Monday, July 09, 2012

ஜி. நாகராஜன் - ன் டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்-சிறுகதை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdVaPR7GczQIEhZN5Znw738T4f6zSQlkF3Ng8Q3byxxtAN0-Ac35Z8PdumvqD0yJJUoXHcSyyWQk2L0QeEr5vfpuXnekZEKMVjxZLtXQQvOzy9oRrmp7uIvTevpW0a7tIl_NsFup1UFNW1/s1600/Tomorrow+is+One+More+Day.jpg 

போலீஸ் ரெய்டு இருக்கலாம் என்று நம்பகமான தகவல் வந்திருந்ததால், கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் நிற்க வேண்டாம் என்றுவிட்டான் அத்தான். ‘ஓரு மாதத்துக்கு முன் வீட்டைவிட்டு ஓடிவிட்ட கமலாவைப் பற்றி ஒரு செய்தியும் இல்லை. ஓணத்துக்குப் பிறந்த ஊர் போயிருந்த சரசா இன்னும் திரும்பி வரவில்லை. வெளிக் கதவை அடைத்துவிட்டு ரேழியை அடுத்திருந்த அறையில் குழல் விளக்கொளியில் மெத்தைக் கட்டிலின் மீது தனியே உட்கார்ந்திருந்த தேவயானைக்கு அலுப்புத் தட்டிற்று.


ஏதோ நினைவு வந்தவளாய் ரேழியிலிருந்து படிக்கட்டுகளின் வழியே ஏறி மாடியறைக்குச் சென்று விளக்கைப் போட்டாள். அங்கு கீழறையைக் காட்டிலும் சற்று அதிகமான வசதிகள் இருந்தன. பலவகை அந்நிய நாட்டுப் படங்கள் சுவரை அலங்கரித்தன. அறையில் மிகப் பெரிய செட்டிநாட்டுக் கட்டில் ஒன்றும். அதன் மீது ‘டபில்’ மெத்தை ஒன்றும் சுவரோரமாக ,ருந்தன. ‘நைட் புக்கிங்’குக்கு மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்த அவ்வறை சென்ற ஒரு மாத காலமாக மனித நடமாட்டம் அற்றுக் கிடந்தது. கமலாவுக்குத்தான் ‘நைட் புக்கிங்’ ராசி அதிகம். தேவயானை கட்டிலின் மீது ,ருந்த மெத்தையை இலேசாகத் திருப்பி, அதன் அடியிலிருந்து ஒரு நீளமான அரை டூஞ்சு மணிக்கயிற்றை எடுத்தாள். அவள் ஊரிலிருந்து வரும்போது அவளது தாயார் அவளது படுக்கையைக் கட்டுவதற்குப் பயன்படுத்திய கயிறு அது. அறையின் நடுவில் நின்றுகொண்டு, கயிற்றின் உறுதியைச் சோதிப்பது போல அதைப் பலவிடங்களில் டூழுத்துவிட்டுக்கொண்டே, மேலே அறையின் நெற்றுக் கண்ணைப் பார்த்தாள்.


உத்திரத்தில் ஒரு இரும்பு வளையம் தொங்கிக்கொண்டிருந்தது. அது கட்டிலின் விளிம்புக்கு நேர் மேலே சற்று விலகி அமைந்திருந்தது. கட்டிலின் மீது நின்றுகொண்டு, கயிற்றைக் கொண்டு வளையத்தை எட்ட முடியுமா? நடுவில் இருந்த மெர்க்குரி விளக்கின் மேற்பாதி, ஒரு வளைந்த தகட்டினால் மறைக்கப்பட்டிருந்ததால், வளையம் தெளிவாகக் கண்களுக்குக்குப் படவில்லை. சற்று அவசரமாகக் கீழே சென்று துணி உலர்த்தப் பயன்படும் நீளமான மூங்கிற் கழியொன்றை எடுத்து வந்தாள். கட்டிலின் மீது நின்றுகொண்டு, கழியின் ஒரு நுனியில் கயிற்றைச் செலுத்த முடியுமா என்று பார்த்தாள். கீழே கதவு தட்டும் சத்தம் கேட்டது. கழியையும் கயிற்றையும் கட்டிலில் போட்டுவிட்டு, கீழே ஓடினாள். வெளிக் கதவைத் திறக்குமுன் சற்றுத் தயங்கினாள். கதவை யாரும் தட்டவில்லை என்பதுபோல் பட்டது. அடுத்த பூங்காவனத்து வீட்டின் கதவு திறக்கும் சத்தம் மட்டுமே கேட்டது. கதவிடுக்கின் வழியே யாரும் நின்றுகொண்டிருந்தனரா என்று பார்த்தாள். யாரும் நின்றுகொண்டிருந்ததாகப் படவில்லை. தேவயானை மாடிப்படியறைக்கு வந்தாள்.


மீண்டும் கழியைக் கொண்டு கயிற்றை வளையத்தின் உள்ளே செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டாள். தோள்பட்டைகளில் நோவு எடுத்தது. முகத்தில் வியர்வை அரும்பி, நெற்றி வியர்வை ஜவ்வாதுப் பொட்டைக் கரைத்து வழிந்தது. தேவயானைக்கு ஒரு யோசனை வந்தது. அவசர அவசரமாகக் கழியையும் கயிற்றையும் தரையில் போட்டுவிட்டுக் கீழே ஓடிவந்தாள். புழக்கடையில் ஒரு சன்னலருகே கிடந்த அரையடி நீளமான துருப்பிடித்த ஆணியொன்றைக் கண்டுபிடித்தாள். அதை எடுத்துக்கொண்டு மாடியறைக்கு வந்தாள். ஆணியின் நடுவில் கயிற்றின் ஒரு நுனியை இறுகக் கட்டினாள். அவள் இழுத்த இழுப்பில் கயிறு கையை அறுத்துவிட்டது.

வலி பொறுக்காமல் கையில் எச்சிலைத் துப்பிவிட்டு, அதன் மீது ஊதிக்கொண்டாள். கட்டிலின் மீது நின்றுகொண்டு கழியின் உதவியால் ஆணியை இரும்பு வளையத்துக்குள் செலுத்த முயன்றாள். ஆணி கழி நுனியில் ஸ்திரமாக அமையாமல் பொத்துப் பொத்தென்று கீழே விழுந்தது. ஒரு நிமிஷம் இளைப்பாறிவிட்டு, கை நடுக்கத்தையும் சரிபடுத்திக்கொண்டாள். பிறகு ஆணியை இரும்பு வளையத்துக்குள் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டாள். ஆணியின் ஒரு பாதி வளையத்துக்குள் நுழைந்தாலும், மறு பாதி நுழைவதைக் கயிற்றின் முடிச்சு தடை செய்தது. கயிற்றின் கனமும் ஆணி வளையத்துக்குள் செல்வதைத் தடுத்தது. கயிறு நீளமான கயிறு. அவ்வளவு நீளம் கூடாதென்று தேவயானைக்குப் பட்டது. கயிற்றைப் போதுமான அளவுக்கு வெட்டக் கத்தி எங்கு கிடைக்கும் என்று யோசித்தாள்.


வீட்டில் கத்தி ஒன்றும் கிடையாது. பிளேடு? அதுவும் இல்லை. தேவயானைக்கு அடுப்பங்கரை அரிவாள்மனை நினைவுக்கு வந்தது. குதித்துத் கீழே சென்று அரிவாள்மணையை எடுத்து வந்தாள். கட்டிலின் விளிம்பில் நின்றுகொண்டு, தன் கழுத்துக்கும் இரும்பு வளையத்துக்கும் உள்ள இடைவெளியையும், சுறுக்கு விட வேண்டிய நீளத்தையும் உத்தேசமாகக் கயிற்றைத் துண்டிக்க வேண்டும் என்று தீர்மானித்தாள். நல்ல வேளையாக அரிவாள்மணை சற்றுப் பதமாகவே இருந்ததால் , கயிற்றை நறுக்குவதில் சிரமம் இல்லை. மற்றொரு யோசனையும் தேவயானைக்கு வந்தது. அரிவாள்மணையைக் கொண்டே கழியின் ஒரு நுனியை சிறிதளவுக்கு இரண்டாக வகுத்துக்கொண்டாள். இப்போது கயிற்று நுனியைக் கழிநுனியில் இருந்த பிளவில் கவ்வவைத்துக் கயிறு கீழே நழுவாதவாறு கழியை உயர்த்த முடிந்தது.


இவ்வாறு ஆணியை வளையத்துக்குள் செலுத்தி, ஆணி வளையத்தைக் குறுக்காக அழுத்திக்கொண்டிருக்க, கயிறு நேர்ச்செங்குத்தாகத் தொங்குமாறு செய்தாள். கட்டிலின் விளிம்பில் நின்றுகொண்டு கயிற்றின் நுனிப்புறம் தலை செல்லுமளவுக்கு ஒரு வளையம் செய்து சுறுக்கு முடிச்சுப் போடப் பார்த்தாள் தேவயானை. சுறுக்கு முடிச்சும் சரியாக விழவில்லை. அவளுக்கு இதிலெல்லாம் அனுபவம் போதாது. இரண்டு மூன்று தோல்விகளுக்குப் பிறகு, ஒருவாறாக முடிச்சு சரியாக விழுந்தது.

அப்போது கீழ்க் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. தேவயானை சற்றுத் தயங்கினாள். கீழே கதவைத் தட்டும் சத்தம் பலப்பட்டது. ‘இப்போது இதுக்கு என்ன அவசரம்?’ என்று நினைத்தவள் போல், தேவயானை கீழே ஓடிச்சென்று, சேலை முந்தானையால் முகத்தை ஒற்றிவிட்டு ஆடைகளையும் சரி செய்தவாறே வெளிக் கதவைத் திறந்தாள்.


அத்தானும் வேறொருவரும் வெளியே அறை வெளிச்சத்தில் நின்று கொண்டிருந்தனர்.

”கதவெத் தெறக்க இந்நேரமா?” என்றான் அத்தான்.

”மேலே இருந்தேன்” என்றாள் தேவயானை.

”கதவை அடைச்சிட்டு, லைட்டை அணைச்சிட்டு இருன்னா, ஒன்னே யாரு மேலே போகச் சொன்னது?” என்றுகொண்டே அத்தான் நுழையவும், கூட இருந்தவரும் உள்ளே நுழைந்தார்.

”உம், லைட்டைப் போடு” என்றுவிட்டு அத்தான் வெளிக்கதவை அடைத்தான். ரேழி விளக்கைப் போட்டாள் தேவயானை. அத்தான கூட வந்திருந்தவர் நன்றாக வளர்ந்து இருந்தார். அரைகுறை பாகவதர் கிராப்போடு, டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்திருந்தார். வழக்கமாக வருபவர்களைப் போல் அவளையே உற்று நோக்காது ரேழியையும், ரேழியை ஒட்டியிருந்த அறையையும் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தார். ”சரிதானேங்க?” என்றான் அத்தான், அவரைப் பார்த்து.


ரேழியை அடுத்திருந்த அறையினுள் நுழைந்து, குழல் விளக்கொளியில் அறையின் சுவர்களை மேலும் கீழும் பார்த்துவிட்டு, ”பரவாயில்லை, எல்லாம் சுத்தமாகவே வச்சிருக்கீங்க” என்றார் அவர்.


”இங்கே எல்லாம் சுத்தமாகத்தான் இருக்கும்” என்றான் அத்தான் கள்ளச் சிரிப்போடு. ”அப்ப நா வர்றேன்.”


”பணம்?” என்றார் வந்தவர்.

”எல்லாம் டாக்டர்கிட்டே வாங்கிக்கறேன்” என்றுகொண்டே வெளியேறினான் அத்தான்.


வெளிக் கதவைச் சாத்தித் தள்ளிவிட்டு, ரேழி விளக்கையும் அணைத்துவிட்டு, வந்தவரிடத்து, ”வாங்க” என்று கூறிக்கொண்டே ரேழியை அடுத்திருந்த அறையின் குழல் விளக்கின் பிரகாசத்தில் பிரவேசித்தாள் தேவயானை. அவள் நேராகச் சென்று கட்டிலில் அமர்ந்தாள். அவர் தயங்கியவாறு அருகில் வந்து நின்றார்.


”இப்படி உட்காருங்க” என்றாள் அவள்.


”இல்லே, அந்த ரேழி ஓரத்துலே ஒரு நாற்காலி இருக்கே, அதை எடுத்திட்டு வா” என்றார் அவர். அவள் சிரித்தாள்.

”எப்போதுமே சாய்வு நாற்காலியில் சுகமாய் படுத்துத்தான் எனக்குப் பழக்கம்” என்று அவர் விளக்கினார்.

பலர் அந்தச் சாய்வான பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு தேவயானையைக் கொஞ்சியதுண்டு. எனவே உடன் எழுந்து பிரம்பு நாற்காலியை எடுத்து வந்து கட்டிலின் அருகே அதைப் போட்டாள். அவர் சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டார்; அவள் மீண்டும் கட்டிலில் உட்கார்ந்துகொண்டாள். இருவரும் ஒருவரையொருவர் நோக்கிக் கொண்டனர்.


”நீ அழகா இருக்கே” என்றார் அவர். அவள் சிரித்தாள்.


”கொஞ்சம் சேலையை வெலெக்கிக்க” என்றார் அவர். அவள் மீண்டும் சிரித்தாள். ”உம், வேடிக்கைக்குச் சொல்லலே; ஒன் மார்ப முழுசும் மறைக்காதபடி சேலய கொஞ்சம் வெலெக்கிப் போட்டுக்க.”


அவள் அவ்வாறே செய்தாள்.

”கொஞ்சம் நிமிர்ந்து உட்காரு.”

அவள் மீண்டும் சிரித்தாள்.

”கொஞ்சம் நிமிர்ந்து உட்காரேன்” என்று கொஞ்சுவது போல் அவர் சொன்னார்.

”நீங்க என்ன போட்டாப் படம் பிடிக்கப் போறீங்களா?” என்று அவள் சிரித்தாள்.


