Friday, August 03, 2012

TOTAL RECALL - சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://cdn3.gossipcenter.com/sites/default/files/imagecache/story_header/photos/total-recall-poster-motion.jpg

அர்னால்டு ஸ்வார்செனேகர் நடிச்சு 1990 ல் வந்த டோட்டல் ரீகால் படம் செம ஓட்டம் ஓடுச்சு.. அதே படம், அதே கதை.. டெக்னீஷியன் ,ஆக்டர்ஸ் வேற, டெக்னாலஜி வேற .. மற்ற படி கதை, திரைக்கதை எல்லாம் ஒண்ணுதான்.. கிட்டத்தட்ட பில்லா ரஜினி, பில்லா அஜித் மாதிரி.. 


கதை நடப்பது 2084... காலகட்டம்.. ஹீரோவுக்கு நம்ம வெற்றி விழா கமல் மாதிரி தான் யார்? என்ன? எல்லாம் மறந்துடுது.. தனது நினைவுகள், அடையாளங்கள் எல்லாம் மறந்து போன ஒருத்தன் என்ன பண்றான்? என்பதை 2 மணி நேரம் நான் ஸ்டாப் ஆக்‌ஷன் மூவியா சயின்ஸ் ஃபிக்‌ஷன்ல கொடுத்திருக்காங்க.. 

 1966 ஆம் ஆண்டு எழுதப்பட்ட சிறுகதையின் திரைக்கதை வடிவம் இது. WE CAN REMEMBER IT  FOR YOU WHOLE SALE  இதான் கதையோட டைட்டில்.. எழுதுனவர் நம்ம ஊர் அமரர் சுஜாதா மாதிரி.. பேரு பிலிப் கே டிக் 



ஓப்பனிங்க் ஷாட்ல ஹீரோ அவர் சம்சாரம் கூட குடித்தனம் நடத்தறார்.. சென்சாரின் வரை முறைக்கு உட்பட்டு.. அன்னைக்கு நைட் அவருக்கு ஒரு கனவு வருது.. ஆனா சரியா புரியலை.. அல்ஜீப்ரா மாதிரி குழப்புது..  சம்சாரம் கிட்டே டிஸ்கஸ் பண்றார்..  பொதுவாவே பொண்ணுங்க நம்மை குழப்புவாங்க..சம்சாரம்னா கேட்கவே வேணாம் , அது இன்னும் குழப்புது.. 


அட்வான்ஸ்டு காலகட்டத்துல நடக்கறதால்  எல்லாம் அட்வான்ஸ்டு டெக்னாலஜி இல்லையா? அங்கே ரிகால் அப்டினு ஒரு செக்‌ஷன் இருக்கு.. அங்கே போனா தன் பழைய நினைவுகள், கனவுகள் பற்றி ஏதாவது தெரிய வரலாம்னு ஹீரோ அங்கே போறார்.. 


 ஒரு சேர்.. அதுல அவரை உக்கார வெச்சு ஏன்னென்னமோ டெஸ்ட் பண்ணிட்டு இருக்கறப்போ போலீஸ் வந்துடுது..  10 பேர்.. எல்லாரையும் ஹீரோ   குருவியை சுடற மாதிரி சுடறார்.. அப்புறம் எஸ் ஆகி பேக் டூ பெவிலியன் தன் வீட்டுக்கே வந்துடறார். அங்கே டி வி ல நியூஸ் ஓடுது.. 25 போலீஸ் தீவிரவாதிகளால் சுடப்பட்டாங்க அப்டினு நியூஸ் ஓடுவதை பார்த்து ஹீரோவுக்கு அதிர்ச்சி.. 

 



 சம்சாரம் கிட்டே நடந்ததை சொல்லி தான் தான் அந்த கொலைகளை செய்தவர்ன்னு பதட்டமா சொல்றார்.. இந்த சம்சாரங்க பொதுவாவே புருஷங்க சொல்றத நம்ப மாட்டாங்க.. இதுல உள்ளூர் சம்சாரம், ஃபாரீன் சம்சாரம் எதும் விதி விலக்கு இல்லை.. 


 நீங்க ஏதோ குழப்பத்துல இருக்கீங்க.. பேசாம தூங்குங்க அப்படினு ஹீரோவை அடக்கிடறா.. அப்புறம் ஹீரோவை ஆசுவாசப்படுத்த பின்னால இருந்து வந்து கட்டிப்பிடிக்கறா.. நம்ம சம்சாரம் தானே.. அப்டினு அவனும் அசால்ட்டா விட்டுடறான்.. திடீர்னு அவ அவனை அப்படியே இறுக்கி கொலை பண்ண முயற்சி பண்றா. 


 பயங்கர ஃபைட்.. புருஷன் , பொண்டாட்டி 2 பேருக்கும்.. ஹீரோ ஒரு வழியா ஜெயிச்சு அவளை துப்பாக்கி முனைல நிறுத்தி மிரட்டி “ என்ன நடக்குது? ஏது? அப்டினு கேட்க  அப்போதான் அவ உண்மையை சொல்றா.. 


 ஆக்சுவலி அவ அவனோட சம்சாரமே கிடையாது.. போலீஸ்.. இத்தனை  வருஷமா  நடிச்சுட்டு இருந்திருக்கா.. என்ன ஏதுன்னு டீட்டெயிலா விசாரிக்கறதுக்குள்ளே போலீஸ் வந்துடுது.. வழக்கமா க்ளைமாக்ஸ்ல தானே வருவாங்க.. ஆனா பாருங்க இந்தப்படத்துல  இப்பவே வந்துட்டாங்க.. 



ஹீரோ ஓடறான்.. ஆல் போலீஸ் சேசிங்க்..ஹீரோவோட சம்சாரம் வில்லின்னு தெரிஞ்சிருச்சு.. இனி சுருக்கமா வில்லின்னே சொல்லலாம்.. வில்லி என்ன பண்றா, போலீஸ் ஹையர் ஆஃபீஸருக்கு ஃபோன் பண்ணி ஹீரோ கைல இருக்கற செல் ஃபோனை ஆக்டிவேட் பண்ணீ விடு, அப்போதான் அவன் இருக்கும் இடத்தை ட்ரேஸ் அவுட் பண்ண முடியும்கறா.. 


 உள்ளங்கைக்குள்ளே அது வெச்சு தைக்கப்பட்டிருக்கு.. ஹீரோ கையை கிழிச்சு அதை தூக்கிப்போட்டுடறார்.. போலீஸ் தொடர்ந்து துரத்துது..


 அப்போ கரெக்ட்டா இன்னொரு ஃபிகர் வந்து ஹீரோவை காப்பாத்துது.. இவ தான் ஹீரோவோட முத சம்சாரம் கம் உண்மையான சம்சாரம் பிரபுதேவாவுக்கு ரம்லத் மாதிரி.. 


 அப்புறம் என்ன 2 பேரும் ஓடிட்டே இருக்காங்க.. அவங்க துரத்திட்டே இருக்காங்க... எப்படி ஜெயிக்கறாங்க.. ஹீரோ யார்? என்ன? என்பதே மிச்ச சொச்ச கதை,.. 


 கதைச்சுருக்கத்தை எல்லாருக்கும் புரியற மாதிரி ஒரு பேரால சொல்லனும்னா  ராஜபக்சே மாதிரி சர்வாதிகார ஆட்சி நடக்குது,, ஈழ மக்களை வெளீயேற்றின மாதிரி அங்கே இருக்கும் மக்களை வெளீயேற்றி ரோபோட்ஸை குடி ஏற்ற திட்டம் போடறாங்க.. அதை ஹீரோ முறியடிக்கிறார்,.,. இதான் ஒன் லைன்..

அதாவது மூன்றாம் உலகப்போருக்குப்பின்  பூமி 2 சூப்பர் பவராக பிரிக்கப்படுது. FBR (Federation of the British Republic) and The Colony (Formerly Australia.



டக்ளாஸ் குவாய்ட் போன்ற தொழிற் சாலையில் வேலைபார்க்கும் தொழிலாளியா ஹீரோ  காலின் பெரல்.. அர்னால்டு இடத்துல இவரை நினைச்சே பார்க்க முடியல.. ஏன்னா அவரு ஒரு கதவையே உடைச்சாக்கூட நம்பற மாதிரி ராட்சச எக்சசைஸ் உடம்பு அவருக்கு இருந்துச்சு.. இவர் நார்மலாத்தான் இருக்கார்.. இருந்தாலும் ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தறார்.. 


 மனுஷனுக்கு நித்தி மாதிரி எங்கேயோ மச்சம் இருக்கு போல 2 ஹீரோயின்ஸ் 2 பேர் கூட கிஸ் சீன்ஸ் உண்டு..  லிப் டூ லிப்.. தான்..கதைப்படி 2 வதா வந்து ஜோடி சேர்ற பொண்ணு ஜஸ்ட் ஃபிரண்ட் மாதிரி தான் , ஆனா 2 பேருக்கும் மேட்டர் நடந்துடுது. அப்போ நம்ம பாஷில சம்சாரம் தானே?


சம்சாரமா வர்ற ஃபிகரு கேட் பெகின்செல் (gate Beckinsale) செம ஆக்‌ஷன்.. படம் பூரா ஓடிட்டே இருக்கார்.. வில் மாதிரி உடம்பு ( வளைச்சுப்பார்க்காமயே அப்ராக்சி மேட் அவதானிப்பு ).. சின்ன உதடுகள்,.,. ஆக்ரோஷமா ஃபைட் போடும்போது பயமா இருக்கு.. 

 2 வதா வந்து சேர்ந்துக்கற  ஃபிகர் அவரை விட அழகுதான்.. எப்பவும் 2 வதா வர்ற ஜோடி முதல் ஜோடியை விட செமயா தான் இருக்கும்.. இது இயற்கையின்  நியதி.. 


ப்ரியான் க்ரான்ஸ்டன், ஜெஸிகா பீல் பில் நைட்டி ஜான் ஜோ போன்ற பெரிய தலைகளும் நடிச்சிருக்காங்க. 


http://d3ny4pswk2x1ig.cloudfront.net/e7c86121810e18d7183039f65fa26618e740781e3e2fb2d95335b47b.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. ஆர்ட் டைரக்சன் அபாரம். பிரம்மாண்டம்,, 2084இல் என்ன வெல்லாம் மாற்றம் நடந்திருக்கும், சயின்ஸ் எப்படி எல்லாம் முன்னேறி இருக்கும்னு கற்பனை பண்ணி அதுக்கு உயிர் கொடுத்திருக்கும் லாவகம் கலக்கல். ஏதோ சொர்க்க பூமி மாதிரி இருக்கு..  பஸ், ரயில் மாதிரி விமானம் பக்கத்துலயே போகுது.. அசத்தல் கிராஃபிக்ஸ்.. 



2. ஒரு சீன்ல ஹீரோ ஒரு பங்களாவுல ஒளீஞ்சிருக்கார். அப்போ போலீஸ் ஏதோ ஐ பேடு மாதிரி ஒரு மேட்டரை  மெஷின் கன் மூலமா ஷூட் பண்ணி அவர் இருக்கும் ஏரியாவில் ப்ளேஸ் பண்றாங்க..  அப்போ நடக்கும் ஆச்சரியங்கள் அபாரம்..  ஏதோ தீபாவளி கொண்டாடுன மாதிரி காட்சிகள்.. செம .. 



3. ஹீரோ கைக்குள்ளே ஃபோன் வைத்து ஆபரேஷன் பண்ணி இருப்பதும் அதை ஆக்டிவேட் பண்ணுனதும் ஹீரோ அதை அகற்றுவதும் புதுசு.. தமிழ் சினிமாவில் சுட்டுடுவாங்க.. இந்த சீனை..  பார்க்க சுவராஸ்யம்..


