Saturday, August 18, 2012

பால்காரம்மா - எம்.ஜி.கன்னியப்பன் - மூன்றாம் பரிசுக் கதை-கல்கி

மூன்றாம் பரிசுக் கதை



பால்காரம்மா



ஓவியம்: தமிழ்


எம்.ஜி.கன்னியப்பன்


நடுவர் கமென்ட்ஸ்!


மனிதாபிமானம் குருத்துவிடும் கதை. மனிதநேயமும், அன்பும், ஆதரவற்ற இதயங்கள் மீது பொழியும் கருணையும் இன்றும் வற்றிவிட வில்லை என்பதை வலியுறுத்துகிறது. மனத்தில் வெகுநேரம் வலம் வரும் சோகம் ததும்புவது.


- வெ.இறையன்பு, ஐ.ஏ.எஸ்.



தாயின் மனதை யார்தான் கணிக்க முடியும்... உதவி செய்யும் மனம் அடுத்த முறை தயங்குவது, அது அன்பு மட்டுமே செய்யத் தெரிந்த ஒருத்தியினால் என்பது இதில் நான் ரசித்த முரண்.

- ரோஹிணி



அன்று தீப்பற்றிக் கொள்ளாத ஞாயிற்றுக்கிழமை. பரபரப்பு இல்லை. புரண்டு போத்திக் கொண்டு எட்டு வரை தூங்கலாம். டி.வி. பார்க்கலாம். காயமின்றி ஷேவ் செய்யலாம். மதியம் தூங்கலாம். மாலையில் குளிக்கலாம்.



மனைவி திவ்யா மணக்க மணக்கப் போட்டிருந்த காஃபியைக் குடித்துவிட்டு நாக்கில் இனிப்புச் சுவை குறையுமுன் ஒரு நிக்கோடின் குச்சியையும் தீப்பெட்டியையும் எடுத்துக் கொண்டேன். மொட்டை மாடி அதற்கெல்லாம் வசதியாக இருந்தது.





மாடி செல்லும் முன் பெட்ரூமை எட்டிப் பார்த்தேன். என் ஐந்து வயது கீர்த்தனா கடந்த ஆறு நாட்களுக்கான அதிகாலைத் தூக்கத்தை நிறைவு செய்து கொண்டிருந்தாள். சத்தமில்லாமல் கதவைச் சாத்திவிட்டு மாடிக்கு வந்தேன். முனையைப் பற்றவைத்துக் கொண்டு நுரையீரலை நிரப்பினேன்.





சென்னைக்கு வந்து ஒன்பது மாதங்கள். பிரபலமான கம்ப்யூட்டர் நிறுவனத்தின் கோவை கிளையிலிருந்து சென்னை மெயின் பிராஞ்சுக்கு மாற்றியிருந்தார்கள். இங்கு எல்லாமே புதிது. மக்கள், பேச்சு, வேலை, நடவடிக்கை, நட்பு, ட்ராஃபிக் எல்லாமே... அதிலும் சொந்த வீடு இல்லை என்றால், மாதமொருமுறை 'TOLET' போர்டைத் தேட வேண்டியதுதான்.



சிகரெட்டைப் பாதியோடு மிதித்து அணைத்துவிட்டு, ஹால்ஸ் போட்டுக் கொண்டு கீழே வந்தேன். திவ்யா காய்கறி கேரி பேகுடனும் அன்றைய தினசரியுடனும் வந்தாள். பேப்பரைக் கொடுத்தாள்.



இன்றைக்கு என்ன ஸ்பெஷல்?"



மீன்... சங்கரா மீனே... கிலோ இருநூறு சொல்றாங்க... அரைகிலோதான் வாங்கினேன்... போதுமில்ல?"



தாராளமா போதும். கீர்த்துக்குட்டி எழுந்துட்டாளா?"


இல்லை..." பேப்பரைப் பிரித்து தலைப்புகளை மேலோட்டம் பார்த்தேன்.


ஏம்மா... கீழே ஒரே சத்தமா இருக்குது... என்னாச்சு?"



வழக்கம் போலத்தாங்க... எதிர்வீட்டு பால்காரம் மாவுக்கும், அவங்க மருமகளுக்கும் சண்டை.

"

என்னதான் அவங்க பிரச்னை?"



மாமியார் வீட்டுல இருக்கிறது மருமகளுக்குப் பிடிக்கலை. என்ன காரணம் காட்டியாவது வீட்டை விட்டு விரட்டிடணும்னு முடிவு பண்ணிட்டா... அதுக்குத்தான் இந்த ஆர்ப்பாட்டம்."



வயசானவங்க எங்க போக முடியும். யோசிக்க வேணாம். அந்தம்மாவோட பையனும் கேட்டுக்கிறதில்லையா?"



என்னத்த கேட்க முடியும். நீங்களே பாத்திங்கில்ல ரோடுன்னு கூடப் பார்க்காம புருஷனை என்ன மாதிரி அசிங்கம் அசிங்கமா திட்டிச்சின்னு."



கூடப் பொறந்தவங்க யாரும்... கேட்க மாட்டாங்களா?"



அந்தம்மாவுக்கு அவர் ஒரே பையன் தான். தவமிருந்து பெத்திருப்பாங்க பாவம். வீடு வாசல்னு சேர்த்து வெச்சி என்ன பண்றது. கடைசி காலத்துல ஒரு வாய் சோறுக்கும் கட்ட துணிக்கும் கலங்குறாங்க."



மீன் கவரை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள் திவ்யா.



பால்காரம்மா பால் போடும் அம்மா வாகத்தான் எங்களுக்கு அறிமுகமானார். குடிவந்த இரண்டாம் நாள். அதிகாலை ஆறு மணிக்கு காலிங்பெல் ஒலிக்க, சின்னதும், பெரியதுமான பால்பாக்கெட்டுகளுடன் நின்றிருந்தார்.



தம்பி... இங்க நாலஞ்சு தெருவுக்கு நான்தான் பாக்கெட் போடுறேன். உங்களுக்கும் தேவைன்னா சொல்லுங்க. நாளையிலேர்ந்து கொண்டு வந்து போடுறேன். மாசம் ஐம்பது ரூபாய் சேர்த்துக் கொடுத்தா போதும்" என்றார்.



அதைச் சொல்வதற்குள் இரண்டு முறை வலது இடதுக்குமாக இடுப்புக்குப் பாத்திரத்தை மாற்றிக் கொண்டார். காலம் காலமாகப் பால் போடும் பெண்ணாகத் தெரியவில்லை. ஏதோ வறுமைக்குத் தள்ளப்பட்டு வாழ்ந்து கொண்ட குடும்பத்து முதியவள் போல இருந்தாள்.

கேட்ட பாவனையில் ஐம்பது ரூபாய் விட்டுப் போய்விடக் கூடாதே என்ற கவலை தெரிந்தது.

நான்கைந்து வீடுகள் தள்ளிப் போனால் மளிகைக் கடையிலேயே பால் கிடைக்கும் என்றாலும் அந்த அம்மாவுக்கு மாதம் கொடுக்கும் ஐம்பது ரூபாயில் ஒன்றும் குறையப் போவதில்லை.



சரிங்கம்மா நாளை லேர்ந்து போடுங்க. முன்னாடியே பணம் அட்வான்ஸ் கட்டணுமா?"



வேண்டாம்மா. எதிர்த்த மாதிரிதான் என் வீடு. இந்தக் கெழவிய ஏமாத்தி ஓடிப்போயி மாடியா கட்டப் போறீங்க. எத்தனை லிட்டர் தேவைப்படும் தம்பி?"




ஒரு லிட்டர் போதும்மா. ரெண்டு அரையா போட்டுடுங்க."



சரிப்பா. கேட்டுல ஒரு பை மட்டும் கட்டிவைங்க பால் போட்டதும் பெல் அடிக்கிறேன். எப்பவேணாலும் எடுத்துக்கங்க" என்று தொழில் விருத்தியான சந்தோஷத்தில் இறங்கிப் போனார்.



இன்று வரை அவர் பால் போடுவதோடு, மதிய நேரங்களில் திவ்யாவுடன் பேச்சுத்துணைக்கு இருப்பார். மகன், மருமகளைப் பற்றிய மனக்குறைகளைக் கொட்டுவார். அவர் கணவருடனான பிரியம், அவர் இருந்த வரைக்குமான கவனிப்பு எல்லாம் ஒன்று விடாமல் சொல்லுவார். கீர்த்தனாவும் பாட்டி பாட்டி என ஒட்டிக் கொண்டாள். நான் வெளியூர் செல்லும் நேரங்களில் வீட்டில் வந்து படுத்துக் கொள்வார். கீர்த்தனாவைப் பள்ளியிலிருந்தும் அழைத்துக் கொண்டும் வந்திருக்கிறார். வேண்டாம் வேண்டாமென மறுத்தும் கேட்காமல் காய்கறி நறுக்குவது, மீன் சுத்தப்படுத்துவது, கோதுமை அரைத்துக் கொடுப்பது என சின்னச் சின்ன உதவிகளைச் செய்வார்.



ஒருநாள் மகன் குடும்பத்துடன் திருப்பதி சென்றபோது வீட்டில் தனியாகக் குளிர் ஜுரத்தில் முனகிக் கொண்டிருந்த பால்காரம்மாவை திவ்யா தான் ஆஸ்பிடலுக்கு அழைத்துச் சென்று வைத்தியம் பார்த்தாள். திரும்பி வந்த மகன் விஷயத்தைக் கேள்விப்பட்டு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லவில்லை. காப்பாற்றிய கோபமோ என்னவோ.



ஒரு பண்டிகையின் போது அந்த அம்மாவுக்கும் ஒரு நூல் புடைவை எடுத்துக் கொடுத்தேன். கட்டிய அன்று பெரிய ரகளை. வீடுவீடா போய் துணி பிச்சை கேட்குறியா, கட்டிக்கத் துணி எடுத்துத் தரக்கூடவா வக்கத்துப் போயிட்டோம்," என்று ஒன்றுமில்லாத விஷயத்துக்கு பெரிதாகத் தெருவையே வேடிக்கை பார்க்க வைத்துவிட்டாள் மருமகக்காரி.





அந்த அம்மாளின் ஒவ்வொரு நாளும் நரகமாகத்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. என்னங்க" திவ்யா சமையல் அறையிலிருந்து குரல் கொடுத்தாள்.



சென்றேன்.



என்ன?"

எங்கப்பா நேத்து ஃபோன் பண்ணியிருந்தாரு. ஊர்ல இருந்த காட்டை வித்துட்டாங்களாம். அதைப் பங்கு பிரிச்சதுல எனக்கு இருபது ரூபாய் வருதாம். என்ன பண்ணலாம்?"



உனக்கு என்ன தோணுதோ செய்ம்மா."



எத்தனை காலத்துக்கு வாடகை வீட்டிலேயே காலம் தள்ளுறது. நமக்குன்னு சொந்த வீடு, வாசல்னு இருக்க வேணாமா?"



வேணும்தான். இருபது லட்சத்தை வெச்சிக்கிட்டு சென்னைல வீடு வாங்க முடியாது. வாசல் மட்டும்தான்..."



உங்க ஆஃபீஸ்ல லோன் போடுங்க. உங்கப்பாகிட்ட பணம் கேளுங்க. ஐம்பது அறுபதுல வாங்க முடியாதா..."



முடியும்மா... நல்ல ஐடியாதான். முயற்சி பண்றேன்."



அடுத்த மாதமே பால்காரம்மாவிடமிருந்து அந்தச் செய்தி வந்தது. அவரது மகன் வீட்டை விற்றுவிட்டு மனைவியின் சொந்த ஊரில் செட்டிலாகப் போவதாகக் கூறினார்.



பால்காரம்மாவின் வீடு இருபது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக இருந்தாலும், பார்க்க லட்சணமாகத்தான் இருந்தது. திவ்யாவுக்கும் வீடு பிடித்திருந்தது.



நேராக பால்காரம்மாவின் மகனைப் பார்த்துப் பேசினேன்.

இங்க பாருங்க சார். புரோக்கர்கிட்ட போனா கமிஷனுக்காக விலையை ஏத்தி விட்டு நீங்க விற்க முடியாத மாதிரியும், நான் வாங்க முடியாத மாதிரியும் பண்ணிடுவாங்க. அவங்களுக்குக் கொடுக்கறதை நாம பிரிச்சுக்குவோம். அதனால என்ன விலையோ சொல்லுங்க. கூடக் கொறைச்சி நாமளே பேசி முடிச்சுக்குவோம்."



பின்னால் நின்றிருந்த மனைவியை ஒருதரம் திரும்பிப் பார்த்துவிட்டுத் தலையாட்டினார்.



பல தொகைகள் பேசப்பட்டு பின் ஐம்பது லட்சம் என முடிவானது. ஒரு நல்ல நாளில் பத்திரப்பதிவும் பணம் செட்டில் செய்வதாகவும் முடிவாயிற்று.



அந்த நேரத்தில் அதைக் கேட்கக் கூடாதுதான் இருந்தாலும் மனம் தாங்காமல் கேட்டு விட்டேன்.



அம்மா உங்க கூடவே வர்றாங்களா...?"



இல்லைங்க சார். கிராமத்துல எதுக்கு? நாற்பது வருஷமாய் இங்க பழகிட்டு, திடுதிப்புன்னு புது இடத்துக்குக் கூட்டிட்டுப் போனா அந்தரத்துல விட்ட மாதிரி ஆயிடும். அதனால ஒரு நல்ல முதியோர் இல்லத்துல விட்டுட்டு மாதா மாதம் பணம் அனுப்பலாம்னு இருக்கோம். ஆறு மாதத்துக்கு ஒரு தடவை வந்து பார்த்துட்டும் போகலாம்" என்றார்.



சுவரின் மூலையில் ஒட்டி அமர்ந்திருந்த பால்கார அம்மா முந்தானையில் கண்களை ஒற்றியபடி பேச எதுவுமில்லை என்பது போல இருந்தார்

.

பேரம் திருப்தியாக அமைந்ததால், பால்காரம்மா மருமகள் கொண்டு வந்து கொடுத்த காஃபியைக் குடித்துவிட்டு வெளியே வந்தேன். தம்பி... தம்பி..." என்று அழைத்தபடி பின்னாலேயே வந்தார் பால்காரம்மா. நின்றேன்.



இந்த வீட்டைக் கட்ட கொஞ்சநஞ்ச மில்லப்பா. பார்த்துப் பார்த்து இழைச்சிக் கட்டினது. எம்புள்ள விக்கிறேன்னு சொன்னதும் எனக்கு உசுரே போயிடுச்சு. நீங்க வாங்குறீங்கனதும் மனசுக்கு ஆறுதலாய் இருக்கு" சற்று நேர அமைதிக்குப் பின் தம்பி எனக்காக ஒரு உதவி செய்வியா?"



என்னம்மா செய்யணும் சொல்லுங்க...?"





இந்த வீட்டுல எம்புருஷனோடு சேர்ந்து சாகத்தான் முடியலை. அவர் வாழ்ந்த இந்த வீட்டுலயாவது கொஞ்ச காலம் இருந்துட்டுக் கண்ணை மூடிடறேனே... எங்கயாச்சும் ஒரு மூலையில இருக்க எடம் கொடுப்பா."



கும்பிட்ட அவரின் கையைப் பிடித்துக் கொண்டேன். சரிங்கம்மா" என்று விடுவித்தேன்.



நடந்த அனைத்தும் திவ்யாவிடம் சொன்னேன். மறுப்பு ஏதும் காட்டவில்லை. அத்தோடு இன்னொரு யோசனையும் இருந்தது. செலவோடு செலவாக இரண்டு லட்ச ரூபாயை பால்காரம்மா பெயருக்கு ஃபிக்ஸட் டெபாஸிட் செய்து, அதில் வரும் வட்டித் தொகை, அவருக்கு உதவியாக இருக்கும்படி செய்ய வேண்டும்.




