Sunday, August 05, 2012

சூன்யக்காரிக்கு ஒரு டெஃபெனிஷன் கண்டு பிடிச்சுட்டேன் ஜீ பூம்பா



1. மிஸ், நீங்க ஐ டி ல ஒர்க் பண்ற கேர்ளா இருக்கலாம், 24 மணி நேரமும்  கம்ப்யூட்டர்லயே  குடி இருக்கலாம், அதுக்காக கீ போர்டு டிசைன் போட்ட ஜாக்கெட் போட்டுட்டு வந்தா எவன் ஒழுங்கா வேலை செய்வான்?


---------------------------------



2.டியர்,வழக்கமா லவ்வர்னா சாக்லெட் தருவாங்க, நீ இஞ்சு மொரப்பா தர்றியே?

 இப்போ நான் 1 சொல்வேன், அதைக்கேட்டு என்னால இதை ஜீரணிக்கவே முடியலைன்னு  நீங்க சொல்லிடக்கூடாதே?



----------------------------------


3. அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே?

பசியே எடுக்க மேட்டேங்குதுன்னு சொன்னா கரும்பு ஜூஸ் சாப்பிட்டு பாருங்க அப்டிங்கறாரே?


------------------------------


4.  ஜோசியர் - உங்களுக்கு ஜாதக்கட்டம் சரி இல்லை..

 அப்டியா? சரி, அதை ரவுண்ட் பண்ணிடுங்க 



-----------------------------------



5. என் கனவு இல்லம் இதுதான்

 எங்கே? காணோமே?

 யோவ் லூசாய்யா நீ? என் கனவு எனக்கு மட்டும் தானே தெரியும்?



---------------------------




6. நிருபர் - மேடம், திடீர்னு 20 கிலோ வெயிட் எப்படி உங்களால குறைக்க முடிஞ்சுது?

நடிகை - நீங்க வேற , என் படம் எதுவும்  ஓடலைங்கற கவலைல இளைச்சுட்டேன்


----------------------------


7. தலைவர் எதுக்காக சட்டசபைக்கு  தன் சம்சாரத்தையும் கூட்டிட்டு போறார்?

மழைக்கால  கூட்ட தொடர் ஆச்சே? குளிருக்கு இதமா கட்டிப்பிடிக்கத்தான்


------------------------------


8. ஜட்ஜ் - மேட்ச் ஃபிக்சிங்க்ல உங்களுக்கு தொடர்பு இருக்கா?

கைதி - கடுப்பைக்கிளபாதீங்க யுவர் ஆனர்,  மேட்ச் காலைல 10 மணிக்கு ஸ்டார்ட் பண்ணலாம்னு டைம் ஃபிக்ஸ் பண்ணேன், அவ்ளவ் தான்


-----------------------------


9. தலைவருக்கு பொது அறிவு கம்மி

 எப்டி சொல்றே?

செண்ட்ரல் பரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்னா  (CBI)  சென்னை  செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல  இருக்கற ஆஃபீசா?ன்னு கேட்கறாரே?



-----------------------


10. சின்ன வயசுல  நான் செரி “லாக்ஸ்” தான் சாப்பிடுவேன்

ஓஹோ! லாக்ஸ் கணக்குல சம்பாதிக்க அதுதான் காரணமா?

---------------------------------------



I want every image to be the beginning of an unseen image...


11. டீச்சர் - நியூட்டனின் 3 ஆம் விதி பற்றி சொல்லு




 மாணவன் - அவருக்கு 3 சம்சாரம்கற மேட்டரே இப்போதான் தெரியும் மிஸ்


----------------------------



12. வள்ளுவர் - தன் மனைவி வாசுகியை ரொமான்ஸ்க்கு அழைக்கும்போது வாசுகி  . வா சுகி என்றிருப்பாரோ?



---------------------------


13. ஆட்டோ டிரைவரின் லொள் வாசகம் - கர்ப்பிணிப்பெண்களுக்கும்.அப்படி ஆக நினைக்கும் பெண்களுக்கும் இலவசம் 




--------------------------------


14. அத்தான் நமக்கு சிறந்த தம்பதி விருது கிடைச்சிருக்கு 



.அட நிஜமாவா? யார் அந்த லூஸ் செலக்டர்? 



-----------------------------


15. மிஸ்டர் வள்ளுவர்! உங்க மேலே ஒரு குற்றச்சாட்டு.ஹிட்ஸ்க்காகவும் பிரபலத்துக்கும் ஆசைபட்டுத்தான் காமத்துப்பால் எழுதுனீங்களாமே? 




-------------------------------



மங்காத்தா எங்காத்தா கைமாத்தா பத்துரூபா
உங்காத்தா கைலேர்ந்து சுட்டுகிட்டு வந்தாக்கா
செங்காத்தா பாய்ஞ்சு செமஆட்டம் போட்டுநாம
மங்காம தங்காம மாலைநேரம் தெம்பாக
நங்கைசெங் காயினு நல்லதொரு பாட்டுபாடி
பொங்கி பொழுதெலாம் போக்கி மகிழ்ந்திட்டு
தங்கமாய் மின்னலாம் வா



16. அத்தான் லவ் பண்றப்ப வீனஸ் சிலை மாதிரி இருக்கறதால என்னை உங்க வாழ்வின் விடி "வெள்ளி"ம்பீங்களே.இப்போ?



 மேரேஜ் ஆகிட்டாலே சனிதான் 




------------------------------


17. மிஸ் லிப்ட் ப்ளீஸ்.



 இது லேடீஸ் காலேஜ் பஸ். 



 தெரிஞ்சுதான் கேட்டேன் 



------------------------------


18. காலனோட காலக்கணக்கையும் , இன்செப்ஷன் புகழ் கிறிஸ்டோபர் நோலனோட திரைக்கதை முடிச்சையும் புரிஞ்சுக்கறது கஷ்டம்.ஆனாலும் சுவராஸ்யமே் 




---------------------


19. எங்க வீட்ல வாட்ச் இல்லை டி வி செல் ஏதும் இல்லை டைம் ப்ளீஸ் என தினமும் பக்கத்து  வீட்டுப் பெண்ணிடம் கேட்டால் நீயும் கடலை மன்னனே!




----------------------------


20. வர மிளகா ஸாப்பிட்டா கடவுள் வரம் கிடைக்குமா? கொட மொளகா சாப்ட்டா கொட கிடைக்குமா? பை அல்சர் வந்தாக்கூட விடாம பல்சரில் போய் டாக்டரை பார்த்து வருவோர் சங்கம்




-------------------------------- 





21. எவரெஸ்ட் சிகரம் போய் குங்குமம் படிச்சா அது ஹையர் எஜுகேஷனா? 



------------------------------


22. காலேஜ் போகும் டீன் ஏஜ் பெண்ணே! ஐஸ் ஏஜ் 4 சினிமா போலாமா? 



ம் உன் ஐஸ் 2ம் டேமேஜ் ஆகிடும் பீ கேர்புல் 



----------------------


23. இண்ட்டர்வியூவில் -டேக் யுவ்ர் சீட். 



தாங்க்ஸ் ஸார் போறப்ப எடுத்துக்கறேன் 



-----------------------------


24. உங்க பேசிக் சேலரி 15000 ரூபா.