”ஆமா, அப்படித்தான் வச்சிக்கயேன்” என்றார் அவர்.


அவளும் அவளது சேலையையும், முடியையும் ஒரு சைத்ரீகனுக்கு முன் உட்கார்ந்து சரி செய்துகொள்வதுபோல் சரி செய்துகொண்டாள். சற்று நேரம் அவளைப் பார்த்து ரசித்துவிட்டு, ஏதோ குறை கண்டவராய், ”உட்கார்ந்திருந்தா சரியாப்படலயே; கொஞ்சம் படுத்துக்க” என்றார் அவர்.


”நீங்க உட்கார்ந்துதானே இருக்கீங்க, வெறுமனே” என்றாள் அவள் சிரிக்காமல்.


”நான் இங்கே உக்காந்து இருந்திட்டுப் போகத்தானே வந்திருக்கேன்” என்றார் அவர். அவள் சிரித்துக்கொண்டே படுத்துக்கொண்டாள். ஒரு கையை மடித்து அதைக் கொண்டு தலையைத் தாங்கி அவரை நோக்கிச் சிரித்தவாறே அவள் படுத்துக்கொண்டாள். அவர் அவளைப் பார்த்துக் கொண்டு டூருந்தார்.


”உங்களுக்கு ஆசை இல்லையா?” என்றாள் அவள்.


”நிறைய இருக்கு.”

”அப்ப?”

”அதனாலேதான் ஒன்னைப் பார்த்துகிட்டே இருக்கேன்.”

”பாத்துகிட்டே இருந்தாப் போதுமா?” அவள் சிரித்தாள்.

”தொட்டுப் பார்க்கலாம்.”

”நீங்க தொட்டுப் பாக்கலயே.”

”தொட்டா நீ சும்மா இருக்கணுமே!” என்றார்.

அவள் சிரித்தாள். ”நான் ஒண்ணும் சேட்டை செய்யமாட்டேன்; நீங்க சும்மா தொட்டுப் பாருங்க.”

வெளிக்கதவு தட்டும் சத்தம் கேட்டது. அவள் எழுந்திருக்க முடியாது போல் தவித்தாள். அவர் நிதானமாக எழுந்து கதவைத் திறந்தார். கதவைத் தட்டியது அத்தான்தான். அத்தான் அவரை எதுவும் கேட்குமுன் அவர் பையிலிருந்து எதையோ எடுத்து அத்தானிடம் கொடுக்க வந்தார்.

”இல்லே வச்சிக்கோங்க, எல்லாம் டாக்டர்கிட்டேருந்து வாங்கிக்கறேன். டாக்டர் கடைக்கு வந்திட்டாரு; நீங்க வர்லயான்ட்டு கேட்டாரு” என்றான் அத்தான்.

”இப்ப வந்திடறேன்ட்டு சொல்லுங்க” என்றார் அவர்.

அத்தான் வெளியேறுகிறான்; அவர் கதவை அடைத்துத் தாளிடுகிறார்.

”கொடுமை” என்றுகொண்டே அவர் நாற்காலியில் சாய்கிறார்.

”எது?” என்றாள் அவள், கட்டிலிலிருந்து எழுந்து அவர் அருகே நின்றுகொண்டு.

”இந்த நேரக் கணக்குதான்” என்று அவர் சொல்லவும் அவள் அவரைக் கட்டியணைக்க முயன்றபடியே, அவரது இரு கன்னங்களிலும் இறுதியாக அவசரமாக அவர் உதடுகளிலும் முத்துகிறாள்.
”சரி, நீ போய்ப் படுத்துக்க” என்கிறார் அவர்.
”நீங்க என்ன செய்யறீங்க?” என்று கேட்டுக்கொண்டே அவள் மெத்தையில் சாய்கிறாள்.
”இங்கே இருக்கேன்” என்கிறார் அவர்.
”அதெக் கேக்கலே; என்ன தொளில் செய்யறீங்க?”
”பெறந்து, வளந்து, சாவற தொளில்தான் செய்யறேன்.”
அவள் கட்டிலிலிருந்து எழுந்து அவரை கட்டியணைக்க முயலுகிறாள். அவரோ நாற்காலியில் சாய்ந்தவராகவே கிடக்கிறார். தோல்வியுற்றவளாய் அவள் கட்டில் மெத்தைக்குச் சென்று அதன் மீது விழுகிறாள்.

”எனக்குத் தண்ணி தவிக்குது” என்கிறாள் தேவயானை.

அவர் எழுந்து, ரேழி விளக்கைப் போட்டு, மூலையிலிருந்த பானையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து அவளுக்குக் கொடுக்கிறார். படுத்தபடியே அவள் தண்ணீரைப் பருகும்போது, அதில் ஒரு பகுதி வாய்க்குள் நுழையாது அவளது மார்பகத்தை நனைக்கிறது.

நின்றுகொண்டிருக்கும் அவர், ”சென்று வருகிறேன்” என்கிறார்.

”அடுத்த வாட்டி எப்ப வருவீங்க” என்றுவிட்டு அவர் பையிலிருந்து ஒரு ஐந்து ரூபாய்த் தாளை அவளிடத்து நீட்டுகிறார். அவள் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு, தலையணைக்கு அடியில் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு, தலையணைக்கு அடியில் வைக்கிறாள். அவர் கதவைத் திறந்துகொண்டு வெளியே செல்கிறார்.

இரவு மூன்று மணிக்கு அத்தான் வீட்டுக்கு வந்தான். அவரைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று அவளுக்கு ஆவல். ஆனால் வாடிக்கைக்காரர் யாரிடத்தும் அவள் விசேட ஆர்வம் காட்டுவது அத்தானுக்குப் பிடிக்காது. எனவே அவள் எடுத்த எடுப்பிலேயே, ”அவர் எனக்கு அஞ்சு ரூவா கொடுத்தார்” என்றாள்.


”யாரவன்?” என்றான் அத்தான்.

”அதான் நீங்க மொதல்லே கூட்டியாந்தீங்களே, அவருதான்.”

”மொதல்லே யாரக் கூட்டியாந்தேன்? நான் இன்னிக்கு ஒருவாட்டி தானே வந்தேன்?”
”அதான், ஏளு ஏளரை மணிக்குக் கூட்டியாந்தீங்களே, அவரே நெனப்பில்லையா?”

”ஏளு, ஏளரை மணிக்கா? நான் சுப்பு வீட்லேந்து கிளம்பும்போதே ஒம்பது மணி ஆயிருக்குமே!”

”இன்னிக்கு சுப்பு வீட்டுக்குப் போயிருந்தீங்களா?”

”ஆமாம், இருபது ரூபா வரைக்கும் கெலிப்பு. இன்னைக்கு ஒன்பது மணிவரைக்கும் தெருவுலே தலைகாட்ட வேண்டாம்னுட்டு ஏட்டையா சொல்லியிருந்தாரு. நானும் ஒம்பது வரைக்கும் சுப்பு வீட்டோடவே இருந்திட்டேன்.”


”அப்ப, அந்த டெர்லின் சட்டைக்காரரே நீங்க கூட்டியாரலையா? அவர் கூட ஒரு டாக்டர் வந்தாராமே; நீங்க கூட டாக்குட்டரே வேறே வீட்டுக்குக் கூட்டிப் போனீங்களே?”
”டாக்டரா? அவர் யாரு டாக்குட்டரு? ஒனக்கு என்ன புத்தி தடுமாறிடுச்சா, இல்லே கதவெத் தெறந்து போட்டுக்கிட்டு கனவு கண்டிட்டிருந்தயா?”

”இல்லயே, கதவ அடச்சிட்டு மேலேதான் இருந்தேன். நீங்க கதவைத் தட்டினப்பதான் கீளே வந்தேன்.”

அத்தான் முழித்தான். அவள் தொடர்ந்தாள்.

”கொஞ்சம் நீளமா முடி வச்சிருந்தார். நீலநெற டெர்லின் சட்டையும் எட்டு மொள வேட்டியும் கட்டிருந்தாரு. ஆனா என்னெத் தொட்டுக்கக் கூட இல்லே” என்றுவிட்டு தேவயானை சிரித்தாள்.

”தேவு, சும்மா உளறாதே. நான் தெருவுக்கு வரும்போதெ மணி ஒம்பதுக்கு மேலே ஆயிரிச்சே. அந்த சாயபுப் பையனே மட்டுந்தானே இன்னைக்கு நா கூட்டியாந்ததே. அதுக்கு முன்னாடி யாரெக் கூட்டியாந்தேன்?”

”நா உளர்றேனா, நீங்க உளர்றீங்களா?” என்றுகொண்டே, தான் அவரிடமிருந்து வாங்கிய ஐந்து ரூபாயை அத்தானிடம் காட்ட தலையணையைத் திருப்பினாள் தேவயானை. தலையணைக்கு அடியே எதுவும் காணப்படவில்லை. தேவயானைக்கு மெய் சிலிர்த்தது. பதட்டத்தில் தலையணையை முழுமையாகப் புரட்டினாள். எதுவும் காணோம். மெத்தைக்கு அடியிலும், பிறகு தலையணை உறைக்குள்ளும் தேடினாள். ஒன்றும் காணவில்லை. தலையணை உறையின் இரு முனைகளைப் பிடித்துக்கொண்டு தலையணையைத் தலைகீழாகக் கவிழ்த்தாள். தலையணை தலையில் விழுந்தது. உறையினுள் தேடினாள். தரையில் தேடினாள். ஐந்து ரூபாயைக் காணோம். அத்தான் முழித்தான்.


”எங்கே போயிருக்கும்; இங்கேதான் எங்காவது இருக்கணும்” என்றாள் தேவயானை நம்பிக்கையோடு.

”எது?” என்றான் அத்தான்.

”அந்த டெர்லின் சட்டைக்காரர் கொடுத்த அஞ்சு ரூபாதான்.”

”நீ என்ன கனவு ஏதாச்சும் கண்டாயா?” என்றுகொண்டே அத்தான் சிரித்தான்.

”நீங்கதான் வெறிச்சீலே எல்லாத்தையும் மறந்திடுவீங்க” என்றாள் தேவயானை, இன்னும் காணாமற் போன ஐந்து ரூபாயைத் தேடியவாறே.

”ஒருவேளை மேலே மாடியிலே இருக்கும்” என்றுகொண்டே, தேவயானை வேகமாகப் படிகளேறி மாடிறயறைக்குச் சென்றாள். அவள் அணைக்காது விட்டுப்போன மெர்க்குரி விளக்கு ஒளியில், அவள் பிரயாசைப்பட்டு இரும்பு வளையத்திலிருந்து தொங்கவிட்ட கயிறும், அதன் கீழ் நுனியை அலங்கரித்த வட்டமும் அவளைத் திகைக்க வைத்தன.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4TiDcriB3RhmJm-bw7QIzUuIekTyFwqw0cR2KYkqtGkeSCmg8HANXfsl1fXCNW36EgpXujB90Xq5r-9EZcnfizrmEIFbaJ8UBpw97NPcJLfBaqYN0EdrOcn6v6uR-SHrFP-Sq45STQ48/s1600/sheep.jpg

நன்றி - ஜி நாகராஜன், சிறுகதைகள்,  

குப்பி -ஒற்றைக்கண் சிவராசனின் கடைசி நிமிடங்கள் -சினிமா விமர்சனம்

http://stat.homeshop18.com/homeshop18/images/product/radical/05Sep11-Mov-1240.jpg

ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையமா வெச்சு ஆர் கே செல்வமணி எடுத்த  குற்றப்பத்திரிக்கை 14 வருடங்கள் தடை செய்யப்பட்டு பின் வந்தும் வெற்றி பெறாத நிலையில் அந்த கொலை வழக்கில் தேடப்பட்ட ஒற்றைக்கண் சிவராசனின் கடைசி 21 நாட்கள் பற்றிய 2 மணி நேர படத்தை இப்போதான் பார்க்கும் வாய்ப்பு கிடைச்சது.. 2007இல் ரிலீஸ் ஆன இந்தப்படம் செய் நேர்த்தி,நெறி ஆள்கை என பல விதத்தில் உலகப்படத்துக்கு இணையாக எடுக்கப்பட்டிருக்கு.. டோண்ட் மிஸ் இட்.. 

21.5.1991 இந்தியாவுக்கு கறுப்பு தினம்.. ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட நாள்.. அந்த கொலை பற்றிய விசாரணைல சிறப்பு புலனாய்வுக்குழு இயங்குது.. வழக்கில் தேடப்படும் முக்கியக்குற்றவாளிகளான ஒற்றைக்கண் சிவராசன்,சுபா இருவரும் தங்கள் ஆட்களுடன் எங்கே பதுங்கி இருந்தாங்க. எவ்வளவு சிரமங்களை அனுபவிச்சாங்க.. ஒரு வாடகை வீட்டில் தங்கக்கூட முடியாம எப்படி எல்லாம் அலைக்கழிக்கப்பட்டாங்க.இதுதான் படத்தோட கதைக்கரு.. 


படத்தோட டைட்டிலா குப்பி என வைக்காம வாடகை வீட்டிற்கான தீவிரத்தேடல்னு வெச்சிருக்கலாம் போல.. அவ்வளவு நுணுக்கமா வாடகை வீட்டின் தேடல் பற்றி சொல்லி இருக்காங்க.. 

 ரங்க நாத் ஒரு வீடு புரோக்கர்.. அவர் 1985ல விடுதலைப்புலிகளுக்கான நிதி உதவி அளித்தவர்.. அவங்க மேல  பாசமும், பரிதாபமும் கொண்டவர்.. அவருக்கு ஒரு மனைவி.. பயந்த சுபாவம்.. அவரு சிவராசன் & கோவுக்கு தன் வீட்டில் அடைக்கலம் அளிக்கிறார்,.. இது அவர் சம்சாரத்துக்கு பிடிக்கலை.. அவங்களை சீக்கிரம் அனுப்பிட துடிக்கிறார்.. 

