Saturday, July 28, 2012

பொல்லாங்கு - நடுநிசி நாய்கள் 2 - சினிமா விமர்சனம்

http://www.nakkheeran.in/AllImages/Gallerys/22141_1.jpg

தமிழ் சினிமாவில் 4 வகையான படங்கள் வருவதுண்டு. 

1. அனைவராலும்  சிலாகித்து பாராட்டு பெறும் படங்கள் 

2. மாமூல் மசாலா குப்பைகள்

 3. விருதை குறி வைத்து எடுக்கப்படும் படங்கள் 

4. வக்ர சிந்தனையை தூண்டும் வல்கரான படங்கள்..

 நடு நிசி நாய்கள் படத்துக்குப்பின் நான் பார்த்த மிக மோசமான , வன்முறை,வல்கரின் உச்சமான படமாக இதை சொல்லலாம்.. மேக்கிங்க் வைஸ் பல இடங்களில் சபாஷ் வாங்கினாலும் அஸ்திவாரம் மகா மட்டம்.. இந்த மாதிரி மக்கள் மனதை பாதிக்கும், சமுதாயத்துக்கு எந்த வித நேர் மறை விளைவுகளை தராமல் வக்கிர எண்ணங்களை சமூக விரோதிகளிடம் வளர்க்கும் படங்களை தடை செய்ய வேண்டும் என்ற கண்டனத்துடன் விமர்சனத்துக்குள்ளே போலாம்.. 


கார் ஆகட்டும், பைக் ஆகட்டும் முதல்ல ஃபர்ஸ்ட் கீர், அப்புறம் செகண்ட் கீர் லாஸ்ட்டா டாப் கீர். இப்படித்தான் ஸ்பீடு எடுக்கனும்.. ஆனா  படத்தோட ஓப்பனிங்கே டாப் கீர்ல ஸ்டார்ட் ஆகுது.. ஒரு ஹனிமூன் கப்பிள் நடுக்காட்ல கார்ல போறாங்க.. அதை 4 பேர் கொண்ட கும்பல் துரத்துது..  இதை சுவராஸ்யமா 7 ரீல் கொண்டு போனதே பெரிய விஷயம்.. அவங்க எதுக்காக அவங்களை துரத்தறாங்க அப்டிங்கறதை சாவகசமா இடைவேளைக்குப்பிறகு  ஃபிளாஷ்பேக்ல சொல்றாங்க. 


 முறைப்படி இந்த கதையை ஃபிளாஷ்பேக் உத்தியை பயன் படுத்தாம நேரடியா ஏன் சொல்லலைங்கறதுக்கும், ஆரம்பத்துல ஹீரோயின் கார் ஓட்ட ஹீரோ ஏன் பின் சீட்ல உக்காந்திருக்கார் என்பதற்கும் அட்டகாசமான சஸ்பென்ஸ் ட்விஸ்ட் க்ளைமாக்ஸ்ல இருக்கு.. சொன்னா சுவராஸ்யம் போயிடும்./.

வில்லன் குரூப் ல மெயின் வில்லன் சாடிஸ்ட்.. உலகத்துல சாடிஸ ரேப்க்கு தனி மார்க்கெட் இருக்கறதால  பெண்ணை சித்ரவதை பண்ணி ரேப் பண்ணி அதை வீடியோ எடுத்து நெட்ல விட பிளான் பண்றாங்க.. 3 டிக்கெட்ங்களை கூட்டிட்டு வந்து ஃபாரஸ்ட்ல பாழடைஞ்ச பங்களாவுல கில்மா பண்றப்போ ஹீரோயின்  அதை பார்த்துடறா.. அதை வீடியோ எடுத்துடறா.. அதை கைப்பற்றத்தான் சேசிங்.. படம் பூரா ஓட்டம் ஓட்டம் ஓட்டம்தான்.. படம் முடிஞ்சதும் ஆடியன்சும் ( மொத்தமே 19 பேர்தான்)  விட்டா போதும்னு வீட்டுக்கு ஓட்டம் பிடிக்கறாங்க


http://i.ytimg.com/vi/LwNRQ2Lwfzw/0.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஷூட்டிங்க் ஸ்பாட், லொக்கேஷன்ஸ், ஒளிப்பதிவு அட்டகாசம்..

2. ஹீரோயின்  நடிப்பு செம.. பல படங்களில் நடித்து அனுபவம் உள்ளவர் போல் நடிச்சிருக்கார்..அங்கங்கே ஓவர் ஆக்டிங்கும் உண்டு

3. ஹீரோயின் பட ஓப்பனிங்க்ல இருந்து இடைவேளை வரை  காரை டிரைவ் பண்றார்.. ஆனா ஹீரோ தேமேன்னு பின்னால இருக்கார்./  ஆனா பின் பாதி ஃபிளாஷ்பேக் சீன்ல ஹீரோ தான் கார் ஓட்டறார்.. இதுக்கான காரணத்தை க்ளைமாக்ஸ் சஸ்பென்ஸ் சீனா வெச்சது கலக்கல் .. இயக்குநர் படத்தில் பாராட்டத்தக்க ஒரே  விஷயம் இந்த ட்விஸ்ட் தான்.. அதை சொன்னா சுவராஸ்யம் போயிடும்..  


http://i869.photobucket.com/albums/ab253/tamiltheatre/pollangu-5.jpg


மனம் கவர்ந்த ரொமான்ஸ் வசனங்கள் ( ஹனிமூன் ட்ரிப்)

1. ஏய்.. ரொம்ப வளைக்காதே..

எதை?

 காரை

2.ஹனிமூனை யார் கண்டு பிடிச்சாங்க ? தெரியுமா? கேன் யூ கெஸ்?

ம்ஹும், நீங்களே சொல்லிடுங்க..

கூட்டுக்குடும்பத்துல பிறந்த ஒருத்தன் தன் பொண்டாட்டி கூட ஜாலியா இருக்க முடியாதவன் தனியா எங்காவது அவளை தள்ளிட்டு போக ஐடியா கண்டு பிடிச்சு இருக்கனும்

 அப்போ மாயாண்டி குடும்பத்துல  பிறந்த முனியாண்டி?!!

3.  ஏய்! வலிக்குதா?


வலி இல்லாம வழி கிடைக்காது



4. டியர்.. தாங்க்ஸ்..

எதுக்கு?

என்னை சந்தோஷப்படுத்துனதுக்கு

ஐ நோ (I KNOW)

எப்படி?

ம் ம்  என்னால உணர முடிஞ்சது..  உயிர்த்துடிப்பு சொல்லுச்சு..



ம், ஆனா வலிக்குது



5.  குளிருது... உனக்கு குளிரலை?

 போர்வைக்கு எப்படி குளிரும்?



 புரியலையே..

மக்கு புருஷா.. நைட் டைம்ல நான் தானே உன் போர்வை.. எனக்கு எப்படி குளிரும்?



6. கடல்ல ஒரு வகை மீன்கள் இருக்கு.. லாங்க் ஷாட்ல அவை நீர்  மட்டத்தை விட்டு வெளில வர்றப்போ நெருப்புக்குழம்பு பாய்ச்சல் போல் தெரியும்.. கொள்ளி வாய் பிசாசுன்னு  சிலர் நினைப்பாங்க.. அதே மாதிரி அடர்ந்த கானகத்தில் இப்படி அருவி சத்தம் போலியா கேட்கும்.. அதுக்கு கோஸ்ட் மாடஸ்டி ஆஃப் வாட்டர்னு பேரு.,.

வில்லனின் வசனங்கள்

1. எல்லா பெரிய ஆளுங்களும் ( பெரிய மனுஷங்க) தொடர்ந்து பணக்காரங்களா இருக்க அவங்க ஏதாவது தப்பு பண்ணிட்டே இருக்கறது தான் காரணம்

2. அது போக 18 இடங்களில் கெட்ட வார்த்தைகள் 



http://4onlinetv.com/wp-content/uploads/mvbthumbs/img_359_pollangu-tamil-theo-trailer-pro-mounam-ravi_xvid.jpg


இயக்குநரிடம்  பல கோபாவேச கேள்விகள்


1. இந்தப்படத்தின் மூலம் நீங்க சமுதாயத்துக்கு சொல்ல வருவது என்ன? சமூக விரோதிகளுக்கு ஐடியா குடுக்கறீங்களா? ஆட்டோ சங்கர் மாதிரி இதை பார்த்து அது போல் செய்யலாம்னு முயற்சி செஞ்சு யாராவது பாதிக்கப்பட்டா நீங்க அதுக்கு பொறுப்பு ஏத்துக்குவீங்களா?

2. ஹாலிவுட் படத்தை காப்பி அடிக்கறது தப்பில்லை.. நல்ல விஷயங்களை காப்பி அடிக்காம இப்படிப்பட்ட வல்கர் படம் தான் உங்க கண்ணுக்கு சிக்குச்சா?

3. படத்தோட டைட்டில்ல எழுத்து , இயக்கம்னு உங்க பேரை ஜம்பமா போட்டுக்கறீங்க.. இதன் ஒரிஜினல் மூவிக்கான க்ரெடிட்டை ஏன் கொடுக்கலை?

4. ஏதோ த்ரில்லர் படம்னு தெரியாம ஒருத்தன் தன் ஃபேமிலியோட வந்து தியேட்டர்ல மாட்டிக்கிட்டா அவன் அடையும் மன உளைச்சல்களுக்கு உங்க நஷ்ட ஈடு என்ன?

5. ஹீரோ செலக்‌ஷன் மகா மட்டம்.. சரியான தத்தியா இருக்கார்.. அவர் தான் ஃபைனான்ஸ் பண்ணாரா?

6. ஹீரோயின் நியூலி மேரீடு கேர்ள்க்கு பொருத்தமே இல்லை.. 38 வயசு ஆண்ட்டி மாதிரி இருக்கு..

7 சென்சார் ஆஃபீசர்ஸ்க்கு எவ்ளவ் லஞ்சம் கொடுத்தீங்க?


http://www.tamilnow.com/movies/gallery/pollangu/pollangu-9231.jpg


லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள்

1. படத்தோட ஓப்பனிங்க் சேஸ் சீன்ல ஹீரோயின் கார்ல வேகமா போறா.. வில்லன் குரூப் ஜீப்ல துரத்தறாங்க.. அப்போ ஹீரோயின்  டக்னு மெயின் ரோட்டை விட்டு விலகி லெஃப்ட்ல கட் பண்ணி மண் ரோட்டில் கொஞ்ச தூரம் போய் வண்டியை நிறுத்தி வந்த பாதையின் மண் தாரையை அழிச்சுட்டு கிளம்பறா.. அதுக்கு எல்லாம் நேரம் இருக்குமா? என் ஐடியா என்னன்னா ஆளில்லா அநாமத்து காட்டில்  அப்படி சப்வே மண் ரோட்டில் போய் மாட்டிக்கறதுக்கு ஒரு பெண் என்ன யோசிப்பான்னா வில்லன்க அந்த இடத்தை கிராஸ் பண்ணதும் வந்த வழியிலேயே காரை திருப்பி போனா எஸ் ஆக வாய்ப்பு அதிகம்.. ஏன்னா 10 கிமீ வில்லன்க போய் ஆள் எஸ்னு உணரும்போது ஹீரோயின் ஆப்போசிட் டைரக்‌ஷன்ல 10 கிமீ போய் இருப்பா.. டோட்டலா 20 கிமீ தள்ளி இருப்பா.. சேஃப்.. இந்த ஐடியா தான் செலக்ட் பண்ணுவாங்க.. மேலும் மேலும் சிக்கலை வரவழைக்கும் அந்த சப் வே ஐடியா வை யாரும் அதும் ஒரு பொண்ணு செலக்ட் பண்ண மாட்டா..

