Showing posts with label EEZAM. Show all posts
Showing posts with label EEZAM. Show all posts

Wednesday, September 12, 2012

ஈழ விவகாரம் - உணர்ச்சி அரசியல் - ஓ பக்கங்கள் ஞானி @ கல்கி

பக்கங்கள்

உணர்ச்சி அரசியல் கூடாது!

ஞாநி

இந்தக் கட்டுரையை மிகுந்த மன வருத்தத்துடன் எழுதுகிறேன், இதற்காக ஒரு சிலரின் வசைகளும் அவதூறுகளும் வருமென்ற போதிலும். உண்மைகள் கசக்கும் என்பதற்காக அவற்றைச் சொல்லாமல் இருப்பதற்கில்லை. தமிழ்நாட்டில் கால்பந்து விளையாட வந்த இலங்கைச் சிறுவர்களையும், தேவாலயத் திருவிழாவுக்கு வந்த இலங்கை பக்தர்களையும் துரத்தியடித்த நிகழ்வுகள் நிச்சயம் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கக்கூடியவை அல்ல.
இலங்கையில் நடந்த யுத்தத்தில் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் காரணம் காட்டி இங்கே இலங்கையைச் சேர்ந்த சிங்களர் வரக் கூடாது என்று போராடுவது அர்த்தமற்றது; அநீதியானது.
போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியது இலங்கை அரசுதான். இலங்கை மக்கள் அல்ல. இலங்கை அரசின் உச்ச அடையாளமான ராஜபட்சேவையும் அவரது சகாக்கள் கோத்தபாயா, பொன்சேகா முதலியோரையும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவதற்கு வழிகள் என்ன என்றுதான் யோசிக்க வேண்டும்.
அரசையும் பொதுமக்களையும் பிரித்துப் பார்க்கக்கூடத் தெரியாதவர்கள் அரசியல் செய்வதுதான் இந்தச் சிக்கல்களுக்குக் காரணம். பாகிஸ்தான் அரசு பல விதங்களில் இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களைச் செய்வோருக்கு ஆதரவும் தூண்டுதலும் அளித்துவருகிறது என்பதை இந்தியா பல முறை நிரூபித்திருக்கிறது. அதற்காக அந்த அரசின் மீது நடவடிக்கையைக் கோரி வந்திருக்கிறது. ஆனால் அதற்காக பாகிஸ்தானின் சாதாரண மக்களுடன் நாம் விரோதம் பாராட்டுவதில்லை. பல பாகிஸ்தான் நோயாளிகள் சென்னை வரை வந்து மருத்துவச் சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள். இதே அணுகுமுறையைத்தான் நாம் இலங்கையின் சிங்கள மக்கள் விஷயத்திலும் பின்பற்றவேண்டும்.

சாதாரண சிங்கள மக்களையும் எதிரியாகத்தான் பார்ப்போம் என்று ஒரு தமிழ்த் தேசிய அமைப்பின் பிரமுகர் தொலைக்காட்சி விவாதத்தில் சொன்னார். காரணம் அவர்கள்தான் ராஜபட்சேவைத் தேர்தலில் ஜெயிக்க வைத்தவர்கள் என்றார். இந்த விசித்திரமான அணுகுமுறையை ஏற்றுக்கொண்டால், தமிழகத்தில் ஊழலின் உச்சங்களான கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் திரும்பத் திரும்ப தேர்தல்களில் தேர்வு செய்யும் தமிழக மக்களை அதற்காகத் தண்டிக்கவேண்டும் என்றாகிவிடும். தேர்தல்களில் மக்கள் வாக்களிப்பது பல அம்சங்களைப் பொறுத்தது.
இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும் விளையாட்டு வீரர்களையும் மிரட்டித் திருப்பி அனுப்புபவர்கள், இலங்கையில் நடந்த போரில் இலங்கை அரசுக்கு உடந்தையாக இருந்த இந்திய அரசின் பிரதமரை தமிழ்நாட்டுக்கு வராதே என்று தடுப்பதில்லை. அப்பாவிகளான சுற்றுலாப் பயணிகளை மிரட்டுவது தான் அவர்களுக்கு எளிமையான அரசியல்.
ஜெயலலிதாவும் கருணாநிதியும் தங்கள் அரசியல் போட்டிக்காக ஈழத்தமிழர் பிரச்னையை வழக்கம் போல் மேலும் குழப்புகிறார்கள். ஜெயலலிதா அரசு இலங்கையின் கால்பந்து சிறுவர்களைத் திருப்பி அனுப்பியதும் அவர்கள் விளையாட அரங்கை அளித்த தமிழக அதிகாரியை இடைநீக்கம் செய்ததும் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச விளையாட்டு ஒப்பந்தங்களுக்கு விரோதமானது.

