ரியமே... ஒரு குடும்பத்திலேயே இரண்டு மூன்று நாய்கள் வளர்க்கிறார்களே! உயர் ஜாதி நாய்கள் எண்ணூறு டாலர் வரை விற்பனையாகிறது. வருமானம் நல்லாத்தான் இருக்கு... ஆனா..."



ஏன் யாமினி... என்ன பிரச்னை?"


கேட்டால் திடுகிட்டுப் போவே. இரவில் பாம்புகள் வருது. எப்பவாவது நரி கூட வருது. சுத்தி ரெண்டு கிலோ மீட்டருக்கு ஆளே கிடையாது. சதா நாய் குரைக்கும் சத்தம்... என்ன வாழ்க்கை சொல்லு! ஆஃபீசர்ஸ் காலனியில் டீச்சர் வேலை பார்த்திட்டிருந்தேன். என் நாலு வயது பையனும் என் பள்ளியிலேயே படித்துக் கொண்டிருந்தான். நான் இங்கேயே இருக்கேன். என் பையனுடன் நீங்க வாரம் வாரம் வந்திட்டுப் போலாமேன்னு சொன்னேன்.


 ராமன் இருக்கும் இடத்துக்கு சீதை வருவதுதான் நம் பண்பாடாம். வியாக்கியானம் வேறு. என்ன பண்றது? அசோகவனத்து சீதா போல் இங்கு மாட்டிக்கிட்டேன். இந்தச் சூழலுக்குப் பழகிட்டிருக்கேன்" என்று முடித்தாள். உண்மையில் அதிர்ச்சியில் எச்சில் விழுங்க மறந்தேன். மனைவியைக் கண்ணுக்குள் வச்சுக் காப்பாத்தற எழுபது சத ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். முப்பது சதவிகித கோட்டாவில் நான், யாமினி, டேய்ஸி, மினி, சங்கீதா என்று ஒரு குட்டி லிஸ்ட்டே இருக்கு. அவர்களின் உள்கதை - கந்தல்கள், ஆழ்கடல் மனவலிகள். இதையெல்லாம் பார்க்கும் பொழுது, ‘நம்ம நிலை தேவலையப்பா’ என்ற எண்ணம் வரத்தான் செய்கிறது.



லஞ்ச் பாக்ஸ் திறந்து சாப்பிடும்போது டயானா வந்தாள். இந்த ஊர்க்காரி. எனக்கு அவளைப் பிடிக்கும். வெகுளியானவள். மனசில் பட்டதைச் சொல்வாள். நீலக் கண்கள், பொன்நிற முடி, டிபிகல் ஆஸ்திரேலிய வெண்ணெய் நிறம், ரோஸ் உதடுகள், கொஞ்சம் சிகரெட் பிடிப்பாள்.



ஸோ... நீ இன்னும் அந்த ஆள் கூடத் தான் வாழ்கிறாயா?"


என்ன செய்வது? குழந்தை இருக்கே" இவளிடம்தான் மனம் விட்டுப் பேசிக் கொட்டுவேன். யாரிடமும் சொல்ல மாட்டாள்.



தீபா...முட்டாள் மாதிரி பேசாதே. டம்ப் ஹிம். யூ டிசர்வ் எ நைஸ் கெய்" அவள் சொல்வது நிஜம்தான். ஆனால் நைஸ் கையாக என் கணவர் மாறலாம் இல்லையா என்பேன். அவள் இரண்டு பாய் ஃப்ரெண்ட் மாற்றி விட்டாள். தன் வாழ்க்கைக்கு சரியானவனைத் தேர்ந்தெடுப்பதில் ரிஸ்க் எடுக்க மாட்டாளாம்.



முதல் பாய் ஃப்ரெண்ட் அவளைத் துன்புறுத்திய அனுபவம் அவளுக்கு உண்டு. அவன் திருந்தி விடுவான் என்று விட்டுக் கொடுத்து... விட்டுக் கொடுத்து மனம் சிதைந்து பின் வேறு வழியில்லாமல் விட்டாளாம். அதனால் என்னுடைய வலி முழுவதும் புரிந்தவள். சுடு சொற்கள் மனத்தைப் பொத்தலாக்கும் அம்புகள் என்பாள். மனச் சிதைவு நாளாவட்டத்தில் வரும் என்பாள். எதற்கு இந்த வாழ்க்கை? ஜஸ்ட் லீவ் ஹிம். உண்மைதான்.




ஆனால்..."