இன்னும் ஒரு வாரத்தில் வீட்டைக் காலி பண்ணிக் கொடுப்பதாக பால்காரம்மா மகன் கூறினார். நினைத்த படியே பால்காரம்மா பெயரில் இரண்டு லட்ச ரூபாயை டெபாஸிட் செய்தேன். பத்திரப்பதிவு, திவ்யா பெயரில் செய்யப்பட்டது. எல்லாம் முடிவடைந்த நிலையில், அன்று காலை பால்காரம்மாவையும் அவருக்கான உடைகளையும் விட்டுவிட்டு அவரின் மகன் குடும்பம் வீட்டுப் பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு கிளம்பிப் போனார்கள்.




அன்று மதியமே நாங்களும் பால் காய்ச்சிக் குடிவந்தோம். ஒவ்வொரு பொருட்களாக புது வீட்டில் கொண்டு வந்து சேர்த்தோம். கீர்த்துக்குட்டிக்கு சந்தோஷத்தில் துள்ளிக் கொண்டிருந்தாள்.



பால்காரம்மாவுக்கு மாடியென்றால் படியேறும் சிரமம் இருக்கும் என்பதால் ஏற்கெனவே அவர் இருந்த கிணற்றை ஒட்டிய அறையையே ஒதுக்கிக் கொடுத்தேன். தம்பி என் வயித்துல நீ புள்ளையா பொறந்திருக்கக் கூடாதா" என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். இரவு சப்பாத்தி சாப்பிட்டு விட்டு அந்த அறையில் போய்ப் படுத்தும் கொண்டார்.



மறுநாள் அதிகாலை கதவு தட்டும் ஓசை கேட்டு நெஞ்சின் மேலிருந்த கீர்த்திக் குட்டியின் கையை விலக்கிவிட்டு எழுந்து வந்து கதவைத் திறந்தேன்.



பால்காரம்மா துணிகள் திணிக்கப்பட்ட பையோடு நின்றிருந்தார்.



என்னம்மா... பையோடு எங்க கிளம்பிட்டீங்க?"


தலைகவிழ்ந்தபடி சொன்னார்.


எம் புள்ளைகிட்டேயே போறேம்பா."



அவருதான் உங்களை வேணாம்னு விட்டுட்டுப் போயிட்டாறேம்மா."



இப்போது என் முகம் பார்த்தே பேசினார். அம்மாவை வேணாம்னு வெறுத்து விட்டுட்டுப் போற பிள்ளைங்க இருக்கலாம்பா... பிள்ளை வேணாம்னு ஒதுக்குற அம்மா இருக்க முடியுமா...

"

சட்டையை மாட்டிக்கொண்டு பைக் சாவியுடன் வெளியே வந்தேன்.



கோயம்பேடு பஸ் நிலையத்தில் மருமகளின் ஊரைக் கேட்டு, சிதம்பரம் போகும் பஸ்ஸில் அமரவைத்து ஆயிரம் ரூபாயைக் கையில் கொடுத்தேன். கண்டக்டரிடம் இடம் பார்த்து இறக்கிவிடச் சொன்னேன்.



வீடு வந்தேன். வாயில் ஓரமாக பைக்கை நிறுத்திவிட்டு படியேறப் போனேன். தெருவில் ஐஸ் வண்டி போல் இருந்த மூன்று சக்கர பால்வண்டி கைப்பிடியைத் தள்ளிக் கொண்டு ஒரு வயதான பெண்மணி நின்றாள்.

தம்பி."

என்னம்மா?"

புதுசா குடிவந்திருக்கீங்க போல... உங்க வீட்டுக்கு நாளைலேர்ந்து பால் போடலாமாப்பா..." என்றார் புன்னகையுடன்.

உங்களுக்கு எத்தனை பிள்ளைங்கம்மா?" என்றேன்.



கேள்வி அவருக்கு ஆச்சர்யமாக இருந்திருக்கும். சற்று நேரம் உற்றுப் பார்த்தார்.



அந்தக் கொடுப்பினை எனக்குக் கிடைக்கலேப்பா" என்றார்.



நாளையிலேர்ந்து எங்க வீட்டுக்குப் பால் போடுங்கம்மா" என்று சொல்லி விட்டுப் படியேறினேன்.



நன்றி - கல்கி, புலவர் தருமி 

என்னை டார்ச்சர் பண்ணாங்க -ஜெ வழக்கு புகழ் வக்கீல் ஆச்சார்யா பேட்டி


a

நான் சந்தித்த சதிகள்! - ஆச்சார்யா ஸ்பெஷல் பேட்டி



ஆச்சார்யா... தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிம்ம சொப்பனம். ஒரு வழக்கறிஞர் எப்படி தயவுதாட்சண்யம் பார்க்காமல் செயல்பட வேண்டும் என்பதன் உதாரண மனிதர்.



14 ஆண்டுகளாக கோர்ட் படி மிதிக்காமல் இருந்த ஜெயலலிதாவை, 'சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு வர முடியும். கோர்ட்டுக்கு வர முடியாதா?’ என்று யதார்த்தமான கேள்வி கேட்டு மடக்கியவர். நொண்டி அடித்துக்கொண்டே இருந்த சொத்துக்குவிப்பு வழக்கின் குடுமியைப் பிடித்து, இறுதிக்கட்டம் வரை இழுத்து வந்தவர்.


அப்படிப்பட்ட ஆச்சார்யா, திடீரெனக் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணிக்கு, தனது அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்தார். பெங்களூரு நீதிமன்றத்தின் அடுத்த நீதிபதி யார் என்ற குழப்பம் நிலவும் நேரத்தில் ஆச்சார்யா ராஜினாமா செய்திருப்பது யாருமே எதிர்பார்க்காத திடீர் திருப்பம். ராஜினாமா செய்த ஒரு மணி நேரத்தில், பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்தோம். கோர்ட்டில் இருப்பது போலவே, அனல் தெறித்தார்!

http://www.envazhi.com/wp-content/uploads/2012/06/Sasikala-DC.jpg.crop_display.jpg


1.''நீங்கள் ராஜினாமா செய்துள்ளீர்கள் என்பதை நம்பவே முடியவில்லை. நீங்கள் முழுமனதோடு எடுத்த முடிவுதானா?''




''தீர்க்கமாக யோசித்த பிறகு நான் முழுமனதோடு எடுத்த முடிவுதான். தாராளமாக நீங்கள் நம்பலாம்!'' (சத்தமாகச் சிரிக்கிறார்).



2. ''கடந்த பிப்ரவரியில், அதிகாரம் பொருந்திய கர்நாடகாவின் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிடிவாதமாக ஜெயலலிதா வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாகத் தொடர்ந்தீர்கள். இப்போது, அந்தப் பதவியையும் ராஜினாமா செய்யும் அளவுக்கு அப்படி என்ன திடீர் நெருக்கடி?''




''ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்குக்கு 2005-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி என்னை, அரசு சிறப்பு வக்கீலாக நியமித்தார்கள். ஆறே மாதங்களில் வழக்கு முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் ஆஜரானேன். ஆனால், இந்த ஏழு வருடங்களில் அவர்கள் தரப்பில் இருந்து ஸ்பெஷல் கோர்ட்டிலும், ஹை கோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் எத்தனை மனுக்கள் போட்டிருக்கிறார்கள் தெரியுமா?


எத்தனை முறை அப்பீலுக்குப் போய் இருக்கிறார்கள் தெரியுமா? இப்போதுகூட சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா போட்ட இரண்டு மனுக்கள் விசாரணையில் இருக்கின்றன. எல்லா மனுக்களையும் போட்டுவிட்டு கடைசியாக‌ நீதிபதியின் நியமனமே செல்லாது என்றும் மனுப் போட்டு இருக்கிறார்கள். அந்த மனு கர்நாடகா ஹைகோர்ட்டில் இருக்கிறது. இப்படி, சொத்துக்குவிப்பு வழக்கு கொஞ்சம்கூட நகராமல் அதே இடத்தில் இருந்தால், என்னால் என்ன செய்ய முடியும்? கடந்த ஓர் ஆண்டாகவே என்னை இந்த வழக்கில் இருந்து வெளியேற்ற பலவித சதி முயற்சிகளை மேற்கொண்டனர்!''





3. ''என்ன மாதிரியான சதி முயற்சிகள்?'



''என்னைப் பற்றி அவதூறாக, கவர்னருக்கும் ஹை கோர்ட் நீதிபதிக்கும் பெட்டிஷன் போடுவது, ஸ்பெஷல் கோர்ட்டிலும் ஹை கோர்ட்டிலும் துண்டு அறிக்கை கொடுப்பது, போஸ்டர் ஒட்டுவது, மீடியாக்களில் புகார் பரப்புவது என்றெல்லாம் செய்தனர். ஒரு கட் டத்தில் நான் அட்வகேட் ஜெனரல் பதவி, அரசு சிறப்பு வக்கீல் என இரண்டு பொறுப்புகளையும் வகிக்கக் கூடாது என்றனர். அப்போது அவர்கள், நான் சிறப்பு வக்கீல் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று நினைத்தனர்.


ஆனால், நான் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இறுதியாக‌ச் சிலரைத் தூண்டிவிட்டு கர்நாடக லோக் ஆயுக்தா நீதிமன்றத்திலும், ஹை கோர்ட்டிலும் என் மீது அவதூறு வழக்குப் போட வைத்தனர். லோக் ஆயுக்தாவில் போட்ட வழக்கு அடிப்படை ஆதாரம் இல்லாதது என்று, ஆரம்பத்திலேயே வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது கோர்ட்.


 இரண்டாவதாக, 'கல்வி நிறுவன மோசடியில்’ ஈடுபட்டதாகப் போடப்பட்ட வழக்கை விசாரித்த ஹை கோர்ட், 'நேர்மையானவர் மீது அவதூறு பரப்பாதீர்கள்’ என்று  கண்டித்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இருக்கிறது. ஹை கோர்ட்டின் தீர்ப்பு எனக்குச் சாதகமாக வந்திருந்தாலும், தொடர்ச்சியாக இதுபோன்ற பிரச்னைகளால் தேவை இல்லாத நெருக்கடிகளுக்கும் தீவிர மன உளைச்சலுக்கும் உள்ளானேன். மென்டல் டார்ச்சர் இந்த வயதில் எனக்குத் தேவையா? என் உடம்பைக் கவனிக்க வேண்டாமா?''



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeI8ja3ptOV5Bo2F9g-XeQAA-qDQP_ZQGm-_mv5I6OWQKHaP4tzv5Tm9YN2M48TNrGMniAfwMAvddGFQwEKKmN-08OmbHORL-Hivhiec_NgNvxFgdDqdQDF6L9IVTC0-c1hIY05tnxqrE/s640/jj-cartoon.jpg

4. ''உங்கள் உடம்புக்கு என்ன? உடல் ரீதியாக நீங்கள் பாதிப்பு அடைந்துள்ளீர்​களா?''



(கேள்வியை முடிக்கும் முன்பே) ''நோ நோ... எனக்கு எந்தக் குறிப்பிட்ட நோயும் இல்லை. ஐ ம் ஆல்ரைட். நான் நன்றாகவே இருக்கிறேன். மனு மேல் மனு போட்டு என்னை வெறுப்படைய​வைத்து விட்டனர். மென்டல் டார்ச்சரால் வயதான காலத்தில் எனக்கு அதிகத் தலைவலி ஏற்பட்டதைச் சொல்கிறேன்!'' 



'5. 'அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தபோது, 'ஜெயல​லிதாவின் வழக்கில் இருந்து என்னை விலகச் சொல்லி பி.ஜே.பி. மேலிடம் அழுத்தம் கொடுத்தது. அதனால்தான் ராஜி​னாமா செய்தேன்’ என்றீர்கள். இப்போது,அரசுத் தரப்பு வக்கீல் பதவி​யை ராஜினாமா செய்ததன் பின்னணி​யிலும் அரசியல் இருக்கிறது என்று சொல்கிறார்களே?''



''எனது இந்த ராஜினாமா முடிவுக்குப் பின்னால் எந்த அரசியல் கட்சியும் இல்லை. எந்த அரசியவாதியாலும் என்னைப் பணியவைக்க முடியாது. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்பது என்னோடு மோதியவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனக்கு இப்போது 78 வயது ஆகிறது. தொடர்ந்து இந்த வழக்கில் ஆஜராகி நெருக்கடிகளைச் சந்திக்க விருப்பம் இல்லை. நான் கையறு நிலையில் இருக்கிறேன். அதுதான் உண்மை!''



6. ''உங்கள் மன உளைச்சலுக்கு, வழக்கில் சம்பந்தப்​பட்டவர்கள்தான் காரணம் என்று நினைக்​கிறீர்​களா?''




''ஜெயலலிதா செய்திருக்கலாம். சசிகலா செய்திருக்​கலாம். சுதாகரன் செய்திருக்கலாம். ஏன் இளவரசிகூட செய்திருக்கலாம். குற்றம்சாட்டப்​பட்டவர்​களுக்கு நெருக்கமானவர்கள் யாராவது அந்தக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ செய்திருக்கலாம். அ.தி.மு.க. தொண்​டர்களில் யாராவது செய்திருக்கலாம். நான் உறுதியாக நம்புவது என்னவென்றால், என் மீது சுமத்தப்படும் அத்தனை அவதூறுகளுக்கும் வழக்குகளுக்கும், நான் இந்த வழக்கில் இருந்து விலக வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம் மட்டும்தான் இருந்திருக்க முடியும்!''


http://www.envazhi.com/wp-content/uploads/2012/01/j-sasi.jpg




7. ''தொடர் அச்சுறுத்தல்களுக்குப் பயந்தே, குடும்பத்​தினர் உங்களை ராஜினாமா செய்யச் சொன்ன​தாகவும் பேச்சு அடிபடுகிறதே?''

''அதெல்லாம் இல்லை. 56 ஆண்டு கால வக்கீல் தொழிலில் எத்தனையோ எதிர்ப்புகளைச் சந்தித்து விட்டேன். இதெல்லாம் சும்மா. இது நானே எடுத்த முடிவு. எனக்கு மட்டும் இன்னும் 10 வயது குறைவாக இருந்திருந்தால், நானா... அவர்களா என்று ஒரு கை பார்த்திருப்பேன். என்ன செய்வது, எனக்கு வயதாகி விட்டது. மனைவியும் பிள்ளைகளும் என்னுடைய வழக்கைப் பற்றியும், தொழிலைப் பற்றியும்கூட பேச மாட்டார்கள். ஏனென்றால் மகளும் மகனும் என்னைப் போலவே வழக்கறிஞர்கள்!''



8. ''உங்களுடைய ராஜினாமா எதிர்த் தரப்பை குஷிப்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?''




''ஓ! நன்றாகத்‌ தெரியும். 'என்னுடைய ராஜினாமா ஜெயலலிதா தரப்புக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்!’ என்று கர்நாடக உள்துறைச் செயலருக்கு அனுப்பி உள்ள கடிதத்திலும் குறிப்பிட்டு இருக்கிறேன். என்ன செய்வது..? என்னதான் போரில் ஒரு வீரன் ஜெயித்துக்கொண்டே போனாலும், ஒரு கட்டத்தில் விரக்தியும், வெறுப்பும் ஏற்படும் இல்லையா? அத்தகைய கட்டத்தில் நான் இருக்கிறேன்.''




9. ''15 ஆண்டுகளாக இந்த வழக்கு இழுத்துக்கொண்டே போகிறது. இதற்​கெல்​​லாம் என்ன காரணம்?''