4.  2 வதா வந்து சேரும் ஹீரோயின் மேல ஹீரோவுக்கு சந்தேகம் வந்ததும் 2 பேருக்கும் உள்ளங்கைல ஒரே மாதிரி தழும்பு இருப்பதை காட்டுவதும் பின் க்ளைமாக்சில் வில்லி ஹீரோயின் மாதிரி உருமாறி வரும்போது அந்த தழும்பு இல்லாமல் போனதால் அடையாளம் அறீவதும்  இண்ட்ரஸ்ட்டிங்க்.. ( நம்ம ஊரு வாசம் அடிக்குது)


5. ஒரு சீன்ல ஹீரோ குழப்பம் ஆகி முன்னாள் மனைவி வெளியே அவனுக்காக அழுவதையும், இந்நாள் தோழி அதை நம்பாதே, உன்னை குழப்பப்பார்க்கறாங்க என அவளும் அழ எது உணமை அழுகை? எது நடிப்பு என புரியாமல் ஹீரோ விழிப்பதும், பின் கண்ணீர் வந்தவள் தான் உண்மையானவள் என உணர்வதும் அக்மார்க் தமிழ் செண்ட்டிமெண்ட் என்றாலும் ரசிக்க முடிகிறது



http://www.trhits.com/wp-content/uploads/2012/07/Total-Recall-Cast-Covers-Maxim-July-August-2012-1.jpg

இயக்குநரிடம் ஒரே ஒரு கேள்வி



 க்ளைமாக்ஸ்ல வில்லி ஹீரோ முன்னால நிக்கறார்,, ஹீரோ மயக்கத்துல. ஹீரோவை கொல்றதா இருந்தா அப்பவே போட்டிருக்கனும்.. அதை விட்டுட்டு அவன் கண் விழிக்கும் வரை காத்திருந்து உன்னை போடப்போறேன்னு வீர வசனம் பேசி ஹீரோவுக்கு அவகாசம் கொடுத்து ஏன் வீணா சாகனும்.. ஹீரோ மயக்கமா இருந்தப்பவே போட்டுத்தள்ளி இருக்கலாமே?



 மனம் கவர்ந்த வசனங்கள்



1. ஆசைப்பட்ட எல்லாமே எல்லாருக்கும் கிடைச்சடறது இல்லை, ஆனா எனக்கு கிடைச்சிருக்கு ..



2. நாம ஒவ்வொரு நாளூம் ஒரே வேலையை ஏன்? எதுக்கு?ன்னு கேள்வியே கேட்காம செஞ்சுட்டு இருக்கோம்



3. மார்ஸ்க்கே மன்னன் ஆகனும்னு நினைச்சான்.. இப்போ மென்ட்டல் ஆகி கிடக்கான்.. ரிகால் தான்   ரீசன்.. 



4. நல்ல மனைவியா நான் இத்தனை நாளா நடிச்சேன்.. 



5. அப்போ நான் நான் இல்லைன்னா நான் யாரு?


6. அவனை எங்கே பார்த்தாலும் சுட்டுடுங்க.. 

 மேடம், ஆனா மேலிடம் அவனை உயிரோட பிடிக்கனும்னு உத்தரவு போட்டிருக்கே? 


 களத்துல இறங்கி வேலை செய்யறவங்களுக்குத்தான் எல்லா வலியும் தெரியும்..



7. துரத்திட்டு வர்றது என் ஒயிஃப்


 வாட்? யுவர் ஒயிஃப்?


அப்டித்தான் இத்தனை நாளா நினைச்சுட்டு இருந்தேன்



8.  புரட்சியாளர்கள் போராட்டக்க்காரர்கள் அல்ல, உரிமைக்காகப்போராடுபவர்கள்


9. உன்னை  விட உன்னைப்பற்றி அதிகம் தெரிஞ்ச வன் நான், நான் சொல்றதை நீ கேட்கனும்

 என்னென்னெமோ  சொல்லி குழப்பறீங்க



10. சில உண்மைகளை ஏத்துக்கவே முடியாது


11. இங்கே எல்லாருக்கும் என்னை விட நல்லாவே என்னைபற்றி தெரிஞ்சிருக்கு. 


12. எனக்கு என் நினைவுகள் வேணும்

 கடந்த காலம் எப்பவும் நம்ம மனசை குழப்பும்.. மனசு நிகழ்காலத்துல வாழவே ஆசைப்படும்.. 


13.  ஒரு தலை சிறந்த உளவாளி தான் யார்னு தெரியாமயே எனக்கு உதவி இருக்கான்.. 


14. வாக்குமூலம் வாங்கறதுல நான் எவ்லவ் திறமையான ஆள்னு இப்போ நீ தெரிஞ்சுக்குவே பாரு .. 


http://thefilmnest.com/wp-content/uploads/2012/07/total_recall_.gif




சி. பி கமெண்ட் - ஆக்‌ஷன் பிரியர்கள் பார்க்கலாம்.. பெண்களும் பார்க்கும் விதமாகத்தான் படம் எடுத்திருக்காங்க.. 


 ஈரோடு வி எஸ் பி யில் ப்டம்  பார்த்தேன்


 எதிர்பார்க்கப்படும் டைம்ஸ் ஆஃப் இண்டியா ரேங்க் - 3 1/2 -5


 எதிர்பார்க்கப்படும் டெக்கான் கிரானிக்கல் ரேங்க் - 7 /10

இப்படத்தின் பட்ஜெட் அதாவது செலவுத்திட்டம் 200 மில்லியன் டாலர்கள் முதல் படப்பிடிப்பு 2011 மே 16ல் டொரண்ட்டோவில் தொடங்கப்பட்டு 2012 செப்டம்பர் 20 ஆம் தேதி முடிவடைந்துவிட்டது. போரண்டோவில் பல ஸ்டுடியோக்களில் படமானது. இப்படம் ரெட்கேமராவின் லேட்டஸ்ட் வரவு ரெட் எபிக் டிஜிட்டல் கேமராவால் படம் பிடிக்கப்பட்டுள்ளது.



113 நிமிடங்கள் ஓடும் இப்படத்தை உலகெங்கும் கொலம்பியா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
 டிஸ்கி - 1 -

JISM 2 - பாலிவுட் சினிமா விமர்சனம் 34 +-http://www.adrasaka.com/2012/08/jism-2-34.html

 

 

 

மதுபானக்கடை - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2012/08/blog-post_5452.html


மிரட்டல் - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2012/08/blog-post_6815.html


இந்தப்படத்தில்  3 *  22 /7   அதாவது 3 பை உள்ள பெண்ணாக வரும் காட்சி கதைப்படி 2084ல் நடக்குது, அதை கி ரா தனது நாட்டுப்புறக்கதைல பல வருடங்களுக்கு முன்னமே சொல்லிட்டாரு.. 





தொழில் நுட்பக்கலைஞர்கள் 


Directed by Len Wiseman
Produced by Neal H. Moritz
Toby Jaffe
Screenplay by Kurt Wimmer
Mark Bomback
Story by Kurt Wimmer
Based on "We Can Remember It for You Wholesale" by
Philip K. Dick
Starring Colin Farrell
Kate Beckinsale

Jessica Biel

Bryan Cranston

John Cho

Bill Nighy
Music by Harry Gregson-Williams
Cinematography Paul Cameron
Editing by Christian Wagner
Studio Original Film
Distributed by Columbia Pictures
Release date(s)
  • August 3, 2012
Running time 118 minutes[1]
Country United States
Language English
Budget $125 million[2]

JISM 2 - பாலிவுட் சினிமா விமர்சனம் 34 +

http://ayaashi.in/wp-content/uploads/2012/06/jism-2.jpg 

ஹீரோயின் சன்னி லியோன் புது முகம்.. அதாவது ஃப்ரெஸ் ஃபேஸ்.. நாட் எ ஃப்ரெஸ் பீஸ்.. ஹி ஹி படத்தோட கதைப்படி.. நோ மிஸ் அண்டர்ஸ்டேண்ட் ப்ளீஸ்,,. கதைப்படி இவங்க ஒரு போர்ன் ஸ்டார்..  ஒரே ஒரு போர்ன் ஃபில்ம்ல தான் நடிச்சிருக்காரா?ன்னு கேட்கக்கூடாது.. ஓப்பனா சொல்லப்போனா  குல்மா படத்துல நடிக்கற நீலப்பட நடிகை. 


 இண்டெலிஜெண்ட் டிபார்ட்மெண்ட்ல ஒரு ஆஃபீசர் .. உதவி கேட்கறார்.. அப்போ ஏற்படும் அறிமுகத்துல அந்த ஆஃபீசர் ஹீரோயின் கூட கில்மா ஃபினிஷிங்க்க்.. ஒரு டெரரிஸ்ட் கம் கேங்க்ஸ்டர் லைக் பில்லா .. அவன் கிட்டே ரகசிய டேட்டாஸ் இருக்கு.. அதை கலெக்ட் பண்ணனும்.. இதான் புராஜக்ட்.. 10 கோடி ரூபா அதுக்கு பரிசு.. 


 அந்த தாதா பற்றி அவங்க சொன்ன தகவல் படி அவனுக்கு ஒரே ஒரு எக்ஸ் லவ்வர் மட்டும் இருந்தா.. ஆனா இப்போ  இல்லை.. அவனை நெருங்கறது கஷ்டம்..


 அவனை பற்றி சொன்னதும் ஹீரொயின்  அவளோட ஃபிளாஸ்பேக் கதையை சொல்றா.. அதாவது ஆல்ரெடி அவ தான் அந்த தாதாவோட லவ்வர்.. அவன் மேட்டர் முடிச்சுட்டு அம்போன்னு நயன் தாரவை பிரபு தேவா கழட்டி விட்ட  மாதிரி பாதில விட்டுட்டு போனவன் தான்.. 


இப்போ சீன் நல்லா புரிஞ்சுக்குங்க.. ஹிரொயின் முன்னாள் காதலன் கிட்டே போய் மயக்கி அந்த டேட்டா எடுக்கனும்.. இந்நாள் காதலன் கிட்டே கொடுக்கனும்..


http://cdn.koimoi.com/wp-content/new-galleries/2012/07/Randeep-Hooda-Sunny-Leone-in-Jism-2-Movie.jpg


அந்த தாதா ரொம்ப லோ பட்ஜெட் தாதா போல .. எப்பவும் தனியாவே இருக்கான்.. படம் பூரா மொத்தமே 5 கேரக்டர் தான்.. எப்படியோ கஷ்டப்பட்டு அந்த டேட்டா கலெக்ட் பண்ற டைம்ல திடீர்னு ஒரு திருப்பம்.. அந்த தாதாவை கொன்னுடுன்னு சொல்றாங்க.. ஆரம்பத்துல அவ ஒத்துக்கலை.. அப்புறம் ஓக்கே சொல்லிடறா.. 


ஹீரோயின் முன்னாள் காதலனை கொலை பண்ணிட்டு கிளம்பறப்ப அவன் சொல்றான்.. நீ வேணா பாரு இந்த டேட்டாஸ் வாங்கிட்டு அவங்க உன்னையும் கொலை பண்ணிடுவாங்கன்னு.,. 


 இங்கே வந்தா அதே போல் நடக்குது.. இந்நாள் காதலனோட ஹையர் ஆஃபீசர் ஹீரோயினை கொலை பண்ண சொல்றார்.. அவன் முடியாதும்ங்கறான்.. 2 பேருக்கும் சண்டை.. ஹையர் ஆஃபிசரை போட்டுத்தள்ளிடறான் இந்நாள் காதலன்.. 


