Showing posts with label PUTHIYA THALAIMURAI. Show all posts
Showing posts with label PUTHIYA THALAIMURAI. Show all posts

Wednesday, January 09, 2013

விஸ்வரூபம் எப்போ ரிலீஸ் ?புதிய தலைமுறை டி வி யில் கமல் பேட்டி

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தயாரித்து இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள ‘விஸ்வரூபம்’படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில்,அப்படம் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்ற தேதியை தானே பின்னர் அறிவிக்க உள்ளதாவும்,இது குறித்து வேறு யாரும் அறிவிக்க உரிமை இல்லை என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர்,‘விஸ்வரூபம்’படம் நிச்சயம் டி.டி.எச்.சில் வெளியிடப்படும் என்றும்,தமது இந்த முயற்சி நியாயமான வர்த்தகம் என்று கூறியுள்ள கமலஹாசன்,சுயநலத்துக்காக தாம் ‘விஸ்வரூபம்’ படத்தை டி.டி.எச்.சில்  வெளியிடவில்லை என்றும் கூறினார்.   

முன்னதாக இப்படத்தை டி.டி.எச் மூலம் 10ம் தேதி முதலில் ஒளிபரப்புவது என்றும் அடுத்த நாளான 11ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்வது என்றும் கமல்ஹாசன் முடிவு செய்திருந்தார். இதற்கு தமிழ்த் திரையுலகில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. டி.டி.எச்.சில் ஒளிபரப்பினால், தமிழ்நாட்டிலுள்ள தியேட்டர்களில் ‘விஸ்வரூபம்’ படத்தை திரையிட மாட்டோம் என்று, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது. இந்நிலையில், 6 டி.டி.எச் நிறுவனங்கள் ‘விஸ்வரூபம்’ படத்தை ஒளிபரப்ப முன்வந்தன.இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.


இதையடுத்து நேற்று முன்தினமும், நேற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கும், கமலுக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் பன்னீர்செல்வம், சென்னை திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், தயாரிப்பாளர் கேயார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் அபிராமி ராமநாதன் கூறும்போது, ‘பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.முதலில் தியேட்டர்களில் படத்தை வெளியிட கமல் ஒப்புக்கொண்டார்.படத்தின் ரிலீஸ் தேதி பற்றி புதன்கிழமையன்று முடிவு செய்யப்படும்’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  




நன்றி - விகடன் 


புதிய தலைமுறை  டி வி யில் இன்று மதியம்   1 ம்ணிக்கு அவர் அளித்த பேட்டியில் 


உங்களது தலையங்கத்தை நான் முடிவு செய்வதில்லை,அதேபோல் என் தொழில் அமைப்பை நீங்கள் முடிவு செய்ய வேண்டாம்-


என்னுடைய ரசிகர்கள் அமைதியானவர்கள், ஒழுக்கம் நிறைந்தவர்கள். அவர்கள் அமைதியாக இங்கு நடப்பவைகளை கண்காணித்துக் கொண்டுதான் இருகிறார்கள். 



விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.,சில் வெளியிடுவதால் யாருக்கும் பாதிப்பில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


விஸ்வரூபம் படத்தை கமல்ஹாசன் டி.டி.எச்., சில் வெளியிடுவதற்கு தமிழக திரையுலகத்தில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து நேற்று முதல் திரையரங்கு உரிமையாளர்களுடன் நடிகர் கமல்ஹாசன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார்.


புது வழி ..பொது வழியாகும் :இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் விஸ்வரூபம் சர்ச்சை குறித்து விளக்கமளித்த கமல்ஹாசன் : டி.டி.எச்.,சில் திரைப்படத்தை வெளியடுவது என் புதிய வழி என்றார். நியாமான முறையில் நான் வியாபாரம் செய்துள்ளேன் இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றார். எதிர்காலத்தில் டி.டி.எச்.,சில் திரைப்படங்களை வெளியிடுவது பொதுவழியாகும். மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனம் வேண்டும் என்றார்.