 ஓக்கே அப்போ கோபால் ,சி ,போர்ட்்ரான , டிபேஸ் சேலரி எல்லாம் எவ்ளவ்?்




-------------------------


25. டியூட்டில ஜாயின் பண்றதுக்கு முன்னே கம்பெனியை சுத்தி பார்த்திடுங்க.



 ஆல்ரெடி பார்த்தாச்சு.34 பெண்கள் 12 டீன் ஏஜ் கேர்ள்ஸ் இருக்காங்க 



-------------------------------





26.சம்பளம் எவ்ளவ் எதிர்பார்க்கறீங்க? 



குடுக்கறதைக்குடுங்க.கிடைச்ச வரை லாபம்.எப்படியும் வெட்டியாத்தான் இருப்பேன்



--------------------------


27. ஸ்கூல்ல எல்லா சப்ஜெக்ட்லயும் ஒரு பொண்ணு பூஜ்யம் (சூன்யம்)வாங்கி இருந்தா அவங்க சூன்யக்காரியா? # எம் பி ஏ கேள்வி 



---------------------------

Saturday, August 04, 2012

ஈரோடு புத்தகத் திருவிழா 2012

 ஈரோடு புத்தக திருவிழா முகப்பு

ஈரோடு களை கட்டிடுச்சு.. நேத்து புக் ஃபெஸ்டிவல் ஸ்டார்ட் ஆகிடுச்சு.. இனி 12 நாள் கொண்டாட்டம் தான்..  மக்கள் சிந்தனைப்பேரவை ஸ்டாலின் குணசேகரன் தான் இதுக்கு இன்சார்ஜ்..


http://erodebookfestival.com/invi/makkal%203.jpg




ஈரோடு புத்தகத்திருவிழா நிகழ்ச்சி நிரல் -இலக்கியவாதிகள் ,பேச்சாளர்கள் பட்டியல்
a
ஈரோடு, ஆக.3: மனதைப் பதப்படுத்த புத்தகங்கள் அவசியம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் ஆர்.நடராஜ் கூறினார்.மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 8-வது ஆண்டு புத்தகத் திருவிழாவைத் தொடங்கிவைத்து அவர் பேசியது
 நம் தோழி
:பாரதியார் கடைசியாக உரையாற்றிய ஈரோட்டில் நின்றுகொண்டு பேசுவதைப் பெருமையாகக் கருதுகிறேன். அடுத்தமுறை வரும்போது அவர் பேசிய இடத்தை நிச்சயம் பார்வையிடுவேன். கடலூர் சிறையில் பாரதியார் இருந்த இடத்தைப் பொதுமக்கள் பார்வையிடும் இடமாக மாற்றுவதற்காக, சிறைத்துறையில் இருந்தபோது பணிகளைத் தொடங்கினேன்;

கல்கி

 நான் மாறுதலாகியதும் அப்பணி நின்றுவிட்டது. அதைப் பொதுமக்கள் பார்வையிடும் இடமாக மாற்ற வேண்டும்.முன்னோர்களைத் திரும்பிப் பார்க்கும்போதுதான் நமது கலாசாரம், பண்பாட்டை முழுமையாக அறிந்துகொள்ள முடியும். உலகமே ஒரு நூலகம். அதில் மனிதர் எல்லாம் புத்தகங்கள். பஞ்சு நூலாகி, ஆடையாகி மனிதனின் மானத்தைக் காப்பதுபோல, புத்தகங்கள் மனித மனத்தைப் பதப்படுத்துகிறது.வாசிப்பு பழக்கம் மிகவும் அவசியம்.
 களை கட்டியது

 பகத்சிங் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு லெனின் எழுதிய புத்தகத்தை வாசித்தார். உருது கவிஞரின் கவிதைகளைப் படித்த பின்னர்தான் வினோபா பாவேவுக்கு உருது மொழியைப் படிக்கும் எண்ணம் தோன்றியது. அண்ணாவுக்கு அமெரிக்காவில் அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முயன்றபோது, தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை முடித்த பின்னர்தான் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமென அழுத்தமாகக் கூறிவிட்டார்.
 கிழக்கு பதிப்பகம் சுஜாதாபுக்தான் டாப் சேல்ஸ்

அப்படியென்றால் வாசிப்பு பழக்கம் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.சிவானந்தன், வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் சு.கணேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.ஸ்ரீதேவி, மாவட்ட நூலக அலுவலர் ஆர்.கோகிலவாணி, பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.
 சுட்டிகளுக்கான புக்ஸ் ஸி டி

நன்றி - தினமணி
மக்கள் சிந்தனை பேரவையின் ஈரோடு புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. இதையொட்டி கல்லூரி மாணவர்களின் மாரத்தான் ஓட்டப்பந்தம்நேற்று காலை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். ஓட்டப்பந்தயத்தை நடிகர் கார்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
 டாப் ஸேள்ஸ் ஆல்வேஸ் சமையல்



இதில் கலெக்டர் சண்முகம், மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், நந்தா கல்லூ£¤ தலைவர் சண்முகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு சி.எஸ்.ஐ. கல்லூரி அருகில் இருந்து தொடங்கிய ஓட்டப்பந்தயம் பிரப்ரோடு, சத்தி ரோடு வழியாக சி.என்.சி. கல்லூரியை சென்றடைந்தது.

சிக்ஸ்த் ஸெண்ஸ் பதிப்பகம் புக்ஸ் அடுக்கி வெச்சிருப்பதே தனி ஸ்டைல்



ஓட்டப்பந்தய தொடக்க விழாவில் நடிகர் கார்த்தியை பார்க்கும் ஆர்வத்தில் மாணவர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். மேடையை மாணவர்கள் சூழ்ந்து கொண்டதால் அவர் மாணவர்கள் பிடியில் இருந்து தப்பி காரில் சென்று ஏறினார். அங்கும் காரினை மாணவர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அவர் நகர முடியாமல் தவித்தார். இதை தொடர்ந்து பாதுகாப்பில் இருந்த போலீசார் மாணவர்கள் கூட்டத்தினை கலைத்தனர். பின்னர் நடிகர் கார்த்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
விவேகானந்தா பதிப்பகம் சிலை



ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் இன்று மாலை நடைபெறும் புத்தகத் திருவிழா தொடக்க விழாவில் கலெக்டர் சண்முகம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் நடராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
குமுதம்


நன்றி - மாலை மலர்

ராமாயணம் ஜஸ்ட் 49 ரூபா


  320 பக்கம் பகவத் கீதை ஜஸ்ட் 10 ரூபா

 
 
நமீதா கெஸ்ட் டாக் அப்டிணா இப்படி இருக்குமா இந்த அரங்கம்?
 
 
 
கல்யாண மண்டபம் போனா ஈசியா கிடைக்கும்.இங்கே ஒரு அப்பளம் 20 ரூபாயாம்
 
 
 இன்னைக்கு எப்படியாவது மனப்பாடம் பண்ணி சமைச்சுடனும்
 
 
 
பாதுகாப்புக்கு அனுப்பினா அண்ணன் தான் மட்டும் பாதுகாப்பா ஜீப்ல
 
 

உஞ்சவிருத்தி - சுஜாதா - சிறுகதை

சில ஆண்டுகள் வடக்கே இருந்து விட்டு ஒரு முறை ஸ்ரீரங்கம் போன போது வழக்கம்போல் ரங்கு கடையில் போய் உட்கார்ந்தேன். ரங்கு ‘அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல்’ அப்படியே இருந்தான். புதுசாக கூலிங்கிளாஸ் போட்டிருந்தான். ஆண்டாளின் பையன் அமெரிக்காவில் இருக்கிறா&ன பாச்சாவோ, யாரோ… அவன் கொடுத்ததாம். வழக்கம்போல் தம்பு, சீது போன்றவர்கள் வந்து அரசியலையும் சினிமாவையும் அலசினார்கள். தம்பு தேவகாந்தாரிக்கும் ஆரபிக்கும் வித்தியாசம் என்னவென்று பாடிக் காட்டினான். சீது யாருக்கு மொட்டைக் கடுதாசி எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.