''வழக்கை இழுத்தடிக்கத் தேவையான எல்லாமும் அவர்களிடத்தில் இருக்கிறது. நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா இன்னும் கூடுதல் கண்டிப்புடன் இருந்திருந்தால், வழக்கை எப்போதோ முடித்து இருக்கலாம். மனு மேல் மனு, அப்பீலுக்கு மேல் அப்பீல், வாய்தாவுக்கு மேல் வாய்தா என ஹை கோர்ட்டுக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கும் போய் இழுத்தடித்திருக்க மாட்டார்கள்!''



10. ''நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவின் செயல்பாடு எப்படி இருந்திருக்க வேண்டும் என்கிறீர்கள்?''






''ஜெயலலிதாவும் சசிகலாவும் பதில் சொல்ல இழுத்தடிக்​கிறார்கள் என்பது தெரிந்த பிறகு அதிக கண்டிப்புடன் வழக்கை அணுகி இருக்க வேண்டும்.  அரசு சிறப்பு வக்கீலாக இதைச்சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது நீதிபதியும் வரும் 31-ம் தேதியோடு ஓய்வு பெறு கிறார்!''





http://www.envazhi.com/wp-content/uploads/2012/03/JAYA-WORTHLESS-RULE.jpg
11. ''நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு கொடுக்க வாய்ப்பு இருக்கிறதா?''



''பொதுவாக,‌ நீதிபதிகளுக்கு பதவி நீட்டிப்பு கொடுப்பது இல்லை. செப்டம்பர் 1-ம் தேதி புதிய நீதிபதியை அறிவிப்​பார்கள். எனக்குச் சரியாகத் தெரியவில்லை. இந்த வழக்கின் தன்மையைக் கருதி பதவி நீட்டிப்பை மல்லிகார்ஜுனைய்யாவுக்குக் கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது!''



12. ''இனி, சொத்துக் குவிப்பு வழக்கு எந்தத் திசையில் பயணிக்கும்?''

''எனக்குத் தெரியாது. இன்னும் எத்தனை ஆண்டு காலம் இழுக்கப்போகிறார்களோ?''



13. ''ஏழு ஆண்டுகள் இந்த வழக்கில் வாதாடி இருக்கிறீர்கள். வழக்கின் அத்தனை சாதக பாதகங்களும் உங்களுக்குத் தெரியும். அதனால் உங்​களுடைய பார்வையில் எப்படிப்பட்ட தீர்ப்பு வரும்?''




''தெரியாது. தெரிந்தாலும் அதை நான் சொல்ல மாட்டேன்!'' என்றவர் ஏதோ சொல்ல முயன்றார். பின் அவரே அமைதியாகி... அடுத்த சில நிமிடங்களில் சிரித்தபடி விடை கொடுக்கிறார்.



'பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் அரசியலும் அமானுஷ்யமும் கூட்டுச் சேர்ந்து இருப்பதால் மர்மங்கள் மட்டுமே நீடிக்கிறது!’ என்பதை ஆச்சார்யாவின் மௌனமும் மர்மமும் கலந்த சிரிப்பு சொல்கிறது!

நன்றி - ஜூ வி



http://www.envazhi.com/wp-content/uploads/2012/06/jaya-marriage.jpg

ஏதோ செய்தாய் என்னை - சினிமா விமர்சனம்

http://tamilasia.com/wp-content/uploads/2012/03/Etho-Seithai-Ennai-Tamil-songs-mp3.jpgஹீரோயின் காலேஜ்ல மொத வருசம், ஹீரோ சீனியர்.. ராகிங்க்-ங்கற பேர்ல அப்பப்ப கலாட்டா பண்றார்..டெயிலி ஒரு ரோஸ் தர்றார்..ஹீரோ  ரோசாப்பூ விக்கற வாதியா? அல்லது ஹீரோயின் ரோசாப்பூ தலைல வைக்கற வாதியா? 2 ம் இல்லை. கொழுப்பு , அலும்பு தான்.. 


 ஹீரோயின் கண்டுக்கவே இல்லை.. படு கேவலமா திட்டறா.. இந்த தத்திக்கு அதெல்லாம் உறைச்சாத்தானே? ஹீரொயின் மாமா , அழகிரி மாதிரி ஒரு தாதா.. அவன் கிட்டே புகார் பண்றா.. 


இப்போ பயங்கரமான சஸ்பென்ஸ் காட்சி.. ஹீரோவும் மொத வருசம் தான் , 3 வது வருஷம்னு பொய் சொல்லி இருக்கான் ராஸ்கல். 

ஒரு தடவை ஹீரோவுக்கு கை விரல்ல அடிபட்டுடுது.. ஸ்பூன்ல சாப்பிடலாம்.. அந்த சாதாரண மேட்டர் கூட அந்த தத்தி ஹீரோயினுக்கு தெரியல.. ஊட்டி விடறா.. பதிலுக்கு ஹீரோ கொடைக்கானல்ல விடலை... ஏன்னா அவன் ஒரு விடலை.. கேனம் மாதிரி கெக்கே க்கே பிக்கேக்கேனு சிரிக்கறான். 2 பேருக்கும் லவ் ஸ்டார்ட் ஆகிடுது.. ( அதென்ன டவுன் பஸ்சா? மோட்டாரா? ஸ்டார்ட் ஆக ? )


ஹீரோயின் மாமா பெரிய தாதாவா இருந்தும் காதலை  ஏத்துக்கறார்... சஸ்பென்சாம் அடேய்.. அப்புறம் பார்த்தா அவரோட தொழில் முறை வில்லனை ஏமாத்தவாம்.ங்க்கொய்யால.. ஹீரோயினோட அண்ணனோட தொழில் எதிரி கேனம் மாதிரி ஹீரோவை கடத்தி “ உன் மாப்ளையை கடத்திட்டேன் ஹே ஹே ஹேய்” அப்டினு இளிக்கறான்.. 12 மணிக்குள்ள வந்தா  அவனை விட்டுடறேன்கறான்.. ( அவன் என்ன நடு நிசி நாயா ? பேயா?)



 http://i.ytimg.com/vi/IErQEd9UaLI/0.jpg


 இவர் போகலை.. இப்போதான் மாமாவோட  சுய ரூபம்  ஹீரோயினுக்கு தெரிது.. ஹீரோ க்ளைமேக்ஸ் ஃபைட் போட்டு படத்தையும் ஆடியன்சையும் ( 18 பேர்தான் ) முடிச்சு வைக்கறார்.. 

 பி வாசுவின் பையன் ஷக்தி தான் ஹீரோ. ஆள் இப்போ அஜித் மாதிரி வெயிட் போட்டுட்டார்.. எதுக்கு இவர் மீசைக்கும், மூக்குக்கும் ஓவர் க்ளோசப் வைக்கறாங்களோ? இவர் என்ன ஹீரோயினா?அவ்ளவ் க்ளோசப் ஷாட்ஸ் எதுக்கு? ஹீரொயின் கிட்டே வழியும் காட்சிகள் எல்லாம் ஓக்கே.., ஆனா வில்லன் கிட்டே பஞ்ச் டயலாக் பேசறது, ஃபைட் போடறது, 87 பேரை அடிக்கறது எல்லாம் ஓவர் ,ஓவரோ ஓவர்.. 


ஹீரோயின் புது முகம் லியா.. பொட்டே வைக்காத 50 மார்க் ஃபிகர்.. பல சீன்கள்ல இவர் கோபமா முகத்தை வெச்சுக்கவே ரொம்ப கஷ்டப்படறார்.. நல்லா கொழுக் மொழுக்னு தான் இருக்கார்.. ஓக்கே.. 



வில்லன்களா பூந்தோட்டக்காவல்காரன் ஆனந்த், பாடும் வானம்பாடி ஆனந்த் பாபுவும்.. ஆனந்த் ஓக்கே.. ஆனந்த் பாபு மொட்டை எல்லாம் அடிச்சு  5 உள் பனியன் போட்டு அதுக்கு மேல 2 டி சர்ட் போட்டு அப்புறமா ஒரு சட்டை போட்டிருப்பார் போல ( வில்லன்னா ஜை ஜாண்டிக்கா காட்டனும் இல்லை? )


http://www.top10cinema.com/dataimages/16320/13-08-2012-16320-1-6.jpg

42, 38, 36,38 ( மார்க்ங்க ஹி ஹி )

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. ஹீரோயின் பேக் ( நிஜமான லெதர் பேக்யா- பேடு பாய்ஸ்) உயரமான ஷெல்ப்ல இருக்கு.. ஹீரோயினால எடுக்க முடியல.. எட்டலை.. (  ஒரு அலை 2 அலை , 3 அலை ,4அலை , 5 அலை , 6 அலை, 7 அலை, 8அலை = எட்டலை)ஆனா ஹீரோ கிட்டே கேட்க கூச்சம், ஈகோ வேற.. ஆல்ரெடி சண்டை போட்டிருக்கு வேற.. ஹீரோவே வாலண்ட்ரியா மே ஐ ஹெல்ப் யூ?ன்னு கேட்கறாரு ( முறைப்படி ஆகஸ்ட் ஐ ஹெல்ப் யூன்னு தான் கேட்டிருக்கனும்? )அவர் பேக்கைத்தான் எடுத்து தர்றாருன்னு நம்பி ஏமாந்துடுச்சு பொண்ணு.. ஹீரோ ஹீரோயின் இடுப்பை பிடிச்சு தூக்கி விடறார்.. செம கிளு கிளு சீன் இது.. ( ஐடியா - நோட் பண்ணிக்குங்கப்பா)


2. ஹீரோயின் மாமாவோட அடியாள் கிட்டே “ நான் அவனை அடையாளம் காட்டறேன், நீ அவனை அடிச்சு உதச்சு ஜட்டியோட துரத்தனும்” என சொல்ல அந்த நேரம் பார்த்து ஹீரோ வெறும் ஜட்டியோட வர ஹீரோயின் தோழிகள் எல்லாம் முகத்தை திருப்பிக்கொள்ள , வில்லன் அடியாள் “ ஹலோ ஆல்ரெடி அவர் ஜட்டியோட தான் இருக்கார்.. இப்போ நான் என்ன செய்ய? என தம்பி மாதவன் மாதிரி கேட்பது செம காமெடி கலாட்டா காட்சி


3. காதலில் சொதப்புவது எப்படி  படத்தில் அடி வாங்கும் ஸ்பெஷலிஸ்ட் காமெடியன் இதிலும் அதே போல் பொண்ணுங்களிடம் அடி வாங்குவது ஜாலியாத்தான் இருக்கு 


4. ரிங்க் டைட்டா இருக்கு, கழட்ட முடியலைன்னு ஹீரோ பண்ற அட்டூழியங்கள் புரியாம லூஸ் ஹீரோயின் அவருக்கு பணி விடை செய்வதும் பின் அது காதலாக மாறுவதும்


5.  ஹலோ! யார் பேசறது? வசன நடையில் கலந்த பாட்டு சீன் 


6. ஹீரோயின் மோதிரம் காணாம போயிடுது.. ஹீரோ அந்த மோதிரம் கிடைச்சதா சொல்லி ஒரு மோதிரம் தர்றார்.ஹீரோயினுக்கு அது அவ மோதரம் இல்லைங்கறது 4 மாசம் கழிச்சு தெரிய வருது.. ஹீரோ கிட்டே போறார். மோதிரத்தை தர்றார். அப்போ ஹீரோ என்னமோ ஐ ஏ எஸ் எக்சாம் ரிசல்ட் என்னாச்சுன்னு கேட்கற மாதிரி “ என் லவ் மேட்டர் என்னாச்சு?”ன்னு கேட்கறப்ப இப்போ நான் கொடுத்திருப்பது உன்னோட மோதிரம் அல்ல, என்னோடது  என்கிறார் ( என்னுது உன்னுது, உன்னுது என்னுது  கான்செப்ட் )நல்ல கவிதையான காட்சி

 http://moviegalleri.net/wp-content/gallery/etho-seithai-ennai-movie-stills/etho_seithai_ennai_movie_stills_sakthi_vasu_liya_sree_5ea2aea.jpg




 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. எல்லா இயக்குநர்களுக்கும் பொதுவா ஒண்ணு சொல்லிக்கறேன் ஹாலிவுட் படம் சுடற மாதிரி இருந்தா ஒரே டி விடியை 9 பேர் சுடாதீங்க..  ஒரே விதமான காட்சி அமைப்புகள் எத்தனை படத்துல பார்ப்பது?



2. தாதா,  ரவுடி யாரா இருந்தாலும் சரி பகையை தீர்க்க அவனவனைத்தான் கொல்வான்.. இப்படி லூஸ்மாதிரி தங்கச்சி மாப்ளை, மாமா பொண்ணோட மச்சான் இப்படி எல்லாம் கடத்திட்டு இருக்க மாட்டான்.. கேனத்தனமா திரைக்கதை எழுதறதை நிறுத்துங்க.. பெஞ்ச்  ரசிகர்கள் எல்லாம் படு கேவலமா நக்கல் அடிக்கறாங்க..


3. ஹீரோயினால உயரமான ஷெல்ஃப்ல இருக்கும் அவரோட காலேஜ் பேக்கை எடுக்க முடியலை, ஹீரோ அதை எடுத்துத்தர உதவி பண்ற மாதிரி ஒரு சீன். அப்போ அந்த இடத்துலயே ஒரு பெஞ்ச் இருக்கு.. அதை ஆடியன்ஸ் கண்ல காட்டாம அக்கட்ட தூக்கிப்போட்டிருக்க வேணாமா? ஒரு ஆள் கேட்கறான் - அந்த பொண்ணு என்ன  கபோதியா? பெஞ்ச் மேல ஏறி நின்னு எடுக்காதா?”


4. ஹீரோவுக்கு வலது கைல ஒரு விரல் அடிபட்டிருக்கு, 2 நாளா சாப்பிடலைன்னு ரீல் விடறப்போ ஒரு காதலியா, தோழியா இருந்தாக்கூட  அதை நம்பி ஊட்டி விட்டா ஓக்கே, ஆனா ஆல்ரெடி 2 பேருக்கும் வாய்க்கா தகராறு இருக்கு,.,. அப்படி இருக்க அந்த லூஸ் அதை நம்பி ஊட்டி விட்டுட்டு இருக்கே, ஏன்?



5,. ஹீரோயின் ஒரு கேட்பரீஸ் பைத்தியம்.. 2 பேரும் லவ்வறாங்க.. ஹீரோவுக்கு அந்த லூஸ் ஒரு சாக்லெட்  பைத்தியம்னு தெரியும் தானே?எப்பவும்  சாக்லெட் வாங்கி ஸ்டாக் வெச்சுக்க மாட்டான்? ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு போறாங்க..  என்னனெமோ ஹீரோ ஆர்டர் பண்றார். ஹீரோயின் எனகு சாக்லெட் தான் வேணும்கறா.. உடனே ஹீரோ என்ன பண்ணனும்? பேரர் கிட்டே 10 ரூபா குடுத்து சாக்லெட் வாங்கிடு வான்னு அனுப்பி இங்கே அவன் கடலை பிஸ்னசை நடத்தனும், அதை விட்டுட்டு தொங்கா தொங்கான்னு 2 கிமீ ஓடறான்.. அப்போ வில்லன் வர ஹீரோயின் தனியா மாட்டிக்கறா.. உஷ் அப்பா முடியல.. 


6. ஹீரோவை வில்லன் ஆளுங்க 30 பேர் 45 இரும்புக்கழியால அடிக்கறாங்க.. ஹீரோ சாக இருக்காரு, ஆனா ஹீரோயின் கிட்டே வந்து சேர்ந்துடறாரு.. உனக்கு ஏதும் ஆகலையேன்னு ஹீரோயின் பதற ஹீரோ கேனம் மாதிரி  சாக்லெட் எடுத்து தர்றார்... அடேய் அது ரொம்ப முக்கியமா இப்போ?



