Saturday, August 11, 2012

சிட்டுக்குருவி லேகியம்

1. தலைவர் பக்கா காங்கிரஸ்காரர்னு எப்படி சொல்றே?

 கூகுளை நம்புவதை விட ராகுலை நம்புறது நல்லதுங்கறாரே?



---------------------------------------





2. அஜித்ரசிகனை கோயில் கைடா போட்டது தப்பா போச்சு..

 ஏன்?

 ஸ்தல புராணம்  கேட்டா தல புராணம் சொல்றான்


-----------------------------------------


3. கடவுளே! என்னை லவ் பண்ண ஒரு இண்ட்டலிஜெண்ட் பாய் வேணும்

 ஸாரி,இண்ட்டலிஜெண்ட் பாய் ஸ் லவ் பண்ண மாட்டாங்க, அவங்க பொழப்பை பார்க்கவே அவங்களுக்கு நேரம் சரியா இருக்கும்


------------------------------------------


4. அந்தக்காலம், இந்தக்காலம் என்ன வித்தியாசம்?

அந்தக்காலத்துல அவளுக்காக காலேஜ் கட் அடிச்சேன், இந்தக்காலத்துல அவளை மறக்க டாஸ்மாக்ல கட்டிங்க் அடிக்கறேன்


--------------------------------



5. சில்லறைத்தனமா இருந்த தலைவர் திடீர்னு டீசண்ட் ஆகிட்டாரே?

ஒரு ரூபாக்காசு சத்தம் போடும், 1000 ரூபா நோட்டு அமைதியா இருக்கும், நீ மவுனமா இருக்கும் வரை உன் மதிப்பு கூடும்னு யாரோ தலைவர்ட்ட சொல்லிட்டாங்களாம்


---------------------------------
woooooooooooo...wow wow wow.woooooooooooooo.ippadithan
idhula satham varum.
woooooooooooo...wow wow wow.woooooooooooooo.ippadithan idhula satham varum.



6.  மின்சாரம்,சம்சாரம் என்ன வித்தியாசம்?

காப்பர் ஒயர்ல கனெக்‌ஷன் குடுத்தா அது மின்சாரம், மஞ்சள் கயிறுல கனெக்‌ஷன் குடுத்தா அது சம்சாரம்




--------------------------


7. நாடு ரொம்ப கெட்டுப்போச்சு

ஏன்?

பராக் ஒபாமா இந்தியாவுக்கு ஃபோன் பண்ணி  ஈமு கோழி பற்றி விசாரிக்கப்போறாரு அந்த அளவு ஓவர் விளம்பரம்


----------------------



8. மெடிக்கல் ஷாப் வெச்சிருந்ததுக்கு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா?

நீ வேற, அவர் வெச்சிருதது டிரக்ஸ் ஷாப்


-------------------------



9. ஜட்ஜ் - லாக்கப்ல இருக்கற பெண் கைதியை  கன்னத்துல தொட்டு செம சாஃப்ட்னு சொன்னது ஏன்?

இன்ஸ்பெக்டர் - மேலிடம் தான் “அந்தப்பெண் பெரிய இடத்துப்பெண், சாஃப்டா விசாரிங்க”ன்னாங்க,..



-------------------------------



10. வால்மீகி காலத்துலயே காண்டம் கண்டு பிடிச்சுட்டாங்களா?

இல்லையே, ஏன்?

ராமாயணத்தில் 5 காண்டங்கள் உள்ளனன்னு படிச்சேனே?


-----------------------------

nunu enga?'s photo.


11. இனிமே வானத்துல இடி இடிக்காது

 ஏன்?

 இடி -மின்னல் தாக்கி சாவுன்னு நியூஸ்ல சொன்னாங்களே?




------------------------------------------


12. என் சம்சாரம் 2 கி மீ தூரத்தில் வருகையில் எனக்கு  நடுக்கமும் பயமும் சேர்ந்தே வருகிறது !!



---------


13. ஹீரோ 10 பேரைத்தான் ஷூட் பண்றார், ஆனா வில்லன்க 100 பேர் சாகறாங்க, எப்படி?

 மீதி 90 பேர் பயத்துலயே செத்துடறாங்க



-----------------------------


14.நீயா? நானா? அடுத்த டைட்டில் என் பரிந்துரைப்பு - சமையல் செய்வது கஷ்டமா? அதை சாப்பிடுவது கஷ்டமா? தம்பதிகள் கலந்துரையாடல்



----------------



15. 8 கெஜத்துல இருந்தா அது சில்க் சாரி ( பட்டுப்புடவை), ஒரே ஒரு கெஜத்துல இருந்தா அது சில்க்கோட சாரி




----------------------


Add caption



16. சிட்டுக்குருவிகள் அருகிப்போனதுக்கு 1. செல் ஃபோன் உற்பத்தி 2, சிட்டுக்குருவி லேகிய உற்பத்தி 2இல் எது காரணம்?




----------------


17. கலைஞர் - கட்சில தொண்டனா இருக்க எந்த தகுதியும் தேவை இல்லை, ஆனா தலைவனா இருக்க  என் மகன்கற தகுதி வேணும்# பில்லா 2 FB  ரீமிக்ஸ்




---------------------


18. நடிகை கஸ்தூரி வளர்க்கும் மான் தான் கஸ்தூரி மான் என நினைத்தால் நீயும் ஒரு சினிமா பைத்தியமே



--------------------


19. சினிமா நடிகைகள் காட்டுவது பச்சைகிளிவேஜ்,  சின்னத்திரை நடிகைகள் காட்டுவது பஞ்சவர்ணக்கிளிவேஜ்





-------------


20. அபிநய சரஸ்வதி - சரோஜா தேவி , அபிநய சரச வதி - சரோஜா தேவி இலக்கிய இதழ்









-----------


கருமமே கண்ணாயினர்.................

Friday, August 10, 2012

எப்படி மனசுக்குள் வந்தாய் - க்ரைம் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJfnLZNMlyx6LdDXqt65xxoFyeznHKHTcST0vT-XFYFe9TWWnZv2m4suWQAPgmTRdAKz4mKfGkKgo0SZsKvmoXNf3ru4FzEu9dIx1C4_3m_JSgWEJYerNGlnTSmaCODkz2dHGRwuCmtR8/s1600/eppadi_manasukkul_vandhai_movie_posters1.jpg 

சன் டி வில ஒரு காலத்துல கொலையா கொன்னாங்களே காதலில் விழுந்தேன் பட விளம்பரம் மூலமா.. 10 நிமிஷத்துக்கு ஒரு டைம்.. ( படம் ரிலீஸ் ஆகி ஈரோட்டுல 10 நாள்தான் ஓடுச்சு அது வேற விஷயம்)அந்தப்பட டைரக்டர் எடுத்த படம்.. டாப்ஸியோட டாப்ல ( ஐ மீன் தலைல) அடிச்சு சத்தியம் பண்றேன்.. இது ஏதோ ஹாலிவுட் படத்தோட உல்டாதான்... என்ன படம்னு தான் நினைவில்லை.


வழக்கம் போல ஹீரோ ஒரு ஏழை.. ஹீரோயின் பணக்காரி.. ஒரே காலேஜ்ல படிக்கறாங்க.. அதாவது வேணும்னே ஹீரோ அவ இருக்கற காலேஜ்லயே சேர்ந்துக்கறான்.. ஹீரோயினை இம்ப்ரஸ் பண்ண அப்பப்ப சில கிறுக்கு வேலை எல்லாம் ஹீரோ பண்றான்... 