‘‘நீ எப்ப வந்தே?’’ என்று கேட்டான் ரங்கு.



‘‘நேத்திக்குதான்.’’



‘‘கொஞ்ச நாள் இருப்பியா?’’



‘‘ஒரு மாசம் இருக்கலாம்னு ஆன்யுவல் லீவ்ல வந்திருக்கேன்.’’



‘‘நீ ஏர்ஃபோர்ஸ்லதான இருக்கே?’’



‘‘ஏர்போர்ட்ல.’’



‘‘ப்ளேன் எல்லாம் ஓட்டுவியாமே! பாகிஸ்தான் மேல நீதான் பாம் போட்டதா பேசிக்கிறா.’’



‘‘ரங்கா… பாரு, சரியா புரிஞ்சுக்கோ! நான் இருக்கறது ஏர்போர்ட். டெல்லில சப்தர்ஜங்னு பேரு > விமானநிலையம். நீ சொல்றது ஏர்ஃபோர்ஸ். அது ‘பாலம்’கிற இடத்தில் இருக்கு.’’



‘‘ரெண்டும் ஒண்ணுதான.’’




‘‘இல்…லை.’’



‘‘பின்ன… ஏர்ஃபோர்ஸ்ல யார் இருக்கா?’’



‘‘மேலச் சித்திரை வீதில ரங்காச்சாரிடா அது… அவன்கூட பைலட் இல்லை.’’



‘‘ஏர்ஃபோர்ஸ்னா எல்லாரும் பறக்க மாட்டாளோ?’’



‘‘மாட்டா!!’’



‘‘அப்ப நீ ஏர்ஃபோர்ஸ்ல இல்லை?’’



‘‘ஏர்போர்ட்… ஏர்போர்ட்!’’



‘‘பின்ன யாரோ, நீ ப்ளேன் ஓட்டறதா சொன்னாளே..?’’



‘‘அது சின்ன ப்ளேன். டிரெய்னிங் ப்ளேன்.’’



‘‘ஏர்போர்ட்ல பெரிய ப்ளேன்தான இருக்கும்! போட்டுக் குழப்பறாங்கப்பா!’’



நான் அவனுக்கு மேலும் விளக்கும் முயற்சியைக் கைவிட்டேன். ரங்குவின் உலகம் அவன் வீடு, கடை இரண்டை விட்டு வெளியே எதும் கிடையாது. உலகம் முழுக்க அவன் கடைக்கு அரட்டையடிக்க வரும். இவன் இடத்தைவிட்டு நகரமாட்டான். பெருமாளைக்கூட பங்குனி, சித்திரை உற்சவங்களில் கடையைக் கடந்து செல்லும்போதுதான் சேவிப்பான்.





அப்போது ஒரு கிழவனார் கையில் சொம்புடன், ஒரு சிறுவன் குச்சியைப் பிடித்துக்கொண்டு அழைத்துச் செல்ல… ‘உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன்…’ என்று ஏறத்தாழ உளறலாகச் சொல்லிக்கொண்டு நட்ட நடுத் தெருவில் வந்துகொண்டிருந்தார். முகத்தில் ஒரு வாரத்துக்கு உண்டான வெண் தாடி. மார்பில் பூணூல். சவுக்கம். பத்தாறு வேஷ்டி.



‘‘ரங்கு, இது யாரு?’’



‘‘இவர் பேரு தேசிகாச்சாரி. ஜி.பி>னு ஐஸ்கூல்ல மேத் டீச்சர் இருக்காரே, அவரோட அப்பா.’’



‘‘ஆமாம். எதுக்கு சொம்பை கைல வெச்சுண்டு பிரபந்தம் சொல்லிண்டுபோறார்?’’



யாரோ அவர் சொம்பில் அரிசி போட்டுவிட்டு வணங்கி விட்டுச் சென்றார்கள்.



‘‘உஞ்சவிருத்தி.’’



‘‘புரியலை. ஜி.பி. இவரை வெச்சுக் காப்பாத்தலியா?’’



‘‘அதெல்லாம் இல்லை. பிடிவாதம்.’’



‘‘பணம் காசு இல்லையா? ஜி.பி. நிறையச் சம்பாதிக்கிறாரே!’’



‘‘இவருக்கே நிறைய சொத்து இருக்கு. சித்திரை வீதில ஜி.பி. இருக்கற வீடு இவர்துதான். மகேந்திர மங்கலத் தில் நெலம் எல்லாம் இருக்கு.’’



‘‘உஞ்சவிருத்தின்னா பிச்சை எடுக்கறதில்லையோ?!’’



‘‘ஆமாம். ‘பவதி பிக்ஷாம் தேஹி’ன்னு சொல்லலே… அவ்ளவுதான்!’’



‘‘புரியலை ரங்கு.’’



‘‘சில வேளைல பெரியவர்களுடைய பிடிவாதங்கள் புரியாது நமக்கு. இந்த பிராமணனுக்கு வீம்பு. போக்கடாத்தனம்.’’



ஜி.பி. என்னும் பார்த்தசாரதி செயலாக இருப்பவர். கணக்குப் பாடப் புத்தகம், நோட்ஸ் எல்லாம் போடுபவர். லட்சக்கணக்கில் விலை போகும்.

எஸ்.எஸ்.எல்.சி>க்கு ஒரு செக்ஷனுக்கு கிளாஸ் டீச்சர். ஹைஸ்கூலில் சீனியர் டீச்சர் என்று மதிக்கப்பட்ட ஆசிரியர். தேசிய விருது வாங்கியிருக்கிறார். அடுத்த ஹெட்மாஸ்டர் அவர்தான் என்று பேசிக்கொண்டார்கள். அவர் தந்தையார் பிச்சை எடுக்கிறார் என்றால்…



‘‘வேணும்னுட்டே, மகனை அவமானப்படுத்தறதுக்குன்னுட்டே..’’



‘‘கண்ணு வேற தெரியலை.’’



‘‘கண்ணெல்லாம் நன்னாத் தெரியறது. தன்மேல சிம்பதியை வரவழைச்சுக்க, கண் தெரியாத மாதிரி பாடசாலைப் பையனை வெச்சுண்டு குச்சியைப் பிடிச்சுண்டு போறார்.’’




‘‘என்ன ப்ராப்ளம் அவருக்கு?’’



‘‘வரார். கேட்டுப் பாரேன்.’’



இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போது அவரே கடைக்கு வந்து பெஞ்ச்சில் உட்கார்ந்தார். அவருடன் கொஞ்சம் ஈரம் காயாத வேஷ்டியின் நாற்றமும் வந்தது. எதையோ வாயிலே மென்றுகொண்டிருந்தார். கிட்டப் பார்க்கையில் ஆரோக்கிய மாகத்தான் இருந்தார். நல்ல மூங்கில் கம்பு. அதைப் பையன் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு நின்றுகொண்டிருக்க…




‘‘ஓய்! லைப்பாய், ரெக்சோனான்னு சோப்பு ஏதாவது போட்டுக் குளிக்கிறதுதா;ன? கிட்ட வந்தாலே கத்தாழை நாத்தம்!’’