7. படத்துக்கு சம்பந்தம் இல்லாம சைடு வில்லன் அவன் சைடுல படுத்திருக்கும் தன் சம்சாரத்துக்கு  மெட்டி மாட்டி விட்டு, பொட்டை சரி செஞ்சு என்னென்னெமோ பண்றான், அவனை போலீஸ் பிடிச்சுட்டு போனதும் அந்த பத்தினி வந்து வில்லன் வீட்டு கேட் முன்னால நின்னு சாபம் தர்றா, 2 ரீல் வேஸ்ட்,, படத்துக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? ( அந்த பில்டப் பார்த்து சைடு வில்லனோட சம்சாரத்துக்கும், மெயின் வில்லன் க்கும் ஏதோ கில்மா சீன் இருக்குன்னு நம்பி ஏமாந்துட்டோம் )

http://chennai365.com/wp-content/uploads/movies/Etho-Seithai-Ennai/Etho-Seithai-Ennai-Stills0953Ff04326.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  இந்த ரோஸ் வாங்குன காசுக்கு குவாட்டர் வாங்கி இருந்தா எனக்காவது யூஸ் ஆகி இருக்கும்.. 



2. இந்த கிளாஸ்ல 36 பசங்க இருக்காங்க, ஆனா 6 பொண்ணுங்க தான் இருக்காங்க,..  3:1 என்ற குறைந்த பட்ச விகிதம் கூட இல்லை.. என்னடா காலேஜ் இது?பலாப்பழத்தை ஈ மொய்க்கறது மாதிரி இனி எல்லாம் அட்டு ஃபிகர மொய்ப்பானுங்களே?


3. பாடம் நடத்த வந்தானா? சுண்ணாம்பு அடிக்க வந்தானா? இந்த  காட்டு காட்ரான் லெக்சரர்? இங்கே படிச்சா நாம உருப்பட்டுடுவோம் போல.. அது நடக்கக்கூடாது



4. முதல்ல ரெட் ரோஸ் தந்தேன், அப்புறம் ஒயிட் ரோஸ் தந்தேன், இப்போ எனக்குப்பிடிச்ச  யெல்லோ  ரோஸ் தர்றேன்.. எனக்கு பிடிச்சது இந்த ரோஸ் மட்டும் இல்லை, உன்னையும் தான் 


5. காலேஜையே கலக்கனும்னு நினைச்சேன், இப்போ காலேஜ் வரனும்னு நினைச்சாலே அடி வயிறு கலங்குது

 ஏன் பெண்ட் பண்ணி பண்ணி நடக்கறீங்க?

 வாங்குன அடி அப்படி, அலைன்மெண்ட்டை மாத்திட்டானுங்க.. 



6. இந்த பசங்களே இப்படித்தாண்டி, இப்படித்தான் ஒரு நாள் ஒருத்தன் என்னையே நாய் மாதிரி மோப்பம் பிடிச்சுட்டு பின்னாடியே வந்தான்.. நான் என்ன செஞ்சேன் தெரியுமா?


 உன் சர்ட்டை கழட்டி அவன் கிட்டே கொடுத்துட்டியாக்கும்?



7. நான் சொல்ற மாதிரி செய்.. அவன் சட்டையை கழட்டி, பேண்ட்டை கழட்டி.. 

 அய்யோ

 அவ்ளவ் தான்..  அதுக்கு மேல வேணாம்.. 




8. XQS மீ சார்.. 


 அடிபட்ட பிறகு தமிழே சரியா புரிய மாட்டேங்குது, இதுல இங்கிலீஷ் வேறயா? 


 9.  சார், வாமிட் வர்ற மாதிரி இருக்கு. கொஞ்சம் பர்மிஷன் கொடுத்தா போய்ட்டு வந்துடுவேன்

 நோ, நான் ரொம்ப கண்டிஷன்



உவ்வே

 சரி சரி போ 



10. வாமிட் பண்றேன்னு போனவன் அந்த பொண்ணை வாமிட் எடுக்க வெச்சுடுவான் போல இருக்கே?


11. என் ஃபிரண்ட் ரொம்ப நல்லவன், மானம், வெட்கம், ரோஷம் எதும் அவனுக்கு கிடையாது

 அய்யய்யோ, நீங்க சொன்னது அவனுகு கேட்டுட்டுச்சு போல, போறார்

 போகட்டும், அதுக்குத்தான் சொன்னதே


12. கணக்கு வாத்தியார்னு நினைச்சு வந்தோம், கராத்தே வாத்தியார் போல 


http://cdn3.supergoodmovies.com/FilesFive/0786ff977c5847f0aaae43c7cd4130f4.jpg




 சி .பி கமெண்ட் -  டி வி ல போட்டா பர்க்கலாம், இல்லை பார்த்தே ஆகனும்னு அடம் பிடிக்கறவங்க இடைவேளையோட எந்திரிச்சு ஓடி வந்துடுங்க ஏதோ செய்தாய் என்னை - படத்துல கடைசி வரை யாரும் எதையும் செய்யலை, அப்புறம் எப்படிய்யா படம் ஓடும்?

 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்


 ஈரோடு அன்னபூரணில படம் பார்த்தேன்

ஈரோடு அன்னபூரணி டி டி எஸ் தியேட்டரில் டிக்கெட் பிரிண்ட் பண்ணக்கூட காசு இல்லாததால் இதைக்கொடுத்தனர்#அய்யோ பாவம் ஏழை


டிஸ்கி -

1. பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம் - சினிமா விமர்சனம் 

http://www.adrasaka.com/2012/

08/blog-post_17.html

 

2. . EK THA TIGER - ரொமான்ட்டிக் ஆக்‌ஷன் - பாலிவுட் சினிமா விமர்சனம் 

3. அட்டகத்தி - சினிமா விமர்சனம்

4. நான் - NON-STOP க்ரைம் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

 

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrF0S3zmfZba1xd2UqxpGGot571qKOOb2OjWeCDsP4Ajdsm369MuwNaoPyCEt8VJpNtMEhSCXZtpLFigOSl03e8R3q8Ypq4BSPDs2EPofoxwhD0KLqdz3CEsAlFYhhMFedD-XgOBJSUIA/s1600/Etho+Seithai+Ennai+%25282012%2529+Tamil+Mp3+Songs+Free+Download.jpg

 

நடுநிசி நோய்கள்

இனிய காலை வணக்கம் நண்பர்களே...-vikki
1. சரியான நேரத்திற்கு அந்த வேலையை நான் செய்யாவிட்டால் சோம்பேறி என்று அழைக்கப்படுவேன்.அதே வேலையை என் பாஸ்(முதலாளி) செய்யாவிடில் அவர் பிஸியாம்.எல்லாத்துக்கும் பொசிஷன்தான் முக்கியம்.

.....................................



காலேஜ் ராக்கிங்க்ல 


2. சீனியர் ஸ்டூடண்ட்: உன் மேரேஜ்க்கு வருவேன், உன் ம்னைவியை கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணுவேன். நீ என்ன பண்ணுவே?



ஜூனியர் ஸ்டூடண்ட்: ஒண்ணும் பண்ண மாட்டேன். ஏனா, நான் கட்டிக்க போறதே உன் தங்கச்சியைதானே.



...........................................


3.  ஒவ்வொரு முட்டாளுக்கும் , அவனுக்கு சமமான எதிராளியாக ஒரு முட்டாள் இருப்பான். உனக்கு நானும், எனக்கு நீயும் நண்பனாக இருப்பதுப்போல்.

.........................................




4.  ஸ்பீடா போற வண்டியை ரொம்ப ஸ்பீடா போய் ஓவர்டேக் பண்ணலாம். ஆனா, ஸ்லோவா போற வண்டியை ரொம்ப ஸ்லோவா போய் ஓவர்டேக் பண்ண முடியுமா? NH-ல 8 போட்டு  GHல  பெட்டு(ஏ) போட்டு யோசிப்போர் சங்கம்.

.........................................



5. +2ல ஃபெயில் ஆனா வேட்டைக்காரன் அனுஷ்கா மாதிரி ஃபிகர் மாட்டும்... 10 ல ஃபெயில் ஆனா படிக்காதவன் தமன்னா மாதிரி ஒரு ஃபிகர் செட் ஆகும். அரியர் வெச்சா வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டி மாதிரி ஒரு பொண்ணு செட் ஆகும். நல்லா படிச்சா காதல் கொண்டேன் தனுஷ் நிலைமைதான். அதனால, சுமாரா படி.., சூப்பர் ஃபிகர் பிடி.

....................................................






6. போகும்போதே என்னை ரசித்துவிட்டுப்போ. திரும்ப வரும்போது நான் இருக்கமாட்டேன். இப்படிக்கு, வாழ்க்கை.


.....................................................

7. எப்போதும் சந்தோஷமாக இரு. உன்னை பார்த்து கவலையே கவலைப்படும்.

....................................

8. பேச 1000 இருந்தும் பேச முடியாமல் தவிக்கும் அந்த இன்பமான வல்தான் பல்வலி..., உங்க டூத் பேஸ்டுல உப்பு இருக்கா?

......................................



9.  Dr. எனக்கு மூச்சுவிட சிரமமா இருக்கு.

அவ்ளவ் சிரமப்பட்டு ஏன் மூச்சுவிடனும்? நிறுத்திடுங்க.

...................................................



10. நம்மை, நம் படைப்பை ரசிக்க ஒருத்தி இருக்கிறாள் என்பதை தவிர வேறேன்ன வேண்டும் வாழ்வை ருசிக்க?!

.............................................





11. நாங்களே 6வது முறையா ஆட்சிக்கு வந்தால்?

தமிழ்நாட்டை, யாராலும்  ஏழேழு ஜென்மத்துக்கும் காப்பாத்த முடியாது.

.............................................



12 உங்க பையனுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லையே ..., பின்ன எப்படி 2ஜி பிரச்சனைல மாட்டிக்கிட்டான்னு சொல்றீங்க?

ராஜி(RAJI), ன்ற  பொண்ணை லவ் பண்றதுசுஜி( SUJI)ன்ற பொண்ணுக்கு தெரிஞ்சு போச்சு.

.............................................

13. நடிகை: ஃபேஸ்புக் அட்ரஸ் வேணும்ன்னு ரசிகர்கள் ரொம்ப வேண்டி விரும்பி கேட்கறாங்க..., சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க

நிருபர்: அப்படியே உங்க ஹிப் புக் அட்ரஸ், செஸ்ட் புக் அட்ரசையும் சொல்லிடுங்க.


.....................................



14. ட்விட்டர். குவாட்டர் என்ன வித்தியாசம்?

ட்விட்டர்னா 140 (லெட்டர்ஸ்), குவார்ட்டர்னா 180 மிலி.



....................................................




15. டைரக்டர் சார்,2ஜியை மையமா வெச்சு படம் எடுக்க போறீங்களா?



ஆமா, ராணி முகர்ஜி  ஹீரோயின், நமீதாஜி வில்லி.

............................................



16. டாக்டர் என் துரதிர்ஷ்டம் பாருங்க.., 24 மணிநேரமும் விடாம லொக் லொக்னு இருமல் வருது.

ஓஹோ அதிர்ஷ்டம் இருந்த லக், லக்ன்னு இருமல் வருமா?

......................................................

17. டாக்டர், டெய்லி மிட் நைட்ல எனக்கும் என் மனைவிக்கும் தூக்கம் வர்றதில்லை.



ஹிஹி இது எல்லாருக்கும் இருக்குற நடுநிசி நோய்கள்தான்.

..............................



18. என் லவ்வர் வீட்டு ஃபிரிட்ஜ்ல எப்பவும் 4 பீர் பாட்டிலாவது ஸ்டாக்  இருக்கும்.

ஓஹோ இதுதான் காதலர்”குடி”யிருப்புன்னு சொல்லுவாங்களா?.

..................................................




19. சார், உங்க கம்பெனில வாட்ச்மேன் வேலையை ரிசைன் பண்றேன்.

ஏன்?

மாசாமாசம் சம்பளமா ஒரே ஒரு வாட்ச் மட்டும் தர்றீங்க.அது எப்படி பத்தும்?

............................................



20. மன்னா! மாதம் மும்மாரி பொழிகிறதோ இல்லயோ உங்க அந்தப்புரத்தில் அழகிகளிடம் உம்மா மாரி பொழிகிறீர்கள்.



--------------------------


இறைவா............. இதிலும் கலப்படமா.................!!!!!
!!!!

Friday, August 17, 2012

பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம் - சினிமா விமர்சனம்

http://www.mystills.net/wp-content/uploads/2012/07/pandi-oli-perukki-nilayam-movie-audio-launch1-15.jpg

பூ மகள் ஊர்வலம், பாண்டி, மாயாண்டி குடும்பத்தார், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் என்று வரிசையா இயக்குநர் ராசு மதுரவனுக்கு ஏறுமுகம்.. குறிப்பா  இவர் படங்கள் பழைய விசு படங்கள் லெவல்ல இருக்கறதா நல்லா பேரு வாங்கிட்டாரு.. இந்தப்படம் எப்படின்னு பார்ப்போம்.. 


மாயாண்டி குடும்பத்தார்  ஹீரோ மாதிரி இந்தப்பட ஹீரோவும் மைக் செட் காரர். இப்பவெல்லாம் கிராமத்துப்படம்னா  மைக் செட் தான் ஃபேஷன் போல.. ஹீரோயின் சுனைனா . சின்னத்தம்பி குஷ்பூ மாதிரி இவருக்கு 4 கேனை கம் ரவுடி அண்ணன்க.. ஊர்ல யாராவது சுனைனாவை சும்மா பார்த்தா போதும்.. சைட் அடிச்சா போதும் உடனே பப்ளிக் டாய்லெட்டை 4 நாட்கள் வாஷ் பண்ணனும்.. இதான் கேவலமான தண்டனை../


ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் 3 முறை சந்திப்பு நடக்குது.. அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள்


http://birlaa.com/pics/wp-content/uploads/2012/07/sunaina-homely-saree.jpeg


1.ஹீரோ எதுக்கோ டாஸ் போடறாரு.. அது 2 கிமீ தூரத்துல ஸ்கூட்டில போய்ட்டு இருக்கற ஹீரோயின் டி சர்ட்டுக்குள்ளே விழுந்துடுது ( 34 வது படம் இப்படி விழுவது)


2. ரோட்ல பஸ்டாப்ல நிக்கற குழந்தைக்கு புட்டிப்பால்ல பால் குடுக்கும்போது அந்த ஃபீடிங்க் ரப்பர் ஸ்லிப் ஆகி ஹீரோயின் கொண்டைல போய் நச்சுன்னு ஃபிட் ஆகிக்குது.. ( நல்ல வேளை.. )


3. சாவிக்கொத்தை கைல வெச்சு விளையாட்டா சுத்திட்டு இருக்காரு.. அது மிஸ் ஆகி மிஸ்சோட ஜீன்ஸ் பேண்ட் சைடு பாக்கெட்ல போய்  லாக் ஆகிக்குது ( பூட்டு - சாவி டைரக்‌ஷன் டச்சாம் )ர்


 இந்த 3 கேவலமான சந்திப்பில் நடந்த வாக்குவாதத்தில் ஹீரோயினுக்கு லவ் வந்துடுது..  எல்லாரும் நல்லா நோட் பண்ணிக்குங்க.. இந்த மாதிரி நிஜ வாழ்வில நாம செஞ்சா செருப்படி தான் கிடைக்கும்  அதுவும் ஹை ஹீல்ஸ் செப்பல் அடி.. 


2 பேரும் ஊர்ல எல்லாரும் பார்க்கற மாதிரி லவ்வறாங்க.. அண்ணன்க வில்லனா வருவானுங்கன்னு பார்த்தா அவங்க விக்ரமன் பட ஹீரோ மாதிரி அம்புட்டு நல்லவரா இருக்காங்க. லவ்க்கு ஓக்கே... ஹீரோயினுக்கு 2 லூஸ் முறை மாமனுங்க இருக்காங்க.  அவனுங்களும் எங்கிருந்தாலும் வாழ்கனு சொல்லிடறாங்க.. 