2. ஒரு  சீன்ல வில்லனை மலைப்பாம்பு வளைக்குது.. அப்போ அவன் கைல கன் இருக்கு.. சுட்டிருக்கலாம்.. பயத்துல அல்லது உயிர்ப்பாதுகாப்புக்காகவாவது சுட்டிருக்கனும்./. ஆனா அவன் சுடலை ஏன்? வேற ஒரு வில்லன் வந்து அவன் கைல இருக்கற கன்னால சுடறான்.. அது டேஞ்சர் இல்லையா? பாம்பு மேல குண்டு பாய்வதை விட ஆள் மேல பாய்வதற்குத்தான் சான்ஸ் அதிகம்

3.  இன்னொரு காட்சில மலைப்பாம்பு ஒருத்தனை வளைக்குது.. அப்போ 3 பேரு வந்து என்னமோ ராட்டைல இருந்து நூல் உருவற மாதிரி அவனை ஈசியா விடுவிக்கறாங்க.. அப்புறம் என்னமோ செல்லப்பிராணியை வழி அனுப்பற மாதிரி காட்டுக்குள்ளே அதை விட்டுடறாங்க.. காட்டிலாகா அதிகாரியிடம் இது பற்றி பேசினேன்.. மலைப்பாம்பின் பிடி இறுகி இருக்குமாம்.. அல்ப சொல்பமா  அப்படி எல்லாம் விடுவிக்க முடியாதாம்.. உடும்புப்பிடிக்கு அடுத்து மலைப்பாம்பின் பிடிதான் ஃபேமஸாம்

4.   புரட்சித்தலைவியின் தஞ்சாவூர் பொம்மைஓ பி எஸ், சோனியாவின்  கை பொம்மை மன்மோகன் சிங்கை  எல்லாம் தோற்கடிக்கும் வகையில் அந்த கணவன் கேரக்டர்,, மகா மகா சோப்ளாங்கி..  கேரக்ட்ரைசேஷன் ஒர்ஸ்ட்

5. கதைப்படி அவங்க ஹனிமூன் கப்பிள் தான்.. ஆனா வில்லன் அவங்க கிட்டே “ உங்க கழுத்துல தாலி இல்லை.. தள்ளிட்டு வந்துட்டீங்களா?” அப்டினு கேவலமா கேட்கறப்போ எந்த ரெஸ்பாண்சும் இல்லையே, ஏன்? தன்னிலை விளக்கம் கொடுக்க வேணாமா?

6. டவர் இல்லாத காட்டுப்பகுதி.. யாருக்கும் செல் ஃபோன் டவரே கிடைக்கலை.. ஆனா வில்லன்க தேடல் வேட்டையை நடத்தும்போது 4 வெவ்வேறு திசைகளில் போய் மறுபடி கரெக்டா வேற ஒரு இடத்துல ஒண்ணு கூடுவது எப்படி?இந்த இடத்துல மீட் பண்ணலாம்னு அவங்க பேசிக்கவும் இல்லை..

7. ஹீரோயின் அடிபட்டு மயக்க நிலைல இருக்கு.. இந்த லூஸு வில்லன்க பாட்டுக்கு கேனத்தனமா விசாரனை பண்றதும், தேளை அவங்க மேல விடறதும் ஓவர்.. தேளை ஒருத்தன் அப்பப்ப தூண்டி விடறான்.. அவன் என்ன ஜூவாலஜி ஸ்பெஷலிஸ்ட்டா? பொட்டுன்னு அவனைத்தான் மொதல்ல போடும்..

8. ஹீரோயின் போலீஸ் டிபார்ட்மெண்ட்டோ, தீவிரவாதியோ கிடையாது.. சராசரி பொண்ணுக்கான வலி தாங்கு திறன் தான் அவருக்கும் இருக்கும்.. ஆளில்லா காட்டில் கை விரல் நகங்கள் 10, பற்கள் எல்லாம் கட்டிங்க் ப்ளையர் எல்லாம் வெசு பிடுங்கியும் அவர் பிடிவாதமா அந்த கேமராவை எங்கே ஒளிச்சு வெச்சேன்னு சொல்ல மாடேன்னு அடம் பிடிப்பது செயற்கை.. அவ்ளவ் அடம் பிடிச்சு என்ன யூஸ்?

9. ஏதோ ஒரு காட்டுக்குள்ள இருட்டுல இவர் பாட்டுக்கு  மண்ணுக்குள்ளே கேமராவை ஒளிச்சு வைக்கறார்.. செல் ஃபோன் டவர் இல்லை.. யாருக்கும் மெசேஜ் அனுப்பும் வசதியும் இல்லை.. அதனால என்ன யூஸ்? இவர் செத்துட்டா அந்த ரகசியத்தை யார் எடுக்கப்போறாங்க?

10. நடுக்காட்டில் நள்ளிரவில் எழும் மணப்பெண் ஒரு மினிமினி பட்டர்ஃபிளை பார்த்து வீடியோ எடுப்பது ஓக்கே.. அது பின்னாலயே 2 கிமீ தூரம் போய்க்கிட்டே இருப்பது ரொம்ப ஓவர்.. அது என்ன பிட்டுப்படமா? பட்டர் ஃபிளை தானே.. 2 நிமிஷம் எடுத்தாலும் 2 மணி நேரம் எடுத்தாலும் 1 தானே..?  




http://haihoi.com/Channels/cine_gallery/Pollangu-Movie-Wallpapers-11_S_152.jpg


சென்சார் ஆஃபீசரிடம் சில கேள்விகள்

1.  லஞ்சம் வாங்கிட்டா எவ்ளவ் குப்பை படத்தையும் ரிலீஸ் பண்ணிடலாமா? இந்தப்படத்துக்கு எப்படி சென்சார் சர்ட்டிஃபிகேட் கிடைச்சதுன்னு நீதி விசாரனை எல்லாம் வரவா போகுதுன்னு  அலட்சியமா?

2.  ஒரு பெண்ணை ரேப் பண்ற மாதிரி சீன் காட்ட சிம்பாலிக் ஷாட் போதாதா? அவ்ளவ் டீட்டெயிலா காட்டி இருக்காங்க.. அதை எப்படி அலோ பண்ணீங்க?

3. ஹீரோயின் நகங்கள் பிடுங்கப்படும் காட்சி, பல்லை கட்டிங்க் ப்ளையர் ( கொரடு) வெச்சு எடுக்கும் காட்சி எல்லாம் ஓவரோ ஓவர்.. இதுவரை எந்த தமிழ் சினிமாவுலயும் வர்லை.. என்ன தைரியத்துல இதை எல்லாம் அலோ பண்ணீங்க?

4. ஹீரோயின் மயக்கம் ஆகிடறா.. அவளை எழுப்ப தண்ணி தெளிக்கறதுக்குப்பதிலா வில்லன் ஹீரோயின் முகத்துல.. .. மகா மட்டமான வல்கரான சீன் அது.. உவ்வே,, இதை எப்படி ஓக்கே சொன்னீங்க?

5. பிணத்துடன் உறவு கொள்ளும் வில்லன் மூவ்மெண்ட் காட்டுனது ஓவர்னா ஒருத்தன் அந்த பிணத்தின் முகத்து தோலை அப்படியே  உரிச்சு எடுக்கறது எல்லாம் வல்கரின் உச்சம்.. உங்க ஃபேமிலி லேடீஸ் இந்தப்படத்தை பார்க்க அலோ பண்ணுவிங்களா?

6. இந்தப்படத்துக்கு பணத்தை வாங்கிட்டு சர்ட்டிஃபிகேட் குடுத்த குற்றத்துக்காக தண்டனையா உங்க மனைவி மகள் அம்மாவுடன் இந்தப்படத்தை பார்க்கனும்னு சொல்லிடனும்.. அப்போதான்யா உங்களுக்கெல்லாம் புத்தி வரும்..


தயாரிப்பாளரிடம் ஒரே ஒரு கேள்வி

1. நாய் வித்த காசு குரைக்காதுதான்.. இந்த மாதிரி மட்டமான படம் எடுத்து அதுல வர்ற வருமானத்துல சாப்பாடு சாப்பிடனுமா?கீழே இருப்பவர் தான் தயாரிப்பாளர் . படத்துல போலீஸ் ஆஃபிசரா வர்றார்..


http://www.thehindu.com/multimedia/dynamic/00928/19cp_Pollangu_Praka_928179g.jpg



சி.பி கமெண்ட் - இந்த கேவலமான படத்தை பெண்கள், கர்ப்பிணிகள், மாணவ மாணவிகள் , 36 வயதுக்கு உட்பட்டோர், மனோரீதியாக பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால் மென்மையான மனம் கொண்ட அனைத்து வயது ஆண்கள் பார்க்க வேண்டாம். ஹனிமூன் போகும் புது மணத்தம்பதிகள் பார்த்தால் ஜென்மத்துக்கும் அந்த ஆசையே போயிடும் அபாயம் இருப்பதால். அவர்களும் பார்க்க வேண்டாம்..வன்முறையின் உச்சமான படத்தை எடுத்த இயக்குநர் பேரு காந்தி மார்க்ஸ்ஸாம் அவ்வ்வ்வ். என்னே ஒரு முரண்!


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39

குமுதம் ரேங்க் - ஓக்கே


டைம்ஸ் ஆஃப் இண்டியா - 3 /5

 டெக்கான் கிரானிக்கல்   6 /10

டிஸ்கி 1 - நடுநிசி நாய்கள் விமர்சனம் - http://www.adrasaka.com/2011/02/18_18.html


டிஸ்கி 2 -

இயக்குநர் கவுதம் மேணனுக்கு ஒரு கண்டனக்கடிதம்( இது பொல்லாங்கு இயக்குநருக்கும் பொருந்தும்)http://www.adrasaka.com/2011/02/blog-post_7783.html

 

 

டிஸ்கி 3 - சுழல் விமர்சனம் http://www.adrasaka.com/2012/07/blog-post_6087.html

 

 

டிஸ்கி 4 -  டிஸ்கி - மாலைப்பொழுதின் மயக்கத்திலே விமர்சனம் -http://www.adrasaka.com/2012/07/blog-post_6127.html 


ட்விட்டரின் பெண் பார்க்கும் ப்டலம்.

ஸ்டிலுன்ன இபப்டி தான் குடுக்கணும் !! என்னாமா போஸ் குடுக்குரனுங்க ...!!
1.இன்று ஜனாதிபதி தேர்தல் நடப்பதால் அஜித் நடித்த ஜனா பட தயாரிப்பாளர் ஜனா அதிபதி டெல்லி விரைந்தார் 



------------------------------


2. பில்லியன்ல உக்காந்தா சவுகர்யம்னு நினைக்கறவர் தான் பில்லியனரா?


---------------

3. லூஸ் ஹேர் = ஒரு லூஸ் பொண்ணோட கூந்தல்?