‘‘மாட்டுப்பொண்ணு எங்கடா சோப்பு கொடுக்கறா? ஒரு அண்டா தண்ணிகூட வெக்கமாட்டேங்கறா ரங்கு.’’



‘‘ஜி.பிகிட்ட சொல்றதுதான?’’




‘‘அவனா? பொண்டாட்டிதாசன்..! தொச்சு, அது என்னடா சாக்லெட்டு?’’




‘‘பட்டை சாக்லெட் தாத்தா.’’



‘‘அது எனக்கு ஒண்ணு இவனுக்கு ஒண்ணு கொடு! ரங்கநாதா..!’’ என்று பெஞ்ச்சில் உட்கார்ந்து, ‘‘தீர்த்தம் இருக்குமா? என்ன வெயில்.. என்ன வெயில்!’’



ரங்கு சாக்லெட் எடுத்துத் தர, மடியிலிருந்து அஞ்சு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார்.



‘‘நீ யாரு… கோதை பேரன்தா;ன?’’ என்றார் என்னைப் பார்த்து.




‘‘ஆமாம் மாமா!’’



‘‘நீ ஏர்போர்ஸ்ல இருக்கியா?’’



‘‘ஏர்போர்ட்! மாமா, எதுக்காக இந்த வெயில்ல அலையறீங்க? வெயில் தாழ வீதிப் பிரதட்சணம் போகக்கூடாதா?’’



‘‘பாரு, வைஷ்ணவனா பொறந்தா பஞ்ச சம்ஸ்காரங்கள்னு அஞ்சு காரியங்கள் செய்யணும். அதான் ஐயங்கார். ஊர்த்வ புண்ட்ரம், சமாஸ்ரணம், திருவாராதனம், ஆசார்யன்கிட்ட உபதேசம் கேக்கறது, பரன்யாசம் வாங்கிண்டப்றம் உஞ்ச விருத்தி. பிச்சைபோடற அரிசியைத் தான் சாதம் வெச்சு சாப்பிடணும்!’’




‘‘மாமா, அதெல்லாம் வசதியில்லாத வாளுக்கு!’’



‘‘இல்லை. வைஷ்ணவனா பொறந்த எல்லாருக்கும். உனக்கு, எனக்கு… அந்த நாராயண&ன மகாபலிகிட்ட யாசகம் போனான்.’’



‘‘நீங்க இப்படித் தெருவில போறது அந்தக் கடமையை நிறைவேத்தறதுக் காகவா?’’



‘‘ஆமா, வேறென்ன..?’’



‘‘உங்க ஃபேமிலியில அவாளுக்கு சங்கடமா இருக்காதோ?’’



‘‘எதுக்குச் சங்கடப்படணும்? எதுக்குங்கறேன்?’’



‘‘இல்லை மாமா… உங்க சன் பெரிய கணக்கு வாத்தியார். ஹெட்மாஸ்டர் ஆகப் போறார். நேஷனல் அவார்டெல்லாம் வாங்கினவர்.’’



‘‘அதனால?’’



‘‘மத்தவாள்ளாம் என்ன நினைச்சுப்பா? தோப்பனாரை சரியா வெச்சுக்காம தெருவில யாசகம் பண்ண அனுப்பிச்சுட்டார் பாரு, இவர் என்ன வாத்தியார்னு தா&ன நினைச்சுப்பா?’’



‘‘நினைக்கத்தான் நினைச்சுப்பா. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?’’



ரங்கு சில சமயம் பட்டென்று போட்டு உடைத்துவிடுவான்.



‘‘ஓய்… உமக்கு மாட்டுப் பெண்ணோட சண்டை. ஜி.பி. அவ பேச்சைக் கேட்டுக்கறார். அந்தக் கோபத்தைத்தான் நீங்க இப்படி அவரை அவமானப்படுத்திக் காட்டறீர்னு ஊர் உலகமெல்லாம் பேசிக்கிறது. உஞ்சவிருத்தி குஞ்ச விருத்தியெல்லாம் சால்ஜாப்பு!’’




‘‘சரி, அப்படியே பேசிக்கிறான்னா நீ என்ன செய்யணும்?’’



அவர் ‘நீ’ என்று அழைத்தது ரங்குவை அல்ல. அங்கு இல்லாத தன் மகன் ஜி.பி>யை. ‘‘நீ என்ன செய்திருக்கணும்? ‘அப்பா, நீங்க சொல்றதிலயும் நியாயம் இருக்கு. கொஞ்சம் தழைஞ்சு போங்கபபா. நானும் அவளைத் தூக்கி எறிஞ்சு பேசாம இருக்கச் சொல்றேன்’னு சமாதானமா போகலாம் இல்லையோ..? எப்ப பார்த்தாலும் ‘அவ சொல்றதுதான் ரைட்டு, அப்பா… வாயை மூடுங்கோ’னு அதட்டினா எனக்கு எப்படி இருக்கும்..?’’




‘‘தனியா இருந்து பாருமேன்.’’



‘‘அதைத்தான் யோசிச்சிண்டிருக்கேன்.’’



‘‘இப்ப வீட்ல சாப்பிடறதில்லையா?’’



‘‘ரெண்டு தளிகை. எனக்கு உண்டான ஒரு மெந்தியக் குழம்பு, அப்பளத்தை நா;ன பண்ணிக்கறேன். ஒரு நெய் கிடையாது, கறமுது கிடையாது, தயிர் கிடையாது. மோர்தான். ஓட்டல் சாப்பாடு ஒத்துக்கலையே ரங்கா! பேதியாறது. அவா என்னவோ சாப்ட்டுட்டுப் போகட்டும். எனக்கு?’’



‘‘பிள்ளை?’’



‘‘அவனோட பேசியே ஒரு மாசம் ஆச்சு, ஒரே ஆத்துல இருந்துண்டு.’’



‘‘இதெல்லாம் சரி, உஞ்சவிருத்தி எப்டி உடம்புக்கு ஆறது உமக்கு? ரேஷன் அரிசியும் புழுங்கரிசியும் கைக்குத்தலும் கலந்திருக்குமே?’’



‘‘ஏதோ ரங்கநாதன் கிருபையில கல்லையும் ஜீரணிக்கிறது இந்த வயிறு. ஓடிண்டிருக்கு வண்டி.. இன்னும் எத்தனை நாள்… பார்க்கலாம். நான் செத்துப் போ&னன்னா இந்தப் பாடசாலைப் பையன்தான் எனக்குக் கொள்ளி போடணும், கேட்டுக்கோ ரங்கு.’’



‘‘நீர் எங்கே செத்துப் போவீர்? இருக்கறவாளை சாகடிச்சுட்டுத் தான் போவீர். ஆயுசு கெட்டி உமக்கு!’’



அவர் மறுபடி வீதி பிரதட்சிணத் துக்குப் புறப்பட, ‘‘ஸ்ட்ரேஞ்ச்… வெரி ஸ்ட்ரேஞ்ச்’’ என்றேன்.