 உடனே ஹீரோயின் பயந்து ஓடுறா.. டேட்டாஸ் எல்லாம் எடுத்துட்டு போறதால இந்நாள் காதலன் ஹீரோயினை ஷூட் பண்ணீடறான்.. அவளும் டிட்டோ. கடைசில பீமா கதை மாதிரி ஆகிடுச்சு. படத்துல இருக்கற எல்லா கேரக்டரும் அவுட்.. 

 எல்லா ஆடியன்ஸும் விட்டாப்போதும்னு ஓடி வர்றாங்க. 



ஹீரோயின் சன்னி லியோன் அபிலாஷா மாதிரி சின்னக்கண்ணு ( நோ ஏமாற்றம் கண்ணு மட்டும் தான் சிறிசு.. மிச்ச விபரம் அறிய  பதிவின் டைட்டிலை மீண்டும் பொறுமையாக பார்க்க அல்லது படிக்க )..ஹன்சிகா உதடு, ரம்பா தை தை திக்கதை .. வழு வழு வாழை தண்டு மாதிரிதான் இருக்காங்க .. ( தொட்டெல்லாம் பார்க்கலை.. ஒரு உத்தேசத்துல சொல்றதுதான்)ஆனா பாப்பாவுக்கு நடிப்பு சுட்டுப்போட்டாலும், போட்டு சுட்டாலும் வராது போல.. எல்லா சீன்லயும் ஒரே ரீ ஆக்‌ஷன் தான்.. இவர் வரும் காட்சிகள் எல்லாம் பிறை நிலாக்கள் தரிசனம் தான்.. ஓப்பன் யுனிவர்சிட்டில எம் காம் படிச்சவங்க போல..


 சீன் இருக்கா? இல்லையா? தேங்காய் உடைச்ச மாதிரி பட்னு சொல்லுங்கறீங்களா?  இருக்கு,.,. ஆனா இல்லை ( நன்றி எஸ் ஜே சூர்யா - அன்பே ஆருயிரே)

  5 லிப் கிஸ் சீன் இருக்கு.. கில்மா பண்ற சீன் 3 இருக்கு , ஆனா பெட்ஷிட் போர்த்திக்கிட்டு சென்சார் அனுமதித்த அளவு மட்டும். 


http://static.ibnlive.in.com/ibnlive/pix/sitepix/07_2012/sunnyleone-jul6.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


 1. சும்மா மகா மகா லோ பட்ஜெட்ல பிட்டுப்படம் மாதிரி எடுத்துட்டு அதை என்னமோ பெரிய பட்ஜெட் படம் போல் பில்டப் கொடுத்தது



2. அறிமுகம் சன்னிலியோனை முடிஞ்ச வரை படத்திலும், பேக் டூ த ஸ்க்ரீன்லும் யூஸ் பண்ணிக்கிட்டது.. 



3. ரொம்ப சோதிக்காம 2 மணி நேரத்துல படத்தை முடிச்சது.. 


4. ஒளிப்பதிவு இந்த மாதிரி படத்துல ரொம்ப முக்கியம் என்பதை உணர்ந்தது


5 ஜல்மான் கிங்க்ஸ் எடுத்த டூ  மூன் ஜங்க்‌ஷன், லேக் கன்சிக்யூஷன்ஸ் படத்துல வர்ற மாதிரி ஹீரோயினுக்கு ஆடை வடிவமைப்பு ஏற்பாடு செஞ்சது.. 


6. போஸ்டர் டிசைன், விளம்பரங்கள்ல மக்களை எதிர்பார்ப்புக்கு உள்ளாக்குனது


http://www.dilfilmy.com/moviesite/web/images/trailer/Maula%20-%20Jism%202.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்


1. இந்த மாதிரி கில்மாப்படத்துல ஹீரோயினை கோழி உரிச்ச மாதிரி முதல் ரீல்லயே காட்டிட்டா மீதி 2 மணி நேரம் ஆடியன்ஸ் எதை பார்க்க உக்காந்திருப்பாங்க? வேற லேடீஸ் ஆர்ட்டிஸ்ட்டும் இல்லை.. ஆல்ரெடி பார்த்ததையே திரும்ப திரும்ப பார்க்க வேண்டி இருக்கு.. 


2. வில்லன் தன் லேப்டாப்பை யார் டச் பண்ணாலும் அலாரம் அடிக்கற மாதிரி செட் பணீ இருக்கான்.. ஓக்கே.. அந்த டைம்ல ஹீரோவை வார்ன் பண்ண ஹீரோயின் கால் பண்றா.. ஆனா லைனே கிடைக்கலை.. சரி நெட் ஒர்க் பிசின்னே வெச்சுக்குவோம்.. அட்லீஸ்ட் ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கலாமே? 


3. வில்லன் ஹீரோயினை எதன் அடிப்படைல நம்பறான்?கறதுக்கு காரணம் ஏதும் சொல்லலையே?


4. பத்து கோடி ரூபா புராஜக்ட்ல ஹீரோயின் 10 பைசா கூட அட்வான்ஸ் வாங்காம எப்படி ஓக்கே சொல்றா?


5.  அவங்க இண்ட்டெலிஜெண்ட் டிபார்ட்மெண்ட் தானா? என்பதை அவ செக் பண்ணாமயே எப்படி நம்பறா?


6. இந்த கதைல ஹீரோயினை போர்ன் ஸ்டாரா காட்டி இருக்க வேண்டிய அவசியமே இல்லையே.. ஏன்னா நம்மா ஆளூங்க ஃபேமிலி கேர்ள் சீன்னா ரசிச்சு பார்ப்பாங்க.. டிக்கெட் சீன்னா கண்டுக்க மாட்டாங்க... அதனால இனிமே கில்மா படம் எடுக்கற மாதிரி இருந்தா நடிக்கற ஆள் டிக்கெட்டா இருந்தாலும் கதைப்படி அவங்க ஃபேமிலி கேர்ள்னு  காட்டுங்க.. அப்போதான் ஆர்வமா பார்க்க முடியும்.. 

http://static.ibnlive.in.com/pix/slideshow/07-2012/new-stills-of/sun2.jpg


 மனதில் நின்ற வசனங்கள் 



1.  பத்து கோடி ரூபா அல்ப சொல்பமா சம்பாதிச்சுடலாம்னு நினைச்சியா? கஷ்டப்படனும்.. ரிஸ்க் எடுக்கனும்


 ஓக்கே , யோசிக்க டைம் வேணும்



2.  ஏய்.. இங்கே  என்ன பண்ணிட்டு இருக்கே?


 உங்களூக்காக வெயிட்டிங்க்.. 


 ஃபார் வாட்?


 சும்மா. 



3. ரத்தத்தால லவ் லெட்டர் எழுதி இருக்கே.. இது பைத்தியக்காரத்தனம்.. 


 நோ, இதான் லவ்,,  டீப் லவ்,. 



4. நான் ஒண்ணும் மிஷின் இல்லை.. லவ் பண்ற மாதிரி நடிக்க..  


5. என்னை அழிக்க நினைக்கும் ஒவ்வொருத்தனையும் 2  ரெண்டு பீஸா ஆக்கிடுவேன்.. பார்க்கறியா? ( உன் கூட இருக்கே டூ பீஸ் பீஸ்.. அதான் உன்னை அழைக்கப்போகுது)




6. நாம 2 பேருமே ஒருத்தரை ஒருத்தர் ஏமாத்திட்டு இருக்கோம்  ( அழகிரி , ஸ்டாலின் மாதிரி)



7. இந்த ரிஸ்க்கை உங்களூக்காக மட்டும் இல்லை, எனக்காகவும் தான் எடுக்கறேன்




8.  இந்த உலகத்துல போதையான விஷயம் எது தெரியுமா? அபின் , கஞ்சா, கோக்கைன், சரக்கு, ஒயின், எதுவும் இல்லை..... காதல். அதான் போதையானது. அது நம்மை கொன்னே போட்டுடும். 



9. ஐ ஆம் நாட் எ டெரரிஸ்ட்.. ஐ ஆம் பேட்ரியாட்



10. என் கூட வாழப்போறியா? அவன் கூட சேர்ந்து சாகப்போறியா?

http://www.dilfilmy.com/moviesite/web/images/trailer/Abhi%20Abhi%20-%20Jism%202.jpg




 எதிர்பார்க்கப்படும் டைம்ஸ் ஆஃப் இண்டியா ரேங்க் - 2/5




டெக்கான் கிரானிக்கல் - 4/10



 

 

 

மதுபானக்கடை - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2012/08/blog-post_5452.html


மிரட்டல் - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2012/08/blog-post_6815.html

 

 

TOTAL RECALL - சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் - ஹாலிவுட் சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/08/total-recall.html

 

 



 ஈரோடு ஸ்ரீநிவாசாவில் பார்த்தேன்

ட்

லயன் காமிக்ஸ் VS சன்னி லியோன் "காமி"க்ஸ்

ஆகஸ்ட் மாத மல்லிகை மகள் பெண்கள் மாத இதழ் வலைப்பேச்சு தொகுப்பு
1 .ஒல்லி மிஸ் - டாக்டர் ,உடனடியா நான் வெயிட் போடனும்.என்ன வழி ?


 கில்லி எம் பி பி எஸ் - 6 மாசம் ஆகும் ,உங்களுக்கு ஓக்கேவா?


-----------------------------------


2. புதிதாக ஹோட்டல் தொடங்குவோர் கவனத்துக்கு -லேடி சர்வர் நியமிக்கவும்.பரிமாறுவதில் சிறந்தவர்கள் பெண்களே


-----------------------


3. கணவர்கள் பெண்களிடம் மனைவியிடம் அடிபணிந்து நடக்க காரணம் அடி விழுந்துடும் என்ற பயத்தினால் அல்ல்.எதுக்கு வம்பு?ன்னுதான்



---------------------------


4. ஆடி ஓடி வேலை செஞ்சு செல்வத்தை பெருக்கு # ஆடிப்பெருக்கு சிந்தனைகள்


----------------------


5. பிலிம் இன்ஸ்டிடியூட் எக்ஸாம் கேள்வி - தாராள மனப்பாண்மை கொண்ட சிக்கனவாதிகள் யார்? 1,பூனம் பாண்டே 2 மல்லிகா ஷெராவத் 3 அனுஷ்கா 4 நமீதா


-----------------------------



6. டிரெஸ்ஸிங்க் சென்ஸ் பற்றி கவலைப்படாத ஸ்வீட்டி நான்சென்ஸ் நாட்டி கேர்ள் -சன்னி லியோன்


-------------------------

7. எப்பொதும் pen உடன் இருந்தால் அவன் எழுத்தாளன் ,முப்பொழுதும் பெண்ணுடன் இருந்தால் இழுக்காளன்


--------------------------

8. ஊ ள ல லா - ஊ ழ ல லா #இந்தியா


------------------


9. நாளை ஆடி 18 முன்னிட்டு பவானி, பள்ளிபாளையம் ஆற்றில் குளிக்க வரும் 18 வயது பெண்களுக்கு மட்டும் நீச்சல் கற்றுத்தரப்படும், ஹி ஹி , மியாவ் ;


------------------------


10. ரம்பா விவாகரத்து பெற்றார் # அபா “ரம்பா”

--------------------





11. ஜட்ஜ் - எதுக்காக உங்க கணவரை டைவர்ஸ்  பண்றீங்க?