 சிவராசன் இதையே துருப்புச்சீட்டா வெச்சுக்கிட்டு என் ஆளுங்களுக்கு ஒரு வீடு பிடிச்சுக்கொடுத்துட்டா நாங்க இங்கே இருந்து கிளம்பிடுவோம்னு சொல்றான்,.. உடனே ரங்கநாத் அதே போல அலைஞ்சு வீடு பிடிச்சு தர்றான்.. ஆனால் அவங்க அங்கே குடி போகலை. அவங்க ஆட்கள் கொஞ்சம் பேர் தான் அந்த வீட்டுக்கு குடி போறாங்க..


http://www.hindu.com/fr/2007/04/13/images/2007041300200201.jpg


சிவராசனின் நினைப்பு என்னான்னா ஃபேமிலியோட இருக்கற இந்த வீட்லயே குடி இருந்துட்டா  யாருக்கும் டவுட் வராது.. தனியா குடி போனா யாராவது கேள்வி கேப்பாங்க.. இதான் அவன் எண்ணம்.. ஆனா ரங்க நாத்தின் மனைவி அவங்களை துரத்துறதுல குறியா இருக்கா,.

 எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு பங்களா டைப் வீட்ல சிவராசன் -சுபா குடி போறாங்க.. போலீஸ்க்கு இந்த தகவல் எப்படியோ தெரிஞ்சுடுது.. அந்த பங்களாவை ரவுண்ட் அப் பண்ணிடுது.. அப்போ சிவராசன் நடவடிக்கை என்ன? என்ன நடந்தது? என்பதை நேரடி ரிப்போர்ட்டை படிக்கற மாதிரி டீட்டெயிலா படமா எடுத்திருக்கார் டைரக்டர்.. 


படத்தோட முதல் ஹீரோ திரைக்கதை , காட்சி அமைப்பு தான்..  சினிமா பார்க்கற உணர்வே இல்லை.. என்னமோ நேர்ல அந்த சம்பவம் நம் கண் முன் நடக்குதுங்கற மாதிரி பிரமை.. ஹாட்ஸ் ஆஃப் டைரக்டர்.. 


 2 வது ஹீரோ ஒற்றைக்கண் சிவராசன்.. இவர் டி வி சீரியலில் நடிச்சவர்னு நினைக்கறேன்.. நல்ல நடிப்பு. படம் பூரா ஒரு கண்ணை மட்டும் இவர் மூடி நடிச்சது அவன் இவன்ல விஷால் மாறுகண்ணாளரா நடிக்க சிரமப்பட்டதுக்கு எந்த விதத்திலும் குறை இல்லாத அளவு சிரமப்பட்டு நடிச்சிருக்காரு.. வெல்டன்.. அவர் பாடி லேங்குவேஜ் அபாரம்.. எதாவது சத்தம் கேட்டா அவர் ஒரு நாயைப்போல, பூனையைப்போல உஷார் ஆகி மற்றவரை வழி நடத்துவது அபாரம்.. 


அடுத்து ரங்கநாத்தின் மனைவியாக வருபவர்.. இவர் நடிகை தாரா .. இங்கேயும் ஒரு கங்கை என்ற பட நாயகி ( சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்). படம் முழுக்க இவர் ராஜ்யம் தான்.. சராசரி மனைவிக்குள்ள பயம், துடிப்பு, ஆத்திரம் என கலந்து கட்டி, உணர்வுகளை முகத்தில் கொட்டி நடித்திருக்கிறார்.


வீடு புரோக்கராக வரும் இவர் நடிப்பு யதார்த்தம்.சிவரசனிடம் மாஸ்டர் மாஸ்டர் என பம்மும்போதும் சரி, மனைவியின் மிரட்டலுக்கு அடி பணியும் போதும் சரி சபாஷ் போட வைக்கும் நடிப்பு..

 உண்மைச்சம்பவத்தில் இந்த ரங்க நாத் கேரக்டரின் நெருங்கிய உறவினர் தான் இந்தப்படத்தின் இயக்குநராம்.. அதனால் தானோ என்னவோ படத்தின் திரைக்கதை பக்காவாக உண்மைசம்பவத்தை அப்படியே கண் முன் நிறுத்துவதாக இருக்கு.. 

 சுபாவாக மாளவிகா .  குறை சொல்ல முடியாத நடிப்பு.. சிற்சில இடங்களில் செயற்கை தட்டுகிறது.. என்னை கேட்டா இந்த கேரக்டருக்கு உண்மையான இலங்கை  அகதிப்பெண்ணை தேடி பிடித்து நடிக்க வைத்திருக்கலாம்./. 

 போலீஸ் ஆஃபீசர்ஸ், சி பி ஐ ஆஃபீசர் அனைவரின் நடிப்பும் ஓக்கே.. நாசர் கூட 2 சீன் ஸ் வர்றார்.. 


http://mimg.sulekha.com/tamil/kuppi/stills/kupppii_15.jpg



மனதில் நின்ற வசனங்களில் நினைவில் நின்றவை





1. அரசாங்கத்துல வேலை செய்யறீங்க, அரசாங்க சம்பளம் வாங்கறீங்க, ஆனா அரசாங்கத்தோட கண்ல மண்ணைத்தூவறீங்க.. 


2. சுபா - உங்களை அக்கான்னு கூப்பிடலாமா?

 ஏன்? உன் அக்கா என்ன ஆனா?


 அவளை கொன்னுட்டாங்க.. என் கண் எதிரே... 



3. பதவில இல்லைன்னாலும் எனக்கு 3 லிங்க் இருக்கு 1. பொலிட்டிகல் லிங்க், 2. போலீஸ் லிங்க், 3. இண்டெலிஜெண்ஸ் ஆஃபீஸ் லிங்க்..


4. நாம ஏதாவது சேஃபான இடத்துக்கு போயிடலாமே?

 இந்த பூமில பாதுகாப்பான இடமே எங்கேயும் இல்லை. 



5. போலீஸ் - வண்டியை ஏன் விட்டுட்டு வந்துட்டீங்க. வீதில அநாதையா நிக்குது. டெரரிஸ்ட் யாராவது எடுத்து யூஸ் பண்ணுனா என்ன செய்வீங்க? என்னசார்? கதவைதட்டுனதும் கதவை டக்னு திறந்தீங்க, ஆனா வாயைத்திறக்க மாட்டேங்கறீங்க?


6.  குட் நைட்


 மிட் நைட்ல என்ன குட் நைட் வேண்டிக்கிடக்கு?


7. யார் இவங்க? புதுசா இருக்காங்க?


 இவர் என் வீட்டுக்காரருக்கு வேண்டியவர்.. அவர் என் வீட்டுக்காரருக்கு வேண்டியவர்னு சொன்னேனே அவரோட உறவினர். ... அவரோட உறவினர்க்கு இவர் உறவினர்.. 



8. இந்த எலி அடிக்கடி கீச் கீச்னு கத்தி எனக்கு தொந்தரவு தருது.. இதைக்கொன்னுடவா?


 வேணாம்.. அது இருக்கறதால தான் நீ அலர்ட்டா இருக்கே..


9. இது என்ன தெரியுமா? சயனைடு.. இந்த குப்பியை ஒரு கடி கடிச்சா போதும். தொடர்ந்து 7 பிறப்புக்கும் பர்த் சர்ட்டிஃபிகேட்  வாங்க வேண்டியதிருக்காது. 



10. உங்களுக்கு வாழ ஆசை இல்லையா?

எண்டைக்கு எங்கட நாடும் மக்களும் சுகமா இருக்கிறனமோ அண்டைக்குத்தான் ஓய்வு, வாழ்வு எல்லாம்


11.   நான் அமரனா இருக்கனும், அதுதான் என்  கடைசி ஆசை



12.  சிவராசன் எங்கே இருக்கான்னு எனக்குத்தெரியும்.. 10 லட்சமும் எனக்குத்தான்.. 


 டீக்குடிச்சுட்டு காசை வெச்சுட்டு கிளம்பு.. உனக்கு எல்லாம் அந்த வல்லமை பத்தாது.. 


13. டெல்லிக்கு ஐ பி எஸ் ட்ரெயினிங்க் போனப்ப  என்னையே செக் பண்ணுனாங்க.. செக்கிங்க் என்பது அவமானப்படுத்தும் செயல் அல்ல.. 


14. வெளில போன பிசாசு புதுப்புது பேய்களோட உள்ளே வந்த மாதிரி இவனுங்க என்ன புது புது ஆள்ங்களோட வந்துட்டே இருக்காங்க?


15. சுபா -வீட்டுக்குள்ளே வாழை மர நிழல்  விழுந்தா எங்களை மாதிரி சோல்ஜர்ஸ்க்கு நல்ல சகுனம் இல்லை ( வீட்டுக்குள்ள வாழமர நிழல் வளர்ந்தா எங்கள மாதிரி ராணுவக்காரங்களுக்கு சகுனம் சரியில்ல)


16. எங்க நாட்டுல வந்து எங்க பி எம்மை கொன்னது தப்புதானே?


 ஆமா, எங்க மேல மக்கள் வெச்சிருந்த மரியாதை, சிம்ப்பதி எல்லாம் போச்சு..


17. நாங்க இந்த மண்ணில் வந்து மீண்டும் பிறப்போம்.. வீரர்கள் ரத்தம் சிந்தலாம், கண்ணீர் சிந்தலாமா? ( நாங்க திரும்பவும் இந்த மண்ணுல வந்து பிறப்போம்.. வீரர்கள் ரத்தம் சிந்தலாம்.. கண்ணீர் வடிக்கக்கலாமோ?)


18. முதல் தடவையா நம்ம வீடு நம்மளுது இல்லையோன்னு தோணுது.. அவங்க போன பின்பும் அவங்க நிழல் நம்ம கூடவே இருக்கறது மாதிரி தோணுது.. இங்கேயே சுத்திட்டு இருக்கற மாதிரி தோணுது.. ஏன்னா அவங்க வீட்டை விட்டுத்தான் போனாங்க, ஊரை விட்டுப்போகலையே?


சரி, அதனால நமக்கு என்ன இழப்பு?


 நிம்மதி, சந்தோஷம்..  எல்லாம் இழந்தோமே?


19. உண்மையான நண்பன் நீ தான், அடுத்த பிறப்பில் நீ எங்களுடன், எங்க நாட்டில் பிறக்கப்போகிறாய்(என்ட உண்மையான நண்பன் நீதான்.. அடுத்த பிறவில நீ எங்கட நாட்டில தான் பிறக்கப்போறாய்..)


20. உயிரோட அவங்களை பிடிக்கனும், போலீஸோட பவர் என்ன?ன்னு அவங்களுக்கு நாம காட்டனும்


21. சரண்டர் ஆனா தூக்கிலே தானே போடுவாங்க, அதுக்கு குப்பி சாப்பிட்டு மரணிக்கலாம்


22. என்னை நீ சரண்டர் ஆகச்சொல்றியா? உன் முதுகை காட்டாம அப்படியே போய்ட்டா நீ உயிர் தப்பிக்கலாம்


23. நம்ம கிட்டே இருக்கற ஒரே ஆயுதம் சயனைடு தான்.. நம்ம மரணம் சரித்திரத்தில் இடம் பெறனும்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjogl7ebFTOGz7WeKB_yy11C0Hx90-5MtFPTx13rbTYNk4OSeuSfp7cxK7xuswkqzvBIjEwwljqE1Y0SMrvi3Or9KjT-OqbOeYJxgPny6nrovyDI8-1mZD_BCwgztvJbixdUs_C79Us7ovM/s400/kuppi.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. வாடகைக்கு வீடு பிடிச்சு கொடுக்கும் புரோக்கர் ஒரு பெரிய மனுஷன் பேரை ஒரு சீட்ல எழுதி தர்றார்.. அதை விடுதலைப்புலிகள் சர்ட் பாக்கெட்ல வெச்சுக்கறாங்க.. அது ஒரு முக்கியமான தடயமா போலீஸ் கைல சிக்குது.. அவ்வளவு  அசால்ட்டாவா ஆதாரத்தை வெச்சுக்குவாங்க.. படிச்சுட்டு அழிச்சுட மாட்டாங்களா?


2.  வீடு பார்ப்பது, குடி போறது எல்லாம் ஓக்கே.. அவங்களூக்கு பணம் எப்படி வருது? அதை பற்றி காட்டவே இல்லையே?


3.  ஒரு சீன்ல அதாவது க்ளைமாக்ஸ் சீன்ல சிவராசன் பங்களாவை   போலீஸ் ரவுண்ட் அப் பண்ணினதை பார்த்து பொது மக்கள் கூட்டம் கூடுவது போல் சீன்.. அப்போ ஒரு வசனம்.. கூட்டத்தை முதல்ல விரட்டுங்க.. உடனே 12 பேர் உள்ள கூட்டத்தை காட்டறாங்க.. சிரிப்பா இருக்கு.. அந்த சீன்ல அட்லீஸ்ட் 100 பேரையாவது காட்டி இருக்க வேணாமா?


4. ரவுண்ட் அப் பண்ணுன போலீஸ் மயக்க மருந்து , கண்ணீர்ப்புகை இதை எல்லாம் யூஸ் பண்ணவே இல்லையே? அவங்க கிட்டே பணயக்கைதி யாரும் இல்லை.. அப்புறம் என்ன தயக்கம்?உயிரோட பிடிக்க ஆசைப்படறவங்க மாஸ்க் அணிஞ்சு மயக்க மருந்தை அந்த வீட்டில் விட்டிருக்கலாமே?

5. சிவராசன் ஜோக் அடிச்சுக்கிட்டு அங்கங்கே காமெடி பண்ணீட்டு இருக்கற மாதிரி சீன்கள் நிறைய வெச்சிருக்காங்க.. உண்மையில் அவன் சீரியஸ் டைப் என்று படித்த மாதிரி ஞாபகம்./.


6. சுபாவாக வரும் கேரக்டர் ஒரு  ரிசர்வ் டைப் என்று படிச்சிருக்கேன். ஆனா படத்துல தாரா கிட்டே அவங்க தொண தொணன்னு பேசிட்டு இருக்காங்க.. அந்த அக்கா செண்ட்டிமெண்ட் எடுபடலை..


