Showing posts with label Action | Adventure. Show all posts
Showing posts with label Action | Adventure. Show all posts

Friday, August 03, 2012

TOTAL RECALL - சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://cdn3.gossipcenter.com/sites/default/files/imagecache/story_header/photos/total-recall-poster-motion.jpg

அர்னால்டு ஸ்வார்செனேகர் நடிச்சு 1990 ல் வந்த டோட்டல் ரீகால் படம் செம ஓட்டம் ஓடுச்சு.. அதே படம், அதே கதை.. டெக்னீஷியன் ,ஆக்டர்ஸ் வேற, டெக்னாலஜி வேற .. மற்ற படி கதை, திரைக்கதை எல்லாம் ஒண்ணுதான்.. கிட்டத்தட்ட பில்லா ரஜினி, பில்லா அஜித் மாதிரி.. 


கதை நடப்பது 2084... காலகட்டம்.. ஹீரோவுக்கு நம்ம வெற்றி விழா கமல் மாதிரி தான் யார்? என்ன? எல்லாம் மறந்துடுது.. தனது நினைவுகள், அடையாளங்கள் எல்லாம் மறந்து போன ஒருத்தன் என்ன பண்றான்? என்பதை 2 மணி நேரம் நான் ஸ்டாப் ஆக்‌ஷன் மூவியா சயின்ஸ் ஃபிக்‌ஷன்ல கொடுத்திருக்காங்க.. 

 1966 ஆம் ஆண்டு எழுதப்பட்ட சிறுகதையின் திரைக்கதை வடிவம் இது. WE CAN REMEMBER IT  FOR YOU WHOLE SALE  இதான் கதையோட டைட்டில்.. எழுதுனவர் நம்ம ஊர் அமரர் சுஜாதா மாதிரி.. பேரு பிலிப் கே டிக் 



ஓப்பனிங்க் ஷாட்ல ஹீரோ அவர் சம்சாரம் கூட குடித்தனம் நடத்தறார்.. சென்சாரின் வரை முறைக்கு உட்பட்டு.. அன்னைக்கு நைட் அவருக்கு ஒரு கனவு வருது.. ஆனா சரியா புரியலை.. அல்ஜீப்ரா மாதிரி குழப்புது..  சம்சாரம் கிட்டே டிஸ்கஸ் பண்றார்..  பொதுவாவே பொண்ணுங்க நம்மை குழப்புவாங்க..சம்சாரம்னா கேட்கவே வேணாம் , அது இன்னும் குழப்புது.. 


அட்வான்ஸ்டு காலகட்டத்துல நடக்கறதால்  எல்லாம் அட்வான்ஸ்டு டெக்னாலஜி இல்லையா? அங்கே ரிகால் அப்டினு ஒரு செக்‌ஷன் இருக்கு.. அங்கே போனா தன் பழைய நினைவுகள், கனவுகள் பற்றி ஏதாவது தெரிய வரலாம்னு ஹீரோ அங்கே போறார்.. 


 ஒரு சேர்.. அதுல அவரை உக்கார வெச்சு ஏன்னென்னமோ டெஸ்ட் பண்ணிட்டு இருக்கறப்போ போலீஸ் வந்துடுது..  10 பேர்.. எல்லாரையும் ஹீரோ   குருவியை சுடற மாதிரி சுடறார்.. அப்புறம் எஸ் ஆகி பேக் டூ பெவிலியன் தன் வீட்டுக்கே வந்துடறார். அங்கே டி வி ல நியூஸ் ஓடுது.. 25 போலீஸ் தீவிரவாதிகளால் சுடப்பட்டாங்க அப்டினு நியூஸ் ஓடுவதை பார்த்து ஹீரோவுக்கு அதிர்ச்சி.. 