ஜிம்பலக்கடி ரம்பா  - என் வல்து , இடது தொடை ரெண்டையும் கம்பேர் பண்ணி முரண் தொடைன்னு சொன்னரு



---------------------------


12சைனா ஜப்பான் பொண்ணுங்க் எல்லாரும் சப்பை பிகருங்கதான் # பவுர்ணமி சிந்தனைகள்




--------------


13. கோயில் பிரசாதம் தருபவர்கள் முதலில் எளியவர்களுக்கும் வறியவர்களுக்கும தருவது புண்ணியம்.்


------------------------


14. காதலன் - டியர்.நீ புத்தம் புதிய புத்தகம்




 காதலி- பின்னே.லென்டிங்க் லைப்ரரி புக்னு நினைச்சீங்களா?




------------------------------------


15. அமாவாசைல குழந்தை பிறந்தா அவன் திருடனா ஆகிடுவானாம்.அப்போ பவுர்ணமில பிறந்தா டி எஸ் பி ஆகிடுவானா?



----------------------------



தமிழ் மலர்கள் - 83 "குஸும்ப"

Tamil Flowers - 83 "Safflower or Dyers' saffron"

Biological Name : Carthamus tinctorius

Safflower is an annual plant native to the Mediterranean countries and cultivated in South Asia. Its glabrous, branching stem grows from 1 to 3 feet high and bears alternate, sessile, oblong, or ovate-lanceolate leaves armed with small, spiny teeth. The orange-yellow flowers grow in flower heads about 1 to 11/2 inches across. This thistle is valued for its orange-yellow flowers in summer and for the oil contained in its seeds. The orange-red flowers of safflower sometimes serve as a substitute for saffron, since they give a (rather pale) colour to the food. They are frequently sold as “saffron” to tourists in Hungary or Northern Africa (and probably many other parts of the world) Their value as spice is nearly nil, but their staining capability justifies usage in the kitchen.
Medicinal uses: [Warning: Unverified information] Taken hot, safflower tea produces strong perspiration and has thus been used for colds and related ailments. It has also been used at times for its soothing effect in cases of hysteria, such as that associated with chlorosis. Powdered seeds made into a poultice used to ally inflammation of the womb after child birth. Flowers of this herb is useful for jaundice.
Add caption
தமிழ் மலர்கள் - 83 "குஸும்ப"

Tamil Flowers - 83 "Safflower or Dyers' saffron"

Biological Name : Carthamus tinctorius



16. முதலில் சுதந்திரம் வந்தது மரண அடி வாங்கியது.பின் தான் அடிமைச்சங்கிலி வந்தது # அர்ஜூன் பாறைகள்





---------------------------


17. ஜிஸம் 2 ஹிந்திப்படம் அக்மார்க் சாமி படமாம் # பிரிவ்யூ ஷோ அப்டேட்்


-----------------------


18. சைவ உணவு உன்னை மென்மை ஆக்கும் ,ஆன்மீக உணர்வு உன்னை மேன்மை ஆக்கும்




-----------------------------


19. அன்று - லயன் காமிக்ஸ், இன்று சன்னி லியோன் "காமி"க்ஸ் # ஜிஸம் 2




---------------------------


19. யாசித்துப்பெறுவது நேசிப்பாக இருப்பினும் தவிர்



-----------------------------


20. உங்கள் மனதை எப்போதும் 18 ஆக வைத்திருங்கள்.81 வயது ஆனாலும் எப்போதும் பெரியோர்களை மதித்திருங்கள்



-----------------------------



.
இருப்பதை வைத்து மகிழ்ச்சி அடைந்துகொள்  என்ற கருத்தை அழகாக சொல்லும் படம்......
இருப்பதை வைத்து மகிழ்ச்சி அடைந்துகொள் என்ற கருத்தை அழகாக சொல்லும் படம்......



21.பெண்களை தெய்வமா மதிக்கிறேன்னு ரீல் விடும் சாமியார்கள் பிரசாதம் கிடைச்சதும் அப்புறம் கண்டுக்கறதே இல்ல



-------------------------------

22. இன்று பவானி கூடுதுறையில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் குளிப்பார்கள்.அந்தத்தண்ணிதான் ஈரோடு மக்களுக்கு குடிநீர் ( சுத்தீகரிக்கபப்ட பின் தான் )



-----------------------------


23.எங்களை எல்லாம் அண்ணனா நினைக்கும் சில் வண்டுகளுக்கு சொல்ல விரும்புவது வீ ஆர் ஆல் கண்ணன்ஸ்



--------------------------------



உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்.....


எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் ...
இந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல். என் உயிர் பிரியத்தான் போகிறது.எனினும் நான் இறந்த பின், எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று, நான்பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில்கரைத்துவிடு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டடின் வளமிக்க வயல்களில் தூவிவிடு.அதோடு என் உயிர் பிரிந்தபின்னும், என் போராட்டத்தை தொடர்ந்து நீ, நடத்தவேண்டும்.- Dr.செண்பகராமன்
 
 
டிஸ்கி - டி வி யில் இன்று

Thursday, August 02, 2012

மதுபானக்கடை - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhv9OUgDYnhJAT9mlfZ9F8XV2CSmK41mmQnL8yqzmrUftZldYIfKdmZ-7X1mmqyoaqDgxtuJsGfS6NsXHeh5G5rnZu0SJcgXW0itZDadclxGdeJwjuY6XWoZvocI3G11z1fOCsgfDjo-JjF/s1600/Madhubaanakadai.jpgஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள  பெத்தாம்பாளையம் தான் கதைக்களன்.. ஈரோடு கமலக்கண்ணன் தான் இயக்குநர்.. முழு படமும் ஒரே ஒரு டாஸ்மாக்கில் நடக்கும் சம்பவக்கோர்வைகள் தான் .. வித்தியாசமான முயற்சிதான்.. ஆனாலும் இன்னும் மெனெக்கெட்டிருக்கலாம்.. பெண்கள் பார்க்கவே முடியாது என்பது பெரும் குறை. அதை இயக்குநரும் உணர்ந்தே இருக்கிறார்.. 

 படத்தை பத்தி பார்க்கறதுக்கு முன்னே  தமிழ் இலக்கியத்துல கேரக்டர்ஸ்  புத்தகம் பற்றி பார்ப்போம்.. ஆரம்பத்துல நாவல் தான் தமிழனை இலக்கிய உலகில்  புக வெச்சுது.. ( பிரதாப முதலியார் சரித்திரம்) அப்புறம் சிறுகதை.. பயணக்கட்டுரை.. கவிதை என அதன் எல்லைகள் விரிஞ்சுக்கிட்டே போனாலும் கேரக்டரஸ்க்கு மக்கள் ஆதரவு கம்மிதான்.. அமரர் சாவி எழுதுன கேரக்டர்ஸ் தொடர்  சுவராஸ்யமா இருந்தாலும் அது புத்தகமா வந்தும் கூட பெரிய வரவேற்பு பெறலை.. 



http://static.ibnlive.in.com/ibnlive/pix/sitepix/05_2012/2805-mbk-p-l.jpg



1. டாஸ்மாக் பார் ஓனர் - கள்ளச்சாராயம், போலி மது இவற்றை அப்பப்ப கலந்து கட்டி சேல்ஸ் பண்றவர்.. எந்த பிரச்சனையும் வராம பாரை நடத்தனுமேன்னு எச்சரிக்கை உணர்வோட எல்லார் கிட்டேயும் கண்டிஷனா நடப்பவர்


2. பார்ல வேலை செய்யும் சப்ளையர் நெம்பர் 1... இவன் எப்போ பாரு செல்ஃபோனும் கையுமா பேசிட்டே இருப்பான்.. யார் கிட்டே?டாஸ்மாக் பார் ஓனர் பொண்ணு கிட்டே.. செம கடலை... பாலைவனத்துல இளநீர் குடிச்ச மாதிரி ஒரே  சரக்கும் சலம்பலுமா போகும் திரைக்கதையில் இவர் போர்ஷன் தான் கொஞ்சம் ஆறுதல்.. 

3. பார்ல வேலை செய்யும் சப்ளையர் நெம்பர் 2.. ஓனர் பொண்ணு கிட்டே காதல் வெச்சுக்கிட்டா அபாயம்னு எச்சரிப்பவன். அதுக்காக கைகலப்பு வரை போனாலும் சக பணியாளருக்கு ஓனரால் ஆபத்து எனும்போது கை கொடுத்து கை தட்டலை அள்ளிக்கொள்ளூபவர்


4.ஓனர் பொண்ணு.. மாநிறத்து மல்கோவா மா.. ஊர்ல எத்தனையோ பசங்க இருந்தும் போயும் போயும் தாடியும் , அழுக்கும் உள்ள ஆ:ளை லவ் பண்ணுவது முரண்பாடு என்றாலும் காதலே  முரண் உள்ள இரு துருவங்களிடையே தோன்றவும் வாய்ப்பு உள்ளதுதானே.. இவர் ஹீரோவுடன் நெருக்கமாக உரசும் கட்டங்கள் , லிப் கிஸ் என செம கிளு கிளு.. வரம்பு மீறாமல்.. 


5. எங்க ஊரு பாட்டுக்காரன் மாதிரி.. ஓ சி சரக்கு வாங்க பாட்டு பாடி கஸ்டமர்ஸை கரெக்ட் பண்ணி கவர் பண்றவர்,, இவர் மாதிரி கேரக்டர் ஊருக்கு 2 பேராவது இருப்பாங்க.. 


6. போலீஸ், பார் ஓனர் உட்பட அனைவரும் பார்த்து மிரளும்  பெட்டிஷன் மணி.. குடிச்சே சலமபல் பண்ணும் ஆள்.. ஆன்னா ஊன்னா எல்லார் கால்லயும் விழும் ஆள்.. தன் அப்பாவிடம் இவர் சரக்கடித்து புலம்பும் காட்சிகள் இன்னும் கண்ணுக்குள் நிக்குது


7. காதல் தோல்வியால் முதன் முதலாக சரக்கு அடிக்க வரும் இளைஞன் பெண்களை பற்றி கோபமாக பேசும் காட்சிகள் தியேட்டரில் விசில் பறக்கிறது.. எல்லாரும் பயந்து நடுங்கும் அறுவை பெட்டிஷன் மணியே இவனை பார்த்து பயந்து போவது காமெடி. 


8. இங்கிலீஷ்ல “ சார்.. பஸ்ஸை மிஸ் பண்ணிட்டேன் 35 ரூபா வேணும் என கவுரவ பிச்சை எடுத்து அதில் சரக்கு அடிக்கும் கேரக்டர்.. 


9. ராமன் - அனுமார் வேஷம் போட்டு பிச்சை எடுக்கும் நபர்கள் அங்கே வந்து சரக்கு அடிப்பதும் பேசும்  வாழ்க்கைத்தத்துவங்கள்.. 


10. மகிழ்ச்சியைக்கொண்டாட அல்லது சோகத்தை மறைக்க குடிப்பவர் மத்தியில் செய்யும் வேலையில் வரும் நாற்றத்தை மறைக்க, மறக்க குடிக்கும் சாக்கடைத்தொழிலாளர்கள்.. அவர்கள் பேசும் வசனத்தில் பொறி பறக்கிறது.. அபாரம்.,. 