7. அடிக்கடி வீட்டுக்குள் சூரியனின் கிரணங்கள் படுவது போல் செயற்கையான மஞ்சள் லைட்டை உபயோகப்படுத்தி இருக்க வேணாம்././ 


8. ஏகப்பட்ட பேருக்கு வீடு பிடிச்சு தர்றாரே சிவராசன்.. அவங்க எல்லாம் விடுதலைப்புலிகள் போல தோணலை.. அகதிகள் மாதிரியும் காட்டலை.. இன்னும் தெளிவு வேணும்..

9.  இலங்கைத்தமிழ் சரியா பதிவு செய்யப்படலை.. இங்கே இருக்கற ஆள்ங்க பேசற தமிழ் போலவே இருக்கு,..


http://mimg.sulekha.com/tamil/kuppi/stills/kupppii_10.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் ( ramesh)

1. ரங்கநாத்தாக வரும் ஜெகன் நல்லா நடிச்சிருக்கார்.. அவரது பாத்திர படைப்பு கன கச்சிதம்.. அதே போல் சிவராசன்.. பாராட்ட வைக்கும் நடிப்பு தாராவின் பண் பட்ட நடிப்பு


2. படத்தில் தொய்வைத்தரும் சீன்கள் என எதுவுமே இல்லை.. செம விறு விறுப்பு.


3. மொத்த படத்திலும் ஒரு சீனில் கூட ராஜீவ் காந்தி, விடுதலைப்புலி , இலங்கை போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகள் ஏதும் வராமல் பார்த்துக்கொண்டது.


4. இயக்குநரின் நோக்கம் விடுதலைப்புலிக்கு ஆதரவாகவோ,  போலீஸ்க்கு ஆதரவாகவோ இல்லாமல் என்ன நடந்ததோ அதை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என்பதை தெள்ளத்தெளிவாக உணர்த்தும் திரைக்கதை வடிவமைப்பு


இந்தப்படம் ரிலீஸ் ஆனப்போ ஈரோடு பாரதி தியேட்டரில் ஓடுச்சு.. ஆனா அப்போ பார்க்கலை.. நேற்றுத்தான் பார்த்தேன்.. டி வி டியில்


http://tamil.galatta.com/entertainment/wallpaper/tamil/movies/Kuppi/bigimage/12_Kuppi2.jpg




சி.பி கமெண்ட் -  பரபரப்பான  செய்திகளை ஆர்வமாகப்பார்ப்பவர்கள், விறு விறுப்பான படம் பார்க்க ஆசைப்படுபவர்கள் பார்க்கலாம்.. பெண்களும் பார்க்கும்படி வன்முறைக்காட்சிகள், முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் எதுவும் இல்லாம தான் இருக்கு.. மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் பள்ளி மாணவ மாணவிகள் பார்ப்பதை தவிர்க்கவும்

நன்றி - ,,தாமரைக்குட்டி @Thamaraikkutty ( இலங்கைத்தமிழ் மொழி பெயர்ப்புக்கு )


 

ஆ ராசா - புதிய தலை முறை பேட்டி காணொளி + எதிர் கேள்விகள்


கடந்த சனிக்கிழமை இரவு 9 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை (நேற்று)மதியம் 1 மணிக்கும் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் ஸ்பெக்ட்ரம் பற்றிய புதிய புளுகல் ஒப்புவித்தல் நேர்காணல் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதை பார்த்தபோது ஒரு தேர்ந்த வழக்கறிஞரின் மறுபக்க வாதம் போன்றே இருந்தது. ஏற்கனவே சொல்லப்பட்ட பிதற்றல்கள், பல்லவிகளையே அவர் திரும்ப சொன்னார் என்பது தவிர வேறில்லை. தமிழ்ச்சூழலின் இயல்பான மறதி காரணமாக தற்போது ஸ்பெக்ட்ரம் என்ற வார்த்தை பலபேருக்கு மறந்து போயிருக்கும். அவரின் புளுகல்களுக்கான சில எதிர்வினைகள்.
1. குருவிற்கு தப்பாத சிஷ்யன் என்பது மாதிரி ஊழல் விஷயத்தில் திமுக தலைவருக்கு தப்பாமல் ஆ.ராசா அப்படியே இருக்கிறார். மரவள்ளி கிழங்கை எடுப்பதற்கு சாதாரண விவசாயி வேரோடு , செடியோடு சேர்த்து பிடுங்கி விடுவார். ஆனால் இவர்கள் செடிக்கு அடியில் வேரோடு இருக்கும் கிழங்கை மட்டும் தான் எடுப்பார்கள். செடி அப்படியே இருக்கும். அது தான் ஊழல் விஷயத்தில் திமுகவின் வரலாறு. அப்படியே ராசா முயற்சிக்கிறார்.
2. தொலை பேசி அழைப்புகளின் கட்டணம் குறைந்தால் பேசுவோர்களின், பேசும் நேரம் அதிகரிக்கும். அதன் காரணமாக அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து தொலைபேசி நிறுவனத்திற்கு வருமானம் அதிகரிக்கும். இது தொலைதொடர்பில் சாதாரண உளவியல். இதனை புரிந்து கொண்டு தான் 2002 ல் BSNL நிறுவனம் சில பகுதிகளில் உள்ளூர் தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணத்தை குறைத்து இம்முறையை வெற்றிகரமாக சோதனை செய்தது. அதை மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தவும் முடிவு செய்தது.
3. இது தான் மொபைல் விஷயத்திலும் நடந்தேறியது. 1999 தொலைதொடர்பு கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட சூழலில் மொபைல் போனின் விலை அதிகமாக இருந்தது. அழைப்பு கட்டணம் அதிகமாக இருந்தது. அதன் காரணமாக மொபைல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. Incoming அழைப்பிற்கு கூட கட்டணம் வசூலிக்கப்பட்டது அப்போது. ஆனால் பிந்தைய கட்டத்தில் சீனாவின் வரவு காரணமாக மொபைல் போன்களின் விலை குறைந்தது. இது தான் எல்லோரும் மொபைல் வாங்க மிக முக்கிய காரணம். அழைப்பு கட்டணம் அதிகம் இருந்தால் போனில் உரையாடும் நேரம் குறையும். ஆனால் போன் பயன்படுத்துவார்கள். இது தான் முக்கிய அடிப்படை.
4. அவர் நேர்காணலில் சொன்னபடி இந்தியாவிற்காக ஒதுக்கப்பட்ட 2G அலைக்கற்றை அளவு 100 மெகா ஹெர்ட்ஸ். அதில் 65 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தது. மீதி 35 சதவீதம் பயன்படுத்தப்படவில்லை. அதை நான் வெளிக்கொண்டு வந்தேன். அது தான் நான் செய்த தவறு என்று கொஞ்சம் கூட வாய்கூசாமல் தன் தலைவருக்கு தப்பாமல் பதில் சொல்கிறார். 35 சதவீதம் என்பதை தொழில்நுட்ப ரீதியாக 122 நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்க முடியாது. அது மிகப்பெரும் தொழில்நுட்ப நெருக்கடியை ஏற்படுத்தும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கூட கோடிகள் காரணமாக மறந்த காரணம் என்ன? கவனிக்க தவறியது ஏன்? இது தொடர்பாக தொழிற்சங்கங்கள், தொலைதொடர்பு பொறியாளர் கூட்டமைப்பு, அதிகார பூர்வ அமைப்புகள் சொன்ன ஆலோசனைகளை நீங்கள் கேட்க தவறியது ஏன்?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLEjb2_MLmJGmpzp_IdrxuLOF7DZUJIDeg1Z2G3VADwMKBMeG2pUzOSeB6Lx-4_a7YXq-D2zETFlgN-QeoGhwOPTZjEljmwXYOu4NlL15C5SIiOk97guqn6dTtQcaXYZ94dRCtN6L67sS2/s1600/spectrum_cartoon_kalki2.jpg
5. மீண்டும் மிகப்பெரும் புளுகல் என்பது "முதலில் வருபவருக்கு முன்னுரிமை" என்பது ஏற்கனவே பின்பற்றப்பட்ட கொள்கை தான் என்கிறீர்கள். நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் இங்கு பிரச்சினையே 2001 விலையை 2008 க்கும் நிர்ணயித்த காரணம் என்ன? நீங்கள் பெரம்பலூரில் வாங்கி குவித்த சொத்துக்களின் மதிப்பு இப்போதும் அதே நிலையில் தான் இருக்கிறதா? நாட்டின் வளம் குறித்த பிரச்சினையில் நீங்கள் யோசிக்காதது ஏன்? எல்லாம் சி.ஐ.டி காலனியின் ஆலோசனை தானே?
 அந்த ஏழு வருட வித்தியாச விலையை நீங்கள் அவர்களிடமிருந்து கமிஷனாக பெற்றீர்கள் என்பதை நீங்கள் சொல்லாமல் சொல்கிறீர்கள். அது தானே முக்கிய காரணம்.மேலும் கட் ஆப் தேதியை மாற்றியது குறித்து கேள்வி கேட்கும் போது மட்டும் உங்கள் முகபாவனையை நான் கவனித்தேன். அது திருட்டு முழி சுதாரிக்கும் சமயத்தில் இருப்பது மாதிரி இருந்தது. உடனே அது தவறான வார்த்தை பிரயோகம் என்கிறீர்கள். அதாவது அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்தன. அதனை முன்னுரிமை அடிப்படையில் கட்டுப்படுத்துவதற்காக தேதி அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்கிறீர்கள்.
இங்கு தான் பிரச்சினையே... வெறும் 35 மெகா ஹெர்ட்ஸ் எந்த அடிப்படையில் கொடுக்க முடியும் என்பதன் ஆலோசனையை திட்டமிட்டு மறுதலித்தது ஏன்? முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்பதை விண்ணப்பம் என்பதை விட நுழைவு கட்டணம் கட்டியவர்கள் என்று மாற்றியது ஏன்? வரைவோலை எடுப்பதற்கு மும்பை வங்கியின் அதிகாரிகளுக்கு எங்கிருந்தெல்லாம் உத்தரவுகள் போடப்பட்டன என்பது தனி வரலாறு. அதில் விதிமுறைகள் மீறப்பட்டன. அதைப்பற்றி நீங்கள் சொல்ல தயாரா?
6. நீரா ராடியா உரையாடல்கள் இவை எல்லாவற்றையும் வெளிக்கொண்டு வந்து விட்டனவே. இது பற்றி நீங்கள் வாய் திறக்காதது ஏன்?
7. இன்று பெரம்பலூரில் உள்ள உங்கள் சொத்துக்களின் மதிப்பு என்ன? உங்களின் முன்னாள் பணி சாதாரண ஜுனியர் வழக்கறிஞர் தானே?
8. கலைஞர் டிவிக்கு கொடுக்கப்பட்ட 200 கோடி ரூபாய் குறித்து வாய்திறக்காதது ஏன்? நீங்கள் சட்டப்படி தான் செய்தீர்கள் என்றால் யுனிடெக் நிறுவனத்திற்கும் கோபாலபுரத்திற்கும் என்ன சம்பந்தம்.?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjzL9CAXqf9Ob7eYv2m8tbypgThdDyS3EjV_2nwUR8Ex3khGlZlwI-xrtRaiTTOgFvPYK8CInHvIuK3PZRlt5iBMSq8NXxqnGLPCe1kJjovPobfiocbpWEyONMhPgObfvJqoWLb0Hnwj0a/s400/TM_15-10-08_E1_01-02%2520CNI.jpg 9. தயாநிதி மாறன் உங்களுக்கு முன் இதே வேலையை தான் செய்தார் என்பது உண்மை தான். ஆனால் அந்த வருமானம் முரசொலி மாறன் குடும்பத்திற்கு மட்டுமே சென்றது. தங்களுக்கு வரவில்லை என்பதால் தானே உங்கள் தலைவர் ஆரம்பம் முதலே தயாநிதி மாறன் மேல் கடுப்பாக இருந்தார். அதனால் தான் தற்குறியான உங்களை அந்த இடத்திற்கு கொண்டு வந்தார். இது உங்களுக்கு தெரியும் தானே. அதனால் தான் இவ்வளவு துணிகர செயலில் இறங்கினீர்கள்.
10.மேலும் உங்களுக்கு கிடைக்கப்பெற்ற தொகையில் காங்கிரஸுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தானே இந்த மொத்த கொள்ளையுமே நடைபெற்றது. அதனால் தான் பிரதமர் உங்களுக்கு எழுதிய கடிதங்களை கூட அலட்சியப்படுத்தினீர்கள். நீங்கள் கடைசியாக எழுதிய கடிதத்திற்கு பிரதமர் ஒருமாதம் கழித்து "Received your letter" என்பதாக பதில் எழுதினார். உலகத்தில் இது மாதிரி எங்கு நடக்கும்? இதிலிருந்தே உங்களுக்கு அந்த தைரியத்தை யார் கொடுத்தார் என்பது புரிகிறது.
11. திமுகவில் உள்ள மற்றவர்கள் போலல்லாமல் நீங்கள் சிறந்த வாசிப்பாளர். பெரியாரை நேசிப்பவர். இருந்தும் பெரியாரின் நெறிமுறைகளுக்கு மாறாக இவ்வளவு பெரிய துணிகர செயலில் இறங்கியது ஏன்? எல்லாம் கோபாலபுரம் கொடுத்த தைரியம் தானே? அதனால் தானே சி.பி.ஐ விசாரணையில் மிகவும் பிடிவாதமாக இருந்தீர்கள். சாதாரண மனிதனை விசாரிப்பது போல் சி.பி.ஐ தன்னை விசாரிக்க முடியாது என்ற தைரியத்தில் தானே அவ்வாறு பிடிவாதமான பதிலை சொன்னீர்கள். மொத்தத்தில் ராசா அவர்களே நீங்கள் சரியான மனிதராக இருந்து தவறான மனிதராக மாறி, தவறான இடத்தில் இருக்கும் மனிதர்.
12. தலைமை தணிக்கையாளரை நான் நீதிமன்றத்திற்கு இழுப்பேன் என்கிறீர்கள். ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி என்று குறிப்பிடுவதற்கு, அவருக்கும் அல்லது திமுகவிற்கும் என்ன முன்விரோதம்? அல்லது சொத்து தகராறா? பங்காளி சண்டையா? சந்தை விலையை அடிப்படையாக வைத்து தானே அவர் முடிவு செய்தார். அதாவது உங்களிடமிருந்து லைசன்ஸ் பெற்ற நிறுவனங்கள் அதை பல மடங்கு அதிகப்படியான விலைக்கு விற்றன. அன்றைய தொலைபேசி பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை இவற்றை வைத்து தானே அவர் முடிவு செய்தார். கூட்டி கழித்து பாருங்கள் உங்கள் மனசாட்சிக்கே அது தெரியும்.
http://www.tamilhindu.com/wp-content/uploads/spectrum-raja.jpg 13. சர்க்காரியா ஊழல் கூட விஞ்ஞானமுறைப்படி தான் நடைபெற்றது. அது மாதிரி தான் இதுவும். ஆகவே நாம் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்று தலைவர் கொடுத்த தைரியம் தானே உங்களுக்கு.... உங்கள் காரணமாக தானே அவர் ஈழப்போரில் நாடகமாடினார். போரை நிறுத்துவதற்கு இந்திய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க முடியாமல் பல்லாயிரம் உயிர்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு காரணமானார்.இந்த ஆன்மாக்களின் பழிபாவம் உங்களை சும்மா விடுமா? 14. நீங்கள் ஒரு விஷயத்தை மட்டும் வெளியில் சொல்வதில்லை. லாவகமாக தவிர்த்து விடுகிறீர்கள். அதாவது உங்கள் அதிகார காலத்தில் மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனம் எவ்வளவு நட்டமடைந்தது என்பதை வெளிப்படையாக அறிவிப்பதற்கு உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? இதன் காரணமாக தொலை தொடர்பு ஊழியர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு கொடுப்பதற்கு பி.எஸ்.என்.எல் நிறுவனம் முடிவு செய்திருக்கிறதே? அவர்களின் கண்ணீர் உங்களை சும்மா விடுமா? கண்டிப்பாக ஒரு காலத்தில் உங்களை தீண்டிக்கொல்லும்.
 