 



 சம்சாரம் கிட்டே நடந்ததை சொல்லி தான் தான் அந்த கொலைகளை செய்தவர்ன்னு பதட்டமா சொல்றார்.. இந்த சம்சாரங்க பொதுவாவே புருஷங்க சொல்றத நம்ப மாட்டாங்க.. இதுல உள்ளூர் சம்சாரம், ஃபாரீன் சம்சாரம் எதும் விதி விலக்கு இல்லை.. 


 நீங்க ஏதோ குழப்பத்துல இருக்கீங்க.. பேசாம தூங்குங்க அப்படினு ஹீரோவை அடக்கிடறா.. அப்புறம் ஹீரோவை ஆசுவாசப்படுத்த பின்னால இருந்து வந்து கட்டிப்பிடிக்கறா.. நம்ம சம்சாரம் தானே.. அப்டினு அவனும் அசால்ட்டா விட்டுடறான்.. திடீர்னு அவ அவனை அப்படியே இறுக்கி கொலை பண்ண முயற்சி பண்றா. 


 பயங்கர ஃபைட்.. புருஷன் , பொண்டாட்டி 2 பேருக்கும்.. ஹீரோ ஒரு வழியா ஜெயிச்சு அவளை துப்பாக்கி முனைல நிறுத்தி மிரட்டி “ என்ன நடக்குது? ஏது? அப்டினு கேட்க  அப்போதான் அவ உண்மையை சொல்றா.. 


 ஆக்சுவலி அவ அவனோட சம்சாரமே கிடையாது.. போலீஸ்.. இத்தனை  வருஷமா  நடிச்சுட்டு இருந்திருக்கா.. என்ன ஏதுன்னு டீட்டெயிலா விசாரிக்கறதுக்குள்ளே போலீஸ் வந்துடுது.. வழக்கமா க்ளைமாக்ஸ்ல தானே வருவாங்க.. ஆனா பாருங்க இந்தப்படத்துல  இப்பவே வந்துட்டாங்க.. 



ஹீரோ ஓடறான்.. ஆல் போலீஸ் சேசிங்க்..ஹீரோவோட சம்சாரம் வில்லின்னு தெரிஞ்சிருச்சு.. இனி சுருக்கமா வில்லின்னே சொல்லலாம்.. வில்லி என்ன பண்றா, போலீஸ் ஹையர் ஆஃபீஸருக்கு ஃபோன் பண்ணி ஹீரோ கைல இருக்கற செல் ஃபோனை ஆக்டிவேட் பண்ணீ விடு, அப்போதான் அவன் இருக்கும் இடத்தை ட்ரேஸ் அவுட் பண்ண முடியும்கறா.. 


 உள்ளங்கைக்குள்ளே அது வெச்சு தைக்கப்பட்டிருக்கு.. ஹீரோ கையை கிழிச்சு அதை தூக்கிப்போட்டுடறார்.. போலீஸ் தொடர்ந்து துரத்துது..


 அப்போ கரெக்ட்டா இன்னொரு ஃபிகர் வந்து ஹீரோவை காப்பாத்துது.. இவ தான் ஹீரோவோட முத சம்சாரம் கம் உண்மையான சம்சாரம் பிரபுதேவாவுக்கு ரம்லத் மாதிரி.. 


 அப்புறம் என்ன 2 பேரும் ஓடிட்டே இருக்காங்க.. அவங்க துரத்திட்டே இருக்காங்க... எப்படி ஜெயிக்கறாங்க.. ஹீரோ யார்? என்ன? என்பதே மிச்ச சொச்ச கதை,.. 


 கதைச்சுருக்கத்தை எல்லாருக்கும் புரியற மாதிரி ஒரு பேரால சொல்லனும்னா  ராஜபக்சே மாதிரி சர்வாதிகார ஆட்சி நடக்குது,, ஈழ மக்களை வெளீயேற்றின மாதிரி அங்கே இருக்கும் மக்களை வெளீயேற்றி ரோபோட்ஸை குடி ஏற்ற திட்டம் போடறாங்க.. அதை ஹீரோ முறியடிக்கிறார்,.,. இதான் ஒன் லைன்..