 அப்புறம் யார் தான்யா வில்லன்? எப்படித்தான் கதையை நகர்த்த? 17 அசிஸ்டெண்ட் டைரக்டர்சையும்  ரூம் போட்டு யோசிக்க சொல்றாரு.. ஆ!!!! ஐடியா.. ஆரம்பத்துல அண்ணன்களால அவமானப்படுத்தப்பட்டு  டாய்லெட் க்ளீன் பண்றானே அவனை வில்லனா போட்டு  ஹீரோயினை கொலை பண்ணிடறாங்க.  படத்துல கதையையே கொலை பண்ற ஆட்களால ஹீரோயினை கொலை பண்ண முடியாதா?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmGgo_Dkae8TZyTjn5La3zUaAGDVFoKA5gnanEFr4ZEMYeG8nSsxZvLBJiXu8pLVdRkKwNZSCHK9r8fW5xL4zzlo2UKj0VnFOgC9-4VKqdvUFCkjMINR3Xdjk3PKlwI_I3KaReBzZ8ptMa/s1600/Sunaina-CloseUp.jpg


 ஹீரோ தலைல நங்க்னு ஒரு அடி.. ஆள் ஆல்ரெடி கேனம் மாதிரி இருந்த ஹீரோ நிஜமாலுமே கேனம் ஆகிடறாரு.. பூந்தோட்டக்காவல் காரன் , செந்தூரப்பூவே விஜய்காந்த் ரேஞ்சுக்கு ஹீரோவை காட்ட நினைச்சிருக்காரு இயக்குநர் .

 உஷ் .. அப்பா முடியல.. படம் போடும்போது 49 பேர் இருந்தாங்க.. முடியும்போது 28 பேர்தான் இருக்காங்க.. பாதிலயே வெளிநடப்பு போல,


 ஹீரோ யாரோ ஒரு தயாரிப்பாளர் பையன் போல. தாடி வெச்ச கேடி போல் எண்ணெயே பார்க்காத தலையுடன் படு கேவலமா இருக்கார்.. நோ கமெண்ட்ஸ்..

 அடுத்து சுனைனா.. இவர் ஒரு உதட்டழகி.. மாநிற மேனி. தாவணியில் அழகாக வலம் வந்தால் அழகா இருப்பார்.. கேரக்டரைசேஷன் எடுபடலை.. 

தம்பி ராமையா குணச்சித்திர நடிப்பு ஓக்கே . கருணாஸ், வையாபுரி மொக்கைகள் முடியல.. புரோட்டா புகழ் சூரி பன்ற 2 மொக்கை காமெடி கொஞ்சமே கொஞ்சம் ரசிக்க வைக்குது..






இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. படம் எப்படியும் போணி ஆகாதுன்னு தெரிஞ்சுக்கிட்டு சுனைனாவை வெச்சு ஆத்துல ஒரு குளியல் சீனை எடுத்து அதை  மாலை மலர், மாலை முரசு மாதிரி பத்திரிக்கைக்களுக்கு குடுத்து கிளாமர் இருக்குன்னு ஒரு தோற்றத்தை
 ஏற்படுத்துனது ( ஆனா எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.. )


2. படத்தை போட்டுப்பார்த்துட்டு உங்களுக்கே சந்தேகம் வந்து அவசர அவசரமா  படத்துக்கு சம்பந்தமே இல்லன்னாலும் பரவாயில்லைனு தம்பி ராமையாவுக்கு ஒரு கிளைக்கதை ரெடி பண்ணி அவர் மகன் லவ்வரோட ஓடிப்போற மாதிரியும், அதை ஹீரோ தடுத்து நல்ல புத்தி சொல்லி கூட்ட்டிட்டு வர்ற மாதிரியும் எடுத்து அதை படத்தோட படாத பாடு பட்டு சிங்க் பண்ணது..


3. சிங்கம் புலி, புரோட்டா சூரி இவங்க 2 பேரையும் புக் பண்ணுனது.. ஓரளாவாவது படத்தை பார்க்க முடியுதுன்னா  அது இவங்க 2 பேர் காமெடியால தான்.


.4. ஹீரோயின் எடுத்துக்குடுத்த ஜீன்ஸ் பேண்ட்டில் ஃபேஷன் கிழிசல்களை பார்த்து ஓட்டை பேண்ட்டை ஏமாத்திக்குடுத்துட்டே என சண்டை போடும் காட்சிகள் ஆல்ரெடி பல படங்களில் பார்த்திருந்தாலும் ஓரளவு சிரிப்பு வருது


5. ஆத்துல குளிக்க வந்த அக்கா மகளை பார்த்தேன், அழகான நிலவை மெலோடி சாங்க் என 2 பாட்டுக்கள் செம ஹிட் ரகம்



http://1.bp.blogspot.com/-WjruIfxCu5c/T_sUCqP7ruI/AAAAAAAAL-Q/icNceZFPOk0/s1600/Sunaina+hot+in+green+bra,+Sunaina+without+saree,+Sunaina+in+bra.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்


1. எங்க ஊர்ல எல்லாம் பேட்டா செருப்பு கம்பெனி புரொடக்‌ஷன் அதிகமா பண்ண வேண்டி இருந்தா சப் காண்ட்ராக்டர்ஸ் கிட்டே செப்பல் மேனுஃபேக்சர்க்கு ஆர்டர் குடுத்து   அவங்க கிட்டே செப்பல் வாங்கி 10 ரூபா கூலி குடுத்து அதை பேட்டான்னு பேர் போட்டு 399 ரூபாக்கு விற்பாங்க.. அந்த மாதிரி யாரோ ஒரு உதவி இயக்குநரை இயக்கச்சொல்லி உங்க பேரை போட்டுக்கிட்டீங்களா?


2. உங்களுக்குன்னு ஒரு பேரு, மதிப்பு, மரியாதை இருக்கு.. அதை ஏன் கெடுத்துக்கறீங்க?நாளை நல்ல படமே எடுத்தாலும் நம்பகத்தன்மை வருமா? அடுத்த படத்துக்கு ஓப்பனிங்க்குக்கு என்ன பண்ணப்போறீங்க?


3.  காமெடி ஸ்க்ரிப்ட் எழுத ஆளே சிக்கலையா? முல்லா கதைகள், பீர்பால் கதைகள் எல்லாம் படிச்சுட்டு அரதப்பழசான  மொக்கைகளை வெச்சு காமெடிங்கற பேர்ல ஏன் இப்படி கொலையா கொல்றீங்க?


4. கருணாஸ் உயரமே  5 அடி 2 அங்குலம் தான்.. அவர் உயரம் குள்ளமா இருக்கறவரை கிண்டல் பண்ணி காமெடி பண்றாரு.. சகிக்கலை.. உடல் ஊனமுற்றவர்கள் சாரி. மாற்றூத்திறனாளிகளை நக்கல் அடிக்கும் காமெடியை நிறுத்துங்க.. முதல்ல.. 


5. கேட்டுக்கோடி உருமி மேளம் பாட்டை ரீமிக்ஸ் பண்ணுனது மகா கோரம்.. முடியலை.. அதைக்கூட மன்னிச்சுடலாம்.. அந்த பாட்டை ஃபாரீன்;ல போய் எடுத்திருக்கீங்க.. ஃபாரீன்கேர்ள்ஸ் நடனத்தோட.. ஷூட்டிங்க் பார்த்த ஃபாரீன்காரங்க தலைதலையா அடிச்சு இருப்பாங்க.. ( அவங்க தலைல தான் )


6. இது சும்மா காமெடிக்காக -ஓப்பனிங்க் ஸாங்க்ல பல்லவி முதல் லைன் - 6 மாசம் முன்னாடி பார்த்த சரோஜா, நீ அப்படியே இருக்கியேடி அழகு சரோஜா ..அப்படின்னு லைன்ஸ் போட்டுட்டு சரணத்துல பத்தாம் வகுப்பு ஒண்ணா படிச்சப்போ பார்த்த சரோஜான்னு வருதே.. எப்படி?

http://www.abimani.com/wp-content/gallery/pandi-oli-perukki-nilayam-movie-hot-stills/pandi-oli-perukki-nilayam-movie-hot-stills-1.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்


1.   கடுகு 100 குடுங்க..

 ஓக்கே

 நோ இப்படி இல்லை.. கவுண்ட்டிங்க்ல 100 வேணும்./

 அடேய்

 எது வாங்குனாலும் எண்ணிப்பார்த்து வாங்குன்னு முதலாளி சொல்லி இருக்காரு



2. சாம்பார்ல உப்பு இருக்கா?ன்னு பாரு


 பார்த்துட்டேன், இல்லை முதலாளி..


 கொஞ்சம் உப்பு எடுத்து போடு



 போட்டாச்சு முதலாளி..

 இப்போ இருக்கா?ன்னு பாரு..

 இப்பவும் இல்லை முதலாளி..


இதே மாதிரி6 டைம் போட்ட பின்

 அடேய் இங்கே வெச்சிருந்த 5 கிலோ உப்பு எங்கேடா?


----.....

 உனக்கு மண்டை இருக்கே? அதுல மூளை இருக்கா?



3. உலகத்துல சல்லடை போட்டு தேடுனாலும் உன்னை மாதிரி முட்டாள் கிடைக்க மாட்டான்.. ஒரு வகைல எனக்கு என்ன சந்தோஷம்னா என்னை எதிர்த்து ஒரு நாளும் நீ கடை போட மாட்டே..


4. காசு வாங்கனும்கறதுக்காக பொய்யா அழுவாதே./.


 ம்க்கும், அவன் கிட்டே காசை கொடுத்துட்டா அப்புறம் நீ அழுவியே?



5. நீ லூஸ்னு அவன் சொல்றான்.. அது உண்மையா?


 அவன் என்ன சொல்றது? நான் சொல்றேன்.. நல்லா கேட்டுக்குங்க. நான் லூஸ் தான்..



 6. மிஸ்.. 2 பேர்ல யார் போடறதுன்னு நீங்க தான் முடிவு பண்ணனும்..


என்னது?

 ஐ மீன்.. மைக் செட் போடறதுல யார்னு நீங்க தான் முடிவு பண்ணனும்.. டாஸ் போட்டோம். அது உங்க டி சர்ட்ல விழுந்துடுச்சு

 யோவ், இது என்ன உண்டியலா? சரி இந்தா..

 அடடா.. பூவா? தலையா? பார்க்காமயே குடுத்துட்டீங்க?






7. அவ பொண்ணுதான் சிவப்பு.. ஆனா அவங்கண்ணன்க அடிச்சாக்கா ரத்தச்சிவப்பு


8. ஜெயிலரை விட ஜெயிலுக்குள்ளே அதிக நாள் இருந்தவன் அவ மாமன்


9. ஏங்க ஏங்க.. நில்லுங்க.. இவ்ளவ் வேகமா போனா எப்படிங்க பால் குடிக்க முடியும்?


 வாட்?



குழந்தை பால் குடிக்கறப்போ ரப்பர் உங்க தலைல விழுந்துடுச்சு./. அதை எடுக்கலாம்னு பார்த்தா இவ்ளவ் வேக,மா போனா எப்படிங்க?


10. அளவா இருந்தாலும் நம்மளை மாதி மைக் செட் ஆளுங்களை   இழவு வீடுதான் வாழ வைக்கும்


http://www.movieballet.com/wp-content/uploads/2012/03/sunaina-10.jpg



11. எப்போ பார்த்தாலும் பழைய வண்டிக்கே ஆசைப்படறியே, ஏன் ? ( டபுள் மீனிங்க் )


எத்தனை புது வண்டி வந்தாலும் புல்லட் மாதிரி வருமா? நீ வேணா பாரு.. இந்த குஜராத் காரிய ஐ மீன் குஜராத் வண்டியை நான் சொந்தமாக்கப்போறேன்


12. ஒரே வாய்ல 20 இட்லி சாப்பிடுவேன்.. பந்தயமா?

 ம் .. பெட்..

 நல்லா பார்த்துக்க . இந்த ஒரு இட்லி சாப்பிட்ட இதே வாயால ஒவ்வொண்ணா மீதி 19 இட்லியையும் சாப்பிடறேன்


13. ஹலோ மிஸ்.. நில்லுங்க.. நான் தொறக்கனும்

 என் கிட்டே என்ன திரக்கப்போறீங்க?


 என் சாவி உங்க இடுப்புல மாட்டிக்கிச்சு



14. சாணியை தொட்டு புரோட்டா சாப்பிடறேன் .. பந்தயமா?

 ம்


 இடது கையால சாணியை தொட்டுக்கறேன். வலது கையால  புரோட்டா சாப்பிடறேன், எப்படி?


15. ஹீரோயின் - உனக்கும் எனக்கும் மேரேஜ் ஆகாம இருக்கலாம்,. ஆனா எனக்கும் உனக்கும் மேரேஜ் ஆகிடுச்சு ( யாருக்காவது புரிஞ்சுதா/? )




16.  யோவ்,. இன்னும் 2 நாள்.. ரெண்டே நாள்ல உன்னை கதற கதற..


 அய்யய்யோ..


 காதலிக்க வைக்கறேனு சொல்ல வந்தேன்யா.. ஏன் பதர்றே?



17. யோவ், என்னய்யா,வாய்ல வாய் வெச்சு  தண்ணியை எடுப்பேன்னு பார்த்தா?

 எனக்கு நீச்சல் தெரியாது.. நீ சொல்ற மாதிரி செய்ய நீ என்ன பம்ப் செட்டா?


18. அறிவே இல்லாத உனக்கு ஏழாம் அறிவு கெட்டப்பா?



19. சிங்கம்புலி - வில்லன் ஆட்கள் உதைக்க பறந்து வந்து ஒரு கில்மா லேடியின் கன்னத்தில் பட்டு



 ஃபிளையிங்க் கிஸ் கேள்விப்பட்டிருக்கேன். இப்போதான் முத முறையா குடுக்கறேன், ஆஹா!



20. டேய், வீரப்பா, நம்பியார், அசோகன், எல்லா வில்லன்களும் அந்த வீட்ல தான் இருக்காங்க


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVP4z_kJ9lVpIVfjaLowNsN8TD8kFLkvTyIPTisz5JBmZoU9UhUmeVF61P_ei3k8X01D4gRmyYAWu2zuXnEV-N0tGbnQagLzzHkmRQLA3SwI2DIx50C20hXCZZPWsJPInYDYiXK8a1mouc/s1600/Sunaina-hot-cleavage.jpg



21.  முடி இருந்தா உறவு நீடிக்கும் மேடம்..



 யோவ்.. அப்போ ஏன் இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை, இலங்கைப்பிரச்சனை வருது? லாரி நிறைய முடி லோடு ஏத்தி அனுப்பி உறவை நீடிக்க வைக்கலாமே?


22. இங்கே எல்லா விதமான பிரியாணியும் கிடைக்கும்.. நிற்பன, நடப்பன, பறப்பன, ஊர்வன


 அப்போ ஏரோபிளான் பிரியாணி குடு , அதும் பறக்கறதுதானே?


23. கருணாஸ் - நான் பண்ணுனது சரியா?

 நீ அந்தப்பொண்ணு கிட்டே செஞ்சதுல குழந்தை மட்டும் தான் பிறக்காது , மத்ததெல்லாம் ம் ம் ஆகி இருக்கும்



24. அடுத்தவங்களூக்காக எப்போ நீ கவலைப்படறியோ அப்பவே நீ பெரிய ஆள் ஆகிட்டே..