11. திருநங்கைகள்


12. பார் வாசலில் பெட்டிக்கடை வைத்திருப்பவர்


13. இந்த கேவலமான பிழைப்பான டாஸ்மாக் பாரில் கூட வந்து கேவலமாக பிச்சை எடுக்கும் ஐ மீன் லஞ்சம் வாங்கும் போலீஸ் கான்ஸ்டபிள்.. 



http://tamil.cinesnacks.net/photos/movies/Madhubaanakadai/madhubaanakadai-movie-stills-002.jpg


மேலே சொன்ன கேரக்டர்கள் போக சின்ன சின்ன கேரக்டர்களும் உண்டு.. எல்லாரும் வாழ்க்கையில் நாம் தினம் சந்திக்கும் நபர்களே.. 


நடிப்புல முதல் இடம் பார்  ஓனர்க்கு.. அடுத்து அந்த ஹீரோயினுக்கு.. செம அழகு.,. கிராமத்துக்குயில்.. மேக்கப்பே இல்லாத அழகு முகம்,.,. அல்லது மேக்கப் போட்டிருப்பதே தெரியாத இயற்கை முகம்.. 


பெட்டிஷன் மணிக்கு க்ளோசப் காட்சிகள் அதிகம்.. தவிர்த்திருக்கலாம்.. குமட்டுது.. பாட்டுப்பாடும் கேரக்டர் கலக்கி விட்டார் மனிதர்

 4 பாடல்களில் 2 பாடல்கள் சூப்பர் ஹிட்..

1. மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே என்னுடைய தேவதை செம கலக்கு கலக்குது.. 

2. கள்ளம் இல்லாத 

3. சமரசம் உலாவும் இடம்


பாடல்களில் டச்சிங்க் வரிகள்-


குடித்து குடலழுகி ரெண்டு நாளில்
செத்துப் போவாய் என்று சொன்ன மருத்துவன்
நேற்றே இறந்து போனான்
சாவுக்கு பயமில்லை, சாத்திரங்கள் ஏதுமில்லை
இன்றிருப்போர் நாளையில்லை என்றே குடிக்கிறோம்


“கள்ளுக் குளம் வெட்டி ராமன் குளிச்சதும்
ஆதிக் குடியில தான்.
அப்பனும் மவனும் கோயிலில் சாமியும் சேர்ந்து குடிச்சோமடா
ஒழுக்கங்கெட்டவன்னு நம்மாளச் சொன்னது மேட்டுக் குடிகளடா
 http://moviegalleri.net/wp-content/gallery/madhubaanakadai-shooting-spot-stills/madhubaanakadai_movie_shooting_spot_stills_2234.jpg



 மனம் கவர்ந்த வசனங்கள்

1.  போய்யா..  தகராறு பண்ணாம கிளம்பு.. 



உள்ளிருப்புப்போராட்டம் நடத்தப்படும்


2. டைம் ஆச்சு.. கடை சாத்தனும், கிள்மபலை?

ஏன்? அவன் மட்டும் இருக்கான்?

 அவன் ஒரு லூசுப்பையன்.. நீயுமா? கிளம்புடா.


3. டெயிலி இப்டி கழநீர்த்தண்ணி டீ வாங்கிட்டு வற்றியே, ஒரு நாளாவது ஹார்லிக்ஸ் வாங்கிட்டு வந்தா என்ன? 


நாளைக்கு சாகப்போற. உனக்கு  ஹார்லிக்ஸ் கேட்குதா?



4. ஹீரோயின் - யார் நீ?

 உன்னை வெச்சு குடும்பம் நடத்தப்போறவன்


 அதை நீ முடிவு பண்ண வேணாம். பண்னவும் கூடாது, எங்கப்பா....


5. இன்னுமா கடை திறக்கலை?


ஆறு மணி ஆக வேணாமா? 


 ஈசியா சொல்லிட்டே. நாங்க எல்லாம் குடிச்சு பழக்கப்பட்ட ஆள்ங்க, டைம்க்கு குடிச்சே ஆகனும்..



6. குடிகாரன்னா உனக்கு எளக்காரமா? 5 ஆந்தேதி வர வேண்டிய சம்பளம்  7 தேதி ஆகியும் வர்லைன்னா விதிர் விதிர்த்துப்போகமாட்டே?10 மணிக்கு ஏன் சரியா டாஸ்மாக் திறக்கலைன்னு கேட்க எங்களுக்கும் உரிமை உண்டு.. 



7. ஸ்கூல் வாத்தியார் - ஏண்டா.. குடிக்கறதே  தப்பு... அதிலும் நான் குடிக்கற அதே டாஸ்மாக்ல தான் நீங்களும் குடிக்க வரனுமா?



8. சார், நான் தெரியாமத்தான் கேட்கறேன்.. பாடம் நடத்தற நீங்க சரக்கு அடிச்சுட்டு போய் பாடம் நடத்தும்போது பாடம் படிக்கும் அவங்க சரக்கு அடிச்சுட்டு க்ளாஸ் போனா என்ன தப்பு?


9. நீ வேணா பாரு  மண்ணோட மண் ஆகப்போறே.. 

 நீ மட்டும் என்ன இளையராஜாவா ஆகப்போறே?



10. அக்டோபர் 1 - நல்ல வேளை நீ இன்னைக்கு பொறந்தே.. நாளை பிறந்திருந்தா கடை லீவ்.. 



http://mimg.sulekha.com/tamil/madhubaanakadai/stills/madhubaanakadai-tamil-movie-pictures-015.jpg


11 ஹாய்.. நான் எம் ஏ  டிபார்ட்மெண்ட்.. நீங்க?

 நான் கெமிக்கல் டிபார்ட்மெண்ட்.. 


 எல்லாரும் குடிகார டிபார்ட்மெண்ட்.. தானே.. 


12. சார்.. குடிகாரர்களை பற்றி குறைச்சு எடை போட்டுடாதீங்க.. எது ஒரிஜினல்? எது போலி ( டூப்ளிகெட்)? ன்னு இப்ப இருக்கற குடிகாரங்க எல்லாம் ஈசியா கண்டு பிடிச்சுடறாங்க.. 


13. ஒரு குவாட்டர் பாட்டில் ஒரிஜினல் விலை 10 ரூபா தான்.. ஆனா நீங்க 80 ரூபாவுக்கு விக்கறீங்க.. பிராண்ட் நேம் சொல்லி வாங்குன காலம் எல்லாம் போச்சு.. 80 ரூபா சரக்கு.. 100 ரூபா சரக்குன்னு விக்கறீங்க.. கம்ப்பெனி நேமே சொல்றதில்லை



14.  குடிகாரங்க எல்லாரும் குழந்தை மாதிரிடா.. 



15. ஹீரோயின் - என்னை வாயாடிப்பொண்ணுன்னு தெரியாம பழகிட்டே.. 

 வாயாடியா ? பார்த்தா அப்டி  தெரியலையே?  ( பார்த்தா எப்டி தம்பி தெரியும்? கொஞ்சம் பேச்சுக்குடுத்து பாரு )



16. நீ என்ன வெள்ளைகாரனுக்கா பிறந்தே? தமிழ்ல பேசுடா.. இங்க்லீஷ்ல சைலண்ட்டா கெட்டவார்த்தை பேசுனா  நீ பெரிய ஆளா? 


17.  பொண்ணுங்களையே நம்பக்கூடாது,.,. இளிச்சு இளிச்சு பேசுவாளுங்க, உருகி உருகி காதலிப்பாளுங்க, கடைசில் கழட்டி விட்டுருவாளுங்க


18. இறந்து விடு என்று சொல்.. மீண்டும் பிறந்து வருவேன், ஆனால் மறந்து விடு என்று சொல்லாதே இறந்து விடுவேன்.. 


19. ஆஞ்சநேயா! ஒரே ஒரு வரம் வேணும்

 ஆஞ்சநேயர் வேடம் பூண்டவர் - யா

கண்ட கண்ட கருமாந்திரம்  புடிச்ச நாய்ங்களூக்கு எல்லம் நல்ல ஃபிகர் செட் ஆகுது.. வாழ்க்கைல இப்படி சும்மா கட்டிப்பிடிக்கவாவது ஒரு பொண்ணு வேணும்// 



20. கஞ்சிக்கே வழி இல்லாதப்ப குவாட்டர் குடுக்குமாம்.. அதான் கடவுள்



http://www.kollytalk.com/wp-content/gallery/madhubaanakadai-movie-stills/madhubaanakadai-movie-stills-15.jpg


21. நயன் தாராவையும், கேத்ரினா கைஃபையும் மிக்சில போட்டு அரைச்ச மாதிரி ஒரு ஷேப் ,கலர்.. அந்த ஃபிகரு



22. நாங்க எல்லாம் வேலைக்குப்போனாத்தான் சோறு, இல்லைன்னா குடும்பமே பட்டினிதான்


23. யோவ் ஆஞ்ச நேயா! உன் வாலை சுருட்டிக்கிட்டு உக்காருய்யா 


நாசமா நீ போ!


24. உன்னைப்பற்றி எனக்குத்தெரியாதா? சந்தேகப்படறதுக்குன்னே பிறந்திருக்கும் ஆள் ஆச்சே நீ ( ராமர் வேஷம் பூண்டவர் )


25. நீங்க எல்லாம் சரக்கு அடிக்கறதை வீடியோ எடுத்து யூ டியூப்ல போட்டு உங்கப்பாவை பார்க்க வைக்கனும்.. அப்போதாண்டா புத்தி வரும்.. 



26. குடிப்பது தனி மனித உரிமை அல்ல .. அது  ஒரு சமூகம்.. அசைச்சுக்க முடியாது


27. ஆலயமணி அடிச்சா சத்தம், ஆல்ஹஹால் மணி குடிச்சா யுத்தம்


28. நாம தள்லாடி நிக்கறவரை இந்த கவர்மெண்ட் ஸ்டடியா நிக்கும்.. நாம ஸ்டடியா நிக்க ஆரம்பிச்சுட்டா இந்த கவர்மெண்ட் தள்ளாடிடும்


29. டாஸ்மாக் வருமானம் தான் இந்த அரசுக்கு பெரிய ஆதாயம், அது மட்டும் இல்லைன்னா ஆட்டம் கண்டுடும்.. 


30. போலீஸ் மாமாவை - குடுத்து வெச்ச ஆள் மாதிரி கேட்கறான் பாரு.. கந்து வட்டியா வாங்கறே? எச்ச சோத்துக்கு பிச்சைஎடுக்கும் நாயே.. ( தியேட்டரில் அப்ளாஸ்)


31.  போலீஸ் - எப்படி போகுது வியாபாரம்?

வர்றவனுங்க எல்லாம் புடுங்கறதுலயே இருக்கானுங்க கடன்காரப்பசங்க



32. சாராயம்கறது எங்க குல சாமி.. ஆனா அதை விட்டு விலக வெச்சுட்டீங்க.. இந்த சரக்குக்கு எங்களை பழக வெச்சுட்டீங்க.. நீங்க எல்லாம் சந்தோஷத்தை கொண்டாட, துக்கத்தை மறக்க குடிக்கறீங்க.. ஆனா நாங்க வேலைக்காக குடிக்கறோம்.. அந்த நாற்றத்தை சகிச்சுக்க குடிக்கறோம்


http://haihoi.com/Channels/cine_gallery/madhubaanakadai_movie_shooting_spot_stills_0311_S_144.jpg


  இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஒரு சீனில் கூட மது குடிப்பது தவறு குடிக்காதிங்க என்ற பிரச்சார நெடி இல்லை. ஆனா குடிக்காத ஒரு ஆள் இந்தபப்டத்தை பார்த்தா  குடி மேல வெறுப்பு வர்ற மாதிரி எடுத்து இருக்காரு.. இன்னொரு விஷயம் இவரோட நோக்கம் டாஸ்மாக் சம்பவங்களை பதிவு செய்வதே


2.  டிஜிட்டல் படமாக எடுக்கப்பட்ட மும்பை எக்ஸ்பிரஸ் படத்தை விட இந்தப்படத்தில் மேக்கிங்க், அவுட் புட் நல்லாருக்கு.. கேனான்  செவன் டி யில் எடுக்கபப்ட்ட படமாம்.. சபாஷ்


3. படத்தில் வாய்ப்பு இருந்தும் டூயட்டை சேர்த்தாது, காதல் காட்சிகளை தேவை இன்றி புகுத்தாது.. ஹீரோயின் வருவதே 4 காட்சிகள் தான் 16 நிமிடங்கள் தான்


4. அனைவர் நடிப்பும் கலக்கல்.. இயற்கையாக இருக்கு.. குறிப்பா அந்த பொண்ணு, பாட்டுக்காரர், பெட்டிஷன் மணி


5. இசை.. பாடல்கள் படத்துக்கு பெரிய பிளஸ்.. 