அதாவது மூன்றாம் உலகப்போருக்குப்பின்  பூமி 2 சூப்பர் பவராக பிரிக்கப்படுது. FBR (Federation of the British Republic) and The Colony (Formerly Australia.



டக்ளாஸ் குவாய்ட் போன்ற தொழிற் சாலையில் வேலைபார்க்கும் தொழிலாளியா ஹீரோ  காலின் பெரல்.. அர்னால்டு இடத்துல இவரை நினைச்சே பார்க்க முடியல.. ஏன்னா அவரு ஒரு கதவையே உடைச்சாக்கூட நம்பற மாதிரி ராட்சச எக்சசைஸ் உடம்பு அவருக்கு இருந்துச்சு.. இவர் நார்மலாத்தான் இருக்கார்.. இருந்தாலும் ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தறார்.. 


 மனுஷனுக்கு நித்தி மாதிரி எங்கேயோ மச்சம் இருக்கு போல 2 ஹீரோயின்ஸ் 2 பேர் கூட கிஸ் சீன்ஸ் உண்டு..  லிப் டூ லிப்.. தான்..கதைப்படி 2 வதா வந்து ஜோடி சேர்ற பொண்ணு ஜஸ்ட் ஃபிரண்ட் மாதிரி தான் , ஆனா 2 பேருக்கும் மேட்டர் நடந்துடுது. அப்போ நம்ம பாஷில சம்சாரம் தானே?


சம்சாரமா வர்ற ஃபிகரு கேட் பெகின்செல் (gate Beckinsale) செம ஆக்‌ஷன்.. படம் பூரா ஓடிட்டே இருக்கார்.. வில் மாதிரி உடம்பு ( வளைச்சுப்பார்க்காமயே அப்ராக்சி மேட் அவதானிப்பு ).. சின்ன உதடுகள்,.,. ஆக்ரோஷமா ஃபைட் போடும்போது பயமா இருக்கு.. 

 2 வதா வந்து சேர்ந்துக்கற  ஃபிகர் அவரை விட அழகுதான்.. எப்பவும் 2 வதா வர்ற ஜோடி முதல் ஜோடியை விட செமயா தான் இருக்கும்.. இது இயற்கையின்  நியதி.. 


ப்ரியான் க்ரான்ஸ்டன், ஜெஸிகா பீல் பில் நைட்டி ஜான் ஜோ போன்ற பெரிய தலைகளும் நடிச்சிருக்காங்க. 


http://d3ny4pswk2x1ig.cloudfront.net/e7c86121810e18d7183039f65fa26618e740781e3e2fb2d95335b47b.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. ஆர்ட் டைரக்சன் அபாரம். பிரம்மாண்டம்,, 2084இல் என்ன வெல்லாம் மாற்றம் நடந்திருக்கும், சயின்ஸ் எப்படி எல்லாம் முன்னேறி இருக்கும்னு கற்பனை பண்ணி அதுக்கு உயிர் கொடுத்திருக்கும் லாவகம் கலக்கல். ஏதோ சொர்க்க பூமி மாதிரி இருக்கு..  பஸ், ரயில் மாதிரி விமானம் பக்கத்துலயே போகுது.. அசத்தல் கிராஃபிக்ஸ்.. 



2. ஒரு சீன்ல ஹீரோ ஒரு பங்களாவுல ஒளீஞ்சிருக்கார். அப்போ போலீஸ் ஏதோ ஐ பேடு மாதிரி ஒரு மேட்டரை  மெஷின் கன் மூலமா ஷூட் பண்ணி அவர் இருக்கும் ஏரியாவில் ப்ளேஸ் பண்றாங்க..  அப்போ நடக்கும் ஆச்சரியங்கள் அபாரம்..  ஏதோ தீபாவளி கொண்டாடுன மாதிரி காட்சிகள்.. செம .. 