இன்னொரு பக்கம் நூற்றுக்கணக்கான தமிழர்கள், வணிகத்துக்காகவும், சுற்றுலாவுக்காகவும் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குப் போய் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இங்கே வரும் சிங்கள சிறுவர்களைத் திருப்பி அனுப்பும் ஜெயலலிதாவால், இங்கிருக்கும் தமிழர்கள் யாரும் எதற்கும் இலங்கைக்குச் செல்லக்கூடாது என்று தடுத்துவிட முடியுமா? இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடக்கும் வர்த்தகத்தில் அங்கிருந்து இறக்குமதியாவதைவிட நான்கு மடங்கு அதிக மதிப்புக்கு இங்கிருந்து ஏற்றுமதி நடக்கிறது. தமிழகத்திலிருந்து கார்களும் பஸ்களும் இலங்கைக்கு ஏற்றுமதியாகின்றன.
சீனா இந்தியாவின் எதிரி நாடு. அதற்கு இலங்கை அரசு பெருமளவில் இடமளித்து வருகிறது. எனவே இலங்கை மக்களும் அதிபரும் இந்தியாவுக்கு வருவதைத் தடுக்க வேண்டும் என்று இன்னொரு தமிழக அரசியல் பிரமுகர் ஒருவர் தொலைக்காட்சியில் பேசினார். சீனா எதிரியா, அல்லது அமெரிக்காவால் நமது எதிரியாக ஆக்கப்படுகிறதா என்பது இன்னொரு ஆய்வுக்குரிய விஷயம். ‘எதிரியான சீனாவுடன் இந்தியா பெரும் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. அண்மையில் சீனாவுடன் கூட்டாக ராணுவப் பயிற்சிகளில் கூட ஈடுபட ஒப்பந்தம் போட்டிருக்கிறது. சீன அமைச்சர்கள் இந்தியாவுக்கு வந்து போகிறார்கள்.

உலக அரசியல் என்பது வேறு தளத்தில் செயல்படுவது. மறைமுகப் போர் நடத்தும் நாட்டுடன் கூடப் பேச்சுவார்த்தையும் வர்த்தகக் கலாசார உறவுகளும் துண்டிக்கப்படுவதில்லை. சாதாரண மக்கள் இடையே பரிமாற்றங்கள் எப்போதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும்; இருக்க வேண்டும். அதுதான் புரிதல் உணர்வை அதிகப்படுத்த உதவும். அரசுகளின் அராஜகங்களை இரு தரப்பு மக்களிடமும் அம்பலப்படுத்த, இரு தரப்பு மக்களிடையேயும் உறவுகள் தேவை.
ராஜபட்சே முதலானோரை அம்பலப்படுத்த நீதியின் முன் நிறுத்த இலங்கை மக்களின் ஆதரவையும் திரட்டுவது அவசியம். ஏற்கெனவே பல சிங்கள மனித உரிமையாளர்கள் பகிரங்கமாகவே ராஜபட்சே அரசை விமர்சித்து வருகிறார்கள். சிங்கள இன வெறியர்களால் எரிக்கப்பட்டு மீண்டும் எழுப்பப்பட்ட யாழ்நூலகத்துக்கு தம் நூல்கள் எல்லாவற்றையும் உயில் எழுதி வைத்திருந்தார் ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் தலைவர் பீட்டர் கெனுமன்.
ஈழத்தமிழர்களுடன் இணக்கத்தை விரும்பும் பல சிங்கள சக்திகள் இருக்கின்றன. தமிழகத்துக்கு வரும் சிங்களச் சுற்றுலாப் பயணிகளை மிரட்டி விரட்டுவது போன்ற செயல்கள் அவர்களை அந்நியப்படுத்தும். அங்குள்ள இனவெறியாளர்களுக்கே இது உதவியாக இருக்கும். எப்படி இந்துத்துவ வெறியர்களும் அல்-உம்மா தீவிரவாதிகளும் ஒருவரையொருவர் வளர்க்க உதவுகிறார்களோ அதுதான் நடக்கும். இடையில் சிக்கி சாதாரண மக்களே வீணாக அழிவர். உணர்ச்சிவசப்பட்டு சாதாரண மக்களைத் துரத்துவது ஈழத்தமிழருக்கும் உதவாது; இங்குள்ள தமிழருக்கும் உதவாது.
ஈழத்தமிழர் பிரச்னைக்குத் தீர்வு வேண்டுமென்றால் முதலில் கருணாநிதி ஜெயலலிதா முதலானோரின் உள்ளூர் அரசியலிலிருந்து இந்தப் பிரச்னை பிரிக்கப்பட வேண்டும்.
இன்று ஈழத்தமிழர்களின் முதன்மை தேவை என்ன?