விஸ்வரூபம் திரைப்படத்தின் அறிமுகப் பாடலில் இடம் பெற்றுள்ள யாரென்று புரிகிறதா?..இவன் தீ என்று தெிரிகிறதா என்ற வரியை மேற்கோள் காட்டி பேசிய கமல்ஹாசன் : தானும் வாழ்க்கையில் தடைகளை எதிர்த்து முறியடித்து வெற்றிகளை காணும் லட்சியம் உள்ளவன் என சுட்டிக் காட்டினார்.


மேலும் நேர்மையாக தொழில் நடத்தும் தனக்கு யாரும் மிரட்டல் விடக்கூடாது என்றார். ஒரே நாளில் 2முறையிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடது குறித்து ஆலோசனை நடத்தப்படும், நியாமான கருத்துக்கள் முன்வைக்கப்படும் நிலையில் ஒரே நாளில் 2 முறையில் திரைப்படம் வெளியிடப்படும் என்றும் கமல்ஹாசன் உறுதிபட தெரிவித்தார். ரிலீஸ் தேதி தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரிலீஸூக்கான தேதி குறித்து பலருடன் ஆலோசிக்க வேண்டியிருக்கிறது. ஆலோசனைகள் முடிந்த பின்னர் நானே ரிலீஸ் தேதியை அறிவிப்பேன்.


சட்டவிரோத ஒளிபரப்புக்கு தக்க நடவடிக்கை : விஸ்வரூபம் படத்தை ஓட்டல், ஷாப்பிங் மால் போன்ற பொது இடங்களில் டி.டி.எச்.,சில் ஒளிபரப்புவது சட்ட விரோதமானது. அவ்வாறு ஒளிபரப்பப்பட்டால் சட்ட ரீதியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.



What abt those who paid for DTH? 


அவங்கல்லாம் என் கூடநின்ன நண்பர்கள் அவங்களுக்கு என்ன உதவி வேணுமோ செய்யப்படும்! 


"vishwaroopam press meet" kamal hassan jan 9, 2013 part -1 

 

http://www.youtube.com/watch?v=P0nEEiZCpfc&feature=youtu.be&a

vishwaroopam press meet" kamal hassan jan 9, 2013 part -2

 




நன்றி - புதிய தலைமுறை 


The premiering of Kamal Haasan's new movie 'Vishwaroopam/Vishwaroop' first on direct-to-home (DTH) platform may not happen on January 10 as Rajkamal Films has postponed the release date, say DTH operators.
"We have a communication (from Rajkamal Films) about the postponement of movie release on DTH platform and in theatres," Salil Kapoor, COO, Dish TV told IANS.
"In line with the postponement of the release date of the movie 'Vishwaroopam (Tamil and Telugu)/Vishwaroop (Hindi)' across theatres and on the DTH platform by Rajkamal Films, we have stopped taking bookings for the movie premiere that was scheduled for Jan 10, 2013 at 9:30 pm on Airtel DTH," Shashi Arora, CEO-DTH/Media, Bharti Airtel was quoted as saying in a statement issued by the company. 


we are awaiting confirmation from Rajkamal Films on the revised dates," he said.
The theatre release which was to happen Jan 11 too stands postponed and the revised dates are yet to be announced by Rajkamal Films.
Queried about the money paid by the subscribers to watch the movie Jan 10, Kapoor said: "We will go by what our customer want us to do. If they want a refund, we will refund the money."
Queried whether Dish TV would be able to get compensation from Rajkamal Films for the money it spent on promoting the movie, Kapoor said: "The release of the movie has been postponed and nothing else has happened."
Both Airtel and Dish TV are silent on the number of bookings they have got for the movie.
The decision to premiere the movie on DTH platform first is opposed by theatre owners.