என்ன ஆனால்? தன்மானம் இழந்து இப்படி ஒரு வாழ்க்கையை எங்களால் வாழ முடியாது தீபா. வொய் ஆர் யூ டேமேஜிங் யுவர் செல்ஃப்?"

ஒரே ஒரு காரணத்துக்காத்தான்" என்றேன்.


எனக்குத் தெரியும். உன்னை மாதிரி பல பெண்கள் வாழ்கிறார்கள் என்கிற நொண்டிச் சமாதானம் தானே."


இல்லே."


பின்னே?" ஒரு நிமிடம் ஆழ்ந்த மௌனத்திலிருந்தேன். பிறகு சொன்னேன்.


குழந்தை. அது ஒரு வரப்பிரசாதம். எந்தத் தவறும் செய்யாத அந்தப் பிஞ்சுக் குழந்தை அப்பா இல்லாமல் வளரும். அல்லது அப்பாவுடன் வளர திணறும். இல்லை அப்பாவுடன் வாரத்தில் இரண்டு நாள் அம்மாவுடன் ஐந்து நாள் என்று பங்கு போடப்பட்டு மனசு ரணப்படும். அதான்...

"

உன்னைப் பார்த்தா எனக்கு பரிதாபமாகத்தான் இருக்கு. இவ்வளவு சென்டிமென்ட்ஸ். ஃபூலா நீ? சரி... நீ செய்ய வேண்டியதை உன் கணவரே செஞ்சிட்டார்..."



என்னது?"


நீ இப்படி உருகறே. அங்கே அவர் ஜாகை மாறப் போறாராம். பின் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புவாராம். என் லாயர் தோழி ஜோனிடம் சொல்லியிருக்கார். என்ன இது தீபா? எப்படியாச்சு? வாட்ஸ் ஹப்பனிங்?"


அதிர்ந்து டயனாவைப் பார்த்தேன். நிஜம்தானா இது!


தீபா... நீ என் தோழி. அப்படிப் பார்க்காதே. என்னால் தாங்க முடியலை. உண்மையைச் சொல்லப் போனால், சுதந்திரம் உன்னைத் தேடி வந்திருக்கு. அப்யூஸிவ் கணவனோட வாழ்ந்து நீ அனுபவிச்ச மென்டல் டார்ச்சர் போதும். ஜஸ்ட் ஃபீல் ஹாப்பி... ஸ்மைல்" என்றாள். மென்மையாக அணைத்தாள். தாங்க்ஸ் இந்த நட்புக்கு... நான் வரேன் டயானா." வீட்டுக்கு வரும் வழியெல்லாம் சிந்தித்தேன். இந்த ஊரில் வந்து அவர் கற்றது இதைத்தானா? என் கண்களில் நீரும் என் உதட்டில் ஒரு சின்னப் புன்னகையும் இருந்ததே - அதைப் பார்த்து டயானா என்ன நினைத்திருப்பாள்! என் மனநிலை பிடிபடாமல் அதிசயித்திருப்பாள்.




வீட்டுக்கு வந்தேன். பாபு வர இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. முகம் கழுவி உடை மாற்றி சூடாக டீ குடித்தேன். என் பொறுமைக்குக் கடைசியில் கிடைத்த பரிசு இதுதானா? எங்கள் வீட்டின் எதிரே ஒரு சின்னக் குளம் இருந்தது. அதைச் சுற்றி சிமென்ட் நடைபாதை உண்டு. சனி, ஞாயிறுகளில் குளத்தைச் சுற்றி வாக்கிங் போவேன். குளத்தைச் சுற்றி இரண்டடிக்கு புல் வளர்ந்திருந்தது. அதில் குட்டிக் குட்டி மஞ்சள் பூக்கள் சிரிக்கும். சின்னப் பறவைகள் குளத்தில்நீர் அருந்திவிட்டு ஒருசேர கும்பலாகக் குபீரென வானம் நோக்கி உயரப் பறக்கும். விடுதலை என்கிற உணர்வும் அப்படித்தான் இருக்கும்.



 என் கணவரின் சுடுசொல்லிலிருந்து சுதந்திரம் கிடைக்கப் போகிறதென்று என் மனசும் இப்படித்தான் விடுதலைக்காய் பறக்கிறது. ஆனால் பறவைகள் உயரவே இருந்து விட முடியுமா? மீண்டும் தரை நோக்கி விர்ரென்று பறந்து வந்தமர்கின்றன. தற்காலிக சுதந்திரம் வாழ்க்கைக்குச் சரியான தீர்வாகுமா? ஒரு சிறையிலிருந்து விடுபட்டு தனிமை எனும் இன்னொரு சிறைக்குள் புகுவதற்குப் பேர் சுதந்திரமா? என்னிடம் மனசு விட்டுப் பேசாமல் இப்படியொரு முடிவை அவர் எடுத்தது எவ்வளவு குழந்தைத் தனமானது! பேசிப் பார்க்கலாம்... பிறகு எந்தச் சிறை பெட்டர் என்று முடிவு பண்ணலாம். என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்ததும் மனசு லேசாயிற்று. கார் ஷெட் திறக்கும் ஷட்டர் சத்தம் கேட்டது. பாபு வந்துட்டார்.



டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பப் போறாராம். ஜாகை மாறப் போறாராம். இதையெல்லாம் தீர்மானித்து விட்டு விடுதலை உணர்வுடன் தெரிகிறாரா என்று அவர் முகத்தை ஆராய்ந்தேன். அதில் இறுக்கம் இருந்தது. மருந்துக்குக் கூட ஓரிடத்திலாவது அப்பாடா உணர்வு இல்லை. சிக்கலைத் தீர்க்கத் தெரியாமல் புது சிக்கலை ஏற்படுத்தியிருப்பதை அவர் உள்ளுணர்வு சொல்கிறதா?


 புரியலை. டி.வி.யை ஆன் பண்ணி விட்டு உட்கார்ந்தார். நான் ரிமோட்டை பிடுங்கி ஆஃப் செய்தேன். வாழ்க்கையை ஆஃப் பண்ணிட்டு டி.வி.யை ஓட விட்டு என்ன பிரயோஜனம்?" என்றேன். கத்தி போல் அது அவர் மனத்தில் இறங்கிற்று. கண்ணீர் எட்டிப் பார்த்து விடாதிருக்க உதடு கடித்தேன். அவர் முதல் முறையாகப் பெயர் சொல்லி நிதானமாகப் பேசறார்.



தீபா... உனக்கும் எனக்கும் இந்த ப்ரேக் தேவைன்னு தோணுச்சு."



அதெப்படி எனக்குத் தேவைன்னு நீங்கள் முடிவு பண்ணலாம்? என் கூட பேசிப் பார்க்கணும்னு உங்களுக்குத் தோணவேயில்லையா?"



என்னைக் கல்யாணம் பண்ண இந்த எட்டு வருஷமா நீ சந்தோஷமாய் இல்லையே!"



அம்பு போன்ற சரமாரியான சொற்களைத் தாங்கிக் கொண்டு சிரிக்க நான் என்ன பீஷ்மரா?"

இத பார் தீபா... நீ என்னை மனசுக்குள் கறுப்பு குண்டுன்னு நகையாடறதை என்னால் புரிஞ்சுக்க முடியுது."



தி கேட் இஸ் அவுட் ஆஃப் த பேக். எட்டு வருஷமா இதையா மனசில் ஊறப் போட்டு வச்சிருக்கார்! தாழ்வு மனப்பான்மை, சுயபச்சாதாபம். இதற்கு மருந்துண்டா? நான் பெரிதாகச் சிரித்தேன். என் பெண்மையின் முழு பலத்துடன் ஆங்காரமாகச் சிரித்தேன். துர்க்கையின் கோபம் போல் இந்தச் சிரிப்பின் மூலம் அவர் அறியாமையைச் சாடினேன். முயல் குட்டி போல் இருந்தவள் மெகா சைஸ் துர்க்கையாக அவதரித்ததைப் பயத்துடன் பார்த்தார். மெல்ல நிதானத்துக்கு வந்தேன். பூரண லட்சுமி கடாட்ச அருள் பார்வையுடன் சொன்னேன்.


 சூல் கொண்ட கறுப்பு மேகங்கள்தான் அழகு. வெறும் வெற்று மேகங்கள் வானத்தில் ஃபான்சி பரேட் செய்யத்தான் லாய்க்கு. பூமின்னு பெண்மையைச் சொல்றாங்க. அதனை கறுப்பு மேகங்களால்தான் மழை பொழிவித்துக் குளிர்வித்துத் தழைக்க வைக்க முடியும். உங்களாலும் முடியும்.அன்புநீர் வர்ஷித்தால் நான் மலர்வேன். அது இல்லாததால்தான் நான் சந்தோஷமாய் இல்லே."