ஹைஸ்கூல் எப்படி நடக்கிறது என்று… என் கிளாஸ்மேட்தான் கரெஸ்பாண் டெண்டாக இருந்தான், அவனை விசாரிக்கப் போயிருந்தபோது ஜி.பி-யைச் சந்தித்தேன். பொதுவாக மேத்ஸில் மல்ட்டிப்பிள் சாய்ஸ் கேள்விகள் வந்து தரமே போய்விட்டதாகச் சொன்னார். அவரேதான் ஆரம்பித்தார்…



‘‘அப்பாவைப் பாத்தியோ..?’’



‘‘பாத்தேன் சார்.’’



‘‘என்ன பிடிவாதம் பாத்தியா?’’



‘‘அவர் சொல்றதைப் பார்த்தா அவருக்குச் சோறு தண்ணி கூட சரியா கொடுக்கறதில்லைன்னு…’’



‘‘அப்படியா சொன்னார்? ஒரு நா எங்காத்துக்கு வந்து மாமியை சந்திச்சுக் கேட்டுப்பாரு. என் அப்பாதான்… இல்லேங் கலை. ஆனா, அவர் கார்த்தாலை எழுந்திருக்கற திலிருந்து பண்ற அட்ட காசம்… எனக்கு நாலும் பொண்ணு. நாலும் நன்னாப் படிக்கறதுகள். அதுகளைப் படிக்க விடாம சத்தமா பாராயணம் பண்ணிண்டு, எல்லா ரையும் கண்டார… வல்லாரன்னு திட்டிண்டு, கோமணத்தோட புழக்கடைல அலைஞ்சுண்டு…’’



‘‘தனி வீடு பாத்துக் கொடுத்துர்றதுதா;ன?’’




‘‘போகமாட்டேங்கறாரே! ‘என் வீடு, நான்தான் இருப்பேன்’கறார்!’’



‘‘சரி, நீங்க போய்டறதுதா;ன?’’



‘‘யோசிச்சிண்டிருக்கேன். வாடகை கொடுத்து மாளுமா?’’



‘‘அவர்கிட்ட பணம் இருக்கில்லே?’’



‘‘இருக்கு. என்ன வெச்சிருக்கார்னு காட்டமாட்டார். வக்கீலைக் கூப்ட்டு நாலு தடவை வில்லை மாத்தி மாத்தி எழுதிட் டார். சீரங்கம்னு ஒரு பேத்தி மேல கொஞ்சம் பிரியம். அதுங் கிட்ட எதோ சொல்லிண்டிருக்கார்… ‘உங்க யாருக்குமே நன்னி கிடையாது. தொச்சுக்குத்தான் எல்லாம்னு உங்கம்மா கிட்ட சொல்லிடு…’ ’’



‘‘தொச்சுங்கறது…’’



‘‘பாடசாலைப் பையன். அவரை கார்த் தால கம்பு பிடிச்சு அழைச்சுண்டு போறா&ன அவன். கேக்கறதுக்கு நன்னாவா இருக்கு? எதுக்குக் கிழத்துக்கு நான் சிசுருஷை பண்ண ணும்கறா என் ஆம்டையா! நான்தான் அவளை சமாதானப்படுத்தி வெக்கறேன்… ‘அப்படியெல் லாம் செய்ய மாட்டார். கோபத்தில ஏதோ சொல் றார்’னு. அவ சொல்றது நியாயம்தா;ன?’’




‘‘தான தளிப்பண்றதா…’’




‘‘அதெல்லாம் வெட்டிப்பேச்சு! ஆடிக் கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை தளிப்பண்ற உள்ளை மாடு கன்னுபோட்ட எடம் மாதிரி பண்ணிட்டுப் போவார். என் அப்பாவா இருந்தாலும், இந்த மாதிரி ஒரு பிடிவாதம் புடிச்ச கிழவனை நான் பாத்ததில்லை. போய்த் தொலைஞ்சாலும் பரவாயில்லைன்னு சில சமயம் அவ்வளவு வெறுப்பேத்தறார்.’’



‘‘அவருக்கு என்ன வேணுமாம்? எதாவது மனசில குறை வெச்சுண்டு இருக்கலாம் ஒரு இன்சொல், ஒரு பரிவு… அல்லது, ‘தாத்தா எப்டி இருக்கே?’னு பேத்திகள் கேட்டாலே போறுமா இருக்கலாம். உங்க மனைவியும் ‘அப்பா, எப்டி இருக்கீங்க? கண்ணுக்கு மருந்து போடட்டுமா’னு எதாவது கேக்கலாம்.’’



‘‘அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லை. நீ வேணா சீதாகூட பேசிப்பாரு. நான் சொன்னது பாதிதான். அவ ஆங்கிள்ள பார்த்தா கதை ரொம்பக் கடுமையா இருக்கும். டெல்லிக்குப் போறதுக்கு முன்னாடி ஒரு தடவை சாப்பிட வா, எங்காத்துக்கு!’’




போயிருந்தேன். நான்கு பெண்கள் பதினைந்து, பதின்மூன்று, பத்து, எட்டு என்று அலைந்தன. எனக்கு முன்னால் ஸ்டூல் போட்டு தீர்த்தம் எல்லாம் பதவி சாகக் கொண்டுவந்து கொடுத்தார்கள். எனக்காக மாமி ஜவ்வரிசிப் பாயசம் பண்ணியிருந்தாள். சமையல் எல்லாம் சூப்பராக இருந்தது.



நான் சென்றபோது, கிழவர் வாசல் திண்ணையில் காலை அகட்டி உட்கார்ந்து கொண்டு பனை விசிறியால் கீழே விசிறிக் கொண்டிருந்தார். நெற்றி சுருங்கி விரோதமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். ‘‘இருக்கறவனுக்கு ஒரு வேப்பம்பூ சாத்துமது கிடையாது. வரவா போற வாளுக்கெல்லாம் பால்பாயசம். கேக் கறவா கிடையாது இந்தாத்துல’’ என்றார்.




‘‘வாங்களேன் மாமா… உங்காம்தான? வாங்கோ, பாயசம் சாப்டலாம்’’ என்றேன்.



‘‘இந்தாத்திலயா? ஒரு திருஸ்தம் கூட எடுத்துக்கமாட்டேன்.’’



வாத்தியார் ஜி.பி-யின் மனைவி வெளிப்படையாகப் பேசினாள். ‘‘எவ்வளவு தூரம் பொறுத்துக்கறது? ‘பொறுத்துப் போ’னு இவர் பாட்டுக்கு சொல்லிட்டுப் பள்ளிக் கூடம் போய்டறார். இருபத்துநாலு மணி நேரமும் இவர் கூட மல்லுக் கட்ட வேண்டியிருக்கு. ரெண்டு பொண் வயசுக்கு வந்துட்டா. அவா முன்னாலயே கோமணத்தை அவுத்துக் கட்டிக்கறேர். ரெங்கராஜுவை கூப்ட்டு திண்ணைல உக்காந்துண்டு சர்வாங்க க்ஷவரம் பண்ணிக்கறேர். சாக்லெட்டு, பப்பர்மிட்டுனு வாங்கி ஒளிச்சு வெச்சுக்கறேர். பாட சாலைப் பையன்களுக்குக் கொடுத்தாலும் கொடுப்பேர்… பேத்திகளுக்குக் கொடுக்க மாட்டேர். அதுகளைப் படிக்க வெக்கறதே அவருக்குப் பிடிக்கலை. என்னைக் கண்டா ஆகவே ஆகலை…’’




‘‘இதுக்கெல்லாம் ஆதாரமா ஒரு சம்பவம் அல்லது காரணம் இருக்கணும் மாமி.’’