நன்றி - IBN LIVE


diSki - புதிய தலைமுறையில் கமலின் இன்றைய பேட்டி கமலின் இமேஜ்க்கு மிகப்பெரும் பின்னடைவு ;(((

Monday, July 09, 2012

ஆ ராசா - புதிய தலை முறை பேட்டி காணொளி + எதிர் கேள்விகள்


கடந்த சனிக்கிழமை இரவு 9 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை (நேற்று)மதியம் 1 மணிக்கும் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் ஸ்பெக்ட்ரம் பற்றிய புதிய புளுகல் ஒப்புவித்தல் நேர்காணல் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதை பார்த்தபோது ஒரு தேர்ந்த வழக்கறிஞரின் மறுபக்க வாதம் போன்றே இருந்தது. ஏற்கனவே சொல்லப்பட்ட பிதற்றல்கள், பல்லவிகளையே அவர் திரும்ப சொன்னார் என்பது தவிர வேறில்லை. தமிழ்ச்சூழலின் இயல்பான மறதி காரணமாக தற்போது ஸ்பெக்ட்ரம் என்ற வார்த்தை பலபேருக்கு மறந்து போயிருக்கும். அவரின் புளுகல்களுக்கான சில எதிர்வினைகள்.
1. குருவிற்கு தப்பாத சிஷ்யன் என்பது மாதிரி ஊழல் விஷயத்தில் திமுக தலைவருக்கு தப்பாமல் ஆ.ராசா அப்படியே இருக்கிறார். மரவள்ளி கிழங்கை எடுப்பதற்கு சாதாரண விவசாயி வேரோடு , செடியோடு சேர்த்து பிடுங்கி விடுவார். ஆனால் இவர்கள் செடிக்கு அடியில் வேரோடு இருக்கும் கிழங்கை மட்டும் தான் எடுப்பார்கள். செடி அப்படியே இருக்கும். அது தான் ஊழல் விஷயத்தில் திமுகவின் வரலாறு. அப்படியே ராசா முயற்சிக்கிறார்.
2. தொலை பேசி அழைப்புகளின் கட்டணம் குறைந்தால் பேசுவோர்களின், பேசும் நேரம் அதிகரிக்கும். அதன் காரணமாக அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து தொலைபேசி நிறுவனத்திற்கு வருமானம் அதிகரிக்கும். இது தொலைதொடர்பில் சாதாரண உளவியல். இதனை புரிந்து கொண்டு தான் 2002 ல் BSNL நிறுவனம் சில பகுதிகளில் உள்ளூர் தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணத்தை குறைத்து இம்முறையை வெற்றிகரமாக சோதனை செய்தது. அதை மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தவும் முடிவு செய்தது.
3. இது தான் மொபைல் விஷயத்திலும் நடந்தேறியது. 1999 தொலைதொடர்பு கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட சூழலில் மொபைல் போனின் விலை அதிகமாக இருந்தது. அழைப்பு கட்டணம் அதிகமாக இருந்தது. அதன் காரணமாக மொபைல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. Incoming அழைப்பிற்கு கூட கட்டணம் வசூலிக்கப்பட்டது அப்போது. ஆனால் பிந்தைய கட்டத்தில் சீனாவின் வரவு காரணமாக மொபைல் போன்களின் விலை குறைந்தது. இது தான் எல்லோரும் மொபைல் வாங்க மிக முக்கிய காரணம். அழைப்பு கட்டணம் அதிகம் இருந்தால் போனில் உரையாடும் நேரம் குறையும். ஆனால் போன் பயன்படுத்துவார்கள். இது தான் முக்கிய அடிப்படை.
4. அவர் நேர்காணலில் சொன்னபடி இந்தியாவிற்காக ஒதுக்கப்பட்ட 2G அலைக்கற்றை அளவு 100 மெகா ஹெர்ட்ஸ். அதில் 65 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தது. மீதி 35 சதவீதம் பயன்படுத்தப்படவில்லை. அதை நான் வெளிக்கொண்டு வந்தேன். அது தான் நான் செய்த தவறு என்று கொஞ்சம் கூட வாய்கூசாமல் தன் தலைவருக்கு தப்பாமல் பதில் சொல்கிறார். 