----------------------


4. எனது வாழ்நாளுக்குள் வறுமையை ஒழித்துவிட வேண்டும் என்பது என் கனவு.''- பிரணாப் முகர்ஜி # உங்க வறுமையையா? மக்களோட வறுமையையா?




---------------------


5. புலிபோலப் பாய வேண்டிய இந்தியா, சுண்டெலிபோல் இலங்கை அரசிடம் பணிகிறது'- ஜெ # வை கோ மாதிரி சீறாம OPS மாதிரி பம்முது?


---------------------



அடுத்து வரும் நூற்றாண்டுகளில் சென்னையின் சிறப்புகளில் இதுவும் ஒன்றாக இருக்கும்.
அடுத்து  வரும் நூற்றாண்டுகளில்  சென்னையின் சிறப்புகளில் இதுவும் ஒன்றாக இருக்கும்.


6. 'தமிழினத் தலைவர் என்று எனக்கு நானே எங்கே தம்பட்டம் அடித்துக்கொண்டேனா?' - கலைஞர் # அப்பாடா, எங்க தலைவர் உண்மையை ஒத்துக்கிட்டார்டோய்



------------------


7. அண்ணா சாலையில் குப்பை இருந்தால்கூட, அதை அகற்ற ஜெ பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறார். - ஈ.வி.கே.எஸ்.இ # கோபாலபுரத்தில் கூட குப்பை இருக்கு



----------------------


8. ஜெ  ஜு வி மீது 4 வது முறையாக அவதூறு வழக்கு # ஒரு குடம் தண்ணி ஊத்தி  ஒரு பூ பூத்துதாம்....



---------------------



9.  இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் ஹனிமூன் படங்கள்,  வெளியானதில் இங்கிலாந்து ராஜ குடும்பமே அப்செட் # ஓ! படமாவே எடுத்துட்டாங்களா? பலே!



----------------------

10. இந்தியாவின் நம்பர் ஒன் கோல்ஃப் பிளேயராக உருவெடுத்து இருக்கிறார் ஜீவ் மில்கா சிங்.  # மில்கா பிரெட் கம்பனி யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்!




-------------------




11.  என்னைப் பிடிச்சவங்க இப்பவும் டச்ல இருக்காங்க. பிடிக்காதவங்க விலகிப் போயிருக்காங்க.- பிரபுதேவா # லேட்டஸ்ட் டச் அப் கேர்ள் யாருங்க?


-----------------------


12. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!ஹீரோ சுட்டுட்டே இருந்தா சங்கு வரும்



---------------


13. எஜமான் மீனாவின் குழந்தை பெயர் நைய்னிகாவாம், ரஜினிக்கு ஜோடியா நடிச்சுடுவாரா?



--------------


14. நிருபர் - விகடன்ல பில்லாவை கழுவி கழுவி ஊத்தி இருக்காங்களே? 



அஜித் - படத்துல ஏகப்பட்ட , கொலை , ரத்தம்,அதான் ஆள் விட்டு அனுப்பினேன் டூ வாஷ்


---------------------------

15. லேடீஸ் ஃபர்ஸ்ட்னு எல்லாத்துக்கும் முன்னுரிமை அளிக்கும் சமூகம் ஃபர்ஸ்ட் நைட்ல மட்டும் ஏன் 2வதா அனுப்பறாங்க? # சமூக நிந்தனை கேள்வி



-------------------------





16. சார், ஒரு பேட்டி வேணும்னு கேட்டா இப்படி நடக்கடிக்கறீங்களே? 



ம்க்கும்,நடக்கறது எவ்ளவ் சிரமம்னு இப்பவாவது தெரிஞ்சுதா?



---------------------------


17. சசிகலா - ஜெ  கதையை படமா எடுத்தா “நட”ராஜன் கேரக்டருக்கு யார் பொருத்தமா இருப்பாங்கன்னு நான் சொல்லவே தேவை இல்லை



----------------------


18.  நல்ல டிரஸ்ஸிங்க் சென்ஸ் உள்ள ஹீரோக்கள் - அஜித், விஜய் , டிரஸ் (சிங்க் சென்ஸ் )இல்லாத ஹீரோயின்கள் - பூனம்பாண்டே, தீபிகாபடுகோனே



------------------------

19. சின்ன வயசுல இருந்தே நிலக்கடலை,பொட்டுக்கடலை, சுண்டல் கடலை,பட்டாணிக்கடலை சாப்பிட்டு வந்தால் நீங்களும் கடலை மன்னன் ( கட்டதுர) ஆகலாம்



-------------------------------------------


19. மாளவிகா பிறந்த நாளை முன்னிட்டு  C U @ 9  பட டிவிடியை தேடி அலைந்தால் நீயும் ஒரு தமிழனே!



---------------------------


20. ட்விட்டர் பெண் பார்க்கும் படலம் - மாப்ளை பொண்ணு கூட தனியா பேச ஆசைப்படறார்..  அது வேணாம், வேணும்னா டி எம் அனுப்ப சொல்லுங்க



----------------------------




" உன்னிடம் நன்றியை தவிர எதையும் பெற முடியாது…
என்னிடம் உணவை தவிர எதயும் தரமுடியாது ”
‎" உன்னிடம் நன்றியை தவிர எதையும் பெற முடியாது…
என்னிடம் உணவை தவிர எதயும் தரமுடியாது ”
21. மாளவிகாவின் கணவர் ஊடலின்போது கா விட்டுட்டா ( டூ விட்டுட்டா) அவரை மாளவின்னு கூப்பிடுவாரா?



------------------------


22. அஜீத் - ஹூம், நாம நினைச்சது 1, நடந்தது 1



----------

Friday, July 27, 2012

சுழல் - சினிமா விமர்சனம்



http://www.fingertipszone.com/cinema_images/tamil/suzhal/suzhal_11.jpg 

ஹீரோ ஒரு காலேஜ் ஸ்டூடண்ட்.. பார்ட் டைம் ஜாப்பா எலக்ட்ரீஷியன் ஒர்க்கும் பார்ப்பாரு.. பிரதாப் போத்தன் ஒரு போதை மருந்துப்பிரியர்.. அடிமை.. அவருக்கு ஒரு சம்சாரம்.. எப்போ பாரு அவரை கரிச்சுக்கொட்டிட்டே இருக்கு.. எதுக்குமே நீ லாயக்கில்லை.. உன்னை கட்டிட்டு என்ன சுகத்தை கண்டேன்னு  24 மணி நேரமும் புலம்பிட்டே இருக்கு.. கோபத்துல எதையோ தூக்கிப்போட மெயின் ஸ்விட்ச் பணால்.. இப்போ எலக்ட்ரீசியன் ஹீரோ அங்கே எண்ட்ரி.. 


 என்ன மலையாள பிட்டுப்படம் மாதிரி ஓப்பனிங்க்கா இருக்கேன்னு அவனவன் நிமிர்ந்து உக்கார்றான்.. ஆனா கதை வேற மாதிரி போகுது.. அதாவது பிரதாப் போத்தன் போலீசால் கண்காணிக்கப்படற ஒரு சமூக விரோதி,.,. என்னமோ பண்றார்.. சட்டத்துக்குப்புறம்பா சம்பாதிக்கறார்.. அது என்னன்னு கண்டு பிடிக்க  அதுல் குல்கர்னி.. அவருக்கு ஒரு அசிஸ்டெண்ட்.. 




http://www.mottaboss.com/stills/jun12/26/suzhal_movie_stills_suzhal_tamil_movie_photos_gallery_eab1745.jpg


படத்தோட மெயின் கதை இடைவேளைக்குப்பின் தான்.. இப்போ டைம் பாஸ் பண்ணனும்.. எப்படி 5 ரீல் ஓட்ட? ஹீரோவுக்கு ஒரு அறிமுக காட்சி பாடல்...  அவங்க நண்பர்களோட சேர்ந்து ஹீரோ கிராமத்துக்கு போறப்ப ஒரு ஜாலி பாட்டு ( ஜாலி பாட்டுன்னு யூனிட் நினைச்சுக்குச்சு.).. அங்கே நண்பர்களுக்குள் ஒரு ஜோடி லவ் செட் ஆகுது.. ஹீரோ ஒரு கற்பனை ஹீரோயின் கூட ஒரு பாட்டு.. 3 பாட்டு ஆச்சா? அவங்க அந்த கிராமத்துல இருந்து ரிட்டர்ன் வர்றப்போ ஒரு விபத்து.. ஒரு பொண்ணு அவுட்.. ஒரு பையன் சீரியஸ்.. அவசரமா ஆபரேஷனுக்கு 50 லட்சம் பணம்  தேவைப்படுது..


 ஹீரோ மறுபடி பெண்டிங்க் ஒர்க் பார்க்க  பிரதாப் வீட்டுக்கு போறாரு.. பிரதாப்க்கு கொச்சின்ல இருந்து ஒரு கொரியர் கவர் வ்ருது.. அதை நைசா ஹீரோ அபேஸ்.. அப்புறம் தற்செயலா பிரதாப் டெட்.. இதான் சான்ஸ்னு ஹீரோ அந்த கவரை எடுத்துட்டு கொச்சின் போறார்.. 


 அங்கே ஒரு உயிர் விளையாட்டு.. சின்னப்பசங்க எல்லாம் வரிசைல நின்னு சுத்தி தொட்டு விலையாட்டு விளையாடற மாதிரி.. அதாவது கோடீஸ்வரர்கள் பலர் பெட் கட்டி இருப்பாங்க.. 10 பேர் சுற்றி நின்னு ஒருவரை ஒருவர் குறி பார்த்து சுடனும்.. ரிவால்வர்ல  3 குண்டு தான் இருக்கும்.. லக் இருக்கறவன் பிழைப்பான்.. லக் இல்லாதவன் எமன் கிட்டே போவான்.. 

 3 ரவுண்ட்லயும் ஹீரோ ஜெயிச்சு பணத்தை அள்ளிக்கிறார்..  அப்புறம் என்ன ஆச்சு? என்பதை வெண் திரையில் காண்கன்னு சொல்லலாம்.. ஆனா 98% கதை முடிஞ்சது.. மீதி 2 லைன் தான்.. அதையும் சொல்லிடறேன்.. ஹீரோவை பணத்துக்கு ஆசைப்பட்டு ஒருத்தன் மலையூர் மம்பட்டியான் செந்தில் மாதிரி டொப்புன்னு கொன்னுடறான்.. ஹீரோ ஃபிரண்ட் அநாமத்தா ஹாஸ்பிடல்ல இருக்கார்.. போலீஸ் ஆடியன்சை பார்த்து நக்கலா சிரிக்க  த எண்ட்.. 




http://haihoi.com/Channels/cine_gallery/Suzhal-Movie-Stills-53_S_109.jpg


 இந்த கேவலமான படத்துல  அதுல் குல்கர்ணி நடிக்க ஒத்துக்கிட்டது ஏன்னு தெரியல.. படத்துல மொத்தமா 14 சீன் தான் வர்றார்.. அவர் வர்ற நிமிஷங்கள் டோடலா 18 நிமிஷம் தான்.. பேசற வசனங்கள்  ஏ ஃபோர் சீட்ல  கால் பக்கம். அட்டகாசமான நடிகரை வேஸ்ட் பண்ணிட்டாங்க.. 