 ஹீரோயின் தன் பால்ய சினேகிதன் கூட ஒரே வீட்டுல தங்கி இருக்கா? ப்ளீஸ் க்ளீன் யுவர் டர்ட்டி மைண்ட்..  அவங்க 2 பேரும் தூய நண்பர்கள் தான்.. ஒரு டைம் ஹீரோவும், ஹீரோயின் ஃபிரண்டும் வீட்ல சரக்கு அடிச்சுட்டு இருக்கறப்போ நைட் 9 மணி குளிர்ல ஹீரோயின் தாழ்ப்பாள் போடாம குளிக்கறா.. அதை ஹீரோ பார்த்துடறான்.. ஹீரோ பார்த்ததை ஃபிரண்ட் பார்த்துடறான், ஆனா அவன் ஹீரோயின் குளிக்கறதை பார்க்கலை.. சபாஷ். தமிழ் சினிமா../ 


 2 பேருக்கும் கைகலப்பு.. தற்காப்புக்காக ஹீரோ  ஹீரோயினோட ஃபிரண்டை கொலை பண்ணிடறான்.. டெட் பாடியை அதே வீட்ல  நூறாவது நாள் படத்துல வர்ற மாதிரி புதைச்சுடறான்.. 

http://moviegalleri.net/wp-content/gallery/eppadi-manasukkul-vandhai-movie-stills/eppadi_manasukkul_vandhai_movie_stills_vishwa_tanvi_vyas_3806.jpg


 போலீஸ் அந்த கொலையை கண்டு பிடிச்சுடுது.. ஆனா இன்ஸ்பெக்டர் கேப்டன் மாதிரி நியாயமான ஆள் இல்லை.. தமிழ் இனத்தலைவர் டாக்டர் கலைஞர் மாதிரி ஒரு சந்தர்ப்பவாதி..  நித்தி- ஜிஞ்சிதா கில்மா டி விடி கைக்கு கிடைச்சதும் முதல்ல எ ப்படி சன் டி வி 300 கோடிக்கு  நித்தி கிட்டே பேரம் பேசுச்சோ அந்த மாதிரி இன்ஸ்பெக்டர் 50 லட்சம் கேட்கறார்.. 


அதுக்கப்புறம் என்ன ஆச்சு? ஏது ஆச்சுன்னு ஓரளவு விறுவிறுப்பாவே சொல்லி இருக்காங்க.. 


ஹீரோ விஸ்வா  பத்தோட 11 அத்தோட இதுவும் ஒண்ணு அப்டி சொல்லி விட முடியாதபடி ஓரளவு நடிச்சிருக்கார்.. இப்போ அவர் நமக்கு முக்கியம் இல்லை.. நம்ம டார்கெட் ஹீரோயின் தான்.. வாங்க ஒரு பேரா வர்ணிச்சு தள்ளுவோம்.


ஹீரோயின் பேரு தன்வி வியாஸ்..  இனிமே சுருக்கமா தன்ஸ்.. முலாம்பழ ஜூஸ் குடிச்சா மாதிரி பாப்பா அப்படி ஒரு ஃபிரஸ்..  மாசு மருவற்ற முகம்னு  சொல்லிட முடியாது, ஏன்னா அவரோட வலது கன்னத்துல மரு, மங்கு, மச்சம் , பரு எல்லாம் இருக்கு... கேமரா மேன் என்ன பண்ணனும்னா க்ளோசப்  சீன்ல இடது பக்கமாவே காட்டனும்.. ஆனா அவர் அசால்ட்டா விட்டுடார் போல.. ஆல்ரெடி சிவப்பா இருக்கற ஹீரோயின் ஏன் அவ்வளவு அடர்த்தியா மேக்கப் போடனும்.. டான்ஸ் மாஸ்டர் கலாவே மிரள்ற அளவு ஃபுல் மேக்கப்..  வர்ற சீன் எல்லாம் கெக்கே பிக்கேன்னு சிரிச்சுக்கிட்டே வருது.. லைலா மாதிரி..ஆனா 36 முறை தொடர்ந்து பார்த்தாலும் போர் அடிக்காத முகம்


லாண்டரி பையன் டிரஸ் அயர்ன் பண்ணுனதை கொடுக்க வர்றான்,.. என்னமோ வெளீநாட்டுத்தூதரை ஜனாதிபதி வரவேற்கற மாதிரி ஓவர் எக்ஸ்பிரஷன் காட்டுது. அவரோட உதடு பீட்ரூட் அல்வா மாதிரி இருக்கு.. ஆனா ஓவர் ரெட்டிஸ் லிப்ஸ்டில் போட்டு அழகை கெடுத்துக்குது.. ஒரு குளிக்கற சீன் இருக்கு.. செம கிளு கிளு.. 


இன்ஸ்பெக்டரா வர்றவர்  நடிப்பு ஓக்கே.. ஆனா அவர் க்ளைமாக்ஸ்ல காமெடி பீஸ் மாதிரி ஏன் காட்டிக்கறார்னு தெரியலை.. 

http://i.indiglamour.com/photogallery/tamil/movies/2012/August09/Eppadi-Manasukkul-Vandhai/normal/Eppadi-Manasukkul-Vandhai_12058rs.jpg



மனம் கவர்ந்த வசனங்கள்


1.  மனிதனுக்கு நல்ல காலம் வந்தா அது அவன் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுடும்.. 


2.பத்தாவதுல வாங்க வேண்டிய 420 மார்க்கை பிளஸ் டூல வாங்குனா  உனக்கு எந்த காலேஜ்ல  இடம்  கிடைக்கும்? செத்த காலேஜ்ல தான்  சீட்  கிடைக்கும்.


3. ஒரே வீட்ல 2 பேரும் இருக்காங்க, ஒரே கேம் விளையாடறாங்க, ஒரே காலேஜ்ல படிக்கறாங்க, லிவ்விங்க் டுகெதரா இருக்காங்களோ?


4.  நீங்க  எங்கே போகனும்?


 நீங்க எங்கே போறீங்களோ அதுக்கு முன்னாடியே இறங்கிக்கறேன், ஹி ஹி 


5. சார்... 


 என்ன? சரக்கு வேணாம்னு சொல்ல வர்றீங்களா?


 இல்லை, தண்ணி மிக்ஸ் பண்ணுனா பிடிக்காது

 குளிச்சா கடல்ல தான் குளிப்பேன்னு சொல்ல வர்றீங்க? ( குளிச்சா குத்தாலத்துலதான் குளிப்பிங்களோ?ன்னு வசனம் வெச்சிருக்கலாம்)



6. அவங்கப்பா யார் தெரியுமா? டெக்ஸ்டைல் ஓனர்.. ஊருக்கெல்லாம் டிரஸ் தெச்சு தர்றவர்.. உங்கப்பா? நீ ஊரான் சட்டையை போட்டுட்டு திரியறவன்


7. சார், பெங்களூர்ல நல்ல மழையாமே?


 ஏன்? விவசாயம் பண்ணப்போறியா?


8. கவர்மெண்ட்க்கு டாக்ஸ் கட்டறதில்லையா? அந்த மாதிரி இந்த 50 லட்சத்தை நினைச்சுக்கோ


9. நான் கேட்டதும் என்ன ஏதுன்னு கேட்காம 50 லட்சம் தந்துட்டியே?

 ஒருத்தரை நம்பிட்டா  வாழ்ந்து செத்துடனும்



`10. நாட்ல 100 கொலை நடந்தா அதுல ஒரு கொலைகாரன் அகப்படறது இல்லையாம்.. அந்த அகப்படாத கொலைகாரன் நானா இருந்துட்டுப்போறேன்


http://moviegalleri.net/wp-content/gallery/eppadi-manasukkul-vandhai-movie-stills/eppadi_manasukkul_vandhai_movie_stills_vishwa_tanvi_vyas_4693.jpg



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. ஹீரோ சலவைக்கு வந்த டிரஸ்சை போட்டுட்டு பந்தாவா ஹீரோயின் கூட ஷாப்பிங்க் வர்றப்போ அவன் போட்ட்டிருக்கும் டிரஸ் ஓனர் அவனை அங்கேயே எல்லா டிரசையும் பிடுங்கிவிட ஹீரோ கூனிக்குறுகி பாத்ரூம்ல ஒளிய ஹீரோயின் பதறிப்போய் கடைல வேற டிரஸ் வாங்கித்தரும் சீன்.. 


2.  விஜய் மில்டன் பாடல்களில் 2 ஹிட் ஆகும்..  ஓப்பனிங்க் டப்பாங்குத்து, க்ளைமாக்ஸ் டூயட்.. 