35 சதவீதம் என்பதை தொழில்நுட்ப ரீதியாக 122 நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்க முடியாது. அது மிகப்பெரும் தொழில்நுட்ப நெருக்கடியை ஏற்படுத்தும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கூட கோடிகள் காரணமாக மறந்த காரணம் என்ன? கவனிக்க தவறியது ஏன்? இது தொடர்பாக தொழிற்சங்கங்கள், தொலைதொடர்பு பொறியாளர் கூட்டமைப்பு, அதிகார பூர்வ அமைப்புகள் சொன்ன ஆலோசனைகளை நீங்கள் கேட்க தவறியது ஏன்?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLEjb2_MLmJGmpzp_IdrxuLOF7DZUJIDeg1Z2G3VADwMKBMeG2pUzOSeB6Lx-4_a7YXq-D2zETFlgN-QeoGhwOPTZjEljmwXYOu4NlL15C5SIiOk97guqn6dTtQcaXYZ94dRCtN6L67sS2/s1600/spectrum_cartoon_kalki2.jpg
5. மீண்டும் மிகப்பெரும் புளுகல் என்பது "முதலில் வருபவருக்கு முன்னுரிமை" என்பது ஏற்கனவே பின்பற்றப்பட்ட கொள்கை தான் என்கிறீர்கள். நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் இங்கு பிரச்சினையே 2001 விலையை 2008 க்கும் நிர்ணயித்த காரணம் என்ன? நீங்கள் பெரம்பலூரில் வாங்கி குவித்த சொத்துக்களின் மதிப்பு இப்போதும் அதே நிலையில் தான் இருக்கிறதா? நாட்டின் வளம் குறித்த பிரச்சினையில் நீங்கள் யோசிக்காதது ஏன்? எல்லாம் சி.ஐ.டி காலனியின் ஆலோசனை தானே?
 அந்த ஏழு வருட வித்தியாச விலையை நீங்கள் அவர்களிடமிருந்து கமிஷனாக பெற்றீர்கள் என்பதை நீங்கள் சொல்லாமல் சொல்கிறீர்கள். அது தானே முக்கிய காரணம்.மேலும் கட் ஆப் தேதியை மாற்றியது குறித்து கேள்வி கேட்கும் போது மட்டும் உங்கள் முகபாவனையை நான் கவனித்தேன். அது திருட்டு முழி சுதாரிக்கும் சமயத்தில் இருப்பது மாதிரி இருந்தது. உடனே அது தவறான வார்த்தை பிரயோகம் என்கிறீர்கள். அதாவது அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்தன. அதனை முன்னுரிமை அடிப்படையில் கட்டுப்படுத்துவதற்காக தேதி அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்கிறீர்கள்.
இங்கு தான் பிரச்சினையே... வெறும் 35 மெகா ஹெர்ட்ஸ் எந்த அடிப்படையில் கொடுக்க முடியும் என்பதன் ஆலோசனையை திட்டமிட்டு மறுதலித்தது ஏன்? முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்பதை விண்ணப்பம் என்பதை விட நுழைவு கட்டணம் கட்டியவர்கள் என்று மாற்றியது ஏன்? வரைவோலை எடுப்பதற்கு மும்பை வங்கியின் அதிகாரிகளுக்கு எங்கிருந்தெல்லாம் உத்தரவுகள் போடப்பட்டன என்பது தனி வரலாறு. அதில் விதிமுறைகள் மீறப்பட்டன. அதைப்பற்றி நீங்கள் சொல்ல தயாரா?
6. நீரா ராடியா உரையாடல்கள் இவை எல்லாவற்றையும் வெளிக்கொண்டு வந்து விட்டனவே. இது பற்றி நீங்கள் வாய் திறக்காதது ஏன்?
7. இன்று பெரம்பலூரில் உள்ள உங்கள் சொத்துக்களின் மதிப்பு என்ன? உங்களின் முன்னாள் பணி சாதாரண ஜுனியர் வழக்கறிஞர் தானே?
8. கலைஞர் டிவிக்கு கொடுக்கப்பட்ட 200 கோடி ரூபாய் குறித்து வாய்திறக்காதது ஏன்? நீங்கள் சட்டப்படி தான் செய்தீர்கள் என்றால் யுனிடெக் நிறுவனத்திற்கும் கோபாலபுரத்திற்கும் என்ன சம்பந்தம்.?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjzL9CAXqf9Ob7eYv2m8tbypgThdDyS3EjV_2nwUR8Ex3khGlZlwI-xrtRaiTTOgFvPYK8CInHvIuK3PZRlt5iBMSq8NXxqnGLPCe1kJjovPobfiocbpWEyONMhPgObfvJqoWLb0Hnwj0a/s400/TM_15-10-08_E1_01-02%2520CNI.jpg 9. தயாநிதி மாறன் உங்களுக்கு முன் இதே வேலையை தான் செய்தார் என்பது உண்மை தான். ஆனால் அந்த வருமானம் முரசொலி மாறன் குடும்பத்திற்கு மட்டுமே சென்றது. தங்களுக்கு வரவில்லை என்பதால் தானே உங்கள் தலைவர் ஆரம்பம் முதலே தயாநிதி மாறன் மேல் கடுப்பாக இருந்தார். அதனால் தான் தற்குறியான உங்களை அந்த இடத்திற்கு கொண்டு வந்தார். இது உங்களுக்கு தெரியும் தானே. அதனால் தான் இவ்வளவு துணிகர செயலில் இறங்கினீர்கள்.