காலேஜ் ஸ்டூடண்ட்டா வர்ற ஹீரோ பாவம்.. சொல்லிக்க ஏதும் இல்லை.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.. ( சப்போஸ் நெக்ஸ்ட் பட சான்ஸ் கிடைச்சா.. ) ஏன்னா முத படம் ஊத்திக்கிச்சுன்னா யாரும் சான்ஸ் தர மாட்டாங்க.. 

படத்துல ஹீரோயின்னு யாரும் இல்லை ( அதுக்காகவே இந்த டைரக்டரை பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. ) படத்துல 6 கேர்ள்ஸ் கேரக்டர் வருது.. எல்லாரும் ஒண்ணைக்கண்ட மாதிரியே குதிரை முகக்காரிகளா இருக்காங்க.. தமிழனுக்கு இது சுத்தமா பிடிக்காதே.. எப்படி செலக்ட் பண்ணாரு? அட கதையைத்தான் ஒழுங்கா செலக்ட் பண்ணலை.. அட்லீஸ்ட் சதையை சாரி பொண்ணுங்களையாவது பார்க்கற மாதிரி பிடிச்சுப்போடக்கூடாது? அட்டர் வேச்ட்.. ஆல் கேர்ள்ஸ்.. 




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZHiHjOePidR8zwRNo381oWhHtIRLpoq77AtsuXQ9vbiC4Bqfbehx1CzMLRq0Dn4a97o5OxGPL07o34BF19O4hs4vjJSGPjk-MHmGP7ZFcsVS47iU6ZsLD6mSaaa6l3zGzEQbeyR8WlgOG/s1600/Suzhal+Movie+Audio+Launch+Stills+Suzhal+Movie+Audio+Release+Event+Photos+(4).jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1.  குருதிப்புனல் கமல் ரேஞ்சுக்கு அதுல் குல் கர்னியை ஃபோட்டோ எடுத்து பிரமாதமா போஸ்டர் டிசைன் செஞ்சது, ஸ்டில்ஸ், விளம்பரங்கள்ல நல்ல ஆக்‌ஷன் படம் மாதிரி ஒரு மாயையை ஏற்படுத்துனது



2. படத்தோட ஹீரோ அதுல் குல்கர்னிதான்னு எல்லாரையும் நம்ப வெச்சது.. அது கூட தேவலை.. அதுல் குல்கர்னியையே நம்ப வெச்சிருக்காரு ( ஸ்டார் டஸ் ஆங்கில மாத இதழ்ல அண்ணன் பேட்டி குடுத்திருக்காரு ஹய்யோ அய்யோ பாவம் )


3. சொல்லாத ஆசை எல்லாம் சொல்ல வந்தேன் பாடல் காட்சில ஆர்ட் டைரக்‌ஷன் அற்புதம்.. வைதேகி காத்திருந்தாள், முதல் மரியாதைல வர்ற பரிசல் காட்சிகளை எல்லாம் சுட்டிருக்கார். இருந்தாலும் ரசிக்கும்படி இருக்கு 


4. ஹீரோவின் நண்பருக்கு நடக்கும் பைக் ஆக்சிடெண்ட் தத்ரூபம்.. அதில் அட்டகாசமாக பங்கு பெற்ற ஸ்டண்ட் கலைஞர்களுக்கு ஒரு சபாஷ்.. 



5. யார் யாரோ பூமியில் வந்து போனார்கள் பாடல் வரிகள் கிளாசிக்..  வாழ்க்கைத்தத்துவத்தை பிழிஞ்சுட்டாங்க.. ஆனா மிஸ் பிளேஸ்.. 




http://www.tollywoodnews.net/wp-content/plugins/RSSPoster_PRO/cache/c976e_thumbs_suzhal-movie-stills-27.jpg



 இயக்குநரிடம் காரசாரமாய் சில கேள்விகள்


1. படத்துக்கு வர்ற தமிழ் ஆடியன்சை எல்லாம் கேனக்கிறுக்கனுகன்னு நினைக்கறீங்களா? என்ன இதுக்கோசரம் பட பிரமோஷன்கள்ல, பிரிவ்யூ ஷோக்கள்ல எல்லாம் அதுல் குல்கர்னி படம்னு பில்டப் கொடுக்கறீங்க? முறைப்படி போஸ்டர்ல கெஸ்ட் ரோல்ல அதுல் குல்கர்னின்னு போடனும்.. 



2. ஹீரோ எலக்ட்ரிகல் ஒர்க் பாதி பெண்டிங்கல வெச்சுட்டு டூர் போறார்.. அப்போ ஓனர் சரி போ நான் பாத்துக்கறேன்கறார்.. அப்புறம் அவர் டி வி தான் பார்த்தார், ஹீரோ ரிட்டர்ன் வந்து உயிருக்கு போராடிட்டு இருக்கற நண்பன் கூட ஹாஸ்பிடல்ல இருக்கும்போது  கூட விடாம துரத்திட்டு வந்து பெண்டிங்க் ஒர்க்கை முடிச்சுக்குடுக்க சொல்றார்.. ஏன் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? வேற ஆளே இல்லையா?


3. ஹீரோ கொச்சின்க்கு ரிசர்வ்டு டிக்கெட்டோட ரயில் ஏறிட்டார்.. ஆனா ஒரு சின்னப்பொண்ணு கிட்டே “ கொஞ்சம் தள்ளி உக்காரும்மா”ன்னு இடம் பிடிக்கறார்.. சரி அன்ரிசர்வ்டு கம்பார்ட் மெண்ட்ல ஏறிட்டார் போலன்னு நினைச்சா டி டி ஆர் செக்கிங்க் வர்றார்.. அப்போ சிலர் ஸ்டேண்டிங்க்ல வேற பேக்ல  நிக்கறாங்க..  எந்த ஊர்ல ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட்ல ஸ்டேண்டிங்க் எல்லாம் வந்துச்சு?


4. கதை கொச்சின்ல நடக்கறப்போ ஒரு பய மலையாளமே பேசலை.. ஆல் தமிழ் தான்.. கொச்சின் தமிழ் நாடா மாறிடுச்சா? ( போனாப்போகுதுன்னு போலீஸ் மட்டும் மலையாளம் பேசுது)


5. ஹீரோ ஒரு சீன்ல ரயிலை பிடிக்க தண்ட வாள நடுவால வேகமா ஓடறார், பக்கத்துலயே அம்புட்டு இடம் காலியாத்தானே இருக்கு? ஏன் அப்படி கேனத்தனமா ஓடறார்? ஹீரோ பில்டப்பா?


6. பெண்களை எல்லாம் கிள்ளுக்கீரையா நினைக்கறீங்களா? படத்துல வர்ற 6 பொண்ணுங்க பேர்ல ஒரு ஆள் பேரு கூட டைட்டில்ல வர்லை.. டைட்டில்ல மொத்தமே  3 பேர் பேருதான் வருது.. அப்புறம் எல்லாம் டெக்னீஷியன் நேம் தான்.. 


7. இந்த ஆக்‌ஷன் படத்துல தேவையே இல்லாம 6 பாட்டு.. அதிலும் அந்த குத்தாட்ட அயிட்டம் சாங்க் ரொம்ப மட்டம்.. 




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilHYTyVwvabQLU5p2TYbWlZHyiID9VqL_1jJHcKzuRO5tdMSE7rM9lYfFAHV_JDkKZyMP7lxCVmy34f4oA0ntI6qw-3hpd_avmH98MzVxFydJV6VfR4kgfwTavfRHw06H6NL2NuzjqEwoU/s1600/suzhal_latest_wallpapers_001.jpg


 படத்துல வசனகர்த்தாவுக்கு வேலையே இல்லை.. சமீபகாலமா அதாவது நான் பார்த்த கடந்த 10 வருட படங்கள்ல வசனம் இவ்ளவ் மோசமா இருக்கற படம் இதுதான்.. போனா போகுது.. 3 வசனம் சொல்றேன்





 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  என் வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி அடுத்தவங்களை எதிர்பார்க்கற மாதிரியே இருக்கு?


2. ஒரு நாட்டோட எக்கனாமி, லா & ஆர்டர் சீர் குலைக்கற மாதிரி சக்தி அந்த கும்பல் கிட்டே இருக்கு.. அதை வளர விடக்கூடாது.. 


3. நீங்க சொன்னது சரிதான் சார்.. எதிரிங்க பூமியிலோ, வானத்திலோ இல்லை.. தண்ணில தான் இருக்காங்க ( ஆமா சரக்கு அடிச்சுட்டு கப்பல்ல இருக்காங்க )





http://moviegalleri.net/wp-content/gallery/suzhal-movie-stills/suzhal_movie_stills_suzhal_tamil_movie_photos_gallery_2a0f843.jpg



ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 38


 குமுதம் எதிர்பார்க்கும் ரேங்க் - சுமார்


டைம்ஸ் ஆஃப் இண்டியா ரேங்க்கிங்க்  -  1.5 / 5


டெக்கான் கிரானிக்கல் - 3/10




சி.பி - கமெண்ட்  - தெளிவா சொல்லிட்டேன் இது ஒரு குப்பை படம்னு.. யாராவது ஃபோன் பண்ணி படம் எப்படி?ன்னு கேட்டா கடுப்பாகிடுவேன்.. ஆண்கள், பெண்கள் யாரும் பார்க்கத்தேவை இல்லாத படம்..இந்தப்படத்தோட ஒரிஜினல் கீழே உள்ள படமாம் தகவல் உதவி அதிஷா


 டிஸ்கி - மாலைப்பொழுதின் மயக்கத்திலே விமர்சனம் -http://www.adrasaka.com/2012/07/blog-post_6127.html


பொல்லாங்கு விமர்சனம் - http://www.adrasaka.com/2012/07/2_28.html
 


Movie Review: 13 Tzameti

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (27.7..2012 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

http://www.nakkheeran.in/AllImages/Gallerys/22138_1.jpg1.பொல்லாங்கு -அடர்ந்த காட்டுப் பகுதியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மர்ம நபர்களிடம் ஒரு காதல் ஜோடி மாட்டிக் கொள்கிறது.
அந்த ஜோடி அவர்களிடமிருந்து எப்படி தப்பித்தார்கள் என்பது படத்தின் கதை. ரவிராகுல், நிஷா லால்வாணி நடித்துள்ளனர்
பி.ஆர். எண்டர்டைன்மெண்ட் சார்பில் எம். பிரகாஷ், இ. ரவிச்சந்திரன் இணைந்து தயாரிக்கும் படம் பொல்லாங்கு.

இதில் நாயகனாக ரவிராகுல், நாயகியாக நிஷா லால்வாணி நடிக்கின்றனர். வெற்றி, யாத்ரா, ரஞ்சித், நாராயணன், ஸ்ருதி ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி காந்தி மார்க்ஸ் இயக்குகிறார். இவர் பிரபல ஓவியர். குறும்படங்களையும் இயக்கி உள்ளார்.

புதிதாக திருமணமான ஜோடி தேனிலவு கொண்டாட காட்டுக்குள் செல்கின்றனர். அங்கு அவர்கள் சந்திக்கும் பயங்கரங்களே கதை. திகில் படமாக தயாராகிறது.

தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகம் பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. காட்சிக்கு காட்சி இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும் என்றும் தொழில்நுட்ப ரீதியில் உயரிய படமாக தயாராகிறது என்றும் இயக்குனர் கூறினார்.