3. ஹீரோயின் செலக்‌ஷன், திரைக்கதை அமைப்பு  2ம் ஓக்கே 


4. ஹீரோயின் சுடிதார் துவைக்க கைக்கு கிடைத்ததும் ஹீரோ அதை கொண்டாடும் அழகு ஆஹா/ துணி துவைக்கும் கல்லில் பட்டுச்சேலை போட்டு பின் அதில் சுடியை துவைப்பதும், பின் காய வைக்க தேசியக்கொடி மாதிரி கம்பத்தில் ஏற்றி காய வைப்பதும் கொள்ளை அழகு.. ( இதை சம்சாரங்க பார்த்தா புருஷன்க தொலைஞ்சாங்க.. )





 http://www.abimani.com/wp-content/gallery/eppadi-manasukkul-vandhai-tamil-movie-stills/eppadi-manasukkul-vandhai-tamil-movie-stills-20.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்


1. music AJ Daniel ( assistant of Harris Jayaraj) நல்ல இசைதான் அதுக்காக டொம்டொம்டொம்முன்னு எப்போ பாரு தட்டிட்டே இருக்கனுமா? மெலோடி சாங்க்ல கூட அண்ணன் பேஸ்ல ரிப்பேர் ஆன டேப் ரிக்கார்டர் மாதிரி சவுண்ட் மிக்ஸிங்க்.. தொம் தொம்னு நெஞ்சு அதிருது.. சொல்ல முடியாது. இதய பலஹீனம் உள்ள்வர்கள் இவர் இசையை கேட்டா டொப்னு உயிரை விட்டாலும் விடலாம் ( இதையே சாக்கா வெச்சு யாரும் கொலை பண்ண அவர் மியூசிக்கை யூஸ் பண்ணிடாதீங்கப்பா)


2. ஹீரோயின் ஆட்டோ மேல தன் காரை மோதிடறா.. அப்படியே எஸ் ஆகி இருக்கலாம்.. ஆனா ஹீரோ அவரை இறங்க சொல்லி இவர் டிரைவர் ஆகி பப்ளிக்ல அடி வாங்கறது சிம்ப்பதியை வரவைக்க என்றாலும் நம்பமுடியாத சீன்


3. ஹீரோ ஒரு பாட்டில் மாதிரி சமாச்சாரத்தை ஃபிரண்ட் தலைல ஓங்கி அடிக்கறான்.. ஃபிரண்ட் ஆள் அவுட்.. அப்போ அந்த பாட்டிலுக்கு எதும் ஆகலை.. பின் ஹீரோ சுவர்ல சாய்ஞ்சு விரக்தியா அதை உருட்டி விடறான், அப்போ அது சுவத்துல பட்டு உடையுது.. ஓங்கி மண்டைல போடறப்போ உடையாதது இப்போ மட்டும் எப்படி உடையுது?



4.   வீட்ல தடி மாடுங்க மாதிரி 2 பசங்க சரக்கு அடிச்சுட்டு மப்புல இருக்காங்க.. கதவை தாள் போடாம ஹீரோயின் பெப்பரப்பேன்னு எல்லாம் திறந்து போட்டுட்டு குளிக்கப்போகுது.. சரி அது அப்பாவியா இருக்கட்டும்.. பெண்ணுக்கு உள்ளுணர்வுன்னு ஒண்ணு இருக்கும்.. ஹீரோ 2 அடி தொலைவில் நின்னு ஹீரோயின் குளிக்கறதை பார்க்கறான்.. அவன் அப்போதான் சரக்கு அடிச்சிருக்கான்;.. அந்த வாசம் அல்லது நாற்றம் கூடவா அந்த லூஸ்க்கு தெரியாது.. ?


5. வீடு பெட்ரூம்ல ஒரு பெட்ஷீட்ல தீ பற்றிடுச்சு. ஒரு குடம் தண்ணீர் ஊத்துனா அப்பவே அணைஞ்சிடும் ஹீரோவுக்கு ஃபோன் பண்ணுதே? அதுவரை அக்னி பகவான் வெயிட் பண்ணிட்டு இருப்பாரா?


http://www.cinejosh.com/gallereys/movies/normal/eppadi_manasukkul_vandhai_tamil_movie_stills_0406121156/eppadi_manasukkul_vandhai_tamil_movie_stills_0406121156_009.jpg


6. ஹீரோ நெம்பர் ஸ்டோர் பண்ணீ வைக்காதா. ஒவ்வொரு டைம் ஃபோன் பண்றப்பவும் நெம்பர் டைப் பண்ணீ  பண்ணி பண்ணுதே? அப்பா , அம்மா கூட இருந்தாலாவது அப்பா செல் ஃபோனை செக் பண்ணுவார்னு சால்ஜாப் சொல்லலாம்.. தனியாத்தானே இருக்கு. ?


7. ஏதோ மாட்டுக்கு போடற ஊசியை ஹீரோ தன்னை ஃபாலோ பண்ணி உண்மையை கண்டு பிடிச்சவனுக்கு போடறார்.. அவன் சாகற வரை பார்த்துட்டு போக மாட்டாரா? பறக்காவெட்டி போல் அரை குறையா அட்டாக் பண்ணிட்டு ஓடறது ஏன்?


8. இந்த காலத்துல கட்டிய சம்சாரம் கிட்டே 1000 ரூபா பணம் கேட்டாலே ஏன்? எதுக்கு?ன்னு 1008 கேள்வி கேட்குது.. ஆனா ஹீரோ 50 லட்சம் கேட்டதும் உடனே 2 வது நிமிஷம் கேஷ் ரெடி.. எப்படி? அதுக்கு புத்திசாலித்தனமா ஒரு வசனம் வெச்சிருக்காரு. ஆனா என் கேள்வி ஹீரோயின் ஹீரோவை நம்பறார் ஓக்கே ஆனா ஒரு  வாய் வார்த்தையா எதுக்கு இவ்ளவ் பணம்?னு கேட்கமாட்டாரா? ( இதை செக் பண்ண என் சம்சாரத்துகிட்டே 750 ரூபா பணம் கேட்டேன் . அக்கவுண்ட் பேயி செக் போட்டு தருது அவ்வ் . அப்போதான் நான் வாங்குனேன்னு அத்தாட்சியாம் )


 9. போலீஸ் ஆஃபீசர் கிட்டே எவிடன்ஸ் ஒரு பேக்ல, ஹீரோ கிட்டே 50 லட்சம் பணம்.. 2 பேரும் பேக் மாத்திக்கும்போது பரஸ்பரம் திறந்து செக் பண்ண மாட்டாங்களா? எவ்ளவ் முக்கியமான டீலிங்க்.. பப்பரப்பான்ன்னு ஹீரோ ஏமாறுவது எப்படி?


10. ஹீரோ கிட்டே செத்துப்போன ஃபிரண்ட் மாதிரி பேசி போலீஸ் ஆழம் பார்ப்பதும், அந்த ஐடியாவும் சூப்பர்.. ஆனா அந்த நேரம் அந்த ஹால்ல பிரைவசியா லாக் பண்ணிக்க மாட்டாங்களா? அப்படியா ஃபோன் பேசிக்கிட்டே வந்து ஒரு ஆஃபீசர் சொதப்புவார்?


http://www.cinejosh.com/gallereys/movies/normal/eppadi_manasukkul_vandhai_tamil_movie_stills_0406121156/eppadi_manasukkul_vandhai_tamil_movie_stills_0406121156_063.jpg



சி.பி கமெண்ட் - முதல் படம்  மாதிரி இது மொக்கை இல்லை.. த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம்.. பெண்களும் பார்க்கலாம்


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 41

 குமுதம்  ரேங்க் எதிர்பார்ப்பு - ஓக்கே 


 டைம்ஸ் ஆஃப் இண்டியா - 3 /5


 டெக்கான் கிரானிக்கல் - 6/10


 ஈரோடு ஸ்ரீ சண்டிகாவில் படம் பார்த்தேன்

டிஸ்கி -

JULAYI - தெலுங்கு சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2012/08/julayi.html
 




http://cdn2.supergoodmovies.com/FilesFive/eppadi-manasukkul-vandhai-movie-stills-0b9c9ff6.jpg

கங்கை நதிக்காக ஒரு போராட்டம்! - உமா பாரதி பேட்டி

http://pragmaticideas.files.wordpress.com/2008/11/uma-barathi.jpg

களத்தில் உமா பாரதி



கங்கைக்காக ஒரு போராட்டம்!



எஸ்.சந்திரமெளலி



கங்கை நதி பாதுகாப்புக்கு ஒரு செயல் திட்டத்தைத் தீட்டி அதற்குப் பொறுப்பாளராக உமா பாரதியை நியமித்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. விழிப்புணர்வு யாத்திரை, அறிவியல் ஆவரங்கம், மனிதச் சங்கிலிப் போராட்டம்... என்று பலவகையான நிகழ்ச்சிகளை உள்ளடக்கியது இந்தக் கங்கை செயல்திட்டம்.