‘‘இருக்கு. அதைச் சொல்லிட்டுத் தான் ரசாபாசமாய்டுத்து! எங்காத்தில எனக்கு நிறைய செஞ்சிருந்தா. அதை அவர் அலமாரில வெச்சுப் பூட்டியிருந்தார். மாமியார் போறவரைக்கும் அதை நான் பார்த்தேன். பண்டிகை நாளில் என்னை எடுத்துப் போட்டுக்கச் சொல்வா. மாமியார் தங்கமான மனுஷி. அவர் போனதும், இது எதோ தங்கை பொண்ணு கல்யாணத்துக்கு எடுத்துக் கொடுத் துடுத்து போல! பாலிஷ் போட்டு வெள்ளிப் பாத்திரத் தையெல்லாம் கொடுத்திருக் கேர். போனாப் போறது, சொல்லிருக்கலாமில்லையா? ரங்கநாதன் கிருபை இவரும் சம்பாதிக்கிறேர். ஒரே ஒரு தடவை எச்சுமிக்கு தோடு செஞ்சு போடலாம். ‘அப்பா, அம்மா என் நகையெல்லாம் எங்க வெச்சிருக்கா?’னு கேட்டதுக்கு, ‘‘நகையா… உன்னை எதிர்ஜாமீன் இல்லாம இலவசமா கல்யாணம் பண்ணிண்டோம். உங்காத்துல உனக்கு என்ன போட்டா? உங்கப்பன் ஏமாத்திட்டான்’னார்.




எனக்கே தெரியும்… எனக்கு எத்தனை கேஷா கொடுத்தா, வைர மோதரத்துக்கு, பட்டு வேஷ்டிக்குன்னு… எத்தனை நகை போட்டான்னுட்டு. அதை எடுத்துச் சொன்னப்ப எல்லாம் கவரிங்னார். ‘இதை அப்பவே சொல்லியிருக்கறதுதா&ன?’ன்&னன். இவ்வளவுதாம்பா கேட்டேன். அதிலேர்ந்து என் மேலயும் என் பெண்கள் மேலயும் வெறுப்புன்னா வெறுப்பு அப்படிப்பட்ட வெறுப்பு. நின்னா குத்தம்.. உக்காந்தா குத்தம்…

’’

இந்தச் சம்பாஷணை முழுவதும் அவருக்குக் கேட்டிருக்கவேண்டும்.



திண்ணையிலிருந்து சத்தம் போட்டார்… ‘‘எல்லாத்தையும் சொன்னியே, உன் நகை அத்தனையும் சப்ஜாடா நான் திருப்பித் தந்ததைச் சொன்னியா?’’



இவள் ‘‘மொத்தத்தில கால்பாகம் கூடத் திரும்ப வரலைப்பா. ரெட்டை வடம் சங்கிலி என்ன ஆச்சு, பச்சைக்கல் தோடு என்னாச்சு, பேசரி என்னாச்சு, ஒட்டியாணம், நாககொத்து என்ன ஆச்சு, வங்கி என்னாச்சு..?’’ என்றாள்.



‘‘பச்சைப்பொய். உங்களுக்கெல்லாம் என் கெட்ட குணம் மட்டும் தான் தெரியும். நல்ல குணம் எதும் கண்ணுக்கே தெரியாது.’’

இவள் சன்னமாக ‘‘நல்லது எதாவது இருந்தா சொல்லுங்கப்பா’’ எனறாள்.



நான் இந்தச் சண்டை ஓயாது என்று புறப்பட்டு வந்துவிட்டேன். என் சமாதான முயற்சிகள் அத்தோடு முடிந்தன.



அடுத்த வாரம், புறக்கடையில் பாசி வழுக்கி விழுந்துவிட்டார் கிழவர். தொடை எலும்பும் இடுப் பிலும் முறிந்துபோய் ஜி.பி. அவரை புத்தூருக்கு அழைத்துப் போக, அங்கே இன்னமும் சீரியஸாகி, அப்புறம் தில்லைநகரில் அவரை அட்மிட் பண்ணி, மாற்றி மாற்றி வாத்தியாரும் மாமியும் பதினைந்து தினம் அவருக்கு வேளா வேளைக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு போய்… ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் நான் ஊருக்குக் கிளம்பும் முதல் நாள்தான் இறந்து போனார்.



இத்தனைப் பாடுபட்டதுக்கு ஜி.பி>க்கோ மனைவிக்கோ பேத்திகளுக்கோ எந்தவிதப் பயனும் இல்லை. சொத்து முழுவதையும் தொச்சு என்கிற துரைசாமியின் பேரில் எழுதி வைத்துவிட்டு, அவன் மேஜராகும் வரை > பதினெட்டு வயசு வரும் வரையில் வக்கீலை அந்தச் சொத்துக்கு கார்டியனாகப் போட்டு பதினெட்டாம் வயதில் அந்தச் சொத்து அவன் படிப்புக்கும் பராமரிப்புக்கும் போகவேண்டும் என்று எழுதி வைத்திருந்தார்.



பாடி எடுக்குமுன் துக்கம் விசாரிக்க அவர் வீட்டுக்குப் போய் திண்ணையில் சற்று மௌனமாக உட்கார்ந்திருந்தேன். உள்ளே பேத்தி ஒருத்தி மட்டும் ‘தாத்தாஆஆஆ…’ என்று அழுது கொண்டிருந்தது. உஞ்ச விருத்திக்கு அழைத்துச் சென்ற பாடசாலைப் பையன் ‘‘மாமா, நாளைலருந்து வரவேண்டாமா? வேற எதாவது ஒத்தாசையா இருக் கே&ன!’’ என்றான். ‘‘இந்த ஆமே உன்னுதுரா’’ என்றார் ஜி.பி. விசும் பலுடன். அவனுக்குப் புரியவில்லை. மாமிக்கு ஆத்து ஆத்துப் போயிற்று. ‘‘என்ன பாவம் பண்ணோம்னு இந்தத் தண்டனை கொடுத் துட்டுப் போனார் கிழவனார். எங்கப் பாம்மா போட்ட நகை எங்கேனு கேட்டது ஒரு பெரிய தப்பா? அதுக்கு இத்தனை பெரிய தண்டனையா?’



ரங்கு ஜி.பி-யிடம் ‘‘ஓய்… இது பிதுரார்ஜித சொத்து. அதை எழுதி வெக்க கிழத்துக்கு உரிமையே கிடையாது. கிறுக்குப் புடிச்சாப்ல இப்படியெல்லாம் வில் எழுதினா கோர்ட்டில ஒத்துக்க மாட்டா. சண்டை போட்டு வாங்கிடலாம்.’’





ஜி.பி-தான் ‘‘ரங்கு, நமக்கு எது உண்டு, எது இல்லைன்னு தீர்மானிக்கிறதெல்லாம் ஸ்ரீரங்கநாதன்தான்’’ என்றார்.



அதன்பின் நான் அலகாபாத் போய்விட்டு கல்கத்தா, டெல்லி, அல்மோரா, பதான்கோட், கொலம்போ என்று சுற்றிவிட்டு ஆறு வருஷம் கழித்துதான் ஸ்ரீரங்கம் திரும்ப முடிந்தது. ரங்குவை முதல் காரியமாக விசாரித்தேன்… ‘‘ஜி.பி. வாத்தியார் என்ன ஆனார் ரங்கு?’’