 
http://1.bp.blogspot.com/-4aMMKewQRPM/T9K60FGMi_I/AAAAAAAABgw/ekraKs21ybE/s1600/09THRAJA_1107892g.jpg
நன்றி -எச்.பீர் முஹம்மது வின் ஃபேஸ்புக்கிலிருந்து
 
பேட்டியின் ஆங்கில வடிவம் பை NDTV
 
Chennai: Here are the excerpts from A Raja's interview in Tamil to Puthiya Thalaimurai Channel.  
 
Q: Are you telling me that there has been no loss at all to the government? 
 
 
A Raja: Both the court and recently Kapil Sibal have accepted that due to all decisions taken under the policy guidelines of TRAI there has been no loss. But my problem is that for the first time in the judicial history of this country, the CAG report which is meant for the parliament is being treated as the basis for a criminal investigation by the Supreme Court. The trial court has rejected the theory of the CAG and CBI over the loss to exchequer, so i am going to drag the Comptroller & Auditor General to the court. I hope the court will permit this. I will do it."  
 
 
Q: You mean to say you will grill the CAG in court?     A Raja: Of course, because his report has been taken as the basis for my criminal prosecution.   Q: After your arrest, the Supreme Court has reversed all your decisions and it said that your decisions are unconstitutional and arbitrary and you had gifted the spectrum away. Is it a setback for you?       A Raja: The Supreme Court has delivered the judgement without hearing my side, and I have mentioned this before the Supreme Court bench in a curative petition. The Supreme Court has told me that I need not have any apprehension in my mind as this judgment will not affect the trial.   Q: You have been arrested and charges slapped against you. Do you think you were singled out and others were not responsible?   A Raja: First come, first served was followed by Arun Shourie and Dayandhi Maran, and 23 days before taking charge Dayanidhi Maran had allocated spectrum in the same way.  There is no problem in the policy this has been agreed upon by Arun Shourie. Before me, spectrum was allocated only to a cartel formed by Airtel, Aircel, Vodafone And Idea, but in my period I opened up the market. But there was never a problem with the policy.    Q: Is this cartel still functioning?  A Raja: Till I stepped down as a minister that cartel was active. Now I don't know what the status is. But I was the one who broke the cartel. I want to tell one thing to the public, even learned people were talking without knowing all the facts. Spectrum is government property. License is issued by the government. It's being used by people but the pricing is fixed by the telecom companies, are you aware of these details or is the public aware of it? The cartel decides the pricing. When I questioned it,  they said as a minister you have no right to decide.   Q: Is there any specific reason why you did not apply bail for the past 15 months?     A Raja: There are no specific reasons. I was mentally strong. The media had sensationalised every observation that was made in the court and it was blown out of proportion. The myth was so strong and the courts were not lenient. I had to wait for the effects of  the magnitude of 1.76 lakh crore to subside. After I argued in the court and bail was granted to some people and I was waiting for the opportunity and I am hopeful that I will come out clean.     Q: After 15 months of imprisonment your party welcomed you and do you think you have been let down by your friends and allies?     A Raja: I don't want to get into the argument that they dumped me and they did not attempt to save me. The case I am facing a criminal case and I have to face it alone. One thing I will say, I have all the strength by my side to face this case. That strength has been given to me by my leader. I recall a saying of a Tamil scholar: "The hottest place in hell is reserved for those who maintain neutrality at the time of a moral crisis." 
 

மதுரை ட்விட்டர் கம் டாக்டரின் ஹாஸ்பிடல் லொள்ஸ்

Ramesh Subburaj shared I Can't Believe It's photo.
1. டாக்டர், என் கணவர் சரியான உம்மணாம்மூஞ்சியா இருக்கார், அதுக்கு என்ன காரணம்னு செக் பண்ணுங்க..


யார் காரணம்னு கேளுங்க ,சொல்றேன்


------------------


2. டாக்டர், உங்க ஃபீஸ் ரூ 100 தானே, எதுக்கு ரூ 120 வாங்குனீங்க?


அரை மணி நேரம் வெயிட் பண்றப்போ ஹால்ல டி வி பார்த்தீங்களே அதுக்கு 20 ரூபா



----------------------------

3. காலைல வெறும் வயிற்றுல 4 டம்ளர் தண்ணீர் குடிக்கனும்


டாக்டர், ஒரு டம்ளர் தண்ணீர் குடிச்சதும் அது எப்படி வெறும் வயிறு ஆகும்;?



------------------------------


4. டாக்டர், நான் சுத்த சைவம்


 ஸோ வாட்?


 மீன் மாத்திரை சாப்பிட மாட்டேன்



----------------------------


5. டாக்டர், 5ஆம் வார்டு பேஷண்ட் கிட்டே மட்டும் பாசமா பேசறீங்களே, ஏன்?


பாவம், கடைசி நாட்களை எண்ணிட்டு இருக்காரு



---------------------




6. டாக்டர், க்ளினிக் வாசல்ல ஒரு பவுன் = ரூ 25,600 என எழுதி இருக்கீங்களே, ஏன்?


 தங்கப்பல் கட்ட வர்றவங்க கோல்டு மார்க்கெட் ரேட் தெரிஞ்சுக்காம இருக்கக்கூடாதே?


----------------------


7. அந்த பல் டாக்டர் ரொம்ப பொஸசிவ் டைப்னு எப்படி சொல்றே?


 எந்த பேஷண்ட்டும் நர்சுங்க கிட்டே பல்லைக்காட்டி பேசிட்டு இருந்தா அவருக்கு பிடிக்காது


------------------------------


8. கண் டாக்டரை விட பல் டாக்டருக்கு வருமானம் ஜாஸ்தி. 


 எப்படி சொல்றே? 


 கண் ஒரு மனுஷனுக்கு 2 தான் இருக்கு, ஆனா பல் - 32 இருக்கே?


---------------


9. பல் டாக்டர் பரமசிவம் காதல் மேட்டர்ல கேடி போல 

 எப்படி சொல்ரே?


பல்லவ மன்னன் - பல லவ் கண்ணன் அப்டினு  நேம்  போர்டு வெச்சிருக்காரே?


-------------------

10. டாக்டர், நர்ஸோட அழகைப்பார்த்து உலகையே மறந்துட்டேன்

ஃபீஸ் குடுக்க மறந்துடாதீங்க 


----------------


விழுப்புரத்தில் மையம் கொண்ட டெசோ (டெங்கு சோதனை அமைப்பு) என்னும் காற்றழுத்த தாழ்வு நிலை சில தினங்களில் சென்னையில் வலுவிழந்து கரையில் மண்ணைக் கவ்வலாம்.

- முரசொலி வானிலை ஆராய்ச்சி மையம்



11. டாக்டர், நான் ஈ பட போஸ்டரை ஏன் க்ளினிக் உள்ளே வெச்சிருக்கீங்க?


 பேஷண்ட் கிட்டே ஈன்னு பல்லை காட்டச்சொல்ல தேவை இல்லை.. போஸ்டரை காட்னாலே புரிஞ்சுக்குவாங்க 


------------------------

12.கொக்கோ கோலா மதி -   டாக்டர், என் தலைல பேனும், ஈறும் இருக்கு


 ஏம்மா ,பல் டாக்டர்னா நான் பார்க்கற ஈறு வேற , இது வேற 



----------------------


13. டாக்டர், எப்பவும் உங்க மனைவிக்கு கனகாம்பரப்பூ தான் வாங்கித்தருவீங்களா?ஏன்?


அதுதான் பல் ஈறு போல் கலரில் இருக்கும்


----------------------


14. அய்யய்யோ தமிழச்சி -டாக்டர், பச்சரிசி மாதிரி பல் வரிசை கொண்ட எனக்கு பல்லுல சொத்தையா?


 ஆமா, ரேஷன் பச்சரிசியா இருக்கும்




--------------------------


15. டாக்டர் - 6 மாசத்துக்கு ஒரு தடவை  டூத் பிரஸ் புதுசு யூஸ் பண்ணனும்

 நான் டெயிலி புதுசுதான் யூஸ் பண்றேன் ( எல்லாமே!)

 எப்படி?


 இலவசமா விட்டுட்டே இருக்கும் அங்கிள் - வேப்பங்குச்சில  தானே பல் துலக்கறேன்


-------------------------
நீ வாங்குற 5க்கும் 10 க்கும் உனக்கு ஃபேஸ் புக் தேவயா?'s photo.


Sunday, July 08, 2012

சாரு நிவேதிதா. - நகைச்சுவை சிறுகதை - கையருகே ஆகாயம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhC_BfKip_CufzCxFgHvY0zElslpq6TWGWwmYY74CwqZkHLF90SeaW9Pavbh65LkWmt-EWOTlE1DcsZiebxEzA6t2Qv8SMemUdj_kAuEmOOpuanFOequLSFVk1t562f5yEtBa7BHpMBqKc/s400/charu02+(1).JPGகதை ஆசிரியர்: சாரு நிவேதிதா.


ராமசாமியை எனக்கு முன்பின் தெரியாது. என் வாசகர் என்று எனக்கு அறிமுகமானார். ஓரிரு மாதப் பழக்கத்திற்குப் பிறகு , ” நீங்கள் பாரீஸ் பற்றி நிறைய எழுதியிருக்கிறீர்கள். உங்களோடு ஒருமுறை அங்கே போக வேண்டும்! “ என்றார்.


எனக்கும் ஒரு துணை கிடைத்தது என்ற சந்தோஷத்தில் உற்சாகமாகக் கிளம்பினேன். அப்போது டிசம்பர் மாதம். டிசம்பர் என்றால் எனக்கு மிகவும் இஷ்டம்.


என் பிறந்த நாள் டிசம்பரில் தான். வருடா வருடம் டிசம்பர் மாதம் பாரீசுக்குச் சென்று என் பிறந்த நாளை நானே கொண்டாடுவது வழக்கம். ஐரோப்பாவில் குளிர்காலம் வித்தியாசமாக இருக்கும். ஊட்டியில் கூட குளிர் காலத்தில் குளிர் ஜீரோ டிகிரிக்குப் போகும் என்றாலும் , அதே ஜீரோ டிகிரி ஐரோப்பாவில் வேறு மாதிரி இருக்கும். காலம் , காலமாக வெப்பத்தைக் காணாமல் குளிரிலேயே உறைந்து கிடப்பதால் ஐரோப்பிய மண்ணின் குளிருக்கு வீரியம் அதிகம். ஆனால் , ராமசாமியால் எப்படி அந்தக் குளிரைத் தாங்க முடியும்.


” நாம் ஏப்ரல் , மே கோடைக் காலத்தில் போகலாம் “ என்றேன். அவர் கேட்கவில்லை. இப்போதே கிளம்பினால் தான் ஆயிற்று என்று ஒற்றைக் காலில் நின்றார். ராமசாமி , நாமக்கல்லில் ஒரு கோடீஸ்வரர் ; பண்ணையார். ஏகப்பட்ட லாரிகள் ஒடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் , பார்ப்பதற்கு ஏதோ டாஸ்மாக் பாரில் எடுபிடி வேலை செய்பவர் போல் தோற்றம் தருவார். காலில் ரப்பர் செருப்பு ; அதிலும் , ஒரு அறுந்த வாரை ஊக்கு போட்டு மாட்டியிருப்பார். சுருக்கம் விழுந்த சட்டை. எவ்வளவு அவசரமாக இருந்தாலும் ஆட்டோவில் ஏற மாட்டார் ; எல்லாவற்றுக்கும் பஸ் தான்.