 முன்னதாக நாடெங்கும் இருக்கும் பன்னிரெண்டு ஜோதிர்லிங்க கோயில்களுக்கு புனித கங்கை நீரை எடுத்துக் கொண்டு சென்று, அபிஷேகம் செய்யும் பக்தி யாத்திரை ஒன்றை மேற்கொண்டிருக்கும் உமா பாரதி, ராமேஸ்வரம் வந்தபோது, சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.



முன்பு ராம ஜென்ம பூமி... இப்போ கங்கை செயல்திட்டமா?



இல்லை. நீங்கள் உங்கள் வீட்டுக் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்துக் குளித்தாலும் கூட, கங்கை நீரில் குளிப்பதாகத்தான் நமது இந்திய நம்பிக்கை. அப்படிப்பட்ட புண்ணிய நதியான கங்கை மிகவும் மாசுபட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.


 அதன் நீர் வளமே பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது என்பது ஐ.ஐ.டி. மேற்கொண்ட ஆய்வின் மூலமாகத் தெரியவந்துள்ளது. அதனால்தான் கங்கையைக் காப்பாற்றுவதற்கான செயல்திட்டம் ஒன்றை எங்கள் கட்சி உருவாக்கி உள்ளது."





கங்கை செயல்திட்டத்துக்கு, உத்தரகண்ட் மாநில எதிர்ப்பு?


http://harivarasanam.files.wordpress.com/2011/06/ganga-river.jpeg



ஒருசிலர் எதிர்த்தது உண்மைதான் என்றாலும், மின்சார உற்பத்தி நிலையங்களுக்கும், நீர்ப்பாசன அணைகளுக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. நானே, கங்கை செயல்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களைச் சந்தித்துப் பேசி, அதன் அவசியத்தை எடுத்துச் சொன்னவுடன், அவர்கள் கங்கை செயல்திட்டத்தை வரவேற்றார்கள்."



வீசப்படும் மனித சடலங்களால் கங்கை மாசுபடுகிறதே?





தில்லியில் கங்கை செயல்திட்டம் குறித்த ஒரு கருத்தரங்கம் நடக்க இருக்கிறது. அதில் விஞ்ஞானிகளும், சுற்றுச்சூழல் அறிஞர்களும், கங்கை நதிக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லாமல், எந்த அளவுக்கு அணைகள் மற்றும் மின் உற்பத்தித் திட்டங்களைச் செயல்படுத்தலாம் என்று ஆய்வு அறிக்கைகளை வழங்க இருக்கிறார்கள்.


 இன்னொரு பக்கம், இந்து மத சன்னியாசிகளும், முக்கியஸ்தர்களும், கங்கையை மாசுபடுத்தாமலும், அதன் புனிதத்தைப் பாதுகாப்பது எப்படி? என்று ஆலோசனைகள் வழங்கப் போகிறார்கள். தவிர கங்கை, கடலில் கலக்கும் கங்கா சாகரில் தொடங்கி, கங்கோத்ரி வரை ஒரு விழிப்புணர்வு யாத்திரையையும் நடத்துவதற்குத் திட்டம் உள்ளது."






சாமானிய மக்களுக்கு என்ன பயன்?



சில ஆண்டுகளுக்கு முன்பு, கங்கை நதியின் புனிதம் காப்பாற்றப்பட வேண்டும் என்று நான் உண்ணாவிரதம் இருந்தேன். அப்போது, இந்துக்கள் மட்டுமின்றி ஏராளமான முஸ்லிம்களும் என் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டார்கள். காரணம், கங்கையின் இரு கரைகளிலும் ஏராளமான கிராமங்கள். அவற்றில் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் வசிக்கிறார்கள்.


 அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஆதாரம் கங்கைதான். கங்கையில் மீன் பிடித்து, விற்றுப் பிழைக்கும் ஏழை மீனவர்களில் பலரும் முஸ்லிம்கள். கங்கை நதி மாசுபடுவதால், அதில் வசிக்கும் மீன்கள் இறந்துவிடுகின்றன. அது கங்கைக் கரையோரக் கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதாகப் பாதிக்கிறது. ஆக, எங்கள் கங்கை செயல் திட்டத்தால், சாமானிய மக்களுக்கும் நிச்சயம் பயன் உண்டு."





மத்திய அரசின் ரெஸ்பான்ஸ்?





எங்கள் கட்சித் தலைவர் நிதின் கட்கரி, அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் நானும் கொண்ட குழு பிரதமரைச் சந்தித்து, கங்கையின் புனிதத்தைக் காப்பாற்றும் அவசியத்தை எடுத்துச் சொன்னோம். அவர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்திருக்கிறார்."


http://www.indianetzone.com/photos_gallery/39/ganga-river_14363.jpg



கர்நாடகம் - தமிழகம் காவிரிப் பிரச்னை; கேரளா - தமிழகம் முல்லைப்பெரியாறு பிரச்னை?



நதிநீரை தேசிய சொத்தாக அறிவிக்க வேண்டும். அரசியல்வாதிகள் தண்ணீரை வைத்து அரசியல் செய்கிறார்கள். அரசியலைத் தவிர்த்து சம்பந்தப்பட்டவர்கள் உட்கார்ந்து பேசினால் எல்லா பிரச்னைகளும் தீரும். போராட்டத்துக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வரவேண்டும். நான் அங்கே கங்கைக் கரையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தும்போது தமிழகத்தில் நீங்கள் காவிரிக்கரையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்துங்கள்."


thanx - kalki, seetha ravi, amirtham surya, pulavar tharumi




http://www.tommyschultz.com/photos/big_thumbnails/india/varanasi-ganges-river-sunrise/varanasi-ganges-river-sunrise-21.jpg

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 10. 8..2012 ) 10 படங்கள் முன்னோட்ட பார்வை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih3sGstaPKtWVpH1JzLINO11w1HWa18NwPIg2DZu-qVniF8XWMqOTpm4g4BfkJra_ib6saV9zmQB8iL_FuewZU8c593Cgr3H_RwAutKr6Vg9Tevjh95ZG4rY8vxwSV2M3Ce-wnCBKNzyA/s1600/16x25-+Monday.jpg 

1. எப்படி மனசுக்குள் வந்தாய் - எம்.கே. எண்டர்பிரைசஸ் நிறுவனம் வழங்க ஸ்ரீதேவி மேக்கர்ஸ் சார்பில் ஜி.கிச்சா தயாரிக்கும் படம் எப்படி மனசுக்குள் வந்தாய். இதில் நாயகர்களாக விஷ்வா, இர்பான், நாயகியாக தன்வி வியாஸ் நடிக்கின்றனர். ரவிகாளே, சதீஷ், மகி, மகேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி பி.வி.பிரசாத் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ‘காதலில் விழுந்தேன்’ படம் எப்படி வித்தியாசமான உணர்வை தந்ததோ அதே மாதிரி ஒரு உணர்வை ‘எப்படி மனசுக்குள் வந்தாய்’ கொடுக்கும்.

இந்த படமும் ஒரு இசை சூறாவளி போன்றதுதான். படப்பிடிப்பு முடிந்து தணிக்கையில் யு.ஏ. சான்றிதழ் பெற்றுள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது என்றார்.

இசை: ஏ.ஜே.டேனியல், ஒளிப்பதிவு: விஜய் மில்டன், ஸ்டண்ட்: சுப்ரீம் சுந்தர், எடிட்டிங்: வி.டி.விஜயன், நடனம்: ஸ்ரீதர், காயத்ரி ரகுராம், அருண். 