ஒளிப்பதிவு: வினோத்குமார், இசை: ஜுபின்.ஈரோடு வி எஸ் பி யில் ரிலீஸ்


http://4.bp.blogspot.com/-u-XjgAS4Dyc/T1hRlxPYPyI/AAAAAAAABB8/7ZjoKm7mit8/s1600/Maalai-Pozhudhin-Mayakathilaey.jpg

2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே - திரைத்தமிழின் தந்தை கவியரசு கண்ணதாசனின் பேரனும், மூத்த இயக்குநர் கலைவாணனின்  மகனுமான, ஆதவ் கண்ணதாசன், தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகும் படம்தான் மாலைப்பொழுதின் மயக்கத்திலே. இந்தப் படத்தின் இசையை இன்று சென்னையில் வெளியிட்டு, கண்ணதாசனின் பேரனை வாழ்த்தினார்  கமல்! இந்த விழாவின் இன்னோரு அட்ராக்‌ஷன் கவிபேரரசு வைரமுத்து! கண்ணதாசனின் காதலரான வைரமுத்து அவரது பேரனின் இசையை பெற்றுக்கொள்ள வந்தது  ஆச்சர்யம்!


ஈரோடு அன்னபூரணி, ஸ்ரீநிவாசா 2 தியேட்டர்களில் ரிலீஸ்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuh0mFoVb7yvsFaiUCTvFqxpu-7eslzG3no4pTJGs4CkdeEyGsPE3XrxO1UfzBFtxS7WKrXcqIH7Umvluy3hYJcbVJexuY5d-mYg5wbVhW27GpUAAsnrK0Fv1d7k1jpTA6RV9BdH29DJY/s320/Suzhal+Movie+Release+Date+Posters+Mycineworld+Com+(1).jpg
3. சுழல் -ரன், கேடி, படிக்காதவன் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல இந்தி நடிகர் அதுல் குல்கர்னி ஆக்ஷன் நாயகனாக அவதாரம் செய்திருக்கும் படம் தான் சுழல். நாட்டின் பொருளாதாரம், வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு ஆகியவைகளை சீர்குலைக்க சர்வதேச தீவிரவாத கும்பல் முயற்சிக்கிறது. இதுபற்றி துப்புதுலக்கி, தீவிரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் ஒரு அதிகாரியை பற்றிய கதை இது. படத்தில் துப்பறியும் அதிகாரியாக அதுல் குல்கர்னி நடித்துள்ளார்.


அவருடன் பிரதாப்போத்தன், நிழல்கள் ரவி, காவேரி, மீரா கிருஷ்ணன், மீனாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன், விறுவிறுப்பு, அதிரடி, சாகஸங்கள் நிறைந்த கதையாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார், இதன் இயக்குநரான ஜெயின் ஆர்.கிருஷ்ணா. அதுல் ஜேம்ஸ் கிருஷ் ஒளிப்பதிவு செய்ய, எல்.வி.கணேசன் இசையமைக்க, பிறைசூடன், சினேகன், முத்துவிஜயன், யுகபாரதி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.ஈரோடு அண்ணாவில் ரிலிஸ்


http://f7.mb-content.com/pictures/608/02/8/1802608_RKMNDJQEMUFGKWU.jpg




4. ICE AGE 4 -உலக அளவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்த அனிமேஷன் படம், அதிக அளவில் வசூலைக் குவித்த அனிமேஷன் பட வரிசைகளில் ஒன்று என்று சொன்னால் அது ‘ஐஸ் ஏஜ்’ படவரிசையாகத்தான் இருக்கும்.


கடந்த 2002-ல் ஐஸ் ஏஜ் பட வரிசையின் முதல் படமான 'ஐஸ் ஏஜ்' திரைக்கு வந்தது. இப்படத்தின் வெற்றியை அடுத்து 'ஐஸ் ஏஜ் 2 - மெல்டிங் டவுன்' கடந்த 2006-ல் வெளிவந்தது. இப்படத்தை அடுத்து 'ஐஸ் ஏஜ் 3 - டான் ஆப் தி டைனோசிரஸ்' கடந்த 2009-ல் வெளிவந்தது.

இந்த மூன்று அனிமேஷன் படங்களும் வசூலில் சாதனை படைத்தது மட்டுமின்றி உலக அளவில் மெகா ஹிட்டானது. இந்த வரிசையில் தற்போது 'ஐஸ் ஏஜ் 4  - கான்டினென்டல் ட்ரிப்ட்' என்ற படம் திரைக்கு வர இருக்கிறது.

இப்படத்தின் கதையாவது, ஐஸ் ஏஜ் காலம் இருந்த போது, கண்டங்கள் அனைத்தும் ஒன்றாக இருந்தன. 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக ஏழு கண்டங்களாக நிலப்பரப்புக்கள் பிரிகின்றன.

அப்போது இப்படத்தில் வரும் ஐஸ் ஏஜ் காலத்து விலங்குகளான மேன்னி( யானை), டியாகோ (புலி), சிட் (சிறு கரடி) ஆகியவை கண்டங்கள் பிரியும் போது அவர்களது குடும்பத்தினர்களை விடுத்து தனிக்கண்டத்தில் மாட்டிக் கொள்கின்றன. இவைகள் மீண்டும் தங்களது குடும்பத்தினரோடு ஒன்று சேர்வது போல் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகையான ஜெனிபர் லோபஸ் 'சாரா' எனும் பெண்புலி கேரக்டருக்கு குரல் கொடுத்திருக்கிறார். உலகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் ஜூலை 13-ம் தேதி அமெரிக்காவில் திரைக்கு வந்தது.

தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் இத்திரைப்படம் இந்தியாவில்  ஜூலை 27-ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.ஈரோட்டில் ரிலீஸ் இல்லை, பள்ளிபாளையத்தில் ரிலீஸ், தியேட்டர் எதுன்னு மாலை தான் தெரியும், அப்போ அப்டேட் பண்றேன்
5. bloody mary - (2006) 6 வருஷங்கள் முன்னே ரிலீஸ் ஆன படம் இப்போ ஏன் இந்தியாவுக்கு வருதுன்னு தெரியலை.. ஹாஸ்பிடல்ல ஒரு நர்ஸ் திடீர்னு காணாம போயிடறா.. அதை தொடர்ந்து அங்கே இருக்கற நர்ஸ்ங்களூக்கு எல்லாம் ஏதோ ஆபத்து வருது... பேஷண்ட்ஸ் எல்லாம் திகில்ல இருக்காங்க.. மேரின்னு ஒரு நர்ஸ் ஆவி எதுக்காக இப்படி பழி வாங்குதுங்கரதுதான் கதை.. தமிழ்ல கண்ணாடி பிசாசுன்னு மொழி பெயர்த்து வருது.. ஈரோடு ஸ்டாரில் ரிலீஸ் http://imovies4you.net/wp-content/uploads/2008/08/the-legend-of-bloody-mary.jpg

உடம்பு பூரா மச்சம்னா இன்னா மீனிங்க்?

· · 7 minutes ago ·
1. உங்க படத்துக்கு ஏன் சிறை நிரப்பும் போராட்டம்னு டைட்டில் வெச்சிருக்கீங்க?


ரிலீஸ்க்கு முன்பே பிரம்மாண்ட வெற்றின்னு சொல்லிக்கலாமே?


---------------------------------




2. தலைவரே! ஹிந்தி எதிர்ப்பை தீவிரமா காட்டுன நீங்களே சிறை நிரப்பும் போராட்டத்துக்கு ஹிந்தில  ஜெயில் பரோன்னு பேர் வெச்சீங்களே, ஏன்னு தொண்டர்கள் கேட்கறாங்க..



-----------------------------


3. நிச்சயம் ஆன பெண் கிட்டே மேரேஜ் முடியும் வரை நீ பேசவே இல்லையாமே?


 மேரேஜ்க்கு அப்புறமும் பேசலை, அவ பேசுவா, நான் கேட்டுக்குவேன்



-------------------------


4.  தலைவர் அஜித் ரசிகர்னு எப்படி சொல்றே?


 கட்சிக்கு தொண்டரா இருக்க எந்த தகுதியும் தேவை இல்லை, ஆனா குண்டரா இருக்க தகுதி தேவை அப்டின்னாரே?



---------------------------------



5. அநீதி எங்கே நடந்தாலும் நான் சும்மா விட மாட்டேன்..


 தலைவரே.. தல அஜித் எல்லா படத்துலயும் நடந்துட்டே இருக்காரு, அதை கொஞ்சம் என்ன?ன்னு கேளுங்க..


-------------------------



hared Aaraah Mobiles's photo.
NALLA VARUVADI NEE....... NAAN BIT ADICHA MATTUM EPDI MAATTIKIREN?????? SOMTHING WRONG.... IVAKITTA COACHING POIDAVENDIYATHUTHAN.......


6.  என் பையன் ஈமு கோழி மாதிரி..


 நல்லா சம்பாதிக்கறானா?


 ம்ஹூம், வெட்டியா இருக்கான்



------------------------------


7. டியர், இந்தப்புடவைல நீ ரொம்ப அழகா இருக்கே..


தாங்க்ஸ் அத்தான், இது எங்கப்பா எடுத்துக்குடுத்தது, விலை ரூ 12,000


--------------------



8. டியர், என் கூந்தல் பற்றி வர்ணீச்சு ஏதாவது சொல்லுங்க..


 உனக்கு சினி ஃபீல்டுல ஏகப்பட்ட ஃபேன் இருக்காங்களோ இல்லையோ, ஆனா உன் தலைல ஏகபட்ட பேன்



-------------------------------------



9.  டியர்.. 143. எங்கே திருப்பி சொல்லு


 341



----------------------------




10. நாட்டுக்கோழி வளர்ப்பு,ஈமு கோழி வளர்ப்பு என்ன வித்தியாசம்?



சொந்த ஊர்க்காரன் கிட்டே ஏமாந்தா அது நாட்டுக்கோழி வளர்ப்பு , அசலூர்க்காரன் கிட்டே ஏமாந்தா அது ஈமு கோழி வளர்ப்பு திட்டம்


---------------------------


தேசிய எந்திரன்..தேசிய விருந்தாளி..!



11.  நான் உன்னை லவ் பண்ணுனதை இமாலயத்தவறா நினைக்கறேன்

 அப்போ மேரேஜ் செஞ்சதை?

 அது எவரெஸ்ட் தவறு


-----------------------


12,. டி டோட்டலர் = ஒரு கம்ப்பெனில டெயிலி எத்தனை  டீ குடிக்கறாங்க?ன்னு டோட்டல் போடறவர்?


---------------------------



13.  சிறை சென்றால் தான் பதவி

 தலைவரே, நாங்க தான் ஜெயிலுக்கு போயிடுவோமே, எப்படி பதவி தருவீங்க?


--------------------------



14.  பெட் அனிமல்ஸ்னா எப்போ பாரு படுக்கைலயே குடி இருக்கும் விலங்கு?


-----------------------------



15. தலைவரே, கடவுளோட கடைசி துகள் பற்றி என்ன தெரியும்?


 கள் பற்றி கேட்டா சொல்வேன், துகள் பற்றி எனக்கு என்ன தெரியும்?



------------------------------


புதுகை கட்டதொர was tagged in Tamil nadu don's photo.
அழகிய ராகம் அவளது தேகம்,
பாடிடும் நேரம் பரவசம் கூடும்.
தென்றலாய் சுடும், தீயாய் வருடும்
தேனாய் கசக்கும், நஞ்சாய் இனிக்கும். முற்றுபெறாத முரண்தொடர் கலவை
கற்பனைக்கெட்டா காட்டில் மிதவை.