10.மேலும் உங்களுக்கு கிடைக்கப்பெற்ற தொகையில் காங்கிரஸுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தானே இந்த மொத்த கொள்ளையுமே நடைபெற்றது. அதனால் தான் பிரதமர் உங்களுக்கு எழுதிய கடிதங்களை கூட அலட்சியப்படுத்தினீர்கள். நீங்கள் கடைசியாக எழுதிய கடிதத்திற்கு பிரதமர் ஒருமாதம் கழித்து "Received your letter" என்பதாக பதில் எழுதினார். உலகத்தில் இது மாதிரி எங்கு நடக்கும்? இதிலிருந்தே உங்களுக்கு அந்த தைரியத்தை யார் கொடுத்தார் என்பது புரிகிறது.
11. திமுகவில் உள்ள மற்றவர்கள் போலல்லாமல் நீங்கள் சிறந்த வாசிப்பாளர். பெரியாரை நேசிப்பவர். இருந்தும் பெரியாரின் நெறிமுறைகளுக்கு மாறாக இவ்வளவு பெரிய துணிகர செயலில் இறங்கியது ஏன்? எல்லாம் கோபாலபுரம் கொடுத்த தைரியம் தானே? அதனால் தானே சி.பி.ஐ விசாரணையில் மிகவும் பிடிவாதமாக இருந்தீர்கள். சாதாரண மனிதனை விசாரிப்பது போல் சி.பி.ஐ தன்னை விசாரிக்க முடியாது என்ற தைரியத்தில் தானே அவ்வாறு பிடிவாதமான பதிலை சொன்னீர்கள். மொத்தத்தில் ராசா அவர்களே நீங்கள் சரியான மனிதராக இருந்து தவறான மனிதராக மாறி, தவறான இடத்தில் இருக்கும் மனிதர்.
12. தலைமை தணிக்கையாளரை நான் நீதிமன்றத்திற்கு இழுப்பேன் என்கிறீர்கள். ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி என்று குறிப்பிடுவதற்கு, அவருக்கும் அல்லது திமுகவிற்கும் என்ன முன்விரோதம்? அல்லது சொத்து தகராறா? பங்காளி சண்டையா? சந்தை விலையை அடிப்படையாக வைத்து தானே அவர் முடிவு செய்தார். அதாவது உங்களிடமிருந்து லைசன்ஸ் பெற்ற நிறுவனங்கள் அதை பல மடங்கு அதிகப்படியான விலைக்கு விற்றன. அன்றைய தொலைபேசி பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை இவற்றை வைத்து தானே அவர் முடிவு செய்தார். கூட்டி கழித்து பாருங்கள் உங்கள் மனசாட்சிக்கே அது தெரியும்.
http://www.tamilhindu.com/wp-content/uploads/spectrum-raja.jpg 13. சர்க்காரியா ஊழல் கூட விஞ்ஞானமுறைப்படி தான் நடைபெற்றது. அது மாதிரி தான் இதுவும். ஆகவே நாம் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்று தலைவர் கொடுத்த தைரியம் தானே உங்களுக்கு.... உங்கள் காரணமாக தானே அவர் ஈழப்போரில் நாடகமாடினார். போரை நிறுத்துவதற்கு இந்திய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க முடியாமல் பல்லாயிரம் உயிர்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு காரணமானார்.இந்த ஆன்மாக்களின் பழிபாவம் உங்களை சும்மா விடுமா? 14. நீங்கள் ஒரு விஷயத்தை மட்டும் வெளியில் சொல்வதில்லை. லாவகமாக தவிர்த்து விடுகிறீர்கள். அதாவது உங்கள் அதிகார காலத்தில் மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனம் எவ்வளவு நட்டமடைந்தது என்பதை வெளிப்படையாக அறிவிப்பதற்கு உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? இதன் காரணமாக தொலை தொடர்பு ஊழியர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு கொடுப்பதற்கு பி.எஸ்.என்.எல் நிறுவனம் முடிவு செய்திருக்கிறதே? அவர்களின் கண்ணீர் உங்களை சும்மா விடுமா? கண்டிப்பாக ஒரு காலத்தில் உங்களை தீண்டிக்கொல்லும்.
 