காதலுக்காக எதையும் செய்ய துணியும் இளைஞனின் கதை. 
சீனு, ஷாம், மித்ரா ஒரே கல்லூரியில் படிப்பவர்கள். விஷ்வா&தன்வீயை காதலிக்கிறேன். மித்ரா அறைக்குள் நுழைந்து அவள் குளிப்பதை பார்த்துவிடுகிறான் சீனு. இதை தட்டி கேட்கும் ஷாமுடன் மோதல் ஏற்பட, அவனை கொன்று புதைத்துவிடுகிறான் சீனு. செய்த கொலையை மறைக்க தொடர்ந்து பல தவறுகளை செய்கிறான் சீனு. போலீஸ் பிடியில் சிக்குகிறான். அவனது நிலைமை என்னவாகிறது என்பதே திரைக்கதை.ஈரோடு ஸ்ரீ சண்டிகாவில் ரிலீஸ்- இதன் விமர்சனம் படிக்க -http://www.adrasaka.com/2012/08/blog-post_331.html
 
 
 
2. தில் தில் மனதில் - இது ஏதோ டப்பிங்க் படம் போல.. கூகுளில் எந்த விபரமும் கிடைக்கலை. மலையாளத்தில் வந்த புதிய முகம் என்ற படத்தின் டப்பிங்க்காம்.. பிருத்விராஜ்,பிரியாமணீ நடித்தது
http://cherrytimes.in/wp-content/uploads/2012/08/Panithuli-Movie-615x771.jpg



3. பனித்துளி - டாக்டர் ஜெ நட்டி குமார் டைரக்ட் செஞ்ச படம்.. கணேஷ், கல்பனா, ஷோபனா என யார் யாரோ நடிச்சிருக்காங்க .ஈரோட்டில் ரிலீஸ் இல்லை
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLP5_d6_0q_hyphenhypheng_9YV4pirPplpr0IMYeOc3FaoY7wTnxds5jw5OxhqErUF97gyTXAZJBwnyQjATKZB0h_3ufSSHLNUVL5blhLcprh1HVpv3Q03rKyTE5CsNTNK1yzbmgF2xHpgMifdtHVv/s1600/tamil%252Bactress%252Binbanila%252Bpalayamkottai%252Bmovie%252Bstills_photo-01.jpg


4. "பாளையங்கோட்டை"-வல்லரசு மகாராசனிடம் உதவி இயக்குநராக "அரசாட்சி", "ஆஞ்சநேயா" போன்ற படங்களில் வேலை பார்த்தவர் சேகர்.ஜி. இவர் இப்போது நடித்து இயக்கி வெளிவர உள்ளபடம் "பாளையங்கோட்டை". பாளையங்கோட்டையில் சுமார் 10வருடங்களுக்கு முன்னாள் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை படமாக்கி இருக்கிறார்.
 திருநெல்வேலி, வேதாரண்யம் ‌உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தை படமாக்கி உள்ளார். படம்குறித்து சேகர்.ஜி செல்லும்போது, இந்த படத்தை வேறு ஒரு புதுமுகம் நடிக்க தயாரிப்பாளர்களிடம் கதை சொன்னேன். அவரோ இதில் நீங்களே ஹீரோவாக நடித்து விடுங்கள் என்று வற்புறுத்தி கேட்டு கொண்டார். அதனால் நானே ஹீரோவாக நடித்துவிட்டேன்.


படத்தில் பெரிய கதை என்று ஒன்றும் இல்லை, பெரிய பில்ட்-அப்பும் கிடையாது. தான் எப்படி போனாலும், மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று ஹீரோ நினைக்கும் படம் தான் பாளையங்கோட்‌டை. கிட்டத்தட்ட ஒரு வருடம் இந்த படத்திற்காக உழைத்திருக்கிறேன்.


அப்புறம் படத்தின் ஹீரோயின் இன்பநிலா பற்றி சொல்லனும். டைரக்டர் தங்கர்பச்சானின் கண்டுபிடிப்பு. களவாடிய பொழுதுகள் படத்தில் நடித்திருப்பவர். படம் வருவதற்கு முன்பே நான்கு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். இந்தபடத்தில் நான் ஹீரோ என்ற நினைப்பில் படம் எடுக்கவில்லை. படத்தில் கதையின் தேவைக்கான நாயகன் அவ்வளவுதான்.


டான்ஸ், சண்டை என்று எல்லாவற்றையும் முறைப்படி பயிற்சி எடுத்து, உயிர் கொடுத்து உழைத்திருக்கிறேன். சென்சாரில் சில காட்சிகளை மாற்ற வேண்டும் என்று கேட்டு கொண்டதால், அதற்கு மட்டும் புதிதாக பத்து நாட்கள் ஷூட்டிங் செய்தோம். இனி படத்தை பற்றி ரசிகர்களாகிய நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்றார் டைரக்டரும், நடிகருமான ஜி.சேகர்.
 http://www.kollytalk.com/wp-content/uploads/2012/08/Adhisya-Ulagam-3D.jpg
 5.  அதிசய உலகம் 3டி   -படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்திருக்கிறது. இந்தியாவில் தயாராகியிருக்கும் முதல் டைனோசர் படம் அதிசய உலகம் 3டி. இந்த படம் தமிழில் தயாராகியிருக்கிறது. தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.



படத்தை பற்றி அதன் டைரக்டர் ஷக்தி ஸ்காட்ச் அளித்துள்ள பேட்டியில், இது, ஒன்றரை மணி நேரம் ஓடுகிற படம். படத்தில், 15 டைனோசர்கள் வருகின்றன. பேசும் நாயும் வருகிறது. 80 சதவீத காட்சிகள், கம்ப்நட்டர் கிராபிக்சில் உருவாக்கப்பட்டுள்ளன.


குழந்தைகளையும், பெரியவர்களையும் கவரும் விதமாக படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. விஞ்ஞானி ஒருவர் கால இயந்திரத்தை கண்டுபிடிக்கிறார். அவருடைய பேரக்குழந்தைகள் தவறுதலாக அதை இயக்கி, டைனோசர்கள் காலத்துக்கு போய் விடுகிறார்கள். அவர்களை, அந்த விஞ்ஞானி எப்படி மீட்டு கொண்டு வருகிறார்? என்பதே கதை.



தாத்தாவாக லிவிஸ்டன், பேரக்குழந்தைகளாக ஸ்ரீலட்சுமி, பிருத்வி ஆகியோர் நடித்துள்ளனர். ஆர்.பானுசித்ரா தயாரித்துள்ள இந்த படத்துக்கு, அனைவரும் பார்க்கும் வகையில் தணிக்கை குழுவினர், "யு" சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள், என்று கூறியுள்ளார். 

 ஈரோடு தேவி அபிராமியில் ரிலீஸ் 

http://www.tamilcinemaz.com/wp-content/uploads/2012/06/image0057.jpg


6.கொருக்குப்பேட்டை கூலி -கன்னடத்தில் ரிலீசான ‘கூலி’, தமிழில் ‘கொருக்குப்பேட்டை கூலி’ பெயரில் டப் ஆகிறது. ராஜஸ்ரீ கிரியேஷன்ஸ் சார்பில் பி.அஜெய்குமார் தயாரிக்கிறார். சுதீப், மம்தா, கிஷோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பி.எல்.ரவி. இசை, அனூப் சீலின். வசனம்: டி.எஸ்.ஆர்.முருகன், சி.சரவன். இயக்கம், பி.என்.சத்யா. 


படம் பற்றி அவர் கூறும்போது, ‘‘கூலிப்படைக்கு தலைமை தாங்கி, பணத்துக்காக கொலை செய்யும் தாதா சுதீப், மம்தாவின் காதல் வலையில் சிக்குகிறார். பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்று புரிந்துகொண்ட அவர், கத்தியை போட்டுவிட்டு, காதலியை மணக்கப் போராடுகிறார். அது நிறைவேறியதா என்பது கதை’’ என்றார்.ஈரோடு அண்ணாவில் ரிலீஸ்

 http://www.atozmp3.net/wp-content/uploads/2012/08/Julayi-Movie-Review-AtoZmp3.jpg

7. JULAYI -அல்லு அர்ஜூன், இலியானா, பிரம்மானந்தம் நடிச்ச இந்த தெலுங்கு ப்டம் நேத்து ரிலீஸ் ஆச்சு. ஜாலி பொழுதுபோக்கு படம்.. ஈரோடு ஸ்டாஎஇல் ரிலீஸ். இந்தப்பட விமர்சனம படிக்க-http://www.adrasaka.com/2012/08/julayi.html
 



8. ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் -175 வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் பற்றிய டாக்குமெண்ட்ரி படம் ரிலீஸ் ஆகுது, ஆனா ஈரோட்ல ரிலீஸ் இல்லை.. தியேட்டர் கிடைக்கலையாம்.. ஆனா தண்டமா 4 கில்மா குப்பை ரிலீஸ் ஆகுது.


 http://123telugu.com/slideshow/movies/A/Andala_Rakshasi_Audio_Launch_Invitation/images/Andala%20Rakshasi%20(2).jpg

9. Andala Rakshasi -நான் ஈ புகழ் ராஜ்மவுலி படம்.அந்தால ராக்‌ஷஷி.. Naveen Chandra,Rahul Ravindran,Lavanya Tripathi  தெலுங்கு படம்

http://www.flicksandbits.com/wp-content/uploads/2012/07/the-bourne-legacy-jeremy-renner-movie-poster.jpg


10. .The Bourne Legacy -Fourth installment of the Bourne franchise based on an original story. As writer/director Tony Gilroy explains, "This is not a reboot or a recast or a prequel. No one’s replacing Matt Damon. There will be a whole new hero, a whole new chapter…this is a stand-alone project." Jason Bourne will not be featured in the film; Jeremy Renner will play another assassin trained in the same program as Bourne.