சி.பி கமெண்ட் - டி வி ல போட்டாக்கூட பார்த்துடாதீங்க.. மரண மொக்கை.. ஈரோடு ஆனூர் தியேட்டர்ல பால்கனி வழக்கமா 50 ரூபா தான். ஆனா இன்னைக்கு 70 ரூபாயாம்.. பழிக்குப்பழி  தியேட்டரை விட்டு வெளீல வர்றப்போ 50 பேரை வீட்டுக்கு திருப்பி அனுப்பிட்டுதான் வர்றேன்.ஒரு நல்ல படத்தை போய்ப்பாருங்கன்னு சொல்ற  உரிமை இருக்கும்போது ஒரு குப்பைப்படத்தை பார்த்து அவங்க காசு வேஸ்ட் ஆகக்கூடாதுன்னு நினைக்கறதும் ஒரு சமூக சேவை தான்.



 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 38


 குமுதம் ரேங்க் - சுமார்

http://moviegalleri.net/wp-content/gallery/pandi-oli-perukki-nilayam-movie-stills/pandi_oli_perukki_nilayam_movie_stills_sabarish_sunaina_2279e53.jpg


 டிஸ்கி -

1. EK THA TIGER - ரொமான்ட்டிக் ஆக்‌ஷன் - பாலிவுட் சினிமா விமர்சனம் 

 

2. நான் - NON-STOP க்ரைம் த்ரில்லர் - சினிமா விமர்சனம் 

http://www.adrasaka.com/2012/

08/non-stop.html

 

3. அட்டகத்தி - சினிமா விமர்சனம் 

http://www.adrasaka.com/2012/

08/blog-post_15.html
--

 

 http://tamilogallery.com/albums/Sunaina/Sunaina_Hot_Photos4.jpg

EK THA TIGER - ரொமான்ட்டிக் ஆக்‌ஷன் - பாலிவுட் சினிமா விமர்சனம்

http://media1.santabanta.com/full1/Bollywood%20Movies/Ek%20Tha%20Tiger/ek-tha-tiger-6a.jpgஇந்திய விஞ்ஞானி  நம்ம அப்துல் கலாம் மாதிரி ஒரு சயிண்ட்டிஸ்ட். அவர் சில டெக்னாலஜி ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பார்சல் பண்ணி அனுப்பறதா இந்திய அரசு சந்தேகப்படுது.. அதை கண்டு பிடிக்க ஹீரோவை அனுப்புது.. ஹீரோ ஒரு ரகசிய ஏஜெண்ட்.. பேரு. டைகர் . எங்க ஊர்ல எல்லாம் நாய்க்குத்தான் டைகர்னு பேர் வைப்பாங்க, ஆனா பாருங்க இந்திய அரசு உளவாளிகள் நாய் மாதிரி நன்றி உணர்வுடன் இருக்கனும்ங்கறதுக்காக நாய்க்கு வைக்கற பேரை உளவாளிக்கு  வெச்சிருக்காங்க போல 

ஹீரோ அங்கே போறாரு.. ரைட்டர் மாதிரி .. அவருக்கு இடப்பட்ட பணி என்ன? விஞ்ஞானியை உளவு பார்க்கறது , ஆனா அவர் பண்றது என்ன? ஹி ஹி .. பொதுவாவே ரைட்டர்னாலே கில்மா ரைட்டரஸ்ஸாத்தான் இருப்பாங்க. உதா - சாரு நிவேதிதா,பாலகுமாரன்,நாயோன்,சி எஸ்கே என நீளும்  பட்டியல்கள்



 விஞ்ஞானிக்கு ஒரு பொண்ணு .. அதான் ஹீரோயின்.. அவரை ஹீரோ லவ் பண்றாரு.. தில்ஸே ( உயிரே ) படத்துல ஷாரூக் மணீஷை லவ்வற மாதிரி. ஆனா அரசாங்க ரூல்ஸ் இன்னான்னா உளவாளிங்க யாரும் லவ் பண்ணக்கூடாது.. ( ஆனா கில்மா பண்ணலாம்) ஹீரோ அந்த ரூல்சை மீறிடறார்.. 

 நம்ம நாட்டின் பிரதமர், ஜனாதிபதி உட்பட யார் தான் ரூல்சை மதிக்கறாங்க.. அவங்க எல்லாம் ரூல்சை மீறும்போது தான் மட்டும் மீறுனா என்ன தப்பா? ந்னு நினைச்சிருப்பார் போல..


http://cdn.koimoi.com/wp-content/new-galleries/2012/07/Salman-Khan-and-Katrina-Kaif-Ek-Tha-Tiger-Music-Review.jpg


இடைவேளை திருப்பம் என்னான்னா ஹீரோயின் பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜெண்ட்.அவர் தான் தகவல்களை எல்லாம் பாகிஸ்தான் அனுப்பற ஆள்.


முறைப்படி ஹீரோ  என்ன பண்ணி இருக்கனும்? அவரை அங்கேயே போட்டுத்தள்ளி இருக்கனும்.. ஐ மீன் ஷூட் பண்ணி இருக்கனும், ஆனா தப்பிக்க விட்றாரு..


ரிட்டர்ன் போயிடறாரு.. அடுத்த பிராஜெக்ட் தர அரசு ரெடி ஆகும்போது  எனக்கு ஓய்வு தேவைன்னு சொல்லி எஸ் ஆகி  ஹீரோயினை பார்க்க கிளம்பிடறார்.


 இரு தரப்பு அரசாங்கங்களுக்கும் மேட்டர் தெரிஞ்சு தனித்தனியா 2 பேரையும் துரத்தறாங்க .. 


 ஹீரோ ஹீரோயினை கூட்டிட்டு தேசம் தேசமா சுத்தறார்.. துரத்தறாங்க.. ஓடறாங்க ஓடறாங்க இடைவெளை டூ க்ளைமாக்ஸ் ஓடிட்டே இருக்காங்க.. 

 அதாவது படம் ஓடுதோ இல்லையோ, படத்துல வர்ற கேரக்டர்கள் எல்லாரும் ஓடிட்டே இருக்கனும்னு சில டைரக்டர்கள் நினைக்கறாங்க..



http://images.mid-day.com/2012/aug/Ek-tha-tiger_016.jpg


படத்தோட முதல் ஹீரோ டைரக்டர் தான் , கபீர்கான்.. ஏன்னா திரைக்கதை பறக்குது.. எந்த இடத்திலும் போர் இல்லை, இடைவேளை வரை காமெடி, லவ்ஸ், கொஞ்சம் ஆக்‌ஷன்,., அதுக்குப்பின் ஒரே சேசிங்க் மயம். 


 சல்மான் கான் தான் ஹீரோ,, பாடியை இன்னும் அப்படியே வெச்சிருக்கார்.. ஓபனிங்க் சீன்ல இவர் பண்ற ஆக்‌ஷன் காட்சிகள் அபாரம்.. ஆனா அதெல்லாம் நம்மாள் கமல் விக்ரம் படத்துலயே பண்ணிட்டாரு ,.. ஓடரது, ஜம்ப் பண்றது, பல வித்தைகள் எல்லாம் இருக்கு .. இன்னும் ஆக்‌ஷன் ஹீரோவா மிளீர காரணம் அவர் உழைப்புத்தான்.. சல்மான்கானின் ஹிட் பட வரிசையான வாண்டட்,தபாங்,பாடிகாட்  ( முறையே தமிழில் போக்கிரி,ஒஸ்தி,காவலன்) லிஸ்ட்டில் இந்தப்படமும் சேர்ந்துடும்..




 ஹீரோயின் கேத்ரினா கைஃப்.. இவர் கிட்டே உள்ள பிளஸ் பாயிண்ட் என்னான்னா இவர் மேல் உதடும், கீழ் உதடும் ஒரே சைஸ்ல இருக்கும். பொதுவா இந்தியா குறிப்பா தமிழ்நாட்டுப்பொண்ணுங்களுக்கு கீழ் உதடு கொஞ்சம் மேல் உதட்டை விட பெருசா இருக்கும். கிஸ் பண்ண அதான் லாவகம்.. ஆனா இவருக்கு டிஃப்ரண்ட் லிப்ஸ்.. க்ளைமாக்ஸ் பாட்டில் இவர் காட்டும் இடை அசைவுகள், நடன அசைவுகள் அபாரம்..


இன்னொரு விசேஷம் இன்னான்னா சல்மான்கான் ஐஸ்வர்யாராய் முடிச்சுட்டு அடுத்த பிராஜெக்டா கேத்ரீனா கைஃபைத்தான் கரெக்ட் பண்ணாரு( நிஜ வாழ்வில்) அப்புறம் சிம்பு - நயன் தாரா மாதிரி ஒரு தற்காலிக பிரிவு. இப்போ இந்தப்படம் தான் அவங்களை மீண்டும் ஜோடி சேர வைக்கப்போகுதுன்னு பாலிவுட் குருவி ஃபிலிம் ஃபேர் பத்திரிக்கைல கிசு கிசு எழுதி இருக்கு.. ( கண்டதையும் படி நீ பண்டிதன் ஆவாய்  ஹி ஹி )


 ஒளிப்பதிவு, லொக்கேஷன்கள் கலக்கல்.. சும்மா காமெடிக்காக ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கறேன்.. ஹீரோயின் ஜாக்கிங்க்கோ, ஸ்கிப்பிங்கோ ஆடும்போது டாப் ஆங்கிள்ல வைக்கப்படாத கேமராவும், மிடியோ குட்டைப்பாவாடையோ ஹீரோயின் அணிந்திருக்கும்போது லோ ஆங்கிள்ல வைக்கப்படாத கேமராவும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை..


படத்தோட ஸ்டண்ட் காட்சிகள் வடிவமைச்சவர் அல்ப சொல்பமான ஆட்கள் அல்ல.. ஹாலிவுட்டில் ஸில்வர்ஸ்டர்ஸ்டோலன் -ன் ராம்போ , போர்ன் அல்டிமேட்டம் ஆகிய படங்களில் பணி ஆற்றியவர்கள். படத்துல ஃபைட் சீன் பொறி பறக்குது..


http://img.india-forums.com/wallpapers/1280x1024/213530-ek-tha-tiger.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஆக்‌ஷன் காட்சிகள் சேசிங்க் காட்சிகள் எல்லாம் அதிக கட்டிங்க் ஒட்டிங்க் இல்லாம லாங்க் ஷாட்ல லெங்க்தியா எடுத்தது நல்லாருக்கு.. லொக்கேஷன்ஸ் ஈராக், பாகிஸ்தான் என பல இடங்கள்ல அள்ளிட்டு வந்திருக்கு கேமரா.. இந்தியா, க்யூபா, ஈரான், இஸ்தான்புல், லண்டன்னு டூர் போய்ட்டு வந்த மாதிரி இருக்கு


2. ஹீரோயினை ஆரம்பத்துல இருந்து கடைசி வரை அழகா காட்டுனது.. அவரோட டிரஸ்சிங்க் அழகு.. அதே போல் படத்துல தேவை இல்லாம டூயட்டோ, குத்தாட்டமோ இல்லாம ஆக்‌ஷன் படமா எடுத்தது.. எடுத்த  அதிரடிப்பாட்டைக்கூட க்ளைமாக்ஸ்ல போட்டது.. அந்தப்பாட்டுக்கு ஹீரோயின் மூவ்மெண்ட் செம கிளு கிளு


3. ஹீரோவை விட்டு ஹீரோயின்  விலகிப் போய் பின் மீண்டும் ஓடி வந்து ஹீரோவை கட்டிக்கொள்ளும் காட்சி அக்மார்க் க்ளிஷே என்றாலும் கொள்ளை அழகு..


4. நியூயார்க், காபூல் எக்ஸ்பிரஸ்  படங்களுக்குப்பிறகு இவர் இயக்கி இருக்கும் படம் இது.. திரைக்கதையில் பிரமாதமான டேலண்ட் உள்ளவர் ஆனால் இயக்கத்தில் சராசரிக்கும் கொஞ்சம் மேலே அவ்ளவ் தான் என்ற பெயரை இந்தப்படத்தின் மூலம் உடைத்தெறிவார்


5. பாலிவுட்டில் ஏஜெண்ட் வினோத்க்குப்பிறகு ஜேம்ஸ் பாண்ட் பாணி படம் பண்ண தைரியமாக முன் வந்தது.முதல் முறையா கெத்ரீனா கைஃபை விஜயசாந்தி ரே ஞ்சுக்கு ஆக்‌ஷன், ஃபைட் பண்ண வெச்சது


http://www.filmitadka.in/images/joomgallery/originals/movies_15/ek_tha_tiger_593/ek_tha_tiger_wallpapers_20120629_1379970700.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்

1. ஹீரோவுக்கு உளவுத்துறைல இருந்து ஃபோன் வருது.. ஹீரோயின் கிட்டே ” எங்கம்மா கிட்டே இருந்து தான் ஃபோன்”னு ஹீரோ பீலா விடறார்.. ஹீரோயின் நைஸா அவர் கிட்டே ஃபோனை வாங்கி ரிசீவ்டு கால் போய் பார்த்திருந்தா அவர் வண்டவாளம் தண்டவாளம் ஏறி இருக்குமே?


2. ஒரு சீன்ல மெயில் 240 கிமீ வேகத்துல வருது.. அப்போ ரயில்வே லைனை கார்ல கிராஸ் பண்றவர் காரை நிறுத்தி கதவைத்திறந்து ஓடறார்.. சீன் பார்க்க மெயில் காரை கவுக்கறது நல்லாருக்கு.. ஆனா லாஜிக் உதைக்குது.. எக்சிலேட்டரை அமுத்த ஆகும் நேரம் அதிக பட்சம் 3 நொடிகள்.. ஆனா கார்க்கதவைத்திறந்து அவர் இறங்கி ஓட ஆகும் நேரம் 15 நொடிகள்.. எது பெஸ்ட்? ( அந்த சீன் அவ்ளவ் முக்கியம்னா இஞ்சின் ஆஃப் ஆன மாதிரியோ மக்கர் பண்ற மாதிரியோ காட்டி இருக்கலாம் )


3. ஒரு சீன்ல ஹீரோவை விட்டு பிரியற மாதிரி ஹீரோயின் போறாங்க.. ஹீரோ சோகமா கடலை பார்த்துட்டு இருக்கார்.. இனி கடலை போட முடியாதேங்கற சோகம் தான்.. அப்போ மனசு மாறி ஹீரோயின் ஓடி வந்து கட்டிப்பிடிச்சுக்கறார்.. இது ரொம்ப முக்கியமான சீன்..  பம்பாய் படத்துல மணீஷா ஓடி வர்ற மாதிரி ஸ்லோமோஷன் சீன் வெச்சிருக்கலாம்.. கிளு கிளுக்கு கிளு கிளு.. செண்ட்டிமெண்ட்டுக்கு  செண்ட்டிமெண்ட்.. ஜஸ்ட் மிஸ்..



4. ஒரு சீன்ல ஹால்ல  உளவுத்துறையின் கண்காணிப்புக்கேமராவை பார்த்த பின்னும் ஹீரோ ஏன் தேவை இல்லாம மாறு வேஷத்தில் இருக்கும் ஹீரோயின் நிஜப்பெயரை சொல்லி மாட்டிக்கறார்?


5. ஹீரோ ஹீரோயின் 2 பேரும் போட்ல எஸ் ஆகி கடல்ல போறாங்க. அப்போ யாரும் அவங்களை தொடர்பு கொள்ளக்கூடாதுன்னு அவங்கவங்க செல்ஃபோனை கடல்ல தூக்கிப்போட்டுடறாங்க.. என்ன கேனத்தனமா இருக்கு? என்னதான் மெகா பட்ஜெட் படம்னாலும் இப்படியா லூஸ் தனமா பண்ணுவாங்க.? சிம் கார்டை கழட்டி தூக்கி எறிஞ்சா வேலை முடிஞ்சது.. IME நெம்பரை வெச்சு கண்டு பிடிப்பாங்கன்னா  சில் ஃபோன் கம்ப்பெனில எக்ஸேஞ்ச் ஆஃபர்ல  வேற ஃபோன் வாங்கிக்கலாமே?