 
http://1.bp.blogspot.com/-4aMMKewQRPM/T9K60FGMi_I/AAAAAAAABgw/ekraKs21ybE/s1600/09THRAJA_1107892g.jpg
நன்றி -எச்.பீர் முஹம்மது வின் ஃபேஸ்புக்கிலிருந்து
 
பேட்டியின் ஆங்கில வடிவம் பை NDTV
 
Chennai: Here are the excerpts from A Raja's interview in Tamil to Puthiya Thalaimurai Channel.  
 
Q: Are you telling me that there has been no loss at all to the government? 
 
 
A Raja: Both the court and recently Kapil Sibal have accepted that due to all decisions taken under the policy guidelines of TRAI there has been no loss. But my problem is that for the first time in the judicial history of this country, the CAG report which is meant for the parliament is being treated as the basis for a criminal investigation by the Supreme Court. The trial court has rejected the theory of the CAG and CBI over the loss to exchequer, so i am going to drag the Comptroller & Auditor General to the court. I hope the court will permit this. I will do it."  
 
 
Q: You mean to say you will grill the CAG in court?     A Raja: Of course, because his report has been taken as the basis for my criminal prosecution.   Q: After your arrest, the Supreme Court has reversed all your decisions and it said that your decisions are unconstitutional and arbitrary and you had gifted the spectrum away. Is it a setback for you?       A Raja: The Supreme Court has delivered the judgement without hearing my side, and I have mentioned this before the Supreme Court bench in a curative petition. The Supreme Court has told me that I need not have any apprehension in my mind as this judgment will not affect the trial.   Q: You have been arrested and charges slapped against you. Do you think you were singled out and others were not responsible?   A Raja: First come, first served was followed by Arun Shourie and Dayandhi Maran, and 23 days before taking charge Dayanidhi Maran had allocated spectrum in the same way.  There is no problem in the policy this has been agreed upon by Arun Shourie. Before me, spectrum was allocated only to a cartel formed by Airtel, Aircel, Vodafone And Idea, but in my period I opened up the market. But there was never a problem with the policy.    Q: Is this cartel still functioning?  A Raja: Till I stepped down as a minister that cartel was active. Now I don't know what the status is. But I was the one who broke the cartel. I want to tell one thing to the public, even learned people were talking without knowing all the facts. Spectrum is government property. License is issued by the government. It's being used by people but the pricing is fixed by the telecom companies, are you aware of these details or is the public aware of it? The cartel decides the pricing. When I questioned it,  they said as a minister you have no right to decide.   Q: Is there any specific reason why you did not apply bail for the past 15 months?     A Raja: There are no specific reasons. I was mentally strong. The media had sensationalised every observation that was made in the court and it was blown out of proportion. The myth was so strong and the courts were not lenient. I had to wait for the effects of  the magnitude of 1.76 lakh crore to subside. After I argued in the court and bail was granted to some people and I was waiting for the opportunity and I am hopeful that I will come out clean.     Q: After 15 months of imprisonment your party welcomed you and do you think you have been let down by your friends and allies?     A Raja: I don't want to get into the argument that they dumped me and they did not attempt to save me. The case I am facing a criminal case and I have to face it alone. One thing I will say, I have all the strength by my side to face this case. That strength has been given to me by my leader. I recall a saying of a Tamil scholar: "The hottest place in hell is reserved for those who maintain neutrality at the time of a moral crisis."