உடனடியான மறுவாழ்வு, கல்வி, வேலைவாப்புகள். அடுத்த கட்டமாக சமமான அரசியல் உரிமைகள். இவை நிகழவேண்டுமானால் இந்திய அரசு உள்ளிட்ட பல நாட்டு அரசுகள் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். இந்திய அரசைத் தெளிவான நிலை எடுக்க செய நிர்ப்பந்திக்கத்தான் தமிழக அரசியல் சக்திகள் முயற்சிக்க வேண்டும். சுற்றுலாப் பயணி களைத் துரத்துவது எந்த விதத்திலும் இந்திய அரசின் மீது நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தாது.
ராஜபட்சே இந்தியாவுக்கு வருவதைத் தடுத்துவிடுவதாலோ ரத்துச் செய்துவிடுவதாலோ ஈழத்தமிழர்களின் பிரச்னைக்குத் தீர்வு வரப்போவதில்லை. ஒரு பக்கம் நம் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் தெரிவித்தபடியே மறுபக்கம் சர்வதேசப் பின்னணியிலான பேச்சு வார்த்தைகள் மூலம் காய் நகர்த்துவது தான் உலக அரசியலின் வழிமுறை. ராஜபட்சேவுக்கு நம் கண்டனத்தைத் தெரிவிக்க கறுப்புக் கொடியும் காட்டவேண்டும். மன்மோகனுடன் பேசும்போது ஈழத் தமிழருக்கான அரசியல் உரிமைக்கான நடவடிக்கை பற்றி அழுத்தத்தையும் தரவேண்டும். இதுதான் யதார்த்த அரசியல்.
தங்கள் சக்தியை சாதாரண மக்களைத் துன்புறுத்துவதில் செலவழிக்காமல், ஆக்க பூர்வமாகச் செய்ய இங்கேயே நிறைய வேலைகள் இருக்கின்றன. சுமார் முப்பதாண்டுகளாகத் தமிழ்நாட்டில் இருக்கும் ஈழத்தமிழர்களின் அகதி முகாம்களைப் போர் முடியும்வரை எட்டிக்கூடப் பார்க்காமல் இருந்தவர்கள் எல்லாம் இப்போதாவது அவற்றில் கூடுதல் கவனம் செலுத்தலாம். மத்தியப்பிரதேசம் போய் ராஜபட்சேவுக்குக் கறுப்புக்கொடி காட்டத் தயாராக இருப்போர், செங்கல்பட்டிலும் பூந்தமல்லியிலும் சிறப்பு முகாம் என்ற தவறான பெயரில் குற்றச்சாட்டோ விசாரணையோ இன்றி இருபது வருடங்களாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் கறுப்புக் கொடி காட்ட இதுவரை முற்படாதது ஏன்?

ஈழத்தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண தமிழக அரசியல்வாதிகள் உண்மையிலேயே உதவ நினைத்தால், ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ, ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன்... எல்லாரும் தங்கள் ஈகோக்களை கழற்றி வைத்துவிட்டு, ஒரு முறையேனும் நேரில் சந்தித்து உட்கார்ந்து கூடிப் பேசி தாங்கள் ஒருமித்த குரலில் சொல்வது என்ன என்பதை தில்லிக்குத் தெரிவிக்க முன் வரட்டும்; வரமாட்டார்கள். காவிரி, முல்லைப் பெரியாறு, ஈழத்தமிழர் பிரச்னை எல்லாமே அவர்களுடைய உள்ளூர் அரசியலுக்கான தீனிகளே; அசல் அக்கறைகள் அல்ல.
மறுபடியும் ஆயுதப் போராட்டம், இன்னாரு யுத்தம், அதில் வென்று தனி ஈழம் அமைத்தல் என்பவை சிலருக்குச் சுகமான கனவுகளாக இருக்கலாம். ஆனால் முப்பதாண்டுகளாக வலியிலும் மரணத்துள்ளும் வாழ்ந்து எஞ்சிப் பிழைத்திருக்கும் மனங்களுக்குத் தேவைப்படுவது சுயகௌரவமும் சுயசார்பும் உள்ள ஒரு வாழ்க்கை. அதை சாதிக்கத் தேவைப்படுவது தெளிவான, நிதானமான, பொறுப்பான அரசியல் முயற்சிகள்தான். கொடுமைகளைக் கண்டு உணர்ச்சிவசப்படும் மனம் நிச்சயம் வேண்டும். ஆனால் அந்த மனம் விரும்பும் தீர்வுகளைப் பெற அறிவார்ந்த அரசியல் மட்டுமே உதவும்.