கலங்கிய மனக்குட்டைக்குள் இந்த ஜீவ வார்த்தைகள் தெளிவை ஏற்படுத்தும் என்று நம்பினேன். இதுதான் பிரச்னை என்றால் வலி தீரும். ரொம்ப நேரம் பேசாமல் இருந்தார். என் வாழ்வின் ஒளி இந்தச் சில நிமிடங்களில் நிர்ணயிக்கப்படப்போகிறது. காற்றில் படபடக்கும் தீபம் அணையுமா? இல்லை வெற்றி பெற்று சீராக எரியுமா? சிறிது நேரத்தில் தெரிந்து விடும். பக்கத்து வீட்டு சௌத் ஆப்ரிகன் பெண் நைகிக் என் மகனை வீட்டில் விட்டு விட்டுப் போனாள். ஆன்ட்டி ஹீ ஸேஸ் ஹீ வான்ட்ஸ் மில்க்" பாலை கப்பில் ஊற்றிக் கொண்டிருந்தேன்.

தீபா... நான் தப்பு பண்ணிட்டேன். ஸாரி. தீபா... வந்து... இனி உன்னை அலுவலகத்தில் நானே டிராப் பண்ணிட்டுப் போறேன். நீ என் மனைவியல்லவா? உன் மேல் எனக்கு அக்கறை இருக்கு தீபா..." இரும்புக் கதவு உடைந்தது. அவர் மனசில் இயல்பான காற்று சிலுசிலுவென்று வீசுகிறது. பாலை மகனிடம் கப்பில் கொடுத்தேன். அவர் என் வயிற்றில் பாலை வார்த்தார்.

தாங்க்ஸ் ஸோ மச். ஆன நான் 926 ஃப்வுன்டன் கேட் பஸ்ஸிலேயே போகிறேன். ஏன்னா உங்க அலுவலகம் நேர் எதிர்த்திசையில் அல்லவா இருக்கிறது..." என்றேன். அவர் சிரித்தார்.அதில் ஒரு கவிதையின் அழகு இருந்தது. சிரிக்கும்போது ரொம்ப அழகாய் இருக்கீங்கப்பா" என்றான் சூரியா. இதுவரை அவர் இப்படி உயிர்ப்புடன் சிரித்ததை அவன் பார்த்ததேயில்லை.



டயானாவிடம் இந்த வசந்தத்தைப் பற்றிச் சொன்னேன். சொன்னாள் - யூ ஆர் லக்கி. அவர் உணர்ந்தது ஓர் அபூர்வமான விஷயம். என் பாய் ஃப்ரெண்ட் கடைசி வரை அவன் தவறை உணரவேயில்லை. அதான் இவரும் அப்படித்தான் என்று எண்ணி விலகச் சொன்னேன். ஸாரி..." என்றாள்.



ஐ அண்டர்ஸ்டாண்ட்... யூ வில் கெட் எ நைஸ் கெய்..." என்றேன். இருவரும் புன்னகைத்தோம்.


இப்பொழுது நான் பஸ்ஸில்தான் அலுவலகம் செல்கிறேன். 926 ஃபவுன்டன் கேட் வந்து நின்றது. என் வாழ்வும் ஃபவுன்டன் போல் ஆகிவிட்டதால் அந்த பஸ் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. என் சைனீஸ் தோழி சொன்னாள். டு-டே த ஸ்கை இஸ் க்ளியர்."



வானம் மட்டும்தானா நிர்மலமாக இருந்தது, என் மனசும்தான்.

இரும்புக்கை மாயாவியின் காதலியை நினைத்தால்... அவ்வ்வ்வ்வ்



1.டியர் ,இது தான் உங்க முதல் காதலா?


 ம் ம் உன் கிட்டே இதுதான் என் முதல் காதல் 


------------------------


2. உன்னுடன் கை கோர்த்து நடக்கும்போது உன் 2 கைகளையும் கோர்த்து நடக்க முடியலையே என எண்ணுவதுண்டு 




---------------------------


3.தமிழ் எழுதும்போது கிரந்தம் ,காதலிக்கும்போது கிறுக்குத்தனம் இரண்டையும் தவிர்க்க முடியாது 



----------------------------------


4. கஞ்சா, புகையிலை உபயோகிப்பதால் அவர்கள சைவம் என்று சொல்லி விட முடியாது 



------------------------

5. புத்தகம் படிக்காமல் அணிந்துரை எழுதுவது காதலியை ஒரு முறை கூட நேரில் பார்க்காமலேயே கவிதை எழுதுவது போல 


---------------------------


ஃபேஷன் ஷோ கணக்கா...என்னவெல்லாமோ ட்ரஸ் பண்ணிட்டு வந்து கடுப்ப கெளப்புறாய்ங்க மீட்டிங்க்ள...யுவர் ஆனர்....