3. ஹீரோ கைக்குள்ளே ஃபோன் வைத்து ஆபரேஷன் பண்ணி இருப்பதும் அதை ஆக்டிவேட் பண்ணுனதும் ஹீரோ அதை அகற்றுவதும் புதுசு.. தமிழ் சினிமாவில் சுட்டுடுவாங்க.. இந்த சீனை..  பார்க்க சுவராஸ்யம்..


4.  2 வதா வந்து சேரும் ஹீரோயின் மேல ஹீரோவுக்கு சந்தேகம் வந்ததும் 2 பேருக்கும் உள்ளங்கைல ஒரே மாதிரி தழும்பு இருப்பதை காட்டுவதும் பின் க்ளைமாக்சில் வில்லி ஹீரோயின் மாதிரி உருமாறி வரும்போது அந்த தழும்பு இல்லாமல் போனதால் அடையாளம் அறீவதும்  இண்ட்ரஸ்ட்டிங்க்.. ( நம்ம ஊரு வாசம் அடிக்குது)


5. ஒரு சீன்ல ஹீரோ குழப்பம் ஆகி முன்னாள் மனைவி வெளியே அவனுக்காக அழுவதையும், இந்நாள் தோழி அதை நம்பாதே, உன்னை குழப்பப்பார்க்கறாங்க என அவளும் அழ எது உணமை அழுகை? எது நடிப்பு என புரியாமல் ஹீரோ விழிப்பதும், பின் கண்ணீர் வந்தவள் தான் உண்மையானவள் என உணர்வதும் அக்மார்க் தமிழ் செண்ட்டிமெண்ட் என்றாலும் ரசிக்க முடிகிறது



http://www.trhits.com/wp-content/uploads/2012/07/Total-Recall-Cast-Covers-Maxim-July-August-2012-1.jpg

இயக்குநரிடம் ஒரே ஒரு கேள்வி



 க்ளைமாக்ஸ்ல வில்லி ஹீரோ முன்னால நிக்கறார்,, ஹீரோ மயக்கத்துல. ஹீரோவை கொல்றதா இருந்தா அப்பவே போட்டிருக்கனும்.. அதை விட்டுட்டு அவன் கண் விழிக்கும் வரை காத்திருந்து உன்னை போடப்போறேன்னு வீர வசனம் பேசி ஹீரோவுக்கு அவகாசம் கொடுத்து ஏன் வீணா சாகனும்.. ஹீரோ மயக்கமா இருந்தப்பவே போட்டுத்தள்ளி இருக்கலாமே?



 மனம் கவர்ந்த வசனங்கள்



1. ஆசைப்பட்ட எல்லாமே எல்லாருக்கும் கிடைச்சடறது இல்லை, ஆனா எனக்கு கிடைச்சிருக்கு ..



2. நாம ஒவ்வொரு நாளூம் ஒரே வேலையை ஏன்? எதுக்கு?ன்னு கேள்வியே கேட்காம செஞ்சுட்டு இருக்கோம்



3. மார்ஸ்க்கே மன்னன் ஆகனும்னு நினைச்சான்.. இப்போ மென்ட்டல் ஆகி கிடக்கான்.. ரிகால் தான்   ரீசன்.. 



4. நல்ல மனைவியா நான் இத்தனை நாளா நடிச்சேன்.. 



5. அப்போ நான் நான் இல்லைன்னா நான் யாரு?


6. அவனை எங்கே பார்த்தாலும் சுட்டுடுங்க.. 

 மேடம், ஆனா மேலிடம் அவனை உயிரோட பிடிக்கனும்னு உத்தரவு போட்டிருக்கே? 


 களத்துல இறங்கி வேலை செய்யறவங்களுக்குத்தான் எல்லா வலியும் தெரியும்..



7. துரத்திட்டு வர்றது என் ஒயிஃப்


 வாட்? யுவர் ஒயிஃப்?