” இப்படியெல்லாம் பாரீஸ் வந்தால் குளிரில் விறைத்துச் செத்துப் போய் விடுவீர்!“ என்று எச்சரித்தேன். பாரீஸ் போய் வாங்கினால் , நம்மூர் காசுக்கு விலை ஐந்து மடங்கு ஆகி விடும் என்று சொல்லியும் செவி சாய்க்கவில்லை. பிறகு கட்டாயப்படுத்தி ஷூ , ஸ்வெட்டர் எல்லாம் வாங்கச் செய்தேன்.ஜீரோ டிகிரி குளிரில் வாழ வேண்டுமானால் , ஒருவர் குறைந்தபட்சம் 12 கிலோ எடையுள்ள கம்பளி உடுப்புகளை அணிந்திருக்க வேண்டும்.


கம்பளி சாக்ஸ் , குளிர் நாடுகளுக்கேற்ற ஷூ (அதன் விலை இந்தியாவில் ரூ. 10,000), கையுறை , ஸ்வெட்டர் , கம்பளி கோட்டு , மப்ளர் , குல்லாய் என்று இத்தனை உருப்படி தேவை. ஆனால் , ராமசாமி ரூ. 300 க்கு ஒரு ஷூவை வாங்கினார். கோட்டு இல்லை ; மப்ளர் இல்லை ; கையுறை இல்லை ; எதுவுமே இல்லை! கிளம்பி விட்டார். விமானத்திலேயே பிரச்னை ஆரம்பமாகி விட்டது. ராமசாமியிடம் ஒரு விநோத பழக்கம் என்னவென்றால் – அவருக்கு அருகிலேயே , அவரைத் தொடக் கூடிய தூரத்திலேயே நீங்கள் அமர்ந்திருந்தாலும் எங்கோ அடுத்த வயக்காட்டில் நின்று கொண்டிருக்கும் ஒருவரைக் கூப்பிடுவது போன்ற குரலில் பேசுவார் ; கத்துவார் என்பதே சாலப் பொருத்தம்.


விமானத்தில் அவருக்குப் பக்கத்து சீட்டு தான் எனக்கு. ஆனாலும் , வானில் பறந்து கொண்டிருக்கும் மற்றொரு விமானத்தில் அமர்ந்திருக்கும் ஒருவரோடு பேசுவதாக நினைத்து , என் செவிச் சவ்வுகளைக் கிழித்துக் கொண்டிருந்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஒரு வெள்ளைக்காரர் , ராமசாமியிடம் மெதுவாகப் பேசுமாறு கேட்டுக் கொண்ட போது , இரண்டு நிமிடம் அடங்கி விட்டு , பிறகு , மீண்டும் அதே உச்சத்தில் ஆரம்பித்தார். நான் , சைகையில் வெள்ளைக்காரனைக் காண்பித்தேன். உடனே சப்தமாக , ” அவங்கெடக்கான்… நம்ப ஊருக்கு வந்துட்டு அவன் என்ன நம்பள நாட்டாமை பண்றது ? “ என்றார்.



” இது உம்முடைய நாமக்கல் அல்ல ; இப்போது நாம் ஆகாயத்தில் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம். அநேகமாக துருக்கியாக இருக்கலாம்.. “ என்று அவரிடம் சொல்ல நினைத்தேன்.ஆனால் , அதற்கும் ஏதாவது குதர்க்கமாக பதில் சொல்வார். அதனால் , கண்களை மூடித் தூங்க ஆரம்பித்தேன். தூக்கம் வரவில்லை ; இருந்தாலும் , கண்களைத் திறக்க அச்சமாக இருந்தது. எவ்வளவு நேரம் அப்படி இருக்க முடியும் ? பிறகு லேசாகக் கண்ணைத் திறந்து பார்ப்பேன். அவ்வளவுதான் , எலியை கவ்வுவதற்காகப் பாயும் பூனையைப் போல் பாய்ந்து பிடித்துக் கொள்வார்.


பிறகு , மறுபடியும் ஆரம்பிக்கும் கச்சேரி. இப்போது முன்னை விட சுதி ஏறியிருக்கும். ஆமாம் , விமானத்தில் தரும் ஸ்காட்ச் விஸ்கியை அதற்குள் நாலைந்து ரவுண்ட் போட்டிருப்பார். ஏதாவது சுவாரசியமாக இருந்தாலும் கேட்டுக் கொண்டிருக்கலாம். எல்லாம் அவருடைய மனைவியைப் பற்றிய புகார் கதைகள். ஆனால் , எனக்கு என்னவோ அந்தப் பெண்மணி மீது மதிப்பு தான் கூடியது. இப்படி 24 மணி நேரமும் தவளையைப் போல் கத்திக் கொண்டிருக்கும் மனிதரோடு இத்தனை வருடம் குடித்தனம் நடத்திஇருக்கிறாளே , அவள் எப்பேர்ப்பட்ட பொறுமைசாலியாக இருக்க வேண்டும்!


பாரீஸ் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் என் தோள் பையைத் திறந்து ஒரு பொருளை எடுத்து , ; இதோ பாருங்கள் பெருமாள்! ; என்று பெருமையுடன் காண்பித்தார் ராமசாமி. இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். எனக்கு அந்த ஆண்டு தான் இதய அறுவை சிகிச்சை நடந்திருந்ததால் , சுமை எதுவும் தூக்க வேண்டாம்! என்று எச்சரித்திருந்தார் மருத்துவர். ஆக , என் பையையும் ராமசாமியேதான் தூக்கி வர வேண்டியிருந்தது. உண்மையில் எனக்கு இத்தனை உதவி செய்த ஒரு நண்பரைப் பற்றி பொல்லாங்கு சொல்வது பற்றி எனக்கே நாணமாகத் தான் இருக்கிறது. என்ன செய்ய ? என் தொழில் (எழுத்து) அப்படி!


என் கைப்பையிலிருந்து ராமசாமி எடுத்துக் காண்பித்த பொருளைப் பார்த்ததும் நான் ஒருகணம் ஆடிப் போய் விட்டேன். விமானத்தில் போர்த்திக் கொள்வதற்காக போர்வை கொடுப்பர் அல்லவா , அந்தப் போர்வையை என் பையில் வைத்து எடுத்து வந்திருக்கிறார்! அந்தக் குளிரிலும் எனக்கு வேர்த்து விட்டது. மாட்டியிருந்தால் அவமானமாகப் போயிருக்குமே! ” இங்கே குளிர் அதிகமில்லே ? அதுதான் எடுத்து வைத்துக் கொண்டேன் ” என்றார் ராமசாமி. எனக்கு வந்த கோபத்தில் எதுவும் பேசவில்லை.

விமான நிலையத்திலிருந்து டாக்சி பிடித்து லாட்ஜில் ரூம் போட்டோம் ; ஆனால் , அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. நாங்கள் சென்ற இடம் கார் துநோர் என்ற பாரீசின் வடக்குப் பகுதி. அங்கே வசிக்கும் பெரும்பான்மையோர் வட ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த கறுப்பின முஸ்லீம் மக்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள்.சிறிய லாட்ஜுகளின் உரிமையாளர்கள் பலரும் அல்ஜீரியர்கள். அவர்களிடம் சென்று , “ எங்கள் இருவருக்கும் ஒரே அறை வேண்டும்… ” என்று சொன்னதும் சைத்தானை நேரில் கண்டது போல் , ” ஹராம் , ஹராம்… “ என்று கத்தினர்.


இந்த இடத்தில் எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. என் நண்பர் ஒருவரின் மகன் அமெரிக்காவில் வேலை செய்கிறான். அவன் ஒரு அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான்.விசனத்தில் இருந்த நண்பருக்கு ஆதரவாக என் மற்றொரு


நண்பனான நிக்கி என்ன சொன்னான் தெரியுமா ? “ சந்தோஷப்படுங்கள் , அட்லீஸ்ட் அவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டானே என்று! “, இன்னமும் புரியவில்லையா ?


அதாவது , அந்த அல்ஜீரியர்கள் என்னையும் , ராமசாமியையும் , ‘ ஹோமோ ‘ என்று நினைத்து விட்டனர். சே… சே… என் வாழ்விலேயே அப்படி ஒரு அவமானகரமான சம்பவத்தை நான் அனுபவித்தது இல்லை. பிறகு ஒரு மூன்றாந்தரமான லாட்ஜில் ரூம் போட்டோம். ஓனர் ஒரு வயதான ப்ரெஞ்சுக்காரி என்பதால் பிரச்னை இல்லை.முதல் நாளே ஆரம்பித்து விட்டது பிரச்னை. குளிர் ஜுரம் கண்டவனைப் போல் வெடவெட என்று நடுங்கிக் கொண்டிருந்தார் ராமசாமி. அறையை விட்டு வெளியே வரவே இல்லை.


மதிய உணவுக்கும் , இரவு உணவுக்கும் மட்டும் தான் வெளியே வந்தார். வடக்கு பாரீசில் நாங்கள் தங்கியிருந்த இடத்தின் பெயர் லா சப்பல். இது ஒரு குட்டி யாழ்ப்பாணம். திரும்பின இடமெல்லாம் தமிழ்க் கடைகள் தான். அதனால் , தமிழ்ச் சாப்பாட்டுக்குப் பிரச்னை இல்லை. ஆனால் , இவ்வளவு தூரம் வந்து , இவ்வளவு பணம் செலவு செய்து ரசமும் , சாம்பாரும் சாப்பிட வேண்டுமா என்பது தான் என் கேள்வி. இருபத்து நாலு மணி நேரமும் அறையிலேயே அடைந்து கிடந்து , சாம்பார் சாதம் சாப்பிடுவதற்கு ஒரு ஆள் ஏன் பாரீஸ் வரை வர வேண்டும் ?


அறையில் மற்றொரு பிரச்னை , சிகரட். ராமசாமிக்கு விழித்திருக்கும் நேரமெல்லாம் வாயில் சிகரட் புகைத்து கொண்டிருக்க வேண்டும். அதிலும் , அவர் குடிக்கும் சிகரட் , இந்த உலகத்திலேயே படு மட்டமான ரகம். எங்களுடைய நிதி நிலமை தனித்தனி அறைகளில் தங்குவதற்கு மதிக்கவில்லை. இது எல்லாவற்றையும் கூட மன்னித்து விடுவேன். ஆனால் , ஸ்பெய்னிலிருந்து நாங்கள் பாரீசுக்கு வந்த ரயில் பயணத்தில் ராமசாமி செய்த ஒரு காரியத்தை மட்டும் என்னால் மன்னிக்கவே முடியாது.


பிரான்சிலிருந்து ஸ்பெய்ன் சென்று விட்டு , அங்கிருந்து பாரீசுக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தோம். முந்தின தினம் தான் கிறிஸ்துமஸ். அது ஒரு பகல் நேரம். வரும் வழியெல்லாம் கிறிஸ்துமஸ் மரங்களும் மற்றும் பெயர் தெரியாத ஆயிரக் கணக்கான மரங்களிலும் பனித் துகள்கள் பொடிப் பொடியாக விழுந்து , மரங்களையே மறைத்துக் கொண்டிருந்தன. இந்த இடத்தில் வாசகர்கள் என்னை மன்னிக்க வேண்டும். அந்தப் பரவசமான காட்சியை வார்த்தைகளில் விவரிக்க இயலாதவனாக இருக்கிறேன்.


ஒரு மகா அற்புதம் கண் முன்னே விரிந்து கிடந்தது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு ஸ்டேஷன் வரும். அப்புறம் வருவதெல்லாம் அந்த அற்புதம் தான். அந்த ரயிலைத் தவிர அங்கே மனித வாழ்வின் சுவடே தெரியாமல் கிடந்தது. எதிரே தூங்கிக் கொண்டிருந்தார் ராமசாமி. ஆம் , சொல்ல மறந்து விட்டேன். அவர் சிகரட் குடிக்காத நேரத்திலெல்லாம் தூங்கிக் கொண்டிருந்தார். உட்கார்ந்தபடி தூக்கம் , நின்றபடி தூக்கம். மனிதர் சல்லாப நேரத்தில் கூட தூங்கிக் கொண்டிருந்திருப்பாரோ என்ற அச்சம் ஏற்பட்டது


எனக்கு.எழுப்பி விட்டு அந்த அற்புதத்தைப் பார்க்கச் சொன்னேன். கண்களில் எந்த பாவமும் இன்றி ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்து விட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தார். காலை எட்டு மணியிலிருந்து மாலை ஆறு மணிக்கு பாரீஸ் வந்து சேரும் வரை தூக்கம் தான். ஆனால் , சைத்தான் எனக்குள்ளேயும் இருக்கிறான் என்று தோன்றியது. கடவுள் உனக்கு சொர்க்கத்தைக் காண்பித்தான். அதைப் பார்த்து அனுபவிப்பதை விட்டு விட்டு , உன்னை எவன் , பக்கத்திலிருப்பவனின் தூக்கத்தைப் பற்றி எண்ணி எரிச்சலடையச் சொன்னது ? பாரீஸ் வந்ததுமே பயணத் தேதியை முன்னதாகவே மாற்றிக் கொண்டு ஊருக்கு வந்து சேர்ந்தேன்.


சென்னை வந்து இரண்டு வாரம் இருக்கும். ராமசாமிக்கு போன் போட்டேன். அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று தெரிந்தது. அப்போது ஒரு நாள் – ஒரு பெண்ணிடமிருந்து எனக்கு போன் வந்தது.ராமசாமியின் மனைவி. அப்போது தான் முதல் முறையாக என்னோடு பேசுகிறார். அவர் கேட்ட முதல் கேள்வி:


“ ராமசாமி எங்கே ? “


“அடப்பாவி , நாங்கள் வந்தே இரண்டு வாரம் ஆகிறதே! இன்னுமா அவர் ஊர் வந்து சேரவில்லை ? “


ராமசாமியின் மனைவி உஷ்ணமாகி விட்டார்…


“ராமசாமி காணவில்லை என்று நான் போலீஸில் புகார் கொடுக்கப் போகிறேன். போலீஸ் உங்களிடம் வருவார்கள். தயாராக இருங்கள்
 http://covers.openlibrary.org/w/id/6276273-M.jpg

சீறும் ஆண்ட்டியை நம்பு, சிரிக்கும் டீன் ஏஜ் பெண்ணை நம்பாதே ( ஜோக்ஸ்)

1. வாழ்க்கைல ரொம்ப பாதிக்கப்பட்டவர் போல

 எப்படி சொல்றே?