6. டைட்டில் போடும்போதே இப்படத்தில் கதை என்று ஒன்று இருந்தால் கண்டுபிடித்து சொல்லுங்கள் என்று நக்கல் அடித்தது


7. டாஸ்மாக்கில் வேலை செய்தாலும் ஹீரோவும் , நண்பரும் குடிப்பது போல் காட்சிகள் வைக்காதது ( மேலே உள்ல ஸ்டில்லில் அப்படி ஒரு காட்சி இருந்தாலும் படத்தில் அது இல்லை )


http://123tamilforum.com/imgcache2/2012/01/MadhubaanakadaiTamilMovieStills2300x233-1.jpg



 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. பார் ஓனருக்கு தன் மகளை  ஒரு சப்ளையர் லவ் பண்றது தெரிஞ்சுடுது..  அவர் சத்தம் இல்லாம அவனை தனியா ஒரு இடத்துக்கு வர வெச்சு அடியாளுங்க மூலமா போட்டுத்தள்ளாம  டாஸ்மாக் பார்லயே அதை செய்ய நினைப்பது எப்படி?அடிக்கடி டாஸ்மாக்ல யாராவது தகறாரு பண்றப்போ “ எந்த பிரச்சனையா இருந்தாலும் வெளீல போய் அடிச்சுக்குங்க. கடையை மூட விட்டுடாதீங்க என எச்சரிக்கையாக இருப்பவர் தன் சொந்தப்பிரச்சனை வரும்போது அதே எச்சரிக்கயை ஏன் ஃபாலோ பண்ணலை?


2. பிளான் பண்ணி கொலை பண்றது வேற கேட்டகிரி.. தன் பொண்ணை வேலைக்காரன் லவ்வறான்னு தெரிஞ்ச உடனே கோபத்துல அப்பவே போடுவாங்களா? ஆற அமர யோசிச்சு அவ்ளவ் டைம் எடுத்துக்குவாங்களா?


3. பொதுவா குடும்பப்பொண்ணுங்க டாஸ்மாக் பக்கமே வர மாட்டாங்க.. ஏதாவது வேணும்னா ஃபோன்ல சொன்னா வேலை முடிஞ்சது..  ஆனா பார் ஓனர் தன் மக பாருக்கு வர்றதை எப்படி அலோ பண்றாரு?


 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41


 எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே 


சி.பி, கமெண்ட் - சரக்கு அடிக்கும்சங்கர லிங்கங்கள் பார்க்கலாம்..


ஈரோடு ஸ்ரீ லட்சுமியில் படம் பார்த்தேன்


டிஸ்கி - மிரட்டல் - சந்தானம் காமெடிக்காக - விமர்சனம் http://www.adrasaka.com/2012/08/blog-post_6815.html

JISM 2 - பாலிவுட் சினிமா விமர்சனம் 34 +-http://www.adrasaka.com/2012/08/jism-2-34.html

 

 

 

TOTAL RECALL - சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2012/08/total-recall.html

 





http://www.cineulagam.com/photos/full/movies/madhupana_kadai_001.jpg

மிரட்டல் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvoG87S93G-4-RJhKwIa0IlAsb6AKsCmxb4dFJbSWJDAkrkXQApptGRBu6OZDpZtcpzy8q9l-vcQj4VusNhbUPFTdxyDgrCAQpO5q9AuuJHkeqsJoNGhfuaMiC4Oe6MaTrnKK3Hhk2H6JM/s640/Mirattal+Movie+First+Look+Posters+Wallpapers.jpg 

 ஒரே ஒரு ஊர்ல 2 கேவலமான தாதாங்க.. கஜினி வில்லன் ஒரு தாதா, கல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சிப்போராட்டம் பிரபு.இன்னொரு தாதா .. வில்லனோட பையனை இவரு க்ளோஸ் பண்ணிடறாரு.. பழிக்குப்பழியா அப்பவே வில்லன் பிரபுவை போட்டிருந்தா மேட்டர் ஓவர்..  ஆனா படம் 2 ரீல் தானே வரும்? 14 ரீல் கொண்டார்றது எப்படி?


 அதனால அந்த வில்லன் சொல்றாரு.. பிரபு சீக்கிரமா சாகக்கூடாது.. அனுராதா அனுராதாவா சாரி அணு அணுவா துடிச்சு சாகனும்.. பிரபு தங்கையை கொலை பண்ணனும்னு சொல்றாரு.. 


 பிரபுவோட தங்கச்சி சிவனேன்னு லண்டன்ல படிச்சுட்டு இருக்கு,.. மண்டைல மசாலா இல்லாத கேனயன் கூட சொல்வான்.. பாப்பா அங்கே இருந்தாத்தான் பாதுகாப்புன்னு.. ஆனா அண்ணன் பிரபு லண்டன்ல இருந்தா பாதுகாப்புஇல்லை, நம்ம கூடவே இருக்கட்டும்னு இங்கே கூட்டிட்டு வந்துடறாரு.. 


  பிரபு கிட்டே அடியாளா  நம்ம ஹீரோ வினய் சேர்றாரு.. சின்னத்தம்பில குஷ்பூவை பிரபு கூட்டிட்டு போய் ஊரெல்லாம் சுத்திக்காட்டுன மாதிரி இவரும் அங்கே இங்கே கூட்டிட்டு போறாரு.. 2 பேருக்கும் லவ் ஆகிடுது.. அலை பாயுதே ஸ்டைல்ல மேரேஜும் பண்ணிக்கறாங்க.. ஆனா பிரபுக்கு அது தெரியாது.. 


ஒரே பங்களாவுக்குள்ளேயே மீதி கதை எப்படி நகருது? அந்த வில்லன் என்ன தான் செஞ்சான்? சந்தானம் மொக்கை எப்படி எல்லாம் போடறாரு.. இதான் மிச்ச மீதிக்கதை.. 



http://masscinema.in/wp-content/gallery/mirattal-movie-stills/mirattal-movie-stills-7.jpg

 படத்தோட முதல் ஹீரொ அஸ் யூசுவல் சந்தானம் தான்.. இவர் பேரே ஸாரி.. அதனால சாரி.. சொல்றதுக்கு ஏதும் இல்லை.. படத்துல மொத்தம் மொக்கை ஜோக்ஸ் 64 வருது.. 48 இவர் சொல்றாரு.. 13 இடத்துல தான்  ஆடியன்ஸ் சிரிக்கறாங்க.. மீதி ஜோக்குக்கு எல்லாம் இதெல்லாம் ஒரு ஜோக்கா அப்டினு நினைச்சு சிரிக்கறாங்க.. படம் பூரா பம்மிக்கிட்டே இருக்கும் சந்தானம் ஒரு சீனில் சரக்கு அடிச்சுட்டு சலம்பல் பண்ணும் சீன் கலக்கல் ரகம் .. 


ஒரிஜினல் ஹீரோ வினய்.. அண்ணன் முதல்ல நல்ல பல் டாக்டர்ட்ட போய் பல்லை க்ளீன் பண்ணனும்.. எல்லா பல்லும் காரை.. பான் பராக் பாலுன்னு நினைப்பு.. அதுல க்ளோசப் ஷாட் வேற உவ்வே,, இவர் வசனம் பேசும் ஸ்டைலை மாத்திக்கிட்டா நல்லாருக்கும்.. உன்னாலே உன்னாலே படத்துல இருந்த துள்ளல் இதுல மைனஸ்.. 


 ஹீரோயின் யாரோ ஷ்ர்மிளாவாம்.. மொக்கை ஃபிகர்.. இந்தபடத்தை முதல் ஷோ பார்த்த தமிழ்நாடு பூரா இருக்கும்  மூணு லட்சத்து இருபத்து மூவாயிரத்து நானூற்றி முப்பத்தி ஆறு  (3,23,436 )  ஆடியன்ஸ் கிட்டே கருத்து கேட்டாலும் சிங்கிள் மேனுக்கு கூட இது பிடிக்காத  பார்ட்டி.. படு மொக்கை பர்சனாலிட்டி.. இந்த லட்சணத்துல  இவர் லோ ஹிப் ல  வேற வந்து கடுப்பை ஏத்துறார்.. அதுல தொப்புள்ல தொங்கட்டான் வேற.. 


கேப்டன் பிரபாகரன்ல பட்டாசை கிளப்புன மன்சூர் அலிகான் இதுல டம்மி பீசா காமெடியனா கேவலப்படுத்தி இருக்காங்க.. தங்க பாலு, ஓ பி எஸ், பவர் ஸ்டார் ரேஞ்சுக்கு  இருக்கு இவர் நடிப்பு.. 

ஆர் பாண்டிய ராஜன் 3 ஜோக் சொல்றார்.. ஒரே ஒரு காமெடி பண்றார்.. அவ்ளவ் தான்.. ஹீரோவுக்கு அப்பா.. 

 ஜெயா டி வி பாஸ்கி ( ஆனந்த விகடன் ஜோக் ரைட்டர்)  7 சீன்ல வர்றார்.. சொல்லிக்கொள்ளும்படி ஏதும் இல்லை.. 


கஞ்சா கறுப்பு காமெடிங்கற பேர்ல எப்பவும் போல் மொக்கை போடறார்.. 

http://moviegalleri.net/wp-content/gallery/sharmila-mandre-stills-in-mirattal/mirattal_heroine_sharmila_mandre_new_photos_stills_2277.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. போஸ்டர்ல, டி வி விளம்பரத்துல எல்லாம் ஓக்கே ஓக்கே லெவல்க்கு இந்த படத்தோட ,மார்க்கெட்டிங்கை ஏத்தி விட்டது.. 



2. சந்தானம் காமெடியை நம்பி படத்தோட திரைக்கதையை அவரை சுத்தி நகர்ற மாதிரி அமைச்சது.. 


3. லண்டன் லொக்கேஷன் செலக்‌ஷன், ஒளிப்பதிவு..


 இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ்


1. கோடிக்கணக்குல சம்பாதிக்கும் தாதா வின் தங்கை ஒரு சினிமா தியேட்டர்ல தனியா போய் டிக்கெட் எடுக்க தெரியாதா? ஹீரோ கிட்டே போய் இந்த தியேட்டர்ல டிக்கெட் எடுத்துக்கொடு.. ரொம்ப ரேர்.. டிக்கெட் கிடைக்கறதுன்னு கெஞ்சுது.. ஓனருக்கு கிடைக்காத டிக்கெட் அவங்க கிட்டே வேலை செய்யறவனுக்கு கிடைக்குமா? 100 ரூப்பா டிக்கட்டுக்கு 200 ரூபாவை அள்ளி விட்டா டிக்கெட் தேடி வருது.. அது கூட அந்த டிக்கெட்டுக்கு தெரியாதா?