16. அத்தான், உங்களுக்கு உடம்பு பூரா மச்சம்

 உன்னை விட நான் கறுப்புன்னு குத்தி காட்டறியா?



-----------------------------




17. உன் ஃபிரண்ட் சரியான குழப்பவாதின்னு எப்படி சொல்றே?


 அவனோட வருங்கால மனைவிக்கு நிகழ்காலத்துல கல்யாணம் நடந்தா அவனோட வருங்காலம் என்ன ஆகறது?ன்னு புலம்பறான்



-------------------------------



18. டியர், என் கிட்டே முதன் முதலா உங்க காதலை வெளீப்படுத்துன  நாள் நினைவு இருக்கா?


 ஹூம், ஒரு ஆள்ட்ட சொல்லி இருந்தா நினைவு இருக்கும்



------------------------


19. கணவர் ராஜகுமாரனுக்கு ஜோடியாக நடிக்கும் தேவயானி! # படத்துல கிக்கே இருக்காதேன்னு யாரும் வருத்தப்படேல், ஹீரோ ஹீரோயினை உதைக்கற சீன் உண்டாம்



-------------------------


20. பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் ரூ.10லட்சம் நிதியுதவி!! # அவர் நடிச்ச படத்தை பார்த்ததால பாதிக்கப்பட்டவங்க?



-------------------




அட ஆமாப்பா !

Thursday, July 26, 2012

சீமான் மேரேஜ் - வெளி வராத மர்மங்கள், விஜயலட்சுமிக்கு அல்வா

http://www.eutamil.com/wp-content/uploads/2011/04/29Seemaan.jpg 

தலைவர் பிரபாகரன் திருமண நாளான அக்டோபர் 1-ம் நாள் என் திருமணமும் நடக்கும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார் !

ஆம்.. அக்டோபர் ஒன்றில் எனது அண்ணன் பிரபாகரனுக்கும் அண்ணி மதிவதனிக்கும் திருமணம் நடந்த தினம். அன்று திருமணம் செய்துகொள்வது என்ற முடிவிலிருக்கிறேன்.  பெண் யாரெனத்தான் இன்னும் தெரியவில்லை. எப்படியும் அதற்குள் பெண்தேடும் படலம் முடிந்துவிடும். இத்தனை லட்சம் பெண்களில் எனக்கென்று ஒரு பெண் கிடைக்காமலா போய்விடுவாள் ? என்று இந்திய ஊடகம் ஒன்றிற்கு கூசாமல் பொய்யுரைத்துள்ளார் சீமான் என்றால் நம்புவீர்களா ?


சரி சீமான் உண்மை சொல்கிறாரா இல்லையா என்பதனை எவ்வாறு அறிய முடியும் ? முதலில் ஒரு யதார்த்தத்தை நாம் உணரவேண்டும். தற்போது ஜூலை மாதம் முடிவில் உள்ளோம். ஆகஸ்ட், செப்டெம்பர், அக்டோபர் 1ம் திகதி என்று பார்த்தால் 60 நாட்களே உள்ளது. இந்த 60 நாட்களில் சீமான் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் முடிகப்போகிறாராம். ஆனால் அது யார் என்று அவருக்கே தெரியாதாம் ! நாம் தமிழர் கட்சியை நடத்தும் தலைவர் அவர் ! ஒரு மாநாடு நடக்க 3 மாதங்களுக்கு முன்னரே பிளான் போடும் அவர் தனது வாழ்க்கை துணை யார் என்று தெரியாது, ஆனால் அக்டோபர் 1ம் தேதி கல்யாணம் என்று சொல்கிறாரே நம்பக்கூடிய வகையிலா இது இருக்கிறது ?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYHKbC4AalJf3TF_-keayBJ8Dg0HJBERSCvezxjWmFU1S8JzXwEkG2N6olc94xBa9SmozbIGJI6NbviJXnuSfJaLOQxulMUNQp-CsUDIWL29aU3kgykjztO-_Jfa0WjMncqN3YZ6l3rjs/s1600/se+v+5.jpg

வன்னியில் புலிகள் பலமாக இருந்தவேளை புலிகளின் ஊடகவியலாளராக இருந்த அழகான பெண் யாழ்மதி. இவர் குறிப்பாக ஆங்கிலச் செய்திகளை வாசிக்கும் ஊடகவியலாளர். சீமான் முதன்முதலாக இந்தப் பெண்ணை வன்னியில்தான் சந்தித்து இருந்தார். திரைப்படப் பிடிப்பு சம்பந்தமாக புலிகளுக்கு பாடம் எடுக்க சென்றவர், இந்த அழகான பெண்ணை கண்டு மயங்கி இருந்தார். தமிழ் தேசியத்தின் பெயரால் புலிப் பெண் ஒருவரை திருமணம் செய்ய விரும்புகின்றார் என்று இவர் தலைவர் பிரபாகரனுக்கு சொன்னார்.

ஆனால் குறிப்பிட்ட அப் பெண்ணை பிறிதொருவர் திருமணம் முடிக்க இருப்பதாக தலைவர் தெரிவித்து, அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அப் பெண் யாரும் இல்லை, புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் வலதுகரமாகத் திகழ்ந்த அலெக்ஸ் என்னும் அன்புமணி காதலித்தவர் ஆவார். பின்னர் இவர்கள் இருவருக்கும் திருமணம் நிகழ்ந்தது. ஆனால் நான்கே மாதத்தில் அலெக்ஸ் மற்றும் சு.ப. தமிழ்ச்செல்வன் ஆகியோர் விமானத் தாக்குதலில் இறந்தனர். பின்னர் 2009ம் ஆண்டு யாழ்மதி இராணுவத்திடம் சரணடைந்தார்.


இவர் இவர் இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை எப்படியோ மோப்பம்பிடித்த சீமான், இலங்கையில் உள்ள துணை ஆயுதக் குழு ஒன்றுக்கு பெருந்தொகைப் பணத்தை இலஞ்சமாக கொடுத்து அன்புமணியின் முன்னாள் மனைவியான அழகான பெண்ணை(யாழ்மதியை) சிறையில் இருந்து மீட்டு இருக்கின்றார் சீமான்.

இந்தியாவில் அடைக்கலம் கொடுத்து வைத்திருக்கின்றார். சீமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாட்களில் கூட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த அன்புமணியின் முன்னாள் மனைவி எவ்வித குறைகளும் இல்லாதபடி பார்க்கப்பட்டார். தற்போது தமிழ் நாட்டில் மறைவாக வைக்கப்பட்டிருக்கும் இப் பெண்ணுக்கும் சீமானுக்கும் அக்டோபர் 1ம் திகதி திருமணமாக உள்ளது ! அதாவது ஒரு விதவைக்கு மறு வாழ்வு கொடுப்பது பாவம் என்று நாம் கூறவில்லை. இல்லையேல் ஒரு போராளியை இவர் காப்பாற்றியது தொடர்பாக நாம் விமர்சனம் தெரிவிக்கவில்லை.

http://cinemaulakam.com/images/vija_viyapu_170711.jpg


ஆனால் சீமான் தான் இன்னும் மணப் பெண்ணை பார்க்கவே இல்லை என்று ஏன் பொய்யுரைக்க வேண்டும் ? குறைந்த பட்சம் தான் ஒரு ஈழப் பெண்ணை தான் மணம் முடிக்க இருப்பதாக ஏன் அறிவிக்கவில்லை ? இதனைக் கூட துணிவாக அறிவிக்க வக்கில்லாத சீமான் எவ்வாறு தமிழீழத்துக்காகப் போராடப்போகிறார் ?

எவ்வாறு உண்மையுள்ளவராக இருக்கப்போகிறார் ? அன்புமனியின் மனைவியை மணப்பது நல்ல விடையம் ! ஆனால் அதனை அவரால் ஏன் நேர்மையாகத் தெரிவிக்க முடியவில்லை ? வாய் கிழிய கத்தும் அவர், இதனை மட்டும் ஏன் ஒரு கேவலமாக நினைக்கிறார் ? பெண் விடுதலை அவ்வளவு தானா ? இவ்வளவு நாளும் இவர் பேசிய வீர வசனங்கள் எல்லாம் பொய் தானா ? இனி ஈழத் தமிழர்கள் சீமானை எப்படி நம்புவது ?  ஒரு கருணாநிதி, ஒரு சுபவீரபாண்டியன், ஒரு தொல் திருமாவளவன், காங்கிரஸ் கட்சி நபர்கள், இவர்களைப் போல ஒரு உயிர் இல்லாத அரசியல் ஜடம் போல அல்லவா சீமான் மாறிவிட்டார் ?


உலகத் தமிழர்கள் எவ்வாறு இதனை ஏற்றுக்கொள்வார்கள் ? தமிழ் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் ஆரம்பத்தில் ஈழத் தமிழர்கள் பற்றிப் பேசி  அரசியல் செய்வதும், பின்னர் அரசியலில் முக்கியத்துவம் பெற்றதும் ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் நிலையில் தானா இன்னும் இருக்கிறார்கள் ? நாங்கள் இலங்கையில் அப்படியே செத்து மடிவதை தவிர வேறு வழியே இல்லையா ? இது தான் எங்கள் இனத்தின் சாபக்கேடா ? நாங்கள் எங்கள் உயிருக்கும் மேலாக நம்பியிருக்கும் தமிழ் நாட்டு உறவுகளே எங்களை அழிக்க உதவுவதா ? எங்கள் கண்ணில் மண்ணை வாரிப் போடுவதா ?


அதாவது சுருக்கமாகச் சொல்லப்போனால், தலைவர் நிராகரித்த பெண்ணை, தலைவர் மணம் முடித்த நாளில் மணம் முடித்து தேசிய தலைவர் முகத்தில் கரியைப் பூசுகிறார் சீமான் !


நன்றி - சம்பவம், முத்தமிழ் குழுமம்

செய்தி 2 


நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி திருமணம் செய்ய இருக்கிறார். மணமகள் முன்னாள் சபாநாயகரான மறைந்த காளிமுத்துவின் மகள் கயல்விழி. சென்னை அண்ணா நகரில் வசிக்கும் கயல்விழி காளிமுத்துவின் இரண்டாம் தாரத்து மகள். பட்டதாரிப் படிப்பை முடித்திருக்கும் கயல்விழி சீமானின் புரட்சிகரமான பேச்சில் மனதைப் பறிகொடுத்திருக்கிறார்.



நாம் தமிழர் கட்சியில் சேர விரும்பிய கயல்விழி அதுபற்றி பேசுவதற்காக சீமானை சந்தித்து இருக்கிறார். காளிமுத்துவின் மீது மிகுந்த மரியாதை கொண்ட சீமான் கயல்விழியை மனமார வரவேற்றதுடன் மட்டும் அல்லாமல், கயல்விழியின் தாயையும் சந்தித்து நன்றி தெரிவித்து இருக்கிறார். குடும்ப ரீதியான இந்த நட்புதான் ஒருகட்டத்தில் திருமணப் பேச்சு வரை நீண்டிருக்கிறது.