‘‘ஏன் கேக்கறே… ஸ்கூல்ல புதுசா ஹெட்மாஸ்டரை நியமனம் பண்ணிட்டா. ரெண்டு பேருக்கும் ஆகலை. நோட்ஸ் போடக் கூடாதுன்னு தடை பண்ணிட்டா. கோவிச்சுண்டு ரிஸைன் பண்ணிட்டேர். மணச்சநல்லூர்ல போய்ச் சேர்ந்தேர். அங்கயும் சரிப்பட்டு வரலை. சம்பளம் சரியா வரலை. அதுக்கப்புறம் நோட்ஸ் போட்டு விக்கறதும் பாழாப் போச்சு. இவர் போட்ட நோட்ஸையே காப்பி அடிச்சு இன்னொருத்தன் போட்டு அரை விலைக்கு வித்தான். அவன்மேல கேஸ் போடறேன்னு வக்கீல்கள்ட்ட காசு நிறைய விட்டேர். ஏறக்குறைய பாப்பர் ஆறநிலைக்கு வந்துட்டேர். சொத்தும் இல்லை. பத்ரிக்கு போ



றேன்னு காலை ஓடிச்சுண்டேர். மனசொடிஞ்சு போய்ட்டேர். அப்றம்…’’ என்று ரங்கு பேச்சை நிறுத்தினான்.

நான் சன்னமாக, ‘‘எதாவது விபரீதமா ரங்கு?’’ என்றேன்.



‘‘அதை ஏன் கேக்கறே… கடைசியா ரங்கநாதன் கண்ணைத் திறந்துட்டார்.



‘‘எப்படி?’’



‘‘மூத்த பொண்ணு எச்சுமி இருக்கு பாரு, தொச்சுவைக் கல்யாணம் பண்ணிண்டு டுத்து. எல்லாம் சரியாப் போய்டுத்து. உஞ்சவிருத்தி தேசிகாச்சாரி சொத்து மறுபடி ஃபேமிலிக்கே வந்துடுத்து!’’



‘‘அந்தப் பையன் அதிகம் படிச்சிருந் தானா?’’


‘‘எட்டாம் கிளாஸ்க்கு மேல படிப்பு ஏறலை…’’



‘‘இந்தப் பொண்ணு?’’


‘‘எம்.சி.ஏ.’’


நான் வியப்புடன் ‘‘எப்படிக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சது அந்தப் பொண்ணு… ஃபேமலிக்காக தியாகமா?’’


‘‘அதெல்லாம் இல்லை, காதல்!’’ என்றான் ரங்கு.

நன்றி - அமரர் சுஜாதா , உயிர் மெய் , சிறுகதைகள்

ஆடி 18 @ ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை

ஆடி 18ன்னா  ஆறு இருக்கும் இடங்கள் எல்லாம் கூட்டம் அள்ளிக்கும்.. ஆடி 18 களை கட்டும் இடங்கள கொடுமுடி ,பவானி ,மேட்டூர் ,முக்கொம்பு திருச்சி ,கோவை குற்றாலம்,பவானிசாகர்,டாப் ஸ்லிப் பொள்ளாச்சி்.

 ஈரோட்டில் இருந்து 16 கிமீ தொலைவில் பவானி இருக்கு.. பழைய பஸ் ஸ்டேண்ட் ஸ்டாப்பிங்க்..  சர்வீஸ் பஸ்ல 10 ரூபா டிக்கெட் , டவுன் பஸ்ல 6 ரூபா டிக்கெட்..  டவுன் பஸ் நெம்பர் 5 , 16 ( அக்ரஹாரம் வழி). 3,3பி ( சித்தோடு வழி)


3 லட்சம் பேர் இன்னைக்கு வருவாங்கன்னு சொல்றாங்க.. நான் போனப்ப 70,000 பேர் @ 6 AM






பவானி கூடுதுறை முகப்பு
பவுர்ணமி பூஜை @ ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருள் மிகு காமாட்சி அம்மன் கோவில்

ஆகாயத்தாமரைகளால் ஆக்ரமிக்கப்பட்ட பவானி ஆறு

வலம்புரி விநாயகர் @ பவானி
 அ

ஸ்தல விருட்சகம் இல்ந்தை மரம்
முளைப்பாரி
குட்டீஸ்க்காக
 
 அ
கோடீஸ்வரர்
 
கம்மங்கூழ் சைடு டிஷ் 6 வகையறா
 a






காய்ச்சலை குணப்படுத்தும் ஜூரஹேஸ்வரர்
a
சனீஸ்வரருக்கான எண்ணெய் தீபம்
ஜவ்வு மிட்டாய் வாட்ச்மேன்
 
சென்னிமலை மாரியம்மன் கோவில் பிள்ளையார்
மாரியம்மன் செக்யூரிடிஸ்
 
 
 
 a
பேண்ட் அணியாத எலிபேன்ட்
a

பவானி கூடுதுறை சனீஸ்வரர் அலங்காரம் அழகு
a
பவானி கூடுது றையில் பலா மரம்
 
பவானி கூடுதுறை ஆற்றில்

சென்னிமலை மாரியம்மன்
 
 
 
 
 

நித்யானந்தா டயட்ல இருப்பதால் ஹி ஹி ஹி

ஏ புள்ளே கருப்பாயி உள்ளே வந்து படு தாயி - ஆணாதிக்கம், நீ போய் அவளை தூக்கிட்டு வந்து தூக்கம் கலைக்காம படுக்க வைத்தால் என்ன?
1.பஸ்ல பொண்ணை இடிச்சுட்டு சாரி கேட்காம வர்றியே?


 லேசா டச் ஆனதுக்கே முறைச்சாங்க, கட்டி இருந்த சாரியையும் கேட்டா அவ்ளவ் தான்



------------------------


2.  ”தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்" என்றாலே அவர் சின்ன வீட்டின் உள்ளே  இருக்கிறார் என்று பொருள்! # தண்டவாளம் ஏறும் வண்டவாளம்



-----------------------------


3. ஒலிம்பிக்ல தமிழன் மட்டும் தங்கப்பதக்கம் வாங்க முடியலை, ஏன்னா ஆல்ரெடி நடிகர் திலகம் “ ”தங்கப்பதக்க(ம்) “த்தை தக்க வெச்சுட்டாரே! 



-----------------------------


4. வருடத்திற்கு 3 படம்! மம்தா மோகன்தாஸ் முடிவு!! #


 1. பாஸ்போர்ட் சைஸ் படம்

 2. ஃபுல் சைஸ் படம்

3. க்ளோசப் ஃபேஸ் படம்?




--------------------------


5. போல் பச்சன் ஹிட்! சந்தோஷத்தில் அசின்!! # ஈரோட்ல 2 நாள் கூட ஓடாத  அசின் படம் ஹிட்டா?


யார் சொன்னது?



அசினே தான் சொன்னாங்க 



---------------------------




6.ஆடி மாதம் முடியும் வரை ஜவுளிக்கடைவாசலில் டேரா போட்டே ஊரில்உள்ள அனைத்து ஃபிகர்களையும் கவரேஜ் பண்ணி விடும் கட்இளம்காளையர்களுக்கு வாழ்த்து



-----------------------------


7. நீயா? நானா?நிகழ்ச்சிக்கு தம்பதி சகிதம் விவாதம்செய்ய போகிறவர்கள் திரும்பிவருகையில் நீ யாரோ? நான் யாரோ! என்ற நிலைக்கு வந்துவிடுகிறார்கள்



-----------------

8. டெயிலி காலை இருந்து நைட் வரை புருஷன் மார்களை காய்ச்சு காய்ச்சு என காய்ச்சி எடுக்கும் மனைவிமார்கள் கூட அன்றாடங்காய்ச்சிகளே!