2. சாதாரண ஒரு தாதாவோட தங்கயை கொலை பண்ண  என்னமோ கவர்னர், ஜனாதிபதியை கொலை பண்ணப்போறது மாதிரி அந்த வில்லனின் கூலிப்படை ஆள்  டெல்ஸ்கோப் கன், ரைபிளோட சுத்துவதும் ஆதவன் படத்துல சூர்யா பண்ற மாதிரி சேஷ்டைகள் எல்லாம் செஞ்சு ஒண்ணும் பலிக்காம போவதும் நம்பவே முடியலை.. 


3.  லண்டன்ல இருக்கும் தங்கயை இங்கே வர வெச்சு , பின் அமெரிக்கால இருக்கற மாப்ளையையும் இங்கே வர வெச்சு 2 பேரையும் லண்டன் அனுப்ப திட்டம் போடும் லூஸ் பிரபு ஸ்ட்ரைட்டா லண்டன்ல இருந்து அமெரிக்கா அனுப்பி இருந்தா வேலை முடிஞ்சுதே?


4. கூலி ஆள் ரூம்ல யார் கிட்டேயோ ஃபோன்ல பேசறதை பார்த்த ரூம் மேட் “ யார் கிட்டே ஃபோன்ல பேசறெ?ன்ன்னு ஒரே ஒரு கேள்வி தான் கேட்டான்.. அதுக்குப்போய் அவனை கொலை பண்றதெல்லாம் ஓவர்/./ அவனுக்கு குடுத்த வேலை பிரபு தங்கையை கொலை பண்ண சொல்லி.. அதை விட்டுட்டு எவனை எவனையோ கொன்னுட்டு இருக்கான்..?


5.  ஒரு சீன்ல ஹீரோ ஹீரோயின் பைக்ல வந்து அநாமத்தா பைக்கை நடு ரோட்ல விட்டுட்டு லாரி பிடிச்சு போறாரு.. அவங்களை துரத்திட்டு வரும் கூலி ஆள் அவர் பைக் ரிப்பேர் ஆகி அதை விட்டுட்டு  லாரியை துரத்தி ஓடறார்.. ஹீரோ விட்டுட்டுப்போன பைக் சாவியோட அநாமத்தா அப்படியே நிக்குது.. அந்த கபோதிக்கு அது கூடவா தெரியாது? பைக்ல துரத்தாம  ஓடியே துரத்த ட்ரை  பண்றாரே, மனசுக்குள்ளே விஜய்னு நினப்பா?


6. வில்லன் குரூப் ஹீரோயினை அடைச்சு வெச்சுடுது.. செல் ஃபோன்  இருக்கா?ன்னு செக் பண்ண மாட்டாங்களா?  அதான் போகட்டும்.. ஒவ்வொரு ஏரியாவா மெயின் சுவிட்சை ஆஃப் பண்ணி  ஏரியா வை கண்டு பிடிக்கற ஐடியா இப்போ தான் தடையறத்தாக்க படத்துலயே வந்துச்சே


 http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/mirattal-02/wmarks/mirattal-0217.jpg




சி.பி கமெண்ட் - ஃபேமிலியோட பார்க்கற மாதிரி டீசண்ட்டா தான் படம் இருக்கு, ஆனா ஓவர் மொக்கை.. சிரிக்கலாம், ஆனா சிந்திக்கக்கூடாது..  சந்தானத்தின் மொக்கை காமெடி மெலோ டிராமாவுக்காக பார்க்க நினைப்பவர்கள் பார்க்கலாம்..


எதிர்பார்க்கப்படும் ஆனந்த .விகடன் மார்க் - 40


  எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்



டைம்ஸ் ஆஃப் இண்டியா - 2  / 5


டெக்கான் கிரானிக்கல் - 5 / 10



 ஈரோடு அபிராமியில் ப்டம் பார்த்தேன்.



 டிஸ்கி - 1 டிஸ்கி - மதுபானக்கடை - சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/08/blog-post_5452.html

JISM 2 - பாலிவுட் சினிமா விமர்சனம் 34 +-http://www.adrasaka.com/2012/08/jism-2-34.html

 

TOTAL RECALL - சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் - ஹாலிவுட் சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/08/total-recall.html

 

 

 

 

 






சந்தனத்தின் மொக்கை காமெடி வசனங்கள் தனிப்பதிவாய் விரைவில்



http://masscinema.in/wp-content/gallery/mirattal-movie-stills/mirattal-movie-stills-36.jpg


வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 2. 8..2012 ) 8 படங்கள் முன்னோட்ட பார்வை

http://www.accesskollywood.com/photo-galleries/mirattal/images/mirattal02.jpg 

1.மிரட்டல் - மெஜஸ்டிக் மல்டி மீடியா தயாரிக்கும் படம், ‘மிரட்டல்’. விநய், ஷர்மிளா, பிரபு, சந்தானம், கஞ்சா கருப்பு, மன்சூரலிகான், பாண்டியராஜன் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, டி.கண்ணன். இசை, பிரவீன் மணி. பாடல்கள்: வாலி, பா.விஜய், கபிலன். இப்படத்தின் பாடல் சி.டியை வெளியிட்ட இயக்குனர் ஆர்.மாதேஷ், நிருபர்களிடம் கூறியதாவது:



 விநய்க்கு இருக்கும் ‘சாக்லெட் பாய்’ இமேஜை இப்படம் மாற்றும். ஷர்மிளாவுக்கு கூத்துப்பட்டறையில் நடிப்பு மற்றும் தமிழில் பேச பயிற்சி அளிக்கப்பட்டது. சந்தானம், கஞ்சா கருப்பு கூட்டணி சிரிக்க வைக்கும். லண்டன் பாராளுமன்றம் மீது விமானம் பறந்து செல்ல விசேஷ அனுமதி வாங்கி படப்பிடிப்பு நடத்தினோம். 



மேலும் வெந்நீர் ஊற்றுகளுக்கு மத்தியிலும், ஐதராபாத் நிஜாமுக்குச் சொந்தமான பிரமாண்ட பங்களாவிலும், சென்னையில் சிவாஜி வீட்டின் உட்புறமும் முக்கிய காட்சிகள் படமானது. கோபத்தால் எதையும் சாதிக்க முடியாது. எவ்வளவு பெரிய பிரச்னையையும் சுலபமாகவும், காமெடியாகவும் எடுத்துக்கொண்டு அணுகினால் அது காணாமல் போய்விடும் என்ற மெசேஜை சொல்லுது இப்படம்

இதில் பொண்டாட்டி பற்றி சந்தானம் வழமையான கிண்டலுடன் ஓர் பஞ்ச் சொல்வார் பாருங்க…






“கிடைச்சா கேத்ரீனா கைப் போல வைஃப் கிடைக்கணும்… எனக்கும் கிடைச்சிருக்கிறாளே… துருப்பிடிச்ச நய்ஃப் போல…!’

ஈரோடு அபிராமி, அன்னபூரணி, சண்டிகா என 3 தியேட்டரில் ரிலீஸ்  

விமர்சனம் -http://www.adrasaka.com/2012/
08/blog-post_6815.html


2.  மதுபானக்கடை  - படத்தில் கதை ஏதும் கிடையாது. அதையும் மீறி கதை… அது இது என்று ஏதாவது எழுதப்பட்டால் அது எழுதுபவருடைய சொந்த கற்பனையாகத்தான் இருக்க முடியும் என்கிறார் மதுபானக்கடை படத்தின் இயக்குநர் கமலக்கண்ணன்.



புதுமுகங்களை வைத்து இந்தப் படத்தை இவர் இயக்கினாலும் படத்தைப் பொறுத்தவரை படத்தின் ஹீரோ மதுபானக்கடைதானாம். ஈரோடு பக்கத்தில் இவர்கள் போட்ட மதுபானக்கடை செட்டைப் பார்த்து நிறைய பேர் அங்கு மது வாங்க வந்திருக்கிறார்கள்.



அவர்கள் பாட்டில் கேட்ட போது படக்குழுவினரோ இது ‘படப்பிடிப்பு நடக்கிற இடம்…’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் நம்ப மறுத்துவிட்டார்களாம் அந்த பகுதி குடிமகன்கள். சில குடிமக்களோ மதுபானக்கடை பார் செட்டின் உள்ளே உட்கார்ந்து நன்றாக தண்ணி அடித்துவிட்டு போனார்களாம்.


நிஜ டாஸ்மாக் கடை என்று எண்ணி குடிமகன்கள் வந்து போனதில் மதுபானக்கடை டீமினர்க்கு ரொம்பவே சந்தோசம். பட்ஜெட் படமாக இருந்தாலும் படம் பேசப்படுகிற அளவுக்கு நன்றாகவே வந்திருக்கிறது என்கிறது மதுபானக்கடை படக்குழு. 

3. யுகம் -  இந்தப்படத்தை பற்றி தகவல்கள் ஏதும் கிடைக்கலை


http://media.apunkachoice.com/image/nw/om/big/bi-113153.jpg


4. JISM 2 - ஜிஸ்ம் 2 படம் ஒரு பக்கா ஏ படம். வயசு வந்தவர்களால், வயசு வந்தவர்களுக்காக எடுக்கப்பட்ட படம் இது, என நடிகையும் இயக்குநருமான பூஜா பட் கூறியுள்ளார்.



கனடிய பலான பட நடிகை சன்னி லியோன் முதல் முறையாக கொஞ்சூண்டு உடையுடன் நடிக்கும் முதல் படம் என்ற பெருமையோடு வருகிறது ஜிஸ்ம் 2.



இந்தப் படத்துக்கான விளம்பரங்கள் அனல் பறக்க ஆரம்பித்துள்ளன.


பட் கேம்பிலிருந்து வரும் ரொம்ப போல்டான படம் என்றுவேறு மார்த்தட்டி வருகிறார்கள்.


இந்த நிலையில் படம் குறித்து இயக்குநர் பூஜா பட் கூறுகையில், "இந்தப் படம் வயசு வந்தவங்களுக்காக வயசு வந்தவர்களால் எடுக்கப்பட்ட படம். ஒரு பெண்ணின் பார்வையில் இந்தப் படத்தைத் தந்திருக்கிறேன். ஏ சான்றிதழ் வாங்கியாச்சு.


படத்தில் டபுள் மீனிங் வசனங்கள் கிடையாது. டாய்லெட் சீனெல்லாம் இல்லை. அதையெல்லாம் மற்றவர்கள் எடுக்கட்டும் என விட்டுவிட்டேன். இது பக்கா அடல்ட்ஸ் ஒன்லி படம். இந்த மாதிரி படங்கள் பார்க்கத்தான் எக்கச்சக்க ஆடியன்ஸ் இருக்காங்க. அவங்களை நம்பித்தான் எடுத்திருக்கேன்," என்றார்.




சன்னி லியோனுக்கு ஜோடியாக அருணோதய் சிங், ரன்தீப் ஹூடா நடித்துள்ளனர். இந்த பக்கா கில்மா படம் ஈரோடு ஸ்ரீநிவாசாவில் ரிலீஸ்

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/6/6e/Veera_Poster_2011.jpg/220px-Veera_Poster_2011.jpg


 5.VEERA ( TELUGU) - தமிழ் சினிமாவில் ஒரே படத்தின் மூலம் கலக்கிய காஜல் அகர்வால் மற்றும் டாப்ஸி இருவரும் இணைந்து கவர்ச்சியில் கலக்கிய தெலுங்குப் படமான வீரா  அங்கே செம ஹிட்..( ஹிட்டுன்னா செம உதைன்னும் அர்த்தம் உண்டு )



இப்படத்தின் ரவிதேஜா மற்றும் ஷாம் இருவரும் ஹீரோவாக நடித்திருக்கிறார்கள். எஸ்.எஸ்.தமன் இசையமைத்திருக்கும் இப்படத்தை சிவன் அசோசியேட்ஸ் சார்பில் சுந்தரலட்சுமி தயாரித்திருக்கிறார். ஏ.ஆர்.கே.ராஜராஜா வசனம் எழுதியிருக்கும் இப்படத்தை ரமேஷ் வர்மா இயக்கியிருக்கிறார்.