நன்றி - ஓ பக்கங்கள் , கல்கி, ஞானி , புலவர் தருமி

Thursday, July 26, 2012

சீமான் மேரேஜ் - வெளி வராத மர்மங்கள், விஜயலட்சுமிக்கு அல்வா

http://www.eutamil.com/wp-content/uploads/2011/04/29Seemaan.jpg 

தலைவர் பிரபாகரன் திருமண நாளான அக்டோபர் 1-ம் நாள் என் திருமணமும் நடக்கும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார் !

ஆம்.. அக்டோபர் ஒன்றில் எனது அண்ணன் பிரபாகரனுக்கும் அண்ணி மதிவதனிக்கும் திருமணம் நடந்த தினம். அன்று திருமணம் செய்துகொள்வது என்ற முடிவிலிருக்கிறேன்.  பெண் யாரெனத்தான் இன்னும் தெரியவில்லை. எப்படியும் அதற்குள் பெண்தேடும் படலம் முடிந்துவிடும். இத்தனை லட்சம் பெண்களில் எனக்கென்று ஒரு பெண் கிடைக்காமலா போய்விடுவாள் ? என்று இந்திய ஊடகம் ஒன்றிற்கு கூசாமல் பொய்யுரைத்துள்ளார் சீமான் என்றால் நம்புவீர்களா ?


சரி சீமான் உண்மை சொல்கிறாரா இல்லையா என்பதனை எவ்வாறு அறிய முடியும் ? முதலில் ஒரு யதார்த்தத்தை நாம் உணரவேண்டும். தற்போது ஜூலை மாதம் முடிவில் உள்ளோம். ஆகஸ்ட், செப்டெம்பர், அக்டோபர் 1ம் திகதி என்று பார்த்தால் 60 நாட்களே உள்ளது. இந்த 60 நாட்களில் சீமான் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் முடிகப்போகிறாராம். ஆனால் அது யார் என்று அவருக்கே தெரியாதாம் ! நாம் தமிழர் கட்சியை நடத்தும் தலைவர் அவர் ! ஒரு மாநாடு நடக்க 3 மாதங்களுக்கு முன்னரே பிளான் போடும் அவர் தனது வாழ்க்கை துணை யார் என்று தெரியாது, ஆனால் அக்டோபர் 1ம் தேதி கல்யாணம் என்று சொல்கிறாரே நம்பக்கூடிய வகையிலா இது இருக்கிறது ?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYHKbC4AalJf3TF_-keayBJ8Dg0HJBERSCvezxjWmFU1S8JzXwEkG2N6olc94xBa9SmozbIGJI6NbviJXnuSfJaLOQxulMUNQp-CsUDIWL29aU3kgykjztO-_Jfa0WjMncqN3YZ6l3rjs/s1600/se+v+5.jpg

வன்னியில் புலிகள் பலமாக இருந்தவேளை புலிகளின் ஊடகவியலாளராக இருந்த அழகான பெண் யாழ்மதி. இவர் குறிப்பாக ஆங்கிலச் செய்திகளை வாசிக்கும் ஊடகவியலாளர். சீமான் முதன்முதலாக இந்தப் பெண்ணை வன்னியில்தான் சந்தித்து இருந்தார். திரைப்படப் பிடிப்பு சம்பந்தமாக புலிகளுக்கு பாடம் எடுக்க சென்றவர், இந்த அழகான பெண்ணை கண்டு மயங்கி இருந்தார். தமிழ் தேசியத்தின் பெயரால் புலிப் பெண் ஒருவரை திருமணம் செய்ய விரும்புகின்றார் என்று இவர் தலைவர் பிரபாகரனுக்கு சொன்னார்.