அப்டித்தான் இத்தனை நாளா நினைச்சுட்டு இருந்தேன்



8.  புரட்சியாளர்கள் போராட்டக்க்காரர்கள் அல்ல, உரிமைக்காகப்போராடுபவர்கள்


9. உன்னை  விட உன்னைப்பற்றி அதிகம் தெரிஞ்ச வன் நான், நான் சொல்றதை நீ கேட்கனும்

 என்னென்னெமோ  சொல்லி குழப்பறீங்க



10. சில உண்மைகளை ஏத்துக்கவே முடியாது


11. இங்கே எல்லாருக்கும் என்னை விட நல்லாவே என்னைபற்றி தெரிஞ்சிருக்கு. 


12. எனக்கு என் நினைவுகள் வேணும்

 கடந்த காலம் எப்பவும் நம்ம மனசை குழப்பும்.. மனசு நிகழ்காலத்துல வாழவே ஆசைப்படும்.. 


13.  ஒரு தலை சிறந்த உளவாளி தான் யார்னு தெரியாமயே எனக்கு உதவி இருக்கான்.. 


14. வாக்குமூலம் வாங்கறதுல நான் எவ்லவ் திறமையான ஆள்னு இப்போ நீ தெரிஞ்சுக்குவே பாரு .. 


http://thefilmnest.com/wp-content/uploads/2012/07/total_recall_.gif




சி. பி கமெண்ட் - ஆக்‌ஷன் பிரியர்கள் பார்க்கலாம்.. பெண்களும் பார்க்கும் விதமாகத்தான் படம் எடுத்திருக்காங்க.. 


 ஈரோடு வி எஸ் பி யில் ப்டம்  பார்த்தேன்


 எதிர்பார்க்கப்படும் டைம்ஸ் ஆஃப் இண்டியா ரேங்க் - 3 1/2 -5


 எதிர்பார்க்கப்படும் டெக்கான் கிரானிக்கல் ரேங்க் - 7 /10

இப்படத்தின் பட்ஜெட் அதாவது செலவுத்திட்டம் 200 மில்லியன் டாலர்கள் முதல் படப்பிடிப்பு 2011 மே 16ல் டொரண்ட்டோவில் தொடங்கப்பட்டு 2012 செப்டம்பர் 20 ஆம் தேதி முடிவடைந்துவிட்டது. போரண்டோவில் பல ஸ்டுடியோக்களில் படமானது. இப்படம் ரெட்கேமராவின் லேட்டஸ்ட் வரவு ரெட் எபிக் டிஜிட்டல் கேமராவால் படம் பிடிக்கப்பட்டுள்ளது.



113 நிமிடங்கள் ஓடும் இப்படத்தை உலகெங்கும் கொலம்பியா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
 டிஸ்கி - 1 -

JISM 2 - பாலிவுட் சினிமா விமர்சனம் 34 +-http://www.adrasaka.com/2012/08/jism-2-34.html

 

 

 

மதுபானக்கடை - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2012/08/blog-post_5452.html


மிரட்டல் - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2012/08/blog-post_6815.html


இந்தப்படத்தில்  3 *  22 /7   அதாவது 3 பை உள்ள பெண்ணாக வரும் காட்சி கதைப்படி 2084ல் நடக்குது, அதை கி ரா தனது நாட்டுப்புறக்கதைல பல வருடங்களுக்கு முன்னமே சொல்லிட்டாரு.. 





தொழில் நுட்பக்கலைஞர்கள் 


Directed by Len Wiseman
Produced by Neal H. Moritz
Toby Jaffe
Screenplay by Kurt Wimmer
Mark Bomback
Story by Kurt Wimmer
Based on "We Can Remember It for You Wholesale" by
Philip K. Dick
Starring Colin Farrell
Kate Beckinsale

Jessica Biel

Bryan Cranston

John Cho

Bill Nighy
Music by Harry Gregson-Williams
Cinematography Paul Cameron
Editing by Christian Wagner
Studio Original Film
Distributed by Columbia Pictures
Release date(s)
  • August 3, 2012
Running time 118 minutes[1]
Country United States
Language English
Budget $125 million[2]