அதிரடியான ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் கதைப்படி, கடமை தவறாத போலீஸ் அதிகாரியான ஷாம் மகளிர் விடுதியில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ரவுடியை என்கவுன்டரில் போட்டு தள்ளுகிறார். அந்த ரவுடி மிகப்பெரிய தாதாவின் தம்பி என்பதால் ஷாமை பழிவாங்குவதற்காக ஷாமின் மகனை கொன்று எரித்து விடுகிறார். மேலும் ஷாமின் மகளையும் கொல்ல நினைக்கும் ரவுடியின் மூலம் பல இன்னல்களுக்கு ஆளாகும் ஷாம் மற்றும் அவருடைய குடும்பத்தை காப்பாற்ற, காவலாளியாக வரும் ரவிதேஜா உண்மையான காவலாளி இல்லை என்ற உண்மை தெரிய வருகிறது. 





ரவிதேஜா யார்? ஏன் ஷாமின் குடும்பத்தை அவர் காப்பாற்ற வேண்டும். என்ற திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகரும் இப்படத்தில், காஜல் அகர்வால் மற்றும் டாப்ஸின் கலக்கல் கவர்ச்சி ஆட்டங்கள் என தூக்கலான மசாலாப் படமாக உருவாகியிருக்கிறது.



டாப்ஸி இடம்பெறும் ஒரு பாடலுக்கு மட்டும் ரூ.75 லட்சத்தில் செட் அமைத்திருக்கிறார்கள். அதேபோல சண்டைகாட்சி ஒன்றில் ஆயிரம் கார்கள் வரிசையாக அணிவகுப்பட்ட கார் சேசிங் காட்சியும் ரசிகர்களை மிரளவைக்கும் அளவுக்கு இருக்கிறதாம். தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது.  ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் ரிலீஸ் 

http://cinema.yarlosai.com/wp-content/uploads/2012/07/total_recall_006.jpg


6. TOTAL RECALL -பழைய படங்களின் தழுவலாகவோ நகலாகவோ மீண்டும் படமெடுப்பது நம்மவர்களின் வழக்கம்.

ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு, வெளிவந்த படங்களை காலத்துக்கேற்ப தொழில்நுட்ப அலங்காரம் செய்து வெளியிடுவது ஹாலிவுட்காரர்களின் பாணியாகும்.


ஏற்கனவே வெளியான ஒரு படத்தை மறு உருவாக்கம் செய்ய, அதுவும் அதே பெயரில் உருவாக்க தனி தில் வேண்டும், தெளிவும் வேண்டும்.


இந்தத் துணிவுக்குக் காரணம் அவர்கள் மீண்டும் எடுக்கும் போது அவ்வளவு தூரம் சிந்திக்கிறார்கள், உழைக்கிறார்கள், மெருகேற்றுகிறார்கள்.


காலமாற்றம் படைப்புதிறனில் தெரிகிறது. தொழில் நுட்ப நிபுணத்துவம் உருவாக்கத்தில் உணர வைக்கிறது. ஆகவேதான் அதே படத்தை மீண்டும் படைக்கும் போது புதிய படம் போல அவதார அனுபவத்தைத் தருகிறது.


அப்படி ஒரு படமாக மறு அவதாரம் எடுக்கும் படைப்புதான் “TOTAL RECALL “.
கடந்த 1990ல் வெளியாகி பரவலான கவனத்தையும் பரபரப்பான வெற்றியையும் பெற்ற படம் தான் இந்த “TOTAL RECALL “. இப்படம் நீண்ட கால இடைவெளிக்குப் பின் மீண்டும் 2012ல் புதிய பிறப்பெடுத்து வெளியாகிறது.



இது ஒரு அமெரிக்கப் படம். அறிவியல் படைப்பு, ஆக்ஷன் படமும் கூட. கடந்த 1966ல் வெளியான ஒரு சிறுகதையை மையாமாக வைத்து எடுக்கப்பட்டது.


அப்போது அதை எழுதியவர் பிலிப்கே டிக். ஒரு சிறுகதை இவ்வளவு காலம் கடந்தும் மறுதிரை வடிவம் பெறுவதைப் பார்க்கும் போது அதன் செறிவும் தொழில் நுட்ப சாத்தியங்களை விவரிக்கும் தன்மையும் புரியும்.


இப்புதிய படைப்பில் செவ்வாய் கிரகத்துக்கு பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் அரசியல் நிறமும் படத்துக்குப் பூசப்பட்டுள்ளது.


இந்த உலகம் கீழைநாடுகள், மேலைநாடுகள் என்கிற பாகுபாட்டால் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு மேற்கும் கிழக்கும் ஒன்றை ஒன்று சாப்பிட நினைக்கின்றன. அதாவது ஒன்றின் மீது ஒன்று ஆதிக்கம் செய்யவும் ஆளுமை செலுத்தவும் எண்ணுகின்றன.


நியூ ஷாங்காயும் யூரோ அமெரிக்காவும் அரசியல் அதிகார சக்திக்காக சண்டை போடுகின்றன. இந்நிலையில் கடந்த காலத்தில் நடந்ததை காட்சிகளாக்குவதை விட எதிர்காலத்தில் நடப்பதை கற்பனை செய்வதும் காட்சிகளாக்குவதும் கடினம்.


காரணம், நடந்தது யாருக்கும் தெரியக் கூடும் நடப்பது யாருக்கும் தெரியாது இப்படி எதிர்காலத்தில் நடப்பது பற்றிய கற்பனைதான் “TOTAL RECALL “. அதாவது 2084ல் நடப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது.



அது 2084 ஆம் ஆண்டு, பூமி ஒரு பேரழிவை உருவாக்கிய போருக்குப்பின்பு இரண்டாகப் பிரிந்து நிற்கிறது. அதாவது இந்தப் பூமியும் மண்ணும் இரு அதிகார மையங்களால் இரு அதிகார சக்திகளால் பிளவுபட்டு நிற்கிறது.


பிரிட்டனின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பும் புதிய ஆசியா என்கிற அமைப்புமாக பிரிந்தவை சிக்குண்டு கிடைக்கின்றன. காரணம் எல்லாமே யார் பெரியவன். யாரை யார் ஆளுகைக்குட்படுத்துவது என்கிற அதிகார வெறிதான்.
இப்படிப்பட்ட நாடுகள் அரசியல் பின்னணியில் டக்ளாஸ் குவாய்ட் போன்ற தொழிற் சாலையில் வேலைபார்க்கும் தொழிலாளியையும் அமானுஷ்யங்களையும் கலந்து கதை செய்திருக்கிறார்கள்.



காலின் ஃபேரவல்தான் நாயகன், சாமான்ய மனிதராக வந்து சாகசமனிதராக மனதில் அமர்கிறார் மற்றும் ப்ரியான் க்ரான்ஸ்டன்,கேட் பெகின்செல், ஜெஸிகா பீல், பில் நைட்டி, ஜான் ஜோ போன்ற பெரிய தலைகளும் நடித்துள்ளனர்.


லென் வைன்மேன் இயக்கியுள்ள இப்படத்தின் கதையை செதுக்கியவர்கள் மார்க் பாம் பேக், ஜேம்ஸ் வாண்டாபிட்.


திரைக்கதை அமைக்கவே போதுமான கால அவகாசம் எடுத்துக்கொள்ளப்பட்டது. திரைக்கதை உருவான ஓராண்டுக்குப் பின்புதான் இயக்குநர் வைன்மேன் ஒப்பந்தமானார். பால் கேமரூன் தான் ஒளிப்பதிவு பொறுப்பேற்றார். கிறிஸ்டியன் வேக்னர் படத்தொகுப்பு செய்துள்ளார்.



ஏற்கனவே தான் நடித்த பாத்திரத்தில் நடிக்கும் இப்போதைய நடிகர் யார் என்பதை அறிய அர்னால்ட் ஸ்வாஸ்னேகர் ஆர்வமாக இருந்தார்.


பலரைத் தேடி தெரிவு செய்து இறுதிக்கட்ட சிறு பட்டியலிலும் வென்று தெரிவானவர்தான் காலின் பெரல். நாயகன் தெரிவானதும் படிப்படியாக மற்ற நட்சத்திரங்கள் தெரிவு செய்யப்பட்டனர்.



இப்படத்தின் பட்ஜெட் 200 மில்லியன் டொலர்கள். முதல் படப்பிடிப்பு 2011 மே 16ல் டொரண்ட்டோவில் தொடங்கப்பட்டு 2012 செப்டம்பர் 20 ஆம் திகதி முடிவடைந்துவிட்டது.


டொரண்டோவில் பல ஸ்டுடியோக்களில் படமானது. இப்படம் ரெட்கமெராவின் லேட்டஸ்ட் வரவு ரெட் எபிக் டிஜிட்டல் கமெராவால் படம் பிடிக்கப்பட்டுள்ளது. 113 நிமிடங்கள் ஓடும் இப்படத்தை உலகெங்கும் கொலம்பியா பிக்சர்ஸ் வெளியிடுகிறது. நம் தமிழ் பேசியும் படம் வெளியாகிறது. ஈரோடு வி எஸ் பி யில் ரிலீஸ்



7. கோகுலத்தில் கண்ணன் - ரிலையன்ஸ் குரூப்பின் அனிமேஷன் படம்.. குழந்தைகளுக்கானது.. ஈரோட்டில் ரிலீஸ் இல்லை



8. ஆசாமி -  ஆன்மீக படம். ராமநாராயணன் டைப் ப்டம் போல.. தெலுங்கு டப்பிங்க்கா இருக்க்லாம்.. ஈரோட்டில் ரிலீஸ் இல்லை


நன்றி - யாழ், சினிமா உலகம், சினி பிலிட்ஸ்,கூகுள்



 
டி வி யில்் இன்று



விரைவில் வர இருக்கும் ஜேம்ஸ் பாண்ட் பட ட்ரைலர்


 A
ஈரோடு நகர படங்கள் 1. அபிராமி  70 MM AC  DTS -மிரட்டல் 2. தேவி அபிராமி AC  - சகுனி 3. ராயல் - மனங்கொத்தி பறவை 4. வி எஸ் பி AC  DTS - TOTAL RECALL 5. ஆனூர் AC  DTS - நான் ஈ 6. ஸ்ரீ சண்டிகா - மிரட்டல் 7. ஸ்ரீ கிருஷ்ணா  DTS-VEERA ( TELUGU) 8. அன்ன பூரணி -மிரட்டல் 9. ஸ்ரீ லட்சுமி   DTS- நாடோடி மன்னன் 10. ஸ்டார் - BLOOD MARY 11. பாரதி - கொஞ்சும் இளமை 12. அண்ணா  DTS - சுழல் 13. ஸ்ரீநிவாசா   DTS -JISM 2 ( HINDI) 14. சங்கீதா DTS- திருடி திருடன் 15. மாணிக்கம்  - பாட்ஷா டிஸ்கி - மதுபானக்கடை - சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/
08/blog-post_5452.html