Directed by:
Starring:
more credits
... Aaron Cross

... Villain
... Number 3 Villain
... Pam Landy
... Dr. Albert Hirsch




நான் ஈமு




1. கொஞ்ச நாள் தானே ரகு கூட பழகுனே, எப்படி காதல் வந்தது?

எல்லா நாளையும் கொஞ்சற நாளா மாத்திட்டார், ஈசியா என்னை தேத்திட்டார்.


------------------------------



2.சொத்துக்குவிப்பு வழக்குல தலைவர் ரிலீஸ் ஆகிட்டாரே? எங்கே?

 குவிச்ச சொத்துக்களை பதுக்க போயிருக்கார்.


-----------------------------------


3. தலைவரே, ஜெயிலுக்கு போனா பதவி உண்டுன்னீங்க, ஒரே ஒரு டர்க்கி டவல் மட்டும் தர்றீங்க?

 பதவியை தோள்ல கிடக்கற துண்டு மதிரி  நினைக்கனும்னு சொன்னேனே, இப்போ இந்த துண்டை பதவியா நினைச்சுக்குங்க ..


-------------------------------



4. தலைவரே! திருமண மோசடிக்கான ஆதாரங்கள் இல்லாததால உங்களை விடுதலை பண்ணிட்டாங்க, என்ன பண்ணப்போறீங்க?

 என் ஆறு தாரங்களையும் பார்க்கப்போறேன்



-----------------------------


5. டாடி, என் காதலுக்கு குறுக்கே நிக்க மாட்டேன்னு சொன்னதுக்கு ரொம்ப தாங்க்ஸ்,,

 ஆனா ஒரு கண்டிஷன், பொண்ணு நம்ம சாதி சனமா இருக்கனும்



---------------------------





6. சாமியார் டெஸ்ட் மேட்ச்ல கலந்துக்கறாரா?அவருக்குத்தான் கிரிக்கெட்டே தெரியாதே?

அட நீ வேற , அவரு ஆணா? பெண்ணா? என டெஸ்ட் பண்ணப்போறாங்களாம்



---------------------------------


7.இளைய தலைமுறைக்கும், காங்கிரஸ் கட்சிக்கும்  என்ன வித்தியாசம்?

காங்கிரஸ் ராகுலை நம்பி இருக்கு, இளைய தலைமுறை  கூகுளை  நம்பி இருக்கு



-------------------------------------


8. இன்ஸ்பெக்டர், கொலையாளியை கண்டு பிடிக்கறதா  ஸ்டேஷன்ல சொல்லிட்டு பிரவுசிங்க் செண்ட்டர்  எதுக்கு வந்தீங்க?

இண்ட்டர் நெட்ல வலை வீசி கூகுள்ல தேடறேன் சார்



-----------------------------


9.  மேனேஜருக்கும், எம் டி க்கும் என்ன வித்தியாசம்?

முடிஞ்சா இந்த வேலையை செஞ்சு முடிச்சுடுங்கன்னு சொன்னா அது எம் டி ,  இந்த வேலையை செஞ்சு முடிக்கலைன்னா நீ முடிஞ்சேன்னு மிரட்னா அது மேனேஜர் 



------------------------------


10.  , மேனேஜர் சார், நீங்க தானே லீவே கேட்காதீங்கன்னு சொன்னீங்க?

அதுக்காக 24 மணி நேரம் பர்மிஷன் கேட்டா எப்படி?



------------------------------------



11. அவரு அநியாயத்துக்கு பயந்த  சுபாவமா இருக்காரு.

ஏன்?

காலார நடந்தாக்கூட காலரா வருமா?ன்னு கேட்கறாரு.



--------------------------------


12 ஹீரோவுக்கு ஏன் பொங்கி அண்ணன்னு பேர் வெச்சிருக்கீங்க?

 அவர் அநியாயம் எங்கே நடந்தாலும் பொங்கி எழுவாரு, எல்லா பொண்ணுங்களையும் அக்கா தங்கையா நினைப்பாரு



--------------------------------


13.நான் இதயத்திடம்  கேட்டேன்

“ லவ்வுக்கும் , ஃபிரண்ட்ஷிப்புக்கும் என்ன வித்தியாசம்?”

இதயம் சொன்னது

“ ஏண்டா என்னைக்கொல்றிங்க? என் வேலை பிளட் சப்ளை தான், அவுட் ஆஃப் சிலபஸ்ல கேள்வி கேட்டா எப்படி?”



----------------------------------


14. நம்பிக்கை ஒன்றிருந்தால் போதும், எவ்ளவ் கூட்டம் கோயில்ல இருந்தாலும் அடிச்சு பிடிச்சு சுண்டல் வாங்கிடலாம் # தன்னம்பிக்கை தான் முக்கியம்



---------------------------------


15. மனசைத்தொடற மாதிரி ஒரு வார்த்தை சொல்லு

 பிரா

 நீ எல்லாம் படிக்கற பையனாடா

 எஸ் மிஸ் , சரோஜா தேவி, இந்து நேசன், திரைச்சித்ரா படிக்கற பையன்



------------------------------------------



16. உலக அளவில் இந்தியன் தான் பெஸ்ட்

 நிஜமாவா?

 ஆமா, ஆனா என்ன பிரச்சனைன்னா  இந்தியாவுல  அவன் பெஸ்ட்டா இருப்பதில்லை



-------------------------------


17. ட்ரிபிள்ஸ் போற பைக்கை கை காட்டி வழி மறிச்ச டிராஃபிக் சார்ஜெண்ட் கிட்டே பைக்வாலா -

சார், சாரி, ஆல்ரெடி 3 பேர் இருக்கோம், இப்போ போய் லிஃப்ட் கேட்டா எப்டி?



---------------------------------


18. காதல், நட்பு என்ன வித்தியாசம்?

 காதல்ங்கறது  சிக்ஸ் பேக் மாதிரி, மெயிண்ட்டென் பண்றது ரொம்ப சிரமம், ஃபிரன்ட்ஷிப் என்பது தொப்பை போல ஒரு டைம் வந்துட்டா நம்மை விட்டு பிரியவே பிரியாது


--------------------------



19. வீட்டோட மாப்ளையா இருப்பதும் , ஈமு கோழி வளர்ப்பதும் ஒண்ணுதான்

 எப்படி?

 ஆரம்பத்துல ஜாலியா இருக்கும், அப்புறம் அவமானம் தான் மிஞ்சும்


---------------------------------


20. நல்ல வேளை  ஈ படத்தை தெலுங்குல எடுத்தாங்க

 ஏன்?

 தமிழ்ல எடுத்திருந்தா  நான் ஈ(மு)ன்னு டைட்டில் வெச்சிருப்பாங்க



---------------------------------


You can't depend on your eyes when your imagination is out of focus.
Mark Twain

Thursday, August 09, 2012

திருப்பதி ஏழுமலையான்

நாம் அனைவருக்குமே திருப்பதி ஏழுமலையானை பற்றி தெரிந்திருக்கும், உங்களுக்கு தெரியாத பல பிரமிக்க வைக்கும் அதிசியங்கள் இருக்கின்றன, அதில் தமிழும் தமிழனும் எந்த அளவு  சம்பந்த பட்டு உள்ளான் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
http://www.whereincity.com/files/photo-gallery/172/tirupati-temple-634_m.jpg

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்





திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன

அவைகளில் சில.........



1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.