ஆனால் குறிப்பிட்ட அப் பெண்ணை பிறிதொருவர் திருமணம் முடிக்க இருப்பதாக தலைவர் தெரிவித்து, அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அப் பெண் யாரும் இல்லை, புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் வலதுகரமாகத் திகழ்ந்த அலெக்ஸ் என்னும் அன்புமணி காதலித்தவர் ஆவார். பின்னர் இவர்கள் இருவருக்கும் திருமணம் நிகழ்ந்தது. ஆனால் நான்கே மாதத்தில் அலெக்ஸ் மற்றும் சு.ப. தமிழ்ச்செல்வன் ஆகியோர் விமானத் தாக்குதலில் இறந்தனர். பின்னர் 2009ம் ஆண்டு யாழ்மதி இராணுவத்திடம் சரணடைந்தார்.


இவர் இவர் இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை எப்படியோ மோப்பம்பிடித்த சீமான், இலங்கையில் உள்ள துணை ஆயுதக் குழு ஒன்றுக்கு பெருந்தொகைப் பணத்தை இலஞ்சமாக கொடுத்து அன்புமணியின் முன்னாள் மனைவியான அழகான பெண்ணை(யாழ்மதியை) சிறையில் இருந்து மீட்டு இருக்கின்றார் சீமான்.

இந்தியாவில் அடைக்கலம் கொடுத்து வைத்திருக்கின்றார். சீமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாட்களில் கூட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த அன்புமணியின் முன்னாள் மனைவி எவ்வித குறைகளும் இல்லாதபடி பார்க்கப்பட்டார். தற்போது தமிழ் நாட்டில் மறைவாக வைக்கப்பட்டிருக்கும் இப் பெண்ணுக்கும் சீமானுக்கும் அக்டோபர் 1ம் திகதி திருமணமாக உள்ளது ! அதாவது ஒரு விதவைக்கு மறு வாழ்வு கொடுப்பது பாவம் என்று நாம் கூறவில்லை. இல்லையேல் ஒரு போராளியை இவர் காப்பாற்றியது தொடர்பாக நாம் விமர்சனம் தெரிவிக்கவில்லை.

http://cinemaulakam.com/images/vija_viyapu_170711.jpg


ஆனால் சீமான் தான் இன்னும் மணப் பெண்ணை பார்க்கவே இல்லை என்று ஏன் பொய்யுரைக்க வேண்டும் ? குறைந்த பட்சம் தான் ஒரு ஈழப் பெண்ணை தான் மணம் முடிக்க இருப்பதாக ஏன் அறிவிக்கவில்லை ? இதனைக் கூட துணிவாக அறிவிக்க வக்கில்லாத சீமான் எவ்வாறு தமிழீழத்துக்காகப் போராடப்போகிறார் ?

எவ்வாறு உண்மையுள்ளவராக இருக்கப்போகிறார் ? அன்புமனியின் மனைவியை மணப்பது நல்ல விடையம் ! ஆனால் அதனை அவரால் ஏன் நேர்மையாகத் தெரிவிக்க முடியவில்லை ? வாய் கிழிய கத்தும் அவர், இதனை மட்டும் ஏன் ஒரு கேவலமாக நினைக்கிறார் ? பெண் விடுதலை அவ்வளவு தானா ? இவ்வளவு நாளும் இவர் பேசிய வீர வசனங்கள் எல்லாம் பொய் தானா ? இனி ஈழத் தமிழர்கள் சீமானை எப்படி நம்புவது ?  ஒரு கருணாநிதி, ஒரு சுபவீரபாண்டியன், ஒரு தொல் திருமாவளவன், காங்கிரஸ் கட்சி நபர்கள், இவர்களைப் போல ஒரு உயிர் இல்லாத அரசியல் ஜடம் போல அல்லவா சீமான் மாறிவிட்டார் ?


உலகத் தமிழர்கள் எவ்வாறு இதனை ஏற்றுக்கொள்வார்கள் ? தமிழ் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் ஆரம்பத்தில் ஈழத் தமிழர்கள் பற்றிப் பேசி  அரசியல் செய்வதும், பின்னர் அரசியலில் முக்கியத்துவம் பெற்றதும் ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் நிலையில் தானா இன்னும் இருக்கிறார்கள் ? நாங்கள் இலங்கையில் அப்படியே செத்து மடிவதை தவிர வேறு வழியே இல்லையா ? இது தான் எங்கள் இனத்தின் சாபக்கேடா ? நாங்கள் எங்கள் உயிருக்கும் மேலாக நம்பியிருக்கும் தமிழ் நாட்டு உறவுகளே எங்களை அழிக்க உதவுவதா ? எங்கள் கண்ணில் மண்ணை வாரிப் போடுவதா ?