------------------------------


9.மிஸ், நீங்க ஏன் ஃபோன் பண்றதே இல்லை?


 ஹி ஹி எங்க பரம்பரைல எல்லாரும் இன்கமிங்க் கால் தான், நோ அவுட் கோயிங்க்




---------------------------

10. டேமேஜர் சார், ஒரு பர்சனல் கால் பண்ணிக்கறேன்..




சாரி ஆஃபீஸ்ல பர்சனல்க்கு இடம் இல்லை..



 ஓஹோ, அப்போ பர்சனல் லோன் செக்‌ஷனை இழுத்து மூடிடவா?


---------------------------


ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் நாயன்மார்கள்



11. விஜய் - துப்பாக்கி சுடுவதில் ஒலிம்பிக்ல வெண்கலப்பதக்கம் வாங்கிட்டாங்க, அதனால நீங்க துப்பாக்கி படத்துக்கு வரி விலக்கு தரனும்




 . ஜெ - ???




------------------


12. ஏ புள்ளே கருப்பாயி உள்ளே வந்து படு தாயி - ஆணாதிக்கம், நீ போய் அவளை தூக்கிட்டு வந்து தூக்கம் கலைக்காம படுக்க வைத்தால் என்ன?



----------------------


13. நாளை ஆடி 18, எனவே 18 வயசுக்கு உட்பட்ட ஃபிகர்களை மட்டும் சைட் அடிப்பது என்ற முடிவுக்கு வந்தால் நீயும் தமிழனே! ( நாளை ஒரு நாள் மட்டும் )



--------------------------


14. விருந்தாளிகள் நம்ம வீட்டுக்கு வரும் மாசம் என்பதால் ஆ”கெஸ்ட்” ? ( AU"GUEST" )



----------------------


15. டியர் உங்களுக்கு கவிதை ரசிக்கும் பழக்கமே இல்லையா?



 கவிதாவை வேனா ரசிப்பேன்



---------------------------



ஈரோட்டில் சூர்யபகவான் மனைவி உஷா தேவி துணைவி சாயாதேவி



16. எனக்கு 20 k உனக்கு 18 k மொத்தமா 38000 ரூபா




-----------------------------

17. அத்தான் ,ரெட் ரோஸ் வாங்கிட்டு வாங்க,




ம்ஹூம் ஏதொ 1 தான் ,கரெக்ட்டா கேளு ,ரெட்டா? ரோஸா?



--------------------------------


18. கோபுரம் பூசு மஞ்சள் தூள் முகத்துக்கா? கோபுரத்துக்கா?# இன்றைய எடக்கு மடக்கு சிந்தனை



-------------------------------

19. பெண்களுக்கு அதிக வலி தருவ்து பிரசவ வலி பின் மாத விலக்கு வலி.ஆண்களுக்கு அதிக வலி பெண்ணின் நிராகரிப்பு வலி,மது விலக்கு வலி


------------------------

20. மது குடிப்பவர் உட்லை மட்டும் சீரழிக்கிறது .சிகரெட் எல்லோருக்குமான காற்றை மாசுபடுத்துகிறது



----------------------------


"~அன்பாலே அழகாகும் வீடு ஆனந்தம் அதுக்குள்ளே   தேடு ~"
சொந்தங்கள் கை சேரும் பொது வேறேதும் அதற்கில்லை ஈடு ,
கலைகின்ற மேகம் போலே காயங்கள் ஆறிப் போக மலரட்டும் எதிர்காலமே ,இனிய காலை வணக்கம் என் அன்பான நட்பூக்களே :-)



21. ஜட்ஜ் - ஒரு நாளுக்கு ஒரு ரேப் பண்ணிணதா போலீஸ் புகார் சொல்லி இருக்காங்க உண்மையா?



 நித்தி - எஸ் யுவர் ஆனர்.நான் டயட்ல இருக்கேன .அதாம்



----------------------------


22. கலைஙர் - மது விலக்கு வந்தால் கலவரம் வெடிக்கும்.356,நாம் மீண்டும் ஆட்சிக்கு.எது எப்படி போனாலும் ஆட்சி அதிகாரம் நம் கைவிட்டுப்போகலாகாது



----------------------------

23. டியர் நீ ஏன் என்னை முன்னே மாதிரி கண்டுக்கறதே இல்ல?


 காதலி- நீ கோமாளியா?


 காதலன் -இல்லை , ஏமாளி



--------------------------


24. லவ்வரோட மடில தல வெச்சு படுத்து கிஸ் வேணும்னு கெஞ்சுனா அதுதான் மடிப்பிச்சை


-----------------------


25. மீட்டிங் நடக்கும்போது எல்லார் கவனமும் டேமேஜர் மேலேயே இருக்கும்.அப்போ நைசா பிஸ்கெட் மிக்ஸர் எல்லாம் சாப்ட்ரனும்



--------------------------



" நடிகர் சந்திர பாபு மணவிழாவில் ,
மணமக்களை வாழ்த்தும் எம்.ஜி.ஆர் . ! "



26. பட்டயை கிளப்புங்க= பட்டை சாராயமடிச்சுட்டு சலம்பல் பண்ணும் ஆளை ஏரியாவை விட்டுக்கிளப்புங்க


--------------------------

27. லவ்வர்க்கு மியூசிக் சேனல் மூலம் பாட்டு டெடிகேட் பண்ற மாதிரி சம்சாரத்துக்கு ஃபைட்டு டெடிகேட் பண்ணா என்ன?




----------------------


28. வட இந்தியர்கள் அடிக்கடி வடை சாப்பிடற ஆளுங்களா? ஹி ஹி



---------------------


29. என் பொறுமையை சோதிக்காதீங்க.நீங்க யாருன்னு சொல்லுங்க.



நான் வெட்னரி டாக்டர், உங்க எருமையை சோதிக்கனும்னு ஃபோன் பண்ணீங்களே?



----------------------------


30. ஒரு பெண் ஏற்படுத்திய காயத்தை ஒரு பெண்ணாலே எளிதில் குணப்படுத்த முடியும் #



 ஆமா, பிளாஸ்திரி போட்டு விடறது நர்ஸ் தானே?




----------------------------





31. மது ஒழிப்பு பற்றி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கக் கூடாது - கேப்டன் # எடுத்து தரைல கவுக்காம வாய்ல கவுத்துக்கிட்டா ஓக்கேவா?



-----------------------------


32. இண்டர்வியூவில் - சார்! நான் டெம்பரவரியா? பர்மனண்ட்டா?



 - பர்மனண்ட்டாவே நீங்க டெம்பரவரி தான்



-------------------------


33. எழுத்தாளரை ஈரோடு ராயல் தியேட்டர் கேண்ட்டீன் கூட்டிட்டு போய் டீ வாங்கிக்கொடுத்தா அதுதான் ராயல்டி?



----------------------------



34. திமுக நடத்தும் டெசோ மாநாடு தேவையற்றது - விஜயகாந்த் # உடன்பிறப்பே! கழகம் புடுங்கும் அனைத்தும் தேவை இல்லாத ஆணிகளே!



---------------------------