6 க்ளைமாக்ஸ்ல ஹீரோ முதுகுக்கு கொஞ்சம் கீழே சுட்டுடறாங்க.. உடனே ஹீரோயின் திகைச்சு பார்க்கறா ஓக்கே ஆனா மற்ற போலீஸ் ஆட்களூம் ஏன் ஆனு வாயைப்பிளந்து பார்த்துட்டு இருக்காங்க? டக்னு 4 டைம் ஷூட் பண்ணாம? அவர் பைக்ல இருந்து க்ளைடார் விமானத்துல ஜம்ப் பண்றவரை வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க ..


7. படத்துல பல காட்சிகள்ல வில்லன்க உயரமான இடத்துல நிலையா நின்ன படி ஹீரோவை சரமாரியா சுடறாங்க.. ஆனா மூவிங்க்லயே இருக்கும் ஹீரோ அப்படியே  பேக்ல இருந்து  சுடற எல்லா குண்டும் வில்லன்களை தாக்குது

 http://wallpapers99.com/Ek_Tha_Tiger--w800x600--0--0--images/wallpaper/800x600/Ek_Tha_Tiger_38873.jpg



 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  ஹலோ, மியூசிக் முடிஞ்சது, என்ன பண்றே? கையை விடு..

 ஹி ஹி மயங்கிட்டேன்..


2. முதல்ல பொண்ணு பின்னால சுத்தறதை நிறுத்து, முன்னேறும் வழியப்பாரு



3..ஹீரோ - நீ இந்த மாதிரி மோசடி வேலை செய்வேன்னு நான் எதிர்பார்க்கலை..


ஹீரோயின் - நான் என் வேலையைத்தான் செய்தேன்.. எனக்கிடப்பட்ட பணி இது.. நீ உன் நாட்டுக்காக செய்யறது மாதிரி நான் என் நாட்டுக்காக செய்யறேன்



4. டைகர், எந்த அசைன்மெண்ட் கொடுத்தாலும் நீ அதுல யாரையாவது கொன்னுடறே.. தேவை இருக்கோ இல்லையோ.. அப்படி பண்ணிடறே.. அது ஏன்?


5.  ஆர் யூ ரெடி டூ டூ யுவர் நெக்ஸ்ட் ப்ராஜெக்ட்

 நோ சார்.. ஐ வாண்ட் டூ  பி ரிலாக்ஸ் மை செல்ஃப்



6. பணியின் அடிப்படையில், தொழில் முறையில் நாம் இருவரும் எதிர் எதிர் துருவங்கள்.. நாம் ஒண்ணு சேரவே முடியாது


7.  ஏன்? சார்? ஒரு இந்தியப்பையனும், பாகிஸ்தானிப்பொண்ணும் டான்ஸ் பண்ணக்கூடாதா?  அபப்டி ஏதாவது ரூல்ஸ் இருக்கா?


8. எடுத்தவுடனேயே கல்யாணம் ஆயிருச்சான்னு கேக்குறியே? கேர்ள் ப்ரெண்ட் இருக்காங்களான்னு கேட்க மாட்டியா?

அந்த ஸ்டேஜையெல்லாம்  நீ எப்பவோ தாண்டிட்டே


9. உலகத்தில் இருக்கும் 201 நாடுகளில் உள்ள எத்தனையோ ஃபிகர்களை  விட்டுட்டு  ஏன் பாகிஸ்தான் ஃபிகரை   ரூட் விடறே?


201 இல்லை 203.. 2 நாட்டை மிஸ் பண்ணிட்டே..





http://photo-bugs.com/wp-content/uploads/2012/07/hot-sexy-katrina-kaif-wallpapers.jpg



 சி.பி கமெண்ட் - ரொமாண்டிக் ஆக்‌ஷன் படம் விரும்புபவர்கள் பார்க்கலாம். படம் விறு விறுப்பாப்போகுது.. பாலிவுட்ல நிச்சயம் இது ஹிட் மூவிதான்.. க்ளைமாக்ஸ் ல படம் முடிஞ்ச பின் டக்னு கிளம்பிடாதீங்க. செம டான்ஸ் பாட்டு ஒண்ணு இருக்கு.. டோண்ட் மிஸ்.. ஈரோடு ஸ்ரீ லட்சுமியில் பார்த்தேன்.. இன்னொரு முக்கியமான விஷயம் ஈராக் நகரத்தின்  காணாத காட்சிகள்  பார்க்க நினைப்பவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க


டைம்ஸ் ஆஃப் இண்டியா - 4 /5


 டெக்கான் கிரானிக்கல் - 7 / 10

http://www.chitramala.in/photogallery/d/651178-1/Ek-Tha-Tiger-Movie-Stills+_19_.jpg


டிஸ்கி -  அட்டகத்தி - சினிமா விமர்சனம்

நான் - NON-STOP க்ரைம் த்ரில்லர் - சினிமா விமர்சனம்



Star Cast – Salman Khan, Katrina Kaif, Usha Uthup, Ranvir Shorey.
Director – Kabir Khan
Producer – Aditya Chopra
Story by – Aditya Chopra
Music Director – Sohail Sen
Lyricist – Neelesh Misra
Screenplay by – Kabir Khan and Neelesh Misra
Cinematography– Ravi K. Chandran
Distributed by – Yash Raj Films
Genre – Romantic / Thriller


Thursday, August 16, 2012

நான் - NON-STOP க்ரைம் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSeERahkW3FrinX3kv96aJlBYM1FIcymjisKUBvAi9Cwa8fCd3A3hSpsB5SS9dt9QINCdZNT2PeYbHhSENnKSaBIb8j-3Ez8me5LN1fMMh5x3LtboFBedITOkgjrkyhqMrudgvdvuN9Hw/s1600/Naan-Songs.jpg

சின்ன வயசுலயே  கலைஞர் மாதிரி கிரிமினல் மைண்ட் உள்ள ஒருத்தர் ஜெ பண்ற மாதிரி ஆர்ப்பாட்டம்,ஆணவம், படோடபம் எல்லாம் இல்லாம மு க ஸ்டாலின் மாதிரி அடக்கி வாசிச்சு கமுக்கமா , அமுக்கமா, டாக்டர் ராம்தாஸ் மாதிரி சூழ்நிலைகளுக்கேற்ப தன்னை பச்சோந்தியா மாத்திக்கிட்டுப் பண்ற ஆள் மாறாட்ட தில்லு முல்லுகள் தான் கதை..


சின்ன வயசுலயே ஹீரோ தன் அம்மா தப்பு பண்றதை பார்த்து அப்பா கிட்டே சொல்லிடறான், அப்பா தற்கொலை, ஆனாலும் மாறாத அம்மாவை வீட்டுக்குள்ள வெச்சு கொளுத்திடறான் வித் தட் கள்ளக்காதலன்.. 


ஜெயில்ல  சில வருஷம் இருந்துட்டு வெளீல வந்து பஸ்ல ஊருக்குப்போறப்ப எங்கேயும் எப்போதும் மாதிரி ஒரு விபத்து, அருகில் அமர்ந்திருக்கும் ஒரு முஸ்லீம் ஆள் அவுட்.. அந்தாளோட சூட்கேஸை அபேஸ் பண்ணி அவர் கிட்டே இருக்கும் சர்ட்டிஃபிகேட் வெச்சு காலேஜ் சேர்ந்துடறான்.. 


காலேஜ்ல ஒரு பணக்காரப்பையன் நட்பு கிடைக்குது.. அவன் பங்களாவுலயே சர்வண்ட்  கம் பேயிங்க் கெஸ்ட்டா தங்கிடறான்.. அந்த பணக்காரப்பையன் ”மாமே” மாதிரி லேடீஸ் மேட்டர்ல வீக்.. பல பொண்ணுங்களோட சுத்தறவர்..ஆனா அவரை நல்லவர்னு நம்பி ஒரு பொண்ணு லவ் பண்ணுது.. 


 ஒரு கட்டத்துல ஹீரோவால தனக்கு பிரச்சனை வரும்னு  பணக்காரப்பையன் நினைக்கறான்.. ஹீரோ முஸ்லீமா ஆள் மாறாட்டம் பண்ணிட்டு இருக்கும் இந்துன்னு தெரிஞ்சுடுது.. 2 பேருக்குமான வாக்குவாதத்துல  சண்டைல ஹீரோ  அவனை கொலை பண்ணிடறார்..


http://chennaionline.com/images/gallery/2012/July/20120730015206/vijay-Antony-in_Naan_movie_photos_stills_01.jpg

 பாடியை புதைச்சுடறார்.. ஹீரோவுக்கு கோவை குணா மாதிரி மிமிக்ரி தெரியும்.. அதனால செத்துப்போன ஆள் குரல்ல ஃபோன்ல மட்டும் அப்பப்ப பேசி அவங்க பெற்றோரை,காதலியை  அவன் உயிரோட எங்கேயோ தலை மறைவா இருக்கற மாதிரி நம்ப வைக்கிறான். 


 இந்த மேட்டர் அந்த பணக்காரப்பையனோட நண்பன் ஒருத்தனுக்கும் தெரிஞ்சுடுது.. அவனையும் க்ளோஸ் பண்ணிடறான் ஹீரோ..


 இப்போ அந்த பணக்காரப்பையனோட காதலிக்கு டவுட் வந்துடுது.. அவளை எப்படி நம்ப வைக்கிறான், போலீஸ்க்கு எப்படி அல்வா தர்றான்? என்பதுதான் மிச்ச மீதிக்கதை.. 


 சும்மா சொல்லக்கூடாது திரைக்கதை பக்கா.. ஹாலிவுட் பட சுடல்தான்.. ஆனாலும் திறமையா பண்ணி இருக்காங்க  ( நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும்- வடிவேலு)


 சம்சாரம் ஃபாத்திமா தான் தயாரிப்பு. கணவர் விஜய் ஆண்ட்டனி தான் ஹீரோ.. சம்சாரம் ஷூட்டிங்க் ஸ்பாட்டுக்கு வந்திருக்கும் போல அண்ணன் ரொம்பவே அடக்கி வாசிக்கறார்.. அவர்க்கு நடிப்பு வர்லைங்கறது திரைக்கதை அமைப்பால தெரியவே இல்லை.. ஆள் நல்லா ஜை ஜாண்டிக்கா இருக்கார்..  கூலிங்க் கிளாஸ் போட்டுட்டா அம்சமா இருப்பார், ஆனா ஒரு சீன்ல கூட அப்படி வராதது ஏமாற்றமே.. 


ஹீரோயின் ரூபா மஞ்சரி. ஹேர் ஸ்டைல் சூப்பர் .. இந்த மாதிரி ரவுண்ட் ஃபேஸ் ஃபிகர்ங்களுக்கு கர்லிங்க் ஹேர்ஸ்டைல் பக்காவா செட் ஆகும்.. அவரோட டிரஸ்சிங்க் சென்ஸ் அழகு.. கண்ணுக்கு ஐ டெக்ஸ் மையை நம்பாம என்னென்னமோ தடவி இருக்கார்.. எதிர் காலத்தில் தவிர்த்தா அவருக்கும், கண்ணுக்கும் நல்லது.. 


 பணக்காரப்பையனா ஆனந்த தாண்டவம் ஹீரோ  சித்தார்த் வர்றார்.. அமெரிக்கன் ஸ்டைல் ஹேர் ஸ்டைல் அக்மார்க் பணக்காரப்பையன் லுக்,.. ஆள் சோ க்யூட்.. அசால்ட்டா நடிச்சிருக்கார்.. 


அனுயா 6 காட்சிகளில் வந்தாலும் அள்ளிக்கறார். ஆல்ரெடி சிவப்பா இருக்கும் அவர் கன்னத்தில் அதீத சிவப்பு ஒப்பனை பண்ணி இருப்பது எதுக்கு? ஸ்லீவ்லெஸ் டிரஸ் தான் அணிவேன் என்ற இவரது பிடிவாதத்துக்கு ஒரு சபாஷ்.. இவரை இன்னும் யூஸ் பண்ணி இருக்கலாம் ( படத்துல)


போலீஸ் ஆஃபீசரா வர்றவர் நல்லா பண்ணி இருக்கார் என்றாலும் ஒரு வி ஐ பி ஹீரோவை போட்டிருந்தா படத்தோட மார்க்கெட்டிங்க் நல்லா இருந்திருக்கும்..


http://www.mottaboss.com/stills/jul12/30/vijay_antony_naan_movie_audio_launch_stills_b1747.jpg



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஹீரோவுக்கு அப்பாவா காலேஜ்ல வந்து ஒரு சீன்ல நடிச்சுட்டு போறவர் ஹீரோ கிட்டே மிரட்டி பணம் பறிக்க  ஹோட்டல்ல ஹீரோவை சந்திக்கறார்.. அப்போ காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் ஏதோ கலாட்டா பண்ண ஹீரோ அவங்களை  பீர் பாட்டிலை உடைச்சு ரகளை பண்ற சீன் பார்த்து அரண்டு மிரண்டு தலை தெறிக்க ஓடும் சீன்.. அட்டகாசம்.. தியேட்டரே அப்ளாஸ் மழையில் 


2. ஹீரோ ஃபோர்ஜெரி சிக்னேச்சர்ல கேடி என்பதை படத்தின் முதல் சீன்லயே காட்டி விடுவது பின் வரும் பல காட்சிகளுக்கு உதவியா இருக்கு.. 


3. தயாரிப்பாளர் தன் மனைவி என்பதால் ஹீரோ அடக்கியே வாசித்து இருப்பது. வாய்ப்பு இருந்தும் எந்த பெண்ணையும் அவர் படத்துல தொடலை.. டி ஆர்க்குப்பின் தமிழ் சினிமாவில் பெண்ணை தொடாத ஹீரோ என்ற பட்டம் கிடைக்கலாம்.. ( படத்துல வர்ற எல்லாப்பெண்னையும் தொடும் ஹீரோ பட்டம் சாட்சாத் சிம்புவுக்கே என்பது கோலிவுட் டைரிக்குறிப்பு)


4. திரைக்கதை அமைப்பு மிகத்தெளிவாக, அமைதியாக எந்த அவசரமும் இல்லாம அதி புத்திசாலித்தனம் எல்லாம் இல்லாம நார்மலா போவது பிளஸ்..



5.  படத்தின் கதை, திரைக்கதை வாய்ப்பளித்தும் எந்த இடத்திலும் கவர்ச்சியை  புகுத்தாமல் மிக கண்ணியமாக காட்சிகளை வடிவமைத்த விதம் செம

http://www.mottaboss.com/stills/jul12/30/vijay_antony_naan_movie_audio_launch_stills_a1733.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள், ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1.  சக மாணவனுக்கு ஹீரோ போலி கையெழுத்து போட்டு உதவறார்.. தப்பு தான்.. ஆனா ஹெச் எம் நாளை ஸ்கூ;லுக்கு வரும்போது அம்மா அப்பாவை கூட்டிட்டு வான்னு சொன்னா போதாதா? ஏன் அப்பவே அனுப்பனும்? ஏன்னா அந்த ஸ்கூல் எல்லா மாணவர்களையும் ஸ்கூல் பஸ்ல பிக்கப் பண்ணிட்டு டிராப் பண்ற பஸ்.. பாதிலயே அனுப்புனா எப்படி?