2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.



http://3.bp.blogspot.com/-i1YlHK1zAV4/UAq3ZHIKViI/AAAAAAAADGw/FK6-hM1DATs/s1600/tirupathi.jpg

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.




4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.
http://www.thehindu.com/multimedia/dynamic/00114/06_tirupati_114072f.jpg

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.



1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.



2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்ப்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.



3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.



4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

http://media-cdn.tripadvisor.com/media/photo-s/01/37/aa/04/tirupati-temple.jpg

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.



6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.


7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.



8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.



9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.


10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

http://indiantraveljourney.com/wp-content/uploads/2010/11/Venkateshwara_Tirupati_Temple.jpg

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.



12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.



13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.


14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.


15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.
http://i1.trekearth.com/photos/34318/dsc08166.jpg

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.



17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.


18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.


19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.



20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.
http://www.tnsindia.net/backwater-temple-tour/gifs/tirupati-temple.jpg

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.


22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.


23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.



24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.


25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.


http://www.rang7.com/myindia/uploads/15609/photo/3604.jpg
26. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.



26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.



27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.



28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuiM4uKxhPxPiDq4t1ZUSXmOBjpDklY0uEfoW-IpjgN8e4jImy2QBlmyy7AdjI2vaqAO48Pcy1eJo6ANL6extluV10xjqQS_aqCVcFjs7oT6NQD9yHuWINNqzTtSvLHc653_o3t16Zjrc/s1600/tirupathi-balaji.jpg


நன்றி: உலக தமிழ் மக்கள் இயக்கம், தொழிற்களம்

JULAYI - தெலுங்கு சினிமா விமர்சனம்

 http://telugu.way2movies.com/wp-content/uploads/2012/08/julayi_film_review_Allu_Arjun_movie_julayi_review.jpg

விஜய் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி.. இத்தனை நாளா மகேஷ் பாபுவோட ஜெராக்ஸ்தான் விஜய்னு நக்கல் அடிச்ச அஜித் ரசிகர்கள் முகத்துல இனி கரியை பூசிடலாம்.. ஏன்னா அண்ணன் இந்தப்படத்தை ரீமேக்கப்போறார்.. அதுக்கான எல்லா குவாலிஃபிகேஷனும் இதுல இருக்கு.. அதனால விஜய் மகேஷ் பாபு மட்டும் இல்லை, நல்ல படம் எங்கே சிக்குனாலும் அதை நாஸ்தி சாரி ரீமேக் பண்ணிடுவார்னு அடிச்சு சொல்லிக்கலாம்.. 


ஹீரோ அல்லு அர்ஜூன் மிடில் கிளாஸ்ல வாழும் பையன்.. நோகாம நோம்பி கும்பிடனும்.. கஷ்டப்படாம சம்பாதிக்கனும் அப்டினு நினைக்கறவர்.. இவர் ஒர் டைம் வில்லன் கார்ல லிஃப்ட் கேட்டு ஏறி போறார்.. அவங்க பேங்க் கொள்ளை அடிக்கற பார்ட்டி.. அதை பற்றி ஒரு க்ளூ கிடைக்குது.. 


ஹீரோ ஒரு க்ளப்ல பெட்டிங் கட்றாரு.. அப்போ போலீஸ் அவரை அரெஸ்ட் பண்ணுது.. அப்போ அவர் இந்த பேங்க் கொள்ளை பற்றி துப்பு குடுத்து போலீஸ் இன்ஃபார்மரா ஆகறாரு.. 


 கிறீஸ்டோபர் நோலன் எடுத்த டார்க் நைட் ரைஸஸ் பார்த்த பாதிப்புல வில்லன் அதே பாணில பேங்க்கை கொள்ளை அடிக்கறான்.. திருடா திருடா படத்துல வர்ற மாதிரி ஒரு பெரிய லாரில அதை கடத்தறான்.. போலீஸ்ல மாட்டிக்கறான்.. 

 வில்லனுக்கு செம கடுப்பு.. ஹீரோ மேல.. மாட்டி விட்டானே?அவனை எப்படியாவது பழி வாங்கத்துடிக்கறான்.. 


சைக்கிள் கேப்ல ஹீரோ ஹீரோயினை லவ் பண்றாரு.. ஏன்னா ஹீரோவுக்கு வேலை ஹீரோயினை லவ் பண்றது, வில்லனுக்கு வேலை ஹீரோயினை ரேப் பண்ண ட்ரை பண்றது.. வில்லன் ஹீரோ பின்னாலயும் , ஹீரோ ஹீரோயின் பின்னாலயும் சுத்தறாங்க.. சாதாரண மிடில் கிளாஸ் ஹீரோ போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்கே கோச்சிங்க கிளாஸ் நடத்தறார்..  என்ன நடக்குதுங்கறது மிச்ச சொச்ச கதை.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQShKFk1YZEXehCVvcTkBlXPI0icic09ALrUuIVY6wtB37F2kOKjoGPAxiMBK7-eUl3Mpj8onZZnxn_hYmAfQLBb4eVk36oHmaPQNLDI15kl79zELL50JZ_QvEitYhWGJR3nulbo7n6AA/s1600/julayi-movie-stills-11.jpg


 சும்மா சொல்லக்கூடாது. திரைக்கதை செம ஸ்பீடு.. பர பர என ஓடுது.. எனவே முதல் ஹீரோ இயக்குநர் தான்.. 


ஹீரோ அல்லு அர்ஜூன் செம ஸ்மார்ட்..  கார்த்திக் விஜய் இருவரும் சேர்ந்த கலவையாய்  ஜொலிக்கிறார்.. நடனக்காட்சிகளில் நல்ல சுறு சுறுப்பு,, பிரபு தேவா , விஜய் மேனரிசம் காப்பி பண்றார்..  ஆனாலும் ரசிக்க முடியுது. வெல்டன்.. 


 ஹீரோயின் இலியானா- சோகை விழுந்த இளமை குன்றிய ஜாகை..  டென்னிஸ் கோர்ட்டின் கன்னிஸ் மன்றத்தலைவி.. முப்பது லெமனை ஒரே குண்டாவுல பிழிஞ்சு சாப்பிட்டாக்கூட அவர் முகத்துல ஒரு புத்துணர்ச்சியே வராது போல.. போர்ன்விட்டா, ஹார்லிக்ஸ், பூஸ்ட் எல்லாம் பாப்பா சாப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ( எல்லாம் ஒரு சுயநலம் தான்.. சுயநலத்தில் பொது நலம்,.,.லோகட் காட்ட இவர் குனியும் காட்சிகளில் நெஞ்சாங்கூட்டில் எலும்புகள் வரிசையா உள்ளேன் அய்யா சொல்லுது.. நாய்ங்க பார்த்தா கவ்விட்டு போயிடும்.


வில்லன் Sonu Sood ( தமிழ்ல உச்சரிக்கவே பயமா இருக்கு ) நடிப்பு கலக்கல்.. இவர் கேரக்டரைசேஷன் செம.. செம மிடுக்கு. கம்பீரம்.. ஆனால் க்ளைமாக்ஸ்ல அப்படி கீழே இறங்கி இருக்க வேண்டாம்.. ஹீரோவை தூக்க வில்லனை இறக்கனும்னு கட்டாயம் இல்லையே?


 பிரம்மானந்தா காமெடி 5 சீன் வந்தாலும் நச்.. பஸ் ஸ்டாப்பில் இவர் பேக்கை அபேஸ் பண்ணும் காட்சி, குண்டு லேடியின் 40 பவுன் செயினை அடிக்க முயன்று தோற்கும் காட்சி செம கல கல,,.அவளுக்கும், எனக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சுன்னு சொல்லி அவரை விட  2 அடி உயரமான ஆண்ட்டி பக்கத்துல ஸ்டூல் போட்டு ஏறி பேசும் சீன்,ஹோட்டல்ல நடக்கும் எல்லாத்தையும் ஃபர்ஸ்ட்ல இருந்து சொல் எனக்கு காது கெட்காது என வெறுப்பேற்றும் சீன் , பஸ்சில் டெரரிஸ்ட் மாதிரி டெமோ காட்டும் சீன் என அனைத்து காட்சிகளும் கலக்கல்.


பாடல்கள்ல 2 சூப்பர் ஹிட் ஆகிடும்..பக்டோ பக்டோ செம குத்து


http://www.chitramala.in/photogallery/d/627165-1/Julayi-Movie-Working-Pics-in-Dubai+_2_.jpg


மனம் கவர்ந்த வசனங்கள் ( ஒரு உத்தேசமான மொழிபெயர்ப்பு)


1. காபி  குடிக்கிறாயாப்பா? 