திருமணமே வேண்டாம் என்கிற நிலையில் இருந்த சீமான் மீது தேவையற்ற சர்ச்சைகளை சிலர் தொடர்ந்து ஏற்படுத்தி வந்தார்கள். விஜயலெட்சுமி என்கிற நடிகையைத் தூண்டிவிட்டு புகார் கொடுக்க வைத்தார்கள். அரசியலில் புதுப்புயலாக பரபரப்பு கிளப்பும் சீமான் மீது உளவுத்துறையும் இதர அரசியல் கட்சிகளும் சினிமாப் புள்ளிகள் சிலரும் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். அதனால் பெண் சம்மந்தமான புகார்களை இவர்கள் எந்த நேரத்திலும் சீமானுக்கு எதிராகக் கிளப்பக்கூடும். 



அதனால் திருமண வாழ்வில் அடியெடுத்து வைப்பதே சிறந்தது என சீமானுக்கு பலரும் அறிவுரை வழங்கினார்கள். இதற்கிடையில் சீமானுக்கு எதிராக பரபரப்பு கிளப்பிய விஜயலட்சுமி தன்னுடைய வழக்குகளை வாபஸ் பெறுவதாக சொல்லியிருக்கிறார்.



அதனால் இந்த சுபவேளையை தவறவிட விரும்பாத சீமான் காளிமுத்து மகள் கயல்விழியை திருமணம் செய்ய பரிபூரண சம்மதம் தெரிவித்திருக்கிறார். சிவகங்கை மாவட்டம் அரனையூரில் வசிக்கும் சீமானின் தாய் தந்தையர் இருவரும் இந்த திருமணத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். ”முகாம்களில் வாழும் ஈழ அகதிப் பெண்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து என் மகன் திருமணம் செய்வான் என எதிர்பார்த்தேன். ஈழ உணர்வு கொண்ட கயல்விழியை மணப்பது அகதிப் பெண்ணை மணப்பதற்கு ஒப்பானதுதான்” எனச் சொல்லி இருக்கிறார் சீமானின் தாய்.



மேதகு வே.பிரபாகரன் – மதிவதனி திருமணம் நடந்த அக்டோபர் முதல் தேதி சீமானின் திருமணமும் நடக்க இருக்கிறது. மிகப்பெரிய அளவில் விருந்துக்கு ஏற்பாடாகி வருகிறது. நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி உள்ளிட்ட ஈழ ஆதரவுத் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கும் இந்தத் திருமண விழாவை தலைமை ஏற்று நடத்த இருப்பவர் ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன்.


நன்றி - தாய்த்தமிழ்


சி.பி - மேலே சொன்ன இரண்டு செய்திகளில் எது உண்மை என்பது அக்டோபர் 1 அன்று தெரிந்து விடும்

THE DARK KNIGHT -நோலனின் ஆக்‌ஷன் கலக்கல் - சினிமா விமர்சனம்

http://www.thetechnicolourhour.com/storage/the_dark_knight_7.jpeg?__SQUARESPACE_CACHEVERSION=1342629197946ஓப்பனிங்க்லயே வில்லனின் அதிரடி ஆக்‌ஷன்.. பேங்க்கை பிரமாதமா கொள்ளை அடிக்கறாரு.. ஆ ராசா எல்லாம் தோத்துப்போகனும். இவரோட கேரக்டர் புரட்சித்தலைவி மாதிரி, காரியம் ஆகிற வரை நட்பு, கூட்டணி , காரியம் முடிஞ்சதும் கழட்டி விட்டுடனும்.. அம்மா கட்சிக்கூட்டணில இருந்து கழட்டி விடுவாங்க.. இந்த வில்லன் உலகத்தை விட்டே கூட்டாளிங்களை அனுப்பிடுவார்.. பேங்க் கொள்ளை நடக்கறவரை கூட்டாளிங்க கூடவே இருக்கறவர் கொள்ளை நடந்ததும் எல்லாரையும் போட்டுத்தள்ளிட்டு பணத்தோட எஸ் ஆகறார்.. 


இவர் ஏன் ஜோக்கர் மாதிரி, ருத்ரா படத்துல பபூன் கே பாக்யராஜ் மாதிரி, அபூர்வ சகோதரர்கள்  குள்ள அப்பு மாதிரி மேக்கப் போட்டிருக்காரு? அதுக்கு ஒரு குட்டி ஃபிளாஸ் பேக்.  போர் அடிக்காது,.,. காரணம் அது ஒரு குட்டியோட ஃபிளாஸ்பேக்.



வில்லன் ஒரு ஃபிகரை லவ் பண்றாரு.. அதும் தான்.. எவனோ ஒரு பொறம்போக்கு வில்லன் காதலி மேல ஆசிட் ஊத்தினதால ஃபிகர் முகம் அகோரம் ஆகிடுது.. வில்லன் ஏழை.. பிளாஸ்டிக் சர்ஜரி பண்ண பணம் இல்லை.. காதலி முகம் இப்படி இருக்கே? நாம மட்டும் அழகா இருந்தா எப்படி?ன்னு தன் வாயை கிழிச்சு விட்டுக்கறாரு.. சொல்லாமலே படத்துல லிவிங்க்ஸ்டன் நாக்கை கட் பண்ணிக்கற மாதிரி.


இதனால அந்த காதலி வில்லன் மேல இரக்கப்படும்னு பார்த்தா அது நயன் தாராவை விட பெரிய கே டி போல.. தானா வந்து கூப்பிட்டா தி முக.. வெளீல போன்னு துரத்துனாலும் அதிமுக என கூட்டணிக்காக தன் கொள்கைகளை, மானம், மரியாதை ரோஷத்தை எல்லாம் கவனிக்காத டாக்டர் ராம் தாஸ் அய்யா மாதிரி வேற ஒருத்தன் கூட காதல் கூட்டணி போட்டுடுது.. அதனால வில்லனுக்கு செம கோபம்.. தளபதி படத்துல ரஜினி சொல்றாரே? வெறும் பணம்.. அந்த பணத்துக்காகத்தானே  அவ உதறினா? பணம் சம்பாதிக்கனும்கற வெறில இருக்கறவன் தான் வில்லன்.. 



http://cdn.breitbart.com/mediaserver/Breitbart/Big-Hollywood/2012/07/20/dark-knight-review/the-dark-knight-rises-thumb-550x395-47864.jpg


இப்போ ஹீரோவை பார்ப்போம்.. பேட்மேன்.. நகரத்துல இருக்கற ரவுடிங்க, கேடிங்க, திருட்டுப்பசங்க, மொள்ளமாரிகளை ஒழிக்கறதுதான் இவர் லட்சியம்.. போலீஸ் இவருக்கு உதவி செய்யுது,.. சரி நம்மாலதான் முடியல.. அவருக்கு உதவி செஞ்சா  அந்த புண்ணியம், பேரு நமக்கும் கொஞ்சம் கிடைக்கட்டும்னு தான்.. அதனால நகர மேயர் பேட்மேனுக்கு நிறைய ஹெல்ப் பண்றார்.. 


மாஃபியா கேங்க் உடைய மீட்டிங்க் நடக்குது.. அங்கே வில்லன் அழையா விருந்தாளியா போறாரு..  உங்க எல்லா பிரச்சனைக்கும் பேட்மேன் தான் காரணம்.. நான் அவனை போட்டுத்தள்ளிடறேன்.. அப்டினு அதுக்கு ஒரு ரேட் பேசறான்.. 

 பேங்க்ல இருந்து கொள்ளை அடிக்கப்பட்ட 16 மில்லியன் டாலரையும் 5 வெவ்வேற பேங்க்ல போட்டு வெச்சிருக்காங்க,.,. அந்த 5 பேங்க்கையும் சீஸ் பண்ண மேயர் உத்தரவு போடறார்.. 


வில்லனுக்கு செம கோபம்.. பேட்மேனை சரண்டர் ஆக சொல்லுங்க.. இல்லைன்னா வி ஐ பி களை கொலை பண்ணுவேன்னு மிரட்டறான்.ஹீரோவுக்கும், வில்லனுக்கும் நடந்த மோதல்ல யார் ஜெயிக்கறாங்க என்பதை ஒரு நிமிடம் கூட போர் அடிக்காம பர பர ஆக்‌ஷன் ஜால வித்தை காட்டி இருக்காரு,.. 

 இந்த படத்தை தமிழ்ல எடுத்தா வில்லன் கேரக்டர்க்கு ரெண்டே சாய்ஸ் தான் 1. கமல் 2 சத்யராஜ்

படத்துல ஓவர் டாமினேஷன் வில்லனுக்குத்தான்.. பல காட்சிகளில் அப்ளாஸ் அள்ளறார் . இவர் தான் ஹீரோ மாதிரி.. எந்த இடத்துலயும் இவரை ஹீரோவால ஓவர்டேக் பண்ணவே முடியல.. திரைக்கதை அமைப்பு அப்படி..ஆனா முக பாவனைகள் சரியா தெரியல. மேக்கப் அப்படி.. 



பேட்மேனா வர்ற ஹீரோவும், மேயரா வர்ற செகண்ட் ஹீரோவும் கனகச்சித நடிப்பு. ஹீரோயின் சராசரி ஃபிகர் தான்.. நோலன் பொதுவா ஹீரோயின் செலக்சன்ல அதிக ஆர்வம் காட்டுவதில்லை போல. 


http://www.toplessrobot.com/dark-knight-7.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1. கொலை, கொள்ளைன்னு நாம இருந்தாலும் அதுலயும் நேர்மை, நியாயம் எல்லாம் வேணும்.


2.  விக்கறது டிரக்ஸ். அதுல மேனுஃபேக்சரிங்க் டேட், எக்ஸ்பயரி டேட் எல்லாம் போட்டா விக்க முடியும்?என் கிட்டேயே கம்ப்ளைண்ட் பண்றீயா?



3. ஃபேக் ஐ டி ஆஃப் பேட் மேன் - (FAKE ID OF THE BAT MAN ) உங்களுக்கும், எங்களுக்கும் என்ன வித்தியாசம்? எல்லாரும் நியாயத்துக்காக போராடுறோம்?


ம்.. பாலுக்கும், கள்ளுக்கும் உள்ள வித்தியாசம் தான்


4. ஒவ்வொரு தப்பும் ஒவ்வொரு அனுபவம் தரும்


 அப்போ உங்க உடம்பு பூரா அனுபவமா?



5. கூட இருக்கற என்னாலயே உங்களை புரிஞ்சுக்க முடியலையே?


புரிஞ்சுக்காம இருக்கறதுதான் நல்லது



6. சின்ன மீனை வெளீயே விடுவோம், திமிங்கிலம் மாட்டாமயா போயிடும்?


7. ஃபேஷன் முக்கியம் இல்லை, ஃபங்க்‌ஷன் தான் முக்கியம்


8. செத்தா ஹீரோவாத்தான் சாகனும்.. ரொம்ப நாள் வாழ்ந்தா வில்லனாதான் நம்மை நாமே பார்க்க வேண்டி வரும்


9. வில்லன் - BAT MAN  - இந்த சிட்டியை உஜாலாவுக்கு மாற்ற நினைக்கும் BAD MAN


10 . இந்த உலகத்துல எதுவுமே ஃப்ரீயா கிடைக்காது



 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-CqMGOkd2_z40acDFddpxowALKSPZ-9idIAM7tHopgT5HCjpJWv-qA-CnTM-fJKAr11U-Cd_nT6ESH9lty9Ne9Z20iyt9naB380hIDxoEnFpDwea_KOjiDK_R8CHHcraK3_y83m7kxwGl/s400/Batman+The+Dark+Knight+movie+costumes+-+Clown+masks.JPG



11. என்னை அரெஸ்ட் பண்ணா என் ஃபிரண்ட்ஸ் உன்னை சும்மா விடமாட்டாங்க.. 