சீறும் சினேக்கை நம்பு ( SNAKE), ஆனா சீக்கிரமா போய்ச்சேர்ந்துடலாம்னு எல் எஸ் எஸ்   ( L S S ) பஸ்ஸை நம்பிடாதே.. அப்டினு சொல்றாரே?


--------------------------------


2.  தலைவர் மேடைல பேசறப்போ கைல எதுக்கு சாட்டை வெச்சுக்கறாரு?


மேடைல பேசற ஒவ்வொரு பேச்சும் சாட்டைல அடிக்கற மாதிரி இருக்கனும்னு மேலிட உத்தரவாம்


-----------------------------


3. அடிக்கடி ஆளை மாற்றும் ஆள்னு அவரை சொல்றியே, ஏன்?


 உன் காதலியின் கேரக்டரை மாற்ற முயற்சி செய்.. முடியலையா? காதலியையே மாற்றி விடுன்னு எல்லாருக்கும் அட்வைஸ் பண்றாரே?



------------------------------


4. எனக்கு மேரேஜ்னு ஒண்ணு நடந்தா அது சதீஷ் கூடத்தான்.. 



 அடிப்பாவி.. அப்போ என் கதி?


அதோ கதிதான்.. சரி விடுங்க, அவர் கூட டைவர்ஸ் ஆச்சுன்னா உங்களுக்கு ஒரு வாய்ப்பு தர்றேன்.. 



----------------------------------------------


5. டேய், பொய் சொல்லாத. சொன்னா  சாமி கண்ணை குத்திடும்.. 


 இதுவும் பொய் தானே டாடி?



-------------------------------


நம்ம ஊரில பூனை பொரிச்சமீனை இப்படித்தான் பார்க்கும்.........

இதுக்காக நம்ம சாமி...



6. அந்தக்காலம், இந்தக்காலம் - என்ன வித்தியாசம்?


சரித்திரத்துல இடம் பெறனும்னு அவனவன் தன் உயிரையே குடுத்த காலம் அப்போ, இப்போ நெட்ல தான் பார்த்த ஹிஸ்டரியை இடம் பெற விடாம அழிக்கறாங்க..


--------------------------------------


7. அந்த டாக்டர் இண்டர்நெட் பைத்தியம்னு எப்படி சொல்றே?

 மனுஷன் பெற்றதில் உருப்படியான    ரெண்டே விஷயம் 1. இணையம் 2 . கணையம் அப்டிங்கறாரே?


----------------------------------

8. மெரீனா பீச்ல காதலர்கள் போராட்டம் நடக்குதா? ஏன்?


 பீச்ல லவ்வர்ஸ் கட்டிப்பிடிக்க, கிஸ் பண்ண மட்டும் தான் அனுமதி கிடைக்குதாம். “ எல்லாத்துக்கும்” பர்மிஷன் வேணுமாம்



----------------------------------------


9. சானியா, சோனியா - என்ன வித்தியாசம்?

 இந்தியா ஜெயிக்கனும்னு விளையாண்டா அது சானியா.. இந்தியாவையே விளையாட்டா அசால்ட்டா நினைச்சா அது சோனியா



---------------------------------------------

10. ஜட்ஜ் - எதுக்காக பொண்ணுங்களை வெளி நாட்டுக்கு கடத்துனே?


கைதி - பெண்கள் வாழத்தகுதி இல்லா நாடு - இந்தியான்னு ஒரு சர்வே சொல்லுச்சு யுவர் ஆனர், அதான் அவங்களை  காப்பாத்தலாம்னு..


-----------------------------------




11. இக்கரைக்கு அக்கரை பச்சை-ன்னா என்ன?


நாம பைக்ல போறப்ப  லாங்க்ல டிராஃபிக் சிக்னல் பச்சைல காட்டும், கரெக்டா நாம கிட்டப்போறப்போ சிவப்பு லைட் எரியும்.. அதான்



--------------------------------


12. அடிக்கடி பொண்ணுங்களோட சேட்டில் கடலை போடற ஆளை கிரிக்கெட் மேட்ச்ல ஃபீல்டிங்க் பண்ண விட்டது தப்பா போச்சு 


 ஏன்?


 கேட்சை மிஸ் பண்ணிட்டு “ ஐ கேட்ச் யூ லேட்டர்” அப்டிங்கறாரு


----------------------------


13. டாட்டா ஏஸ் வண்டியால அடிக்கடி ஆக்சிடெண்ட் நடக்குதாம்./. 

 அப்போ அதை சின்ன யானைன்னு சொல்ல கூடாது, சின்ன எமன்னு தான் சொல்லனும்.. 



----------------------------------


14. ஆட்டோ டிரைவர் ஒரு டைப்பான ஆள்னு எப்படி சொல்றே?


 சீறும் ஆண்ட்டியை நம்பு, சிரிக்கும் டீன் ஏஜ் பெண்ணை நம்பாதே-ன்னு ஆட்டோல எழுதி வெச்சிருக்காரே?



-----------------------------------------

புதிய மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைத்த தலைவரு பேசி சூப்பரா சொதப்பிட்டாரு

அப்படி என்னையா பேசினாரு ?

"மீனையெல்லாம் ...கடலில் சேமிக்கணும்னு சொல்லிட்டாரு "

(இந்த கார்டூனை பார்க்காத கண்மணிகளுக்காக..... இதற்கும் இந்த புதிய நகைசுவைக்கும் தொடர்பு இல்லை !)

Friday, July 06, 2012

நான் ஈ - சினிமா விமர்சனம்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicbTwGjbUg2D7WYHIjjqek07tgMrfCxRvmZKukYZP2ZVvvj7Z0jRuRHFsZL1zdTg3hSDW7pObppWNnaxyBhXpN37eOKawEDZ4Wg8yLW3PhHtIAch88bvN70NwpDNtpX3ngsSYTqQScYdU3/s1600/Naan+Ee.jpgசயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்கள் தமிழில் ரொம்ப குறைவுதான்.. ஷங்கரின் எந்திரன் ரஜினி நடிச்சதால அந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன் பிரமிப்பு ரஜினியின் ஸ்டார் வேல்யூ முன்னால பெரிசா பேசப்படலை.. எஸ் ஜே சூர்யா நடிச்சு டைரக்ட் செஞ்ச நியூ படம் சயின்ஸ் ஃபிக்சன்ல இருந்து கொஞ்சம் விலகி கில்மா பட ரேஞ்சுக்கு போயிடுச்சு.. அதனால தெலுங்குல Eega என்ற பெயரில்  ரிலீஸ் ஆகும்  ஃபேண்டசி வகைப்படமான நான் ஈ ரொம்ப பெரிய எதிர்பார்ப்பு..


 படத்தோட ஒன்லைன் ரொம்ப சிம்ப்பிள்.. ஹீரோ ஹீரோயின் 2 பேரும் லவ் பண்றாங்க.. வில்லன் ஹீரோவை கொலை பண்ணிடறார்.. ஹீரோ ஈ ஆக மறு ஜென்மம் எடுக்கறார்.. எப்படி வில்லனை பழி வாங்கறார் என்பதுதான் கதை..

இனி திரைக்கதை.. ஓப்பனிங்க்லயே வில்லன் தான் அறிமுகம்.. அதுல இருந்தே படத்தோட முக்கியத்துவம் வில்லனுக்கு தெரிஞ்சுடுது.. வில்லன் எந்த மாதிரி ஆள்னா சிம்புவுக்கு அண்ணன், அர்ஜூனுக்கு பாஸ், கார்த்திக்கிற்கு தாதா, எஸ் ஜே சூர்யாவுக்கு குரு ,  கமலுக்கே வழி காட்டி  சுருக்கமா சொல்லனும்னா பொண்ணுங்களை கரெட்க் பண்றதுல மன்னன்.. அதுதான் அண்ணனுக்கு மெயின்  ஜாப்பே.. அது போக நேரம் இல்லாதப்போ ஏதொ தொழில் பண்ணிட்டு தானும் ஒரு தொழில் அதிபர்னு ஊர்ல சொல்லிட்டு திரியறார்..



http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/05/naan-ee-movie-stills.jpg



 ஹீரோயின் ஒரு மினியேச்சர் ஆர்டிஸ்ட் அம்மா, அப்பா இல்லை, அண்ணி கூட தங்கி இருக்கா.. எதிர் வீட்ல ஹீரோ.. எப்போ பாரு அவ பின்னாலயே ரவுண்டிங்க்.. பாப்பாவுக்கு அது தெரியும்.. பிடிச்சிருக்கு.. ஆனாலும் பிகு பண்ணிட்டு அவனை அலைய விட்டு ரசிக்குது..


 எல்லா சங்கடங்கள், ஈகோவை விட்டு ஹீரோ கிட்டே  ஹீரோயின் லவ்வை சொல்ற டைம் அந்த அசம்பாவிதம் நடக்குது.. அதாவது வில்லன் ஹீரோயினை கணக்கு பண்ண பார்க்கறான்.. ஏதோ சமூக சேவை நிறுவனத்துக்கு டொனேஷன் கேட்க வந்த ஹீரோயினுக்கே 15 லட்சம் தர்றான்.. பாப்பா சம்பளமே  ஒரு படத்துக்கு 40 லட்சம் தான்.. வில்லனுக்கு ஹீரோயின் லவ் தெரிஞ்சுடுது.. தனக்கு இடஞ்சலா வந்த ஹீரோவை டக்க்குன்னு போட்டுத்தள்ளிடறான்..


 ஹீரோ ஒரு ஈயா மறு ஜென்மம் எடுத்து வர்றார்.. இந்த ஐடியா எப்படி வந்திருக்கும்னா ஹீரோ பேரு நிஜ வாழ்விலும் நானி = நான்  + இ  . ஒரு சாதாரண ஈ எப்படி வில்லனை பழி வாங்க முடியும்? அவனை டார்ச்சர் பண்ண முடியும்? கொலை பண்ண முடியும்? அதுக்குத்தான் திரைக்கதை, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் அட்டகாசமா பண்ண ஒரு டீம் இருக்கே.. எப்படி பழி வாங்குது என்பதே மீதிக்கதை..


படத்தோட  முதல் ஹீரோ சி ஜி ஒர்க் தான்.. சமீப காலமா பலர் சொதப்பி வந்த கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸை இவங்க முறையா, ரசிக்கும்படி, ஓவர் பில்டப் எல்லாம் பண்ணாம செஞ்சிருக்கறதால  ரசிக்க முடியுது.. குறிப்பா அந்த ஈ டிசைன் அட்ட்டகாசம்.. அது டான்ஸ் ஆடுவது, சைகை காண்பிப்பது எல்லாம் அருமை..


வில்லன் தான் அடுத்த ஹீரோ..KITCHA SUDEEP . வில்லன் சுதீப் கன்னடத்தில் ஏறக்குறைய சுப்ரீம் ஸ்டார் . படம் முழுக்க இவர் ராஜ்யம் தான்.. ஒரு ரகுவரனோ, பிரகாஷ் ராஜோ செய்ய வேண்டிய கலக்கலான கேரக்டர்.. நல்லா பண்ணி இருக்கார்.. நல்ல எதிர்காலம் உண்டு..


 ஹீரோ நானி சித்தார்த்தின் முகச்சாயல், ஜீவாவின் நடிப்புச்சாயல் என கலந்து கட்டி அடிக்கறார்.. படம் போட்ட 30 வது நிமிடமே அவர் கொலை செய்யப்படுவதால் சான்ஸ் கம்மி./. வந்தவரை ஓக்கே..

 ஹீரோயின் சமந்தா  அழகு.. கண்ணியமான உடைகளில் கவுரமாக வந்து போறார்.. ஆல்ரெடி கலரா இருக்கும் அவர் எதுக்கு ரோஸ் பவுடர் அள்ளி பூசிட்டு வர்றார்? தெரியலை..  சோகமான காட்சிகளில் கூட அதே மேக்கப்.. முப்பத்து நான்கு தேவர்கள் வந்தாலும் அவர்களை கட்டிப்போடும் அழகு..



http://g.ahan.in/tamil/NAAN%20EE%20photos/naan%20ee%20(7).JPG

மனம் கவர்ந்த வசனங்கள் ( கிரேசி மோகன்)


1. வில்லனிடம்- ஹாய், நீங்க டெயிலி இங்கே வருவீங்களா?

 யா..

 விச் டைம்?

 நீங்க வர்ற டைம்.. ஹி ஹி



2. நம்ம தொழிலுக்கு போட்டியா இருக்கானே அவனை எப்படி கரெக்ட் பண்ணலாம்னு நாங்க எல்லாம் யோசிச்சுட்டு இருக்கோம், நீ என்னடான்னா அவன் சம்சாரத்தையே கரெக்ட் பண்ணிட்டியே?


3. என் ஒயிஃபை முதன் முதல் காதலியா சந்திச்சப்போ ஒரு டைம் முடிச்சுட்டு கழட்டி விட்டுடலாம்னு தான் நினைச்சேன், ஆனா அவ கிடே ஏகப்பட்ட சொத்து.. மேரேஜ் பண்ணிக்கிட்டேன்.. அவ சொத்தை என் பேர்ல எழுதி வைக்க கேட்டேன்.. செத்தாலும் அது நடக்காதுன்னு அடம் பிடிச்சா.. பாவம் அல்பாயுசுல போய்ட்டா..


4. ஹேய்.. நீ பேங்க்ல எவ்ளவ் பணம் வெச்சிருக்கே?

 ரூ 15,860 ஓ டி அமவுண்ட் ( ஓவர் டியூ..  மைனஸ்ல )


5. எனக்கு தன்னம்பிக்கை ஜாஸ்தி.. அதனால செக்ல சைன் பண்ணாமயே தர்றேன்.

 டேய் லூசு, செக்ல சைன் பண்ணலைன்னா எப்படி அது பாஸ் ஆகும்?


6. மிஸ்,,, உங்க ஜடை ரொம்ப டைட்டா இருக்கு.. புரிஞ்சுதா?