 அட போடி.. எல்லாத்துக்கும் மரியாதை குடுத்துட்டு... அவன் ஒரு கைதி.. 

ம்க்கும், வீட்டுக்கு வந்தவங்களை உபசரிச்சது ஒரு தப்பா?



2.  ஏன் இப்படி முரட்டுப்பிடிவாதம் பிடிக்கறே? 

 இது பிடிவாதம் இல்லை.. ஈகோ.. 



3. நீ குடுக்கற 2 ரூபா தட்சணை எதுக்கு யூஸ் ஆகும்? டீல் போட்டுக்கலாமா?


4. எப்பவாவது ஸ்விம்மிங்க் பூல்ல சுனாமி வந்து பார்த்திருக்கியா? ( இருங்க.. சைக்கோ ஸ்டார்  எங்கண்ணன், 2வது படத்துலயே தன் முன்னாள் அண்ணி கூட  டூயட் பாடுன தனுஷ் கிட்டே கேட்டுச்சொல்றேன்)


5.  நான் இப்போ  என்ன செய்ய?

 லைஃப்ல சில டைம் நாம என்ன பண்றோம்? என்ன பண்ணனும்?கற குழப்பம் வரும்.. புரியாத நேரம் வரும். அது இப்போ உனக்கு வந்திருக்கு.. யோசி



6.  எனக்கு பேப்பரும் பேனாவும் வேணும்.. 

 எதுக்கு? நீ ஒரு கைதி


 ஏன்? காந்தி கேட்டப்ப கொடுத்தாங்களே? அவர் சுய சரிதை எழுதுன மாதிரி நான் ஏதும் எழுதக்கூடாதா? 



7. ஜெயில்னா  ஏன்  இவ்ள்வ் பயம்?  அங்கே மணி அடிச்சா சோறு ( யார்றா அந்த மணி.. அவன் ஏன் எல்லாரையும் அடிக்கறான்?) வாரம் 2 நாள் மட்டன் சிக்கன் எல்லாம் உண்டு.. அப்புறம் என்ன? 

 அய்யய்யோ, நான் சைவம் ஆச்சே?


http://www.stillsindia.com/gallery/thumbs/lrg-8081-illiana-028.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள் 



1.எங்கள் ஆருயிர் அண்ணன் விஜய் நடிச்ச யூத் படத்துல பாஸ்கி த மொட்டை பாஸ் கூட சேர்ந்துக்கிட்டு காமெடிங்கற பேர்ல அவர் அடிச்ச லூட்டியை அப்படியே காப்பி அடிச்சு இருக்கீங்க.. அதாவது ஆல்ரெடி பிளான் பண்ணி புது பைக்கை அங்கே கொண்டு வரச்சொல்லி ஃபோன்ல சொல்லி வெச்சு ஹீரோயின் கிட்டே இப்போ புது பைக் வரும்பாருன்னு உதார் விடறது.. அது ஆல்ரெடி விஜய் & பாஸ்கி , டைரக்டர் அந்த காட்சிகளை Life Is Beautiful (1997) என்ற இத்தாலிய படத்திலிருந்து சுட்டிருக்கிறார்கள்.அப்படி இருக்க நீங்க ஏன் அதே படத்தில் இருந்து அதே சீனை சுடறீங்க.. வேற படமா இல்லை..



2.  ஹீரோ  பஸ் ஸ்டாப்ல நிக்கறார்.. ஹீரோயின் பஸ் வந்ததும் போய் பஸ்ல ஏறப்போறார்.. உடனே ஸ்லிப் ஆகி கீழே விழறார்.. ஐ மீன் விழப்போறார்.. இதுக்கு ஜஸ்ட் 2 செகண்ட் தான் ஆகும்.. ஆனா ஹீரோ ஓடிவந்து ஹீரோயினை தாங்கிப்பிடிச்சுடறார். பென் ஜான்சனே வந்தாலும் முடியாது.. 


3. டூயட் காட்சிகள், குத்தாட்டப்பாட்டில் எல்லாம் போலீஸ் ஆபீசர்ஸை யூனிஃபார்ம் போட்டு ஆட விட்டு ஏன் அவங்களையும், டிபார்ட்மெண்ட்டையும் கேவலப்படுத்தனும்?


4. ஒரு சீன்ல கார் 35 கிமீ வேகத்துல ஓடுது.. ஹீரோ 40 கிமீ வேகத்துல ரோட்ல ஓடி வந்து அந்த கார்ல இருக்கற டிரைவரை பிடிச்சு வெளீல எரியறார்.. அதுக்குப்பிறகும் அந்த கார் 2 பர்லாங்க் போகுது.. எப்படி? அவர் ஜம்ப் பண்ணீ அதை கண்ட்ரோல்க்கு கொண்டு வர்றதெல்லாம் ஹீரோயிஸமா?  கேனயிஸமா?


5. அது கூட பரவாயில்லை, இன்னொரு கார் 70 கிமீ வேகத்துல வருது. அண்ணன் ஒரு பிளாட் ஃபார்ம் கத்தி வெச்சு அதை பஞ்சர் பண்றார்.. காரோட ஸ்பீடு என்ன? கை அப்புறம் காங்கிரஸ் கை மாதிரி டேமேஜ் ஆகிடும் சாரே.. 


6. க்ளைமாக்ஸ்ல அந்த வில்லி ஹீரோயினை பிணையக்கைதியா கூட்டிட்டு போறா... ஹீரோ அதிபுத்திசாலியா போலீஸ் ஆஃபீசர் கையை மாத்தி கோர்த்து விட்டுட்டு ஹீரோயினை காப்பாத்திடறார்.. ஆனா அதுக்குப்பின் அந்த விலிக்கு தான் கையை பிடிச்சுட்டு இருக்கறது ஒரு ஆம்பளை கைன்னு கூடவா தெரியாது.. ஒரு வேளை அவர் ஆம்பளை வாசமே படாம வளர்ந்தவரா?


7. படத்துல  இடைவேளை வர்ற முக்கியமான சீன்.. ஹீரோயினை குறி பார்த்து வில்லனோட ரிவால்வர்.. வில்லனை குறி பார்த்து ஹீரோவோட ரிவால்வர்..  2 பேரும் கன்னை கீழே போடுன்னு பரஸ்பரம் சொல்றாங்க.. எல்லா படத்திலும் வர்ற சீன் தான்.. ஆனா வில்லன் அவனுக்குப்பின்னால நிக்கற வில்லி கூப்பீட்டு ஏதோ சொல்ல அவ கிட்டே பின்னால திரும்பி 10 நிமிஷம் கடலை போடற வரை ஹீரோ தேமேன்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கார்.. அது ஏன்? செயல்படாத பிரதமர்னு நக்கல் அடிக்கப்படும் நம்ம சிங்க் கூட அந்த பிளேஸ்ல இருந்திரு்ந்தா ஷூட் பண்ணி இருப்பாரு.. 


சிபி கமெண்ட் - படம் ஜாலியா காமெடி ஆட்டம் பாட்டம்னு போறதால எல்லாரும் பார்க்கலாம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjdfjblApUNUJpn2ChQy11QJOl4ftfcPG9cvq0f2fOSqliKYIdfpkVzTvYOtJ76GTkFdLVaX2aVHuiwM-gkc8S3-6Bd_pfaBs6-IbxQfOx2XtxOxQnORODC1gUGdLb1LYMqmeJHu5QY7Oh/s1600/i1.jpg




டெக்கான் கிரானிக்கல் - 7 /10



Directed by Trivikram Srinivas
Produced by S. Radha Krishna
D.V.V. Danayya
(presenter)
Written by Trivikram Srinivas
Screenplay by Trivikram Srinivas
Starring Allu Arjun
Ileana D'Cruz

Rajendra Prasad

Sonu Sood
Music by Devi Sri Prasad
Cinematography Chota K. Naidu
Shyam K. Naidu
Editing by Prawin Pudi
Studio Haarika & Hassine Creations
Distributed by Siri Media
(Andhra Pradesh)

Ficus Inc.
(Overseas)
Release date(s)
  • August 9, 2012
[1]
Country India
Language Telugu