அதுக்கு அவசியமே இல்லை, உன் எல்லா ஃபிரண்ட்ஸ்சும்  உன் கூட ஜெயில்ல களி சாப்பிட வர்றாங்க. 


12.  பெரிய தலைவர்கள்னா போலீஸ் அரெஸ்ட் பண்ணுனதும் நெஞ்சு வலின்னு சொல்லிக்கிட்டு எஸ் ஆகிடலாம்.. இந்த இடைல இருக்கற ஆள்ங்களுக்குத்தான் கஷ்டம்.. பெயில் எல்லாம் கிடைக்காது


13. உங்களுக்கு தெரிஞ்சு அவளுக்கு எக்ஸ் பாய் ஃபிரண்ட்ஸ் இருக்காங்களா?

 என்னைகேட்டா எப்படி? அவளையே கேளுங்க.


14.  மனுஷனா பிறந்தா சாவு நிச்சயம்.. இப்போ நான் செத்துட்டா நீ யார் கூட வாழ்வே?

 வேற ஏதாவது பேசலாம்.  ஐ வாண்ட் டூ ஸ்கிப்


15.  அடப்பாவிகளா? கதவைத்தட்டிட்டு வர மாட்டீங்க? நல்ல வேளை , ஏதும் பார்க்கலை.. 


16. நீங்க என் அப்பா மாதிரியே இருக்கீங்க... ஆனா எனக்கு எங்கப்பாவை பிடிக்காது.


17. சில பேருக்கு எதுவுமே பெருசா தெரியாது.. பணம், புகழ், பேரு, மரியாதை.. இப்படி. எதையும் சட்டை பண்ணிக்க மாட்டாங்க..ஆனா சிலருக்கு இந்த உலகம் தீப்புடிச்சு எரியனும்.. நான் 2 வது கேட்டகிரி ( விருதகிரியை விட மோசமான ஆள் போல )


`18.  சில விஷயங்கள் சிலருக்கு தெரியாம இருக்கறதே நல்லது


19. உனக்குன்னு சில ரூல்ஸ் இருக்கு.. ஆனா இந்த ஜோக்கருக்கு ரூல்ஸே இல்லை.. 


20.  உன் முகமூடியை கழட்டு, அவளே தேடி வருவா.. 



http://thebatmanuniverse.net/image/Merchandise/News/07-Hot%20Toys/TDKR%20Batman/Announcement.jpg



21. தலை விழுந்தா உன் தலை தப்பும், பூ விழுந்தா சங்குதாண்டி.. 


22. மனுஷனோட உயிரை எடுக்க  நமக்கு உரிமை இல்லை.. 

 ம், ஆனா இவன் மனுஷனே கிடையாது


23. இந்த வண்டி புல்லட் புரீஃப் தானே?

 ஆமா. ஆனா ராக்கெட் லான்ச்சர்க்கு எல்லாம் தாங்காது

 அடடா..  நான் வேற வீட்ல சொல்லாம வந்துட்டேனே?


24. பேட்மேன் தான் உங்களை காப்பாத்துனாரா டாடி?

 சொல்லப்போனா இந்த தடவை நான்தான் பேட்மேனை காப்பாத்துனேன்


25. தகுதியானவன் கூடத்தான் விளையாடனும்.. நான் உன் ரேஞ்சுக்கு திங்க் பண்றேன், நீ என் ரேஞ்சுக்கு திங்க் பண்ணு


26. இந்த ஜனங்க அட்டை மாதிரி, தேவைப்படும்வரை நம்ம கூடவே இருந்து நம்ம ரத்தத்தை உறிஞ்சிக்குவாங்க



27. இந்த உலகத்துல வாழனும்னு நினைச்சா  எந்த ரூல்ஸும்  வெச்சுக்கக்கூடாது

28. சாகறதுக்கு முன்னால தான் ஒவ்வொரு மனுஷனும் தன் உண்மையான சொரூபத்தை காட்டுவான்


29. காரைத்துரத்தும் நாய் மாதிரிதான் நான்./. துரத்தும் வரை துரத்துவேன், ஆளை பிடிச்சுட்டா அப்புறம் என்ன பண்றதுன்னு தெரியாது எனக்கு  


30. எல்லாமே போட்டு வெச்ச பிளான் பிரகாரம் செஞ்சா பயம் போயிடும்




http://www.gadgetreview.com/wp-content/uploads/2011/10/Maggie-Gyllenhaal-Dark-Knight.jpeg

31. மனுஷன் புத்தி குரங்கு புத்தி, அடிக்கடி மாறிட்டே இருக்கும்



32. இந்த உலகம் மோசமானது, நம்மால நல்லவனா வாழ முடியாது, வாழ விட மாட்டாங்க.. 


33. சில நேரங்கள்ல உண்மை வெளில வராம இருக்கறதே நல்லது,உண்மையை விட கற்பனைக்கு பவர் ஜாஸ்தி..  மக்களோட நம்பிக்கைக்கு பலன் கிடைச்சே ஆகனும்


34. அவர் ஏன் ஓடறார்?

 அப்போதானே நாம அவரை துரத்திட்டு போக முடியும் ?



http://0.static.buzzine.com/sites/default/files/imagecache/780x441/MaggieGyllenhaal_071608_784.jpg



இயக்குநர் பாராட்டு  பெறும் இடங்கள்


1. டெட் பாடியில் செல் ஃபோன் இருப்பதும் அந்த ஃபோனுக்கு கால் பண்ண வில்லன் ஜெயில் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி ஃபோன் பண்ணுவதும், பாம் பிளாஸ்ட்டிங்கும்


2. சிறைக்கைதிகள் ஒரு போட்ல , பொது மக்கள் ஒரு போட்ல  2 போட்டையும் வெடிக்க வைக்கும் ரிமோட் பரஸ்பரம் ஆப்போசிட் கேங்க்ல.. யார் முதல்ல அமுக்கறாங்களோ அவங்க உயிர் பிழைக்கலாம்.. இந்த KNOT செம.. திரையில் ஆடியண்ஸிடம் டெம்ப்போ ஏற்றும் நல்ல உத்தி



3. பேட்மேனாக சரண்டர் ஆகும் போலீஸ் ஆஃபீசர் பொலீஸின் திட்டத்தை தன் காதலியிடம் சொல்லாமல் மறைத்து பின் பதறும் காதலியை சமாதானபப்டுத்தும் சீன்.. 


4. படம்முழுக்க விரவி நிற்கும் பிரமாண்டம்.. காட்சி அமைப்புகள், பிரமிக்க வைக்கும்  நுணுக்கமான திரைக்கதை அமைப்பு.. ஒளிப்பதிவு, பின்னணி இசை.. வில்லனுக்கு அளிக்கப்பட்ட அபரித முக்கியத்துவம்


5. க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்.. 





http://www.empireonline.com/images/features/recast-movie-characters/rachel-dawes.jpg
இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ்..



1.  தான் தான் பேட் மேன்னு நாடகம் ஆடி போலீஸ் ஆஃபீசர் சரண்டர் ஆகறார்.. அவரை யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டாங்களா? என்ன புரூஃப்னு கேட்க மாட்டாங்களா? அட்லீஸ்ட் பேட் மேன் டிரஸ் போட்டுட்டு பறந்து காட்டுன்னு சொல்ல மாட்டாங்களா? நிருபர்ங்க அத்தனை பேர் கூடி நின்னும் எந்த கேள்வியும்  கேட்கப்படலையே?



2. ஓப்பனிங்க் ஷாட்ல கொள்ளை அடிக்கபட்ட பேங்க்லயே எல்லா கூட்டாளிகளையும் ஏன் போட்டுத்தள்ளனும்? பாதுகாப்பா வண்டி வில்லன் இடத்துக்கு வந்த பின் போட்டிருக்கலாமே? வில்லன் இன்னொரு வண்டில வழில வந்து வழி மறிச்சு  கொள்ளை அடிகப்பட்ட வேனை ஆக்சிடெண்ட் மாதிரி செட் பண்ணி இருக்கலாமே?


3. ஒரு சீன்ல பேட் மேன் கண்ணாடி ஜன்னலை உடைச்சுட்டு உள்ளே குதிக்கறார். அப்போ ஒருத்தன் கைல கன்னோட வேடிக்கை பார்த்துட்டு இருக்கான்.. அப்பவே சுட்டு இருக்கலாம்..  பேட்மேன் ரூமுக்குள்ள எண்ட்டர் ஆகி திரும்பும் வரை வேடிக்கை பார்த்துட்டு அவர் சுதாரிச்சு எழுந்த பின் சுட முயற்சிப்பது அபத்தம். நம்ம ஊர்ல 40 அடியாளுங்க டோக்கன் சிஸ்டம் மாதிரி ஒவ்வொரு ஆளா ஹீரோவைமுறை வெச்சு அடிக்கற மாதிரிதான் இதுவும்


4. வில்லனோட கை ரேகை துப்பாக்கிக்குண்டோட ஒரு பகுதில போலீஸ்க்கு கிடைக்குது.. கிளவுஸ் போட்டிருந்தும் எப்படி ரேகை மாட்டுச்சு? 


5. வில்லன் தன் சுய சரிதையை எதுக்கு ஒரு ஆள் பாக்கி விடாம சொல்லிட்டே இருக்காரு? 

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXirrNT_hCUNF1cfTxfrsjm8280qis12_tuMQNQxnhZ7JSzpwR1msUkJhbutG1jklOD5WXJ0ATSHQ0oUdI0WDFhG4g_HURDzM67Ld-SPadJNvpXTTkecQMNmQpobeYOvHD-B41ak_Olrg/s400/christopher+nolan.jpg




சி.பி கமெண்ட் - ஆக்‌ஷன், அதிரடி பிரியர்கள், குழந்தைகள், பெண்கள் என அனைவரும் பார்க்க்லாம்,., செம ஸ்பீடு படம்..  சன் டி வில சண்டே அன்னைக்கு பார்த்தேன், இதன்  அடுத்த பாக விமர்சனம் படிக்க http://www.adrasaka.com/2012/07/tthe-dark-knight-rises.html


ட்ரெய்லர் -

 தொழில் நுட்பகலைஞர்கள்
Directed by Christopher Nolan
Produced by Christopher Nolan
Emma Thomas

Charles Roven
Screenplay by Jonathan Nolan
Christopher Nolan
Story by Christopher Nolan
David S. Goyer
Based on Characters by
Bob Kane
Starring Christian Bale
Michael Caine

Heath Ledger

Gary Oldman

Aaron Eckhart

Maggie Gyllenhaal

Morgan Freeman
Music by Hans Zimmer
James Newton Howard
Cinematography Wally Pfister
Editing by Lee Smith
Studio Legendary Pictures
Syncopy Films

DC Comics
Distributed by Warner Bros. Pictures
Release date(s)
  • July 14, 2008 (New York City)
  • July 18, 2008 (United States)
Running time 152 minutes[1]
Country United States
United Kingdom[2]
Language English
Budget $185 million[3]
Box office $1,001,921,825[3]