 எனக்கு லூஸ் தான் பிடிக்கும்


 நீங்க லூஸ்னு தெரியும்..  ஆனா ப்ளீஸ் ட்ரை த டைட்.. ( டபுள் மீனிங்க் )


7. நீ கொடுத்த 15 ரூபா செக்குக்காக அவ அர்ச்சனை செய்ய கோயிலுக்கு வந்திருக்காளே.. அர்ச்சனை சீட்டே 20 ரூபா ஆச்சே?


8. டேய்.. முதல்ல உன்னோட எக்ஸ்பிரஷனை மாத்து.. அவ எல்லாருக்கும் பிரசாதம் குடுத்துட்டு போறா.. ஆனா உன்னை கண்டுக்காம போறா..


 டேய்.. எல்லாருக்கும் குடுத்துட்டு எனக்கு தர்லைன்னா என்ன அர்த்தம்? அவளுக்கு நான் ஸ்பெஷல்னு அர்த்தம்


9. டிராஃபிக் சார்ஜெண்ட் - வண்டிக்கு ஆர் சி புக் இருக்கா?  லைசன்ஸ் இருக்கா?


 ஹீரோ - என் ஆள் போறா. அவளை பிடிக்கனும்.. வண்டியே இருக்கு.. நீயே அதை வெச்சுக்கோ


10.  என்னடா அவ கிட்டே இருந்து வெறும் பிளாங்க் மெசேஜ் வந்ததுக்கு இப்படி குதிக்கறே?

 உனக்கு தெரியாதுடா , பிளாங்க் மெசேஜ் = பிளாங்க்செக்.. பவர் ஃபுல்.. இஷ்டபட்ட வங்களுக்குத்தான் பொண்ணுங்க  பிளாங்க் மெசேஜ் அனுப்புவாங்க


11. அழுதா வருத்தம் மறைஞ்சுடும்னு சொல்வாங்க, ஆனா எனக்கு அழ அழ அது அதிகம் ஆகுது.. பல தடவை அவனை கண்டுக்காத மாதிரி அலைய விட்டிருக்கேன்.. ஹூம்.. இப்போ நான் தான் சிரமப்படறேன்


12.  வில்லன் - என் மனைவி  சாகறப்ப என் கிட்டே என்ன பிராமிஸ் வாங்கினா தெரியுமா? நீங்க என்னை லவ் பண்றது உண்மையா இருந்தா நான் செத்த பிறகு என்னை மறந்துடனும்.. அப்டின்னா.. அதே போல் நீ உன் காதலனை மறந்துடு, ஓக்கே.. ?


14.  வில்லன் - ஏண்டா, அனிமல்ஸ் ரிவஞ்ச் பண்ணுமா? ( பழிக்குப்பழி வாங்குமா? - நன்றி மேஜர் சுந்தர் ராஜன் )


யா யா விட்டலாச்சாரியார் படத்துல எல்லாம்  அப்படித்தான்


15.. நான் கேட்க வர்றது ஒரு ஈ அப்படி பழி வாங்குமா?


 பாம்பு பழி வாங்கறப்போ ஈ பழி வாங்காதா? சின்ன பாம்புன்னா ஓக்கே.. ஈ-ன்னா யோசிக்கனும்


16. நான் சொல்றேனேன்னு கோவிக்காதே.. ஏதாவது சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதை படிச்சுட்டு அதே ஞாபகமா இருந்திருப்பே..


17. சர்வர் - மேடம், காஃபில ஈ விழுந்துடுச்சு போல ,ஸாரி மேடம்..

 நோ நோ , ஈ காஃபி குடிச்சுட்டு இருக்கு


 18. சந்தானம் - டேய் , எங்கே இருக்கே? என்ன பண்ணிட்டு இருக்கே? ஓவர் ஓவர்..

 நான் இங்கே ஒரு பூட்டுன வீட்டுல குதிக்கலாம்னு பிளான் பண்ணிட்டு இருக்கேன்..

 செருப்பால அடிப்பேன், நாயே அது என் வீடு


 19. சந்தானம் ஹீரோயின் வீட்டுக்கு திருட வர்றார்.. அப்போ ஹீரோயின் காதலனான ஈ கிட்டே பேசிட்டு இருக்கார்.. அது தன்னை பார்த்து பேசறதா சந்தானம் நினைக்கறார்

ஹீரோயின் - டேய் , திருட்டுப்பயலே.... வெளீல வா.. ஐ கேன் லெர்ன் யுவர் ஸ்மெல்.. உன்னை லவ்வர்னு வெளீல எப்படி சொல்ல?


20. பூசாரி - உன் சாவுக்கு விதை இங்கே தான் விதைக்கப்பட்டிருக்கு.. புரியலை.. நீ யாரை சாகடிச்சியோ அவன் பிணம் விழுந்த இதே இடத்துல தான்  நீ சாகப்போறே..


21. வில்லன் - பார்ட்னர்ல ஒரு ஆள் செத்துட்டா இந்த டீலிங்க் கேன்சல் ஆகிடும், இன்சூரன்ஸ் தொகை கோடிக்கணக்குல கிடைக்கும்

 அடப்போப்பா.. அதுக்காக  நீ தற்கொலையா பண்ணிடப்போறே?


 நோ நோ..  உன்னை கொலை பண்ணப்போறேன் ..


22. வில்லன் - அடங்கோ.. ஈக்கும், உனக்கும் கம்யூனிகேஷன் கூட நடக்குதா?


23.டேய் , 2 வருஷமா அவ பின்னாடி சுத்துறே.. இப்பபாரு அவளுக்காக 
எவ்வளவு கஷ்டப்பட்டு, லைட்டெல்லாம் போட்டு இருக்கே அவ கண்டுக்காம 
ஜன்னலைச் சாத்திட்டு தூங்கப் போயிட்டா? அவ உன்னை 
காதலிக்கவேயில்லை 





 இல்லைடா அவ என்னை ரொம்பவே காதலிக்கிறா.. இப்ப கதவை சாத்தினது 
எதுக்குன்னா. ஒரு வேளை சாத்தாம போயி நான் அவளுக்காக இங்கேயே 
நின்னுட்டு இருந்தா ராத்திரி பனியில நனைஞ்சு உடம்பு சரியில்லாம 
போயிருமேன்னுட்டுத்தான் கதவ சாத்தி அவ தூங்க போறத சொல்லி 
என்னையும் தூங்கச் சொல்லுறா



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-fcyoor5c-zfCfT6iubF867X8v3Ih_uBY09zBZm8QSNEYvz0e_UQQsvU1WmY89FZnCmu9hXUPsiBH0uKVy2b8x-V7K-pZPblIEg1LYvR_Jy6yst9-ADxhjA_5XaDklXJhzxE0248wmG56/s1600/samanthainbanakathaadi_05.jpg



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. மரகத மணியின் இசையில் வீசும் வெளிச்சத்திலே .. பாட்டு செம மெலோடி.. ஆல்ரெடி சூப்பர்  ஹிட்.. படமாக்கப்பட்ட விதம் குளுமை..


 2. பின்னணி இசை கன கச்சிதம் , குறிப்பாக ஈ கிட்டத்தட்ட ஹீரோ லெவலில் இருப்பதால் அது பழி வாங்க கிளம்பும்போதெல்லாம் அதற்கு தரப்படும் பில்டப் மியூசிக் ஓக்கே..


3. ஒரு ஷாட்ல ஹீரோ சருகுகளை உதைக்க அது சாலை எங்கும் சிதறும் காட்சி கிளாசிக்


4. வில்லன் கார்ல போய்ட்டிருக்கான்.. ஹீரோயின் ஏர்போர்ட்ல .. அவனை போக விடாம பண்ணனும் .. அதுக்கு ஈ டிராஃபிக் கான்ஸ்டபிள் மூலம் குழப்படி பண்ணி முதல்வன் பட டிராஃபிக் ஜாம் போல் பிரம்மாண்டமாய் பண்ணுவது நல்ல நம்பும்படியான ஐடியா


5. ஈயிடம் இருந்து தப்பிக்க வில்லன் பிணம் போல உடம்பு பூரா பாண்டேஜ் கட்டி படுக்கையில் தூங்கும் சீன்..

6. ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் படம் முழுக்க இயக்குநரின் வெற்றிக்கு உழைத்த விதம்,. 


7. ஹீரோயின் வீட்ல கரெண்ட் போயிடுது,, உடனே ஹீரோ பர பரவென மொட்டை மாடி வந்து  சாட்டிலைட் டிஷ்ஷையும், டார்ச் லைட், ரிப்ளெக்டர் பேப்பரை வைத்து  லைட் கொடுக்கும் ஐடியாவும், அதை புன்முறுவலோடு அங்கீகரிக்கும் சமந்தாவின் முகத்தில் காதல் பொங்கி வழிவதும்

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_120522171403000000.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. வில்லன் ரூமுக்குள்ளே ஹீரோயின் கூட தனியா இருக்கார்.. அவர் ஹீரோயினுக்கு 15 லட்சம் செக்  தர்றார்.. 2 பேரும் ஒண்ணா வெளீல வர்றாங்க.. அப்போ பார்டன்ர் வில்லன் கிட்டே ” 15 லட்சம் செக்   தர்ற அளவு அவளை உனக்கு பிடிச்சுடுச்சா? என கேட்கறாரே? எப்படி? செக்கை ஹேண்ட்பேக்ல ஹீரோயின் வெச்சிருக்கா.. வில்லன் எதும் சொல்லலை, எப்படி தொகை பார்ட்னருக்கு தெரியும்?


2. ஹீரோ நண்பர்களிடம் பேசும்போது ஒன்றரை வருஷமா அவ பின்னால அலையறேன்னு ஒரு வசனம், ஹீரோயின் தன் அண்ணி கிட்டே பேசும்போது “ 2 வருஷமா அவன் என் பின்னால சுத்தறான்”ன்னு டயலாக்.. 6 மாசம் என்ன ஆச்சு?


3. ஈயாக மாறும் ஹீரோ வில்லன் கிட்டே நான் உன்னை கொல்லப்போறேன்னு எழுதி காட்டுது.. அதே போல் ஹீரோயின் கிட்ட்டே நான் தான் உன் ஆள், என்னை அவன் கொலை பண்ணிட்டான்னு ஆரம்பத்துலயே எழுதி காட்டி இருந்தா அவ உஷாரா இருந்திருப்பாளே?  ( ஆனா அப்படி ஒரு சீன் வெச்சிருக்காங்க, ரொம்ப லேட்டா )


4. பொதுவா சோகத்துல பொண்ணு இருந்தாலும் ஒரு விழிப்புணர்வு,  ஜாக்கிரதை உணர்வு பொண்ணுக்கு இருக்கும் , ஆனா ஹீரோயின் கேனம் மாதிரி வில்லன் என்ன செஞ்சாலும் கண்டுக்காமயே இருக்காளே.. வாலி படத்துல வில்லன் அஜித் கொஞ்சம் ட்ராக் மாறூம்போது ஒரு சீற்றம் காண்பிப்பாரே அப்படி ஒரு சீனாவது வெச்சிருக்கனும்..


5. வில்லன் பல டைம் ஹீரோயினை தவறான பார்வை தவறான கோணத்துல பார்க்கறான்.. எல்லாருக்கும் அது தெரியுது, ஆனா ஹீரோயினுக்கு மட்டும் அது தெரியலை..


6. க்ளைமேக்ஸ்ல அந்நியன் படத்துல வர்ற மாதிரி ஹீரோவான ஈ மீண்டும் ஈயாக மறு ஜென்மம் எடுக்குது, எப்படி? ஒரு முறை ஒரு பிறவி எடுத்துட்டா மறுபடி அதே பிறவி வரும்?



7. க்ளைமாக்ஸ்ல ஈ ஒரு ஊசியை எடுத்து வில்லனை தாக்க வருது.. வில்லன் ஒரு காந்தத்தை எடுத்து அந்த ஊசியை காந்தத்துல மாட்டி வைக்கறார்.. அப்போ ஆபத்துல இருக்கற ஈ ஊசியை விட்டுட்டு அந்த பக்கம் வந்துடலாமே? ஏன் இறுகி பிடிச்சு மாட்டுது?

8. வில்லன் ஈ வைச்ச பாம்ல காயப்படறான்.. அந்த ரூமே அழியுது, அடியாளுங்க எல்லாம் தெரிச்சு ஓடறாங்க, ஆனா ஹீரோயினுக்கு எதுமே ஆகலை.. ஏன்>


9. காதலன் இறந்த துக்கத்தை ஹீரோயின் முகத்துல நல்லா பதிவு செய்யலை.. ஏனோ தானோன்னு இருக்கார்..



http://i45.servimg.com/u/f45/17/35/15/36/naan-e12.jpg


அனைவரும் பார்க்கும்படி சுவராஸ்யமா தான் படம் போகுது.. ஜூலை 13 ரிலீஸ் ஆக இருக்கும் பில்லா -2 விற்கு டஃப் ஃபைட் கொடுக்கும்




 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 44


 குமுதம் ரேங்க் - ஓக்கே



சி.பி கமெண்ட் - ஃபேண்டசி வகையில் ரசிக்கத்தக்க படம், ஆல் கிளாஸ் ஆடியன்ஸையும் கவரும்.. குழந்தைகள், பெண்கள் ரசிக்கும்படிதான் படம் இருக்கு..  காஞ்சனாவை தூக்கி சாப்பிடும்னு சொன்னாங்களே அந்த அளவு இல்லை.. ஆனாலும் படம் ஹிட்  தான்.. சந்தானம் ஒரே ஒரு சீனில் 2 நிமிடம் மட்டுமே வர்றார்.. மறுபடி க்ளைமேக்ஸ்ல அதே சீனை எடிட் பண்ணி யூஸ் பண்ணி இருக்காங்க

 ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன்.. ஸ்ரீ கிருஷ்ணாவிலும் ரிலீஸ் 

http://123tamilcinema.com/images/2012/05/Naan-E-Movie-Posters-Mycineworld-Com-1.jpg