------------------

7. படத்தின் டைட்டில் - டாப்லெஸ் சப் டைட்டில் - இவளுக்கு ஆடையும் பாரமோ? # இயக்குநருக்கு மேல் மாடி காலி ! பிரெயின் லெஸ் , ஒன் லைன் விமர்சனம்



----------------------------------


8. காபி அடிப்பது குற்றமா? சரக்கு அடிப்பதே குற்றம் # காபி ராகதேவனின் டைரியில் இருந்து



-------------

9. இரும்புக்கை மாயாவியின் காதலியை நினைத்தால் எனக்கு பாவமா இருக்கு ;-0



---------------------


10. ADMK ஆட்சியில் குறைகளே இல்லை, மின் தட்டுப்பாடு மட்டுமே உள்ளது -சரத்# யோவ், அதுக்குப்பேரு குறை இல்லாம உறையா?



---------------------------
HAPPY ONAM...

11.எவ்வளோ மொக்கையான பொண்ணா  இருந்தாலும், நீ சப்ப ஃபிகர்னு முகத்த பாத்து தைரியமா சொன்னா 90% பொண்ணுங்க ஒத்துக்க மாட்டாங்க # எ கீ



------------



12. 2 நிமிஷத்துல ரெடி ஆனா அவ மேகி, 2 மணி நேரம் ஆகியும் ரெடி ஆகாம லேட் பண்ணா அவ தான் நீ தாலி கட்ன சகி




------------------------


13. கட்சிக்கு ரொம்ப பெரிய எதிர்காலம் வேணும்னு நினைக்கும் தலைவர்கள் கொ ப செ வா நமீதாவை போட்டுக்கொள்ளலாம்



--------------------------


14. விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் 'திருடன்' # 1. நான் 2 . திருடன் - ஒப்புதல் வாக்குமூலம்



-------------------------

15. பேங்க் மேனேஜர் - இந்த பாண்ட் பேப்பர்ல சைன் பண்ணுங்க..



 லொள் கஸ்டமர் - என் பேரு என்ன ஜேம்ஸ் பாண்டா?


---------------------


Same Feeling .. !! LOL :)



16. மாடர்ன் யுகத்தில் சில பெண்களும் அவ்வப்போது வீட்டுச்சாப்பாடு போர் அடித்து ஹோட்டல் சாப்பாடு சாப்பிட ஆசைப்படுகிறார்கள் ;-0



------------------------

17. ஜெயலலிதா ஆட்சியில் குறைகளே இல்லை -சரத்குமார்# நல்லவேளை, ஜெ விடம் எந்த குறையும் நான் காணவில்லைன்னு சொல்லலை



----------------------


18. நீராராடியா டேப்விவகாரம் அரசு சரியாக விசாரிக்கவில்லை.-கோர்ட் கண்டனம். # நீரா ராடியா நீராடிய வீடியோ டேப்னா கவனமா பார்த்திருப்பாங்க



----------------------


19. ஈரோட்டு இளஞ்சிங்கங்களே! இன்றுமாலைஓனம் பண்டிகைக்காக சேரநாட்டிளம்பெண்கள்கேரளா போகும் ரயில்,பஸ்களில் பயணிக்கஇருக்கிறார்கள் # RS, BS அலர்ட்



----------------------


20. பெண் வானவில் போன்றவர்கள்.அவங்க டிரஸ்ல மினிமம் 7 கலர் கண்டிப்பா இருக்கும்


----------------



எங்கள் சங்கத்தின் சார்பாகவும், தலைவி சார்பாகவும்... எல்லோருக்கும் ஓனம் வாழ்த்துகள்...

- லவ்டேல் மேடி,
...See more


21. ரைட்டர் - பல்லு முளைச்ச பிறகும் பால் குடிச்சிட்டு இருக்கீங்க!



ஏன்? 32 பல்லும் இருந்தாலும் பால், ஜுஸ் எல்லாம் குடிச்சுத்தானே ஆகனும்?



---------------------------


22. ஃபாதர், நான் பாவ மன்னிப்பு கேட்கனும்,அபிலாஷா நடிச்ச முதல் பாவம் படத்தை பார்த்துட்டேன்.



 ஃபாதர் - படம் ஓக்கேவா? தேறுமா?



---------------------


23. கண்ணப்பர் = அய்யப்பர் ( EYE DAD)


-------------


24. சரத் குமாரின் செல் ஃபோன் ரிங்க் டோன் - குறை ஒன்றும் இல்லை , மறை கழண்ட மூர்த்தி கண்ணா!



------------------


25. ஹேர் டை செண்ட்டர் = தலை மை அகம்




---------------------------