2. பாதில வீட்டுக்கு வரும் ஹீரோ வீடு உள் பக்கம் பூட்டி இருப்பதை பார்த்து கதவை தட்டறான்.. உடனே கள்ளக்காதலனை பாத்ரூமிலோ கட்டிலுக்கு அடியிலோ ஒளிச்சு வைக்காம அம்மாக்காரி கதவை திறக்கறா.. மாமா இங்கே வந்துட்டுப்போனதை அப்பா கிட்டே சொல்லிடாதேங்கறா.. அவ்ளவ் ஏன் ரிஸ்க்? கதவைத்திறந்ததும் “ என்னப்பா? என்ன பிரச்சனை? ஏன் நேரத்துலயேவந்துட்டே? வா ஸ்கூலுக்கு போலாம், விசாரிக்கலாம்னு கேட்டிருக்கலாம்..கதவை திறந்து போட்டபடி அவன் கூட கிளம்பினா கள்ளக்காதலன் எஸ் ஆகிடுவான்


3. தன் அம்மாவையும், கள்ளக்காதலனையும் ரூம்ல வெச்சு சாத்தி எரிக்கறார் ஹீரோ.. அப்ப தப்பிக்கற ஐடியாவுல தான் அவர் டிரஸ் எல்லாம் பேக் பண்ணி வெச்சிருக்கார்.. அது ஒரு விபத்து மாதிரி தான் எல்லாருக்கும் தெரியுது.. அப்புறம் எப்படி அவர் போலீஸ்ல மாட்டி ஜெயில்க்கு போறார்? என்பதற்கு படத்தில் விளக்கம் ஏதும் இல்லை ( எடிட்டிங்க்ல கட் ஆகி இருக்கலாம் ஃபுட்டேஜ் பிராப்ளமா?)


4. ஹீரோ இந்து, அவர் முஸ்லீமா ஆள் மாறாட்டம் பண்றார்.. கையெழுத்து, தொழுகை எல்லாம் கத்துக்கறார்.. ஆனா முஸ்லீம்களின் முக்கிய அடையாளமான சுன்னத் ஆபரேஷன் ஏன் செஞ்சுக்கலை..? அவர் மாட்றதே அதை வெச்சுத்தானே? ஒரு கிரிமினல் அது கூட யோசிக்க மாட்டானா?


5. ஹீரோ முஸ்லீம் கிடையாது என்பதை இன்னொரு ஆண் கண்டுபிடிப்பது ஹாலிவுட்டுக்கு ஓக்கே. எப்பவும் சுடும்போது நேட்டிவிட்டி கலக்கனும்.. ஹீரோ ஒரு பொண்ணு கூட கில்மா பண்றப்ப அந்த லேடி கண்டு பிடிச்சா கில்மாவுக்கு கில்மா.. லாஜிக்குக்கு லாஜிக் .. உறுத்தல் ஏதும் இருக்காது..

http://www.dailomo.com/tamil/content_images/1/images1/sms-heroine-anuya/anuya-hot-sexy-photos-1s.jpg


6.  இழவு விழுந்த வீட்டில் ஒரு வாரம் வரை உறவினர் கூட்டம் இருக்கும். ஆனா ஹீரோவின் அப்பா இறந்த அடுத்த நாளே வீடு வெறிச்சோடி இருக்கு.. ஹீரோவின் அம்மா தன் கள்ளக்காதலனுடன் வீட்டிலேயே கில்மா.. ஹால்ல பையன்..  என்னதான் மிட் நைட்னாலும் யாரும் அவ்ளவ் தைரியமா அப்படி செய்ய மாட்டாங்க


7. சித்தார்த்  2 ஃபிகர்களை தள்ளிட்டு அவுட்டோர் போய்ட்டு 2 நாள் கழிச்சு வர்றார்.. அப்போ அவர் கிட்டே உங்க லவ்வர் வந்துட்டுப்போனாங்க என்பதை ஹீரோ ஏன் சொல்லலை? அதானே பிரச்சனை ஏற்பட முதல் காரணம்? அவ சொல்லிடுவான்னு தெரியாதா?


8. அதே மாதிரி 2 நாள் டூர் போகும் சித்தார்த் அந்த 2 நாள்ல தன் காதலி தன்னைத்தேடி வீட்டுக்கு வருவா-ன்னு தெரியாதா?ஃபோனை ஆஃப் பண்ணி வெச்சிருக்கும்போது காதலி என்ன ஆச்சுன்னு பார்க்க வராமலா இருப்பா?


9. ஹோட்டல்ல கலக்கலா ரவுடிகளிடம் பாயும் ஹீரோ சித்தார்த்திடம் மட்டும் பம்முவது ஏன்? அவர் காரணம் இல்லாமல்  ஹீரோவை அறையும்போது குறைந்த பட்ச எதிர்ப்பைக்கூட காட்டலையே? ( அவர் ரூமை காலி பண்ணச்சொல்லிடறார், அப்புறம் என்ன பயம்?ரூம்லயே தங்கனும்னாக்கூட அதுக்காக பொறுத்துப்போலாம்)


10. ஹீரோ டெட் பாடியை டிஸ்போஸ் பண்றப்போ, கார்ல போறப்ப பின்னணி இசையா திகிலா மியூசிக் போட்டு பயத்தை ஆடியன்ஸ்க்கு தோற்றுவிக்காம என்னமோ கல்யாணக்கொண்டாட்டத்துக்கு போடற மாதிரி துள்ளல் இசை ஏன்?


http://gallery.southdreamz.com/cache/pressmeet/naan/free-naan-movie-press-meet-events-gallery-vijay-antony-rupe-mankari-siddarth-stills-11_720_southdreamz.jpg


11. ஹீரோ ஒரு சீன்ல ரூம்ல ஒளிஞ்சிருக்கார் ஹீரோயின் வந்து பார்த்துட்டு கிளம்பறா. அப்போ மாடில இருந்து அவ போய்ட்டாளா? என எட்டிப்பார்க்கும்போது அந்த ரூம் லைட்டை ஏன் ஆஃப் பண்ணலை?  அதானே சேஃப்? அங்கே இருந்து அவ பார்த்தாக்கூட இருட்டுதான் தெரியும்.. கிரிமினல்க்கு அது கூடத்தெரியாதா?


12. ஹீரோ கார் ஓட்ட எப்போ கத்துக்கறார்? ஏன்னா சித்தார்த் வீட்டுக்கு வர்ற வரை அவர்க்கும் கார்க்கும் சம்பந்தமே இல்லை.. ஆனா திடீர்னு கார் அநாசயமா ஓட்ற மாதிரி காட்றாங்க


13. ஹீரோ சித்தார்த்தின் அப்பாவின் ஃபேமிலி ஃபிரண்ட்சை சந்திக்க ஹோட்டல்க்கு வர்றார். அப்போ சித்தார்த்தின் ஃபோன் அவர் வெச்சிருக்கார்.. சித்தார்த்தைத்தான் கொன்னுட்டாரே? அப்போ அந்த ஃபோனை சைலண்ட் மோடுல போட்டு வைப்ரேஷன்ல வெச்சுட்டா மேட்டர் ஓவர்.. கால் வந்தா அவருக்கு மட்டும் தெரியும்.. அவங்க 3 பேருக்கும் தெரியாது.. அதை விட்டுட்டு ஏன் தடுமாறுகிறார்?


14.இன்ஸ்பெக்டர் ஹீரோவை விசாரிச்சுட்டு அவரை வெளியே உக்கார வெச்சு பின் சித்தார்த்தின் காதலியை விசாரிக்கறார். அப்போ ஹீரோவை கூப்பிட்டு காதலி கிட்டே “ இவரை தெரியுமா?”ன்னு ஏன் கேட்கலை?


15. இவ்வளவு கிரிமினல் வேலை பண்ணும் ஹீரோ லேடீஸ் மேட்டர் பக்கம் ஏன் போகவே இல்லை.. வாய்ப்பு இருந்தும் தவிர்க்க என்ன காரணம்? அதை வெச்சு இன்னும் இண்ட்ரஸ்ட்டா கதையை நகர்த்தி இருக்கலாமே?


http://1.bp.blogspot.com/-EOIsPU1zE0o/T6N1QKh_FfI/AAAAAAAAl10/g7qfD-Yl0eY/s1600/Rupa%2Bmanjari%2Bactress%2B%2B%25287%2529.JPG


16. ஹீரோ அடிபட்டு ஹாஸ்பிடல்ல படுத்து இருக்கார்.. கைல தலைல எல்லாம் கட்டு.. போலீஸ் ஹீரோவை பற்றி விசாரிக்க ஃபேக்ஸ் அனுப்புது.. அதாவது ஒரிஜினல் முஸ்லீம் வீட்டுக்கு.. ஹீரோ டக்னு அந்த அட்ரஸ் போய் சமாளிக்கறார்.. அதெப்பிடி ஒரே நாள்ல காயம் சரியாகிடுமா?



17. அட்ரஸ் வெரிவிஃபிகேஷன் பண்ண கான்ஸ்டபிள் இங்கே இருக்கும் இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவிக்கும்போது ஆள் இருக்கார்னு சொல்லி இருப்பார்.. அப்போ இன்ஸ்பெக்டருக்கு டவுட் வராதா? இங்கே ஹாஸ்பிடல்ல இருந்த ஆள் அங்கே எப்படி போனார்? ஏன் போனார்?னு.. ஏன் அவரே நேரடியா ராமநாத புரம் போய் அதை க்ளியர் பண்ணலை?அதே போல் ஃபேக்ஸ் போற அதே டைம் இவரும் எப்படி அங்கே போறார்? ஃபிளைட்ல போனாக்கூட முடியாது


18. ஹீரோ 2 கொலை பண்றப்ப க்ளவுஸ் போடவே இல்லை.. கைரேகை காட்டி கொடுத்திருக்கும். எப்படி சித்தார்த்தை கொன்னது அவர் நண்பர் தான்னு நம்பவைக்க முடியும்? ரேகையை வெச்சு கண்டு பிடிக்க மாட்டாங்களா?


 19. ஏடி எம் மிஷின்ல ஹீரோ சித்தார்த் அக்கவுண்ட்ல இருந்து பணம் எடுக்கறார்.. கொலை செய்யப்பட்ட நாள்க்குப்பிறகு சித்தார்த்த் அக்கவுண்ட்ல இருந்து பல்க் அமவுண்ட் எடுக்கப்பட்டிருக்குன்னா போலீஸ்  உடனே ஏ டி எம் வீடியோ காமராவுல ஹீரோவை பார்த்திருக்காதா?


20. அனுயா ஹீரோ மேல கிரேஸ் ஆனது எப்படி? ஹீரோ அவரை கண்டுக்கவே இல்லை. அதிகம் பேசுனதும் இல்லை.. அன் டைம்ல அவர் வீட்டுக்கு எந்த நம்பிக்கைல போறார்?


21. ஹீரோயின்  மது மஞ்சரி ஒரு சீன்ல என் ஆளை நீ இன்னும் பார்த்ததில்லைன்னு அனுயா கிட்டே சொல்றா.. இந்தக்காலத்துல செல்ஃபோன்ல கவர்னர் கில்மாப்படமே ரிலீஸ் ஆகுது..  அப்படி இருக்கும்போது தன் செல் ஃபோன்ல சேவ் பண்ணி வெச்சிருக்கற லவ்வர் ஃபோட்டோவை ஹீரோயின் அனுயா கிட்டே காட்டி இருந்தா ஆள் மாறாடம் அப்பவே தெரிஞ்சிருக்குமே?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfn5JT3NT-9_V6hxcYyUtkj4W2p-MV_lyCta5UoZPm5zBvWQIN_u8QHCf0l9g0bMIXhADU081YYe2_OYJ8QSt7ZogVkj20QsF4esiq8tJybIi1K3avCI7EFZ1sMg_d6d0J3dq0-mY8xou_/s1600/Naan-Movie-New-Stills+(6).jpg

 மனம் கவர்ந்த வசனங்கள்



1. சார், எனக்கே என் சைன் இவ்ளவ் அழகா போட வராது.. ஆனா இவன் போட்டிருக்கான் பாருங்க



2. உன் பேரென்ன?

 ஏன்?


அழகான பொண்ணு எங்காவது தட்டுப்பட்டா அவங்க பேர் கேட்டு வெச்சிக்குவேன் அது என் பழக்கம் ..புரியலை? இதான் ராகிங்க்




3. சீனியர் பொண்ணை பார்த்து அழகா இருக்கேனு தைரியமா சொல்றியே, அது எப்படி?


எஸ்.. நீ அழகு .. அதான்


4. XQS மீ மிஸ்.. நாங்க கொஞ்சம் பர்சனலா பேசனும்.. நீங்க.... ப்ளீஸ்..

 ம்க்கும், அப்போ நீயே அவளை டிராப் பண்ணிடு,,

  வித் பிளஷர் ( ஐடியாவே அதுக்குத்தானே?)



5. பிடிச்சிருக்குன்னு சொல்றே, ஆனா லவ்வலைன்னு சொல்றே.. புரியலையே?


ஹி ஹி எனக்கு எல்லா பொண்ணுங்களையும் பிடிக்கும், ஆனா இந்த காதல், கல்யாணம் எல்லாம் ஒத்து வராது


6. டேய்./. காலேஜ் எல்லாம் எப்படி இருக்கு?


 அது நல்லா தான் இருக்கும், அவன் எப்படி படிக்கறான்னு கேளுங்க


7. அங்கே கார்ல இடம் இல்லைன்னா டோண்ட் ஒர்ரி.. என் மடில இடம் இருக்கு ஹி ஹி



8. லவ்வுக்கு பொசசிவ் நெஸ் தேவை தான்.. ஆனா ஓவரா போய்ட்டா டேஞ்சர்


9. இங்கே யாருமே 100% பர்ஃபெக்ட் இல்லை


10. அசோக் கேரக்டர் எப்படி?


 தானும் படிக்க மாட்டான், யாரையும் படிக்கவும் விட மாட்டான் ( கிராமங்கள்ல இதையே “ தானும் படுக்க மட்டான் , தள்ளியும் படுக்க மாட்டான்னு” பழமொழியா சொல்வாங்க )


11. ஏதோ சின்னப்பிரச்சனை.. அதைப்போய் பெருசு பண்ணிட்டு..

 இப்போ எல்லாம் சின்ன சின்ன பிரச்சனைகள் தான் பெரிய தப்பு உருவாக காரணமா இருக்கு

http://onlyfilmy.com/files/2012/08/Rupa-Manjari-776x1024.jpg



விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 42


 குமுதம் ரேங்க் -  ஓக்கே


 டைம்ஸ் ஆஃப் இண்டியா - 3 /5


 டெக்கான் கிரானிக்கல் - 6/10



http://images.suite101.com/2689805_com_thetalente.jpg

மேலே உள்ள படம் தான் ஒரிஜினல்... நன்றி - அதிஷா

சி.பி கமெண்ட் - க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம். லேடீஸும் பார்க்கற மாதிரி கண்ணியமான நெறியாள்கை.. படத்துக்கு டி வில சரியா விளம்பரம் தர்லை, அது பெரிய மைன்ஸ், சன் டி வி சன் பிக்சார்ஸ் இதை வாங்கி இருந்தா இதை 100 நாள் படம் ஆக்கி இருப்பாங்க.. ஜஸ்ட் மிஸ்.. ஈரோடு தேவி அபிராமில படம் பார்த்தேன்

நான் படத்தை நான் இயக்கி இருந்தால் வைக்கும் டைட்டில் த ஹிந்து - 420 ( THE HINDU - 420)

கமர்ஷியல் ரன்னிங்க் ரேஸில் அட்டகத்தியை “ நான்” முந்தினாலும் விகடன் மார்க்கில் பிந்தும். காரணம் லாஜிக் மிஸ்டேக்ஸ் எக்கச்சக்கம்


 டிஸ்கி -

அட்டகத்தி - சினிமா விமர்சனம்

 

EK THA TIGER - ரொமான்ட்டிக் ஆக்‌ஷன் - பாலிவுட் சினிமா விமர்சனம்

 

 

 

 

http://haihoi.com/Channels/cine_gallery/naan_movie_stills_siddharth_venugopal_rupa_manjari_1f79bef_S_194.jpg