அதாவது சுருக்கமாகச் சொல்லப்போனால், தலைவர் நிராகரித்த பெண்ணை, தலைவர் மணம் முடித்த நாளில் மணம் முடித்து தேசிய தலைவர் முகத்தில் கரியைப் பூசுகிறார் சீமான் !


நன்றி - சம்பவம், முத்தமிழ் குழுமம்

செய்தி 2 


நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி திருமணம் செய்ய இருக்கிறார். மணமகள் முன்னாள் சபாநாயகரான மறைந்த காளிமுத்துவின் மகள் கயல்விழி. சென்னை அண்ணா நகரில் வசிக்கும் கயல்விழி காளிமுத்துவின் இரண்டாம் தாரத்து மகள். பட்டதாரிப் படிப்பை முடித்திருக்கும் கயல்விழி சீமானின் புரட்சிகரமான பேச்சில் மனதைப் பறிகொடுத்திருக்கிறார்.



நாம் தமிழர் கட்சியில் சேர விரும்பிய கயல்விழி அதுபற்றி பேசுவதற்காக சீமானை சந்தித்து இருக்கிறார். காளிமுத்துவின் மீது மிகுந்த மரியாதை கொண்ட சீமான் கயல்விழியை மனமார வரவேற்றதுடன் மட்டும் அல்லாமல், கயல்விழியின் தாயையும் சந்தித்து நன்றி தெரிவித்து இருக்கிறார். குடும்ப ரீதியான இந்த நட்புதான் ஒருகட்டத்தில் திருமணப் பேச்சு வரை நீண்டிருக்கிறது.


திருமணமே வேண்டாம் என்கிற நிலையில் இருந்த சீமான் மீது தேவையற்ற சர்ச்சைகளை சிலர் தொடர்ந்து ஏற்படுத்தி வந்தார்கள். விஜயலெட்சுமி என்கிற நடிகையைத் தூண்டிவிட்டு புகார் கொடுக்க வைத்தார்கள். அரசியலில் புதுப்புயலாக பரபரப்பு கிளப்பும் சீமான் மீது உளவுத்துறையும் இதர அரசியல் கட்சிகளும் சினிமாப் புள்ளிகள் சிலரும் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். அதனால் பெண் சம்மந்தமான புகார்களை இவர்கள் எந்த நேரத்திலும் சீமானுக்கு எதிராகக் கிளப்பக்கூடும். 



அதனால் திருமண வாழ்வில் அடியெடுத்து வைப்பதே சிறந்தது என சீமானுக்கு பலரும் அறிவுரை வழங்கினார்கள். இதற்கிடையில் சீமானுக்கு எதிராக பரபரப்பு கிளப்பிய விஜயலட்சுமி தன்னுடைய வழக்குகளை வாபஸ் பெறுவதாக சொல்லியிருக்கிறார்.



அதனால் இந்த சுபவேளையை தவறவிட விரும்பாத சீமான் காளிமுத்து மகள் கயல்விழியை திருமணம் செய்ய பரிபூரண சம்மதம் தெரிவித்திருக்கிறார். சிவகங்கை மாவட்டம் அரனையூரில் வசிக்கும் சீமானின் தாய் தந்தையர் இருவரும் இந்த திருமணத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். ”முகாம்களில் வாழும் ஈழ அகதிப் பெண்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து என் மகன் திருமணம் செய்வான் என எதிர்பார்த்தேன். ஈழ உணர்வு கொண்ட கயல்விழியை மணப்பது அகதிப் பெண்ணை மணப்பதற்கு ஒப்பானதுதான்” எனச் சொல்லி இருக்கிறார் சீமானின் தாய்.



மேதகு வே.பிரபாகரன் – மதிவதனி திருமணம் நடந்த அக்டோபர் முதல் தேதி சீமானின் திருமணமும் நடக்க இருக்கிறது. மிகப்பெரிய அளவில் விருந்துக்கு ஏற்பாடாகி வருகிறது. நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி உள்ளிட்ட ஈழ ஆதரவுத் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கும் இந்தத் திருமண விழாவை தலைமை ஏற்று நடத்த இருப்பவர் ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன்.


நன்றி - தாய்த்தமிழ்


சி.பி - மேலே சொன்ன இரண்டு செய்திகளில் எது உண்மை என்பது அக்டோபர் 1 அன்று தெரிந்து விடும்